Skip to Content

பகுதி 2

 • மனம் அடுத்த பக்கம் பார்க்க இயலாதது. நாம் பிறரிடம் பேசும்பொழுது ஒரு செய்தி, சபாபதி என்பவரைப் பற்றி மூன்றாம் நபர் கொண்டு வந்தால், நமக்குத் தெரிந்த சபாபதியை நாமும், அவருக்குத் தெரிந்த சபாபதியை அவரும் நினைக்கின்றார். நமக்கு நாமே முக்கியம் என்பதால் இது நடக்கின்றது. பிறர் மனதையறிய சூட்சுமம் தேவையில்லை. இராமன் கொடுப்பான் என 14 வருஷம் லட்சுமணன் உண்ணாமல் இருந்தான். அவதாரப் புருஷனின் மனநிலை இப்படிப்பட்டதே. நம் மனம் இப்படிச் சுயநலமாக நினைப்பதை, உணர்வதை, செயல்படுவதை scale அளவுகோலாக எழுதினால் நாம் உள்ள நிலை தெரியும். இவ்வளவுகோலை நாம் வளரப் பயன்படுத்தலாம். பிறர் தேவைகளை மறுப்பது, மறப்பது, பிறர் தேவையை நம் தேவையென நினைப்பது, பொதுவான குருட்டுப்பார்வை, பொருள்களைப் பற்றியது, நிகழ்ச்சிகளைப் பற்றியவை, மனிதர்களைப் பற்றியவை அளவுகோல் இடம் பெறும். நாம் இழந்ததை மீண்டும் பெற முயன்றால் அளவுகோல் அர்த்தமுடையதாகும்.
 • உன் ஆத்மா விழிப்புடையதானால், நீ உன்னை அறிவாய் எனில், வேலையில் ஆன்ம விழிப்பு இருந்தால், உன் மனநிலை நல்லது என அறியலாம். அது இல்லாவிட்டால், விபரம் தெரிந்து கொள்ள சகுனத்தைத் தேட வேண்டும். சகுனம் புறத்திலுள்ளதுபோல் அகத்திலும் உண்டு. சகுனத்தையும் காண முடியாதவருக்குப் பலன் நிலையை விளக்கும். பலன் தவறானால், நாம் தவறு. அதையும் காண முடியாதவன் அத்தவற்றை ஆயிரம் முறை திரும்பத்திரும்பச் செய்வான். அப்படிப்பட்டவர் சொல்லை ஏற்கக் கூடாது. அவர் பிறரல்லர், அவரே நாம்.
 • தன்னிடம் திருவுருமாற்றத்திற்காகவே பலர் வந்தனர் என்று அன்னை கூறுகிறார். தவற்றை விலக்கி, தீமையைப் போக்குவது திருவுருமாற்றம், பல ஜன்மப் பலன் ஒரு தரிசனத்தில் கிடைக்கும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுள்ளது. பேய் ஒருவனைப் பிடித்திருந்தால் மந்திரவாதி ஓட்டுவான். பேய் ஓட்டியபின் அவனது வாழ்வை பேய் சீர் குலைக்க முடியாது. தீய சக்தி என்பது ஆன்மாவைப் பிடித்துக் கொண்டது. அதை மந்திரவாதியால் ஓட்ட முடியாது. மகான்கள் அதை அகற்றலாம். ஆனால் செய்வதில்லை. ஒரு மகான் அதைச் செய்ய வேண்டுமானால், அவருக்கு அவன் சிஷ்யனாக வேண்டும், மகான் அவனை சிஷ்யனாக ஏற்க வேண்டும். அதற்கு அவருக்கு உத்தரவு தேவை. அவனை ஏற்று அவனைப் பிடித்த தீயசக்தியை அவர் தம் தபோபலத்தால் விலக்க முடியும் என்றாலும், உத்தரவு இல்லாமல் செய்யமுடியாது. செய்தால் அவனை விட்டகன்றது அவரைப் பிடித்துக் கொள்ளும். முதல் முறை அன்னையை இப்படிப்பட்டவர் தரிசித்தால், அவர் கேளாமலேயே அந்த சக்தி கரைந்து மறையும். அது அன்னையின் அருள். அதைவிடப் பலமான மனித மனம் போனதை அழைக்கும். அடுத்த நிமிஷம் அது வந்துவிடும். அவருடைய அனுமதியின்றி தீயசக்தி அவரை விட்டகல முடியாது. அனுமதி என்பது அவர் எந்த அளவு அச்சக்தி தன்னுள்ளிருப்பதை அனுபவித்தாரோ, அந்த ஆழத்திலிருந்து அதை விட்டுவிட அவர் முடிவு செய்யவேண்டும், இல்லையெனில் நெடுநாள் சேவை செய்ய வேண்டும். அப்படி

அத்தீயசக்தி நிரந்தரமாக அவரை விட்டு அகன்றபின், இதுநாள்வரை அதை வெளிப்படுத்திய குணம் அவரை விட்டுப் போகாது. அவரே முயன்று மாறினாலன்றி அக்குணம் விடாது.

மூன்று திருவுருமாற்றம்.

 • 1. சைத்தியத் திருவுருமாற்றம் என்பது அகந்தையினின்று விடுபடுவது.
 • 2. ஆன்மீகத் திருவுருமாற்றம். மனமோ, மனத்தின் சைத்தியப்புருஷனோ செயல் படுவதற்குப் பதிலாக முனிவர், ரிஷி, யோகி, தெய்வ மனங்களிலுள்ள சைத்தியப்புருஷன் செயல்படுவது.
 • 3. சத்தியஜீவியத் திருவுருமாற்றம்.

