Skip to Content

Volume I Chapter 18 : The Netherfield Ball

Chapter 18: The Netherfield Ball

நெதர்பீல்ட் நடனம்

 

Summary: Upon arriving at the ball, Elizabeth realizes that Wickham is absent because of Darcy. She is mortified during the first two dances by Collins’ clumsiness. Darcy once again requests her to dance with him and this time she agrees unwillingly. To annoy him, she brings up the topic of Wickham. Darcy gets angry, but controls himself. Sir William drops by and hints at future congratulations for Bingley and Jane. Mrs.Bennet, Collins and the younger girls behave in a most embarrassing way at the ball. The last to leave, the Bennets are not missed by Bingley’s sisters.
 
சுருக்கம்: நடன அரங்கத்திற்குள் நுழைந்தவுடன், டார்சி இருப்பதால், விக்காம் வராமல் இருந்துவிடுவான் என எலிசபெத் புரிந்து கொள்கிறாள். வேலை விஷயமாய் லண்டனுக்குப் போக வேண்டி வந்ததாக திரு. டென்னி கூறுகிறார். காலின்ஸுடன் ஆடிய முதல் இரண்டு நடனங்களில் காலின்ஸ் தர்மசங்கடமாகவும், பயபக்தியுடனும் நின்று கொண்டு, நடனமாடாமல், மன்னிப்பு மாத்திரம் கேட்டுக் கொண்டு, தவறாக நடனமாடி, எலிசபெத்தை பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகிறான். டார்சி மீண்டும் அவளை தன்னுடன் நடனமாடும்படி கேட்டு அவளும் அதற்கு ஒத்துக் கொண்டு அடுத்த இரண்டு நடனங்கள் அவனுடன் ஆடுகிறாள். நடனத்தின் இடையே, உரையாடலை ஆரம்பித்து, டார்சியை சங்கடப்படுத்த வேண்டும் என நினைத்து, விக்காமைப்பற்றி பேச ஆரம்பிக்கிறாள். விக்காம், எல்லோருடன் பழகுவதிலும், நண்பர்களை தேடிக் கொள்வதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவன், ஆனால் அவர்களை தக்கவைத்துக் கொள்வதுதான் அவனுக்கு கஷ்டம் என்று டார்சி கூறுகிறான். சர் வில்லியம் இவர்கள் அருகில் வந்து ஜேனிற்கும், பிங்கிலிக்கும் இடையேயுள்ள உறவுக்காக முன்னதாகவே வாழ்த்துகிறார். ஜேன்-பிங்கிலியின் திருமண வாய்ப்பினை எல்லோருக்கும் கேட்கும்படியாகப் பேசிய தன் தாயாரது செயலினாலும், மேரியின் மோசமான இசையினாலும் எலிசபெத் மிகவும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறாள். கடைசியாக கிளம்பிய பென்னட் குடும்பத்தினர் பிங்கிலியின் சகோதரிகளுக்கு ஒரு இழப்பாகத் தோன்றவில்லை.
 
 
1
Till Elizabeth entered the drawing-room at Netherfield, and looked in vain for Mr. Wickham among the cluster of red coats there assembled, a doubt of his being present had never occurred to her. The certainty of meeting him had not been checked by any of those recollections that might not unreasonably have alarmed her. She had dressed with more than usual care, and prepared in the highest spirits for the conquest of all that remained unsubdued of his heart, trusting that it was not more than might be won in the course of the evening. But in an instant arose the dreadful suspicion of his being purposely omitted for Mr. Darcy's pleasure in the Bingleys' invitation to the officers; and though this was not exactly the case, the absolute fact of his absence was pronounced by his friend Mr. Denny, to whom Lydia eagerly applied, and who told them that Wickham had been obliged to go to town on business the day before, and was not yet returned; adding, with a significant smile –
நெதர்பீல்டில் உள்ள வரவேற்பறைக்குள் நுழைந்து அங்கு கூடியிருக்கும் சிவப்புநிற கோட் அணிந்தவர்களிடையே விக்காமை தேடிப் பார்க்கும்வரை அவன் வராமல் இருப்பானோ என்ற சந்தேகம் எலிசபெத்திற்கு ஏற்படவில்லை. டார்சி-விக்காமின் இறுக்கமான சந்திப்பை பார்த்த ஞாபகம் வந்தும், அவன் வருகை குறித்து எந்த சந்தேகமும் வரவில்லை. வழக்கத்தைவிட அதிக கவனம் எடுத்துக் கொண்டு உடை அணிந்திருந்தாள். அவள் இதுவரை காண்பிக்காத உணர்வுகளையும் வெளியில் வரவழைத்து, அதில் மாலை நேரம் முடியும் பொழுது வெற்றியடையலாம் என்ற ஆர்வத்துடன் வந்திருந்தாள். டார்சியின் சந்தோஷத்திற்காக பிங்கிலியின் அழைப்பிலிருந்து அவனை திட்டமிட்டு ஒதுக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் அடுத்த க்ஷணம் எழுந்தது. காரணம் இதுவாக இல்லையென்றாலும், நேற்று ஏதோ வேலையாக ஊருக்குப் போக வேண்டி வந்ததினால் கிளம்பிச் சென்றவன் இதுவரை திரும்பி வரவில்லை என, உண்மையான காரணத்தை, அவனுடைய நண்பனான திரு. டென்னி கூறினார். மேலும் அர்த்தமுள்ள சிரிப்புடன்,
  1. Intense expectation yields unexpected disappointment
    தீவிரமாக எதிர்பார்ப்பது எதிர்பாராத ஏமாற்றத்தைத் தரும்.
  2. Disappointment, in the absence of doubt, is crushing
    சந்தேகமுமில்லாமல் வரும் ஏமாற்றம் மனிதனை நொறுக்கி விடும்.
  3. While in hope, even reasonable doubts don’t rear their heads
    நம்பிக்கையுள்ளவரை, நியாயமான சந்தேகமும் எழாது.
  4. Disappointment when no doubt ever appeared, the failure can be total, overwhelming and humiliatingly revealing
    சந்தேகமேயில்லாத பொழுது, தோல்வி முழுமையாக இருக்கும். ஏமாற்றம் அவமானம், நம்மை மீறி எழுந்து ஞானம் தரும்.
  5. Elizabeth could never doubt Wickham’s presence. Wickham is false and is a coward. Instead of seeing that, she is angry at Darcy. Wickham is only an entrance to Darcy. The subconscious object is only Darcy
  6. Necessity to attract compels the display
    கவர்ச்சி செய்யக் காட்டிக் கொள்வது அவசியம்.
  7. The care of her dressing, the certainty of her conquest are not only rewarded by his absence but a dig at his name
    கவனமாக டிரஸ் செய்தாள். நிச்சயமாக விக்காமை வெல்லலாம் என நினைத்தாள். அதற்குப் பலன் விக்காம் வரவில்லை.
  8. Caroline warns her of Wickham
    அத்துடன் காரலின் வந்து விக்காமைப் பற்றி மட்டமாக எச்சரிக்கிறாள்.
  9. Desire, when it accuses, accuses everyone except the right object
  10. Elizabeth is unpardonably irrational in expecting Bingley or Darcy to invite Wickham to the ball
    பிங்லியும், டார்சியும் நடனத்திற்கு விக்காமை அழைக்க வேண்டுமென அவள் எதிர்பார்ப்பது மன்னிக்க முடியாதது.
  11. Rationality expects the whole world to please oneself so that he may spite it
    நியாயம் என்பது தன்னை உலகம் முழுவதும் பாராட்டிப் போற்றினால் நான் அதைப் பழிவாங்குவேன் என்பதாகும்.
  12. The truth is, he was invited and he held himself back
    விக்காமை அழைத்தது உண்மை. அவன் வராததும் உண்மை.
  13. It did not strike Elizabeth ONCE that she was irrationally selfish in not accusing Wickham
    விக்காம் மீது தான் குறை காணாதது தன் குறையென ஒரு முறையும் அவளுக்குத் தோன்றவில்லை.
  14. Denny is triumphant in announcing the absence of Wickham
    விக்காம் வரவில்லையென டென்னி வெற்றிகரமாக முழங்குகிறான்.
  15. Denny too was as much a victim of Wickham as Elizabeth
    டென்னியும், எலிசபெத் போல விக்காம் பொய்யை நம்பி விட்டான்
  16. Whatever the cause of a failure, Mind accuses the one against whom it is prejudiced
    எந்த கஷ்டம் வந்தாலும், பிடிக்காதவரே காரணம் என நினைப்போம்.
2
"I do not imagine his business would have called him away just now, if he had not wished to avoid a certain gentleman here."
“இங்குள்ள ஒருவனை அவன் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தீர்மானித்து இருக்காவிடில், அவனுக்கு ஊருக்குச் செல்ல எந்த வேலையும் வந்திருக்காது.”
 
