Skip to Content

1. அன்பர் அனுபவம் I

தமிழ் நாட்டில் பெரும்பாலான அன்பர்கள் அன்னையை 'அமுதசுரபி' மூலமே அறிவார்கள். அன்னையை அறிந்தவுடன் முதற்காரியமாகத் தங்களுடைய தீராத பிரச்னையைத் தீர்க்க முற்படுவார்கள். முதல் நம்பிக்கையில்லாமல் செயல்பட்டாலும், பிரச்னை தீரும் வகையைக் கண்டு நம்பிக்கை ஏற்பட்டவுடன் அவர்கள் செய்யும் காரியம் இரண்டு. ஒன்று சமாதி தரிசனத்திற்கு வருவது, மற்றொன்று எனக்கு எழுதுவது. அதுபோன்று வந்த கடிதங்களில் சிலவற்றைத் தொகுத்து ஆராதனை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம். அந்தத் தொகுப்பு வெளிவந்தபின் வந்த கடிதங்களை அடுத்த தொகுப்பாக வெளியிட முயல்கிறோம். அத்தொகுப்புகளில் வர இருக்கும் சில கடிதங்களை இக்கட்டுரைகளில் வெளியிடுகிறேன். பெரும்பாலும் அக்கடிதங்களுக்கு விளக்கம் தேவையில்லை என்பதால் கடிதத்தில் வெளியிட வேண்டிய பகுதியை மட்டும் கீழே தருகிறேன். தேவையானால் சிறு விளக்கமும் அளிக்க முயல்கிறேன்.

1. "ஒரு பயங்கரப் பிரச்னையின்போது நான் மிகவும் தவித்துத் துடித்தபோது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு வேண்டிக் கொண்டதும், அந்த பயங்கரப் பிரச்னை ஒரு நிமிஷத்தில் தீர்ந்து

என்னைக் காப்பாற்றியது. அன்னையைப் பற்றி நிறையப் படித்தேன். படிக்கிறேன். பரிபூரணமாக ஏற்றுக் கொண்டேன். சதா சண்டையும், கத்தலும், கடுகத்தனை அமைதியில்லாத தனிமையுமாக இருந்த வீட்டில் (harmony) சுமுகம் பூ வைத்து வேண்டிக் கொண்டே வந்ததில் ஆச்சரியகரமான மாறுதல் ஏற்பட்டது. அன்னையைப் பற்றி உணர்ந்த அன்றிலிருந்து பூஜை, விரதம் முதலி யன குறைத்து அன்னையை மட்டும் பிரார்த்தித்து வந்தேன். ஜனவரி 12ருந்து மே 18 வரை எதிர்பாராத மாறுதல் இவரிடம் - கலகல எனப் பேசினார். ஓரளவு பணம் 700 ரூபாய் என்பது 900 ஆக மாறியது. அதிகக் கண்டிப்பு இல்லாமல் என்னையும் ஒரு மனுஷியாக உணர்ந்து நடத்தினார். இதுவரை அன்னையைக் கும்பிடுவதைக் கேலி செய்தவர், அவருடைய பிறந்த நாள் அன்று பாண்டிச்சேரிக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று கூப்பிடும் அளவுக்கு மாறுதல்''.

2. "ஒரு வாரத்திற்குமுன் ஒரு கடிதம் எழுதினேன். அதில் மாப்பிள்ளை, ஜாதகம் எதுவுமே சரியாக அமையவில்லை என எழுதினேன். தங்களுக்கு எழுதிய 15 நாள்களில் தங்களிடமிருந்து பூ அனுப்பியிருந்தீர்கள். ஒரு வாரத்திற்குள் கல்யாணம் நிச்சயமாய் விட்டது. நிச்சயம் வருகிற ஞாயிறன்று வைத்திருக்கிறார்கள்''.

3. "நான் மூக்கில் ஓர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருந்தேன். ரூ.1000/ ஆகுமென டாக்டர் கூறினார். கடன் வாங்கித்தான் செய்ய வேண்டும். இப் பணப்பிரச்னையை அன்னை யிடம் ஒரே ஒரு முறைதான் கூறினேன். ஒருநாள் என் தோழியைச் சந்தித்தேன். அவள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வேலை செய்பவள். அவளோடு அங்குப் போய் என்ன செலவாகும் என விசாரித்தேன். ஆபரேஷனுக்கு 2000/- ஆக மொத்தம் ரூ.4000/-ஆகும் என்றார். தோழி என் நிலைமையை விளக்கினாள். திடீரென டாக்டர் இலவசமாக ஆபரேஷன் செய்வதாகச் சொன்னார். மெடிகல் சூபரிண்டெண்டெண்ட்டிடம் கடிதம் வாங்கி வரச் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல் தடை சொன்ன சூபரிண் டெண்டெண்ட் மனம் மாறி எங்களைப் பார்க்கா மலேயே கடிதம் கொடுத்தார். என்னுடைய தோழி எனக்கு அதிர்ஷ்டம்தான் என்றாள். நான் அதிர்ஷ்டத்தைப் பற்றி நினைக்கவில்லை. அன்னையின் சக்தியைப் பற்றித்தான் நினைத் தேன். கடைசியில் 4000 ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் 400 ரூபாய்தான் கொடுத்தோம்''.

