Skip to Content

பகுதி 1

அன்பர் - காஷ்மீர் எல்லை கடுமையாக இருக்கிறதே, இதை ஆன்மீகரீதியில் எப்படிப் புரிந்து கொள்வது?

நண்பர் - 1965இலும், 1972இல் பங்களாதேஷிலும் நடந்த போர்களில் அன்னை கூறியது நினைவிருக்கிறதா?

அன்பர் - இந்தியா 1947இல் இருந்த நிலைக்கு வரும் என்றார். அமெரிக்காவும், ரஷியாவும் அணுகுண்டுகளை 2/3 பாகம் குறைத்துவிட ஒப்பந்தம் செய்யும்பொழுது, பாகிஸ்தான் சூடாகப் பேசுகிறது.

நண்பர் - பெரிய போர் நின்றால், சிறு பூசல்கள் எழும் என்பது சட்டம்.

அன்பர் - சிறு பூசல்களும் அழியும் நேரம் வந்தது எதிர்மறையாகத் தோன்றுகிறதா?

நண்பர் - ஆமாம். உலகம் முன்னேறும்பொழுது பழைய பெருச்சாளிகள் ஏராளமாக வெளிவந்து அட்டகாசம் செய்வதைக் காஷ்மீர் கூறுகிறது. நினைக்கவே முடியாத அளவு வசதியும், செல்வமும் நம்மை நோக்கிப் புரண்டு வருவதால் போர் முனை சூடாகிறது.

அன்பர் - 1947இல் சுதந்திரம் வந்தபொழுது ஒரு கோடி மக்கள் அகதியாயினர். 4 ஆண்டுகட்கு முன் வங்காளப் பஞ்சம்

வந்தது. இவை சுதந்திரத்துடன் வந்ததுபோல் சுபீட்சத்துடன் காஷ்மீர் கலவரம் வருகின்றதா? சுபீட்சத்தின் அறிகுறிகள் எவை?

நண்பர் - 50,000 அணுகுண்டுகளை 1/3 குறைக்க 1988இல் வல்லரசுகள் முடிவு செய்தன. இந்த வாரம் 2/3 பாகம் குறைக்க ஒப்பந்தமாகிறது. 1988இல் 1200 பில்லியன் டாலர் இராணுவ பட்ஜெட் 800 ஆயிற்று, இப்பொழுது 400 ஆயிற்று. போர் குறைவது, அழிவது சுபீட்சம் வளரும் வழியில்லையா? 1940க்கு முன் வல்லவனே வாழத் தடுமாறும் நேரம். இன்று எளியவனுக்கு ஏற்றம் தேடும் நிலை. கண் தெரியாதவன், நடக்க முடியாதவன் ஏற்றம் தேடும் நிலை. கண் தெரியாதவன், நடக்க முடியாதவன் எல்லாம் மனிதனாக வாழவேண்டும் என உலகம் முடிவு செய்துள்ளது.

அன்பர் - அது சுபீட்ச அறிகுறி என்று கொள்ளலாம். வாழ முடியாதவனுக்கு வாழ்வு கொடுக்க உலகம் முயன்றால், வாழ வேண்டியவன் ஓஹோ என்று வாழக் கூடாதா?

நண்பர் - வாழ்க்கையே வாளாக மாறி மனிதனுடன் போர் தொடுத்ததாகப் புலவர் அந்நாளை வர்ணித்தார். இன்று வாழ்வு மனிதனைச் சிறப்பாக வாழக் கட்டாயப்படுத்துகிறது என்றும் கூறும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

அன்பர் - 1956இல் வந்த சத்தியஜீவிய சக்தியின் அருள் எனக் கூறலாமன்றோ? மேல் மட்டத்திலிருந்து

அடித்தளம்வரை இந்த சுபீட்சம் இங்கும் அங்குமாகத் தன் அறிகுறிகளைக் காட்டுகின்றது உண்மைதான்.

நண்பர் - நம்மவருக்கு அதிர்ஷ்டம் புரியும். நாட்டின் சுபீட்சம் அதே தெளிவுடன் விளங்காது. அதிர்ஷ்டம், சுபீட்சமாக, அலை அலையாக எல்லாப் பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறது என்றால் எங்கே என்று கேட்பார்கள்.

அன்பர் - அப்படியிருப்பது தெரிந்தால் நிலைமை மாறுமா?

நண்பர் - தெரிவது பாதி, பெறுவது அடுத்த பகுதி.

அன்பர் - மக்களுக்குத் தெரியும்படிக் கூறமுடியுமா?

நண்பர் - தெரியும்படிக் கூறலாம். கூறுவது புரியவேண்டும். புரிவதை ஏற்கவேண்டும். ஏற்றுச் செயல்பட்டால் பலன் உண்டு.

அன்பர் - எப்படிக் கூறலாம்? ஆன்மீகரீதியில் தத்துவமாகக் கூற முடியுமா? அல்லது பொருளாதாரக் கொள்கையாக விளக்க முடியுமா?

