Skip to Content

ஸ்ரீ அரவிந்தம் தத்துவம்

ஸ்ரீ அரவிந்தம் தத்துவம்

 

STRUCTURE OF LIFE DIVINE

 

Book I

OMNIPRESENT REALITY AND

THE UNIVERSE

பரம்பொருளும்

 

பிரபஞ்சமும்

 

 

Book II

THE KNOWLEDGE AND

 

 

THE IGNORANCE

 

- THE SPIRITUAL EVOLUTION

ஞானம்

அஞ்ஞானம்

ஆன்மீகப் பரிணாமம்

Part - I

THE INFINITE CONSCIOUSNESS AND

THE IGNORANCE

அனந்தஜீவியம் அஞ்ஞானம்

 

Part - II

THE KNOWLEDGE AND

 

THE SPIRITUAL EVOLUTION

ஞானம்

ஆன்மீகப் பரிணாமம்

1. உலகை, உலகுக்கப்பாலுள்ள ஆண்டவன் சிருஷ்டித்தான் என்ற கருத்தை ஏற்காமல் ஸ்ரீ அரவிந்தர் இறைவனான பரம்பொருள் தானே உலகமாக மாறினான் என்று கொண்டு Life Divineஐ எழுதினார். நூலின் முதல் புத்தகம் அதைக் கூறுகிறது. இது சிருஷ்டி.

2. சிருஷ்டிக்கு இதுவரை காரணம் கூறியவரில்லை. லீலை என்றவர்கள் ஏன் லீலை ஏற்பட்டது எனக் கூறவில்லை. பிரம்மத்தை நாம் பரம் பொருள் இறைவன் என்கிறோம். இது அனந்தமானது. அனந்தமான இறைவனுக்கு தன் இச்சையாகச் செயல்படும் உரிமையும், திறமையும் உண்டு. தான் இன்பம் துய்க்க விரும்பினான். ஒளிந்து மறைவதும், மறைந்ததைக் கண்டு பிடிப்பதும் இன்பம். சர்வ வியாபியான பிரம்மம் எங்கு போய் மறைவான்? அவன் மறைய அவனுக்கு இடமில்லை. ஏனெனில் எங்கும் அவனே இருக்கிறான். எனவே தன்னுள் தான் மறைவதாக (Self-absorption) முடிவு செய்தான். அதனால் ஏற்பட்ட பல மாறுதல்களில் ஞானம், அஞ்ஞானமானதும் ஒன்று. இரண்டாம் புத்தகத்தின் முதற் பகுதி ஞானம் அஞ்ஞானமானதைக் கூறுகிறது. இது சிருஷ்டி. சிருஷ்டி முடிந்த பின் பரிணாமம். இது அஞ்ஞானத்திலிருந்து ஞானம் வெளி வருவது. மறைந்து மறந்த இறைவன் தன் நினைவு பெறுவது ஆனந்தம். நினைவால் வெளிவருவது பேரானந்தம். இரண்டாம் புத்தகம் பரிணாமத்தை விளக்கும்.

இதில் இரு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி பரம்பொருள் அனந்த ஜீவியமாகி, பிரபஞ்சமாகுமுன் அஞ்ஞானமாகும் பகுதி.

இரண்டாம் பகுதி ஞானம் வெளிவந்த பின், பரிணாமம் தொடர்ந்து ஆன்மா வளர்வதாகும். வளர்ந்த ஆன்மா மீண்டும் சத் புருஷனையடைந்து, பிரம்மத்தில் போய்ச் சேருகிறது என புத்தகம் முடிகிறது.

நூலில் கடைசி பக்கமான 1070இல் பகவான், "அஞ்ஞானத்தை ருசித்து அனுபவிக்க ஏற்பட்டது சிருஷ்டி. அதை அனுபவித்தாயிற்று" என முடிக்கிறார்.

Pg3

ஆன்மா உற்பத்தியான வகை

 

Creation of Spirit

Sat objectivises itself as Satyam.

Sat is neither subjective nor objective.

The experience of Sat is Spirit.

Spirit is substance.

It is spiritual substance.

அகமான சத் சத்தியமாகப் புறத்தில் மாறும்பொழுது ஆன்மா உற்பத்தியாகிறது.

சத் தன்னுள் சித்தையும், ஆனந்தத்தையும் கொண்டது.

சத்திற்குத் தன்னை அறியவோ, அனுபவிக்கவோ அவசியமில்லை, ஆனால் முடியும்.

சத் தன்னை அறிவதால் சித் ஆகிறது.

சத் தன்னை அறிந்தபின் சித் மூலம் தன்னை உணர்ந்து அனுபவிப்பதால் ஆனந்தமாகிறது.

சத் தன்னைப் புரிந்து கொள்ள முயன்றால் (comprehend) சத்திய ஜீவியமாகிறது.

சத்திற்குத் தான் சத்தாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை என்பதைச் செயல்படுத்தினால் சத் மீண்டும் பிரம்மமாகும்.

சத் is Self-Conscious Being.

. இதன் அம்சங்கள் மூன்று.

ஆத்மா- புருஷா- ஈஸ்வரா.

மனம் ஆத்மாவை அக்ஷரப்பிரம்மமாகக் காணும். தெய்வீக மனம் ஆத்மாவைப் புருஷனாகவும், புருஷோத்தமனாகவும் காணும்.

சத்திய ஜீவியம் ஆத்மாவை ஈஸ்வரனாகக் காணும்.

அக்ஷர பிரம்மம் புருஷோத்தமனில் அடக்கம்.

அக்ஷர பிரம்மமும், புருஷோத்தமனும் ஈஸ்வரனுள் அடக்கம்.

Self என்பது பிரம்மம். பிரபஞ்சத்தைக் கடந்தது.

Soul என்பதும் அதுவே. நாம் ஆத்மா என்போம். இது பிரபஞ்சத்திற்குரியது.

Being என்பது பொதுச் சொல். ஜீவன் எனலாம்.

Spirit என்பது ஆன்மா எனப்படும்.Self,soul.being என்பவை Spiritஇன் பல நிலைகள், பல தோற்றங்கள்.

Man sees Self as his own self or collective self or immobile self or universal self or cosmic self or Transcendent Self as his vision rises..

புருஷன், ஈஸ்வர அம்சங்கட்கு முன் நிலை பிரம்மம்.

******

சத்திய ஜீவியம்

 

Supermind is the nature of Sachchidanandam

சத் - சித் - ஆனந்தம் அகமானால்

சத்தியம் - ஞானம் - அனந்தம் புறமாகும்

புறம் என்பதை nature என்கிறார்.

சத்திய ஜீவியத்தில் இருபகுதிகள் உள்ளன.

முதற்பகுதி காலத்தைக் கடந்தது.

அடுத்தது காலத்திலுள்ளது.

  • மனம் இவற்றினிடையே பிறக்கிறது.
  • சத்திய ஜீவியம் முழுமையானது.
  • இங்கு ஞானமும், உறுதியும் இணைந்துள்ளன.
  • பிரம்மத்தின் தொடர்பு இங்கு நிரந்தரமானது.
  • மனத்தில் பிரிந்து தெரிபவை இங்கு இணைந்து தெரியும். புருஷப் பிரகிருதி இங்கு ஒன்றே, சத், சித், ஆனந்தம் மூன்றாகத் தெரிந்தாலும் ஒன்றானவை. தகப்பன், கணவன் ஒரே மனிதன் என்பதைப்போல் பிரியாத பாகுபாடுள்ள இடம்.
  • Real-Idea பூரண எண்ணத்தால் சிருஷ்டிக்கிறது.

******

வாழ்வு

 

Creation of Life

மனத்தில் இரு பகுதிகள் உள்ளன.

ஞானம், உறுதி என்பவை அவை.

உறுதி என்பது சக்தி.

ஞானம் உறுதியுடன் செயல்பட்டால் சக்தி பிறக்கும்.

அப்படிச் செயல்படும்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கும், சக்தி எழுந்தால் சக்தியின் லோகம் (Plane of life) உற்பத்தியாகும்.

வாழ்வு என்ற லோகம் ஞானம், உறுதியில் செயல்படுவதால் எழுவது. இங்கு ஞானம் குறைவாக இருக்கும்.

SAT_Pg7

********

ஜடம்

 

Creation of Matter

ஞானம் உறுதிமேல் செயல்படும்பொழுது வாழ்வு

உண்டானால், ஓரளவு ஞானம் தன்னை இழக்கும்,

முழுவதும் ஞானம் தன்னை இழந்தால் வாழ்வு

ஜடமாகும். ஜடம் இவ்விதம் உற்பத்தியாகிறது.

