Skip to Content

பகுதி 3

நண்பர் - உலகப் பரிணாமத்திற்கும், நாம் - தனி மனிதன் - பரிணாம வளர்ச்சி பெறுவதற்கும் சட்டம் ஒன்றே. திறனில்லாமல் அறிவு வளர்ந்தால், அறிவில்லாமல் சக்தி வளர்ந்தால் காரியம் கெட்டுப் போவது சிருஷ்டியின் சட்டம். மார்க்கட் விலையை நிர்ணயிப்பதுபோல், போலீஸ்காரன் டிராபிக்கை ஒழுங்குபடுத்துவதுபோல் சிருஷ்டியின் சட்டங்கள் தனிமனித வளர்ச்சியையும், உலகப் போக்கையும் நிர்ணயிக்கின்றன.

அன்பர் - விளங்குவது போலிருக்கிறது. போதாது.

நண்பர் - நாம் எடுத்துக் கொண்டது, "சிருஷ்டி எப்படி ஏற்பட்டது''. மாயை மூலம் சொன்னால் சூட்சுமத்தில் நின்றுவிடும். ஜட உலகை விளக்க முடியாது. ஸ்ரீ அரவிந்தம் மூலம் சொன்னால் பரமாத்மா, ஜீவாத்மா, மனிதன், பாவ, புண்ணியம், காபி, லட்டு முதல் ஈ, எறும்பு, விஞ்ஞானம், போர், கம்ப்யூட்டர், சந்திரனுக்குப் போவது அனைத்தையும் விளக்க முடியும்.

அன்பர் - இதை உலகம் ஏற்றுக் கொண்டதோ?

நண்பர் - எவராலும், எந்தத் தத்துவத்தாலும், எல்லா விஷயங்களையும் இதுவரை விளக்காதவற்றை ஸ்ரீ அரவிந்தம் விளக்குகிறது. ஏற்பது வேறு. கிடைக்காத பொருள்களெல்லாம் இந்தக் கடையில் கிடைக்கிறது. வாங்குவது வேறு.

அன்பர் - நீங்கள் சொல்லும்பொழுது புரிகிறது. நிறுத்தியவுடன் புரிவது நின்று போகிறது.

 நண்பர் - செய்தால் அந்தக் குறைபாடிருக்காது.

அன்பர் - புரிந்தது போன்ற திருப்தி ஏற்படவில்லை.

நண்பர் - தத்துவத்தை அறிவால் முழுவதும் ஏற்றாலும், நடைமுறையில் கண்டாலும், அந்தத் திருப்தி ஏற்படும்.

அன்பர் - தத்துவம் புரிகிறது என்போம், நடைமுறை பலிக்கிறது என்றும் கூறுவோம். அதற்கு என்ன முடிவு, என்ன பலன்?

நண்பர் - இது பலன் கருதி செய்யும் வேலையில்லை. பலன் கருதி இது போன்ற பெரிய விஷயங்களை நாடினால் பலனே கிடைக்காது. இருந்தாலும், பலனைக் கூறுகிறேன்.

பிரார்த்தனை செய்யுமுன், பிரார்த்தனை, முயற்சி, அருள் தரவேண்டியது தானே கிடைக்கும்.

அன்பர் - இது அதிர்ஷ்டமல்லவா?

நண்பர் - இல்லை, அருள்.

அன்பர் - ஏன் இதைப் பெற முயலக்கூடாது?

நண்பர் - இந்தப் பலனுக்காக நாடினால் கிடைக்காது. ஞானத்திற்காக நாடினால் பலன் சித்தியாகக் கிடைக்கும்.

அன்பர் - இதனால் உலகப் பிரச்சினைகள் தீருமா?

நண்பர் - ஞானம் பெற்றவருடைய உலகப் பிரச்சினைகள் தீரும்.

அன்பர் - தலைப்பு ரிஷிகள் கண்ட பிரம்மம். நாம் எங்கு வந்து முடிந்துள்ளோம்?

நண்பர் - ரிஷிகள் கண்ட பிரம்மம் அக்ஷரப்பிரம்மம். அதற்கடுத்தாற்போல் சத் புருஷனுடைய 3 அம்சங்கள் ஆத்மா, புருஷா, ஈஸ்வரா உண்டு. கீதை புருஷனுக்கடுத்த புருஷோத்தமனைக் கூறுகிறது. ஸ்ரீ அரவிந்தர் ஈஸ்வரன் - பரமேஸ்வரனைக் கூறுகிறார்.

அன்பர் - வெறும் தத்துவம் வேண்டாம். விளக்கம் வேண்டும்.

நண்பர் - புருஷன் என்பவன் சாட்சியாக இருப்பவன். ஈஸ்வரன் சிருஷ்டிப்பவன். புருஷனுக்கு முன் நிலையான ஆத்மாவுக்கு புருஷனுக்குரியது போன்ற ஜீவனில்லை. ஆத்மா ஒரு சக்திபோல் தோன்றும்.

அன்பர் - கல்லூரியில் சேராமல் படித்த கல்விபோல் ஆத்மா, பட்டம்போல் புருஷனா?

நண்பர் - ஓர் அளவில் அப்படிக் கூறலாம்.

