Skip to Content

பகுதி 5

  1. Consecration that begins in major acts should continue till we reach the acts of the smallest description for it to mature into surrender.

    நாம் காணும் பொருள்களையெல்லாம் அன்னை ஜீவன்களாகக் காண்கிறார்.

    In different planes objects change into forces, forms, beings, consciousness, existence, etc. Everything exists in every plane in the size of that plane.
     
  2. Consecration is the emergence of joy from pain.

    ஆனந்தம் எழுவது சமர்ப்பணம்.
     
  3. Any work, however important, is in order only when consecration is not possible… No one can receive an offering if he is not endowed with a consciousness that can dissolve its karma.

    பவித்திரமான காணிக்கை ஆத்மாவின் பார்வைக்கு பாவத்தின் சின்னம்.
     
  4. Consecration that overcomes running thoughts solves problems. To avail of opportunities one must be able to consecrate mental occupation. Neither is enough for yoga which requires the surrender of nature that is occupied.

    எளிதான சமர்ப்பணம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும். யோகத்திற்குரியது முடிவான சமர்ப்பணம் சரணாகதியாவது.
     
  5. Consecration of occupation when successful will open one to his existence of substance. Occupation is in the depth of consciousness.

    சுபாவம் சும்மாயிருக்காது.
     
  6. Man lives in the mind. Moving to the Spirit and releasing it from the embodied being, he becomes the realised soul. This is man awakening to the spiritual part in him. Man waking up his being in his becoming can consecrate or surrender. Realisation of one’s spirit is like becoming head of one’s own family. Surrender is to be the head of the world and universe.
     
  7. Past consecration for as many days as the years you have lived is good.

    வருஷத்திற்கு ஒரு நாள் என வயதிற்குக் கடந்தகால சமர்ப்பணம் பலிக்கும்.
     
  8. Surrender is to give up that thing which we cannot part with for a moment. Surrender of the unconscious is true surrender. Surrender of the conscious is impossible. Surrender of the unconscious is a must. Surrender of the conscious makes the surrender of the unconscious possible.

    எதை ஒரு நிமிஷம்கூடப் பிரிய மனமில்லையோ அதை சரணம் செய்வதே சரணாகதி.

    முடியாதது முடிவது சரணாகதி.

    ஒளியை சரணம் செய்தால் இருள் தானே சரணடையும். ஒளியை விட்டால் இருள் போகும்.

    இருளழிய ஒளியழிய வேண்டும்.
     
  9. The Avatar can surrender to the Lord; others cannot. It is to Mother the surrender is due.

    ஆண்டவன் அவதாரத்திற்கு. அன்னை நமக்கு.
     
  10. Man’s surrender starts with his thoughts, feelings, etc. Sri Aurobindo speaks of the Surrender of the Being, consciousness, power and delight. When he surrenders his thoughts, feelings, etc., he reaches his being and again as power and delight his thoughts and feelings present themselves to be surrendered.

    சரணாகதி எண்ணத்திலாரம்பித்து ஜீவன் வழி மீண்டும் எண்ணத்திற்கு வர வேண்டும். சரணாகதி எண்ணம் மூலம் ஜீவனுக்கும், ஜீவன் மூலம் எண்ணத்திற்கும் வரவேண்டும்.
     
  11. Surrender is difficult for one who thinks, even as controlling emotions is difficult while they possess you.

    சிந்தனையால் உணர்ச்சியை அடக்க வேண்டும். மௌனத்தால் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
     
  12. Flatness and dullness do not permit consecration. They are due to the presence of negative or hostile forces below. Becoming lively is the best way to overcome flatness.

    மனம் நகர்ந்தால் மந்தம் மறையும்.
     
  13. All-inclusive concentration is for the psychic, not mind.

    அகண்ட மௌனம் பூண்பது ஆத்மா. மனமில்லை. அகண்ட மௌனம் ஆத்ம லட்சியம்.
     
  14. Surrender is greater than the greatest of works.

    காரியம் எவ்வளவு பெரியதானாலும், சரணாகதி அதைவிடப் பெரியது.
     
