Skip to Content

6. தெய்வ தரிசனம் 1

தெய்வம் தரிசனம் கொடுப்பதுண்டு. கனவிலும், தியானத்திலும், நிஷ்டையிலும் தரிசனம் கிடைப்ப துண்டு. கண் திறந்துள்ள பொழுதும் கிடைப்பதுண்டு. சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கே அத்தகு தரிசனம் கிட்டும். எனவே பக்தர்கள் தரிசனத்தை முக்கியமாகக் கருது வார்கள். அனைவரும் போற்றுவதால் தரிசனத்தைக் கற்பனை செய்து கொண்டேயிருந்த காரணத்தால் சூட்சுமக் காட்சியாகத் தெரியும் திறனும் கற்பனைக் குண்டு. அது தரிசனத்தில் சேராது, கற்பனையின் வகையில் சேரும்.

மனம் மௌனமடைந்த நேரத்திலும், நெஞ்சம் நெகிழ்ந்த பொழுதும், தியானம் சிறப்பாகச் சித்தித்த பொழுதும், உயர்ந்த ஆன்மிகச் சூழலை நாம் அணுகிய பொழுதும், நம்பிக்கையோடு அன்னையை நினைவு கொள்ளும் பொழுதும், அன்னை பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் படத்திலிருந்து அவர் திருவுருவம் புறப்பட்டு வெளியில் வருவதைக் கண்டவர்கள் பலர். அன்னையின் படத்தில் அவரது கண்கள் அசைவது தெரிவதுண்டு. பகவான் படத்தில் அவர் வாய் திறந்து ஓம் என்று சொல்வதை ஒருவர் தியானத்தில் கண்டார். ஓம் என்ற சப்தம் வாயிலிருந்து எழும்பொழுது முகம் முழுவதும் அசைவதைக் கண்டார். இவைபோன்ற காட்சிகளைக்

கண்டவர்கள் ஸ்ரீ அரவிந்தருக்கு எழுதி, தாம் கண்டது நிஜமா என்று கேட்டபொழுதெல்லாம் தவறாமல் ஆன்மிக அனுபவம் நிஜமா என்று கேட்க வேண்டிய தில்லை என்று பதில் கூறியிருக்கிறார்.

ஆசிரமத் தியான மண்டபத்திலுள்ள அன்னை படத்தில் பாதங்களைத் தொட்டு வணங்கிய அன்பர் பாதங்களில் சந்தன நறுமணம் வருவதைக் கண்டார். நம்பிக்கையின்றி மற்றவர்களிடம் சொல்லியபொழுது அவர்களுக்கெல்லாம் அதே நறுமணம் வந்ததாகச் சொன்னார்கள். தியானத்தில் ஊதுவத்தி மணம் வருவதுண்டு, தாமரை மலர் மணம் வருவதுண்டு.

பால்கனித் தரிசனத்தில் அன்னையின் முகம் ஸ்ரீ அரவிந்தர் திருமுகமாக மாறுவதைக் கண்டு அன்னையிடம் சொல்லியபொழுது, "என் உடலும், மனத்திலும் ஸ்ரீ அரவிந்தர் நிறைந்திருப்பதால் அப்படித் தெரிகிறது'' என்றார்.

முதல் முறையாக 1970 இல் அன்னையைத் தரிசிக்க வந்த ஒருவர் பொதுத் தரிசனத்தில் அவரைக் கண்டு பிரமித்துப்போய் மறுநாள் அவருடைய படம் ஒன்றை வாங்க வந்தார். அன்னைக்கு அப்பொழுது வயது 93. வந்தவருக்கு அன்னையின் படத்தைக் கொடுத்தவுடன், அதை அவர் வாங்கிக்கொள்ளாமல் எனக்கு மதர் படம் வேண்டும் என்றார். கொடுத்த படத்தில் அன்னையின் வயது 80. அவருக்குக் கோபம் வந்து, "என்னை ஏமாற்றுகிறீர்களா?'' என்று கேட்டார். அங்கிருந்து படம் விற்கும் மற்ற எல்லா இடங்களுக்கும் சென்று அன்னையின் படம் கேட்டு வயதானவரைப் படத்தில்

பார்த்துவிட்டு, "இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. எவரும் உண்மையைச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். நான் நேற்று 25 வயது அன்னையைக் கண்டேன். அவர் படம் கேட்டால் 80 வயதுள்ளவருடைய படத்தைத் தருகிறார்கள்'' என்று விரக்தியாகப் பேசினார்.

உடனே அன்னையின் சிறு வயதுப் படத்தைக் காட்டினார்கள். அவர் அதிகமாக மகிழ்ந்து போய், "இவர்தான் நான் நேற்றுத் தரிசனத்தில் கண்டவர்'' என உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார். சூட்சுமப் பார்வையுள்ளவர் அவர். அவருக்கு அன்னை தரிசனம் தந்த 7, 8 நிமிஷங்களும் இளவயதாகத் தோன்றியிருக் கின்றார்கள்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் அன்று பகவான் உடல் சாதகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பொழுது அவருக்கு எங்கே இடம், எப்பொழுது அடக்கம் செய்யப் போகிறார்கள் என்பதை எவரும் நிர்ணயம் செய்யாதபோது, ஒரு சாதகியின் கனவில் பகவான் சர்வீஸ் மரத்தின்மீது சாய்ந்து உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது. சமாதி அங்கு ஏற்பட்டபின் அவர் அதை அன்னைக்குத் தெரிவித்தார்.

