Skip to Content

Chapter 12 பிங்கிலியும், டார்சியும் லாங்க்பர்ன் செல்லுதல்

அவர்கள் சென்றவுடன், தன்னுடைய உற்சாகத்தை மீண்டும் பெறுவதற்காக, எலிசபெத் வெளியே வந்தாள். சொல்லப்போனால் உற்சாகத்தைக் குறைக்கும் விஷயங்களைப்பற்றி தடங்கலின்றி சிந்திப்பதற்காகவும் வெளியே வந்தாள். டார்சியின் நடத்தை அவளுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் அளித்தது.

அவன் மௌனமாகவும், கடுமையாகவும், அலட்சியமாகவும் இருப்பதற்காகவே வந்திருந்தால், ஏன் அவன் வந்தான்என்றாள்.
 
அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எந்த முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை.
 
அவன் லண்டனில் இருந்த பொழுது என்னுடைய மாமாவிற்கும், அத்தைக்கும் இன்னமும் விரும்பத்தக்கவனாகவும், பிரியமானவனாகவும் இருக்க முடிந்தது. ஏன் என்னிடம் அப்படி இல்லை? என்னிடம் அவனுக்கு பயமிருந்தால் ஏன் இங்கு வந்தான்? என்னைப்பற்றி கவலைப்படாவிட்டால் ஏன் மௌனமாக இருந்தான்? வெறுப்பூட்டும் மனிதனாக இருக்கிறானே! நான் இனிமேல் அவனைப்பற்றி நினைக்க மாட்டேன்.
 
விருந்தினர்கள் வந்ததில் எலிசபெத்திற்கு என்ன சந்தோஷமும், திருப்தியும் கிடைத்ததோ அதைவிட அதிகமாக ஜேனுக்குக் கிடைத்தது. அவனைப்பற்றி நினைக்க வேண்டாமென்று எடுத்த முடிவு, ஜேன் வந்ததில், அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்ததில், அந்த முடிவில் எலிசபெத் உறுதியாக நிலைக்க முடிந்தது.
 
இப்பொழுது இந்த முதல் சந்திப்பு முடிந்து விட்டது. நான் மிகவும் சகஜமாகி விட்டேன். என்னுடைய பலம் எனக்குத் தெரியும். அவனது வருகையால் நான் மீண்டும் சங்கடப்படமாட்டேன். செவ்வாயன்று அவன் இங்கு விருந்திற்கு வருவதுபற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்குப் பிறகு நாங்கள் எல்லோர் முன்னிலையிலும் பொதுவாக நண்பர்களாகவும், தெரிந்தவர்களாகவும் சந்தித்துக் கொள்வோம்.
 
ஆம். அப்படித்தான் நடந்து கொள்வீர்கள், ஜாக்கிரதை ஜேன்என்றாள் எலிசபெத் சிரித்தவாறு.
 
எனதருமை லிசி, நான் காதலில் விழும் அளவிற்கு பலமற்றவள் என்று நினைக்காதே.
 
எப்பொழுதும்போல் அவனுக்கு உன்னிடம் அதிக ஈடுபாடு ஏற்படும்படி நடந்து கொள்ளப் போகிறாய் என்று நினைக்கிறேன்.
 
செவ்வாய் கிழமைவரை அவ்விருநபர்களையும் இவர்கள் சந்திக்கவில்லை. இதற்கிடையில் நற்பண்புகளும், நல்ல மனநிலையும் கொண்ட பிங்கிலியின் அரைமணிநேர வருகை திருமதி. பென்னட்டை மகிழ்ச்சிகரமான திட்டங்களில் ஈடுபட வைத்தது.
 
செவ்வாயன்று லாங்க்பர்னில் பலரும் கூடினர். விளையாட்டு வீரர்களைப்போல் காலம் தவறாமல் சரியான நேரத்திற்கு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவ்விருவரும் வந்து சேர்ந்தனர். அவர்கள் உணவு உண்ணும் அறைக்கு வந்து சேர்ந்தவுடன், பிங்கிலி, அவளுடைய சகோதரிக்கு அருகில் எப்பொழுதும்போல் அமருவானோ என்று எலிசபெத் ஆர்வத்துடன் கவனித்தாள். புத்திசாலியாக இருந்த அவளது தாயாரும் அதே எண்ணத்துடன் இருந்ததினால் தன் அருகில் உட்காரச் சொல்லாமல் மௌனமாக இருந்தாள். அவ்வறையில் நுழைந்தவுடன் அவன் தயங்கினான்போல் இருந்தது. ஆனால் ஜேன், அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள். எங்கு உட்கார வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அவளருகில் அவன் அமர்ந்தான்.
 
