Skip to Content

பகுதி 4

- அன்பை சத்தியம், ஆன்மா, நன்மை எனக் கூறலாம் எனினும் அன்பு என்பது ஆன்மா காணும் ஆனந்தம் என்பதே உண்மை.

- தெய்வீக அன்பு ஒரு துளி உலகத்திற்கு வந்தால் உலகம் அழியும்.

- அன்பெனும் கருணை புத்தர் உபதேசம். பரிதாபம், அனுதாபம், கருணை, அருள் என்ற தொடர் அன்னை கூறியது.

- ஆணும் பெண்ணும் அணுகும் காதலை புவி Romance காதல் எனக் கூறுகிறது.

- உத்தம ஆத்மா உன்னத இலட்சியத்தை, தடைகளை மீறி அடைய முயல்வதை இலக்கியம் Romance காதல் என்கிறது.

- தடையில்லாமல் காதலில்லை.

- தடையற்ற உலகில் எழும் காதல் இறைவனை நாடும் காதல்.

- தடை, தடை செய்வதே காதலை உயிர்ப்பிப்பது.

- ஆத்மாவின் தூய்மையை அனுபவத்தின் தூய்மை எட்ட முரண்பாட்டை உடன்பாடாக்குவது இறைவன் அனுபவிக்கும் காதல் உணர்வு.

- ஆண்மையின் ஆட்சியை விரும்பி நாடும் பெண்மை அதையே தன் இலட்சியமாகக் கொள்வது வாழ்வு. பரிணாமம் நேர் எதிரானது. வலிமை நிறைந்த ஆண்மை தன் வன்மை மென்மையாக மிருதுவான பெண் தன்னை விரும்பி ஏற்க விரும்பி சரணாகதியை மேற்கொள்கிறான். மென்மை வலிமையின் சரணாகதியை ஏற்பது பரிணாமம் பூர்த்தியாவது.

- பெண்மை தான் நாடும் பாதுகாப்பைக் கைவிட்டு ஆண்மை தரும் சரணத்தை ஏற்பது முரண்பாடு பரிணாம உடன்பாடாவது.

- ஜீவியமும் சக்தியும் பிரிந்து ஏற்பட்டது சிருஷ்டி. பரிணாமத்தால் அவை மீண்டும் சேர்கின்றன. சக்தி ரூபத்தை இழப்பதால் ஏற்படும் பரிணாமம் இது.

- உணர்வின் கவர்ச்சி கனிவு. சிருஷ்டி தலைகீழே மாறி பரிணாமமாவது நம் வாழ்வில் சமூகத் தடையைக் கடப்பதாக எழுகிறது. கவர்ச்சி உடலுக்குரியது, கனிவு உணர்வில் எழுவது, கருணை ஆத்மாவின் இதயம். சிருஷ்டி பரிணாமமாக மாறுவது உடல் கவர்ச்சியாகவும், உணர்வில் இனிமையின் கனிவாகவும், ஆத்மாவில் கருணை ஊற்றாகவும் தெரியும்.

- அன்பின் தத்துவம் ஆராய்ச்சிக்குரிய விருந்து. அதை நடைமுறைப்படுத்துவது இடைவிடாத

பூரிப்பாக ஆத்மா உணர்வது. மனித உடலின் ஆன்மா அதை தாங்கமுடியாத ஆனந்தப் பூரிப்பாக ஏற்றுக்கொள்கிறது.

- உடலில் உள்ள ஆன்மா தன்னையுணர்ந்து விழித்தெழுந்து தன் ஆதியான பிரம்மத்தை நாட முயல்வது சிருஷ்டிக்குரிய யற்சியில்லை. அது பரிணாமத்திற்குரிய ஆச்சரியம்.

 • மனிதன் தன்னைக் கொல்லவந்த புலி தன்னை

சாப்பிட விரும்பிய உணர்வு தெய்வீக அன்பு. தெய்வச் செயலை மனித மனம் சித்ரவதை, கொடுமை என உணர்கிறது. இடைவிடாத பூரிப்பையும், தாங்க முடியாத உணர்வாகப் பெற்றால் தெய்வீக ஆனந்த பூரிப்பையும் உள்ளம் அன்பு வெளிப்படும். வேறு பல வகைகளாகவும் அதை அறியலாம். அத்திருஷ்டி மின்னலைத் திசை மாற்றும், ஜடத்தை ஆன்மாவால் ஆட்சி செய்யும்.

