Skip to Content

Chapter 17 ஜேனிடம், எலிசபெத் வெளிப்படையாகப் பேசுதல்

 

என்ன நடந்தது என்பதை இனியும் ஜேனிடம் சொல்லாமல் இருக்க எலிசபெத் பொறுமையிழந்தவளாக, தன்னுடைய சகோதரி சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டாம் எனத் தீர்மானித்து, அவளை ஆச்சரியப்படுத்தும் வகையில், மறுநாள் காலை தனக்கும், டார்சிக்கும் இடையே நடந்த முக்கியமானவற்றை மட்டும் கூறினாள்.
 
இதனைக் கேட்டு மிஸ். பென்னட்டிற்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சகோதரியின்மேல் இருக்கும் ஒருதலைபட்சமான அன்பு அவளது ஆச்சரியத்தைக் குறைத்தது. மீதியிருந்த ஆச்சரியமும் வேறுவித உணர்ச்சிகளால் மறைந்தே போனது. அவளை ஏற்றுக் கொள்ளும் வகையில் டார்சி தன்னுடைய உணர்ச்சிகளை வெளிகாட்டாதது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது; இதற்கும் மேலாக தனது சகோதரியின் நிராகரிப்பால் அவனுடைய வருத்தத்தை நினைத்து வேதனையுற்றாள்.
 
உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டி கேட்டதில் அவனுக்கு வெற்றி கிடைக்கும் என அவன் தீர்மானமாக நம்பியது சரியில்லை. அவ்வாறு தோற்றமளித்ததும் தவறு. இதனால் அவனுடைய ஏமாற்றம் மேலும் எவ்வளவு அதிகரித்திருக்கும் என்று நினைத்துப் பார்என்றாள் ஜேன்.
 
ஆம் உண்மையிலேயே, நான் அவனுக்காக மிகவும் வருந்துகிறேன். ஆனால் அவனுள் இருந்த வேறு சில உணர்வுகள், அவன்மேல் எனக்கு இருக்கும் மரியாதையை விரைவில் நீக்கிவிடும் போலிருக்கிறது. நான் அவனை மறுத்ததற்காக, நீ என்னைக் குற்றம் சாட்டுகிறாயா?‘
 
உன்னைக் குறை சொல்லப் போகிறேனா! ஓ, இல்லை.
 
ஆனால் விக்காமிற்கு ஆதரவாகப் பேசியதற்கு நீ என்னை குற்றம் சாட்டுகிறாயே.
 
இல்லை--நீ கூறியதில் தவறொன்றும் இல்லை.
 
மறுநாள் என்ன நடந்தது என்று நான் சொல்லிய பிறகு, உனக்குத் தெரியும் நான் செய்தது தவறு என்று.
 
பிறகு அவள் அக்கடிதத்தைப்பற்றி பேச ஆரம்பித்தாள். ஜார்ஜ்விக்காம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவள் கூற ஆரம்பித்தாள். இது ஜேனுக்கு விழுந்த பலமான அடி. ஒரே நபரிடம் இருக்கும் இவ்வளவு தீய குணங்கள் மனித குலத்தில் இல்லை என்று நினைத்து ஜேன் நிம்மதியாக வாழ்ந்து விட்டு போயிருப்பாள். டார்சி நியாயத்தை நிரூபணம் செய்தது, அவளுடைய உணர்வுகளுக்குப் பெருத்த நிம்மதியை அளித்தாலும், இந்த உண்மையை கண்டுபிடித்தது அவளுக்கு ஆறுதலை அளிக்கவில்லை. ஏதாவது தவறு நேர்ந்திருக்கலாம் என்று நிரூபிப்பதற்கே அவள் ஆவலுடன் முயற்சி எடுத்தாள். மேலும் ஒருவரை பாதிக்காமல் மற்றொருவரை குற்றமற்றவர் என்று நிரூபிக்க முற்பட்டாள்.
 
