Skip to Content

பகுதி 2

  1. Hourly consecration alerts the surface and helps break the crust for those who desire to cross it. Having crossed the surface, it is not such a great help as it needs attention periodically.

    விழிப்பு ஆழத்தைத் தொடும்.
     
  2. Collection of all-inclusive concentration does not permit articulation of any formula, even mentally. It has to be an in-gathering of forces converging behind the heart.

    ஜீவ நிஷ்டைக்குச் சொல் தடை. மந்திரம் உதவாது.
     
  3. Surrender and consecration require enormous energies. There are times when we are exhausted. We cannot consecrate during those moments. The alternate for consecration is the memory of it or of its absence which will restore the energies.

    சோர்ந்தபொழுதும் சமர்ப்பணம் சோர்ந்து போகாது.
     
  4. More difficult than consecration is not taking initiative.

    சமர்ப்பணம் கடினம். பேசாமலிருப்பது வெகு சிரமம்.
     
  5.  Aspiration is an emotion while surrender is an act. That is why aspiration begins what surrender completes.

    பக்தி ஆரம்பம். சரணாகதி முடிவு.
     
  6. Surrender is the knowledge of the universe becoming the power of the Transcendent.

    ஜீவன் பிரபஞ்ச ஞானத்தால் பரமாத்மாவை அடையும் ஆன்மீக அனுபவம் சரணாகதி.
     
  7. Concentration is essential for consecration, but once the concentration develops, it is up to us to use it either for consecration or for our own purpose.

    • நிஷ்டையும், தியானமும் கருவிகளே.
    • நிர்ணயிப்பது நாம், கருவியன்று.
    • கருவியையும், காலத்தையும் கடந்தது சரணாகதி.

     
  8. Surrender, as He has conceived, is such a complete act as hitherto unknown, as it is an act of the Being of the Becoming. The world has conceived of no such act till He came.

    இதுவரை உலகம் அறியாதது சரணாகதி.
     
  9. Ego is dissolved to the extent consecration is possible.

    சமர்ப்பணம் அகந்தையை அழிக்கும்.
     
  10. Behind the observer, thinker, person lies the Being, the Purusha. Purusha is reached by concentration; psychic is reached by consecration. As the thought of the psychic is universal, our thought and the rival’s unite at the point where they are right.

    உள்ளே போனால் பலம் வரும். சைத்தியப்புருஷன் நம் எண்ணத்தை எதிரியின் மனதில் பலிக்க வைக்கின்றான்.
     
  11. Mother takes you to the substance non-stop, if you do not choose to interfere. Surrender is non-interference with Mother.

    அன்னைக்கு ஆணையிடாவிட்டால் எதையும் அவர் சாதிப்பார்.
     
  12. Soul awakening in the mind is surrender.

    சக்தியின் செயலைத் தன் செயலாகப் புரியாமல் செய்த மனிதன் புரிந்து தன் செயலைச் சக்தியின் செயலாகச் செய்வது சரணாகதி. மனிதன் சக்தியின் மூலம் ஈஸ்வரனாகும் பாதை சரணாகதி. புரியாதது புரிவது சரணாகதியின் அடக்கம். பயம் அனுபவிக்கப் பயப்படும். அனுபவிக்கும் தைரியம் ஆண்டவன்.
     
  13. When you forget something, it is taken up by the next layer of your personality, which is more powerful. Surrender is the forgetting of all layers of the personality so that Mother may take it up. Surrender is Conscious forgetting.

    பிரச்சினை அன்னையுடையது, நம்முடையதல்ல என அறிவது சரணாகதி. மறப்பது கடமை என்ற நினைவு சரணாகதி.
     
  14. Just because man offers his surrender, it does not mean that Mother will accept it. She does so only when the surrender is pure, living, sincere, and true.

    சரணாகதிக்கு ஜீவன் வர ஜீவனில் உண்மையிருக்க வேண்டும்.
     
  15. Surrender at any level is accomplishment at earlier levels. Mental surrender is material accomplishment.

    சரணாகதி
    ஒரு வீடு கட்டினால் முடிகிறது. வீடு கட்டும் எண்ணத்தை முழுமையாக சமர்ப்பணம் செய்தால், வீடு கிடைக்கும் என்பது சரணாகதியின் சத்தியம். அதை நம்புவது சரணாகதி. அந்த நம்பிக்கை செயல்படுவது அனுபவம். எண்ணம் சமர்ப்பணமானால் பலனுண்டு என்ற நம்பிக்கை சரணாகதிக்குரிய மனநிலை.
     
  16. Not to express a thought that arises is Silent Will. To speak it to Mother is consecration. To give that thought to Mother and be happy to accept Her will is surrender… silent will, consecration, surrender are graded.

    தோன்றியதைப் பேசாமலிருப்பது, அன்னையிடம் கூறுவது, அன்னையிடம் விடுவது ஆகியவை மூன்று கட்டங்கள்.
     