- ரசமற்ற புத்தகத்தை ஆர்வமாகப் படிப்பது அதுபோன்ற செயல். மற்றவை,

- கயமை உன்னைப் புண்படுத்தினால், புண்படாமல், புண்பட்ட உணர்விலிருந்து உயர்ந்து மனத்திற்கு வந்து, படிப்படியாய் உயர்ந்து Real-Idea பூரணமான எண்ணத்தின் Self conception சிருஷ்டிக்குரிய எண்ணம் வரை சென்றால், பரிணாமம் பூர்த்தியாக

கயமைப் பிறரைப் புண்படுத்தும் அவசியம் தெரியும். அங்குக் கயமையின் சொரூபம் கலைந்து ஸ்ரீ அரவிந்தர் திருமுகம் தெரியும். கயமை என்ற மாறுவேடம் பூண்டு வந்தது அவதாரம். நம் சொந்தக் கயமை அவதாரத்தின் திருமுகத்தைக் கண்டு கரையும், திருவுருமாறும். சிருஷ்டிக்குரிய எண்ணம் (Self-conception) இக்கட்டத்தில் உணர்ச்சியாகும். அது தெய்வீக அன்பாகும், அல்லது அதற்குச் சமமாகும். திருவுருமாறும் கயமை தன்னையழித்துக் கொடுப்பதை, கனிந்த காதலை அர்ப்பணமாகக் கொடுக்க விழையும் பெண் தானுயர்ந்து தருவாள். அது தெய்வீக அன்பு. ஆணின் சமர்ப்பணத்தை அது பெருகும் அளவில் முழுவதும் பெற விழையும் பெண்ணின் காதல் அனந்தமாக விரிவடைதல் தெய்வீக அன்பு.

கல்வி

- கல்வி சமூகத்தின் யோகம்.

- கல்வி பல பாடங்களைக் கற்பிக்கின்றது.

- பல்வேறு பாடங்களைக் கற்கும் சிறுவன் கற்பதெப்படி எனக் கற்கிறான்.

- கல்வி என்பது ஜட உலக நிகழ்ச்சி. விஷயம், செய்தி, எண்ணம், ஞானம் என்பவை படிப்படியாக அமைந்துள்ளன.

- சூட்சுமக் கல்வி ஞானத்தை நேரடியாக அளிக்கும்.

- விஷயம், செய்தி, எண்ணம், ஞானம் என்பவை பல கட்டங்களிலுள்ளன. பிழைப்பதெப்படி, வாழ்வது எங்ஙனம், சிந்தனை என்பதென்ன, ஆத்மா எப்படி நிலைப்பது என்ற ஒவ்வொரு நிலைக்கும் மேற்கூறிய 4 கட்டங்களுண்டு.

- மேற்கூறிய 4 நிலைகளில் எப்படிப் பிழைப்பது என்பதுபோல் வளர்வது, அடுத்த நிலைக்கு வளர்வது, பரிணாமம் என்பவைக்கும் இதேபோல் 4 கட்டக் கல்வியுண்டு.

- பல பாடங்களைக் கற்பதால் கற்கும் முறையை கற்கலாம்.

- கற்பது வாழ்வது; வாழ்வு சத்; சத் பரிணாமம்.

- கற்பித்தல் முதல் நிலையில் வாழ்வுக்கும், அடுத்த நிலையில் தவத்திற்கும், மூன்றாம் நிலையில் ஸ்ரீ அரவிந்தத்திற்கும் உரியது.

- நாம் மனப்பாடம் செய்கிறோம் அது கற்றலாகாது.

- கற்பது, கற்பித்தல் என்பவை வாழ்வு, தவம், ஸ்ரீ அரவிந்தத்திற்குரியவாறு செய்யலாம்.

- Internet குழந்தைகளை உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒரு வகுப்புக்கு வரும்படிச் செய்யக் கூடியது. உலகில் ஒரு பள்ளியில் ஒரு

வகுப்பு இந்த உயர்ந்த முறையில் நடந்தால் அது உலகில் எல்லாக் குழந்தைகட்கும் பயன் தரும்.

- வாழ்வுக்குரிய கற்பித்தல் இன்று உலகிலில்லை. அதை எப்படி ஒரு பள்ளியில் உற்பத்தி செய்வது?

- அதன் இரகஸ்யம் அதற்கேற்ற ஆசிரியரை ஏற்படுத்துவது. அவர் வாழ்வைக் கடந்து, தவத்தைக் கடந்து, பரிணாமத்திற்குரிய முறையைக் கையாள்பவராக இருக்க வேண்டும்.

- அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பரிணாமத்திற்குரிய ரிஷிகளாவார்.

- அம்முறை அஞ்ஞானத்திருந்து ஞானம் எழுவதாகும்.

- Internet ஆசிரியரைக் கடவுளாக்கும். கடவுளான ஆசிரியர் internrt மூலம் உலகில் எங்குள்ள குழந்தையையும் எட்டமுடியும்.

- ஆசிரியர் ஒரு செயலில் (act) ஆரம்பிக்க வேண்டும்.

- நாம் அதை token act என்கிறோம்.

- கடவுளாக விரும்புபவருக்கு அப்படிப்பட்ட செயல் அமையும்.

நிர்வாகம், எளியதும், பெரியதும் - அணுவும், அகண்டமும்

- ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாக, முறையாக செயல்களை அமைக்கவேண்டும். ஸ்தாபனத்தின் ஒவ்வொரு நிலைக்குரிய சட்டங்களும், மைய அதிகாரியும் தேவை. ஸ்தாபனத்தின் பண்புகள் சட்டமாகச் செயல் உறுப்பினர்களால் நடைமுறைப்படுத்தவேண்டும். உறுப்பினர் உள்ளம் உள்ளதை ஏற்று, ஏற்றத்தை நாடுவதாக அமையும். பெற்ற கல்வியும், சொந்தப் பண்பும் உறுப்பினர்களை ஸ்தாபனத்திற்கு உரியவராக்க வேண்டும். ஊர் உணர்ந்து செயல்படும் நேரம் உறுப்பினர்களும், ஸ்தாபனமும் பண்பாலும், திறமையாலும் பக்குவப்படவேண்டும்.

