Skip to Content

14. அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள்

 

  1. நம் கையால் செய்யும் காரியங்கள் பூரணம் பெற வேண்டும். முழுமையான நாணயம்;
     
  2. மனித உறவுகள் அனைத்தும் இனிமையாகவும், இசைவாகவும் இருக்க வேண்டும்.
     
  3. காரியங்களில் குறையிருந்தால், ‘நமக்கு மட்டுமே பொறுப்பு' என்ற மனநிலை வேண்டும்.
     
  4. மற்றவர் குறைகளுக்கு நாம் பொறுப்பெடுத்துக்கொள்ளும் தெளிவு வேண்டும்.
     
  5. அதிகப்பட்ச அறிவுடன் செய்யும் காரியங்களில் 100% அறியாமை கலந்திருப்பது தெரிய வேண்டும்.
     
  6. பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, குறையில்லை என்றுணர வேண்டும்.
     
  7. பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, நிறை என்ற அறிவு வேண்டும்.
     
  8. முழுத் தவறு, பாவம், குற்றம் என்ற அளவில் கண்ணால் கண்ட நிகழ்ச்சி, காதால் கேட்ட சொல், தீர்க்கமாக விசாரித்து முடிவு செய்தது, இவை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அதனுள் முழு உயர்வு, புண்ணியம், சேவை நிரம்பியுள்ளன என்று அறிவு உணர வேண்டும். அறிவு உணர்ந்ததை நம்முள் அனைத்தும் யோக ஞானமாக விரும்பி, விழைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
     
  9. இத்தனையும் சேர்ந்துள்ளவை கீழ்க்கண்டவை:
    • மெய்சிலிர்க்கும் நன்றியறிதல்;
    • இலட்சியமான கடமையுணர்வு;
    • உயிரைக் கொடுக்கும் விஸ்வாசம்;
    • நெகிழ்ந்த, நிறைவுள்ள ஆத்மானுபவமான பக்தி;
    • இனிமையான உள்ளுணர்விலிருந்து எழும் மென்மையான சொல்;
    • அனைவரும் போற்றும் ஆன்மீக அடக்கம்;
    • மனச்சாட்சியைவிட உயர்ந்த தூய்மை;
    • புனிதமான நல்லெண்ணம் பூரணம் பெறுதல்;
    • சேவை உணர்வு செறிந்த அன்றாடச் சிறு செயல்கள்;
    • பிறரைக் குறையே சொல்ல முடியாத நெகிழ்ந்த இனிமை உணர்வு.

     

******



book | by Dr. Radut