நண்பர் - அவை பலன் தாரா. நடைமுறையில் இதைச் செய்தால் இந்த பலன் உண்டு என்று கூறலாம்.

இக்கருத்தை 10 வகைகளாகக் கூறலாம்.

 • 1. இன்று, இப்பொழுது என்ன செய்யலாம் என்பது நடைமுறை.

 • 2. இதுவரை உலகம் அதிவேகமாக உயர்ந்தமுறை இதுவே என்று கூறுவது சரித்திரச் சான்று.
 • 3. என்ன செய்யக்கூடாது என்றும் கூறலாம். என்ன செய்யாவிட்டால் அதிர்ஷ்டம் தானே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் என்பது (discipline) கட்டுப்பாடு வழியாகக் கூறுவது.
 • 4. சொந்த அனுபவத்தால் எப்படி அதிர்ஷ்டம் உள்ளே வரும் எனக் கூறுவது நாமே கண்ணால் பார்க்கும் முறை.
 • 5. புறம் அகமாவது ஆன்மீக முறை.
 • 6. முடிவு முதற்கட்டத்திலிருக்க வேண்டும் என்பது மானேஜ்மெண்ட் முறை.
 • 7. கீதையின் வாயிலாகக் கூறலாம்.
 • 8. ஆழ்மனம் மேல்மனமாக வேண்டும் என்பது யோகச் சட்டம்.
 • 9. காலத்தை வெல்லும் முறையொன்றுண்டு.
 • 10. பிறரிடமிருந்து அறியும் முறையாகவும் கூறலாம்.

அன்பர் - இவை உலகத்திற்கா, அன்பர்கட்கா?

நண்பர் - உலகம் ஏற்பதே நோக்கம். அன்பர்கள் அன்னைச் சூழலில் இருப்பதால் எளிதில் பெறலாம். ஆர்வமிருந்தால் கூறுவது எளிது. ஆர்வத்தை எழுப்பி, பிறகு கூறுவது சிரமம். ஆர்வத்தை எழுப்புவதுடன் நாம் களைத்து விடுகிறோம்.

அன்பர் - ஆர்வம் தானே முக்கியம்.

நண்பர் - நாம் அகம், புறம் என்பதில் ஆர்வம் அகமாகும். புறம் பிறர் எடுத்துக் கூறுவது. நான் கூறும் 10 முறைகளில் புறம் அகமாவது ஒரு முக்கியமான முறை.

அன்பர் - உதாரணம்?

நண்பர் - பட்டம் பெற உள்ள முறைகளில் தபால்வழி படிப்பது ஒரு முறை. இது வரப்பிரசாதம். வேலையிலிருந்து கொண்டே பட்டம் பெறும் வழி. இப்படிப்பட்ட வசதிகள் வரும் என அந்த நாளில் எவரும் கனவு கூடக் காண்பதில்லை.

அன்பர் - ஏராளமான பேர் தபால் வழி பட்டம் பெற்றுள்ளனர்.

நண்பர் - பட்டம் பெறத் தகுதியுள்ளவரில் எத்தனை சதவீதம் பெற்றிருப்பார்கள்? 100% எதிர்பார்க்கக் கூடாது. சுமார் 50% இல்லை என்று அறிவோம். ஒரு 4 or 5% தான் பெற்றிருப்பார்கள் என்பது என் அபிப்பிராயம். அது 4% தானா, 40% தானா என்பது இருக்கட்டும். 40 ஆனாலும் அதிலிருந்து 50க்கு உயரலாம். 4 என்பது உண்மையானால் அது 14% ஆக உயர்ந்தால் அது 3 மடங்கு உயர்வாகும். மிகப் பெரிய வாய்ப்பு புறத்திலுள்ளது 4% மாறி 14% ஆக 20 அல்லது 30 வருஷங்களாகும்.

அன்பர் - அதை எப்படித் துரிதப்படுத்தலாம்?

நண்பர் - புறத்தில் பட்டம் பெறுபவர் தொகை வளர சர்க்காரும், சமூகமும் பல திட்டங்கள் கொண்டுவர வேண்டும். அதற்கு 20 அல்லது 30 ஆண்டுகளாகும்.

அன்பர் - வேறு என்ன வழியிருக்கிறது?

நண்பர் - புறம் அகமானால் பலன் உடனே கிடைக்கும்.

அன்பர் - எப்படி அகமாக மாறுவது என்று சொல்லுங்கள்.

நண்பர் - நாட்டில் elite உயர் மட்டத்தில் சுமார் பல இலட்சம் அறிஞர்கள் உண்டு. அவர்கள் இந்த மாற்றத்தை (4 முதல் 14% வரை) மனத்தால் விரும்பினால் ஓரிரு ஆண்டுகளில் பலிக்கும். அறிஞர்கள் நாட்டின் ஜீவனுக்கு அகம்.

