Skip to Content

சமூகம் அதிர்ஷ்ட சாகரம்

வாழ்வு என்பது உலகளவானது. மனிதனுக்குத் தாயாகச் செயல்படும் தன்மை உடையது. மனிதன் எடுக்கும் சிறு முயற்சிக்குப் பெரும்பலனை வாழ்நாள் முழுவதும் தரவல்லது, தரப்பிரியப்படுகிறது. இந்த உண்மையை மனிதன் அறியவில்லை. அவன் தன்னை நம்புகிறான். தன்னை மட்டுமே நம்புகிறான். தன்னைத் தவிர வேறெதையும் அறியான். தானே முயன்று பெறுவதைத் தவிர வேறெதுவும் கிடைக்காது என உறுதியாக நம்புகிறான். இது அவனுடைய அன்றாட வாழ்விலும் உண்மையில்லை என்றாலும் அவன் மனம் அவன் அறிந்ததை மட்டுமே நம்புவதால் அவன் வாழ்வு சுருங்கி, சிறியதாகிவிட்டது. மனிதன் சிறியவன். சமூகம் பெரியது. தான் யார் என உணர்ந்த மனிதன் சமூகத்தைவிடப் பெரியவன் என்று உலகம் அறியாது. சிறியவனான சின்ன மனிதன் செய்யும் சிறு காரியங்களால் சமூகம் முழுவதற்கும் பலன் ஏற்படுகிறது. ஏற்பட்டு சமுத்திரமாகச் சேர்ந்துள்ளது என்பது உலக அனுபவம். ஆனாலும், அது மனிதன் கண்ணில் படுவதில்லை. மனத்தைத் தொட்டதேயில்லை. நடைமுறையில் அப்பலனை அனுபவிப்பவர்கள் ஆயிரம் பேர் என்றாலும், ஒருவர் தவறாமல், தவறான வழியிலேயே அதைப் பெறுகின்றனர். அது மட்டுமே வழி என உலகம் நம்புகிறது. சமூகம் தொன்றுதொட்டு ஏற்படுத்திய ஸ்தாபனங்கள் பெரியவை. சர்க்கார் இராணுவம், பாங்க், நிர்வாகம், கஜானா, ரயில்வே, பல்கலைக்கழகங்கள் என ஆயிரம் ஸ்தாபனங்களுண்டு. இவற்றின் power சக்தி, திறன் ஏராளம். இது தெரியும். இந்த ஸ்தாபனங்களைச் சுற்றி இதற்குச் சமமான அதே திறன் கண்ணுக்குத் தெரியாமல் சேர்ந்துள்ளதை நாம் அறிவதில்லை.

அவற்றை அறிவதும், அவற்றை எட்டித் தொட்டு அதிர்ஷ்டப்பலனைப் பெறும் வழியும், அவ்வழி நல்லதானால் பலன் அதிகம் என்பதையும் கூறுவதே இக்கட்டுரை.

இச்சக்திகளுடன் தற்செயலாய்த் தொடர்பு ஏற்பட்டதால் பெரும்பலன் பெற்ற நபர்கள் ஏராளம். உலகம் அதை அதிர்ஷ்டம் என அறிகிறது. அது ஒரு முறை. அனைவரும் பெறக்கூடிய முறை. பெற்றால் அதிர்ஷ்டம் அனைவருக்கும் அன்றாட நிகழ்ச்சியாகும். மக்களாட்சி நாட்டுத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வயது வந்த அனைவருக்கும் அளித்தது. அதனுள் பெரிய உண்மை மறைந்துள்ளது. அது அனைவரும் அறிந்த இரகஸ்யம். தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றபொழுதே மனிதன் தானே அத்தலைவனாகும் உரிமையையும் பெற்றான் என்பதே அவ்வுண்மை.

 • ஜனநாயகம் தலைவனாகும் உரிமையைத் தந்தது.
 • மனிதன் தலைவனாகும் திறமையைப் பெற வேண்டும்.

அத்திறமையைத் தரும் ஞானம் ஒன்றுண்டு. அதன் முக்கிய பகுதி சமூகம் அதிர்ஷ்ட சாகரம் என்பதாகும். இதுவரை அப்படி அதிர்ஷ்டம் பெற்றவர் வாழ்வையும், இன்று அதுபோல் ஏராளமாகச் சேர்ந்துள்ள சக்தியையும் அதிர்ஷ்ட சாகரம் அறிந்தால், தானுள்ள நிலையிலிருந்து அங்கு உயரும் உபாயத்தை அறிந்தால் தானும் அதை ஏராளமாகப் பெறலாம் என்ற ஞானம், திறமையாகிறது. திறமை செயல்பட்டு பலன் பெறுவது எப்படி? இதுவரை அதன் சாயலை உலகம் அறிந்த இடங்கள் எவை என்பவை நம் கவனத்திற்குரிய கருத்துகள்.

 • உலகம் இதை அறிந்து பயன் பெறுமானால், 500 ஆண்டுகளில் பெறும் பலனை இன்று பெறலாம்.

ஒருவர் இதை அறிந்து செயல்பட்டால் 100 தலைமுறைகளில் சம்பாதிப்பதை, சாதிப்பதைப் பெறலாம்.

தலைநகரில், அரண்மனையில், அரசபீடத்தில் அதிகாரம் உள்ளதை அறிவோம். அதை உலகம் நாடுகிறது. ஈயாக மொய்க்கிறது. அங்கு அதிகாரம் உள்ளதால் அங்குள்ள சிப்பந்திகட்கு முக்கியத்துவம் வருகிறது. ராஜபதவி, பணம் பெறும் வழி, சலுகை, சன்மானம், விருது ஆகியவை உலகுக்குப் புதியதல்ல. கலை, இராணுவம், கல்வி, வியாபாரம், போக்குவரத்து என ஆயிரம் துறைகளில் இது போன்று ஏராளமான unofficial power அதிகாரம் தலைமை நிர்வாகத்தைச் சுற்றியுள்ளது உண்மையானாலும், பாங்க், பணம், சமூகத்தலைமை, டெக்னாலஜி என்ற துறைகளில் பணச்சக்தி money power எப்படிக் குவிந்துள்ளது, அது நமக்கு எப்படிப் பயன்படும் என்பதை மட்டும் இங்கு விளக்குகிறேன்.

உலகமகாயுத்தம் முடிந்தவுடன் பிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முழுச் சேதத்தை அனுபவித்தன. அவை மீண்டும் தலை எடுப்பது என்பது மாளாத காரியம். உலக வங்கி, Marshall plan ஆகியவை முன் வந்து $ 17 பில்லியன் தந்து மீண்டும் சேதமடைந்த நாடுகளை உயிர்ப்பிக்க உதவின. இந்நூற்றாண்டு வாழ்வில் அது ஒரு பெரிய சாதனை என்பதை வரலாறும், பொருளாதாரமும் அறியும். $17பில்லியன் இன்றைய கணக்குப்படி $100 பில்லியன். ரூபாயில் சொன்னால் $1 பில்லியன் 4 ஆயிரம் கோடி ரூபாய். இத்தொகை இன்றைய ரூபாய் கணக்குப்படி 4000*100 = 4 லட்சம் கோடி ரூபாய்க்கு சமம். இந்திய பட்ஜெட்போல் 3 மடங்கு. அமெரிக்கா இத்தொகையை இத்திட்டத்தின் மூலம் கொடுக்க உலக பாங்க்கை நிறுவியது. சேதமடைந்த நாடுகள் சீக்கிரம் உயிர் பெற்றெழுந்தன. 9 நாடுகள் இப்பயனை அடைந்தன. இத்தொகையைக் கொடுத்து உதவியது அமெரிக்கா. இதுவரை உலகம் அறியும்.

இதுபோன்ற 3 மடங்கு தொகை மேலும் இந்நாட்டுக்குத் தர உதவிய அமைப்பு அதிர்ஷ்ட சாகரம் என்பது. இதை உலகமோ, பத்திரிகை உலகமோ அன்று அறியாது.

ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்பவர்கட்கு, அக்கம்பெனி ஊழியர்கள் என்பதால், மார்க்கெட்டில் கடன் பெறும் வசதிகள் ஏராளம். அவ்வசதிகளை முறையாகப் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களை விட இருமடங்கு, மும்மடங்கு வசதியாக வாழ முடிகிறது என நாம் காண்கிறோம். ஒரு கம்பெனி வேலை மார்க்கெட்டில் இந்த அந்தஸ்தைத் தருகிறது என்றால், சமூகத்தின் இந்த அம்சத்தைப் புரிந்து கொண்டு, நல்ல முறையில் மட்டும், அதை முழுவதுமாகப் பயன்படுத்த முன் வருபவர்கள் தங்கள் வருமானத்தை 10 மடங்கல்ல, 100 மடங்கு உயர்த்த முடியும் என்பதே எனது கொள்கை. உதாரணங்கள் எல்லாத் துறைகளிலிருந்து எடுத்தாலும், விளக்கத்தைப் பணம் என்ற துறையோடு நிறுத்திக் கொள்கிறேன். இவ்வகையில் அளவு கடந்து முன்னேறியவர்கள்,

 1. V.P. மேனன்
 2. V.K. கிருஷ்ண மேனன்
 3. காமராஜ்
 4. இந்திரா காந்தி
 5. சிம்ஸன் அனந்த நாராயணன்
 6. ஒரு வைஸ் சான்ஸ்லர்
 7. M.S. சுப்புலட்சுமி
 8. தமிழக முதன் மந்திரி
 9. ஆந்திர முதன் மந்திரி
 10. பாங்க் சேர்மன்
 11. மத்திய அமைச்சர்
 12. ரயில்வே மந்திரி
 13. சென்னை தொழிலதிபர்
 14. U.S.A. Vice President Ford
 15. டாட்டாவின் 2% பங்குகள்
 16. லால் பகதூர் சாஸ்திரி
 17. ரஷ்ய ராணி கேதரீன்
 18. பிரெஞ்சு அரசனால் ஆதரிக்கப்பட்ட லூயீ
 19. டுமாஸ் கதையில் வரும் கொள்ளைக் கூட்டத் தலைவன் வாம்பா
 20. கவி காளிதாஸன்
 21. Pride and Prejudice கதாநாயகி எலிசபெத்

மேற்சொன்ன உதாரணங்கள் பலதரத்தவை. தனிமனிதன் அதிகாரப் பீடத்துடன் தொடர்பு கொண்டதால் பயன் பெற்றவர் என்ற தலைப்பில் அனைத்தும் வரும். அவர்களை எட்டு வகையினராகப் பிரிக்கலாம்.