  15. Surrender is the inner spiritual impulse of the Psychic that stands naked before God. It is not a method.

    பேச்சு, உணர்ச்சி, தொடுவது, நிலைக்கேற்ற செயல்கள். இறைவன்முன் நிர்வாணமாக நிற்கும்பொழுது பிரார்த்தனை, சொல், பக்தி, நமஸ்காரம் எழுவதில்லை. அப்பொழுது எழுவது சரணாகதி. இரண்டறக் கலக்கும் இசைவு சரணாகதி.
     
  16. It is true that the surrender of man can achieve anything instantaneously, but his surrender is limited to the extent he is deconditioned. Man surrenders to God in the measure he is more attracted to him than his own subconscious preoccupation.

    அஞ்ஞானம் ருசித்தால் அனந்தனில்லை.
     
  17. Mother does not need an instrument, She needs a surrendered instrument.

    தேவை கருவியில்லை. சரணடைந்த கருவி தேவை.
     
  18. Surrender and planning do not go together. Surrender is purely an act of the soul. Allow it to come to the surface and act without interference.

    வண்டி கடலில் ஓடாது. ஓடம் தரையில் போகாது.
     
  19. Gradualness is not there for politicians to rise to the top, as the party has the power to put a man at the top. In surrender that power to accomplish anything at any level is with us.

    சரணாகதிக்குப் பலன் படிப்படியானதில்லை. சரணாகதிக்கு எந்நிலை பலனும் உண்டு.
     
  20. The surrender we offer Mother can be offered to anyone else. It will reveal two things.
    1. When you surrender to another, he will find himself your prisoner. He will not be able to ask you for anything which is not in your mind.
    2. At a later stage, you find yourself a similar prisoner of his.
    Surrender when complete permits each to surrender to the other.

    கைதிக்கு சரணடையும் காவல்காரன்.
     
    • Man surrenders to Mother with an idea and what ultimately prevails is that Idea. When he surrenders to Her with no such Idea or better still the idea that She knows better than all his ideas, She achieves in him.
    • Even surrender achieves in one what he is.
    • When he is Not anything, She achieves.
    • No determinism of the person or nature should be there in him, for Her to achieve in him.
    • The only determination in us must be to let Her work through us, only Her.
    • Surrender may be passive to eliminate oneself or active to endorse Her working in us.


    அன்னை நம்முள் சாதிக்க ‘நாம்’ எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. நம்மை விலக்குவது அவசியம், முழுவதும் விலக்குவது முழு அவசியம். அதைவிட முக்கியம் அன்னை நம்முள் சாதிப்பதை நம்முள் அனைத்தும் வரவேற்க வேண்டும்.
     
  21. Surrender summarises self-conception, self-limitation, self-absorption, objectification all in the reverse to realise the Being of the Ego, so that it may become the Being of the Becoming.

    அகந்தை அழிந்து ஆத்மாவைக் கடந்து சைத்தியப் புருஷனாவது சரணாகதி.
     
  22. Phenomena resolving into Force from their Form and Force returning into Consciousness to finally enter into Being is Surrender.

    ரூபமும், சக்தியும் அழிந்து ஜீவியமும், ஜீவனுமாக மாறுவது சரணாகதி.
     
  23. The Being must be on the surface for surrender to be constant. மனிதன் ஜீவனானால், வாழ்வு சரணாகதியாகும்.
     
  24. For an immediate result, you must come forward to give up your problem to Mother happily.

    உடனே பலிப்பது உவந்தளித்தல்.
     
  25. Consecration does not begin as long as occupation remains.

    மனம் சுறுசுறுப்பாக இருக்கும்வரை சமர்ப்பணமில்லை.

    Quiet mind consecrates.

    மனம் அடங்கியபின் சமர்ப்பணம்.
     
  26. There are issues that cannot be explained. Not explaining them leads to permanent misunderstanding. In Yoga, there are issues that are not to be explained. Not explaining them makes consecration possible. It gets resolved.

    பேச வேண்டாததைப் பேசாமலிருந்தால் சமர்ப்பணம் பூர்த்தியாகி பிரச்சினை தீரும். வாழ்வில் எது பிரச்சினையை உற்பத்தி செய்யுமோ, அது யோகத்தில் பிரச்சினையைத் தீர்க்கும்.
     
