Skip to Content

பகுதி 4

செய்ததை நாம் அறியோம். தெய்வம் இதுபோல் செயல்படும் தன்மையுடையது. ஆனால் நடை றையில் உலகை ஆபத்திருந்து காக்கவே தெய்வம் செயல்படும். மற்ற நேரங்களில் அருள் செயல் படுவதில்லை. அன்னையும் அவரது அருளும் எல்லா நேரங்களிலும் இது போன்றே செயல்படுகின்றது. நம் முயற்சியின்றி நடக்கும் நல்ல காரியங்கள் இவை.

கெட்ட எண்ணம் உள்ளவரை விட்டு நாம் அகன்று 10 வருஷங்களாக இருக்கும். பழகிய தோஷத்தில் பேச்சு வரும்பொழுது அவர் மீது நமக்குப் பாசம் ஏற்படும். அடுத்த நிமிஷம் வரும் சேதி நல்லதாக இருக்காது. ஒரு வகையில் அவருடன் தொடர்புள்ளதாக இருக்கும்.

நம்மை எதிரியாக ஒருவன் நினைத்தால், அவனுடன் எந்தத் தொடர்பும் இப்பொழுதும் இல்லை என்றாலும், மனத்தால் அவனை நினைக்கும்பொழுது அவனுக்கும் நமக்கும் தொடர்பேற்பட்டு அவனுடைய எண்ணம் நம் வாழ்வில் பக்கும். அதையும் தவிர்க்க வேண்டும்.

*******

 1. கணவனைத் தொழுது எழுபவள் பெய்யெனப் பெய்யும் மழை. அதே சக்தியை அன்னை தம் பக்தர் அனைவருக்கும் அளிக்கின்றார். பக்தன் மழை வேண்டுமென்றால் அது பெய்யும்.

பக்தன் பெற்றுள்ள பத்தினித் தெய்வம்.

கணவனைத் தொழுபவளுக்குச் சூட்சும உலக சக்திகளான மழை, வெயில் கட்டுப்படும். காலமும் கட்டுப்படும். கற்பு நெறிக்குள்ள தவ வமை அது. அன்னையின் பக்தர்கள் அன்னைமீது வைத்துள்ள நம்பிக்கைக்குக் கற்பின் வமையுண்டு. நான் எத்தனையோ முறை மழை வேண்டும் என நினைத்திருக்கின்றேன். அன்றே மழை தவறாமல் பெய்திருக்கிறது என்று சொல்லும் பக்தர்கள் அநேகர்.

********

 1. அறியாமை நஷ்டத்திற்கு வித்து. அதை வயுறுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

நாம் வயுறுத்தும் அறியாமை.

********

 1. அன்புக்குக் கட்டுப்படுவதைவிட மனிதன் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவான். உயர்ந்த மனிதன் தன்னைப் பிறர் அதிகாரத்திற்கும் அன்பால் கட்டுப்படுத்திக் கொள்வான். அதிகாரத்திலும் அன்பைக் காண்பது அமிர்தமான இதயம்.

அதிகாரத்திலும் அன்பைக் காண்பது, அமிர்தமான இதயம்.

*******

 1. பிறர் அறியாமையைக் காணும்பொழுது அறியாமையின் புறத்தோற்றத்தைக் காண்கிறோம். நம்முடைய அறியாமையைக் கண்டால் அறியாமையின் உள்ளுறை இரகஸ்யங்கள் தெரியும்.

அறியாமையின் உள்ளுறை இரகஸ்யங்கள் தெரியும்.

தன் அந்தரங்கத்தை நண்பனிடம் சொல் மோசம் போனவனைப் பார்க்கும்பொழுது அறிவில்லாமல் நடக்கின்றான் என்று நினைக்கின்றோம். தன் இரகஸ்யத்தைப் பிறர் பாதுகாப்பார்கள் என்ற அறியாமை அவனுடையது என்று நாம் அறிகிறோம். அதே காரியத்தை நாமும் செய்வதுண்டு. அப்பொழுது நம் மனநிலையைக் கவனித்தால் நண்பனின் அறியாமை நம்மிடம் இருப்பதும் தெரியும். மேலும் அவனிடம் நாம் காண முடியாததை, நம்மிடம் காண டியும். ஏன் நம் இரகஸ்யத்தை அடுத்தவனிடம் சொல்கிறோம் என்று கவனித்தால், நம் செய்கைக்காக நண்பன் நம்மை உயர்ந்தவன் என் நினைப்பான் என நாம் எதிர்ப்பார்ப்பது தெரியும். சொல்ய பின்னர்தான் நண்பன் நம்மைக் குறைவாக நினைக்கின்றான். இவனிடம் இதைச் சொல்யது தவறு என்று புரியும். அடுத்த முறை இதைச் செய்யாதவர் அறிவாளி. செய்பவர் அதிகம்.

நண்பனுடைய அறியாமை நமக்குச் செயன் அர்த்தமற்ற போக்கை விளக்கும். நம் அறியாமை மனத்தின் நோக்கத்தின் (ஹற்ற்ண்ற்ன்க்ங்) அறியாமையை விளக்கும். எனவே நம்மை அறிய முயல்வது பயன் தரும்.

********

 1. எல்லாவற்றையும் ஈர்த்துப் பிடிக்கும் அமைப்பும் சக்தியும் கொண்டது அகந்தை. அதன் அமைப்பு பூரணமானது. சுதந்திரத்திற்காக வேலை செய்தாலும், விலங்குகளையே (ஸ்ரீட்ஹண்ய்ள்) உற்பத்தி செய்யும் திறனுடையது.