3
This part of his intelligence, though unheard by Lydia, was caught by Elizabeth, and as it assured her that Darcy was not less answerable for Wickham's absence than if her first surmise had been just, every feeling of displeasure against the former was so sharpened by immediate disappointment, that she could hardly reply with tolerable civility to the polite inquiries which he directly afterwards approached to make. Attention, forbearance, patience with Darcy, was injury to Wickham. She was resolved against any sort of conversation with him, and turned away with a degree of ill humour which she could not wholly surmount even in speaking to Mr. Bingley, whose blind partiality provoked her.
இந்த செய்தியினை லிடியா கேட்கவில்லை. ஆனால் எலிசபெத் அதனை கவனித்தாள். தான் நினைத்தது போலவே டார்சிதான் விக்காம் வராததற்கு காரணம் எனத் தெரிந்ததால், ஏமாற்றம் அடைந்தாள். அதனால் அவன்மீது கோபமும், வெறுப்பும் கொண்டதால், அவன் தன்னிடம் வந்து மரியாதையுடன் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்ல முடியவில்லை. டார்சி மீது, அக்கறை, சகிப்புத்தன்மை,பொறுமை இவைகளைக் காண்பித்தால் அது விக்காமுக்குச் செய்யும் துரோகமாக இருக்கும் என நினைத்தாள். அதனால் டார்சியுடன் எதுவும் பேசக்கூடாது என தீர்மானித்து அவனிடமிருந்து கோபமாக விலகிச் சென்றாள். பிங்கிலியிடம் பேசும் பொழுதும் அக்கோபம் மறையவில்லை. பிங்கிலியின் கண்மூடித்தனமான பாரபட்சம் அவளுக்கு எரிச்சலை வரவழைத்தது.
  1. It is noteworthy that one concerned will always be present at all critical junctions
    நெருக்கடியான நேரங்களில் சம்பந்தப்பட்டவர் இல்லாமலிருக்க மாட்டார்.
  2. Each person listens in a conversation to what pertains to him
    பலர் பேசும்பொழுது அவரவர் தமக்குரியதைக் கேட்டுக் கொள்வார்கள்.
  3. Lydia was interested in those present and does not long for him who is absent
    லிடியாவுக்கு உள்ளது முக்கியம், வராதவர் பற்றிக் கவலையில்லை.
  4. As long as Elizabeth was interested in Wickham, Lydia never thought of him. It means Wickham was a necessity to the family through one of the girls
    எலிசபெத்திற்கு விக்காம் மீது ஆசையுள்ளவரை லிடியா விக்காம் பக்கம் திரும்பவில்லை. அதாவது குடும்பத்திற்கு விக்காம் அவசியம். ஒரு பெண் அவனோடு தொடர்பு கொள்வது அவசியம்.
  5. Interested people never fail to listen to any news relevant to them
  6. Whoever hurts, the true grievance will be against the one who is already hated
    எவர் நமக்கு தவறிழைத்தாலும், ஏற்கனவே எதிரியாயுள்ளவர் மீதே கோபம் வரும்.
  7. Complete love of one makes us hate what he hates
    ஒருவர் மீது முழுப் பிரியமிருந்தால் அவருக்கு வெறுப்பானதன் மீது நமக்கும் வெறுப்பு எழும்.
  8. Sharp reply to polite courtesy comes out of bitterness
    மனம் கசந்தவனிடம் இனிமையாகப் பேசினால் பதில் கரடுமுரடாக வரும்.
  9. Immediate disappointment sharply attacks immediate target
  10. Darcy is attracted by the energy of hate as in truth it is her deeper interest in him
  11. Vital justice sees itself as injustice to the rivals
  12. Having resolved against any conversation with Darcy, she ends up dancing with him
  13. “Blind partiality of” Bingley is really her own attitude to Wickham
  14. Elizabeth vents her anger at Wickham’s absence over Darcy. She makes a sentimental ideal of it
    விக்காம் வராததால் கோபத்தை எலிசபெத் டார்சி மீது காட்டுகிறாள். விக்காமை அவள் ஆதர்ச புருஷனாக்கி விட்டாள்.
  15. She accuses Bingley of blind partiality while she is guilty of it
    பிங்லி கண்மூடித்தனமாக டார்சிக்குப் பணிவதை எலிசபெத் கண்டிக்கிறாள். அவளும் அப்படியே இருக்கிறாள்.
4
But Elizabeth was not formed for ill-humour; and though every prospect of her own was destroyed for the evening, it could not dwell long on her spirits; and having told all her griefs to Charlotte Lucas, whom she had not seen for a week, she was soon able to make a voluntary transition to the oddities of her cousin, and to point him out to her particular notice. The two first dances, however, brought a return of distress; they were dances of mortification. Mr. Collins, awkward and solemn, apologising instead of attending, and often moving wrong without being aware of it, gave her all the shame and misery which a disagreeable partner for a couple of dances can give. The moment of her release from him was exstacy.
நீண்ட நேரம் கோபமாக இருப்பது என்பது எலிசபெத்தால் முடியாத காரியம். தன்னுடைய எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகிப்போனாலும் அந்த ஏமாற்றம் அவளிடம் வெகு நேரத்திற்கு இல்லை. ஒரு வாரமாக சந்தித்திராத தன்னுடைய நெருங்கிய தோழியான சார்லெட்டிடம் தன் மனவருத்தங்களைக் கூறிய பிறகு, தன்னை வலிய மாற்றிக் கொண்டு காலின்ஸின் விநோதமான நடத்தைக்கு தயாரானாள், மேலும் அதனை சார்லெட்டிற்கும் காண்பித்தாள். முதல் இரண்டு நடனங்கள் அவளுக்குப் பெரும் துன்பத்தைத் தந்தன. நடனத்தைக் குழி தோண்டி புதைத்தாற் போலிருந்தது. நடனமாடாமல், மன்னிப்பு மட்டும் கேட்டுக் கொண்டு, தவறாக ஆடுவதே தெரியாமல் நடனமாடி அவமானத்தையும், சங்கடத்தையும் தேடித் தந்தான். அவனிடம் விடுபட்டு வந்தது அவளுக்கு எல்லையில்லா ஆனந்தத்தை அளித்தது.
  1. Personal inner atmosphere prevails over external circumstances
    புறச்சூழலை அகவுணர்வு மீறும்.
  2. It is remarkable that her liveliness gets the better of her temper
    எரிச்சலை மீறி அவள் கலகலப்பாகி விடுகிறாள். அது ஆச்சரியம்.
  3. Her partner is not Collins but her mother in her
    காலின்ஸ் அவள் பார்ட்னரில்லை. தன்னுள் உள்ள தாயாரே பார்ட்னர்.
  4. The pleasure of talking of one’s love in any measure or in any context is the most refreshing upliftment one can feel
    தன் காதலை எந்த வகையிலாவது யாரிடமாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசுவது சொர்க்கலோக இன்பம்.
  5. Cheerfulness is her disposition; ill-humour is a passing cloud
  6. Unburdening is chastening the nerves
    குறையைக் கொட்டி விட்டால், பாரம் இறங்கும்.
  7. She unburdens to Charlotte, an agent of good will for her. That brings Darcy’s dance proposal
  8. She who listens to the complaints against one patiently receives the reward of listening against him
    ஒருவர் கூறும் குறையைப் பொறுமையாகக் கேட்பவருக்குப் பரிசாக அவர் மீது குறையைக் கேட்கும்படி அமையும்.
  9. Common sense is a source of good will. Charlotte’s good will readily gets her married and that leads Elizabeth to Pemberley. Actually the entail was the beginning for Pemberley
  10. Dancing with Collins was a shame. It was the real forerunner of Darcy’s letter
  11. Etiquette demands submission to mortifying public exhibitions
    பலர் எதிரில் அவமானப்படும்படி நடப்பதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியது நாகரீகம்.
  12. Relief from mortification is more enjoyable in intensity than an expansive enjoyment
    குதூகலமான சந்தோஷத்தை விட அவமானத்திலிருந்து விடுபடுவது பெரிய நிம்மதி.
5
She danced next with an officer, and had the refreshment of talking of Wickham, and of hearing that he was universally liked. When those dances were over she returned to Charlotte Lucas, and was in conversation with her, when she found herself suddenly addressed by Mr. Darcy, who took her so much by surprise in his application for her hand, that, without knowing what she did, she accepted him. He walked away again immediately, and she was left to fret over her own want of presence of mind; Charlotte tried to console her.
அடுத்து வேறு ஒரு அதிகாரியுடன் ஆடும் பொழுது, விக்காமைப்பற்றி பேசிக் கொண்டிருந்தது அவளுக்குப் புத்துணர்ச்சியை அளித்தது. அவன் எல்லோராலும் விரும்பப்பட்டவன் எனத் தெரிந்தது. அந்த நடனங்கள் முடிந்தவுடன் சார்லெட் லூகாஸிடம் பேசலானாள். அச்சமயம் திடீரென்று டார்சி அவளிடம் வந்து தன்னுடன் நடனமாடும்படி கேட்டது ஆச்சரியமாக இருந்தது, அவளும் அதற்கு இணங்கினாள். யோசிக்காமல் தான் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருத்தப்பட்ட எலிசபெத்தை சார்லெட் சமாதானப்படுத்த முயன்றாள்.
  1. For one in love there is no greater delight than to talk about his lover
  2. To pronounce the name of the loved one is almost bliss
    தான் நெஞ்சார விரும்புபவர் பெயரைச் சொல்லவும் உடலெல்லாம் தித்திக்கும்.
  3. One who is interested in another readily responds to the intensity of her emotions whatever the cause for that intensity
    ஒருவர் மீது பிரியமிருந்தால் அவர் எந்த விஷயத்தில் நெகிழ்ந்தாலும் உணர்வு உடன் உணரும்.
  4. Elizabeth accepts Darcy for a dance in spite of her determination. It shows the power of the Force that keeps them afloat
    தன் முடிவுக்கு எதிராக எலிசபெத் டார்சியுடன் டான்ஸ் ஆட சம்மதிக்கிறாள். இருவரையும் மீறிய சக்தி இருவரையும் சேர்ப்பது தெரிகிறது.
  5. Her accepting Darcy for dancing is actually her accepting to marry him
  6. ‘Want of presence of mind’ is really living up to the subconscious aspiration
  7. The subconscious knows no slip
    ஆழ் மனச் செயல்களில் அணுவளவும் தவறாது.
  8. Fretting over a subconscious luck is the contradiction of the mind and heart
    ஆழ்மனம் அதிர்ஷ்டம் கொண்டு வந்தால் உடன் வரும் எரிச்சல் மனமும், உணர்வும் செயல்படும் வகை.
  9. Presence of Mind too obliges the subconscious by failing
    சமயோசிதம் தான் தவறி காரியத்தைப் பூர்த்தி செய்யும்.
  10. Elizabeth sees the greatest luck as the greatest evil
  11. The subconscious urge gets over the surface preference
    ஆழ்மனம் மேல் மனத்தை மீறிச் செயல்படுகிறது.
6
"I dare say you will find him very agreeable."
“உனக்கு அவனை பிடிக்கும் என்பது உறுதி.”
  1. In telling Elizabeth that she would find Darcy agreeable, Charlotte rehearses her role with Collins later
    டார்சி இதமாக மாறுவான் என ஷார்லோட் எலிசபெத்திற்குச் சொல்கிறாள். அதன் வழி ஷார்லோட் காலின்ஸை உணர்ந்து அனுபவிக்கும் நிலை வந்தது.
  2.   Charlotte’s advice was one of common sense and good will
7
"Heaven forbid! That would be the greatest misfortune of all! -- To find a man agreeable whom one is determined to hate! Do not wish me such an evil."
“கடவுளே! -- அப்படியெனில் அது எல்லாவற்றையும்விட மிக துரதிர்ஷ்டவசமானது! -- யார் மற்றவர்களை வெறுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கிறானோ அவனைக் கண்டால் பிடிக்கும் எனில்! -- எனக்கு இப்படி ஒரு சாபம் கொடுக்காதே.”
  1. In determining to hate Darcy, Elizabeth speaks out what she thinks not what she really is
    டார்சியை வெறுக்க முடிவு செய்ததை எலிசபெத் பேசும்பொழுது தான் நினைப்பதைப் பேசுகிறாள். உள்ளுணர்வை அவள் அறியவில்லை.
  2. Compliments present as contradictions
    உதவிக்கு வருவது உபத்திரமாக வரும்.
8
When the dancing recommenced, however, and Darcy approached to claim her hand, Charlotte could not help cautioning her in a whisper not to be a simpleton, and allow her fancy for Wickham to make her appear unpleasant in the eyes of a man of ten times his consequence. Elizabeth made no answer, and took her place in the set, amazed at the dignity to which she was arrived in being allowed to stand opposite to Mr. Darcy, and reading in her neighbours' looks their equal amazement in beholding it. They stood for some time without speaking a word; and she began to imagine that their silence was to last through the two dances, and at first was resolved not to break it; till suddenly, fancying that it would be the greater punishment to her partner to oblige him to talk, she made some slight observation on the dance. He replied, and was again silent. After a pause of some minutes she addressed him a second time with -- "It is your turn to say something now, Mr. Darcy -- I talked about the dance, and you ought to make some kind of remark on the size of the room, or the number of couples."
மீண்டும் நடனம் ஆரம்பித்த பொழுது, டார்சி எலிசபெத்தை நோக்கி வருவதை கண்ட சார்லெட், முட்டாள்தனமாக விக்காமைப்பற்றி ஏதோ கற்பனை செய்து கொண்டு அவனைவிட பத்து மடங்கு உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதன்முன் மோசமாக நடந்து கொள்ள வேண்டாம் என மெல்லிய குரலில் எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை. எலிசபெத் பதிலேதும் கூறவில்லை. தானும் கண்ணியமாக நடந்து கொண்டு டார்சிக்கு எதிராக நடன மேடையில் வந்து நின்று கொண்டது அவளுக்கே பிரமிப்பாக இருந்தது. கூடியிருந்தவர்களும் தங்களுடைய பிரமிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவர்களைப் பார்த்தனர். இருவரும் ஒரு வார்த்தைகூட பேசாது சிறிது நேரம் நின்றிருந்தனர். இரண்டு நடனங்கள் முழுவதும் இப்படி மௌனமாகவே இருப்போமோ என நினைத்த எலிசபெத், முதலில் இந்த மௌனத்தை கலைக்க வேண்டாம் எனத் தீர்மானித்தாள். பிறகு தான் பேசினால் அவனும் பதில் சொல்ல வேண்டி வரும், அது அவனுக்கு தண்டனையாக அமையும் என எண்ணி நடனத்தைப்பற்றி ஏதோ கருத்து சொல்லலானாள். அதற்கு பதிலளித்த அவன் மீண்டும் அமைதியாக இருந்தான். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு அவனிடம் இரண்டாம் முறையாக பேச ஆரம்பித்தாள். “டார்சி இப்பொழுது உன் முறை. நீ ஏதாவது பேச வேண்டும் -- நான் நடனத்தைப்பற்றி பேசினேன். நீ இந்த அறையின் அளவைப்பற்றியோ அல்லது எவ்வளவு ஜோடிகள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியோ பேசியாக வேண்டும்.”
  1. Pure intense good will is never known to fail
    தூய்மையான தீவிர நல்லெண்ணம் தவறாது
  2. The height of good will has the right to abuse
    நல்லெண்ணம் அதிகமானால் அதற்குத் திட்டவும் உரிமையுண்டு.
  3. Good will of even a mercenary mind perceives the truth
    ஆதாயமான மனம் மட்டமாகப் பேசினாலும் உண்மையைக் கூறும்.
  4. Dignity through unpleasant events is a foretaste of what is to come
    கசப்பான நிகழ்ச்சியின் பெருந்தன்மை வருவதைக் குறிக்கும்.
  5. Elizabeth is amazed at the dignity of dancing with Darcy. Life thrusts luck on her
  6. Elizabeth FEELS a little of the dignity in dancing with Darcy
    டார்சியுடன் டான்ஸ் ஆடுவதின் பெருமையை எலிசபெத் சற்று உணர்கிறாள்.
  7. It is a true beginning of relationship
    உண்மையான உறவு உற்பத்தியாயிற்று.
  8. In asking Darcy to do what she wants – to talk – she is already playing the role of a wife
    டார்சியைப் பேசும்படி உரிமையுடன் உத்தரவிடுவது மனைவி ஸ்தானத்திற்கு வந்தது போலிருக்கிறது.
  9. All the neighbours took notice of it
  10. The spoken initiative is that of the woman, though the man sought her on his own initiative
    பெண்ணைத் தொடரும் ஆணுக்கு அவளே முதலில் பேச்சுக் கொடுத்தது தெரியாது.
  11. It was Elizabeth who spoke first expressing the rule
  12. Darcy did not speak, answers her and keeps silent because he was too full of emotions
  13. Elizabeth tells him it was his turn to speak and after his reply she declares silence will do
  14. Already she behaves like a married wife taking liberties with him
  15. She further lays down the rules of talking during a dance
  16. Conscious awkwardness is truly the subconscious fullness of positive emotions
    மனம் ஆழத்தில் நல்லபடியாக நிறைந்திருந்தாலும் பேச்சு விகாரமாக வரும்.
  17. Saturated emotions seeking intensely are unjustly hurt if they are delivered through inveterate pride
    நிறைவான உணர்ச்சி தீவிரமாக நாடினாலும், கர்வம் அர்த்தமற்றுக் கொடுக்கும் பரிசால் புண்படும்.
9
He smiled, and assured her that whatever she wished him to say should be said.
தான் என்ன பேச வேண்டும் என அவள் நினைக்கின்றாளோ அதையெல்லாம் பேசுவதாக, சிரித்த வண்ணம் அவன் உறுதியளித்தான்.
  1. To oblige a naughty child is the privilege of a strong liberal parent
    வலிமையான பெருந்தன்மை போக்கிரி குழந்தைக்கு இடம் தருவது சுதந்திரம் பெற்ற உரிமை.
  2. Darcy behaves like an obedient husband
    மணமான கணவன் போல டார்சி அவள் பேச்சை ஏற்று நடக்கிறான்.
  3. Darcy is unable to know her point of reference. To him she was an enigma
10
"Very well. That reply will do for the present. Perhaps by and by I may observe that private balls are much pleasanter than public ones. But now we may be silent."
“மிக நன்று, -- தற்சமயம் இந்த பதில் போதும் -- போகப்போக பொதுமக்களுக்காக நடக்கும் நடனத்தைவிட தனிப்பட்ட முறையில் நடக்கும் நடன ஏற்பாடுதான் நன்றாக இருக்கும் என நான் பார்ப்பேனாக இருக்கும் --ஆனால் இப்பொழுது நாம் பேசாமல் இருக்கலாம்.”
  1. The least little scope to dominate the other is never spared by the human psyche i.e. the ego
    அடுத்தவரை அதிகாரம் செய்யும் வாய்ப்பை மயிரிழையும் மனிதன் மறக்க மாட்டான்.
11
"Do you talk by rule, then, while you are dancing?"
“நீ நடனம் ஆடும் பொழுது கண்டிப்பாக பேசிக் கொண்டேதான் இருப்பாயா?”
  1. His patience came to an end
    அவன் பொறுமையிழந்தான்.
  2. Answers extracted out of silent crudeness are formulas not replies in conversation
    பேசாமலிருக்கும் அநாகரீகமானவரை பேசச் செய்வது உருவம் பெறாத உணர்ச்சியின் சொல்லாகும்.
12
"Sometimes. One must speak a little, you know. It would look odd to be entirely silent for half an hour together; and yet for the advantage of some, conversation ought to be so arranged, as that they may have the trouble of saying as little as possible."