- அனுபவசாலிகள் மேற்கூறியவற்றை வீட்டிலும், தொழிலும், ஊரிலும் காண்பர்.

- மனம் மேற்சொன்னதை நிரந்தரமாக ஏற்பது நல்லது. இதன் பாகங்கள் இரண்டு:

 1. தம் ஸ்தாபனத்தை இலட்சிய ஸ்தாபனமாகக் கருதுதல்.
 2. இந்த ஸ்தாபனம் ஊருடைய சக்தி, திறமை, நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது என்று கொள்ள வேண்டும்.

- உயர்ந்தவர் இந்நோக்கத்தைத் தாங்கள் எட்ட வேண்டிய இலட்சியமாகக் கொள்வர். தாழ்ந்தவர்

தாம் உயர வேண்டிய நிலையாக இதைக் கொள்ள வேண்டும்.

- இச்சட்டப்படி ஒரு பொது ஸ்தாபனத்தை நிர்வாகம் செய்யத் தேவையான அத்தனை விவரங்களையும் internet இன்று நமக்குத் தரும்.

- இந்த வேலை நாம் தேடும் மாற்றம் நடக்கத் தேவையான காலத்தையும் உணர்த்தும் i ) சொந்த மாறுதல் ii) ஆபீசில் மாறுதல் iii) நாட்டிற்குரிய லட்சிய மாறுதல்கள். இவை எதுவும் 100 ஆண்டுகளுக்குக் குறையாது. சமூகம் தரும் அத்தனை வசதிகளையும் முழுவதும் பயன்படுத்தினால் 100 என்பது 80 ஆண்டுகள் ஆகும். நம் மனம் அறிந்த அனைத்தையும் அதுபோல் பயன்படுத்தினால் 80 ஆண்டுகள் 60 ஆகலாம். ஆன்மீக ஞானம் நாம் இதுவரை பெற்றதை அமுல்படுத்த முயன்றால் 100 ஆண்டுகள் என்பது சில ஆண்டுகளில் முடியும்.

- இது கற்பனையிலும் முடியும். எழுத்தாகவும் எழும். எழுத்தில் செயல்படுத்தக்கூடிய உத்தரவாகவும் எழுதிப் பார்க்கலாம்.

- இத்தெளிவுடன் ஒரு token actஐ எடுத்து, துல்லியமாக எழுதிச் செயல்படுத்துவது வாழ்வில் யோகம் ஆரம்பிப்பதாகும்.

- இம்முறை ஒரு பெரிய சௌகரியம் தரும். விதண்டாவாதம், குதர்க்கம், அறிவுக்குப்

பொருந்தாதவை, நடைமுறைக்கு ஒவ்வாதவை ஐயங்களாகவோ, கேள்வியாகவோ எழ வசதி இல்லை.

- அறிவுக்குப் பொருத்தமற்றதை ஆரம்பத்திலேயே விலக்கினால், பிரம்மாண்டம் கண்டத்திலிருந்து (infinite out of finite) எழ வழி செய்யும்.

- விவரமில்லாத நிர்வாகத்தில் documents பேப்பர்கள் குவியலாக இருக்கும். ஒன்று தேவைப்பட்டால் தேடி எடுக்க ஒரு யுகமாகும். தெளிவான நிர்வாகத்தில் பேப்பர் fileஇல் இருக்கும். File ஓர் orderஆக இருக்கும். தேட வேண்டாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வரும் கட்டங்களைக் கருதுவோம்.

 • ஒழுங்குபடுத்தும் எண்ணமே கசப்பாக இருக்கும்.
 • இந்த ஒழுங்குக்கு ஒரு சௌகரியம் உண்டு என உணர்வு நம்பி தன் எதிர்ப்பைக் கைவிட்டு முறையைக் கைக் கொள்ள முன் வரவேண்டும்.
 • ஆரம்பிக்க நினைத்தால் நினைப்பு நினைப்பிலேயே முடியும்.
 • மனம் ஒழுங்கைப் போற்றி, உணர்வு அதை ஏற்று மகிழும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். உணர்வே வேண்டும் என்று கேட்கும்வரை பொறுக்க வேண்டும்.

