Skip to Content

அடக்கத்துள் அடங்கிய ஐந்து அம்சங்கள்

  • திருவுருமாற்றமும், சரணாகதியும் பூரணயோகத்திற்கேயுரியவை.
  • பிரம்மத்தின்  முழுமை,  லீலை,  பிரம்மம்  சிருஷ்டியில்  அசுரனாக இருப்பது ஆகிய ஐந்து அம்சங்களும் பூரண யோகத்திற்குரியவை.
  • ஒவ்வொரு அம்சத்தையும் நமக்குப் பெற்றுத் தரும் குணம் உண்டு.
  • இந்த  ஐந்து  அம்சங்களையும்  சேர்த்துத்  தருவது  அடக்கம்.
  • அடக்கமானவர் ஒருவரையே நான் அறிவேன். அது ஸ்ரீ அரவிந்தர் என்றார்  அன்னை.
  • அடக்கம்  ஆலகாலத்தை  அமிர்தமாக்கும்.

சரணாகதி

  • எதிரிக்குப்  பணிவதை  நாம்  சரணாகதி  என்று  கூறுவதில்லை.
  • சரணாகதி   என்பது   ஒரு   செயல்   என்பதை   விட   ஒரு   மனநிலை எனலாம்.
  • எந்த   காரியத்திற்காக   நாம்   சரணாகதியை   மேற்கொண்டாலும், சரணாகதி   அப்பலனை      முடிவான   பலனை      முதலிலேயே தரவல்லது.
  • முடிவான பலனை செயலை ஆரம்பிக்கும் முன் முதலிலேயே தரும் மனநிலை  சரணாகதி.
  • முடிவான  பலனை  முதலிலேயே  தரும்  முடிவுக்குரிய  மனநிலை சரணாகதி.
  • அடக்கத்தால் சரணாகதி பலிக்கும். சரணாகதி அடக்கவுணர்வைத் தரும்.
  • மனம்   எதை   ஏற்கிறதோ,   அப்பலனை   இதுபோல்   தரவல்லது சரணாகதி.
  • கார்  டிரைவரும்,  பியூனும்  மந்திரிகளானது  சரித்திரம்.
  • அவர்கள்  மனம்  ஆசையால்  நாடியதை  சந்தர்ப்பம்  அவர்கட்குத் தந்தது.
  • அவர்கள் மனம் எதையும் நாடலாம் என அவர்கட்குத் தெரியாது.
  • ஆசையால்  நாடினால்  திறமையால்  பலிக்கும்.
  • ஆசையின்றி  நாடினால்  அருளால்  பலிக்கும்.
  • எதையும் நாடலாம் என்பது மனித நிலை என உலகம் அறியாது.
  • ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தை பூமாதேவிக்காக கேட்ட வரம் பெரியது. அந்த  வரம்  கிடைத்துவிட்டதால்  மனிதன்  எதையும்  நாடலாம்.
  • எதையும் மனிதன் நாடலாம், அது பலிக்கும் என்றாலும் எதையும் நாடாத  மனப்பான்மை  போற்றத்தக்கது.
  • எதையும்  நாடாத  மனம்  அன்னையை  நாடுவது  முறை.
  • அன்னையை  மனம்  நாடினால்  அன்னை  எதைத்  தருவார்?

நமது  உச்சகட்ட  ஆசையைப்  பூர்த்தி  செய்வாரா?

நம்மால்  பெறக்கூடிய  அதிகபட்சத்தைத்  தருவாரா?

உலகத்தின்  அதிகபட்சத்தைத்  தருவாரா?

இவற்றையெல்லாம்  அன்னை  தருவதை  நாம்  கண்டுள்ளோம்.

அன்னை அவரவர் மனநிலைக்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப தருகிறார்.

ஆனால்  அன்னை  தன்  உச்சகட்டவரத்தைத்  தர  விரும்புகிறார்.

தருவதை  எதிர்பார்ப்பது  சரணாகதியில்லை.

எதையும்  எதிர்பார்க்க  முடியாத  மனநிலை  சரணாகதிக்குரியது.

That surrender is an end itself..

சரணாகதியை  சரணாகதிக்காகவே  செய்வது  முறை.

அதுவே  அன்னை  விரும்பும்  சரணாகதி.

அந்த  சரணாகதி  எந்தப்  பலனையும்  தரவல்லது.

  • அதுவே  திருவுருமாற்றத்தைத்  தரும்.
  • திருவுருமாற்றம்  முடிவானது.
  • முடிவான  திருவுருமாற்றத்தை  முதற்  பலனாகத்  தரும்  சரணாகதி அடக்கத்திற்குரியது.

