Skip to Content

Volume I Chapter 16 : Wickham's Tale

Chapter 16: Wickham’s Tale

விக்காம் கூறும் கதை

 

Summary: The Bennet girls and Collins arrive at Mrs. Phillips’ for dinner. Wickham is present. Wickham and Elizabeth engage in a long evening of conversation in which Wickham speaks a lot of falsehood about Darcy. He speaks of his childhood in Pemberley where he grew up with Darcy as his father was steward to Darcy’s father and that in the will Wickham was to receive the position of a clergyman in a rectory Darcy’s family oversees. However, Darcy did not honor the will. This angers Elizabeth no end. Wickham informs Elizabeth that Darcy is Lady Catherine de Bourgh’s nephew and is intended to marry Miss de Bourgh. Elizabeth is taken in by Wickham’s charm and believes his lies.
 
சுருக்கம்: திருமதி. பிலிப்ஸ் வீட்டு விருந்துக்கு பென்னட் சகோதரிகளும்,காலின்ஸும் வருகின்றனர், விக்காமும் அங்கிருக்கிறான். விக்காமும் , எலிசபெத்தும் மாலை நேரம் முழுவதும் பேசுகின்றனர், டார்சியைப்பற்றிய பேச்சு எழுகிறது. அவளுக்கு அவனுடைய கர்வத்தை நினைத்து வெறுப்பு வருகிறது. டார்சியின் தகப்பனாரைப்பற்றி உயர்வாகப் பேசுகிறான், உலகத்திலேயே தலை சிறந்த மனிதர் என்கிறான், தன்னுடைய மகனுக்கு காலத்துக்கும் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறுகிறான். தன்னுடைய தகப்பனார், அங்கு எஸ்டேட்டை நிர்வாகம் செய்து கொண்டிருந்ததால் தானும், டார்சியும் ஒன்றாக வளர்ந்ததுபற்றியும், டார்சியின் தகப்பனார் தனது உயிலில், அவர்களுடைய பராமரிப்பில் இருக்கும் ஒரு சர்ச்சில் பாதிரியாராக தன்னை நியமிக்கும்படி எழுதி வைத்துவிட்டு போனதாகவும் கூறுகிறான். டார்சி, அவ்வுயிலை மதிக்கவில்லை என்பது எலிசபெத்திற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் டார்சியின் தங்கையை கர்வி என்றும், டார்சி, லேடி டீ பர்கின் மருமகன் என்றும், அவளது மகளை திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறான் எனவும் கூறுகிறான். விக்காமுடைய பேச்சின் நினைவுகளில் எலிசபெத் மாலை முழுவதும் வசிக்கலாளாள்
 
1
As no objection was made to the young people's engagement with their aunt, and all Mr. Collins's scruples of leaving Mr. and Mrs. Bennet for a single evening during his visit were most steadily resisted, the coach conveyed him and his five cousins at a suitable hour to Meryton; and the girls had the pleasure of hearing, as they entered the drawing-room, that Mr. Wickham had accepted their uncle's invitation, and was then in the house.
பெண்கள் அனைவரும் சித்தியின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்வதற்கு எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கப்படவில்லை. திரு. காலின்ஸ் காட்டிய தயக்கத்தையும் தடுத்து, அவர்களை சரியான சமயத்திற்கு குதிரை வண்டி மூலம் மெரிடனுக்கு அனுப்பி வைத்தனர். உள்ளே நுழைந்த அவர்களுக்கு, திரு. விக்காமும், தங்களது சித்தப்பாவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அங்கு வந்திருக்கிறான் என்பது தெரிந்து மிக்க சந்தோஷமடைந்தனர்.
  1. Artificial scruples are the offensive culture of the uncultivated
    மனச்சாட்சி இருப்பது போல் நடிப்பது அநாகரீகமானவன் புண்படுத்தும் பண்பு.
  2. Mr. Collins scruples to leave home for one evening
    ஒரு நாள் லாங்பர்னை விட்டுப் போக காலின்ஸ் மன்னிப்புக் கேட்கிறான்.
  3. Mr. Collins is so full of self-importance that he is oblivious of the complete sway of Wickham over the female hearts
    காலின்ஸ் தன் பெருமையில் திளைத்து உலகை மறந்து நிற்கும்பொழுது அத்தனை பெண்களும் விக்காம் அழகில் மயங்கி செய்வதறியாதிருப்பதைக் காணவில்லை.
  4. A convenience like coach becomes a status symbol
    வசதிக்கான பொருள் அந்தஸ்தைக் குறிக்கும்.
  5. The Bennet girls are all out though the eldest is not married
  6. Grooms too come from unusual level
  7. Youth looks for pleasure; age, for comfort
    இளமை இன்பம் தேடும், முதுமை வசதியை நாடும்.
2
When this information was given, and they had all taken their seats, Mr. Collins was at leisure to look around him and admire, and he was so much struck with the size and furniture of the apartment, that he declared he might almost have supposed himself in the small summer breakfast-parlour at Rosings; a comparison that did not at first convey much gratification; but when Mrs. Philips understood from him what Rosings was, and who was its proprietor -- when she had listened to the description of only one of Lady Catherine's drawing-rooms, and found that the chimney-piece alone had cost eight hundred pounds, she felt all the force of the compliment, and would hardly have resented a comparison with the housekeeper's room.
எல்லோரும் அவர்களது இருக்கையில் அமர்ந்தவுடன், காலின்ஸ் நிதானமாக, தன்னைச் சுற்றி இருப்பவற்றை பார்த்து இரசிக்க ஆரம்பித்தான். வீடு மற்றும் அங்கிருக்கும் மரச்சாமான்களைப் பார்த்து, அதன் அளவினைக் கண்டு பிரமித்த காலின்ஸ், ரோஸிங்ஸில் இருக்கும் சிறிய சிற்றுண்டி அறைபோல் இருப்பதாகச் சொன்னதைக் கேட்டு முதலில் மகிழ்ச்சியடையாத திருமதி. பிலிப்ஸ், ரோஸிங்ஸ் எம்மாதிரியான இடம், யார் அந்த இடத்தின் உரிமையாளர், லேடி காதரினுடைய ஒரு வரவேற்பறையின் விவரத்தையும், புகைபோக்கியின் விலை மட்டும் 800 பவுன் என்பதனையும் அறிந்த பிறகு தங்களது இல்லத்தைப்பற்றி காலின்ஸ் கூறியதின் மதிப்பினை உணர்ந்து, ரோஸிங்ஸில் இருக்கும் வீட்டைப் பராமரிப்பவரின் அறையோடு ஒப்பிட்டதற்காக வருத்தப்படவில்லை.