Erin Brockovich என்ற படத்தில் எரின் பிறர் நலத்திற்குரியதுபோல் செயல்படுவது சைத்தியத் திருவுரு மாற்றம். முடிவாக மனிதன் ஏற்படுத்தும் pollution விலக்குவது சத்தியஜீவியத் திருவுருமாற்றம். இடையே அவளுடைய விடாமுயற்சி, எதிர்ப்பைச் சமாளிப்பது, pollution பற்றிச் செய்திகள் சேகரம் செய்வது, கம்பனி இணங்குவது, சட்டம் உயிர்பெறுவது, நாள் வளர்த்தும் வழக்குச் சுருங்குவது, சட்டம் தெரியாத மக்கள் ஒத்துழைப்பது ஆகியவை ஆன்மீகத் திருவுருமாற்றத்தின் பல்வேறு நிலைகள்.

நாம்செய்யும் வேலையை அதுபோல் விமர்சனம் செய்யலாம். விபரமாக அளவுகோல் ஏற்படுத்தலாம். மனத்தையும் 3 சிறு பகுதிகளாக்கி ஆராயலாம். எரின், ஊரார் எதிர்ப்பைப் புறக்கணிக்கிறாள். பண்பற்ற அவள் குணம், மௌனமாக வேலை செய்வது முனிவருக்குரியது. வெற்றிக்குரிய பலன் முடிவில் தான் தெரியவேண்டும் என்பதில்லை. அவளை டிஸ்மிஸ் செய்த வக்கீல் திருப்பிக் கூப்பிடுகிறார். $5000 தருகிறார், உற்சாகப்படுத்துகிறார், வழக்கின் எதிர்காலத்தை வக்கீல் மனம் ஊடுருவுகிறது. அது யோகியின் மனத்திற்குரியது. நம் மனத்தில் அறிவும், அறியாமையும் உடனுறைகின்றன. அறியாமை அறிவின் செயலை வீணாக்கும். தெய்வ மனம் நம் மனம் போன்றது. அறியாமையை மீறி அறிவு வெற்றிகரமாகச் செயல்படும். வக்கீலின் போக்கு, அவருடைய ஆபீசின் எதிர்ப்பு, உடனிருந்த இளைஞன் அவளை விட்டுப் போனது, வக்கீலுக்குப் புதிய பார்ட்னர் வந்தது, அவர் கணிப்பு, போனில் அவளை மிரட்டியது, கேஸ் 10 அல்லது 20 வருஷம் நடக்கும் என்பது, ஆகியவை அறியாமையின் அம்சங்கள். அறியாமையின் வேகத்தைப் புறக்கணித்து அவள் வேலை செய்கிறாள். இது தெய்வீக மனத்தின் திறன். நம் எந்தச் செயலையும் இதுபோல் ஆராயலாம். அளவுகோல் ஏற்படுத்தலாம்.

 • 8 planes நிலைகளும் ஒரே பொருளாலானதால் பரிணாமம் நடக்கிறது. வாழ்வில் சிறிய மனிதனிடம் பெரிய கருத்தும், பெரிய மனிதனிடம் சிறிய போக்கும் காணப்படுகிறது என்றாலும், அடிமுதல்

நுனிவரை உள்ள தொடர்பு தெரிகிறது. இத்தொடர்பு இருப்பதால் தான் ஒரு முனை அடுத்த முனையில் வெளிப்படுகிறது. இவை எண்ணம், நோக்கம், திறமை, உந்துதல், உத்வேகம், சக்தி, சூட்சுமம் என வெளிப்படுகின்றன. இவற்றை நம்மிடமும், நாட்டிலும், குடும்பத்திலும், உலகிலும் கம்பனியிலும், காணலாம். ஐ.நா. நிகழ்ச்சிகளில் நம் எண்ணம் பிரதிபலிக்கும். இவை நல்லதாகவுமிருக்கும், கெட்டதாகவுமிருக்கும். நல்லதோ, கெட்டதோ, பிரதிபலிப்பு என்பது உண்மை.

 • பெரிய நல்லது வரும் நேரம் சூடு எழுவதுண்டு. சூழல் நிலையிழந்துவிடும். மனம் அதில் லயித்திருந்தது. விரல் நுனி கதவிடுக்கில் மாட்டிக் கொண்டு நகக் கண்ணில் காயம்பட்டுவிட்டது. வலி பொறுக்க முடியவில்லை. காயம் சிறிது, வலி பெரிது. காயம் சூழலைப் பிரதிபலிப்பதை அவன் அறிவான். அது அவன் ஜீவனை ஆழத்தில் திறந்து, பிரார்த்தனைக்கு வலிமை அளித்தது. பிரார்த்தனை பலமானது. க்ஷணத்தில் வலி மறைந்துவிட்டது, காயம் நினைவில்லை. நிலையற்ற சூழல் நிலையாகி, பிரச்சினை கரைந்தது. இது நடக்கும் முன் இதுவரை அக்குடும்பம் அறியாத வாய்ப்பு எழுந்தது.

 • சத் புருஷன்' என்ற அத்தியாயத்தில் நாம் நம் வாழ்வை, சமுத்திரத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பகவான் கூறுகிறார். மேற்சொன்ன, "எரின் பிரக்கோவிச்'' என்ற படத்தில் பாதிக்கப்பட்டவர் தனித்து வாழ்வதால், எவரும் எதுவும் செய்ய முடிவதில்லை. எரிக், அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறாள். அதுவும் நடக்கிறது. அவளுடைய முதல் client $5 மில்யன் பெறுகிறாள். நம் வாழ்வை நாம் பல இடங்களில், பல அளவுகளில் சமூகத்திடம் ஒப்படைக்கிறோம். நாம் நம்மை அறியாமல் அதுபோல் நடக்கிறோம். சமூகம் நமக்குக் கல்வி போதிக்கிறது. நாட்டின் உற்பத்தித் திட்டம் நம் தேவைகளைத் தருகிறது. இன்று நாம் அனுபவிக்கும் அளவு கடந்த வசதிகள் அப்படி நாம் பெறுபவை. இதை நாம் விழிப்புடன், தெரிந்துசெய்யமுடியுமா?