திருவுருமாற்றம்

  • இது  உலகத்திற்கும்,  யோகத்திற்கும்  புதிய  கருத்து.
  • சச்சிதானந்தம் உலகமானது சிருஷ்டி. சிருஷ்டி சச்சிதானந்தமாவது பரிணாமம்.
  • எனவே திருவுருமாற்றம் இன்றியமையாதது, தவிர்க்க முடியாதது.
  • திருவுருமாற்றமின்றி திருவுள்ளம் பூர்த்தியாகாது.
  • பிரம்மம்  உலகமாயிற்று.
  • உலகினுள்  பிரம்மம்  ஒளிந்துள்ளது.
  • ஒளிந்தது  தன்னைத்  தானே  கண்டுபிடிப்பது  லீலை    ஆனந்தம்.
  • பிரம்மம்,  சச்சிதானந்தமாகி  உலகமாயிற்று.
  • சச்சிதானந்தம்  ஆன்மாவாகி  உலகை  சிருஷ்டித்தது.
  • ஆன்மா  ஜடமாகி  உலகம்  உண்டாயிற்று.
  • ஆன்மா  12  அம்சமாகி  எதிராக  மாறி  உலகமாக  இருக்கிறது. மௌனம்,   அமைதி,   அனந்தம்,   கடந்தது,   சத்தியம்,   நன்மை, ஐக்கியம்,   ஞானம்,   சக்தி,   அன்பு,   அழகு,   சந்தோஷம்   என்ற ஆன்மாவின்   12அம்சங்களும்,   செயல்,   அசைவு,   வலி,   காலம், பொய்மை,  தீமை,  பிரிவினை,  அஞ்ஞானம்,  இயலாமை,  வெறுப்பு, விகாரம்,  துன்பமாக  தலை  கீழே  மாறின.
  • மீண்டும்   இவை   ஆன்மாவின்   அம்சங்களாக   மாறுவது திருவுருமாற்றம்.         
  • அப்படி  மாறுவது,  பரிணாமம்,  லீலை.
  • அப்படி  மாறினால்  ஆன்மா  சிறக்கும்.
  • வளராத   ஆன்மா   வளரும்   ஆன்மாவாக,   சைத்திய   புருஷனாக மாறும்.
  • அமைதியான  ஆனந்தம்,  ஆர்ப்பரிக்கும்  ஆனந்தமாக  மலரும். (Static Bliss becomes active Delight)
  • இந்த  12  அம்சங்களும்  பரிணாமத்தால்  முதலிலிருந்ததை  விட உயர்ந்ததாக  மாறும்.
  • தெய்வங்களுக்கு    உடலில்லை.    அதனால்    இடைவிடாத நினைவில்லை  என  துர்கை  அன்னையிடம்  கூறினார்.
  • மேல்  லோகத்தின்  ஆனந்தம்  நிலைக்காது.  அதற்கு  நிலையான தன்மையைத்  தருவது  உடல்  என  பகவான்  எழுதியுள்ளார்.
  • சச்சிதானந்தம்,  பூலோகத்தில்  திருவுள்ளத்தைப்  பூர்த்தி  செய்யும் பொழுது  தன்  நிலையில்  எல்லா  வகைகளிலும்  உயர்கிறது.
  • கண்   தெரியாத   ஹெலன்கெல்லர்   முயன்று   மாறினால்   பிரசித்தி பெறுகிறார்.
  • உடல்   ஊனமுற்றவர்   திருவுருமாறினால்   உலகத்தில்   முதன்மை பெறுவார்.
  • ஒதுக்கப்பட்டவர்,   தாழ்த்தப்பட்டவர்   திருவுருமாறினால்   நிலை உயர்வதுடன்,  உலகின்  உச்சகட்டத்தை  எட்டுவார்.
  • திருவுருமாற்றம்   என்பது   குறையைப்   போக்குவது,   குறையை நிறைவாக்குவது   என்பதில்லை.   நிறையை   பெருநிறைவாக்க இறைவன்  எதிராக  மாறி,  மீண்டும்  பழைய  நிலைக்கு  உயர்ந்து எழுவது திருவுருமாற்றம். அந்த ஆனந்தமே லீலையின் ஆனந்தம்.
  • திருவுருமாற்றம்  மூன்று  நிலைகளுடையது,   

- முதல் நிலை மனம் சைத்திய புருஷனாவது.

- இரண்டாம் நிலை சைத்திய புருஷன் ஆன்மீகமயமாவது.

- மூன்றாம் நிலை சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாவது.

  திருவுருமாற்றத்தின்  கரு  உள்ள  நிலையை   விஷமான  நிலையை விருப்பமாக ஏற்பது. ஏற்பதற்கு மனதில் உண்மையும், அடக்கமும் தேவை.

