Skip to Content

Volume I Chapter 08: Elizabeth is at Netherfield

Chapter 8: Elizabeth is at Netherfield

நெதர்பீல்டில் எலிசபெத்

Summary: Miss Bingley and Mrs.Hurst do not fully appreciate Elizabeth and take the opportunity to jab at her behavior and lack of manners whenever she is not around. They voice their empathy for Jane as well because of her family and lack of connections. They worry for her chances of making a good match. That evening, the Bingleys, Hursts, and Darcy have a card game in which more details regarding Pemberley – Darcy’s own estate – and his sister are revealed.
 
சுருக்கம்: மிஸ். பிங்கிலியும் , திருமதி. ஹர்ஸ்ட்டும் , எலிசபெத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளவில்லை , அவள் அருகில் இல்லாத பொழுதும் , சந்தர்ப்பம் கிடைத்த பொழுதும் அவளுடைய கர்வத்தைப்பற்றியும் , நடத்தையில் குறை இருப்பதைப்பற்றியும் பேசிக் கொள்கின்றனர். ஜேனுடைய குடும்பத்தைப்பற்றியும் , அவளுக்கு மேன்மையான உறவுகள் இல்லாததைப்பற்றியும் தங்களுடைய உணர்வுகளை வெளியிடுகின்றனர். இதனால் நல்ல சம்பந்தம் கிடைக்காது என கவலைப்படுகின்றனர். அன்று மாலை , பிங்கிலி அங்கத்தினர்களும் , ஹர்ஸ்ட் தம்பதிகளும் , டார்சியும் சீட்டாடும் சமயத்தில் , பிம்பெர்லி - டார்சியின் - சொந்த எஸ்டேட் - மற்றும் அவனது தங்கையைப்பற்றி மேலும் சில விஷயங்கள் வெளிவருகின்றன.
 
1
At five o'clock the two ladies retired to dress, and at half-past six Elizabeth was summoned to dinner. To the civil enquiries which then poured in, and amongst which she had the pleasure of distinguishing the much superior solicitude of Mr. Bingley's, she could not make a very favourable answer. Jane was by no means better. The sisters, on hearing this, repeated three or four times how much they were grieved, how shocking it was to have a bad cold, and how excessively they disliked being ill themselves; and then thought no more of the matter; and their indifference towards Jane when not immediately before them, restored Elizabeth to the enjoyment of all her original dislike.
மாலை ஐந்து மணிக்கு சகோதரிகள் இருவரும் தங்களை தயார் செய்து கொள்ள உள்ளே சென்றனர். பிறகு 6.30 மணிக்கு எலிசபெத்தை இரவு சாப்பாட்டிற்கு அழைத்தனர். ஜேனைப் பற்றி எல்லோரும் கேட்ட கேள்விகளுக்கு அவளால் அனுகூலமான பதிலை தர முடியவில்லை. ஏனெனில் ஜேனின் உடல் நலம் மோசமாகத்தான் இருந்தது. எல்லோரையும்விட பிங்கிலியின் கரிசனத்தில் ஓர் உண்மை இருப்பது எலிசபெத்திற்கு தெரிந்தது. ஜலதோஷம் பிடிப்பது என்பது எவ்வளவு தாங்க முடியாதது என்றும் , உடல் நலக் குறைவு என்பதே தங்களுக்குப் பிடிக்காத ஒன்று எனவும் , ஜேன் உடல் நலம் பற்றி மிகவும் வருத்தப்படுவதாகவும் மூன்று அல்லது நான்கு தடவைகள் அவ்விரு சகோதரிகளும் கூறினர். ஜேன் இருக்கும் பொழுது ஒரு மாதிரியும் , அவள் இல்லாத சமயம் வேறு மாதிரியும் நடந்து கொண்ட சகோதரிகளைப் பார்த்து அவர்களைப் பற்றிய தன்னுடைய முதல் அபிப்பிராயம் சரியானதுதான் என எலிசபெத் தெரிந்து கொண்டாள்.
  1. Genuine feeling makes itself unmistakably felt
    நம் மனத்தின் உண்மையைப் பலரும் அறியத் தவற மாட்டார்கள்.
  2. Manners are extremely pleasing at their own level
    பழக்கம் அதனளவில் அளவு கடந்து மிளிரும்.
  3. It may not be equally pleasing when truer feelings are called for
    ஆழ்ந்த உணர்ச்சி தேவைப்படும்பொழுது உயர்ந்த பழக்கமும் எடுபடாது.
  4. Bingley’s solicitude is superior because of his love for Jane
  5. The sisters are indifferent when not before her because it is out of politeness
  6. Elizabeth has an inward satisfaction of her own understanding
  7. It is this which attracts the sisters’ action against Jane
2
Their brother, indeed, was the only one of the party whom she could regard with any complacency. His anxiety for Jane was evident, and his attentions to herself most pleasing, and they prevented her feeling herself so much an intruder as she believed she was considered by the others. She had very little notice from any but him. Miss Bingley was engrossed by Mr. Darcy, her sister scarcely less so; and as for Mr. Hurst, by whom Elizabeth sat, he was an indolent man, who lived only to eat, drink, and play at cards; who, when he found her prefer a plain dish to a ragout, had nothing to say to her.
அங்கிருந்த எல்லோரிலும், பிங்கிலியின்மேல் மட்டும் அவளுக்கு பெருமதிப்பு இருந்தது. ஜேன்மேல் அவனுக்கு இருந்த அக்கறை அவளுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. தன் குடும்பத்தில் ஒருத்திபோல் நடத்திய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. மற்றவர்கள் அவளை அதிகம் கண்டு கொள்ளவில்லை. மிஸ். பிங்கிலி டார்சியை கவனிப்பதிலேயே இருந்தாள், மற்றொரு சகோதரி பேசவேயில்லை, சோம்பல் மிகுந்த திரு. ஹர்ஸ்டிற்கு சாப்பிடுவதும் , குடிப்பதும் , சீட்டு ஆடுவதுமே பிரதானமாக இருந்தது.
  1. Love sees discomfort as death – death of Love
  2. Whatever the circumstance, true feelings are always seen
    சந்தர்ப்பம் எதுவானாலும் உண்மையான உணர்ச்சி தெரியாமற் போகாது.
  3. Truth of any situation is always fully recognized
    ஒரு நிகழ்ச்சியின் உண்மையை அனைவரும் தவறாது அறிவர்.
  4. A woman in love can know nothing other than the man she is in love with while in his presence
    காதலிப்பவள் காதலன் முன் நிற்கும்பொழுது வேறெதுவும் அவள் கண்ணில் படாது.
  5. Bingley’s attentions to Jane are taken as advances to her
  6. Politeness can be real or artificial, not love
    இனிய பழக்கம் உண்மையாகவோ, நடிப்பாகவோ இருக்கும். அன்பு பொய்யாகாது.
  7. Attention atones for shortcomings
  8. Jane was sweet as she was naïve
  9. One of the indelicacies is to be an unwanted guest
    வேண்டாத விருந்தாளியாக ஒரு நாளிருப்பதும் சங்கடமான மனம் புண்படும் விஷயம்.
  10. The culture of a person exactly will be seen in his treatment of a guest
    விருந்து உபசரிப்பில் ஒருவர் நாகரீகம் வெளிப்படும்.
  11. Elizabeth carried too great a clarity to be liked by women
  12. In the presence of a rich man no one else will receive any attention
    பணக்காரன் உள்ள இடத்தில் மற்ற எவரையும் எவரும் கவனிக்க மாட்டார்கள்.
  13. To Caroline Darcy was an object of love
  14. To Louisa Darcy was a repository of status
  15. Man can totally lose himself in the contemplation of greatness or even money and be oblivious of his own existence
    அந்தஸ்து மனிதனை மறந்து தன்னை இழக்கச் செய்யும். பணமும் அதைச் செய்ய வல்லது. தான் ஒரு மனிதன் என்பதையே அவன் மறந்து விடுவான்.
  16. Love attracts; desire to possess without love repels
  17. Interest in eating leaves very little energy for other things
    சாப்பாட்டின் மீதுள்ள ஆசை வேறெதையும் கருத அனுமதிக்காது.
  18. Indolence indulges gluttony
  19. Eating, drinking and playing at cards may still qualify one as an aristocrat
    விருந்து, மது, சீட்டாட்டம் இவை பணக்காரனுக்குரியவை. ஒருவன் இப்பழக்கங்களால் தன்னைப் பணக்காரன் என நினைக்க முடியும்.
  20. A glutton appreciates another glutton
3
When dinner was over she returned directly to Jane, and Miss Bingley began abusing her as soon as she was out of the room. Her manners were pronounced to be very bad indeed, a mixture of pride and impertinence; she had no conversation, no style, no taste, no beauty. Mrs. Hurst thought the same, and added –
விருந்து முடிந்தபின் எலிசபெத் நேராக ஜேன் இருந்த அறைக்குச் சென்றாள். அவள் நகர்ந்தவுடன், அடுத்த க்ஷணம் மிஸ். பிங்கிலி அவளைப்பற்றி குறைகூற ஆரம்பித்தாள். கர்வமும் , துடுக்குத்தனமும் நிறைந்த எலிசபெத்திற்கு நயமான பேச்சோ , அழகோ, நாகரீகமோ எதுவும் இல்லை என விமர்சனம் செய்தாள். தானும் அவ்வாறு நினைப்பதாக கூறிய திருமதி. ஹர்ஸ்ட் மேலும் சொல்லலானாள்.
  1. Discussing the absentee is a disgusting behaviour
    இல்லாதவரைக் குறை கூறுவது அநாகரீகச் சின்னம்
  2. Discussion of the absentee is universal
    இல்லாதவரை அனைவரும் விமர்சனம் செய்வார்கள்.
  3. Not to abuse a man in his absence, one should either love him or fear him
    ஒருவர் இல்லாதபொழுது அவரைக் குறை கூறாமலிருக்க அவர் மீது பிரியமிருக்க வேண்டும். அல்லது பயம் இருக்கும்.
  4. Liking blinds; jealousy creatively reveals
    பிரியம் கண்ணை மறைக்கும், பொறாமை ஆழ்ந்த உண்மைகளை வெளியிடும்.
  5. The strongest argument for hating is jealousy
    முழு வெறுப்புக்குக் காரணமாயிருப்பது பொறாமை.
  6. Inability to criticise is culture
  7. Culture comes not out of wealth, but by tradition
  8. Politeness in behaviour is not culture
  9. Independence is described as pride
  10. Man compares himself with others on his own strong point or the weakest point of the other
    தன் பலத்தையும் பிறர் பலஹீனத்தையும் ஒத்துப் பார்ப்பது சுபாவம்.
  11. Submission is in behaviour as well as in thought
    பணிவு செயலுள் உள்ளது போல், எண்ணத்திலும் உண்டு.
  12. Non-submissiveness is taken to be impertinence
  13. To evaluate others by one’s standard is foolish
  14. To accuse others of not having the endowments they don’t have is naïve folly
  15. Dislike describes a personality empty of values
  16. Caroline is original, her sister toes her line
  17. Louisa never thinks, she only feels, taking the cue not from the spoken words of Caroline, but from the inner sensations felt
    லூயிசா சிந்திப்பதில்லை, உணர்வாள். காரலின் பேசுவதால் அவள் செயல்படுவதில்லை. காரலின் உணர்வது போல் இவளும் உணர்வாள்.
4
"She has nothing, in short, to recommend her, but being an excellent walker. I shall never forget her appearance this morning. She really looked almost wild."
“சுருங்கச் சொன்னால் அவளைப்பற்றி பெருமையாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நன்றாக நடக்கத் தெரிந்திருக்கிறது. இன்று காலையில் இருந்த அவளுடைய தோற்றத்தை என்னால் மறக்கவே முடியாது. பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தாள்.”
  1. Meanness describes a personality by his weakness
  2. The capacity for observation is fully developed in women especially when they study a rival
    கவனம் பெண்களுக்குக் கலை. போட்டியிடும் பெண்களைப் பூரணமாக அவர்களால் கவனிக்க முடியும். க்ஷணத்தில் பார்வை முடியும்.
  3. Caroline is unable to contain her jealousy. Her jealousy is not even weighty
  4. Weakness finds its strength in conformity
5
"She did indeed, Louisa. I could hardly keep my countenance. Very nonsensical to come at all! Why must she be scampering about the country, because her sister had a cold? Her hair, so untidy, so blowsy!"
“ஆமாம் லூயிஸா, என்னுடைய சிரிப்பை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. அவள் வந்ததே தவறு. தமக்கையின் ஜலதோஷத்திற்காக இப்படியா ஓடி வருவது? தலையெல்லாம் கலைந்து, தோற்றமே விநோதமாக இருந்தது.”
  1. In culpable behaviour, the snob who readily subscribes is more detestable than the original culprit
    குற்றத்தை செய்தவனை விட நிலைமைக்கேற்ப மாற விரும்பும் திராணியில்லாதவன் குற்றத்தை ஏற்பது கயமை.
6
"Yes, and her petticoat; I hope you saw her petticoat, six inches deep in mud, I am absolutely certain; and the gown which had been let down to hide it, not doing its office."
“ஆமாம். அவளுடைய ஸ்க்ர்ட்டை கவனித்தாயா? ஆறு அங்குலம் சேறு இருந்தது. அதை மேலுடையால் அவள் மறைக்க முயன்றும் முடியவில்லை.”
 