இது முடியாத காரியம். இருவரையுமே நல்லவர் என்று சொல்ல உன்னால் முடியாது. உன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம், ஆனால் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுத்து நீ திருப்தியடைய வேண்டும். இருவரையும் சேர்த்து வைத்துப் பார்க்கும் பொழுது தோன்றும் நல்ல குணத்தில் ஒருவன் மட்டுமே தேறுவான். ஆனால் இப்பொழுது அந்த அபிப்பிராயமோ ஒருவனிடமிருந்து--மற்றொருவனுக்கு மாறிக் கொண்டே வருகிறது. நான் இப்பொழுது டார்சி நல்லவன் என்று நம்புகிறேன். ஆனால் நீ உன் விருப்பப்படி செய்யலாம்என்று எலிசபெத் கூறினாள்.
 
ஜேனிடமிருந்து ஒரு புன்முறுவல் வருவதற்கு சிறிது நேரம் ஆயிற்று.
 
இதைவிட அதிகமாக எப்பொழுது நான் அதிர்ச்சி அடைந்திருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. விக்காம் இவ்வளவு மோசமானவனா! நம்பவே முடியவில்லையே. பாவம் திரு. டார்சி! எனதருமை லிசி, அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். எவ்வளவு ஏமாற்றம்! நீ அவனைப்பற்றி தவறாக நினைக்கிறாய் என்பது அவனுக்குத் தெரிய வந்ததும்! தன்னுடைய சகோதரியைபற்றி இப்படிப்பட்ட சம்பவத்தை உன்னிடம் கூறியதும்! இது உண்மையிலேயே மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நீயும் இவ்வாறே நினைப்பாய் என்று நம்புகிறேன்என்றாள் ஜேன்.
 
ஓ! இல்லை. நீ அவனைப்பற்றி வருத்தப்படுவதையும், பரிதாப்படுவதையும் பார்க்க பார்க்க, என்னிடம் இருக்கும் அந்த உணர்வுகள் எல்லாம் என்னைவிட்டு நீங்குகின்றன. எனக்குத் தெரியும், நீ அவனுக்காக நியாயம் பேசுவாய் என்று. அதனால் என்னுடைய அக்கறையின்மையும், அலட்சியமும் ஒவ்வொரு வினாடியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. உன்னுடைய தாராள மனப்பான்மை எனக்கு அவன் மேலுள்ள பரிதாபத்தைக் குறைக்கிறது. இனி இன்னும் அதிக நேரம் புலம்பினாய் என்றால், என்னுடைய மனம் இறகுபோல் லேசாகிவிடும்.
 
பாவம். விக்காம்! அவன் முகத்தைப் பார்த்தால் நல்லவன்போல் தோன்றுகிறது! வெளிப்படையாகவும் இருக்கிறான், நடத்தையில் நற்பண்புகள் உடையவன் போலவும் இருக்கிறான்.
 
அந்த இரு இளம் நபர்களின் கல்வியின் நிர்வாகத்தில் ஏதோ பெரிய தவறு ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கு நல்லது எல்லாம் கிடைத்திருக்கிறது, மற்றொருவருக்கு அதனுடைய தோற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது.
 
நீ நினைத்திருந்ததைப்போல், டார்சி தோற்றத்திலும் நல்லவன்போல் தெரியவில்லை என்று நான் என்றுமே நினைத்ததில்லை.
 
காரணம் இல்லாமலேயே அவனை கட்டோடு வெறுத்ததற்கு நான் ஒரு அசாதாரண புத்திசாலி என்றும் நினைத்தேன். ஒருவருடைய புத்திசாலித்தனத்துக்கு அது ஒரு பெரிய தூண்டுதலாக இருக்கும். அதுபோன்ற ஒரு வெறுப்புக்கு, நான் எவ்வளவு நகைச்சுவையாக பேச முடியும் என்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நியாயமாக எதுவும் சொல்லாமல், ஒருவர் எப்பொழுதும் அவதூறாகப் பேசிக் கொண்டே இருக்கலாம், ஆனால் ஹாஸ்யமாக எதுவும் தட்டுப்படாமல் ஒருவர், ஒரு நபரை பார்த்து எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்க முடியாது.
 