 அசுரதீயசக்திகள் - Hostile Forces  

  • சிருஷ்டிக்கு முன் சிருஷ்டிக்கப்பட்ட கடவுள்கள் அசுரர்களாயினர் என்பது  தத்துவம்,  பொய்,  மரணம்,  இருள்,  நாட்டின்  தலைவன், என்ற  4  அசுரர்களாயினர்.
  • அவர்களிருவர்  அழிந்துவிட்டனர்  என்கிறார்  அன்னை.
  • அவர்கள்   மீண்டும்   சத்தியம்,   அமரவாழ்வு,   ஜோதி,   உலகத் தலைவர்களாக  வேண்டும்.
  • மனிதனில்  99%  தீயது  என்கிறார்  பகவான்.
  • நாம் அவ்வசுரன், அந்த தீமை, இருள், மரணம், விகாரம், வேதனை என   உள்ளுணர்வால்   அறிய   வேண்டும்.   அறிந்ததை   ஏற்கும் அடக்கம்  தேவை.
  • மனம் எண்ணத்தாலானது. எண்ணமே தீமை என்கிறார் அன்னை.
  • எண்ணம்  எனில்  கெட்ட  எண்ணம்.  எண்ணம்  நல்லதாக  இருக்க முடியாது  என்கிறார்  அன்னை.
  • எண்ணம்   கெட்டது,   உணர்ச்சி   தீமை,   உடலின்   உணர்வு அசுரனுடைய   உணர்வு   என   அறிவதும்,   அறிந்ததை   ஏற்கும் மனப்பான்மையும்  அடக்கத்தால்  மட்டும்  வரும்.
  • உள்ளேயுள்ளது   அனைத்தும்   ஆலகால   விஷம்   என்று தெரிந்தவுடன்,  அடக்கம்  தானே  வரும்.
  • வெட்கப்பட்டு  அடக்கம்  வந்தாலும்  உயர்ந்த  பலன்  உண்டு.
  • வெட்கம்   ஞானமாகி,   வெட்கப்படுவது   அஞ்ஞானமெனமறிந்து வெட்கங்கெட்ட  மனமுடையவனைப்போல்,  வெட்கத்தைக்  கடந்த மனநிலை  பெறவேண்டும்.
  • இம்மனநிலை அடக்கத்திற்குரியது.

 

சுயநினைவு, Remenbrance

  • பிரம்மம்  உலகமாகி,  உலகில்  மறைந்ததை  மறந்தது  நினைவுக்கு வருவது  சுயநினைவு.
  • பிரம்மம் அசுரனாகி, உலகமாக இருப்பதால், பிரம்மம் நினைவுக்கு வருமுன்  அசுரன்  நினைவுக்கு  வருவான்.
  • அசுர  குணத்தை  அசுர  குணமாக  ஏற்பது  பெரிய  உண்மை.
  • அசுர  குணத்தை,  அசுர  குணமாக  அறிவது  அஞ்ஞானம்.
  • பிரம்மம்  அசுரனாயிற்று,  அதனால்  அசுர  குணம்  பிரம்மத்தின் குணம்  என்றறிவது  ஞானம்.
  • நம்மிடம்  தீயகுணமில்லை  என்பது  நாம்  நம்மை  அறியாதது.
  • நம்மிடம்   தீயகுணம்   உண்டு   என்று   தெரிந்து   வெட்கப்படுவது ஞானமில்லை.
  • தீயகுணம்   அசுர   குணம்,   அசுரனாக   இருப்பதால்   அசுர குணமிருக்கிறது,   அசுரன்   என்பது   பிரம்மத்தின்   முன்   நிலை. அசுரனைக்   காண்பது   பிரம்மத்தைக்   காண்பதற்கு   முன்   கட்டம் என்பது  ஞானம்.
  • அசுரன்  என்று  நம்மை  நாம்  அறிந்து,  அதுவே  பிரம்மம்  என்று அறிவது  இன்று  உலகிலிலில்லாத  ஆன்மீக  ஞானம்.
  • ஆன்மீகம்  அசுரனை  ஒதுக்குகிறது,  அழிக்க  முற்படுகிறது.
  • அசுரனை  அழித்தால்  பிரம்மத்தை  அழிக்கிறோம்  என்பது  ஸ்ரீ அரவிந்த  ஞானம்.
  • தீமையை   விலக்கினால்   நன்மையை   விலக்குவோம்   என்கிறார் பகவான்.
  • அசுரன்  என்பதை  அறிவதும்,  அறிவதை  ஏற்பதும்,  ஏற்றதைத் திருவுருமாற்றுவதும்  ஸ்ரீ  அரவிந்தம்.
  • மறைந்து  மறந்த  பிரம்மம்,  சுயநினைவு  பெறுவதன்  முதற்  கட்டம் மனிதன்   தன்னை   அசுரன்   என   அறிவது.   அடக்கம்   அசுரனை ஏற்கும்.

  