கல்வித் துறையில் Internet வந்துவிட்டதால், பட்டம் பெற்ற எவரும், தம் துறையில் வல்லுனராகலாம். பட்டம் பெறும் ஸ்தாபனங்களைக் கடந்து வந்து Internetஐப் பயன்படுத்தினால் பட்டதாரி வல்லுனராவார். நாட்டில் ஒரு துறையில் பட்டம் பெற்றவர் பல கோடி. வல்லுனர் சில ஆயிரமுமில்லை. இதைச் செய்தவர் அடுத்த கட்டத்திற்குப் போகலாம். வல்லுனராக அவர்

கல்லூரியை எதிர்பார்த்தால் 1. வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாது. 2. அதற்குரிய காலம் 10 முதல் 20 ஆண்டாகும். 3. அவருக்குத் திறமை ஏற்பட்டாலும், கல்லூரி அதை ஏற்பது எளிதன்று, Internetஇல் வேலை செய்ய வேலையை விடவேண்டாம். 10 முதல் 20 ஆண்டில் கல்லூரியில் சாதிப்பதைச் செலவு இல்லாமல் பாதி நாட்களில் சாதிக்கலாம். முயன்றால் ஓரிரு ஆண்டுகளில் சாதிக்கலாம். கல்லூரி என்ற அமைப்பைக் கடப்பதால் ஏற்படும் பலன் இது. படிப்பைப் படிப்புக்குத் பெறக் கருவியான கல்லூரி, தடையாகவுமிருக்கும். மனம் சமூகத்தை ஏற்றிருப்பதால், சமூகம் ஏற்காத கருத்தை மனம் கருதாது. கல்லூரியை விட்டகன்றதைப்போல், சமூகத்தை மனத்தால் விட்டகன்றால் மனிதன் மேதையாவான். நம் மனத்திலுள்ள எந்தக் கருத்தும், அபிப்பிராயமும் நம்முடையனவல்ல, அவை சமூகம் நமக்குத் தந்தவை. குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதைவிட அவனை Internetஇல் கற்க அனுமதித்தால், அவன் பெறும் அறிவு ஏராளம். அது வல்லுனர் அறிவாகும். இது புரியும். ஆனால் சமூக மனப்பான்மையைக் கடந்து வந்தால் மனம் மேதையாகும் என்பது இதேபோல் புரியாது. பணத்தை நாம் செலாவணிக்குரிய கருவியாகவும், சமூகத்தின் கருவியாகவும் கருதுகிறோம். மனம்

சமூகத்தை உதறித் தள்ளினால், பணம் தூய சக்தி வாய்ந்ததாகத் தெரியும். நாம் வீட்டினுள் இருக்கும் பொழுது பகல் வீடு பளிச்சென இருக்கிறது, சூரிய ஒளியால் பிரகாசமாக இருக்கிறது. நான்கு பக்கமும் சுவரால் அடைபட்ட பின் சூரிய ஒளி சுருங்கித் தெரிவது அப்பிரகாசம். வீட்டை விட்டு வெளியே வந்து மொட்டை மாடிக்குப் போனால், சூரியனை நிமிர்ந்து பார்த்தால் சூரியனின் ஜோதி தெரியும். சமூகத்துள்ளிலிருந்து பணத்தைக் காண்பதற்கும், மனம் சமூக நினைவைக் கடந்து பணத்தைக் கருதுவதற்கும் உள்ள வித்தியாசம் இது. பணம் தூய சக்தியானால், அது சமூகக் கருவி மட்டுமன்று, சமூகப் பரிணாமக் கருவியாகும். அது பொருளாதார நிபுணருக்குப் புரியாது. சமூகப் புரட்சியாளனுக்குப் புரியும். எந்த மேதையும் அதைச் சாதிக்க முடியும். பணம் அதன் வழி அபரிமிதமாகப் பெருகும். ரேஷன் 1952இல் உயிரை வாட்டியபொழுது ராஜாஜி ரேஷனை எடுத்தார். வழக்கத்திற்கு மாறாக அரிசி விலை குறைந்து உபரியாகக் கிடைக்க ஆரம்பித்தது. 1960 அல்லது 1970இல் கார் வாங்க முன் பணம் கட்டவேண்டும். பல மாதம் காத்திருக்கவேண்டும். இன்று கார் எளிதாகக் கிடைக்கிறது. கார்க் கம்பனிகள் கார் வாங்கக் கடன் ஏற்பாடு செய்கிறது. இதை அன்றே செய்திருக்க முடியும், நாம் செய்யவில்லை என்பதை அத்துறையிலுள்ளவர் இன்று புரிந்து

கொள்கிறார்கள். கார், நாம் பணம் கொடுத்து வாங்கும் சரக்கு. பணம் நாம் வேலை செய்து சம்பாதிப்பது. நம் நாட்டில் பணப்புழக்கம் இன்று அதிகம். வெளிநாடுகளில் அது மிக அதிகம். நம் நாட்டில் பணப்புழக்கம் வளரும்படிச் செய்யக் கூடியவை பல உண்டு. அதை எடுத்துச் சொல்வார் இல்லை. சொன்னால் ஏற்பாரில்லை. சமுத்திரத்தை நம் வாழ்வை நடத்த அனுமதித்தால் கல்வி நம்மை மேதையாக்கும். கல்வி மனிதனை மேதையாக்கினால், வாழ்வு மனிதனை சத்தியஜீவனாக்கும். அதே காரியத்தால் மார்க்கட் மனிதனை பெரும் பணக்காரனாக்கும்.