  1. Physicality is attracted to physical features
    ஜடமானவர் உறுப்பின் அழகைப் போற்றுவர்
  2. Comparison is with the best one knows
    உயர்ந்தோருடன் ஒப்பிடுதல் முறை.
  3. The total attention of Mrs. Phillips is completely won forever by the comparison of her drawing room to one room of Rosings
    Mrs. பிலிப்ஸ் டிராயிங் ரூமை ரோஸிங் ரூமோடு ஒப்பிடவே Mrs. பிலிப்ஸ் காலின்ஸ் தவிர மற்ற அனைத்தையும் மறந்து விட்டார்.
  4. To describe a work in terms of its cost means either the work is new or for the person it is a new experience
    வேலை புதியதானாலும், அனுபவம் புதியதானாலும் மனம் செலவைக் கருதும்.
  5. Comparison with the great is compliment
    பெரியவர்களுடன் ஒத்திட்டுப் பார்ப்பது பாராட்டாகும்.
  6. Mr. Collins carries artificial formalities beyond limits
  7. Mr. Collins was so self-absorbed that the high reputation and charm of Wickham entirely lost on him
  8. Mr. Collins could see the world only through Lady Catherine
  9. Ironic modesty is the hallmark of the self-conceited small man
  10. Capacity to listen raises the listener in the eyes of the speaker
3
In describing to her all the grandeur of Lady Catherine and her mansion, with occasional digressions in praise of his own humble abode, and the improvements it was receiving, he was happily employed until the gentlemen joined them; and he found in Mrs. Philips a very attentive listener, whose opinion of his consequence increased with what she heard, and who was resolving to retail it all among her neighbours as soon as she could. To the girls, who could not listen to their cousin, and who had nothing to do but to wish for an instrument, and examine their own indifferent imitations of china on the mantlepiece, the interval of waiting appeared very long. It was over at last, however. The gentlemen did approach, and when Mr. Wickham walked into the room, Elizabeth felt that she had neither been seeing him before, nor thinking of him since, with the smallest degree of unreasonable admiration. The officers of the -- -- shire were in general a very creditable, gentlemanlike set, and the best of them were of the present party; but Mr. Wickham was as far beyond them all in person, countenance, air, and walk, as they were superior to the broad-faced, stuffy uncle Philips, breathing port wine, who followed them into the room.
லேடி காதரினுடைய இல்லத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றி விவரித்து வந்த காலின்ஸ் அவ்வப்போது தனது எளிய இல்லத்தைப் பற்றியும் எப்படி அதில் புதிய மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன என்பதைப் பற்றியும் மற்ற விருந்தினர்கள் வரும்வரை சந்தோஷமாகக் கூறிக் கொண்டிருந்தான். தான் பேசியவற்றை திருமதி. பிலிப்ஸ் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை காலின்ஸ் கவனித்தான். அவனுடைய வர்ணனையைக் கேட்கக்கேட்க அவனுடைய முக்கியத்துவம் புரிந்து கொண்டு தான் கேட்டவற்றை அக்கம் பக்கத்தில் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள். காலின்ஸ் பேச்சில் சுவாரசியமில்லாத பெண்கள், செய்வதற்கும் வேறு ஒன்றும் இல்லாததால் ஏதாவது இசைக் கருவி கிடைக்குமா என விரும்பினர். மேலும் அங்கு இருக்கும் கலைப் பொருளை பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் விக்காமும், மற்ற அதிகாரிகளும் உள்ளே நுழைந்தனர். அவனை, தான் முதலில் பார்த்த பொழுது அவனைப்பற்றி என்ன நினைத்தாளோ, எப்படி வியந்தாளோ அதற்கு அவன் அருகதையுள்ளவன் என எலிசபெத், இப்பொழுதும் நினைத்தாள். அங்கு வந்திருந்த அனைத்து அதிகாரிகளும், இருப்பதிலேயே சிறந்தவர்களாகவும், பண்பாளர்களாகவும் இருந்தனர். தோற்றம், அழகிய முகம், நடை, உடை, பாவனை என விக்காம் எல்லோரைக் காட்டிலும் மேம்பட்டவனாய் விளங்கினான். குடிப்பதால் எப்பொழுதும் மது வாசம் வீசும் திரு. பிலிப்ஸை காட்டிலும் எல்லோரும் சிறந்தவர்களாக இருந்தனர்.
  1. Wealth being the organisation of social power carries status
    சமூகத்தின் அனைத்தும் செல்வமாக மாறுவதால் அதற்குஅந்தஸ்துண்டு.
  2. Volubility is well served by a descriptive speech
    விவரமான வர்ணனை அதிகமாகப் பேசுபவர்க்கு ஒத்து வரும்.
  3. Humility is a boast in one incapable of it
    அடக்கமிருந்தால் அதற்குப் பெருமைப்படலாம்.
  4. Attentive listening makes for good friendship
    பேசுவதைக் கவனமாகக் கேட்பவருக்கு அதிக நண்பர்களிருப்பார்கள்.
  5. News that flatters spreads fast
    பெருமை தரும் செய்தி எளிதாகப் பரவும்.
  6. Time is interest
    நேரம் முக்கியம்.
  7. Nothing enriches the atmosphere as the arrival of the beloved
    காதலுக்குரியவர் உள்ளே நுழைந்தால் சூழல் சூட்சுமமாக உயரும்.