அன்பர் - அதை எப்படிச் செய்வது?

நண்பர் - அது நடந்தால் நாடு உயரும் என்பதைக் கூறுவதே இக்கட்டுரை.

அன்பர் - உலகில் எந்த முன்னேற்றம் வேண்டுமானாலும், உலகின் அகம் (தலைவர்கள், சிந்தனையாளர்கள்) அதை ஏற்றால் 3000 AD உடனே வரும் என்பது ஆன்மீக உண்மை. அதற்கு அடுத்த கட்டம் உண்டா?

நண்பர் - இக்கருத்தை நம்புபவர் 1500 பேரானால், அவர்களுள் பட்டம் பெறும் தகுதியுள்ளவர் 187 பேரானால், அந்த 187 பேரும் பட்டம் பெற்றால் நாட்டின் அகம் இக்கருத்தை ஏற்றதற்குச் சமமாகும்.

அன்பர் - அது உண்மையா?

நண்பர் - அது ஆன்மீக உண்மை.

அன்பர் - அன்பர்கள் அனைவரும் அதை மேற்கொள்வார்களா?

நண்பர் - எல்லா அன்பர்களும் அபரிமிதமான பெருவாழ்வைப் பெற சத்தியத்தை நாடினால் படிப்பு அதில் ஒரு பகுதியாகும்.

அன்பர் - அன்னையை நாடினால் என்பது அதுதானே? அன்பர்கள் பெற்றால் அனைவரும் பெறுவர் என்றாகிறது.

நண்பர் - இக்கருத்து அன்பர் மனதில் ஆழப்பதிந்தால் நல்லது. 10 முறை வழி பலன் பெறலாம் எனக் கூறிய அதே கருத்தை அதே 10 முறை வழி இது சரியானது எனவும் எடுத்துக் கூறலாம்.

 • 1. இன்று, இம்முறையை நாம் அறிவோம். புதிய விஷயங்களில் இதை நாம் பின்பற்றுவதில்லை என்பது ஒரு விளக்கம். இந்த ஆண்டு இந்தச் சுற்றுவட்டாரத்தில் நடந்த 100 திருமணங்களைக் கவனித்தால், எத்தனை சுமுகமாக நடந்தேறியது, எத்தனை நடக்கத் தவறியது என்றால் 100 விழாக்களும் நல்லபடியாக நடந்தேறின எனக் காண்கிறோம். முக்கியமாகத் திருமணவிழாவைக் குறையின்றி நடத்தும் திறன் 100% மக்களுக்குரியது என்று இது தெரிவிக்கிறது.

தொழிற்பேட்டையில் ஆரம்பித்த 100 தொழில்களில் என்ன நிலை என்றால்,

30 நடக்கின்றன. 35 மூடிவிட்டன. 15 சில மாதங்கள் திறக்கின்றன.

20 ஆரம்பிக்கவேயில்லை. முதலாளி பாங்க் பணத்தை எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டான் என்று அறிகிறோம். திருமணம் நடத்துவதிலுள்ள அக்கறை, பொறுப்பு, நாணயம் தொழில் நடத்துவதிலில்லை என்று இவ்விவரம் கூறுகிறது. 30 தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்குப் பதில் 60 தொழில்கள் நடந்தால் நாடு வளம் கொழிக்கும் என்பதே நான் கூறுவது. சர்க்கார் முனைந்தால் 90உம் நடக்கும். 100 தொழில்களையும் நடத்த முடியும். நான் கேட்பது 60. உள்ள வசதிகளை அதிகமாக அனுபவிக்கும் முறை. தெரியாது என்பதில்லை. செய்யவில்லை என்பதே குறை.

 • 2. "தெரிந்த தவற்றைத் திரும்பவும் செய்யக் கூடாது'' என்பது ஒரு முறை.

- முக்கியமானவரைப் புறக்கணிப்பது தவறு.

- கவனம் குறைந்தால், காரியம் கெடும்.

- வரவுக்கு மீறிய செலவு தவறு.

- திறமையற்றவரை உறவு என்பதால் பொறுப்பில் வைக்கக் கூடாது என்பது போன்ற தெரிந்த

தவறுகளைச் செய்து காரியம் கெட்டுவிட்டது என்பது மன்னிக்க முடியாதது. நாம் கூறும் அபரிமிதமான செல்வம் பெறும் வழிகளில் "என் பிள்ளை சரியில்லை எனத் தெரியும். எப்படி அவனை விலக்குவது'' என்ற கேள்வியை எழுப்பக் கூடாது. காரியத்திற்கு உரியவர்களைச் சேர்க்கவேண்டும். எதிரானவரை அவசியம் விலக்கவேண்டும்.

