Skip to Content

ஸ்ரீ அரவிந்த மந்த்ரோபதேசம்

ஸ்ரீ   அரவிந்தர்   காயத்ரி   மந்திரம்   எழுதியுள்ளார்.   வேறு சில   மந்திரங்களையும்   பல   சமயங்களில்   எழுதினாலும்   ஸ்ரீ அரவிந்தர்,  அன்னை என்பவையே  சக்தி  வாய்ந்த  மந்திரங்கள் என்கிறார்.

சாவித்திரியிலும், Life Divineலும் ஒவ்வொரு வாக்கியமும் மந்திர    சக்தி    வாய்ந்தவை    என்பதை    சோதனை    செய்தும் பார்க்கலாம்.   மந்திரம்   போன்ற   சொற்களே   இந்நூல்களில் ஏராளமானவையுண்டு.  உதாரணமாக,

There is a Silence behind Silence.

Body rules the mind is a minor truth.

Mind rules the body is a major truth.

This seems to be the complete process of creation.

The taste of Ignorance is over.

Ignorance is the greatest product of creation.

At the gates of the Transcendent stands the Self pure, Silent,immobile.

பகவான்    எழுதியவற்றை    அவர்    எழுதியபடி    புரிந்து கொள்வது ஸ்ரீ அரவிந்தர் நேரடியாக தீட்சையளிக்கும் மந்த்ரோபதேசமாகும். நாம்   நூலைப்   படிக்கும்பொழுது   அவர்   கருத்துகளைத்   திரட்டி மனதில்   ஒன்று   சேர்க்கிறோம்.   பகவான்   Life Divine எழுத ஆரம்பிக்கும்பொழுது   அவர்   மனதில்   ஓர்   எண்ணம்   இருந்தது. நாம்   நம்   மனதில்   அவருடைய   பல   எண்ணங்களைத்   திரட்டி ஒன்றாக்குவதுபோல்  அவர்  தம்  மனதிலிருந்த  ஒரு  எண்ணத்தைப் பல  பாகங்களாக்கி  நூலை  எழுதினார்.  கொஞ்சம்  கொஞ்சமாக நாம்  அதை  அடையலாம்.  அந்த  ஓர்  எண்ணம்,

பிரபஞ்சத்தை  சிருஷ்டித்த  மந்திரம்.

 நூலில் நான்கு இடங்களில் அதை நான்கு பாகமாகப் பிரித்து நூலின்    ஆரம்பத்திலும்,    இரண்டாம்    பாகத்தின்    முன்னும் இரண்டாம்   புத்தகத்தின்   இரு   பாகங்களுக்கு   முன்னும்   ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ளார். அவை நூல் எழுந்த மூலம். விவரமாகப் புரிந்து  மனதில்  ஏற்றால்  அந்த  நான்கு  பகுதிகளும்  எண்ணத்தில் கனிந்து  உணர்ச்சியை  ஆட்கொண்டு  ஜீவனைத்  தொடும்.  நூல் 1070 பக்கங்களில் சுமார்  1000 முதல்  1500 கருத்துகள் உள்ளன, 56   அத்தியாயங்கள்   3   பகுதிகளாக   எழுதப்பட்டன.   இவற்றை முழுவதும்    மனம்    அறிந்தால்    ஒருவர்    multiple genius பல துறைகளில் மேதையாவார். இந்த இரகஸ்யம் ஓரளவு வெளிப்படும் வகையில்  நூலின்  அமைப்பை  சுருக்கமாகவோ,  விளக்கமாகவோ கூறலாம்.  சில  கட்டுரைகளில்  சுருக்கமாகக்  கூறியவற்றை  இங்கு முடிந்தவரை  விளக்கமாகக்  கூறுவது  நோக்கம்.

அறிவுக்குத்  தடையான  அம்சங்கள்  சிக்கலாக  மாறுகின்றன. அந்த   சிக்கல்கள்   பலவற்றை   அவிழ்க்கும்   வகையாக   மேற்கூறிய குறிக்கோளை  எட்ட  முனைவது  கட்டுரையின்  நோக்கம்.

வாசகர் நூலைப் படிக்க ஆரம்பித்தவுடன் முதல் அனுபவம் முதலிரண்டு    பக்கங்களில்    என்ன    எழுதுகிறார்    என்று புரியவில்லை   என்பது.   அத்துடன்   மனம்   களைத்து   சோர்ந்து கொட்டாவி   வரும்.   பல   கொட்டாவிகள்   வந்தால்   நூலை   மூடி வைத்தால்    பல    மாதங்கள்    Life Divine நினைவு வராது. பெரும்பாலோர்க்கு   இதுவே   ஆரம்பம்.   அநேகருக்கு   முடிவும் இதுவே. ஆங்கிலம் அற்புதமாக இருக்கிறது என்பது அனைவருடைய அனுபவம்.   சொல்   நயம்   செப்பலோசையாக   இருக்கும்.   படிக்க அளவு  கடந்த  ஆசையும்,  தொட  மறுக்கும்  உணர்வும்  வாசகர்கள் அனுபவம்.  ஆங்கிலம்  தாய்  மொழியானவர்  ஒருவர்,  இதுபோல் நினைத்தபொழுது   நான்   சித்      சக்தி   என்ற   அத்தியாயத்தைப் படித்துக்  கொண்டிருந்தேன். " நீங்கள்  சொல்வது  சரி.  ஆனால் அத்தியாயம்   என்ன   கூறுகிறது,   என்ன   வாதங்கள்,   எப்படி எழுதப்பட்டிருக்கின்றன  என  அறிந்தால்  நாவல்  படிப்பதுபோல் (Page turner)    கடினமான  இதே  அத்தியாயமிருக்கும்"  என்றேன்.

  அத்துடன்   அந்த   அத்தியாயம்   விளக்குவதையும்,   வாதங்கள் வரிசைப்பட்டிருப்பதையும்,  அவற்றிற்கெல்லாம்  சிகரமாக  விரயம் சுருக்கமாக  விளக்கப்பட்டிருப்பதையும்  அவர்  திருப்திப்படும்வரை சொன்னேன்.  அடுத்த  ஆண்டு  அவர்  தம்  நாட்டிலிருந்தபொழுது தினமும்  காலையில்  ஒரு  அத்தியாயம்  படிப்பதாகச் சொன்னார்.அப்படி  இந்த 10ஆம் அத்தியாயம் வந்தபொழுது Pageturnerஆக  இருந்தது  எனவும்  கூறினார்.