இதையே வேறுவிதமாகவும் கூறலாம்.

சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ளது ஆன்மா.

இதை spirit எனவும் spiritual substance எனவும் கூறுகிறார். சிருஷ்டியில் spiritual substance மாறி material substance ஜடப் பொருளாக வேண்டும். Spirit கண்ணுக்கு புலனுக்கு தெரியாது. புலனுக்குத் தெரிய உருவம் வேண்டும். புலன் மனத்தின் கருவி. மனம் புலன் வழி ஆன்மாவைக் கண்டால் Spiritual substance மாறி  material substance, அதாவது Matter  ஜடமாகிறது என்பது தத்துவம்.

SAT_Pg8

சத்திற்கும் சத்தியத்திற்கும் இடையேயுள்ள ஆன்மாவை சத்திய ஜீவியத்தின் இரு பிரிவுகளிடையே பிறந்த மனம் கண் என்ற புலன் வழி காணும்பொழுது ஜடமாகத் தெரிகிறது.

  • ஜடம் என்பது ஆன்மா.
  • ஜடம் என்பது மனத்தின் பார்வைக்கே தவிர ஜடம் என்பதில்லை.
  • ஆன்மாவை மனம் ஜடமாகக் காண புலன் வழியாகக் காணவேண்டும்.
  • ஆன்மாவுக்கு உருவமில்லாவிட்டால் மனம் காண முடியாது.

உருவம் பெற்ற ஆன்மா புலன் வழி காணும் மனத்திற்கு ஜடமாகத் தெரிகிறது.

******

மேல் மனம்

Surface Mind

  • மேல்மனம், உள்மனம், அடிமனம், ஆழ்மனம் (surface mind,inner mind,subliminal mind,subconscious mind)
  • ஆழ்மனம் நம் கடந்த கால வாழ்வை உடலும், ஜீன், குரோமசோம், DNA என்பவற்றிலும் வைத்துள்ளது. இதயம், ஜீரணம், அனிச்சைச் செயல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது, தானே இயங்குவது.
  • மேல் மனம் என்பதையே நாம் மனம் என்கிறோம். நாம் ஆழம் என்பது மேல் மனத்தின் ஆழம், depth of the surface. இதன் அம்சங்கள்,

மனம், சிறியது, அகந்தை, காலம், மேலேழுந்ததாக

இருப்பது.

  • அஞ்ஞானம் இங்கே பூர்த்தியாகிறது.
  • உள்மனம் பரந்தது, மேல் மனத்திற்கு அடியில் உள்ளது. சூட்சுமமானது, ஆன்மிகமானதன்று, பெரியது. அடிமனம் உள் மனத்தில் அமைந்துள்ளது.
  • உள் மனம் மேல் மனத்தின் ஆழம் எனலாம்.
  • மனோமயப் புருஷனும், நிர்வாணக் கதவும் இங்குள்ளன. சைத்தியப் புருஷன் உள்ள அடிமனத்திற்குப் போக உதவும்.
  • Superconscient பரமாத்மாவும், ஆழ்மனம் subconscientஉம் உள்மனத்தில் சேருமிடத்தில் அடிமனம் ஏற்படுகிறது. சைத்தியப் புருஷன் அடிமனக் குகையில் இருக்கிறான். அடிமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவக் கூடியது. எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் மனம், உணர்வு, உடல் அடிமனத்தில் சந்தித்து ஒன்றாக உள்ளன.

நம் கண்ணில் படாதவை, காதில் விழாதவை அடிமனத்திற்குத் தெரியும். அங்குப் பதிவாகும்.

ஒருவர் சந்தோஷம் உலகத்தின் சந்தோஷம் ஒருவர் வருத்தம் உலகத்தின் வருத்தம்

என்பதை உண்மையாக்கும் மனம் அடிமனமாகும்.

******

Spiritual Aspects

 

Fundamental Spiritual Determinants

உலகம் பெரியது. அது சூரிய மண்டலத்தின் பகுதி, சூரிய மண்டலம் பிரபஞ்சத்தின் பகுதி. நாம் அறிவது நம் ஊர், சந்தர்ப்பங்கள் மட்டும்.

  • சாதாரண மனிதனுக்கு ஊர் தெரியும்.
  • படித்தவனுக்கு நாட்டைப் பற்றித் தெரியும். நடைமுறையில் அவனும் சாதாரண மனிதனே.
  • தவம் செய்தவர்கள் தவிர மற்றவர்க்கு திருஷ்டியில்லை. திருஷ்டியின் நிலைக்கேற்ப, கவி இயற்கை எழிலைக் காண்கிறான். தவசிகள் காண்பவை மூன்று.

1. அக்ஷரப் பிரம்மம்.

2. சித் சக்தி

3. ஆனந்தம்

  • சத் புருஷனைக் கண்டவன் அதை அக்ஷரப் புருஷனாகக் காண்கிறான்.
  • அக்ஷரப் பிரம்மத்தைக் கண்டவனுக்கு உலகம் மாயை.
  • சித்சக்தியைக் கண்டவனுக்கு உலகம் பிரகிருதி. இவன் நாத்திகன்.
  • ஆனந்தத்தைக் கண்டவனுக்கு உலகம் லீலை.
  • ஒன்றைக் கண்டவர்கள் மற்ற இரண்டையும் மறுக்கிறார்கள்.
  • மனம் அக்ஷரப் பிரம்மத்தைக் கண்டால், தவசியின் நிலை தெய்வீக மனத்திற்கு உயர்ந்து மனோமயப் புருஷனை அடையலாம். அப்பொழுது மனம் கண்ட அக்ஷரப் பிரம்மம் முதல்

புருஷனாகவும், அடுத்த உயர்ந்த கட்டத்தில் கீதை புருஷோத்தமனாகவும் தெரிகிறது.

  • அக்ஷரப் புருஷன் புருஷோத்தமனில் அடக்கம்.
  • தவசி மேலும் உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து சத் புருஷனைக் கண்டால், சத் புருஷன் ஈஸ்வரனாகத் தெரியும். ஈஸ்வரனுள் புருஷோத்தமன் அடக்கம்.
  • அக்ஷரப் பிரம்மமும், புருஷோத்தமனும் பிரளயத்தால் அழிவதில்லை. ஈஸ்வரன் அழிவான். அதனால் ரிஷிகள் ஈஸ்வரனைக் கருதவில்லை.
  • ஈஸ்வரன் அழிந்தாலும் பிரதமர்போல் சக்தியுள்ளவன். புருஷோத்தமன் ஜனாதிபதிபோல் அழியாவிட்டாலும் power இல்லாதவர்.
  • அக்ஷரப் பிரம்மமும், புருஷோத்தமனும் சிருஷ்டிக்காதவர்கள், ஈஸ்வரன் சிருஷ்டிப்பவன்.

*******

Spiritual Aspects

Fundamental Spiritual Determinants

 

 

சத்

 

பிரம்மம், புருஷன், ஈஸ்வரன்

 

Self as subject, Self as object and

Self-awareness holdingthem together

சித்

 

ஞானம், உறுதி

 

Known, knowledge, knower

Lord of  Will, Force, Object of Will

ஆனந்தம்

 

அழகு, சந்தோஷம், அன்பு

 

Lover, Love, Beloved

Enjoyer, Enjoyment, Enjoyed

As the world consists of only objects created out of the 93 elements by their

interaction, இவ்வுலகில் உள்ள பொருள்களும், மனிதர்களும், நிகழ்ச்சிகளும்

மேற்கண்ட 24 அம்சங்கள் இணைந்து செயல்படுவதால் ஏற்பட்டவை.

(மேற்கண்ட 8 spiritual determinants ஒவ்வொன்றும் 3 ஆகப் பிரிவதால் 24 ஆகின்றன)

Process of Creation - Methods

  • Self-conception, Self-limitation, Self-absorption, Objectivity, Subjectivity, Dividing, Energising, Force creating Forms, Forms meeting, Forms creating sensation, double opening of evolution, double opening that forms the Many out of One, extension, putting out powers as nature.
  • All planes are one; all methods are one.
  • Planes and Methods are after all ONE.
  • Self-absorption is by self-conception and self-limitation.
  • Movement is method, repose is the plane.

