DAILY MESSAGES                           

Series XVI

 

251)  Love is emotional confidence.

          அன்பு சுரக்க நம்பிக்கை உணர்வு பெற வேண்டும்.

        அன்பு நம்பிக்கையுள்ள நல்லெண்ணம்.

252)  Perfection is of ever-lasting attraction. Those who are drawn towards imperfection too have perfection as their goal.

          பூரணமும், பூர்த்தியும் பூரணமாக மனிதனை ஆட்கொள்ளும்.          

253)  Intellectuality is an attainment, par excellence. It can grow to express intuition as well as integral experience. It perfects itself that way. Nothing in this world is destroyed including destruction. Everything fulfils itself in the Absolute.

          அறிவு ஆத்மாவையும், பிரம்மத்தையும் அறியும் பொழுது ஆனந்தம் அனந்தமாகும்.

254)  The relative that discovers itself to be Absolute is the highest medium for the Absolute.

          தன்னுள் பிரம்மத்தைக் காணும் ரூபம் பாவத்தையும், சக்தியையும் பிரம்மமாக்கும்.

255)  Knowing the details of an ordinary work and the details of the process of creation needs only the understanding of memory. It calls for no intelligence.

          விவரம் எதுவானாலும் ஞாபகம் போதும். அறிவு தேவை யில்லை.

 256)   Intelligence is an outgoing effort, while memory is an effort to possess.

அறிவுக்குத் தேவைப்படும் சக்தி,   நினைவுக்குத் தேவைப்படாது.

257)    Wisdom accepts Truth without emotions.

             நிதானமான ஞானம் விவேகமாகும்.

258)    One who understands surrender in half a century has more wisdom than all the world possesses.

   50 ஆண்டில் சரணாகதி புரிய இன்று உலகிலில்லாத ஞானம் தேவை

259)  Civilisation is the achievement of the physical in the mind. Yoga is the manifestation of the Supermind in the physical.

          சரித்திரம் இருபடிகள் கடந்து வந்தது. யோகம் மேலும் 6 படிகள் கடக்க முயல்கிறது.  

260)  One who is introduced to the highest essential knowledge can get any other by absorbing more of it and has no particular need of other studies.

          முடிவான ஞானத்தைக் கொண்டு முக்கியமான கல்வி பெறலாம்.

261)  Fame is a limitation to further inner growth.

          பிரபலம் ஆத்ம ஞானத்திற்குத் தடை.

262)  அறிவு வளரத் தேவையில்லையெனில் புதுக் கருத்துகள் தோன்றா.

      தோன்றுதல் வளர்ச்சி முடியவில்லை எனக் காட்டும்.               

          New ideas indicate mental growth is incomplete.

263)  Negotiation implies a common ground for growth.

          புரியாத இடம் பேரத்திற்குரியது.

264)  Where negotiation is not possible, silent action will achieve.

          பேசிப் புரியாதது, பேசாத செயலால் புரியும்.

265)  Best of ignorances refuses to learn.

          அறிய மறுப்பது அறியாமையின் சிகரம்.         

266)  Impersonal efficiency cannot benefit by personal patronage.

          அன்பின் அரவணைப்பு அறிவுக்குப் பயன் தாராது.

267)  Inability to expand basic capacities exceeds its resources.

          திறமை வளர மறுத்தால் ஆடம்பரம் வளரும்.

268)  High intelligence develops ready repartees of witticism when emotional outlets are denied.

          அன்பை இழந்த புத்தி அறிவை அவை குலுங்க நகைக்க வைக்கும் ஹாஸ்யமாக்கும்.

269)  Balance is not attained by mixing the good and evil, but by tempering the good.

          நல்லது கெட்டதுடன் சேராது.

270)  Colloquial fluency will never raise itself to professional dignity.

              வழக்கின் வேகம் எண்ணச் சிறப்பை எட்ட விடாது. பேச்சு வழக்கு தொழிலின் உயர்வை எட்டாது, சொல்லின் சிறப்பு எட்டும்.

271)  The study of philosophic systems will create one's own philosophy of life which is practical effectivity of clarity of thought.

          தத்துவங்களைப் பயின்றால் வாழ்வில் எண்ணத் தெளிவின் தகுதி பிறக்கும்.  

272)  A sensational creature can never mature to the maturity of rational thought.

          உணர்ச்சி வசப்பட்டால் உள்ளம் அறிவிலோ, செயலிலோ தெளிவுபடாது.

273)  To bring down the clarity of spiritual experience to intellectual validity is not so difficult as to find the phrases that can harmoniously express them.

          ஆத்மானுபவத்தை அழகுற மலரச் செய்வது அறிவை விட சொல்லுக்குச் சிரமம்.

274)  உடன் உறைவது உள்ளத்து நட்பாவாது.

          Companionship is not friendship.     

275)  அவசியத்தால் செய்ததை அன்பால் செய்ய அன்பை ஏற்பது உண்மையான உணர்வாக இருக்க வேண்டும்.

          Love received by the truth of the heart sheds the formality of social necessity.

276)  தெரிந்ததைத் தெளிவாகச் செய்யும் பொழுது தன்னை மறப்பது சரணாகதி.

          Doing what one knows obliviously is surrender.          

277)  Growing into universal body is wisdom; into universal emotion is to be born as a poet; into universal body is to rule the worlds and beyond.