  8. At first sight of Wickham, Elizabeth inwardly justifies her constant thoughts of him as not unreasonable
    பார்த்தவுடன் விக்காம் எலிசபெத்தைக் கவர்ந்தாள். இப்படிப்பட்டவனை இடைவிடாது நினைப்பது சரியென நினைக்கிறாள்.
  9. Lydia’s elopement explains her initiative in the light of the integrity of the officers described here
    இராணுவ ஆபீசர்கள் மரியாதைக்குரியவர்கள். எலிசபெத்தின் செயல் லிடியா ஓடிப்போனதின் காரணம் என விளங்குகிறது.
  10. The integrity of Army Officers is the integrity of the society
    நல்ல சமுதாயத்தின் இராணுவ அதிகாரிகள் நல்லவர்கள்.
  11. Nothing charms like a handsome face
    அழகு எடுபடுவது போல் எதுவும் எடுபடாது.
4
Mr. Wickham was the happy man towards whom almost every female eye was turned, and Elizabeth was the happy woman by whom he finally seated himself; and the agreeable manner in which he immediately fell into conversation, though it was only on its being a wet night, and on the probability of a rainy season, made her feel that the commonest, dullest, most threadbare topic might be rendered interesting by the skill of the speaker.
எல்லா பெண்களின் கவனமும் விக்காம்மேல் திரும்பும் அளவுக்கு அவன் அதிர்ஷ்டசாலியாக இருந்தான். அவன் எலிசபெத் அருகே வந்து அமர்ந்து, உடனே மிகவும் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். மழையைப் பற்றியும், மழைக் காலத்தைப்பற்றியும் பேசினாலும், அசுவாரசியமான விஷயமாக இருந்தாலும், சர்வசாதாரணமான விஷயமாக இருந்தாலும் பேசுபவரது திறமையால் அவையும் சுவாரசியமாகிவிடும் என்பதனை அவள் உணர்ந்தாள்.
  1. To be the chosen by the chosen is a privilege
    முக்கியமானவர்க்கு முக்கியமாக இருப்பது பாக்கியம்.
  2. A topic can be interesting by itself or the delivery or the speaker
    பேச்சு எடுபடும், பேசுபவர் அல்லது பேசும் விஷயம் எடுபடும்.
  3. That the commonest, dullest, most threadbare topic can be rendered interesting is because the infinity is in the infinitesimal
    எளிய, சுவையற்ற, அர்த்தமேயில்லாத விஷயமும் மிக ருசிகரமாக எடுத்துரைக்கலாம். ஏனெனில் அணுவிலும், அனந்தமுள்ளது.
  4. To the ladies Wickham was superior to everyone in his superlative grace
  5. Empty embellishment changes to the opposite when the atmosphere changes
  6. It is striking that Wickham and Darcy instinctively were attracted by Elizabeth
  7. Elizabeth was to pass through the disillusionment of Wickham to deserve Darcy
  8. A well bred man readily falls into conversation as we see Colonel Fitzwilliam
  9. Charm of conversation does not depend upon the topic, but the speaker
  10. To be attractive to young ladies is an endowment to young men
  11. Blemishes in behaviour totally expose
  12. Captivating manners capture the imagination
5
With such rivals for the notice of the fair as Mr. Wickham and the officers, Mr. Collins seemed likely to sink into insignificance; to the young ladies he certainly was nothing; but he had still at intervals a kind listener in Mrs. Philips, and was, by her watchfulness, most abundantly supplied with coffee and muffin.
விக்காமும் மற்ற அதிகாரிகளும் போட்டியாக அமைந்த கூட்டத்தில், காலின்ஸ் முக்கியமற்றவனாக விளங்கினான். மற்ற பெண்களுக்கும் அவன் ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனாலும் இடையிடையே அவனது பேச்சை அன்பாகக் கேட்கக் கூடியவளாக திருமதி. பிலிப்ஸ் இருந்தாள். அவனை உபசரித்து, வேண்டிய அளவிற்கு காபியும், தின்பண்டங்களும் தந்தவண்ணம் இருந்தாள்.
  1. Physical company is made meaningful by plentiful eating and drinking. Physicality is fulfilled by vitality
    பழகும்பொழுது சாப்பாடு, பானம் முக்கியமாகிறது. ஜடம் உணர்ச்சியால் பூர்த்தியாகிறது.
  2. To be unaware of total neglect, one must be totally self-absorbed
    தன்னில் மூழ்கி லயித்தவனுக்குத் தான் ஒதுக்கப்படுவது தெரியாது.
  3. An insignificant Man is oblivious of his insignificance
    எவரும் கண்டு கொள்ளாத சிறிய மனிதனுக்கு தன் நிலை தெரிவதில்லை.
  4. Physicality values food better than attention
    ஜடமானவருக்கு உபசாரத்தை விட விருந்து முக்கியம்.
  5. A significant Man is full of his significance
    பெரியவனுக்கு தான் பெரியவன் என்ற நினைவு எந்நேரமும் உண்டு.
6
When the card-tables were placed, he had an opportunity of obliging her in return, by sitting down to whist.
எல்லோரும் சீட்டாடுவதற்கு தயாரான பொழுது, திருமதி. பிலிப்ஸிற்கு தயவு காட்டுவதுபோல் காலின்ஸ் அவளுடன் சீட்டாட உட்கார்ந்தான்.
  1. If eating and drinking is lower vital, card game is higher vital
    சாப்பிடுவதும் குடிப்பதும் தாழ்ந்த உணர்வானால், சீட்டாட்டம் உயர்ந்த உணர்வாகும்.
7
"I know little of the game at present," said he, "but I shall be glad to improve myself, for in my situation of life -- " Mrs. Philips was very thankful for his compliance, but could not wait for his reason.
“எனக்கு தற்சமயம் சிறிதளவுதான் இந்த ஆட்டத்தைப் பற்றித் தெரியும், இதில் மேலும் தேர்ச்சி பெற ஆசைப்படுகிறேன், ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நான் இருக்கும் சூழ்நிலையில் -- ‘ அவனுடைய இத்தகைய கீழ்படிதலுக்கு நன்றி கூறிய திருமதி. பிலிப்ஸிற்கு, அவனுடைய விளக்கத்தை கேட்பதற்கு காத்திருக்க முடியவில்லை.