 

*****

சிருஷ்டியின் இரகஸ்யம் - முறைகள்

தன்னிச்சையாகச் செயல்படுவது, தனக்கு அளவு ஏற்படுத்துவது, தன்னை தன்னுள் கிரகித்துக் கொள்வது; அகம் புறம்; பகுத்தல், சக்தியை எழுப்புதல், சக்தி ரூபம் ஏற்படுத்துவது; ரூபம் புலனுணர்வை எழுப்புவது; மேலும், கீழும் ஒரே சமயத்தில் செல்வது; ஒன்று பலவாக மாற, பிரிந்து சேர்வது.

  • எல்லா லோகங்களும் ஒன்றே, எல்லா முறைகளும் ஒன்றே.
  • லோகங்களும் முறைகளும் ஒன்றே.
  • தன்னைக் கிரகித்துக் கொள்ள தானே முடிவு செய்வதால் அது தன்னிச்சையாகும்.
  • அமைதி லோகம், சலனம் முறை.

ஜடமாக மாறும் சத், இருளாக மாறும் ஒளி, வலியாக மாறும் ஆனந்தம் தன்னுள் தன்னைக் கிரகித்துக் கொள்ளும் முறையைப் பயன்படுத்துகிறது. தானே இச்சைப்பட்டு இது நடப்பதால் இவ்விருமுறைகளும் ஒன்றே. அகத்தில் ஒளியானது புறத்தில் இருளாக இருப்பதால், இதுவே அகம் புறம் என்ற முறையாகும். ஒளி என்பது ஓர் அளவு. இருள் என்பதும் ஓர் அளவு. ஒளி இருளாக மாற தனக்குத் தானே அளவை ஏற்படுத்திக் கொள்கிறது.

சத் என்பது ஒரு லோகம். கிரகிப்பது ஒரு முறை. இவையிரண்டும் ஒன்றே என மனம் எனும் லோகமும், எண்ணம் என்ற முறையில் விளக்கலாம்.

மனம் செயல்படும்பொழுது எண்ணம் எழுகிறது. எண்ணம் செயல்படாமல் அமைதியானால் மனம் என்ற லோகம் உண்டாகிறது. இதேபோல் எல்லா முறைகளும் ஒன்று எனவும், எல்லா லோகங்களும் ஒன்று எனவும் கூறலாம். மேலும் எல்லா லோகங்களும் எல்லா முறைகளும் ஒன்றே எனவும் கூறலாம்.

முறைகள், பொருள்கள், ரூபங்கள், குணங்கள் ஆகிய பல ஒன்றிலிருந்து எழுந்த வகை இதுவே.

******

காலம், இடம்

 

Time and Space

  • சித்தின் அகம் காலம், புறம் இடம்.
  • சித் என்பது இங்கு முழு சச்சிதானந்தத்தையும் குறிக்கும்.
  • சத்தில் அகம், புறம்; காலம், இடம் இருக்க முடியும். சத் பிரியப்பட்டால் அவற்றிலிருந்து விலகலாம்.
  • சத்திய ஜீவியத்தில் காலத்தைக் கடந்த பகுதியும், காலத்திற்குட்பட்ட பகுதியும் உண்டு.
  • மனம் இவற்றிடையே ஏற்பட்டது.
  • மனத்திற்கு ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்க முடியும் என்றாலும் திரும்பி மறுபக்கத்தையும் பார்க்கும் திறன் உண்டு.
  • சித்திலிருந்து வரும் சக்தியில் காலமும், இடமும் உற்பத்தியாகின்றன.
  • சத்திற்கும், சித்திற்கும் முழுமையுண்டு. சக்தியைப் பிரிக்கலாம். சத், சித்தைப் பிரிக்க முடியாது.
  • பிரியும் சக்தி மேலும், பிரியாத ஜீவியமும், சத்தும் முழுமையாக உள்ளேயும் உள்ளன.
  • மனத்தால் தான் பிரித்த சக்தியையும், அதன் பாகங்களையும் காண முடியும். முழுமையான சித், சத்தைப் பார்க்க முடியாது, சத்திய ஜீவியம் பார்க்கும்.
  • மனிதன் சிந்தனையில் எழுவது கற்பனை, காவியம், சித் தெய்வ சிந்தனையில் எழுவது காலம். அது அகம், அதன் புறம் இடம். காலமும், இடமும் உலகைத் தாங்குகின்றன.

*****

The four above which become the four below :

 

Sat                Matter

Chit                Life

Ananda          Psychic

Supermind     Mind

 

  • Sat becomes conscious, enjoys its bliss, knows itself as power of Force and Knowledge, splits itself into the Timeless and Time planes, creates a subordinate power of Mind which loses its knowledge on its will to create the plane of life and losing all knowledge and all movement turns into inert Matter.

 

  • Mind, life and body have mental consciousness, vital consciousness and physical consciousness. Below the consciousness there is substance in all planes. As Sat precedes Chit in descent, Chit is above Sat in ascent.

******

Unity, Truth, Goodness,

Knowledge, Power, Love

 

ஐக்கியம், சத்தியம், நல்லது, ஞானம், சக்தி, அன்பு ஆகிய ஆறு அம்சங்களும் சிருஷ்டி பூர்த்தியாக அவசியம். ஒரு சமயத்தில் ஓர் அம்சமே செயல்பட முடியும் என்பதால், அச்சமயம் மற்றவை குறையாக இருப்பதாகத் தெரியும். அது குறையில்லை. அதன் முறை இன்னும் வரவில்லை எனப் பொருள்.

நமக்கு வலியிருப்பது ஆனந்தமில்லாதது தெரிவது போல் மற்ற எந்த அம்சம் குறையாக இருப்பதும் தெரியவில்லை என்பதால், வலியிருப்பதை மட்டும் குறையெனக் கூறுகிறோம்.

******

It is the essential in determinability of the Absolute that translates itself into our consciousness as the fundamental negating positives of our spiritual experience and fundamental affirming positives.

 

 

1.

The immobile immutable Self

அக்ஷர பிரம்மம்

The Self that becomes all things

சத் புருஷன் (The essence and source of all determinations and the dynamic essentiality.)

2.

The Nirguna Brahman

நிர்குணப் பிரம்மம்

The Saguna Brahman

சகுணப் பிரம்மம்

3.

The Eternal without qualities

The Eternal with infinite qualities

4.

The pure featureless

One Existence - One பரமாத்மா

The One who is the Many - Many

ஜீவாத்மா

5.

The Impersonal

அனந்தகுணா

The infinite person who is the source and foundation of all persons and personalities.

6.

The Silence void of activities புருஷன்

The Lord of Creation, the word ஓம்

7.

The Non-Being அசத்

The Master of all works and creation சத்

8.

9.

The Ineffable

The Unknowable

That being known, all is known

 

 

ஒரு நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்து அதிலுள்ளதை நாம் அறிந்து அடுத்த பக்கமில்லை என்று கூறுவதில்லை. ஆனால் வாழ்வில் பல சமயங்களில் அதைச் செய்கிறோம், விவசாயிக்கு விவசாயமே பெரியது எனத் தோன்றுகிறது. அதைப் பேசும் பொழுது உலகமே விவசாயம் என்கிறான். மற்றது கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் மனதில் படுவதில்லை.

பிரம்மத்தைக் கண்டவர், கண்டு சித்தித்தவர் ஆயிரம் பேருண்டு. கண்டவர்கள் மனத்தால் கண்டவர்கள். நம் உயர்ந்த பகுதி மனம். மனத்தால் மட்டுமே நாம் காண முடியும். மனத்தால் பிரம்மத்தைக் காண்பது மைக்கிராஸ்கோப்பால் மனிதனைப் பார்ப்பதாகும்.

அப்படி இதுவரை கண்டவர்களுடைய ஆன்மீக அனுபவம் இரு பகுதிகளாகும். ஒன்றை பாஸிடிவ் எனவும், அடுத்ததை

நெகட்டிவ் எனவும் கூறினால் 7 வகைகளாக அவற்றைப் பிரித்து ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். அவற்றை மேலே எழுதியுள்ளேன். ஒன்றை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றுக்கு எதிரானது மற்றது என்று காண்பிப்பது இயற்கையின் முறை என்கிறார். பிரம்மத்தை சத் எனவும் அசத் எனவும் அதுபோல் பிரித்துக் காட்டுகிறது சிருஷ்டி. சத் என்பதை ஆன்மாவாகவும், அசத் என்பதை ஜடமாகவும் கருதுவோம்.