  27. Work is done by the body or mind. The seeker does it by the Spirit. Integral yoga is done by the Psychic. Its only work is surrender.

    சைத்தியப்புருஷனுக்கு சரணாகதியைத் தவிர வேறு வேலை தெரியாது, இல்லை.
     
  28. Calling arises when surrender is not possible.

    சரணாகதி முடியாத நேரம் அழைப்பு உதவும்.
     
  29. To know mentally what surrender really is and to perceive its full psychological significance is yogic knowledge.

    சரணாகதியை அகத்திலும், புறத்திலும் அறிவது யோக ஞான சித்தி.
     
  30. “I have fully achieved what I have subconsciously aspired for” is true in anyone’s life. To make the subconscious conscious remains.

    தீராத பழைய ஆசைகள் இன்று அன்னையால் பூர்த்தியானதை எவரும் காணலாம். அவற்றிலிருந்து விடுபடுவது சரணாகதி பூர்த்தியாவது.
     
  31. Presently the subconscious desires are fulfilled, conscious desires are unfulfilled. For them to be fulfilled, they must become subconscious. To surrender even the subconscious desires is yoga.

    பூர்த்தியானது subconscious ஆசை. பூர்த்தியாகாதது conscious ஆசை. Conscious ஆசை subconscous ஆனால் பூர்த்தியாகும். பூர்த்தியாகாத ஆசையைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக சரணம் செய்வது யோகம்.
     
  32. At any moment your surrender may be incomplete, but your part is to exhaust yourself.

    சரணாகதி பூர்த்தியாகாவிட்டாலும், முயற்சியை சரணம் செய்வது பூர்த்தியாக வேண்டும். முயற்சி முழுமையானால், அன்னை முழுமையாக நம்முள் எழுவார்.
     
  33. Take to calling when surrender defies. சரணாகதி முடியாத இடத்தில் அழைப்பும், அதுவும் முடியாத பொழுது அமைதியும் நம் பங்கு.

    Be calm without initiative when calling is no longer possible.

    அழைப்பும் அமைதியும் அன்பருக்குரிய சரணாகதி.
     
  34. There are events in life that cannot be passed over. It is by these events life progresses. Consecration of such events makes one enter yoga.

    தவிர்க்க முடியாதவை வாழ்வை நிர்ணயிக்கின்றன. சமர்ப்பணம் இங்கு ஆரம்பிக்கப்பட வேண்டும்.
     
  35. Surrender at its last stages surrenders the impulses when the OUTER changes into INNER.

    சரணாகதி கடைசி கட்டத்தில் புறத்தை அகமாக்கும்.
     
  36. Consecration is calling MOTHER.

    அழைப்பே சமர்ப்பணம்.
     
  37. Concentration is dwelling on itself. Consecration is NOT dwelling on itself but dwelling on the NOT-Self.

    நிஷ்டை தன்னையறிதல், சமர்ப்பணம் தன்னையறிய மறுப்பது, தன்னைக் கடந்ததை அறிய முயல்வது.
     
  38. Consecration is a reversal of concentration.

    நிஷ்டைக்கு எதிரான தலைகீழானது சமர்ப்பணம்.
     
  39. Consecration is active Silence in the mind; in the vital it is reversal of the life current; in the body it is the reversal of existence.

    சமர்ப்பணம் சிந்தனையை ஜீவனுள்ள மௌனமாக்கும், உயிரோட்டத்தைத் தலைகீழே மாற்றும், சிருஷ்டியைப் பரிணாமமாக்கும்.

    உயிரை எடுப்பவன், உயிரைக் கொடுப்பவன்.

    சமர்ப்பணம் யோகப் புனர் ஜென்மம்.
     
  40. Consecration leads to Self-forgetfulness. Self-forgetfulness initiates consecration.

    பரவசப்படுவது சமர்ப்பணம்.

    தன்னை இழந்தபின் சமர்ப்பணம் ஆரம்பிக்கும்.
     
  41. Patience, Self-giving, Consecration, Self-forgetfulness, equality, grace, faith, and delight go together.

    ஆனந்தம், நம்பிக்கை, அருள், நிதானம், பரவசம், சமர்ப்பணம், அர்ப்பணம், பொறுமை ஒன்று போன்றவை.
     