பிரம்மம்

  • பிரம்மம்  என்பதை  அனந்தன்,  அனந்தம்  என்பது  வழக்கம்.
  • அனந்தம் என்பதும் ஒரு குணம் என்பதால் பிரம்மத்தை அனந்தம் என்றால்  அதற்கு  குணத்தைக்  கற்பிக்கிறோம்.  அது  சரியாகாது.
  • வேறு சொல்லில்லாததால் அனந்தம், கடந்தது (Infinity,Eternity) என்று  கூறுகிறோம்.
  • கணிதத்திலும்,   தத்துவத்திலும்   அனந்தம்   என்ற   கருத்துண்டு. அவை  மனத்திற்குரிய  கருத்துகள்.
  • யோகம்  வாழ்வு  எனவும்,  உடலின்  யோகம்  எனப்  பூரணயோகம் குறிக்கப்படுவதால்,   பிரம்மம்,   அனந்தம்   என்பவை   மனத்தில், வாழ்வில்,   உடல்   எப்படி   வெளிப்படுகின்றன   என்று   அறிதல் அவசியம்.  (Practical concept).
  • பிரம்ம  ரிஷி  என்பவர்கள்  கண்ட  தரிசனங்கள்  ஏராளம்.
  • அவற்றை உண்டு என்று சகுணம் போலும், இல்லை என நிர்குணம் போலும்  கண்டு  சித்தி  பெற்றனர்.
  • சகுணமும்,   நிர்குணமும்   ஈஸ்வரனின்   இருபுறங்கள்.   ஈஸ்வரன் முழுமை.   சகுணமும்,   நிர்குணமும்   மனத்தின்   பகுதியான பார்வைக்குரியவை.
  • பிரம்மம்  சிருஷ்டியின்  ஆரம்பத்தில்  சத்  என்றாயிற்று. சத்  என்பதை  புருஷனாகக்  கண்டோம். சத்  என்பதற்கு  முழுமையுண்டு  என்றாலும்  அதற்கு  சிருஷ்டியில் முழுமையுண்டு. சிருஷ்டியைக் கடந்த நிலையில் சத் என்பது பகுதி, எதிரான   பகுதி   அசத்.   சத்,   அசத்   இரண்டும்   சேர்ந்த   பிரம்மம் ழுமை  என்றோம்.
  • சத்   புருஷன்   என்பது   ரிஷியின்   பார்வைக்குகந்ததுபோல்   பல கட்டங்களில்   தெரியும்.   கடைசியான   கட்டம்   அக்ஷர   பிரம்மம், அதற்கு  மேல்  புருஷன்,  புருஷோத்தமன்,  சத்  என்ற  நிலைகள் உள்ளன.   பிரம்மம்   ஒன்றே,   பார்வை   வேறு.   பார்வைக்குகந்தது போல்  தரிசனம்  உண்டு  என்றோம்.

         நிலை   எதுவானாலும்   இரண்டாகப்   பிரிந்து   தெரியும்.   ரிஷியின் பார்வை   மனத்தின் பார்வை. மனம் ஒரு பகுதியை மட்டும் காணும். அப்படி  ரிஷிகள்  கண்டவற்றை  7  வகையாகவும்,  7  வகையை இரு   பிரிவுகளாகவும்      14      நாம்   இந்திய   ஆன்மீகப் பொக்கிஷமாகப்  பெற்றுள்ளோம்.  அவை:

 

  1. The immobile immutable Self 

அக்ஷர   பிரம்மம்

  1. The Self that becomes all things

சத்   புருஷன்

  1. Nirguna Brahman

The Eternal without qualities

நிர்குணப் பிரம்மம்

  1. The essence and source of all determinations and the dynamic essentials

சகுண  பிரம்மம்

  1. The pure Featureless One Existence - ONE பரமாத்மா
  1. The ONE who is the Many -

Many - ஜீவாத்மா

  1. The Impersonal

அனந்த குணா

  1. The infinite Person who is the source and foundation of all persons and personalities.
  1. The silence void of activites புருஷன்
  1. The Lord of Creations - The Word ஓம்
  1. The Non-being  அசத்.
  1. The Master of all works and actions சத்
  1. The Ineffable

சொல்லைக்   கடந்தவன்

The Unknowable

அப்பாலுக்கப்பால்

  1. That being known all is known

 

  • இந்த   14   தரிசனங்களும்   பகுதியான   மனம்   கண்ட   பகுதியான பிரம்மம்.

 

 

      பிரம்மம்   மேல்   லோகத்திலும்,   சிருஷ்டியைக்   கடந்த   நிலையிலும்,   சிருஷ்டியில்   பூலோகத்திலும்   என்றும்,   எப்பொழுதும்,   எதிலும் முழுமையானது  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்.

