Skip to Content

அன்னையைப் பற்றிய தமிழ் நூல்கள்

 

கர்மம் விலகி வாரண்ட் ரத்தானது,ரூ.27,000-க்கு விற்க முடியாத நிலம் ரூ.81,000-க்கு தரிசனத்திற்குப் பின் விற்றது,15 வருஷ முதுகுவலி பிரார்த்தனையின்றி   நிரந்தரமாக மறைந்தது, ரிஸ்யசிருங்கரான அமெரிக்கர் அன்னையிடம் வந்த பின் மழையைக்   கொணரும்   திறனை அதிகமாகப்   பெற்றது,   அடாவடிக்காரன்  வாங்கிய  பணத்தை  தானே முன்வந்து கொடுத்தது,    பல வருஷங்களாக  சிம்ம  சொப்பனமாக இருந்த   டென்ஷன்   தரிசனத்தால் உடனே   மறைந்தது,   சேவையால் இழந்த பெரும் செல்வத்தை திரும்பப்  பெற்றது  போன்ற  50,  60 அன்பர்  அனுபவங்களை  விவரமான கட்டுரைகளாக அளிக்கும் இரு நூல்கள்-

 1. அன்னையின் தரிசனம்
 2. எல்லாம் தரும் அன்னை

சுமார் 100-க்கு மேற்பட்ட அன்பர்  அனுபவங்களை  அவர்கள் எழுதிய கடிதங்கள்    மூலமாக விளக்கும்  நூல்.

அமிர்தம்

அப்படிப்   பூர்த்தியான  பிரார்த்தனைகளில்  சில:-

 1. எட்டரை ஆண்டு காது வலி விலகியது.
 2. 24.9.89-ல்  வேலைக்காக செய்த பிரார்த்தனை  5.10.89-ல்  பெரிய கம்பெனி வேலையாகப் பலித்தது.
 3. பிரார்த்தனை செய்து காணிக்கை  அனுப்பியபின்  நிச்சயிக்கப்பட்ட ஆப்பரேஷன் தேவையில்லை என டாக்டர்கள் கூறியது.
 4. கணவனிடமிருந்து   பிரிந்திருந்தவர்   அவருடன்   சேர   செய்த பிரார்த்தனை   கடிதம்   எழுதியவுடன்  தீர்ந்தது.
 5. பிரார்த்தனையால்   கஷ்டங்கள் விலகி மனதில் சந்துஷ்டி ஏற்பட்டது. 
 6. அன்பரானபின் பரவலாக வீட்டைப் பிடித்திருந்த எல்லா வியாதிகளும் விலகியது.
 7. "எப்பொழுதும் என் மீது கோபப்படும்   என்   மாப்பிள்ளை நான்    கையில்    அன்னைப் படத்தோடு   சென்ற   பொழுது வழக்கத்திற்கு மாறாக நல்வரவேற்பளித்ததுடன்  தான் கோபப்பட்டதற்கு   மன்னிப்புக் கேட்டார்''.
 8. 6   வருஷ   காலமாக   பதவியுயர்வில்   ஏற்பட்ட   சிக்கல்களை அன்னை அருள் வெகுவிரைவில் அகற்றி பேராசிரியர் பதவி  கிடைத்தது.
 9. சமாதி தரிசனம் மனச்சுமையைப் பாதி அழித்து, பணப்பிரச்சினையை   அன்றே தீர்த்து,  குடும்பத்தில்  சமாதான ஊற்றை  ஏற்படுத்தியது.
 10. உயிர்   பிரிந்த   பின்   ஆத்மா அன்னை  அறைக்குச்  சென்றது. எமதூதன்   பின்   தொடர்ந்தான். அன்னை    அருகில்    ஆத்மா உள்ளவரை எமதூதன் காத்திருந்த   நிகழ்ச்சி.

அருளமுதம்

 • ஒரு பிரச்சனையை பல வழிகளாகத் தீர்க்கலாம் என இதுவரை அன்பர்கட்குப் பயன்பட்ட 34  வழியான தீர்வுகளை  விளக்குகின்றது.
 • பிரச்சினை தீர அன்னைக்குரிய எளிய முறை 2 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது.
 • அன்னையை  நம்முள்  அழைக்கும் யோக  முறையை "அழைப்பு''  என்று  தலைப்பிட்டு அதற்குரிய  நீண்ட  விளக்கத்தையும்  அதன்  27  பலன்களையும் தரும்  கட்டுரை.