“சில சமயங்களில். ஒருவர் சிறிதளவாவது பேச வேண்டும். அரைமணி நேரம் தொடர்ந்து மௌனமாக இருப்பது பார்ப்பதற்கு விநோதமாக இருக்கும். ஒரு சில பேரின் நன்மைக்காகவே, ஏதாவது ஒரு சில வார்த்தைகளாவது பேசினால் போதும் என்ற அளவுக்கு நாம் நம் உரையாடலை அமைத்துக் கொள்ளலாம்.”
  1. Self-justifying explanations are devoid of sense, nor are they formulated in any sense of the word
    தான் சரி எனப் பேசுவதற்கு அர்த்தமில்லை. எந்த இலட்சியத்திலும் உருவான பதில்களில்லை அவை.
  2. She orders him about as if she was a married wife
  3. She gives an instruction that is almost an order
    உத்தரவு போன்ற சொற்களை அவள் பேசுகிறாள்.
  4. Perhaps she is already aware of the fact that she would be marrying him
13
"Are you consulting your own feelings in the present case, or do you imagine that you are gratifying mine?"
“இப்பொழுது நீ உன்னைப்பற்றி பேசுகிறாயா அல்லது என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதுபோல் பேசுகிறாயா?”
  1. His real response comes out
    டார்சியின் உண்மையான உணர்ச்சி எழுகிறது.
  2. One who is entirely out of context and has to answer coming out of an emotional saturation, expresses the wisdom of the juvenile
    சம்பந்தப்படாதவன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினால் அது அறிவில்லாத குழந்தையின் அர்த்தமற்றப் பேச்சாகும்.
14
"Both," replied Elizabeth archly; "for I have always seen a great similarity in the turn of our minds. We are each of an unsocial, taciturn disposition, unwilling to speak, unless we expect to say something that will amaze the whole room, and be handed down to posterity with all the éclat of a proverb."
“இரண்டு பேரைப்பற்றியுமே” என்ற எலிசபெத் “நம் இருவருக்கும் ஒரே மனநிலைதான் இருக்கிறது என்பதனை நான் பார்த்திருக்கிறேன். நம் இருவருக்குமே பழகத் தெரியாது, பேசத் தெரியாது, பேசவும் பிடிக்காது. எல்லோரையும் பிரமிக்க வைக்க வேண்டும் என்றால் மட்டும் பேசுவோம், நம் பேச்சு நம் சந்ததியினருக்கு ஒரு பழமொழிபோல் சொல்லப்படும் என்றால் மட்டுமே பேசுவோம்.”
  1. In some context Elizabeth finds herself using ‘both’ uniting them. In his letter he does it. Even later in this dance he includes her in a statement
    சில சமயம் எலிசபெத் ‘இருவரும்’ என்று இருவரையும் இணைத்துப் பேசுகிறாள். டார்சி தன் கடிதத்தில் அப்படி எழுதுகிறான். இந்த டான்ஸிலும் டார்சி இருவரையும் இணைத்துப் பேசுகிறான்.
  2. Accusation delivered through appreciation delivers the former
    பாராட்டும் குறையும் கலந்தால் குறை மட்டும் வெளி வரும்.
  3. She gives him a true, if unflattering description of his personality
    எலிசபெத் அவனை விவரிக்கிறாள். அது உண்மை. அவனுக்குப் பிடிக்காத விவரம்.
  4. She points out the similarities of their disposition, both anti–social
15
"This is no very striking resemblance of your own character, I am sure," said he. "How near it may be to mine, I cannot pretend to say. You think it a faithful portrait undoubtedly."
“நீ சொல்வது எல்லாம் உனக்குப் பொருந்தாது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். எப்படி எனக்குப் பொருந்தும் என என்னால் சொல்ல முடியாது. ஆனால் நான் இப்படித்தான் என நீ நம்புகிறாய்.”
  1. Accusation and appreciation do not become convenient conservational complements
    பாராட்டும் குறையும் இனிமையான உரையாடலுக்கு இதமாகச் சேர்ந்தவையாகாது.
16
I must not decide on my own performance."
“என்னைப்பற்றி நானே தீர்மானிக்கக் கூடாது.”
  1. In an odd mixture of crudeness, offensiveness, love, adoration, sarcasm, modesty loses its elegance, even becomes ludicrous
    முரடனின் கோபம், புண்படும் சொல், அன்பும் பாராட்டும், குத்தலும் கலந்து வந்தால், அடக்கம் தன் அழகை இழக்கும். கேலியாகும்.
17
He made no answer, and they were again silent till they had gone down the dance, when he asked her if she and her sisters did not very often walk to Meryton? She answered in the affirmative; and, unable to resist the temptation, added, "When you met us there the other day, we had just been forming a new acquaintance."
அவன் பதிலேதும் சொல்லவில்லை. வரிசையின் இறுதிவரை சென்று நடனமாடும் பொழுது, இருவரும் மீண்டும் மௌனமாக இருந்தனர். அப்பொழுது அவன், அவளும் அவளது சகோதரிகளும் அடிக்கடி மெரிடனுக்குச் செல்வார்களா எனக் கேட்டான். “ஆமாம்” என்ற அவள் தனது ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் “அன்று நீ எங்களை சந்தித்த பொழுது நாங்கள் புதிய நபர் ஒருவருடன் அறிமுகமாகிக் கொண்டிருந்தோம் என்றாள்.”
  1. He refers to her walking to Meryton, perhaps to dwell on his seeing her the other day. He constantly tries to unite her with him in his thoughts. She does the opposite
    பெண்கள் மெரிடனுக்குப் போனதைக் குறிப்பிடுகிறான். தான் பார்த்ததைக் குறிப்பிடுகிறான். பேச்சில் அடிக்கடி இருவரையும் சேர்த்துப் பேசுகிறான். அவள் எதிராகப் பேசுகிறாள், நடக்கிறாள்.
  2. The temptation to provoke is the greatest of temptation
    பிறரைக் கிளப்பும் ஆர்வம் பெரிய ஆர்வம்.
  3. She takes the first occasion to introduce Wickham.
  4. It is she who forcibly brings in Wickham into their conversation
    அவளே வற்புறுத்தி விக்காமை பேச்சில் வலிய கொண்டு வருகிறாள்.
  5. The desire to mention the object of love in some context or no context is the dominant urge of love
    காதலின் மயக்கத்திலுள்ளவன் காதலியின் பெயரை அவசியமாகவோ, இல்லாமலோ பேசத் துடிப்பான்.
18
The effect was immediate. A deeper shade of hauteur overspread his features, but he said not a word, and Elizabeth, though blaming herself for her own weakness, could not go on. At length Darcy spoke, and in a constrained manner said, "Mr. Wickham is blessed with such happy manners as may ensure his making friends -- whether he may be equally capable of retaining them, is less certain."
உடனே அவனிடம் ஒரு மாறுதல் தெரிந்தது. அவன் முகத்தில் கடுமை தெரிந்தது, ஆனால் ஒரு வார்த்தையும் பேசவில்லை. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் இவ்வாறு கேட்டதற்கு, தன் இயலாமையை நினைத்து வருத்தப்பட்ட எலிசபெத் பேச்சைத் தொடரவில்லை. வெகு நேரத்திற்குப் பிறகு டார்சி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசலானான், “அவனுடைய கலகலப்பான சுபாவத்தால் சுலபமாக நண்பர்களைத் தேடிக் கொண்டு விடுவான். ஆனால் அந்த நட்பு நீடிக்குமா என்பது சந்தேகம்தான்.”
  1. Whatever the conscious aim of either, she subconsciously touches him. His efforts are on the surface mind. The lady touches the man first
    இருவரும் என்ன நினைத்தார்களோ அவள் அவன் ஆழ்மனத்தைப் தொட்டு விடுகிறாள். அவன் முயற்சி முழுவதும் மேல் மனத்திலுள்ளது. பெண் முதலில் ஆணைத் தீண்டுகிறாள்
  2. The meeting of lovers on any topic, however simple, will be intense
    காதலர்கள் எதற்காக சந்தித்தாலும் சந்திப்பு தீவிரமாகும்.
  3. Negative or positive, one enjoys intensity
    நல்லதும் கெட்டதும் தீவிரமாக இருக்கும்.
  4. The aim is to touch him effectively if not on the surface at least subconsciously
    அவள் ஆழ் மன இலட்சியம் அவனைத் தீண்டுவது. மேல் மனத்தைக் கவர முடியவில்லையெனில் ஆழ் மனத்தைத் தொடலாம்.
  5. He was touched to the quick
    சுள் என உரைக்குமாறு அவன் தீண்டப்பட்டான்.
  6. Offence reaches the other deeper. She does touch him so
  7. His statement about Wickham becomes exactly true
    விக்காமைப் பற்றி டார்சி கூறியது உண்மையாயிற்று.
  8. Intentionally, intensely, she pulls him out. He refrains from responding
    வேண்டுமென்றே தீவிரமாக அவள் அவனை வம்பிற்கிழுக்கிறாள். அவன் பேசாமலிருக்கிறான்.
  9. To foster good relationship, one needs pleasant manners, to maintain it over a period requires mature culture, to delight in it forever, one must be endowed with a patience that is endless
    இனிய பழக்கம் நல்லுறவை ஏற்படுத்தும். உயர்ந்த பண்பால் அது நிலை நிறுத்தப்படும். நீடித்து அதை ஆனந்தமாக அனுபவிக்க முடிவில்லாத பொறுமை தேவை.
19
"He has been so unlucky as to lose your friendship," replied Elizabeth with emphasis, "and in a manner which he is likely to suffer from all his life."
“அவனுடைய துரதிஷ்டம் உன்னுடைய நட்பை இழக்க வேண்டி வந்தது” என்று அழுத்தமாக பதிலளித்த எலிசபெத் “அதுவும் எப்படியெனில் தன் வாழ்நாள் முழுவதும் அதனால் அவன் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.”
  1. She directly accuses him of injustice to Wickham
  2. Petulance is pertness of temper
    சிறியதை பெரிதுபடுத்த குணம் காரமாக இருக்க வேண்டும்.
20
Darcy made no answer, and seemed desirous of changing the subject. At that moment Sir William Lucas appeared close to them, meaning to pass through the set to the other side of the room; but on perceiving Mr. Darcy he stopt with a bow of superior courtesy to compliment him on his dancing and his partner.
டார்சி பதிலேதும் கூறவில்லை. பேச்சை மாற்ற வேண்டும் என எண்ணினான். அச்சமயம் அவ்வறையின் எதிர்புறம் செல்வதற்காக வந்த வில்லியம் லூகாஸ் அவன் அருகில் வந்த பொழுது, டார்சியைப் பார்த்து மிக்க சந்தோஷத்துடன் வணக்கம் தெரிவித்து, அவனுடைய நடனத்திற்கும், அவனுடைய சக ஜோடிக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
  1. That silences Darcy who withdraws into himself. He was deeply touched by her
  2. Raising a troublesome topic which the other avoids to prevent embarrassment to us, is one way of forging a life long relationship
    சங்கடத்தைத் தவிர்க்க அடுத்தவர் விலக்கும் விஷயத்தை எடுத்துப் பேசினால் நட்பு நாள்பட வரும்.
  3. The courtesy of a cultured person becomes superior courtesy when it is witnessed in an appropriate society
    பொருத்தமானவரிடையே பழகும்பொழுது பண்பானவரின் இனிய பெருந்தன்மை உயர்ந்த மனிதத்தன்மையாக மிளிரும்.
  4. Sir Lucas comes then. Wherever the surface conscious mind of Man insists on deviation, life responds readily
  5. Sir William is drawn to Darcy, exactly as Collins is
    சர். வில்லியம் டார்சியை நெருங்குகிறார். காலின்ஸ் போல் நடக்கிறார்.
  6.  Here is a hint, which I am not able to see, that Charlotte’s wedding and Sir William’s approach to Darcy are connected
    இதில் ஒரு குறிப்புள்ளது. ஷார்லோட் திருமணமும் சர். வில்லியம் பேசுவதும் தொடர்பானவை. எப்படியெனத் தெரியவில்லை.
  7. Her deep touching of Darcy resulted in his being deeply touched about Jane’s wedding by Sir Lucas
    அவள் டார்சியை ஆழ்ந்து தீண்டியது, டார்சி ஜேன் விஷயத்தில் ஆழ்ந்து யோசிக்கும் நிலை ஏற்பட்டது. அதை சர்.லூகாஸ் செய்கிறார்.
21
"I have been most highly gratified indeed, my dear sir. Such very superior dancing is not often seen. It is evident that you belong to the first circles. Allow me to say, however, that your fair partner does not disgrace you, and that I must hope to have this pleasure often repeated, especially when a certain desirable event, my dear Miss Eliza (glancing at her sister and Bingley) shall take place. What congratulations will then flow in! I appeal to Mr. Darcy -- but let me not interrupt you, sir. You will not thank me for detaining you from the bewitching converse of that young lady, whose bright eyes are also upbraiding me."
“எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனதருமை டார்சி, இம்மாதிரி சிறந்த நடனத்தை அடிக்கடி பார்க்க முடியாது. சிறப்பாக நடனமாடுபவர்களில் நீயும் ஒருவன் எனத் தெரிகிறது. உன்னுடைய ஜோடியும் உனக்கு சமமாக ஆடி உன்னுடைய திறமைக்குப் பெருமைத் தேடி தந்திருக்கிறாள். அடிக்கடி நீங்கள் இம்மாதிரி நடனங்கள் ஆட வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். எனதருமை எலிசா, அதுவும் நாம் மிகவும் விரும்பும் (அவளுடைய சகோதரியையும், பிங்கிலியையும் பார்த்தவாறு) ஒரு சம்பவம் நடக்கும் பொழுது, அப்பொழுது எவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்கும்! நான் டார்சியிடம் வேண்டுகிறேன்:-- ஆனால் நான் உங்களை இடைமறிக்க விரும்பவில்லை, ஐயா -- இந்த இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததை இடைமறித்த எனக்கு நீங்கள் நன்றி சொல்ல மாட்டீர்கள், அவளது கண்களும் என் மேலுள்ள கோபத்தைக் காட்டுகின்றன.”
  1. A provocation brings in a life event that can result in another disastrous provocation
    ஒருவர் ஆத்திரத்தைக் கிளப்பினால் நடப்பது பெரிய அளவில் ஆத்திரமூட்டுவதாக அமையும்.
  2. Sir Lucas’s compliment on his superior dancing is, perhaps, recognition of their love. Sir Lucas speaks of a certain event. Is it Darcy’s wedding?
  3. Sir Lucas gets a distant perception but voices it as Bingley’s wedding. Coming events cast their shadows in advance. Darcy was alerted. Was he alerted by Jane or his own attraction to Elizabeth? Consciously it is to Jane, subconsciously it is to Elizabeth
  4. Sir William refers to Elizabeth’s bright eyes which attract Darcy which means the character of her eyes is known
    எலிசபெத்தின் பிரகாசமான கண்களை சர்.வில்லியம் குறிப்பிட்டுப் பேசுகிறார். டார்சியை கவர்ந்தவை அவை. அவள் கண்களை அனைவரும் அறிவர்.
22
The latter part of this address was scarcely heard by Darcy; but Sir William's allusion to his friend seemed to strike him forcibly, and his eyes were directed with a very serious expression towards Bingley and Jane, who were dancing together. Recovering himself, however, shortly, he turned to his partner, and said, "Sir William's interruption has made me forget what we were talking of."
இறுதியாக சர் வில்லியம் கூறியவைகள் டார்சி காதில் விழவில்லை. ஆனால் தனது நண்பனைப்பற்றி கூறியது அவனை மிகவும் தாக்கியதுபோல் தோன்றியது. பிங்கிலியும், ஜேனும் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தான். ஆனால் வெகு சீக்கிரமாய் தன்னை சுதாரித்துக் கொண்டு எலிசபெத்தை நோக்கி, “சர் வில்லியம் குறுக்கே வந்ததில் நாம் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பதை நான் மறந்து விட்டேன்” என்றான்.
  1. Elizabeth was beside herself. It can be directly attributed to her missing Wickham but I would attribute it to her meeting Darcy whom she subconsciously longs for
  2. She straight away goes to a comment he had made earlier which touches his character. She consciously seeks to touch him there in an effort to reach him more deeply. He becomes silent unable to stand the touch
  3. Darcy was so powerfully disturbed that he forgot his conversation
    டார்சி மனம் பெரிதும் கலங்கி பேசியதை மறந்து விடுகிறான்.
  4. Interruptions are caused by the breaking of the sustaining energy
    செயலை நடத்தும் தெம்பு அழிந்தால், குறுக்கீடுகள் ஏராளமாக எழும்.
23
"I do not think we were speaking at all. Sir William could not have interrupted any two people in the room who had less to say for themselves. We have tried two or three subjects already without success, and what we are to talk of next I cannot imagine."
“நாம் எதுவுமே பேசவில்லை என்று நினைக்கிறேன். மிகக் குறைவாகவே பேசும் எந்த இருவருக்கிடையே, சர் வில்லியம் குறுக்கே வந்திருக்கவே முடியாது -- மூன்று விஷயங்களில் இரண்டினைப்பற்றி பேச ஆரம்பித்து வெற்றி ஏதும் கிடைக்கவில்லை, அடுத்து எதைப்பற்றிப் பேசலாம் என எனக்குத் தெரியவில்லை.”
  1. She has to unbend her mind from Wickham and it is not easy
    விக்காமை விட்டு வெளிவர அவள் தயாராக இல்லை.
24
"What think you of books?" Said he, smiling.
“புத்தகங்களைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றான் சிரித்தவாறு.
  1. In the 18th century two people in conversation talk of books which does not happen in India even today
    18 ஆம் நூற்றாண்டில் இருவர் பேசும்பொழுது புத்தகத்தைப் பற்றிப் பேசுவர். இந்தியாவில் இதுவரை அது எழவில்லை.
25
"Books -- Oh! No. I am sure we never read the same, or not with the same feelings."
“புத்தகங்களா -- ஓ! இல்லை -- நாம் இருவரும் ஒன்றையே படிப்பது கிடையாது அல்லது ஒரே உணர்வுடன் படிப்பது கிடையாது.”
  1. Making oneself scarce is the main strategy of a woman when she is sought after
    பெண்ணை நாடினால் அவளால் முழு கிராக்கி செய்யாமலிருக்க.முடியாது
  2. The readership varies with the types of character
    பாத்திரம் மாறினால் படிப்பவர் மாறுவர்.
26
"I am sorry you think so; but if that be the case, there can at least be no want of subject. We may compare our different opinions."
“நீ அப்படி நினைப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. அதுதான் உண்மையெனில் நமக்குப் பேச ஒரு விஷயமும் வேண்டாம் --நம்முடைய மாறுபட்ட கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.”
  1. It is enjoyable for a woman to let a man chase her
    ஆண்மகன் தன்னை நாடிப் பின் தொடர்வது பெண் மிகவும் விரும்புவது.
27
"No -- I cannot talk of books in a ballroom; my head is always full of something else."
“நடன அரங்கில் எனக்கு புத்தகங்களைப்பற்றி பேச முடியாது நான் எப்பொழுதுமே எதைப்பற்றியாவது நினைத்துக் கொண்டிருப்பேன்.”
  1. Even when a woman does not know a man wants her very much she is able to act as if she knew it
    ஆண் தன்னை விரும்புவதை அறியாதவளும், அறிந்தவள் போல் நடப்பாள். கிராக்கி செய்வாள்.
28
"The present always occupies you in such scenes -- does it?" Said he, with a look of doubt.
“இப்பொழுது என்ன நடக்கிறதோ அதைப்பற்றித்தான் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்றான் அவன் ஒரு சந்தேகப் பார்வையுடன்.
 