 • தொடர்ந்த சிறந்த ஊழியம் சேவையாக, அதிகாரமாக மாறுவது.
 • அதிகாரப் பீடத்திற்குத் தேவையான அம்சம் உடையவர் கீழ்மட்டத்திலிருப்பது.
 • உடன் உறைவதால் வரும் சந்தர்ப்பம்.
 • ஸ்தாபன அதிகாரம் நல்லெண்ணமாகவோ, புகழாகவோ மாறுவது.
 • நாட்டில் வாழ்க்கை மாறும் காலத்தில் தனிமனிதனுக்கு ஏற்பட்ட வாய்ப்பு.
 • தண்டனை பரிசாக மாறுவது.
 • நம் துறைக்கும், உயர்மட்ட அதிகாரத்திற்கும் கண்ணுக்குத் தெரியாத தொடர்பு.
 • அதிகாரப் பீடத்துடன் முனைந்து, விரும்பி, தொடர்ந்து, தொடர்பு கொள்ளுதல்.

21 மந்திரிகளை, பதவிப் பிரமாணம் எடுக்க அழைத்தபொழுது ஒருவரால் வரமுடியவில்லை. அவருக்குப் பதிலாக ஒருவரைப் போட இந்திரா காந்தி நினைத்தபொழுது அவரருகில் நின்ற முகர்ஜீயைப் போட்டார். உடனிருந்ததால் ஏற்பட்ட நிகழ்ச்சி இது.

முதல்வரும் பிரதமரும் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கார் டிரைவர் முதல்வர் தெரிவிக்கத் தயங்கிய செய்தியைப் பிரதமரிடம் கொடுத்தார். அதனால் ரயில்வே மந்திரியானார். ஆடு மேய்த்த காளிதாசனின் அழகு முகம் அவனை ராஜ குமாரிக்குக் கணவனாக்கியது. டைப்பிஸ்டாக வேலை செய்தவர் முதலாளியின் மனைவியாகி, பட்டம் பெற்று, வைஸ் சான்ஸ்லரானார். நேருவுடன் நெருங்கியிருந்ததால் மந்திரி சபையில் 4ஆம் நிலையிலிருந்தும் சாஸ்திரி பிரதமரானார். டாட்டா கம்பெனியின் பிரபலம் அதிகமானதால் 2% ஷேருடன் அடுத்த கம்பெனியின் இலாபத்தில் அவர்களால் பங்கு கொள்ள முடிகிறது. நிக்ஸன் பதவியை இழந்தபொழுது Vice President, President ஆனார். ஆனால் அவர் Vice President ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை. நியமிக்கப்பட்டவர். சிம்ஸன் கம்பெனியின் அடிமட்டத்தில் வாழ்வை ஆரம்பித்த அனந்த ராமகிருஷ்ணன் திறமையால் கம்பெனி முதலாளியானார். பொறாமையால் கிளம்பிய பெரும் புகார் ஜுனியர் ஆபீசருக்கு நேர்மையால் சேர்மன் பதவியைப் பெற்றுத் தந்தது. அரசியல் தொண்டர், கட்சிக்குச் செய்த சேவை பிரபலம் பெற்றுத் தந்து மனைவிக்கு உலகப் புகழும், பாரத இரத்தினமும் பெற்றுத் தந்தது.

ஜனநாயக நாட்டில் எவ்வகையில் பிரபலமானாலும் அது அரசியல் செல்வாக்கைப் பெற்றுத் தரும் என்பதை இரு மாநிலங்களில் கண்டோம். நேருவின் நண்பன் என்பதால் மேனன் மந்திரி சபையில் சேர்ந்தார். பள்ளியை முடிக்காத V.P. மேனன் திறமையால் Lord Mountbattenக்கு அந்தரங்க நண்பராகிக் கவர்னராக ஓய்வு பெற்றார்.

தவறான முறையில் பெரிய இடத்துடன் தொடர்பு கொள்ளுதல் எளிது. நல்ல முறையில் ஏற்படும் தொடர்பை மட்டுமே நாம் கருதுவோம். முறை தவறானதோ, சரியானதோ, பலன் கிடைக்க வேண்டுமானால்,

காரியம் பூர்த்தியாக வேண்டிய சட்டங்கள், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் நாம் பெறும் பலன், நாம் கையாளும் முறையைப் பொருத்தது. நல்ல முறைகட்கு நல்ல பலனும், தவறானவற்றிற்கு தவறான பலனும் நிச்சயம் உண்டு. முக்கிய கருத்துகள்,

 • சிறிய மனிதன் பெரிய அரங்கில் செயல்படுவதால் எந்த நேரமும் பெரிய மனிதனாகும் வாய்ப்பு அவனுக்குண்டு.
 • தொடர்பு ஏற்பட நிகழ்ச்சிகளின் தீவிரம் சமமாக இருக்க வேண்டும். சமூக உச்சியிலுள்ளவை தீவிரமானவை. மட்டத்திலுள்ள எந்நேரமும் நிகழ்ச்சிகள் தீவிரத்தால் உயர்ந்தால் தொடர்பு ஏற்படும்.
 • இத்தொடர்பை சேவை, நாணயம், சமயோசிதம்,சாதுர்யம் ஏற்படுத்தும்.
 • மயிரிழை தவறு ஏற்பட்டால் காரியம் முழுவதும் ரத்தாகிவிடும்.
 • பெரும்பாலும் இதுபோன்ற தொடர்பால் ஏற்படும் பெரும்பலன் குறுகிய காலத்திற்கே நிலைக்கும் என்பது உண்மை. நல்லெண்ணம் குறுகிய காலத்திற்கே இருப்பதால் பலனும் கொஞ்ச நாளைக்கே ஏற்படுகிறது.
 • நம் நிலைக்கும், சமூக உச்சியான அதிர்ஷ்ட சாகரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்திவிட்டால் அவை தொடர்ந்து வளரும் வழி செய்தால், பலன் நிரந்தரமாக இருக்கும். தொடர்ந்து வளரச் செய்வது தூய்மையான நல்லெண்ணம்.

மனிதன் தங்கம், வைரம், பெட்ரோல் ஆகியவற்றைக் கண்டு பயன்படுகிறான். அவன் அவற்றின் பலனைக் கண்டு கொள்ளும் முன் அவை தரையில் கேட்பாரற்று ஆயிரமாயிரமாண்டிருந்தன. இன்று அதிர்ஷ்ட சாகரம் என நான் கூறுவது அதுபோல் எவருமறியாமல் ஏராளமாக உள்ளது. 6 வகைகளில் இத்தொடர்பை தத்துவமாகவும், யோகமாகவும், நடைமுறையிலும் விளக்கலாம். அவை,

 1. Human Choice மனத்தின் போக்கு அல்லது செயல்படும் மனப்பான்மை.
 2. மேல்மனம், காலத்தாலும், அகந்தையாலும் பெரிய ஆத்மாவைச் சிறிய மனிதன் ஆக்கும் வகை.
 3. அன்னை ஜீவியம் நம்முள் எளிமையாக ஆரம்பித்தாலும் உலகத்தைத் தழுவும் முழுமையையும், தீவிரத்தையும் உயர்வாலும், வீச்சாலும் அடைகிறது.
 4. மனித முயற்சியும், தெய்வ அருளும் சேர்ந்த பூரண யோகப் பூரணம்.
 5. பிரபஞ்சத்தைக் கடந்த இறைவனின் சிருஷ்டி, உலகை பூலோகச் சுவர்க்கமாக்குவது.
 6. அதிகாரி, அரசியல்வாதி, குரு, அவதாரம் ஆகியவர்களுடைய உதாரணம்.

I. Human Choice - காரியம் செய்யும் மனநிலை. அன்றாடம் செய்யும் காரியங்கட்குப் பின்னால் ஒரு நினைவு, மனப்பான்மை, நோக்கம், கொள்கை இருப்பதுண்டு. அது பலனை நிர்ணயிக்கும். அவற்றுள் சில,

 • எதைச் செய்தாலும் தெளிவாகச் செய்ய வேண்டும்.
 • நாம் செய்யும் காரியம் நமக்கு நல்லதைச் செய்ய வேண்டும் அல்லது கம்பெனிக்கு நல்லது வரவேண்டும் அல்லது உலகத்திற்கு நல்லது அதனால் விளைய வேண்டும். பொதுவாக அது நல்ல காரியமாக இருக்க வேண்டும்.
 • வரும் பலன் நெடுநாள் நீடிக்க வேண்டும்.
 • இந்தக் காரியத்தால் எனக்கு எவ்வளவு பணம் இலாபம்?
 • இதன் மூலம் நான் அதிகமாக அன்னையை அறிய வேண்டும்.
 • இதனால் எவருக்கும் தொந்தரவு வரக் கூடாது.
 • இது எனக்குப் பிரபலம், பெருமை, புகழ் தரும்.

இதனால் எதிரிக்கு தலையில் அடிவிழும், கூட்டாளிக்கு எரிச்சல் வரவேண்டும். மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும். என் மனைவி என்னைப் பாராட்டுவாள். இவற்றிற்கு எதிரான நோக்கங்களிருப்பதுண்டு. எதுவுமே இல்லாமல் இருப்பதுண்டு. (It is unconscious). எந்தப் பெரிய காரியமும் சிறியதாக ஆரம்பிக்கின்றது. சிறியதானாலும் தெளிவான நல்ல செயலாக, கெட்டதைத் தவிர்த்த செயலாக ஆரம்பித்தால், அது பெரியதாக முடியும். அதுவே ஆரம்பம். நாம் தினமும் நம் காரியங்களைச் செய்யும்பொழுது கடனே எனவும், எரிச்சலுடனும், விரக்தியாக, பழக்கத்தால் நடக்கிறோம். பல கூடி வருகின்றன. பல கூடி வருவது இல்லை. இதை human choice மனநிலையின் கண்ணோட்டத்தில் மனச்சாட்சிப்படி எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தினால், அவை மாறும்.

காரியங்கள் சுறுசுறுப்பாக, ஜீவனோடு, பொங்கிவரும் சந்தோஷ ஊற்றாகவும், ஒன்று பலவாகப் பெருகுவதாகவும், தவறாமல் கூடி வருவதாகவும், மாறுவதைக் காணலாம். அப்படி மாறினால் நாம் முதற் கட்டத்தில் வெற்றி பெறுவோம்.

ஒரு பேரம் படிவது, கோர்ட்டில் ஒரு கேஸ் நடத்துவது, வகுப்பில் பாடம் நடத்துவது, அறுவடை செய்வது, புது ஆர்டர் பெறுவது, ஆப்பரேஷன் செய்வது, என்ன வியாதி எனக் காண்பது, சமையல் செய்வது, பரிமாறுவது, T.V. பார்ப்பது, வெளியூர் போவது போன்ற எளிமையான காரியங்கள் இத்தலைப்பில் வரவேண்டும்.

