Skip to Content

2. பிறந்த குழந்தையின் வளர்ந்த அறிவு

ஹாலந்திலுள்ள பெற்றோர் இருவர் தங்களுக்குப் பிறந்த குழந்தைகள் சாதாரணமானவை என்று மன வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்க இன்ஸ்டிட்யூட் ஒன்றைக் கேள்விப்பட்டு அங்கு சிறுகுழந்தைகளுக்கு உயர்ந்த பயிற்சி அளிப்பதாக அறிந்து, அவர்களை அணுகினார்கள். தங்கள் நிறுவனம் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே பயிற்சி அளிப்பதால், தாங்கள் உதவ இயலாது என்ற பின்னும், அவர்கள் முறைகளைப் பெற்று ஹாலந்து பெற்றோர் தங்கள் ஒரு வயது குழந்தையைப் பயிற்றுவித்தனர். பெரும்பலன் கிடைத்தது. ஐந்தாம் வயதில் குழந்தை பள்ளி முடிக்கும் நிலையில் பெறும் அறிவைச் சிறப்பாகப் பெற்றுவிட்டபின், கல்லூரியில் சேரும் முழுத் தகுதியுடனிருக்கின்றான். எப்படி ஐந்து வயதுக் குழந்தையைக் கல்லூரியில் சேர்ப்பது? இதுபற்றி ஹாலந்தில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி வந்தது எனக் கேள்விப்பட்டு, அந்த அமெரிக்க இன்ஸ்டிட்யூட்டிலிருந்து ஒரு புத்தகம் வரவழைத்தேன். அதன் பெயர் How to give your baby encyclopedic knowledge?

அப்புத்தகத்திலுள்ள ஒரு சில செய்திகளாவன:-

ஆறு வயதுக் குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைவிட ஒரு வயது குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது எளிது.

ஒரு வயதில் குழந்தைகள் இரண்டு மொழிகள் கற்றுக் கொள்கின்றன.

சாப்பிடுவதைவிட ஆர்வமாகக் குழந்தைகள் பாடம் கற்கின்றன. அந்த இன்ஸ்டிட்யூட்டிலுள்ள நான்கு வயதுக் குழந்தையைப் பார்த்து நீ எதைப் படிக்க முடியும் என்றொருவர் கேட்டபொழுது, எதையும் படிக்க முடியும் என்று பதில் சொல்லிற்று. அருகிலிருந்த புத்தகத்தை எடுத்துக் கொடுத்து அதில் ஒரு பாராவைக் காட்டிப் படிக்கச் சொன்னார்.

குழந்தை படித்த பாரா பின்வருமாறு:

Little children have begun to read and to increase their knowledge, If this book leads to only one child reading sooner or better then, it will have been worth the effort, who can say what another superior child will mean to the world? Who is to say what in the end will be the sum total of good for man as a result of this quiet grounds well which has already begun this gentle revolution.

குழந்தை படித்தது. புரிகிறதா எனக் கேட்ட பொழுது அத்தனையும் புரிகிறது ground swell என்றால் என்னவென்று தெரியவில்லை என்று குழந்தை பதில் சொல்லியது.
நாற்பது வருஷங்களாக மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்படும் ஸ்தாபனம் இது. இங்கு பயின்றவர்களில் பலர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இரண்டு வயதில் குழந்தை வயலின் வாசிக்கிறது. நான்கு வயதில் குழந்தை ஒரு மைல் ஓடுகிறது. உடற்பயிற்சியில் அற்புதமாக விளையாட்டுகளைக் கற்றுக் கொள்கிறது.

மனித மூளைக்குள்ள திறமை அளவு கடந்தது. நாளாக நாளாக அது மாசுபடிந்து திறனை இழந்து விடுகிறது. 30,000 வருஷங்களுக்குப் பின்னால் வரும் superman என்பவரை 30 ஆண்டுகளில் உற்பத்தி செய்யும் திறனுள்ளது மனம். தான் எதுவாக வேண்டும் என முழு ஆர்வத்துடன் மனிதன் செயல்படுகிறானோ அதுவாக அவன் மாறும் திறமையுடையவன் என்று அன்னை பலகாலம் சொல்லி வந்ததை அமெரிக்கப் பள்ளி ஒன்று நடைமுறையில் சாதித்துள்ளது நமக்கு நல்ல செய்தி. அன்னை கூறுவனவற்றை அதிகமாகப் புரிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்.