விலங்கை உற்பத்தி செய்யும் சுதந்திரம்.

காந்தம் தன் வட்டத்திற்குள் வரும் எந்த இரும்பையும் தன்னை நோக்கி இழுக்கும். அதனால் இழுக்காமருக்க டியாது. அது காந்தத்தின் தன்மை. அதைப் போன்ற சக்தியுடையது அகந்தை. அதனருகில் வந்தால் தன்னை நோக்கி வந்ததை இழுக்காமருக்க முடியாது. அதன் அமைப்பும் அதற்கேற்ப உள்ளது.

ஒரு தீய சக்திகளின் கூட்டம் அன்னையை எதிர் கொண்டபொழுது அவர்களை அன்னை இறைவனுக்குச் சரணடையச் சொன்னார். அவை அதை ஏற்றுக் கொண்டு அன்னையைச் சரண் அடைந்தன. நாங்கள் என்ன செய்யலாம் என்று அன்னையைக் கேட்டதற்கு உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டார்கள். எங்களுக்குக் கல் எறியத் தெரியும் என்று அவர்கள் சொல்ய பதிலைக் கேட்டு அன்னை சிரித்தார்.

அன்னையைச் சரண் அடைவது பெரிய காரியம். அதைச் செய்த பின்னரும் தங்கள் பழைய முறைகளை மட்டுமே பின்பற்றும் பாங்குடையவை அவை. அதே போல் அகந்தை எதை ஏற்றுக் கொண்டாலும் தன் பாணியிலேயே செய்யும். சுதந்திரத்திற்காகச் சேவை செய்தாலும், அகந்தையால் விலங்குகளை (ஸ்ரீட்ஹண்ய்ள்) மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

********

 1. அன்னையிடம் வந்தவர்கள், பிற்காலத்தில் அன்னையை விட்டுப் போயிருந்தாலும், தங்கள் வாழ்வின் சூட்சுமங்களை ஆராய்ந்து பார்த்தால், அன்னையின் காலடிச் சுவடுகள் முக்கிய இடங்களில் இருப்பதைக் காண்பார்கள். ஒரு நிலையில் அன்னையை விட்டகன்றாலும், அடுத்த நிலையில் அன்னை நம்மை விட்டகலாமிருப்பதைக் காணலாம்.

அன்னையின் காலடிச் சுவடுகள்.

என்னை வெட்டி வீழ்த்தும் கோடரியையும் மணக்கச் செய்வதே என் கடமை, எனச் சந்தன மரம் கூறுவதாக, தாகூர் சொல்கிறார். அன்னையுடன் தொடர்பு கொண்டிருந்த ஒருவர் வறுமையிருந்து வசதியை எட்டினார். அவருடைய தொடர்பு மிகச் சிறியது. நேரடியான தொடர்பும் இல்லை. பல வருஷத் தொடர்பில் ஒரு முறைகூட அவருக்கே சமாதி தரிசனம் செய்யத் தோன்றாத தொடர்பு. நண்பர்கள் அவரைப் பக்தராகக் கருதி கேட்டபொழுது எனக்குப் போகத் தோன்றவில்லை என்றார். பிறகு இருந்த தொடர்பையும் முனைந்து அறுத்துக் கொண்டார். அதன் பின் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப்போன்ற ஓர் ஆசை அவருக்கு எழுந்தது, அன்னை நினைவு வரவில்லை. ஆசை நினைவு வந்தது. கேள்விப்பட்டவர்கள் கே செய்தார்கள். ஆசை கேயைப் பொருட்படுத்தவில்லை. ஆசை தன்னைப் பூர்த்தி செய்ய முனைந்தது. எழுதாத பரீட்சையில் பாஸாவதுபோல அவருடைய ஆசையை அன்னை பூர்த்தி செய்தார். கே செய்தவர்கள் அனைவரும் கேக்குரியவர்களானர்கள். அவர் ஆசை பூர்த்தியாயிற்று. அவருக்கு அது அன்னையால் எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை.

தம்மை மறந்தவர்களையும் தாம் மறக்காத தன்மையுடையவர் அன்னை. நீ மறந்தாலும் உன் அருள் மறவாது என்பது திருவருட்பா.

********

 1. டியாது என்று கருதினால் ஒரு சுலபமான முறையுண்டு. அகந்தையை தான் கரைய வேண்டும் என்று பிரார்த்திக்கச் சொல்வது அம்முறை. பொய்யால் ஏற்பட்டது அகந்தை. அதை மெய்யாக இருக்கச் சொன்னால் அதன் அஸ்திவாரம் வீழ்ந்துவிடும்.

அகந்தையில் பொதிந்துள்ள அஸ்திவாரமான மெய்.

மௌனத்தை நாடுபவன் பேசுவதை நிறுத்துவான். அதற்குப் பதிலாக ஓம் என உச்சரிக்க ஆரம்பித்தால் சப்தம் எழ, எழ, மௌனம் கூடி வருவது தெரியும். ஓம் சப்தமானாலும், மௌனத்தை நோக்கிச் செல்லும் சப்தம்!

