Skip to Content

Volume I Chapter 09: Mrs. Bennet Visits Netherfield

Chapter 9: Mrs. Bennet Visits Netherfield

திருமதி. பென்னட்டின் நெதர்பீல்ட் வருகை

Summary: Mrs. Bennet, Kitty, and Lydia visit Jane –– and it is generally decided that she should not yet return home as she is not quite well. Lydia mentions to Bingley that he had made mention of a ball being held at his own estate, to which he agrees. Mrs. Bennet gets into an argument with Darcy before she leaves with her younger daughters. Bingley sisters once again laugh at the Benent family. Darcy, however does not join in.
 
சுருக்கம்: மற்ற பென்னட் குடும்பத்தினர், ஜேனைப் பார்க்க வருகின்றனர் - திருமதி. பென்னட், கிட்டி , லிடியா - ஜேன் முற்றிலும் குணமாகாததால் அவள் வீடு திரும்ப வேண்டாம் என தீர்மானிக்கப்படுகிறது. லிடியா தன் பங்கிற்கு நன்றாக நடந்து கொள்கிறாள். தன்னுடைய சொந்த எஸ்டேட்டில் நடன ஏற்பாடு செய்வதாக கூறியிருந்ததை பிங்கிலிக்கு ஞாபகப்படுத்துகிறாள் , ஜேன் குணமடைந்தவுடன் ஏற்பாடு செய்வதாக அவனும் ஒத்துக் கொள்கிறான். நகர வாழ்க்கைக்கும், கிராமப்புற வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தைப்பற்றி திருமதி. பென்னட், பிங்கிலியின் சகோதரிகளுடன் சர்ச்சை செய்கிறாள், இதையொட்டி அச்சகோதரிகள் மீண்டும் பென்னட் குடும்பத்தைப்பற்றி பேச ஆரம்பிக்கின்றனர். ஆனால் எலிசபெத்தை கேலி செய்வதில், டார்சி கலந்து கொள்வதில்லை.
 
1
Elizabeth passed the chief of the night in her sister's room, and in the morning had the pleasure of being able to send a tolerable answer to the enquiries which she very early received from Mr. Bingley by a housemaid, and some time afterwards from the two elegant ladies who waited on his sisters. In spite of his amendment, however, she requested to have a note sent to Longbourn, desiring her mother to visit Jane, and form her own judgment of her situation. The note was immediately dispatched, and its contents as quickly complied with. Mrs. Bennet, accompanied by her two youngest girls, reached Netherfield soon after the family breakfast.
எலிசபெத் இரவு முழுவதும் ஜேன் அறையில் தங்கிக் கொண்டாள். காலையில் எழுந்தவுடன் பணிப்பெண்கள் மூலம் பிங்கிலியும், அவனது சகோதரிகளும் ஜேன் உடல் நிலையைபற்றி கேட்டனுப்பிய கேள்விகளுக்கு அவளால் சாதகமான பதிலை அளிக்க முடிந்தது. தன் தாயார் நேரில் வந்து ஜேனைப் பார்த்து அவள் உடல் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டி லாங்க்பர்னுக்கு ஒரு கடிதம் அனுப்ப விருப்பப்பட்டாள். அதன்படி உடனே கடிதம் அனுப்பப்பட்டது. திருமதி. பென்னட் தன் கடைசி இரு பெண்களுடன் நெதர்பீல்டிற்கு, காலை சிற்றுண்டி முடித்துக் கொண்டு, வந்து சேர்ந்தாள்.
  1. Jane subconsciously is the mother in the rich sense of the word
    ஜேன் ஆழ் மனம் அப்படியே Mrs.பென்னட் போன்றது.
  2. Her illness is her desire to stay at Netherfield
    நெதர்பீல்டில் தங்கும் ஆசை அவளுக்கு ஜூரமாயிற்று.
  3. Attention to a sick person can increase the sickness or cure it. It depends on the quality of interest
    கவனம் நோயைக் குணப்படுத்தும், அதிகரிக்கும். கவனத்தின் தன்மையைப் பொருத்தது.
  4. Love is abiding interest, though interest by itself is not love
    காதல் எழுந்தால் அக்கறையுண்டு. அக்கறை காதலாகாது.
  5. Interest is impatient
    அக்கறை அவசரமாகும்.
  6. Polite manners are formal and are not dogged by any interest
    மரியாதையான பழக்கம் முறை. அதற்கு அக்கறை தேவையில்லை.
  7. Age has experience
    வயதானால் அனுபவம் வரும்.
  8. Experience is efficiency
    அனுபவம் திறமை தரும்.
  9. The adult authority prevails. Experience is with age
    வயதானால் அதிகாரம் உண்டு. அனுபவம் வயதிற்குண்டு.
  10. Fever in those days could be fatal. So, she sends for her mother whose visit was fatal to Jane’s chances
  11. Mrs. Bennet is the most active character in the story, though her character is vulgar
  12. Mrs. Bennet was so anxious to bring her daughters there, not knowing the result
  13. Undeveloped people seek company in action
    மனவளர்ச்சியற்றவர்க்கு வேலை செய்ய பேச்சுத் துணை தேவை.
  14. Developed personalities rely exclusively on themselves
    மனத்திட்பம் உள்ளவர் எவரையும் நம்பியிருக்க மாட்டார்கள்.
2
Had she found Jane in any apparent danger, Mrs. Bennet would have been very miserable; but being satisfied on seeing her that her illness was not alarming, she had no wish of her recovering immediately, as her restoration to health would probably remove her from Netherfield. She would not listen, therefore, to her daughter's proposal of being carried home; neither did the apothecary, who arrived about the same time, think it at all advisable. After sitting a little while with Jane, on Miss Bingley's appearance and invitation, the mother and three daughters all attended her into the breakfast-parlour. Bingley met them with hopes that Mrs. Bennet had not found Miss Bennet worse than she expected.
ஜேனின் உடல்நிலை உண்மையிலேயே மோசமாக இருந்திருந்தால், திருமதி. பென்னட் கவலைப்பட்டிருப்பாள். ஆனால் பயப்படும் அளவிற்கு இல்லை என்று கண்டவுடன் , நிதானமாக குணம் அடைந்தால் போதும் என விரும்பினாள். அப்பொழுதுதான் இன்னும் சில நாட்கள் அங்கேயே தங்கலாம் , இல்லையெனில் உடனே கிளம்ப நேரிடும் என நினைத்தாள். வீட்டிற்கு கிளம்பலாம் என்று ஜேன் சொன்னதை திருமதி. பென்னட் கேட்க மறுத்தாள். அச்சமயம் அங்கு வந்த டாக்டரும் அதற்கு சம்மதிக்கவில்லை. சிறிது நேரம் ஜேனுடன் இருந்தனர். பிறகு மிஸ். பிங்கிலி, அவர்களை உணவு உண்ணும் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கிருந்த பிங்கிலி, திருமதி. பென்னட்டை பார்த்து, “ எதிர்பார்த்ததைவிட நன்றாக இருக்கிறாளா ஜேன்?” என விசாரித்தான்.