  1. People refused to listen lest they should be convinced
    கேட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்க மறுப்பவர் உண்டு.
8
Mr. Wickham did not play at whist, and with ready delight was he received at the other table between Elizabeth and Lydia. At first there seemed danger of Lydia's engrossing him entirely, for she was a most determined talker; but being likewise extremely fond of lottery tickets, she soon grew too much interested in the game, too eager in making bets and exclaiming after prizes, to have attention for any one in particular. Allowing for the common demands of the game, Mr. Wickham was therefore at leisure to talk to Elizabeth, and she was very willing to hear him, though what she chiefly wished to hear she could not hope to be told -- the history of his acquaintance with Mr. Darcy. She dared not even mention that gentleman. Her curiosity, however, was unexpectedly relieved. Mr. Wickham began the subject himself. He inquired how far Netherfield was from Meryton; and after receiving her answer, asked in an hesitating manner how long Mr. Darcy had been staying there.
விக்காம் சீட்டாடவில்லை. எலிசபெத்தும், லிடியாவும் அவனை சந்தோஷமாக தங்கள் அருகில் அமர்த்திக் கொண்டனர். பேசுவதில் திறமை பெற்றிருந்த லிடியா, அவனை தன்னுடன் உரையாடலில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு விடுவாளோ என்ற அபாயம் முதலில் தெரிந்தது. ஆனால் சீட்டாடுவதில் மிகவும் ஆர்வம் இருந்ததால் அதுவும் பந்தயம் வைத்து அதில் பரிசுகளை ஜெயிப்பதில் விருப்பம் இருந்ததால், யார் ஒருவர் மீதும் அவள் கவனம் திரும்பவில்லை. அதனால் விக்காமிற்கு நிதானமாக எலிசபெத்துடன் பேச முடிந்தது, எலிசபெத்தும் அவனது பேச்சை கேட்க ஆர்வமாக இருந்தாள். குறிப்பாக டார்சிக்கும், அவனுக்கும் இருந்த தொடர்பைப் பற்றி கேட்க ஆர்வமாக இருந்தாலும் அவளால் வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை. ஆனால் அவளுடைய ஆசை எதிர்பாராத வண்ணம் பூர்த்தியாயிற்று. விக்காமே அதைப்பற்றி பேச ஆரம்பித்தான். நெதர்பீல்ட், மெரிடனிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் கிடைத்தவுடன், எவ்வளவு நாட்களாக டார்சி அங்கு இருக்கிறான் என தயக்கத்துடன் விசாரித்தான்.
  1. Once you are charmed about a person, it is difficult to be away from him
    கவர்ந்த மனிதனை விட்டகல்வது எளிதல்ல.
  2. See the end in the beginning
    முடிவை முதலில் காணலாம்.
  3. The very first meeting of Wickham with Elizabeth is not planned for, but did not come off all by itself. Both she and he availed of the circumstances
    விக்காமும், எலிசபெத்தும் முதலில் சந்திப்பதை ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் தானே அமையவில்லை. இருவரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டனர்.
  4. It is extremely significant especially in view of Lydia’s initiative at the end that Lydia is on the point of entirely engrossing Wickham
    லிடியா ஆரம்பித்தது என்பதால் இது முக்கியம். முடிவில் லிடியா அனைத்தையும் ஆக்ரமித்துக் கொள்கிறாள்.
  5. The very first to meet Wickham were Lydia and Elizabeth, indicating the future
  6. Elizabeth’s notice of the greeting between Darcy and Wickham brings the latter to her
  7. Elizabeth making Wickham talk of Darcy on his own is the best example of Silent Will, though Elizabeth does it many times with him and others also
    எலிசபெத் விக்காமை அவனே டார்சியைப் பற்றிப் பேசச் செய்தது Silent will க்கு சிறந்த உதாரணம். எலிசபெத் பலமுறை அதைச் செய்கிறாள் - அவள் எதிர்பார்த்த அத்தனை செய்தியும் கிடைத்து விடுகிறது.
  8. A willing listener is a conversational asset
    சொல்வதைக் கூர்ந்து கேட்பவரிடம் பேசுவது பயன் தரும்.
  9. Silent will achieves simultaneously
    கருத்தை வெளியிடாமல் காரியம் முடியும்.
  10. Silent Will of Elizabeth makes Wickham talk of Darcy
  11. She who is in love dared not mention his name
    நெஞ்சால் போற்றும் பெயரை வாயால் பேச முடியாது.
  12. The weight of the personality is forbidding. One dared not mention his name freely
    பெரிய மனிதன் பெயர் கனக்கும். எளிதில் அவர் பெயரைச் சொல்ல மாட்டார்கள்.
  13. Wickham’s interest in Darcy was greater than in Elizabeth
  14. Wickham makes Elizabeth spell out her view of Darcy by surreptitiously introducing the subject and his attitude
    விக்காம் எலிசபெத்தின் கருத்தை பேசவைத்து விடுகிறான். விஷயத்தைத் தொடாமல் தன் கருத்தை வெளியிடாமல் அதைப் பெறுகிறான்.
  15. Wickham exhibited all the manners of timid intruder, which Elizabeth overlooked
    பயந்தவன் திருட்டுத்தனமாக செய்தி சேகரம் செய்யும் எல்லா முறைகளையும் விக்காம் கையாண்டும், எலிசபெத் எதையும் கவனிக்கவில்லை.
9
About a month," said Elizabeth; and then, unwilling to let the subject drop, added, "He is a man of very large property in Derbyshire, I understand."
“ஒரு மாத காலமாய்” என்று பதிலளித்த எலிசபெத் அந்த விஷயத்தைத் தொடரும் பொருட்டு “அவனுக்கு டெர்பிஷயரில் பெரிய சொத்து இருக்கிறது என நான் எண்ணுகிறேன்” என்றாள்.
