Skip to Content

பகுதி 1

 • பெரிய ஆத்மாவுக்குப் பெரிய நேரம் வரும்பொழுது எழுவது பெரிய தீர்மானம்.
 • அந்நேரம் பெரிய முடிவுக்கு வருவது புண்ணியம். அப்படிப்பட்ட முடிவுகள் அந்நேரம் முடிந்ததில் ஒரு பகுதியாக இருந்தாலும் அது பெரியது.
 • முடிந்த அளவு பெரியது என்பது பலவகையானது.

- கடைசி சொட்டு முயற்சியும் தீருவது.

- Energy-force-power-result- சக்தி - நேரான சக்தி - முறைப்படுத்தப்பட்ட சக்தி - பலன் தரும் சக்தி என்பவை சக்தியின் பல நிலைகள். அவற்றுள் சிறியது சக்தி. மேலே போகப் போகப் பலன் அதிகம். சக்தி தீருவது சுலபம். நேரான சக்தியைத் தீர்ப்பது கடினம். அடுத்த அடுத்த நிலைகள் அதிகச் சிரமம். சிரமம் அதிகமானால் பலன் அதிகம்.

- முயற்சிக்குரிய கட்டங்கள் பல.

- ஆர்வம் தீர்மானம் தரும். தீர்மானம் வலுவானால் அதனின்று எழும் சக்தி அதிகமாகும். முடிவின் திறனைப் பொருத்து சக்தி ஒரு முனையை நோக்கித் திரும்பும். சொந்த சுபாவம் - திறமை - அந்த சக்தியைப் பலன் தருமாறு மாற்றும். skill செயல்திறன் இதைப் பலனாக மாற்றும்.

- இந்த சங்கிலியில் உயர்ந்த நிலைகளை முழுவதும் செலவிடுவது அதிகச் சிரமம்.

- மிகப் பெரிய பலனும் பல நிலைகளில் வரும். அது திறமையை மட்டும் பொருத்ததில்லை ஆர்வத்தையும். பொருத்தது.

 • வாழ்வின் வழி ஆயிரம். ஆத்மாவின் போக்குப் பல்லாயிரம். இதுபோன்று முடிவை நிறைவேற்ற எண்ணற்ற வழிகள் உண்டு. The Life Divine  முறைகளை மட்டும் இக்கட்டுரை கருதும்.
 • நூலில் உள்ள எல்லா முறைகளையும் பட்டியலாக எழுதுவோம். நம் செயல்களை நூலின் எல்லாக் கருத்துக்களின்படி விமர்சனம் செய்வது நோக்கம். ஒரு கருத்துப்படியாவது அதைச் செய்து முடிக்க வேண்டும். நம் சக்தியோ, ஆர்வமோ, சமர்ப்பணமோ தீரும்வரை முயல வேண்டும். அதைச் செய்ய நூலின் கருத்துகளை

ஒரு scale அளவுகோலாக்க வேண்டும். உ-ம்: சமர்ப்பணத்தின் அளவுகோல் எண்ணம் - உணர்வு - செயல் என அமையும். அத்துடன் சூட்சுமப் பகுதிகளும் சேரும். முரண்பாடு உடன்பாடு என்ற கருத்தை எந்த அளவு முரண்பாடு உடன்பாடாகத் தெரிகிறது என்பது அளவீடாகும். எனவே பட்டியல் நீண்டதாகும். நம் சக்தி தீர்வதே நோக்கம், பட்டியலைப் பூர்த்தி செய்வது கடினம்.

 • 1. முரண்பாடு உடன்பாடு.
 • 2. ஆன்மாவே ஜடம்.
 • 3. சத்திலிருந்து காலை எடுக்காமல் அசத்திற்குப் போக வேண்டும்.
 • 4. பாதாளமும், பரமாத்மாவும் சேரவேண்டும்.
 • 5. பிரபஞ்சம் மனிதனில் பூர்த்தியாகும். மனிதன் பிரபஞ்சத்தில் பூர்த்தியாகும்.
 • 6. அகந்தை அழியும்
 1. திருப்தியில்லை என்பதை அகற்றுதல்
 2. வலியை விலக்குதல்.
 3. பூரணச் சந்தோஷம்.
 • 7. அறிவினின்று புலன் விலகுதல்.
 • 8. ஹிருதய சமுத்திரம் நம் வாழ்வை நடத்தும்.
 • 9. சக்திக்கு ஜீவனுண்டு.