ஸ்ரீ அரவிந்தர் புத்தகத்திருந்து 4 பக்கத்தை வாய் விட்டுப் படித்து முடித்தவுடன் அங்கு மௌனம் நிலவுவதைக் காணலாம். அவரது நூல்கள் மௌனத்தை வெளிப்படுத்துபவை. சப்தத்தின் மூலமும் மௌனத்தை வெளிப்படுத்தும் தன்மையுடையவை. மௌனத்தை அழிக்கும் சப்தத்தின் மூலம் மௌனத்தை வெளிப்படுத்தும் சக்தி ஸ்ரீ அரவிந்தரின் அருள். சப்தத்திற்கு அகந்தையில்லை என்பதால் இது டிகிறது. வறுமை மூலம் பகவான் அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்துவார். தடை நம் அகந்தை. அகந்தையற்ற மனிதனை வறுமையை மீறி அதிர்ஷ்டத்தைப் பெற வைக்க அருளால் முடியும் என்பதை இதிருந்து தெரியலாம்.

அகந்தை எதற்கும் கட்டுப்படாது என்பது உண்மை. எனவே அதையே பிரார்த்திக்கச் சொன்னால், நமக்கு அதிர்ஷ்டமிருந்தால், அது ஒத்துக் கொள்ளும். தான் கரைய வேண்டும் என்ற அகந்தையின் பிரார்த்தனை பக்கும். மெய் சொல்ல அகந்தை ஒத்துக் கொண்டாலும், அகந்தை கரைந்துவிடும்.

*******

 1. அகந்தை தான் அழியப் பிரார்த்தனை செய்வதை ஏற்றுக் கொண்டால் மின்னல் போன்ற ஒளி நம்மிடமிருந்து கிளம்பி, அனந்தம்வரை வீசுவதைக் காணலாம்.

அனந்தமான மின்னல் பொறி.

அகந்தையின் உருவங்கள் அனந்தம். அதை அழிப்பது கடினம். கடல் அலை ஓய்வதும், மன அலைகள் ஓய்வதும் ஒன்றே. மன அலைகளை நாம் அறிவோம். அகந்தை மனத்தை ஆட்கொண்டிருப்பதை நாம் அறியோம். மேலே ஒரு கொசு உட்கார்ந்தால் கை தன்னை அறியாமல் அதைத் தட்டுகிறது. அதேபோல் அகந்தை தன்னை ஏதாவது தொட்டால் தட்டும்.

நண்ய்ஸ்ரீங்ழ்ண்ற்ஹ் உண்மை என்பது குறைவு, மிகவும் குறைவு. எனினும் நாம் அதைப் பெற முடியாது என்று சொல்ல டியாது. அப்படிப் பெற்ற நேரம் அகந்தை அழிய வேண்டும் என்று நாம் விரும்பினால், அகந்தை தான் அழியப் பிரார்த்தனை செய்தால், அதே க்ஷணம் அகந்தையில் ஓர் அம்சம் திடீரென மறைவதைக் காணலாம். அதே க்ஷணத்தில் மின்னல் போன்ற ஒளி நம்முள்ளிருந்து புறப்பட்டு அனந்தம்வரை செல்வதைக் காணலாம். அகந்தை அழிந்த நேரத்தில் ஜீவன் பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் என்ற தத்துவத்தின் முதல் வரியைச் செயல் காணலாம். இதைக் கண்ட பின் அதுவே ள்ண்ய்ஸ்ரீங்ழ்ண்ற்ஹ் உண்மை என்று அப்பாதையில் நாம் அகந்தையை அழிக்க முன் வரவேண்டும். அதன் பின் நாம் மேற்கொள்ளும் யற்சிகள் ஆயிரமில்லை, அனந்தம். எலக்டிரிக் ஷாக் அடிக்கும்பொழுது உடல் ஓர் அணு தவறாமல் ஷாக் பரவுதல்போல் அகந்தை ஜீவனில் எல்லாக் கரணங்களிலும், எல்லாச் செயல்களிலும், எல்லா அசைவுகளிலும் பரவியிருப்பதால் ஒவ்வோர் அசைவிருந்தும் அகந்தையை முயன்று அகற்ற வேண்டும். இது முள் புதரின் மீது போட்ட துணியை எடுப்பதைப் போன்றது. துடைப்பம் புதியதாக வாங்கினால் அதில் நிறைய துடைப்ப முள் ஊமுள் என்பார்கள் இருக்கும். துடைப்பத்தை ஆய்ந்து அவற்றை நீக்குவார்கள். அந்த இடத்தில் ஒரு துணி விழுந்து விட்டால் அதை உதறினால் போகாது. ஒரு ள்ளைத் தனியாக எடுக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொன்றையும் தனித்தனியே அகற்ற வேண்டும். அகந்தையைக் களைதல் அப்படிப்பட்ட செயலாகும்.

********

 1. பிறர் நமக்கிழைக்கும் தீங்கில் அகந்தை அழிந்தவன் விஸ்வாசம் இருப்பதைக் காணமுடியும்.

அகந்தை அழிந்தவனின் விஸ்வாசம்.

நம் ஜீவன் அகந்தையால் மூடப்பட்டிருப்பதால் இறைவன் நம்மை அருளால் தீண்ட முடியாது. இறைவன் மனித உருவில் நம்மை நாடினால் அகந்தையைத்தான் தீண்ட முடியும். அதைத் தாண்டிய ஜீவனைத் தீண்ட முடியாது. பள்ளிக்கூடம் போக மறுக்கும் குழந்தையைத் தாயார் அன்பால் தீண்ட டியாது, தண்டனையால் மட்டுமே தீண்ட முடியும். அக்குழந்தைக்குத் தாயன்பு தண்டனையாக வருகிறது. பள்ளிக்கூடம் போக ஒத்துக்கொண்டவுடன் தாயார் சாக்லேட் தருகிறாள். போகாத குழந்தைக்குச் சாக்லேட் கொடுத்தால் தாய் குழந்தையைக் கெடுக்கின்றாள் என்று பொருள்.

