Skip to Content

அன்னை தரும் ஆன்மீகக் கல்வி

 

50 ஆண்டுகட்கு முன் அன்னை பள்ளி ஆரம்பித்தார். வாழ்வில் ஜெயிப்பதெப்படி என்ற ஆன்மீக   ஞானம்   பெறுமிடமாக இது   அமைய   அன்னை   விரும்பினார்.    இங்கு  ஆண்டுதோறும் பரீட்சையில்லை.  முடிவாக  பட்டமோ, சர்ட்டிபிகேட்டோ    தருவதில்லை.தங்கள் ஆசிரியர்களை மாணவர்களே தேர்ந்தெடுத்துக்  கொள்வார்கள்.  ஆசிரியர்களை  மாணவர்கள் பெயரிட்டு  அழைப்பார்கள்.  கேள்வி கேட்டால்    மாணவர்களை    உட்கார்ந்தே  பதில் சொல்லச் சொல்வார்கள்.  இப்பள்ளியைப்  பற்றி டி.வி.யில்  பேசிய  பொழுது  நேர்முகத் தேர்வில்   கேட்டவர்,   "நம் பள்ளிகளில்  சரித்திரம்,  கணக்கு  போன்ற பாடங்களைச் சொல்லித் தருகிறோம்,    ஆன்மீக  ஞானம் என இப்பள்ளியில் என்ன   சொல்லிக் கொடுக்கிறார்கள்''  எனக்  கேட்டார்.

இப்பள்ளியில் அன்னை,    ஸ்ரீ அரவிந்தர்  நூல்களை  முக்கியமான பாடமாக  வைத்துள்ளனர்.  ஆனால் நம்  பள்ளிகளில்  உள்ள  சரித்திரம், கணக்கு போன்ற       எல்லா பாடங்களையும்   போதிக்கின்றனர். போதிக்கும் முறை வேறு. நாம் பூகோளம்,   சரித்திரம்   பயின்றால், அந்த   விவரங்களை   அறிகிறோம். இப்பள்ளியில் இப்பாடங்கள் மூலமாக  மாணவனின்  மனம்  தயார் செய்யப்படுகிறது. வாழ்வில் தோல்வியில்லாமலிருக்க  இப்பாடங்கள் மாணவனைத் தயார் செய்கின்றன.

50 ஆண்டுகளாக இப்பள்ளியிலிருந்து வெவந்த மாணவர்கள் நாடெங்கும்,  உலகெங்கும்  பரவியுள்ளனர். சென்ற இடம் எல்லாம் அவர்கள்  சிறப்பாக,  முதன்மையாக இன்றுவரை  விளங்குகின்றனர். என்னுடைய  மகன்கட்கு  இங்கு இடம் கிடைக்கவில்லை, மகளுக்குக் கிடைத்தது.

அரசவனங்காடு

ஆடிட்டர்  கணவனும்,கல்லூரி ஆசிரியர் மனைவியும் தாங்கள் சொந்தமாக சம்பாதித்து இலவசமாக அமெரிக்க முறையைப் பின்பற்றி கிராமத்தில்  ஏழைக்  குழந்தைகட்கு பாடம்  சொல்லிக்  கொடுக்க  முடிவு செய்தனர்.இவர்கள்    இலட்சியவாதிகள். அன்னையை அறிந்து அன்னை முறையில் கல்வி பயிற்றுவிக்க முடிவு செய்தனர்.

இப்பள்ளி அரசவனங்காடு என்ற இடத்தில் 5 ஆண்டுகளாக நடக்கின்றது.    இவர்கள் முறை அமெரிக்க  முறை.அமெரிக்க முறை எனில் அமெரிக்காவில்  ஒருவர்  40 வருஷமாக நடத்தும் முறை. ஆனால் அந்நாட்டிலும்   இன்னும்   பரவாத முறை. இப்பள்ளியின் சாதனைகளைக்  கீழே  எழுதுகிறேன்.

 • முக்கியமாகக் கருதுவது உடல் நலம்,குழந்தையின் சந்தோஷம்.
 • இன்று 36 குழந்தைகள் மொத்தமாக  உள்ளனர்.
 • 3 வயதிலும், 5 வயதிலும் குழந்தைகள்  சேர்ந்தனர்.
 • எந்தப் புத்தகத்தை குழந்தை பார்த்தாலும்,படிக்க முயலாமல் தாண்டிப்  போகாது.
 • ஆங்கிலம்,தமிழ் சரளமாகப் படிப்பார்கள்.
 • 9-ஆம் வகுப்பு  பாட புத்தகங்களை  இவர்கள் படித்தால் நன்றாகப் புரிகிறது என்கின்றனர்.
 • 8-ஆம் வகுப்பு கணக்கு போட முடிகிறது.
 • 6 வயது குழந்தைகள் சுபா, பிரவின்,  5-ஆம் வகுப்பு பாடங்களைப்  படிக்கின்றனர்.
 • ஈ.எஸ்.எல்.சி.பரிட்சைக்கு சில குழந்தைகள்  தயாராகின்றனர்.
 • இந்த வயதிலும் கிரிக்கட், வாலிபால்,கபடி விளையாடுகின்றனர்.
 • போட்டிகளில் ஏமாற்ற குழந்தைகள்  முயல்வதில்லை.
 • 10  வயது  மணி,  குழந்தைகளுக்கான   Encyclopedia in  Englishயை புரிந்து ரசித்துப் படிக்கிறான்.