4."ஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளால் என் மனைவி மனநோய் நீங்கி குணம் அடைந்து வருகிறாள். கடந்த 5 ஆண்டுகளாக வாட்டி வந்த

நோய் ஸ்ரீ அன்னையின் அருளால் தற்சமயம் குணமாகி வருகிறது. எப்படியும் அன்னை நினைவைப் பூரணப்படுத்தினால் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்ற வேதவாக்கை அவுரங்காபாத்தில் வேலை செய்யும் என் மகன் இன்ஜினீயருக்கு எழுதினேன். தற்சமயம் அவன் பிரச்னைகளும் ஸ்ரீ அன்னை அருளால் நீங்கி நல்லபடியாக இருப்பதாக எழுதினான். எல்லாம் ஸ்ரீ அன்னையின் திருவருளே ஆகும்''.

5. "நான் ஒரு Diploma in Electronics & Communication மாணவி. நான் 6 மாதத்திற்கு முன் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நீங்கள் அன்னை படத்தை என் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அனுப்பி யிருந்தீர்கள். என் வேண்டுதல்படி எனக்கு ஒரு மாதத்தில் வேலை கிடைத்தது''.

6. "அன்னையின் அருளால் என் பெரிய பெண் ணிற்கு L. I. C..யில் வேலை கிடைத்துள்ளது. B.Com., பரீட்சை முடிந்த அடுத்த நாள் வேலையில் சேர்ந்துள்ளாள். யாருடைய சிபாரிசும் இல்லாமல் நேரடியாக அவர்கள் வைத்த பரீட்சையில் பாஸ் செய்து கிடைத்திருக்கிறது. நேர்மை, சத்தியம், உண்மை, இவற்றைக் கொண்ட அவளுக்கு அன்னை கொடுத்த பரிசு என்றால் அது சத்தியமானது''.

7. "என் கணவர் தினமும் குடித்துக் கொண்டி ருந்தார். தற்போது குறைத்துவிட்டார். மேலும் ஓர்

இடம் வாங்க எண்ணி அன்னையை வேண்டி னேன். அதன்படி வாங்கியுள்ளேன்''.

8. "நான் ஒரு விதவை. எனக்கு ஒரே ஒரு மகன். நானும் அவனும் நான்கு வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்தோம். என்னுடைய வீட்டையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு வாடகைக்கு வீடு எடுத்திருந் தேன். மகன் என்னை வந்து பார்ப்பதும் இல்லை. கண்டால் பேசுவதும் இல்லை. அன்னையின் ஆதரவு கிடைத்தபின் நான் அவ்விடம் என் கவலையை விட்டு விட்டேன். நான் அன்னையை அறிந்து ஆறு மாதம்கூட இருக்காது. ஆனால் என் மகன் என்னைப் பார்க்க பத்தாம் தேதி வந்தான். நான் என் மனமார்ந்த நன்றியை அன்னைக்கு அறிவிக்கிறேன்''.

9. "ஸ்ரீ அன்னையின் அருளால் எங்கள் தகப்பனா ருக்குக் கால் ஆபரேஷன் நன்றாகச் செய்யப்பட்டு குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்த எழுபதாம் வயதில் அவருக்குக் குணமான வேகத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர்''.

10. "எங்களுக்குச் சொந்த வீடு அமைய அன்னைக்குக் காணிக்கை அனுப்பியிருந்தேன். அந்த வீடு W.4 நம்பர் வீடு. எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. தோல்வியையும் அன்னை கொடுத்ததாக எண்ணி நம்பிக்கையோடு இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் முரண்பாடாகப் பேசினார்கள். நான் நம்பிக்கையோடிருந்தேன்.

W.4ம் நம்பர் வீடு 1 லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய். நான் வீட்டிற்கு எங்கும் அலைந்தேன். 2 லட்சத்திற்கு மேல்தான் இருந்தது. அன்னையிடம் "என் சக்தி உங்களுக்குத் தெரியும். இந்த வீட்டுப் பிரச்னையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்'' என்று வேண்டினேன். 25.06.90இல் பிரார்த்தனை செய்துவிட்டு ஹவுஸிங் யூனிட்டில் உள்ள ஒருவரைக் கேட்டேன். அவர் Y.4 வீடு இருக்கிறது என்றார். உடனே அன்னையை நினைத்துப் போனேன். 4 ஆம் நம்பர் வீட்டைப் பார்த்தேன். வீடு பிடித்திருந்தது. நானே வீட்டார் எதுவும் சொல்லாமல் 27.06.90 இல் 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுப்பதாக வாக்கு கொடுத்தேன். 4 ஆம் நம்பர் ஓனர் மதுரையில் இருப்பதால் அவர்களையும் 27.06.90 இல் வரச் சொல்லி எழுதச் சொன்னேன். வீட்டின் விலை ரூபாய் 80 ஆயிரம்''.

11. "நாங்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள நல்லதோர் இடம்கிடைத்ததும், அதில் அழகான தொரு வீடு கட்டிக்கொள்ள முடிந்ததும், ஸ்ரீஅன்னையின்பேரருளால்தான். வீடு கட்டும் காலத்தில்' எவ்வளவோ பிரச்சனைகள். அவ்வ ளவும்ஸ்ரீஅன்னைக்குப்பிரார்த்தனைசெய்தவுடன் தீர்ந்துபோயின''.

12. "நான் 1987 ஆம் வருஷம் ஜூன் மாதம் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று எழுதினேன்.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும்படி நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதன்படி அன்னை அருளால் 1987 ஆம் வருடம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி எங்கள் திருமணம் சிறப்பாக நடந்தது''.

13. "15 வருடங்களுக்கு முன் ரூ.2600 கடன் பெற்றவர் இப்பொழுது ரூ.1600 திருப்பி அனுப்பி யிருக்கிறார். எல்லாம் அன்னையின் அருள். என்னுடைய சிறு அசைவிலும் அன்னையின் உதவி கிடைக்கிறது''.

******book | by Dr. Radut