 • சக்தி, ஜீவனுள்ளது; வெறும் சக்தியில்லை. நாம்

வீட்டிலோ, ஆபீசிலோ வேலை செய்யும்பொழுது வேலையில் ஜீவனிருக்காது. எப்பொழுதோ ஒரு முறை ஜீவனோடு வேலை செய்வோம். நமக்கு ஜீவனுள்ள நேரம் நம்முள் செயல்படும் சக்திக்கு ஜீவன் வரும். அந்த ஜீவியத்திற்கு 1 முதல் 9 வரை பல கட்டங்களுண்டு. No.1ஐக் கடந்து ஆத்மாவை அடைந்தால் ஜீவியம் முழுமை பெறும். இங்கு இயற்கையாக அமைந்த அளவுகோல் ஒன்றுண்டு. அளவுகோலை அற்புதமாக்க விரும்பினால் ஜீவியம், பொருள் என ஒவ்வொரு நிலையையும் இரண்டாகப் பிரித்து 9 நிலைகளை 18 ஆக மாற்றலாம்.

 • சச்சிதானந்தம் ஜடத்தில் ஆனந்தத்தை

வெளிப்படுத்தி, ஜீவனின் ஆனந்தத்தை பிரகிருதியின் ஆனந்தம் ஆக்குகிறது. Oracle என்ற software company ஆபீஸ் நிர்வாகத்தைச் சிறப்பாக்க ஒரு software செய்தது. அது பிரபலமாக விற்றது. சில ஆண்டுகட்குப்பின் Oracle ஆபீஸ் நிர்வாகம் சீரழிந்ததைக் கண்டு அங்குள்ளவர் "நாம் ஏன் நம் softwareஐப் பயன்படுத்தவில்லை'' என்ற கேள்வியை எழுப்பினர். நம் வீட்டிலும், ஆபீசிலும் இது போன்ற பலவற்றை நாம் காணலாம். Wipro என்ற பெங்களூர் software கம்பனி கல்வித் திட்டத்திற்குரிய இரண்டு software செய்தனர். அதை மார்க்கட் ஏற்கவில்லை. இவர்கள் கம்பனி வெற்றிகரமாகச் செயல்படும் softwareகளை Wipro இந்தக் கல்வித் திட்டத்தில் பயன்படுத்தவில்லை. எந்த ஸ்தாபனமும் தங்கள் இலட்சியத்தை எளிதில் கைவிடுவர். காங்கிரஸ் அதைச் செய்தது. நம் சொந்த இலட்சியத்தைத் தேடிப் போவது பெரும் பலன் தரும். குடும்பத்திற்குரியவை அன்பு, நம்பிக்கை, பிரியம். இவை எந்த வீட்டிலிருந்தாலும் வீடு குடும்பமாகும். நாம் வீட்டை முக்கியமாகக் கருதுகிறோம், வீட்டு வசதிகளைப் போற்றுகிறோம். வீடு திரும்ப ஆவலாக இருக்கிறோம். அவை எளிய இலட்சியங்கள். ஆனால் அவை வீட்டிலிருக்கின்றனவா? ஆனந்தம் ஜடத்தில் பிரகிருதியின் ஆனந்தமாக வெளிப்படுவது

பரிணாம இலட்சியம். இந்த அளவுகோலுக்கு இருமுனைகள் உண்டு. நாம் தவற்றை விலக்கி மற்றதைக் கருதுவோம்.

 • சத்தியஜீவியம் Real-Idea பூரண எண்ணத்தால்

சிருஷ்டிக்கிறது. மனம் புரிந்து கொள்கிறது. மனத்தின் உறுதி செயல்படுகிறது. அது செயல்பட அது ஞானத்தை ஏற்க வேண்டும். பொறுப்பாக இருந்தால் குடும்பம் முன்னேறும் என மனம் அறியும். பொறுப்பாக இருக்க கஷ்டமாக இருக்கிறது. நடைமுறையில் பொறுப்பாக இருப்பது இல்லை. மனத்திற்குப் புரிந்தாலும், செய்வதில்லை. பொறுப்பாக இருக்க மனத்தின் உறுதி பொறுப்பை ஏற்க வேண்டும். உணர்வுக்குச் சக்தியுண்டு. அதற்குப் புரியாது. வேகமாகச் செயல்பட்டு அடங்கும். அதற்கு புரியும். அதனுள் அது ஆழ்ந்து மறைந்துள்ளது. வெளி வருவதில்லை. வெளிவந்து செயல்பட்டால் அழகாக இருக்கும். அது மனத்தளவிலிருக்காது. உணர்வின் அளவில் இருக்கும். அந்தக் காலத்துத் தகப்பனார் கிராமத்தில் வாழ்பவரிடம் அமெரிக்காவில் வசிக்கும் மகன் வீடு கட்டப் பணம் அனுப்பினால், கிராமத்தில் 4 தாழ்வாரம், கூடம் அமைத்து அழகாக வீட்டைக் கட்டியிருப்பார். மகன் கிராமத்தில் குடியிருக்க முடியாது. உணர்ச்சி தனக்குப் பிடித்ததை அழகாகச் செய்யும். பிடிக்காததை எதிர்த்து அழிக்கும் உடல் உணர்வுக்கும் கீழேயுள்ளது. அடிமனம் அற்புதமாகச் செயல்படும். ஆனால் அதற்குப் பிடித்ததையே அற்புதமாகச் செய்யும். உடலால் மனத்தைப் புரிந்து கொண்டு செயல்பட முடியாது. உடல் செயல்பட ஆரம்பித்தால் குழறும். நேர் எதிரானவற்றைப் பேசும். மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடையேயுள்ள ஒவ்வொரு நிலைச் செயலையும் விளக்கலாம். அவற்றிற்குரிய அளவுகோல் ஏற்படுத்தலாம். மனம் புரியாவிட்டால் ஒதுங்கும்.

