Skip to Content

பகுதி 3

பகுதியை முன்பக்கத்தில் கூறினோம். அடுத்த பகுதி சைத்தியப்புருஷன். ஒன்று பக்கவாட்டில் வளர்வது. அடுத்தது செங்குத்தாக வளர்வது. இவையிரண்டும் தொடர்பானவை. இரண்டிற்கும் பொதுவானது சைத்தியப்புருஷன். தரை மட்டமாக பக்கவாட்டில் வளர்வது சைத்தியப்புருஷனை வளர்க்கிறது.  வளரும் சைத்தியப்புருஷன் செங்குத்தான வளர்ச்சியை நாடுகிறது. சைத்தியப்புருஷனே தொடர்பு. எந்த நிமிஷமும் மனிதன் எப்படிச் செயல்படவேண்டும் என நிர்ணயிக்கும் (choice) நிலையிலுள்ளான். தத்துவம் பேசினால் குழறுபடியாக இருக்கும், நடைமுறையில் அது வாராது. மாணவன் எந்த course எடுப்பது, பட்டம் பெற்றவன் எந்த வேலைக்குப் போவது, பிள்ளைகள் புது பாஷனை ஏற்பதைப் பெற்றோர் அனுமதிப்பது ஆகியவற்றுள் குழறுபடி இருக்காது. புதியது மிரட்டும், ஏற்காமலிருக்க முடியாது. சரியானதைத் தேர்ந்தெடுப்பதும், செய்வதும் அளவுகோலுக்குரியது.

 • மௌனமாகச் செயல்படுவது silent will எல்லாக் கரணங்கட்கும் அவற்றின் சூட்சுமப் பகுதிகட்கும் உண்டு. எதிரே உட்கார்ந்திருப்பவர் நம் எண்ணத்தைப் பிரதிபலித்து புத்தகத்தை மூடுவதிலிருந்து, மாமன் எனக்குக் கொடுக்கும் சொத்தை 1/4 பாகத்திலிருந்து 3/4 பாகமாக்குவது வரை மௌனம் செயல்படும். புறத்தின் அளவுகோலைப் போன்றதே அகத்திற்குரியது.

பெரிய வேலை, நல்ல வேலை எல்லாம் இதற்குட்பட்டவையே.

 • புறம் - சிந்தனை - நேரம் - அகம் என்பது The Life Divineஇல் P.514இல் உள்ளது. அளவுகோலுக்கு அழகாக அமைந்தது.
 • மனம் நிஷ்டைக்குப் போக எண்ணத்திலிருந்து விடுபடவேண்டும். அர்த்தமற்ற எண்ணம் - முக்கியமான கருத்து - தீவிரமான அபிப்பிராயம் - தத்துவமானது - உணர்ச்சிபூர்வமானது என்ற கட்டங்களைக் கடந்து எண்ணம் என நாம் அறிவது உடலின் அரிப்பாக இருக்கும். Physical urge. இந்தச் சோதனைக்குரிய கருத்து இது.
 • திறமை பேரருளுக்குத் தடை.

- வாழ்வை நம்பினால் கர்மம் செயல்படும்.

- நம்பிக்கை அருள்.

- சொந்தத் திறமையில் நம்பிக்கை.

- திறமையை நம்பாவிட்டால் பேரருள் செயல்படும் என்ற 4 கட்டங்களை அன்னை கூறுகிறார்.

நம் திறமையை நம்பினால் ஆபீஸ் பிரமோஷன் தடைபடும். வாழ்வின் எல்லாப் பகுதிகளைப்போல் அடுக்கடுக்கான தொடர் அமைப்பை இங்குக் காணலாம். அளவுகோலுக்குப் பயன்படும்.

 • அகந்தை தானே சரணடையாது. அதன் பின்னுள்ள

ஆத்மா வெளிவந்தால் அது அகந்தையைக் கரைக்கும், அல்லது சரணம் செய்யும். இதை ஒரு scale அளவுகோலாக்க மேல்மனத்தின் 5 பாகங்களை - மனம், காலம், அகந்தை, சிறியது, மேலெழுந்தது - அறிந்து அவற்றிலிருந்து ஒவ்வொன்றாக விடுதலை பெற முயலவேண்டும். அளவுகோலைச் சுலபமாக மேற்சொன்ன 5 ஆகக் கருதலாம். அல்லது ஒவ்வொன்றையும் பல பாகங்களாகப் பிரித்து அறியலாம், அளக்கலாம். காலம் மூன்றாகப் பிரியும். மனம் அதன் அம்சங்களான நினைவு, புத்தி, முடிவு, கற்பனை என்பன போன்ற 8 அல்லது 10 ஆகப் பிரியும். அது பெருமுயற்சி என்றாலும் யோகமாகாது. ஆனால் பூரண முயற்சியாகும்.

