Skip to Content

தெய்வீக வாழ்வு

நூலின் கடைசி அத்தியாயம். 55 பக்க நீளமுள்ளது. நூல் அதிகபட்ச நீளமுள்ள அத்தியாயம். Life Divineஇன் சுருக்கம் என்று கூறலாம். கருத்துகள் கனமானவை. ஓரிரு பக்கத்திற்கு மேல் தொடர்ந்து படித்து மனதிலிருத்த ஆன்மிக உறுதி தேவை. தத்துவமான சிக்கலோ, விளங்காத வாதமோ ஒன்று கூட இல்லாத அத்தியாயம், அவ்வகையில் கடினமில்லை, எளிமையான நூலின் பகுதி எனவும் கூறலாம். ஸ்ரீ அரவிந்தத்தின் ஒரு முக்கியக் கொள்கை பகுதியே முழுமையாகும். அக்கருத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது இந்த அத்தியாயம். இதை ஒரு தனிப் புத்தகமாக வெளியிட்டால், இது நூலின் ஒரு பகுதி எனக் கூறாவிட்டால், பகுதி என்பதே தெரியாது. ஒரு முழு நூலின் அம்சமுடையது. ஆங்கிலத்தில் இவ்வத்தியாயத்தின் தலைப்பு Divine Life என்பது நூலின் தலைப்பைத் தலைகீழே மாற்றியது போன்றுள்ளது.

பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகம் Yoga of the body உடலுக்குரிய யோகம். அதைப் பூர்த்தி செய்ய அவர் பயன்படுத்துவது Supermind சத்திய ஜீவியம். தந்திரயோகம் மனிதனை Soul in the body உடலின் ஆன்மா எனக் கருதி யோகத்தை உடல் ஆரம்பிக்கிறது. பூரண யோகம் மனிதனை Soul in the Mind மனத்தின் ஆன்மா எனக் கருதுவதால், யோகத்தை மனத்தில் ஆரம்பித்து நெடுநாள் பலனை உடனே பெறுகிறோம், என்று ஸ்ரீ அரவிந்தர் வாழ்வனைத்தும் யோகம் எனவும் கூறினார். அவருடைய தலையாய நூலை அவர் Divine Body, Divine Spirit,Divine Mind தெய்வீக உடல், தெய்வ ஆன்மா, தெய்வ மனம் என தலைப்பிடாமல் Life Divine தெய்வீக வாழ்வு எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த அத்தியாயத்தை சுருக்கமாகக் கூறலாம்.

நாம் யார், எது உண்மை என அறிந்து அது சிந்திப்பதே நம் இலட்சியம் என அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும். நாம் உடலோ, மனமோ இல்லை. நாம் என்பது ஆத்மா. அது ஜீவனின் பகுதியான ஆத்மாயில்லை. ஜீவனை முழுமையாக்கும் ஆத்மா. முழுமைக்கு பகவான் அளிக்கும் விளக்கம் முக்கியமானது. தன்னை அறிவதும், தன் சக்தியை எல்லாம் முழுமையாகப் பெற்றதும், பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளதும், ஆனந்தத்தை அளவு கடந்து அனுபவிப்பதும், சூட்சுமமான முறைகள் கண்ணுக்குத் தெரிவதும் முழுமை என்கிறார். இதனுள் சச்சிதானந்தத்தின் எல்லாப் பகுதிகளும் உள்ளன. சச்சிதானந்தமே உலகமாக மாறியதாலும், சச்சிதானந்தமே மனிதன் என்பதாலும், சத், சித், ஆனந்தத்தின் எல்லாப் பகுதிகளும் இருந்தால் முழுமை பெறும் என்பது கருத்து. மனிதன் என்பது மனமன்று, சத்திய ஜீவியம். மனத்திற்கு இம்முழுமையில்லை. சத்திய ஜீவியம் இம்முழுமையையே முகமெனக் கொண்ட பகுதி.

பரிணாமம் பூர்த்தியானால் பரமாத்மாவின் யோகம் பூர்த்தியாகும்.

ஜீவாத்மா பரமாத்மாவாவது பரந்த நோக்கம்.

அதன் முன் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவுமாகும்.

நிஷ்டையோ, நிர்வாணமோ இதைச் சாதிக்காது.

ஆத்ம விழிப்பே ஆதர்சப் புருஷனுக்குரியது.

ஆத்மா உலகில் விழித்தால் உடல் உலகம் முழுவதும் பரவும்.

முழுமையை முழுமையாக்குபவன் முதல்வன், மூலவன்.

புறம் பூர்த்தி செய்யாது.

அகம் ஆண்டவனுக்குரியது.

புறச் செயன் திறமை அகத்தூய்மையின் திண்மை. அகம் புறமானால், இகம் பரமாகும்.

மனம் மையமன்று.

அகமே மையம். ஆன்மாவே அகம்.

ஆன்மாவின் ஆனந்தம் அனைத்தின் ஆனந்தம்.

திருவுரு மாற்றம் திட்டவட்டமான முறை.

அருளைப் பேரருளாக்கும் சரணாகதி அர்த்தமுள்ள கருவி.

சர்வமும் மாறி சச்சிதானந்தம் உலகமாயிற்று.

திருவுள்ளம் பூர்த்தியாவது திருவுருமாற்றத்தால்.

சரணாகதி சாதாரண மனிதனை சர்வேஸ்வரனாக்கும்.

இப்படித்தானிருக்கவேண்டும் என்பதில்லை, எப்படியுமிருக்கலாம்.

இகத்தில் பரமிருந்தால் எப்படியுமிருக்கலாம்.

எளிமை மனத்திற்கு, வாழ்வுக்கன்று.

அஞ்ஞானத்தின் ரஸம் ஆண்டவன் தேடுவது.

அஞ்ஞானம் ஆண்டவன் தேடி வந்த ஞானம்.

*****



book | by Dr. Radut