 • 3. "இதுவரை அதிவேகமானவர் முன்னுக்கு வந்தது இதுபோல்'' முன்னுக்கு வந்தவர் 10 பேர், 10 கம்பனி, 10 நாடுகளில் உள்ள நிலையை ஆராய்ச்சி செய்தால், அதையே இங்கு பலன் பெற ஏற்றுக்கொண்டால் வெற்றி நிச்சயம்.
 • 4. "நாம் வெற்றி பெற்ற விஷயங்களில் என்ன முறைகளைப் பின்பற்றினோம்'' என்று யோசனை செய்தாலும் இது புரியும்.

அன்பர் - இது புரியும் என்றால் அபரிமிதமான அதிர்ஷ்டம் நம் வீட்டிற்குள் கதவைத் தட்டி வரும் என்று தானே கூறுகிறீர்கள்?

நண்பர் - ஆம்.

 • 5. புறம் அகமாவது அடுத்த முறை.

உங்கள் அனுபவம் இரண்டு project  முதல் projectற்க்கு 9 ஆண்டுகளும், இரண்டாம் projectற்க்கு 9 நாட்களும் தேவைப்பட்டது நினைவிருக்கும்.

அன்பர் - இரண்டாம் project முதல் projectஐப் போல் இரு மடங்கு.

நண்பர் - முதல் புறத்தில் வேலை, இரண்டாவது அகத்தில் வேலை. புறவேலையில் நம்பிக்கை இழந்து அகவேலையில் நம்பிக்கை வந்து செயல்பட்டால் நல்லது.

அன்பர் - ஏன் அகம் அதிகப் பலன் தருகிறது?

நண்பர் - அகத்திற்குக் காலம், மனம், அகந்தை கட்டுப்படுவதால் அகம் தூய்மையாக இருக்கும்பொழுது பலன் பத்து மடங்கு. எல்லா முறைகளையும் உதாரணத்துடன் விளக்குவதைவிட உங்கள் மனம் இதைப் புரிந்து கொள்கிறதா? ஏற்கிறதா? செயல்படப் பிரியப்படுவீர்களா? என்பதே முக்கியம்.

அன்பர் - இவையெல்லாம் இருந்தாலும், இது சம்பந்தமாக நீங்கள் கூறி இருப்பவற்றையெல்லாம் கேட்டுக் கொள்ளப் பிரியப்படுகிறேன். ஒரு முறையில்லை. பலமுறை கேட்டுக் கொள்வேன்.

நண்பர் - பலமுறை கூற விரும்புகிறேன். பல வகைகளாகக் கூற விரும்புகிறேன். அதனால் திரும்பத் திரும்ப சில விஷயங்கள் வந்தாலும் பரவாயில்லை.

- உலகம் மனிதனை அழிக்க முயலாமல், மனிதனை வாழ வைக்க முனைந்துள்ளது.

- உலகம் என்பது நாகரீகம், உரிமை, மக்களாட்சி, டெக்னாலஜி, மனநிலை என்ற கோணங்களில் உயர்ந்துள்ளது.

- வசதி, வசதி தரும் வகைகள் பெருகியுள்ளன.

- கடன்பெறுபவன் பணத்தை நாடிப் போனது மாறி, பணம் உள்ளவன் கடன் பெறுபவனை நாடிப் போகும் நிலையுண்டு.

- ராணுவ பலம் மரியாதை இழந்து, பொருளாதாரப் பலம் மரியாதை பெற்றுள்ளது.

- வல்லரசைக் கண்டு அடங்கிய சிறு நாடுகள், இன்று அச்சமின்றி பேசுகின்றன.

- வலியவனைக் கண்டு அடங்கிய எளியவனுக்குப் பலவகைகளிலும் மரியாதை வந்துள்ளது.

- மக்குவைக் கேலி செய்த நாள் போய், மரியாதையாக அவனை slow learner என்றழைக்கின்றனர்.

- Backward countries என்பதை developing nations என்றழைக்கின்றனர்.

உலகம் நாகரீகம் பெற்றுள்ளது. சாதாரண மனிதனுக்குப் பெருவாழ்வுக்குரிய எல்லாச் சந்தர்ப்பங்களும் உலகில் நிறைந்துள்ளன. இந்த உண்மையைப் புரிந்து கொள்பவர் அதைப் பெற முன்வரவேண்டும். புரிந்துகொண்டபின் பெற முயன்றால், அவர்கட்குரிய வழியுண்டு. ஒரு வழியைப்

பத்து விதங்களாகக் கூறலாம், எப்படிக் கூறினாலும் வழி ஒன்றுதான்.

- 1872இல் பகவான் அவதரித்தார். 1878இல் அன்னை அவதரித்தார். இன்று 130 ஆண்டுகள் ஆகின்றன. 1956இல் சத்தியஜீவியம் புவிக்கு வந்தது. அவருடைய பெயர் உலகில் பரவவில்லை. ஸ்ரீ அரவிந்தர், அன்னையை அறிந்தவர் குறைவு, மிகக்குறைவு. அவருடைய சக்தி சூட்சும உலகில் எவரும் அறியாமல் செயல்படுகிறது.