ஈஸ்வரன் பிரளயத்தில் அழிவதால் ரிஷிகள் அவனைவிட புருஷனையே முக்கியமாகக் கருதினார்கள். ஈஸ்வரன் முதன் மந்திரி போன்றவன், புருஷன் கவர்னர் போன்றவன். Power சக்தி முழுவதும் ஈஸ்வரன் கையில். அத்துடன் ஈஸ்வரனுக்குப் புருஷன் அடக்கம் என்பதால் ஸ்ரீ அரவிந்தர் ஈஸ்வரனை முதன்மையாகக்

கருதுகிறார். நீங்கள் நடைமுறையைக் கேட்டீர்கள். புருஷன் பாங்கு டெப்பாசிட் போன்றவன். ஈஸ்வரன் அந்த டெப்பாசிட்டை எடுத்து கம்பனியில் முதலிட்டது போன்றவன்.

அன்பர் - மேலும் உதாரணம் வேண்டும். 10 உதாரணங்கள் இருந்தாலும் பரவாயில்லை.

நண்பர் - ரிஷிகள் கண்ட பிரம்மம் பிரம்மாண்டம். சமாதியில் ரிஷிக்கு சூடு வைத்தாலும் தெரியாது. கூண்டோடு கைலாசம் அனுப்பும் சக்தி பெற்றது தவம். ஞான திருஷ்டியுள்ளது. வரம் தரவல்லது. பிரம்ம தண்டமாக உலகத்து அசுரர்களைத் தடுக்கவல்லது. காமதேனுவாகச் செல்வம் தரவல்லது. ரிஷிப்பிண்டம் ராத்தங்காது. மலையை நகர்த்தும். கூடுவிட்டுக் கூடுபாயும். எந்த இடத்திற்கும் நினைத்தால் போகும். கனகதாரா பெய்யும். ஞானசம்பந்தருக்குப் பார்வதியாகப் பால் தரும். சிறுத்தொண்டர் பிள்ளையை உயிர்ப்பிக்கும். ரிஷிகளின் வல்லமை நமக்கெல்லாம் தெரியும்.

அன்பர் - ரிஷிகள் பெரியவர்கள். உலகுக்கு என்ன செய்தார்கள்?

நண்பர் - ரிஷிகளிருப்பதால் உலகும் இயங்குகிறது. அவர்களைப் பார்த்து உலகம் முன்னேற வேண்டும்.

அன்பர் - அவரை நாடிய சிஷ்யனுக்கு உபதேசம், தீட்சை தருவார்கள்.

நண்பர் - ரிஷிகள் தொழில் அதிபர்கள் போன்றவர்கள். நாட்டில் தொழிலிருப்பதால்தான் நாடிருக்கிறது. அவர்களுடைய சொத்து அவர்கள் தனியுடைமை. பலருக்கு வேலை தருகிறார்கள்.

அன்பர் - அன்பர்கள்?

நண்பர் - அன்பர்கள் சர்க்கார் அதிகாரிகள்போல், 20,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அதிகாரியிடம் பொது நலத்திற்காக 20,000 கோடி ரூபாய் வருகிறது. தொழிலதிபர் பணம் சுயகௌரவத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் பயன்படும். அதிகாரிகளிடம் உள்ள பணம் அனைவருக்கும் பயன்படும்.

அன்பர் - ரிஷிகளைச் சுயநலத்துடன் ஒப்பிடலாமா?

நண்பர் - பரநலம் பேணும் கருவி அவர்களிடமில்லை. ஒரு தொழிலதிபர் கல்லூரி கட்டலாம். ஆஸ்பத்திரி கட்டலாம். தன் முழுச்சொத்தையும் தர்மத்திற்குத் தரமுடியாது. தரும் வசதி - நிர்வாகம் - அவரிடமில்லை. நடைமுறையில் எவரும் அதைச் செய்வதில்லை. ரிஷிகள் தங்கள் இரகஸ்யத்தையே அனைவருக்கும் கூறமாட்டார்கள்.

அன்பர் - அது சுயநலமா, இராமானுஜர் கூறினாரே?

நண்பர் - அவர்கள் பெற்ற சித்தியைக் கூறக்கூடாது என்பது சட்டம். கூறினால் கேட்பவருக்குப் பயன்படாது. கொடுப்பவருக்கு அழியும்.

அன்பர் - ஏன் அப்படி?

நண்பர் - எந்தப் பணக்காரனாவது, தன் உறவு, நட்பைத் தன்போல் உயர்த்தியிருக்கிறானா?

அன்பர் - கிட்டே சேர்க்கமாட்டார்கள். சேர்த்தால் தங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருப்பார்கள்.

நண்பர் - அப்படிச் சேர்த்த பெருமுதலாளிகள் திவாலானார்கள்.

அன்பர் - நட்பும், உறவும், பணக்காரன் உதவியால் முன்னுக்கு வரப் பிரியப்படுவதில்லை. எதுவும் செய்யாமல் பலன் பெறப் பிரியப்படுவார்கள். அது நடப்பதில்லை.

நண்பர் - அதுவே ரிஷிகளுடைய சட்டம். எவரும் கொடுக்க மாட்டார்கள். கொடுப்பதை எவரும் சரிவரப் பயன்படுத்த மாட்டார்கள்.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தம் முழுவதும் எழுத்தில் இருக்கிறதே.

நண்பர் - தம் சிகரமான இரகஸ்யத்தை எழுதி விளம்பரப்படுத்தி விட்டாரே.

அன்பர் - பெற்றவர் எத்தனை பேர்?

நண்பர் - இனி கணக்கெடுக்க வேண்டும்.

அன்பர் - உலகம் நேரடியாகப் பலன் பெற்றுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் 1000 ஆண்டுகள் முன்னேற்றம் பெற்றது.