ஆங்கிலம்   தடை   எனில்   நூலைத்   தமிழில்   எழுதினால் மொழியின் தடையிருக்காது. அத்தியாயங்களை பகவான் அமைத்த பாங்கை    மட்டும்    இக்கட்டுரையில்    எழுத    முற்படுகிறேன். இக்கட்டுரை  பயன்பட  நூலை  பலமுறை  படித்திருக்க  வேண்டும். என்றாலும் முதலில் படிப்பவர் மனதிலும் ஓரளவு படும் வகையில் எழுத  முயல்கிறேன்.  அதற்கு  முன்  பகவான்  உலகுக்கு  அருளிய புதுக்    கருத்துகளை    எழுதுகிறேன்.    நூலின்    அமைப்பு இக்கருத்துகளை   வெளிப்படுத்துவதாக   அமைவதால்   இவற்றை அறிவது  உதவும்.

 • இறைவன்  ஆனந்தம்  தேடி  உலகை  சிருஷ்டித்தான்.
 • தேடுவது  அவன்  திறமை,  நாடுவது  அவன்  உரிமை.
 • கண்டுபிடிப்பது  ஆனந்தம்.
 • மறைந்ததைக்  காண்பது  ஆனந்தம்.
 • தானே தன்னுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வருவது  ஆனந்தம்.  நினைவைத்  தொடர்ந்து  தன்னை  மீண்டும் கண்டுபிடிப்பது  பேரானந்தம்.
 • இது  லீலைக்கு  ஸ்ரீ  அரவிந்தர்  அளிக்கும்  விளக்கம்.
 • மறைவது  சிருஷ்டி.
 • கண்டுபிடிப்பது  பரிணாமம்.
 • காலத்தைக்   கடந்த   அனந்தமான   பிரம்மம்   தன்னை   மறைக்க தன்  அம்சங்களை  ஒவ்வொன்றாய்  இழக்கிறது.

        சிருஷ்டிக்கு   அப்பாற்பட்ட  பிரம்மம்  தன் நிலையை  இழந்து சிருஷ்டிக்குள்     வருவது  முதல்  நிலை.

 • அம்முதல்   நிலை   சத்   என்ற   சத்      புருஷன்,   Self-Conscious Being
 • இதை  Being,Existence சத்,  ஜீவன்  எனவும்  கூறுகிறோம்.
 • ஒன்றை  எதிரெதிரான  இரண்டாகப்  பிரித்து  ஒன்றை  மற்றதினுடன் இணைத்து  முழுமையை  அடைய  இயற்கை  பின்பற்றும்  முறை சிருஷ்டியின்  ஆரம்பத்தில்  ஆரம்பிக்கிறது.
 • பிரம்மம்   தன்னை   சத்,   அசத்   எனப்   பிரித்து   சிருஷ்டியை ஆரம்பிக்கிறது.
 • Being  வந்தவுடன்  Non-Being  வரும்;  Existence   வந்தவுடன் Non-Existence  வரும்.  அவற்றையே  சத்,  அசத்  என்கிறோம்.
 • சத்  என்ற  சத்  புருஷன்  சச்சிதானந்தமாகும்.
 • பிரம்மத்திற்கு  சத்தாக  வேண்டிய  அவசியமில்லை  என்பதுபோல் சத்திற்கு   சித்தாக   வேண்டிய   அவசியமில்லை.   சித்திற்கு ஆனந்தமாகும்   அவசியமில்லை.   அவசியமில்லாததை   ஏற்பது சுதந்திரத்தை  இழப்பது,  அதுவே  மறையும்  பாதை.
 • சத்  சித்  ஆக  மாறி  சித்  ஆனந்தமாக  மாறுவது  சச்சிதானந்தம் ஏற்படுவது.
 • வேறு வகையான மாற்றமும் உண்டு. இதை அகம், புறம் என்போம்.
 • சத்  என்ற  அகம்  சத்தியம்  என்ற  புறமாகும்.
 • சத் என்ற அகத்தையும், சத்தியம் என்ற புறத்தையும் இணைப்பது ஆன்மா Spirit எனப்படும். இதை Spiritual substance என்கிறார்.
 • பிரபஞ்சமும்,  உலகமும்  இந்த substanceஆல்  ஆனவை.
 • மேல்  லோகங்களில்  Spiritual substance    ஆக  இருப்பது  கீழ் லோகங்களில்  material substanceஆக  மனத்தால்  மாறுகிறது.
 • இந்த spirit ஆன்மா,  என்பது  ஆதியில்  பிரம்மம்.
 • பிரம்மம்  மறைவது  எனில்  Spirit  மறைவதாகும்.
 • Spirit ஆன்மா  தன்னுள்  மறைந்து  Matter  ஜடமாகிறது.
 • Spirit  அதுபோல்  மறைவதன்  முன்  12  அம்சங்களாகப்  பிரிந்து தலைகீழ்மாறி எதிராக உருவம் பெற்று சிருஷ்டி involutionயைப் பூர்த்தி  செய்கிறது.
 • இதையே   சச்சிதானந்தம்   உலகமாக   மாறுகிறது   என்கிறோம்.அதுவே  சிருஷ்டி.
 • சத்,  சித்,  ஆனந்தம்,  சத்திய  ஜீவியம்  தலைகீழே  மாறி  ஜடம், சைத்திய  புருஷன்,  வாழ்வு,  மனமாக  மாறுவதும்  ஆன்மாவின்  12 அம்சங்கள்   தலைகீழே   மாறுவதும்   ஒன்றே.   இருவகையாக விளக்கப்படுவது.
 • சத்  சித்தாக  மாறி  ஆனந்தமாக  மாறுவது  ஒரு  மாற்றம். சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாக மாறுவது அடுத்தவகை மாற்றம்.
 • சத் சத்தியமாகவும், சித் ஞானமாகவும், ஆனந்தம் அனந்தமாகவும் மாறினால்   சத்தியம்      ஞானம்      அனந்தம்   என்பது   சத்திய ஜீவியமாகும்.  இவை  அகம்  புறமாகும்  மாற்றமாகும்.
 • சத்,   சித்,   ஆனந்தம்   என்பவை   ஆன்மாவாக   மாறும்பொழுது ஆன்மாவின்  அம்சங்கள்  12  என்றோம். சத்  என்பது  ஐக்கியம்,  சத்தியம்,  நன்மை  எனவும், சித்  என்பது  ஞானம்,  உறுதி  எனவும், ஆனந்தம்   என்பது   அழகு,   அன்பு,   சந்தோஷம்   எனவும் மாறுகின்றன.
 • ஆன்மாவுக்கு   அடிப்படையில்   4   அம்சங்கள்   உள்ளன.   அவை மௌனம்,  சாந்தி,  அனந்தம்,  காலத்தைக்  கடந்த  நிலை.
 • இந்த  12  அம்சங்களும்  எதிராக  மாறுவது  சிருஷ்டி.