 • அவசியம் என்பதை அவசியமற்றதிலிருந்து பிரித்துப் படிக்கவேண்டும. தலைவாருவது என்பது ஒரு வேலை. வாரினால் அது முடிந்துவிட்டது. ஒரு சிறு குழந்தையைக் கவனிக்க வேண்டும். அது முடியும் வேலையில்லை, அடுத்தவர் வரும்வரை நாம் பார்க்க வேண்டும். நிலம் உழுவது, கடிதம் எழுதுவது, குளிப்பது, சுவிட்ச் போடுவது, கை அலம்புவது, சட்டசபையில் சட்டம் இயற்றுவது, ஆகியவை முடியும் வேலைகள். காரை ஸ்டார்ட் செய்தபின் கார் நிற்கும்வரை ஸ்டியரிங் வீலிலிருந்து நகர முடியாது, உத்தரவு போட்டால் காரியம் நிறைவேறும்வரை உத்தரவு மனதிலிருக்க

வேண்டும். நாமே நம் கையால் செய்யா விட்டாலும், மனத்தால் உத்தரவைத் தொடர்வது அவசியம். பயிரிட்டபின் கொல்லையில் வேலையில்லை என்றாலும் மகசூல்வரை கவனம் தேவை. பிள்ளையைக் கல்லூரியில் சேர்ப்பதும் அப்படியே. இவையெல்லாம் நாமறிந்தன. அன்றாடச் செயல்களில் நமக்குள்ள தெளிவு வாழ்க்கை விவரங்களில் (psychological work) அதுவும் புதியதாக நாம் மேற்கொள்ளும் காரியங்களில் நமக்கிருப்பதில்லை.

- காரியம் முடிந்தபின் (சுவிட்ச் போட்டபின்) மனம் காரியத்திலிருக்கிறது.

- வாழ்வுக்குரிய செயல்களில் எச்செயல் எப்பொழுது முடிகிறது, எதைத் தொடர வேண்டும் என்ற பாகுபாடு நமக்கு ஏராளமான சக்தியைத் தரும்.

 • நாம் ஒரு வேலையைச் செய்கிறோம் எனில் அதிலிருந்து நாம் கற்க வேண்டியது ஒன்றுண்டு. நாணயமில்லாத நண்பர் நம்மை ஏமாற்றுகிறார். நாம் அதிலிருந்து நண்பரானாலும் நாணயமற்றவரை நம்பக் கூடாது என அறியவேண்டும். படிப்பினை முடிந்தால் பழக்கம் முடியும். அதற்குப் பதிலாக அவரையே நினைத்துக் கொண்டிருப்பது, பழி வாங்க நினைப்பது ஆகியவை படிப்பினை முடியவில்லை என்று காட்டும். அவர் நினைவு

கற்க எந்த ரூபத்திருந்தாலும் நாம் வேண்டியதைக் கற்கவில்லை எனக் காட்டும்.

 • 56ஆம் அத்தியாயத்தில் நாம் புறத்தினின்று அகம் சேரவேண்டும் என்கிறார். அது பூரணத்திற்கு அவசியம். அன்றாட வேலைகளில் அது தெரியும். நாம் செய்யும் வேலைகள் பல. அவை புறத்திற்குரியவை. அவற்றைப் பற்றி நினைப்பது அக உணர்வு. வேலையை மனத்தால் செய்யலாம் என்பது நாம் கருதாத ஒன்று. சில சமயங்களில் ஒரு வேலையைச் செய்ய நாம் மனதால் நினைப்பதுண்டு. நம்மூரில் கிடைக்காத பொருள் - மருந்து, புத்தகம், ஸ்பேர்பார்ட் - ஒன்றை கடைக்குப் போய் ஆர்டர் செய்தால் அவர்கள் சில நாட்களில் தருவித்துத் தருவார்கள். அதற்காகப் போனால், அப்பொருள் அங்குத் தயாராகக் கிடைப்பதுண்டு. மனத்தால் பொருள் வாங்குவதை செய்து முடித்ததை நாம் புரிந்துகொள்வதில்லை. குறிப்பாக அன்பர்கட்கு இந்த அனுபவம் அதிகம். புறவேலை அகவுணர்வால் நடப்பது அன்னை பக்தி. அன்னை அகத்திற்குரியவர், அன்னை புறத்தைத் தம் அகத்துள் கொண்டவர். அன்னை நினைவு,

நாம் தேடிப் போக வேண்டியதை, நம்மை நாடி வரச் செய்கிறது.

இதனின்று நாம் அறியவேண்டியவை பல.

 1. காரியம் சிறியதானால் இது நடக்கிறது. பெரியதானால் நடப்பது குறைவு. அதனால் அளவுகோல் ஏற்படுத்த வசதியுண்டு.
 2. தேடிப் போக வேண்டியவை நாடி வருவதன் தத்துவத்தை மேலே கூறியதுபோல, அன்னை மூலம் நடப்பனவற்றிற்கெல்லாம் தத்துவம் விளங்குவது முன்னேற்றம்.
 • கர்மம்.

நமது கடந்த காலம் பலிப்பது நம் நம்பிக்கை. காரணம் காரியத்தில் முடிவதை பகவான் ஏற்றாலும் கர்மம் பாதிக்கிறது என்பதை ஏற்கவில்லை. கர்மத்தின் தத்துவத்தைப் பற்றிப் பேசாமல், கடந்த செயல்கள் தற்சமயம் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்பது உண்மை. அப்படிப் பாதிப்பவை,

- நம் எண்ணம்.

- செயலின் காலம், இடம்.

- செயலுக்குரிய ஜீவன்.

7 ஆண்டுகளுக்கு முன் நாம் எவரிடமிருந்து விலகினோமோ அது இப்பொழுது வாழ்வில் தன் அம்சங்களுடன் வெளிவருகிறது.