 • 10. ஆனந்தம் அவனியில் வெளிப்படும்.
 • 11. ததாஸ்த்து.
 • 12. சத்தியஜீவியம் ஜீவனுள்ள எண்ணத்தால் சிருஷ்டிக்கின்றது.
 • 13. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிகிறது.
 • 14. இறைவன், ஜீவாத்மா, அகந்தை என்பவை சத்தியஜீவியத்தின் மூன்று நிலைகள்.
 • 15. மனம் சத்தியஜீவியத்தை மறக்கின்றது.
 • 16. எல்லா ஜீவாத்மாக்களும் என்னுள் உள்ளன. நான் அனைவரிலும் உள்ளேன்.
 • 17. வாழ்வு உணர்வை எண்ணமாக்கி, உடலை ஆள்கிறது.
 • 18. சக்தியும், ஜீவியமும் சத்தியஜீவியத்தில் சேர்கின்றன.
 • 19. ஜடம் சத்தினுடைய ஆனந்தம்.
 • 20. சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம் தலைகீழேமாறி ஜடம், வாழ்வு, சைத்தியப்புருஷன், மனமாக மாறுகின்றன.
 • 21. அறியாமை, தமஸ், பிரிவினை ஜடம் திருவுரு மாறுவதை எதிர்க்கின்றன.
 • 22. மற்ற அனைத்தையும்போல் ஆத்மாவுக்கும் இரு நிலைகள் உள்ளன.
 • 23. எல்லா லோகங்களும் ஒரே பொருளாலானவை.
 • 24. சைத்தியப்புருஷனிருப்பதால் பரிணாமம் நடக்கும்.

 • 25. சமர்ப்பணம்.
 • 26. Perfection சிறப்பு.
 • 27. ஜாக்கிரதா, Self-forgetful knowledge, திரிகாலத் திருஷ்டி.
 • 28. 3 வகைக் காலம்.
 • 29. பகுதி, முழுமை.
 • 30. ஜடம் - சூட்சுமம் - காரணம்.
 • Token Act, Complete Act என்பவை நாம் நன்கு அறிந்தவை.
 • Life response.
 • நன்மை, தீமை, வேண்டாதது, அசுர சக்திகள்.
 • சுயமான நல்லது.
 • கடந்தகால சுவை.
 • பரோபகாரம்.
 • சுயநலம் - அர்ப்பணம்.
 • தவறான செயல், சரியான மனம்.
 • தொடர்பு.
 • கர்மம்.
 • சமூகம், மனச்சாட்சி.

 • சாதனை.
 • சமூகத்தைக் கடந்த மனவளர்ச்சி.
 • பிரபலம், புகழ்.
 • எந்த சக்தி செயல்படுகிறது - அன்னை சக்தி.
 • சத்தியஜீவியம்.
 • உலகை அற்புதமாகக் காண்பது.
 • வலியை ஆனந்தமாக்குவது.
 • பெருந்தன்மை - கயமை.
 • மனநிலைகள் - மேல்மனம், உள்மனம், அடிமனம்.
 • கனவுலகம்.
 • பிரபஞ்ச ஜீவியம்.
 • பிறர் மனத்தை அறிவது.
 • வார்த்தை பலிப்பது.
 • பழக்கம் - நடத்தை - சுபாவம் personality - கருவி.
 • புறம் அகமாவது.
 • ஆன்மா ஜடத்தை ஆள்வது.
 • நினைவு உண்மை நிலையை அழிக்கும்.
 • அஞ்ஞானத்தின் அளவு.

 • பிறர் நோக்கில் நம்மையறிவது - குதர்க்கமான விமர்சனம், மட்டமான எண்ணம் - பிறர் அபிப்பிராயம்.
 • பிறர் நோக்கில் அவரையறிவது.
 • ஸ்ரீ அரவிந்தர் நோக்கில் வரலாறு, இலக்கியம், வாழ்வைக் கணிப்பது.
 • நல்லெண்ணத்தால் ஒரு செயலையோ, வாழ்வையோ கணித்து அதையே மீண்டும் தவறில்லாமல் கணிக்க முயல்வது.
 • மனைவியுடன் உடன்பாடு, பெண்மையுடன் பொருத்தம்.
 • சுபாவம்.
 • ஜடத்தை ஆன்மா ஆள்வது.
 • பிரம்மத்துள் பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் காண்பது.
 • Value implementation 12 அம்சங்கள்.
 • அன்னை எனும் நூல் கூறும் விலக்க வேண்டிய 30 குணங்கள்.
 • ஒரு விஷயத்திலாவது அற்புதம் என்பதை விவரமாக அறிவது.
 • தினமும் அன்றாட மனநிலையைச் சற்று அதிகப்படுத்துவது.

 • நம்முள் எழும் சந்தோஷம் மேலெழுந்தவாரியாக இல்லாமல், நம் சுபாவத்தினின்று எழுதல், அதையும் கடந்து நம்முள் வதியும் அன்னையிலிருந்து எழுவது.
 • நாம் நாடும் இன்பம் சமர்ப்பணத்தையோ, பக்தியையோ நாடுவதில்லை. இயல்பாக பகவான் கூறும் அறியாமையின் சுவையை அது நாடுகிறது. இவ்வான்மீக நிலையைக் காண்பது முன்னேற்றம். அது நடக்கும்பொழுது மேற்சொன்னவற்றுள் ஒரு வகையாக அது நடக்கும். ஆன்மீகச் சித்தியை அணுகும் நிலையில் உள்ளவருக்கு அது வேகமாக நடக்கும். நாம் எழுதும்பொழுது ஒரு செயல் நாம் முதலில் அதைக் கற்ற சந்தர்ப்பத்தை நினைவு கூறும். நாம் இன்னும் அந்நினைவைப் பாராட்டுவதை அது காட்டும். நாம் கற்றது முழுமை பெற்றிருந்தால் அச்சொல்லும், அச்சந்தர்ப்பமும் நம் நினைவை விட்டகன்றிருக்கும். நினைவுக்கு நான்கு கட்டங்களுண்டு.