  1. A ploy often works immediately at the cost of lasting good
    யுக்தி உடனே பலிக்கும். முடிவான பலனைக் கெடுக்கும்.
  2. Abundant energy can never remain unemployed
    ஏராளமான தெம்பிருந்தால் சும்மாயிருக்க முடியாது.
  3. Mrs. Bennet is crude in her motives of action
  4. Jane was sensitive. Mrs. Bennet was anything but sensitive
  5. Illness in youth is physical but is mostly overcome by the excess physical energy and endless vital optimism
    இளம் வயதில் நோய் உடலுக்குரியது. அபரிமிதமான தெம்பும், ஆர்வம் நிறைந்த எதிர்காலமும் அதைக் குணப்படுத்தும்.
  6. Adult illness is the vital overcoming the physical
    வயது வந்தபின் வரும் வியாதியை உள்ளத்து உரம் குணப்படுத்தும்.
  7. Illness in old age is physical vitality giving way
    வயோதிகத்தில் உடல் தளர்ந்து உள்ளம் உடைவதால் வியாதி வரும்.
  8. Energy, particularly efficiency, must be fully exhausting itself at all times
    தெம்பும் திறமையும் முழுவதும் செலவிடப்பட வேண்டும்.
  9. Man moves by his subconscious ideas
    மனித வாழ்வை நடத்துவது ஆழ்மனம்.
  10. Bingley is candid. Mrs. Bennet is full of intrigues
    பிங்லி உண்மையாகப் பேசுகிறான். Mrs. பென்னட் யுக்திகளை நினைக்கிறார்.
  11. In a given atmosphere everyone tends to think according to the leader
    தலைவர் சொல்படி நடக்க அனைவரும் விரும்புவது இயல்பு.
  12. Politeness to uncultured folks explodes into absurd vulgarities
    அநாகரீகமானவரிடம் உள்ள மரியாதை ஆபாசத்தில் முடியும்.
3
"Indeed I have, sir," was her answer. "She is a great deal too ill to be moved. Mr. Jones says we must not think of moving her. We must trespass a little longer on your kindness."
“எதிர்பார்த்ததைவிட மோசமாக இருக்கிறாள்”என்ற திருமதி. பென்னட் “ அழைத்துச் செல்லும் நிலையில் இல்லை அவள். திரு. ஜோன்ஸும் அவளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்கிறார். உங்களை இன்னும் சில நாட்கள் தொந்தரவு செய்ய வேண்டும் போலுள்ளது” என்றாள்.
  1. We do not see in the general behaviour of Mrs. Bennet any concern for Jane’s health
    Mrs. பென்னட்டைப் பார்த்தால் ஜேன் ஜூரத்தைப் பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
  2. Mrs. Bennet’s reply to Bingley is not only artless and tactless but was boorishly imposing
  3. To thrust one on the other on the slightest pretext is boorish selfish unrefinement
    சிறிது இடம் கிடைத்தவுடன் பிறர் விஷயத்தில் தலையிடுவது சுயநலமான அநாகரீகம் முரட்டுத்தனமாகப் பழகுவதாகும்.
4
"Removed!" Cried Bingley. "It must not be thought of. My sister, I am sure, will not hear of her removal."
“அழைத்துச் செல்வதா! அதைப்பற்றி நினைக்கவே கூடாது , என்னுடைய சகோதரியும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டாள் என நான் நம்புகிறேன்” என்றான்.
  1. Bingley does not see through Mrs. Bennet
    Mrs.பென்னட் எண்ணம் பிங்லிக்குப் புரியவில்லை.
  2. Bingley responds as a lover rather than a host
5
"You may depend upon it, madam," said Miss Bingley, with cold civility, "that Miss Bennet shall receive every possible attention while she remains with us."
“எங்களுடன் இருக்கும்வரை மிஸ். பென்னட்டை நன்றாக கவனித்துக் கொள்வோம். இதில் சந்தேகமே வேண்டாம்” என்று மிஸ். பிங்கிலி சற்று விறைப்பாக பதிலளித்தாள்.
  1. Profusion of acknowledgement is out of cultural shallowness
  2. Polite words not backed with polite emotions expose oneself
    மனதில் மரியாதையில்லாமல் சொல் வெளியிடும் மரியாதை எளிதில் தெரிந்து விடும்.
  3. Man thinks high of his family and expects them to go with his ideals
    தன் குடும்பத்தை உயர்வாக மனிதன் கருதி தன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பான்.
  4. The obvious uttered means the opposite
    தெரிந்ததைச் சொல்வது எதிரானதை வெளியிடும்.
  5. Empty manners and their reciprocation soon break the relationship
    நடிப்பான பழக்கமும், அதை ஏற்பதும் எளிதில் உறவை முறிக்கும்.
  6. A relationship is sustained by true emotional energy
    உறவு உள்ளத்தின் உண்மை உணர்ச்சியால் நிலைப்பது.
  7. False relationship has no energy and severs the relationship
    பொய் உறவில் தெம்பில்லை. அது உறவை உடைக்கும்.
6
Mrs. Bennet was profuse in her acknowledgments.
இதனைக் கேட்ட திருமதி. பென்னட் அவர்களுக்கு மனப்பூர்வமாக தனது நன்றியினை தெரிவித்தாள்.
 
7
"I am sure," she added, "if it was not for such good friends, I do not know what would become of her, for she is very ill indeed, and suffers a vast deal, though with the greatest patience in the world, which is always the way with her, for she has, without exception, the sweetest temper I ever met with. I often tell my other girls they are nothing to her. You have a sweet room here, Mr. Bingley, and a charming prospect over that gravel walk. I do not know a place in the country that is equal to Netherfield. You will not think of quitting it in a hurry, I hope, though you have but a short lease."
“அவளது உடல்நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் பொழுது உங்களைப்போல் நல்ல நண்பர்கள் இல்லாவிட்டால், அவள் நிலை என்னவாகியிருக்கும்? எந்த கஷ்டத்திலும் பொறுமையாக இருக்கும் அவளது நல்ல குணம் நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. அவளோடு ஒப்பிட்டால் என்னுடைய மற்ற பெண்கள் ஒன்றுமே இல்லை , இதை அவர்களிடமே கூறியிருக்கிறேன். இந்த அறையும், இங்கிருந்து வெளியே தெரியும் காட்சியும் மிகவும் அழகாக உள்ளது, திரு. பிங்கிலி, நெதர்பீல்டைப்போல் ஓர் அழகான இடம் இப்பகுதியில் நான் கண்டதில்லை. இங்கிருந்து உடனே கிளம்ப மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்.”
  1. Mrs. Bennet thinks aloud totally inadvertently
  2. Praising one’s children is vicarious praise
    தம் குழந்தைகளைப் பாராட்டுவது தம்மைப் பாராட்டுவது.
  3. Whatever physical people touch, they feel it is theirs
    ஜடமான மக்கள் கையால் தீண்டிய பொருளை சொந்தம் என நினைப்பார்கள்.
8
"Whatever I do is done in a hurry," replied he; "and therefore if I should resolve to quit Netherfield, I should probably be off in five minutes. At present, however, I consider myself as quite fixed here."