 

ஜீவனுள்ள மலர்கள்

வாழ்க்கையிலுள்ள 110 பிரச்சினைகளையும்  அவற்றிற்குரிய விளக்கங்களையும்    எழுதி எந்த புஷ்பங்களை அன்னைக்கு சமர்ப்பிப்பதால்  எந்த  பிரச்சினை  தீரும்  என எழுதிய நூல். சுமார் 300-க்கு மேற்பட்ட  புஷ்பங்களை  படத்துடன் விவரிக்கின்றது.  இந்நூல்  பிரதிகள் முழுவதும் விற்பனையாகியதால் புது வெளியீடு  160  பிரச்சினைகளையும், 600-க்கு   மேற்பட்ட   புஷ்பப்படங்களுடன்   அச்சிற்குப்   போயுள்ளது. ஏற்கனவே    இந்நூலின்    பழைய வெளியீட்டை    வாங்கியுள்ளவர்க்காக   புதிய   50   பிரச்சினைகளை மட்டும்  400  படத்துடன்  விளக்கும் பிரதியொன்றும்    தயாராகிறது. எதிர்பார்க்கும் இரு புதிய வெளியீடுகள்:-

 1. 160  பிரச்னைகளுக்குரிய  விளக்கங்களும்,  600  படங்களும்.
 2. 50 பிரச்னைகளும் 400 படங்களும்.

புத்தகம் சில மாதங்களில் வெளிவரும் விலை   இன்னும் நிர்ணயிக்கப்படவில்ல. முதற்புத்தகம்  சுமார்  ரூ.350-ம், இரண்டாவது   ரூ.250-ம்   வரை இருக்கலாம்.

 

தொழிலின் ஜீவன்

தொழிலதிபர்கள்    அன்னை முறைப்படி   தொழில்   இருமடங்கு அபிவிருத்தி   செய்வதெப்படி,   10 மடங்கு   விரிவாக்குவது   எங்ஙனம் என்ற விளக்கங்களைத் தரும் நூல்.

அதிர்ஷ்டம்*

அதிர்ஷ்டம்   தானே   வருவது. அன்னையை   முழுமையாக   மனம் ஏற்றுக்கொண்டால்    வாழ்வில் பக்தனால்  அதிர்ஷ்டத்தை  உற்பத்தி செய்யும்  முறையைக்  கூறும்  நூல்.

தத்துவ ஞானம்

ஸ்ரீ  அரவிந்தரின்  தத்துவத்தை விளக்கும்    நூல்      Life Divine. அதனின்று   எடுத்த   60   முக்கிய கருத்துகளை சுருக்கமாக விளக்கும் நூல்.

அன்னையின் அருள்

புண்ணிய பூமி

20  ஆண்டுகளாக  "அமுதசுரபி'' யில்    வெளியான    அன்னையைப் பற்றிய   கட்டுரைகளை   தொகுத்து வெளியிட்டதில்   உருவானவை   5 நூல்கள்.  அவற்றுள்  இவையிரண்டு, "அமிர்தம்''  என்ற  நூலில்  பாதிநூல் இக்கட்டுரைகளாகும்.   "அன்னையின்   தரிசனம்'',   "எல்லாம்   தரும் அன்னையும்'' அப்படிப்பட்ட நூல்களே  ஆகும்.

பொன்னொளி

ஸ்ரீ அரவிந்தரின் யோகக் கருத்துகளை விளக்கும்  நூல்.

குடும்பம்

ஓர் குடும்பம் ஒற்றுமையாக வாழ்வதை நாம் விரும்புகிறோம். நம் வாழ்நாளில் நம் குடும்பம் படிப்படியாக    முன்னேறுவதை எதிர்பார்க்கிறோம்.  அப்படி இலட்சதிபதிகளகவும் , கோடீஸ்வரர்களகவும் , முக்கியஸ்தர்களாகவும்,   அரசியல் தலைவர்களாகவும்,  பிரபலமானவர்களாகவும்  நாம் ஆயிரம் குடும்பங்களை  அறிவோம்.