நண்பர் - அன்பர் ஒருவர் பெற்றால் - அதிர்ஷ்டம், அருள் - அனைவரும் பெறுவர். 1965இல் அன்பர் தமக்குச் சொந்தமாகச் செய்த வேலையில் ஏழ்மை அழியும் அம்சத்தையும் சேர்த்துக் கொண்டார். ஆசியாவில் வறுமைக்கோட்டிற்குமேல் இந்த 30 ஆண்டுகளில் 20% மக்கள் வந்ததாகச் செய்தி.

அன்பர் - 20% என்றால் 40 கோடிக்கு மேலாகிறதே.

நண்பர் - அன்னையை ஏற்றவர் பரநலமாகச் செய்த எல்லாக் காரியங்களும் அதேபோல் உலகெங்கும் பரவியுள்ளது.

அன்பர் - ஒருவர் செய்ததால் 40 கோடி மக்கள் பயன்பெற்றனர் என்று கூற முடியுமா?

நண்பர் - அப்படி ஒரு வேலை நடந்தது, பெற்றவருக்கோ, ஊரிலிருப்பவருக்கோ, எவருக்கோ தெரியாது.

அன்பர் - இதனால் அது வந்தது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியுமா?

நண்பர் - கூறுவது முக்கியமில்லை. புரிந்து கொள்வது முக்கியம், புரிந்தால் வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அன்பர் - எப்படிப் புரிவது?

நண்பர் - நீங்கள் கடந்த 10 வருஷங்களாக என்ன செய்தீர்கள்? அதன் பலன் உலகில், ஊரில் தெரிகிறதா?

அன்பர் - நான் ஆரம்பிக்கும்பொழுது என் தொழில் இந்த ஊருக்குப் புதியது. இன்று 100 பேருக்கு மேல் செய்கிறார்கள்.

நண்பர் - நாட்டில்,

அன்பர் - 50 கோடியிலிருந்து 1200 கோடிக்குத் தொழில் வளர்ந்துள்ளன. எல்லாத் தொழில்களும் வளர்ந்துள்ளது

நண்பர் - அன்பர்கள் எங்கு எதைச் செய்தாலும், தொழில் மட்டுமன்று அது பரநலமாகச் செய்யப்பட்டால் பரவும் என்பது என் அனுபவம். சுயநலமாகச் செய்வதும் பரவுகின்றது. அவையெல்லாம் தத்துவப்படி நடக்கின்றன.

அன்பர் - இதற்கும் சிருஷ்டியின் இரகஸ்யத்திற்கும் என்ன சம்பந்தம்?

நண்பர் - பலரும் ஒரு காரியத்தை ஒருவரால் செய்வது அந்த ஒருவருடைய சிருஷ்டித்திறன்.

அன்பர் - சிருஷ்டிக்கு மேலும் அம்சங்கள் உள்ளனவா?

நண்பர் - ஒருவகையில் எல்லாமே சிருஷ்டியென்றாலும், புதியதாக எழுவதையே நாம் சிருஷ்டி என்கிறோம்.

அன்பர் - எவரும் சொல்லாததை ஸ்ரீ அரவிந்தர் கூறியிருக்கிறார் என்பதை மீண்டும் ஒரு முறை கூறுவீர்களா?

நண்பர் - பொம்மை செய்து கடவுள் வாயால் ஊதி மனிதனை செய்தார் என்பது ஒரு தத்துவம். ஜடத்துள் ஒளிந்துள்ள ஆன்மா வெளிவந்து, தான் ஓர் உருவம் பெற்றது மனிதன் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

அன்பர் - பொம்மை கட்டுக்கதை. ஆன்மா உடல் பெற்றது ஒரு சட்டப்படி நடப்பது. அந்த வித்தியாசம் தெரிகிறது.

நண்பர் - இந்தச் சட்டம் அடிமுதல், நுனிவரை பொருந்தும். அதனால் இது அறிவால் ஏற்கக் கூடிய சட்டம்.

அன்பர் - மனத்தைத் தொடவில்லை, உணர்ச்சியைத் தட்டி எழுப்பவில்லை, நிஜமாகத் தெரியவில்லை.

நண்பர் - நீங்கள் ஒரு கம்பனி நடத்துகிறீர்கள். அது சிருஷ்டிதானே. எப்படி வந்தது?

முதலில் வந்தது எண்ணம்.

பிறகு அதை நிறைவேற்ற உற்சாகம் வந்தது.

இறங்கி செயல்பட்டேன் என்பீர்கள்.

அன்பர் - அது சரி.

நண்பர் - எண்ணம், உயிர் பெற்று உடலைத் தாங்கி வளர்கிறது என்று கூறலாம்.

அன்பர் - ஆம்.

நண்பர் - ஜடத்திலிருந்த ஆன்மா வெளிவந்து மனம், உயிர், உடல் பெற்று மனிதனாயிற்று என்று சொல்கிறோம். நான் 1070 பக்கத்தை 107இல் கால் பாகத்தில் கூறுகிறேன்.

அன்பர் - 1070 பக்கமாகச் சொன்னாலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் - 10 வருஷங்களாக நடத்தும் கம்பனியின் சரித்திரம் 1070 பலிக்க தத்துவமாகும். அனுபவத்தைத் தத்துவத்துடன் இணைத்துப் பார்த்தால் பெரும்பாலும் தெரியும்.