29
"Yes, always," she replied, without knowing what she said, for her thoughts had wandered far from the subject, as soon afterwards appeared by her suddenly exclaiming, "I remember hearing you once say, Mr. Darcy, that you hardly ever forgave, that your resentment once created was unappeasable. You are very cautious, I suppose, as to its being created."
என்ன கூறுகிறோம் என்பதே தெரியாதவளாய் “ஆமாம், எப்பொழுதுமே” என்று பதிலளித்த அவளது நினைவுகள் பேசிக் கொண்டிருந்த விஷயத்திலிருந்து விலகி எங்கேயோ இருந்தது. திடீரென்று உணர்வு பெற்றவளாய் “எனக்கு ஞாபகம் இருக்கிறது டார்சி, நீ ஒரு முறை கூறியிருக்கிறாய், உன்னால் ஒருவரை மன்னிக்கவே முடியாது, ஒரு தடவை ஒருவர்மேல் வெறுப்பு வந்துவிட்டால் அது மாறாது என்று. இக்குணத்தை நீ வெகு ஜாக்கிரதையாக வளர்க்கிறாய் என நம்புகிறேன்” என்றாள்.
  1. The occasion for a greater provocation generates in the offended woman motives to hurt deeply
    ஒரு பெண்ணின் ஆத்திரத்தை அதிகமாகக் கிளப்பினால் அவள் ஆழ்ந்து பழிவாங்க நினைவாள்.
  2. Resentment is willing embrace of a temper deeply suitable to one
    தனக்கு மிகவும் பொருத்தமானவரை விரும்பிச் சேர்வதை மனம் வெறுப்பாக வெளிப்படுத்தும்.
  3. Thoughts wander when the sustaining energy is withdrawn
  4. Memory becomes active when thought exhausts itself
    எண்ணம் ஸ்தம்பித்தால் ஞாபகம் சிறந்து எழும்.
  5. Men are oblivious of defects of temper
    குணக்குறை இருப்பதை மனிதன் அறிவதில்லை.
    They are enjoyed as strength of personality
    குறையை பலம் என சுபாவம் கருதும்.
    He who is aware of it is miserable
    குறை புரிந்தால் மன உளைச்சலெழும்.
    He who is cautiously conscious of his defect is awkward
    தன் குறையை அறிந்து ஜாக்கிரதையாக இருப்பவன் ஆத்ம விழிப்புள்ளவன்.
    Defects of temper are enjoyed as privilege of status
    குணக் குறையை அந்தஸ்தின் உரிமையாக அறிவர்.
30
"I am," said he, with a firm voice.
“ஆமாம்,” என்றான் அவன் உறுதியுடன்.
  1. One kind of stupidity affirms the accusation against it deeply convinced it is an endowment. (cf. Chapter 11 Elizabeth turned away to hide a smile)
    மடமையைத் திறமையெனக் கருதுபவர் அவர் மீது சாட்டப்படும் குற்றச் சாட்டை ஆமோதிப்பார். (தன் சிரிப்பை அடக்க எலிசபெத் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்)
31
"And never allow yourself to be blinded by prejudice?"
“உன் சொந்த அபிப்பிராயங்கள் உன் கண்ணை மறைக்காதபடி பார்த்துக் கொள்வாயா?”
  1. She is at pains to powerfully provoke him
    எப்படியாவது டார்சி ஆத்திரத்தைக் கிளப்ப அவள் முயல்கிறாள்.
32
"I hope not."
“மாட்டேன்.”
 
33
It is particularly incumbent on those who never change their opinion, to be secure of judging properly at first."
“அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறவர்கள் முதலிலேயே சரியாக மதிப்பிட கற்றுக் கொள்ள வேண்டும்.”
 
34
"May I ask to what these questions tend?"
“ஏன் இந்த கேள்விகளையெல்லாம் கேட்கிறாய் என தெரிந்துக் கொள்ளலாமா?”
 
35
Merely to the illustration of your character," said she, endeavouring to shake off her gravity. "I am trying to make it out."
“உன்னுடைய குணாதிசயத்தைப்பற்றி புரிந்து கொள்வதற்குத்தான்” என்றாள் அவள். தீவிரமாக மாறிக் கொண்டிருந்த தன்னை, இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்று “நீ எப்படிப்பட்டவன் எனத் தெரிந்து கொள்ளத்தான்” என்றாள்.
  1. Young people discussing the formation of character is unknown in India
    இளைஞர்கள் சுபாவம் உருவாவதைப் பற்றிப் பேசும் பழக்கம் இந்தியாவில் ஏற்படவில்லை.
36
"And what is your success?"
“இதிலென்ன வெற்றி கிடைத்தது?”
37
She shook her head. "I do not get on at all. I hear such different accounts of you as puzzle me exceedingly."
அவள் தலையை ஆட்டியவாறு  “எனக்கு ஒன்றும் புரியவில்லை. உன்னைப்பற்றி வெவ்வேறுவிதமான செய்திகள் வருவது எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது.”
  1. He is a puzzle to her
    அவளுக்கு அவனைப் புரியவில்லை.
38
I can readily believe," answered he gravely, "that report may vary greatly with respect to me; and I could wish, Miss Bennet, that you were not to sketch my character at the present moment, as there is reason to fear that the performance would reflect no credit on either."
“என்னைப்பற்றிய அபிப்பிராயம் இப்பொழுது வேறுவிதமாக இருக்கும் என எனக்குத் தெரியும்”என கடுமையாக பதிலளித்த டார்சி “தற்சமயம் என்னைப்பற்றி எந்த ஒரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம், ஏனெனில் அது இருவருக்குமே எந்தவித லாபத்தையும் தராது”என்றான்.
 