7
"Your picture may be very exact, Louisa," said Bingley; "but this was all lost upon me. I thought Miss Elizabeth Bennet looked remarkably well when she came into the room this morning. Her dirty petticoat quite escaped my notice."
“நீ சொல்வது சரியாக இருக்கலாம் , லூயிஸா. ஆனால் இதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. காலையில் அவள் உள்ளே நுழைந்த போது நன்றாகத்தான் இருந்தாள். அவளுடைய அழுக்கான உடை என் கவனத்தை ஈர்க்கவில்லை” என்றான் பிங்கிலி.
  1. Each man’s seeing is according to his prejudice
    தன் குறையின் கண்ணோட்டத்தில் எவரும் விஷயத்தைப் புரிந்து கொள்வர்
  2. The observation of a man and a woman of the same object varies as much as the inner and outer, or rational or irrational
    ஒரே பொருளை ஒரு ஆணும் பெண்ணும் கவனிக்கும்பொழுது அவை பூரணமாக வேறுபடும், அகம், புறமாக அவை வேறுபடும். அறிவுக்குப் பொருந்தாதது, பொருந்துவது என மாறுபடும்.
  3. Each person sees what he is interested in
8
"You observed it, Mr. Darcy, I am sure," said Miss Bingley; "and I am inclined to think that you would not wish to see your sister make such an exhibition."
“நீ கவனித்தாயா டார்சி? உன் தங்கையை இதுபோல் காண நீ விரும்ப மாட்டாய் என நினைக்கிறேன்.”
  1. Caroline drags Darcy into the conversation while he is silent
  2. It always has the opposite result
  3. An argument is easily won with one when it is related to his sensitive issue
    சொரணையுள்ள இடத்தில் விளக்கம் உடனே புரியும்.
9
"Certainly not."
“நிச்சயமாக விரும்பமாட்டேன்.
 