  

 

Silence

*

Activity

 

 

Peace

*

Movement

 

 

Unity

*

Division

 

 

Truth

*

Falsehood

 

 

Goodness

*

Evil

 

 

Knowledge

*

Ignorance

 

 

Will

*

Weakness

 

 

Beauty

*

Ugliness

 

 

Love

*

Hatred

 

 

Joy

*

Pain

 

 

Infinite

*

Finite

 

 

Timeless

*

Time

 

 

மௌனம்

*

சப்தம்

 

 

சாந்தி

*

சலனம்

 

 

ஐக்கியம்

*

பிரிவினை

 

 

சத்தியம்

*

பொய்மை

 

 

நன்மை

*

தீமை

 

 

உறுதி

*

உறுதியின்மை

 

 

அழகு

*

விகாரம்

 

 

அன்பு

*

வெறுப்பு

 

 

சந்தோஷம்

*

வலி

 

 

அனந்தம்

*

அந்தம்

 

காலத்தைக்  கடந்த  நிலை

*

காலம்

 

 

 

 • எப்படிப்   படிப்படியாக   தங்கள்   நிலையை   இழந்து   எதிராக மாறுகின்றன  என்பது  சிருஷ்டியின்  பல்வேறு  நிலைகள்.
 • சிருஷ்டியில் 12 அம்சங்கள் மாறுவதும் ஒரே சமயத்தில் நடந்தாலும் சிருஷ்டியை விளக்க ரிஷிகளும், ஸ்ரீ அரவிந்தரும் பயன்படுத்திய அம்சம், Knowledge எதிராக Ignorance  ஆக  மாறுவது ஞானம்  அஞ்ஞானமாக  மாறுவது.
 • இதுவரை  மனிதன்  பெற்றிருந்த  பெரிய  கருவி  மனம்.
 • மனம்   பகுக்கும்   கருவி,   பகுதியானது.   இதனால்   முழுமையை அடைய  முடியாது.
 • ரிஷிகள்   பிரம்மத்தை   மனத்தால்   பார்க்க   முயன்றபொழுது முடியவில்லை   என்பதால்   சமாதியில்   பிரம்மத்தைக்   கண்டனர். பிரம்மத்தின்  பகுதியைக்  கண்டனர்.
 • கண்டது   பகுதி,   பார்த்தது   மனம்,   சமாதியில்   (unconscious) பார்த்தனர்.
 • அதனால்  காண  முடியும்,  விளக்க  முடியாது  என்றனர்.
 • சத்திய ஜீவியம் முழுமை. முதல் ஸ்ரீ அரவிந்தருக்கு சித்தித்தது.
 • சத்திய  ஜீவியத்தில்  பிரம்மம்  என்றும்  நின்று  நிலை  பெறும்.
 • சத்திய  ஜீவியத்தால்  பிரம்மத்தை  முழுமையாகக்  காணலாம்.
 • விழிப்பில்  காணலாம்.
 • அதனால்  விளக்கலாம்.
 • அப்படி  விளக்கி  எழுதப்பட்ட  நூல்  Life Divine.
 • காலம்,  இடம்  என்பவை  ஜீவியத்தின்  அகம்,  புறம்.
 • ஜீவியத்தின்  அகமான  காலம்,  புறமான  இடமாகிறது.
 • காலமும்,  இடமும்  உலகம்  செயல்பட  அவசியம்.
 • பரமாத்மா ஜீவாத்மாவானதும், புருஷன் பிரகிருதியானதும், ஒன்று பலவாக  மாறியதும்  சிருஷ்டி.  அது  எப்படி  நடந்தது  என  நாம் கேட்கக்  கூடாது  என்பது  இதுவரையுள்ள  நிலை.
 • இதை  double opening என்கிறார்  ஸ்ரீ  அரவிந்தர்.  பரமாத்மா இரண்டாகப்   பிரிந்து   ஜீவாத்மாவாகி,   மீண்டும்   ஒன்றாவது சிருஷ்டியின்  இரகஸ்யம்  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்
 • பரமாத்மா  என்பது  ஜீவன் Being,Purusha அதன்  ஜீவியம்  சித் எனப்படும்.  சித்  தன்னுள்ளிருந்து  சக்தியை  வெளிப்படுத்துகிறது. சக்தி பிரகிருதி எனப்படும். மனம் என்ற பகுக்கும் கருவி சக்தியைப் பகுப்பதால்   பல   ஜீவாத்மாக்கள்   பிரகிருதியில்   எழுகின்றனர். பலவாகத்  தோன்றினாலும்  ஜீவாத்மா  என்பது  ஒன்றே.
 • பரமாத்மா  ஜீவாத்மாவாக  மாறுவது  அகந்தை  ஏற்பட்ட  வழி.
 • பரமாத்மா,  ஜீவாத்மா,  அகந்தை  என்பவை  சத்திய  ஜீவியத்தின்  3 நிலைகள்.
 • சத்திய ஜீவியத்தில் காலத்தைக் கடந்த பகுதி மேலேயும், காலத்துள் உள்ள  பகுதி  கீழேயும்  உள்ளது.
 • இவற்றிடையே  மனம்  ஏற்பட்டது.
 • மனத்திற்கு  ஞானம்;  உறுதி  என  இரு  அம்சங்கள்  உள்ளன.
 • ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி வெளிப்பட்டு வாழ்வு என்ற லோகம் உற்பத்தியாகிறது. இப்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கிறது.
 • தன்னை  ஓரளவு  இழந்த  ஞானம்,  முழுவதும்  இழந்துவிட்டால் வாழ்வு  ஜடமாகும்.  இதையே  வேறு  வகையாகவும்  கூறலாம். மனம்  புலன்வழி  ஆன்மாவைக்  கண்டால்,  மனத்தின்  புலன்கட்கு ஆன்மா  ஜடமாகத்  தெரிகிறது.
 • ஜடம்  உற்பத்தியாவதை  மேலும்  ஒரு  வகையாக  விளக்கலாம். இருசக்திகள் சந்தித்தால் ரூபம் ஏற்படுகிறது. ரூபம் சலனமிழந்தால் ஜடம்  ஏற்படுகிறது.
 • இது  ஆன்மா  முதல்  ஜடம்வரை  சிருஷ்டியின்  பாதை.
 • இனி பரிணாமம். அது ஜடத்தில் ஆரம்பித்து சத் வரை உயர்ந்து எழுவது.
 • ஆன்மாவுக்கு   ஆதியில்லை,   அந்தமில்லை,   வளர்ச்சியில்லை மாற்றமில்லை   என்பது   மரபு.   சிருஷ்டியிலும்,   பரிணாமத்திலும் ஆன்மா  வளர்கிறது  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்.  பூரண  யோகத்தை ஆன்மீகப்  பரிணாம  யோகம்  என்கிறார்.
 • ஆன்மா  என்பது  புருஷன்,  சாட்சி  என்பது  மரபு.
 • பிரகிருதி   என்ற   உலகத்திற்கு   ஆன்மா   உண்டு   என்பதும், பிரகிருதியின் உலக அனுபவ சாரம் அதன் ஆன்மாவில் சேருகிறது எனவும், சேர்வது தொடர்வதால் ஆன்மா வளர்கிறது எனவும், அந்த ஆன்மாவுக்கு   சைத்திய   புருஷன்   எனவும்,   அது   மனிதனில் சைத்திய புருஷனாக ஆரம்பித்து மேலே போய் சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும்,   கீழே   போய்   உடல்   சத்திய   ஜீவனாகவும் மாறுவது  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்.
 • இந்த  ஆன்மீகப்  பரிணாமத்தை  நாடி  ஒவ்வொரு  ஜீவாத்மாவும் உடலைத்  தாங்கி  உலகில்  உலவி  வருகின்றன.
 • உடலின்   கடமையும்,   திறமையும்   முடிந்தவுடன்,   மறு   உடலை நாடுவது  மறு  பிறப்பு.
 • ஆன்மீகப்  பரிணாமம்  நெடிய  யாத்திரை  என்பதால்  பல  ஆயிரம் உடல்கள் தேவைப்படுவதால் மறுபிறப்பு இன்றியமையாததாகிறது.
 • வளரும்  ஆன்மா  புது  உடலைத்  தேடுவதற்கு  பதிலாக,  வளர்ந்த ஆத்மாவுக்கேற்ப  உடல்  வளர்வது  சத்திய  ஜீவன்  பிறப்பதாகும். அதுவே  சத்திய  ஜீவியத்  திருவுருமாற்றம்.
 • அஞ்ஞானம் என்பது அசித்தி, அவித்யாயில்லை, ஞானத்தின் மறுஉருவம்.
 • முரண்பாடு என்பது முரணானதில்லை. உடன்பாட்டின் எதிர்ப்புறம்.
 • அகந்தை       என்பது       மனிதனில்லை,  ஜீவனில்லை. பரமாத்மாவிலிருந்து  பிரிந்த  நிலை.
 • சிருஷ்டி என்பது கடவுளால் ஏற்பட்டதில்லை, கடவுளே சிருஷ்டியாக மாறினார்.
 • சிருஷ்டித்தது  பிரம்மாயில்லை,  சத்திய  ஜீவியம்.
 • இந்த   ஞானம்   அறிவால்   பெறப்படுவதில்லை.   அனுபவத்தால் பெறக்கூடியது.
 • உலகில்  தீமை  படைக்கப்படவில்லை.  பிரிந்து  நிற்கும்  அகந்தை பிரிந்து  நிற்பது  தீமையாகத்  தோன்றுகிறது.