- இந்த மனிதனும் அவன் போலவே பக்கத்து வீட்டுக்காரன்.

- தன் மகன் படிப்புக்காக அவன் போலவே இவனும் கைமாற்று வாங்கினான்.

- இருவரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்.

- இருவருக்கும் பணம் செக் மூலம் கொடுத்தேன்.

காரணம் காரியத்தில் வெளிப்படுகிறது. சமர்ப்பணத்தால் இதுபோன்ற பழைய காரியங்களிலிருந்து எந்த அளவு விடுபடுகிறோம் என நாம் கணக்கிடலாம்.

இதன் பலன்கள் பலவகையின.

- சிம்ம சொப்பனமான கர்மம், அப்படியின்றி மனதை ஆட்கொள்கிறது.

- எப்பொழுதும் மனதை அரித்துக் கொண்டிருந்தது மாறி ஒரு நினைவாகிறது.

- நினைவுக்கு ஜீவனழிந்து நினைவாக இருக்கிறது.

- அழிவது முதல் கடுமையான பகுதிகளாகவோ, அர்த்தமற்ற பகுதிகளாகவோ இருக்கும்.

- திருவுருமாற்றம் தொடங்கும்வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கர்மம் கரைகிறது. அதன் தீவிரம் குறைகிறது என்றாலும் திடீரென  முழுவதும் கர்மம் அழியக்கூடியது.

- திடீரென அழிவது அருள். அது அரிது. அப்படி மறைந்தால் பிறகு தலைகாட்டும்.

- செயலின் காலம், இடம் மீண்டும் மீண்டும் தலைகாட்டினால், இடத்தைவிட காலம் கடுமையாக இருக்கும்.

நெடுநாள் முன் மரத்தடியிலுள்ள பஸ் ஸ்டாப்பில் என் பர்ஸ் தொலைந்தது. நான் தேடுவதைக் கண்டு ஒரு சிறுவன் கேலியாகச் சிரித்தான். இது காலை 91/2மணி. இன்றும் மரத்தடியில் நிற்க நேர்ந்தால், ஏதாவது ஒரு பையன் கேலியாகப் பேசுகிறான், சிரிக்கிறான். சமர்ப்பணம் இதை அழித்த பின், என்று ஒரு சிறுவன் கேலி செய்தாலும் அந்த நேரம் காலை 91/2 யாக இருக்கிறது. இடம் கட்டுப்படுவதைப் போல் காலம் கட்டுப்படாது. காலம் மனத்திற்குரியது. கேலி செய்வதைக் கண்டு மனம் நொந்து போயிற்று. நொந்து போன மனம் அதை மறக்காமல் 91/2 மணி நம்மை மறக்காது.

- புதுச் சோதனைகள் தேவையில்லை. பழைய நிகழ்ச்சிகள் போதும். இச்சோதனையின் தத்துவம் புரிய வேண்டும்.

 • சமூகம், மனச்சாட்சி (social consciousness,psychological consciousness) நாலு பேருடன் ஒத்துப் போக வேண்டும் என்பது மனம் சமூகத்தை ஏற்பது, பாஷனை ஏற்காமல் மறுக்கப் பயப்படுவதும், சமூகச் சட்டத்தை விரும்பி ஏற்பதும் நாம் சமூகத்தைச் சேர்ந்தவரெனக் காட்டும். சமூகத்தை முக்கியமாகக் கருதுபவரிடம்,

மனச்சாட்சி பிரதானமாக இருக்காது. மனச்சாட்சி மனிதன் வளர்ந்த நிலையைக் காட்டுகிறது. அகங்காரம் என்பதைப் பெறுவதே ஓரளவு வளர்ந்த மனிதனுக்குரியதாகும். அதற்கடுத்த நிலையை மனம் வளர்ந்த நிலை psychological consciousness என்கிறோம். நல்லது, கெட்டது என்ற பாகுபாட்டை ஏற்று அதன்படி நடப்பதை மனச்சாட்சிக்குரிய வாழ்வு என்று நாம் கூறமுடியும். எது சமூகத்திற்குரியது, எது மனச்சாட்சிக்குரியது என்று பிரித்துப் பார்ப்பது கஷ்டமாக இருக்கலாம். இவற்றையெல்லாம் கடந்து, நாம் எந்த மையத்திலிருந்து செயல்படுகிறோம் என்பதை நாம் அறிய முடியும்.

- சமூக உணர்ச்சிக்குரிய உதாரணங்கள். 

 • நிர்ப்பந்தம் இல்லாத நேரம் ஒரு கல்யாணத்திற்கு மரியாதைக்காகப் போய் வருவது.
 • சம்பிரதாயங்களை வீட்டிலுள்ள மற்றவர்க்காகப் பின்பற்றுவது.
 • பிறருடைய சம்பிரதாயங்களுக்கு மரியாதை தருவது.

- மனவாழ்வின் உதாரணங்கள், மனச்சாட்சி, மனவளம், மனவாழ்வு என்ற மூன்றும் psychological life ஐக் குறிக்கும்.