  • பகுதிக்கு  எதிரான  முழுமையில்லை  இம்முழுமை.
  • இது   பிரம்மத்தின்   முழுமை.   மனிதன்   அறியும்   முழுமையல்ல. பகுதிக்கு  எதிரான  முழுமையுமில்லை,  எல்லா  பகுதிகளும்  சேர்ந்த தொகுதியுமில்லை   என்பது   ஸ்ரீ   அரவிந்தம்   பிரம்மத்திற்குக் கொடுக்கும்   புது   விளக்கம்.   இந்த   விளக்கத்தை   உடலும், ஜடத்திலும்  அறிவதே  பூரண  ஞானம்.
  • Life Divineஇல் இரண்டாம்    புத்தகத்தில்    இரண்டாம் அத்தியாயத்தில்   இந்த   தத்துவத்தை   12   வகையாகப்   பிரித்து முழுமையை  விளக்குகிறார்.
  • வகுப்பில்   கணிதம்   நடத்தும்   ஆசிரியரை   மாணவர்கள்   கணித ஆசிரியர்   என்பர்,   அடுத்த   வகுப்பில்   ஆங்கிலமும்,   வேறொரு வகுப்பில்  விஞ்ஞானமும்  நடத்துகிறார்.  அவர்  ஆசிரியர்.  எந்தப் பாடமும் நடத்தக் கூடியவர். ஒரு வகுப்பு மாணவர்க்கு அவர்களின் ஆசிரியர்.
  • அவர் வீட்டிற்குப் போனால் ஆசிரியரில்லை, கணவன், தகப்பனார், தம்பி,  மகன்  என்ற  நிலைகளுண்டு.
  • அவர்  ஆசிரியர்  தொழிலிலிருந்து  வியாபாரம்,  விவசாயம்  என்ற மற்ற  தொழில்கட்கும்  போவதுண்டு.
  • இவற்றை எல்லாம் கடந்து அவன் ஒரு மனிதன். அதையும் கடந்து ஆத்மா.  முடிவாக  அவர்  பிரம்மம்.  பிரம்மம்  என்பவரை  கணித ஆசிரியரென மாணவர் உலகம் அறியும். அவரது முழுமை பிரம்மம். அதற்கும்    கணிதத்திற்கும்    உடன்பாடான    தொடர்போ, எதிர்மறையான தொடர்போ மிகச் சிறியது. ரூபத்திற்கு ஆண்டவன் எதிரான   அரூபி   என்றால்,   அவன்   ரூபம்,   அரூபத்திற்கு உட்பட்டவனாகிறான். அவனுக்கு குணம் உண்டு, எதிரான நிர்குணம் உண்டு.  அவனே  சத்,  எதிரான  அசத்தும்  கூட.  அவன்  வலியும், ஆனந்தமுமாவான்.   மௌனமும்,   நிசப்தமுமாவான்.   ரூபத்திற்கு எதிரான  அரூபி  என்பதால்  மற்ற  அம்சங்களில்லை  என்றாகாது. பிரம்மத்திற்கு   எல்லா   அம்சங்களும்,   அவற்றிற்கு   எதிரான

  

அம்சங்களும்,   அம்சமேயில்லாத   நிலையும்,   நிலையைக் கடந்ததுமான அனந்தமும் உண்டு என்பதை இவ்வத்தியாயத்தில் 12   தலைப்புகளில்   பகவான்   நேரான   அம்சத்தாலும்,   எதிரான அம்சத்தாலும்,  அம்சத்தைக்  கடந்த  நிலையாலும்,  நிலையாலும் வர்ணிக்க  முடியாதபடியும்  கூறுகிறார்.

 

மௌனம்   *   செயல்

ஐக்கியம்      *       பிரிவினை

அமைதி     *   அசைவு

ஞானம்           *      அஞ்ஞானம்

அனந்தம்  *  அந்தம்

சக்தி                  *          இயலாமை

கடந்தது  *   காலம்

அன்பு    * வெறுப்பு

சத்தியம்      *   பொய்மை

அழகு        *     விகாரம்

நன்மை  *   தீமை

சந்தோஷம்      *      வலி,  துன்பம்

 

  • இந்த  வர்ணனையை  முடிவற்றது,  தீராதது  (endless,  boundless,finite, inexhaustible)  என அறிவதும் பிரம்மத்தை அறிவதாகாது.
  • எடுக்க   எடுக்கக்   குறையாது   பிரம்மம்,   அக்ஷயபாத்திரம்போல் என்றால்  புரியும்.
  • எவ்வளவு  சேர்த்தாலும்  வளராது  என்பது  அதேபோல்  எளிதில் புரியாது.
  • குறைய முடியாததும், வளர முடியாததுமானது பிரம்மம்.
  • குறைவதும், வளர்வதும் மனத்திற்குரிய நிலைகள். அதைக் கடந்த நிலையிது.
  • குறைவதும்,  வளர்வதும்  பகுதிக்குரிய  நிலைகள்.
  • குறை  நிறைவானது  பகுதி.
  • நிறை  குறைவாவது  பகுதி.
  • குறை நிறையானால் முழுமையல்லவா?  அது பகுதியின் முழுமை.
  • பிரம்மத்தின்  முழுமை  அசைவால்  மாறாதது. பிரம்மத்தின்  பகுதியே  முழுமை.

  

பிரம்மத்திற்கு பகுதி, முழுமை என்பவையில்லை. அவை குணங்கள். பிரம்மத்தை  பிரம்மம்  எனலாம்,  முழுமை  எனக்  கூற  முடியாது. அசைவால்,  அளவால்,  செயலால்,     குணத்தால்,  ரூபத்தால்  மாற முடியாதது  பிரம்மம்.  பிரம்மத்திற்குரியது  பிரம்மம்,  குணமல்ல.