  42. Consecration belongs to the inner being.

    சமர்ப்பணம் அகத்திற்குரியது.
     
  43. Silent will changes another’s opinion; consecration changes the atmosphere. To change the physical facts and physical energy, neither is enough. One’s own physical consciousness must change.

    சூழலை மாற்றும் சமர்ப்பணம் ஜடத்தை அசைக்காது. உடலின் ஜீவியம் மாறினால் அதுவும் ஓரளவு நடக்கும்.
     
  44. A consecrated work will always be done by a higher power than is usual.

    சமர்ப்பணம் செய்தபின் அவ்வேலையை வேலைக்குரியதைவிட உயர்ந்த சக்தி செய்யும்.
     
  45. A consecrated work requires to be completed in all its aspects only by consecration.

    சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலையின் எல்லா அம்சங்களும் சமர்ப்பணத்தால் பூர்த்தியாவது அவசியம்.
     
  46. Man appeals to Mother but takes the work in his hands at some time.

    சமர்ப்பணத்தால் அன்னையை அழைத்தபின் நாம் அவ்வேலையை ஒரு கட்டத்தில் மேற்கொள்கிறோம்.
     
  47. When consecration works, it sets in motion forces stronger than our minds can release.

    சமர்ப்பணம் பலிக்கும்பொழுது நம்மைவிட வலுவான சக்திகள் செயல்படும்.
     
  48. Consecration is to be organised by consecration, not thinking.

    எப்படி சமர்ப்பணம் செய்யலாம் என யோசிப்பது பலன் தாராது. அந்த சிந்தனையை சமர்ப்பணம் செய்வது பலன் தரும்.
     
  49. As desire overrules our discipline, God overcoming us is consecration.

    ஆசை நம்மை மீறி செயல்படுவதுபோல் ஆண்டவன் நம்மை மீறி செயல்படுவது சமர்ப்பணம்.
     
  50. Worry indicates absence of consecration.

    கவலையிருந்தால் சமர்ப்பணமில்லை.
     
  51. Consecration enables us to live in the moment, to live the MOMENT.

    சமர்ப்பணம் காலத்தை நிகழ்காலத்துள் கொண்டு வரும்.

    சமர்ப்பணம் புறத்தை அகமாக்கும்.

    சமர்ப்பணம் கடந்த காலத்தைக் காலத்துள் கொண்டு வரும்.
     
  52. Consecration acts instantaneously.

    க்ஷணத்தில் நடக்காதது சமர்ப்பணமாகாதது.
     
  53. Reflection is mental response. Consecration should precede that.

    மனம் தீண்டுமுன் நாம் தீண்டுவது சமர்ப்பணம்.
     
  54. Thoughts that are urged by the physical are difficult to consecrate, as consecration here involves consecrating the physical.

    ஜடத்தை சமர்ப்பணம் செய்யாமல் ஜடமான எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியாது.
     
  55. Consecration begins when the mind and memory withdraw.

    மனமும், நினைவும் மறைந்தபின் எழுவது சமர்ப்பணம்.
     
  56. The problems we forget are away from our pre-occupation. It is partial consecration.

    மறந்தவை மனத்தால் சிதறா.
     
  57. To remind ourselves of a problem will not help consecration.

    நாமே ஒரு விஷயத்தை நினைவுபடுத்துவது சமர்ப்பணத்திற்கு எதிரி.
     
  58. Consecration as the thought presents is better than thinking of it and consecrating it.

    நாமே ஒரு விஷயத்தை நினைத்து சமர்ப்பணம் செய்வதை விட, அது தானே எழும்பொழுது சமர்ப்பணம் மேல்.
     
  59. To remember consecration is grace; not to remember it is natural.

    சமர்ப்பணம் தோன்றாதது இயல்பு; தோன்றுவது அருள்.
     
  60. At the moment of surrender all the existing problems will vanish.

    சரணாகதி பலிக்கும் நேரம் இருக்கும் எல்லா பிரச்சினைகளும் உடனே தீரும்.

*****



book | by Dr. Radut