 

புறம் - சிந்தனை - நேரம் - அகம்

என்ற 4இல் மேற்கூறிய நினைவு நாம் அச்சொல்லைப் பொருத்தவரைப் புறத்திலிருப்பதைக் காட்டும். நினைவு புறத்திலிருந்து படிப்படியாக நகர்ந்து அகத்தையடைய (சைத்தியப் புருஷனை) ஜீவநிஷ்டை தேவை. நேரம் எனப்படுவது அகந்தை. பிறகு அது புருஷனாகும்*. புறத்தினின்று சிந்தனையால் நம்மைப் பிரித்துப் பார்க்கும்பொழுது எந்த அளவு நாம்

 • Page 514 the Life Divine

புறத்துடன் ஒன்றிப் போயிருக்கிறோம் என்று தெரியும். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்றறியலாம். மனம், உடல் அங்குள்ள ஜீவியம் என்று தெரியும். நாம் உள்ள நிலை தெரிந்தால் சமர்ப்பணம் அந்நிலையில் சரணாகதி ஆவதும் தெரியும். சரணாகதி அந்நிலையில் முடியாவிட்டால், நாம் அந்நிலையைப் புரிந்து கொள்ளவில்லை எனவும் தெரியும். பூரணமாகப் புரிந்து கொள்வது, சரணாகதியைப் பூர்த்தி செய்யும் என அறியலாம். அது தெரிந்தால் அந்த ஞானத்தைத் தேடலாம். மனத்தால் முயலலாம். அதைப் பெறவும் மனத்தின் முயற்சியைவிடச் சரணாகதி உயர்ந்தது. அந்த ஞானத்தின் பகுதிகளைக் காணலாம். அந்த ஞானத்திற்கு முறைகள் உண்டு. அம்முயற்சி உச்சக் கட்டத்திற்குப் போனால், அம்முறையின் நினைவு எழும். அது புறத்தின் முறை. புறத்தின் முறையை அகத்தின் ஜீவியமாக மாற்ற வேண்டும். சந்தர்ப்பம் எழும்பொழுது, இவை ஒன்றன்பின் ஒன்றாய் எழும். அதைக் கடந்த கட்டம்,

புறத்தின் முறையும், அகத்தின் ஜீவியமும் ஒரே சமயத்தில் எழுவதாகும்.

இம்முறைகளெல்லாம் ஒன்றையொன்று நம்பியுள்ளன. இப்பொழுது எழும் ஞானோதயம் ஒன்றுண்டு.

சரணகதியைப் பூர்த்தி செய்யும் ஞானத்தைப் பெறவும் சரணகதியே சிறந்த முறை.

சரணாகதியின் சிறப்பை மனம் பாராட்டுவது, மனம் சரணாகதியைப் பயிலுவதாகும். அது மௌனத்தில் முடியும். நம் புறச்செயல்களையும், அக உணர்வுகளையும் இடையறாது கவனிப்பது யோகமாகும். எனவே, "யோகம், யோகத்தை மட்டும் ஏற்பவருக்கே உரியது'' என்று பகவான் கூறுகிறார். சைத்தியப்புருஷன் கல்வி என்ற கட்டுரையில் அன்னை கூறும் 4 சமர்ப்பணத்துள் இவையனைத்தும் அடங்கியுள்ளதைக் காணலாம்.

 • வாழ்வு முழுவதும் இதை ஏற்பது யோகம்.
 • இதை ஒரு செயல் மட்டும் நிறைவேற்றுவது token act ஆகும் என்பதால் கட்டுரையை யோகம் எனக் கூறாமல் வாழ்வு என்றேன்.
 • வாழ்வுக்கும், யோகத்திற்கும் உரிய சூத்திரங்கள்:

- தவறு அறியாத ஜீவியம் யோகம்.

- தவறு அறியாத நோக்கம் யோக வாழ்வு.

 • தவறு அறியாதது என்றால் என்ன?

நல்லது, கெட்டது போன்ற இரட்டைகள் உள்ளவரை நாம் தோற்கலாம், வெல்லலாம். தொடர்ந்த வெற்றி பெற

தொடர்ந்து விழிப்பாக இருக்கவேண்டும். மனம் முயன்று இதைச் சாதிக்க வேண்டும். சிரமமானாலும், இது முடியாததன்று, ஜீவியம் நம் கையில் இல்லை. சில சமயம் அது வரும். மற்ற நேரம் அது இருக்காது. அது நிலையாக இருக்க ஆன்மா விழிப்பாக இருக்கவேண்டும். அது யோகம்.