சத்தியஜீவன் பிறப்பது அவரது இலட்சியம். அதன்முன் இந்தியா உலகில் குருவாகும் என்றார். அதற்கு அடிப்படை உலக ஒற்றுமை. முதலிரண்டு இலட்சியங்கள் அவர் ஆயுட்காலத்தில் முடிந்து விட்டன.

பகவானுடைய இலட்சியங்கள் பெரியவை. உலகம் முன்னேறுவது மிகச் சிறிய இலட்சியம். மனிதன் தன்னையறிந்து, பகவான் கூறுவதை அறிந்து ஒரு துளி சக்தியைத் தன் வாழ்வில் செயல்பட அனுமதித்தால் உலகம் ஏராளமாக முன்னேறும்.

திருமணத்தை நடத்தும் பொறுப்புணர்ச்சியுடன், பணிவுடன் இங்குக் கூறப்படும் கருத்தை ஏற்று செயல்படுத்துவது அதிர்ஷ்டம்.

 • மனம் இரு பகுதிகளானது - ஞானம், உறுதி. உறுதி செயல்படும்பொழுது ஞானம் ஓரளவு பயன்படுவதால் வேலை சரிவர நடப்பதில்லை. வீடு கட்டும் உறுதியுண்டு. கட்டும் ஞானமில்லாவிட்டால், தரையோடு பள்ளமாக இருக்கும். கொத்தனாரிடம் சரியாக வேலை வாங்க முடிவதில்லை. அனுபவப்பட்டவருக்கு அக்குறை வாராது. ஏனெனில் அவருடைய ஞானம் உறுதிக்குள் உள்ளது. நமக்குள்ள ஞானம் உறுதிக்கு வெளியில் உள்ளது. ஞானம் உறுதிக்குள் இருந்தால் செயல் குறை வாராது.

- அது அனுபவத்தால் வரும். - அல்லது உறுதி ஞானத்திற்குச் சரணடைந்தால் வரும்.

உலகில் அதிர்ஷ்டமான வாய்ப்பு அபரிமிதமாக உள்ளது என்பதை இக்கட்டுரை கூறும் விளக்கம் மூலம் ஏற்றால் ஞானம் வரும். நம் மன உறுதி அந்த ஞானத்தை ஏற்றால், அந்த ஞானம் நம் வாழ்வில் அதிர்ஷ்டமாகப் பலிக்கும். நாம் அதை நம்பிக்கை என்கிறோம்.

 • நமக்கொரு சட்டம், பிறருக்கொரு சட்டம் என்பது நம் பழக்கம். இருவருக்கும் சட்டம் பொது என்பது தவறில்லாத சட்டம். பெண்ணைக் கட்டிக் கொடுத்தவர், பிள்ளையைக் கட்டிக் கொடுக்கும்

பொழுது தான் செய்ததை மீண்டும் செய்கிறார். பிள்ளையை முதல் திருமணம் செய்தவர் பெண்ணுக்குத் திருமணம் செய்தால் அதே சட்டம் மீண்டும் செயல்படுகிறது. உலகில் அதிர்ஷ்டம் வந்து காத்திருக்கிறது என்றால், "வந்தது, தானே உள்ளே வரட்டுமே'' என்பது சரியில்லை. பெண்ணுக்கு வரன் பேசும் பொழுதிருந்த பணிவு, அடக்கம், பொறுப்பு வரும் அதிர்ஷ்டத்தை வரவேற்கவும் வேண்டும். இதையே இருவருக்கும் ஒரே சட்டம் என்கிறேன்.

 • முடிவு முதற் கட்டத்திலிருக்க வேண்டும் என்பது முறை.

முதற் கட்டம் என்பது உள்ளும், புறமும் நிறைந்திருப்பது, நாம் கூறுவது புறத்திற்குரிய செய்திகள். அவை அறிவுக்குப் பொருத்தமானவையாக இருப்பது புறம் சரியாக இருப்பது. இவற்றையறிந்த பின் மனம் நிறைவாக இருப்பது அகம் சரியாக இருக்கிறது எனப் பொருள். இரண்டும் சரியாக இருந்தால் பலிக்கும்.

அன்பர் - இதுவரை நீங்கள் சரி எனக் கூறியது எனக்குச் சரியாகப் படுகிறது. மனம் நிறைவாக இருக்கிறது. நான் மேலும் பல விஷயங்களைப் பலமுறை கேட்டுக் கொள்கிறேன். இருந்தாலும் நான் செய்யக் கூடியது என்று ஒன்றுண்டா?

நண்பர் - உங்கள் தொழில் மேடையில் பேசுவது. கதை எழுதுவது. அவற்றுள் புதிய கருத்து என ஏதாவது இதுவரை உங்களுக்குத் தோன்றிற்றா?