நம் காரியம் தவறாமல் கூடி வருகிறது என்பதை ஆன்மீகப் பாஷையில் சொன்னால் நம் செயல் நாம் விழிப்பாக இருப்பதற்குப் பதிலாக, நம் ஆன்மா விழிப்பாக இருக்கிறது என்கிறோம். மாற்றம் சரியானால், உயர்ந்ததானால் சில அடையாளங்கள் தென்படும்.

 • மனம் அளவுகடந்து நிம்மதியாக , சந்தோஷமாக இருக்கும்.
 • 2 ½ லட்சத்திற்கு மனை வாங்கப் போனபொழுது விலை 1 லட்சம் எனப் படியும்.
 • Product rate 13.75 ரூபாயாக வேண்டும் என்று ஆரம்பித்தபொழுது அது 23.75 ரூபாயாக முடியும். அதிலும் இதர சௌகரியங்கள் எழும். இதர சௌகரியங்களிருந்தால் அன்னையிருப்பதாக அர்த்தம்.
 • எதிர்பார்த்த இலாபம் அதிகமானால் அன்னை நம் சுயநலத்தை ஏற்று அதற்கு ஆசி வழங்குகிறார்கள் எனப் பொருள். அதுவே Self-giving ஆக மாறினால் நமக்கு வரும் பெரும் இலாபம் பிறருக்கு வரும் அபரிமிதமான இலாபத்தால் வருவதாக அமையும்.
 • நாம் பெறும் பலன் நம்மைப் போன்றவர் அனைவருக்கும் வரும்.
 • நம் செயல் உலகமெல்லாம் பெருகும். பொதுவாக அனைவருடைய சந்தோஷமும் பல கட்டம் உயர்ந்து தெரியும்.
 • காரணமேயில்லாமல் சந்தோஷம் பொங்கி வரும்.
 • நாமே இக்காரியத்தை முதலில் செய்தவராக இருப்போம்.
 • வரும் நாளில் இந்தக் காரியம் ஒரு முறையும் தவறாது.
 • மனம் இதுபோல் மாறியதிலிருந்து 4 நாளாக ஒரு துரும்பும் தவறவில்லை, தோல்வியைக் காணோம் எனத் தோன்றும். அதுஅதிர்ஷ்டம் நிரந்தரமாக வந்ததாகத் தோன்றும்.

இந்த மாற்றத்தை நாம் சிறியது பெரியதாகிறது என்கிறோம். இம்மாற்றத்திற்குத் தத்துவமான அடிப்படை உண்டு. பலன் வந்தால் போதும் என்றால் தத்துவம் தேவையில்லை. தத்துவம் தெரிந்து தெளிவு ஏற்பட்டால், வந்தது போகாது, தொந்தரவு என வாராது, எதிர்ப்பு எழாது. சம்பாதித்தது இனி எந்தத் தலைமுறையிலும் நம்மை விட்டுப் போகாது. அது போன்ற குணங்கள் வரும் தலைமுறைகளில் எழாது. அத்தத்துவங்கள்,

 • மனிதன் உடலால் பலனுக்காகவும், உணர்வால் திருப்திக்காகவும், மனதால் ஆதாயத்திற்காகவும் சுயநலமாகச் செயல்படுகிறான். மேற்சொன்னபடி மாறினால் ஆன்மாவால் இலட்சியத்திற்காக செயல்படுகின்றான்.
 • ஆன்மா செயல்படுவது பற்றற்ற துறவியின் நிலை. நமக்கோ, நம்மவர்க்கோ அப்பக்குவம் வாராது. நாம் அதிகப் பலனுக்காக நாடுவோம். அதிகப் பலனை வழ்வில் நாடினால் ஒனறு பலவாக மேற்சொன்னவாறு பெருகும். அது துறவியின் துறவறத்தைவிடச் சிரமம். இல்லத்திற்குத் துறவறத்தின் தூய்மையை அளிக்கும் முறை அது. செயல்படுவதற்குப் பதிலாக ஆன்மாவால் வாழ்விலுள்ள ஆன்மாவால் (Physic being) செயல்பட வேண்டும். அதாவது சமர்ப்பணத்தால் காரியத்தை செய்ய வேண்டும். அன்னையை மட்டும் நினைத்து செய்யும் காரியம் சமர்ப்பணமான காரியம்.
 • இச்சமர்ப்பணம் எளிதன்று. ஆரம்பிப்பதே கஷ்டம். ஆரம்பித்தால் நீடிப்பது கஷ்டம்.
 • அதனால் கொஞ்சநாள் மனதுடன் கலந்து ஆலோசித்து இருதரத்தையும் கருதி முடிவாகச் சமர்ப்பணம் வேண்டும் என்று முடிவு செய்தால், பிறகு அது நீடிக்கும். பழைய முறைகளை விட்டு புதியனவற்றை மேற்கொள்ள முடிவு செய்தால் சமர்ப்பணத்தை ஏற்க முடியும். சில உதாரணங்கள்,

பழைய மனநிலை

புதிய மனநிலை

எப்படியாவது நாம் ஜெயிக்க வேண்டும்

முறையாக மட்டும் ஜெயிக்க வேண்டும்

நாம் மாட்டிக்கொள்ளக் கூடாது

எவருக்கும் தொந்தரவு வரக்கூடாது

பொறுப்பைத் தட்டிக் கழிக்க வேண்டும்.

பொறுப்பை ஏற்க வேண்டும்

அவசரம்.

நிதானம்

சுயநலம்.

அர்ப்பணம்

உடனே பலன் வேண்டும்.

நீண்ட நாள் பலனிருக்க வேண்டும்

எந்தப் பொய் வேண்டுமானாலும்

சொல்லலாம்.

பொய் என்று மனதில் வரக்கூடாது

பணம் பாதாளம்வரை பாயும்

இவையெல்லாம் பணத்தால் முடியாது. அன்னையால் தான் முடியும்.

எவ்வளவு இலாபம் வரும் என

முதலிலேயே மனம் கணக்குப் போடும்

கணக்குப் போடத் தோன்றவில்லை

இரகஸ்யம் முக்கியம்

யாருக்கும் தெரியலாம். அவையெல்லாம் நம்மைப் பாதிக்காது.

மனிதனைவிட காரியம் முக்கியம்

காரியத்தைவிட மனிதன் முக்கியம்

ஒன்றை சரியாகச் செய்தால் அடுத்தது ஒத்து வரவில்லை. தர்மசங்கடம்

ஒன்று மாறியவுடன் அனைத்தும் மாறிவிட்டன. சங்கடம் என்று எதுவும் இல்லை

நம்மை எல்லோரும் உயர்வாக

நினைக்க வேண்டும்

நாம் செய்வது அன்னைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்

மேற்கூறியவற்றைக் கவனமாகப் படித்தவர்கள் பொதுவாகச் சொல்வது, இவையெல்லாம் நமக்கில்லை. நாம் சாதாரண மனிதர்கள். அவர்கள் கூறுவது உண்மை. ஆனால் அதை நாம் ஏற்க முடியாது. மாற்றாக நாம் கூறுவதைப் புதிய மனப்பான்மையுடன் கூர்ந்து கேட்டால் கீழ்க்கண்டவை தெரியும்.

 • இன்று நாம் அனுபவிக்கும் அந்தஸ்து, பணம், பதவி, செல்வாக்கு எல்லாம் எப்படி வந்தன என நினைத்துப் பார்த்தால் இவைகளை நாம் ஏற்குமுன், நாம் சாதாரண மனிதர்கள். இவையெல்லாம் நமக்கில்லை என்று கூறியிருந்தால், இன்று நாம் அனுபவிப்பவை நமக்கில்லை, இருந்திருக்காது (இன்று நாம் சென்னையில் வக்கீலாக இருக்கலாம், விழுப்புரத்தில் தொழிலதிபராக இருக்கலாம். எதுவானாலும் நம் முந்தைய கிராமீய மனப்பான்மை, சந்தர்ப்பத்தை உதறித் தள்ளியதால் மட்டும் வந்த புதிய நிலை இது என்பதில் சந்தேகமில்லை).
 • இன்று இம்மாறுதல்களை நாம் ஏற்காவிட்டால், உலகம் ஏற்கும். பிறகு நாம் இதில்லாமல் முடியாது என ஏற்போம். நாளைக்குக் கட்டாயமாக ஏற்பதற்குப் பதிலாக இன்றே முன்னோடியாக ஏற்பது மேல்.
 • இதுவரை நாம் பெற்ற வாழ்க்கை வசதிகளை மேற்சொன்னவாறே காப்பாற்றுகிறோம். இருப்பதைக் காப்பாற்றப் பயன்படும் முறையை ஏன் புதியதைப் பெறப் பயன்படுத்தக் கூடாது?
 • மேற்கூறிய பட்டியலில் எந்த விஷயங்கள் முடியாது என்று கூறி திட்டவட்டமாக நாம் புதியதை மறுக்கிறோமோ, அவற்றைத் தவறாது இன்று உள்ளதைக் காப்பாற்றப் பயன்படுத்துகிறோம் எனத் தெரியும்.

ஆராய்ச்சியைத் தொடரலாம். தொடராமலிருக்கலாம். முடிவாக நம் அன்பர்கள் அறிவது ஒன்றுண்டு. அது.

நமக்கு முன்னேற்றம் வேண்டுமா? வேண்டாமா?
வேண்டும் எனில் முயற்சி செய்ய நாம் தயாரா?
முயற்சி உலக வழக்கில் பலிக்கலாம், பலிக்காமருக்கலாம்.
அன்னை முறைப்படி அது பலிக்கும், தவறாது.
அதற்குரிய நல்லெண்ணம் நமக்கிருக்கிறதா?
இருந்தால் உண்டு, இல்லையென்றால் இல்லை.