 • வேண்டியது, வேண்டாதது (Positive,Negative)

மனிதன் தன்னை நல்லவன் (positive) எனவும், உலகம் தன்னை அப்படியே ஏற்க வேண்டும் எனவும் நினைக்கிறான். அதனால் அவன் (negative) தான் கெட்டவன், நல்லவனாக வேண்டும் எனவும் நினைப்பது இல்லை. அப்படிப் பட்டவரை நாம் கருத வேண்டாம். தாம் யார் என அறிய முயல்பவர், தாம் எப்படி மாறவேண்டும் என நினைப்பவருக்குச் சொல்லக் கூடிய கருத்துகள் பல.

 • 1. செய்யவேண்டிய வேலையுண்டு. திறந்த பாட்டிலை மூடவேண்டும். திறந்து படித்த புத்தகத்தை மூடி மீண்டும் அலமாரியில் வைக்க வேண்டும் என்பது கையிலுள்ள வேலை. அவை உடன் செய்ய வேண்டிய வேலை. ஆனால் தயக்கமாக இருக்கிறது எனில் அது சோம்பேறித்தனம்.
 • 2. பேசும்பொழுது குறுக்கே பேசத் தோன்றுகிறது. குறுக்கே பேசுகிறோம். பிறரைப் பொருட்- படுத்தாததால் எழுவது, பழக்கம் போதாது.

கட்டுப்படுத்த முடியாமல் நம்மை மீறிப் பேசுகிறோம். அல்லது பிறரை அலட்சியம் செய்தும் பேசுகிறோம். இந்தப் பழக்கம் உள்ளவர் இதைக் கட்டுப்படுத்த முனைவது ஓர் scale அளவுகோலுக்கு உரியதாகும்.

 • 3. நம் குறைகள் அனைத்தையும் இதுபோல் அளவிடுவது இக்கட்டுரையின் நோக்கம். அதை முழுமையாகச் செய்தால் ஞானம் பெறலாம், சித்தி பெற முடியாது. நாம் யார் என அது அறிவிக்கும். இதை ஆரம்பிப்பவர் சூழலை அதிகம் அறிய முடியும். சூழல் தன்னைப் பிரதிபலிப்பதைக் காண்பார்.
 • 4. நமது சந்தர்ப்பங்கள் மனித சந்தர்ப்பங்கள். சிறப்பான நேரத்தில் அனைத்தும் அமோகமாக நடக்கும்பொழுது, அதையும் கடந்து சிறக்கும்பொழுது, ஒரு சிறு விஷயம் முக்கியமாகி காலை வாரிவிடுவதே மனிதச் சூழலுக்கு அடையாளம்.

எதிர்பாராத பதவி உயர்வு வந்து எதிரிகளும் பாராட்டும்பொழுது, சர்க்கார் தரும் வசதிகளைத் திடீரென உயர்த்தியபொழுது, கெட்டிக்காரப் பிள்ளை திடீரென பரீட்சைக்குப் போகமாட்டேன் என்பான். அது மட்டும் குறை என்பது விஷயமில்லை. நம் சூழல் மனிதச் சூழல் என

நாம் அறியவேண்டும். மன அமைதி தொடர்ந்தால் புது விஷயம் எழும். மாநிலப் போட்டியில் பையன் பரிசு பெறுவான். இது போன்ற நேரங்களில் நிதானமாக இருப்பது அசாத்தியம், மனிதனால் முடியாது. இது போன்ற நேரமே நாம் நம்மை scale அளவுகோல் அளக்க சரியான நேரம். இதைச் செய்ய ஆரம்பித்தால், அனைத்தும் அடங்கும், அமைதியாகும். அவசரப்பட அனுமதிக்காது. இது போன்ற நிலைகளைக் கண்டவன் பாக்யசாலி

. எந்த முறையும், எந்தக் கணக்கும் அவனுக்குத் தேவை இல்லை. அவை பயன்படும் நிலையை அவன் கடந்தவன்.

 • 5. இந்தியர் உடலில் ஜோதியுள்ளதாக அன்னை கூறுகிறார். கிராமப்புறத்தில் அது அதிகம். அன்னையை அறியாதவரிடம் நாம் பேசச் சிரமப்படுவதை அறிவோம். அதேபோல் நாம் அன்னையை ஏற்றுக்கொண்ட இடங்களில் விஷயம் அதிகமாகப் புரிவதைக் காண்கிறோம். மேற்சொன்ன விஷயங்களில் இந்த வித்தியாசம் - இந்தியர், மற்றவர்; கிராமப்புறம், நகரம்; அன்னையை ஏற்றுக்கொண்ட இடம், ஏற்றுக்கொள்ளாத இடம் - நன்றாகத் தெரியும். ஏற்பதும், எதிர்ப்பதும் விவரமாக விளங்கும். நாம் காண்பவை அனைத்தும் இதுபோன்றவை.