அன்பர் - தெரிகிறது. அடிப்படை outline ஆகப் புரிகிறது. புரியாமல் இல்லை. மேலும் கேட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

நண்பர் - கிளைக்கதை என்பதுபோல் சட்டத்திற்குட்பட்ட சட்டம் subrule என்பது. நேரம் வந்தால் கம்பனியே மறந்து விடும். சிறிய விஷயம் பெரியதாகத் தெரியும்.

அன்பர் - அது போன்று The Life Divineஇல் வருகிறதா? நண்பர் - கம்பனிக்கு மார்க்கட் முக்கியம். மார்க்கட் சரிகிறது என்றால் முதலாளிக்கு மயக்கம் வரும்.

அன்பர் - அதற்குப் பதிலிருக்கிறதா?

நண்பர் - மேல்மனம் சலனமானது, வெற்றி தோல்வியுடையது. உள்மனம் சலனமற்றது. நிதானமானது என்பது சட்டம். முதலாளி உள்மனம் சென்றடைந்தால் அவர் பெறும் நிதானம் மார்க்கெட்டுக்கு வந்து சரிவது நிற்கும்.

அன்பர் - நடந்திருக்கிறதா?   நண்பர் - இது மேல்மனத்திற்குரிய கேள்வி. இந்தக் கேள்வி எழுந்தவர் உள்மனம் போக முடியாது. பலமுறை நடந்திருக்கிறது.

அன்பர் - கேள்வி கேட்காமல் என்ன செய்யவேண்டும்?

நண்பர் - உள்மனம் போக நிதானம் தேட வேண்டும்.

அன்பர் - விளக்கம் கூறலாமா?

நண்பர் - அது மானேஜ்மெண்ட் கட்டுரையாக வளரும். சரியும் மார்க்கட் சரியாமல் நிற்பது சிருஷ்டி. அது நிதானத்தால் வருகிறது. முக்கியக் கருத்துகள் The Life Divineஇல் மட்டும் 1500க்கு மேல் உள்ளன. நான் 700 பொறுக்கி எடுத்தேன். அத்தனையையும் விளக்கிக் கூறினால் 700 பக்கமாகும், 7,8 சொல்லலாம். சிருஷ்டிக்கு நேரடியான தொடர்புள்ளதைக் கூறுவோம்.

அன்பர் - ரிஷிகள் கண்ட பிரம்மம் பற்றிச் சொல்லுங்களேன்.

நண்பர் - இதுவும் சோதனைக்குத்தான் எடுபடும். விளக்கத்திற்கு விறுவிறுப்பிருக்காது. டால்ஸ்டாய் சைமன் கதை தெரியுமா?

அன்பர் - தெரியாது.

நண்பர் - கடவுள் கனவில் வந்து சைமனிடம் மறுநாள் அவனுக்குத் தரிசனம் தருவதாகக் கூறி மறுநாள் கிழவியாகவும், சிறுவனாகவும் வந்ததாகக் கதை. ரிஷிகள் ஆன்மாவாகக் கண்ட பிரம்மத்தை மனிதர்களில் காண்பது ஸ்ரீ அரவிந்தம்.

அன்பர் - சாமி வந்து ஆடுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

நண்பர் - அது vital spirit. ஆவி ஒருவனிலிருந்தால் அது வெளிவரும் நேரம் சாமி வந்தது என்பார்கள்.

அன்பர் - அது மந்திரத்திற்குக் கட்டுப்படுகிறது.

நண்பர் - மந்திரம், எலக்ஷன் ஜெயிக்க. சரியும் மார்க்கெட்டை நிறுத்த முடிவதில்லை.

அன்பர் - முடிவதில்லை எனத் தெரியும். ஏன்?

நண்பர் - மந்திரம் vital spiritற்க்குரியது. எலக்ஷன் மனத்தால், மனத்தின் அறிவால் ஏற்பட்டது. அவற்றைக் கட்டுப்படுத்தும் மந்திரமில்லை. பரிணாமம் என்பது ஜடத்திலிருந்து வாழ்வும், வாழ்விலிருந்து மனமும் வருவது. மனத்திலிருந்து சத்தியஜீவியம் எழுவது அடுத்த கட்டம். சத்தியஜீவியம் பிரம்மத்துடன் நேரடியான தொடர்பு கொண்டிருப்பதால், சத்தியஜீவியம் செயல் வெளிப்படுவது பிரம்மம் வாழ்வில் வெளிப்படுவதாகும்.

உதாரணம் :

வேலைக்காரர்கள் பயந்து திருடாமலிருப்பார்கள். நல்லவர்களாக இருந்தால் பொறுப்பாக இருப்பார்கள்.

அன்பர் - அதற்கெல்லாம் ஓர் அளவுண்டு.

நண்பர் - ஒரு 5,6 வேலைக்காரரிடம் ஏராளமான பணம், நகை, வீடுகளைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு வெளிநாடு போய் 10 ஆண்டுகள் கழித்து வந்தால்?

அன்பர் - எதுவுமிருக்காது. கொஞ்ச நாளைக்குப் பலிக்கும். கொஞ்ச விஷயத்தில் பலிக்கும். நெடுநாளைக்குப் பெரும் பணத்தில் பலிக்காது.

நண்பர் - அது நடந்தால், அங்கு பிரம்மம் செயல்படுகிறது எனப் பொருள். அதுவும் நடந்தது. 100% நடந்தது. நடந்தது போகட்டும். நாம் கேட்காமல் பணம் வசூலாவதும் நடந்தது. ஏன் இப்பொழுது அதுபோல் ஒரு காரியம் செய்து பார்க்கக் கூடாது?

