Skip to Content

முன்னுரை

 
இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றை அறிந்த நமக்கு பராசக்தி அன்னை வடிவமாக அவதரித்து உலகில் புதிய சிருஷ்டிக்கு அடிகோலினார். தெய்வ லோகத்திற்கு மேலுள்ள சத்தியஜீவ லோக அவதாரம் பகவான் ஸ்ரீ அரவிந்தர். அன்னையும் அந்த உலகத்து அவதாரமே. ஈஸ்வரனும், சக்தியும் உறையும் இந்த லோகத்து அவதாரங்களாக அவர்கள் இருவரும் அமைந்தனர்.
 
அந்த அவதாரச் சிறப்பு, அதன் நான்கு அம்சங்கள், அதற்கு நாம் சரணாகதியடைய வேண்டிய நிபந்தனைகள், அதனால் மனிதன் பெறும் ஆன்மீக உயர்வு, அந்தச் சரணாகதிக்குத் தடையாகவுள்ள மனித இயல்புகள், அவற்றையும் மீறி திருவுள்ளம் தடையின்றி செயல்பட முடியும் என்ற சிருஷ்டியின் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் நூல் அன்னை பராசக்தியின் அவதாரச் சிறப்பு.
 
மனிதனுடைய ஆன்மாவில் இந்த அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் இரு சக்திகளைக் குறிப்பிட்டு நூல் தொடங்குகிறது. அதில் மனிதனின் பங்கு இடையறாத இறை ஆர்வம். ஆர்வம் மிகுந்து மனித குலம் பயன் பெறுவது முறை. அது தவறினாலும் இறைவனின் திருவுள்ளம் தானே தவறாது செயல்படும் என நூலை பகவான் முடிக்கின்றார்.
 
தவறாது மனிதனில் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் இறைவனின் திருவுள்ளத்தை பூரணமாகப் பூர்த்தி செய்ய தணியாத ஆர்வத்தைப் பெறுவது மனித ஜீவனுக்குள்ள சிறப்பு.
 
- கர்மயோகி



book | by Dr. Radut