  17. Instead of trying to solve a problem, forget it, move towards Mother, it will disappear.

    நெருங்கி வந்தால் நெருடல் கரையும்.
     
  18. We are what we concentrate on. When a problem comes and occupies us, we concentrate on it and become the problem. By concentrating on The Mother, we become The Mother in which consciousness the problem dissolves. Surrender is Mother in us becoming more intense than what we are today.

    நம்மைவிட அன்னை நம்முள் பெரியதாவது சரணாகதி. இதைப் பிரதிஷ்டை என்பர்.
     
  19. When the knowledge that Mother is greater in us than we are becomes power, our being surrenders.

    அன்னை நமக்கு, நம்முள் நம்மைவிடப் பெரியவர் என்பதை ஆத்மா உணர்வது சரணாகதி.

    நம்மைக் கரைத்து அன்னையுள் அனைத்தையும் கரைத்து விடுவது சரணாகதி.
     
  20. That concentration necessary for consecration is all-inclusive concentration. No meditation can ever give that.

    தியானம் செய்யலாம், சமர்ப்பணம் சிரமம்.
     
  21. Nature, He says, deliberately delays evolution and calls for quickening evolution. Surrender is capable of neutralising Nature’s deliberate delay. Surrender is a movement beyond Time.

    சரணாகதி இயற்கையை வென்று காலத்தைக் கடக்கும்.
     
  22. In the name of Mother one can justify one’s weakness and that too may succeed by the intensity of faith. It does not mean weakness is right. To surrender weakness to Mother is faith in Mother.

    நம்பிக்கை வேறு. அன்னை மீது நம்பிக்கை வேறு. பயத்தை அன்னை பாதுகாப்பார். பயத்தை சமர்ப்பணம் செய்யலாம்.
     
  23. Determined ego is Ignorance organised. When it gives way it passes through unconsciousness and unorganised ignorance. To consecrate a thought, mental ego first faints and later awakens in heavy unconsciousness.

    மயக்கம் மடமைக்கு சிந்திக்கும் தெளிவு தரும். அறியாமை, அகங்காரம், தன்னை அறியாமை ஆகியவற்றைக் கடந்தது சமர்ப்பணம்.
     
  24. A stupid mind succeeds in thinking by passing through confusion. Mind that is unconscious becomes conscious through surrender. Stiff mental ego reaches consecration through dismembering itself by heavy unconsciousness. Unconsciousness is better than mental hardness.

    கடுமை கண்மூடி சமர்ப்பணத்தை எட்டுகிறது.
     
  25. Concentration
    • Thinking is mental concentration.
    • Silence is concentration of the Higher Mind.
    • Working is concentration in the body.
    • Passion or interest is vital concentration.
    Concentration is one dwelling on itself.
     
  26. The evolving Soul takes the poise of surrender as if it is its nature.

    சுபாவம் மனிதனின் "சரணாகதி'. சரணாகதி இறைவனின் தவ இயல்பு. சுபாவம் சரணாகதியாவது யோகம்.
     
  27. Thought works in the mind.

    Methods work in their own planes.

    The plane of Surrender is not mind or body but evolution.

    Surrender is not a method nor does it belong to any plane.

    சரணாகதி பரிணாமத்தின் பரிதி.
     
  28. Initiative is inhibitive. Surrender rises when initiation is given up.

    தானாக நடப்பது சரணாகதிக்கு அடையாளம். அகத்தின் சரணம் புறத்தின் செயல். உலகம் செயல்படுவது உன்னை ஏற்பது. சரணம் சர்வ ஜனனம்.
     
  29. Punctuality is time deciding work. Work deciding time is the WORK.

    வேலை சட்டத்திற்குட்படாது. சட்டத்திற்குட்பட்ட வேலை சாமானிய வேலை.
     
  30. Faith and consecration are almost synonymous.

    பூரண நம்பிக்கையில்லாமல் சமர்ப்பணம் செய்ய முடியாது. சமர்ப்பணம் என்பது பரிபூரண நம்பிக்கை. நம்பிக்கையே சமர்ப்பணம். சமர்ப்பணமே நம்பிக்கை.
     
  31. He who consecrates his speech will find his words come true.

    சொல்லை சமர்ப்பணம் செய்தவன் சொல் பலிக்கும். சமர்ப்பணமான சொல் பலிக்கும்.
     
  32. Consecration makes the past present.

    அர்ப்பணம் அற்புதமானால் அன்பன் யோகியாவான்.

    அர்ப்பணத்தின் அற்புதம் அனுபவத்திற்குரியது.

    அர்ப்பணம் அய்யனின் அற்புதம்.

    அர்ப்பணம் அன்பின் அமிர்தம்.
     