          பிரபஞ்சத்தை ஆள்பவன் விவேகியையும், கவியையும் கடந்தவன், உடலால் உலகை உட்கொண்டவன்.

278)  Dissensions are the flowering of Non-Existence that take the growth to the limits of creation.

          மறுப்பு சிருஷ்டியின் சிறப்பு.

279)  அர்த்தம் போன பின் அழுகை வரும்.

          Exceeding emotional comprehension, tears well up.   

280)  He who surrenders will see his soul.

          சரணாகதி பலிக்க ஆத்மா கண்ணுக்குத் தெரிய வேண்டும்.

281)  பிறருடைய ஆத்மா தெரிந்தால் பிணக்கு வாராது.

          To be able to see another's soul is to be in harmony with him.

282)  What Sri Aurobindo saw in Alipore jail was the Soul of men and matters.

          அனைத்தின் ஆத்மாவையும் ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூரில் கண்டார்.

283)  பயனடைவது மனித குலம், முறையை அறிபவன் விஞ்ஞானி. மூலம் ரிஷிக்குரியது.

          Use value is for the population. Process is for the scientist. The essence is known to the Rishi.

          மூலம், முறை, பயன் மூன்றும் சேர்ந்தது முழுமை.

284)  ஜடமான உடலுக்குச் சூட்சுமம் தருவது அறிவு. அறிவுக்குக் காரணத்தைக் காட்டுவது வளரும் ஆன்மா.

          Mind gives subtlety to the gross body while the psychic introduces the causal to the mind and body.

285)  கொடுத்தால் எவருக்கும் நல்லவர். கொடுக்காத பொழுது நல்லவர் என நல்லவரால்தான் கூற முடியும்.

          Giving evokes gratitude. To know that someone is good when he is incapable of giving needs a BIG Heart.

286)  Scholarship is so divorced from Reality that Indian philosophy can be written by it without any reference to The Gita.

          படிப்பு பாண்டித்யமானால் இராமாயணத்தில் இராமனை மறந்து விடலாம்.

287)  Concentration is to suck the past and future into the present.

          தன்னுள் காலத்தை மறப்பது நிஷ்டை.

288)  One who can see another inside can hope to influence and later control his behaviour.

          அகத்தில் தெரிபவன், புறத்தில் கட்டுப்படுவான்.

289)  ஜடத்தை சூட்சுமம் கட்டுப்படுத்தும்.

          The gross will be controlled by the subtle.

290)  To do something purposelessly is to destroy the wider purpose.

          அர்த்தமற்றதைச் செய்தால் அர்த்தமுள்ளது கெட்டுப் போகும்.

291)  The bitterest hostilities have over the centuries developed the civilised codes of communication about the rules of suspension of hostilities.

          கொடுமையான போரும் இனிமையான நாகரீகத்தை ஏற்றது.

292)  Churchill won the war. He was pure courage. From the very beginning he was averse to the idea of a European war. No wonder he won it.

          போரை ஏற்காத உள்ளம் மாவீரனுடையது.

293)  Potential pleasures are potent urges to action. Hence the phrase, 'stolen pleasure'. The urge to betray has a greater fund of negative energy.

          துரோகம் செயலுக்குத் துணை செய்யும் வேகம்.

294)  At any given moment the things of the world negative and positive are so arranged to cooperate for great results. It is so everywhere. Can you know the KEY?

          கோணல், சிக்கல், எதிர்ப்பு ஆகியவை மாறி மலரும் சிறப்பாகும் படி உலகமும், உன் உள்ளமும் அமைந்துள்ளது. வாயிலுக்கு வர மனம் இசையுமா?

295)  Even the right to defend oneself outside the courts was a recent phenomenon. Society that legally extends rights denies them in practice till the entire population is awake and clamours.

          நடைமுறையில் நியாயம் வழங்கப்பட சட்டம் போதாது. மக்கள் விழிப்புடன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.

296)  The distance between organisation and institution is as much as the one between discovery of a new product and its commercial production.

          சட்டம் நியாயமாக வழக்கு இலக்கியமாக வேண்டும்.

297)  A rebel cannot safely function in any party, till he starts his own. There he has to rebel against his own supporters.

          புரட்சி மணம் கட்சிகள் ஏற்கா. தனிக்கட்சி ஆரம்பித்தாலும் தலைவர் கட்சியை எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டும்.

        புரட்சியை ஆரம்பித்தவன் புரவலனாகும் வரை புரட்சி மறையாது.

298)  Idealism can build personality, not career.

          இலட்சியம் ஆத்மாவுக்குரியது, வாழ்வை வளப்படுத்த உதவாது.

299)  Crossing the floor in the Legislature, moving away from the hostiles, and changing to the right side inside have the same strategies.

          அரசியலில் எதிர்கட்சியில் சேர்வதும், தீமை நன்மையாவதும், மனம் மாறுவதும் ஒன்றே.

300)  Managements lose money by their autocratic attitude. When they employ consultants, they expect the consultants to make their ineffective autocratic attitude efficient which is moonshine. To convince the managements to change their attitudes is the hardest part of consultancy.

          அகந்தை சிறக்க மனிதன் ஆண்டவனை நாடுகிறான்.

 

001-050 051-100 101-150 151-200 201-250 251-300 301-350
351-400 401-450 451-500 501-550 551-600 601-650 651-700
701-750 751-800 801-850 851-900 901-950 951-1000