“நான் நிதானமாக செயல்படுபவன் அல்ல. நெதர்பீல்டைவிட்டு கிளம்ப வேண்டும் என்று தீர்மானம் செய்தால், ஐந்து நிமிடத்திலேயே கிளம்பிவிடுவேன். தற்சமயம், நான் இங்கு நிரந்தரமாக தங்குவதாகத்தான் இருக்கிறேன்.”
  1. One generally receives subtle news of what is going to happen
    நடக்கப்போவது சூட்சுமமாகத் தெரியும்.
  2. Hurry is a sign of efficiency for small people
    அவசரம் திறமையற்றவனின் சுபாவம்.
  3. Bingley is unthinking more than thoughtless
    பிங்லியை சிந்தனையற்றவர் என்பதைவிட சிந்திக்க முடியாதவரெனலாம்.
  4. To respond positively to those thoughts is goodness or culture
    இவற்றை ஏற்பது நல்ல குணம், பண்பு.
  5. To respond negatively to them is lack of culture, even perversity
    இவற்றை ஏற்க மறுப்பது பண்பற்ற குணம், குதர்க்கமுமாகும்.
  6. Those who are not master of themselves respond casually
    கட்டுப்பாடற்றவர் நினைத்தபடி செயல்படுவார்கள்.
  7. The casual comment has some unexpressed energy in it and it fulfils itself
    வாய்க்கு வந்தபடி பேசுவதிலும் உள்ள தெம்பு தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும்.
  8. Bingley’s ‘I should be off in five minutes’ comes true
9
"That is exactly what I should have supposed of you," said Elizabeth.
“உன் சுபாவம் இப்படித்தான் இருக்கும் என நான் எதிர்பார்த்தேன்” என்றாள் எலிசபெத்.
  1. Elizabeth could not refrain from making a somewhat inadvertent comment
  2. One does anticipate others wishes and thoughts
    அடுத்தவரின் எண்ணங்களும் விருப்பங்களும் முன்கூட்டித் தெரியும்.
10
"You begin to comprehend me, do you?" Cried he, turning towards her.
“நான் எப்படிப்பட்டவன் என்பது உனக்கு புரிய ஆரம்பித்து விட்டதா?”என்றான் பிங்கிலி அவளை நோக்கி.
  1. Bingley was sorry he was seen through. That is one reason for his quitting Netherfield
11
"Oh! Yes -- I understand you perfectly."
“ஆம், நான் உன்னை நன்றாக அறிவேன்.”
  1. To see your characterisation is correct is a triumph
    நீ நினைத்தபடி நடந்தால் அது வெற்றி.
12
"I wish I might take this for a compliment; but to be so easily seen through, I am afraid, is pitiful."
“இதனை நான் பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் என்னை ஒருவர் இவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியும் என்பதும் வருத்தத்திற்குரியது.”
  1. It is pleasing to know you are understood
    நம்மை பிறர் புரிந்து கொள்வது சந்தோஷம்.
13
"That is as it happens. It does not necessarily follow that a deep, intricate character is more or less estimable than such a one as yours."
“நீ சொல்வது சரிதான். ஆனால் புரியாத புதிராக இருப்பதில் ஒன்றும் பாராட்டுதற்குரியதல்ல.”
 
14
"Lizzy," cried her mother, "remember where you are, and do not run on in the wild manner that you are suffered to do at home."
“லிசி , வீட்டில் பேசுவது போலவே இங்கும் இப்படி பேச வேண்டாம்” என்றாள் அவளது தாயார்.
  1. Mrs. Bennet wants to restrain Lizzy
  2. Mrs. Bennet who was oblivious of where she was, reminds her daughter of it
  3. Pure exhibitionism
  4. Mrs. Bennet puts down Lizzy for no fault of hers
    Mrs.பென்னட் எலிசபெத்தைக் காரணமின்றி திட்டுகிறாள்.
  5. Dull people resent intelligent remarks
    மந்த புத்தியுள்ளவர் அறிவுள்ள சொற்களை வெறுப்பார்கள்.
15
"I did not know before," continued Bingley immediately, "that you were a studier of character. It must be an amusing study."
“நீ மற்றவர்களது சுபாவத்தை பற்றி ஆராய்ச்சி செய்பவள் என்பது எனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டது. இவ்வாராய்ச்சி சுவாரசியமான கல்வியாகத்தான் இருக்க வேண்டும்” என்றான் பிங்கிலி.
  1. One in love loves all around her
    காதலிக்குரியன அனைத்து மீதும் காதல் எழும்.
16
"Yes; but intricate characters are the most amusing. They have at least that advantage."
“ஆமாம். புரியாத புதிராக இருப்பது மிகவும் சுவாரசியமானது. அந்த வகையில் அது வித்தியாசமானதுதான்.”
  1. It is not good manners to study the character of your host
17
"The country," said Darcy, "can in general supply but few subjects for such a study. In a country neighbourhood you move in a very confined and unvarying society."
“சுபாவத்தினை பற்றி ஆராய்ச்சி செய்ய கிராமங்களில் கிடைக்கும் மக்கட்தொகை குறைவாகத்தான் இருக்கும். மேலும் நாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் பழகுவோம் அல்லது கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருப்பார்கள்”என்றான் டார்சி.
  1. Darcy’s comment shows a desire to join the conversation with Elizabeth
    எலிசபெத்துடன் பேச்சில் கலந்து கொள்ள டார்சி விருப்பப்படுவது அவன் பேச்சில் தெரிகிறது.
  2. Darcy makes an unsavoury, almost offensive statement unintentionally
  3. Conversation brings out the speaker’s character, not so much the subject. Darcy’s comment on the country. It is his stiffness that is responded to, not what he said
    உரையாடல் பேசுபவரை வெளிப்படுத்தும். விஷயம் இரண்டாம் பட்சம். டார்சி கிராமத்தைப் பற்றிக் கூறிய விமர்சனம். டார்சியின் பேச்சுக்குரிய பதிலில்லை. அவன் விறைப்பான குணத்திற்குரிய பதில்.
  4. A man in love cannot stand his love relating to others pleasantly
    காதலி பிறருடன் நெருங்கிப் பழகுவதைக் காதலன் விரும்ப மாட்டான்.
18
"But people themselves alter so much, that there is something new to be observed in them for ever."
“ஆனாலும் மக்களின் குணம் மாறிக்கொண்டேதான் இருக்கும், அதிலிருந்து நாம் எந்நேரமும் புதியதாக புரிந்து கொள்ள முடியும்.”
  1. Life gives Elizabeth occasion to study intricate characters
  2. The infinity is in the infinitesimal
    அனந்தம் அணுவினுள் உள்ளது.
19
"Yes, indeed," cried Mrs. Bennet, offended by his manner of mentioning a country neighbourhood. "I assure you there is quite as much of that going on in the country as in town."
தான் வசிக்கும் இடத்தினை பற்றிய விமரிசனம் கேட்டு திருமதி. பென்னட் கோபமடைந்தாள்.“நகரங்களில் என்னென்ன மாறுதல்கள் நடக்கின்றனவோ அவை அனைத்தும் கிராமப்புறங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது” என்றாள்.