 • முன்னோடியைச் சமூகம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் நம் மனம் ஒழுங்கை எதிர்த்துப் பேசுவதைக் காணலாம்.
 • இவ்வெதிர்ப்பைக் கடந்து புதிய முறை மூலம் செயல்படும்பொழுது நாமே நமக்கு வெறுப்பாகத் தோன்றும். நமக்குச் சமூகம் பாராட்டுவது அவசியம் என்பதை நம் மனம் இப்படிக் கூறும். சமூகம் மறுக்கும் பொழுது நல்ல முறையில் செயல்பட மலை போன்ற திறன் தேவை.
 • அது போன்ற முயற்சி ஸ்தாபனத்தில் எல்லா அம்சங்கட்கும் தேவை. தாசில்தாரை B.D.O. (Block Development Officer)ஆக மாற்றிய பொழுது இப்படிப்பட்ட எதிர்ப்பு இருந்தது. M.B.B.S., B.V.Sc.,B.Sc. Ag.,MABT, BABT ஆகிய பட்டம் பெற்றவர்கள் S.S.L.C. படித்த B.D.O கீழ் வேலை செய்ய மறுத்தனர்.
 • இந்த மாறுதல் அம்சங்கள் ஆயிரம். நடைமுறையில் அவற்றிற்குரிய உருவங்கள் பல. வேறுநாடுகளில் குடியிருப்பதைப் போன்ற மாறுதல்கள் அவை. புரிந்து செயல்பட முனைவது அதிக ஆர்வம், திறன் தரும்.
 • சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல், செயல் எழ வேண்டிய மாறுதலைப்

புரிந்து, உணர்ந்து, பிசிறின்றி நடத்த முயல்வது ஒரு புது உலகமாகும். புதுத் திறன் நிறைந்த புது உலகமாகும். அப்படிப்பட்ட மாறுதல் நிகழ்ந்தால், கீழ்க்கண்டவை வெளிவரும்.

- ஒரு காரியம் என்றால் அதற்கு ஒரு சட்டமிருக்கும். ஸ்தாபனத்திற்குரிய ஒரு பொருள்

- சுத்தி - அல்லது புத்தகம் ஆபீஸைவிட்டுப் போய்த் திரும்ப வேண்டுமானால், யாரிடம் சுத்தியிருக்கிறதோ அவர் கொடுப்பார். திரும்பிப் பெறுவார். இது அவருடைய செயல். ஒரு சிறு ரிஜிஸ்டரில் பொருளின் பெயர், கொடுத்தவர் கையெழுத்து, நாள், நேரம், ஏன் கொடுத்தார் என்ற காரணம், எப்பொழுது வர வேண்டும் என்பதைக் குறித்து அனுப்புவது சட்டம்.

- புது முறைகள் 300 நாள் வேலையை 3 நாளில் முடிக்க உதவும்.

- CD என்பது கம்ப்யூட்டர் புத்தகம். 30,000 பக்கங்களிலுள்ள கலைக்களஞ்சியம் ஒரு CDக்குள் அடங்குகிறது. புத்தகம் என ஏற்பட்ட நாளில் புத்தகங்கள் 21/2 அடி நீளம், 11/3 அடி அகலத்திற்கு, 3 பருமன் உள்ளதாக இருந்தது. லைப்ரரியில் புத்தகம் திருடு போகாமலிருக்க அவற்றை சங்கிலியால் அலமாரியுடன் கட்டியிருப்பார்கள். இப்பொழுது அவை 10x7

அளவில் வருகின்றன. இடத்தைப் பயன் படுத்துவதை அதிகரிப்பது தொழில் வளரப் பயன்படும். பலன் 10 மடங்கு, 20 மடங்கு எனப் பெருகும்.

- இவைபோல் வந்துள்ள புதுச் சௌகரியங்கள் பல. ஆனால் இவையெல்லாம் பழைய மனப்பான்மை மூலம் செயல்பட வேண்டும். T.V. அதிகப் பலனுள்ளது. பழைய மனப்பான்மையுள்ள வீட்டில் T.V. வாங்கினால் தகப்பனார் மட்டும் போட வேண்டும் என்ற சட்டத்தின் கீழ் நடந்தால்T.V.இன் பலன் பாதிக்கு மேல் வீணாகும். மனப்பான்மை மாறுவது முக்கியம். விமானப் பயணம், Internet வந்த பின்னும் கடையில் திருடும் பழக்கமும், பேரம் பேசும் பழக்கமும் போகவில்லை. இலாப நோக்கம் முன்னேற்றத்திற்குத் தடை.

- புதிய நர்ஸரி பள்ளிகள் முன்னேற்றத்தின் அறிகுறி. ஆனால் அங்கும் பரீட்சையுண்டு. பரீட்சை வந்தால் பாடமில்லை.

- குடும்ப வளர்ப்பு, மதவழிபாடு ஆகியவை முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை.

- அறியாமையை ரசித்து ருசித்து அனுபவிப்பது விஷம் போன்றது. எவர் கண்ணிலும் படாமல் வெளியூரில், வெளிநாட்டில் தங்குபவர்கட்கு முழுச் சுதந்திரமிருப்பதால் என்னென்ன செய்யலாம் என்று தோன்றுபவற்றை வெளியில்

சொல்ல முடியாது. அவை வெட்கப்பட்டுத் தலை குனிய வேண்டியவை.

-Token act என்பதை வெற்றியாக முடிக்க இம்மாறுதல்கள் அனைத்தும் தேவை. ஒன்றும் தவறக்கூடாது.

- மனம் மாறாமல் செயல் மாறினால் பலன் பூஜ்யமாக இருக்கும்.