- ஒரு clientயிடம் அவரது இலாபம் இரட்டிக்கும் எனக் கூறலாம். அவர் அதை நம்பலாம். தம்

அனுபவத்தால் அல்லது அறிவால் அவர் கூறுவது இது. Somewhere in Time என்ற படத்தில் கதாநாயகி, நாயகனை முதல் முறை கண்டவுடன், இது நீங்கள்தானா? என்றாள். தன் பழைய அனுபவத்தால் அவளால் இதுபோல் பேச முடிகிறது. 80 ஆண்டுகட்குப் பின் அவள் அவனிடம், கடிகாரத்தைக் கொடுத்து என்னைக் காலத்தில் வந்து பார் என்கிறாள். அவள் முன் அனுபவம் பேசுகிறது. பிறரிடம் பேசும்பொழுது அவர்கள் எந்த நிலையில் இருந்து பேசுகிறார்கள் எனக் காண்பது - யூகிப்பதன்று - சூட்சுமத்திறன். சூட்சுமத்திறன் ஒருவர் பெறுவது பெரியது, யோகம் ஓரளவு செய்தாலும் அது வந்து விடும். எந்தத் திறமையும் பெறுவது சிரமம். கண்ணில் படுவதினின்று ஒரு திறன் (faculty) உற்பத்தியாக கவனம், சேகரம், சேகரம் செய்ததைக் காப்பாற்றுவது, பாகுபாடு செய்வது, பல தலைப்புகளில் முறை செய்வது, நினைவு கூர்வது, எளிதில் பயன்படுத்துவது, நல்ல முறையில் பயன்படுத்துவது அனுபவிப்பது ஆகியவை அதை அனைத்தும் சூட்சுமத்திலேயே நடக்க வேண்டும். சக்தி சூட்சுமமாக இருக்க வேண்டும். எண்ணம் சூட்சுமமாக இருக்கவேண்டும், திறனும் சூட்சுமமாக இருக்கவேண்டும். இவற்றுடன் ஜட

உலகம் சற்றும் கலக்கக் கூடாது.

இன்னொரு clientஇடம் அதேபோல், "உங்கள் இலாபத்தை இரட்டிப்பாக்கலாம்'' என்பதற்கு எப்படி முடியும் என்று பதில் வரும். அவருக்கு அனுபவமில்லை, அன்னையைப் பற்றி அறியாதவர், தரித்திரமானவர், அறியாமையை ருசித்து அனுபவிப்பவர், வளரப் பிரியப் படாதவர் என்று பொருள்.

எங்கும்போல் இங்கும், உங்கள் அறிகுறிகள். இவையெல்லாம் மனம் புறத்தில் பிரதிபலிப்பதைக் கண்டால், உற்சாகம் வரும். மனம் அறிவால் விசாலம் அடைந்தாலும் அது நடக்கும். புறம் அகத்தில் செய்யவேண்டிய வேலைக்கு அளவுகோலானால் உற்சாகம் வரும். அதற்குரிய செயல் என்று ஒன்றில்லை.

ஸ்ரீ அரவிந்தர் ஒரு நாளில் ஒரு முறையே சிறுநீர் கழித்தார். அது மாறினால் அவர் அதை கவனிப்பார். ரிஷிகளுக்கு மலத்தின் அளவு குறைவு. "அந்தச் சட்டப்படி நானும் ரிஷியாவேன்'' என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். உடல் ஆரோக்கியமானதானால், உணவு சாத்வீக உணவானால், அது உடலோடு சேர்ந்துவிடும். கழிவு குறைவு, ஆன்மீகச் சட்டப்படி உண்பதை ழுவதும் ஜீரணம் செய்யமுடியும். Evening talks என்ற நூல் இதுபோன்று அளவு கடந்த செய்திகளிருப்பதால் அன்னை அந்நூலை பொக்கிஷம் என்கிறார்.

 • 6. மாதம் ரூபாய் 500 சம்பளக்காரன் நிலை இன்று பரிதாபம். அன்னைச் சூழலால் அதிர்ஷ்டம் வருகிறது. ரூ.500 உயர்ந்து ரூ.5000த்தைத் தாண்டிப் போகும் வாய்ப்பு வந்துவிட்டது. நம்பிக்கையால் வந்தது இந்த வாய்ப்பு. ஒரு சிறு பொருள் - அவனுக்கு இரண்டு மாதச் சம்பளம் பெறுமானது - தொலைந்தது. சூழலும், அவனுடைய நம்பிக்கையும் பெரியவை. மனம் நம்பிக்கையை இழக்கவில்லை. அதிர்ஷ்டம் பெரியதானாலும் அவன் மனம் தான் செய்யும் வேலைக்குரியதாக இருப்பதாலும், வந்துள்ள அதிர்ஷ்டத்திற்குரிய மனநிலை வாராததாலும், அவன் உயர முடியாது என்பதை இந்தத் தொலைந்த பொருள் காட்டுகிறது. மந்திரிகள் பேசக் கிடைத்த வாய்ப்பைப் போற்றும் மகாநாட்டில் MLAஆகவும் இல்லாத தொண்டருக்குப் பேச அனுமதி கிடைத்தது தொண்டரின் பேச்சு வன்மையைக் காட்டுகிறது. மகாநாட்டுக்குள் நுழையும் பாஸ் தொலைந்து, உள்ளே அனுமதி கிடைக்கவில்லை என்பது சிறு விஷயம். உடனே சரி செய்யலாம். பேச அனுமதி கிடைத்தபின், பாஸ் தொலைவது வந்த வாய்ப்புக்குரிய அளவு மனநிலை