அன்பர் - எப்படி?

நண்பர் - பூட்டு இல்லாமல், ரசீது இல்லாமல், கேட்காமல், கண்டிக்காமல், பணவிஷயத்தில் திருடும் பழக்கம் உள்ளவர்களைப் பொறுப்பாக்கி, சோதனை செய்வது.

அன்பர் - விஷப்பரீட்சை. செய்யவேண்டாம்.

நண்பர் - செய்பவர் மனத்தில் திருடு, பொய், மறைப்பது, ஏமாற்றுவது, அதிகாரம் செய்வது இல்லாமலிருந்தால், அன்னை மீதுள்ள நம்பிக்கை அடி முதல் நுனிவரைப் பலிக்கும்.

அன்பர் - இது எப்படி சிருஷ்டி?

நண்பர் - திருடுபவனை திருடாதவனாக மாற்றுவது சிருஷ்டி. அவனை மாற்றுவது முக்கியமில்லை. சிருஷ்டியை அறிவது முக்கியம்.

அன்பர் - இதில் என்ன தெரிந்து கொள்கிறோம்?

நண்பர் - சத்தியத்தை, நல்ல பழக்கத்தைச் சிருஷ்டிக்க முடியும் என்று தெரியவரும்.

அன்பர் - அது ஒரு இழைதானே.

நண்பர் - எந்த மகானும், ரிஷியும் அந்த இழையைச் சிருஷ்டிக்கவில்லை. பொய் சொல்லித்தான் பாரதயுத்தம் வெல்லப்பட்டது.

அன்பர் - விஷயம் பெரியதாக இருக்கலாம். அளவு சிறியதாக இருக்கிறது.

நண்பர் - அளவு பெரியதாக இருக்க சூட்சும உலகில் செயல்பட வேண்டும். பொதுவாக அன்பர்கள் செய்த வேலை அவர்கள் உள்ள நாட்டில் பெருவாரியாகப் பலிக்கிறது. அதுபோல் உணவு உற்பத்தி பெருகியுள்ளது. ஏழ்மை குறைகிறது.

அன்பர் - எந்த நாட்டில்?

நண்பர் - இந்தியாவிலேயே பெருகியுள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம் அழிந்திருக்கிறது. தளவாடங்கள் ஒழிந்துள்ளன. அன்னை திருமணம் அழிய வேண்டும் என்றார். அழிந்து கொண்டு வருகிறது.

அன்பர் - ஒரு நாட்டு வாழ்வில் இதைப் பார்க்க முடியாதா?

நண்பர் - அது நடக்க நாமே சர்க்காராக வேண்டும் என ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். நாட்டை ஆள்பவர் நேரடியாக ஸ்ரீ அரவிந்தர் கருணையைப் பெறுபவராக இருக்க வேண்டும் என அன்னை கூறியிருக்கிறார். நம்மவர்கள் மனதால் முடிவு செய்து, அம்முடிவை ஆழ்ந்து ஏற்றுக் கொண்டு,

ஒரு பொய் சொல்வதில்லை

என ஒரு குடும்பம் ஏற்றுக் கொண்டு, அதற்குரிய இதரப் பழக்கங்களை மேற்கொண்டால், அக்குடும்பம் நாட்டில் முதன்மையான குடும்பமாக அவர்களால் சிருஷ்டிக்கப்படும்.

அன்பர் - நம் அனுபவம் வேறு. பொறாமை பொங்கி வருபவர் எனக்குப் பொறாமையே இல்லை என பறையறைவிப்பார். அற்பம் தன்னை அனைவருக்கும் தலைவராக நினைக்கும். கடுமை தன்னை அன்பாக வர்ணிக்கும். அடங்காப்பிடாரி அழகாகப் பேசுவார். எப்படிப் பொய் சொல்லாமலிருப்பது என்று கேட்பார்கள்.

நண்பர் - இருப்பதைப் பற்றிக் கவலையில்லை. இருப்பதை ஏற்கும் உண்மை வேண்டும்.

அன்பர் - இங்கு என்ன சிருஷ்டிக்கிறோம்?

நண்பர் - சத்தியம் சிருஷ்டிக்கப்படுகிறது. பிறகு சத்தியவாழ்வுக்கு வழியுண்டு.

அன்பர் - சத்தியமிருந்தால் வியாதி வாராது. கஷ்டம் வாராது. சிருஷ்டி புரியும். ரிஷிகள் அறியாத சிருஷ்டியின் இரகஸ்யம் எளிய அன்பருக்குப் புரியும். பிரம்மம் வாழ்வில் வெளிப்படும். அது புத்தரும் விவேகானந்தரும் காணாத பிரம்மமாக இருக்கும் என்று கூறலாமா?

நண்பர் - அலிப்பூரில் ஸ்ரீ அரவிந்தர் கண்டதாக இருக்கும்.

அன்பர் - அது ஸ்ரீ அரவிந்தர் பெற்றதன்றோ!

நண்பர் - அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் பெற்ற சித்திகள் அனைத்தும் அன்பர்கட்கு முதல் அனுபவமாகவும், பிறகு சித்தியாகவும் கிடைக்கும்.

அன்பர் -V.P.சிங், வாஜ்பாய் இந்த நாட்டில் பிரதமராக வருவார்கள் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. அவர்களே கனவு கண்டிருக்கமாட்டார்கள். நேருவும், காந்தியும் பெற்றுக் கொடுத்ததை இன்று எளியவர்கள் அனுபவிக்கிறார்கள்.