10
"To walk three miles, or four miles, or five miles, or whatever it is, above her ancles in dirt, and alone, quite alone! What could she mean by it? It seems to me to shew an abominable sort of conceited independence, a most country-town indifference to decorum."
“மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மைல்கள் நடப்பது , அதுவும் தனியாக சேற்றில் நடப்பது! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? தன் தைரியம், தன் சுதந்திர மனப்பான்மையை காண்பித்துக் கொள்ள இப்படி நடந்து கொண்டால் அது அசட்டுத்தனம்தான். நாகரீகம் என்றால் என்ன என்பதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் கிராமப்புற மக்களின் மனப்பான்மையிது.”
  1. One’s dislike can foist conceit on to another’s independence out of dislike
    ஒருவர் வெறுப்பு, அடுத்தவர் தெளிவான பழக்கத்தை கர்வம் எனக் கூறும்.
  2. Urge of affection becomes conceited independence to Caroline
  3. How can walking constitute an abominable sort of conceited independence except for a woman steeped in jealousy
    எலிசபெத் நடந்து வந்தது பொறுக்க முடியாத கர்வம் உதாசீனம் செய்ததாகும் எனக் காரலின் கூறுகிறாள். இது பொறாமையன்றி வேறென்ன?
  4. It is not a gap between the country and town, but a gulf. Look at the irony of country gents admiring town living
    கிராமத்திற்கும் டவுனுக்கும் இடையேயுள்ளது வெறும் பிளவல்ல, பெரும் பிரிவினை. கிராமத்துப் பணக்காரன் டவுனில் உள்ளவனை பார்த்து மகிழ்வது பெரியது.
11
"It shews an affection for her sister that is very pleasing," said Bingley.
“தமக்கையின் மேலுள்ள பாசத்தை காண்பிக்கிறது. இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே” என்றான் பிங்கிலி.
  1. The more she tirades, the more the men praise Elizabeth
12
"I am afraid, Mr. Darcy," observed Miss Bingley, in a half-whisper, "that this adventure has rather affected your admiration of her fine eyes."
“டார்சி, இவளுடைய இந்த தீரச்செயல் , அவள் நடத்தை , நீ அவள் அழகான விழிகளை ரசிப்பதை பாதித்திருக்கும் என நம்புகிறேன்” என்றாள் மிஸ். பிங்கிலி.
  1. Caroline’s dig at fine eyes makes them finer still
  2. A woman in love sees anything with reference to her man
    காதல் மயக்கத்திலுள்ள பெண் எவரையும் தன் காதலனோடு ஒப்பிட்டுப் பார்ப்பாள்.
13
"Not at all," he replied; "they were brightened by the exercise." A short pause followed this speech, and Mrs. Hurst began again –
“நிச்சயமாக இல்லை” என்ற டார்சி “மாறாக அவள் நடந்து வந்ததால், மேலும் பிரகாசமாக இருந்தாள்” என்றான். சிறிது மௌனத்திற்கு பிறகு திருமதி. ஹர்ஸ்ட் மீண்டும் ஆரம்பித்தாள்.
  1. Caroline adversely comments about Elizabeth several times to Darcy. Every time she miserably fails to enlist his sympathy
    டார்சியிடம் காரலின் எலிசபெத்தைப் பற்றிப் பலமுறை குறை கூறுகிறாள். ஒவ்வொரு முறையும் டார்சி அவள் எதிர்பார்க்கும் பதில் கூறுவதில்லை.
  2. The short pause is an awkward silence that emerges when culture has to handle indecorous behaviour
  3. A man in love can never see any defect in his woman
    அன்பு எழுந்தபின் நெஞ்சம் அவளிடம் குறை காணாது
14
"I have an excessive regard for Jane Bennet; she is really a very sweet girl, and I wish with all my heart she were well settled. But with such a father and mother, and such low connections, I am afraid there is no chance of it."
“ஜேன் மீது எனக்கு மிகவும் மதிப்பு இருக்கிறது. அவள் உண்மையிலேயே மிகவும் இனிமையானவள். நல்ல இடத்தில் திருமணமாக வேண்டும் என மனப்பூர்வமாக விரும்புகிறேன். ஆனால் இம்மாதிரி பெற்றோர்களும், தாழ்ந்த சம்பந்தங்களும் உடைய அவளுக்கு திருமணம் நடப்பது சந்தேகம்தான்.”
  1. The sisters have excessive regard for Jane. It is true
    பிங்லி சகோதரிகள் ஜேன் மீது அளவு கடந்த பிரியமாக இருப்பது உண்மை.
  2. Mrs. Hurst’s opinion is factual, not prejudiced
15
"I think I have heard you say that their uncle is an attorney in Meryton."
“ஒரு சித்தப்பா மெரிடனில் வக்கீல் என நீ கூறியதாக ஞாபகம் .”
  1. Their low opinion of Mr. Bennet’s family reflects the truth. It was provoked on this occasion because of Darcy’s partiality for Elizabeth
  2. A girl’s matrimonial prospects are determined by her family
    பெண்ணின் திருமணம் அவள் குடும்பப் பொறுப்பு.
    Girls who distinguish themselves overcome the defects of their families
    குடும்பம் குறையுடையதானால் சிறப்பான பெண் தன் சிறப்பால் குறையைக் கடந்து வருவாள்.
    In that case the grooms, by definition, will be far out of their way
    அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் வரன் வெகுதூரத்திலிருந்து வரவேண்டியிருக்கும்.
16
"Yes; and they have another, who lives somewhere near Cheapside."
“ஆமாம். அவர்களுக்கு மற்றொருவரும் உண்டு. சீப்ஸைட் எனும் இடத்தின் அருகில் எங்கோ இருக்கிறார்.”
 
17
"That is capital," added her sister, and they both laughed heartily.
“இது பெரிய விஷயமாயிற்றே ” என கேலியாக ஒரு சகோதரி கூற இருவரும் மனதார சிரித்தனர்.
 