- செயலை மேற்கொண்டால் செய்வது அவசியம். அபிப்பிராயம், விருப்பு, வெறுப்புக்கு இடம் இல்லை. ஏற்றதை முடிப்பது அவசியம். வேலை முடிந்தபின் என்ன செய்தோம் என நினைத்துப் பார்த்தால், எது புரியவில்லை, எது பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும். மனம் மாறினால் பலன் பல மடங்கு என்பது தெளிவு.

வேலையின் தரம் - வாழ்வில் திறமையின் தெளிவு

- மனிதன் உடலால் உழைக்க ஆரம்பித்து மனம், ஆன்மாவுக்கு உயர்ந்தான். இது திறமையின் வளர்ச்சி.

- மனம் வளர்ந்து ஆன்மா விழிப்புற்றபின் ஆன்மா உணர்விலும், உடலும் வெளிப் படுத்துவது அதிகத் திறமை.

நெல்லைக் குவியலாகப் போட்டு மேலே வைக்கோலால் மூடியது ஆரம்ப நாள் அறுவடை. இன்றும் சில இடங்களில் காணலாம். மனம்

வளர்ந்த பின் சாக்கில் மூட்டையாகக் கட்டியதால் எளிதில் எடுத்துப் போக முடிந்தது. நாணயம் என்பது ஆன்மா விழித்தபின் வந்த குணம். கடைப் பையனுக்கு நாணயம் வந்த பிறகு அவனிடம் கல்லாப் பெட்டியை விட்டுவிட்டுப் போகலாம். நாணயம் ஆன்மா செயல்படுவது. நாமே செய்ய வேண்டியதைச் சிறுவன் செய்யும் முன்னேற்றம் ஆன்மாவால் ஏற்பட்டது.

கூலிக்காரன் உடலால் உழைப்பவன்.

புரோக்கர், சூப்ரவைசர், வக்கீல், டாக்டர் ஆகியவர் உணர்வால் உழைப்பவர்.

எழுத்தாளர், ஆசிரியர், சிந்தனையாளர் மனதால் உழைப்பவர்.

பண்பால் தம் வேலையைச் செய்பவர் ஆன்மாவால் செயல்படுபவர்.

- வாழ்வின் மையம் வெளியேயில்லை, மனத்துள் உள்ளது.

- சராசரிக்குக் கீழ்ப்பட்டவர் வெளியிலிருந்தும், மேற்பட்டவர் உள்ளிலிருந்தும் செயல்படுகின்றனர்.

- எந்த அளவுக்கு மனிதன் மனத்துள்ளிருந்து செயல்படுகிறானோ அந்த அளவுக்கு அவனுக்குத் திறமை உயரும். அதை ஓர் அளவுகோலால் அளக்கலாம்.

- அதுபோன்ற அளவுகோல் மேற்சொன்ன 8 நிலைகட்கும் உண்டு. சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம், மனம், வாழ்வு, சைத்தியப் புருஷன், உடல் ஆகியவை அவ்வெட்டு நிலைகள்.

- இந்த எட்டு நிலைகளிலும் ஒருவர் தம்மை அளவுகோலால் அளக்க முடியும். மேலும் எந்த அளவு புறத்தினின்று, அகத்திற்குச் சென்றுள்ளோம் எனவும் அளக்கலாம்.

- இக்கட்டுரையின் சாரம் அளவுகோல்.

 • தன் நிலையை அளப்பது எனில், தானுள்ள இடத்தை அறிவது.
 • தான் எங்குப் போயிருக்கலாம் என அறிவதற்கும் உதவும்.
 • முயற்சி என்பது பெற்ற அறிவு, திறமை அல்லது சமர்ப்பணம்.
 • அளவுகோல் என்பது மேற்சொன்ன மூன்றில் ஒன்றாக இருக்கலாம்.
 • இத்துடன் அறிவு நிலைக்கும் திறமைக்கும் உள்ள, தொடர்பும் அதேபோல் சமர்ப்பணத்துடன் உள்ள தொடர்பும் மற்ற இரண்டிற்கும் தெரியும்
 • இவை முடிவற்றவை என்பதால், அளவுகோல்கள் அளவற்றவை.