இறைவன் மனிதன் மூலம் நம் ஜீவனைத் தேட விழையும்போது அகந்தையால் நாம் மூடப் பெற்றிருந்தால் அவன் அகந்தையைத் தீண்ட விரும்பாமல் அகந்தையை அழிக்கும் முறை ஒன்றை நாடுகிறான். விஸ்வாசமாக அந்நிலையில் நம்மிடம் இருப்பவர் நம் அகந்தையுடன் உறவாடுகிறார். அது வெறும் உறவு. துரோகமாக நம்மிடம் செயல்படுபவர் நம் அகந்தைக்கு ஊறு செய்கிறார். அதனால் அகந்தை புண்படுகிறது. திரை கிழிய ஆரம்பிக்கின்றது. நாம் ஓலமிடுகிறோம். அகந்தை அழிய ஆரம்பித்த நிலையில் ஒருவர் துரோகமாக நடந்தால் ஓலமிடுவதற்குப் பதிலாக அதன் உண்மையை ஜீவன் அறியும். அது அகந்தை அழிய ஆரம்பித்த பின்னரே தெரியும். அதற்கு முன் கோபம் வரும், ஆத்திரம் வரும், பழி வாங்கத் தோன்றும். இப்பொழுது உண்மை தெரியும்.

இதுவரை நமக்கு வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தி அவை ஏன் நடந்தன எனக் கணித்து, அங்கு எப்படி நம்மிடம் உண்மை குறைவாயுள்ளது என்று தெரிந்து அந்த உண்மையை இன்று ஜீவன் ஏற்றுக் கொண்டால் அந்தக் கசப்பு

விலகும். அதை உணர்ந்த அகந்தை விலகும். இது யோகப் பயிற்சி. அதிலும் மிக உயர்ந்த நிலையிலுள்ள யோக முயற்சி.

******

 1. உலகை அற்புதக் காட்சியாகக் காண முயல்பவர் சில சாதாரண நிகழ்ச்சிகளில் அதைக் காண வேண்டும். ஜீவனற்ற காரியங்களில் ஆன்மீக ஜீவனைக் காணும் திறன் ஆன்மா விழிப்புற்றதற்கு அறிகுறி.

ஆன்மா விழிப்புற்றதற்கு அறிகுறி. இறைவனைப் பொருத்தவரையில் அன்றாடக் காரியங்களுக்கும், பெரிய நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசமில்லை. இறைவனைச் சிறு காரியத்தில் கண்டாலும், நம்மால் அவனைக் காண முடிகிறது எனப் பொருள். பெரிய காரியங்களில் ஈடுபடும் பொழுது மனம் தீவிரமாக ஈடுபடுகிறது. அதனால் ஆழ்ந்த நிலையில் விழிப்பிருக்கின்றது. ஆழ்ந்த நிலையில் மனம் விழிப்புற்றிருப்பதால் பெரிய காரியங்களில் ஒரு சமயம் இறைவன் காட்சி அளிக்கின்றான். எந்தக் காரியத்தைச் செய்யும்பொழுதும் அதே விழிப்பிருந்தால் இறைவன் தரிசனம் தருவான்.

*******

 1. அந்தத் திருஷ்டிக்கு வறுமையில் செல்வம் தெரியும், துரோகத்தில் விஸ்வாசம் தெரியும், சோம்பல் சுறுசுறுப்பு விளங்கும், பக்காத்திருடன் பெரிய ஆத்மா எனப் புரியும், பொது மகளிரின் கற்பு விளங்கும்.

திருடனின் அடி திருவடி.

அப்பூர் சிறையிருக்கும்பொழுது பகவானுக்கு நாராயண தரிசனம் கிடைத்தது. அனைத்தும் வாசுதேவனாகக் காட்சியளித்தன. ஜெயில் கம்பி முதற் கொண்டு, வார்டன்வரை எல்லாப் பொருள்களும் கிருஷ்ணனாகத் தெரிந்தன. அந்தக் கைதிகள் உள்ளத்தில் கருணை, சாந்தம் போன்ற உயர்ந்த குணங்களை இந்தத் திருஷ்டியிருந்தபோது பகவான் கண்டார்.

நாம் ஏழையை ஏழையாகப் பார்க்கின்றோம். இந்தத் திருஷ்டி ஏற்பட்டால் பல பிறவிகளில் செல்வத்தைப் பெற்றுக் கடைசியில் பெருஞ்செல்வத்திற்கு அதிபதியான பின் ஏழ்மை என்றால் எப்படியிருக்கும் என்று அனுபவம் பெற இந்த ஏழையின் ஆத்மா இப்பிறவியில் வறுமையில் பிறந்திருக்கின்றது என்பது தெரியும். அதேபோல் மேலே சொன்ன ஒவ்வொரு குணத்திற்கும் எதிரான குணம் ஆத்மாவிருப்பதை நாம் அந்தத் திருஷ்டி மூலம் காணலாம்.

******

 1. நம் தீவிர ஆர்வம் பல நிலைகளில் அமைந்துள்ளது.

ஆன்மா வெளிப்படும் அற்புதம்.

உழைப்பு தீவிர ஆர்வம் பெற்றால் பெருஞ்செல்வத்தில் டியும்.

தைரியமான தலைமை தீவிர ஆர்வம் பெற்றால் தலைமைப் பதவியைக் கொடுக்கும்.

அறிவுக்குத் தீவிர ஆர்வம் கிடைத்தால் புதிய கருத்துகள் உற்பத்தியாகும்.