  1. In the initial minutes of their conversation, each comes closer to the other and each perfectly in a subtle manner understands the other
    சில நிமிஷங்களில் ஒருவரையொருவர் அந்நியோன்யமாக நெருங்குகின்றனர். சூட்சுமமாகப் புரிந்து கொள்கின்றனர்.
  2. Elizabeth gives the lead to the topic though she did not begin about Darcy
10
"Yes," replied Wickham; "his estate there is a noble one. A clear ten thousand per annum. You could not have met with a person more capable of giving you certain information on that head than myself; for I have been connected with his family in a particular manner from my infancy."
“ஆமாம்” என்ற விக்காம் “அவனுடைய எஸ்டேட் அங்கு மிகவும் மேன்மையானது. வருடத்திற்கு பத்தாயிரம் பவுன் வருமானம் வருகிறது. சிறு வயதிலிருந்தே அக்குடும்பத்துடன் நான் ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் அக்குடும்பத்தின் தலைவனைப்பற்றி கூற என்னைவிட பொருத்தமானவனை நீ சந்தித்திருக்க முடியாது” என்றான்.
  1. Wickham cunningly qualifies to know all about Darcy
  2. As a topic, a rich man is most interesting
    பணக்காரனைப் பற்றிப் பேச பலரும் பிரியப்படுவர்.
  3. What is interesting in a rich man is not even his wealth, but one can indulge in the thought of riches at least in imagination
    அவனைப் பற்றிப் பேசும்பொழுது தன்னை அந்த அளவு செல்வத்துடன் சேர்த்து கற்பனை செய்வது இனிக்கும்.
  4. A possible relation with a rich man is most gratifying
    பணக்காரனுடன் எவ்வகையில் தொடர்பு ஏற்படுமானாலும் அது முக்கியம்.
11
Elizabeth could not but look surprised.
எலிசபெத் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
 
12
"You may well be surprised, Miss Bennet, at such an assertion, after seeing, as you probably might, the very cold manner of our meeting yesterday. Are you much acquainted with Mr. Darcy?"
“நேற்று எங்களுடைய சந்திப்பில் ஒரு இறுக்கம் இருந்ததைப் பார்த்த உனக்கு வியப்பாக இருந்திருக்கும். உனக்கு டார்சி நல்ல பழக்கம் உண்டா?”
  1. It is he who first mentions Darcy’s rudeness to her as he senses her attitude
  2. (Cf. Wickham who senses Elizabeth’s annoyance with Darcy gently opens his campaign of falsehood. In his last meeting with her he equally senses that he is sufficiently exposed to her and gently retires. The indication of Life is inescapable)
  3. Wickham gently but surely poisons her mind. She is a willing victim
  4. Wickham cunningly gains her ear presenting him as one who is most qualified to slander. He does it in the name of a noble sentiment
  5. His cunning has a parallel to Antony’s oration
  6. Wickham knows the magnificent attitudes of high aristocracy
13
"As much as I ever wish to be," cried Elizabeth warmly. "I have spent four days in the same house with him, and I think him very disagreeable."
“நான் விரும்பும் அளவு” என்ற எலிசபெத் “நான் அவனுடன் நான்கு நாட்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்தேன், அவனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை“ என்றாள்.
  1. It is Elizabeth who first calls him disagreeable, though by his cold manner he indicated his mind
    எலிசபெத் முதலில் டார்சியை சரியில்லாதவன் என்கிறாள். விக்காம் உணர்ச்சியின்றி தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.
  2. Even a disapproval of a rich man is a relation with him
    பணக்காரனுடைய மறுப்பும் அவனுடன் உள்ள தொடர்பு.
14
"I have no right to give my opinion," said Wickham, "as to his being agreeable or otherwise. I am not qualified to form one. I have known him too long and too well to be a fair judge. It is impossible for me to be impartial. But I believe your opinion of him would in general astonish -- and perhaps you would not express it quite so strongly anywhere else. Here you are in your own family."
“அவன் ஏற்றுக் கொள்ளக் கூடியவனா இல்லையா என்பதனைப்பற்றி என்னுடைய கருத்தைத் தெரிவிக்க எனக்கு உரிமையில்லை. எனக்கு அதற்கு தகுதியும் இல்லை. எனக்கு அவனை நீண்ட நாட்களாகத் தெரிந்திருப்பதாலும், மிகவும் நன்றாகத் தெரிந்திருப்பதாலும், நியாயமான கருத்தை கூற முடியாது. பாரபட்சமில்லாமல் என்னால் இருக்க முடியாது. ஆனால் அவன் மேலுள்ள உன் அபிப்பிராயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். மேலும் இதனை இவ்வளவு கடுமையாக வெளியில் வேறெங்கும் கூற முடியாது-- இங்கு நீ உன் குடும்பத்துடன் இருக்கிறாய்” என்றான் விக்காம்.
  1. It is a master strategy that he, as if he is a well-bred gentleman, assumes no right to speak of Darcy in view of his intimacy
    சாமர்த்தியத்தின் உச்சகட்டத்தில் விக்காம் தனக்கு டார்சி நெருக்கமாக வேண்டியவர் என்பதால் தான் அபிப்பிராயம் சொல்லக்கூடாதெனக் கூறுகிறான்.
  2. In the whole novel, this passage is the most perfect description of fairness
    நியாய மனப்பான்மைக்கு கதையில் இப்பகுதி எடுத்துக்காட்டு
  3. Antony’s oration still remains the standard to impress the impressible
    எளிமையான உள்ளங்களை முழுமையாகக் கவர அந்தோனியின் சொற்பொழிவு தலை சிறந்த உதாரணம்.
  4. Once you like, the open ruse employed will escape your notice
    பிரியம் ஏற்பட்டபின் நேரடியாக ஏமாற்றுவதும் கண்ணுக்குத் தெரியாது.
  5. It is a great art to extract all the information one needs in a conversation
    தேவையான செய்தி தானே வெளிவரும்படிப் பேசுவது ஒரு கலை.