லிசி, நீ முதலில் அந்த கடிதத்தைப் படித்த பொழுது, இப்பொழுது நினைப்பதுபோல் அப்பொழுது நினைத்திருக்க முடியாது என்பது நிச்சயம்.
 
ஆம், நிச்சயமாக முடியவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, வருத்தமாக இருந்தது என்றுகூட சொல்லலாம். நான் நினைத்ததைப் பகிர்ந்துக் கொள்ள அங்கு யாரும் இல்லை. நான் நினைத்திருந்ததைப்போல் நான் மிகவும் பலஹீனமானவள் இல்லை, பயனற்றவளாக இல்லை, அர்த்தமற்றவளாக இல்லை என்று சொல்லி ஆறுதல் சொல்ல ஜேன் அங்கு இல்லை! ஓ, நீ அங்கு இருக்க வேண்டும் என்று நான் எவ்வளவு விரும்பினேன் தெரியுமா?‘
 
விக்காமைப்பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டது, அவனைப்பற்றி டார்சியிடம் பேசியது, எவ்வளவு துரதிர்ஷ்டம், ஏனெனில் அவையாவும் இப்பொழுது முற்றிலும் அவசியமில்லை என்று ஆகிவிட்டது.
 
நிச்சயமாக. ஆனால் கடுமையாகப் பேசுவது என்பது நான் வளர்த்துவிட்ட என்னுடைய தவறான அபிப்பிராயத்தின் பின்விளைவுதான். ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு உன்னுடைய அறிவுரை தேவை. நமக்குத் தெரிந்தவர்களிடம் விக்காமின் நடத்தையைப்பற்றி சொல்ல வேண்டுமா, வேண்டாமா.
 
மிஸ். பென்னட் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு பதிலளித்தாள், ‘இவ்வளவு கடுமையாக அவனை காட்டிக் கொடுக்க அவசியம் இல்லை. உன்னுடைய சொந்த அபிப்பிராயம் என்ன?‘
 
காட்டிக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். டார்சி, தான் கூறியதை வெளியில் எல்லோருக்கும் சொல்வதற்கு என்னை நியமிக்கவில்லை, மாறாக தங்கையைப்பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும், எனக்குள்ளேயே வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டான், அவனுடைய மற்ற நடத்தையைப்பற்றி எல்லோரிடமும் உண்மையை சொல்ல முயற்சி செய்தால் யார் என்னை நம்புவார்கள்? டார்சியைப்பற்றி எல்லோரும் அவ்வளவு கடுமையாக நினைத்துக் கொண்டிருப்பதால் அவனை நல்லவனாக படம் பிடித்துக் காண்பிக்க முயன்றால், அது மெரிடனில் உள்ள நல்லவர்கள் பாதி பேருக்கு பலத்த அடியாக இருக்கும். நான் அதற்கு தயாராக இல்லை. விக்காம் விரைவில் இங்கிருந்து சென்று விடுவான். அவன் யாராக இருந்தால் என்ன, இங்குள்ள ஒருவருக்கும் அது ஒரு விஷயமாகவே இருக்காது. என்றைக்கேனும் ஒருநாள் தெரிய வந்தால், இது முன்பே தெரியாமல் போனதற்கு, நம்முடைய முட்டாள்தனத்தைக் கண்டு நாம் ஒருவேளை எள்ளி நகையாடலாம். தற்பொழுது அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
 
நீ சொல்வது சரி. அவனுடைய தவறுகளை வெளியில் சொல்வது அவனுக்கு நிரந்தரமாகக் கெடுதலை விளைவிக்கும். அவன் செய்த தவறுகளுக்கு ஒருவேளை அவன் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பான், மீண்டும் நல்லவனாக மாற முயற்சி எடுக்கலாம். நாம் அவனை கஷ்டப்படுத்தக் கூடாது.
 