39
"But if I do not take your likeness now, I may never have another opportunity."
“இப்பொழுது உன்னைப்பற்றி தெரிந்து கொள்ளாவிடில், எனக்கு மற்றொரு சந்தர்ப்பம் கிடைக்காமலேயே போகலாம்.”
  1. She declares never to meet him
    இனி டார்சியை சந்திக்கக் கூடாது என்கிறாள்.
  2. She tells him there may not be another opportunity to study his character which later comes true. It is her announcement to him that she is unavailable
  3. He who plays hard to get, loves to play scarce repeatedly
    கிராக்கி செய்பவர், மீண்டும் மீண்டும் கிராக்கி செய்ய விரும்புவர்.
40
"I would by no means suspend any pleasure of yours," he coldly replied. She said no more, and they went down the other dance and parted in silence; on each side dissatisfied, though not to an equal degree, for in Darcy's breast there was a tolerable powerful feeling towards her, which soon procured her pardon, and directed all his anger against another.
“உன்னுடைய விருப்பங்களை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த மாட்டேன்”என இறுக்கமாக பதிலளித்தான். அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மீண்டும் ஒரு நடனம் ஆடிவிட்டு, மௌனமாகப் பிரிந்தனர். இருவருக்கும் அதிருப்தி இருந்தாலும் வெவ்வேறு அளவில் இருந்தது. எலிசபெத்மீது இருந்த அவனுடைய அதீத நல்ல உணர்வின் காரணமாய் அவளை மன்னிக்க முடிந்தது. ஆனால் கோபம் முழுவதும் இன்னொருவரின்மேல் வந்தது.
  1. When a beloved offends, even if it is intentional, the anger is directed against another object of hate
  2. He is unable to suspend such opportunities
    இது போன்ற சந்தர்ப்பங்களை டார்சி இழக்கத் தயாராக இல்லை.
  3. It is Elizabeth who provoked him and he is angry at Wickham, a trait of partiality
    எலிசபெத் அவன் ஆத்திரத்தைக் கிளப்பினாள். டார்சிக்கு விக்காம் மீது கோபம். இது பிரியத்தின் குணம். (கோபம், கோபத்தைக் கிளப்பியவர் மீது வராமல், அவர் மீதுள்ள பிரியத்தால், அடுத்தவர் மேல் கோபம் வருவது இயல்பு.)
  4. A lover is never tired in rising to the refractory, perverse poises of his love
    பெண் குதர்க்கமாகக் கோணலாக இருந்தால், அவளை விரும்புபவன் அவள் விருப்பங்களை திருப்தி செய்ய முழுமையாக முயல்வான்.
  5. To be angry at a third person for the crimes of his love is the hall mark of a lover
    தான் விரும்பும் பெண் செய்யும் குற்றத்திற்காக அடுத்தவர் மீது கோபப்படுவது காதலின் சுபாவம்.
41
They had not long separated when Miss Bingley came towards her, and with an expression of civil disdain thus accosted her: -- "So, Miss Eliza, I hear you are quite delighted with George Wickham! Your sister has been talking to me about him, and asking me a thousand questions; and I find that the young man forgot to tell you, among his other communications, that he was the son of old Wickham, the late Mr. Darcy's steward. Let me recommend you, however, as a friend, not to give implicit confidence to all his assertions: for as to Mr. Darcy's using him ill, it is perfectly false; for, on the contrary, he has been always remarkably kind to him, though George Wickham has treated Mr. Darcy in a most infamous manner. I do not know the particulars, but I know very well that Mr. Darcy is not in the least to blame, that he cannot bear to hear George Wickham mentioned, and that though my brother thought he could not well avoid including him in his invitation to the officers, he was excessively glad to find that he had taken himself out of the way. His coming into the country at all is a most insolent thing, indeed, and I wonder how he could presume to do it. I pity you, Miss Eliza, for this discovery of your favourite's guilt; but really considering his descent, one could not expect much better."
இருவரும் பிரிந்த சற்று நேரத்திலேயே மிஸ். பிங்கிலி அவளை எதிர்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“எலிசா, நீ ஜார்ஜ் விக்காமைப் பார்த்து மிகவும் பரவசமாகியிருக்கிறாய் என நான் கேள்விப்படுகிறேன்! -- உன்னுடைய சகோதரி அவனைப்பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள். ஓராயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்விளைஞன் காலஞ்சென்ற திரு. டார்சியின் சொத்தினைப் பராமரித்துக் கொண்டிருந்த வயதான விக்காமின் மகன் என்பதை உன்னிடம் சொல்ல மறந்திருக்கிறான். தோழி என்ற முறையில் நான் சொல்கிறேன், அவன் சொல்வதையெல்லாம் நீ நம்ப வேண்டாம். டார்சி அவனை மோசமாக நடத்தியிருக்கிறான் என்பது பொய். ஜார்ஜ் விக்காம், டார்சியை மிகவும் மோசமாக நடத்தியிருந்த போதிலும், டார்சி, அன்பாகத்தான் இருந்திருக்கிறான்.எனக்கு விவரங்கள் தெரியாது. ஆனால் டார்சி மீது எந்த பழியும் கூற முடியாது என்பது மட்டும் நன்றாகத் தெரியும். ஜார்ஜ் விக்காம் பெயரைக்கூட அவனால் கேட்டுக் கொள்ள முடியாது. அவனை விருந்துக்கு அழைப்பதை தவிர்க்க முடியாது என்பது என் சகோதரனுக்குத் தெரியும். ஆனால் அவன் ஊரிலேயே இல்லை என்பது தெரிந்து மிகவும் சந்தோஷமாகி விட்டது. அவன் இவ்வூருக்கு வந்ததே மிகப் பெரிய தவறு. அவனால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீ விரும்பும் ஒருவனது தவறுகளைப்பற்றி தெரிந்து கொள்ள நேரிட்டதற்கு, எலிசா, உன்னைப் பார்த்தால் பாவமாக உள்ளது. அவனுடைய பூர்வீகத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால் அவனிடமிருந்து இதைவிட நல்லது ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது.”
  1. Every action is continued by its energy even when the context alters
    சந்தர்ப்பம் மாறினாலும் ஒவ்வொரு செயலும் அதன் தெம்பால் தொடரும்.
  2. The moment she stops provoking Darcy, Caroline provokes her
    டார்சியை கிளப்புவதை அவள் நிறுத்தியவுடன் காரலின் அவளைக் கிளப்புகிறாள்.
  3. The intensity Elizabeth created with Darcy, is continued by Caroline’s news
  4. The weakness of a rival gives a juicy sense of triumph
    எதிரியின் பலஹீனம் ருசியான வெற்றி தரும்.
  5. To believe something to be perfectly false, does not make it so
    ஒரு விஷயம் முழுப் பொய் என நம்புவதால் அது பொய்யாகி விடாது.
  6. Assertions are not facts
    வற்புறுத்தலால் விஷயம் உண்மையாகிவிடாது.
  7. To ask another to believe what one believes to be a fact is not to declare the truth of it, but a call to believe oneself
    நாம் நம்புவதைப் பிறரும் நம்ப வேண்டும் என்றால் அது உண்மையாகாது, நம்மை நம்புவதாகும்.
  8. The act is alive and is continued by another. Life turns against Elizabeth. It can be said she saw life from two sides while life remained the same
    செயலுக்கு உயிருண்டு, அது தொடர்கிறது. வாழ்வு எலிசபெத்திற்கு எதிராக செயல்படுகிறது. எலிசபெத் வாழ்வின் இருபுறங்களையும் கண்டாள். வாழ்வு என்றும் போல் மாறாமலிருக்கிறது எனலாம்.
  9. The statement of Caroline invites several descriptions
    1. Caroline unconsciously defends Darcy
    2. She cannot easily give up an occasion to abuse Elizabeth
    3. It appears to me that Caroline too wants to relate to Wickham intensely

    காரலின் கூறியது பல விளக்கங்களைத் தரவல்லது.
    1. காரலின் டார்சிக்கு பரிந்து பேசுகிறாள்.
    2. எலிசபெத்தை திட்டும் வாய்ப்பை அவளால் விட முடியாது.
    3. காரலினுக்கும் விக்காமுடன் நெருங்கிய தொடர்பு தேவைப்படுகிறது எனவும் கூறலாம்.
  10. A gentleman in England would not avoid even an enemy from inviting to a function. Darcy, after the attempted elopement, does not remove Wickham’s miniature from his picture gallery
    இங்கிலாந்தில் எந்த gentleman எதிரிக்கு அழைப்பு அனுப்ப மறுக்க மாட்டான். ஜார்ஜியானாவைக் கடத்த முயன்ற பின்னும் டார்சி விக்காம் படத்தை வீட்டை விட்டு அப்புறப்படுத்தவில்லை.
  11. To exclude one from invitation is not only discourtesy, but an insult
    அழைப்பை மறுப்பது அநாகரீகம் மட்டுமல்ல, அவமானப்படுத்துவதாகும்.
  12. Social power would ban the rival from entry into his territory
    அதிகாரமுள்ளவன் எதிரியை தன் ஊருள் அனுமதிக்க மாட்டான்.
  13. To speak of another’s favourite’s guilt is no good manners
    அடுத்தவருக்கு வேண்டியவரின் குறையை எடுத்துக் கூறுவது அநாகரீகம்.
  14. One’s descent does not necessarily fix his character
    பிறப்பும் சுபாவமும் ஒன்றல்ல.
42
"His guilt and his descent appear by your account to be the same," said Elizabeth angrily; "for I have heard you accuse him of nothing worse than of being the son of Mr. Darcy's steward, and of that, I can assure you, he informed me himself."
“அவனுடைய வம்சாவளிதான் அவன் செய்யும் தவறுகளுக்கு காரணம் என்பதுபோல் சொல்கிறாய்.அதுவும் அவன் டார்சியின் பணியாளரின் மகன் என்பதை பெரிய குற்றச்சாட்டாக சொல்லியிருக்கிறாய், இதைப்பற்றி அவனே என்னிடம் சொல்லியிருக்கிறான் என உனக்குச் சொல்லிக் கொள்கிறேன்”என்றாள் எலிசபெத் கோபமாக.
  1. Clever people voluntarily disclose their weakness
    சாமர்த்தியசாலிகள் தங்கள் குறைகளை தாமே வெளியிடுவர்.
  2. Wickham spoke of his father
    விக்காம் தன் தகப்பனாரைப் பற்றிப் பேசுகிறான்.
43
"I beg your pardon," replied Miss Bingley, turning away with a sneer. "Excuse my interference: it was kindly meant."
“என்னை மன்னித்துவிடு”என்று பதிலளித்த மிஸ். பிங்கிலி ஏளனமான பார்வையுடன் “என்னுடைய குறுக்கீட்டிற்கு மன்னித்துவிடு -- நான் உனக்கு உதவி செய்யும் எண்ணத்துடன்தான் சொன்னேன்”என்றாள்.
  1. The conversation between Caroline and Elizabeth is not acrimonious, but their manner and tone was
    காரலினும் எலிசபெத்தும் பேசிய விஷயம் காரமானதல்ல. ஆனால் அவர்கள் பேச்சின் தொனி காரமாக இருந்தது.
  2. Caroline’s negative act really is positive in its ultimate result
    காரலின் குறை கூறுவது முடிவில் நல்லதாகவே முடிகிறது.
44
"Insolent girl!" Said Elizabeth to herself. "You are much mistaken if you expect to influence me by such a paltry attack as this. I see nothing in it but your own wilful ignorance and the malice of Mr. Darcy." She then sought her eldest sister, who had undertaken to make inquiries on the same subject of Bingley. Jane met her with a smile of such sweet complacency, a glow of such happy expression, as sufficiently marked how well she was satisfied with the occurrences of the evening. Elizabeth instantly read her feelings, and at that moment solicitude for Wickham, resentment against his enemies, and everything else, gave way before the hope of Jane's being in the fairest way for happiness.
“துடுக்கான பெண்மணி”என தனக்குத்தானே எலிசபெத் சொல்லிக் கொண்டாள். “இம்மாதிரியான சிறிய விஷயங்களைப்பற்றி என்னிடம் சொல்லி, என் மனதை மாற்றலாம் என நீ நினைத்திருந்தால் அது தவறு. நீ வேண்டுமென்றே உண்மையை தெரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய், டார்சியும் விக்காம்மேல் இருக்கும் வெறுப்பின் காரணமாக பொய் சொல்லியிருக்கிறான்.” பிறகு அவள் தன் சகோதரியைத் தேடிச் சென்றாள். அவளும் இதைப்பற்றி பிங்கிலியிடம் விசாரிக்கவே முயற்சி செய்து கொண்டிருந்தாள். அன்று மாலையில் நடந்த நிகழ்ச்சிகளில் மிக்க சந்தோஷமடைந்த ஜேன், பூரண திருப்தியுடன், சிரித்தவாறு எலிசபெத்தைப் பார்த்தாள். எலிசபெத்திற்கும் அவளைப் புரிந்தது. ஜேனுடைய சந்தோஷத்தைக் கண்டு, தனக்கு விக்காம்மேல் இருந்த பரிவு, அவனுடைய எதிரிகள் மேலிருந்து வெறுப்பு, மற்ற எல்லாவற்றையும் மறந்தாள்.
  1. Elizabeth is incensed by the news of Caroline. Caroline is her rival and that rivalry incenses
45
"I want to know," said she, with a countenance no less smiling than her sister's, "what you have learnt about Mr. Wickham. But perhaps you have been too pleasantly engaged to think of any third person; in which case you may be sure of my pardon."
தனது சகோதரியைப் போலவே எலிசபெத்தும் சிரித்த முகத்துடன், “ விக்காமைப்பற்றி என்ன தெரிந்து கொண்டாய் என எனக்குத் தெரிய வேண்டும். ஆனால் உனக்கு மூன்றாவது நபரை பற்றி நினைக்கவே நேரம் இருந்திருக்காது. அவ்வாறெனில் என் மன்னிப்பு உனக்கு நிச்சயம் உண்டு.”
  1. Elizabeth’s devotion to Jane is of greater intensity than her attractions for Wickham
  2. Jane matters to Elizabeth more than Wickham. In Jane’s pleasure Elizabeth forgets Wickham. Her goodwill is pure GOOD Will
    விக்காமை விட எலிசபெத்திற்கு ஜேன் முக்கியம். ஜேனின் பொங்கும் சந்தோஷத்தில் எலிசபெத்திற்கு விக்காம் மறந்து விட்டது. எலிசபெத் நல்லெண்ணம் தூய்மையான நல்லெண்ணம்.
46
"No," replied Jane, "I have not forgotten him; but I have nothing satisfactory to tell you. Mr. Bingley does not know the whole of his history, and is quite ignorant of the circumstances which have principally offended Mr. Darcy; but he will vouch for the good conduct, the probity, and honour of his friend, and is perfectly convinced that Mr. Wickham has deserved much less attention from Mr. Darcy than he has received; and I am sorry to say that by his account as well as his sister's, Mr. Wickham is by no means a respectable young man. I am afraid he has been very imprudent, and has deserved to lose Mr. Darcy's regard."
“இல்லை“என்ற ஜேன் “நான் அவனை மறக்கவில்லை. ஆனால் அவனைப்பற்றி திருப்தியாக கூற ஒன்றுமில்லை. பிங்கிலிக்கு முழு விவரமும் தெரியாது. எந்த சூழ்நிலையில் டார்சி புண்படுத்தப்பட்டிருக்கிறான் என்பதைப் பற்றியும் தெரியவில்லை. ஆனால் டார்சியினுடைய நல்ல நடத்தைக்கும், நேர்மைக்கும், நன்மதிப்பிற்கும் பிங்கிலியால் உறுதி அளிக்க முடியும். விக்காமின் தகுதிக்குமீறி அவனிடம் டார்சி அன்பு செலுத்தியிருக்கிறான். அவனும், அவனது சகோதரியும் சொன்னவற்றிலிருந்து விக்காம் ஒரு கௌரவமான மனிதனல்ல எனத் தெரிகிறது. அவன் விவேகமில்லாமல் நடந்து கொண்டு டார்சியினுடைய நன்மதிப்பை இழந்திருக்கிறான் என எண்ணுகிறேன்.”
  1. Jane found enough justification for Darcy
    ஜேன் டார்சி மீது குறையில்லை என்று போதுமான காரணம் கொண்டு வந்தாள்.
  2. What would satisfy her is equal justification of Wickham
    அதேபோல் விக்காம் மீதும் குறையேயில்லை என்றால் ஜேனுக்குத் திருப்தி.
  3. Opinions do not need facts, only needs another’s opinion
    அபிப்பிராயம் விஷயத்தைப் பொருத்ததில்லை. அடுத்தவர் அபிப்பிராயத்தைப் பொருத்தது.
47
"Mr. Bingley does not know Mr. Wickham himself?"
“பிங்கிலிக்கு விக்காமைத் தெரியாதா?”
  1. Elizabeth exerts herself to refute the story
    இந்தக் கதையை மறுக்க எலிசபெத் முனைகிறாள்.
48
"No; he never saw him till the other morning at Meryton."
“தெரியாது. அன்று காலை, மெரிடனில் சந்திப்பதற்கு முன்னால், அவனைப் பார்த்ததேயில்லை.”
 