  1. Mrs. Bennet is offensive, a subconscious awareness of Darcy’s mind
    Mrs.பென்னட் திட்டுகிறாள். டார்சி மனதில் நினைப்பதை அறிந்து Mrs.பென்னட் பதில் கூறுகிறாள்.
  2. Mrs. Bennet is wantonly rude to Darcy. It is an attempt at touching him irretrievably
    Mrs.பென்னட் டார்சியை வேண்டுமென்றே திட்டுகிறார். அவர் ஆழ் மனம் டார்சியை ஆழ்ந்து தொட முயல்கிறது.
  3. This is exactly the same thing he heard from Elizabeth at Hunsford
    எலிசபெத் ஹன்ஸ்போர்டில் டார்சியிடம் இதையே கேட்டறிந்தாள்.
  4. Man thinks of issues in the light of his immediate future
    எதையும் நடக்க இருப்பதால் மனிதன் நிர்ணயிப்பான்.
  5. One is offended by one’s own position, rather what he thinks of the issue
    தன் நிலை தன்னைச் சுடும், அவன் நினைவு கணக்கில்லை.
20
Everybody was surprised, and Darcy, after looking at her for a moment, turned silently away. Mrs. Bennet, who fancied she had gained a complete victory over him, continued her triumph.
எல்லோரும் இப்பேச்சை கேட்டு மிக்க ஆச்சரியமடைந்தனர். ஒரு க்ஷணம் அவளை திரும்பிப் பார்த்த டார்சி, மௌனமாக அங்கிருந்து அகன்றான். அவனை ஜெயித்து விட்டதாக எண்ணிய திருமதி. பென்னட் அதனை கொண்டாடும் வகையில் பேசலானாள்.
  1. Mrs. Bennet had no manners to leave it at his silence. She expands on her theme self-righteously
  2. Mrs. Bennet is triumphant, the earliest indication of Darcy marrying Elizabeth
    Mrs. பென்னட் வெற்றியைக் கொண்டாடுகிறார். இதுவே சூட்சுமமாக டார்சி எலிசபெத் திருமணத்தை அறிவிப்பது முதல் முறை.
  3. Nothing succeeds like success
    வெற்றியைப் போல் உற்சாகம் தருவது இல்லை.
  4. Nothing succeeds like imagined success
    கற்பனை செய்த வெற்றியும் அதே போன்ற உற்சாகம் தரும்.
21
"I cannot see that London has any great advantage over the country, for my part, except the shops and public places. The country is a vast deal pleasanter, is not it, Mr. Bingley?"
“கடைகளும், மக்களுக்கு நேரத்தை கழிக்கும் வகையில் அமைந்துள்ள பொது இடங்களையும் தவிர லண்டன், இந்த இடத்தைவிட எந்த விதத்திலும் உசத்தி இல்லை. கிராமச் சூழலே ஒரு இனிமையான அனுபவம், இல்லையா திரு. பிங்கிலி?”
  1. Mrs. Bennet directly abuses Darcy. People have a subtle sense to abuse in advance future benefactors
  2. To talk entirely unrelated to the context, one needs to live in oneself too much
    தன்னில் உலகை மறந்தவன் விஷயத்தை மறந்து மற்றதெல்லாம் பேசுவான்.
  3. One living like that is known as ignorant
    அப்படி வாழ்பவனை அறிவிலி என்கிறோம்.
  4. Ignorance that is agreeable to oneself makes him stupid
    அறியாமை இதம் தருமானால் அவன் மடையனாகிறான்.
22
"When I am in the country," he replied, "I never wish to leave it; and when I am in town, it is pretty much the same. They have each their advantages, and I can be equally happy in either."
“நான் கிராமங்களில் இருக்கும் பொழுது, அங்கேயே தங்கி விடவேண்டும் என விரும்புவேன். அதேபோல் நகரங்களில் இருந்தால் அவ்விடம் பிடித்துவிடுகிறது. இரண்டுமே ஒவ்வோர் விதத்தில் நன்றாக இருக்கிறது. என்னால் இரண்டு இடங்களிலும் சந்தோஷமாக இருக்க முடியும்.”
  1. Bingley’s response to Mrs. Bennet is a masterful evasion
    Mrs. பென்னட்டிற்கு பிங்லி அளிக்கும் பதில் சாதுர்யத்தின் சிகரம்.
  2. Stupidity giving a sense of satisfied security makes him an idiot
    அறியாமை இதமான திருப்தியளித்தால் அவன் மடையனாகிறான்.
  3. Submissive people will offer no support to others against their boss
    பணிவுக்குரியவன் முதலாளியை எதிர்த்து உதவுவான் என எதிர்பார்க்க முடியாது.
23
"Ay -- that is because you have the right disposition. But that gentleman," looking at Darcy, "seemed to think the country was nothing at all."
“அப்படியா, உனக்கு சரியாக மதிப்பிட தெரிந்திருப்பதால் இரண்டு இடங்களின் பெருமையை உணர்ந்திருக்கிறாய். ஆனால் அவனோ கிராமங்களில் ஒன்றுமே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறான்” என்று டார்சியைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
  1. Next Mrs. Bennet openly abuses Darcy
    அடுத்தாற்போல் Mrs. பென்னட் நேரடியாக டார்சியைத் திட்டுகிறார்.
  2. To come into a house and abuse the inmates, one must have the domineering will of a tyrant
    ஒரு வீட்டிற்கு வந்து அங்குள்ளவர்களைத் திட்ட கடுமையான நெஞ்சுரம் தேவை.
24
"Indeed, Mama, you are mistaken," said Elizabeth, blushing for her mother. "You quite mistook Mr. Darcy. He only meant that there were not such a variety of people to be met with in the country as in town, which you must acknowledge to be true."
தாயாரின் பேச்சைக் கேட்டு தர்மசங்கடமான நிலைக்கு ஆளான எலிசபெத் அவளை நோக்கி, “அம்மா நீ தவறாக புரிந்து கொண்டுள்ளாய். டார்சியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நகரங்களில் இருப்பதுபோல் பலதரப்பட்ட மக்களை கிராமப்புறங்களில் பார்க்க முடியாது என்று அவன் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கிறது என்று நீ ஒத்துக் கொள்ள வேண்டும்” என்றாள்.
  1. Elizabeth’s attempt to compromise infuriates her mother. It is a rule a younger person at such jobs invites the opposite results
  2. The more the daughter pleads, the more the mother is rough
    எலிசபெத் தாயாரை அடக்கும்பொழுது, தாயார் கொதித்தெழுகிறாள்.
  3. One does what he warns others of
    பிறருக்கு எச்சரிப்பவனுக்கு அதையே தான் செய்யக்கூடாது எனத் தெரியாது.
25
"Certainly, my dear, nobody said there were; but as to not meeting with many people in this neighbourhood, I believe there are few neighbourhoods larger. I know we dine with four and twenty families."