திவாலான ஒருவனை அன்னை காப்பாற்றினார். முதல் காப்பாற்றப்பட்டது. புதிய இடத்தில் சொத்து வாங்கினான். அன்னை அம்முதலின் மதிப்பை 18 மடங்காக்கினார். அவனுக்கு மனம் இல்லை. உணர்வுண்டு. மனைவி தன்னைப் பெரும் பணக்காரன் எனக் கருதவேண்டும் என்பதே அவன் நோக்கம். மற்ற எதுவும் அவன் மனதிலில்லை. முதலை அழிக்கும் அத்தனைக் காரியங்களையும் தவறாது செய்தான். இலாபம் முழுவதும் அழிந்துவிட்டது. முதல் அழியவில்லை. அருளுக்கு எதிரான அனைத்தையும் செய்தான். மனம் பலஹீனமானது. புரிந்து கொள்கிறது. உணர்வு வலுவானது. தன்னையும், அருளையும் அழிக்க மட்டும் செயல்படும் தன்மையுடையது. இந்த முதல் தவிர இவனுக்குப் பெரிய சொத்தில் பாதி பங்குண்டு. அன்னைக்கு தன் பாகம் முழுவதும் தருவதாக எழுதிக் கொடுத்தான். அவனுடைய கடிதம் ழுவதும் கறுப்பாக அன்னைக்குத் தெரிந்தது. பல

ஆண்டுகள் கழித்து 13 ஏக்கரும், பல இலட்சமும் வரவேண்டிய இடத்தில்1/2 ஏக்கர்தான் வந்தது.

ஆயுதத் தளவாடங்களை அழிக்க அன்னை முயன்றார். சில அன்பர்கள் அதைத் தொடர்ந்தனர். மனம் ஏற்றுக்கொண்ட எண்ணம் அது. அன்னையின் எண்ணம் என்பதால் அது அவனுக்கு Real-Idea. அன்பர்கள் செயல்பட ஆரம்பித்து முதல் அடி வைப்பதன் முன் வல்லரசுகள் தளவாட ஒழிப்பை அமுல்படுத்தினர். Real-Idea இப்படியே செயல்படும்.

 • என்னுள் அனைவரும் உள்ளனர். நான் அனைவரிலுமிருக்கிறேன். கடவுள் அனைவரிலும் இருக்கிறார். அவருள் அனைவரும் உள்ளனர்.

தெய்வீக ஆன்மா' என்ற அத்தியாயத்தில் மேற்சொன்ன உபநிஷதக்கருத்தை பகவான் கூறுகிறார். பிறர் எண்ணத்தை நாம் பேசுகிறோம். நம் எண்ணத்தைப் பிறர் பிரதிபலிக்கின்றனர். எண்ணம் போன்றதே உணர்வும், செயலும், ஆன்மாவும். பிறரிடம் நம்மைப்போல் அவர்களிருப்பதையும், எதிராக இருப்பதையும் காணலாம். எதிராக இருப்பது தலைகீழே நம் போலிருப்பதாகும். கடவுளைப் பெரிய இலட்சியமாகக் கருதினால், கடவுளிடம் நம் இலட்சியம் எந்த அளவுண்டு எனவும் நாம் கருதலாம்.

 • ஜடம் சத்தினுடைய ஆனந்தம்.

ஜடம் என்பது சத் என்பது சித்தாந்தம். பிரம்மம் சத்தாக மாறி எட்டு நிலைகளைக் கடந்து தலைகீழே மாறி ஜடமாயிற்று என்பது தத்துவம், ஜடமான சத்துள் சித்துள்ளது. ஆனந்தமும் உள்ளது. ஜடமே ஆனந்தம். ஜடத்துள் உள்ள சித் எனும் ஜீவியத்தை ஆனந்தம் தாண்டி மறைந்துள்ள இறைவனைக் காணச் செய்கிறது என்பது 24ஆம் அத்தியாயமான ஜடம்.

பிரம்மம் ஜடத்துள் மறைந்து மறைந்ததை மறந்து ஜடமாக இருக்கிறது. மறைந்த பிரம்மம் தன்னை நினைவு கூர்வது அருள். நினைவெழுந்து வெளிவருவது பரிணாமம், பேரருள். நினைவுபடுத்தும் கடமையை ஆனந்தம் ஏற்பதால் உபநிஷதம் "ஆனந்தத்தில் அனைத்தும் உற்பத்தியாகிறது'' என்கிறது. ஆனந்தம் அதை நேரடியாகச் செய்வதில்லை. சித் என்ற ஜீவியமும் ஜடம்போல் மறைந்துள்ளது. ஆனந்தம் சித்தைத் தூண்டுகிறது. தூண்ட உணர்ச்சியைப் பயன்படுத்துகிறது. தூண்டப்பட்ட சித் எழுந்து ஜடத்துள் மறைந்துள்ள ஆண்டவனைக் காண்பது பரிணாமம்.

நாம் ஒரு பழத்தைப் பார்க்கிறோம். ஆசை எழுகிறது. பழத்தைச் சாப்பிட்டு அனுபவிக்கும் ஆனந்தம் உணர்வைத் தூண்டிப் பழத்தைச் சாப்பிட்டுப் பழத்துள் ஒளிந்துள்ள இறைவனைக் காணச் செய்கிறது. ஆன்ம விழிப்பு இல்லாதவனுக்குப் பழம் சாப்பிடுவது, விழிப்பு உள்ளவனுக்குப் பழம் ஆண்டவன் மறைந்துள்ள ஜடம். சாப்பிடும் ஆசை மறைந்துள்ள ஜீவியம். தூண்டுவது ஆனந்தமான

சைத்தியப்புருஷன். சைத்தியப்புருஷன் செயல்பட்டு இறைவனை, சாப்பிடுபவனுக்குப் பழத்தில் காட்டுகிறது.

- விழிப்புள்ள சாதகனுக்கு யோகம், விழிப்பற்ற மனிதனுக்கு வெறும் செயல். சாதகன் காண்பது சத் எனும் இறைவன், சாமான்யன் கண்டது பழம் சாப்பிடுவது. சாதாரண மனிதன் பழம் சாப்பிடும் செயல், சாதகன் பழத்துள் மறைந்துள்ள இறைவனைக் காண்கிறான். சாதகனுக்கும் சாமான்யனுக்கும் உள்ள இடைவெளி அளவுகோலுக்குரியது.