அன்பர் - சில தோன்றின. சரியா எனத் தெரியவில்லை.

நண்பர் - எளியவன் மகன் படிப்பில் சிறப்பாகப் பரிசு பெறுகிறான். அது எனக்கு உற்சாகமான கருத்து.

அன்பர் - உற்சாகம் எந்த விஷயத்தில்?

நண்பர் - சிறுவன் வீட்டுச் சந்தர்ப்பத்தை மீறி பள்ளியில் முதலாக வந்த முயற்சி என் மனத்தைக் கவர்ந்தது.

அன்பர் - வறுமையை மீறிய படிப்பு இலட்சிய முயற்சி. அது எனக்குப் பிடிக்கும். பல கருத்துகள் மனதில் உள்ளன. சிலவற்றை என் கதைகளில் ஓரளவு எழுதியுள்ளேன். உலகப் புரட்சி அலை மீது தவழ்ந்து வரும் கதையை மனம் நாடுகிறது.

நண்பர் - புரட்சியலைக்கு வேகம் அதிகம். மனித மனத்தின் இலட்சியமும் புரட்சியும் சேருமிடம் சக்தி வாய்ந்தது.

அன்பர் - நாட்டின் எழுச்சியும், தனி நபரின் மலர்ச்சியும் சேருவது பெரிய நேரம். அதைக் கருவாகக் கொண்ட கதையில் நாம் எதிர்பார்க்கும் பலன் தெரியும். உலகம் ஆன்மீகத்தை நோக்கிப் போவது பெரும் புரட்சி. குழந்தை இலக்கியம் ஆன்மீகத்தை மாஜிக்காகக் கருதுவதால் இரண்டு நாளில் Harry Potter புத்தகம் 30 இலட்சம் பிரதிகள் விற்றன. அது போன்ற பலன்

எழுத்து, அரசியல், செல்வம் ஆகிய எத்துறையிலும் காணலாம்.

நண்பர் - எத்துறையில் கண்டாலும் சக்தி அதேபோல் செயல்படும். சக்தி தவறாது. ஒரு token act என்று எடுத்து செய்யவேண்டிய அவசியமில்லை. செய்தால் Harry Potter,Tom Pteres, மகேஷ் யோகி இவர்கள் பரவியதுபோல் தெளிவாகத் தெரியும். எந்தக் குறிப்பிட்ட காரியம் செய்யாவிட்டாலும் மனமும், வாழ்வும், குடும்பமும், நண்பர்களும் சக்தி உள்ளேயிருப்பதை, அதன் வீச்சை வெளிப்படுத்தும் சூரியோதயத்தை ஒருவர் எடுத்துக் விளக்க வேண்டிய அவசியமில்லை. பரம்பரையாக மகான்கள் பிறந்தால் அந்தச் சுற்றுவட்டாரம் செழிப்பு மிகுந்திருப்பதைச் சரித்திரம் கூறுகிறது. அன்னை சக்தி உலகத்தைச் செழிப்புறச் செய்யும். "நான் புதுவை வந்தபொழுது இது சுடுகாடாக இருந்தது'' என்றார் பகவான் ஸ்ரீ அரவிந்தர். அன்னை புதுவை வந்த ஆண்டு 1914இல் இந்த நூற்றாண்டில் அதிகமான மழை பெய்தது. அது பகவான் சமாதியடைந்த ஆண்டும் - 1950 - அன்பர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்த ஆண்டும் மீண்டும் இருமுறை திரும்பப் பெய்தது.

அன்பர் - ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் புதுவையில் புது யுகதர்மத்தை நிலைநாட்ட யோகம் செய்வதை அறிந்து நாட்டின் தவப்புதல்வர்கள் அவரை நாடினர்.

நண்பர் - நாடியது உண்மை. அதைவிடப் பெரிய தியாகமில்லை. அது பூர்வஜென்மப் புண்ணியம்.

அன்பர் - இந்த யோகம் பூர்த்தியாக பூர்வ ஜென்மப் புண்ணியமும் போதாது போலிருக்கிறது.

நண்பர் - நாடுவது வேறு, ஏற்பது வேறு. சத்தியஜீவியம் 1956இல் வந்தபொழுது, அன்னை சாதகர்களை நோக்கி, உங்கள் இலட்சியம் பூர்த்தியானதை ஏன் ஒருவரும் அறியவில்லை எனக் கேட்டார். நான் 1958இல் ஆசிரமம் வந்தேன். 1960இல் சத்தியஜீவியம் வந்த முதல் ஆண்டுவிழா (4ஆம் ஆண்டு நிறைவு) Feb.29 அன்று எனக்குத் தெரியாமற் போய்விட்டது. இரண்டாண்டாக பலமுறைகள் தரிசனம் செய்தும் முதல் நிறைவு விழாவை கேட்கும் தகுதியும் எனக்கில்லை.