“நிச்சயமாக பலதரப்பட்ட மக்கள் இங்கு இல்லைதான். நம் இடத்தில் வேண்டுமானால் நிறைய மக்கள் இல்லை என்று சொல்லலாம். ஆனால் பெரிய கிராமப்புற இடங்களும் இருக்கிறது என நான் நம்புகிறேன். நாமே இருபத்து நான்கு குடும்பங்களுடன் சேர்ந்து உணவு உண்டிருக்கிறோமே.”
  1. A violent storm cannot be deflected by fragile structures
    கடும் புயலை எளிமையான தடைகள் திசை திருப்ப முடியாது.
  2. A strong current cannot be guided by the boat in it
    படகால் அது உள்ள நீரோட்டத்தை மாற்ற முடியாது.
  3. One’s own estimate of one’s value is ridiculous; the skunk valuing itself for its odour
    தானே தன்னை மதிப்பிட முடியாது. கோட்டான் தன் அழகை விவரிப்பது போன்றது அது.
26
Nothing but concern for Elizabeth could enable Bingley to keep his countenance. His sister was less delicate, and directed her eye towards Mr. Darcy with a very expressive smile. Elizabeth, for the sake of saying something that might turn her mother's thoughts, now asked her if Charlotte Lucas had been at Longbourn since her coming away.
எலிசபெத்திற்காக, பிங்கிலி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். அவனுடைய சகோதரி தன்னுடைய அதிருப்தியை ஜாடையாக வெளியிட்டாள். அர்த்த புஷ்டியுடன் டார்சியை நோக்கினாள். தன்னுடைய தாயாரை திசை திருப்பும் நோக்கத்தில், தான் வந்த பிறகு சார்லெட் லாங்க்பர்னுக்கு வந்தாளா என எலிசபெத் விசாரித்தாள்.
  1. The embarrassment of a weak man before strong characters is better imagined than explained
    வலியவன் முன் குழையும் கோழையின் நிலை கற்பனைக்கேயுரியது.
    Wishing to do everything while not being capable of any is a measure of despair
    எதுவும் முடியாதவன் எல்லாவற்றையும் செய்ய முயல்வது விரக்திக்குரியது.
  2. To keep countenance one should be a perfect gentleman
  3. His sisters were less delicate, as they had a vested interest
  4. Women are less delicate and more impolite to other women than men
    ஆண்களிடமுள்ள இதமும், மரியாதையும் பெண்கட்கு மற்ற பெண்களிடமிருக்காது.
  5. The triumph over a rival has few equals
    எதிரியை வெல்வது எதற்கும் ஈடாகாது.
  6. Man feels a greater joy in the rival’s humiliation than in his own triumph
    தான் பெற்ற வெற்றியை விட எதிரிபெற்ற அவமானம் இதம் தரும்.
  7. A strong person can divert a weak one, not the other way around
    வலியவனுக்கு எளியவன் கட்டுப்படுவான். எளியவனுக்கு வலியவன் கட்டுப்பட மாட்டான்.
  8. A weak man who tries to divert a strong person to avoid an embarrassment will increase the embarrassment
    வலியவனைக் கட்டுப்படுத்தி அவமானத்திலிருந்து தப்ப விழையும் எளியவன் அதிக அவமானம் பெறுவான்.
  9. Weak submissiveness is mistaken to be genteel behaviour
    பயந்து அடங்குவது பண்புடைய அடக்கமாகாது.
  10. One rule is he who takes unfair advantage will be at a great disadvantage at the end
  11. It requires established culture inherited NOT to take advantage of others
  12. When somebody has an idea how to delight, life completes it
    எப்படி அனுபவிப்பது என ஒருவர் முயன்றால், வாழ்வு அதைப் பூர்த்தி செய்கிறது.
  13. In a particular atmosphere, it will prevail. Any strategy will ultimately serve the aim of the atmosphere
    ஒரு குறிப்பிட்ட சூழலில் அது நடக்கும். எந்த யுக்தியும் முடிவாகச் சமூகச் சூழலின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும்.
  14. Elizabeth’s attempt to mollify Darcy was used directly to insult him more
    எலிசபெத் டார்சிக்கு ஆதரவாகப் பேச முயன்றதைப் பயன்படுத்தி டார்சியைப் புண்படுத்தும் Mrs. பென்னட்.
  15. Each man is proud of what he has. He thinks the world is anxious to know all about him. He readily spreads his wares before anyone for this purpose. It never occurs to low people that their wares are objects of shame. To feel shame is a measure of progress
    தான் பெற்றதை எவரும் போற்றுவர். உலகம் தன்னையறிய ஆவலாக இருப்பதாக அவன் நினைக்கிறான். தான் பெற்றதை அனைவர் முன்னும் ஆவலாகக் கடை விரிக்கிறான். தாழ்ந்த மனிதர்கட்கு தங்கள் சரக்கு வெட்கப்படக் கூடியது எனத் தோன்றுவதில்லை. வெட்கப்படுவதே மனித முன்னேற்றம்.
  16. Bingley directly confirms his love for Jane in trying NOT to be offended by her display. Darcy does the same thing unobserved. Mrs. Bennet senses their attitude and like Oliver Twist asks for more
    Mrs. பென்னட் ஆர்ப்பாட்டம் பிங்லியைப் பாதிக்கவில்லை. ஜேன் மீது அவனுக்குள்ள பிரியம் அது வழியாகத் தெரிகிறது. எவர் கண்ணிலும் படாமல் டார்சியும் அதையே செய்கிறாள். Mணூண். பென்னட் அவர்கட்குக் கருவியாகச் செயல்பட்டு மேலும் மேலும் விபரீதமாகச் செயல்படுகிறார்.
27
"Yes, she called yesterday with her father. What an agreeable man Sir William is, Mr. Bingley -- is not he? So much the man of fashion! So genteel and so easy! -- He has always something to say to everybody. -- That is my idea of good breeding; and those persons who fancy themselves very important, and never open their mouths, quite mistake the matter."
“ஆம். நேற்று மாலை தன் தகப்பனாருடன் வந்தாள். சர். வில்லியம் எவ்வளவு நல்ல மனிதர், இல்லையா பிங்கிலி? நாகரீகம் தெரிந்தவர், தன்மையானவர், சுலபமாக பழகத் தெரிந்தவர். எல்லோரிடமும் ஏதாவது சொல்வதற்கு அவருக்கு விஷயம் இருக்கும். நல்ல வளர்ப்பு என்பது இதுதான் என நான் நினைக்கிறேன். சில பேர் இதனை தவறாக புரிந்து கொண்டு, தான் பெரிய ஆள் என மனதில் எண்ணிக் கொண்டு வாயை திறக்கமாட்டார்கள்.”
  1. The weak beneficiary will be on the warpath
  2. A future present to an uncultured person will evoke intense abuse from him now
    நாகரீகமற்றவனுக்கு செய்ய நினைக்கும் நல்லது அவனுக்கு கோபத்தையும் எரிச்சலையும் மூட்டும்.
28
"Did Charlotte dine with you?"
“சார்லெட் உன்னுடன் விருந்துண்டாளா?”