18
"If they had uncles enough to fill all Cheapside," cried Bingley, "it would not make them one jot less agreeable."
“சீப்ஸைட் முழுவதும் அவர்களுக்கு உறவினர்கள் இருந்தாலும், இருவரும் எந்த விதத்திலும் குறைந்துவிட மாட்டார்கள்” என்றான் பிங்கிலி.
  1. While it is no objection to Bingley that her uncle is an attorney, it is a serious objection to Darcy
    ஜேன் சித்தப்பா வக்கீலாக இருப்பது பிங்லிக்கு ஆட்சேபணையில்லை. அது டார்சிக்குப் பெரிய தடை.
  2. Bingley’s vehemence shows his great attraction for Jane
  3. Affection felt deeply, unmistakably expresses itself
    ஆழ்ந்த பிரியம் தவறாமல் வெளி வரும்.
  4. Mind weighs the pros and cons. Emotions directly endorse
    மனம் நல்லது கெட்டதை நினைக்கும். உணர்ச்சி நேரடியாகச் செயல்படும்.
19
"But it must very materially lessen their chance of marrying men of any consideration in the world," replied Darcy.
“ஆனால் நல்ல வரன் கிடைப்பதுதான் மிகவும் கஷ்டம்”என்றான் டார்சி.
  1. There is no struggle in Bingley. Darcy grapples with a conflict
    பிங்லிக்கு அது சங்கடம் தரவில்லை. டார்சிக்கு அது பெரும் தடையான முரண்பாடு.
  2. Darcy too speaks the bare facts about Jane’s family without betraying his interest in Elizabeth
  3. Friendship that is true, but not emotionally full, loves to speak ill in his absence
    உண்மையான நட்பும் முழுமை பெறாத நேரம், பின்னால் குறை எழும்.
20
To this speech Bingley made no answer; but his sisters gave it their hearty assent, and indulged their mirth for some time at the expense of their dear friend's vulgar relations.
இதற்கு பிங்கிலி பதிலேதும் கூறவில்லை. ஆனால் சகோதரிகள் இருவரும் டார்சியின் கிண்டலை ரசித்தனர்.
  1. Dear friends’ vulgar relations are a reality of the changing society.
    நண்பர்களுடைய மட்டமான உறவினர்கள் மாறும் சமுதாயத்தில் எங்கும் காணப்படுவது
  2. Bingley’s silence is because of his anger
  3. His sisters truly loved Jane, but were disappointed by her status. They take it out on the other
21
With a renewal of tenderness, however, they repaired to her room on leaving the dining-parlour, and sat with her till summoned to coffee. She was still very poorly, and Elizabeth would not quit her at all, till late in the evening, when she had the comfort of seeing her asleep, and when it appeared to her rather right than pleasant that she should go down stairs herself. On entering the drawing-room she found the whole party at loo, and was immediately invited to join them; but suspecting them to be playing high, she declined it, and making her sister the excuse, said she would amuse herself for the short time she could stay below, with a book. Mr. Hurst looked at her with astonishment.
ஜேனின் அறைக்குச் சென்ற சகோதரிகள் அவளிடம் கனிவாக நடந்து கொண்டனர். எலிசபெத்தால் ஜேனைவிட்டு நகர முடியவில்லை. அவள் உறங்க ஆரம்பித்தவுடன், மற்றவர்களது அழைப்புக்கு காத்திராமல் தானாகவே கீழே சென்றாள். அங்கு எல்லோரும் சீட்டு ஆடிக் கொண்டிருந்தனர். இவளையும் அதில் கலந்து கொள்ளச் சொல்லி அழைத்தனர். அவர்களைப்போல், அவளால் பணம் வைத்து ஆட முடியாத காரணத்தால் நாசுக்காக தான் புத்தகம் படித்துக் கொண்டிருக்க விரும்புவதாக கூறி மறுத்தாள். சீட்டாட வராத அவளை திரு. ஹர்ஸ்ட் ஆச்சரியத்துடன் பார்த்தார்.
  1. Guilty conscience compensates
  2. Pleasant moves work better than the right ones
    நியாயமான செயலை விட இனிமையான செயல் பலிக்கும்.
  3. Fever in those days could be fatal. Jane’s recovery could be attributed to Elizabeth’s and Bingley’s affection, her illness to her mother’s initiative
    ஜூரம் வந்தால் உயிருக்கு ஆபத்து. பிங்லியும் எலிசபெத்தும் கொண்ட பிரியம் ஜேனைக் குணப்படுத்துகிறது. Mrs. பென்னட் விருப்பம் ஜூரத்தை நீடிக்கிறது.
  4. They sat there till summoned which shows the genuine interest
  5. Jane’s illness is more out of the fear of embarrassment. Also the mother is in her
  6. Elizabeth’s formality is a reflection of Darcy’s attempted formality with her
  7. Already, we can say, it is a subconscious response to each other
  8. Social differences as cultural ones appear in various forms
    சமூக வித்தியாசம் பண்பின் வித்தியாசம் போல் பலவகையாக எழும்.
  9. In the rich mixing with the poor, the difference emerges at all points as in the card game
  10. Difference in status will find its expression at all points
    அந்தஸ்து வித்தியாசமானால் எல்லா இடங்களிலும் அது தென்படும்.
  11. Excuses are transparent
    சாக்கு சொல்வது எடுபடாது.
  12. The offender cannot know the offence as the offended feels
  13. Marked difference from oneself, right or wrong, astonishes
    சரியோ, தவறோ, மாறுபாடு கணிசமானால், ஆச்சரியம் எழும்.
22
"Do you prefer reading to cards?" Said he; "that is rather singular."
“சீட்டைவிட புத்தகம் படிப்பது உனக்குப் பிடிக்குமா? அலாதியாகத்தான் இருக்கிறாய்?” என்றார் அவர்.
  1. Preference for reading is astonishing to Mr. Hurst
    படிப்பை முக்கியமாகக் கருதுவது Mrs.ஹர்ஸ்ட்டுக்கு ஆச்சர்யம்.
23
"Miss Eliza Bennet," said Miss Bingley, "despises cards. She is a great reader, and has no pleasure in anything else."
“எலிசபெத்திற்கு சீட்டாட்டம் பிடிக்காது. அவள் ஒரு பெரிய படிப்பாளி. மற்ற எதிலும் அவளுக்கு நாட்டம் இல்லை” என்றாள் மிஸ். பிங்கிலி.
  1. Miss Bingley’s dig is at Eliza’s poverty
  2. Attitudes are transparent
    நாம் நினைப்பதை அனைவரும் அறிவர்.
  3. Praise that is blame is unpardonably impolite to a guest
    விருந்தின் குறை வெளிப்படும் புகழ் மன்னிக்கமுடியாத அநாகரீகம்.
24
"I deserve neither such praise nor such censure," cried Elizabeth; "I am not a great reader, and I have pleasure in many things."
“என்னை புகழவும் வேண்டாம், இகழவும் வேண்டாம்” என்ற எலிசபெத் “நான் அப்படி ஒன்றும் பெரிய படிப்பாளி அல்ல, மற்ற நிறைய விஷயங்களிலும் எனக்கு விருப்பம் உண்டு” என்றாள்.
  1. Elizabeth never leaves herself undefended
  2. Even her resourcefulness is insufficient to compensate her low status
  3. It is a creative intelligence pleasantly expanding that can do it
  4. Questions that expose one’s weakness are resented
    குறையைச் சுட்டிக் காட்டினால் கோபம் வரும்.
25
"In nursing your sister I am sure you have pleasure," said Bingley; "and I hope it will soon be increased by seeing her quite well."
“உன் தமக்கைக்கு பணிவிடை செய்வதில் உனக்கு சந்தோஷம் என நான் நம்புகிறேன். அவள் சீக்கிரம் குணமடைந்தால் அதைவிட அதிக சந்தோஷமடைவாய்” என்றான் பிங்கிலி.
  1. Uniform politeness to a guest is good manners
    விருந்தினருக்குச் செலுத்தும் முழு மரியாதை நாகரீகம்.
  2. Full attention and ready compliance make a good host
    விருந்தின் தேவைகளை விருப்பமாகக் கவனிப்பது நல்ல பழக்கம்.
  3. Human relationship is one of exchange of energies. It is a mixture of positive and negative energies or higher and lower energies. Either way, there is an equilibrium
    மனித உறவு நம் சக்திகளின் பறிமாறல். அவை பாஸிட்டிவ், நெகட்டிவ் சக்திகள் கலந்தவை. உயர்ந்தவையும், தாழ்ந்தவையும் கலந்தவை. எந்த வகையிலும் ஒரு (equilibrium) சமநிலையுண்டு.
  4. One who shields from sarcasm is a dear friend of solicitude
    குத்தலான கேலியிலிருந்து நம்மைப் பாதுகாப்பவர் உண்மையான நண்பர்.
  5. Bingley is all solicitude. Offers his services to her
  6. Caroline is sarcastic; Bingley is supportive and tender
26
Elizabeth thanked him from her heart, and then walked towards a table where a few books were lying. He immediately offered to fetch her others -- all that his library afforded.
அவனுக்குத் தனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்த எலிசபெத், புத்தகங்கள் கிடந்த மேஜையை நோக்கி நகர்ந்தாள். தன்னுடைய நூலகத்தில் உள்ள மற்ற புத்தகங்களையும் உபயோகப்படுத்தும்படி பிங்கிலி கூறினான்.
  1. Elizabeth was touched in her emotions
  2. Man expands effusively in dealing with woman as she is his complement
    பெண்களுடன் பழகும்பொழுது மனிதன் கனிந்து மலர்கிறான். அவள் அவன் ஆத்மாவில் (complement) முழுமை தருபவள்.
  3. Bingley wants to bring more books to Elizabeth
    பிங்லி எலிசபெத்திற்கு மேலும் புத்தகங்கள் கொண்டு வர நினைக்கிறான்.
27
"And I wish my collection were larger for your benefit and my own credit; but I am an idle fellow, and though I have not many, I have more than I ever look into."
“உனக்காக இன்னும் நிறைய புத்தகங்கள் சேகரித்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் ஒரு சோம்பேறி, இருக்கும் புத்தகங்களையே இன்னமும் நான் படித்து முடிக்கவில்லை.”
  1. Bingley is self-deprecating
  2. Solicitude to a sister of one’s love is vicarious solicitude
    தான் விரும்பும் பெண்ணின் தங்கை மீதுள்ள அக்கறை அவள் மீதுள்ள அக்கறை.
  3. The composition of a library indicates the mental constitution of the owner
    லைப்ரரியின் நூல்கள் உடையவர் படிப்பை விளக்கும்.
  4. Family library is part of family culture
    குடும்ப லைப்ரரி குடும்பப் பண்பைக் குறிக்கும்.
  5. For a lover every occasion is an occasion of extolling her lover
28
Elizabeth assured him that she could suit herself perfectly with those in the room.
மேஜையில் இருக்கும் புத்தகங்களே தனக்குப் போதும் என எலிசபெத் கூறினாள்.
 