15
"Upon my word I say no more here than I might say in any house in the neighbourhood, except Netherfield. He is not at all liked in Hertfordshire. Everybody is disgusted with his pride. You will not find him more favourably spoken of by any one."
“நெதர்பீல்டை தவிர, இங்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறுவதைவிட அதிகம் ஒன்றும் இங்கு நான் சொல்லவில்லை. ஹெர்ட்போர்ட்ஷயரில் யாருக்கும் அவனை பிடிக்கவில்லை. யாரும் அவனைப்பற்றி நல்லவிதமாகப் பேசி நீ பார்க்க முடியாது.”
  1. If a person likes you, he will be at pains to give you all the information you need, even if it is detrimental to him
    வேண்டிய மனிதன் தனக்கு பாதகமானாலும், நமக்குத் தேவையான எல்லா செய்திகளையும் கூறுவான்.
  2. He fathoms her dislike which he already knew gently
    அவளுடைய வெறுப்பை மெதுவாக அறிகிறான்.
  3. Elizabeth comes out openly, rather Wickham manages to get her out, and make her pronounce her inordinate dislike
    எலிசபெத் வெளிப்படையாகப் பேசுகிறாள். விக்காம் அவளைப் பேச வைக்கிறான். அவள் கசப்பையும் வெறுப்பையும் அவள் வாயிலாக அறிகிறான்.
  4. He succeeds in accusing Darcy in her own words
  5. He succeeds in bringing her out openly
  6. Without directly knowing Elizabeth was slighted, he fully becomes aware of that sentiment and fully draws her out
16
"I cannot pretend to be sorry," said Wickham, after a short interruption, "that he or that any man should not be estimated beyond their deserts; but with him I believe it does not often happen. The world is blinded by his fortune and consequence, or frightened by his high and imposing manners, and sees him only as he chuses to be seen."
“நான் வருத்தப்படுவதாக நடிக்க முடியாது”என்ற விக்காம் சிறிது நேரத்திற்குப் பிறகு “ஒருவருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ அதற்குமேல் அவரை எடை போடக் கூடாது. ஆனால் டார்சிக்கு இது பொருந்தாது. அவனுடைய பெரும் செல்வம் எல்லோருடைய கண்களையும் மறைக்கிறது. அவனுடைய அதிகாரமான, உயர் பண்புகளைப் பார்த்து பயப்படுகின்றனர். மேலும் அவன் எப்படி விரும்புகிறானோ அதைப்போலவே அவனை பார்க்கின்றனர்”என்றான்.
  1. Now that he has won the field entirely, he angles to sow seeds of discord
    இடம் முழுவதும் கிடைத்து விட்டது. மேலும் விஷ வித்துக்களை ஊன்றுகிறான்.
  2. Every man wants to be understood as he chooses, but the world does it only to the rich man
    உலகம் பணக்காரனை அவன் விரும்புவது போல் நினைக்கும். அதையே அனைவரும் விரும்பினாலும் கிடைப்பதில்லை.
17
"I should take him, even on my slight acquaintance, to be an ill-tempered man." Wickham only shook his head.
“சிறிது நேர பழக்கத்திலேயே, அவனை மிகவும் கோபக்காரனாக மட்டுமே என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.” இதற்கு விக்காம் தலையை மட்டும் அசைத்தான்.
  1. Till she repeats her resentment and dislike in so many words, so many times, Wickham bides his time
    எலிசபெத் தன் வெறுப்பு, கசப்பு ஆகியவற்றைப் பலமுறை பலவகையில் பேசும்வரை விக்காம் பேசாமலிருந்தான்.
  2. The art of conversation can get all the information one wants; what is greater is to make another espouse the attitude you want
    நமக்குத் தேவையான செய்திகளை எல்லாம் பிறர் தானே கூறும்படிப் பேச முடியும். நமது நோக்கத்தை அவரை ஏற்கச் செய்வது கடினம்.
  3. Opinions offer an infinite freedom; not actions
    அபிப்பிராயம் மாறக் கூடியது. செயல் மாறாது.
18
"I wonder," said he, at the next opportunity of speaking, "whether he is likely to be in this country much longer."
பேசுவதற்கு அடுத்த சந்தர்ப்பம் கிடைத்த உடனேயே “அவன் இவ்வூரில் நீண்ட நாட்கள் தங்குவானா” எனக் கேட்டான்.
  1. His interest is to know how long Darcy will stay to know whether his scandal will reach his ears
    எவ்வளவு நாள் டார்சியிருப்பான், இவனுடைய சொற்கள் டார்சியின் காதுக்குப் போகுமா என்பதே விக்காம் நினைப்பது.
19
"I do not at all know; but I heard nothing of his going away when I was at Netherfield. I hope your plans in favour of the -- -- shire will not be affected by his being in the neighbourhood."
“எனக்குத் தெரியவில்லை. நான் நெதர்பீல்டில் இருக்கும்வரை அவன் போவது பற்றி எதுவும் கேள்விப்படவில்லை. அவன் இங்கு இருப்பதால் நீ இராணுவத்தில் சேருவதற்கான திட்டத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது என நம்புகிறேன்” என்றாள்.
  1. Elizabeth is anxious that Wickham should not go away because of Darcy
  2. Readily she expresses her anxiety that his stay should not be determined by Darcy’s staying. It is her first expression of strong interest
    விக்காம் தங்குவது டார்சியைப் பொருத்திருக்கக் கூடாது என எலிசபெத் உடனே பதில் கூறுகிறாள். விக்காம் மீதுள்ள ஆசையை அவள் முதலில் கூறியது அதுவே.
20
" Oh! No -- it is not for me to be driven away by Mr. Darcy. If he wishes to avoid seeing me, he must go. We are not on friendly terms, and it always gives me pain to meet him, but I have no reason for avoiding him but what I might proclaim to all the world -- a sense of very great ill-usage, and most painful regrets at his being what he is. His father, Miss Bennet, the late Mr. Darcy, was one of the best men that ever breathed, and the truest friend I ever had; and I can never be in company with this Mr. Darcy without being grieved to the soul by a thousand tender recollections. His behaviour to myself has been scandalous; but I verily believe I could forgive him anything and everything, rather than his disappointing the hopes and disgracing the memory of his father."