மனிதன் முன்னேறப் பிரியப்படவில்லை. ஊர் முன்னேறிய பின்தங்கப் பிரியப்படாமல் முன்னேற்றத்தை நாடுவதே வழக்கம். தன் மனநிலைக்கேற்ப பேச்சை, தானே மனிதன் மாற்றிக் கொள்கிறான். ஊரும், உலகமும் முன்னேறியபின் அவர்கள் பின் ஓடுபவர்கள் 1980திலும் 1990ளிலும் முதல் தலைமுறை படிப்பை நாடியவர்கள் போலாவார்கள். நாம் கருதுவது அன்பர்கள், புதிய வாய்ப்பைப் புரிந்து கொண்டவர்கள். மேலும் வாய்ப்பை விரும்புகிறவர்கள். அதற்கான முழு முயற்சி செய்ய முன்வருபவர்கள். அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பாதவர்கள். அன்னையை பக்தியுடன் மனதால் ஏற்பவர்கள், அவர்களுக்கு இப்புதிய வாய்ப்பைப் பெறும் ஞானத்தைத் தருவது, ஞானத்தை சக்தியாக மாற்றும் முறையைக் கூறவும், அது சித்திக்கும்வரை அவர்களுக்கு ஆதரவு தர முயல்வதும் இக்கட்டுரையின் பங்கு. இந்த மாற்றம் செயலால் ஏற்படுவதில்லை. உண்மையில் இது மன மாற்றம். மனம் மாறிய பின் செயல் புனிதச் செயலாகும். எளிய செயல்கள் எண்ணற்ற பலன் தரும். ரயில்வே போர்ட்டர் ரயில்வே மந்திரியானது போலிருக்கும். ஓட்டல் சந்தித்த நண்பர் முதல் மந்திரியின் மகனாக இருப்பார். தற்செயலாக சொன்ன சொல் அவரை ஆயுளுக்கும் பார்ட்னராக்கும். ஒரு செயல் அதுபோல் மாறினால் நாள் முழுவதும் அனைத்துச் செயல்களையும் அதுபோல் மாற்ற முடியும். முடிந்தால் நம் பங்கின் பிரதான கட்டம் முடிந்துவிட்டது. நம் நிலையில் சிறியது பெரியதாகிவிட்டது. (Finite changes into infinite).

இந்த வெற்றி ஆரம்பித்தது முதல் செயலுக்குரிய சட்டங்களில் மயிரிழை தவறாமல் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை எனக் கூறத் தேவையில்லை. சிருஷ்டியிலுள்ள எல்லா நிலைகளிமுருந்தும் ஓர் உதாரணம் கூறுவோம்.

Physical

ஜடம்

பொருள்கள் கலையாமல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவேண்டும்.

Vital

பிராணன்

ஒருவர் பேசும்பொழுது குறுக்கே பேசத் துடிப்பதை கட்டுப்படுத்தவேண்டும்.

Mind

அறிவு

நம் எண்ணம் ஆதாயத்தை நாடுவதைத் தடுக்கவேண்டும்

Higher Mind

ஆன்மா

நிதானம் தவற முனையும் நேரம் கட்டுப்பாடு தேவை

Illumination

திருஷ்டி

மனக்கண்ணில் எழுந்த காட்சிகளை நாம் எப்படிப்புரிந்து கொண்டோம் என்று நிர்ணயிக்க வேண்டும்

Intuition

யோகம்

உள்ளே எழும் உந்தல்களின் அளவு எவ்வளவு

Over mind

தெய்வம்

அடுத்தவர் தொந்தரவை மீறி வெற்றிகரமாகச் செயல்படும்திறன்

Super mind

சத்தியஜீவியம்

எதிரியின் கண்ணோட்டத்தில் பிரச்சினையைப் புரிந்துகொள்வது

Consciousness

ஜீவியம்

எந்த அளவுக்கு எண்ணம் பலிக்கிறது

Being

சத்

நம் நிலையைவிட எவ்வளவு நம் மனம் உயர்ந்து உள்ளது

மனிதனைத் தெய்வமென நாம் அறிவோம். அவன் விலங்கு எனவும் நாம் அறிவோம். மனிதனுக்கு இந்த இரண்டு மட்டுமல்ல மேற்சொன்ன 10 நிலைகளும் அவனுள் உள்ளன. எதை அவன் முக்கியமாகக் கருதுகிறானோ அதுவே பலன் தரும். ஆசை எழுந்தால் அடக்கிக் கொள்கிறோம். நல்ல பலன் வருகிறது. ஆசையை வெளிப்படுத்துகிறோம். அடுத்தவர் குறைவாக நினைக்கிறார். அடக்கினால் உயர்கிறோம், வெளிப்படுத்தினால் தாழ்கிறோம். ஜடத்திலிருந்து பிரம்மம்வரை நம்முள் அனைத்தும் உண்டு. ஒவ்வொரு செயலும் நின்று, நிதானித்து, பொறுமையாக நம்மால் அதிகபட்சம் எப்படி நடக்க முடியுமோ அதுபோல் நடப்பது மனிதன் அளவுகடந்த அதிர்ஷ்டத்தைப் பெறத் தகுதியை அளிக்கும்.

மேலேயுள்ள அதிர்ஷ்ட சாகரத்தைக் கீழேயுள்ள மனிதன் எட்டித் தொட அவன் ஒவ்வொரு நிமிஷமும் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மைத்துனன் வந்து தமக்கையை அழைத்துப் போக வேண்டும் என பக்தரைக் கேட்டபொழுது, அனுப்பாதே என உள்ளிருந்து குரல் வந்தது. உள்ளிருந்து வரும் உந்தலுக்கு யோக ஞானம், intuition எனப் பெயர். இது யோகிகட்கு உரியது. நமக்கு உரியதன்று. அன்னை, பக்தனுக்கு, இவ்விஷயத்தில் யோகியின் நிலையை அளித்தார். பக்தர் மனம் குழம்பியது. மைத்துனனுக்கு எப்படி இல்லை எனக் கூறுவது என நினைத்து அனுப்ப சம்மதித்தார். குரல் வலுவாயிற்று. புறக்கணித்தார். மறுநாள் குழந்தைக்கு ஜுரம். மாமனார் வீடு கிராமம். கம்பவுண்டர் பென்சிலீன் போட்டார். அலர்ஜியால் ஷாக் வந்து குழந்தை இறந்தது. பலர் பேசும்பொழுது நம் கருத்தைத் தெரிவிக்க ஆர்வம் எழுகிறது. அனைவரும் நமக்கு அடங்கியவர்கள், சிப்பந்திகள், நாம் குறுக்கே பேசுவதைத் தடுக்கமாட்டார்கள். என்றாலும்

குறுக்கே பேசாமலிருந்தால் நாம் விலங்கு (vital பிராணன்) நிலையிலிருந்து மனித நிலைக்கு உயருகிறோம். நம்மை அடக்க முடியாமற் போனால் விலங்கு நிலைக்கு போகிறோம். மேல்நாட்டு வீடுகள், ஆபீஸ், தெரு ஆகியவை அளவு கடந்த ஒழுங்காக இருப்பதை நாம் பல வழிகளில் அறிகிறோம். ஜடம் physical life. அங்கு மேல்நாட்டார் ஒழுங்கைக் கண்டனர். அவர்கள் வளம் பெற்றதற்கு அது முக்கிய காரணம். நாம் அந்த முதல் நிலையிலும் தேறவில்லை. வீட்டிலிருப்பது ஒரு கார். நாளைக்கு வெளியூர் போவதாகத் திட்டம். தமக்கையை அழைத்துவர கார் போக வேண்டுமெனப் பேசினால், நான் எப்படிப் போவது என்று நினைப்பவன் மனத்தால் செயல்படுபவன். தன் சௌகரியத்தைக் கருதாது, கார் அக்காவை அழைத்து வருவதுதான் சரி என மனம் கூறினால் அவனால் மனத்தைக் கடக்க முடியும். இந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்தவன் நான். வெற்றிகரமாகச் செயல்பட்டு இன்று ரிஜிஸ்டர் செய்யப் போகிறேன். தலைமைப் பதவிக்கு நான் மட்டுமே தகுதியுள்ளவன். நானே அதை முனைந்து எடுத்துக் கொள்ளாவிட்டால், யாராவது அடித்துக் கொண்டு போய் விடுவார்கள். நானே முந்திக் கொண்டு என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டால் யாரும் வாயைத் திறக்கமாட்டார்கள் என்ற மனநிலை நிதானமற்ற மனநிலை. அது சமயம் நிதானமாக பக்தரிருந்தால், அனைவரும் அவரையே தலைவராக நியமித்தால், அது முனிவர் நிலை ஆன்மாவுக்குரிய நிலை. அன்னை அவ்விஷயத்தில் பக்தரை முனிவராக்கியுள்ளார் எனப் பொருள்.

முன்னுக்கு வருபவனுக்கு உடனுள்ளவர் தொந்தரவு கொடுப்பது வழக்கம். அதில் அடிபடுவோர் பலர். அடிபட்டு எழுந்து நிற்பவர் பலர். ஒரு பக்தருக்குச் சம்பந்தமில்லாத ஊரும், உலகமும் ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்து அழித்து ஒழிக்க முடிவு செய்து செயல்பட்டனர். அவரது திட்டங்கள் அதனால் பாதிக்கப்படவில்லை. திட்டங்களால் ஏற்பட்டிருக்கக் கூடிய பெரும்பலன் சுருங்கியது.

எதிர்ப்பு ஏற்பட்டு பல ஆண்டு கழிந்து மறைந்தது. இங்கு காப்பாற்றியது எந்த சக்தி? பக்தருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது தெரியாது, மறைந்தது தெரியாது.

முன்னே சொன்ன 10 நிலைகளை (ஜடம் முதல் சத்வரை) பகவான் இரண்டாகப் பிரிக்கிறார். ஜடம், வாழ்வு, அறிவு, முனிவர், ரிஷி, யோகி, தெய்வம்வரை முதல் நிலை. இங்கு அறியாமையும் அறிவும் கலந்துள்ளன. தெய்வலோகத்திற்கும் அறியாமையுண்டு. ஆனால் அங்குள்ள அறிவுக்கு அறியாமையால் பாதிக்கப்படாமல் செயல்படும் திறன் உண்டு. பக்தர் எதிர்ப்பால் பாதிக்கப்படவில்லை. எனவே அவரைக் காப்பாற்றிய சக்தி தெய்வலோகத்திற்குரிய சக்தி.

அன்னையை அறிந்தவர்கட்கு அன்னை, அவர்கள் விரும்பினால், சித்வரை, அதைக் கடந்த பிரம்மம்வரை எந்த நிலை சக்தியையும் அளிக்க முன் வருகிறார்கள். அன்பர்கள் எந்த சக்தியையும் தவறாமல், நிபந்தனையைப் பூர்த்தி செய்து பெறலாம். அடுத்த கட்டம் போனால் அவர்களே அச்சக்திக்கு உறைவிடமாகவும் ஆகலாம். அன்னையை அறியாதவர்கட்கு இது இல்லை.

கோர்ட் ஏற்பட்டபின் சுப்ரீம் கோர்ட்வரை போய் நீதி கேட்கும் உரிமை ஏற்பட்டுள்ளது. கோர்ட் ஏற்படுமுன் இந்த வசதியில்லை. அதுபோல் அன்னை பக்தர்கட்குப் பிரம்மம்வரை உள்ள ஆன்மீக சக்தி தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வாய்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், மேதையாக ஆவதற்கும், அதிர்ஷ்டம் பெறுவதற்கும், இறைவனாக மாறுவதற்கும் கிடைக்கும். இந்த சக்தி மனிதனை சத்திய ஜீவனாக்கும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். நான் அந்த யோக இலட்சியத்தைப் பற்றி இங்கு எழுதவில்லை. அதற்கு 1000 நிலை கீழேயுள்ள அதிர்ஷ்ட சாகரத்தைப் பற்றி எழுதுகிறேன். இந்திரா மகனுக்கு பிரதமராகும் வாய்ப்பு காத்துக் கொண்டிருந்தது. அவர் ஓர் ஆபீசராகலாம் எனக் கூறுவதுபோல் நான் அன்பர்களுக்குச் சொல்கிறேன். நாம் என்ன செய்யவேண்டும் எனக் கூறுமுன் யாருக்கு இது பலிக்கும் என்று கூறுகிறேன்.

