Skip to Content

ஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்

 

அன்னை தரிசனம் சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கும் நெகிழ்ந்த பக்தி மேலிடுவோர்க்கும்  மனம்  நிறைந்த நேரம்   அன்னை   அகக்காட்சியில் தரிசனம்    தருவார்.அன்னை தரிசனம் ஆத்ம விமோசனம்.

  • இவை வெறும் படங்களில்லை, "உயிருடன் நாங்கள்  அவற்றுள் இருக்கிறோம்''  என்று  அன்னை கூறியுள்ளார்.
  • நெகிழ்ந்த நேரம் படம் உயிர் பெறுவதைக்  காணலாம்.
  • ஆயுள் முடிந்துவிட்டது என ஜோஸ்யன் விமான பைலட்டிற்கு சொன்னபின் லீவு முடிந்து அஷ்டமி  நவமியில் மீண்டும் வேலையில்  சேரப்  பயப்பட்டவர், முன்வாரம் கேள்விப்பட்ட அன்னையின்  படத்தை எடுத்துக்   கொண்டு   விமானம் ஓட்டியபொழுது தரையில் விமானம்   இறங்க   முடியாமல் சக்கரங்கள்  சிக்கிக்  கொண்டன. தரையில்  தீ  அணைக்கும்  படை விமானத்தை   எதிர்   கொண்ட நேரம்,  நிலை  தவறிய  விமானம் நிலையத்தின்   மரத்தில்   மோதி சக்கரங்கள் வெளிவந்து ஆபத்து விலகிய    நிகழ்ச்சி அன்னை   படத்தின்   சக்தியை விளக்கும்.
  • படங்கள் தூய்மையாக வைக்கப்பட்ட வீட்டில் ஊதுவத்தி கொளுத்தாத பொழுது   ஊதுவத்தி மணம் எழுந்தது.
  • பெரிய படங்களுக்கு சிறிய படங்களை  விட  சக்தி  அதிகம் என்பது   அனுபவம்.   ஆனால் படங்களில்    சக்தி    அளவைப் பொருத்ததில்லை. சக்தி படத்திலில்லை.  படத்தை  ஏற்ற மனத்தில் உள்ளது. மனம் அன்னையை ஆர்வமாக ஏற்றால்  படமே  தேவையில்லை என்ற தத்துவம் உண்மை. படத்தின்  அளவு  பெரியதானால் சக்தி அதிகம் அன்பர்கட்கு உண்மை. என்பது நடைமுறை
  •  படங்களை  எடுத்துப்  போகும் பொழுது  பஸ்ஸானாலும்,  ரயில், காரானாலும்  எதிரிலுள்ள டிராபிக்கில்   அமைதி   தழுவுவதைக்  காணலாம்.
  • பீச், பார்க்,திருவிழா,சந்தை, சந்தடியான இடங்களிலும் படங்கள் வந்தால்   மௌனம், அமைதி நிலவுவதைக் காணலாம்.
  • மௌனமும், அமைதியும் இறைவனாகும்.

"மானிடன் தேவரின் மேலெனச் செய்தான்''

இறைவனுக்கு  மனிதன்  முக்கியம்,  மனிதன்  இறைவனை  அதுபோல் கருதுவதில்லை.   பூமாதேவியின்   யோகத்தை   செய்ய   வந்த   அன்னை, எளிய   மனிதனின்   அபயக்குரலைக்   கேட்டு   பதிலளிப்பார்.   1914-இல் அன்னை  பிரான்சில்  ஒரு  கிராமத்திலிருந்தபொழுது  "உலகெங்கிருந்தும் அபயக்குரல்  எழுந்து  என்னை  வந்தடையும்.  நான்  அவர்கட்கு  ஆறுதல் அனுப்புவேன்''  என்றார்.  அவர்  வேலையாக  இருக்கும்போது  அத்தகைய குரலுக்கு  அவரைச்  சுற்றிய  சூழலே  பதில்  தரும்.  வேலையை  நிறுத்தி அவரும்  குரலைக்  கேட்டு  பதில்  சொல்வதுண்டு.

ஒரு  நாள்  டென்னிஸ்  முடிந்தவுடன்  அன்னை  வழக்கத்திற்கு  மாறாக 8மைல்   தூரத்திலுள்ள எஸ்டேட்டுக்குப் போக வேண்டும் என்றார்.உடனுள்ளவர்   காரணத்தை அறியவில்லை. போனவர் காரிலிருந்து இறங்கி  வேகமாக  நடந்து  எங்கு  போகிறார்  என்று  தெரியாமல்  போனார். தூரத்திலிருந்து  ஓர்  வயதான  பெண்மணி  அன்னையை  நோக்கி  வந்தார். அன்னை   அவரைக்   கண்டு   நின்றார்.   அப்பெண்மணி,   "உங்களைக் காண   என்   மனம்   துடித்தது,   கண்டு   விட்டேன்'',   என்றார்.   அன்னை அவர்  தமிழில்  கூறியதைப்  புரிந்து  கொண்டு,  விரைவாகத்  திரும்பினார்.

கிழவியின் ஆத்மா கொடுத்த குரலைக் கேட்டு அன்னை அங்கு போய்  அதை    ஏற்றார். தெய்வத்தை  அழைக்கும்  மனிதன் அன்னைக்கு தேவரை விட   உயர்ந்தவர்



book | by Dr. Radut