சலனமற்ற மாறுதலற்ற பிரம்மம் என ஒன்றை ரிஷிகள் அறிவார்கள். அதை அக்ஷர பிரம்மம் என்பர். இதன் மறுபுறத்தைக் கண்டவர்கள் இந்த பிரம்மமே உலகிலுள்ள எல்லாப் பொருள்களாகவுமாயிற்று என்பர். அதை சத் புருஷனின் அம்சமாகக் கருதுவர்.

குணங்களற்றவன், நிர்குண பிரம்மம் என்பது அடுத்தது. அதன் மறுபுறம் சகுணம், எல்லா குணங்களையும் உடைய பிரம்மம். ஈஸ்வரன் இவ்விரு பகுதிகளாகப் பிரிந்து தெரிகிறது. இரண்டும் சேர்ந்த முழுமை ஈஸ்வரன்.

ரூபமற்ற பிரம்மம், அரூபிணி என்பது ஒன்று. இதன் மறுபுறம் எல்லா ரூபங்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது.

செயலற்ற சொல்லற்ற மௌனம் அடுத்தது. எல்லா செயல்களையும் எல்லா சொற்களையும் தன்னுட் கொண்ட ஓம், சப்த பிரம்மம் அதன் மறுபுறம்.

சொல்லால் விவரிக்க முடியாதது, அறிவுக்கு எட்டாதது அடுத்தது, எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாமோ அது இதன் மறுபுறம்.

*****

The Psychic

This is a Yoga of spiritual evolution. Starting from Matter the hidden spirit in it gains evolutionary experience by its movement in the process of generating life and collects its spiritual experience at the psychic centre which is tangible only in the Mind. Starting from there, the Yogi goes up and down to complete its experience through the journey.

Evolution is to find the hidden Sat through the dynamism of Chit by the leader of it, viz. Psychic. So He says that the body is the Delight of being tempting the hidden consciousness to find the secret Godhead.

*****

The range of spiritual mind

 

 

Higher mind                Silence              முனி

Illumined mind            Light                  ரிஷி

Intuitive mind              Knowledge        யோகி

Overmind                    Knowledge        தெய்வம்

                                   unhampered

                                    by Ignorance

 

  • மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடையே இந்த 4 நிலைகள் உள்ளன. தெய்வீக மனத்திற்கும் மேல் ஒரு பொன் மூடியுள்ளது.
  • பொன்மூடியைக் கடந்தவுடன் நிர்வாண நிலையுண்டு.
  • மனம் என்பதை மேற்சொன்ன 4 நிலைகளாலும், மனித மனத்தாலும் குறிப்பிடுகிறார்.
  • சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது காலத்தைக் கடந்ததும், காலத்திற்குரியதுமாக அவற்றிடையே சத்திய ஜீவியத்தின் சிறு பகுதியாக மனம் உற்பத்தியாகிறது.
  • சத்திய ஜீவியத்திற்கு முழுமையுண்டு.
  • தன் முழுமையையிழந்து பகுதியான மனத்தை சத்திய ஜீவியம் உற்பத்தி செய்கிறது.
  • சிருஷ்டி சத்திலிருந்து ஜடத்தை நோக்கி வரும்பொழுது தன்னை பிரம்மம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து ஜடமாகிறது.
  • சத்திய ஜீவியம் முழுமையை இழந்து மனமாவது அதன் பகுதி. மனத்தைப் பிரிவினையின் கருவியாக உற்பத்தி செய்கிறது.
  • ஆன்மாவை (spiritual substance) மனம் பிரித்து வாழ்வையும், ஜடத்தையும் உற்பத்தி செய்கிறது.
  • பிரம்மம் சிருஷ்டியின் அடியில் ஜீவனாகவும் மேலே சக்தியாகவும் உள்ளது. ஜீவன் என்றும் முழுமையானது. அதைப் பிரிக்க முடியாது. அதன் ஜீவியத்தையும் பிரிக்க முடியாது. பிரிவது Force சக்தி.

******

யோக விளக்கம்

மனிதன் தன் உயர்ந்த கரணமான ஆன்மாவை உடலிலிருந்து விடுவித்து அதன் ஆதியை அடைவது மோட்சம். ஆன்மா வேறு, உடலும் மனமும் வேறு என ஏற்றுக் கொள்வதால் மேற்கொள்ளும் பாதை மோட்சம்.

உடலும், வாழ்வும், மனமும் ஆன்மாவின் வேறு உருவங்கள், அவற்றுள் ஆன்மா பொதிந்துள்ளது. அது அனுபவம் பெற உடலைத் தாங்கியுள்ளது, விடுவிக்கக் கூடாது. பள்ளிக்குப் படிக்க வந்த பையனிடம் படிப்பை முடிக்கச் சொல்ல வேண்டும், வீட்டுக்கு அனுப்புவது மோட்சம் போலாகும். உடல் உழைப்பதும், உயிர் வாழ்வதும், மனம் சிந்திப்பதும் ஆன்மா அவற்றுள் பிறவியின் அனுபவத்தைப் பெறுவதாகும். அனுபவம் சேருமிடம் சைத்தியப் புருஷன். இவனை உடலில், முதலில் காண முடியாது. மனத்தில் காணலாம். அங்கு கண்டு அவன் வளர்ச்சியை மேலே 4 நிலைகளிலும் கீழே 3 நிலைகளிலும் தொடர்ந்து உடல் சத்திய ஜீவனாகவும், சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும் முடிப்பது ஆன்மீகப் பரிணாமமாகும். இதைப் பல பிறவிகளில் முடிக்க வேண்டும் என்பதால் மறுபிறப்புண்டு.

******

Four types of Knowledge

 

1. The surface mind gets its knowledge indirectly through the various senses.

2. The subliminal goes beyond the sense organs to get the knowledge of the environment without the medium of the sense organs.

3. Intuition is direct knowledge, not through the sense organs or senses.

4. Final knowledge is the knowledge of the spirit that identifies with the Superconscient.

  • ஞானம் knowledge என்பது ஜீவியத்தின் வெளிப்பாடு.
  • ஞானம் அடுத்த கட்டத்தில் Light ஒளியாகிறது.
  • மீண்டும் Light மனிதனுக்குப் புரியும் அறிவாகும்.
  • அவற்றுள் கடைசி கட்டமான அறிவு புலன்கள் மூலம் நாம் பெறும் அறிவு. கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதுமான அறிவு கண், காது என்ற பொறிகளால் நாம் பெறுவது.
  • அறிவது மனம். புலன் கருவி. மனம் நேரே அறிய முடியும். அதற்குப் புலன் உதவி அத்தியாவசியமில்லை.
  • இன்று நமக்கு ஐம்புலன்களுண்டு. 12 புலன்களிலிருந்து மனம் வளர்ந்ததால் மற்ற புலன்களை நாம் இழந்துவிட்டதாக அன்னை கூறுகிறார்.
  • அடிமனம் புலனின்றி நடப்பவற்றை பதிவு செய்து கொள்ளக் கூடியது.
  • ஒரு கிரேக்கப் பேராசிரியரிடம் வேலை செய்த படிக்காத பெண்ணுக்கு ஜன்னி வந்தபொழுது அவர் படித்த பாடங்களை அவள் மனப்பாடமாகக் கூறினாள்.
  • ஒரு சமஸ்கிருதப் பண்டிதரின் சமையல்காரன் ஸ்லோகங்களை சரளமாகச் சொன்னான்.
  • நம் அறிவு மேல் மனத்திற்குரியது. அடுத்தது அடிமனம்.
  • நேரடி ஞானம் (intution) யோகியுடையது. அவருக்குப் புலனோ மனமோ இல்லாமல் நேரடியாக அறிய முடியும்.
  • முடிவான ஞானம் இறைவனுடன் ஐக்கியம் பெறுவதால் எழுவது.

The 12 Aspects of Spirit

 

 

Peace, Silence, Truth, Goodness, Knowledge, Power, Beauty, Love, Joy, Infinity, Eternity, Unity.

Peace - Structure less Existence

Silence - Absence of Thought and Absence of acts

Truth - Objective state of Existence

Goodness - Combination of Truth and Knowledge

Knowledge- Consciousness in the plane of Time

Power - Will in Time

Beauty - Ananda seen by mind

Love - Soul seeing Bliss

Joy - Nerves experiencing ஆனந்தா

Infinity - Beyond Space

Eternity - Beyond Time

Unity - Unity of substance different from union of Consciousness.