 • நாம் சரி என்று நிலை நிறுத்த அடுத்தவரிடம் சூடாகப் பேசுவது.
 • பிறர் மனச்சாட்சியைப் பாராட்டி நடப்பது.
 • சமர்ப்பணத்தைவிட நாம் சரி எனக் கருதுவதை முக்கியமாக எடுத்துக் கொள்வது.
 • நம்மை நல்லவன் எனப் பிறர் கருத வேண்டும் என நினைப்பது.

சமர்ப்பணம் இவ்விருவுணர்வுகளையும் கடந்தது. முழுமையான சமர்ப்பணம், இவ்விரு உணர்வுகளையும் புறக்கணித்துக் காரியத்தை அழகாகப் பூர்த்தி செய்யும்பொழுது, அடுத்த கட்டம் போய் சாதிப்பது ஒன்றுண்டு. சமூகத்துடன் ஒன்றி வாழ்பவரும், மனச்சாட்சிப்படி வாழ்பவரும் நம்முடன் சுமுகமாக இருக்கவேண்டி, சமர்ப்பணம் பூர்த்தி செய்யும் காரியம் இவர்கள் இருவரும் விரும்பி ஏற்கும் முறையில் அமையும். இங்கு அளவுகோல் சுலபமாக ஏற்படும். சமர்ப்பணம் தொடர்ந்து நடைபெற, அடுத்த உயர்ந்த கட்டத்தில் பூர்த்தியாகும்படி அமைய அளவுகோல் பயன்படும். ஓர் அன்பரின் அந்தஸ்தைப் பாராட்டுவது சமூக உணர்வு. அவர் நல்லவர் என்பதைப் போற்றுவது

மனச்சாட்சி. இரண்டும் இல்லாவிட்டால் மனம் வறண்டு வாழ்வு கருகிவிடும். சமர்ப்பணம் சந்தோஷத்தை ஏற்படுத்தும். அது அந்தஸ்து, நல்ல குணம் ஆகியவற்றைக் கடந்து செயல்படும், இக்கட்டுரையின் இலட்சியத்தை விளக்கமாக எழுதினால் கட்டுரை நூலாகும். பின்னர் அதை எவரும் செய்யும் முயற்சியில் ஈடுபடலாம். இக்கட்டுரை உயர்ந்த ஜீவியம் நம் வாழ்வில் நிலையாகச் செயல்படும் என்பதைச் சுட்டிக்காட்ட மட்டும் விரும்புகிறது. சமர்ப்பணம் பூரணமாகும் பொழுது எழும் பிரச்சினைகளை அன்பர் முன்வைத்து மனத்தில் பதியும்படிக் கூறுவதே நோக்கம். நெடுநாள் அரசியல் தொண்டராக இருந்தவர், தலைவராவது என்பது வழக்கம். வாழ்வில் எந்தத் துறையில் - வியாபாரம், நிர்வாகம், தொழில் விவசாயம் - சாதித்தவரும் குறுகியகாலத்தில் அரசியல் தலைமையை எட்டலாம் என்பது போன்ற அம்சங்கள் யோகத்திற்கும் உண்டு. அதுபோன்ற அம்சங்களையும், அவை யோகத்தில் வெளிப்படும் வழிகளையும் சுட்டிக் காட்டுவதே நோக்கம்.

- வாழ்வுபோல் யோகமும் பரந்தது என்பது உண்மை.

- ஒரு செயல் யோகத்தின் எல்லா அம்சங்களையும் தன்னுட்கொண்டுள்ளது என்பதும் உண்மை.

- முழுமையைப் பகுதியில் காண வேண்டும் என்றவுடன் அது குறையாகத் தானிருக்கும் என்ற நினைவு எழுகிறது. அது உண்மை இல்லை.

- அது உண்மையில்லை எனக் காட்டுவதே இங்கு என் நோக்கம். பகுதியே முழுமை என்பது தத்துவம்.

- இதையே ஓர் எண்ணத்திலும் காட்ட முடியும், உணர்விலும் காண்பிக்க முடியும் என்றாலும் நான் ஒரு செயலை எடுத்துக் கொண்டுள்ளேன்.

- செயல் என்பது எண்ணம் உணர்வாகிச் செயலாக மிளிர்வதால் மூன்றையும் தன்னுட்கொண்ட பூரணமுடையது.

- செயலுள் ஞானம் புதைந்து மறைந்துள்ளது.

- புதைந்தது வெளிவர planes நிலைகள் ஒரு முறைக்கு மேல் மாறவேண்டும்.

- செயல் யோக இரகஸ்யத்தைக் காண முழு இரகஸ்யத்தையும் செயல் காணவேண்டும். ஒரு பகுதியையோ, தத்துவத்தையோ, எல்லாத் தத்துவங்களையோ காண்பது போதாது.

- பலன் ஏராளமாக வருவதால் அன்பர் தாம் கற்க வேண்டியதைப் புறக்கணிக்கக் கூடாது.

- பலன் எவ்வளவு பெரியதானாலும் நாம் கவனிக்க வேண்டியது இரகஸ்யம். எப்படிப் பலன் வந்தது என்பது முக்கியம். - சாதனை முக்கியம். எனவே பூரணம் முக்கியம்.

- தத்துவங்களுடைய பட்டியல் பெரியது என்பதால் மிரட்சி தரும். உலகை ஒன்று சேர்த்து ஒரு செயல் காண முயல்வதால் பட்டியலின் நீளம் பயம் தர வேண்டியதில்லை.