செய்தவரை பலன் உண்டு

 • பூரணம் வாழ்வில்லை. அது பாதாளத்திற்கும், பரமாத்மாவிற்கும் உண்டு. Perfectionசிறப்பான பூரணமுள்ள இடத்தில் காரியம் உடனுக்குடன் ஆச்சரியமாகச் செயல்படும்.
 • உடல் உள்ளும் புறமும் பூரணமானது. ஒன்றோடொன்று தொடர்புள்ளது. தானே தன்னிச்சையாக நடப்பது உடல் தன்னைத் தானே தன்னிச்சையாக, சுய-பூரணமாகச் செய்துள்ளது. அவ்வளவும் ஆழ்மனத்திற்கு உரியது.
 • சூரிய மண்டலம் இயங்குவதும், அணுவினுள் உள்ள உலகம் செயல்படுவதும் இயங்குவதாகும். ஜட உலகம் பரமாத்மாவால் தெரியும். .
 • ஈஸ்வர சிருஷ்டி சத்தியஜீவிய உலகைச் சேர்ந்தது. அவை பிரபஞ்சத்தைச் சேர்ந்தவை. பூரணச் சிறப்புடையவை.
 • பாதாளமும், பரமாத்மாவும் தவிர வாழ்வெனினும், வாழ்வை உள்ளடக்கிய பிரபஞ்சமானாலும் அவை சிறப்புடையன அல்ல. பெரும்பாலும் அவை நடந்தவரை நல்லது என்றுள்ளனர்.
 • வேலை சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. சிப்பாய்கள் இராணுவமாகச் செல்வது அழகான ஒழுங்கு. மார்க்கட்டில் கூட்டம் கூட்டமாக இருக்குமே தவிர ஒழுங்காக இருக்காது. சிப்பாய் நடப்பது அழகு. கூட்டம் அடித்து மோதி ஓடும்.

 • ஒரு கம்பனி ஆட்டோமாடிக்காகச் செயல்பட்டால், அங்குள்ள புது மெஷின்கள் வேலை செய்வது இராணுவ டிரில் போலிருக்கும். பின்தங்கிய நாட்டில் பழைய கம்பனி மெஷின்கள் வேலைசெய்வது பார்க்க சகிக்காது.
 • மழையால் வளரும் பயிரை, Green House இல் வளரும் பயிருடன் ஒப்பிட முடியாது. மழையில் வளரும் புல் பசுமையாக இருக்கிறது. மழை உயிரூட்டுவதல்லவா?
 • காட்டில் வாழும் மனிதன் முதல் புது மெஷின்கள் உடல்நலத்தை அளக்கும் மனிதன்வரை மனிதர்கள் பலவகையினர்.
 • எழுவகை அஞ்ஞானங்களும், அவை இணைந்து இயங்குவதும் வாழ்வைப் பல நிலைகளில் பிரதிபலிக்கின்றன. ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் தவிர எவரும் உலகை அற்புதமாகக் காணவில்லை. விஸ்வரூபதரிசனமும் கோரக்காட்சிகளையும் காட்டியது. விஸ்வரூபதரிசனம் திருவுருமாறி கோரம் அழகானால் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூர் ஜெயிலில் கண்ட சத்தியஜீவிய அனுபவமாகும். கடைசி மனிதன் இன்றும் உயிருடனிருக்கிறான்.
 • மனித வாழ்வைப் பல கட்டங்களாகப் பிரிக்க ஜாதியைக் கருதினர். படிப்பு, அறிவு, செல்வம், நகரவாழ்வு, நவீனவாழ்வு, பயிற்சி, ஆர்வம், வருமானம், சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களைத் தரம் பிரிக்கலாம்.

 • இந்த அளவுகோல் நாம் எங்குள்ளோம் என எளிதில் காணலாம். 1 முதல் 10 உள்ள அளவுகோல் ஒரு பாயிண்ட் உயர்வது முன்னேற்றம். உயர்ந்த ஜீவியம் நிலை பெறச் செய்யும் முயற்சிகளில் ஒருவர் தம் ஆன்மீக முன்னேற்றத்தை அளவிட முடியும். அது சிறப்பெய்தும் வழி எனலாம். அல்லது நடந்தவரை நல்லது எனவும் கொள்ளலாம். செய்தவரை பலன் பெற்றோம் என நினைக்கலாம்.
 • நாம் The Life Divine நிதானப்படுத்துகிறோம், விழைகிறோம், படிக்கிறோம், மனத்தை இடைவிடாத நினைவை வேலையைச் சிறப்பாகச் செய்ய முயல்கிறோம். செய்தவரை பலனுண்டு என்ற தொடர் இவற்றை விளக்கக் கூடியது. உயர்ந்த ஜீவியத்தை நிலைக்க முயன்றால், நமக்குரிய பலன் வரும்.
 • எப்படியும் வாழலாம் என்ற மனிதன் பலன் கிடைத்தவரை போதும் என உயர்ந்த ஜீவியத்தை நாடினால், அதுவே இன்று நாம் நாடக்கூடிய அதிகபட்சச் சிறப்பு.
 • நாம் இன்று செய்யும் வேலையின் தரத்தை உயர்த்துவதே எளிது. அப்படியானால், அதிகம் சம்பாதிக்க வேண்டும்.
 • வீட்டில் சுமுகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு போவது, மலை ஏறுவதுபோல், முடிந்தால் செய்யலாம்.
 • நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அன்னைக்கு ஏற்றவாறு அமைப்பது ஆகாயத்தில் பறப்பது போன்றது. அது யோகத்திற்கு அவசியம்.

