Skip to Content

ஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு

 

கல்கத்தாவில்  பிறந்து, லண்டனில்  கல்விபெற்று,  தாய்நாடு திரும்பி,    சுதந்திரப்    போராட்டத் தலைவரானவர்    ஸ்ரீ    அரவிந்தர். அலிப்பூர்   குண்டு   வீச்சுக்   கேசில் ஓராண்டு  சிறையில்   அடைக்கப் பட்டு  விடுதலையானபின் "பாண்டிச்சேரிக்குப் போ''   என்ற அந்தராத்மாவின்  குரலை  ஏற்று  ஸ்ரீ அரவிந்தர்  1910-இல்  புதுவை  வந்து இங்கேயே  தவமிருந்தார்.

உலகின் வறுமையும் வேதனையும்  ஒழிய  மனிதன்  தேடும் மோட்சம்  உதவாது  என்றறிந்த  ஸ்ரீ அரவிந்தர்  அலிப்பூர்  சிறையிலிருந்த பொழுது விவேகானந்தர் அவர் முன் "தோன்றி''   ஸ்ரீ   அரவிந்தர்   தேடும் சக்தி   எது   எனக்   காண்பித்தார். அதுவே  சத்தியஜீவியம்  Supermind. ரிஷி    தன்    தபோவலிமையால் சத்தியஜீவிய   சக்தியை   அடைந்து, தம்   சரணாகதியால்   அச்சக்தியை உலகுக்குக்  கொணர்ந்தால்  உலகம் மரணத்திலிருந்து   விடுபடும்   என ஸ்ரீ   அரவிந்தர்   அறிந்தார்.   அது பூர்த்தியாக  12  யோகிகள்  தேவை. அது  இல்லை.

1950-இல்    ஸ்ரீ    அரவிந்தர் சமாதியானார்.    அவர்    சூட்சும உலகில்    தங்கி    செய்த    யோக பலத்தால்  1956-இல்  சத்தியஜீவிய சக்தி  உலகை  வந்தடைந்தது. பாரிஸில்  பிறந்த  அன்னை  தம் தியானத்தில் கண்ட "கிருஷ்ணனைத்''  தேடி புதுவையில் ஸ்ரீ அரவிந்தரைக் கண்டு, அவருடன்   இறுதிக்   காலம்வரை இருந்து  1973-இல்  சமாதியானார். ஸ்ரீ  அரவிந்த  ஆசிரமம்  1926-இல் அவரால்  நிறுவப்பட்டது.  1968-இல் ஆரோவில்    நகரத்தை    உலக சமாதானத்திற்காக  நிறுவினார்.

அதிர்ஷ்டம்

பிறர்  வாழ்வில்  அதிர்ஷ்டத்தை உற்பத்தி   செய்யும்   மனமுடைய எந்த  பக்தர் வாழ்விலும் அதிர்ஷ்டம் தானே உற்பத்தியாகும்



book | by Dr. Radut