அன்பர் - தரிசனம் செய்வது வேறு, கேட்கும் தகுதி வேறு. ஆசிரமத்தில் சேர்வது வேறு, அன்னையை ஏற்பது வேறு.

நண்பர் - அதனால் யோகம் (சத்திய ஜீவனாவது) பெரியது, அவதாரப் புருஷனுக்குரியது என்பதால் நான் அதைப்பற்றிப் பேசுவதில்லை.

அன்பர் - அதிர்ஷ்டம் யோகத்தின் சாயல். அதைப் பெறுவதே நமக்கு யோகம். நான் இன்று இப்பொழுது என்ன செய்யலாம்?

நண்பர் - தொண்டனுக்குப் பதவி வரும்பொழுது, பெரிய சம்பந்தம் பலிக்கும்பொழுது, 2 கோடி கம்பனிக்கு 80

லட்சம் ஆர்டர் வரும்பொழுது, தகுதியற்றவனுக்கு அமெரிக்கா போக சந்தர்ப்பம் வரும்பொழுது, எப்படி அதை வரவேற்கிறோமோ அதுபோல் யோகத்தின் அடிச்சுவடான அதிர்ஷ்டத்தின் இரகஸ்யத்தை வரவேற்று, காத்திருக்கும் மனநிலை வேண்டும்.

அன்பர் - அது இல்லை, அலட்சிய மனப்பான்மையிருக்கிறது. எதை 90 ஆண்டுகளாக எடுத்துச் சொல்ல எவரும் இல்லையோ, அதை எடுத்துச் சொன்னால், அதைப் போற்றும் மனநிலையில்லை. சரியில்லை என்பது சரி. ஒத்துக் கொள்கிறேன். இப்பொழுது மனம் மாறி ஏற்றுக் கொள்ளக் கூடாதா?

நண்பர் - சென்ற முறை செய்த அலட்சியம் இந்த முறை கூடாது.

அன்பர் - இந்த முறை அலட்சியம் கூடாது என்று தெரிகிறது. அக்கறை வரவில்லை. சத்தியத்தை நாடும் முறையொன்றைக் கூறுங்கள்.

நண்பர் - நம் வாழ்வில் குறையில்லை என்று எவர் கூறமுடியும்? நமக்கு இழந்த வாய்ப்பு மீண்டும் வரும்பொழுது, அதை நமக்கு ஒருவர் கொண்டு வந்து தரும்பொழுது, நம் குறையை உணர்ந்து விலக்கும் மனப்பான்மை வேண்டும்.

அன்பர் - அதை உணருவதில்லை. உணர்ந்தால் நாமே மனதால் மாறிக்கொள்ள முயல்கிறோம். அண்ணன் மகன் ஓராண்டு வீட்டில் தங்கிப் படித்தபொழுது மனைவி

அவன் மனம் நோக நடந்தாள் என்பது மனதில்படாது, பட்டால் இன்று நினைவு வாராது.

நண்பர் - மனதில்பட்டால் போதாது. நினைவு வந்தாலும் போதாது. அவனிடம் மன்னிப்பு கேட்டாலும் போதாது. மனம் நோக நடப்பது பாவம். அதற்கு உடந்தையாக இருப்பது பாவத்தின் பொய். தானும், மனைவியும் சேர்ந்து அப்படி நடந்து கொண்டதற்கு மனதால் வெட்கப்பட்டு, குன்றி, செயலால் மன்னிப்புக் கேட்டாலும், வாழ்வு அசையாது.

அன்பர் - அதுதான் தெரியுமே. இந்த அளவு மாறினால் அந்த அளவு மனத்திற்கு நிம்மதி வரும். உடலில் உள்ள நோயின் கடுமை குறையும். Life Response வந்தால் மனம் மாறியது உண்மை. மனத்தில் உண்மை Life Responseல் தெரியும். அது மனம் நொந்த பையனிடமிருந்து வரவேண்டும்.

நண்பர் - அன்னையோ, அடுத்தவரோ நம் கனவிலும் கருதாதபடி நடந்தபின், அதைத் தன் பெருமைக்கு அன்னையின் பெயரால் எடுத்துக் கொள்வது நம் வழக்கம்.

அன்பர் - அப்படிப்பட்ட விஷயம் நம் வாழ்விலிருந்தால் அங்கு மனம் நடிப்பு, பொய், நன்றிகெட்ட குணம், low consciousness, தாழ்ந்த உள்ளம் ஆகியவற்றிருந்து உண்மை, சத்தியம், நன்றி, higher consciousness, உயர்ந்த உள்ளம் ஆகியவற்றிற்கு மாறவேண்டும். எதுவும் results, life respose மூலம் ஏற்கலாம்.

வாயால் பேசும்வரை செய்யமாட்டார்கள் என்பது திண்ணம்.