 • வாழ்வில் இவற்றைச் செய்வது யோகத்தில் செய்வதற்கு ஈடாகாது. எனினும் நமக்கு அது பெரியது.
 • அது பெரிய முன்னேற்றம் மட்டுமன்று. ஹனுமார் இலங்கைக்குத் தாவியது போன்ற முயற்சி அது.
 • இதுபோன்ற முயற்சி சமூகத்திற்குப் புறம்பானது. இதுவரை சமூகம் எட்டாத உயரம் எனப்படும்.
 • சமீபத்தில் நடந்த பெரிய காரியங்களைச் சிந்தனை செய்தால், அவை சமூகத்திற்குட்பட்டவை எனத் தெரியும்.
 • உயர்ந்த ஜீவியம் நிலைபெறுதல் என்றால், இதுவரை சமூகம் சாதிக்காததை நாம் சாதிப்போம் என்று பொருள்.
 • அன்னைக்குக் குறைந்தபட்சம், சமூகத்திற்கு அதிகபட்சம்.

உறைகல்

 • அதிர்ஷ்டம் வருவதை எப்படி மனிதன் வரவேற்கிறான் என்பது உறைகல்.
 • அதுவே தரித்திரத்திற்கும் பொருந்தும்.
 • எதை ஏற்க மனிதன் அதிக உஷாராக இருக்கிறான் என்று காண்பது அதிர்ச்சியான விஷயமாகும்.
 • மனிதனுக்குக் கஷ்டம் வந்தால் அனைவரும் விலகுவர். Timon of Athens என்ற வள்ளல் வறுமை எய்திய பொழுது ஒருவரும் அவனுடனில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய King Lear கதையில் அரசனுடன் ஒருவரேயிருந்தார். அப்படி ஒருவரிருந்தால் அவர்

உயிரை எடுப்பார். தெய்வாதீனமாக நடுத்தெருவில் நிற்பவருக்கு ஒரு புண்ணியவாளன் உதவி செய்து காப்பாற்றுவது உண்டு. அப்படி அவர் காப்பாற்றப்பட்டால் உடனே அச்செய்தியைச் சொல்ல அவருக்குத் துடிக்கும்.

- "பிழைத்தேன்'' என்ற செய்தியை பிழைக்க வைத்தவருக்குச் சொன்னதாகச் சரித்திரமில்லை.

- கெட்டுப் போனவனை அலட்சியம் செய்தவனுக்குச் சொல்லத்  தோன்றும். அப்படிப்பட்ட துரோகியிடம்தான் பிரியம் இருக்கும். சமயத்தில் அது மனைவியாக இருக்கும். அவளே அவன் அழியக் காரணமாக இருந்திருப்பாள். (ஷெர்லக் ஹோம்ஸ் - ஹில்டா) அல்லது கேலி செய்யும் ஆசைநாயகியாக இருப்பாள்.

- அன்பர்கள் அவசியம் அன்னையை மறந்து விடுவார்கள். தவறாமல் நன்றி கூறுபவர் வாயால் கூறுவர்.

 • பலன் வந்தவுடன் பாரம் இறங்கும். அடுத்து செய்ய வேண்டியதைக் சாதிக்கமாட்டார்கள்.கருதுவர். அவர்கள் எதையும்
 • பெரும்பாலோர் யாருடைய உதவியால் பலன் வந்ததோ அவருக்கு மட்டும் சொல்ல மறந்துவிடுவர். ஒரு சிலர் உதவி செய்தவருக்கு மட்டும் சொல்லக் கூடாது என முடிவு செய்வர்.

 • பலன் வரும் நேரம் நன்றி உணருபவருக்கு அற்புதம் தெரியும்.
 • இந்தச் சந்தர்ப்பங்களில் கடமை எது, நல்லது என்றால் என்ன, யோகத்திற்குரியது எது என எவரும் அறிவர். என்ன செய்யக் கூடாது, எது தவறக்கூடாது எனவும் தெரியும்.
 • தான் எங்கு உள்ளோம் என அளவீடு எடுப்பது முடியும்.என்ன அளவுகோல் என்பது அவரவருடைய பண்பைப் பொருத்தது.

வாழ்வும், உடல்நலமும்

 • வாழ்வு முழுமையானது, முழுமையாக சிருஷ்டிக்கப்பட்டது, முழுமையாகச் செயல்படுகிறது, என்பதை உடல்நலத்தால் எடுத்துக் காட்டலாம். நோயினின்று உடல் திரும்பிவரும் பாணி அதைக் காட்டும். மருந்து, வைத்தியம் கடந்து உடலுக்கு உயிருண்டு என்பது நோய் குணமாகும் நேரம் தெரியும்.
 • அரசியலும் அது போன்றதே. வாழ்வை முழுமையாகஅரசியல்வாதி அறிவது அரிது. உடல்நலத்தின் முழுமையை அறிந்த டாக்டர்கள் ஏராளம்.
 • அரசியல்வாதிக்கு என்ன புரிகிறது என்பதை மக்கள் அறிய முடியாது. நோயாளிக்கு டாக்டரை எளிதில் புரியும்.
 • பாண்டிச்சேரியிலும் அப்படிப்பட்ட டாக்டர்கள் பலருண்டு.பேராசிரியர்கள்போல் தொழிலிலுள்ளவர் படிக்க

நேரமிருக்காது. அவர்கள் தொழில் நுணுக்கமாக இருப்பார்கள். வாழ்வைப் பற்றி அவர்கள் அறியமாட்டார்கள். அதிகமாகப் படிக்கும் வக்கீல் தொழிலும் இந்தியாவில் படிக்கும் பழக்கம் general reading வளரவில்லை. மனப்பாடம் செய்யும் பழக்கம், படிக்கும் பழக்கத்தை வளரவிடவில்லை. ஆழ்ந்து புதைந்துள்ள ஆன்மீகத்தைக் காப்பாற்ற அதற்கெதிரான அறிவை வளர்க்கவில்லை என்று நாம் கூறலாம். மேல்நாட்டில் Jung என்ற டாக்டர் ஒரு புதுத் துறையை ஏற்படுத்தினார். கானன் டாயில் என்ற டாக்டர் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளை எழுதினார்.