 • மனம் தூய்மையாக, தன்னலமற்றதாக, தீங்கு நினைக்க முடியாத மனமாக இருந்து கடும் உழைப்பை மேற்கொள்ளும் திறமைசாலிகட்கு இது பலிக்கும்.

இதையே வேறு வகையாகக் கூறினால் நமக்கு அதிர்ஷ்டம் வருமுன் அடுத்தவர்க்கு வரவேண்டும் என்ற பரந்த நல்லெண்ணமுள்ளவர்க்கு உரியது மேற்சொன்னது. பிறருக்கு வரும் அதிர்ஷ்டம் நம் மனதைப் பரவசப்படுத்தி பூரித்தால் நமக்குத் தகுதியுண்டு. அதன் பிறகு செய்ய வேண்டியவை,

 1. நாளின் எல்லாச் செயல்களையும் பெரிய செயல்களாக மாற்ற வேண்டும்.
 2. முறை இரண்டாம்பட்சமாகவும் ஜீவன் முக்கியமாகவுமிருக்க வேண்டும்.
 3. நமக்கேயுள்ள (பொதுவாக ஒரு குறையேயிருக்கும்) குறையை முனைந்து விலக்க வேண்டும்.
 4. முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது.

உடலால் மட்டும் உழைப்பவன் உழைப்பாளி, கூலிக்காரன். உணர்வால் உழைப்பவன் மேஸ்திரி, நாட்டாமைக்காரன், சூப்பர்வைசர். இவர்களுடைய வருமானம் அதிக வித்தியாசமில்லாவிட்டாலும் சமூக அந்தஸ்து என்ற வகையில் உழைப்பாளிகளை விட நாட்டாமைக்காரன் 10 மடங்கு உயர்ந்த பின் அதேபோல் அறிவோடு வேலை செய்பவன், அறிவால் உழைப்பவன், மனத்தால் செயல்படுபவன் பட்டம் பெற்று அதற்குரிய வேலையையோ, அதே வேலையையோ செய்பவனுக்கு நிலைமை 100 மடங்கு உயருகிறது. வருமானம் என்ற அளவில் அதிகம் தெரியாவிட்டாலும், நாட்டாமைக்காரனுக்கும், வக்கீலுக்குமுள்ள வித்தியாசம் சமூகத்தில் 100 மடங்கு வித்தியாசமானது. அடுத்தவன் ஆன்மாவால் செயல்படுபவன். ஆன்மா என்பதற்கு உயர்ந்தது என்ற கருத்துடன், அனைத்தையும் தன்னுட்கொண்டது என்று பொருள். ஒரு நிர்வாகம் செய்பவன் தொழிலதிபராக இருப்பவன் அனைவரையும், அனைத்தையும் சமாளிக்க வேண்டியவன். அந்தக் கோணத்தில் தொழிலை நிர்வாகம் செய்பவன், பல்கலைக்கழகம் போன்ற ஸ்தாபனத்தை நிறுவி, நிர்வாகம் செய்பவன் சமூகத்தில் ஆன்மாவால் செயல்படுபவனாகக் கருதப்படலாம். வக்கீல், டாக்டர், ஆசிரியர் போன்றவர்களுடன் அவன் நிலையை ஒத்திட்டுப் பார்த்தால் அது 1000 மடங்கு உயர்ந்திருக்கிறது. எந்தத் தொழிலும் உயர்வு, தாழ்வுண்டு. அதனால் ஒத்திட்டுப் பார்ப்பது சரியாகத் தெரியாது. ஒரே சந்தர்ப்பம், ஒரே திறமையுள்ள பல்வேறு மனிதர்களை பல்வேறு நிலையில் எடுத்துப் பார்த்தால், 1, 10, 100, 1000 என்று நிலை உயர்வதைக் காணலாம். அடுத்த கட்டம் அன்னை. அது கணக்கில்லாத உயர்வுடையது. நாம் அதை 10,000 எனக் கூறலாம். இவையெல்லாம் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஏனெனில் எந்தப் பெரிய உயர்வு வந்தாலும், பெரும்பாலும் பெற்றவர் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமும் ஆடி அனைத்தையும் சிதறடித்துவிடுகிறார். எஞ்சி நிற்பதையே நாம் காணுவதால், முழுப் பலனையும் நாம் ஓரு பொழுதும் காண்பதில்லை. ஒரு சிலர் இவற்றைக் கடந்த நிலையில் பலன் பெறுவதை அறிவோம். அவை தற்செயலாய் நடந்தவை. தற்செயலாய் நடப்பவற்றை திட்டமிட்டு நடப்பவையாக மாற்றுவது நம் நோக்கம். (Change the unconscious event into a consciously planned work).

இராணுவம் தரும் பாதுகாப்பு, பணம் :

நாம் பொதுவாக இராணுவத்தைக் காண்பதில்லை. அது எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது. ஆனால் ராணுவம் நாட்டைப் பாதுகாக்கிறது எனத் தெரியும். உள்நாட்டில் இராணுவத்தின் வேலையைச் செய்ய போலீஸ் இருக்கிறது. அதன் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் ரிஸர்வ் போலீஸ் உண்டு. மேலும் ஸ்பெஷல் போலீஸ் உண்டு. நாம் காண்பது போலீஸ். அதற்கு ஆதரவாக ரிஸர்வ், ஸ்பெஷல் போலீஸ்களும், Home guards, N.C.C., territorial Army எனவும் அமைப்புகளுண்டு.

 • கண்ணுக்குத் தெரியும் போலீஸ் கொஞ்சம்.
 • கண்ணுக்குத் தெரியாத போலீஸ் ஏராளம்.

இவற்றைக் கடந்த நிலையுண்டு. மக்கள் தாங்களே கட்டுப்பட்டு வாழும் மனநிலை. ரோட்டில் போகும் வயதான பெரியவரை, குழந்தையை, பெண்ணை இம்சை செய்ய ஒருவன் முனைந்தால் அங்கு போலீஸ் வந்து பெரியவருக்கு உதவி செய்யுமுன் அங்குள்ள அனைவரும் அந்த ரௌடியை விரட்டுகின்றனர். மக்கள் மனத்திலுள்ள பாதுகாப்பு, நியாய உணர்ச்சி போலீஸ், இராணுவம் போன்றன, பாதுகாப்பு என்ற கருத்தை நினைத்தால் போலீஸ் பாதுகாப்புத் தருகிறது. சமூகத்திலுள்ள பாதுகாப்பு அமைப்பு, உணர்ச்சி ஏராளம், infinite எனலாம்.

பணம் என்பது ரூபாய், கரன்ஸி நோட்டு. சர்க்கார் அச்சிட்டு கஜானா மூலம், பாங்க் மூலம் வழங்குவது பணம். இது போலீஸ் போன்றது. இதைக் கடந்த நிலையில் மார்க்கெட்டில் புழங்கும் பணம் ஏராளம். பவுனாக, வெள்ளியாக உள்ள பணம் $200 பில்லியன் என கணக்கிட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு உதவி ஓராண்டில் பெறுவது $4 பில்லியன் என்றால் பவுனில் எவ்வளவு மறைந்திருக்கிறது எனத் தெரியும். அது $200 பில்லியன் அன்று அதைப்போல் 10 மடங்கு என்று ஒரு கணக்கு. பவுனைத் தாண்டி வீடு, கட்டடம், நிலம் என சொத்துண்டு. சொத்துகளெல்லாம் பணமல்லவா? நாம் காணும் கரன்ஸியை மட்டும் பயன்படுத்துகிறோம். அதைக் கடந்த பணம் எல்லாம் இன்று நேரடியாக நமக்கு உதவுவதில்லை. இவற்றைச் சமூகம் பயன்படுத்த ஆரம்பித்தால், அல்லது ஒருவர் பயன்படுத்த முயன்றால், எவ்வளவு உபரி பணம் எழும் என நினைத்துப் பார்க்க முடியுமா? இத்துடன் பணம் முடிகிறது. நாம் தவணை முறையில் பொருள்கள் வாங்குகிறோம். அப்படியென்றால் என்ன? எதிர்கால வருமானத்தைக் கொண்டு இன்று பொருள்கள் வாங்குகிறோம். அதற்கு முடிவுண்டா? கடந்த 30 ஆண்டிற்கு முன் நம் வருமானம் என்ன? இன்று என்ன? எதிரே வரும் 30 ஆண்டுகட்குப் பின் என்ன வருமானம்? அவை எவ்வளவு பணம்? அவ்வளவு பணத்தைப் பயன்படுத்த முடியுமா? பணம் அபிரிமிதமாக நாட்டிலுள்ளது. நாம் இன்று பயன்படுத்துவது அதில் ஒரு சிறு பங்கு என நாம் அறிய முடியாதா? அதையே

அதிர்ஷ்ட சாகரம் என்றேன்.

நான் சொல்லும் சாகரம் பணத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா அம்சங்களிலும் உண்டு. இப்படி ஓர் அம்சம் சமூகத்திலிருக்கிறது என்பதை அறிவு புரிந்து கொள்வது முதற்படி. அதை எப்படி நம் வாழ்வில் கொண்டு வருவது என்பது அடுத்தது. இரண்டையும் ஒருவர் செய்து முடித்தால் அவருடைய செல்வம் எத்தனைத் தலைமுறைக்கு வரும்? பெறுவது பெரியது. அடுத்த தலைமுறை, வரும் தலைமுறைகளைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? பொதுவான அனுபவம் ஒரு தலைமுறை சம்பாதித்தால் அதே வேகத்தில் அடுத்த தலைமுறை அழிக்கிறது. அதைத் தடுக்க வழியுண்டா?