49
"This account, then, is what he has received from Mr. Darcy. I am perfectly satisfied. But what does he say of the living?"
“இந்த விவரங்கள் அவனுக்கு டார்சியிடமிருந்து கிடைத்திருக்கின்றன. அப்பொழுது நான் நினைத்தது சரி. ஆனால் அவனுக்கு சேர வேண்டிதைப்பற்றி என்ன சொல்கிறான்?”
  1. Rationality is capable of fully justifying the irrational
    அறிவுக்கு அறியாமை முழுமையாகப் போற்றும் திறனுண்டு.
  2. Integral completion requires the irrationality of the rational
    பூரணம் முழுமையாக அறிவு அறியாமையென ஏற்க வேண்டும்.
50
"He does not exactly recollect the circumstances, though he has heard them from Mr. Darcy more than once, but he believes that it was left to him conditionally only."
“அந்தச் சூழ்நிலையை அவனால் சரியாக நினைவு கூற முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு நிபந்தனையின் பேரில்தான் விக்காமுக்கு உதவி செய்வதாக சொல்லப்பட்டது என பல தடவை டார்சி கூறி தான் கேட்டிருப்பதாகச் சொன்னான்.”
  1. Any circumstance has one small event to justify the opposite
    எந்த நிகழ்ச்சியில் எதிரான கருத்துக்குரிய ஒரு சிறு விஷயமிருக்கும்.
51
"I have not a doubt of Mr. Bingley's sincerity," said Elizabeth warmly; "but you must excuse my not being convinced by assurances only. Mr. Bingley's defence of his friend was a very able one, I dare say; but since he is unacquainted with several parts of the story, and has learnt the rest from that friend himself, I shall venture still to think of both gentlemen as I did before."
“பிங்கிலியின் உண்மையைப்பற்றி எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது”என்று எலிசபெத் அன்புடன் கூறினாள். “நீ உறுதியாகச் சொல்வதைக் கேட்டாலும் என்னால் நம்ப முடியவில்லை. என்னை மன்னித்துவிடு. பிங்கிலி தன்னுடைய நண்பனைக் காப்பாற்றுவதுபோல் பேசுவது திறமையான விஷயம்தான். ஆனால் அவனுக்கு நடந்தவைகளைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரியாததால், மீதியை நண்பன் மூலமாகத் தெரிந்து கொண்டதால், இருவரைப்பற்றிய என் கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றாள்.
  1. Sincerity can be wrong. It can be false when it believes falsehood
    உண்மை தவறாக இருக்கும். தவற்றை நம்பினால் தவறாகும்.
  2. One who defends a story without knowing all the details cannot defend his sincerity
    விபரம் தெரியாமல் ஒரு விஷயத்தை ஆதரித்துப் பேசினால் சம்பந்தப்பட்டவர் உண்மையை வலுப்படுத்த முடியாது.
  3. Elizabeth has enough rational basis to reject Caroline’s and Jane’s version of Wickham – Darcy deal
52
She then changed the discourse to one more gratifying to each, and on which there could be no difference of sentiment. Elizabeth listened with delight to the happy, though modest hopes which Jane entertained of Bingley's regard, and said all in her power to heighten her confidence in it. On their being joined by Mr. Bingley himself, Elizabeth withdrew to Miss Lucas; to whose inquiry after the pleasantness of her last partner she had scarcely replied before Mr. Collins came up to them, and told her with great exultation that he had just been so fortunate as to make a most important discovery.
பிறகு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லாத, இருவருக்குமே சந்தோஷம் கொடுக்கக்கூடிய விஷயத்தைப்பற்றி பேச ஆரம்பித்தாள். பிங்கிலிமேல் ஜேன் மிகவும் நம்பிக்கை வைத்திருந்ததை, எலிசபெத் பரவசத்துடன் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு மேலும் நம்பிக்கையூட்டுவதுபோல் பேசினாள். பிங்கிலியே வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டதால், எலிசபெத் அங்கிருந்து நகர்ந்து, மிஸ். லூகாஸிடம் சென்றாள். கடைசியாக அவள் ஜோடி சேர்ந்து ஆடிய நபரைப்பற்றி மிஸ். லூகாஸ் விசாரித்து, அதற்கு எலிசபெத் பதில் அளிப்பதற்குள், காலின்ஸ் அவர்களிடம் வந்து தான் முக்கியமான ஒன்றினைக் கண்டுபிடித்திருப்பதாக வெற்றி பெருமிதத்துடன் கூறினான்.
  1. A negative report does not long survive in a pleasant atmosphere
    நல்ல சூழலில் தவறான செய்தி நீடிக்காது.
  2. Elizabeth avoids conflicts, unpleasantness, etc
    எலிசபெத்திற்கு வாதம், சண்டை, முரண்பாடு பிடிக்காது.
  3. Jane does not allow herself to hope for Bingley’s regard
    பிங்லி தன்னை விரும்ப வேண்டும் என்ற மனநிலைக்கு வர ஜேனால் முடியவில்லை.
  4. To her it is almost a violence. It is a deeper silent will
    அவள் மனம் அதை ஏற்க மறுத்தது. அது ஆழ்ந்த மௌன சக்தி Silent Will.
  5. It is sincere good will that wishes others’ hopes to be fulfilled
    மற்றவர் எண்ணம் பூர்த்தியாக நினைப்பது உண்மையான நல்லெண்ணம்.
  6. Jane persuades herself that she cannot allow the world to know she loves Bingley
    தான் பிங்லியை விரும்புவதாக உலகம் நினைக்க முடியும் என்பது ஜேன் ஏற்க முடியாத கருத்து.
  7. She wants a great public secret to be unknown to anyone
    அனைவரும் அறிந்த செய்தியை எவரும் நம்பவில்லையென ஜேன் நினைக்க முயல்கிறாள்.
  8. Mr. Collins adds intensity to Elizabeth’s dance with Darcy and Caroline’s warning about Wickham
    எலிசபெத் டார்சியுடன் நடனமாடியபின் காலின்ஸ் வாழ்வைத் தீவிரப்படுத்த முயலும்பொழுது காரலின் வந்து விக்காம் விஷயமாக அதிதீவிரப்படுத்துகிறாள்.
  9. It means the atmosphere is opening up for intensity
    சூழல் சூடுபிடித்து வெண் சூட்டை அடையும் போலிருக்கிறது.
  10. Mr. Collins is irresistible
    காலின்ஸ் கட்டுப்படாதவன்.
  11. An idea is an initiative to the physical mind. A move of the physical mind whether it is an urge or initiative is irresistible
    எண்ணம் மனதில் தோன்றுவது நம் செயலின் ஆரம்பம். ஜடமான மனம் செயல்பட ஆரம்பித்தால் அது வேகமானாலும், ஆரம்பமானாலும், அதைத் தடுக்க முடியாது.
53
"I have found out," said he, "by a singular accident, that there is now in the room a near relation of my patroness. I happened to overhear the gentleman himself mentioning to the young lady who does the honours of this house the names of his cousin Miss de Bourgh, and of her mother Lady Catherine. How wonderfully these sort of things occur! Who would have thought of my meeting with, perhaps, a nephew of Lady Catherine de Bourgh in this assembly! I am most thankful that the discovery is made in time for me to pay my respects to him, which I am now going to do, and trust he will excuse my not having done it before. My total ignorance of the connection must plead my apology."
“என்னை ஆதரிப்பவரின் நெருங்கிய சொந்தக்காரர் இங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. இந்த வீட்டின் பெண்மணியிடத்து அவனே தன்னுடைய கஸின், மிஸ் டீ பர்க்-உடைய பெயரையும், அவளுடைய தாயார் லேடி காதரினுடைய பெயரையும் கூறியதை நான் கேட்டேன். இம்மாதிரியான விஷயங்கள் நடப்பது எவ்வளவு ஆச்சரியத்திற்குரியது. லேடி காதரினுடைய மருமகனை நான் இந்த கூட்டத்தில் பார்ப்பேன் என யார் நினைத்திருக்க முடியும். சரியான நேரத்திற்கு இது தெரிய வந்ததிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவனுக்கு என்னுடைய மரியாதையை நான் இப்பொழுது தெரிவிக்கப் போகிறேன். இதற்கு முன்பே நான் சொல்லாததற்கு மன்னித்துவிடுவான் என நம்புகிறேன். இந்த தொடர்பினைப்பற்றி எனக்கு தெரியாமல் போனதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்.”
  1. Man has a one pointed aspiration to acquaint himself with a wealthy man
    பணக்காரனுடன் பழக மனிதன் ஒரே குறியாக இருக்க வேண்டும்.
  2. Men are alert to know what interests them
    அக்கறையுள்ள மனிதன் அறிய உஷாராக இருக்கிறான்
  3. Mr. Collins sees the wonder of this coincidence of his discovery
    தான் கேட்ட செய்தி காலின்ஸூக்கு ஆச்சரியம் தருகிறது.
  4. Collins paying his respects to Darcy is his respecting himself
  5. Apologizing for ignorance is to be ignorant of what an apology is
    அறியாமைக்கு மன்னிப்பு கேட்பது, மன்னிப்பை அறியாதது.
  6. Apology is a social act, not just personal
    மன்னிப்பு மற்றவருடன் பழகுதலில் ஏற்படுவது. தனிப்பட்டதல்ல
  7. One can apologize for no fault of his if an apology fulfils him
    செய்யாத தவற்றுக்கு மன்னிப்பு கேட்பவன் மன்னிப்புக் கேட்பதால் மகிழ்பவன்.
  8. Life is a wonder, its touches are intense, its revelations are a Marvel. Stupidity has a very strong element of genius in it. The genius in him is now actuated by a sense of Wonder
    வாழ்வு அற்புதம். வாழ்வு தீண்டினால் உடல் அதிரும். வெளிவரும் செய்திகள் வாழ்வை அற்புதமாக்கும். மடமை மேதாவிலாசம் போன்றது. காலின்ஸ் பெற்ற மேதாவிலாசம் செயல்பட ஆரம்பித்து அற்புதத்தைக் கண்டது.
  9. We see the same insistence in Mr. Collins, Mrs. Bennet, Lydia, and Lady Catherine. Insistence is intense energy seeking expression. Absence of organisation – culture – makes this outburst possible
    லேடி காதரீன், லிடியா, பென்னட், காலின்ஸ் ஆகியவரிடையே நாம் பிடிவாதத்தைக் காண்கிறோம். அது வற்புறுத்துவது, தீவிரமான சக்தி கட்டுமீறி செயல்பட முயல்வது வற்புறுத்தல், நிலையற்ற சக்தி - பண்புக்குக் கட்டுப்படாதது - வெடித்தெழுவது இயல்பு.
  10. From another point of view, Charlotte and Elizabeth serve as examples of passivity and dynamism. Elizabeth’s dynamism is due to the energy organised into intelligent perception in a forward looking personality. Charlotte’s passivity is due to the energy organised into common sense which understands it has no opening in life
    வேறொரு வகையாகப் பார்த்தால் ஷார்லோட்டும், எலிசபெத்தும் சாதுவாக இருப்பதற்கும் சுறுசுறுப்புக்கும் உதாரணமாகின்றனர். வளரும் மனத்தில் தெம்பும் சக்தியும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அறிவோடு உலகையறிய முற்படுவது எலிசபெத் மனநிலை.அது விவேகமாகிறது. தனக்கு இந்த சூழ்நிலையில் வேலையில்லையென அறிகிறது.
54
"You are not going to introduce yourself to Mr. Darcy!"
“நீயாகவே டார்சியிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளப் போவதில்லையே?”
  1. Human impulse is irresistible
    உத்வேகம் உணர்வின் வேகம். எதிர்க்க முடியாது.
  2. Collins completes the cycle of Mr. Bennet’s family’s vulgar display. For the next cycle of activity to start, the preceding cycle must be completed
  3. Collins is irrepressible. We first see it here, next in his proposal, finally in his letters to Bennet on Lydia and Darcy. His cycle was completed when he had to leave Rosings to avoid the Lady’s anger
  4. Collins is the medium between Elizabeth and Darcy. In one it is irrepressible buffoonery in the other it is irrepressible passion. Hence he acts as the medium. Compare Lydia’s shameless pursuit of men with Wickham’s shameless employment of falsehood
  5. As Lizzy is unable to control Lydia or Mary, she is unable to control Collins. Mrs. Bennet, Lydia, Collins are irrepressible in one fashion. Darcy and Lady Catherine are irrepressible in another fashion. All reflect Lizzy’s uncontrollable attraction to Wickham
55
"Indeed I am. I shall entreat his pardon for not having done it earlier. I believe him to be Lady Catherine's nephew. It will be in my power to assure him that her ladyship was quite well yesterday se'nnight."
“நிச்சயமாக அறிமுகப்படுத்திக் கொள்ளப் போகிறேன். இதற்கு முன்பே செய்யாததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்ளப் போகிறேன். அவன் லேடி காதரினுடைய மருமகன் என நினைக்கிறேன். சில நாட்கள் முன்புவரை லேடி காதரின் சௌக்கியமாக இருந்தாள் என அவனுக்கு என்னால் சொல்ல முடியும்.”
  1. Collins disregards Eliza’s warning even as Eliza disregards Caroline’s
  2. Pardon is for offence committed, not for ignorance
    தவறு மன்னிப்புக்குரியது, அறியாமையில்லை.
56
Elizabeth tried hard to dissuade him from such a scheme, assuring him that Mr. Darcy would consider his addressing him without introduction as an impertinent freedom, rather than a compliment to his aunt; that it was not in the least necessary there should be any notice on either side; and that if it were, it must belong to Mr. Darcy, the superior in consequence, to begin the acquaintance. Mr. Collins listened to her with the determined air of following his own inclination, and, when she ceased speaking, replied thus: -- "My dear Miss Elizabeth, I have the highest opinion in the world of your excellent judgment in all matters within the scope of your understanding; but permit me to say that there must be a wide difference between the established forms of ceremony amongst the laity and those which regulate the clergy; for, give me leave to observe that I consider the clerical office as equal in point of dignity with the highest rank in the kingdom -- provided that a proper humility of behaviour is at the same time maintained. You must, therefore, allow me to follow the dictates of my conscience on this occasion, which leads me to perform what I look on as a point of duty. Pardon me for neglecting to profit by your advice, which on every other subject shall be my constant guide, though in the case before us I consider myself more fitted by education and habitual study to decide on what is right than a young lady like yourself." And with a low bow he left her to attack Mr. Darcy, whose reception of his advances she eagerly watched, and whose astonishment at being so addressed was very evident. Her cousin prefaced his speech with a solemn bow: and though she could not hear a word of it, she felt as if hearing it all, and saw in the motion of his lips the words "apology," "Hunsford," and "Lady Catherine de Bourgh." It vexed her to see him expose himself to such a man. Mr. Darcy was eyeing him with unrestrained wonder, and when at last Mr. Collins allowed him time to speak, replied with an air of distant civility. Mr. Collins, however, was not discouraged from speaking again, and Mr. Darcy's contempt seemed abundantly increasing with the length of his second speech, and at the end of it he only made him a slight bow, and moved another way. Mr. Collins then returned to Elizabeth.
இதுபோல் எதுவும் செய்ய வேண்டாம். இம்மாதிரி சுதந்திரம் எடுத்துக் கொண்டு அறிமுகமில்லாமல் பேசுவது டார்சிக்குப் பிடிக்காது. அவனுடைய சித்திக்கும் இது பெருமை தராது. இருவரும் அறிமுகமாவது என்பதே அவசியமில்லாதது. அப்படியே ஆனாலும் உயர்ந்த நிலையில் உள்ள டார்சிதான் அதனை முதலில் ஆரம்பிக்க வேண்டும் என காலின்ஸை தடுத்து நிறுத்த எலிசபெத் பெரும்முயற்சி எடுத்தாள். தான் என்ன செய்வது என நினைத்திருந்தானோ அதைச் செய்வது என்ற உறுதியோடு, எலிசபெத் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காலின்ஸ், அவள் பேசுவதை நிறுத்தியவுடன் அவளுக்கு இவ்வாறு பதிலளித்தான், “எனதருமை எலிசபெத், உனக்குப் புரிந்த அளவில் நீ செய்யும் கணிப்பிற்கு நான் மிகவும் மதிப்பு கொடுக்கிறேன். ஆனால் சாதாரண மக்களுக்கும் பாதிரியாருக்கும் ஒரே சட்டம் கிடையாது. இருப்பதிலேயே உயர்ந்த பதவிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் பாதிரியார்களுக்கும் உண்டு. ஆனால் எதைச் செய்தாலும் அதை பணிவோடு செய்ய வேண்டும். அதனால் என்னுடைய மனசாட்சி சொல்வதுபோல் என் கடமையை செய்ய நீ அனுமதிக்க வேண்டும். மற்ற எல்லா விஷயங்களிலும் உன்னுடைய அறிவுரை எனக்கு தக்க துணையாக இருக்கும். ஆனால் என்னுடைய படிப்பையும், அனுபவத்தையும் கொண்டு இந்த விஷயத்தில் என்ன தீர்மானம் செய்வது என்பது, இளம் பெண்ணாகிய உன்னைவிட எனக்கு அதிக தகுதியுண்டு என நினைக்கிறேன். அதனால் உன்னுடைய அறிவுரையை கேட்காததற்கு என்னை மன்னிப்பாயாக.”இவ்வாறு பேசியதைக் கேட்டு அளவிலா ஆச்சரியம் அடைந்த எலிசபெத் அவன் தனக்கு வணக்கம் கூறிவிட்டு டார்சியின் அருகில் செல்வதைப் பார்த்து, என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலாக கவனிக்கலானாள். காலின்ஸ் பவ்யமான வணக்கத்துடன் தன்னுடைய பேச்சினை ஆரம்பித்தான். அவன் பேசியது ஒரு வார்த்தைகூட காதில் விழவில்லை என்றாலும், எல்லாம் புரிந்ததுபோல் அவளுக்குத் தோன்றியது. அவனுடைய வாய் அசைவினை வைத்து, மன்னிக்கவும், ஹன்ஸ்போர்ட், லேடி காதரின் என்ற வார்த்தைகளைப் புரிந்து கொண்டாள். இம்மாதிரி ஒரு மனிதனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைக் கண்டு அவளுக்குக் கோபம் வந்தது. டார்சி, அவனைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இறுதியில் காலின்ஸ், அவனுக்குப் பேச சந்தர்ப்பம் கொடுத்த பொழுது விட்டேற்றியாக பதில் சொன்னான். இதனாலும் மனம் தளராத காலின்ஸ் மீண்டும் பேச ஆரம்பித்தான். இரண்டாவது முறையாக அவன் பேசிய பேச்சு டார்சிக்கு பெரும் அதிருப்தியை அளித்தது. பேச்சு முடிந்தவுடன் வணக்கம் கூறிவிட்டு அங்கிருந்து வேறுபுறமாக நகர்ந்தான். காலின்ஸ் மீண்டும் எலிசபெத்திடம் திரும்பினான்.
  1. Impulse is from the being. A mental thought cannot control it
    உத்வேகம் ஜீவனுடையது. உணர்ச்சியால் அதைக் கட்டுப்படுத்த முடியாது.
  2. Rules of life, etiquette in the society, sensations that urge are inexorable
    வாழ்க்கைச் சட்டம், ஊரார் பழக்கம், சுபாவத்தின் வேகம் ஆகியவை தம்மைத் தானே பூர்த்தி செய்து கொள்ளும்.
  3. Compliments are not given by subordinates
    கீழே வேலை செய்பவனுக்குப் பாராட்ட உரிமையில்லை.
  4. Inclination that is endorsed by the will is irresistible
    மனம் ஏற்ற செயலை எதிர்ப்பது இயலாது.
  5. Dissuasion is for one who is persuaded for a line of action, not for one who is irretrievably pushed to it
    ஒரு துறையை நாடிப் போகின்றவனைத் தடை செய்யலாம். அத்துறையுள் வலிய திணிக்கப்படுபவனைத் தடுக்க முடியாது.
  6. Social politeness gives way to the urges of human nature
    நாலு பேர் மத்தியில் உள்ள மரியாதை சுபாவம் வீறு கொண்டெழுந்தால் பறந்து போகும்.
  7. Dictates of conscience is mental or physical urges
    மனச்சாட்சி என்பது மனத்தின் உந்தல் அல்லது உடலின் எழுச்சி.
  8. To take the initiative another should take is greater energy than understanding
    அடுத்தவர் செய்ய வேண்டிய வேலையை நாம் செய்ய அளவை மீறிய தெம்பு இருக்க வேண்டும்.
  9. The energetic low man will climb to the top if there are no barriers
    தடையில்லாவிட்டால் தெம்பான தாழ்ந்தவன் உச்சிக்கே வந்து விடுவான்.
  10. One who comes in as a constant guide becomes a constant domination
    வழி காட்ட ஆரம்பித்தால் வரம்பில்லாமல் அதிகாரம் செய்வார்.
  11. Even in small events, the coming event casting its shadow ahead is seen
    வருமுன் சுட்டிக்காட்டுவதைச் சிறு விஷயங்களிலும் காணலாம்.
  12. Those who are voluble enjoy their voice and the language
    வாய் ஓயாமல் பேசுபவர் தம் குரலை இரசிப்பவர்.
  13. Idealism as well as folly are not discouraged by failures
    மடையனும் இலட்சியவாதியும் தோல்வியால் துவள மாட்டார்கள்.
  14. A big name in the hands of a small man is a powerful weapon to advance. Its use tarnishes the name, slurs the user
    சிறியவன் கையில் பெரிய பேர் வலுவான கருவி. அதைப் பயன்படுத்துவது பெயரைக் கெடுக்கும், பயன்படுத்துபவனைச் சிதைக்கும்.
  15. Astonishment is the emotion that witnesses the impossible as well as the improbable
    நடக்காதது, நடக்க முடியாதது நடந்தால் ஆச்சரியம் உணர்ச்சியாக எழும்.
  16. One who does not know the social milieu does not know he exposes himself
    ஊர் வழக்கறியாதவன் தான் அம்பலப்படுவதை அறியான்.
  17. He who entertains himself is under the impression of entertaining the other person
    பிறரை மகிழ்விப்பதாக நினைப்பவன், தான் மகிழ்வதை அறியான்.
  18. A snob receives a snub as reception
  19. Being a clergyman, Collins awards to himself the social superiority of aristocracy. That being his right, he would not allow a woman to prevail against his move
    பாதிரியார் என்பதால் காலின்ஸ் தன்னை டார்சிக்கு சமமாக, ஏன் சற்று உயர்வாக நினைக்கிறான். அப்படி நினைப்பதால் ஒரு பெண் தன்னைத் தடுப்பதை அவனால் ஏற்க முடியாது.
  20. The point of duty he insists on as his right is to establish his own superiority
    கடமையென காலின்ஸ் கூறுவது தன் உயர்ந்த நிலையை உலகுக்கு எடுத்துரைப்பது.
  21. That it came to her notice – Collins’ move – has the significance of life for us in the sense he underlines the social weakness of Elizabeth to Darcy
    அதை எலிசபெத் கண்டாள் - நமக்கு அது முக்கியம். எலிசபெத்தின் குடும்ப தாழ்ந்த நிலையை காலின்ஸ் இதன்மூலம் டார்சிக்கு அறிவிப்பான்.
57
"I have no reason, I assure you," said he, "to be dissatisfied with my reception. Mr. Darcy seemed much pleased with the attention. He answered me with the utmost civility, and even paid me the compliment of saying that he was so well convinced of Lady Catherine's discernment as to be certain she could never bestow a favour unworthily. It was really a very handsome thought. Upon the whole, I am much pleased with him."
“என்னுடைய சந்திப்பு அவனுக்கு அதிருப்தியைக் கொடுத்திருக்கும் என்பதற்கு ஒரு காரணமும் கிடையாது, இது நிச்சயம். டார்சிக்கு நான் கொடுத்த கவனம் மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. மிகவும் பணிவாக பதிலளித்தான். லேடி காதரின் தகுதியில்லாத நபருக்கு ஆதரவு அளிக்கவே முடியாது, அவள் சரியாக மதிப்பிடுவாள் என்பதில் தனக்கு நம்பிக்கையிருப்பதாகச் சொன்னான். இது ஒரு நல்ல எண்ணம். மொத்தத்தில் எனக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.”
  1. Mr. Collins is so foolish as to understand an affront as one of approbation
    காலின்ஸ் மடையன். திட்டினால், பாராட்டாக எடுத்துக் கொள்பவன். திட்டுவது புரியும் அளவுக்குப் புத்தியில்லை.
  2. Snob is one who takes utter rejection as total appreciation
    குழைந்து சுருங்கும் சிறியவன் தன்னை வெறுத்து ஒதுக்குவதைப் பாராட்டாக ஏற்பான்.
58
As Elizabeth had no longer any interest of her own to pursue, she turned her attention almost entirely on her sister and Mr. Bingley; and the train of agreeable reflections which her observations gave birth to made her perhaps almost as happy as Jane. She saw her in idea settled in that very house, in all the felicity which a marriage of true affection could bestow; and she felt capable, under such circumstances, of endeavouring even to like Bingley's two sisters. Her mother's thoughts she plainly saw were bent the same way, and she determined not to venture near her, lest she might hear too much. When they sat down to supper, therefore, she considered it a most unlucky perverseness which placed them within one of each other; and deeply was she vexed to find that her mother was talking to that one person (Lady Lucas) freely, openly, and of nothing else but of her expectation that Jane would be soon married to Mr. Bingley. -- It was an animating subject, and Mrs. Bennet seemed incapable of fatigue while enumerating the advantages of the match. His being such a charming young man, and so rich, and living but three miles from them, were the first points of self-gratulation; and then it was such a comfort to think how fond the two sisters were of Jane, and to be certain that they must desire the connection as much as she could do. It was, moreover, such a promising thing for her younger daughters, as Jane's marrying so greatly must throw them in the way of other rich men; and lastly, it was so pleasant at her time of life to be able to consign her single daughters to the care of their sister, that she might not be obliged to go into company more than she liked. It was necessary to make this circumstance a matter of pleasure, because on such occasions it is the etiquette; but no one was less likely than Mrs. Bennet to find comfort in staying at home at any period of her life. She concluded with many good wishes that Lady Lucas might soon be equally fortunate, though evidently and triumphantly believing there was no chance of it.
இவ்விஷயத்தை பின்தொடர்ந்து போவதில் எலிசபெத்திற்கு சிறிதும் நாட்டமில்லாததால், ஜேன்-பிங்கிலியின் மீது தன்னுடைய கவனத்தைத் திருப்பினாள். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது ஜேனைப் போலவே அவளுக்கும் சந்தோஷம் வந்தது. உண்மையான அன்பினால் நடக்கும் திருமணத்தில் என்ன சந்தோஷம் கிடைக்குமோ அத்தனை சந்தோஷத்துடன் ஜேன் வாழ்வாள் என அவளால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. இதனால் பிங்கிலியின் சகோதரிகள்மேல் இருந்த வெறுப்பு மறைந்து அன்பு எழுந்தது. தன்னுடைய தாயாரும் இதைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் எனப் புரிந்து கொண்டு, தன் தாயார் அருகே சென்றால் அவள் பேசுவதைக் கேட்க வேண்டி வருமோ என பயந்து அருகில் செல்வதைத் தவிர்த்தாள். ஆனால் உணவு உண்பதற்கு அமரும் பொழுது துரதிர்ஷ்டவசமாக தன் தாயார் அருகிலேயே உட்கார நேர்ந்தது. ஜேன் விரைவிலேயே பிங்கிலியை திருமணம் செய்து கொண்டு விடுவாள் என தன்னுடைய எதிர்பார்ப்பினை லேடி லூகாஸிடம் வெளிப்படையாக கூறிக் கொண்டிருந்ததைப் பார்த்து மிக்க கோபம் கொண்டாள். ஆனால் திருமதி. பென்னட்டிற்கோ இது உற்சாகத்தைத் தரும் விஷயமாக இருந்தது. இதனுடைய பெருமைகளை வரிசைப்படுத்தி சொல்லிய வண்ணம் இருந்தாள். இதனால் அவள் சிறிதளவுகூட களைப்படையவில்லை. அவன் ஒரு அழகான இளைஞன், மிகப்பெரிய பணக்காரன். மூன்று மைல்களுக்கு அப்பால் வசிக்கிறான், இரு சகோதரிகளும் ஜேன்மீது, பிரியமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இச்சம்பந்தத்தில் தன் அளவு சந்தோஷம் இருக்கிறது என பெருமையாக சொல்லியவாறு இவ்விஷயத்திற்காக தன்னைத்தானே பாராட்டிக் கொண்டாள். ஜேன் பணக்கார இளைஞனை திருமணம் செய்து கொள்வதால் மற்ற சகோதரிகளுக்கும் நல்ல இடம் கிடைக்க வாய்ப்புண்டு என நம்பினாள். ஜேனுடைய பாதுகாப்பில் மற்ற பெண்களை ஒப்படைத்து விட்டு மரியாதை நிமித்தமாய் வெளியில் சென்று பேசி பழகுவதை நிறுத்திவிட்டு, தான் எப்பொழுதும் விரும்புவதைப்போல் வீட்டிலேயே சுகமாக இருக்கலாம் என நினைத்தாள். லேடி லூகாஸிடம், அவளும் தன்னைப்போல விரைவில் அதிர்ஷ்டசாலியாக வேண்டும் என வெளியில் கூறினாலும், அதற்கு வாய்ப்பேயில்லை என திடமாக நம்பினாள்.
  1. It is significant that in spite of Bingley being violently in love with Jane which has attracted the attention of all, he has not allowed one symbolic significant expression of his commitment to her
    பிங்லி தீவிரமாக ஜேனை விரும்புவதும், அதை அனைவரும் காண்பதும் உண்மையென்றாலும், அதற்கு அடையாளமாக, தான் ஜேனை முடிவாகத் தேர்ந்தெடுத்ததை அறிவிக்கும் வாயிலாக பிங்லி எந்த ஒரு செயலோ, சொல்லோ, தரவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
  2. Lizzy formulates her expectation and thus cancels Jane’s prospects
  3. All that Darcy accused her in his letter, she witnesses now. Man totally ignores his own shortcomings, gets angry if pointed out. Elizabeth is superstitiously irrational. She only expects as did her mother. So did Collins as well as Darcy
  4. Jane Austen speaks of Elizabeth’s idea of Jane settling into Netherfield, but she gives us no such thoughts of Bingley. Bingley needs Darcy’s permission even to think, but he can feel outside Darcy’s influence
    ஜேன் ஆஸ்டின் எலிசபெத் நெதர்பீல்டில் உரிமையோடு தங்கும் நாளைக் கற்பனை செய்ததை எழுதுகிறார். அதுபோல் பிங்லியைப் பற்றி எழுதவில்லை. டார்சியின் உத்திரவு இல்லாமல் பிங்லி சிந்தனையும் செய்வதில்லை. ஜேன் மீது பிரியம் எழ டார்சியின் உத்தரவைக் கேட்கவில்லை.
  5. The same idea can occur from two opposite reasons
    இரு எதிரெதிரான காரணங்களுக்காக ஒரு கருத்து எழ முடியும்.
  6. When life acts with determination according to its own rules, it appears to us unlucky perverseness
    வாழ்க்கை அதன் சட்டப்படி வழுவாமல் செயல்படும்பொழுது, நாம் அதைத் துர்அதிர்ஷ்டவசமான குதர்க்கம் எனக் கொள்கிறோம்.
  7. What Elizabeth calls the unlucky perverseness of life is the character of life making two people of similar thoughts sit together
    ஒரே குணமுள்ள இருவர் சேர்ந்தால், எப்படிச் செயல்படுகிறார்களோ, அதை எலிசபெத் துர்அதிர்ஷ்டமாக கோணல் என்கிறாள்.
  8. For a person of Mrs. Bennet’s intelligence knowing is doing. To her, Jane’s marriage is over as her mind has sensed it
    Mrs. பென்னட்டின் அறிவுக்கு புரிவது முடிந்த காரியம். அவள் மனதில் ஜேன் திருமணம் புரிகிறது. புரிவது அவளுக்கு முடிந்தது.
  9. An act permits hiding only in the measure it is incomplete
    ஒரு வேலை கூடி வருமானால், அது வெளியில் வர இடம் தாராது.
  10. As no grown child can still remain in the womb, no completed act can be hidden from the public. Therefore she talks to Lady Lucas
    வளர்ந்த குழந்தை வயிற்றிலிருக்காது. முடிந்த வேலை வெளியில் வரும். Mrs. பென்னட் முடிவதற்கு முன் முடிந்ததாகப் பேசுகிறாள்.
  11. What one believes comes true in his life and what he professes does not. Mrs. Bennet believed Jane would be married and Charlotte would not. Charlotte married at once and Jane did not
    நம்புவது பலிக்கும். பேசுவது பலிக்காது. Mrs. பென்னட் ஜேனுக்கு திருமணமாகும் ஷார்லோட்டுக்கும் ஆகாது என்று நம்பினார். ஷார்லோட்டிற்கு உடனே திருமணமாயிற்று. ஜேனுக்கில்லை.
  12. Intense good will tends to become an ideal on its own energy
    தீவிர நல்லெண்ணம் தன் சொந்த தீவிரத்தால் இலட்சியமாகும்.
  13. No expectation will stop in the middle nor can it resist repetition
    எதிர்பார்ப்பது நிற்காது. மீண்டும் எழுவதைத் தடுக்க முடியாது.
  14. An idea that presses for expression will never come to fruition
    பேச உந்தும் எண்ணம் பூர்த்தியாகாது.
  15. Gloating at the expense of another has the sure opposite result
    அடுத்தவர் புண்பட பெருமைப்படுவது நிச்சயமாக எதிரான பலன் தரும்.
  16. The energy in the thought is increased by expectation and emerges as speech
    எண்ணத்தின் தெம்பு எதிர்பார்ப்பால் வளர்ந்து பேச்சாக வெளி வரும்.
  17. Great material benefits expected grow warm in the imagination, fill the entire frame, animates the whole being
    எதிர்பார்க்கும் பெரும் சொத்து கற்பனையை இதமாக நிறைத்து, உடலெல்லாம் நிறைந்து, ஜீவனைப் பூரிக்கும்.
  18. To think that one is in great demand is one foible of the ego
    உலகம் தன்னை நாடுகிறது என்பது அகந்தையின் குறைபாடுகளில் ஒன்று.
  19. Age seeks company
    வயதானால் துணை தேடும்.
  20. To profess not to need the thing which one longs for is a fashion of speech
    மனம் சந்திக்க ஏங்குபவர் தனக்குத் தேவையில்லை எனப் பேசுவது பேசும் பாணி.
  21. As sincerity has a power, utter insincerity too has the power of the same magnitude
    உண்மை (power) க்குப் பவர் உண்டு. அதே போல் உண்மையற்ற முழுமைக்கும் (power) முழுப்பவருண்டு.
59
In vain did Elizabeth endeavour to check the rapidity of her mother's words, or persuade her to describe her felicity in a less audible whisper; for, to her inexpressible vexation, she could perceive that the chief of it was overheard by Mr. Darcy, who sat opposite to them. Her mother only scolded her for being nonsensical.
தன் தாயார் பேசிக் கொண்டே போவதை எலிசபெத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருக்கும் டார்சிக்கு கேட்டிருக்கும் என யூகித்து, தன் தாயாரை மெதுவாகப் பேசும்படி கோபத்துடன் கேட்டுக் கொண்டாள். ஆனால் அவளது தாயாரோ எலிசபெத் தவறாக நடந்து கொள்வதற்கு கடிந்து கொண்டாள்.
  1. Youth is ashamed of what age prides in
    வயதானவர் பெருமைப்படுவதற்கு இளைஞர்கள் வெட்கப்படுவார்கள்.
  2. Our defects have a demonstrative urge to display before our rivals
    நம் எதிரிகளைக் கண்டால் நம் குறை எழுந்து ஆர்ப்பாட்டம் செய்யும்.
  3. Culture, wisdom, discipline curbs the dynamic urge of the energy
    விவேகம், பண்பு, கட்டுப்பாடு, தெம்பு வேகமாக எழுவதைக் கட்டுப்படுத்தும்.
  4. What Elizabeth did to Darcy in the dance, her mother does at the dining table. How can she control her mother?
    எலிசபெத் டான்ஸில் டார்சியிடம் செய்ததை Mrs. பென்னட் லேடி லூகாஸிடம் செய்கிறார். எப்படித் தடுக்க முடியும்?
  5. Put Mrs. Bennet’s words about Darcy and Elizabeth’s questions and thoughts about Darcy in the dance and arrange them side by side in two tabular columns. The parallel will emerge
    எலிசபெத் டான்ஸில் டார்சியைக் கேட்டவற்றையும், Mrs. பென்னட் இப்பொழுது பேசுவதையும் இரண்டு பத்திகளாக பக்கத்துப் பக்கத்தில் எழுதினால் அவற்றிடையேயுள்ள ஒற்றுமை தெரியும்.
  6. Mrs. Bennet is proud of her exhibition
60
"What is Mr. Darcy to me, pray, that I should be afraid of him? I am sure we owe him no such particular civility as to be obliged to say nothing he may not like to hear."
“எதற்காக டார்சியிடம் நான் பயப்படவேண்டும்? அவன் கேட்க விருப்பப்படாத எதையும் நாம் பேசக் கூடாது என்று அவனுக்கு மரியாதை தர எந்த அவசியமுமில்லை.”
 