எலிசபெத் வெற்றிப் பெருமிதத்துடன் அவனது நண்பனை நோக்கினாள். அவன் அதை அலட்சியமாக ஏற்றுக் கொண்டான். சிரிப்புடனும் அதே சமயத்தில் எச்சரிக்கையுடனும் பிங்கிலியின் கண்கள் டார்சியை நோக்கித் திரும்பியதை அவள் பார்க்காமல் இருந்திருந்தால், அவன் சந்தோஷப்படுவதற்கு நண்பனின் அனுமதி கிடைத்திருப்பதாக நினைத்திருப்பாள்.
 
அவனுடைய நடத்தை ஜேனிடம் அதிக அன்பு இருப்பதைக் காண்பித்தது. ஆனால் அதை வெளிப்படுத்துவதில் சிறிது ஜாக்கிரதையாக இருந்தான். அவனை சுதந்திரமாக செயல்படவிட்டால் இருவரின் சந்தோஷமும் சீக்கிரம் திரும்பிவிடும் என்று எலிசபெத் நினைத்தாள். இதனால் வரும் பின்விளைவுகளை நம்புவதற்கு அவளுக்கு தைரியம் இல்லை என்ற போதிலும் அவனுடைய நடத்தையைப் பார்த்து எலிசபெத்திற்கு உண்மையிலேயே அதிக சந்தோஷம் கிடைத்தது. பிங்கிலி, ஜேன் இவர்களைப்பற்றி மட்டுமே நினைத்து அவள் முழுவதுமாக சந்தோஷமடைந்தாள், ஏனெனில் வேறு எந்த விதத்திலும் அவளுக்கு சந்தோஷம் இல்லை. அந்த மேஜை பிரிக்கும் அளவிற்கு டார்சி அவளிடமிருந்து தொலைவில் இருந்தான். அவளுடைய தாயாருக்கு ஒருபுறம், அவன் அமர்ந்திருந்தான். இதுபோன்ற ஒரு நிலை எவ்வளவு குறைவான மகிழ்ச்சியை இருவருக்கும் அளிக்கும் என்றும், அல்லது இருவருக்கும் எவ்வளவு சாதகமாக இருக்கும் என்றும் அவளுக்குத் தெரியும். அவர்கள் பேசுவது அவளுக்குக் கேட்கவில்லை. ஆனால் எவ்வளவு குறைவாக அவர்கள் பேசுகிறார்கள், எவ்வளவு சம்பிரதாயமாகவும், இயல்பற்றும் அவர்களது நடத்தை இருந்தது என்று அவளால் காண முடிந்தது. அவனுக்கு, அவர்கள் என்ன கடன்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரியாமல் நடந்து கொண்ட அவளது தாயாரின் நடத்தை, எலிசபெத்திற்கு மேலும் மன வருத்தத்தை அளித்தது. அவனுடைய அன்பு தெரியாமலும் இல்லை, அவள் குடும்பத்தினரால் உணரப்படாமலும் இல்லை என்று அவனிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்பதற்கு அவள் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பாள்.
 
தாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பதற்கு அன்று மாலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தாள். அவர்கள் இப்பொழுது வருகை புரிந்தது, ஒரு உபசாரமான சந்திப்பாக மட்டுமே இல்லாமல், பேசுவதற்கும், ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தாள். அவர்கள் வருவதற்குமுன் வரவேற்பறையில் நிலவிய கவலை மற்றும் அமைதியற்ற நிலை, அவளுக்கு சோர்வை அளித்தது. ஓரளவு சுவாரசியம் அற்றதாகவும் இருந்ததால், அது அவளை ஏறக்குறைய மரியாதை அற்றவளாக மாற்றியது. அவளுக்கு சந்தோஷத்தை அளிக்கக் கூடிய அந்த மாலை நேரத்தை, அவர்கள் வரும் அத்தருணத்தை, எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
அவன் என்னிடம் வராவிட்டால், நான் அவனை நிரந்தரமாக விலக்கி விடுவேன்.
 
அவர்கள் வந்தனர். தன்னுடைய நம்பிக்கைகளுக்கு எல்லாம் அவன் பதிலளிப்பான் என்று அவள் நினைத்தாள்; ஆனால் பாவம், மிஸ். பென்னட் தேனீர் தயாரித்துக் கொண்டும், எலிசபெத் காபியை ஊற்றிக் கொண்டும் இருந்த மேஜையைச் சுற்றி எல்லா பெண்களும் கும்பலாக சூழ்ந்து கொண்டிருந்ததால், அவனுக்கு அங்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. அவ்விரு நபர்களும் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, பெண்களில் ஒருத்தி எலிசபெத்தின் அருகில் வந்து தாழ்ந்த குரலில்,
 
அந்த நபர்கள் வந்து நம்மைப் பிரித்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். நமக்கு அவர்கள் யாரும் வேண்டாம், இல்லையா?‘ என்று கூறினாள்.
 