 • கவனம் (observation)

- ஒரு நிகழ்ச்சியை முழு நிகழ்ச்சியாகக் கவனிப்பது கவனமாகும்.

- அன்பரல்லாதவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ஏற்பதும், மறுப்பதும் உண்டு. கர்மம் என்பதும் அடுத்த நிலை. பல சமயங்களில், "எனக்கு எதுவுமே புரியவில்லை'' என்பதையும் நாம் கேள்விப்படுவதுண்டு.

- அன்பர்கட்கு எல்லா நிகழ்ச்சிகளும் அருள். பல அருளாகத் தெரிகின்றன. சில அப்படித் தெரிவதில்லை. ஒரு சில நிகழ்ச்சிகள் தவறாகவும், தண்டனையாகவும் தெரியும்.

- சூட்சுமமான அன்பர்கள், தங்கள் அனுபவப்படி நிகழ்ச்சிகளை தங்கள் குறைகளின் பிரதிபலிப்பாக அறிகின்றனர்.

- தவறு தண்டிக்கப்படுவதைக் காண்கிறோம். தண்டனைக்குப்பின் பரிசு வருவதுண்டு. அவற்றிற்கு நாம் காரணம் கற்பிப்பதுண்டு.

- நம் பொறுமையாலும், அறிவின் உயர்வாலும், ஆன்மீகச் சிந்தனையில் சித்ரவதையின் அதிர்ஷ்டத்தைப் போன்றது என்று கொள்கிறோம். அது சரி. இதுவரை நாம் பெற்ற விளக்கம்போல் இங்கு விளக்கம் பெறமுடியவில்லை.

- ஒரு நிகழ்ச்சியின் எல்லாப் பகுதிகளும் அன்னை விளக்கம் பெறும்பொழுது, ஒன்று விட்டுப் போகிறது. அந்த ஒன்று நம் எல்லா விளக்கங்களுக்கும் எதிராகவும் இருக்கும்; நெடுநாள் கழித்து நிகழ்ச்சிகள் நடக்கும்பொழுது இப்பொழுது விளங்காத விபரம் அன்று புரியும்.

- இங்கு இலட்சியம் ஆனந்தத்தைக் காண்பது. எல்லாப் பகுதிகளும் நிகழ்ச்சியைச் சட்டப்படி விளக்கும். பார்வைக்குத் துன்பமானதும் ஆனந்தம் எனத் தெரியும்.

- கவனம் பூரணம் பெற்றதற்கு அடையாளம், நடப்பவை அற்புதமாகத் தெரிவது. உலகம் ஆனந்தமயமானது. துன்பத்தின் சாயலும் இல்லை என்கிறார் பகவான். அதை நாம் காண்பதே இலட்சியம்.

 • பொருள் substance மனம் - உடல்

எல்லாக் கரணங்களும் இரண்டாகப் - ஜீவியம், பொருள் - பிரிகின்றன. ஒவ்வொரு கரணத்திலும் ஜீவியம் ஆழம் எனவும், மேற்பகுதி எனவும் பிரிகின்றன. சில உதாரணங்கள் தரலாம். முடிவாக அவை பயன்படா. நாம் கூற முனைவதை அவை எடுத்துக் கூற முடிவதில்லை. ஆபீஸில் வேலை செய்பவர்கள் அன்பாகப் பழகுவதைக் காணலாம். மனிதத் தன்மையின் இனிமை எழும். இது ஆபீசின் கடமையில்லை. ஒருவருக்குப் பெரிய காயம் பட்டுவிட்டால், அவரைப் புறக்கணிப்பதில்லை. ஆபீசிலுள்ளவர் அவருக்கு டாக்டர் உதவி செய்து வீட்டிற்குக் கொண்டு போய் விடுவார்கள். அது ரோடில் ஏற்பட்ட விபத்தானால் வழிப்போக்கர் செய்யும் உதவி மனிதாபிமானது. போலீஸைக் கூப்பிடுவர். உதவிக்காகச் சமூகம் செய்த ஏற்பாடு போலீஸ். ஆஸ்பத்திரி என்பதும் சமூகத்தின் அமைப்பு. இன்ஸுரன்ஸ் செலவை ஏற்க முன்வருவது சமூகம் வியாபார மூலம் செய்துள்ள மனிதாபிமான உதவி. இது போன்ற உதவிகளுக்கெல்லாம் அளவுண்டு. டெல்லி வீதியில் அடிபட்ட டாக்டர் 6 மணி நேரம் அனாதையாகக் கிடந்தார். போலீஸ் உதவிக்கு வருபவரை குற்றம் சாட்டுவதால் இவ்வவலம் நேர்கிறது. 1930இல் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வந்த அவசர கேஸ் கவனிக்கப்படாமல் இடம் இல்லை என மறுக்கப்பட்டதால் அவன் இறந்துவிட்டான். அன்று