61
"For heaven's sake, madam, speak lower. -- What advantage can it be to you to offend Mr. Darcy? You will never recommend yourself to his friend by so doing."
“அம்மா, தயவு செய்து மெதுவாகப்பேசு. டார்சியை இப்படி அவமானப்படுத்துவதால் உனக்கு என்ன லாபம்? நீ இப்படி செய்தால் அவனுடைய நண்பனுக்கு உன்மீது மரியாதை இருக்காது.”
  1. The joy in offending a rival is a rare joy
    எதிரிக்கு ஏமாற்றமளிப்பது அலாதி இன்பம்.
62
Nothing that she could say, however, had any influence. Her mother would talk of her views in the same intelligible tone. Elizabeth blushed and blushed again with shame and vexation. She could not help frequently glancing her eye at Mr. Darcy, though every glance convinced her of what she dreaded; for though he was not always looking at her mother, she was convinced that his attention was invariably fixed by her. The expression of his face changed gradually from indignant contempt to a composed and steady gravity.
அவள் சொல்வது எதுவும் தாயாரிடம் எடுபடவில்லை. தன்னுடைய அபிப்பிராயங்களை அதே உரத்த குரலில் சொல்லிக் கொண்டே இருந்தாள். எலிசபெத்தின் முகம் அவமானத்தாலும், கோபத்தாலும் சிவந்தது. அவ்வப்போது டார்சியைப் பார்த்து அவன் முகமாறுதலை கண்டு தான் பயந்தபடியே நடப்பதைக் கண்டாள். டார்சி தனது தாயாரை நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் என தெரிந்தது. அவன் முகத்திலிருந்த கோபமும், வெறுப்பும் மறைந்து தீவிரமாக முகம் மாறியது.
  1. Life’s preparing the future securely is seen by Man that it is totally undermined
    எதிர்காலத்தை உறுதிப்படுத்த வாழ்க்கை முயன்றால் மனிதன் அனைத்தும் போய்விட்டது என நினைப்பான்.
  2. Contempt when tolerated becomes gravity
    வெறுப்பைப் பொறுத்துக் கொண்டால் முகம் சீரியஸாகும்.
  3. Indignant contempt changes into composed gravity in Darcy. Later he was to accept it and serve its wrong effects. That is life
  4. Elizabeth suffers intensely. Through transformation it later becomes intense enjoyment
  5. Her suffering issues out of her present view, which is the spiritual definition of suffering
  6. Elizabeth blushed and blushed as her mother spoke, but when Darcy pointed it out at his proposal, she was only angry
    தாயார் பேசுவதைக் கேட்டு வெட்கப்பட்டு எலிசபெத் முகம் சிவந்தது. அதையே டார்சி proposal ல் குறிப்பிட்டது அவளுக்குக் கோபம் வந்தது
  7. Anger is the subconscious awareness of material that makes one blush. One does not blush to be angry
    நாம் வெட்கப்படுவதை ஆழ்மனம் பெற்றிருப்பதை நாம் அறிவது கோபம். கோபப்பட வெட்கப்படுவதில்லை.
  8. Her thoughts are full of Wickham, but her feelings are saturated with Darcy
    அவள் மனம் விக்காமால் நிறைந்துள்ளது. அவள் இதய உணர்ச்சிகள் டார்சியால் நிறைந்துள்ளன.
  9. His attention is fixed by her. Her looks were on him
    தன்னையே டார்சி கவனிப்பதைக் கண்டாள். அவள் பார்வை அவனை அடைந்தது.
  10. Her mother occupies both of them
    இருவரும் Mrs. பென்னட்டைக் கவனிக்கின்றனர்.
  11. The core of the story is here
    கதையின் கரு உள்ள இடமிது.
  12. Darcy realises the uselessness of anger and settles for grave forbearance
    கோபம் பயன்படாது என டார்சி அறிந்து, கனத்த பொறுமையை மேற்கொள்கிறான்.
63
At length, however, Mrs. Bennet had no more to say; and Lady Lucas, who had been long yawning at the repetition of delights which she saw no likelihood of sharing, was left to the comforts of cold ham and chicken. Elizabeth now began to revive. But not long was the interval of tranquillity; for when supper was over, singing was talked of, and she had the mortification of seeing Mary, after very little entreaty, preparing to oblige the company. By many significant looks and silent entreaties, did she endeavour to prevent such a proof of complaisance -- but in vain: Mary would not understand them; such an opportunity of exhibiting was delightful to her, and she began her song. Elizabeth's eyes were fixed on her with most painful sensations, and she watched her progress through the several stanzas with an impatience which was very ill rewarded at their close; for Mary, on receiving, amongst the thanks of the table, the hint of a hope that she might be prevailed on to favour them again, after the pause of half a minute began another. Mary's powers were by no means fitted for such a display: her voice was weak, and her manner affected. -- Elizabeth was in agonies. She looked at Jane, to see how she bore it; but Jane was very composedly talking to Bingley. She looked at his two sisters, and saw them making signs of derision at each other, and at Darcy, who continued, however, impenetrably grave. She looked at her father to entreat his interference, lest Mary should be singing all night. He took the hint, and when Mary had finished her second song, said aloud, "That will do extremely well, child. You have delighted us long enough. Let the other young ladies have time to exhibit."
வெகுநேரத்திற்குப்பின் திருமதி. பென்னட்டிற்கு மேற்கொண்டு பேச எதுவுமில்லை. பேசியவற்றையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்ததை கொட்டாவி விட்டுக் கேட்டுக் கொண்டிருந்த லேடி லூகாஸ், தனக்கும், இதுபோன்ற சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்கு வாய்ப்பில்லை என அறிந்து, உணவு உண்பதைத் தொடர்ந்தாள். எலிசபெத்திற்கு சிறிது நிம்மதி கிடைத்தது. ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. விருந்துக்குப்பின் பாடுவதைப்பற்றி பேச்செழுந்த பொழுது, மேரி, தான் பாடுவதற்கு தயார் செய்வதைப் பார்த்து எலிசபெத் மௌனமாக தன் கண் ஜாடையால் வேண்டாம் என கெஞ்சியும் அவள் கேட்காமல், பாடுவதற்கு, பியானோமுன் அமர்ந்தாள். அவள் மோசமாக பாடுவதைக் கேட்டு மிகவும் சங்கடப்பட்டாள். நன்றி என சிலர் கூறியதைக் கேட்டு உற்சாகமடைந்த மேரி அரை நிமிட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அடுத்த பாடலை ஆரம்பித்தாள். அவளுடைய பலகீனமான குரலும், பாடும் விதமும் ஒரு சபையில் பாடுவதற்கு சிறிதும் ஏற்றதாக இல்லை. இதனால் எலிசபெத் மிகவும் வருந்தினாள். ஜேன் எப்படி இதனை சகித்துக் கொண்டிருக்கிறாள் என அவளை திரும்பிப் பார்த்தாள். ஆனால் அவளோ பிங்கிலியுடன் வெகு அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தாள். பிங்கிலியின் சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மேரியை ஏளனம் செய்து கொண்டிருந்தனர். டார்சி மிகவும் கடுமையாக இருந்தான். இரவு முழுவதும் பாடிக் கொண்டே இருந்துவிடுவாளோ என பயந்து தன் தகப்பனார் பக்கம் திரும்பி அவளை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படி பார்வையில் கெஞ்சினாள். அவளுடைய குறிப்பினை புரிந்துகொண்ட தகப்பனார், மேரி தனது இரண்டாவது பாடலை பாடி முடித்தவுடன், “போதும் குழந்தாய், மிகவும் நன்றாக இருந்தது. எங்கள் எல்லோரையும் வெகு நேரம் சந்தோஷப்படுத்திவிட்டாய். மற்ற இளம் பெண்மணிகளும் பாடுவதற்கு இடம் கொடு” என்றார் திரு. பென்னட்.
  1. Straining to listen to uninteresting things is tiring
    பிடிக்காத விஷயத்தை வலிந்து கேட்பது களைக்கும்.
  2. The patient politeness of Lady Lucas instead of any disapproval, polite or mild, soon rewarded Lady Lucas. Had she been irritated by Mrs. Bennet’s performance, it would have prevented her luck
    லேடி லூகாஸ் பொறுமையாக பவ்யமாக இருக்கிறார். மறுத்து பதில் சொல்ல முயலவில்லை. உடன் அதற்குப் பலன் வந்தது. பென்னட் பேச்சு லேடி லூகாஸூக்கு எரிச்சலை மூட்டியிருந்தால், அது அதிர்ஷ்டத்திற்குத் தடை செய்திருக்கும்.
  3. Events continue not on the necessity but by the energy in motion
    நிகழ்ச்சிகள் அவசியத்திற்காகத் தெரியவில்லை. சலனத்தின் சக்தியால் தொடர்கிறது.
  4. Lydia, Collins, mother, and Mary are vulgar. None of this leaves in her a persistent residue
  5. Mrs. Bennet was followed by Mary. Elizabeth rarely realised that she had begun the chain nor is she aware of the rule that intense life movements cannot have any respite. The performers may change but the performance will be non-stop
    Mrs. பென்னட்டைத் தொடர்ந்தது மேரி. இத்தொடரை ஆரம்பித்தது தான் என எலிசபெத்திற்குத் தெரியாது. தீவிரமான வாழ்வலைகளை எவரும் தடைசெய்ய முடியாது எனவும் அவளுக்குத் தெரியாது. வெளிப்பாடு மாறும். ஆனால் தடையின்றித் தொடரும்.
  6. To accept an invitation that is not extended is awkward
    வராத அழைப்பை ஏற்பது அநாகரீகம்.
  7. Exhibitionism is exhilarating
    பகட்டான பழக்கம் உற்சாகமானது.
  8. Those who are neglected will not respond to silent entreaties
    புறக்கணிக்கப்பட்டவர் மௌனமான அழைப்பை ஏற்க மாட்டார்கள்.
  9. Mary delighted in exhibition. So did Mrs. Bennet. Equally so was Elizabeth
    மேரி பலர் முன்னிலையில் பாட ஆசைப்படுகிறாள். Mrs. பென்னட்டும் அப்படியே. எலிசபெத்திற்கும் அதுவே பிடிக்கும்.
  10. Elizabeth, Collins, Mrs. Bennet, Mary are maintaining the negative intensity while Jane and Bingley are absorbed in each other. It is equally intense and also as negative as the effusions of the family
    எலிசபெத், காலின்ஸ், Mrs. பென்னட், மேரி தீவிரமாக நெகட்டிவாக செயல்படும்பொழுது ஜேனும், பிங்லியும் தங்களை மறந்து அடுத்தவரில் திளைக்கின்றனர். அதுவும் தீவிரமானது. அதுவும் நெகட்டிவானது. எலிசபெத்தின் நல்லெண்ணம் தவிர பிங்லி ஜேன் உறவில் எந்த உயர்வும் காணப்படவில்லை.
  11. Love of Bingley and Jane has nothing redeeming about it except the great good will of Elizabeth
    எலிசபெத்தின் நல்லெண்ணம் மட்டுமே அவர்களைச் சேர்த்தது.
  12. Culture swims against the current
    பண்பின் பக்குவம் ஊருக்கு எதிராகச் செயல்படும்.
  13. Culture is in agonies when compelled to compromise with vulgarity
    ஆபாசமானவருடன் அழகாகப் பேசும் நேரம் வந்தால் பண்பு புண்படும்.
  14. Concentration excludes everything
    மனம் ஓரிடத்தில் நிலைத்தால், மற்றவை கண்ணுக்குத் தெரியாது.
  15. To correct an error openly is to bring it into the limelight
    பலர்முன் குறையைக் கண்டிப்பது பிரபலப்படுத்துவதாகும்.
  16. Elizabeth acts in the case of Mary and Mr. Bennet responded, while in the case of Lydia, Elizabeth was not willing, so also Mr. Bennet. Here we see the extent of restraint available in the family. This can be compared with that of Darcy and Caroline
    மேரி விஷயத்தில் எலிசபெத் செயல்படுகிறாள். Mr. பென்னட்அதை எடுத்துக் கொள்கிறார். லிடியா விஷயத்தில் எலிசபெத் முழுவிவரம் சொல்லத் தயாராக இல்லை. Mr. பென்னட்டும் அதை ஏற்கத் தயாரில்லை. குடும்பத்தில் எந்த அளவு கட்டுப்பாடுள்ளது என்று இங்கு காணலாம். இதை டார்சி, காரலினுடன் ஒப்பிடலாம்.
64
Mary, though pretending not to hear, was somewhat disconcerted; and Elizabeth, sorry for her, and sorry for her father's speech, was afraid her anxiety had done no good. Others of the party were now applied to.
காதில் விழாததுபோல் மேரி பாவனை செய்தாலும், மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானாள். எலிசபெத்திற்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. தகப்பனாரின் பேச்சைக் கேட்டு கஷ்டமாகிவிட்டது. தன்னுடைய ஆர்வம் நல்லதை செய்யவில்லையோ என பயந்தாள். மற்றவர்கள் பாட அழைக்கப்பட்டனர்.
  1. Mary would not hear her father’s admonition. Lydia at the house of Gardiner would not hear a word of advice
    தகப்பனார் கூறுவதை மேரி கேட்டுக் கொள்ளத் தயாரில்லை. Mrs. கார்டினர் வீட்டில் லிடியா ஒரு வார்த்தை கூடக் கேட்டுக் கொள்ளவில்லை.
  2. He who punishes is sorry for the victim
    தண்டிப்பவன் தண்டனை பெறுபவனுக்காக வருந்துவான்.
65
"If I," said Mr. Collins, "were so fortunate as to be able to sing, I should have great pleasure, I am sure, in obliging the company with an air; for I consider music as a very innocent diversion, and perfectly compatible with the profession of a clergyman. -- I do not mean, however, to assert that we can be justified in devoting too much of our time to music, for there are certainly other things to be attended to. The rector of a parish has much to do. -- In the first place, he must make such an agreement for tythes as may be beneficial to himself and not offensive to his patron. He must write his own sermons; and the time that remains will not be too much for his parish duties, and the care and improvement of his dwelling, which he cannot be excused from making as comfortable as possible. And I do not think it of light importance that he should have attentive and conciliatory manners towards everybody, especially towards those to whom he owes his preferment. I cannot acquit him of that duty; nor could I think well of the man who should omit an occasion of testifying his respect towards anybody connected with the family." And with a bow to Mr. Darcy he concluded his speech, which had been spoken so loud as to be heard by half the room. -- Many stared -- many smiled; but no one looked more amused than Mr. Bennet himself, while his wife seriously commended Mr. Collins for having spoken so sensibly, and observed in a half-whisper to Lady Lucas, that he was a remarkably clever, good kind of young man.
“எனக்கு மட்டும் பாடத் தெரிந்தால், நான் இங்கு பாடுவதில் மிக்க சந்தோஷமடைவேன். இசை நமக்கு ஆறுதலான மாற்றத்தைத் தரும், மேலும் பாதிரியாராக இருக்கும் தொழிலோடு மிகச் சரியாக ஒத்துப்போகும் என நம்புகிறேன். அதனால் இசைக்கே நிறைய நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. நமக்கு செய்வதற்கு வேறு பல வேலைகளும் இருக்கின்றன. சர்ச்சில் இருக்கும் பாதிரியாருக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. யாருக்கும் இடைஞ்சலில்லாதவாறு வரிப் பணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தனக்கும் சாதகமாக இருக்க வேண்டும், தன்னுடைய ஆதரவாளருக்கும் நஷ்டம் வரக்கூடாது. தன்னுடைய உரையை தானே எழுத வேண்டும். சர்ச் பணியினை செய்வதற்கு குறைந்த நேரமே கிடைக்கும். தன்னைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். எல்லா சௌகரியங்களும் செய்து தர வேண்டும். எல்லோரிடமும் நட்போடும், அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தன்னுடைய பதவி உயர்வுக்கு யார் காரணமாக இருப்பாரோ அவரிடமும் நல்ல பெயரோடு நடந்து கொள்ள வேண்டும். அக்குடும்பத்தினர் அனைவரிடமும் மரியாதையுடன் பழக வேண்டும்” என உரத்த குரலில் பேசிய காலின்ஸ், டார்சிக்கு வணக்கம் சொல்லியபடி தன் உரையை முடித்தான். அவன் சத்தமாகப் பேசியது அவ்வறையில் பாதிவரை எட்டியது. பலர் திகைத்து நின்றனர் -- பலர் சிரித்தனர். திரு. பென்னட்டிற்கு அவனது பேச்சு வேடிக்கையாக இருந்தது. திருமதி. பென்னட்டோ அவன் மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்தாள். மிகவும் புத்திசாலி, நல்ல மனிதன் என லேடி லூகாஸிடம் தாழ்ந்த குரலில் கூறினாள்.
  1. Vulgar energy cannot fail to affirm itself
    ஆபாசமான தெம்பு தன்னை வலியுறுத்தாமலிருக்காது.
  2. Music is a sacred art, not a mere innocent diversion
    சங்கீதம் புனிதமான கலை. வெறும் பொழுது போக்கல்ல.
  3. To be a clergyman is a way of higher living, not a profession
    பாதிரியார் சமூகத்தில் உயர்ந்தவர். அது ஒரு தொழில் மட்டுமல்ல.
  4. His tithes will come to him if he does not make it a profession
    அதைத் தொழிலாகச் செய்யாவிட்டால் நிலவரி தானே வசூலாகும்.
  5. Tithes are not the income of the church; it is their offering of their lives
    நிலவரி சர்ச் வருமானமில்லை. விவசாயிகளின் காணிக்கை.
  6. No walk of life is incompatible with that of a priest’s life
    பாதிரியார் வாழ்க்கை மற்ற எவருடைய வாழ்க்கையும் போன்றது.
  7. Sermons must not be written. They are the outpourings of his soul
    பாதிரியாரின் பிரார்த்தனை எழுதப்பட வேண்டியதில்லை. அவை ஆத்ம சங்கல்பம்.
  8. Surely this assembly is not a fit place for this dissertation. One’s character is in evidence by this long loud delivery
    இந்த இடம் பாதிரியாரின் பிரசங்கத்திற்கு உரிய இடமில்லை. நீண்ட பேச்சு உரத்த குரலில் பேசியது பேசியவர் சுபாவத்தைக் காட்டுகிறது.
  9. He cannot be acquitted of delinquency for speaking thus
    இப்படி பேசியதற்கு அவர் தண்டனையைத் தப்ப முடியாது.
  10. The very body of a snob is in tune with his squeamishness
    கயவனின் உடலும் நெகிழ்ந்து குழையும்.
  11. He who is not naturally popular attracts attention
    ஒருவர் மட்டமான பழக்கத்தைக் கண்டு ஏளனம் செய்பவரும் மட்டமான பழக்கமுள்ளவர்.
  12. A smile of approval can really be that of derision
    சிரித்த முகமாக ஏற்பது உண்மையில் மறுப்பை வெளிப்படுத்துவதாகும்.
  13. He who is amused by another’s substandard behaviour is not up to the standard
    ஒருவர் மட்டமான பழக்கத்தைக் கண்டு ஏளனம் செய்பவரும் மட்டமான பழக்கமுள்ளவர்.
  14. A dull mind likes bright loud colours
    மந்தமான மனம் பளிச்சென்ற கலரை விரும்பும்.
  15. The energy of singing, the impertinent introduction, the loud lecture, the celebration of expectation, etc. is the energy of the strong female out to catch the male
    உரத்த பாட்டு, தானே போய் அறிமுகப்படுத்திக் கொள்ளுதல், உரத்த குரலில் பேசுவது, திருமணம் வரப் போவதைக் கொண்டாடுவது ஆகியவை ஆண்மகனை முனைந்து பிடிக்க முயலும் பெண்ணின் அபரிமிதமான தெம்பு.
  16. Compare Lady Catherine’s would-be proficiency in music had she learnt it, with Collins’ professed act of self-giving
    லேடி காதரீன் சங்கீதம் கற்றுக் கொண்டால் எப்படிப் பாடுவார் என்பதை காலின்ஸ் பாட ஆசைப்படுவதுடன் ஒத்திட்டுப் பார்க்கலாம்.
  17. Other’s shortcomings, our strength will stand out in our minds, not our shortcomings or other’s merits
  18. Thinking aloud is the beginning of thinking, as loud reading is preceded by silent reading
    மௌனமாகப் படிக்குமுன் வாய்விட்டுப் படிப்பார்கள். சிந்திப்பதன் முன் வாய்விட்டுப் பேசி சிந்திப்பார்கள்.
  19. Mrs. Bennet actually applauds Collin’s vulgar outbursts
  20. The entire audience listened to every word of Mrs. Bennet on Jane’s wedding. The louder talk of Mr. Collins was not heard at all. Both are loud declarations. One belongs to gossip and the other relates to self-congratulations
    Mrs. பென்னட் பேசியதை அனைவரும் கேட்டுக் கொண்டார்கள். காலின்ஸ் மேலும் உரத்த குரலில் பேசியும் எவரும் கேட்டுக் கொள்ளவில்லை. வதந்தியைக் கேட்டுக் கொண்டனர். தற்பெருமை யாருக்கும் தேவையில்லை.
  21. Mrs. Bennet handsomely commending Collins where she should be ashamed of his speech is one end of Pride and Prejudice
    Mrs. பென்னட்காலின்ஸ் பேச்சுக்கு வெட்கப்படவில்லை. அவனுடைய திறமையை மெச்சி பாராட்டினாள். Pride and Prejudice இன் வாழ்வில் அது ஒரு ஓரம்.
66