  33. Surrender opens up the subconscious vision.

    சரணாகதி ஆழ்மனக் காட்சியைக் காட்டும்.
     
  34. To give something away is great in a world where there are many who cannot part with trifles. Giving the thing whose value one knows fully is true giving which ends in Self-giving by one who has realized the Self.

    அர்ப்பணத்திலுயர்ந்தது அனந்தனை அனுபவித்து அனுப்புவது.
     
  35. People gather when attention is paid. They go away when it is withdrawn. Had there been strength in the substance, they will not go away, but cling faster to you.

    வேண்டிய விஷயம் இல்லாவிட்டால், கவனம் குறைந்தவுடன் கலைந்துவிடுவார்கள்.
     
  36. However little you know, consecration opens the entire knowledge to you. When you rely on your own knowledge, then it is available only in little quantities.

    உள்ளது போனால் எல்லாம் வரும் என்பதால் எதுவும் தேவையில்லை. சமர்ப்பணம் சகலமும் தரும்.
     
  37. Knowledge
    • To understand creation, understanding Ignorance is necessary.
    • Capacity to know a fool’s thinking is intelligence.
    • Accomplishment needs knowledge of the crook.
    • These are all human achievements.
    • For the Divine to achieve in us, these things are of no use. The Divine begins where Man ends.
    • Man’s ending his efforts is Surrender.
    Human accomplishment is by knowledge. For the Divine to accomplish in us, it needs surrender.
     
  38. The greatest, newest Knowledge that is several steps ahead of us is really powerful. When surrendered, the force released will render this great knowledge meaningless. The greater the knowledge we surrender, the more powerful the surrender is.

    ஞானம் எவ்வளவு பெரியதானாலும் அதைச் சரணம் செய்தால் சரணாகதி அதைவிடப் பெரியதாகும்.

    Any method, power or knowledge becomes nothing when it is surrendered. The greater the method, etc., surrendered, the greater is the power of surrender.
     
  39. Often, maybe always, one notices that a thought is accompanied by its opposite. Instead of the mind alternating from one to the other, one should steady the mind till the conflict gives way and the mind rises.

    நிதானம் மனக்கோயிலுக்கு நித்திய பூஜை.
     
  40. The character of outer acts is determined by the inner appreciation of those ideas. Those tricks of life you have mentally overcome will not bother you in life. Those great ideals your mind cherishes will serve you.

    மனம் விலக்கியவை வாழ்வைப் பாதிக்காது.
     
  41. Mind knows the parts like a mechanic. Supermind is the creative design engineer.

    ஊர் சேதி முழுவதும் தெரிந்து ஊரை அறியாதவன் உண்டு. செய்தி தெரிவதால் விஷயம் தெரிய வேண்டிய அவசியமில்லை.
     
  42. Surrender achieves what the dissolution of the seven Ignorances will achieve.

    சரணாகதி ஏழுவகை ஞானமாகும்.
     
  43. One succeeds when he does what he was not able to do so far. Yoga realizes when one surrenders what he has been unable to surrender so far.

    சரணாகதி முடியாது. செய்ய முடிந்தாலும் ஒரு கட்டத்தில் சரணாகதி முடியாது. முடியாத சரணாகதி முடிவது யோகம் பூர்த்தியாவது.
     
  44. When something refuses to consecrate, push it aside and call Mother till it gets consecrated. Mostly it will be accomplished. When you find yourself unable to call Mother, it means you enjoy that problem subconsciously. Looking inside you can see when you called it in.

    நாம் ரசிக்கும் பிரச்சினை தீராது.
     
  45. Each act of consecration is the exertion of the will to wean itself away from the evil and hostility inside.

    இருளைக் களைவது சமர்ப்பணம்.
     
  46. The Absolute expressed in our motive is surrender.

    பிரம்மம் செயலில் வெளிப்படுவது சரணாகதி.
     
  47. What is to be surrendered is never a question, as everything is to be surrendered.

    எதை சரணம் செய்வது? அனைத்தையும் சரணம் செய்ய வேண்டும். விலக்கேயில்லாதது சரணாகதி.
     
  48. Mind gives its ideas to the vital and body to execute. This is work. By consecration, mind gives its ideas to the spirit and Supermind. Therefore end results come in the beginning.

    சமர்ப்பணம் சத்தியஜீவியத்தை செயல்படுத்துகிறது.
     
  49. The first semblance of sincerity reveals the hostility of mind and vital. To surrender these vibrations is more difficult than surrendering ideas.

    உண்மை உள்ளேயுள்ள ராக்ஷஸனைக் காட்டும். கண்டபின் கண்டவனை விட மனம் வராது. கண்டதைக் கைவிட்டவன் கடவுளாகும்.
     
  50. Self-giving is to give oneself to others, not to oneself.

    சுயநலம் சுயநலத்தைப் பரநலமாகப் பறைசாற்றும்.



book | by Dr. Radut