 • தெய்வீக மனத்திற்கு ஞானமுண்டு. உடன்

அஞ்ஞானமும் இருக்கும். தெய்வீக மனம் கர்மத்திற்குக் கட்டுப்பட்டது. நல்லது செய்யவும் கர்மம் தேவை. வங்காளபாரதத்தில் துரௌபதிக்கு கிருஷ்ணன் மானத்தைக் காப்பாற்ற அவள் முன் செய்த நல்ல காரியத்தின் மீது செய்கிறான். சத்தியஜீவியத்திற்கு அது திரௌபதி காப்பாற்றியதால் மானத்தைக் தேவையில்லை. மானத்தைக் ஒரு ஸ்தாபனத்தின் grant சர்க்கார் உதவியை இருமடங்காக்கச் செய்த முயற்சியை மறுத்ததால், பிறகு பணக்கஷ்டம் வந்தது. ஸ்தாபனத்திலுள்ளவர் அதை அறியவில்லை. பெரிய ஆபீசர்கள், சிறிய ஆபீசர்கள் திடீரென பிரமோஷன், அதிக

வருமானம் பெறும் வாய்ப்பை சந்திப்பதுண்டு. அதற்குப் பல தடைகள் வரும். இந்த ஆபீசர்கள் எல்லாம் அவர்கள் கீழுள்ளவர்க்கு ஊதிய உயர்வு அளிக்க மறுப்பவர்கள். இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பை வெளியில் உள்ளவர்கள் அறிவதில்லை. அன்பர்கள் அவசியம் அறிய வேண்டும். திருவுருமாற்றம் நடைபெற வருத்தமும் போதாது. ஏற்கனவே தடை செய்ததை இப்பொழுது விலக்குவது அவசியம். மனம் விஷமாக இல்லாவிட்டால், மனம் மாற முடிவு செய்தவுடன் காரியங்கள் விரைவாக நடக்கும். பிறர் வருமானத்தைத் தடுக்கும் அற்ப சந்தோஷம் விஷத்தை விடக் கொடியது. பெருந்தன்மையான மனமாற்றம் இப்பொழுது தேவை. அளவுகோல் ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் இது. மனிதன் மாற மாட்டான். வாயால் மாற வேண்டும் என்பான். இப்பொழுது அதே போன்ற காரியம் எதிரான திசையில் அதே மனிதனுக்கோ, மற்றவருக்கோ செய்தால் தடை விலகும். மேற்சொன்ன கொடிய செயல், வேறு விஷயங்களும் கலந்திருக்கும்.

- அவர் தவிர மற்றவருக்கு மனம் புண்படும்படியான செயல்கள் கலந்திருக்கும்.

- கவனக்குறைவால் பிரியமான செயல் நசுங்கி இருக்கும். பிரியமானவர் வாழ்வை அலட்சியத்தால் நாசம் செய்திருப்போம்.

- உன் மீது பிரியம் உள்ளவர்க்குப் பெரிய கெட்ட பெயர் வரும்படியாகத் தன்னை மறந்து தவறு செய்வது.

- பிறர் உயிர் போகும்படி அல்லது பைத்தியம் பிடிக்கும்படி கண்மூடியாக யாரையாவது காப்பி அடிப்பது.

- உன் நோக்கம் எதுவானாலும், உன் செயல் பிறர் மனத்தைப் புண்படுத்தியிருந்தால், மனமோ, உணர்வோ மாறுவது போதாது. அவற்றில் பலன் கரையாது. ஆழ்ந்த உண்மை, பக்தியுள்ள இடத்தில் மனமாற்றம் நல்ல பலன் தரும்.

இது போன்ற சோதனைகளெல்லாம் மேற்சொன்ன கொள்கைகளை அளவுகோலாக்கப் பயன்படும். உண்மை sincerity பலன் தரும் என்பது உண்மை. உண்மை அன்றேயிருந்திருந்தால் இந்நிலை எழுந்திருக்காது. அன்றில்லாத உண்மை இன்றிருக்க மனம் ஆழ்ந்து பவித்திரமாக இருக்க வேண்டும். உண்மை, ஏற்புத்திறன், விழிப்பு, ஆர்வம், சமர்ப்பணம் இருந்தால் யோகம் பலிக்கும். நாம் கூறுபவை மனித வாழ்வின் குறைகள். யோகத்திற்குரியவை உன்னதமான பண்புகள். யோகத்தை மனித வாழ்வுடன் இணைத்துப் பேசுவது சாமான்யமில்லை. மனம்

மாற விரும்பினால், மாறுவதன் முன் சூழல் அமைதியாகும். நல்ல சகுனங்கள் தோன்றும். அருள் அருகில் வரும். இவையெல்லாம் உண்மையாக இருந்தாலும், நடை முறையில் பலன் பெற இவை போதாது. இத்தனைக்குப் பின்னும் ஏமாற முடியும். திருவுருமாற்றம் மட்டுமே பழைய செயலை மாற்ற வல்லது. இல்லையெனில் செய்த காரியம் மாற காலத்திற்குக் காத்திருக்க வேண்டும். அது பல ஆண்டுகளாகலாம். அன்னை, ஆயிரமாண்டும் ஆகலாம் என்கிறார். முழு உண்மையில்லாமல் இருக்கலாம். உண்மையான வருத்தம் எழலாம். அப்பொழுது பழைய செயலை அருள் மாற்றும். ஆனால் பெரிய அதிர்ஷ்டம், பெருவெள்ளமாக வாராது. அது நடக்கப் பேரருள் தேவை.