உயரவில்லை என்பதைக் காட்டுகிறது. அதனால் வந்தது வளராது போனாலும் போய்விடும் என்பது பொருள். பிரார்த்தனை பலிக்கும், வாய்ப்பைக் காப்பாற்ற முடியாது. ஒரு மாதம் கழித்து ஒரு சிறு காயம் படுகிறது. காயம் பொருட்டன்று. மனம் உயரவில்லை. உயராமல், வந்தது பலிக்காது என மீண்டும் நடந்தது காட்டுகிறது. தன் நம்பிக்கையின் உயர்வை அவன் அறியவில்லை. இந்தியன் என்பதால் அவன் தொழில் அவனுக்கு முக்கியம். தொழிலைவிட நம்பிக்கையின் உயர்வு தெரிந்தால், தன் நம்பிக்கையை உயர்த்த முயல்வான். நம்பிக்கை உயராமல் பிரார்த்தனை தீவிரமானால், நிலை உயரப் பயன்படாது. எவரும் அவனுக்கு இதைக் கூற முடியாது. எவர் சொன்னாலும் ஏற்கமாட்டான். மரபு நாடிப் போகாதே என்கிறது. அதை ஏற்பான். கிடைக்காது என்பதால் தேடிப் போகமாட்டான். மனம் நிதானமடைந்து வாய்ப்பை மறந்து விட்டால், காயம் உடனே ஆறும், தொலைந்த பொருள் கிடைக்கும். வாய்ப்பும் பலிக்கும்.

7. ஒரு வேலையைச் செய்யும்பொழுது சகுனம் நல்லதானாலும், கெட்டதானாலும் முன்னாலும் வரும், பின்னாலும் தெரியும். முன்னால் வரும் சகுனம் தெளிவாகப் புரியும். மற்ற நேரம் நாம் கவனக்குறைவாக இருந்தால் தவறான சகுனம் பின்னால் எழும். அப்பொழுது சரி செய்வது

கடினம். சிரமப்பட்டு சரி செய்யலாம். முன்னாலேயே தவறான சகுனமில்லாமல்லை. நம் மனத்தில் படும் அளவு தெளிவாக இல்லை. இதற்கு வழியில்லையா? உண்டு.

 • இது நாம் ஆரம்பித்ததா? அன்னை ஆரம்பித்ததா?
 • நாம் ஆரம்பித்தவற்றில் மட்டும் தவறு எழும்.

சட்டம் எளியது. வேலையைச் சமர்ப்பணம் செய்து ஆரம்பிக்காமல் நாமே ஆசைப்பட்டு ஆரம்பித்தால் கண்ணை விழித்துப் பார்த்து அறிகுறிகளைத் தேட வேண்டும். தேடினால் தெளிவாகத் தெரியும். இது பயன்பட பார்வை கூர்மையாக இருப்பது அவசியம்.

8. நன்றி. நமக்குப் பல காரியங்கள் நடக்கின்றன. நாம் அன்னைக்கு நன்றி கூற நினைப்பதில்லை. வாயால் நன்றி கூறுவதைவிட நன்றியை உடல் உணர்ந்து, உணர்வை சமர்ப்பணம் செய்ய வேண்டும். நன்றியை அறிந்தவர்க்குப் பிரார்த்தனை தேவையில்லை. சில சமயங்களில் மீண்டும் சரி செய்ய முடியாத காரியங்கள் முடிந்தபின் தெரியவருகின்றன. அது பீதியை உண்டு பண்ணும். அன்னை காப்பாற்றுகிறார். நிம்மதி

பிறக்கிறது. அதுவே முடிவு. நன்றி நினைவு வருவதில்லை. வாயால் நன்றி கூறும் அளவுக்கும் நினைவு இருப்பதில்லை, இது போன்ற செயல்களைக் கண்டு, வாயால் நன்றி கூறி, நன்றியை உணர்ந்து, உணர்வைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அது கடந்ததாக இருக்கலாம். இருப்பினும் இன்று அதைச் செய்ய வேண்டியது அவசியம். அது அன்னைக்குச் சரி. இதன் அவசியம் நாம் அறியாதது. பக்தனுடைய வாழ்வில் முக்கியம் என்று ஒன்றிருந்தால், இதுவே அது.