மேற்சொன்னவை  ஸ்ரீ  அரவிந்தத்திற்குரிய  புதிய  நிலைகள். பகவான்   இவற்றை   விளக்க   முயன்றால்   நாம்   புரியவில்லை என்கிறோம்.   இதைத்தான்   விளக்குகிறார்   என்று   தெரிந்தவுடன் புரியும்.  அது  போன்ற  சிக்கல்கள்  ஆயிரம்.  சில  உதாரணங்களை மட்டும் கூறுகிறேன். புரியாத இடம் இதுபோன்ற விளக்கத்தால் புரிந்தால், அளவு  கடந்த  சக்தி  மனத்துள்  எழும்.  அது  மந்திர  சக்தி.

பிரபஞ்ச  சிருஷ்டியைப்  பற்றிய  அத்தியாயத்தில்  சிருஷ்டியின் இரகஸ்யத்தைப் பற்றி விளக்கமாகக் கூறியபின், அடுத்த பாராவில் முதல்  வரியில்  பிரம்மம்  நமக்கு  சச்சிதானந்தமாகத்  தெரிகிறது என்று    ஆரம்பிக்கிறார்.    சிருஷ்டிக்கும்    இதற்கும்    தொடர்பு தெரியவில்லை.  

 தொடர்பும்   ஏற்படுத்த   முடியாது   தவிப்போம். இந்த அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் திடீரென ஒரு பாராவில் இங்கு    நாம்    அஞ்ஞானத்தைப்    பற்றி    அறிவது    அவசியம் என்கிறார்.    சிருஷ்டிக்கும்    அஞ்ஞானத்திற்கும்    தொடர்பு இருப்பதாகத்   தெரியாது.   சத்திய   ஜீவியத்தைப்   பற்றிய   மூன்று அத்தியாயங்களுக்குப்  பின்  மனத்தைப்  பற்றிய  அத்தியாயத்திற்கு முன்   தெய்வீக   ஆத்மா   என்று   ஒரு   அத்தியாயம்.   இதற்கு   முன் அத்தியாயத்துடனோ,    பின்    அத்தியாயத்துடனோ    இந்த அத்தியாயத்திற்கு என்ன தொடர்பு என்றால் சிந்தனைக்கு எட்டாது. சிந்தனை  ஆரம்பிக்காது.