To Elizabeth it appeared, that had her family made an agreement to expose themselves as much as they could during the evening, it would have been impossible for them to play their parts with more spirit or finer success; and happy did she think it for Bingley and her sister that some of the exhibition had escaped his notice, and that his feelings were not of a sort to be much distressed by the folly which he must have witnessed. That his two sisters and Mr. Darcy, however, should have such an opportunity of ridiculing her relations, was bad enough, and she could not determine whether the silent contempt of the gentleman, or the insolent smiles of the ladies, were more intolerable.
மாலை நேரமும் இவ்வண்ணமே நடந்து கொள்வதாகத் தீர்மானித்திருந்தால் தற்சமயம் நடந்து கொண்டதைவிட,தன் குடும்பத்தினரால், மேலும் மோசமாக நடந்து கொள்ள முடியாது என எலிசபெத்திற்கு தோன்றியது. பிங்கிலியும், ஜேனும் இவர்களுடைய நடத்தையில் சிலவற்றை பார்க்கத் தவறியதற்கு சந்தோஷப்பட்டாள். இல்லையெனில் முட்டாள்தனமான செயல் அவனை வருத்தப்பட வைத்திருக்கும். டார்சிக்கும், இரண்டு சகோதரிகளுக்கும், தன்னுடைய சொந்தங்களை கேலி செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததுபற்றி எலிசபெத்திற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. டார்சி தன் குடும்பத்தினரை மட்டமாக நினைத்து மௌனமாக இருந்ததும், இரு பெண்மணிகளின் கர்வமான புன்னகையும் இதில் எது மிகவும் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது என அவளால் தீர்மானிக்க முடியவில்லை.
  1. Success is there; it does not matter whether it is good or bad
    வெற்றியுண்டு. அது நல்லதா கெட்டதா என்பதில்லை.
  2. Elizabeth is not without the right perception of her family. Only that it does not enter into her scheme of things
    எலிசபெத் தன் குடும்பத்தை அறியாதவளில்லை. இது இப்பொழுது அவளுக்கு முக்கியமாக இல்லை.
  3. The insensible actions escape the notice of the insensitive passivity
    ஜேனும் பிங்லியும் சாதுவாக, எதையும் அறியும் ஆவலில்லாமலிருக்கிறார்கள்.
  4. Insensitivity achieves among insensible people letting them not see the sensitive side of it
    சொரணையற்றவர் சொரணையற்றவரிடையே சாதிக்கின்றனர். அவர்கள் சொரணையை அறியாதவர்.
  5. Lydia, Jane, Charlotte were thus married. Even Elizabeth was a past beneficiary of it in that she remains wedded to the falsehood of Wickham to the end
    லிடியா, ஜேன், ஷார்லோட் ஆகியவர் அப்படி திருமணம் செய்து கொண்டனர். எலிசபெத்தும் ஓரளவு அதன் பலன் பெற்றாள். விக்காம் பொய்யை நம்பும் அளவுக்கு அவள் பங்கு. முடிவு வரை அவள் அதை நம்பினாள்.
  6. Exhibition of folly is entertaining
    அறிவில்லாத ஆர்ப்பாட்டம் அனைவருக்கும் பொழுது போக்கு.
  7. To laugh at another is easier than appreciating him
    ஒருவரைப் பாராட்டுவதைவிட அவரைக் கேலி செய்வது எளிது.
  8. Public assemblies prompt people to come out easily
    பலர் கூடுமிடத்தில் எவரும் எளிதாகப் பேசுவர்.
  9. The urge to exhibit is the urge for existence
    பகட்டாக இருக்க விரும்புவது உயிரைக் காப்பாற்றும் உணர்வு.
  10. If one is not in the limelight, he goes to where it is
    பிரபலமாக இல்லாதவர், பிரபலத்தைத் தேடிப் போவார்.
  11. Where men express silent contempt women indulge in insolent smiles
    ஆண்கள் மௌனமாக மறுத்தால் பெண்கள் குறும்புச் சிரிப்பு சிரிப்பார்கள்.
  12. Those who perceived, Bingley’s sisters, did not accomplish
    சொரணையற்ற செயல்களை சகோதரிகள் கண்டனர். கண்டவர் சாதிக்கவில்லை.
  13. Jane is lost in Bingley
  14. Darcy and Caroline observe all
67
The rest of the evening brought her little amusement. She was teased by Mr. Collins, who continued most perseveringly by her side, and though he could not prevail with her to dance with him again, put it out of her power to dance with others. In vain did she entreat him to stand up with somebody else, and offer to introduce him to any young lady in the room. He assured her that, as to dancing, he was perfectly indifferent to it; that his chief object was, by delicate attentions, to recommend himself to her, and that he should therefore make a point of remaining close to her the whole evening. There was no arguing upon such a project. She owed her greatest relief to her friend Miss Lucas, who often joined them, and good-naturedly engaged Mr. Collins' conversation to herself.
மாலைப் பொழுதின் பிற்பகுதியில் சுவாரசியமாக எதுவும் நடக்கவில்லை. காலின்ஸால் அவள் தொந்தரவு செய்யப்பட்டாள், விடாப்பிடியாக அவள் கூடவே அவன் இருந்தான். தன்னுடன் மீண்டும் நடனமாட அவளை சம்மதிக்க வைக்க முடியவில்லை, மற்றவர்களுடனும் அவளால் ஆட முடியவில்லை. வேறுயாருடனாவது அவனை ஆட வைக்கவும், வேறு எந்த இளம் பெண்ணுக்கும் அறிமுகம் செய்து வைக்க அவள் எடுத்த முயற்சியும் வீண் போனது. நடனம் ஒரு பொருட்டல்ல எனத் தெரிவித்த அவன், அவளிடம் தன்னை சிபாரிசு செய்வதற்காக எடுக்கும் நாசூக்கான கவனங்கள் இவை என்று சொல்லி, அவள் கூடவே அன்று மாலை முழுவதும் இருக்க தீர்மானித்திருப்பதாகக் கூறினான். அவ்வப்பொழுது அவர்களுடன் சேர்ந்து, அவனுடன் பேசிக் கொண்டு தனக்கு விடுதலை அளித்த தன்னுடைய தோழி மிஸ். லூகாஸிற்கு எலிசபெத் நன்றியுடையவளாய் இருந்தாள்.
  1. Attention of those abhorred is tragedy
    பயங்கர வெறுப்புக்குரியவர் கவனிப்பது துர் அதிர்ஷ்டம்.
  2. Bad temper may not be a misfortune, but certainly prevents good fortune
    கெட்ட குணம் தரித்திரமில்லை, அதிர்ஷ்டத்தைத் தடை செய்யும்.
  3. Meat that is a punishment to the vegetarian is luck to the non-vegetarian
    மாமிசம் சைவனுக்குத் தண்டனை, அசைவனுக்கு விருந்து.
  4. Mind teases inconscience
    மனம் இருண்ட ஜடத்தை சீண்டுகிறது
  5. Inspite of low exhibitions the whole assembly seeks enjoyment, a sign of prosperous dynamism. That gives the atmosphere strength and a positive character. It is that which changes the course of events when the negative powers exhaust themselves. Meryton is low, but its lowness is less than the revolutionary power that dominates. Elizabeth sees Darcy’s attention was constantly on her. She interpreted it differently. She was aware of the attention, not his love
  6. It is true no event descends unannounced
  7. Relationship with ignorance prevents the enjoyment of knowledge
    அறியாமையுடன் உள்ள உறவு ஞானத்தை அனுபவிப்பதைத் தடுக்கிறது.
  8. What irritates Elizabeth, entertains Charlotte
    எலிசபெத்திற்கு எரிச்சல் தருவது ஷார்லோட்டின் ஆனந்தமாகிறது.
  9. Charlotte’s common sense is the intelligence of shame-faced character
    வெட்கமற்றவர் பெற்ற புத்திசாலித்தனம் ஷார்லோட்டின் அறிவு (common sense ).
  10. As Sir Lucas received the title, Charlotte enjoys perception
    சர்.லூகாஸ் பட்டம் பெற்றது போல் ஷார்லோட்டிற்கு common sense உண்டு.
  11. Charlotte could enter the picture only after Wickham is physically removed. At Phillips, Elizabeth is warm, expansive, emotionally creative towards Wickham’s falsehood. Shamelessness cannot enter their atmosphere until Wickham shamelessly stayed away
    விக்காம் இடத்தை விட்டு அகன்ற பின்னரே ஷார்லோட் வர முடிகிறது. பிலிப்ஸ் வீட்டில் எலிசபெத் உற்சாகமாக இருக்கிறாள். மலர்ந்த மனம், உள்ளக் கிளர்ச்சி நிறைந்த உணர்ச்சியை விக்காம் பொய்யுள் காண்கிறாள். வெட்கம்கெட்ட விக்காம் போகும்வரை சொரணையற்ற ஷார்லோட் உள்ளே வர முடியவில்லை.
  12. The parallels in Darcy’s notice and Collins moving towards Charlotte reveal their related functioning
    டார்சி நடைமுறையைக் கவனிப்பதும், காலின்ஸ் ஷார்லோட்டை நாடுவதும் ஒன்று போல தொடர்பு இங்கே தெரிகிறது.
68
She was at least free from the offence of Mr. Darcy's farther notice; though often standing within a very short distance of her, quite disengaged, he never came near enough to speak. She felt it to be the probable consequence of her allusions to Mr. Wickham, and rejoiced in it.
இதனால் டார்சியின் அவமரியாதையிலிருந்து அவளால் தப்பிக்க முடிந்தது. செய்வதற்கு ஒன்றுமில்லாமல் அவன், அவள் அருகிலேயே நின்றிருந்தாலும், அருகே வந்து பேசவேயில்லை. விக்காமைப்பற்றி தான் ஜாடையாகப் பேசியதுதான் காரணமாக இருக்கும் என நினைத்த அவள், அதற்காக சந்தோஷப்பட்டாள்.
  1. Darcy’s offence of closely noticing Elizabeth relaxes a little when Charlotte takes away Collins
    டார்சி எலிசபெத்தைத் தொடர்ந்து கவனிப்பது ஷார்லோட் காலின்ஸை அகற்றியவுடன் நின்று போகிறது.
  2. It is impossible for a lover in an assembly to take his eyes off his love
    ஒரு கூட்டத்தில் தான் விரும்பும் பெண்ணைக் கண்டவனால் வேறெதையும் பார்க்க முடியாது.
69
The Longbourn party were the last of all the company to depart, and by a manoeuvre of Mrs. Bennet, had to wait for their carriages a quarter of an hour after everybody else was gone, which gave them time to see how heartily they were wished away by some of the family. Mrs. Hurst and her sister scarcely opened their mouths, except to complain of fatigue, and were evidently impatient to have the house to themselves. They repulsed every attempt of Mrs. Bennet at conversation, and by so doing threw a languor over the whole party, which was very little relieved by the long speeches of Mr. Collins, who was complimenting Mr. Bingley and his sisters on the elegance of their entertainment, and the hospitality and politeness which had marked their behaviour to their guests. Darcy said nothing at all. Mr. Bennet, in equal silence, was enjoying the scene. Mr. Bingley and Jane were standing together, a little detached from the rest, and talked only to each other. Elizabeth preserved as steady a silence as either Mrs. Hurst or Miss Bingley; and even Lydia was too much fatigued to utter more than the occasional exclamation of "Lord, how tired I am!" Accompanied by a violent yawn.
லாங்க்பர்ன் குடும்பத்தினர்தான் கடைசியாக விடைபெற்றனர். ஏனெனில் திருமதி. பென்னட் திட்டமிட்டபடி எல்லோரும் சென்ற பிறகு அரைமணி நேரம் கழித்துத்தான் வண்டி வந்தது. காத்திருக்கும் நேரத்தில் அவ்வீட்டில் உள்ளவர்கள் எவ்வாறு தாங்கள் சீக்கிரம் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் என பார்க்க முடிந்தது. திருமதி. ஹர்ஸ்ட்டும், அவளது சகோதரியும் மிகவும் களைத்துப்போய் விட்டதாகக் கூறி, எல்லோரும் எப்பொழுது கிளம்பி எப்பொழுது தங்கள் இல்லம் தங்கள் வசம்வரும் என காத்துக் கொண்டிருந்தனர். திருமதி. பென்னட் பேச எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினர். அதனால் எல்லோரும் அமைதியாக ஜீவனே இல்லாமல் உட்கார்ந்திருந்தனர். அச்சமயம் காலின்ஸின் நீண்ட பேச்சு சற்று ஆறுதலைத் தந்தது. அழகாக விருந்து கொடுத்ததற்கும், விருந்தோம்பலையும், விருந்தாளிகளுடன் மரியாதையாக நடந்து கொண்டதற்கும், பிங்கிலியையும் அவனது சகோதரிகளையும் பாராட்டிக் கொண்டிருந்தான். டார்சி எதுவும் பேசவில்லை. திரு. பென்னட்டும் மௌனமாக எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். பிங்கிலியும், ஜேனும் மற்ற அனைவரிடமிருந்து சற்று விலகி நின்று பேசிக் கொண்டிருந்தனர். திருமதி.ஹர்ஸ்ட், மிஸ்.பிங்கிலிபோல் எலிசபெத்தும் மௌனமாக இருந்தாள். பெரிய கொட்டாவியை விட்டவாறு “எவ்வளவு களைப்பாக இருக்கிறேன்” என்பதைத் தவிர லிடியாவும் வேறு எதுவும் பேசவில்லை.
  1. To linger in the premises of the rich man is a satisfying privilege for others
    பணக்காரனுடைய இடத்தில் மேலும் கொஞ்ச நாழியிருக்க அனைவரும் பிரியப்படுவர்.
  2. Those who seek company are not above ruses
    நட்பை நாடுபவன் யுக்திகளை விலக்குவதில்லை.
  3. To like people who do not like you requires the thick skin of mercenary nature
    உன்னை வெறுப்பவரை விரும்ப ஆதாயம் சொரணையை அழித்திருக்க வேண்டும்.
  4. Social intercourse is largely the gravitation of the population to the elite
    சமூக உறவு என்பது பெரும்பாலும் மக்கள் உயர்ந்தவரை நாடுவதே.
  5. Stupidity educated ends up in long winding speeches
    மடையன் பட்டம் பெற்றால் நீட்டி முழக்கி பேசுவான்.
  6. It is contemptible to offer compliments who see through it
    பாராட்டின் நோக்கத்தைப் புரிந்து கொள்பவரைப் பாராட்டுவது வெறுக்கத்தக்கதாகும்.
  7. Mrs. Bennet manoeuvres to stay, Charlotte engages Collins, Darcy stations himself at a distance and fixes his attention on Elizabeth, and Elizabeth recalls Wickham in Darcy’s attention
    யுக்திக்காரர் தங்குகிறார். ஷார்லோட் காலின்ஸை கவனிக்கிறாள். டார்சி தூர இருந்து எலிசபெத்தை கவனிக்கிறான். விக்காமைப் பற்றிப் பேசியதால் தன்னைக் கவனிப்பதாக எலிசபெத் நினைக்கிறாள்.
  8. To see the motives of all of them in the accommodation of life is perceptive of life’s vision
    அனைவருடைய நோக்கங்களையும் வாழ்வு அனுமதித்து ஏற்கிறது. அது விளங்கினால் வாழ்வு (life’s vision) புரியும்.
  9. Yawning is the energy indicating it is no longer there
    கொட்டாவி விட்டால் தெம்பில்லை எனப் பொருள்.
  10. Silence is eloquent
    மௌனம் முழங்கும்.
  11. When everyone displays, Darcy is silent
    அனைவரும் ஆர்வமாகப் பேசும்பொழுது, டார்சி மௌனமாக இருந்தான்.
  12. Man is capable of intensely enjoying his own ruin or shame if only he thinks it pains his rival
    தீவிரம் கவரும். தானழிந்தாலும் அவமானப்பட்டாலும் எதிரிக்கு அது சிரமம் தருமானால் மனிதன் அத்தீவிரத்திற்காக இவற்றையும் நாடுவான்.
  13. Strength of will is insufficient to keep one’s cool while all around are taking delight in making fool of themselves
    அறிவில்லாத சந்தோஷத்தை அனைவரும் அனுபவிக்கும் சூழ்நிலையில் நிதானம் தவறாமலிருக்க மனஉறுதி போதாது.
  14. Love is oblivious of the excitement of the environment
    அனைவரும் ஆழ்ந்து அனுபவிக்கும் கேளிக்கைகள் காதல் மையலில் உள்ளவன் கண்ணில் படாது.
  15. To silence a will that longs for action neither culture nor patience is enough. His culture must be of patience
    உள்ளிருந்து எழும் செயலை அடக்க பண்போ, பொறுமையோ போதாது. பொறுமையான பண்பு வேண்டும்.
  16. Whipping up one’s interest when it is sagging is exhausting
    சோர்ந்து விடும் ஆர்வத்தை உற்சாகப்படுத்தினால் கொட்டாவி வரும்.
70
When at length they arose to take leave, Mrs. Bennet was most pressingly civil in her hope of seeing the whole family soon at Longbourn, and addressed herself particularly to Mr. Bingley, to assure him how happy he would make them by eating a family dinner with them at any time, without the ceremony of a formal invitation. Bingley was all grateful pleasure, and he readily engaged for taking the earliest opportunity of waiting on her after his return from London, whither he was obliged to go the next day for a short time.
நீண்ட நேரத்திற்கு பிறகு அவர்கள் விடைபெற்று கொள்ள எழுந்தனர். அவர்களை, வெகு விரைவில் லாங்க்பர்னில் எதிர்பார்ப்பதாக மிக்க மரியாதையுடன் கூறிய திருமதி. பென்னட், பிங்கிலியிடம் எந்த ஒரு சம்பிரதாயமும் இல்லாமல் அவர்கள் ஒரு நாள் வந்து தங்களுடன் விருந்துண்ண வேண்டும் என அழைத்ததற்கு, சில நாட்களுக்காக, லண்டனுக்கு, மறுநாள் கிளம்புவதால், திரும்பி வந்தவுடன் எவ்வளவு விரைவில் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அவ்வளவு சீக்கிரமாய் வருவதாக வாக்களித்தான்.
  1. Formality, if pressed upon, can turn hostile to the purpose.
    முறையை முழுமையாகக் கருதினால் எதிரான பலன் தரும்.
  2. To accept an empty formality at its face value is to totally nullify it
    வெறும் முறையை உண்மையாக ஏற்றால், அது பூஜ்யமாகும்.
  3. Intense desire is self-defeating
    ஆசை தீவிரமானால் அது தனக்கே தோல்வி தரும்.
  4. When emptiness expands, it cancels even the smallest gain
    வெற்றிடம் மலர்ந்தால் சிறிய பலனையும் ரத்து செய்யும்.
  5. Thought fulfils itself while thought of the physical mind cancels every shade of possibility
    எண்ணம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். ஜட மனத்தின் எண்ணம் எல்லா வாய்ப்பையும் ரத்து செய்யும்.
71
Mrs. Bennet was perfectly satisfied, and quitted the house under the delightful persuasion that, allowing for the necessary preparations of settlements, new carriages, and wedding-clothes, she should undoubtedly see her daughter settled at Netherfield in the course of three or four months. Of having another daughter married to Mr. Collins, she thought with equal certainty, and with considerable, though not equal, pleasure. Elizabeth was the least dear to her of all her children; and though the man and the match were quite good enough for her, the worth of each was eclipsed by Mr. Bingley and Netherfield.
மூன்று நான்கு மாதத்திற்குள் நெதர்பீல்டில், ஜேன் வசிக்க ஆரம்பிப்பாள் என்ற சந்தோஷத்துடன் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள், புதிய வண்டிகள், திருமண உடைகள் இவைகளைப்பற்றி நினைத்துக் கொண்டு மிகவும் திருப்தியாக திருமதி. பென்னட் அவ்விடத்தை விட்டகன்றாள். மற்றொரு மகளுக்கும் காலின்ஸுடன் திருமணம் நடக்கும் என உறுதியாக நம்பினாலும் அதில் அவ்வளவு சந்தோஷம் அடையவில்லை. ஏனெனில் எல்லோரையும்விட எலிசபெத்மீது அவளுக்கு அன்பும், பாசமும் குறைவாகவே இருந்தது. அதனால் எலிசபெத்திற்கு இந்த ஜோடிப் பொருத்தம் போதும் என நினைத்த அவளுக்கு பிங்கிலி, நெதர்பீல்ட், முன்பு அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
  1. Satisfaction in the procedure cancels the content
    முறை திருப்தி தந்தால் விஷயம் விலகும்.
  2. Imagination grows on what it feeds till it is exhausted
    கற்பனை நினைவால் வளர்ந்து கரையும்.
  3. The physical mind’s imagination is satisfied by imagining. Its energy is enough only to imagine, not to achieve
    ஜட மனத்தின் கற்பனை கற்பனையிலேயே பூர்த்தியாகும். அதற்கு கற்பனை மட்டும் செய்ய முடியும். சாதிக்க முடியாது.
  4. Available energy for achievement is expended by thought adding an extra item
    உள்ள சக்தி சாதிக்கும். எண்ணம் ஒரு புது விஷயத்தை நாடினால் சக்தி அதிகரிக்கும்.
  5. Mrs. Bennet has completed Jane’s happiness in her imagination and it cancels the chance. So does Elizabeth. To see today’s events in the light of later developments puts the course of events in life’s perspective
  6. Mrs. Bennet cancels Jane’s wedding by adding Elizabeth’s to it
    Mrs. பென்னட் எலிசபெத் திருமணத்தையும் நாடி ஜேன் திருமணத்தை ரத்து செய்கிறார்.
  7. Neglect of those who should support can raise positive characters sky high
    ஆதரவுக்குரியவரைப் புறக்கணித்தால், நல்லவர் வானளவு உயர்வார்கள்.
  8. A dynamic character will never cease to be dynamic
    வெற்றி நிறைந்த சுறுசுறுப்புக்கு எப்பொழுதும் வெற்றியுண்டு.



story | by Dr. Radut