நண்பர் - ரிஷிகள் கண்ட பிரம்மம் தத்துவம். ஸ்ரீ அரவிந்தர் கண்ட பிரம்மம் யதார்த்தம். ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தைக் கண்டார், முழுமையாகக் கண்டார். பிரம்மம் அவருக்கு சத்தியஜீவியத்தில் சித்தித்தது, மனத்திற்கு வந்தது, வாழ்வில்

வெளிப்பட்டது, உடலிலும் வெளிப்பட்டது. அன்னை அதையும் கடந்து உடலில் பொருளில் பிரம்மத்தைக் கண்டார்.

அன்பர் - கடவுள்கள், ரிஷிகளுடன் ஸ்ரீ அரவிந்தரை ஒப்பிட்டுக் கூற முடியுமா?

நண்பர் - கடவுள்கள் பூமி அளவு பெரியவர்கள். அவர்கட்கு பூத உடலில்லை. அவர்கள் பிறப்பிடம் சத்தியஜீவியம். அவர்கட்குக் குணம், அகந்தையுண்டு. தெய்வ லோகத்திற்கு அறியாமையுண்டு. அவர்கள் தெய்வ லோகத்தைக் கடந்து மேலே போக முடியாது. போக வேண்டுமானால் பூமியில் பிறக்க வேண்டும். நேராக இறைவனையடைய முடியாது. ரிஷிகள் தெய்வங்களைக் கடந்து போகலாம். அக்ஷரப்பிரம்மம்வரை போயிருக்கிறார்கள். கிருஷ்ண பரமாத்மா புருஷோத்தமன்.

அன்பர் - அவர்கள் என்ன கண்டார்கள், என்ன செய்யமுடியும், என்ன முடியாது எனக் கூறமுடியுமா?

நண்பர் - ஸ்ரீ அரவிந்தர் அதைக் கூறியிருந்தால் நமக்கு எளிதாக இருக்கும். அதை அவர் தவிர்த்தார். நாமே கூறுவது ஓரளவுதான் கூற முடியும்.

அன்பர் - தெய்வங்களோ, ரிஷிகளோ நம் கர்மத்தை தவிர்க்க முடியாது, ஸ்ரீ அரவிந்தர் அதைச் செய்கிறார்.

நண்பர் - தெய்வங்களுக்கு மனிதனைப் பற்றிய கடமையில்லை. கோபப்பட்டால், மனிதன் இறைவனையடைவதைத்

தடுப்பார்கள். ரிஷிகள் தெய்வங்களைக் கடந்து சென்றவர்கள். அவர்களில் பெரும்பாலோர்க்கு அதிகக் கோபம் வரும். தாங்கள் பெற்றதை பிறருக்குக் கொடுக்க பிரியப்படமாட்டார்கள். அதற்கு வழியுமில்லை. அன்னை அவர்கள் யோகத்தை சிறுபிள்ளைத்தனமானது என்கிறார். Supreme என்பது காலத்தையும், பிரபஞ்சத்தையும் கடந்த சத் புருஷன். பிரம்மத்திற்கு அடுத்தபடி. அன்னை Supreme ஆக மாறினார்கள்.

அன்பர் - அவருடனிருந்தவர்கள் அப்படியெல்லாம் சொல்ல வில்லையே.

நண்பர் - உடனிருப்பது வேறு, பலன் பெறுவது வேறு. இன்று ஏன் நாம் அதைப் பெறக்கூடாது. சொந்த அனுபவத்தில் பார்க்கலாமன்றோ!

அன்பர் - பார்த்தவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளலாம். நாமே பார்ப்பது பெரியது.

நண்பர் - பெரியதை எளியவர்க்கும் அளிக்க வந்தது ஸ்ரீ அரவிந்தம். சக்ரவர்த்தி அக்பர், விக்டோரியா மகாராணி அனுபவிக்காததை இன்று நாம் அனுபவிக்கவில்லையா?

அன்பர் - காலம் மாறிவிட்டது.

நண்பர் - ஸ்ரீ அரவிந்தம் காலத்தைக் கடந்து, கடந்ததையும் கடந்து, அதைக் காலத்துள் கண்டுள்ளது.

அன்பர் - நான் ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன்.

நண்பர் - எவன் மாறினாலும் கருமியால் மாற முடியாது. கருமி இந்த சக்தியால் தாராளமாகச் செயல்படுவான்.

அன்பர் - பொய் சொல்பவருண்டு, பொய்யை நம்பி வாழ்பவருண்டு, பொய்யை ரசிப்பவர் அதைக் கடந்தவர்.

நண்பர் - இது நீங்கள் அறிந்தது. வித்தியாசம் முக்கியம். பொய் சொல்வது வேறு, அதை நம்பி வாழ்வது பொய்யில் மூழ்குவது. ரசிப்பது கடைசி கட்டம் (Taste of Ignorance) அவர்கள் பலர். அனைவரும் பொய்யைவிட்டு மெய்யை ஏற்றது உலகில் எந்தக் கடவுளும் இதுவரை செய்யாதது.

அன்பர் - இது மனத்தைத் தொடுகிறது. அற்பம் மாறுவது, பொறாமை தானே முன்வந்து மாறுவது, ஆத்திரக்காரன் அடங்கி அன்பாகப் பழகுவது, கடுமையை ரசித்து ருசிப்பவர் உள்ளதை வெளியில் கூறுவது, மாறுவது யுகப் புரட்சி.