அவ்வறையின் வேறு பகுதிக்கு, டார்சி சென்றுவிட்டிருந்தான். அவனை அவள் பார்வையால் பின்தொடர்ந்தாள். அவன் யாரிடம் பேசினாலும் அவர்களிடம் பொறாமை கொண்டாள். எவருக்கும் காபி தருவதற்கான பொறுமை அவளுக்கு இல்லை. இவ்வளவு அற்பத்தனமாக நடந்துக் கொள்வதற்காக அவள்மீதே அவளுக்குக் கோபம் வந்தது!
 
ஒரு முறை மறுக்கப்பட்ட மனிதன், அவனுடைய காதலைத் தொடர்வான் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு முட்டாளாக நான் எப்படி இருக்க முடியும்? அதே பெண்ணிடம் இரண்டாவது முறை காதலைத் தெரிவிப்பதை எதிர்க்காத ஒரு பலவீனமான மனிதன் இருக்க முடியுமா? இது போன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கும் ஒருவரது உணர்ச்சிகளுக்கு பெருத்த அவமானமும், வெறுப்பும் உண்டாகும்!
 
அவனுடைய காப்பி கோப்பையை அவனே திரும்பக் கொண்டு வந்தது அவளுக்கு சிறிது புத்துயிர் அளித்தது. இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு,
 
 ‘உன் சகோதரி இன்னும் பிம்பெர்லியில் இருக்கிறாளாஎன்று கேட்டாள்.
 
ஆம். கிருஸ்துமஸ்வரை அங்கிருப்பாள்.
 
தனியாகவா? அவளுடைய நண்பர்கள் அவளை விட்டுச் சென்று விட்டனரா?‘
 
திருமதி. ஆன்ஸ்லி அவளுடன் இருக்கிறாள். மற்றவர்கள் ஸ்கேர்பரோ சென்று மூன்று வாரங்களாகி விட்டன.
 
அவளுக்கு வேறொன்றும் பேசத் தோன்றவில்லை. ஆனால் அவன், அவளுடன் பேச விரும்பியிருந்தால், அவன் பேசியிருக்கலாம். மௌனமாக, சில நிமிடங்கள் அவள் அருகில் நின்றான். இறுதியாக எலிசபெத்திடம், அங்கிருந்த ஒரு இளம்பெண், தாழ்ந்த குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தவுடன் அவன் அங்கிருந்து அகன்றான்.
 
தேனீர் கோப்பைகள் அகற்றப்பட்டு சீட்டாடும் மேஜை போடப்பட்டதும், பெண்கள் அனைவரும் எழுந்தார்கள். அவளுடன் அவன் சேர்ந்துக் கொள்வான் என்று எலிசபெத் நம்பிய பொழுது அவன், அவள் தாயாருடன் சீட்டு விளையாட மற்றவர்களுடன் சேர்ந்து அமர்ந்தது, அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இப்பொழுது மகிழ்ச்சியின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் அவள் இழந்தாள். மாலை முழுவதும், அவர்கள் வெவ்வேறு மேஜையில் இருக்க வேண்டி வந்தது. அவளுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. ஆனால் அடிக்கடி அவன் கண்கள் அவள் பக்கம் திரும்பியவாறு இருந்ததால், அவனால் அவளைப்போல் சரியாக சீட்டாட முடியவில்லை.
 
அவர்கள் இருவரையும் இரவு சாப்பாட்டிற்குத் தங்க வைக்க திருமதி. பென்னட் நினைத்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களது வண்டி முதலில் வந்ததால், அவர்களைத் தங்க வைக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை.
 