 • கல்வி
 • Character நல்ல குணம்
 • இலட்சியம்

ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியுமானால், தவறு நடக்காது. கல்வி என்பது பள்ளிப் படிப்பில்லை. பொதுவாகப் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் படிக்க மாட்டார்கள். படிப்பு உள்ள அளவுக்கு அழிவு குறையும். பிள்ளைகள் கருத்தாக இருக்கும் கல்வியே கல்வி. அதையே கல்வி எனக் குறிப்பிட்டேன். அதைக் கொடுக்க முடியுமா? பரம்பரை பரம்பரையாக அழியாத சொத்துள்ள இடத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், நமக்கும் அவர்கட்கும் உள்ள வித்தியாசம் புரியும். அனைவரும் பின்பற்றும் நல்ல முறைகளை நாம் புறக்கணிக்க முடியாது. கூடாது. அன்னை பக்தர் என்ற அளவில் நமக்கு என்ன உண்டு? உலகில் இதுவரை எவரும் கண்டிராத பாதுகாப்பு நமக்குண்டு. அதைப் பின்பற்ற முடியுமா? முடியும் என்றால் என்ன நிபந்தனைகள்?

 1. அனைவரும் பின்பற்றும் நல்ல முறைகளை ஏற்க வேண்டும்.
 2. நம்மால் முடிந்தவரை நல்ல குணம், இலட்சியத்தைப் பிள்ளைகட்குத் தரவேண்டும்.
 3. நம்மிடம் மறைந்துள்ள கெட்ட குணங்கள் பிள்ளைகளில் தலை எடுக்கும்.
 4. நம்மிடம் உள்ள உயர்ந்த குணங்கட்கு எதிரானவை பிள்ளைகளில் உற்பத்தியாகும்.
 5. செல்வம் சம்பாதிக்கும் திறமை வேறு, காப்பாற்றுவது வேறு.
 6. அது காப்பாற்றப்படுவது எந்த வகையில் அது ஈட்டப்பட்டது என்பதைப் பொருத்தது.
 7. பிள்ளைகட்குச் சொந்தமாக அன்னை மீது நம்பிக்கை வேண்டும்.
 8. அன்னை பக்தியுடன் அடுத்த சாமிகளைச் சேர்ப்பது காரில் மகாத்மா காந்தி மாட்டைக் கட்டி ஓட்டியது போலாகும். அவை அறவே நீக்கப்பட வேண்டும்.
 9. வளரும் செல்வத்தைக் காப்பாற்ற வளரும் character சுபாவத்தைப் பெற வேண்டும்.
 10. கெட்டது கலப்பற்ற நல்லதே நம் வாழ்வு, பிள்ளைகள் வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமைய வேண்டும்.

மேற்சொன்னவற்றை ஏற்பவருக்கு ஆடம்பரம் விலக்கு. கணவன் விலக்கிய ஆடம்பரத்தை மனைவி சேர்த்து அனுபவிப்பாள். ஆடம்பரம் என்ற மனப்பான்மை நம் வாழ்விலிருந்து காத தூரம் விலக வேண்டும்.

 • முழுமையான அன்னை பக்தி இத்தனையையும் அடக்கம் மூலம் சாதிக்கும்.
 • அடக்கம் ஸ்ரீ அரவிந்த சின்னம்.
 • அடக்கத்திற்கு நிகரானது Self-giving அர்ப்பணம்.

மனம் தானே அடங்கி, அர்ப்பணத்தை மேற்கொண்ட பக்தர் குடும்பத்திற்கு என்றும் அழிவில்லை.

 • சம்பாதிப்பதும், சாதிப்பதும் அரிது.
 • சாதித்ததைக் காப்பாற்றுவது அதனினும் அரிது.
 • காப்பாற்ற குடும்பம் முழுவதும் மனதால் விழைவது பூலோக அதிசயம்.

எந்த ஒரு பக்தர் நல்லெண்ணத்தால் நிரம்பிப் பெருஞ்செல்வம் பெற முனைகிறாரோ அவருக்கு வெற்றி நிச்சயம். பெற்ற செல்வத்தை அடக்கமாக மூடநம்பிக்கைகளை விலக்கி, இதர தெய்வ வழிபாடுகளை காப்பாற்ற முன்வரும் பக்தர் குடும்பம் நாட்டில் எதிர்காலத்தில் முதன்மையாகும். ஆடம்பரம் விலக்கு. அந்த எண்ணம் அறவே விலக்கு. ஆடம்பரம் அனைத்தையும் அழிக்கும். மனத்தைச் சோதனை செய்தால் நூறு வழிகளில் மனம் ஆடம்பரத்தை மட்டுமே விரும்புவது தெரியும். அதை அனுபவிக்க நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானம் 'மனிதன்' யார் என விளக்கும்.

மேல்நாடுகள்போல் நாம் செல்வம் பெற முடியுமா? அவர்கள் 300 ஆண்டுகளில் சாதித்ததை சாதிக்க நமக்கு 100 ஆண்டாவது ஆகாதா? சுதந்திரம் வந்து 50 ஆண்டாகிறது. என்ன முடிந்திருக்கிறது என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அமெரிக்காவில் 36,000 மைலுக்கு ரயில்வே போட்டார்கள். பகீரதப் பிரயத்தனம். 1 நாளில் 1 மைல் தண்டவாளம் போடப்பட்டது. அப்படியானால் எத்தனை வருஷமாயிற்று? 200 வருஷங்கட்கு முன் ஐரோப்பிய நாடுகளில் செல்வர் வீடுகள் எப்படியிருந்தன? இன்று நம் நாட்டில் பெரும்பணக்காரர்கள் வீடுகள் எப்படியிருக்கின்றன? ஒப்பிட முடியுமா? மேல்நாடுகளில் சராசரிக்கு மேற்பட்டவர்களில் பொய் சொல்வது என்பதில்லை. நம் நாட்டில் சிகரத்தில் எத்தனை பேர் தேறுவார்கள்? மேல்நாடுகளை நாம் எட்ட முடியும். நமக்குரிய பெரிய அம்சத்தை நாம் பாராட்டினால், கடந்தகாலப் பெருமைகளை, நிகழ்காலப் பொக்கிஷங்களாக மாற்ற நாடு முன்வந்தால், அது முடியும் என்பதைக் கீழ்க்கண்ட கருத்துகள் மூலம் நான் கூறுகிறேன்.

 • மேல்நாட்டு வாழ்வுத் தரத்தை நாம் எட்டுவது 300 ஆண்டிலும் முடியாதது என்பது உண்மை.
 • அதற்குச் சட்டம் போட்டுச் சாதிக்க முடியாது. அடிமட்டத்தில் மனிதன் மனதால் மாறவேண்டும்.
 • சுதந்திரம் வந்தபின் நாடு முக்கியமான விஷயங்களில் பின்நோக்கிப் போகிறது.
 • மனித வாழ்வின் முழுமைக்கு வளமும், ஆன்மீகமும் வேண்டும். இரண்டும் முக்கியம்.
 • நாடு வளம் பெறாமல், இந்தியா முன்னேற முடியாது.
 • மேல்நாடுகள் ஆன்மீகம் பெறாமல் முழுமை பெற முடியாது.
 • மேல்நாடுகள் நாம் பெற்ற ஆன்மீகத்தைப் பெறுவதை விட, நமக்கு அவர்களுடைய சுபிட்சத்தைப் பெறுவது எளிது.
 • எந்த நாடு முன்னேற வேண்டுமானாலும், அதன் சொந்த வலிமையை வளர்க்க வேண்டும்.
 • மேல்நாடுகள் அவர்கள் செழிப்பின் ஆன்மீக அஸ்திவாரத்தை அறிய வேண்டும்.
 • நாம் நம் ஆன்மீகத்தின் செழிப்பு அம்சத்தை அறிய வேண்டும்.
 • நம் நாட்டுயர்வை நாமறிய இன்று அதை அமெரிக்கா ஏற்றால்தான் நாம் ஏற்போம்.
 • நாம் ஏற்ற பிறகே தம் டெக்னாலஜியை தாம் ஏற்போம் என அமெரிக்கர் கூறுவதில்லை.
 • ஒரு வகையில் ஆன்மீகம், டெக்னாலஜியை விட உயர்ந்தது.
 • ஆன்மீகம் டெக்னாலஜியை ஏற்க முடிவு செய்தால், டெக்னாலஜி ஆன்மீகத்தை ஏற்பதைவிட அது எளிது.
 • இரண்டும் தேவை.
 • ஒன்றை மற்றதுடன் இணைப்பது இயலாத காரியம். இதுவரையில் உலகில் நடவாதது.
 • மேல்நாட்டு வழிபாடும், டெக்னாலஜியும் இன்று பிரிந்துள்ளன.
 • நம் நாட்டு ஆன்மீகம் டெக்னாலஜிக்கு எதிரானது.
 • இரண்டையும் சேர்க்க முடியும் என்று பேசியவர் குறைவு.
 • இரண்டையும் இணைக்கும் தத்துவம் இன்றுவரை உலகில் ஏற்படவில்லை.
 • கத்தோலிக்க மதமும், கம்யூனிசமும் உலகை ஆள்கின்றன என்றார் அன்னை.
 • இரண்டும் வெற்றி பெறவில்லை.
 • ஸ்ரீ அரவிந்தம் இரண்டும் இணையும் தத்துவத்தை உலகுக்குக் கொடுத்துள்ளது.
 • இல்லறத்திற்குத் துறவறத்தின் தூய்மையை அளிக்கும் நல்லறம் அது.
 • அத்தத்துவப்படி அவை இணைய முடியும்.
 • அது நடப்பதானால், அன்பர்கள் வாழ்வில் முதலில் நடக்க வேண்டும்.
 • அது நடக்க ஏற்பட்ட ஸ்தாபனங்கள் அன்னைக்கு எதிரிகளாகிவிட்டனர்.
 • மனித வாழ்வில் ஆன்மீகமும், சுபிட்சமும் இணைய அன்பர்கள் வாழ்வு முன்னோடியாக அமைய வேண்டும், அமைய முடியும்.
 • எந்த அன்பர் நல்ல முறையில் பெருஞ்செல்வம் பெறுகிறாரோ அவர் வழிகாட்டி.
 • பெற்றதைக் காப்பாற்றுபவர் பெரிய ஆத்மா.

இக்கருத்துகளுக்குரிய தத்துவங்களும், நடைமுறைகளும், உதாரணங்களும் நமக்குதவும்.

II. மேல்மனம் - அகந்தை - காலம் - சிறியது (Infinite) - பகுத்தறிவு.

மனித வாழ்வு மேல்மனத்தில் அகந்தையை மையமாகக் கொண்டு காலத்தாலும், அதன் கருவியான கர்மத்தாலும் கட்டுப்பட்டுச் சிறியதாகவுள்ளது எனப் பகுத்தறிவு கூறுகிறது.

மேல் மனத்திலிருந்து அகன்று உள்ளே போய் அடிமனத்தில் புதைந்துள்ள ஆன்மாவைக் கண்டு அகந்தைக்குப் பதிலாக ஆன்மாவை மையமாகக் கொண்ட வாழ்வு காலத்தையும், கர்மத்தையும் கடந்த பெரிய (Infinite) வாழ்வாகும் என ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.

