Skip to Content

பணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம்

 

  • மனிதன்   கெட்டதிலிருந்து   நல்லதிற்கு   மாற   முயல்வதால், கடவுளை  நல்லவர்  எனக்  கருத  வேண்டி,  கடவுளை  நல்லவராக மட்டும்  வரிக்கிறான்.
  • கடவுளால்  கெட்டவராக  இருக்க  முடியாது  என  நினைக்கிறான்.
  • அவருக்கு அத்திறமையை மறுக்கும் உரிமை மனிதனுக்கில்லை.
  • நல்லதும்,  கெட்டதும்  சேர்ந்ததே  கடவுள்  என  நினைக்க  அவன் மனம்  இடம்  தரவில்லை.
  • கடவுள்தான்    அரிச்சந்திரனையும்,    நல்லதங்கையையும், திரௌபதியையும்,   கண்ணகியையும்   கொடுமைப்படுத்தியவர் என்பதை  மனம்  மறந்துவிடுகிறது.
  • கடவுளால் கெட்டவராக இருக்க முடியாது என்று கொள்வதற்குப் பதிலாக,   கெட்டது   கடவுளுக்கில்லை   எனக்   கூறும்   உரிமை நமக்கில்லை,  கெட்டது  கடவுளிடம்  நல்லதாகும்  என்று  அறியும்  ஞானம் நமக்கு  வேண்டும்.  அது  பிரம்ம  ஞானம்.
  • ஒரு நிமிஷமும் நம்மால் கெட்டதை விலக்கி உயிர் வாழ முடியாது. நடைமுறையில் ஆசைப்பட்டும், பயந்தும், தெரியாமலும் ஏற்பதை ஆசையின்றி,  தைரியமாய்,  முழு  அறிவுடன்  ஏற்பது  பிரம்மத்தை வாழ்வில்  அறிவதாகும்.  அதற்கு  அதிர்ஷ்டம்  எனப்  பெயர்.  நாம் காணும்  அதிர்ஷ்டம்  என்பது  ஒரு  (vibration) வகை.  இது எல்லா  வகைகளிலும்    அதிர்ஷ்டமாவது,    அன்னையின் அதிர்ஷ்டம்  எனப்படும்.
  • பணம்  எந்த  வகையாகச்  சம்பாதிக்கப்பட்டிருந்தாலும்,  மனிதன் அதன்   பெருமைக்குக்   கட்டுப்படுகிறான்.   எப்படி   வந்தாலும் ஏற்கிறான்.  புருஷன்  எவ்வளவு  துரோகம்  செய்தாலும்  மனைவி அவனை   ஏற்கிறாள்.   இப்பொழுது   புருஷனுக்கும்   அந்நிலை வருகிறது.  தவறு  செய்வதாலோ,  துரோகம்  செய்வதாலோ,  மகனை, மனைவியை,  பெற்றோரை,  மனிதன்  விட  முடியாது  என்பது  தெரியும். அது பிரம்ம நிர்ப்பந்தம். நாம் கைவிட்டாலும் சந்தர்ப்பம் வலியுறுத்தும். கட்டாயத்திற்காக  ஏற்பதை,  தெளிவால்  ஏற்பது  பிரம்ம  ஞானம்.  அது அன்னையின்  அதிர்ஷ்டம்.
  • நாமே விலகக் கூடாது. விலகுவதை இழுத்துப் பிடிக்கக் கூடாது.
  • மனம்  தெளிவு  பெற  வேண்டும்.  குறையேயில்லை.  இருந்தால் அது நம் மனத்திற்குரியது என மனக் குறையைக் களைந்தால், தவறு   விலகும்,   துரோகம்   விலகும்,   திரும்பி   வந்தால்   மனம் தூய்மையானால்,  மாறியிருக்கும்,  விலகிய  தவறும்,  துரோகமும் அழியும்.
  • உன்  மனம்  திருவுருமாறினால்  உலகம்  திருவுருமாறும்.
  • உன் மனம் மாறிய பின் மாறாத துரோகம் உன்னைப் பாதிக்காது.
  • ஆசையின்றி சம்பாதித்தால் அளவு கடந்து சம்பாதிக்கலாம். அது சேவைக்கு.
  • பயமின்றி  அதிகாரத்தை  ஏற்றால்  அதிகாரம்  அன்பாக  மாறும்.

******



book | by Dr. Radut