சட்டசபை இரண்டு நாள் அமர்க்களப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக உலகெங்கும் நிலைமை மாறியுள்ளது. இன்றும் மனிதாபிமானத்திற்கு அளவுண்டு. ஆபீஸ் நண்பர் அடிபட்டவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தால், வீட்டு மனிதர் வந்து அவரைக் கவனிக்க வேண்டும். மனிதரில்லை என்றால், ஆபீஸ் நண்பர் ஆஸ்பத்திரியிலேயே இருக்க முடியுமா? அப்படி ஒருவர் நடக்க முடியுமா? நடப்பாரா? அப்படியே ஒருவர் செய்வதாக வைத்துக் கொண்டால், மீண்டும் அவர் வேலையில் சேரும்வரை உடனுதவி செய்ய முடியுமா? சமர்ப்பணமும், சரணாகதியும் நாம் கருதுகிறோம். இவை நம் மேல் மனத்திற்குப் புதிய முறைகள். அடிக்கடி சமர்ப்பணம் மறந்துவிடும். நினைவுபடுத்த வேண்டும். எளிய சமர்ப்பணம் மேல்மனத்திற்குரியது, ஆழ்ந்த சமர்ப்பணம் ஊடுருவும். சமர்ப்பணம் சரியானால் அது வளர்ந்து சரணாகதியாக வேண்டும். சமர்ப்பணத்திற்குத் தடையான நூறு விஷயங்களில் அறியாமை முக்கியம். பிடிக்கவில்லை என்பது அடுத்தது. அதுவும் ஓர் அறியாமை. அறியாமையை ரசித்து ருசிக்கும் மனம் பேசுவது அது. ஜீவன் கீழ்க்கண்டவாறுள்ளது. ஒவ்வொரு கரணத்திலும் ஜீவியம், பொருள் என பிரிவுகளுண்டு.

மனம் - மேல் மனம் (ஜீவியம்)

ஆழ்மனம் (ஜீவியம்)

மனத்தின் பொருள் (substance) - மூளை

உயிர் - மேலெழுந்த ஜீவியம்

ஆழ்ந்த ஜீவியம்

உயிரின் பொருள் - (நரம்பு)

 

உடல் - மேலெழுந்த உடலின் ஜீவியம்

ஜீவியத்தின் ஆழ்ந்த உடலின் பகுதி

உடலின் பொருள் - உடல்

ஒவ்வொரு பகுதியும் மற்ற எல்லாப் பகுதிகளுடனும் தொடர்பு ஜீவனுள்ள கொண்டிருக்கின்றன. மேற்சொல்லியது படிப்படியாக ஒவ்வொரு நிலையும் அடுத்த நிலைகளை ஊடுருவுகின்றன, மனத்தின் substance உடலின் substanceஉடன் தொடர்புள்ளது. அதுவே முடிவாக சாதனையை நிர்ணயிக்கும். ஒரு நிலையின் சமர்ப்பணம் மற்ற நிலையில் பலிப்பதில்லை. நாமே ஒரு நிலையில் தயாராக இல்லை எனில் அந்நிலை சமர்ப்பணத்தை ஏற்காது. அங்குப் பதில் இருக்காது. அது மட்டுமன்று. ஆழமாகப் போகப் போக இருளாகவும், மருளாகவும் இருக்கும். இருண்ட ஆழத்திற்குச் சமர்ப்பணத்தை எடுத்துப் போனால் நல்ல பலனிருக்காது. எதிர்ப்பு இருக்கும். தவறு நடக்கும். ஒரு பொருள் தவறி விழுந்து உடைவதிலிருந்து, பூகம்பம்வரை எதிர்ப்பு வரும். நம் உடல் என்பது பூமாதேவியின் அங்கமன்றோ?

எதிர்ப்பு பயங்கரமாக இருப்பதால், வரவேற்பும் அதேபோல் பெரியதாக க்ஷணத்திலிருக்கும். உள்ளூர் சர்க்கார் ஆர்டரிலிருந்து, பெர்லின் சுவர் விழுவதுவரை பலன் உண்டு.

 • ஜீவியம் என்பதின் கண்ணோட்டத்தில் நாம்

உயர்ந்து போகும்பொழுது புது விஷயங்கள் தென்படும். அவை சமூகப் பழக்கங்களினின்றும், தர்ம நியாயத்திலிருந்தும் வேறுபடும்.

- சமூகம் ஏற்காததை உயர்ந்த ஜீவியம் ஏற்கும்.

- மனச்சாட்சி வெட்கப்படும் விஷயங்கள், குற்றமாக அறிபவையும் உயர்ந்த ஜீவியத்தில் வெட்கமாகவோ, குற்றமாகவோ இருக்காது.

- கசப்பாக வெறுப்பாக மனிதன் உணர்வது இனிமையாக இருக்கும்.

- புறச்சட்டம், அகஉணர்வுகள் செயலைக் கட்டுப்படுத்தும். உயர்ந்த ஜீவியத்தில் கட்டுப் பட்டிருக்காது. வாழ்வு தென்றலாகும்.

- எது நம் வாழ்வை சிதறடிக்குமோ அது மேலே படைப்புத்திறன் பெறும்.