  • இப்படி  பிரம்மத்தை  அறிவது  பிரம்ம  ஞானம்.
  • நாமே  இந்த  பிரம்மம்  என  அறிவது  சுயநினைவு.
  • இந்த   பிரம்மம்   அதன்   முன்   நிலையில்   ஆலகால   விஷமாக இருக்கிறது.
  • நானே அந்த விஷம், என்பதை ஏற்பதற்கு மனத்தில் உண்மையும், அடக்கமும், ஆன்ம விழிப்பும், பிரபஞ்சத்தை அறியும் திருஷ்டியும் வேண்டும்.
  • பிரம்மத்தை  அறிவது  பிரம்ம  ஞானம்.
  • பிரம்மத்தை  உணர்வது  பிரம்ம  ஆனந்தம்.
  • பிரம்மத்தை  பூவுலகில்  காண்பது  பிரம்ம  திருஷ்டி.
  • நாமே  பிரம்மம்  என  உணர்வது  பரிணாமத்திற்குரியது.
  • அந்த   பிரம்மத்தின்   முழுமையை   உலகில்   காண்பதுபோல் உள்ளத்தில்   கண்டால்,   முழுமையும்,   தீமை   முழுமையாகவும் இருக்கும்.
  • தீமை   விலக்கப்பட   வேண்டியதில்லை,   திருவுருமாற்றப்பட வேண்டியது.
  • திருவுருமாற்றம்  மனிதனுக்குரியதல்ல.  அன்னைக்குரியது.
  • அன்னையைத்  திருவுருமாற்ற  அழைப்பது  சரணாகதி.
  • சரணாகதி  அடக்கத்தால்  வருவது.
  • பிரம்மத்தின்  முழுமையை  அறிய  அடக்கம்  தேவை.
  • அதன்  முழுமை  மனதில்  எழ  மனம்  அடங்க  வேண்டும்.

  

  • பிரம்மம் ஆலகாலமாகக் காட்சியளிப்பதை ஏற்க, அறிய, அடக்கம் வேண்டும்.
  • நாமே  பிரம்மம்  என்றபின்,  அடக்கம்  பறந்து  போகும்.
  • நாமே  பிரம்மம்  என்ற  பின்  இருக்கும்  அடக்கம்,  அடக்கமாகும்.
  • சுயநினைவு  அடக்கத்திற்குரியது.
  • ஆலகாலமே  நான்  என  ஏற்பது  அடக்கம்.
  • அதை  என்னால்  திருவுருமாற்ற  முடியாது  என்பது  அடக்கம்.
  • அதை மாற்ற அன்னையை நான் அழைக்க முடியும் என்றவுடன் அடக்கம்  பறந்துபோகும்.
  • அழைத்தவுடன் அன்னை ஆலகாலமாக இருப்பதை அமிர்தமாக மாற்றுமுன்  நம்மை  அன்னையாக  மாற்றுகிறார்.
  • இந்த  மாற்றம்  அடக்கத்தைக்  கொடுக்காது.
  • அடக்கமிருந்தால்தான்  இம்மாற்றம்  நிலைக்கும்.
  • இம்மாற்றம்  நிலைக்கும்  மனநிலை  சரணாகதிக்குரியது.
  • இம்மாற்றம்   ஏற்பட   சரணாகதியை   ஏற்கும்   ஞானம்   முடிவான ஞானம்.
  • பிரம்மம்,  லீலை,  அசுரன்,  திருவுருமாற்றம்,  சரணாகதி  ஆகியவை அடக்கத்துள்  அடக்கம்.
  • ஸ்ரீ  அரவிந்தரிடம்  அந்த  அடக்கத்தை  அன்னை  கண்டார்.
  • மற்றவரிடம்  காணவில்லை.

அடக்கம்  பிரம்மத்தைக்  காட்டிசுயநினைவைக்  கொடுத்துஆலகாலத்தை

அமிர்தமாக  மாற்றும்  சரணாகதிக்கு  நம்மை  உரியவராக்கும்.

 

                                                                           ******

                                                                  விளக்கங்கள்

 

  1. சரணாகதி  முடிவான  பலனை  முதலிலேயே  தரும்.

 நாம்  ஒரு  செயலை  மனத்தால்  நினைத்து  பிறகு  அதை  கற்று உடலால்  செய்கிறோம்.  மனம்  நினைக்கிறது.  புத்தகம்  வாங்குவது எண்ணமாக   மனதில்   தோன்றுகிறது.   உடல்   கடைக்குப்   போய் வாங்குகிறது.  புத்தகத்தின்  மீதுள்ள  அக்கறை  கடைக்குப்  போகும் உற்சாகத்தைத்  தருகிறது.  இது  நாம்  செயல்படும்  முறை.

மனம் என் எண்ணத்தை உணர்வாலும், உடலாலும் நிறைவேற்றுவதை நான்  செயல்படும்  முறையாகக்  கொண்டுள்ளேன்.

சமர்ப்பணம்,  சரணாகதி  எனில்  மனத்தின்  எண்ணத்தை ஆன்மாவுக்கும்,  அன்னைக்கும்  தருகிறோம்.  மௌனமாக  ஆன்மா மனத்தின்    எண்ணத்தை    எடுத்து    அன்னையிடம்    தருவது சமர்ப்பணம்,   சரணாகதி.   அன்னையின்   சக்தி   சத்திய   ஜீவிய சக்தியாகும்.  உண்மையில்  அதையும்  கடந்ததாகும்.  அங்கு  காலம் இல்லை.  அது  காலத்தைக்  கடந்த  நிலை.  காலத்தைக்  கடந்த  சக்தி எண்ணத்தை ஏற்று செயல்படுவதால் முடிவான பலன் முதலிலேயே வருகிறது. கடைக்குப்   போகும்   முன்   அப்புத்தகம்   வீட்டிற்கு   வருவதைக் காண்கிறோம்.

