Skip to Content

ஆத்மாவின் இரு முனைகள்

 

  • மனிதனுடைய   ஆயுள்   முடிய   அவனுடைய   சம்மதம்   தேவை. மனிதனாகிய ஜீவாத்மா முடிவு செய்யாமல் உயிர் உடலை விட்டுப் பிரியாது  என்கிறார்  ஸ்ரீ  அரவிந்தர்.
  • மேலும்  பரமாத்மாவின்  உத்தரவும்  தேவை.
  • பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சம்மதிக்காமல் உயிர் உடலை விட்டுப் போகாது.
  • எந்த  சிறு  காரியத்திற்கும்  பிரபஞ்ச  சட்டம்  இதுவே.
  • ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஆத்மாவின் இருமுனைகள் என்பதால் ஒன்று  சம்மதப்பட்டால்  இரண்டும்  சம்மதப்படுவதாக  அர்த்தம்.
  • உலகிலும்,  பிரபஞ்சத்திலும்  உயிருடையது  ஆத்மா  மட்டுமே.
  • மற்ற  அனைத்தும்  ஆத்மாவுடன்  தொடர்பு  கொள்வதால்  உயிர் பெறுகின்றன.
  • ஆத்மாவின்  ஒரு  முனை  பிரம்மம்.  அடுத்த  முனை  வாழ்வு.
  • ஆத்மா  அறிவாலும்,  அறிவின்  திறனாலும்  செயல்படுகிறது.
  • பிரம்மமே  முதல்,  அதுவே  முடிவு  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்.
  • மேலிருந்து  கீழே  வருவது  சிருஷ்டி,  கீழிருந்து  மேலே  போவது பரிணாமம்.
  • இவற்றிடையே வீச்சுடனிருக்கின்றன. ஆயிரம் இடங்கள் அனந்தமான வலது  பக்கம்  போவது  சமூகத்தில்  சிறப்புடன்  வாழ்வது. 
  • மனிதன்   தானுள்ள   இடத்திலிருந்து   மேலே   போகலாம்,   கீழே போகலாம்,  வலது  பக்கமோ,  இடது  பக்கமோ,  எந்த  பக்கமோ முடிவில்லாமல்  போகலாம்.
  • இது  பிரம்மத்தின்  சுதந்திரம்,  மனிதன்  பிரம்மம்  என்பதால்  அவன் பெற்ற  சுதந்திரம்.
  • தவம்,   துறவறம்,   மோட்சம்   மேலே   போவது.   உள்ளதுபோய் சீரழிந்து அவல வாழ்வில் ஒதுக்கப்பட்டு ஜடமாவது கீழே போவது, இடது பக்கம்  போவது  சமூகத்தில்  தவறான  செல்வத்துடன்  வாழ்வது. இதுபோல்  மனிதனுக்குரிய  பாதைகள்  முடிவற்றவை.
  • உள்ளே  போய்  மேலே  போவது  பரிணாமம்.  சத்திய  ஜீவனாவது.
  • ஆண்டவனும்,. அன்னையும் மனிதன் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை
  • ஆத்மா  அறிவால்  உணர்ந்து  திறனால்  செயல்பட்டால்  எதையும் சாதிக்கும்.
  • உணர்வது  அருள்,  செயல்படுவது  சாதனை.
  • அருள்  தன்னை  அன்னையாக  நாடுவதை  அறிவது  பேரருள்.
  • நல்லவனும்,       கெட்டவனும்,       தோல்வியடைபவனும், வெற்றியடைந்தவனும்,  தன்  இச்சைப்படியே  சாதிக்கிறான்.
  • மறைந்த   பிரம்மம்   மறந்தது   ஜடம்.   நினைவுபடுத்துவது   அருள். ஏற்பது  அறிவு.  நடப்பது  யோகம்.
  • ஆத்மா  அசைந்தால்  அனைத்தும்  அசையும்.
  • ஆத்மா  அசைக்காதது  இல்லை.
  • ஆத்மா  அறிவால்  எதையும்  அசைக்கும்.

மனிதன் விரும்பினால் எதையும் சாதிப்பான் என்பது ஆத்மாவின் தத்துவம்.

******



book | by Dr. Radut