 • அடுத்த அடுத்த கட்டங்கள் ஜீவியத்தில் வேறு

விதமாக உயர்ந்து மாறுவதைக் காணலாம். நாம் மனத்தில் ஆரம்பிப்பதாக நினைக்கிறோம். ஆனால் உணர்வில் ஆரம்பிக்கின்றோம். அதுவே நம் வாழ்வு மையம். நாம் மேலே போனால் மிக

முக்கியமானது ஆன்மீக நிலை என அறிவோம். அங்குக் காரியம் நடப்பது தெளிவாக இருக்கும். உடல் இருண்டது, பலமானது, பயங்கரமானது. நம் செயல் மேல் மனத்திற்குரியது. அங்கு நமக்கு முழுத் திறமை பெற முடியும். உடலின் சக்தி மின்னல் போன்றது என்றாலும் மேல் மனத்தை அவை பாதிக்கா. இந்தச் சோதனைகள் ஆர்வமானவை. அதிசயம்போல் நடக்கும். ஆன்மீக மனம் மௌனத்தில் ஆரம்பித்து ஞானம்வரை செல்லும். இங்கு நாம் அறியக் கூடியவை பல. மிகக் கவர்ச்சியானது. இங்கு ஒரு சௌகரியம். நம் சோதனை பலிக்காவிட்டால் தோல்வி எழும், பூகம்பம் வாராது. அது உடலுக்குரிய நிலை. சத்தியஜீவியம் கடவுளைக் கடந்தது என்றாலும், அது நம் எல்லாக் கரணங்களிலும் புதைந்துள்ளது. புதைந்ததைக் கண்டுபிடித்து வெளிக்கொணருவது அறிவுக்குரிய ஆர்வமான பொழுதுபோக்கு, ஒவ்வொரு நிலையிலும் நம் கவனம் பூரணம் பெறும்பொழுது கடைசி நிலை தலைகீழே மாறும். பதில் சொல்லாதது அசரீரீயாகப் பேசும். விபத்து அற்புதமாகும். சித்ரவதை பூரிப்பாகும். அதற்குப் பொறுமையும், சூட்சுமமும், ஞானமும் தேவை.

வரையறையற்ற பிரம்மம்

- பிரம்மம் வரையறையற்றது. சிருஷ்டி அளவுக்குட்பட்டது.

- பிரம்மம் வரையறையற்ற தன் தன்மைக்கு உட்பட்டதன்று.

- ஏழை, ஊனமுற்றவன், படிக்காதவன், நோயாளி, பலஹீனன் ஆகியோர் பணக்காரன், வலிமை ஆனவன், மேதை, ஆரோக்கியமானவன் போல் சுதந்திரமானவர்கள் இல்லை.

- ஏழையைப் பணக்காரன் சேர்க்கமாட்டான். பணக்காரனை ஏழை சேர்க்கமாட்டான் என்பது இல்லை.

- ஏழைப் பணக்காரனை சேர்த்துக் கொள்ளும் பொழுது, பணக்காரன் ஏழையைச் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பை இழக்கிறான். பிரம்மம் அதைச் செய்வதில்லை. பணக்காரனும், அறிஞனும் இழக்கும் சுதந்திரத்தை பிரம்மம் இழப்பதில்லை.

- அனாதையால் பிறருக்கு உதவ முடியாது.

- பிறருக்கு உதவ நிர்ப்பந்தமில்லாதபொழுது உதவுபவன் பிரம்மச் சுதந்திரம் உள்ளவன்.

- வசதியுள்ளவன் உதவி செய்யலாம். செய்தால் தொந்தரவு வரும்.

- வசதியுள்ளவன் மனவலிமையுடன் பிறருக்கு உதவாவிட்டால் சுயநலமாகும்.

- வசதியுள்ளவன் சுயநலமின்றி மன வலிமையுடன் பிறருக்கு உதவ மறுப்பது சரி.

- தொந்தரவு உதவியால் வரவில்லை, அகந்தையால் வருகிறது.

- அகந்தையற்றவன் உதவி செய்தாலும் தொந்தரவு வாராது. இந்தச் சட்டம் அவனுக்குப் பொருந்தாது.

- வசதியான அகந்தையற்றவன் உதவி தொந்தரவு என்ற சட்டத்தைப் புறக்கணித்தால் சட்டம் அவனைப் பாதிக்காது. அந்தச் செயலைப் பொருத்தவரை அவன் பிரம்மமாவான்.

- அவன் பெற்ற சுதந்திரம் அச்செயலுக்கு மட்டும் உரியதா, அல்லது அவனுடைய முழுமைக்கு உரியதா என்பது அவனுடைய ஜீவனைப் பொருத்தது.

- பூரணச் சுதந்திரம் உள்ளவர் தம்மை அச்சுதந்திரத்தால் கட்டுப்படுத்த மறுத்தால், அவர் பிரம்மமாவார்.

சக்தி அழியாதது

- எவரும் தம் சக்தி முழுவதையும் பயன் படுத்துவது இல்லை.

- தன் சக்தியை முழுமையாகப் பயன் படுத்துபவர் திறமைசாலி.

- நாம் பயன்படுத்தாத சக்தியை நம்மையறியாத சுபாவம் (unorganised personality) பயன்படுத்தும்.

- தாழ்ந்த சுபாவம் நம்மையறியாமல் செயல்படும்பொழுது, உன்னத குணத்தின் உச்சக்கட்ட செயலை நிர்ணயிக்கும்.

- தாழ்ந்த சுபாவத்திற்கு ஒரு துளி சக்தியும் தரக்கூடாது.