நிரூபமா

ஆடிட்டரும்,ஆசிரியரும்  எப்படி இம்முறைகளைக் கண்டனர்?

 அமெரிக்க கிளென் டோமான் எழுதிய புத்தகங்களைப் படித்து தங்கள்  பெண்  குழந்தைக்கு  2-ஆம் வயதில் பாடம்  இம்முறையில் பயிற்றுவித்தனர்.    நிரூபமாவுக்கு இன்று  வயது  11.

 • இரண்டாம்  வயதில்  தினமும்  20 சொற்கள் flash cards மூலம் பயிற்றுவித்தனர்.
 • தினமும்  2  மணி  படிப்பு.
 • வாரம் 1 புத்தகம் முடிப்போம்.
 • கிருஷ்ணா, ஹனுமான் கதைகளை  விஞ்ஞானத்துடன் கலந்து  போதித்தோம்.
 • 4-ஆம்   வயதில் நாராயணியம் என்ற நூலை ஆங்கிலத்தில் பயில  ஆரம்பித்தாள்.
 • கே.எம்  முன்ஷியின்  கிருஷ்ணாவதாரம் முதல் புத்தகம் படித்தாள்.
 • 5-ஆம்  வயதில்  அவர்கள் வசித்த பகுதியில் பம்பாயில் கலவரம்.
 • நேருவின் Discovery of India-வின் சில பகுதிகளை  வாசித்துக் காட்டினோம்.
 • பாரதி,இக்பால்,தாகூர்,சரோஜினி நாயுடு, பங்கிம் ஆகியவர் இலட்சியங்களைப் படித்துக்  காட்டினோம்.
 • அத்வைதத்தின்    அடிப்படைகளைக்  கூறினோம்.
 • 6-ஆம்  வயதில்  கும்பகோணம் அருகிலுள்ள அரசவனங்காட்டிற்கு  வந்தோம்.
 • ஆங்கிலம், தமிழ்,   இந்தியில் நிரூபமா பாடல்களை எழுதி தானே  பாடுவாள்.
 • வாரத்தில்   4   நாள்   தினமும் 2 மணி  எல்லாப்  பாடங்களையும் பயில்வாள்.
 • ஆங்கிலப் பத்திரிகைகள் பலவற்றை    11-ஆம்    வயதில் ஏராளமான        ஆர்வமாகப் படிக்கிறாள்.  (Chess,Astronomy,Cricket,Architecture Journals in English).
 • சகஸ்ரநாமம்,அஷ்டோத்திரம் மனப்பாடம்  செய்தாள்.
 • 5-ஆம்  வயதில் Reader's Digest படிக்க ஆரம்பித்தாள் முழுவதும்  படித்து  விடுவாள்.
 •  700 பக்க ஆங்கில நாவலை பெற்றோரும்  மற்றவரும்  பேசிக் கொண்டிருந்த   பொழுது   ஒரே மூச்சாகப்  படித்து  முடித்தாள்.
 • ஷேக்ஸ்பியர் நாடகங்களின் ஒரிஜினல் புத்தகங்களைப் படிக்கிறாள். இரண்டு   நாடகங்களை  முடித்துவிட்டாள்.

நிரூபமாவின்  படிப்பைக்  கண்ட பெற்றோர் இதன் பலன் அனைவரும்   பெற   வேண்டுமென பள்ளி   ஆரம்பித்தனர்.   புதுவையில் இதே முறையைப் பின்பற்றி இவர்கள் சென்ற  மாதம்  ஒரு  சிறு  பள்ளியை சோதனையாக  ஆரம்பித்துள்ளனர்.

நம் குழந்தைகளுக்கு அன்னை அருள் படிப்பில் என்ன பலன் தரும்?

 • நிரூபமா பெற்ற பலனை அம் முயற்சியுள்ள எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகட்குத் தரமுடியும்.
 • புதுவையில் ஆரம்பித்துள்ள பள்ளி அன்னை முறைகளை சோதனையாக  ஏற்றுள்ளது.

இதன் முக்கிய நோக்கம் தாய்மார்கட்கு நிரூபமாவிற்குக் கொடுத்த படிப்பை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்வது.

சோதனையான  பள்ளி  வெற்றி பெற்றால் Mother's class தாய்மார்   பள்ளி   தொடங்க உத்தேசம்.

 • அன்னை   மீது   நம்பிக்கையும், குழந்தை மீது பொறுப்பும் உள்ள எந்தத்    தாயாரும்    சென்னை மாம்பலம் Little Gems-இல் இன்று இப்பயிற்சியைப் பெறலாம்.4வருஷங்களாக Little Gems நடைபெறுகிறது.
 • அன்னைக்கு யோகத்திற்கு அடுத்தபடியாக கல்வி முக்கியம்
 • சாதகர்களை  விட  குழந்தைகள் முக்கியம்.
 • குழந்தைக்கட்கு அன்னை முறை  கல்வி  ஆத்ம  விழிப்பைத் தருவதால்    கல்வியின் தரம் அபரிமிதமாக  உயரும். book | by Dr. Radut