அதிகமாகப்   படித்த   பல்கலைக்கழக   பேராசிரியர்   ஒருவர் பகவான் தரிசனம் பெற்றவர். பகவான் நூல்களைப் படித்து விட்டு தனித்தனியாகத்   திட்டு   திட்டாகப்   புரிகிறது.   மொத்தமாகப் புரியவில்லை  என்றார்.

இலக்கியப்   பேராசிரியர்   ஒருவர்   பகவானைப்   பற்றிப்   பல நூல்களை  எழுதியவர்.  தம்  ஆன்மீக  சித்திகள்  நம்  பரம்பரையில் வந்த   வழிக்குரியவை   என   ஸ்ரீ   அரவிந்தர்   காண   முயல்கிறார் என்று  கூறினார். பரம்பரை பகுதி. ஸ்ரீ அரவிந்தர் முழுமை.  Life Divine முழுவதும் எப்படி ஸ்ரீ அரவிந்தம் பரம்பரையிலிருந்து முழுவதுமாக மாறுபட்டது என  எழுதியுள்ளார்.

சட்டம்   சக்தி   வாய்ந்தது.   ஆனால்   நாம்   போட்டது   சட்டம். நாம்   சட்டத்தை   மாற்றலாம்.   கர்மம்   சக்தியின்   விளைவு.   சக்தி ஜீவனுக்குட்பட்டது.   சக்திக்குக்   கட்டுப்பட்ட   மனிதனை   கர்மம் ஆளும்.  ஜீவனை  கர்மம்  ஆளமுடியாது.

நாட்டில்    நிர்வாகம்    சட்டத்திற்குக்    கட்டுப்பட்டது. அரசியல்வாதிக்குக்    கட்டுப்பட்டதல்ல.  காங்கிரஸ்,  DMK அரசில் கலெக்டர்  கலெக்டராக  இருப்பாரே  தவிர  காங்கிரஸ்  கலெக்டர், DMK கலெக்டர்  என்பதில்லை.  நீதிபதியும்,  எலக்ஷன்  கமிஷனரும் சட்டத்திற்குட்பட்டவர்கள்.  மந்திரிகளுக்கு  அடங்கியவரல்ல  என்ற விபரங்கள் இன்று தெரிவதுபோல் அன்று தெரியாது. Life Divineஐப்   படிப்பதில்   புரியாதவை   என்பவற்றைவிட   குழப்பமானவை என்பவையுண்டு.

 ஒரு  சிக்கலைக்  கருதுவோம்.

P.174ல் ஜடம் என்பது ஆழ்மனத்தின் உறுதி என ஒரு விளக்கம் உள்ளது.    முதலிரண்டு    பாராக்களில்    இது    விளக்கப்பட்டு முடிவான  கருத்தாக  எழுதப்பட்டுள்ளது.  பத்து,  இருபது  முறை படித்தபின்  எதுவும்  புரியவில்லை.  இதெல்லாம்  தத்துவம்.  நம் சிற்றறிவுக்கு  எட்டாது  என்று  தோன்றுகிறது.  அது  பொதுவாக சரி. அதுவே முடிவல்ல. இதுபோல் புரியாத இடங்களில் பேப்பரும் பென்சிலும்   எடுத்து   குறிப்பு   எடுத்து   நிதானமாகப்   படிக்க வேண்டும்    என்கிறார்    அன்னை.    அதை    செய்து    ஊன்றி கவனித்தால்,  ஆசிரியர்  மனம்  எண்ணத்தை  எப்படிக்  கருதுகிறது என  எழுதியவர்  கோணத்தில்  பார்த்தால்  உதவும்.  அதையும்  கீழே செய்து  பார்ப்போம்.

 1.    மனம்  சத்திய  ஜீவியத்தில்  எழுவதால்  அதன்  ஆதி  இறைவன் என   முன்   அத்தியாயம்   கூறியதை   முதல்   வரி   மீண்டும் கூறுகிறது.

2.    கீழ் லோகத்திற்குரிய மூன்று கரணங்களான உடல், வாழ்வு, மனம்  ஆகியவற்றுள்  மனம்  உச்சியிலுள்ளது.

3.    மனம்   தெய்வசக்தியின்   சிறப்பான   செயல்   அல்லது   மேல் லோகத்தில்    கடைசி    நிலையிலுள்ள    கரணம்    மனம் எனப்படும்.

4.   மனம்   புருஷனையும்,   பிரகிருதியையும்   பிரித்துக்   காட்ட வல்லது.    புருஷனும்    பிரகிருதியும்    ஒன்றானவை. தனித்தனியானவையல்ல.   ஆனால்   பிரித்துப்   பார்க்க விரும்பினால்  மனம்  பிரித்துக்  காட்டும்  திறன்  உடையது. ஒரு கம்பெனியின் கணக்குகளை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால்  விளங்கும்.  அதனால்  கம்பெனி  வேறு,  கணக்கு வேறு  என்றாகாது.

5.    ஆத்மா    அஞ்ஞானத்திலிருப்பதால்    மனம்    பிரித்துக் காட்டுவதை பிரிந்தவை என தவறாக நாம் நினைக்கிறோம்.

6.   சத்திய   ஜீவியத்திலிருந்து   மனம்   பிரியாதவரை   மனம் அஞ்ஞானத்தின்  கருவியாகாது.  பிரிக்கும்  மனத்தின்  திறன் ஞானத்திற்கே  பயன்படும்.

 7.    மனம்  பிரபஞ்சத்தில்  சிருஷ்டிக்கும்  கருவியாகிறது.

8.   மனத்தின்  இத்திறனை  நாம்  அறிவதில்லை.

9.   மனம்   புரிந்து   கொள்ளும்   கருவி.   உலகில்   நடப்பவற்றை நமக்குப்  புரியவைக்கும்  கருவி  என  நாம்  நினைக்கிறோம்.

10. ஜடத்தில்    உற்பத்தியான    சக்திகளை    அதன்    மனத்தின் ஆரம்பமாகக்  கருதுகிறோம்.