“ஓ! இல்லை -- டார்சியால் என்னை துரத்த முடியாது. என்னைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் அவன்தான் போக வேண்டும். நாங்கள் நண்பர்களாக இல்லை. எனக்கு அவனை பார்ப்பதற்கு எப்பொழுதும் கஷ்டமாக இருந்திருக்கிறது. எனக்கு அவனை தவிர்க்க எந்த ஒரு காரணமும் இல்லை. ஆனால் அவன் இவ்வளவு மோசமானவனாக இருப்பதை இந்த உலகிற்கு சொல்வதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது. காலம் சென்ற இவனது தகப்பனார், எல்லோரைக் காட்டிலும் ஒரு சிறந்த மனிதராகவும், என்னுடைய, உண்மையான நண்பராகவும் இருந்தார். டார்சியுடன் சேர்ந்து இருக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவனது தகப்பனாரின் அன்பான ஞாபகங்கள் என்னை வந்து தாக்கும். என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளான். அவனுடைய தகப்பனாரின் எதிர்பார்ப்புகளை நிராசை ஆக்கினான், அவரது ஞாபகார்த்தங்களை களங்கப்படுத்தினான், ஆனாலும் அவன் இவை யாவையும் செய்யவில்லை என நினைத்துக் கொண்டு மன்னித்து விடலாம் என எண்ணுகிறேன்.”
  1. Dislike does not lead you to avoid one; but disgust does
    வெறுப்பால் விலகுவது அவசியமில்லை. கசப்பு விலக்கும்.
  2. Fear does it for opposite reasons
    பயம் எதிரான காரணத்திற்காக விலக்கும்.
  3. His diplomatic answer of fair courage is later recalled by her as a marked act of deceit
    விக்காமின் நாசூக்கான பதிலை அவள் பின்னால் நினைவுபடுத்தி அது மோசடியென உணர்ந்தாள்.
  4. His captivating softness, as she called it, has already won her fully. Neither Mr. Bennet who called him a pleasant fellow nor Mrs. Gardiner who discovered him to be mercenary saw enough in him to warn Elizabeth
    கவர்ச்சியான இனிமை ஏற்கனவே எலிசபெத்தை வென்றது. Mr. பென்னட் விக்காம் நல்லவன் என்றார். Mrs. கார்டினர் அவன் ஆதாயவாதி என்றார். இருவரும் அவனுடைய திருட்டுத்தனத்தை அறிந்து எலிசபெத்திற்கு எச்சரிக்கை செய்யவில்லை.
  5. He triumphantly asserts his independence only to swallow it soon
  6. An incapacity of action will express itself triumphantly as its opposite
  7. He takes on himself a most gentlemanly nobility
  8. His poise is one of offended dignity
  9. Even when scandalously sinned against, he claims to noble behaviour
  10. Loyalty to the father and dislike of the son do not go together
    தகப்பனார் மீது பிரியமும், மகன் மீது வெறுப்பும் சேர்ந்து எழாது.
  11. A thousand tender recollections when they do not serve the purpose can be easily forgotten or turn into the opposite
    அன்பை இதமாக மொழியும் ஆயிரம் சொற்கள் பலன் தராவிட்டால், எளிதில் மறந்து போகும். எதிராகவும் மாறும்.
  12. To mercenary people, the only concrete reality is material benefits, not sacred memories
    ஆதாய மனப்பான்மை பொருள், பணத்தையே காண வல்லது. புனித நினைவுகள் அதற்கில்லை.
21
Elizabeth found the interest of the subject increase, and listened with all her heart; but the delicacy of it prevented farther inquiry.
எலிசபெத்திற்கு இவ்விஷயம் மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. முழு மனதோடு கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கு, விஷயம் நாசுக்கானது என்பதால் மேலும் எதையும் விசாரிக்க முடியவில்லை.
  1. Delicacy overcoming overwhelming emotional interest speaks of high culture
    முழு அக்கறையுள்ள இடத்தை இதமாகப் பேச வேண்டி சொல்லாமலிருப்பது பண்பின் சிகரம்.
  2. Elizabeth’s interest increases. It is not in Wickham. Really it is her interest in Darcy of which she is unaware
    எலிசபெத்தின் ஆர்வம் அதிகரித்தது. அது விக்காம் மீதில்லை. உண்மையின் அவள் ஆர்வம் டார்சி மீது. அது அவளுக்குத் தெரியவில்லை.
  3. Prevented by delicacy she refrained from asking about Darcy. It became Silent Will and he spoke the news she very much wanted
22
Mr. Wickham began to speak on more general topics, Meryton, the neighbourhood, the society, appearing highly pleased with all that he had yet seen, and speaking of the latter especially with gentle but very intelligible gallantry.
விக்காம், பொதுவான சமாசாரங்களைப்பற்றி பேசலானான். மெரிடன், அதனைச் சுற்றியுள்ள பகுதி, மெரிடன் சமுதாயம், தான் இதுவரை பார்க்காதது பற்றிகூட மிகவும் திருப்தியடைந்தவனாய் பேசிய பேச்சு, பரிவாகவும் இருந்தது. அதே சமயம் அவனுடைய மேன்மையையும் உணர்த்தியது.
  1. He and she are now united by the common dislike of Darcy
  2. (The illusion he has created later was the cause for her self-finding. Had he been true to her and refrained from falsehood, there is no chance of her overcoming her charm for him, in favour of Darcy. Wrong people serve the cause wrongly. As the present atmosphere is strong, he was exposed. In a weak atmosphere he would have prevailed forever)
  3. The high intensity of a relationship, even in conversation, does not abruptly end. It slowly subsides
    உறவு தீவிரமாகி உயர்ந்தால் உரையாடலை முடிப்பது கடினம். மெதுவாக அடங்கும்.
