Skip to Content

இதயத்தின் எழுச்சி

 

Page 1

பிறந்த   மனிதனின்   மலர்ந்த   இதயம்.

கடல்   நீரை   விலக்கும்   கப்பலில்லை.

நாத்திகம்போல்   ஆஸ்திகத்தை   வளர்த்தவரில்லை.

ஆழ்ந்த   இலட்சியமே   உயர்ந்ததுமாகும்.

யுகம்   பிறந்தபொழுது   எழுந்தது   யுகதர்மம்.

திகட்டும்   உலகம்   திருப்தி   தாராது.

புறவழிப்போக்கு   அகத்தின்   ஆரம்பத்தில்   முடியும்.

ஆரம்பமே   அனந்தனுக்கு   முடிவு.

 

Page  2

இலட்சியத்திற்கு   உடன்பாடு   அனுபவத்திற்கு முரண்பாடு.

ஆழ்ந்த   அனுபவங்கள்   அதிகப்   பிரசங்கிகளாகும்.

மனிதனுக்குப்   புரட்சி;   உலகத்திற்கு   வளர்ச்சி.

உலகின்   இருட்டு   பிரபஞ்ச   ஜோதியாகும்.

வலிக்கும்   உடலும்   வதையும்   உணர்வும் சாஸ்வதமான   சாந்தியடையும்.

அழியும்   உடலுக்கு   அழியா   அமரத்துவம்   தேவை.

இறைவன்   இறங்கி   இங்கு   வருவான்.

கண்ணுக்கு   எட்டியதே   கடலுக்குக்   கரை.

எய்தியதை   மறுக்கும்   எண்ணம்   எடுபடாது

முரண்பாடே   உடன்பாடு.

இறைவனின்   இதய   கமலம்   மடையனுக்கு மண்டை   ஓடு.

 

Page   3

சுமுகமே   சிருஷ்டியின்   சூட்சுமம்.

மறைவின்   மகிமை   மனத்திற்குப்   புதுமை.

பிணக்கு   விலங்கு   மனத்திற்கு   விதி,   விலக்கன்று.

பிணக்கை   மனம்   பிணமென   விலக்கும்.

குறையான   மனம்   குறையை   குணமெனக்   கொள்ளும்.

இயற்கைக்கு    சுமுகம்    இன்றியமையாதது.

உடல்   தன்   சுமுகத்தை   சுகம்   என   அறியும்.

சிக்கல்   பெருஞ்   சிக்கலானால்,   தீர்வுக்குத்   தீவிரம்   அதி தீவிரமாகும்.

உடலின்   தாமதம்   உணர்வின்   வேகத்தை   ஏற்கும்.

உடல்   மனத்தை   ஏற்றால்   உள்ளொளி   நிலைக்கும்.

உடலின்   ஜோதி   அமர   ஜோதி.

மனமும்   உணர்வும்   இணைந்தது   விஞ்ஞானம்.

விலங்கு   பெறும்   ஜோதி   வீடு   பேற்றைக்   கடந்த   சித்தி.

முரண்பாடு    முத்தினால்    முத்தியைக்    கடந்த சித்தியுண்டு.

இயல்பான    பகை    இயற்கைக்கு    இசைவானது.

 

Page   4

வேதாந்தம்   பரிணாமத்தைப்   பற்றிப்   பேசுகிறது.

முதற்படியை    ஏற்பவர்    மூன்றாம்    கட்டத்தையும் ஏற்கலாம்.

மனிதன்   தெய்வத்தின்   சோதனைக்   கூடம்.

 

Page   5

பூலோகம்   சுவர்க்கத்தை   அடைய   முடியும்.

பகுத்தறிவுக்குப்    பளிச்செனப்    புரியும்.

தொட்ட   குறை   தொடரும்,   விட்டகுறை   விடாது.

முடிவுவரைப்   போக   முடியாது   என்பது   மூட நம்பிக்கை.

லோகமாதாவை   லௌகீகமாக   நினைக்கக்கூடாது.

உயர்ந்த   இலட்சியத்தை   உதறித்   தள்ளுவது உசிதமன்று.

மலரும்   மனம்   மனித   குலத்தின்   மகத்துவம்.

 

******



book | by Dr. Radut