11.  சமீபகாலமாக  நடக்கும்  சோதனைகள்  மூலம்  இந்த  சக்தியுள் மனம்  மறைந்துள்ளது  என  நாம்  அறிகிறோம்.

12. மறைந்துள்ள  இம்மனம்  ஜடத்தினின்று  தானே  வெளிவரும்.

13.முதலில்    அது    உயிராகவும்,    முடிவில்    மனமாகவும் வெளிவரும்  என  அறிகிறோம்.

14. முதலில்  வருவது  தாவரங்களுக்குரிய  உணர்வு.

15. முடிவில் விலங்குகளிலும், மனிதனிலும் வெளிப்படும் மனம் வெளிவரும்.

16.  ஏற்கனவே  ஜடம்  என்பது  சக்தியின்  உருவம்  (Matter is only substance of Force)   என நாம் முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம்.

17.எனவே ஜட சக்தி என்பது சக்தி உருவமான மனம்(Energyform of Mind)எனப் புரிகிறது.

18. Material force is,in fact,a subconscious operation of will.. ஜடசக்தி  என்பது  ஆழ்மனத்தின்  உறுதி  செயல்படுவதாகும்.

Matter is substance of Force.

Mind is Energy-form.

Force is Energy.

Therefore Matter is Mind.

ஜடம்  என்பது  சக்தி  (Force).

மனம்  என்பது  சக்தியின்  ரூபம்  (Energy-Form).

 Force= Energyஎனவே  ஜடம்  என்பது  மனம்.

மனம்  விழிப்பாக  இருந்தால்  மனமாகும்.

மனம்  மறைந்திருந்தால்  ஆழ்மனம்  என்கிறோம்.

மனம்  மறைந்திருப்பது  ஜடமாகும்.

ஜடம்  என்பது  ஆழ்மனத்தின்  உறுதி  செயல்படுவதாகும்.

இது  தத்துவமான  விளக்கம்.

நடைமுறை  உதாரணம்,

 • வாயில் சொன்னால் மனம் உள்ளவன் கேட்டு அதன்படி நடக்கிறான்.
 • மனம்  இல்லாதவன்  சொல்லுக்கு  அசையமாட்டான்.
 • மனம்  இல்லாதவன்  வெறும்  ஜடம்,  உடல்.
 • மனம்  சொல்லாக  வெளிப்படாமல்  செயலாக  வெளிப்பட்டு  ஓங்கி ஒரு  அறை  கொடுத்தால்,  சொல்லுக்கு  அசையாதவன்  செயலான அடிக்குப்  பணிவான்.
 • நல்லவனுக்கு ஒரு சொல். நல்ல மாட்டுக்கு ஒரு அடி என்பது பழமொழி.
 • ஜடம்   மனம்   என்பது   அடிபட்ட   பின்   உத்தரவை   ஏற்பவனைக் காட்டுகிறது.

******

                                                      இதயத்தின்  எழுச்சி

ஆதி  முதல்  மனிதன்  இறைவனைத்  தேடுகிறான்.  இறைவன் ஜோதியாகவும்,   ஆனந்தமாகவும்,   அமரத்துவமாகவுமானவன். ஆனால்   உலகில்   மனிதன்   இவற்றிற்கு   எதிரான   இருளையும், வலியையும்,    மரணத்தையுமே    காண்கிறான்.    உடன்பாட்டை இறைவன் முரண்பாடாக காட்டுவது சிருஷ்டி, அதன் இரகஸ்யமும் கூட,   இருளான   மனமாகிய   ஜடம்   ஜோதியான   மனமாவது பரிணாமம் என்று வேதாந்தம் கூறுவதை நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப்  போய்  சத்திய  ஜீவன்  பிறந்து  உலகில்  மனித  வாழ்வு, தெய்வீக  வாழ்வாகும்  என்பது  அறிவுக்குப்  பொருத்தமானதே.

                                                நாத்திகனின்  மறுப்பு.

ஜடம்   ஜடமே   என்பதை   நாம்   ஏற்க   முடியாது.   ஜடமும் ஆன்மாவும்  ஒன்றே  என்பதே  பொருத்தம்.  இது  முடியுமா  எனப் பார்ப்போம்.  எண்ணத்தின்  பின்னும்,  உயிருக்குப்  பின்னும்  அது உள்ளது    என    மனம்    அறிகிறது.    இறைவன்    அறிவுக்குப் புலப்படவில்லை   எனில்,   அறிவின்   ஆதியான   ஜீவியத்திற்குப் போனல் புலப்படுமல்லவா? எண்ணத்தைக் கடந்த ஞானம் உடல், வாழ்வு,   மனம்,   சத்திய   ஜீவியம்   ஆகியவற்றை   விளக்கவல்லது. மனமும்,  உயிரும்,  உடலும்  மூவகையான  ஒரே  சக்தியென  வேதம் கூறுகிறது.    அச்சக்தியை    உறுதி    (will)    உற்பத்தி    செய்தது. மனிதனுக்கு   பின்னாலுள்ள   உறுதி   இறைவனின்   உறுதியாகும். அவ்வுறுதி   ஜடத்துள்   புதைந்துள்ளது.   பரிணாமத்தால்   அது வெளியெழும்   பொழுது   அது   தேடுவது   ஞானம்,   சக்தியுள்ள ஞானம்,   எல்லையற்று   அவற்றை   உறுதி   நாடுகிறது.   அதற்கு எல்லையில்லை,    கம்பியில்லாத்    தந்தி    தூரத்தை    அழித்து கம்பியையும்   அழித்தது   போல்,   மேலும்   உள்ள   தடைகளை    receiver,sender அழிக்கும்.   கடைசியான   தடை   மனிதனின் அகந்தை.

                                            சன்னியாசியின்  துறவறம்

பிரபஞ்சத்தில்   ஜடமும்   ஆன்மாவும்   ஒன்றென   சென்ற அத்தியாயத்தில்    கண்டது    போல்    கடந்த    நிலையிலும் அவையொன்றே  எனக்  காண  வேண்டும்.  பிரபஞ்சத்தில்  சாட்சி புருஷனைக்  காண  நாம்  மனத்தை  விட்டு  அகன்று  ஜீவியத்தைத் தொட   வேண்டும்.   பிரபஞ்ச   ஜீவியம்   தானே   இயங்குவது.   சத் என்பது    பிரம்மம்.    அசத்    என்பது    அதன்    பின்னுள்ளது. பிரம்மத்தைக்  கண்டு  துறவி  உலகை  உதறித்  தள்ளுவது  அவன் குறையோ,   மனிதகுலத்தின்   இயலாமையோ   இல்லை.   அது   ஒரு தேவையான   கட்டம்.