9. சுமுகம். இது சத்தியஜீவியத்தைச் சேர்ந்தது. நாம் அதனுடைய முக்கியத்துவத்தை அனுபவிப்பதில்லை. அழகாகப் பழகுவது நமக்கு சுமுகம் என்று பெயர். அது நல்லது, சாதிக்கும் திறனற்றது. ஒரு வேலையில் சம்பந்தப்பட்ட சிலர், ஒரு தலைவரைச் சுற்றியுள்ள பலர் போட்டியிடுகிறோம், எதிரிகளாகிறோம். உண்மையில் சுமுகம் இங்கு ஏற்பட்டால், இலட்சியம் வானளாவ உயரும். சுமுகம் சத்தியஜீவியத்தைச் சேர்ந்தது என்பதுடன் சிருஷ்டித்திறனுடையது. நான் கூறும் சுமுகம் நல்லெண்ணத்தாலானது. ஆனால் சுமுகம் என்பது உண்மையிலேயே

வேறு. சத்தியஜீவியச் சுமுகம் நம் ஜீவனின் உயிர்ப்பில் உற்பத்தியாவது. அது யோகத்திற்கு இன்றியமையாதது. நான் கேட்பது சுமுகம், அந்த தெய்வீக உயர்வுடைய சுமுகமன்று. இது உண்மையாக பிறர் மீதுள்ள நல்லெண்ணத்தால் ஏற்படும் சுமுகம். மனிதனுக்குரியது. எளிமையானது. எல்லோருக்கும் இருக்க வேண்டியது.

10. பிரார்த்தனை பலித்தால், அது மறந்து போகும். பலித்த பிறகுள்ள வேலை ஏராளம். பெரிய பரீட்சை பாஸானபின், நல்ல வரன் நிச்சயமான பின், வீடு கட்டி முடிந்தபின் தொடரும் பிரம்மாண்டமான வேலையை நாம் அறிவோம். அதற்கு முடிவில்லை. வேலை மாறும், நிற்காது. நாம் மறந்தால் பாக்கி சேரும், பிரச்சினையாகும். வேலை தொடரும் வகைகள் பல. அவற்றுள் சிறந்தது நன்றி. பெற்றதைப் பராமரிப்பது (maintenance) பெரிய பாரம். ஆப்பரேஷன் முடிந்தபின் அதிகக் கவனம் தேவை. இவை எளிய செயல்கள். மனவளம் சம்பந்தப்பட்ட செயல்களை அதிகமாகக் கவனிக்க வேண்டும். மறதி ஆபத்து. ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயன்றால் சிக்கல் அவிழ்கிறது. முடிச்சு அவிழ்ந்து அடுத்த

நிலையில் குளறுபடியாகிறது. முடிச்சு, சிக்கல், குளறுபடி, ஒழுங்கு எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றைக் கவனிப்பதும், பிரச்சினைகளைத் தீர்ப்பதும் scale ஓர் அளவுகோலுக்குரியன. அதன்படி நாம் முன்னேறுவது எளியது 19ஆம் அத்தியாயத்தில் பகவான் வாழ்வை விளக்குகிறார். வாழ்வு உடலின் அசைவுகளை உணர்வாக மாற்றி, மனத்திற்கு எடுத்துப் போய் எண்ணமாக மாற்றி, அவ்வெண்ணத்தின் கீழ் உடலைக் கொண்டு வருகிறது என்பது அங்குக் கருத்து. எந்த வேலையிலும் நாம் அசைவாக இருக்கிறோமோ, எண்ணமாகச் செயல்படுகிறோமோ, உணர்வே நம் நிலையா, உடல் எண்ணத்திற்குக் கட்டுப்படுகிறதா, எந்த அளவு கட்டுப்படுகிறது என்பவற்றைக் கவனிக்க முடியும்.

 • சும்மா இருக்கும்பொழுது ஒரு பேப்பரை எடுக்கிறோம், சுருட்டுகிறோம், கிழிக்கிறோம், எறிகின்றோம். இது வெறும் உடல் அசைவு.
 • ஒரு புத்தகத்தைப் பார்க்கிறோம். அதைப் பாதிவரை படித்தது நினைவு வருகிறது. நிறுத்தி நெடுநாளாகிறது. படிக்கவேண்டும் என நினைக்கிறோம். முடிவு செய்கிறோம்.

செயல் உணர்வு மூலம் முடிவாவது இது. அமெரிக்க இளைஞன் புத்தகக் கடையிலிருந்தபொழுது புத்தகங்களை எடுப்பது சரியில்லாததால், ஒரு புத்தகம் தவறி மடியில் விழுந்தது. அது Sri Aurobindo - Adventure of Consciousness  என்ற நூல். அதை எடுத்து ஒரு பக்கம் படித்தபின் வாங்கினார். அடுத்த மாதம் ஆசிரமம் வந்தார். 30 ஆண்டாக இங்கே இருக்கிறார். செயல் உணர்வாகி, உணர்வு எண்ணமாகி, எண்ணம் செயலை நிர்ணயிப்பதற்கு இது உதாரணம்.