கிளென் டோமான் என்பவர் உலக யுத்தத்தில் சேவை செய்தவர். மூளையில் அடிபட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கும் மருத்துவ உலகத்தால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு டோமான் ஒரு முயற்சியை மேற்கொண்டார். வயதானபின் கண்பார்வை குறைந்தால் 400 வருஷங் களுக்கு முன் அதற்கு நிவர்த்தியில்லை. கண்ணாடி என்ற சாதனம் கண்பார்வையை மீட்டுத் தருகிறது. இன்று கண்ணாடி என்பதில்லை என்றால் உலகில் பல கோடி மக்கள் பார்வையை இழந்து விடுவார்கள். படிக்க முடியாது, நடக்க முடியாது. கண்ணில் பூ விழுந்தால் பார்வை போய்விடும். அதை அகற்றுவது இன்று எளிய சிகிச்சை. அதேபோல் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு வாழ்வு பாழாகிறது. பல எளி

முறைகளால் அவர்களுக்கு வாழ்வளிக்க முடியும் என்று டோமான் அனுபவத்தில் கண்டு ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வை மீட்டார்.

இன்று சுமார் 150 நாடுகளில் அவர் உதவி பெற்ற குழந்தைகள் புதுவாழ்வுடன் நடமாடுகின்றனர். நம் அறிவில் நூறில் ஒரு பாகத்தையும் நாம் பயன்படுத்துவ தில்லை என்ற உண்மையை டோமான் இதன் மூலம் கண்டுகொண்டார். சாதாரணக் குழந்தைகளுக்கு இப்பெரு முயற்சி என்ன செய்யும் என்ற சோதனையை அவர் மேற்கொண்டபொழுது குழந்தையின் அறிவை ஆயிரம் மடங்கு உயர்த்தலாம் என்று புரிந்து கொண்டு, அடுத்த முயற்சியை ஆரம்பித்தார், அதன் விளைவாக இந்த 40 ஆண்டுகளில் சுமார் 50,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. டோமான் முக்கியமாக மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளையே கவனிக்கிறார். அடுத்தாற்போல் உடற் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். அவர் செய்து வரும் சோதனையை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய புத்தகங்கள் பல.

1. How to Teach your Baby Maths. 2. How to Teach your Baby Encyclopedic knowledge. 3. How to Multiply your Baby's Intelligence. 4. How to Teach your Baby to Read.

இன்று வரை உலகெங்கும் அவை 20 லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன. தம் இன்ஸ்டிட்யூட் செயல்

படுவதை ஒரு வீடியோப் படமாகவும் எடுத்திருக்கிறார். அதுவும் இன்று நம் போன்றவர்க்குப் பயன்படும்.

ராபர்ட் மேக்பர்லேன், காரிஜேக்கப் என்ற சொஸைட்டி உறுப்பினர்கள் கிளென் டோமானைப் போய்ப் பார்த்து ஒரு நாள் முழுவதும் அவருடைய இன்ஸ்டிட்யூட்டில் இருந்தனர். அதன் கிளைகள் ஜப்பான், இத்தாலி, பிரேசில் நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் போதுமான ஆதரவு இருந்தால் ஒரு கிளை அமைக்கலாம் என்ற கருத்துக்கு ஆதரவு தந்தார்.

சென்னையிலிருந்து இருவர் வந்தால் அவர் களுக்குப் பயிற்சி அளிக்கின்றேன் என்றும் கூறினார். டாக்டர் சுலோச்சனா என்பவர் அங்கு சென்று பயிற்சி பெற முன்வந்துள்ளார். பம்பாயில் உள்ள அன்னை பக்தர் அங்கே சென்று பயிற்சி பெற முன்வந்துள்ளார். பம்பாயில் உள்ள அன்னை பக்தர் அருணா இராகவன் என்பவர் டோமானைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் புத்தகங்களை வாங்கித் தம் குழந்தைக்குப் பயிற்று வித்ததன் விளைவாக பம்பாயில் டோமான் இன்ஸ்டிட்யூட்டிற்கு ஒரு கிளை ஆரம்பிக்க யத்தனம் செய்கிறார். இந்த இன்ஸ்டிட்யூட்டின் முக்கிய ஐந்து புத்தகங்களின் சுருக்கத்தை ரேவதி சங்கரன் மங்கையர் மலரில் ஐந்து மாத இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

******book | by Dr. Radut