*****

Contradiction to Unity

 

முரண்பாடு

 

Contradiction              முரண்பாடு                 Matter            ஜடம்

Conflict                        பிணக்கு                     Life                வாழ்வு

Compromise                விட்டுக்கொடுப்பது     Mind               மனம்

Harmony                      சுமுகம்                     Supermind      சத்திய ஜீவியம்

Union                           இணைவது                Consciousness ஜீவியம்

Unity                             ஐக்கியம்                  Sat                    சத்

 

பிரம்மம் சிருஷ்டியில் மேலிருந்து கீழே வரும்பொழுது ஏற்படும் பல மாறுதல்களில் மேற்சொன்னதும் ஒன்று. மாறுதல்கள் பல.

1. சத் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது.

2. எதுவுமேயில்லாத பிரம்மம், எப்படியும் விவரிக்க முடியாத பிரம்மம், ஐக்கியமே உருவான பிரம்மம் ஜீவனாக முதல் மாறுகிறது. அது சத் புருஷன்.

3. அந்நிலையில் ஐக்கியம் பாதிக்கப்படுவதில்லை.

4. ஐக்கியம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவில் ஜடத்தில் முரண்பாடாகிறது.

5. ஜடத்தில் முரண்பாடும், வாழ்வில் பிணக்கும், மனத்தில் விட்டுக் கொடுத்து வாழ்வதும், சத்திய ஜீவியத்தில் சுமுகமும், ஜீவியத்தில் இணைவதும், சத்தில் மீண்டும் ஐக்கியம் பெற்று பரிணாமம் பூர்த்தியாகிறது.

6. ஐக்கியத்தை இழந்து முரண்பாடாவது சிருஷ்டி. கீழே வருவது.

7. முரண்பாடு மீண்டும் ஐக்கியமாவது பரிணாமம்.

8. பிரம்மம் தன்னைத் தன்னுள் மறைத்து ஜடமாகும் பாதை ஐக்கியம் முரண்பாடாவது.

******

பிரம்மம்

 

இதுவரை நாமறிந்தது

ஸ்ரீ அரவிந்தம்

  1. அடையலாம், விளக்க முடியாது

விளக்கலாம்

  1. Indeterminable

சிருஷ்டிக்காது

Has self-determination

பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி

  1. Self contained being

தனித்து வாழ்வது

Has principles and truths and powers

சக்தி உண்டு, வெளிப்படும்

  1. Not relative உலகோடு தொடர்புள்ளதன்று

உலகமே பிரம்மம்

பிரம்மம் வேறு, உலகம் வேறன்று

  1. World is its Lila லீலை

ஆனந்தத்திற்காக லீலை

  1. All negating Absolute neti, neti

Is an Absolute that is relative

  1. Dwells sufficient to itself on its immobile delight

Seeks delight in emerging from its opposite

  1. Solely a Force restoring in inactive sameness

Must have endless powers of its being.

Must have endless truths of its own self-awareness

  1. Don't ask, accept creation

Creation is self-manifestation

Every possibility is a truth in the Absolute

 

One and the Many

 

 

The one secret of creation is seeking the joy of Union after consciously separating

 

பிரிந்தவர் கூடிப் பெறும் இன்பம் பேரின்பம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

Reason minus sensation is Intuition

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                            Brahman                        Purusha                     Ishwara

                                               Maya                           Prakriti                         Shakti

Finite, relative, One, Silence, mutable, Time, personal, Manifestation, Self and nature, Being, Individual, Form and their opposites are all parts or partial expressions of the ONE.

Time                                     Becoming                  காலம்              இல்லறம்

Timelessness                       Being                         கடந்தது            துறவறம்

Simultaneous Integrality      Being of the Becoming

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

4 Ideas on which Life Divine Rests

1. Reconciling one without a second with சர்வம் பிரம்மம்.

2. God is known in the descent and not in the ascent.

3. The scientist does not know his field as fully as the Sannyasi knows Spirit.

4. Aryan balance.

*******

  மனிதன் என்பவனை நாம் மனிதன் என்கிறோம். அவனிடம் நல்ல குணமிருந்தால் அதை பாஸிட்டிவ் எனவும், கெட்ட குணமிருந்தால் நெகட்டிவ் எனவும் கூறுகிறோம், அதனால்,

  • மனிதன் இரு பிரிவுகளாக இருப்பதாக அர்த்தமில்லை.
  • ஒன்றை விலக்க முடியும் என்றாகாது.

மனிதனைப் பிரிக்க முடியாது, பிரித்து அறியலாம். பிரிக்க முடியாது. அதே போல் பிரம்மம் ஒன்றே, உலகம் ஒன்றே. அவற்றைப் பிரித்து அறியலாம். தனித் தனிப் பாகங்களாகப் பிரிக்க முடியாது. இரண்டும் சேர்ந்த முழுமை பூரண யோகத்தின் அடிப்படை.

அறிவு பிரித்துப் பார்ப்பதைச் செயலால் பிரித்து அவை வேறுவேறு பகுதிகள் என்றால் அது உண்மையில்லை. அதன் அடிப்படையில் நாம் புரிந்து கொள்பவை அனைத்தும் தவறாகும். நமக்கு வேண்டியவை, வேண்டாதவை என உண்டு.

  • நாம் வேண்டியதை சேர்த்துக் கொள்கிறோம், வேண்டாததை விலக்குகிறோம்.
  • இன்று வேண்டாதது, நாளை வேண்டும் என்பது முக்கியம்.
  • எதையும் விலக்கக் கூடாது. முழுமை என்பது அதுவே.
  • எந்த அளவுக்கு வேண்டாததைச் சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு முழுமையுண்டு.
  • எவ்வளவு சீக்கிரம் வேண்டாதது வேண்டியது எனப் புரிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் முழுமை வரும்.
  • வாழ்வில் விலக்குவதை தேடிப் போக வேண்டியது விதியாக செயல்படுவதை அனுபவம் கூறுகிறது.

அவசியமான நேரம், ஆபத்தான நேரம், முக்கிய விஷயம் வந்த நேரம் விலக்க முடியாதவை தங்களை வலியுறுத்துவதைக் காண்பது வாழ்க்கையில் ஸ்ரீ அரவிந்த இரகஸ்யம்.

  • தற்காப்புக்காக விலக்க அனுமதியுண்டு.
  • அப்பொழுதும் இவை விலக்கப்பட வேண்டியதில்லை என்ற ஞானத்தோடு தற்காப்புக்காக விலக்குவது முறை, சட்டமாகும்.

Sri Aurobindo has realized God in his body .

மோட்சமடைபவன் ஆன்மா அவனைவிட்டுப் பிரிந்து பரமாத்மாவை அடைகிறது. அவனது 4 கரணங்களும் அதை சாதிக்கவில்லை. அப்படிப்பட்ட யோகம் இதுவரை இல்லை.

  • ஆன்மா ஆண்டவனை அடைவது மோட்சம்.
  • நான்கு கரணங்களும் இறைவனாக மாறுவது திருவுருமாற்றம்.

அப்படி மாற யோகம் செய்தால் மனிதன் மனத்திலிருந்து உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து, சத்திய ஜீவியம் அவனுள் எல்லாக் கரணங்களிலும் இறங்கி வந்து நிரம்பும்.

பகவான் சத்திய ஜீவியத்தை எட்டிய பின்னும் சத்திய ஜீவியம் இறங்கி வரும் அளவில் அமையவில்லை. 1926ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தெய்வீக மனத்தை பகவான் எட்டியது முழுமை பெற்றதால், அது இறங்கி வர ஆரம்பித்து அவர் மனம், வாழ்வு, உடலை, நிரப்பியதை சித்தி தினம் என நாம் தரிசன நாளாகக் கொண்டாடுகிறோம். அன்று அவர் தனிமையை நாடினார். பிறகு சத்திய ஜீவியத்தை அடைந்தார். இது பிரம்மத்துடன் நிரந்தரத் தொடர்புள்ளது. சத்திய ஜீவியம் அவர் உடலில் இறங்கி வந்து நிரப்பியது, அப்படி சித்தித்தது அவருடைய physical consciousness உடலின் ஜீவியத்தில் நடந்தது. அடுத்த கட்டம் உடலின் ஜடப்பொருள். அதைச் செய்தது அன்னை.