நாம் அறிவதை மேல்மனம் எனவும், நம் புலன்கட்கு அப்பாற்பட்டதை உள்மனம் எனவும், கடந்த கால வாழ்வை பொக்கிஷமாகப் பெற்றதை ஆழ்மனம் எனவும், பரமாத்மாவும் ஆழ்மனமும் சந்திப்பதை அடிமனம் எனவும் கூறும் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மா சைத்திய புருஷன் அடிமனத்துள்ளிருப்பதாகக் கூறுகிறார்.*

__________________________________________________________________________________ * மேல்மனம் - Surface mind உள்மனம் - Inner mind ஆழ்மனம் - Subconscious mind

பரமாத்மா - Superconscient அடிமனம் - Subliminal


 

அகந்தையும், மேல்மனமும், காலமும், மனமும் சிறியதை உருவாக்குகின்றன.

சைத்தியப் புருஷனும், அடிமனமும், காலத்தைக் கடந்த நிலையும், அடிமனமும் பெரியதை உருவாக்குகின்றன. சிறியது (finite) பெரியதாவதே (infinite) நமது இலட்சியம். நாம் புறக்கணிக்க வேண்டியவை எவை, ஏற்க வேண்டியவை எவை எனத் தெளிவாகத் தெரிகின்றன. எப்படி என்ற கேள்விக்கு மேலும் விளக்கம் தேவைப்படுகின்றது.

 • அகந்தை என்பது கர்வம், திமிர், கோபம், சுயநலம் ஆகியவற்றால் ஆனது என்றால் அவற்றை விலக்க வேண்டும் என்பது தெளிவு.
 • மனம் சிறியது. அதைக் கடக்க அதன் முக்கியக் கருவியான எண்ணம் அறவேண்டும் என்பது எளிமையாகப் புரியும். செயல்படுத்த நாம் முனிவராக வேண்டும். நடக்கப் போவதில்லை.
 • காலத்தை எப்படிக் கடப்பது? சிறியதை எப்படிப் பெரியதாக்குவது, மேல் மனத்திலிருந்து எப்படி உள்ளே போவது?
 • கடந்ததையும், எதிர்காலத்தையும் கருதாமல் நிகழ்காலத்தில் மூழ்கிப் பரவசப்பட்டுத் தன்னை மறப்பது காலத்தைக் கடக்கும் உபாயம். இதைப் புரிந்து கொள்வது முடியும். செய்வது சுலபமன்று.
 • சிறியதனுள் பெரியதுண்டு. செயலைக் கருதினால் சிறியது, செயலின் கருவான ஆன்மாவைக் கருதினால் பெரியது. செயலைவிட்டகன்று, அதன் ஆன்மாவை மையமாக்கி செயல்படவேண்டும். அப்படிச் செயல்பட்டால் சிறியது பெரியதாகும்.
 • மேல்மனத்திலிருந்து உள்மனம் அடிமனம் போக நிஷ்டை, விசாரம், சமர்ப்பணம் ஆகியவை கருவிகள்.

இந்த நீண்ட விளக்கத்தைச் சுருக்கி சமர்ப்பணம் இத்தனையையும் செய்யும் எனலாம்.

எந்த ஒரு காரியத்தையும் அன்னையை நினைத்துச் செய்வது சமர்ப்பணம். அதனுள் மேற்கூறிய அனைத்தும் அடக்கம் என்பது அன்னைக்குரிய அருள் விளக்கமாகும்.

III. மனித முயற்சியும், தெய்வ அருளும்.

தேவையால் முயலும் மனிதன் பிறகு ஆர்வத்தால் அதிக முயற்சியை எடுக்கிறான். அறிவு வளர்ந்த நிலையில் தேவை வளர்கிறது. ஆர்வம் பெருகுகிறது. முயற்சி அதிகபட்சமாகிறது. நேற்று luxury ஆடம்பரம் என்று கருதியது, இன்று அவசியமாகிறது. வாழ்வின் வளம் பெருகிக் கொண்டே போகிறது. மனித முயற்சியின் இரு உருவங்கள் நாமறிந்தவை. ஒன்று தெரிந்ததை அதே அளவில் விரிவுபடுத்துவதாகும். மிராசுதார் வருஷாவருஷம் அதிக நிலம் வாங்குகிறார். அடுத்தது உயரும் வழி. அடுத்த, அடுத்த கட்டங்களுக்குத் தொடர்ந்து உயருவது. நில வருமானத்தைக் கொண்டு டவுனில் வியாபாரம் ஆரம்பிப்பதும், அவ்வருமானத்தில் படிப்புக்குச் செலவு செய்து தொடர்ந்து படிப்பை வெளிநாட்டுக்கும் கொண்டு போனால் உள்ளூரில் மேலும் நிலம் வாங்க முடியாது. ஒன்று horizontal growth, உள்ளதை அதே நிலையில் கடைசிவரை வளர்ப்பது. அடுத்தது vertical growth அடிப்படையை மாற்றாமல் அடுத்த அடுத்த உயரத்திற்குப் போவது. இரண்டையும் நாம் வாழ்வில் காண்கிறோம் என்றாலும், பரவலான அனுபவம் இரண்டுமல்ல. i) அடிப்படை அகன்றும், ii) உச்சி உயர்ந்தும் iii) ஒரு குன்றுபோல் முடிவு எழுவதே அன்றாட அனுபவம். நாம் கூறிய நிலைகள் மூன்றும் மனித முயற்சிகள். மனிதன் தானே முயன்று, தன் திறமையால், தன் கையை ஊன்றித் தானே உதவியின்றி எழும் முயற்சி போன்றது. பள்ளிக்கூடம், ரயில்வே, பஸ், தபாலாபீஸ், போலீஸ், தீயணைப்புப்படை, பாங்க் எல்லாம் வருமுன் பிள்ளைகள் படித்தார்கள். காசிவரை யாத்திரை போனார்கள். திருடனைப் பிடித்தார்கள், எரியும் வீட்டை அணைத்தார்கள், கடன் பெற்றார்கள். இன்று சமூகம் எல்லாப் பொறுப்பையும் ஏற்கிறது. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகிறோம், பிரயாணத்தைப் பஸ்ஸில் ஏற்கிறோம், தபாலை எழுதிப் பெட்டியில் போடுகிறோம், அடிதடி நடந்தால் போலீஸ் தானே வருகிறது, வைக்கோல் போர் எரிந்தால் தீயணைப்புப்படை வருகிறது. மனித முயற்சியைச் சமூகம் மேற்கொண்டால் வாழ்க்கை ஆயிரம், பதினாயிரம் மடங்கு எளிதாகிறது.

மனித முயற்சிக்கு 3 வடிவங்கள் கொடுத்தாற்போல் அன்னை அருளுக்கு மூன்று வடிவங்கள் தரலாம். அன்னையை உலகம் அறியாத நிலையிலும் i) போல் அருள் லேசாக மனிதனுக்குக் கிடைக்கிறது. அன்பனாகி, தீவிர பிரார்த்தனையை மேற்கொள்பவனுக்கு ii) போல் அருள் அளவு கடந்து சிறு அளவில் உயரத்தில் அளவு கடந்தும், அகலத்தில் சிறியதாகவும் கிடைக்கிறது. iii) ஆம் நிலை மனிதன் அன்னையைக் குடும்பத்துடன் ஏற்று, அவர் கொள்கைகளையும் ஏற்று முழு முயற்சி செய்யும்பொழுது ஏராளமாக அருள் பொழிகிறது. இம்மூன்று நிலைகளையும் மேலேயிருந்து செயல்படுவதாகக் கொண்டால் கீழிருந்து மனித முயற்சியும், மேலிருந்து அருளும் எதிரெதிரான உருவங்களாகத் தெரியும். அவையிரண்டும் முழுமை பெறுவதே ஸ்ரீ அரவிந்தம்.

கட்டுப்பாடில்லாத மனிதன் முதற்படம் போல எழ முயல்கிறான். கட்டுப்பாடுள்ளவர்கள் இரண்டாம் படம் போல உயருகிறான். அன்னை அன்பர் மூன்றாம் படம் போல் உயருகிறார்.

IV. Skill-energy-knowledge-silence-intuition-jnana=GOODNESS திறமை-சக்தி-அறிவு-மௌனம்-நேரடி-ஞானம்=நல்லது.

நம் நிலை உயரும்பொழுது நம் சாதனை உயருகிறது. திறமையால் வேலை செய்வது, சக்தியால் வேலை செய்வது, அறிவால் நடப்பது, ஆன்மாவில் மௌனத்தால் காரியங்களைப் பூர்த்தி செய்வது, யோகிபோல் வாழ்வில் சாதிப்பது, தெய்வத்தின் ஞானத்தைச் செயலில் காண்பது என்பவை மனித முயற்சியின் பல நிலைகள் எனக் கண்டோம்.

 • நிலை உயரும்பொழுது பயன்படும் கருவியும் உயருகிறது. உயர்ந்த கருவிக்கு, உயர்ந்த நிலையில், உயர்ந்த பலன் வருகிறது.
 • நிலை எவ்வளவு உயர்ந்தாலும், கருவியின் சிறப்பு எவ்வளவு உயர்ந்தாலும், பலன் கருவியைப் பயன்படுத்தும் மனிதனைப் பொருத்ததேயாகும்.
 • நிலையும், உயரும் கருவியும் உயர்ந்த பலனை, அல்லது அணுகுண்டை உற்பத்தி செய்யும்.
 • நிலை உயருவதால் மட்டும் அல்லது கருவியின் சிறப்பால் மட்டும் மனித முயற்சிக்கு நல்ல பலன் மட்டும் வரும் என அறுதியிட்டுக் கூற முடியாது.
 • நிலையும், கருவியும், பலனின் தரத்தை உயர்த்தும்.
 • பலனின் தன்மை மனிதன் நல்லவனா, கெட்டவனா என்பதைப் பொருத்தது.
 • இன்றுவரை உலகம் கண்டு கொண்டுள்ள உண்மையிது.
 • மனித மனத்திற்கு இதற்கு மேற்பட்ட நிலைக்குத் தகுதியில்லை.

ஸ்ரீ அரவிந்தம் அடுத்த கட்டத்தை நாடுகிறது. அங்கு தீய பலன் எழ வழியில்லை. அதைச் சாதிப்பது நல்லெண்ணம்.

நல்லெண்ணம் என்று இங்கு குறிப்பிடுவது தீயதிற்கு எதிரான நல்ல எண்ணமன்று. சுயமாக நல்லதாக மட்டும் இருக்கக்கூடிய நல்லெண்ணம். மனிதன் அதுபோன்ற நல்லெண்ணத்தால் மட்டும் செயல்பட முடியுமானால் சிறிய மனிதன் பெரிய வாழ்வை வாழ முடியும். பெரிய வாழ்வு அதிர்ஷ்ட சாகரத்தை எட்டி அதன் பலனை அவன் வாழ்விலும், அனைவர் வாழ்விலும் கொண்டு வரும். இதை இரு வழிகளில் சாதிக்கலாம்.