அவர்கள் தனியே விடப்பட்டவுடன், திருமதி. பென்னட் நல்லது பெண்களே இன்றைய நிகழ்வுகளைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? எல்லாமே அசாதாரணமாக நன்கு நடைபெற்றது என நான் நினைக்கிறேன், இது நிச்சயம். இரவு சாப்பாடு மிக நன்றாக அமைந்தது. மான் இறைச்சி மிக நன்றாக வறுக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற கொழுத்த இறைச்சியை யாரும் பார்த்ததில்லை என்று எல்லோரும் கூறினார்கள். லூகாஸில், சென்ற வாரம் நாம் அருந்திய சூப்பைவிட இன்று ஐம்பது மடங்கு நன்றாக இருந்தது. குயிலின் இறைச்சி நன்றாக சமைக்கப்பட்டிருந்ததாக டார்சியே கூறினான். அவனிடம் இரண்டு அல்லது மூன்று பிரான்ஸ் நாட்டு சமையல்காரர்களாவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனதருமை ஜேன், இத்தனை அழகாக நான் இதுவரை உன்னைப் பார்த்ததில்லை. நான் இதைப்பற்றிக் கேட்ட பொழுது, திருமதி. லாங்கும் இதையே கூறினாள். அவள் வேறு என்ன கூறினாள் தெரியுமா? ‘திருமதி. பென்னட், இறுதியாக அவள் நெதர்பீல்டிற்கு வந்து விடுவாள்என்றாள். திருமதி. லாங்க் மிகவும் நல்ல பெண்மணி என்று நினைக்கிறேன். அவளுடைய மருமகள்கள், மரியாதையான நடத்தை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் அழகு என்பதே இல்லை. எனக்கு அவர்களை மிகவும் பிடித்து விட்டது.
 
திருமதி. பென்னட், மிகவும் நல்ல மனநிலையில் இருந்தாள். ஜேனிடம், பிங்கிலி பழகிய விதத்தைப் பார்த்து, அவன், அவளை மணப்பான் என உறுதியாக நம்பினாள். இதனால் அவளது குடும்பத்திற்கு கிடைக்கக் கூடிய அனுகூலத்தை நினைத்து மகிழும் பொழுது, மறுநாள் அவன் வந்து திருமணப் பேச்சை எடுக்காததால் மிகவும் ஏமாற்றம் அடைந்தாள்.
 
எலிசபெத்திடம், மிஸ். பென்னட் இன்று மிகவும் நல்ல நாளாக இருந்தது. சிறப்பான விருந்தினர்களே வந்திருந்தனர். ஒருவர் மற்றொருவருடன் பொருந்தியும் இருந்தனர். நாங்கள் மீண்டும் அடிக்கடி சந்திப்போம் என்று நம்புகிறேன்என்றாள்.
 
எலிசபெத் இதைக் கேட்டு சிரித்தாள்.
 
லிசி, நீ அப்படி சிரிக்காதே. நீ என்னை சந்தேகிக்காதே. அது என்னைப் புண்படுத்துகிறது. நான் இப்பொழுது, ஏற்றுக் கொள்ளக் கூடியவனும், புத்திசாலியாகவும் இருக்கும் ஒரு இளைஞனின் பேச்சாக, அவனுடைய பேச்சை எடுத்துக் கொள்ள கற்றுக் கொண்டு விட்டேன், அதற்குமேல் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து அவனுக்கு வேறு எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று தெரிந்து கொண்டேன். அதனால் எனக்கு அவன் இப்பொழுது நடந்து கொள்வது பூரண திருப்தியை அளிக்கிறது. என்ன ஒரு விஷயம் என்றால், மற்ற எவரையும்விட மிக இனிமையானவனாகவும், மற்றவர்களிடம் பிரியம் காட்ட வேண்டும் என்ற ஆசையும் படைத்தவனுமாக இருக்கிறான்.
 
அதற்கு அவளது சகோதரி நீ மிகவும் கொடுமையானவள். ஒவ்வொரு வினாடியும், என்னை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறாய், ஆனால் சிரிக்கக் கூடாது என்று தடுக்கவும் செய்கிறாய்என்றாள்.
 
ஒரு சில சமயங்களில் மற்றவர்களை நம்புவது என்பது எவ்வளவு கஷ்டமாக உள்ளது.
 
ஆமாம், ஒரு சில சமயங்களில் நம்புவது என்பதே முடியாத விஷயமாக இருக்கிறது.
 
நான் ஒத்துக் கொள்வதைவிட அதிகமாக உணருகிறேன் என்று என்னை நம்ப வைக்க ஏன் நீ நினைக்கிறாய்.
 
இந்தக் கேள்விக்கு எனக்கு பதிலளிக்கத் தெரியாது. அவசியமில்லாத விஷயங்களைப்பற்றித்தான் நமக்குக் கற்றுக் கொடுக்க முடியும் எனும் பொழுது அறிவுரை கொடுக்க நாம் எல்லோரும் பிரியப்படுவோம். நீ அவனை காதலிப்பதை ஒத்துக் கொள்ளாமல் இருப்பதில் உறுதியாக இருந்தால், அந்தரங்கமாக எதுவும் என்னிடம் சொல்லாதே.
 



book | by Dr. Radut