அன்னை பக்தரான எஸ்டேட் முதலாளியுடன் ஓர் அர்த்தமற்ற மனிதன் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தபொழுது அவர் அன்னையை மட்டும் நினைத்துக் கொண்டு பேச்சைக் காதில் வாங்காமலி ருந்தார். சுவரில் ஸ்ரீ அரவிந்தருடைய முகம்

ளிச்சென்று தோன்றியது. உடனே எழுந்து சுவருக்குப் போய் நமஸ்காரம் செய்தார். வந்தவர் பேச்சை நிறுத்தினார். அவருக்கு எதுவும் தெரியவில்லை. முதலாளியின் செயல் அவருக்குப் புரியவில்லை. எழுந்து போய்விட்டார்.

சமாதி மீது அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பொன்னிற உடல் படுத்திருப்பதாக அடிக்கடி பக்தர்கள் காண்பதுண்டு. தியானக் கூடலில் அன்னை ஆயிரம் அடி உயரமாக தியானம் முடியும் வரை வந்து காட்சி கொடுப்பதைக் கண்டவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஒவ்வொரு மாதமும் அக்காட்சியைப் பார்த்தவருண்டு. புஷ்பங்களைச் சேகரம் செய்யப் போன பொழுது மரத்தின் அருகே அன்னை வெண்ணிற உடையுடன் ஓர் அன்பருக்குக் காட்சியளித்தார்.

சமாதி தரிசனத்திற்கு வந்த அன்பர், தரிசனம் முடிந்து வீட்டிற்குப் போய் வீட்டிலுள்ள அன்பரைக் கண்டு ஆனந்தப்படும் பொழுது, அன்பர் அன்னையாக மாறி, பிறகு ஸ்ரீ அரவிந்தராக மாறி, பிறகு ஆனந்த வெள்ளமாக மாறி.. அன்பருக்கு ஆவேசமே வந்துவிட்டது.

பகவான் எழுதிய புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவர் உருவம் பக்கம் முழுவதும் நிறைந்து தெரிகிறது. ஒரு தியான மையத்தில் உள்ள அன்னை ஸ்ரீ அரவிந்தர் படங்களைப் போட்டோ எடுத்தபொழுது, அன்னை படம் ஒளியால் நிரம்பி அன்னையைக் காணவில்லை. சில மாதங்களுக்குப் பின் அதே படத்தில் ஸ்ரீ அரவிந்தர் தோளில் அன்னை அடையாளம் காட்சியாகத் தெரிந்தது.

இல்லாத அடையாளம் தெரிந்ததைக் கண்டு வியந்த அன்பர், அவர் காட்சியில் தெரிந்த தோற்றம் நிஜமாக நிரந்தரமாக ஸ்ரீ அரவிந்தர் தோலில் நிலைத் திருப்பதைத் தாம் கண்டதாகக் கூறினார்.

தம் தியானத்தில் தாயார் உடல்வலி போக வேண்டும் என்று நினைத்தபொழுது அன்னையின் வெண்ணிறமான கை வலியுள்ள இடத்தில் படுவதைக் கண்டார். தம் உருவம் ஒளிமயமாவதையும், பெருத்து வருவதையும் கண்டு வியந்த பொழுது தம் உருவம் வானளாவ வளர்ந்து அந்த ஊர் அளவு பெருகி வந்ததையும் கண்டார். அழைப்பின் பொழுது அனைவரும் அன்னையைக் கண்டனர்.

அன்னை தியானத்தில் வந்து நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்வதை ஒருவர் கண்டார். தியான அறையில் நுழைவதை ஒருவர் கண்டார். ஆசிரமத்தில் அன்னை படம் வாங்க நினைத்தவருக்கு அன்னை காட்சியளித்தார். பிறகு ஆசிரமம் சென்று படம் வாங்கப் போனால் தம் காட்சியில் கண்ட அதே உருவம் தாம் கண்ட முதல் படத்தில் இருந்தது.

இரவெல்லாம் தூங்க முடியாமல் பக்தி மேலீட்டில் எழுந்து உட்கார்ந்திருந்த அன்பர் தம்முடன் அன்னையும் வந்து உட்கார்ந்திருப்பதைக் கண்ணாரக் கண்டார். அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அன்பர்கட்குத் தவறாமல் தரிசனம் தருகின்றனர். கோபுரம்போல் அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் தொடர்ந்து காட்சியளித்த இடத்தில் ஆரோவில் நகரம் பின்னர் நிர்மாணிக்கப்பட்டதை ஒரு பக்தர் அறிந்தார்.

வானவெளியில் மைல் கணக்கான தூரத்தில் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் காட்சி அளிப்பதை (bust only) முகம் அளவில் கண்டவர் பல நாளும் தொடர்ந்து கண்டார். தாம் கண்ட இடம் ஒரு பெரிய அரசுத் திட்டம் (Govt. project) உள்ள இடம் என்று தெரிய வந்தது. அக் காட்சியைப் பல நாள் அவர் கண்டபின் பல ஆண்டுகளாக நஷ்டமான அந்த நிறுவனம், இலாபகரமாக மாறியதை அவர் பின்னால் அறிய வந்தது.

பக்திக்கும், நம்பிக்கைக்கும் பலனாகத் தெய்வ தரிசனம் தவறாது கிடைப்பது அன்னை அன்பர் களுடைய அன்றாட அனுபவம்.

*****book | by Dr. Radut