எலிசபெத் மனதில் இருந்த குழப்பம் இந்த உரையாடல் மூலம் சற்றே தணிந்தது. இரண்டு வாரங்களாக அவள் மனதில் பாரமாக அழுத்திக் கொண்டிருந்த இரண்டு இரகசியங்களை, தன் மனதிலிருந்து நீக்கி விட்டாள். எப்பொழுதெல்லாம் அவள் மீண்டும் இவ்விரண்டினைப்பற்றியும் பேச வேண்டும் என்று விரும்புகிறாளோ, அப்பொழுதெல்லாம் ஜேன் கேட்பதற்கு தயாராக இருப்பாள் என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும் விவேகம் காரணமாக, வெளியில் சொல்ல முடியாத ஒன்று இன்னமும் பின்னால் நிழலாடிக் கொண்டிருந்தது. டார்சியினுடைய கடிதத்தின் மறுபாதியை சொல்வதற்கு அவளுக்கு தைரியம் வரவில்லை, அவனுடைய நண்பனால் அவள் எந்த அளவிற்கு உண்மையாக மதிக்கப்பட்டாள் என்பதைப்பற்றியும் கூற முடியவில்லை. இந்த விஷயத்தில் வேறு எவரும் பங்கு பெற முடியாது. சம்பந்தப்பட்ட நபர்கள் அதை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இப்புதிரின் கடைசி பகுதியை எலிசபெத் கூறுவது நியாயம் என்று தோன்றும். பிறகு இந்த நடக்க முடியாத விஷயம் ஒருவேளை நடந்தால், பிங்கிலி இன்னமுமே ஏற்ற முறையில் என்ன கூறுவானோ அதையேதான் நானும் கூற முடியும். அதனுடைய மதிப்பு முழுவதும் இழக்கும்வரை எனக்கு அதைப்பற்றி சொல்லும் சுதந்திரம் இல்லைஎன்றாள்.
 
இப்பொழுது அவளால், வீட்டில் சாவகாசமாக அமர்ந்து தன்னுடைய சகோதரியின் உண்மையான மனநிலையை ஆராய முடிந்தது. ஜேன் மகிழ்ச்சியுடன் காணப்படவில்லை. அவள் இப்பொழுதும், பிங்கிலி மீது ஒரு கனிவான பாசம் கொண்டிருந்தாள். இதற்கு முன்பு காதலைப்பற்றி அவள் நினைத்ததுகூட இல்லை, அவளுடைய முதல் காதலின் எல்லா உணர்வுகளும் அவளிடம் இருந்தன. அவளுடைய வயது மற்றும் அவளுடைய சுபாவம் காரணமாக சாதாரணமாக முதல் காதலில் இருக்கும் உறுதியைவிட அதிகமாக அவளிடம் இருந்தது. அவனுடைய ஞாபகங்களைப் போற்றி பாதுகாத்தாள். மற்ற ஆண்களைவிட அவனை அதிகம் விரும்பினாள், தன்னுடைய நண்பர்களின் உணர்ச்சிகளுக்கு செலுத்திய கவனம் அவளுடைய வருத்தத்திற்கு இடம் கொடுப்பதை தவிர்த்தது, இல்லையெனில் அவை அவளுடைய உடல் நலத்திற்கும், மன நிம்மதிக்கும் கேடு விளைவித்திருக்கும்.
 
என்ன லிசி, ஜேனுடைய இந்த துயரமான சம்பவத்தைப்பற்றி உன்னுடைய கருத்து என்ன? என்னுடைய பக்கத்திலிருந்து இனி இதைப்பற்றி நான் மீண்டும் யாரிடமும் பேச மாட்டேன் என முடிவெடுத்திருக்கிறேன். என்னுடைய சகோதரியான பிலிப்ஸிடமும் இதையேதான் கூறினேன். ஜேன், அவனை லண்டனில் பார்த்தாளா என்பதுபற்றி எனக்கு கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஒரு தகுதியில்லாத இளைஞன்--இனி அவனை அவள் அடைய முடியும் என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன். கோடையில் அவன் மீண்டும் நெதர்பீல்டிற்கு வரும் பேச்சே இல்லை. இதுபற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ள அனைவரையும் விசாரித்து விட்டேன்என்று திருமதி. பென்னட் ஒரு நாள் பேசும் பொழுது கூறினாள்.
 
