Skip to Content

அகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா

 

நான்குடும்பம்ஊர்

  • இவை  மூன்றும்  ஒன்றே.  ஒன்றின்  மூன்று  பகுதிகளாகும்.  எதை நாம் நாமாகக் கருதினாலும் கருதலாம். ஆனால் எதுவும் பிரிந்து போகாது.
  • பொதுவாக மனிதன் சுயநலம், 'நான்' என்றே வாழ்வான். அவன் கோணத்திலே   குடும்பத்தையும்,   ஊரையும்   கவனிப்பான். குடும்பமும், ஊரும் தனக்குச் சேவை செய்ய வேண்டுமென முழு மூச்சுடன்  வேலை  செய்வான்.
  • நேரம்  வரும்பொழுது  குடும்பத்திற்குப்  பணிவான்.  பெரிய  நேரம் வந்தால்      ஊரை      மீற      முடியாது.      ஊர்      என்பது ஜாதியாகவுமிருக்கும்.
  • ஊர்   நிர்ப்பந்தப்படுத்தாத   நேரம்,   குடும்பம்   கண்டுகொள்ளாத நேரம்,  தன்  சுயநலத்தின்  சுயரூபமாக  ஊர்வலம்  வருவான்.
  • அகந்தை  என்பது  ஜீவாத்மா.  ஜீவாத்மா  என்பது  பிரபஞ்சத்தின் ஆத்மா.  அதுவே  பரமாத்மா  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்.
  • மனிதனுக்கு   ஜீவாத்மா   என்று   ஒன்றிருப்பதே   தெரியாது. மனிதனாகவோ,   அகந்தையாகவே   வாழ்பவன்   அகந்தையை இழந்து  ஜீவாத்மாவாகிறான்.
  • ஜீவாத்மா   என்று   தன்னையறிந்து   ஜீவன்   முக்தனானாலும், அவனுக்குப்   பிரபஞ்சம்   நினைவு   வருவதில்லை.   பிரபஞ்சம் வழியாகவே, தான் அகங்காரமானதையும் நினைப்பதில்லை. தன் ஆத்மாவுக்கு  மோட்சம்  தேடி  பரமாத்மாவை  அடைகிறான்.
  • சிருஷ்டியில்    பரமாத்மா,    பிரபஞ்சமாகி,    அகந்தையான ஜீவாத்மாவாகிறது.
  • தன்னைக்  குடும்பத்திலிழந்தவன்  நல்லவன்.
  • தன்னையும்   தன்   குடும்பத்தையும்   ஊரில்   இணைத்தவன் ஊருக்குப்  பெரியவன்.
  • அவன் ஊரை ஆள்வான். நல்லவனாக இருப்பான். ஊர் அவன் ஆள்வதை  நாடும்,  விரும்பும்.
  • அகந்தை  அழிந்தால்  ஜீவாத்மாவாகிறது.  ஜீவாத்மா  தன்னைப் பிரபஞ்சத்தின்   ஆத்மாவாகப்   புறத்திலும்,   அகத்திலும்   கண்டு, அதன்  மையத்தில்  பரமாத்மாவைக்  காண்கிறது.
  • மனிதன்   சுயநலமின்றி   குடும்பத்திற்கு   உழைப்பதும்,   தானும், தன்  குடும்பமும்  ஊருக்குச்  சேவை  செய்யும்பொழுது  அதைவிட தனக்குத்   தான்   செய்யும்   பெரிய   சேவையில்லை   என்பது தெரிகிறது.
  • அகந்தை  ஜீவாத்மா  பரமாத்மா  ஜீவாத்மாவினுள் பரமாத்மா என்ற  கட்டங்கள்  பரிணாமத்திற்குரியவை.
  • அவை  சுயநலமற்றவை.
  • ஜீவாத்மா   தான்   மட்டும்   மோட்சம்   பெறுவது   அதன்   கடைசி சுயநலம்  என்கிறார்  பகவான்.
  • ஈஸ்வரன்   எல்லாக்   காரியங்களும்   அவனிஷ்டப்படி   நடக்க வேண்டும்   என்பதால்   அவனே   பெரிய   சுயநலமி.   அதனால் சுயநலத்தை  நாம்  கண்டிக்க  முடியாது  என்கிறார்.

******



book | by Dr. Radut