அன்னையை அனைவரும் ஏற்ற குடும்பங்களுக்கு இத்தனை வாய்ப்புகளும் உண்டு.

இவ்வாய்ப்புகள்  பலிக்க குடும்பத்தினர் செய்ய வேண்டியதை விளக்குகிறது  இந்நூல்.

ஆத்ம  சோதனை

ஆயிரத்திலொருவர்

புஷ்பாஞ்சலி

கடந்த 10 அல்லது 12  ஆண்டுகளாக  சென்னை  தியான மையத்தில்  மாதம்தொறும்  தியானத்தின் முன் படிப்பதற்காக எழுதப்பட்ட நீண்ட கட்டுரைகளை   தொகுத்து வெளியிட்டதால்   வெளிவந்த நூல்கள் இவை.

தேடிவரும் யோகம்

கற்பனையையும், நடந்த நிகழ்ச்சிகளையும்  அடிப்படையாகக் கொண்டு    "பிரித்திவ்'' எழுதிய சிறுகதைத்  தொகுப்பு.

யோக  வாழ்க்கை விளக்கம்

வாழ்வும்,  யோகமும் எதிரானவையல்ல,    இணைந்து செயல்படுபவை என்ற ஸ்ரீ அரவிந்தர்   கருத்தை   அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டகருத்துக்கள் 5000.    அவற்றுள் முதல் 600 கருத்துக்களுக்கு விளக்கம் அளித்து  நூலாக வெளியிட்டதில்    முதல் இரண்டு பாகங்கள் வெளிவந்துவிட்டன. மூன்றாம் பகுதி அச்சிலுள்ளது.

நாத்திகனின் மறுப்பு

Life Divine என்ற ஸ்ரீ அரவிந்தர் நூலை விளங்கிக் கொள்வது கடினம் என்பது பொதுவான  அபிப்பிராயம்.  பக்தியும், நம்பிக்கையுமுள்ளவர்க்குப் புரியும்படி சொல்லலாம்  என்பது  மதர்  சர்வீஸ் சொஸைட்டியின்  அனுபவம்.  எனவே அந்நூலில்  உள்ள  58  அத்தியாயங்களில்  ஓர்  அத்தியாயத்தை  எளிய ஆங்கிலத்திலும்   வாசகர்கட்குரிய தமிழிலும்   எழுதப்பட்டது   இந்நூல். இந்நூல்   விற்பனையாகி   விட்டபடியால்    Life Divine-இல்   முதல்   5 அத்தியாயங்களை  ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி அச்சிற்கு அனுப்பியுள்ளோம்.

நூறு பேர்கள்

உலகின்    சிறுமைகள்    அழிய வேண்டுமென்றால்  நூறு  பக்தர்கள் சத்திய  ஜீவியத்தை  அடைய  முயல வேண்டும்.    அவர்கள்    வெற்றி பெற்றால்    உலகம்    வளமாகவும், ஆன்மீக  நிறைவும்  பெற்று  மாறும் என்பது   ஸ்ரீ   அரவிந்தம்.   மரணமே இதனால்   அழியும்   என்றார்   ஸ்ரீ அரவிந்தர்.

"மனிதன் அழைத்தால், அதை இறைவன் ஏற்றால் அப்புனித நேரம் உடனே எழும்'' என்றார் ஸ்ரீ அரவிந்தர்.

யோகத்திற்குரிய    இப்புனித கருத்தை   உலகில்   அன்னையை அறிந்தவர்      நல்ல வாழ்வை உருவாக்குவது எப்படி என இந்நூல் விளக்குகிறது.