Ch - 4

பரம்பொருள்

ஜடமும்,    ஆன்மாவும்    பிரபஞ்சத்தில்    இணைவதைக் கண்டோம்.     அசத்,     மௌனம்     ஆகியவை     உலகைக் கடந்தவையில்ல,   உலகை   பின்னிருந்து   உய்விப்பவை.   மனிதன பூரணம்  பெற  சத்தில்  ஊன்றிய  காலை  எடுக்காமல்  அசத்திற்குப் போக  முயன்றால்,  இரண்டையும்  உட்கொண்ட  பரம்பொருளான பிரம்மத்தை   அடுத்த   கட்டத்தில்   அடைவான்.   இதுவே   ஜடமும் ஆன்மாவும்   கடந்த   நிலையில்   ஒன்றாவதாகும்.

Ch  -  5

மனிதனின்  ஆன்மீக  லட்சியம்.

பரம்பொருள்   அறிவைக்   கடந்தது.   ஒன்றானது.   சத்   சித் ஆனந்தத்தைக்   கடந்து   அசத்   இருப்பதை   வேதாந்தம்   கண்டது. ஜடமானாலும்,   ஆன்மாவானாலும்   இருமுனைகளும்   இருந்தால் தான்   செல்லும்.   பரமாத்மா,   பிரபஞ்சம்,   ஜீவாத்மா   ஆகிய மூன்றும்  தேவை.  அவை  அனைத்தும்  என்றும்,  எங்கும்  ஒன்றே. நம்  பார்வைக்கு  வேறுபட்டுத்  தோன்றுகின்றன.  பாதாளத்தையும், பரமாத்மாவையும்   இறைவன்   படைத்தான்.   அகந்தை   அளவை விட்டகன்று    இவையிரண்டையும்    இணைக்கிறது.    எனது ஜீவாத்மாவே  இரகஸ்யத்தை  பெற்றுள்ள  இடம்.  தெய்வீக  ஆன்மா சித்த    புருஷர்களாகப்    பெருகுகிறது.    மனிதனின்    ஆன்மிக இலட்சியமும்  இதுவே.

 Ch  -  6

மனிதனும்  பிரபஞ்சமும்

பிரம்மம்  மனிதனால்  வெளிப்பட  ரூபம்  பெறுகிறது.  இதை விஷ்ணு என்பர். மனமும், வாழ்வும், உடலும் அனந்தனை அதன் மூலம்   வெளிப்படுத்தும்,   பிரபஞ்சம்   தன்னைப்   பூர்த்தி   செய்ய பெறவேண்டி   ஜீவாத்மாவை   ஏற்படுத்துகிறது.   பிரபஞ்சத்தின் மூலமே ஜீவாத்மா தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். வாழ்வுக்கு மனோமய புருஷனே ஜீவன். தெய்வீக வாழ்வுக்கு அடுத்த உயர்ந்த நிலையான    விஞ்ஞானமய    புருஷன்    வேண்டும்    சத்,    சித் ஆனந்தத்தைக்   கடந்த   அசத்தை   ஆழத்தில்   கண்டு   முடிவான தீர்வை  அடையலாம்.

 Ch - 7

அகந்தையும்  அதன்  இரட்டைகளும்

ஜீவாத்மா  பிரபஞ்ச  முழுவதும்  பரவி  தன்  உடலுள்ள ஆன்மாவைக் கண்டால், அகந்தையிலிருந்து விடுபடலாம். மரணம் என்பதொரு   மாற்றமே   என்ற   உணர்வு   மனிதனுக்குரியது.   பூமி சூரியனைச்   சுற்றி   வருவதை   அறிய   மனிதன்   பிரபஞ்சத்தையும் பிரம்மத்தையும்   அடையவேண்டும்.   பகுத்தறிவால்  பிரம்மத்தை அறிய   முடியும்.   அகந்தையை   மறந்த   வாழ்வுக்கு   ஆனந்தம் சுயமானது  எனத்  தெரியும்.  மனிதனில்  அனந்தன்  மலர  இயற்கை எதிர்பார்க்கிறது.

 Ch 8

வேதாந்த  ஞானம்

புலன்களை   விட்டகன்ற   பகுத்தறிவு   பாதாளத்தையும், பரமாத்மாவையும்    இணைத்து    பிரம்மத்தை    சித்திக்கும். பிரபஞ்சத்தை  வேதாந்தம் ஆத்மா மூலம் அறியும். திரைமறைவில் ஞானம்  பிரம்மத்தைக்  காண்கிறது.  சோஹம்,  சர்வம்,  பிரம்மம், அகம்   பிரம்மாஸ்மி   என்பவை   வேதாந்த   மந்திரங்கள்.

 Ch 9

சத்  புருஷன்

சத்   என்பது   சக்தி,   காலத்தையும்,   இடத்தையும்   கடந்தது உண்டு  என  அறிவு  அறிவுறுத்துகிறது.  கடந்தது  பிரம்மம்.  நாம் அறிவைக்   கடந்து   செல்வோம்.   சத்   என்பது   சலனம்.   சலனம் காலமும்,   இடமும்   இரண்டும்   உண்மை.   அனந்தன்   உண்மை. காலம்  உள்ளது.  சிருஷ்டி  என்பது  ஜீவன்.  ஞானம்  சிருஷ்டியில் லயிப்பது   காலம்.   பிரம்மம்   நம்முள்   உள்ளது.   அங்கு   சென்று அனந்த   காலத்திற்கு   நாம்   தங்கலாம்.   சத்   என்பதும்,   உலகம் என்பதும் ஜீவனும், சிருஷ்டியுமாகும். இவையிரண்டையும் அறிவது விவேகம்.   ஸ்தாணு,   சலனம்,   ஐக்கியம்   என்பவை   அறிவுக்குரிய சொற்கள்.  பிரம்மம்  இவற்றைக்  கடந்தது,  சத்தைக்  கண்டோம். சித்  என்பது  என்ன?  சித்  சத்தின்  சக்தியா?  தனிப்பட்ட  சக்தியா என்பது  கேள்வி.