29
"I am astonished," said Miss Bingley, "that my father should have left so small a collection of books. What a delightful library you have at Pemberley, Mr. Darcy!"
“நமது தகப்பனார், இவ்வளவு குறைவான புத்தகங்களையே சேகரித்திருக்கிறார் என பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது” என்ற மிஸ். பிங்கிலி “டார்சி, பிம்பெர்லியில் உள்ள நூலகம் மிகவும் அழகானது”என்றாள்.
  1. Caroline’s thoughts are preoccupied by Darcy, Pemberly, and his attention
30
"It ought to be good," he replied; "it has been the work of many generations."
“பல தலைமுறைகளின் சேமிப்பு என்பதால் சிறப்பாகத்தான் இருக்க வேண்டும்” என்று பதிலளித்தான்.
  1. Darcy’s good speech is abrupt. Emotions suppressed make the speech abrupt
31
"And then you have added so much to it yourself, you are always buying books."
“நீயும் புத்தகங்கள் வாங்கிக் கொண்டே இருப்பதால் மேலும் சேர்ந்துள்ளது.”
 
32
"I cannot comprehend the neglect of a family library in such days as these."
“இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் குடும்ப நூலகத்தை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை.”
 
33
"Neglect! I am sure you neglect nothing that can add to the beauties of that noble place. Charles, when you build your house, I wish it may be half as delightful as Pemberley."
“அவ்வளவு அழகான இடத்தை சரியாக பராமரித்து மேலும் அழகூட்ட உன்னால் எதையும் புறக்கணிக்க முடியாது. சார்லஸ், நீ வீடு கட்டும் பொழுது பிம்பெர்லியில் பாதி அளவாவது இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.”
  1. Darcy is Bingley’s idol. Pemberly is his model. Weakness adoring strength adores everything about him
34
"I wish it may."
“எனக்கு ஆசைதான்.”
 
35
"But I would really advise you to make your purchase in that neighbourhood, and take Pemberley for a kind of model. There is not a finer county in England than Derbyshire."
“நீ அவ்வூரிலேயே இடம் வாங்கி, பிம்பெர்லியை ஒரு உதாரணமாக வைத்துக் கொண்டு வீடு கட்ட வேண்டும். டெர்பிஷயரைபோல் ஒரு அழகான இடம் இங்கிலாந்திலேயே இல்லை எனலாம்.”
  1. Playing to the gallery is more with youngsters
    பிறர் பாராட்டி மகிழும்படிப் பேசுவது இளமைக்குரிய நலம்.
  2. The entire conversation is such
    இங்கு உரையாடல் முழுவதும் அப்படிப்பட்டதே.
36
"With all my heart; I will buy Pemberley itself if Darcy will sell it."
“பிம்பெர்லியை விற்க டார்சி முன் வந்தால் நான் அதையே வாங்கி விடுவேன்.”
  1. If Bingley could buy Pemberley it should cost less than £100,000 which is Bingley’s inheritance
    பிங்லி பெம்பர்லியை வாங்க முடியுமெனில் அதன் விலை £100,000 க்குட்பட்டதாக இருக்க வேண்டும். அதுவே அவனிடமுள்ள முழுச் சொத்து.
  2. To offer to buy another’s property is indelicate
    அடுத்தவர் எஸ்டேட்டை வாங்க முன்வருவது நயமான செயலில்லை.
37
"I am talking of possibilities, Charles."
“நம்மால் என்ன முடியும் என்பதை பற்றி நான் பேசுகிறேன் சார்லஸ்.”
 