நண்பர் - நாம் அதைச் செய்யவேண்டும். இவை எல்லாம் நம்மிடம் உண்டு, இல்லை என்று கூறுவது பொய்.

அன்பர் - அப்படிச் செய்தால்,

நண்பர் - செய்து பாருங்களேன், ஏன் பலனை நினைக்கின்றீர்கள்?

அன்பர் - அதைச் செய்தால், ஏராளமான விஷயம் வெளிவரும்.

நண்பர் - அவற்றையெல்லாம் மூடிமறைத்து யோகம் செய்ய முடியாது. உண்மை அதிகமாக வேண்டும் என்ற ஆர்வமிருந்தால் தியானம் ஆழ்ந்து, ஆழ்ந்த நேரம் பழையவை அலை அலையாகக் கரையும். ஆர்வம் அதிகமாக இல்லாவிட்டால், அது வெளிவந்து கரையும்.

அன்பர் - மானம் போகும்.

நண்பர் - மானம் போகாமல், மனத்தால் பொய்யைக் கரைக்கலாம். அது முடியாதவர் மானம் போனாலும், உண்மை வேண்டும் என நினைத்தால் வழி பிறக்கும்.

அன்பர் - இல்லை என்றால் இத்தனை நாள் சொன்ன பொய்யை கடைசிவரை சொல்லலாம். வேஷம் போடலாம். நாம் போடும் வேஷத்தை எவரும் நம்புவதில்லை.

நண்பர் - எல்லோரும் நம் போன்றவரானால் மானம் போகாது.

அன்பர் - மானம் போகாது என்றாலும், எவரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் நம்பவேண்டும் என்ற முயற்சி பொய்யை உறுதிப்படுத்துவது. இது Sunlit path, ஒளிமயமான பாதை என்கிறாரே அன்னை, நீங்கள் சொல்வனவெல்லாம் பயமாக இருக்கிறதே.

நண்பர் - அன்னையை முழுவதும் ஏற்றால் மானம் போகாது. ஒளிமயமான பாதை தெரியும்.

அன்பர் - அன்னையை ஏற்பது என்று பேசும்பொழுதெல்லாம், நாம் அன்னையை ஏற்கவில்லையா என்ற ஐயம் எழுகிறது.

நண்பர் - அன்னையை ஏற்றவருக்கு, தியானம், பிரார்த்தனை தேவையில்லை.

அன்பர் - ஓர் உதாரணம் கூறுங்கள்.

நண்பர் - ஒருவர் அன்னையை ஏற்றதிலிருந்து தம்பி அவரை விலக்கி விட்டான். ஏற்கனவே அவருக்குச் சிரமம் வந்ததால் விலக்கியவன், இப்பொழுது அன்னையை ஏற்றதால் விலக்கிவிட்டான். தம்பி சௌகரியமானவன். அன்பர் நிலை மாறி சிரமம் போய்விட்டது. தற்காரியமாகத் தம்பி திரும்பி சேர்த்துக் கொள்ளவேண்டும் என பெருமுயற்சி. தினமும் பிரார்த்தனை, தியானம். நெடுநாள் எதுவும் நடக்கவில்லை. குரோதம் வளர்ந்தது. ஒரு நாள் "இனி தம்பியை மனம் நாடுவதில்லை. அன்னை மூலம் வந்தால் வரட்டும்'' என மனம் முடிவு செய்தது. உடனே தம்பி, "நானும் அன்னை பக்தனாகிவிட்டேன் என்னூரில் தியான மையம் எங்கிருக்கிறது?'' எனக் கேட்டு எழுதிவிட்டு வந்து பார்த்து பிரியமாகப் பேசிவிட்டு அன்னைக்குக் காணிக்கை கொடுத்துவிட்டுப் போனான்.

அன்பர் - தியானம் சாதிக்காததை, மனமாற்றம் சாதிக்கும்.

நண்பர் - மனநிம்மதி என்பது உலகில் ஒருவர் கூடப் பெற்றதில்லை. வெற்றி கிடைக்கும், சந்தோஷம் வரும், வாழ்க்கையை அனுபவிக்கலாம், வீட்டிற்குப் போனவுடன் கவலை வாராமலிருக்காது, அன்னையை

ஏற்றால் வீட்டிற்குப் போனவுடன் உள்ளிருந்து சந்தோஷம் துள்ளி எழும்.

அன்பர் - .அவற்றையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

நண்பர் - நாலுபேருக்குப் புரிவது போலிருக்கும் உதாரணம் வேண்டுமா?

அன்பர் - ஆம்.

நண்பர் - அது பிரபலத்தை நாடும் மனம்.

அன்பர் - என் மனம் அப்படித்தானிருக்கிறது.

நண்பர் - எனக்கும் அதுதான் தேவை. அது ego அகந்தை என்கிறார். நாம் 10 பேர் குடும்பமோ, நண்பர்களோ உண்மையாக உண்மையிலேயே உண்மையாக இருக்க முடியாது என்று நான் நம்பவில்லை. முடியும். அதைச் செய்யவேண்டும். நாம் அப்பொழுது ரிஷிகள் காணாத பிரம்மத்தைக் காணலாம்.

அன்பர் - அவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாகக் கூறுகிறீர்களே?

நண்பர் - 1902இல் இருந்த பெரிய மனிதர்கள் வாழ்வையும், இன்று 2002இல் உள்ள சாதாரண மனிதர் வாழ்வும் அது போல்லையா?