அவன் இனிமேலும் நெதர்பீல்டில் வசிப்பான் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
 
ஓ! சரி. அவன் விரும்பியபடியே செய்யட்டும். அவன் இங்கு வர வேண்டும் என்று யாரும் விருப்பப்படவில்லை. அவன் என்னுடைய மகளை மிகவும் மோசமாக உபயோகப்படுத்தியிருக்கிறான் என்று நான் எப்பொழுதுமே கூறுவேன். நான் அவளாக இருந்திருந்தால் இதனை பொறுத்துக் கொண்டிருக்கவே மாட்டேன். எனக்கு என்ன ஒரு ஆறுதல் என்றால், ஜேன் மனமுடைந்து இறந்து போவாள், அப்பொழுது அவன், தான் செய்ததை நினைத்து வருந்துவான்.
 
இந்த மாதிரியான ஒரு எதிர்ப்பார்ப்பினால், எலிசபெத்திற்கு எந்த விதத்திலும் ஆறுதல் கிடைக்காது என்பதால், அவள் பதிலேதும் அளிக்கவில்லை.
 
சரி லிசி,‘ என்று மீண்டும் விரைவில் தொடர்ந்த அவளது தாயார் காலின்ஸ் குடும்பத்தினர் சௌகரியமாக இருக்கிறார்கள், இல்லையா? நன்று, நன்று, அது நீடிக்கும் என்று நம்புகிறேன். அவர்களுடைய விருந்தோம்பல் எவ்வாறு உள்ளது? சார்லெட் நிர்வாகம் செய்வதில் திறமைசாலி என என்னால் கூற முடியும். அவள் தாயுடைய புத்தி கூர்மையில் பாதியேனும் இருந்தால் அவள் வேண்டும் அளவு சேமிப்பாள். அவர்கள் ஊதாரித்தனமாக செலவழிக்க மாட்டார்கள் என எனக்குத் தெரியும்என்றாள்.
 
இல்லை! எந்த ஊதாரித்தனமும் இல்லை.
 
திறமையாக நிர்வாகம் செய்வாள் என்று நான் உறுதியாக கூற முடியும். ஆம், அவர்கள் வரவுக்குமீறி செலவு செய்யாமல் இருப்பதில் கவனமாக இருப்பார்கள். பணத்திற்காக என்றுமே கஷ்டப்படமாட்டார்கள். ஆதலால் அது அவர்களுக்கு நல்லது செய்யட்டும். உங்களது தந்தையின் மறைவுக்குப் பிறகு லாங்க்பர்ன் அவர்களுக்கு கிடைப்பதுபற்றி அடிக்கடி பேசுவார்கள் என்று நினைக்கிறேன். எப்பொழுது அது நடக்கப் போகிறதோ உடனே அது அவர்களுக்கு சொந்தமாகிவிடும் என்று நினைக்கிறார்கள்.
 
அது என் முன்னால் பேசப்பட முடியாத விஷயம்.
 
ஆமாம், அப்படி பேசியிருந்தால் அது விநோதமாக இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி இதைப்பற்றி பேசுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. சட்டப்படி தங்களுக்கு சொந்தமில்லாத எஸ்டேட்டை மிக சௌகரியமாகப் பெற்றுக் கொள்கிறார்கள், என்றால் நல்லது, அப்படியே இருக்கட்டும். இம்மாதிரி ஒரு நிபந்தனையின்பேரில் வருகிற சொத்தை ஏற்றுக் கொள்வதற்கு நான் வெட்கப்படுவேன்.
 
--------------

 



book | by Dr. Radut