 • ஒருவர் மனம் சுதந்திரமானதானால் அவர்

பேரருளை அழைக்கலாம். அதற்கு இரு கட்டங்களுண்டு. 1. அன்னையை நம்பினால் கர்மம் கரையும். 2. தன் திறமை மீதுள்ள நம்பிக்கையை இழப்பது அடுத்த முறை. இரண்டாம் கட்டம் சிரமம். சொந்த நம்பிக்கையை இழப்பது கடினம். சொந்தத் திறமையின் மீதுள்ள நம்பிக்கை இழப்பது மேலும் கடினம். சொந்தத் திறமை தவறாது பலன் தந்தது என்ற நேரங்களிலெல்லாம் இன்று சூட்சும ஞானம் மூலம் கண்டால், பலன் திறமையால்

வரவில்லை, அதை விலக்கி வந்தது தெரியும். அது புரிய உண்மை சூட்சுமமாக இருக்கவேண்டும்.

 • கண்மூடியான வாழ்வு : நாமெல்லாம் கண்மூடியாக

வாழ்கிறோம் என்கிறார் அன்னை. நாம் அகந்தை. அகந்தை, தன்னைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி கண்மூடி வாழ்வை சேகரம் செய்கிறது. கண்மூடியானவனுக்குத் தன் நிலைமை தெரிய முடியாது. இக்கொள்கையை மனம் ஏற்று அதன் உண்மை புரிவது ஆரம்பம். அன்னை கூறும் சட்டப்படி சச்சிதானந்தம் சித்தித்த ரிஷிகளும், நிர்வாணம் எய்திய புத்தரும், பரமாத்மா சித்தித்த சங்கரரும், முனிவர் மனத்தை வெளிப்படுத்திய இராமாவதாரமும், விஸ்வரூபத் தரிசனமளித்த கிருஷ்ணாவதாரமும், ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஜனிக்க மறுத்த சிவபெருமானும், அதை ஏற்ற கிருஷ்ணபரமாத்மாவும் தெய்வ லோகத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் முழுமையைக் கண்டவரில்லை. பேரருள் பெறும் தகுதியை நாடும் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆன்ம விழிப்புள்ள அனுபவத்தை அளிக்க முன்வருகிறார். அதை நம்மால் ஏற்க முடியவில்லை.   ஆன்ம  விழிப்பு என்பது ஆன்மாவில் விழிப்புடனிருப்பது என்பதைவிட ஆன்மா விழிப்பாக இருக்கிறது எனலாம். ஆன்மா

 

விழிப்புடனிருந்தால் அதற்கு, பிரம்மத்தின் முழுமை தெரியும். மோட்சம் கண்மூடியான ஆன்மாவின் இலட்சியம்.

 • மன்னராட்சியில் பெருநிலக்கிழாரை விட

மக்களாட்சியில் எளிய மனிதனுக்கு அதிக அரசியல் சுதந்திரம் உண்டு. மன்னர் எவரையும் கொலை செய்ய முடியும். மக்களாட்சியில் எவரையும் காரணமின்றி அரெஸ்ட் செய்ய முடியாது. எளியவனுக்குச் செல்வமும், அதிகாரமும் உண்டு என்பது பொருளன்று. அன்னையை அறிவதால் சத்தியஜீவிய சக்தியைச் சில சமயம் அன்பர்கள் பெறுவதுண்டு. இந்நிலையை அன்பர்கள் எந்த அளவு அறிகிறார்கள் என்று தெரியவில்லை.

 • ஒரு நீண்ட நூல் எழுதுவதால் 56

அத்தியாயங்களின் ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு உதாரணம் எழுதலாம். நூலின் 1500 கருத்துகளையும் உதாரணம் மூலம் விளக்கலாம். இதுவரை எழுதியவற்றிலிருந்து முக்கியமான கருத்தை அறியமுடியும். தன்னை அறிவதே குறிக்கோள். அதை எட்டினால் போதும்.

 • நாம் என்பது நம் திறமை.

நம்மைப் பொருத்தவரை நம் வாழ்வில் இந்தச் சட்டம் சரி. அருளுக்கு அது சரி வாராது. வாழ்விலும் எது நம் திறமையால் நடக்கிறது என நினைக்கிறோமோ

அது நம் சுபாவத்தால் நடப்பதே உண்மை. நம் திறமையை நம்பாவிட்டால் அருள், பேரருளாகிறது. நாம் திறமையால் சாதித்தவை அனைத்தும், யோசனை செய்து பார்த்தால், உள்ளபடி நம் திறமையை மீறி சாதித்தவையேயாகும். சுபாவமும் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடை. வாழ்வில் முன்னேறியவர்கள் பணம், பதவி, திறமை, சுபாவம், திருட்டுத்தனம், அவநம்பிக்கை, துரோகத்தால் முன்னேறியவர்கள். ஒரு கடத்தல்காரன் M.P. ஆனால், பதவிக்கு மரியாதை குறையும். லஞ்சத்தால் M.P.யாக நாம் விரும்பமாட்டோம். கடத்தல்காரன் M.P. ஆனதும் கடத்தலாலன்று, அவனிடம் உள்ள மற்ற திறமைகளால். மேலும் கூறினால், கடத்தல்காரன் அவன் கடத்தலை மீறி அருள் பெற்றதால் M.P. ஆனான். அருள் மட்டும் சாதிக்கிறது. நம் திறமையும் சுபாவமும் தடை.

- வியாதி குணமாவது டாக்டரையும், மருந்தையும் மீறி அருளால் நடக்கிறது.

- நாணயமாகப் பதவியுயர்வு வரும்பொழுது பதவி உயர்வு நாணயத்தை மீறி வருகிறது.

- சர்ச்சில் போரை வென்றது அவரது தைரியத்தால் அன்று; அருளால். அருள், அவர் தைரியம் காரியத்தைக் கெடுக்க அனுமதிக்காது, அருள் அவர் தைரியத்தைக் கருவியாக்கிக் கொண்டது.

- நாம் உணவால் உயிர் வாழவில்லை. உணவை மீறி அருள் செயல்படுகிறது.

 • உற்சாகமான காரியம், உற்சாகம் போனபின்

ஜீவனற்றுப் போகும். அதற்குச் சிறப்பிருக்காது. மறுபுறம் சமர்ப்பணத்தால் அக்காரியம் அற்புதமாகும். ஒரு வேலையைப் பலவாறு கணிக்கலாம்.