அன்பர் - உள்ளே பெரிய விஷயங்கள் தெரிகின்றன.

நண்பர் - வெளியே நடப்பது எவர் கண்ணிலும் படுவதில்லை. நமக்கே தெரிவதில்லை. Great victories are not annonced by beat of drums பெரும் வெற்றியை முரசு கொட்டி அறிவிப்பதில்லை என்கிறார் அன்னை.

அன்பர் - ரிஷிகள் கண்ட பிரம்மம் என்பதில் ஆரம்பித்தோம், எங்கு முடிப்பது?

நண்பர் - ஸ்ரீ அரவிந்தர் அன்பர்கட்கு அளிக்கும் பிரம்மம் என்பதில் முடியவேண்டும். இதைத் தத்துவமாகக் கூறினால், நடைமுறையில் கூறினால் எப்படியிருக்கும், எத்தனை வகையாகக் கூறலாம் என்பதைச் சுட்டிக் காட்டினோம்.

அன்பர் - இரண்டு பட்டியலாக எழுத முடியுமா?

நண்பர் - எழுதலாம், அவையெல்லாம் நடைமுறைக்கு அதிகப் பலன் தாரா.

அன்பர் - எழுதிப் பார்க்கலாமல்லவா?

நண்பர் - எழுத முடிந்தால், அதிலேயே திருப்திபட்டுவிடுவோம். அத்துடன் முயற்சிக்கு சக்தியிருக்காது.

அன்பர் - எழுதக் கூடாது என்று சட்டம் உண்டா?

நண்பர் - இதை எழுதுபவர் சட்டங்களைக் கடந்தவர். அவர் தமக்குரிய சட்டத்தைத் தாமே ஏற்படுத்திப் பின்பற்றிக் கொள்ளவேண்டும்.

அன்பர் - கூடாது என்ற சட்டமில்லையென்றால் எழுதிப் பார்க்கலாமா?

S. No.

ரிஷிகள் கண்டது

ஸ்ரீ அரவிந்தம்

விளக்கம்

 1.  

பிரம்மம் பகுதியானது

பிரம்மம் முழுமையானது

பிரம்மத்தின் தன்மை

 

 1.  

மனம்

சத்தியஜீவியம்

பார்க்கும் கருவி

 1.  

Being

Being of the Becoming

Plane of vision

 1.  

TImeless plane

Simultaneous Time

Dimension of Time

 1.  

சமாதி

விழிப்பு

பார்க்கும் நிலை

 1.  

Unconscious

Brahmic unconsciousness

State of consciousness

 1.  

தன்னை மறந்த நிலை

அற்புதம்

description விபரம்

 1.  

கர்மம் கரையும்

கர்மம் பரிணாம வாய்ப்பாகும்

கர்மத்தின் நிலை

 1.  

மேல்மனம்

அடிமனம்

மனத்தின் ஆழம்

 1.  

அகந்தை

சைத்தியப்புருஷன்

சித்திபெறும் கருவி

 1.  

துன்பத்தைக் கடந்த நிலை

துன்பம் பேரின்பமான நிலை

துன்பநிலை

 1.  

Transcedent Self புருஷோத்தமன் (அக்ஷரப் பிரம்மம்)

பிரம்மம் இறங்கி வந்து ஜடஉலகில் வெளிப்படுவது

எட்டும் இலட்சியம்

 

 1.  

ஜீவாத்மா

சைத்தியப்புருஷன்

ஆரம்பம்

 1.  

பிரபஞ்சம்

பிரபஞ்சத்தைக் கடந்து கடந்தது உலகுக்கு வருவது

உச்சகட்ட எட்டும் நிலை

 1.  

தியானம்

சரணாகதி

முறை

 1.  

சிருஷ்டி

பரிணாமம்

சிருஷ்டியில் உள்ள நிலை

 1.  

பகுதியான ஆத்மா பரமாத்மாவை அடைகிறது

வளரும் ஆன்மா முழு ஜீவனைத் திருவுரு மாற்றுகிறது

ஆன்மீகக் கருவி

 1.  

மேல்நோக்கி செல்லும்

மேலும் கீழும் நோக்கிச் செல்லும்

பரிணாமப் பாதை

 

நண்பர் - இந்த 18இல் விட்டுப்போனது சத்தியம்.

அன்பர் - அப்படியென்றால்?

நண்பர் - தெய்வலோகத்தில் அறியாமை - பொய் - உண்டு. கிருஷ்ணாவதாரம் உற்பத்தியான இடம். பிரபஞ்சத்தைக் கடக்கும்வரை அறியாமை என்ற ரூபத்தில் பொய் வரும். எந்த ஆன்மீகச் சித்தியிலும் ஓரளவு அறியாமை, அகந்தை, பொய் விட்டுப் போகும்.

அன்பர் - சத்தியம் என்பது சத்தின் புறமாயிற்றே. சத்தியத்தை ழுமையாக அடைய முடியாதோ?

நண்பர் - 7 அஞ்ஞானங்களில் 6வது அஞ்ஞானம் Cosmic Ignorance பிரபஞ்சத்தின் ஜீவனை அறியாதது. அது போகும்வரை அகந்தை அழியாது. அகந்தை அழிந்தாலும் 7ஆம் அறியாமை ஆதியை அறியாதது இருக்கும்.

அன்பர் - ரிஷிகள் பிரம்மத்தைக் கண்டவர்களாயிற்றே.book | by Dr. Radut