ஆன்மீகம் தீவிர ஆர்வமடைந்தால் ஆழ்ந்த தியானம் நிலைக்கும்.

ஆன்மா மனதில் தீவிர ஆர்வம் அடைந்தால் மனிதன் மேதையாக மாறுவான்.

ஆன்மா உணர்வில் தீவிர ஆர்வம் பெற்றால் மாவீரன் உதயமாவான்.

ஆன்மா உடல் தீவிர ஆர்வம் பெற்றால் அவதாரப் புருஷன் பிறப்பான்.

இவை இரண்டு மூன்று நிலைகள் கலந்து வரும்.

செயன் தரத்தை உயர்த்துவது முன்னேற்றம். உ.ம்.

அன்னைக்குச் சேவையாக சமூகத்தில் பெருங் காரியங்களைச் சாதிப்பது பக்தியின் சாதனை.

அதையும் அறிவுபூர்வமாக்கிச் செயன் சூட்சுமத்தைக் காண முயல்வது (ங்.ஞ். ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) செயன் தரத்தை யோகத்தால் உயர்த்துவதாகும்.

*******

 1. சமாதியருகே இருக்கும்பொழுது எல்லாமே மறந்து விடுகிறது என்பது பலருடைய அனுபவம்.

நிறைவடைந்த மனம் மற்றதை மறந்துவிடும்.

நிறைவடைந்த மனம் மற்றதை மறந்துவிடும் தன்மையுடையது. மனம் ஆசையால் நிறைந்து மற்றதை மறக்கும். அது சமாதியருகே ஆண்டவனால் நிறைந்து மற்றதை மறக்கும். எதனால் நிறைந்தாலும் தன்னை மறக்கும் தன்மையுடையது மனம். உடல், உணர்வு, அறிவு, ஆன்மா என்ற நான்கு நிலைகளில் உடல் செயலால் நிறையும். அல்லது உடல் நிலையில் மனம் செயலால் நிறையும். உணர்வு நிலையில் மனம் ஆசையால் நிறையும். உயர்ந்த உணர்வானால் ஆர்வத்தால் நிறையும். அறிவு நிலையில் மனம் சிந்தனையால் நிறையும். மனம் எந்த வகையில் நிறைந்தாலும் தன்னை மறந்துவிடும்.

பணக்கார நண்பனைக் கண்டபொழுது அவன் அந்தஸ்தால் மனம் நிறைந்து தன்னை மறப்பது ஒரு நிலை. நண்பனின் நட்பால் மனம் நிறைந்து தன்னை இழப்பது உயர்ந்த நிலை. நட்பில் வேறு பல அம்சங்களும் உண்டு. நண்பனின் பணம், செல்வம், செல்வாக்கு, நட்பு, பிரியம், விஸ்வாசம், நெருக்கம் ஆகிய எதனாலும் மனம் நிறைந்து தன் வயமிழக்கலாம். எதனால் மனம் நிறைகிறது என்பது நம் தன்மையைப் பொருத்தது. நம்மை மறந்து தன்வயமிழப்பதன் தன்மையும், எந்த நோக்கத்தால் மனம் நிறைகிறது என்பதைப் பொருத்தது.

தாய் தந்தையர் என் மேல் அன்பானவர்கள். ஆனால் இன்று இந்த ஆசிரியர் என்மேல் கொண்டுள்ள பிரியம் அதைவிட உயர்ந்தது என்று நினைக்கும் மாணவனுடைய மனம் நிறையும்பொழுது அது அன்பால் மட்டும் நிறைவதில்லை. நன்றி கலந்த அன்பால் நிறைகிறது. என்னைச் சிறு வயதிருந்து எவருமே கவனித்ததில்லை. இன்று என் ஆபீசர் என் மீது காட்டும் பரிவு எனக்கு வியப்பளிக்கிறது என்று அறிபவன் மனம் மலர்ந்து நிறைகிறது.

என்னிடம் எந்தப் பெரிய குணமோ, அம்சமோ, தகுதியோ கிடையாது. இருப்பினும் அவையெல்லாம்

இருப்பதைப்போல் இன்று ஏற்பட்ட புதிய நண்பர் என்னைக் கருதுவது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது என்பவர் தன்னலமற்ற அன்பின் ஸ்பரிசத்தால் தீண்டப்பட்டு நெகிழ்வால் மனம் நிறைகிறார்.

நான் பழகியவரிடமெல்லாம் அன்பாகவும், ஆர்வமாகவும், விஸ்வாசமாகவும், உண்மையாகவும் பழகினேன். அவற்றையெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர். எவரும் ழுமையாக என்னையோ, என் விஸ்வாசத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை. இதுவரை அன்பாகவும், ஆர்வமாகவும், விஸ்வாசமாகவும், உண்மையாகவும் என்னுடன் பழகி என்னையும் அதேபோல் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை நான் சந்தித்ததில்லை. நீங்கள் அந்த விளக்கத்திற்கு இலட்சணமாக அமைவதைப் பார்த்து என் மனம் பூரிப்படைகிறது. நன்றி சொல்ல நா எழவில்லை என்பவர் மனிதனில் தெய்வத்தைக் கண்டு, அதன் ஸ்பரிசத்தைத் தம் உணர்வில் ஏற்று நிறைந்து மகிழ்ந்து தன் வயமிழக்கின்றார். அவருள்ளம் தெய்வம் குடி கொள்ளுமிடம். அவருக்குக் கிடைத்தது தெய்வீக உறவு. அவர் வாழ்வு பூர்த்தியாகிறது. மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக மாறும் தருணம் அவருக்கேற்பட்டுள்ளது. தன் வயமிழந்தவர் தம்மை தெய்வத்திழக்கின்றார். தம் தெய்வாம்சம் முன் வந்து எதிர் நிற்கும் தெய்வீக அன்பை ஏற்று பார்வையைத் தரிசனமாக்கி, நேரத்தைப் புனிதமாக்கி, நிற்குமிடத்தைச் க்ஷேத்திரமாக்கி நினைவை ஆராதனையாக்கும் நிலையில் அவர் நிலையை இழக்கின்றார். அது உயர்ந்த குணம். உன்னத மனிதனுக்குக் கிடைப்பது. உயர்ந்த உள்ளம் உண்மை உணர்வால் நிறைந்ததைத் தெய்வம் ஏற்று மனித உருவில் வந்து அவர் உறவைச் சமர்ப்பணமாக ஏற்று நிறைவை ஆன்மீகப் பரிசாக அளிக்கும் நிலை அது. அதுபோல் மட்டுமே அன்னை செயல்படுவார்.