பேரொளியாகும் உள்ளொளி

என்ற நூல் சுமார் 165 வாழ்க்கை நிலைகளை எடுத்து எங்ஙனம் அவற்றை அன்னைக்குரியவையாக மாற்றி நம்மை நூறில் ஒருவராக    மாற்றலாம்    எனக் கூறுகிறது.  பணத்தை  சிக்கனமாக செலவு செய்தால் சேரும் என்றறிந்த நம்மை      அன்னை      அறிவும், நிதானமும்    நிறைந்த    மனிதன் தாராளமாக    நல்ல    செலவை செய்தால்,    செலவு    செய்வதால் பணவரவு    பெருகும்    என்கிறார். 165-இல்  இதுவும்  ஒன்றாகும்.

பூலோகச் சொர்க்கம்

நிறைவான   மனம்,   நெறியான போக்கு,  மரண  தைரியம்,  தெய்வ நம்பிக்கையுள்ளவர்   அன்னையை வாழ்வில்   ஏற்றுப்   பின்பற்றினால் பூலோக வாழ்வு சுவர்க்கமாக மாறும் என்பது இந்நூலின் மையக் கருத்து.

அன்னை  பராசக்தியின் அவதாரம்*

பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோகத்தைப் பூர்த்தி செய்ய அவதாரம் எடுத்தவர் அன்னை. ஆயிரம் ஆண்டுகளில் நடப்பதை அரை நிமிஷத்தில் நடத்தும் முகூர்த்தம்  உண்டு.

சிருஷ்டியில் அந்நேரம் வந்தது.அதை இறைவன் வரும் தருணம் என்றார்.(Hour of God)

தருணம் வந்ததை மனிதன் அறியாததால்,   அதை அறிவுறுத்த ஸ்ரீ  அரவிந்தர்  அவதாரம்  எடுத்தார். மனிதன்    அவரை    ரிஷியாகக் கண்டான். அவர் அவதாரமுமில்லை. ஸ்ரீ  அரவிந்தர்  இறைவனின்  பகுதி. மனிதனால்    தன்    கருணையை நேரடியாகப்     பெற     முடியாது என்பதால்     அதைப்     பெற்றுக் கொடுக்க அன்னை அவதார மெடுத்தார்.

மனிதனின் அழைப்புக்கு அருள் செவிசாய்க்க மறுத்ததில்லை.மனிதன் அழைத்து         இறைவன் ஏற்றால் அதுவே உலகம் சொர்க்கமாகும் தருணம் என்றார் பகவான்.

அன்னையின் அவதார அம்சங்களை பகவான் விளக்கும் நூலையொட்டி    எழுதப்பட்டது இந்நூல்.

அன்னையின் வரலாறும் வழிபாடுகளும்

இது அன்னையின் பிறப்பு, வளர்ப்பு  கோட்பாடுகளை  விளக்கும் நூல்.

மலர்ந்த ஜீவியம்

மதர்  சர்வீஸ்  சொஸைட்டியின் மாத  இதழ்.

(* கையில் பிரதிகளில்லை) 

அன்னையின்  சிறப்பு

கேட்டதைவிட அதிகமாகவும், கேட்காததும், கேட்கத் தெரியாததும் கிடைக்கும்.

நன்றியறிதல்

புதுவை  வந்த  அன்னை  ஸ்ரீ  அரவிந்தரை  தரிசிக்க அவர்   இல்லம்   நோக்கி   வரும்பொழுது   வீதியில் சென்ற ஒருவரை நிறுத்தி எது ஸ்ரீ அரவிந்தர் வாழும் இடம்   எனக்   கேட்டார்.      அவர்   ஸ்ரீ   அரவிந்தர் வீட்டை  அடையாளம்  காட்டினார்.  அன்னை  அவர் முகவரியைக்    கேட்டுப்    பெற்றார்.    நன்றியால் தழுதழுத்த   அன்னை மாதம்தோறும்   இறுதிவரை   அவருக்கு   நன்றிக் கடிதம் எழுதினார். அத்துடன் காணிக்கையாக ஓர் தொகையையும்  தவறாமல்  அனுப்பி  வந்தார்.  

ஸ்ரீ அரவிந்தம்

அன்னை  ஸ்ரீ  அரவிந்தரை அனுதினமும்  அவர்களின் ஆன்மீக  சூழலில் வணங்க  அமைந்த மாம்பலம் தியான  மைய  நடைமுறையை விளக்கும்  வெளியீடு



book | by Dr. Radut