38
"Upon my word, Caroline, I should think it more possible to get Pemberley by purchase than by imitation."
“பிம்பெர்லி மாதிரி ஒன்று கட்டுவதைவிட, அதை வாங்கிவிடுவதே சுலபம் என நான் நினைக்கிறேன், கரோலின்.”
  1. It is true a place like Pemberley cannot be got up overnight
    பெம்பர்லியைப் போன்ற இடம் எளிதில் தயார் செய்யக் கூடியதில்லை.
  2. A great accomplishment cannot be easily imitated
    பெரிய சாதனையைப் பார்த்து மீண்டும் எளிதில் செய்ய முடியாது.
39
Elizabeth was so much caught by what passed as to leave her very little attention for her book; and soon laying it wholly aside, she drew near the card-table, and stationed herself between Mr. Bingley and his eldest sister, to observe the game.
அங்கு நடந்து கொண்டிருந்த உரையாடலில் கவனம் சென்றதால் எலிசபெத்தால் புத்தகம் படிக்க முடியவில்லை.அதனால் புத்தகத்தை வைத்துவிட்டு சீட்டாடும் மேஜைக்கு வந்து பிங்கிலிக்கும், அவனது மூத்த சகோதரிக்கும் இடையே அமர்ந்து ஆட்டத்தை கவனிக்கலானாள்.
  1. Caroline’s advances to Darcy are insistent, vulgar, repetitious, provoking, but she enjoys each time she speaks. The physical is oblivious, coarse and crude. For all these, her education is finest
    காரலின் டார்சியை அணுகுவது இடைவிடாத செயல், அசிங்கமானது. மீண்டும் மீண்டும் செய்வது, ஆத்திரமூட்டுவது. ஆனால் அது காரலீனுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஜடம் தன்னை மறந்தது, முரட்டுத்தனமானது, மட்டமானது. அவள் பெற்ற படிப்பு மிக உயர்ந்தது.
  2. There was an upheaval of waves of admiration that Lizzy could not read
  3. Excessive interest is intrusion in exhibition
    அளவு கடந்து அக்கறை கொள்வது ஆர்வமாகக் குறுக்கிடுவதாகும்.
40
"Is Miss Darcy much grown since the spring?" Said Miss Bingley; "will she be as tall as I am?"
“மிஸ். டார்சியை பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. அவள் என் உயரம் இருப்பாளா?” எனக் கேட்டாள் மிஸ். பிங்கிலி.
  1. Caroline wishes to know Georgiana’s height in comparison to her
    ஜார்ஜியானாவின் உயரத்தைத் தன் உயரத்துடன் ஒப்பிட்டுக் காரலின் கேட்கிறாள்.
  2. Caroline goes back to Darcy on some excuse
41
"I think she will. She is now about Miss Elizabeth Bennet's height, or rather taller."
“இருப்பாள் என நினைக்கிறேன். மிஸ். எலிசபெத் பென்னட் உயரம் அல்லது அவளைக் காட்டிலும் உயரமாக இருப்பாள் என நினைக்கிறேன்”என்றான் டார்சி.
  1. Darcy has Elizabeth in mind and compares it to her. These subconscious references cannot be overlooked
    டார்சி மனத்தில் எலிசபெத் இருப்பதால் அவளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறாள். இவை ஆழ் மன எழுச்சிகள். இவற்றைப் புறக்கணிக்க முடியாது.
  2. Darcy relates all his thoughts to Elizabeth
42
"How I long to see her again! I never met with anybody who delighted me so much. Such a countenance, such manners! And so extremely accomplished for her age! Her performance on the pianoforte is exquisite."
“அவளைப் பார்க்க வேண்டும் என மிக ஆசையாக இருக்கிறது. அவளைப் பார்த்தாலே தனி சந்தோஷம்தான். அவளிடம் சாந்தமான குணமும், நல்ல பண்புகளும், வயதிற்கு மீறிய திறமைகளும் இருக்கிறது. பியானோ வாசிப்பதில் அவளுக்கு இருக்கும் திறமையே வெகு நேர்த்தியானது” என்றாள் மிஸ். பிங்கிலி.
  1. In praising Georgiana Caroline praises Darcy
  2. It is in idle hours that one’s refinement comes out
    சும்மா உட்கார்ந்துள்ளபொழுது ஒருவர் பண்பின் உயர்வு வெளிவரும்.
  3. A person’s character is always seen whether he speaks or not
    பேசினாலும் பேசாவிட்டாலும் ஒருவர் சுபாவம் தெரியும்.
43
"It is amazing to me," said Bingley, "how young ladies can have patience to be so very accomplished as they all are."
“இளம் பெண்களுக்கு தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள எப்படி, இப்படி ஒரு பொறுமை இருக்கின்றன என நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றான் பிங்கிலி.
  1. Lazy Bingley is amazed at the ladies’ exertion
  2. Accomplishment of ladies is an index of that society
  3. The minds of unmarried men are occupied by women
    திருமணமாகதவர் மனம் பெண்களை நினைக்கும்.
  4. A young lady, in the eyes of a young man, is accomplished
    இளைஞன் தான் காணும் இளம்பெண் நிறைவுடையவள் என நினைப்பான்.
  5. Bingley has Jane in mind
44
"All young ladies accomplished! My dear Charles, what do you mean?"
“எல்லா பெண்களுக்குமா திறமை இருக்கிறது, எனதருமை சார்லஸ், நீ என்ன சொல்ல வருகிறாய்?”
  1. It is worthwhile making an exhaustive list of various phenomena as the results indicate. It may widen our perspective
    முடிவு கூறும் வகையில் பலவகை நிகழ்ச்சிகளைப் பூரணப் பட்டியலாக எழுவது பயன்படும். நம் பார்வையை விரிவுபடுத்த அது உதவும்.
    1. As a rule every result can be traced to their very direct origin for the smallest touch of life
      எந்த முடிவையும் அதன் ஆரம்பம் வரை தொடர்ந்து அறியலாம்.எந்த ஒரு சிறு நிகழ்ச்சிக்கும் அது பொருந்தும்.
    2. Darcy’s interest in Lizzy
      எலிசபெத் மீது டார்சிக்குரிய பிரியம்.
    3. Lydia’s wedding
    4. லிடியாவின் திருமணம்.
    5. Charlotte’s role in the weddings of Jane and Elizabeth
      எலிசபெத், ஜேன் திருமணங்களில் ஷார்லோட்டின் பங்கு.
    6. How Mary is left out in the cold
      எப்படி மேரியை அனைவரும் மறந்தனர்.
    7. Why Darcy pays Wickham
      ஏன் டார்சி விக்காமுக்குப் பணம் தர வேண்டி வருகிறது.
    8. Reasons for Wickham’s successful scandal
      விக்காம் கூறும் பொய் எடுபடும் காரணங்கள்
    9. The role of £5000 of Mrs. Bennet
      Mrs.பென்னட்டின் £5000 ன் பங்கு.
    10. Collins’ wedding
      காலின்ஸ் திருமணம்.
    11. Mrs. Phillips’ gossip
      Mrs.பிலிப்ஸ்ன் வதந்தி.
    12. The role of Netherfield servants
      நெதர்பீல்ட் வேலைக்காரர்கள் பங்கு.
    13. Gardiners visit to Lambton
      லாம்ப்டனுக்கு Mr.& Mrs. கார்டினர் வருவது.
    14. The role of Mrs. Reynolds
      Mrs.ரேனால்ட்ஸ் செய்த சேவை
  2. Caroline’s prodding of Darcy, its pattern, its result and how she entirely reversed is a special study
    காரலின் டார்சியைச் சீண்டுவது, அதன் வகை, முடிவு, எப்படி அவள் முடிவாகத் தலைகீழே மாறினாள் என்பது ஒரு முழு ஆராய்ச்சி.
    -- Her faith in her status, money, beauty, gave her energy to pursue Darcy
    -தன் அழகு, பணம், அந்தஸ்தில் அவளுக்குள்ள நம்பிக்கை டார்சியைத் தொடரும் தெம்பைக் கொடுத்தது.
    -- The very fact Bingley has not evinced interest is an indication of a negative result for Caroline
    -பிங்லி அதில் அக்கறை காட்டவில்லையென்பது முடிவான பலன் இல்லையென வரும் என்கிறது.
    -- To value one’s own strength is the mental attitude
    -தன் வலிமையைத் தானே போற்றுவது மனம் செயல்படும் வகை.
    -- Maybe the charm of abuse of Eliza overtook the charm for Darcy
    -எலிசபெத்தை குறைத்துப் பேசி திட்டுவதில் உள்ள ஆசை டார்சி மீதுள்ள அக்கறையை விட அதிகமாயிற்று.
    -- There is more than one favourable factor in the context that can mislead her
    -காரலின் உள்ள சூழ்நிலையில் அவளுக்கு இல்லாத நம்பிக்கையை எழுப்பப் பல சந்தர்ப்பம் எழுகின்றன.
    -- That love, attachment, attraction, passion are powerful is perhaps not known to Caroline
    -காதல், கவர்ச்சி, பாசம், வேகம் ஆகியவை சக்தி வாய்ந்தவை எனக் காரலினுக்குத் தெரியவில்லை போலும்.
    -- The marriage of Louisa is a warning to Darcy
    -லூயிஸாவின் திருமணம் டார்சிக்கு சரியான எச்சரிக்கை.
    -- The lady ignores a biological rule
    -காரலின் உலக சட்டத்தை - ஆண் பெண்ணை நாட வேண்டும் புறக்கணிக்கிறாள்.
    -- Caroline wishes to accomplish by breaking Jane’s possibilities, while Charlotte unthinkingly helps Jane and Elizabeth
    - ஜேன் திருமணத்தைத் தடுத்து தான் மணக்கக் காரலின் முயலும்பொழுது, ஷார்லோட் தன்னையறியாமல் ஜேன், எலிசபெத் திருமணம் கூடிவர வேண்டும் எனப் பாடுபடுகிறாள்.
    -- Her genuine affection for Jane shows she is not bad at heart
    - ஜேன் மீது காரலினுக்கு உண்மையான அன்புள்ளது என்பது அவள் அடிப்படையில் கெட்டவளில்லை எனக் காட்டுகிறது.
    -- She could rally back on the strength of her money
    - அவள் மனம் தோல்வியிலிருந்து பாதுகாக்கும்.
    -- Her warning Eliza against Wickham helps her retain her relationship
    - விக்காமைப் பற்றி அவள் எலிசபெத்தை எச்சரித்தது, எலிசபெத்துடன் ஓர் நல்லுறவு ஏற்படுத்தியதாகிறது.
    -- Her poking Eliza with the militia at Pemberley made the elopement possible
    - பெம்பர்லியில் எலிசபெத்தைச் சீண்டியது லிடியா ஓடிப்போக உதவியது.
    -- Her equipment is on the surface. Pemberley needs content
    - காரலின் சொல்பம். பெம்பர்லிக்குப் பெரிய ஆத்மா தேவை.
    -- No married sister in England at that period lived with a brother as Louisa does. Caroline’s credibility is thus lost
    - திருமணமான பெண் தம்பியுடன் அந்த நாளில் இங்கிலாந்தில் வாழ்வதில்லை. அதனால் காரலினுக்குள்ள மரியாதை அழிகிறது.
    -- It is not known whether she did it to oblige Darcy more than pursue her own inclination
    - காரலின் எலிசபெத்தைக் குறைத்துப் பேசுவது தனக்காகவா; டார்சிக்காகவா எனத் தெரியவில்லை.
    -- Caroline is the leader in spite of being younger
    -சிறியவளானாலும் காரலின் பிங்லிக்கும் லூயிசாவுக்கும் தலைவர்.
    -- A man can overlook the boorishness of a parent while a lady cannot equally do so
    - மனிதன் பெற்றோர் குறையை புறக்கணிக்கலாம். ஒரு பெண் அதையே எளிதில் செய்ய முடியாது.
    -- Mrs. Bennet’s energy is a threat to Caroline’s energyless life
    காரலினுக்குத் தெம்பில்லை. சுறுசுறுப்பான Mrs. பென்னட் அவளுக்கு ஆபத்து.
45
"Yes, all of them, I think. They all paint tables, cover screens, and net purses. I scarcely know any one who cannot do all this, and I am sure I never heard a young lady spoken of for the first time, without being informed that she was very accomplished."
“ஆம், எல்லோரும் திறமைசாலிதான் என நான் நினைக்கிறேன். எல்லோரும், மேஜையை அலங்கரிப்பதிலும், திரைச்சீலைகளை அழகுபடுத்துவதிலும், கைப்பையை கோர்ப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். இவையெல்லாம் தெரியாது என்று சொல்பவரை நான் இதுவரை பார்த்ததில்லை. இப்பெண்மணி மிகவும் திறமைசாலி ,என்று சொல்லித்தான் நான் இதுவரை கேட்டிருக்கிறேன்.”
 