******

 1. அன்னையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எல்லாமே மறந்துவிடுகிறது. எந்த விஷயம் நம்மை அதன்பால் ஈர்த்து மற்றவற்றை மறக்கச் செய்கிறதோ அது அந்த நிலைக்குரிய தெய்வீகம்.

மற்றதை மறக்கச் செய்யும் தெய்வீகம்.

அறிவில்லாத மனிதனுக்கு அறிவு தெய்வீகமானது என்பதுபோல் ஆசை பூர்த்தியாகாத மனிதனுக்கு ஆசை பூர்த்தியாவது தெய்வீகம். நல்ல முறையில் எதைப் பூர்த்தி செய்து கொண்டாலும் அது அந்நிலைக்குரிய தெய்வீகம். தவறான முறையில் எதைப் பூர்த்தி செய்து கொண்டாலும் அது தெய்வீகமாகாது, அசுரத் தன்மையுடையதாகும்.

********

 1. நெடுநாளாக உன்னை வாட்டும் குணம் ஒரு க்கியமான இடம். அது ஒரு கதவு. அது திறந்தால் அளவு கடந்த முன்னேற்றம் ஏற்படும். உ.ம். அவசரம், தானெனும் உணர்வு, கடுமையாகப் பேசுதல்.

குணங்கள் விலகி குறிப்பிடும் சொர்க்கம்.

நெடுநாளாக உனக்குப் பயன்பட்ட நல்ல குணங்களும் அதேபோல் ஒரு திறவுகோலாக அமையும். அவை விலகி வழிவிட்டால் அளவு கடந்த முன்னேற்றம் ஏற்படும். உ.ம். நல்லெண்ணம், விஸ்வாசம், மிருதுவான பேச்சு.

மனிதன் குணங்களாலானவன். அவனுடைய ஜீவனுக்கு எல்லையாகக் குணங்கள் அமைகின்றன. அவனுடைய குணங்கள் இடம் கொடுக்கும் அளவுக்கே அவனால் ன்னேற முடியும். எல்லையில் முதல் வே கெட்ட குணங்களால் அமைந்தது. அவை விலகினால் கதவு திறந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். அது போன்ற ன்னேற்றம் பேரளவுக்குண்டு. அவை முடிந்த பின் மற்றோர் எல்லையும், அதற்குரிய வேயும் உண்டு. அவை நல்ல குணங்கள். அவை வழிவிட்டால் குணம் கரைந்து பெருவெளியில் நுழையலாம். குணம் என்பது அமைப்பு. அமைப்புக்கு எல்லையுண்டு. ஜீவன்

அமைப்பு இல்லாதது. அதற்கு எல்லையில்லை. நல்ல குணமானாலும், குணம் என்பதால் அது வரையறைக்குட்பட்டது. அது விலகினால் எல்லை விலகி எல்லையற்ற ஜீவனின் பர வெளியில் நாம் நுழைகிறோம்.

*******

 1. சிங்கம் தவிர மற்றெல்லாம் இந்த அறையில் இருக்கின்றன. வேண்டியதைக் கேள் தருகிறேன் என்ற அன்னை, சிங்கங்களும் இங்கிருக்கின்றன என்கிறார்.

அன்னையறையில் உள்ள சிங்கம்.

அன்னையை நாம் எந்த அளவில் அறிகின்றோமோ அந்த அளவில் அவர் செயல்படுகிறார். அவருக்கு அளவில்லை. அவருக்கு எல்லையில்லை. அன்னையின் அன்பு அளவு கடந்தது. அவர் செயல் பிரபஞ்சத்தை நடத்தும் செயல்.

மஹாலட்சுமி, மஹாசரஸ்வதி, மஹாகாளி, மஹாஈஸ்வரியின் உறைவிடம் அன்னை. எல்லாப் பொருள்களும் அவரை நோக்கி வருகின்றன. அவர் ஸ்பர்சத்தைத் தேடி வருபவை அவை. எல்லாக் குணங்களும் அன்னையை நாடுகின்றன. அவர் ஸ்பர்சத்தால் புனிதப்பட அவை அங்கு வருகின்றன.

ஒரு நாளைக்கு அன்னையிடம் வரும் மனிதர்கள், செயல்கள், பொருள்கள், குணங்கள், நிகழ்ச்சிகளைக் கவனித்தால் உலகமே அவரை நாடி வருவது தெரியும். வருபவையெல்லாம் அவர் ஆசி பெற்று அகன்று விடும். அவர் பிரியப்படுபவை அங்கேயே தங்கும். அவர் இதயத்தில் பல சாதகர்கள் கூட்டமாக இருப்பதாகச் சொல்கிறார் அன்னை. இறந்த பின் நேராக அன்னை இதயத்தில் புகடம் தேடுபவர் பலர்.