1. நாம் அதிர்ஷ்டம் பெறுமுன் அடுத்தவர் அதிர்ஷ்டம் பெற மனம் விழைவது. 2. அன்னையை நல்லெண்ணத்தின் ஊற்றாக அறிந்து ஏற்பது. இதைச் செய்பவர் வாழ்விடம் எந்தப் பரிசை நாடினாலும், அபரிமிதமாகத் தரும். அவரே யோக வாழ்வை விட்டகன்று யோகத்தை மேற்கொண்டால் அவருக்கு வாழ்வையோ, இறைவனையோ, எதையும் கேட்கும் உரிமை இல்லை.

V. எது சரி?

 • எதையும் கேள்வி எழுப்பாமல் கைகட்டி, வாய்பொத்தி மேலுள்ளவர் உத்தரவை ஏற்பவன் முன்னேறுவான். அது முதல் நிலை முன்னேற்றம். நல்லது.
 • எதையும் சிந்தனை செய்து, கேள்வி எழுப்பப் பயப்படாமல் கேள்வி கேட்டு, கேட்டதைப் புரிந்து செயல்படுபவன் அதிக முன்னேற்றம் அடைவான். அது இரண்டாம் நிலை.
 • அந்தஸ்திருந்தும், கேட்காமல் பெரியவர், சமமானவர், கீழுள்ளவர் கூறுவதை ஏற்கும் மனம் மூன்றாம் நிலைக்குரிய முன்னேற்றம் பெறும்.
 • காமராஜ் இந்த 3 நிலைகளிலும் இருந்தார். தொண்டராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் முதல்நிலை பழக்கத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார்.

காமராஜை சத்தியமூர்த்தி தலைவராக்கியபின், தாம் செயலாளராக இருந்தார். அடுத்த நிலையில் சென்னை முதல்வர்களாக பிரகாசம், குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ரெட்டியார், ராஜாஜி ஆகியவர்களை நியமிக்கும் நிலைக்கு வந்தார். காமராஜ் மூன்றாம் கட்டம் வந்தபொழுது நாட்டின் இரு பிரதமர்களை நியமித்தார்.

VI. அதிகாரி, அரசியல்வாதி, குரு, ஸ்ரீ அரவிந்த அவதாரம் என்ற உதாரணம்.

அதிகாரி உள்ளூர் குமாஸ்தா முதல் சீப் செக்ரடரிவரை உண்டு. ஆனால் எந்த நிலையிலும் அதிகாரி தம் அதிகாரத்தை அரசியல்வாதியின் விருப்பத்திற்கே உட்படுத்தி செலுத்த வேண்டும். அரசியல்வாதி எவ்வளவு உயர்ந்தவரானபோதிலும் முடிவாக மகாத்மா காந்திஜீயைப் போன்ற குருவுக்கு கட்டுப்பட்டவர். 1910ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் சூட்சும உலகில் இந்தியாவுக்குப் பெற்ற சுதந்திரத்தை அரசியல்வாதியும் குருவும் 1947இல் நடைமுறை உண்மையாக்கினார். இது சமூகத்தில் உள்ள அமைப்பு. அன்னை பக்தர்கட்கு மனம் எந்த நிலையிலும் நிற்கலாம். வியாதி வந்தால் மருந்தை நம்புகிறது, டாக்டரை நம்புகிறது, வேலை வேண்டுமானால் மார்க், பட்டம், சிபாரிசு, பணத்தை நம்புகிறது, அதிகாரிக்கு மேல் அரசியல்வாதியும் அவருக்கு மேல் குருவும், முடிவாக அவதாரம் இருப்பதுபோல் மருந்து, டாக்டர், பணம் என்றோ, மார்க், பட்டம், படிப்பு, சிபாரிசு, பணம் என்றோ நாம் பலவற்றை நம்பினாலும் முடிவானது ஸ்ரீ அரவிந்த அவதாரம் என்பது போல் பக்தருக்கு முடிவானது அன்னை. அன்னைக்கு அனைவரும், அனைத்தும் உட்பட்டவர் என்று தெரியவேண்டும்.

இன்று நாம் ஐஸ்யை வீட்டில் செய்கிறோம். இவ்வசதிகள் வருமுன் ஐஸ் இங்கிலாந்திலிருந்து சென்னைக்குக் கப்பலில் வந்தது. அமெரிக்க ஏரிகளில் உள்ள பாளம் பாளமான ஐஸ் கட்டிகளை ஐரோப்பாவுக்குக் கப்பலில் கொண்டு வந்தனர். இயற்கையில் ஏராளமாக இருக்கும் ஐஸ் அமெரிக்கருக்கும், ஐரோப்பியருக்கும் பயன்பட்டது.

தண்ணீரைச் சூடுபடுத்தினால் 100°C வரை உயரும். அதன்பின் உயராது. அடுப்பிலிருந்து தண்ணீர் பெறும் அத்தனை சூடும் டெம்பரேச்சரை உயர்த்துவது இல்லை. நீரை நீராவியாக மாற்றப் பயன்படுகிறது. எல்லாத் தண்ணீரும் ஆவியாகும்வரை உள்ளே வரும் எல்லாச் சூட்டையும் நீர் பெற்று தன்னுள் அடக்கிக் கொள்ளும். வெகுநேரம் சூடான தண்ணீர்பட்டு ஏற்படும் காயம் ஆழமானதாக இருக்கும். அதற்கு latent heat உள்ளுறை வெப்பம் எனப் பெயர்.

சமூகம், குறிப்பாக அதன் உயர் மட்டங்கள் அதிகாரம், செல்வம், செல்வாக்கு, சக்தி, திறன், கலை, ஞானம் என எல்லா சமூகத் திறன்களுடைய உபரி உற்பத்தியை latent ஆக தன்னுள் கொண்டுள்ளது. அதையே அதிர்ஷ்ட சாகரம் என்று கூறுகிறேன்.

காலம், காலத்தைக் கடந்த நிலை, இரண்டும் சந்திக்குமிடம்

காலம் மனிதனுக்குரியது. அதைக் கடந்த நிலை துறவியினுடையது. ஸ்ரீ அரவிந்தம் இல்லறத்தை ஏற்று அதைத் துறவறத்தின் தூய்மையோடு நடத்த வேண்டும் என்கிறது. காலத்திற்கு உயிர் ஆசை, துறவிக்கு உயிர் போன்றது பற்றற்ற நிலை. இதைப் புருஷன், ஆன்மா என்பதால் குறிப்பிடுகிறோம். காலத்திற்கும் ஆன்மா உண்டன்றோ? அது காலத்தின் ஜீவன். காலம் வாழ்வில் ஆரம்பித்து வாழ்வில் முடிவது. காலத்தைக் கடந்த நிலை வாழ்வை ஒதுக்கிய நிலை. காலத்தின் ஆன்மா காலத்தையும், அதைக் கடந்த நிலையையும் தன்னுட் கொண்டது. அதைக் கடந்த நிலை சிருஷ்டியிலில்லை. காலமும், காலத்தைக் கடந்த நிலையும் சந்திக்கும் இடம் அது. சைத்தியப் புருஷன் அங்குள்ளது. அங்கிருந்து செயல்பட்டால் அது ஸ்ரீ அரவிந்தத்தின் பூரணமாகும். அதிர்ஷ்ட சாகரம் அந்நிலைக்குரியது.

 • அதிர்ஷ்ட சாகரத்தைக் கண்டு, அதனுடன் தொடர்பு கொண்டவர்க்கு தினமும் 50,000 ரூபாய் வியாபாரமாகும் கடையை நடத்துபவர் எனில், இத்தொடர்பு அடுத்த நாள் 5 லட்சத்திற்கு விற்கச் சொல்லும். அதை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பது அன்பரின் ஈடுபாட்டைப் பொருத்தது.

கட்டுரையின் சில கருத்துகள்

 • அரசியல் அதிகாரம், பெருஞ்செல்வம் போன்ற ஏராளமான சக்திகள் சமூகத்தின் மேல்மட்டத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ஏராளமாகக் குவிந்துள்ளன.
 • இன்று உலகம் இப்பொக்கிஷத்தை அறியவில்லை.
 • சந்தர்ப்பவசத்தால் இதனருகில் உள்ள ஒரு சிலர் ஏராளமான பலனைக் குறுகிய காலத்தில் பெறுவதுண்டு. பெரும்பாலும் உலகம் அதை அறிவதில்லை. செய்தி வெளியே வந்தால் அதை அதிர்ஷ்டம் என்கிறோம். சிந்தனையாலும், அறிவாலும், ஆன்ம விழிப்பாலும்
 • இந்த அதிர்ஷ்ட சாகரத்தை நாம் முழுவதும் அறிய முடியும்.

 • நம் அன்றாட வாழ்வைச் சிறியதிலிருந்து பெரியதாக மாற்றினால் நமக்கும் இதற்கும் தொடர்பு ஏற்படும்.
 • பக்தர்கட்கு அன்னை அத்தொடர்பை ஏற்படுத்தித் தருகிறார்.
 • மனிதனுக்கு அத்தொடர்பு கிடைப்பது நிச்சயம்.
 • கிடைத்தால் 100 தலைமுறைகளில் சாதிப்பதை இன்று சாதிக்க முடியும்.
 • நாட்டுக்குக் கிடைத்தால் 500 ஆண்டு முன்னேற்றம் சீக்கிரம் வரும்.
 • இதைச் சாதிக்க மனிதன் சிறியவனாக இருப்பதை விட்டுப் பெரியவனாக வேண்டும்.
 • பெரியவனாக இருப்பதன் அம்சங்கள் அயராத உழைப்பு ,
 • அளவு கடந்த தெம்பு, அறிவாலும், ஆன்மாவாலும் செயல்படுவது, பிறர் வாழப் பிரார்த்திப்பது, சமர்ப்பணம்.
 • சிறந்த மனிதன் அன்னையைச் சமர்ப்பணத்தால் ஏற்றுக்கொண்டு, அடுத்தவர் பெறும் அதிர்ஷ்டத்தில் பரவசப்பட்டால் அவனுக்குரியது அதிர்ஷ்ட சாகரம்.
 • கலை, விளையாட்டு, சங்கீதம், விஞ்ஞானம், செல்வம், டெக்னாலஜி, அரசியல், பதவி, அந்தஸ்து போன்ற எல்லா அதிகாரங்கட்கும் பொருந்தும் சட்டம் இது.

***book | by Dr. Radut