46
"Your list of the common extent of accomplishments," said Darcy, "has too much truth. The word is applied to many a woman who deserves it no otherwise than by netting a purse or covering a screen. But I am very far from agreeing with you in your estimation of ladies in general. I cannot boast of knowing more than half a dozen, in the whole range of my acquaintance, that are really accomplished."
“பெண்களுக்கு கைப்பை கோர்ப்பதும், திரைச்சீலைகளை அழகுபடுத்தவும் தெரியும் என்பது ஒரு திறமை ஆகாது. நான் சந்தித்தவர்களில் ஓர் அரை டஜன் பெண்மணிகள்தான் எல்லாம் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்” என்றான் டார்சி.
  1. Darcy who intended to compliment Elizabeth speaks tactlessly offending her
  2. Elizabeth mistakes their comments and takes them adversely
  3. Darcy’s comment is intended to compliment Elizabeth
  4. Conversations can have subtle references to those present
    உரையாடல் உள்ளவர்களைத் தொடுவது இயல்பு.
  5. In women of status, partial accomplishment is complete accomplishment
    அந்தஸ்துள்ள பெண் அரைகுறையாகப் பெற்றவை முழுமையாகத் தெரியும்.
  6. What one intends as a compliment can miss the mark, may even become the opposite
    பாராட்டும் குறி தவறு குறை கூறுவதாகக் காணப்படும்.
47
"Nor I, I am sure," said Miss Bingley. "Then," observed Elizabeth, "you must comprehend a great deal in your idea of an accomplished woman."
“ஆமாம்,” என்றாள் மிஸ். பிங்கிலி. “அப்படி எனில், திறமைசாலியான பெண்மணி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு பெரிய தீர்மானம் உன்னிடத்து இருக்கும்” என்றாள் எலிசபெத்.
 
48
"Yes, I do comprehend a great deal in it."
“ஆம், நான் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.”
 
49
"Oh! Certainly," cried his faithful assistant, "no one can be really esteemed accomplished who does not greatly surpass what is usually met with. A woman must have a thorough knowledge of music, singing, drawing, dancing, and the modern languages, to deserve the word; and besides all this, she must possess a certain something in her air and manner of walking, the tone of her voice, her address and expressions, or the word will be but half deserved."
“ஆம் நிச்சயமாக” என்ற மிஸ்.“ பிங்கிலி சாதாரணமாக காணப்படும் திறமைகளைவிட அதிகமாக இருந்தால்தான் உண்மையான திறமைசாலி எனலாம். ஒரு பெண்மணிக்கு, பாட்டு பாடும் திறமை, ஓவியம், நடனம், மொழிகள் இவைகளைப் பற்றிய முழுமையான அறிவு இருக்க வேண்டும். நடை, உடை, பாவனைகள் எல்லாம் நேர்த்தியாக இருந்தால்தான் திறமைசாலி என கூற முடியும். இல்லையெனில் இவ்வார்த்தைக்கு முழு அர்த்தம் கிடைக்காது.”
  1. Caroline’s description undermines Elizabeth
  2. A direct wholehearted compliment can be missed or taken as condemnation
    நேரடியாக முழுமனதுடன் செய்யும் பாராட்டு குற்றம் சாட்டப்படுவதாகத் தோன்றலாம்.
  3. Accomplishment is more in culture than in capacity
    சாதனை என்பது பண்பு, திறமையல்ல.
  4. The list of accomplishments of young ladies is pitiable, showing the cultural outlook of the period
    இளம் பெண்கள் சாதனைப் பட்டியல் பரிதாபமானது. அது அக்காலத்து நாகரீகத்தின் நிலையைக் காட்டுகிறது.
  5. Surely the list shows what a lady was meant for
    இப்பட்டியலிலிருந்து பெண் வாழ்வு எப்படிப்பட்டதெனத் தெரிகிறது.
  6. Caroline’s description is a commentary on Elizabeth
    காரலின் பேசுவது முழுவதும் எலிசபெத்திற்குரிய விமர்சனம்.
  7. A pleasant conversation can turn acrimonious by perversity
    இனிமையான உரையாடல் குதர்க்கத்தால் சண்டையில் முடிவதுண்டு.
  8. One can praise oneself in praising an ideal
    ஒரு இலட்சியத்தைப் பாராட்டுவது தன்னைப் புகழ்வதாக அமையலாம்.
  9. Accomplishment is not easily enumerated by endowments
    சாதனை என்பதை முடித்த காரியங்களால் நிர்ணயிக்க முடியாது.
50
"All this she must possess," added Darcy, "and to all this she must yet add something more substantial, in the improvement of her mind by extensive reading."
“இவையெல்லாம் வேண்டும்” என்ற டார்சி “இத்துடன் முக்கியமாக நிறைய புத்தகங்கள் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்” என்று முடித்தான்.
  1. Darcy has in mind Elizabeth as the most accomplished woman
    எலிசபெத் அதிகபட்ச சாதனைக்குரிய பெண் என டார்சி நினைக்கிறான்.
  2. Darcy feels Elizabeth to be very wise and learned which Elizabeth misses
51
"I am no longer surprised at your knowing only six accomplished women. I rather wonder now at your knowing any."
“உனக்கு ஆறு திறமைசாலி பெண்களை மட்டுமே தெரிந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இப்பொழுது நான் நினைப்பது என்னவென்றால், இம்மாதிரி ஒரு பெண்ணைகூட நீ அறிந்திருக்க முடியாது.”
 