வேத ரிஷிகள் இயற்கையோடு இணைந்த வாழ்வை நடத்திய பொழுது தங்கள் ஜடமான உடலும், ஜடமான மலை, நதியும் ஒன்று எனக் கண்டனர். உடலின் அன்னமயப் புருஷன் விழித்து எழுந்ததால் ஏற்பட்ட சித்தியிது. பூரண யோகத்தில் உடலின் சைத்தியப் புருஷன் அதைச் செய்ய வேண்டும். பகவானுக்குப் பின் அன்னை யோகத்தை உடலில் தொடர்ந்தார்.

*****

Karma is of the Force, not of the Being.

பிரம்மம் என்பது ஜீவன், இது இதன் சக்தியால் கவரப்பட்டுள்ளது. மனம் துண்டாடும்பொழுது சக்தியைத் துண்டு செய்கிறது. ஜீவனைத் துண்டாடுவதில்லை, துண்டாட முடியாது. சக்தி, காரண காரியத்திற்குட்பட்டது. ஜீவன் காரணத்திற்கோ, காரியத்திற்கோ உட்பட்டதில்லை.

  • அதனால் அதற்குக் கர்மம் இல்லை.
  • கர்மம் மேலேயுள்ள சக்திக்கு, ஜீவனுக்கில்லை.
  • சக்தியை நம்புபவர்க்குக் கர்மம் உண்டு.
  • நம்பாதவர்க்குக் கர்மம் இல்லை.
  • ஸ்ரீ அரவிந்தம் மனத்திலிருந்து செயல்படவில்லை. Being of the becoming  சைத்தியப் புருஷனிலிருந்து செயல்படுகிறது.
  • கர்மம் Being இல்லை. Being of the becomingக்கு கர்மம் இல்லை.
  • கர்மம் மனத்திற்கும், வாழ்வுக்கும் உண்டு.
  • ஜீவனுக்கு கர்மமில்லை.

Force is anterior to the instrument

விஞ்ஞானி சக்தி கருவியிலிருந்து எழுகிறது என்பதை மறுத்து ஸ்ரீ அரவிந்தர் சக்தி தனக்குத் தேவையான கருவியைச் செய்து அதன் மூலம் செயல்படுகிறது என்கிறார். மின்சாரம் மோட்டாரை ஓட்டினால், மின்சாரம் மோட்டாரிலிருந்து வரவில்லை, வெளியிலிருந்து வருகிறது. மனம் தான் செயல்பட ஒரு கருவி வேண்டும் என மூளையை உற்பத்தி செய்தது, ஜீவாத்மா உலகில் செயல்பட உடலைத் தாங்குவதுபோல். மூளை வேலை செய்வதால் எண்ணம் உற்பத்தியாவதாக விஞ்ஞானி கருதுவது சரியில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

Waste

இயற்கை பல காரியங்களை ஒரே சமயத்தில் சாதிக்க முனைவதால் விரயம் அதிகம் என நமக்குப் படுகிறது. இயற்கையில் விரயம் என்பதேயில்லை. அத்திறமையை மனிதன் பெறவில்லை என்று பகவான் கூறுகிறார்.

Jivatma and Psychic

  • Sri Aurobindo uses the term central being often to denote Jivatma.
  • The soul in Timelessness is Jivatma.
  • Its parts are அன்னமயப் புருஷா, பிராணமயப் புருஷா,மனோமயப் புருஷா, (விஞ்ஞானமயப் புருஷா, ஆனந்தமயப் புருஷா)
  • இது சாட்சிப் புருஷன், மாற்றமில்லாதது. பரிணாமத்தில் சேராதது.
  • Psychic is the representation of the Jivatma in the Becoming. It is there in every part as mental psychic, vital psychic, physical psychic. There is a central psychic behind the heart.
  • The psychic is the soul that evolves. It can lead one to மோட்சம் if he chooses.
  • Mother says there are not many Jivatmas but only one.
  • Jivatma is a poise of the Supermind.
  • Jivatma is a point in the universe.

Bliss and Delight

  • No distinction can be seriously made but He speaks of staticBliss and active Delight.
  • Delight of Being and Delight of Becoming are terms He uses.
  • Sachidananda has its Bliss static and it expresses it in the objects when it becomes active Delight.

Creation of Force, Form and Sensation

 

  • Force issues out of consciousness as the power of knowledge-will.
  • When an unformed Force meets another, a Form is created.
  • Form meeting form creates sensation.
  • Sensation is consciousness.

Commonalty, Individuality, Essentiality

  • Pearl and diamond are His examples.
  • Knowing their individuality we can use them.
  • Knowing their commonalty we can make them.
  • Knowing their essentiality we can transmute one into the other.

Intuition

  • By Intuition dwelling on the Becoming, Time is created.

Absolute and the Relative

 

  • There is no inherent contradiction.
  • They coexist or exist in each other.
  • The Absolute retains its absoluteness in some way all the time.

Eternity

  • Eternity is the common term between the Timeless and Time.

 

Ethics

 

  • It is not ethics that applies different rules to different situations.
  • Infra, supra ethics. What is common to all is the satisfaction of force.
  • Delight of Being becoming Delight of Becoming is what happens.

Man has double Consciousness

 

  • Verticality.
  • Modern astrology.

 

Part

 

  • Part is greater than the whole when the part contains the transcendent.

 

Maya

 

  • There is no illusion in the world, but there is Ignorance.
  • Dream is real.
  • Hallucination does see only objects that are there.

ஜீவாத்மா, சைத்தியப் புருஷன்

 

  • ஜீவாத்மா, பரமாத்மாவின் பகுதி என்பது மரபு.
  • ஜீவாத்மாவே பரமாத்மா என்பது ஸ்ரீ அரவிந்தம்.
  • உலகில் ஒரு பிரகிருதியும் இலட்சக்கணக்கான ஜீவாத்மாக்களும் இருப்பதாக சாங்கியம் கூறுகிறது.
  • பிரகிருதி ஒன்று, ஜீவாத்மாவும் ஒன்றே என்கிறார் அன்னை.
  • பிரபஞ்ச பிரகிருதி தன்னுள் பல புள்ளிகள்போல் பல ஜீவாத்மாக்களை உண்டு பண்ணுகிறது. பலவாகத் தோன்றினாலும் அவை ஒன்றே.
  • சத்திய ஜீவியத்திற்குள்ள மூன்று நிலைகளில் ஜீவாத்மாவும் ஒன்று.
  • ஜீவாத்மாவை நாம் மனத்தில் சாட்சிப் புருஷனாகவும், உடல் அன்னமயப் புருஷனாகவும், வாழ்வில் பிராணமயப் புருஷனாகவும் காண்கிறோம்.
  • இவை தொடர்ந்து விஞ்ஞானமயப் புருஷனாக சத்திய ஜீவியத்திலும், ஆனந்தமயப் புருஷனாக ஆனந்தத்திலும் தெரிகின்றன.
  • ஜீவாத்மாவுக்குப் பரிணாமமில்லை.
  • சைத்தியப் புருஷன் பரிணாமத்தில் ஜீவாத்மாவின் பிரகிருதி.
  • ஜீவாத்மாவை Being எனவும் சைத்தியப் புருஷனை Being of the becoming  எனவும் கூறுவோம்.
  • ஜீவாத்மா காலத்தைக் கடந்தது.
  • சைத்தியப் புருஷன் காலத்துள், காலத்தைக் கடந்துள்ளது.
  • ஜீவாத்மாவின் பகுதியான மனோமயப் புருஷன் மேல் மனத்திலிருக்கிறான்.

  • சைத்தியப் புருஷன் அடிமனக் குகையிலிருக்கிறான். 
  • சைத்தியப் புருஷனும் ஜீவாத்மாபோல் மோட்சத்திற்கு அழைத்துக் செல்வான். ஆனால் ஜீவாத்மாவுக்கு திருவுருமாற்றமில்லை
  • கிருஷ்ணபரமாத்மா வந்த பிறகே பக்தியோகம் வந்தது. சைத்தியப் புருஷன் அதன் பிறகே பிறந்தான்.
  • 1947க்கு முன் இந்தியாவில் தொழில்கள் இருந்தன. அவை ஆங்கிலேயருடையவை. இந்தியர் தொழில்கள் இருந்தாலும் ஆங்கிலேயர் அனுமதியிலிருந்து கிடைத்தவை. இன்றுள்ள தொழில்கள் சுதந்திர இந்தியர் நடத்துபவை. ஜீவாத்மா 1947க்கு முன் உள்ள நிலைக்கும் சைத்தியப் புருஷன் பின்னுள்ள நிலைக்கும் ஒப்பிடலாம்.
  • ஜீவாத்மாவை விடுதலை செய்ய, பிரகிருதியை விட்டு அகல இதுவரை யோகம் செய்தனர். ஸ்ரீ அரவிந்தம் பிரகிருதியின் யோகம், சைத்தியப் புருஷன் பிரகிருதிக்கு பூலோகத்தில் மோட்சம் கிடைக்க யோகம் செய்கிறது. அதை ஆன்மீகப் பரிணாமம் என்கிறோம்.