அன்னைக்குச் சேவை நடக்கும் இடங்களில் பாதுகாவலாகத் தேவதைகள் பல உலவுவதாக அன்னை சொல்கிறார். சூட்சுமப்பார்வையுள்ள பக்தருக்கு அவை தெரியும். அச்சகத்தில் உடைந்து

போன மெஷினை அதுபோல் ஒரு தேவதை பாதுகாத்தது.

பல சிங்கங்கள் அன்னை அறையில் அவருக்குக் காவலாக இருக்கின்றன. அவை அன்னையைத் திரும்பிப் பார்த்து குழந்தைகள்போல் சிரிப்பதுண்டு என்கிறார்.

******

 1. கோபம், பயம், காமம், வெளியிருந்து நம்முள் வருகின்றன. நாம் அவற்றிருந்து விலக வேண்டும் என்கிறார் பகவான். அப்படி என்றால் எதுவுமே நம்முடையதில்லை. நமக்கே உரிமையானது எது? நமக்குரியது பிரகிருதி (இயற்கை) அன்று, புருஷனே நமக்குரியவன். நாமே புருஷன்.

நமக்கேயுரியது புருஷன், பிரகிருதியன்று.

செய்தி, பாட்டு, விளம்பரம், நாடகம் அனைத்தும் வெளியிருந்து ரேடியோவினுள் வருகின்றன. அவை ரேடியோ அல்ல. ரேடியோ என்பது ஒரு கருவி. வேண்டுமானால் இவற்றைத் தன்னுள்ளே அனுமதிக்கும் இல்லை என்றால் ரேடியோவை நிறுத்தி விடலாம்.

மனிதன் ஒரு வகையில் ரேடியோ போன்றவன். சொல்லப்போனால், எல்லா ரேடியோ ஸ்டேஷன்களையும் ஒரே சமயத்தில் கேட்கும் ரேடியோபோல் நம் மனம் செயல்படுகிறது. அதனால் குழப்பம் விளைகிறது. திறமையானவர்கள் தங்களுக்கு வேண்டியதை மட்டும் அனுமதிக்கின்றார்கள்.

உண்மையில் நாம் வெளியிருந்து எதை அனுமதித்தாலும் அவை நம்முள் வளரும். நாம் எதையும் அனுமதிக்காவிட்டால் நாம் என்ற புருஷன் நம்முள் வளர முடியும். வெளியிருந்து வரும் அலைகள் உள்ளேயுள்ள புருஷனைச் செயழக்கச் செய்கிறது. நமக்கேயுரியது புருஷன், புருஷன் மட்டுமே செயல்படவேண்டும் என்றறிந்தால் வெளியிருந்து வரும் பிரகிருதியை (இயற்கை) நாம் உள்ளே

அனுமதிக்க மாட்டோம்.

********

 1. ஏன் வெளியிருந்து நம்முள் எதுவும் வர வேண்டும்?

கரைய வேண்டிய ஜீவனின் அமைப்பு.

நம் ஜீவனின் அமைப்பு அவற்றை ஈர்த்து ஏற்றுக்கொள்கிறது.

அந்த அமைப்பைக் கரைக்க வேண்டும்.

ஆயிரம் எண்ண அலைகள் நம் மீது மோதினாலும், எவற்றுடன் நமக்குத் தொடர்பிருக்கின்றதோ அவை மட்டும் உள்ளே நுழைகின்றன. அவை நுழையும் அமைப்பு நம் ஜீவனுக்குண்டு. ஜீவனுக்கு எந்த அமைப்பு இருக்கிறதோ, அதற்குரிய எண்ணங்கள் உள்ளே வரும். எந்த அமைப்பும் இல்லை என்றால் இறைவன் உள்ளே வருவான். அதனால் ஜீவனின் அமைப்பைக் கரைக்க வேண்டியது நம் கடமை.

******

 1. சத்தியத்தின் அம்சங்களை எதிர்த்தால் அவை வளரும். (அன்பு சண்டை மூலம் வளரும்)

எதிர்ப்பால் வளரும் சத்தியம்.

இது ஓர் அடிப்படை ஆன்மீகத் தத்துவம். அன்பு செலுத்தினால் அன்பு வளரும் என்பது நாமறிந்தது. கொடுமைப்படுத்தினால் அன்பு வளரும் என்பதும் ஆன்மீக உண்மை. அன்பும், கொடுமையும் ஒரே இடத்திருந்து புறப்பட்டவை. அதனால் இது உண்மை.

செடிக்குத் தண்ணீர்ப் பாய்ச்சினால் வளரும் என்றால் புரியும். செடியை வெட்டினால், இலைகளைக் கழித்தால் அதிகமாக வளரும் என்பதும் உண்மை. எதிர்த்தால் வளரும். சத்தியத்தின் அம்சங்களை ஒரு நிலையில் போற்றி வளர்க்க வேண்டும். வேறொரு நிலையில் எதிர்த்து வளர்க்க வேண்டும் என்பது ஆன்மீக உண்மை.

நாத்திகப் பிரசாரம் நாட்டில் அளவுகடந்து பரவிய பின் வளர்ந்தது நாத்திகமில்லை, ஆஸ்திகம். ஆஸ்திகத்தை எதிர்த்தால் வளரும் என்பதை கடந்த 50 ஆண்டு சரித்திரம் விளக்கும்.