நண்பர் - பெரிய வேலை வீடு தேடி வந்த பிறகு வேறு வேலையிருக்கிறது என்பவருக்குச் சிறியதே பெரியது. அப்படிப்பட்டவர்க்கு அருள் வந்ததே நினைவிருக்காது. அன்னை, "ஆன்மீக சக்தி வெளிப்பட்டால், இந்தியரால் தாங்க முடியவில்லை. உடல் நடுங்குகிறது. மேல் நாட்டார் அதை ஏற்க முடியாது என்பதால் அதை - ஆன்மீக சக்தியை - மறுத்துவிடுகின்றனர்'' என்கிறார்.

அன்பர் - அருளை மறுப்பவன் நாத்திகன். நீங்கள் கூறிய 10 முறைகளையும் விளக்கமாகக் கேட்டாலும் செய்பவனே செய்வான், மற்றவன் கேட்டுக் கொண்டு எழுந்து போவான். நான் மேலும் எதுவும் கேட்கக் கூடாது. என்னை ஒரு பெரிய காரியம் செய்ய 5 ஆண்டுகட்கு முன் கூறினீர்கள். 15 நாட்களில் அது முடிந்தது. பெரிய ஆரம்பம் பலனில்லாமல் போய்விட்டது. காரணம் ஒன்று எனக்குத் தெரிகிறது. அது சரியா? அப்பொழுது என்னுடனிருந்தவர் சரியில்லை. எனக்கு அவர் முக்கியம். என் தியானம் பெரிய காரியத்தை முடித்தாலும், என் மனம் முக்கியமாகத் தவறான மனிதரை அன்புடன் முழுமையாக வைத்திருந்ததால் பலனில்லை என நினைக்கிறேன்.

நண்பர் - அம்மனநிலை மாறினால், அந்த இடத்தில் மனம் சுத்தமானால் நல்லது.

அன்பர் - எனக்குப் பெரிய காரியங்கள் நடந்தன. அவை என்னைப் பிரபலமாக்கின. அப்பொழுது என்ன தவறு நடந்தது என்று நான் அறியவில்லை.

நண்பர் - அது உங்களுக்காகத் தெரிவது பலன் தரும்.

அன்பர் - "செய்தவரையும் விலக்கி, அன்னையையும் விலக்கி நான் என்னைப் பெரிய மனிதனாக்கிக் கொண்டேன்'' என்று கூறுவீர்கள்.

நண்பர் - செய்தவருக்கு நன்றியில்லாதது அற்பம்.

அன்பர் - நான் அற்பம் என்று அறியவேண்டுமா?

நண்பர் - அறிந்தால் போதாது.

அன்பர் - வெட்கப்பட வேண்டும் என்று சொல்வீர்கள். வெட்கம் வரமாட்டேன் என்கிறதே.

நண்பர் - வெட்கப்பட்டால் மனம் மாறும். மனம் மாறினால் காரியம் நடக்கும்.

*******

அன்பர் - Subconsciousக்குத் திறமையுண்டு, அது consciousஆக இருப்பதில்லை என்பதில், subconscious திறமை நம்முடையது தானே, cosciousஅது வேலை செய்தால் பலன் பெறுவது நாம் தானே, ஏன் செய்வதில்லை?

நண்பர் - நாம் எப்பொழுதும் நியாயம் பேசுகிறோம். அநியாயம் பலிக்காது என நம்புகிறோம். அநியாயம் பல இடங்களில் பலிப்பதையும் காண்கிறோம். அது விளங்குவதில்லை. அதேபோல் மனிதன் சுயநலமாகச் செயல்படுவான் எனக் கொள்கிறோம். அது உண்மையானாலும், சுயநலத்திற்காகவும் பல சமயங்களில் செயல்படுவதில்லை என்று காண்கிறோம்.

அன்பர் - Taste of Ignorance அறியாமை ருசித்தால் சுயநலத்தையும் நாம் விட்டுக் கொடுப்போம். அது தெரியும். subconscious திறமையை நமக்கே பயன்படுத்தாததும் taste of ignorance ஆகுமா? நண்பர் - நீங்கள் சொல்வது சரி. இந்த விளக்கம் நேரடியாக

TheLife Divineக்குக் கொண்டு போகும். நம் அனுபவம் என்ன?

 • 1. பொதுவாகப் பணத்திற்கு மனிதன் அசைவான்.
 • 2. நல்லவர்கள் நல்லது என்பதற்காக பணத்தை மீறி நடப்பார்கள்.
 • 3. மரியாதைக்காக மனிதன் பறப்பான். அப்பொழுது ஆதாயத்தையும் புறக்கணிப்பான்.
 • 4. பொறாமை பூர்த்தியாக மரியாதையை விட்டுக் கொடுத்தும் நடப்பான்.
 • 5. பொறுப்பைப் தட்டிக் கழிக்க மரியாதையையும் விட்டுக் கொடுப்பான். ஆனால் பொறாமை மரியாதையையும் மீறும்.book | by Dr. Radut