*****

Practical concept of Infinity

Concrete conception of Infinity

Boundless finite

Infinity of space and eternity of Time are two related concepts. As all life is covered by Space and Time, Infinitycannot stretch beyond.

Complete minus Complete = Complete

is the explanation Upanishads offer about Infinity. As Time is a concept for the metaphysician, Infinity is not a known concept in life. It is there in Mathematics and Metaphysics. The nearest we can think of in life to infinity is காமதேனு கற்பகவிருஷம் அகஷயபாத்திரம் all of which are myths.

One thing that we can rationally use is knowledge which is infinite. When we take knowledge out, it rather grows as we draw on it.

Infinity is different from the boundless finite.

The capacity to refuse to be finite is infinity. Can we have a practical concept of it? Our very basis is infinity and therefore it becomes necessary.

As matter, life, mind and spirit are at the base infinite, though life and matter do not behave like that, we must have an idea of that concept. Water drawn from a well which goes back into it through another route can be inexhaustible but will not qualify for infinity. What grows by what it feeds on can be infinite. Solar energy is inexhaustible but mind's knowledge and vital interest grow by every expenditure of it. Our own minds must have a PRACTICAL concept of Infinity to appreciate the infinity in creation. The conception of Infinity conceived by the thinking mind (No.1) when fully accepted by the physical mind (No.3) in its substance, will become a reality.

Practical concept of Infinity

 

Concrete conception of Infinity

அனந்தத்தின் தத்துவம்

அனந்தம் என்பது அந்தமில்லாதது, முடிவில்லாதது. நடந்து போனால் நாம் ஓர் இடத்தில் முடிவடைகிறோம் என்பதன்று. காலத்தைக் கடந்ததில் நினைத்தாலும், எதிர்காலத்தில் நினைத்தாலும் முடிவு தெரிவதில்லை.

காமதேனு, கற்பக விருக்ஷம், அட்சயபாத்திரம் என்பவை புராணங்களில் கேட்டவை. எடுக்க எடுக்கக் குறையாது எனக் கேள்விப்பட்டுள்ளோம் (inexhaustible). கணித சாஸ்திரத்திலும், தத்துவத்திலும் அனந்தம் ஒரு கருத்தாக (conception) விளக்கப்படுகிறது. ஆன்மிகத்திற்கு அனந்தம் வெறும் கருத்தன்று, அது ஓர் அனுபவம். எடுக்க எடுக்கக் குறையாதது மட்டுமன்று, எடுத்தால் வளரும் என்பது அனந்தத்தின் அம்சம்.

வாழ்வில், நடைமுறையில் இது உண்மை என்பதை ஸ்ரீ அரவிந்தம் எடுத்துக்காட்டுகிறது, வலியுறுத்துகிறது. இது புரிந்தால் ஸ்ரீ அரவிந்தம் புரியும். இது புரியாமல் புரியாது. உபநிஷதம் முழுமையிலிருந்து முழுமையை எடுத்தபின் முழுமை மீதியாக இருக்கும் என்று இக்கருத்தைக் கூறுகிறது.

கல்வியைப் பொருத்தவரை எடுத்தால் வளரும் என்பதை ஏற்கலாம். தெம்பு, சக்தி, பணம் ஆகியவற்றுள் இக்கருத்தை ஏற்பது எளிதன்று என்றாலும் அங்கும் இவை உண்மை.

  • உழைப்பவன் உடலால் உழைக்கிறான். உழைத்தால் உடல் களைப்படையும். உடலில் உணர்வுண்டு, உணர்வில் அறிவுண்டு, அறிவில் ஆன்மா உண்டு. உடல் உழைப்பில் ஆன்மா அறிவு, உணர்வு மூலம் வெளிப்பட உழைத்தால் 12 மணி, 18 மணிநேர வேலைக்குப் பின் களைப்புத் தெரியாது என்பது அனுபவம். போரில் பலர் அனுபவம் இது.
  • வயதாக ஆக, மேற்சொன்னதுபோல் வாழ்பவர், வயோதிகம் வராமல், இளமை நிறைவது அனுபவம்.
  • பணம் உழைப்பால் வரும். அதற்கு உணர்வும், கடமையும், லட்சியமும் உண்டு. அதன்படி பணம் செலவானால், உபரியாவது அனுபவம்.

ஒரு செயல் அதன் உயர் அம்சம் வெளிப்பட்டால், செயலும், சக்தியும், பொருளும் உபரியாவது அனுபவம். உபநிஷத தத்துவத்தை அனுபவத்தால் அறிந்தவர் கூறுவதை மனம் தெளிவாக அறியுமானால் (conceive) அத்தெளிவை மனத்தில் உறுதி ஏற்குமானால் (as a concrete conception of Infinite) அத்தெளிவுக்குப் பலனாக வாழ்வு உபரியாகும். அதிர்ஷ்டமாக முடியும்.

Ego, Purusha, World-Being, Transcendent

  • Ego makes the Many possible from the One.
  • Cosmic Self reveals itself when Ego dissolves.
  • Ego is in the Force, not in the Being of consciousness.
  • A tearing sound is heard when the physical ego goes.
  • Ego is formed by self-affirmation of the vital.
  • Ego's ethics are not ethics.
  • Ego can usurp any plan to dissolve it.
  • Let Shakti come to you by dissolving the ego. Ego cannot then usurp it.
  • So far all realisations are egoistic realisations.
  • Ego belongs to the surface.
  • Ego is coordinating intelligence.
  • Ego is reason.
  • The Gods have egos.
  • Senses are the creation of ego.
  • Ego is the poise of Supermind in Ignorance.

*****

அகந்தை, புருஷன், பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா

  • பரமாத்மா ஜீவாத்மாவாக அகந்தை வழி செய்கிறது.
  • அகந்தை அழியும்பொழுது பிரபஞ்ச ஆத்மா தரிசனம் தரும்.
  • அகந்தை சக்திக்குரியது, ஜீவியத்திற்கோ, ஜீவனுக்கோ இல்லை.
  • உடல் அகந்தை கரைந்தால் துணி கிழியும் சத்தம் கேட்கும்.
  • உயிர் தன்னை வலியுறுத்தினால் அகந்தை பிறக்கிறது.
  • அகந்தையின் தர்மம் அதர்மம்.
  • அகந்தையை அழிக்கும் எந்த முறையையும் தானே செய்வதாக நடித்துக் கெடுக்கும்.
  • அகந்தையை அழித்தால், சக்தி நம்மை நாடி வரும். வந்த சக்தியைப் பயன்படுத்த அங்கு அகந்தையிருக்காது.
  • இதுவரை உலகம் கண்ட ஆன்மிக அனுபவங்கள் அகந்தைக்குரியன.
  • அகந்தை மேல் மனத்திற்குரியது.
  • அகந்தை என்பது அறிவின் மையம்.
  • அகந்தையும் பகுத்தறிவும் ஒன்றே.
  • தெய்வங்கட்கு அகந்தையுண்டு.
  • புலன்கள் அகந்தையின் கருவிகள்.
  • சத்திய ஜீவியத்தின் மூன்று நிலைகளில் அறியாமையில் உள்ள நிலை அகந்தை.
  • அகந்தைக்கு அனந்தனின் அம்சமுண்டு.

*****

Form. Force , Sensation

 

ரூபம், சக்தி, ஜீவியம்

இரு சக்திகள் சேர்ந்தால் ரூபம் உண்டாகிறது. இரு ரூபங்கள் சேர்ந்தால் ஜீவியம் உண்டாகிறது.