  1. Efforts in an adverse atmosphere will yield adverse results
29
"No, she would go home. I fancy she was wanted about the mince-pies. For my part, Mr. Bingley, I always keep servants that can do their own work; my daughters are brought up differently. But everybody is to judge for themselves, and the Lucases are very good sort of girls, I assure you. It is a pity they are not handsome! Not that I think Charlotte so very plain -- but then she is our particular friend."
“இல்லை, உணவு தயார் செய்வதற்கு உதவியாக அவள் வீட்டிற்கு கிளம்ப வேண்டி வந்தது. ஆனால் பிங்கிலி, என் வீட்டில் சமையலுக்கு பணிப் பெண்கள் உள்ளனர். என்னுடைய பெண்களை நான் வளர்த்த விதமே வேறு. இதனை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். லூகாஸ் குடும்பத்தின் பெண்கள் நல்லவர்கள். ஆனால் அழகுடையவர்கள் அல்ல. சார்லெட் பார்ப்பதற்கு வெகு சுமாராக இருக்கிறாள் என நான் நினைக்கவில்லை. ஆனால் அவள் எங்களுடைய உற்ற நண்பளாவாள்.”
  1. Mrs. Bennet insistently calling Charlotte plain on every possible occasion enabled Longbourn to go to her
    சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் ஷார்லோட் அழகற்றவள் என Mrs.பென்னட் கூறியதால் லாங்பார்ன் ஷார்லோட்டிற்குப் போகிறது.
  2. Any uncalled for abuse will take your property to him whom you abuse
    காரணமின்றி ஒருவரைத் திட்டினால் உன் சொத்து அவருக்குப் போகும்.
  3. Those of whom we have good opinion will be a source of benefit to us later
    எவர்மீது நமக்கு நல்ல அபிப்பிராயமிருக்கிறதோ அவரால் நமக்கு நல்லது நடக்கும்.
  4. Even when one intensely tries to spoil a thing, the very intensity can, because of the atmosphere, make it a success
    முனைந்து ஒரு காரியத்தை கெடுக்க ஒருவர் செயல்பட்டால், அம்முனைப்பின் தீவிர சக்தி, சூழ்நிலையால், காரியத்தைச் சாதிக்கும்.
  5. Comparison is odious
    இருவரை ஒப்பிடுவது நல்ல பழக்கமல்ல.
  6. It is mean to claim superiority especially at the expense of others
30
"She seems a very pleasant young woman," said Bingley.
“அவள் மிகவும் இனிமையான குணம் படைத்த இளம்பெண் என்று எனக்குத் தெரிகிறது" என்றான் பிங்கிலி.
  1. A gentleman always looks at the better side
31
"Oh! Dear, yes; -- but you must own she is very plain. Lady Lucas herself has often said so, and envied me Jane's beauty. I do not like to boast of my own child, but to be sure, Jane -- one does not often see anybody better looking. It is what everybody says. I do not trust my own partiality. When she was only fifteen, there was a gentleman at my brother Gardiner's in town so much in love with her that my sister-in-law was sure he would make her an offer before we came away. But, however, he did not. Perhaps he thought her too young. However, he wrote some verses on her, and very pretty they were."
“ஓ! ஆமாம், ஆனால் அவள் சுமாராகத்தான் இருக்கிறாள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். லேடி லூகாஸ் இதனை பல முறை என்னிடம் சொல்லி இருக்கிறாள். ஜேனின் அழகை கண்டு பொறாமைப்பட்டது உண்டு. என் பெண்ணை பற்றி நானே பெருமையாக பேச எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜேனைவிட ஒரு அழகியை ஒருவரால் அதிகம் பார்க்க முடியாது. நான் நினைப்பது உண்மை என்று சொல்லவரவில்லை, எல்லோருமே இப்படித்தான் பேசுகிறார்கள். அவளுக்கு பதினைந்து வயதாகும் பொழுது என்னுடைய சகோதரன் கார்டினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு ஒரு ஆண்மகன் ஜேனை மிகவும் விரும்பினான். நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்குமுன் அவன், அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்பான் என என் சகோதரனின் மனைவி தீர்மானமாக நம்பினாள். ஆனால் அவன் அப்படி நடந்து கொள்ளவில்லை. ஒருவேளை அவள் வயதில் மிகவும் சிறியவள் என நினைத்தானோ தெரியவில்லை, ஆனாலும் அவள் மேல் சில அழகான கவிதைகள் எழுதியிருந்தான்.”
  1. Physical characters are oblivious. They overdo their defects
  2. Beauty matters much in marriage, but beauty alone rarely gets a groom
    திருமணத்தில் அழகு முக்கியம். அதனால் அழகுக்காக மட்டும் திருமணமாவது அரிது.
  3. Because a mother speaks of her daughter being plain, it does not permit another to say so
    தாயார் பெண் அழகியில்லை என்பதால், அடுத்தவர் அதைச் சொல்ல உரிமையில்லை.
  4. Uncalled for one calling another plain, it is an offence
    காரணமின்றி ஒருவர் அடுத்தவர் அழகியில்லை எனக் கூறுவது மனத்தைப் புண்படுத்தும்.
  5. Those who say ‘I do not like to boast’ are boasting
    "நான் பெருமைப்பட மாட்டேன்" என்பவர் இதன் மூலம் பெருமைப்படுகிறார்.
  6. Beauty is an asset, money is a virtue, education is welcome but no one quality by itself can accomplish a work, say wedding
    அழகு அற்புதம். பணம் சொத்து. படிப்பு இன்றியமையாதது. ஆனால்.இவை எதுவும் தனியாக ஒரு காரியத்தை முடிக்க முடியாது. திருமணம் அவற்றுள் ஒன்று
  7. A mother boasting of her daughter’s beauty is postponing her wedding
    பெண்ணின் அழகிற்கு பெருமைப்படும் தாயாரால் அவள் திருமணம் தள்ளிப் போகும்.
  8. Any virtue of one, if taken note of by himself, the world will not take note of
    தன் தகுதியை ஒருவர் அறியும்வரை உலகம் அதைக் கண்டு கொள்ளாது.
  9. Any endorsement of a person is taken note of only when it is incomplete
    எந்தத் திறமையும் முழுமை பெறாதவரை பலரும் கவனிப்பார்கள்.
32
"And so ended his affection," said Elizabeth impatiently. "There has been many a one, I fancy, overcome in the same way. I wonder who first discovered the efficacy of poetry in driving away love!"
“அவனுடைய காதலும் அத்துடன் முடிந்தது. இதேபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. கவிதையுடன் காதலை முடித்துக் கொள்வது என்பதை யார் கண்டுபிடித்தனர் என தெரியவில்லை“ என எலிசபெத் கூறினாள்.
  1. Writing good verses can exhaust one’s love for the lady
    காதலைப் பற்றி அழகான செய்யுள் எழுதினால் அத்துடன் காதல் கரையும்.
  2. It is true a poem can drive away love, as only that much emotion was there. Elizabeth is profound
    ஒரு காவியம் எழுதி காதல் மறைவது எழுதுபவரின் தீவிரத்தைக் காட்டுகிறது. எலிசபெத் மேதாவிலாசத்துடன் பேசுகிறாள்.