 Ch - 10

சித் சக்தி

சிருஷ்டியே   ரூபமும்   சக்தியுமானது.   பஞ்ச   பூதங்களும், பஞ்சேத்திரியங்களும் ஜடத்திலிருந்து சப்த பிரம்மமாக எழுகின்றன. ஜீவியம்   உற்பத்தியானது   எங்ஙனம்?   இரு   சக்திகள்   சந்தித்தால் ரூபம் உருவாகிறது. இரு ரூபங்கள் சேர்ந்து உணர்வு எனும் ஜீவியம் எழுகிறது.

சக்தி   சந்திப்பது.   அது   தாவரம்   முதல்   உலோகம்   வரை அனைத்திலும்   உண்டு.   அதற்கு   அறிவுண்டு   அதாவது   ஜீவியம் உண்டு.    இயற்கையின்    விரயமில்லை    என்பது    அறிவுண்டு என்பதுடன்  திறமையும்  உண்டு  எனக்  காட்டுகிறது.

 Ch - 11, 12

ஆனந்தம் பிரச்சினையும்  விடையும்

பிரம்மம்   தேடுவது   ஆனந்தம்.   உலகில்   துன்பமில்லை. வாழ்வுக்கு   தர்மமில்லை.   பாதாளமும்,   பரமனும்   தர்மத்தை ஏற்கவில்லை.    சிருஷ்டியின்    ஆனந்தம்,    பரிணாமத்தில் ஆனந்தமாவதே   பரமனுக்கும்,   மனிதனுக்கும்,   பாதாளத்திற்கும் பொதுவானது.   இதை   சாதிக்க   சச்சிதானந்தம்   ஜீவாத்மாவை பிரபஞ்சத்திற்குக்   கொண்டு   போகிறது.   ஜடத்தில்   ஆனந்தத்தை வெளிப்படுத்துவது   சச்சிதானந்தத்தின்   இலட்சியமும்.   ஜடத்தை மட்டும்   நாடும்   மனிதன்   ஏமாந்துபோகிறான்.

ஜீவனுக்கு  உலகம்  மாயை.  உலகம்  பிரம்ம  சத்தியமில்லை, உலகம்   சிருஷ்டியின்   சத்தியம்.   ஆண்டவனே   ஆட்டமாகவும், ஆடுபவனாகவும்,    அரங்கமாகவுமிருக்கிறான்.    அசைவற்ற ஆனந்தம்    அனைத்திலும்    அலையாக    எழுமானந்தமாவதே உள்ளுறை சூட்சுமம், இரகஸ்யம், நாம் ஆனந்தமயமான அமைப்பு. வலியை   ஏற்கும்   அவசியம்   நமக்கில்லை.   சுதந்திரமான   சுமுகம் ' அகந்தையற்றவனுக்குண்டானால்,    அகந்தை    அழியும். அனைத்துக்கும்    விடுதலை    கிடைத்தபிறகே    விடுதலைக்கு அர்த்தமுண்டு.    பிரபஞ்சத்தைத்    தழுவிய    மனிதனுக்கு வலியில்லை.

 Ch - 13

தெய்வீக  மாயை

பிரம்மத்தைக்   கண்டு   கொண்டோம்.   சிருஷ்டி   புதிராக உள்ளது.  அனந்தம்  சிருஷ்டியாக  அளவு  தேவை.  அந்த  அளவு மாயை.   ஸ்தாணுவின்   சத்தியம்   பூலோக   சத்தியமாக   மாயை எனும்   கருவி   தேவை.   அனைத்தும்   நம்முள்ளிருப்பதும்,   நாம் அனைத்து   ஜீவனிலிருப்பதும்   சிருஷ்டி,   இது   சத்திய   ஜீவிய சத்தியம்.   மனம்   காணாது.

ஸ்ரீ   அரவிந்தம்   இலட்சியக்   கொள்கையைக்   கடந்தது. உலகத்தையும்  பிரபஞ்சத்தையும்  மனம்  விளக்க  முடியாது, சத்திய   ஜீவியம்   விளக்கும்.அறிவை    விட்டகன்றால்,    அரியாசனத்தில்    ஞானம் வீற்றிருப்பது   தெரியும்.

 Ch - 14

சத்திய  ஜீவியம்    சிருஷ்டிக்  கர்த்தா

 

தெய்வங்களின்  பிறப்பிடம்  சத்தியம்  ஜீவியம்.

சத்தியம்  சுயமாக  உருப்பெறும்  லோகம்  சத்திய  ஜீவியம்.

சொல்லும்  செயலும்  சேர்ந்த  லோகம்  இது.

காலத்தைக்  கடந்ததும்,  காலமும்  உள்ளது  சத்திய  ஜீவியம்.

மேலே  சச்சிதானந்தமும்,  கீழே  உலகமும்  நடுவில்  சத்திய ஜீவியமும்  உள்ளன.

சத்திய  ஜீவியம்  பிரம்மம்  லோகமானது.

ஜீவனின் எண்ணம் சத்திய ஜீவியத்திற்கு சிருஷ்டிக்கும் கருவி.

பிரிக்காமல்  பகுக்கும்  பாங்குடையது.

சத்  புருஷன்   ரூபத்தாலும்   சக்தியாலும்   தன்   சத்தியப் படைப்பை  தன்னுள்  சிருஷ்டித்தது  லோகம்.

ஜீவனின்  எண்ணம்  ஜீவனுள்ள  சக்தி.

சத்திய  ஜீவியத்தில்  பிரிந்த  நிலையில்லை.  ஐக்கியம்  உண்டு.

 Ch  - 15

சத்திய  ஜீவியத்தின்  உச்ச  கட்டம்

சத்திய  ஜீவியம்  ஈஸ்வர  ஜீவியம்.  அதன்  அனந்தருணம்.

காலமும்,  இடமும்  கண்டிப்பாகத்  தேவை.

அகம்  புறமாவது  சிருஷ்டி.

பிரபஞ்சதே  முதற்  காரியமாகச்  சிருஷ்டிக்கப்பட்டது.

 

*******book | by Dr. Radut