- சமர்ப்பணம் எந்த அளவிலிருந்தாலும் - சக்தி, திறன், பலன் - அதன் தரமும், அளவும் தாழ்ந்த சுபாவத்தால் நிர்ணயிக்கப்படும். சுபாவம் உயர்ந்ததானாலும், தாழ்ந்ததானாலும், சக்தி ஒரு சொட்டும் விட்டு வைக்கப்படாது.

- ஒரு ஸ்தாபனத்தை நாம் மதிப்பிட அதன் உயர்ந்த செயல்களைக் கருதுவதைவிட எந்தத் தாழ்ந்த செயலைச் செய்ய மறுக்கிறது எனக் கருதுகிறோம்.

- ஸ்தாபன நிர்வாகம் இதனடிப்படையில் நடக்கிறது. இதையறிந்தவர் தாழ்ந்த சுபாவத்திற்குச் சிறிதும் சக்தியை அளிக்க மாட்டார்.

- அப்படி ஒரு முடிச்சிருந்தால், அதை வெட்டி வீச வேண்டும்.

- தாழ்ந்த சுபாவம் கட்டுப்பட்டபின், உயர்ந்த சுபாவம் எல்லா சக்தியையும் பயன்படுத்த வில்லை எனக் காண்கிறோம்.

- உபரி சக்தி பவனி வருவது உயிரை எடுக்கும் அளவு தொந்தரவாகும்.

- முறையாக உபரி சக்தியைப் பயன்படுத்த முடியுமா?

- உபரி வீணாகாவிட்டால், அந்நிலைக்குரிய சமர்ப்பணம் பலிக்கும்.

- உபரி சக்தி, சக்தியாக மேலெழுந்து வாராது. நினைவு அல்லது எண்ணம் சக்தியை மேலே கொண்டுவரும்.

- அவை அர்த்தமற்றவையாகவோ, அர்த்தம் உள்ளதாகவோ, தொந்தரவை விலக்கும்.

- சக்தி எழும்பொழுது அவற்றைச் சமர்ப்பணம் செய்வது தொந்தரவை விலக்கும்.

பகுத்தறிவு - அற்புதம்

- பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறும் அற்புதமாக நமக்கு உலகம் தெரியவில்லை.

- நாம் அறிவு என அறிவது நமக்கு எப்பொழுதும் சரியாகப்படுவதில்லை.

- உலகை நாம் அறிவது பகுத்தறிவு எனப் பக்குவப்பட்டுள்ளது. பகவானுடைய பகுத்தறிவு அற்புதம்.

- பகுத்தறிவு, அற்புதம் என்ற இரண்டிலொன்று பலிக்கும் அளவுக்கு நாம் சரி என்றாகும்.

- இரண்டிலிருந்தும் வேறுபடும் உதாரணங்கள்.

- நெப்போலியன் இறந்தபொழுது அவனைத் தோற்கடித்த ஆங்கில ஜெனரல் வெல்லிங்டன் சோகமானார்.

- உலகில் அதிக மழை 450 பெய்யும் சிரபுஞ்சியில் கோடையில் தண்ணீர்ப் பஞ்சம்.

- பொருள்களின் விலையை உயர்த்தினால் அதிகமாக விற்கின்றது.

- உதவி பெறுபவன் உதவி செய்தவனுக்கு ஊறு செய்கிறான்.

- பெண் திட்டுவதை ஆண் ரசிக்கிறான்.

- நீடித்த சந்தோஷத்திற்காகச் செய்யும் திருமணம் உள்ள சந்தோஷத்தையும்  அழிக்கிறது

- ஊழல் மலிந்த தலைவர்களை மீண்டும் மீண்டும் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

- நடிகர்கள், நாட்டையாள வருகின்றனர்.

- எந்த நாட்டை ஒரு நாடு ஆக்ரமித்ததோ, அந்நாடு அடிமையின் பண்புக்கு அடிமையாகிறது.

- பல நாடுகளிலிருந்தும் வெளியேறிய மக்கள் உலகை ஆள்கின்றனர், அதுவே அமெரிக்கா.

- நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர்.

- மேதைகட்கு மக்குக் குழந்தை பிறக்கிறது.

- வங்காளம் இந்திய நாட்டின் வளம் கொழிக்கும் பகுதி. அங்குப் பஞ்சம் வருகிறது.

- உடையும் பொருள்களை உற்பத்தி செய்த ஜப்பான் உயர்ந்த பொருள்களை உற்பத்தி செய்கிறது.

- 10 மழை பெய்யும் இஸ்ரேல் விவசாயத்தில் சிறந்த நாடு. மோசமான மனிதன் உலகப் பிரசித்தி பெறுகிறான்.

- பெரிய ஸ்தாபனங்கள் தங்கள் இலட்சியத்தை நம்புவதில்லை.

- ஜடம் சத்தினுடைய ஆனந்தம்.

- சுதந்திரத்தின் எதிரிகள் நாட்டை ஆள்கின்றனர்.

அன்பு சொர்க்கத்தின் சுடர்

- அழியா இலக்கியத்தின் அனந்தமான கரு அன்பு எனும் சுடர். என்றாலும் அதன் ஆயுள் அரை நிமிஷம்.

- ஜடத்தையும் ஆன்மாவையும் மீண்டும் இணைக்க அன்பு என்ற பாலம் ஆதியில் ஏற்பட்டது.book | by Dr. Radut