  3. Elizabeth is an irresistible character
33
"I have been used to consider poetry as the food of love," said Darcy.
“கவிதைதான் காதலுக்கு பிரதானம் என நான் நினைத்திருந்தேனே”என்றான் டார்சி.
  1. Darcy, in spite of the offensive conversational occasion, is unable to let the occasion go without defence of poetry as an efficacious vehicle of love as he is inspired by it
    அநாகரீகமாக பேச்சு நடந்தது. ஆனாலும் காவியத்தைப் பற்றிப் பேசும் வாய்ப்பை டார்சி இழக்க மறுத்துப் பேசுகிறான். அவன் மனம் உணர்ச்சியால் எழுந்தது என்பதால் அவன் அப்படிப் பேசுகிறான்.
  2. Poetry can feed love or exhaust the emotion of love
    காதலைப் பற்றி எழுதும் காவியம் காதலைப் பூர்த்தி செய்யும்.
  3. Man in love loves to talk about love
    காதல் மனதில் எழுந்தால் பேசத் துடிக்கும்.
  4. Darcy’s passionate utterance about poetry is lost sight of
34
"Of a fine, stout, healthy love it may. Everything nourishes what is strong already. But if it be only a slight, thin sort of inclination, I am convinced that one good sonnet will starve it entirely away."
“காதல் வலுவாக இருந்தால் எதுவும் அதை பாதிக்காது. காதலே பலஹீனமாக இருந்தால் ஒரு கவிதை எழுதுவதுடன் முடிந்துவிடுகிறது.
  1. There is a subtle perception in people of subjects related to them even when it is not directly mentioned
    நேரடியாகப் பேசாவிட்டாலும் தன்னைப் பற்றிப் பேசுவதை அறியும் அளவுக்கு எவருக்கும் சூட்சுமம் உண்டு.
35
Darcy only smiled; and the general pause which ensued made Elizabeth tremble lest her mother should be exposing herself again. She longed to speak, but could think of nothing to say; and after a short silence Mrs. Bennet began repeating her thanks to Mr. Bingley for his kindness to Jane, with an apology for troubling him also with Lizzy. Mr. Bingley was unaffectedly civil in his answer, and forced his younger sister to be civil also, and say what the occasion required. She performed her part indeed without much graciousness, but Mrs. Bennet was satisfied, and soon afterwards ordered her carriage. Upon this signal, the youngest of her daughters put herself forward. The two girls had been whispering to each other during the whole visit, and the result of it was, that the youngest should tax Mr. Bingley with having promised on his first coming into the country to give a ball at Netherfield.
டார்சி சிரித்துவிட்டு அமைதியாக இருந்தான். இந்த இடைவெளியில் மறுபடியும் தன் தாயார் பேச ஆரம்பித்துவிடுவாளோ என எலிசபெத் அஞ்சினாள். திருமதி. பென்னட்டிற்கு பேச வேண்டும் என்று ஆசைதான், ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதனால் மீண்டும் பிங்கிலிக்கு தனது நன்றியைத் தெரிவித்தாள். ஜேனை அன்புடன் கவனித்துக் கொண்டதற்கும், லிசியையும் கூடவே தங்க வைத்துக் கொண்டதற்கும் நன்றி சொல்லிய வண்ணம் இருந்தாள். பிங்கிலி தக்க மரியாதையுடன் அவளுடைய நன்றியினை ஏற்றுக் கொண்டான். ஆனால் அவனது சகோதரியோ அதனை சட்டை செய்யவில்லை. இருப்பினும் திருமதி. பென்னட் மிகவும் திருப்தியடைந்தவளாய், கிளம்ப ஆயத்தமானாள். இவ்வளவு நேரமும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்த திரு. பென்னட்டின் கடைசி இரண்டு பெண்களில் கடைசி பெண் வந்து, பிங்கிலியிடம், அவன் நெதர்பீல்டில் ஒரு நடனத்திற்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்ததை நினைவுபடுத்தினாள்.
  1. People love to linger in places they love
    ஓரிடம் பிடித்தால் அதை விட்டு நகர முடியாது.
  2. Elizabeth has exactly the same characteristic of her mother. Darcy’s passions as well as his deep appreciation of her comments were lost on her. She was preoccupied by her mother, he with her
  3. Examine what happened when Elizabeth trembled lest her mother expose herself. Lydia took over from her mother
    தாயார் அவமானப்படுவார் என எலிசபெத் நடுங்கியபொழுது என்ன நடந்தது என யோசிப்போம். லிடியா தாயாரைத் தொடர்ந்து பேசுகிறாள்.
  4. Repetition is a character of physicality
  5. To be civil in uncivilised circumstances requires consummate skill
  6. Sisters don’t like brothers to marry
    அண்ணன் திருமணத்தை தங்கை விரும்புவதில்லை.
  7. Mothers take the daughters-in-law as rivals to them
    தாயாருக்கு மருமகள் போட்டி.
  8. You cannot order people to be cultured; you can order them to be quiet
    பேசாமலிருக்கச் சொல்லலாம், பண்பாகப் பழகச் சொல்ல முடியாது.
  9. Cultured behaviour ordered about loses its grace
    பண்பாகப் பழக உத்தரவிட்டால் அதன் நயமான நாகரீகம் போய் விடும்.
  10. Mr. Bingley’s forcing his younger sister to be civil is a direct response to the sensitivity of Elizabeth. Each person’s sensitivity decides every other person’s response. Every conversation in the book examined from this point of view helps. You can look for several responses:
    பிங்லி தங்கையை மரியாதையாகப் பேசச் சொன்னது எலிசபெத் வெட்கப்பட்டதால் என விளங்குகிறது. ஒருவர் உணர்ச்சி மற்ற அனைவர் செயலையும் நிர்ணயிக்கும். கதையில் ஒவ்வொரு சம்பாஷணையும் இப்படி ஆராய்வது பலன் தரும். பல்வேறு பலன் எழுவதைக் காணலாம்.
    1. As the person expects, others respond
      பிறரை ஒருவர் எதிர்பார்ப்பது.
    2. They respond in the opposite way
      அவர்கள் எதிராக நடக்கிறார்கள்.
    3. The response is determined by the temperament of the first person
      ஒருவர் பதிலாக நடப்பது முதல்வரின் குணத்தைப் பொருத்தது. குணம் நிர்ணயிக்கும்.
    4. It is determined by the temperament of the one who replies
      பதில் சொல்பவரின் குணத்தைப் பொருத்தது.
    5. It is an equilibrium of both their temperaments
      இருவர் குணமும் சந்தித்து சமன் செய்வது தெரியும்.
    6. It is a wider equilibrium of all temperaments
      அனைவர் குணமும் சந்தித்து அமைதியடைவது.
    7. The response can be related to the end or beginning or any major or minor event
      இதை முடிவில் அல்லது முதலில் காணலாம். எந்த பெரிய சிறிய நிகழ்ச்சியிலும் காணலாம்.
    8. It is worth examining psychologically
      இதை மனவளப்படி ஆராய்வது நல்லது.
