Skip to Content

அருளின் அற்புதம்

 

நம்மால்  முடிந்த  காரியங்களை நாமே செய்து விடுகிறோம். முடியாதவற்றிற்குப்   பிரார்த்தனை செய்கிறோம். பிரார்த்தனையை மேற்கொள்ளும்பொழுது இக்காரியம் நம்மால் முடியாவிட்டால் பிறர் பலருக்கு நடந்திருப்பதால் பிரார்த்தனை    செய்கிறோம். சித்திரை கத்திரியில் மழை பெய்து பயிர் காப்பாற்றப்பட    வேண்டுமானால் மனம் இது நடக்காது என்பதால், அப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்வதில்லை.  தாயார்  அன்பற்றவரானால்,  குழந்தை  சுருங்கி  வாடுமே தவிர  கடவுளைக்  கேட்பதில்லை.

எவரும் கேட்கச் சொல்வதில்லை.ஏனெனில் இது சுபாவம் மாறாது எனத் தெரியும். அடாவடிக்காரனிடம் பணம் கொடுத்தவன் பிரார்த்திப்பதில்லை,குறி   கேட்பான். "இது வராது'' என பதில் வரும். அத்துடன் அது முடியும்.அதுபோல்   உலகில் எவருக்கும்  நடைபெறாதவற்றிற்காக பிரார்த்திப்பதில்லை.அது போன்றவை    பிரார்த்தனையால் பலித்ததையும்,  பிரார்த்தனை  இல்லாமல் பலித்தவற்றையும்  "அன்னையின் தரிசனம்'',"எல்லாம் தரும் அன்னை'' என்ற   புத்தகங்களில் விவரமாக எழுதியுள்ளேன்.

அந்நிகழ்ச்சிகள் பலவற்றையும் அதே போன்ற வேறுசிலவற்றையும் கீழே  குறிப்பிட்டுள்ளேன்.

 1. ஸ்ரீ  அரவிந்தர்  பரிச்சயமில்லாத எளிய  பக்தரின்  கடிதத்திற்காக ஆவலாகக்  காத்திருந்தது.
 2. அன்னையைத் தரிசித்து மெய்மறந்து கையில் இருந்தகாணிக்கையைக் கொடுக்க மறந்த  பக்தரின்  கையிலிருந்து அன்னையே   காணிக்கையை எடுத்துக்  கொண்டது.
 3. தம்  வீட்டில் கல் விழ மந்திரம் செய்தவன் அதனால் உயிர் பிரிய வேண்டிய நேரத்தில் பகவான் அவன் உயிரைக் காப்பாற்றியது.
 4. சோகமே உருவானவர் மனத்தில் முதல் தரிசனம் சோகம் ஆனந்தமாக  மாறி மனம் துள்ளியது.
 5. எளிய  பக்தனின் தேவைக்காக நாட்டு சட்டம் மாறியது.
 6. போகுமிடமெல்லாம் அன்னை நல்லவர் உருவத்தில் நம்மை எதிர்கொண்டது.
 7.  பாஷை தெரியாத இமயமலை அடிவாரத்தில் வழிதவறிய தமிழ்ப்   பெண்மணிக்கு பிரார்த்தனைகள்  அனைத்தும்  தவறிய பொழுது, "அன்னை   என்கிறார்களே, அவராவது என்னைக் காப்பாற்றக்கூடாதா?'' என்றவருக்கு   தமிழ் குரல் கேட்டு அவரைக் காப்பாற்றி தம் மக்களுடன்  சேர்த்தது.
 8. பக்தருக்கு ஆபத்து ஏற்படுத்தியவர்கட்கு பக்தருக்கு எதுவும் தெரியாமல்,   ஆபத்து கொடுத்தவர்  மீது  திரும்பியது.
 9. பிரார்த்தனையால் அக்னி நட்சத்திரத்தில் பெருமழை பெய்து பயிரைக்   காப்பாற்றியது.
 10. வியாபார நிமித்தமாக 8000/-  ரூபாய்க்கு  செய்த  வேலையை சேவை என    அறியாதவர் தொழில் 28லட்சத்திலிருந்து 1200  கோடியானது.
 11. அறிவுடைய உழைப்புக்கு தொழில் 365 மடங்கு பெருகியது.
 12. பொற்கிழியை எவரும் அறியாமல் ஏற்பாடு செய்த பொழுது, 24 மடங்கு பெருகியது.
 13. மார்க்கெட் நம்மை நாடி வருவது.
 14. பணம் நம்மைத் தேடி வருவது.
 15. அறிவில்லாத   காரியங்களை ஆர்வமாகச் செய்யும் சுபாவமுடையவர்  தம்  கை  முதலை அதுபோல்  இழந்தபொழுது  3 முறை  காப்பாற்றியது.
 16. தன்னை அறியாமல்  செய்த சேவையால் விலை போகாத பொருள் 8   மடங்கு விலை போனது.
 17. தான் செய்வது  சேவை என உணராதவர் உணர்ந்து பிரார்த்தனை   செய்தபொழுது 20 ஆண்டுகட்கு  முன்  இழந்த சொத்து  திரும்பி  வந்தது. 
 18. அன்னை  நிழலின் சாயல் தற்செயலாய் வந்தவர்க்கு   25 ஆண்டுகட்கு    முன் செய்த சேவைக்கு  விருது  வந்தது.
 19. மந்திரி   முயன்று   கிடைக்காத வேலை   சேவையை   கசப்பாக ஏற்றவர்க்குக்  கிடைத்தது.
 20. தாயார்   தர   மறுத்த   அன்பை குழந்தைக்கு அபரிமிதமாக ஆசிரியர்கள்  தந்தது.
 21. கருத்த  விகாரமான  முகம்  Life Divine படிப்பதால் கருமை நீங்கி, அழகு பெற்று   சிறந்த அழகெனக் கொண்டாடப்பட்டது.
 22. கடலில் மூழ்கும் அன்பர் அன்னையை அழைக்க மறந்தபொழுது,   அன்னையே உள்ளிருந்து   குரல்   கொடுத்து உயிரைக்  காப்பாற்றியது.
 23. ஆபத்தில் அன்னையை மறந்து  அலறியவர்  குரலுக்கு பதிலாக உயிரைக்   காப்பாற்றியது.
 24. அன்னையை அறியாதவர் பென்சிலின் ஷாக் பெற்று உயிர் போனபின் அவர் மன உறுதிக்கு பலன்தர  அன்னை  சக்தி  அவர் உயிரைக்  காப்பாற்றியது.
 25. சர்க்காருக்கு  தபால்  எழுதிய விண்ணப்பத்திற்கு பதிலாக தந்தி மூலம்   சர்க்கார் சொத்தைக் காப்பாற்றியது.
 26. பாஸ் செய்தால் 70 ரூபாய் சம்பளத்தில் வேலைத் தருவதாகக்   கூறிய   பிரமுகர் பையன்  பெயிலானபின் தரிசனத்தால்  ரூ.250/-இல் வேலைப்  பெற்றுத்  தந்தது.
 27. அடாவடிக்காரன் பணத்தை தானே  திருப்பிக்  கொடுத்தது.
 28. வீட்டிற்கு வந்த அமீனா  ஜப்தி செய்யாமல்  போனது.
 29. ஓராண்டில் தொழில் 15 மடங்கு  பெருகியது.
 30. 6 மாதத்தில் இலாபம் 10 மடங்கானது.book | by Dr. Radut