அளவுகோல் எத்தனை முறை சறுக்கி விழுந்தோம் எனக் காட்டுகிறது. சறுக்காமல் இருக்க நம் முழு சக்தியும் தேவை. சைத்தியப்புருஷனைக் கண்டு அங்கேயே தங்குவது முக்கியம். நாம் மேல் மனத்துள் இருக்கிறோம். சைத்தியப்புருஷன் அடி மனத்துள் ஒளிந்திருக்கிறான். நமக்கு அவன் எட்டாத தூரம். இது புருஷன். நமக்கு வேண்டும். அடுத்தது என்ன? இது புரிவது நல்லது. நாம் படித்தது நமக்குச் சித்தித்தது என்று பலர்போல் நினைப்பதை விட இது அறிவுள்ள செயல். நாம் ஆத்மாவைப் பற்றிப் படித்தால் ஆத்மாவாகிவிட

மாட்டோம். படிப்பது மனம். நாம் மனமாகவே இருக்கிறோம். உள்ள சரக்கு கொஞ்சம். நாலு பேரிடம் போய் விற்க முயல்வது அவசியம். நாலு பேரிடம் போகக் கூடாது. சரக்கு விற்க வேண்டும் என ஒருவர் நினைப்பது பிரச்சினையாகுமா? நாம் அதற்கு பதில் கூற வேண்டுமா?

 • சந்தை என ஏற்பட்ட நாளில் மனிதன் கற்றது இது. சரக்கு சந்தைக்குப் போனால் விற்கும். இல்லை எனில் விற்காது.
 • சந்தைக்குப் போக மறுப்பவன் 1000 ஆண்டு பின் தங்கியவன்.
 • செய்த தவற்றை நூறாவது முறை செய்பவன் மனிதனில்லை.
 • ஸ்ரீ அரவிந்தர் அதை அறியாமையின் ருசி என்கிறார்.
 • இவன் 1900 A.D.இல் வாழத் தகுதியற்றவன். இவனால் சொத்து சேர்க்க முடியாது.
 • இவ்விஷயத்தை ஆராய்ச்சி செய்வது அடி மடையன் வேலை.
 • இப்படிப்பட்ட மனிதனுக்கு இருவழிகள் உள.
 • 1. இவன் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும்.
 • 2. சொந்தமாக எதையும் செய்யும் உரிமை இவனுக்குக்

கிடையாது. சமூகத்தில் உறுப்பினராகச் சேரும் அளவு தகுதியற்றவன்.

 • இவன் தன் நிலையை ஏற்க வேண்டும். இவனிஷ்டத்திற்கு அனுமதித்தால் அனுமதிப்பவரை இவன் அழிப்பான். உழைப்பாளிக்குரிய அறிவை இவன் பெறவில்லை.பிறர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்பவருண்டு. கற்றுக் கொள்ள மறுப்பவருண்டு. மறுப்பவர் தம் அன்றாடச் செலவுக்குக் கைமாற்று பெறலாம். பெருந் தொகை கடன்வாங்கி அன்றாடச் செலவு செய்பவர் முன் சொல்லியவரைப் போன்றவரேயாவர். இவ்விருவருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்கள் பிறர்கீழ் வேலை செய்ய வேண்டும், பிறருக்காக வேலை செய்யவேண்டும். ஒரு பொதுக் காரியத்தில் இவர் யோசனையைக் கேட்கக் கூடாது.
 • சமுதாயப் பரிணாமத்திற்காக நாம் வேலை செய்கிறோம். நாம் இவர்கள் போன்றவரைப் புறக்கணித்து நடக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களைப் பொறுப்பாக வேலையில் சேர்ப்பது தவறு. சொந்தப் பொறுப்பு அளிப்பது மேலும் தவறு. திருவுருமாற்றத்திற்காகச் செய்யலாம். இவர்கள் திருவுருமாறும்வரை பிறர் சம்பாதித்ததை அழித்தபடியிருப்பார்கள். இவர் தொட்டன வெல்லாம் கரியாகும். இவர்களைச் சேர்ந்தவர்கள் திவாலாவார்கள். இப்படிப்பட்டவர்கள் அன்னையை நாடி திருவுருமாற்றத்திற்காக வருவதாக அன்னை கூறுகிறார்கள்.

ஆஸ்பத்திரிக்கு டாக்டர், நர்ஸ் வேலை செய்ய வருகிறார்கள். மேலும் சாமான் சப்ளை செய்ய வியாபாரிகள் வருகிறார்கள். வியாதியஸ்தர்கள் வியாதியைக் குணப்படுத்திக் கொள்ள வருகிறார்கள். இவர்கள் டாக்டர் என்றோ, சப்ளையர் எனவோ நினைப்பது தவறு. வியாதி குணமான பின் வியாதியஸ்தன் போய்விடுவான். அன்னையிடம் பூர்வ ஜென்மப் புண்ணியத்தால் யோகம் செய்ய, சேவை செய்ய, உடன் உறைய, அன்னை சூழலை அனுபவிக்க வருபவர்கள் ஏராளம். தீயசக்தி ஆத்மாவிலிருந்தால் அதிருந்து விடுதலை பெற - திருவுருமாற - வருபவர்கள் உண்டு. அதேபோல் திவால் இராசியுள்ளவர் அது அழிய அன்னையை நாடி வருபவர்கள் உண்டு. இவர்கள் இப்பட்டியலைச் சார்ந்தவர்கள்.

 • பெற்றோர் குழந்தைகட்குப் பேச, பழக, சாப்பிடக் கற்றுக் கொடுக்கின்றனர். சிறுவயது குழந்தைக்குச் சுதந்திரமில்லை.book | by Dr. Radut