    9. It lends itself to all or any examination
      எந்த ஆராய்ச்சியும் பலன் தரும். எல்லா ஆராய்ச்சியும் பலன் தரும்.
    10. Look at it from YOUR point of view
      உனது கண்ணோட்டத்தில் அதைப் பார்.
  11. Mercenary people are satisfied with a show of respect
    ஆதாயம் தேடுபவருக்கு மரியாதையிருப்பதாகத் தோன்றினால் போதும்.
36
Lydia was a stout, well-grown girl of fifteen, with a fine complexion and good-humoured countenance; a favourite with her mother, whose affection had brought her into public at an early age. She had high animal spirits, and a sort of natural self-consequence, which the attentions of the officers, to whom her uncle's good dinners and her own easy manners recommended her, had increased into assurance. She was very equal, therefore, to address Mr. Bingley on the subject of the ball, and abruptly reminded him of his promise; adding, that it would be the most shameful thing in the world if he did not keep it. His answer to this sudden attack was delightful to their mother's ear –
நல்ல உடல்வாகும், வளர்ச்சியும் உடைய பெண்ணான லிடியாவிற்கு வயது பதினைந்து ஆகியிருந்தது. நல்ல நிறமும், கலகலப்பான சுபாவமும் நிறைந்த அவள் தாயாரின் செல்ல பெண்ணாக இருந்ததால் எல்லோரிடமும் பேசி பழக அனுமதிக்கப்பட்டாள். அவளது இளமைத் துடிப்பும் இயல்பாகவே அவளுக்கு கிடைக்கும் முக்கியத்துவமும், இராணுவ வீரர்களின் கவனிப்பும், தனது சித்தப்பா மூலம் அவர்களுடன் விருந்துண்ணும் வாய்ப்பும், சுலபமாக பழகும் தன்மையும் எல்லாமுமாக சேர்ந்து அவளை மேலும் தைரியசாலியாக்கியது. இதனால் பிங்கிலிக்கு சமமாக அவளால் தைரியமாக நடனத்தை பற்றி கேள்வி கேட்க முடிந்தது. வாக்களித்தபடி நடனத்தை ஏற்பாடு செய்யாவிடின் அவன் அதற்காக வெட்கப்பட வேண்டி வரும் எனவும் கூற முடிந்தது. திடீர் என லிடியா கேட்ட கேள்விக்கு பிங்கிலி அளித்த பதில் தாயாருக்கு மிக்க சந்தோஷத்தை அளித்தது.
  1. Young persons reveal what the older ones conceal.
    பெரியவர்கள் மறைப்பதைச் சிறியவர்களால் மறைக்க முடியாது.
  2. The father and the mother precede and succeed in the children
    குழந்தைகள் மூத்தவை தகப்பனாரையும் இளையவர் தாயாரையும் போலிருப்பார்கள்.
  3. The last child is always the mother’s favourite
  4. Animal spirits demand favours by accusation
  5. To reward an offence is gentlemanliness
  6. The privilege of youth is what age cannot indulge in
    இளைஞர்கட்குரிய சலுகை வயதானவர்க்கில்லை.
  7. Lydia is oblivious of her shameless ploys
  8. A behaviour becomes legitimate by the sanction of others
    உலகம் ஏற்ற பழக்கம் உத்தமமானது.
37
"I am perfectly ready, I assure you, to keep my engagement; and when your sister is recovered, you shall, if you please, name the very day of the ball. But you would not wish to be dancing while she is ill."
“நான் வாக்களித்தபடி இந்த ஏற்பாட்டிற்குத் தயார். அதனால் உன் சகோதரி குணமடைந்தவுடன், நீ அதற்குரிய தேதியை முடிவு செய். அவள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் பொழுது உனக்கு நடனமாட விருப்பம் இருக்காது என நினைக்கிறேன்.”
  1. An uncourteous demand can be conceded in a courteous way
    அநாகரீகமாக ஒருவர் கேட்பதை நயமாகக் கொடுக்க முடியும்.
  2. A lover’s action centres around his love
    காதலன் செயல்களின் மையம் காதலி.
38
Lydia declared herself satisfied. "Oh! Yes -- it would be much better to wait till Jane was well, and by that time most likely Captain Carter would be at Meryton again. And when you have given your ball," she added, "I shall insist on their giving one also. I shall tell Colonel Forster it will be quite a shame if he does not."
லிடியா மிகவும் திருப்தியடைந்தாள். “ஜேன் குணமடையும்வரை காத்திருப்பதுதான் ஏற்றது. அதற்குள் காப்டன் கார்டரும் மெரிடனுக்கு வந்து விடுவார். உன்னுடைய நடனத்திற்கு பிறகு அவரைக் கேட்கப் போகிறேன். அதனை கர்னல் பார்ஸ்டரிடமும் கூறுவேன்.”
  1. Lydia waiting till Jane recovers is great
    லிடியா ஜேன் குணமாகும்வரை பொருத்திருப்பது பெரியது.
  2. Animal spirits allowing social courtesies speak well of the family
    விலங்கு போல் சுறுசுறுப்பான பெண்கள் சமூகம் ஏற்கும் பழக்கங்களைக் கொண்டிருப்பது நாகரீகம்.
  3. Expectation of success leads to imagining further successes
    வெற்றியை எதிர்பார்த்தால், அதன் மூலம் மேலும் வெற்றியைக் கற்பனை செய்யலாம்.
  4. Shameless persons asking shamelessly for favour accuse others of shame
    வெட்கங்கெட்டவர் வெட்கத்தை விட்டு உதவி கேட்டு பிறருக்கு வெட்கமில்லை என்பார்.
39
Mrs. Bennet and her daughters then departed, and Elizabeth returned instantly to Jane, leaving her own and her relations' behaviour to the remarks of the two ladies and Mr. Darcy; the latter of whom, however, could not be prevailed on to join in their censure of her, in spite of all Miss Bingley's witticisms on fine eyes.
திருமதி. பென்னட் இருபெண்களுடன் கிளம்பிச் சென்றாள். தன்னுடைய குடும்பத்தினரும், தானும், நடந்து கொண்ட விதத்தைப் பற்றி இரு பெண்மணிகளும், டார்சியும் ஏதாவது விமரிசனம் செய்து கொள்ளட்டும் என்று எண்ணி, எலிசபெத் உடனே ஜேனின் இருப்பிடத்தை நோக்கி சென்றாள். மிஸ்.பிங்கிலி, எலிசபெத்தின் அழகான விழிகளைப்பற்றியும், மற்றவை பற்றியும் கிண்டல் செய்த போதிலும் டார்சி எதிலும் கலந்து கொள்ளவில்லை.
  1. Politeness is not to express one’s disapproval. Culture is not to feel it
  2. Stupidity chooses the other man’s strength for criticism
  3. The temptation to condemn the absentee shows one is still external
    இல்லாதவரைக் கூறும் குறை பக்குவம் வரவில்லை எனக் காட்டும்.
  4. You cannot ask a lover to criticise his lady love
    காதலியைக் குறை கூறும் காதலனில்லை.



story | by Dr. Radut