 

Individuality, Commonalty, Essentiality

  • முத்து, வைரம் ஒரு காலத்தில் எவை என்று மக்கள் அறியாத காலத்தில் எவரும் பயன்படுத்தவில்லை. அவை என்ன என்று அறிவது அவற்றின் individuality தன்மையை அறிவதாகும்.
  • விஞ்ஞானம் அவை இரண்டும் ஒரே அணுக்களால் செய்யப்பட்டன எனக் கண்டுள்ளது. (Commonality) இரண்டிற்கும் பொதுவான தன்மையை அறிவதால், அவற்றை இன்று செயற்கையாகச் செய்கிறார்கள.
  • இரண்டும் பிரம்மத்தாலானது என்பது essentiality. அதை அறிந்த ரிஷி ஒன்றை மற்றதாக மாற்றுவார் transmute.
  • - தனித்தன்மை தெரிந்தால் பொருள்களைப் பயன்படுத்தலாம்.
  • - பொதுத்தன்மை தெரிந்தால் அவற்றை நாமே செய்யலாம்.
  • - ஆன்மீகச் சாரம் தெரிந்தால், ஒன்றை மற்றதாக மாற்றலாம். அது இரஸவாதம் எனப்படும்.

பகுதி, முழுமை

 

  • பகுதியும், முழுமையும் சமம், ஒன்றேயாகும்.
  • பகுதி தன்னுள் ஈஸ்வரனிருப்பதை அறிந்தால் முழுமையை விடப் பெரியதாகும்.

தன்னையறிந்த பகுதி முழுமையை விடப் பெரியது.

******

தர்மம் (Ethics)

  • விலங்குக்கும், தெய்வத்திற்கும் தர்மமில்லை.
  • மனிதன் தர்மம் என்று கூறுவது அதர்மம். தான் புலியைச் சுடுவது வேட்டை. புலி மனிதனைச் சாப்பிடுவது கொடுமை என தனக்கொரு தர்மத்தையும், பிறர்க்கொரு தர்மத்தையும் பின்பற்றுவது அநியாயம்.
  • விலங்குக்கும், மனிதனுக்கும், தெய்வத்திற்கும் பொதுவானது என்ன?
  • சக்தி தன்னைப் பூர்த்தி செய்து கொள்வதே மூன்று நிலைகட்கும் பொதுவானது என்பதால் தர்மத்தை ஏற்பதைவிட இக்கொள்கையை ஏற்கலாம்.
  • சச்சிதானந்தம் ஆனந்தத்தை அமைதியாக அனுபவிக்கிறது (Delight of Being). மனித உலகில் ஆனந்தம் சிருஷ்டியில் வெளிப்படுகிறது (Delight of Becoming). The spiritual fact id the Delight of Being changes into the Delight of Becoming அமைதியான ஆனந்தம் சிருஷ்டியில் வெளிப்படும்பொழுது ஆனந்தம் பரிணாம வளர்ச்சியைப் பெறுகிறது.
  • நம் அன்றாட வாழ்வில் இக்கொள்கை வெளிப்படுவதைக் காண முடிந்தால் அதர்மம் இல்லை எனவும், நாம் இன்று தர்மம் என நினைப்பது தர்மமில்லை எனவும் தெரியும். உதாரணமாக நாம் கடும் விரதங்களைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக இனிய பண்புகளை மேற்கொள்ள முயன்றால் கடுமை இனிமையாக மாறுவதைக் காணலாம்.
  • நாம் உயர்ந்த பண்புகளை ஏற்க முடியாத நேரம் வாழ்வு நம்மைக் கடுமைப்படுத்துகிறது. ஆனந்தம் பெற நம்மை வாழ்வு கடுமைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் நம் மனத்தைக் குழப்புகிறது. இனிமையை இதமாகக் கடும் உள்ளம் ஏற்றால் சத்தியம் கருணையாக, கனிவாக வெளிப்படும்.

******

Double Consciousness

 

இரட்டை ஜீவியம்

  • பூமியில் நாம் நிற்பது horizontal ஆக நிற்கிறோம், ஆனால் நாம் நேராக நிற்பதாகவே உணர்கிறோம். தரைமட்டமாக நிற்பதை அறிவு ஏற்றாலும், உணர்வு நேராக நிற்பதாகக் கூறுகிறது.
  • ஜோஸ்யம் பெரும்பாலும் பலிக்கிறது. இந்த சாஸ்திரம் சூரியன் உலகைச் சுற்றி வருவதாகக் கொண்டு எழுதப்பட்டது. இன்று எந்த ஜோஸ்யமும் பூமி சூரியனைச் சுற்றி வருவதாக அறியும். அப்படி அறிந்தாலும் ஜோஸ்யத்தை எதிராகக் கணிக்கின்றனர்.
  • இரண்டு எண்ணங்களை மனம் ஏற்றாலும், மனிதனால் ஒன்றைப் புறக்கணித்து அடுத்ததின் அடிப்படையில் செயல்படமுடியும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

மாயை

  • மாயை என்பது இல்லாதது என்று கூறுகிறார்கள்.
  • இதற்குக் கனவையும், பழுதென்ற பாம்பையும் உதாரணமாகக் காட்டுகிறார்கள்.
  • கனவு இல்லாதது இல்லை. பழுதும், பாம்பும் உள்ளவை. இல்லாதவையில்லை என்பதால் பொருத்தமாகாது.
  • மாயை சிருஷ்டியின் கருவி, இல்லாதது இல்லை என்கிறார் பகவான்.
  • அஞ்ஞானத்தை 'அசித்தி' என விளக்கி இறைவனை அறியாதது அஞ்ஞானம் என்றால் உலகம் மாயையாகும். அஞ்ஞானம், ஞானத்தின் மறு உருவம் எனில் அத்தவறு வாராது. உலகம் மாயையில்லை, இறைவன் தன்னிச்சைப்படி தன்னைத் தன்னுள் ஒளித்து மீண்டும் நினைவு வந்து ஆனந்தம் பெற ஏற்படுத்தியதே உலகம் என்றாகும் என்பது பகவான் விளக்கம்.

 

 

ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி

  • சரணாகதியைக் கீழ்ப்படிதல் என நினைக்கத் தோன்றும்.
  • எதிரியின் வலிமைக்குக் கீழ்ப்படிதல் பணிவு, obedience, submission, accepting a defeat எனப் பெயர்.
  • உடலால் பணிந்தால் உணர்ச்சி கொந்தளிக்கும்.
  • உணர்வாலும் அடங்கினாலும், மனம் பணிவை ஏற்காது.
  • மனமும் பணிவு சரி என ஏற்றாலும் ஆழத்தில் உணர்வு ஒத்துக் கொள்ளாது.
  • நாம் ஒரு காரியத்தை உணர்வாலோ, அறிவாலோ செய்யும்பொழுது,
  • நிர்ப்பந்தத்தால் செய்தால் கீழுள்ளதும், மேலுள்ளதும் ஏற்கா. மாமன் கடுமையை உணர்வு ஏற்றாலும், மனம் சரியில்லை எனக் கூறும். உடல் பணியாது.
  • பூரணமாக ஏற்க நாம் பயன்படுத்தும் கரணமும், அதன் மேலும், கீழும் உள்ள கரணங்களும் ஏற்க வேண்டும்.
  • மேலுள்ள கரணம் ஏற்பது ascent சரி என்றாகும். கீழுள்ளது ஏற்றால் descent  சரி என்றாகும்.
  • Descent சரி எனில் செயலுக்கு ஆன்மிக அனுமதியுண்டு எனப் பெயர்.
  • ஒரு கரணத்தில் அதன் சுபாவமும், ஜீவாத்மாவின் பகுதியின் சுபாவமும், சைத்தியப் புருஷனின் பகுதியின் சுபாவமும் உண்டு.
  • மேல் பாகம் ஜீவாத்மாவின் பகுதியின் (உ.ம். மனோமயப் புருஷன்) சுபாவம் ஏற்பதைக் காட்டும். கீழ்ப்பாகம் சைத்தியப் புருஷனின் சுபாவம் ஏற்பதைக் காட்டும்.
  • அதனால் சரணாகதி பூரணச் சரணாகதியாகிறது.
  • முடிவான பலன், முதலிலேயே வரும்.
  • கீதைபோல் சரணாகதி மோட்சமடைவதற்கில்லை, திருவுருமாற்றத்திற்கு.
  • ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி காலத்திலிருந்து காலத்தைக் கடந்ததையும் கடப்பது.
  • லீலையில் இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்து அஞ்ஞானத்திலிருந்து ஞானம் வெளிவருதல் இன்பம் பெறுவது ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி.
  • பணிவு உடலின் செயல். கீதையின் சரணாகதி மனத்தின் செயல். ஸ்ரீ அரவிந்தரின் சரணாகதி சைத்திய புருஷனின் செயல்.
  • சரணாகதி ஸ்ரீஅரவிந்தர் உலகத்திற்கு அளித்த முடிவான பெரிய பரிசு.

*****

 



book | by Dr. Radut