 

2.அடக்கத்தால் சரணாகதி பலிக்கும், சரணாகதி அடக்கவுணர்வைத் தரும்.

 நமக்கு திறமையுள்ள காரியத்தை செய்யப் பிரியப்படுகிறோம். அதை   செய்யாமலிருக்க   முடியாது.   புதியதாக   பெற்ற   பயிற்சி எதுவானாலும்  அதைச்  செய்ய  கை  துடிக்கும்.  ஒருவர்  கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலை எவரும் சொல்லாதபொழுது அதைத் தெரிந்தவரால்  சொல்லாமலிருக்க  முடியாது.  மனம்  அடங்காது. தன்   திறமையை   சரணம்   செய்வது   அருளைப்   பொருளாக்கும் என்கிறார்   அன்னை.   சரணாகதிக்கு   அந்த   அடக்கம்   தேவை. இறைவன்  முன்  நாம்  துரும்பு  என்பதே  அடக்கவுணர்வு  என்பது அன்னை  விளக்கம்.  அந்த  அடக்கமில்லாமல்  சரணாகதியில்லை. இது   எவ்வளவு   சிரமம்   என்பதை   அறிய   வேண்டுமானால்,   ஓர் எண்ணம்   யார் கதவைத் தட்டுகிறார்கள் என அறியும் எண்ணம்   மனத்தில்  எழுந்தபொழுது  அதைச்  சரணம்  செய்ய  முயன்றால் சிரமம்   தெரியும்.   அதைச்  சரணம்  செய்வது  யோகத்தில்  முதல்  அடி எடுத்து  வைப்பதாகும்.

 3.மனம்  எதை  ஏற்கிறதோ  அதைத்  தரவல்லது  சரணாகதி.

நாம்  எதையும்  அதிக  சிந்தனையின்றி  செய்கிறோம்.  படிப்பு  எனில், நான்  SSLC   படித்திருக்கிறேன்.  15  வருஷமாயிற்று.  இனி எனக்கு  வராது  என்பவர் வராது என்பதை ஏற்கிறார். அவருக்கு அது    பலிக்கிறது.      Ph.D.    எடுத்துவிட    வேண்டும்    என நினைப்பவருக்கு  இது  பலிக்கிறது.

சிறிய  உத்தியோகம்,  பெரிய  செல்வம்,  கற்பனைக்கெட்டாத  பதவி ஆகியவற்றை எட்டியவர்களை நெருக்கமாகத் தெரியுமானால், அவர் மனம் ஏற்றது  அதனால்  அவருக்குப்  பலித்தது  என்பது  தெரியும்.

  • மனம்  ஏற்காவிட்டால்  நிச்சயமாகப்  பலிக்காது.
  • மனம்  ஏற்றதால்  மட்டும்  பலிப்பதில்லை.
  • மனம்   ஏற்றால்,   திறமைக்கும்,   அதிர்ஷ்டத்திற்கும்   ஏற்றவாறு பலிக்கும்.
  • அன்பரின் மனம் ஏற்றால் திறமையிருந்தால் நிச்சயமாகப் பலிக்கும். திறமை  இல்லாதவர்க்கும்  பலித்ததுண்டு.
  • ஒரு  காரியம்  பலிக்க  மனம்  ஏற்பது  அவசியம்.

இது   முதற்   பகுதி.   மனம்   ஏற்றுப்   பலிக்கும்   காலத்தில் அதற்குரிய     நேரத்தில்     பலிக்கும்.     மனம்     ஏற்றபின், சரணாகதியிருந்தால்  உடனே  பலிக்கும்.  எதுவானாலும்  பலிக்கும் என்பது    கவனிக்கத்தக்கது.    ஸ்ரீ    அரவிந்தர்    கேட்ட    வரம் அளிக்கப்பட்டதால்,   நாம்   கேட்பதெல்லாம்   அதற்கு   உட்பட்டது என்பதால்,  எதுவும்  பலிக்கும்.  உடனே  பலிக்கும்.