- நமக்கு ஆர்வம் தருவது.

- திறமையும், ஆர்வமும் வளரும் துறை.

- ஜீவனற்றது.

- சமர்ப்பணத்தால் நிதானம் பெறுவது.

- காலத்துள் காலத்தைக் கடந்த அற்புதம்.

ஆகியவை வேலையை மனிதச் செயல் முதல் அற்புதம்வரை அளவுகோலாக்குவதாகும்.

 • உத்தரவு.

அளவுகோலுக்கு அதிகப் பொருத்தமுள்ளவற்றுள் உத்தரவும் ஒன்று. இதைக் கொண்டு நமது சமர்ப்பணத்தை நிர்ணயிக்கலாம்.

- உத்தரவு போடுபவருக்கே என்ன உத்தரவு என்று புரியாத நிலை பல வகையானது. ஒன்றை நினைத்து மற்றதைப் பேசுவார். அதை 5 அல்லது 10 வகைகளில் அறியலாம். அவற்றைக் கருதாது, தெளிவாக உத்தரவு போடும் நிலையில் ஆரம்பிப்போம்.

- உத்தரவைச் சொல்பவர் ஒருவர். பெறுபவர் அடுத்தவர். உத்தரவு ஒரு வேலையைப் பற்றியது. வேலை சம்பந்தமான விஷயங்கள் ஏராளம். இங்கு தவறு ஏற்படும் காரணங்கள். 1. சொல் 2.சொல்பவர் தடம் மாறுவது 3. நாம் ஒன்றைக் குறிப்பிடும்பொழுது கேட்பவர் வேறொன்றை நினைப்பது. நம் அளவுகோலுக்குப் பொருத்தமானவற்றை மட்டும் கருதுவோம்.

- ஓர் உத்தரவில் 3, 4 பாகங்களிருந்தால் முதல் சொன்னது மட்டும் கேட்கும். மற்றவை கேட்காது. கேட்டால் நினைவிருக்காது.

- ரேடியோவில் ஒளிபரப்புவதை நாம் கேட்க நாம் ரேடியோவைப் போடவேண்டும். அதுபோல் உத்தரவைக் கேட்பவன் தன் மனத்தைச் சொல்பவர் பக்கம் திருப்ப வேண்டும்.

- சொல்பவர் தம் சாமர்த்தியத்தால் கேட்பவரைக் கேட்க வைக்கலாம். அது சிரமம்.

- உத்தரவு முதலில் புரியவேண்டும், பிறகு அமுல்படுத்த வேண்டும்

- தாம் சொல்வது தெளிவாகக் கேட்க வேண்டும், கேட்பது புரியவேண்டும், புரிவது முழுமையாகச் செயல்படவேண்டும், என்பதை, சொல்பவர் மனத்திலிருந்து சமர்ப்பணத்தால் சைத்தியப்புருஷனை அடைவதால் செய்ய முடியும். செய்ததை அளவுகோல் காணமுடியும். . - சச்சிதானந்தப் பூரணம் என்பதன் அம்சங்கள் அது.

சத் என்பது ஐக்கியமாகவும், சத்தியமாகவும் மாறும். அவை நன்மை எனப்படும்.

சித் என்பது ஞானம், சக்தியாகும்.

ஆனந்தம் என்பது அன்பாகும்.

இந்த ஆறு அம்சங்களும் தனித்தனியே பூர்த்தியாகும்வரை பிரகிருதி காத்திருக்கும். நாம் வீடு கட்டும்பொழுது சுவர், தரை, பூச்சு, வெள்ளை அடிப்பது, மரவேலை முடிப்பது என பல அம்சங்களுண்டு. எல்லாம் முடியுமுன், வீட்டிற்குக் குடிபோக அவசரம் எழும். அதுபோல் ஆறு அம்சங்களில் ஒன்றிரண்டு குறையாக இருக்கும் பொழுது மனிதன் செயல்பட அவசரப்படுவான். பிரகிருதி எனும் இயற்கை அந்த நேரம் தடையை உற்பத்தியாக்க முடியும்.

ஆத்மா முழுமையானது; இயற்கை பகுதி.

எனவே இந்த ஆறு அம்சங்களும் உலகில் பல்வேறு இடங்களில் தனித்தனியே முழுமையாக வளரும்வரை இயற்கை பொறுமையாக இருக்கும். மனிதனுக்குப் பொறுமையிருக்காது. சமூகப் பரிணாமம் இந்தியாவில் இருந்து, பாலஸ்தீனம், கீரீஸ், ரோமாபுரி, ஐரோப்பா, அமெரிக்கா எனப் பல பகுதிகளை நாடுகிறது.

 • ஜடமனம் எதையும் நம்பாது. உணர்வின் மனம்

மாயையை நம்பும். புத்தி பிரம்மத்தை நாடும். இவை மூன்றும் ஓர் அளவுகோலாக நம் நம்பிக்கைகளை அளக்கவல்லது.

 • நம்பிக்கைக் குறைய ஆரம்பித்தால், பிரார்த்தனை

பலிப்பது குறையும். பிரார்த்தனை பலிப்பதன் முழுமை நம் நம்பிக்கையின் முழுமையைக் காட்டும். வளரும் நம்பிக்கையை அளக்க இது உதவும்.

 • பிரகிருதி மெதுவாக ஆர அமர வாழ்வை

அனுபவிக்கிறது. தான் அனந்தமாதலால், அதை பிரகிருதி அனுபவிக்கும் பாணியிது. வேகமான முன்னேற்றத்தை வேண்டுமென்றே தடுப்பது இயற்கை. பரிணாமத்தை யோகம் துரிதப்படுத்துகிறது என்பதும், இதுவும் நேரடியாக எதிரெதிரானவை. இதற்குரிய பதிலின் ஒருbook | by Dr. Radut