  1. Elizabeth’s comment eliminates the sisters from the accomplishment
  2. This strongly stings the sisters who violently defend themselves
52
"Are you so severe upon your own sex as to doubt the possibility of all this?"
“உன் பெண்ணினத்தின் மேலே உனக்கு இவ்வளவு சந்தேகமா, கடுமையாக விமரிசனம் செய்கிறாயே.”
  1. Compliments turning into condemnation still brings the contending parties closer in feeling
    பாராட்டு குறை கூறுவதானாலும் முடிவில் இருவரும் நெருங்கி வருவர்.
53
"I never saw such a woman. I never saw such capacity, and taste, and application, and elegance, as you describe united."
“அப்படிப்பட்ட பெண்மணியை நான் சந்தித்ததில்லை. நீ விவரித்ததுபோல் எல்லா திறமைகளும் ஒருங்கிணைந்த பெண்மணியை நான் பார்த்ததில்லை.”
  1. One way to attract is self-depreciation
    தன்னைக் குறைத்துப் பேசினால் கேட்பவருக்குக் கவர்ச்சியாக இருக்கும்.
54
Mrs. Hurst and Miss Bingley both cried out against the injustice of her implied doubt, and were both protesting that they knew many women who answered this description, when Mr. Hurst called them to order, with bitter complaints of their inattention to what was going forward. As all conversation was thereby at an end, Elizabeth soon afterwards left the room.
எலிசபெத் கூறியதை கேட்டு திருமதி. ஹர்ஸ்ட்டும், மிஸ். பிங்கிலியும் இந்த வாதம் நியாயமற்றது எனவும், எல்லா திறமைகளும் கொண்ட நிறைய பெண்மணிகளை தங்களுக்குத் தெரியும் எனவும் வாதாடினர். திரு. ஹர்ஸ்ட் அவர்களை அமைதியாக இருக்கும்படியும், சீட்டாட்டத்தை கவனிக்காமல் பேசுவதை நிறுத்தும்படி சொல்லியும், கேட்கவில்லை, எல்லோருடைய உரையாடலும் இவ்வாறு நின்று போனது. எலிசபெத் உடனே அவ்வறையை விட்டகன்றாள்.
  1. Implied doubt is more stinging than open attack
    நேரடியாகத் தாக்குவதை விட சந்தேகப்படுவதாகக் கூறுவது நெஞ்சைச் சுடும்.
  2. Disorder is restored to order by discipline
    கட்டுப்பாடு ஒழுங்கீனத்தை ஒழுங்காக்கும்.
55
"Eliza Bennet," said Miss Bingley, when the door was closed on her, "is one of those young ladies who seek to recommend themselves to the other sex by undervaluing their own; and with many men, I dare say, it succeeds. But, in my opinion, it is a paltry device, a very mean art."
எலிசா வெளியே சென்ற பின் , “தங்களை தானே தாழ்த்திக் கொண்டு , ஆண்களிடத்து நல்ல பெயர் வாங்க , பெண்கள் கடைபிடிக்கும் உபாயம் இது. இதில் எலிசபெத்தும் ஒருத்தி ஆவாள். ஆண்கள் பலரிடம் இது செல்லுபடியாகும். ஆனால் என்னுடைய கருத்துபடி இது ஒரு மட்டமான கலையாகும்”என்றாள் மிஸ். பிங்கிலி.
  1. Any comment can be perversely turned against the speaker
    எந்த சொல்லையும் பேசியவர்க்கு எதிராக மாற்ற முடியும்.
  2. Caroline is thoroughly prejudiced against Lizzy and is mean to her
  3. Those who describe an accusation rarely see it describes his own act
    பிறர் குறையை விளக்கமாகக் கூறுபவன் தன் குறையை விளக்குவதை அறிவதில்லை.
56
"Undoubtedly," replied Darcy, to whom this remark was chiefly addressed, "there is meanness in all the arts which ladies sometimes condescend to employ for captivation. Whatever bears affinity to cunning is despicable."
“சந்தேகத்திற்கிடமில்லாமல்”என்ற டார்சி “மற்றவர்களை கவருவதற்கு செய்யும் எந்த ஒரு நடவடிக்கையும் பிரயோஜனமற்றது , விரும்பத்தகாதது எனக்கு பிடிக்காது.”
  1. Darcy’s comment touches Caroline of which he was oblivious. He was anxious to hide his interest in Elizabeth
  2. It is a subtle warfare each having a dig at the other
    இது சூட்சுமமான போராட்டம் , ஒருவர் அடுத்தவரை மறைமுகமாகத் தாக்குவது.
  3. Jealous people in anger cause more harm than good by their anger to their cause
    பொறாமையால் கோபப்படுபவர் அக்கோபத்தால் தங்கள் காரியத்தைக் கெடுத்துக் கொள்வார்கள்.
57
Miss Bingley was not so entirely satisfied with this reply as to continue the subject.
பிங்கிலிக்கு அவனுடைய பதில் திருப்தியாக இல்லாததால் மேலும் பேச்சைத் தொடரவில்லை.
  1. Darcy’s reply to Caroline chastises Caroline, not Eliza
    டார்சி காரலீனுக்குக் கூறுவது அவளைக் குறை கூறுவதாகும், எலிசபெத்தையில்லை.
58
Elizabeth joined them again only to say that her sister was worse, and that she could not leave her. Bingley urged Mr. Jones's being sent for immediately; while his sisters, convinced that no country advice could be of any service, recommended an express to town for one of the most eminent physicians. This she would not hear of; but she was not so unwilling to comply with their brother's proposal; and it was settled that Mr. Jones should be sent for early in the morning, if Miss Bennet were not decidedly better. Bingley was quite uncomfortable; his sisters declared that they were miserable. They solaced their wretchedness, however, by duets after supper, while he could find no better relief to his feelings than by giving his housekeeper directions that every possible attention might be paid to the sick lady and her sister.
ஜேனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக எலிசபெத் கூறினாள். டாக்டர் ஜோன்ஸை உடனே வந்து பார்க்கும்படி ஏற்பாடு செய்வதாக பிங்கிலி கூற, அதற்கு அவனுடைய சகோதரிகள் உள்ளூர் வைத்தியரைவிட லண்டனில் இருந்து வேறு நல்ல வைத்தியரை வரவழைத்துக் காண்பிக்கலாம் என்றனர். ஜேனிற்கு இதில் உடன்பாடு இல்லை. அவள் வேண்டாம் என்றதால், டாக்டர் ஜோன்ஸையே வரவழைக்கலாம் என்று முடிவு எடுத்தனர். பிங்கிலிக்கு மனத்திற்கு கஷ்டமாக இருந்தது. சகோதரிகளுக்கு அறவே பிடிக்கவில்லை. ஏதோ வாக்குவாதம் செய்த வண்ணம் இருந்தனர். தங்களுக்கும் ஜேன் உடல்நிலை கவலை தருவதாக சொன்னாலும் , உணவு உண்டபின் இவ்விரு சகோதரிகளும் பாட ஆரம்பித்தனர். பிங்கிலிக்கு தன்னை எப்படி அமைதிபடுத்திக் கொள்வது என்று புரியவில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்மணியிடம் ஜேனையும் , எலிஸபெத்தையும் நன்கு கவனித்துக் கொள்ளும்படி கூறினான்.
  1. A mean atmosphere in the room directly worsens Jane’s health
  2. The disharmony at the card table is reflected by Jane’s health
    சீட்டாட்டத்தில் சுமுகம் குறைவது ஜேன் உடல் நலக்குறைவைக் காட்டுகிறது.
  3. Fever is the emotional temperature of the audience
    இங்குள்ளவருடைய உணர்ச்சிக் கொந்தளிப்பு ஜூரம்.
  4. Elizabeth knows her limits
  5. Bingley, being truly in love, is quite uncomfortable
  6. Bingley’s sisters are genuinely interested in Jane but also want to put up behaviour
  7. Duets cannot solace sorrow about ill health, especially joyful ones
    சந்தோஷமான டூயட் (duet) உடல் நலக்குறைவின் வருத்தத்தைக் குறைக்காது.
  8. The disturbed atmosphere outside the sick room causes deterioration of the patient inside
    வீட்டில் எழும் தொந்திரவு நோயாளியின் அவஸ்தையை அதிகப்படுத்தும்.
  9. Platitudes must be listened to, not acted upon
    வெறும் பேச்சைக் கேட்கலாம், அதன்படி நடக்க முடியாது.
  10. The best solace to a patient is greater attention
    நோய்க்கு கவனம் சிறந்த மருந்து



story | by Dr. Radut