********

 1. எதற்கும் பயனில்லாதவன் எல்லோரும் போற்றும்படி உயர்வதை அன்னை வாழ்வில் காணலாம்.

பயனற்றவனின் பெரும் பயன்.

*******

 1. மிக முக்கியமானவர் அன்னையை ஏற்றுக் கொண்டால் தம் முக்கியத்தை இழந்து விடுவார். தம் முக்கியத்தை இழக்கும் மனப்பாங்கு இருப்பதாலேயே அவரால் அன்னையை ஏற்றுக் கொள்ள முடிந்தது. அதை இழந்தால் தான் அன்னை உள்ளே வருவார்.

க்கியம் அழியும் பக்தி.

********

 1. நாம் பணத்தை முழுவதும் தியாகம் செய்த பின்னும் மனத்தைப் பணம் ஆட்கொள்வதுண்டு.

மனத்தை ஆட்கொள்ளும் சமர்ப்பணம். பெருஞ்செல்வத்தை தானே முன்வந்து தம் குடும்பத்தாருக்குக் கொடுத்தவர் அதன் பின் பல வருஷங்களான பின் எந்தக் காரியத்தையும் பணத்தின் கண்ணோட்டத்திலேயே கணிப்பதை விட முடியவில்லை என்று கண்டார்.

நரிக்குறவனை நாய் கண்டால் குரைக்கும். அவன் போகும்வரை குரைப்பதை நிறுத்தாது. இது நாயின் குணம். ஒரு பையன் தினமும் வீட்டு வாயில் எல்லா நாய்களும் குரைப்பதைக் கண்டு ஓடி வந்தான். யாரோ புது மனிதர் தெரு வழியே போவதைக் கண்டு நாய்கள் குரைப்பதைப் பார்த்தான். புது மனிதர்களைக கண்டு நாய் அதுபோல் குரைப்பதில்லை. அடுத்த நாளும்

அது நடந்தது. பேண்ட், ஷர்ட் போட்டுக் கொண்டு நேற்றுச் சென்ற மனிதன் இன்றும் தெருவழியே போகிறான். எல்லா நாய்களும் ஒரேயடியாகக் குரைக்கின்றன. அவன் யார் என்று பையன் தெரிந்து கொள்ள விரும்பி யூனியன் ஆபீஸ் பியூன் என்று புரிந்து கொண்ட பின், தினமும் அவன் தெரு வழியே போவதும், நாயெல்லாம் அவனைப் பார்த்து அளவு கடந்து குரைப்பதையும் கண்டு பையன் சிந்திக்க ஆரம்பித்தான். மாதக்கணக்காக இவ்வழியே போகும் மனிதனை ஏன் நாய் பார்த்து குரைக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.

பியூனுடைய ஊர் விவரம் விசாரித்தான். அவன் நரிக்குறவன், படித்துவிட்டு, பியூன் வேலைக்கு வந்திருக்கின்றான் என்று தெரிகிறது. நாகரிகமடைந்த பின்னும் நரிக்குறவனை நாய் அவன் மீதுள்ள வாடையால் அடையாளம் கண்டு குரைக்கிறது என்று பையனுக்குப் புரிந்தது.

பணத்தைத் தியாகம் செய்தாலும், பணத்தின் வாடை நம்மை விட்டு எளிதில் அகலாது. அதை முயன்று களைய வேண்டும்.

*******

 1. கடமையுணர்ச்சியே வாழ்வில் சிறந்தது. அது யோகத்திற்குத் தடை.

யோகத்தடையான கடமை.

வாழ்நாள் முழுவதும் கடமையில் தவறாதவன் என்று பெயரெடுப்பவர் உத்தமர். பகவத்கீதையில் பரமாத்மா அர்ஜுனனை நோக்கி உன் எல்லாக் கடமைகளையும், எல்லாத் தர்மங்களையும் விட்டுவிட்டு என்னைச் சரணடைந்தால் நான் உன் பாவங்களிருந்து உன்னை விடுதலை செய்வேன் என்கிறார்.

யோகத்தை மேற்கொண்டவனுக்குக் குடும்பமில்லை. எனவே குடும்பத்திற்குரிய கடமையில்லை. அவனுக்குச் சமுதாயமில்லை. எனவே அதற்குரிய கடமையும் இல்லை. அவன் மனத்தைக் கடக்கும் முயற்சியில்

ஈடுபட்டிருப்பதால் மனச்சாட்சியும் இல்லை. மனத்தையும் அறிவையும் தியாகம் செய்து இறைவனை ஏற்றுக் கொண்டதால் அவனுக்குக் கடமையுணர்வு இல்லை. கடமையுணர்வு அவனுக்குத் தடை.

*********

 1. இனிய உறவும் பாசமும் அன்னையை ஏற்றுக்கொண்ட பின் இனிமையாக இருக்காது. விரசமாகவுமிருக்கும்.

இனிமையின் விரசம்.

******

 1. மற்றவர் வாழ்வு மலர்வதில் மகிழும் மனிதனுக்கு உறவு என்று தனியாக ஒன்றில்லை.

உறவைக் கடந்த மலர்ச்சி.

********

 1. பாசத்தை ஏற்காதவரில்லை.

********

 1. மனிதனுடைய அன்புக்கு அன்னை தன்னை முழுவதும் கட்டுப்படுத்திக் கொள்கிறார்.

மனிதனுக்கு அடிமையான தெய்வம்.

*******

 1. நம்பிக்கை உற்பத்தி செய்வதைத் திறமை உருவாக்குகிறது.

*******book | by Dr. Radut