 • நாட்டில் ஏராளமான டாக்டர்கள் டெஸ்ட் இல்லாமல் பார்த்தவுடன் வியாதியை அறியக்கூடும் என்பது என் அபிப்பிராயம். அது அவர்கட்கு வாழ்க்கை புரிகிறது என்று பொருள். உடல்நலம் புரிவதினின்று வாழ்வு புரிய உள்ள தூரம் அதிகம். மனிதன் சிறியவனானால் இத்திறமையே அவனுக்குத் தடையாக அமையும். ஆத்மா பெரியதானால், இங்கிருந்து வாழ்வைப் புரிந்து கொள்ள முயல்வது எளிது.
 • The Life Divine நன்றாகத் தெரிந்தவர், அதை வாழ்வில் எப்படிப் பின்பற்றுவது என்றும் அறிந்தவர், வியாதியை சூட்சுமமாக அறியும் திறனுள்ள டாக்டருக்கு வாழ்வுக்கும் உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்ட முடியும். ஆன்மாவை விளக்க முடியாவிட்டால் உடலை விளக்க முடியும்.
 • டாக்டர்களை விஞ்ஞானிகள் என்கிறார்கள். நோயாளியை குணப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. பௌதீகப் பேராசிரியருக்கோ, கணிதப் பேராசிரியருக்கோ அது போன்ற அவசியமில்லை. எனவே டாக்டர் ஸ்ரீ அரவிந்தத்தை அறிய முடியும்.
 • டாக்டரைவிட நாம் இதைச் செய்யலாம். உடலைப் பற்றியும், மருந்தைப் பற்றியும் நமக்கு விவரமாகத் தெரியுமிடத்தில் நாம் இதைச் செய்யமுடியும்.

- உடல்நலம் சாப்பாட்டையும், தூக்கத்தையும் பொருத்தது.

- உடல்நலம் மனத்தைப் பொருத்தது. மனநிம்மதி மனத்தின் நம்பிக்கையையும், நோக்கத்தையும் பொருத்தது.

- உடல்நலம் பாதிக்கப்பட்டவுடன் அது எந்த நினைவிலிருந்து வருகிறது என்று காண முடியும். காண்பது நம்மை நாம் அறிவதைப் பொருத்தது.

- ஜுரம் வந்தால் மாத்திரை சாப்பிடுகிறோம். ஓய்வு எடுக்கிறோம், டோஸ் அதிகப் படுத்துகிறோம், கவலைப்படுகிறோம், நம்மைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறோம். அதைக் கவனம் என்போம். ஜுரத்தை அப்படி நாம் கவனிப்பது நம் முயற்சிக்கும் காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பைக் கவனிப்பதாகும்.

- அப்படிக் கவனிப்பது பல்வேறு விஷயங்களை கட்டவிழ்த்து விடும். ஒவ்வொரு விஷயமும்

பெரிய விஷயம். உடல் சூடாக இருப்பது மட்டும் காய்ச்சலில்லை. உள்ளே உள்ள கோளாறு காய்ச்சல். டாக்டர் அறிகுறிகளைக் காண்கிறார். நமக்கு உள்ளே எப்படியிருக்கிறது எனத் தெரியும். உடலைப் பற்றிய அறிவிருந்தால் நாம் டாக்டரை விடத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

- ஜுரம் அதிகப்படுவது, குறைவது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். உள்ளேயுள்ள கோளாற்றுக்கும், காய்ச்சலுக்கும் உள்ள தொடர்பு தெரிந்தால் ஆராய்ச்சி முடிவற்றது.

- நாம் கவனிப்பது டெம்பரேச்சரை மாற்றும். அதை அறிவது பெரிய காரியம்.

- முடிவில்லாத விஷயங்கள் முடிவு இல்லாமல் வளரும் நிலையிது.

- எத்தனைச் சிக்கலிருந்தாலும், நமக்கு விபரம் தெரியும்வரை ஆராயலாம்.

- விஷயங்கள் எத்தனை, சிக்கல்கள் எவை, என்பவற்றைக் கடந்து, ஒரு செயல் எப்படி நடக்கிறது என்பதைத் தெளிவாக, நுணுக்கமாக அறியும் சோதனையை உடல்நலத்தில் நடத்தலாம்.

- இரகஸ்யம் நமக்குள்ள ஆர்வத்தைப் பொருத்தது.book | by Dr. Radut