4.  திருவுருமாற்றத்தை  முதற்பலனாகத்  தருவது  சரணாகதி,  அது அடக்கத்திற்குரியது.   நாம்   நல்லது   வேண்டும்.   கெட்டது வேண்டாம்   என்கிறோம்.   ஒரு   நாணயத்தின்   தலை   மட்டும் வேண்டும்  என்றால்  நாணயமில்லை.  தங்க  சுரங்கத்தில்  தங்கம் கனிப்பொருளாக இருக்கிறது. கனிப்பொருளை சுத்தம் செய்து, உருக்கி    தங்கம்    பெறவேண்டும்.    தங்கம்    வேண்டும், கனிப்பொருள்   வேண்டாம்,   எனில்   தங்கமில்லை.   ஞானம், அஞ்ஞானமானதால்,  இனி  ஞானம்  அஞ்ஞானத்திலிருந்து  எழ வேண்டும்.  அஞ்ஞானத்தை  ஒதுக்கினால்  எதிலிருந்து  ஞானம் வரும்? ஞானம் வருவது தடைப்படும். ஏழ்மையை ஒதுக்கினால் செல்வம்     எப்படி     ஒதுக்கப்படும்   எனலாம்.     ஏழை பணக்காரனாகாவிட்டால்  நாடு  ஏழையாக  இருக்கும்.

5.  வளராத ஆன்மா, வளரும் ஆன்மாவாக  மாறியது.  அதுவே சைத்திய  புருஷன்.  சத்  என்ற  அகம்  சத்தியம்  என்ற  புறமான பொழுது    ஆன்மா    அவற்றிடையே    ஏற்பட்டது.    அந்த ஆன்மாவுக்கு   ஆதி,   அந்தம்,   மாற்றம்,   வளர்ச்சியில்லை என்பது இந்திய மரபு. பிறப்பிலேற்பட்ட புத்தி வளராது, கர்மம் அனுபவிக்கப்பட    வேண்டியது    போன்றவை    இவை. சச்சிதானந்தம்   உலகமாக   மாறி,   பரிணாமத்தால்   மீண்டும் சச்சிதானந்தமாகும்பொழுது   ஆனந்தம்   வளர்கிறது   (Bliss becomes Delight) ஆன்மா வளர்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சத்,    சித்,    ஆனந்தம்    மூன்றும்    முதலிலிருந்ததைவிட உயர்ந்ததாகின்றன.  சிருஷ்டி,  பரிணாமம்  என்ற  பாதைகளில் சென்ற   பின்   வளர்ச்சியுண்டு.   பரிணாமத்தைப்   பற்றி   மரபு பேசுவதால்  அவர்கள்  வளராது  என்றனர். பிரம்மம்   எண்ணத்தால்   உலகை   சிருஷ்டித்தது   என்பதால் எண்ணம்  பிரம்மத்தை  எட்டும்  என்கிறார்.

 

5.எண்ணமே கெட்டது  என்கிறார்  அன்னை.

 உடல்   இருளாலானது.   இருள்   தீமை.   எண்ணம்   உடலில் எழுவதால்  அது  இருளின்  வெளிப்பாடு.  அதனால்  எண்ணமே தீமை  என்கிறார்.  அத்துடன்  எண்ணம்  பிரம்மத்தை  எட்டும் என   மரபுக்கு   எதிராகவும்   பேசுகிறார்.   சிருஷ்டியில்   இரு அம்சங்களுண்டு.

  • சத்திய ஜீவியம் சத் என்பதன் எண்ணத்தால் (Real Idea)   உலகை சிருஷ்டித்தது.
  • பிரம்மம்  தன்  எண்ணத்தால்,  இச்சையால்  உலகை  சிருஷ்டித்தது என்கிறார்  (Self-Conception). 
  1. குறைய  முடியாததும்வளர  முடியாததும்  பிரம்மம்.

 குறைய முடியாதது பிரம்மம் என்பதை அக்ஷய பாத்திரம் மூலம் அறியலாம்.   வளர   முடியாது   என்றால்   எப்படிப்   புரியும். பூவுலகம்   சலனத்திற்கு   உட்பட்டது.   அது   சலனத்தால்  எடுப்பதால்      குறையும்,   நிறையும்.   பிரம்மம்   சலனத்தால் பாதிக்கப்படாதது என்பதால் குறைவும், நிறைவும் அதற்கில்லை. பொருத்தமான உதாரணம் சொல்வது சிரமம். மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் போன்றவர்களை உலகம் தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.    குறை    சொல்வதால்    அவர்கள்    குறையப் போவதில்லை. நோபல் பரிசால் உயரப் போவதில்லை. அவர்கள் மனித நிலையைக் கடந்தவர் என்பதுபோல், பிரம்மம் மனித நிலையைக் கடந்தது.  பிரம்மம் குறையாது, வளராது என்ற கருத்தை மனம் கணிதத்தில் ஏற்பதுபோல் ஏற்க வேண்டும். மேலும் ஜடத்திலும் அதை ஏற்பது அவசியம். முக்கியமாகப் பணம் செலவு செய்தால் பெருகும் என்ற சொந்த அனுபவம் பிரம்மத்தை ஜடத்தில் அறிய உதவும்.  பணம்  செலவு  செய்தால்  பெருகும்  என்ற  அனுபவம்  தருவது பணமில்லை, பிரம்மம். பிரம்மத்தை மனிதன் திட்டவட்டமாக, தெளிவாக, ஐயம்  திரிபு  அற  ஜடத்தில்  அறிவதற்கு  இவ்வனுபவம்  உதவும்.

                                              பெருகும்  பணம்  பிரம்ம  சித்தி.

 

******



book | by Dr. Radut