23
"It was the prospect of constant society, and good society," he added, "which was my chief inducement to enter the -- -- shire. I knew it to be a most respectable, agreeable corps, and my friend Denny tempted me farther by his account of their present quarters, and the very great attentions and excellent acquaintance Meryton had procured them. Society, I own, is necessary to me. I have been a disappointed man, and my spirits will not bear solitude. I must have employment and society. A military life is not what I was intended for, but circumstances have now made it eligible. The church ought to have been my profession -- I was brought up for the church, and I should at this time have been in possession of a most valuable living, had it pleased the gentleman we were speaking of just now."
“நல்ல சமுதாயமாக இருப்பதுதான், நான் இங்கு இராணுவத்தில் சேருவதற்கு தூண்டுதலாக இருந்தது. மதிப்பிற்குரிய நல்ல படைவீரர்கள் இருப்பது எனக்குத் தெரியும். மேலும் என்னுடைய நண்பன் டென்னி இப்போதிருக்கும் இடத்தைப் பற்றியும், மெரிடனில் இருப்பவர்கள் தரும் அன்பு, ஆதரவைப் பற்றியும் கூறியது மேலும் என்னை இங்கு இப்பிரிவில் சேர்ந்து கொள்ளத் தூண்டியது. எனக்கு சமுதாயம் முக்கியம். நான் ஏமாற்றப்பட்டவன், என்னால் தனியாக இருக்க முடியாது. எனக்கு வேலையும் வேண்டும், மனிதர்களும் வேண்டும். நான் உத்தேசித்தது இராணுவ வாழ்க்கையல்ல. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை என்னை இப்பொழுது இதில் சேரும்படி ஆக்கியுள்ளது. நான் சர்ச்சில் இருப்பதற்காகவே வளர்க்கப்பட்டேன். நான் இவ்வளவு நேரமாய் பேசிக் கொண்டிருந்த மனிதன் விருப்பப்பட்டிருந்தால், சர்ச்சில் வேலை செய்து கொண்டு ஒரு உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன்.”
  1. Flattery is more powerful when it is indirect
    மறைமுகமான முகஸ்துதி முழுப் பலன் தரும்.
  2. Recognition of the value of our town, our children, the institution to which we belong, our caste, etc. is the surest stroke of flattery
    குடும்பம், ஊர், குழந்தைகள், ஜாதி, ஆபீஸ் இவற்றின் உயர்வை ஏற்பது முகஸ்துதியின் உச்சகட்டம்.
  3. Apart from flattery, a man values himself more when the value of his environment is recognized
    தான் வாழுமிடத்தைப் புகழ்ந்தால் தன்னைப் புகழ்வதைவிட நெஞ்சு குளிரும்.
  4. His implicit flattery of Meryton, her uncle, etc. are obvious once we know his character, not before he is exposed. But Elizabeth is a willing victim who glorifies in his martyrdom
    மெரிடன் புகழ் பாடுவதும், சித்தப்பாவை உயர்வாகப் பேசுவதும் பச்சையாகத் தெரிகிறது. அவன் குணம் வெளிப்பட்டால் இவை புரியும். அதற்கு முன் எப்படிப் புரியும்? எலிசபெத் விரும்பி அவன் வலையில் வீழ்ந்து அவனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள்.
  5. He flatters her saying her society is great
    அவளுடனிருப்பது அற்புதம் எனப் புகழ்கிறான்.
  6. Eliciting sympathy has an immediate effect in people having grievances
    மனக்குறையுள்ளவரிடம் அனுதாபமாகப் பேசினால் உடனே மகிழ்வார்கள்.
  7. I am a disappointed man – She is tolerable
    ‘நான் ஏமாற்றப்பட்டவன்’ - விக்காம். ‘பரவாயில்லை’ - டார்சி.
  8. ‘I immensely like you’
    ‘My spirits will not bear solitude.’
    ‘எனக்கு அளவு கடந்து உன்னைப் பிடிக்கிறது’.
    ‘என்னால் தனித்திருக்க முடியாது. ’
  9. It is a psychological comfort to know that the other man needs some of our endowments
    நம் திறன் பிறருக்குத் தேவையெனில் மனம் மலர்ந்து மகிழும்.
  10. Worming oneself into another’s favour is an art in itsel
    ஒருவர் நம்மை விரும்பி ஏற்கும்படி நடப்பது பெரிய மனம். அது ஒரு கலை.
24
"Indeed!"
“உண்மையாகவா”
 
25
Yes -- the late Mr. Darcy bequeathed me the next presentation of the best living in his gift. He was my godfather, and excessively attached to me. I cannot do justice to his kindness. He meant to provide for me amply, and thought he had done it; but when the living fell it was given elsewhere."
“ஆமாம் -- காலம் சென்ற திரு. டார்சி எனக்கு இந்த உயர்ந்த வாழ்க்கையினை சொத்தாக எழுதியிருந்தார். தகப்பனாருக்கும் மேலே இருந்த அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருந்தார். எனக்கு அவருடைய அன்புக்கு பிரதி உபகாரம் செய்யவே முடியாது. எனக்கு போதுமான வருமானம் கொடுக்க வேண்டும் என விரும்பி அதனை செய்து முடித்தோம் என நம்பினார். ஆனால் அவர் போன பிறகு அது வேறு யாருக்கோ போய்விட்டது.”
  1. Wickham avoids mentioning Darcy’s name and evokes a deep endorsement of his emotion
    டார்சியின் பெயரை விக்காம் உச்சரிப்பதில்லை. அதனால் எலிசபெத் அவன் உணர்ச்சியை ஆழ்ந்து ஏற்கிறாள்.
  2. As emotional receptivity is fully prepared, he readily delivers his story of the living, godfather, letting down
    எலிசபெத் மனம் நெகிழ்ந்து விட்டதால், சர்ச், பணம், God-father, உயில் துரோகம் போன்று புனைந்தவற்றைத் தாராளமாகக் கூறுகிறான்.
  3. Psychological injury wins total sympathy
    புண்பட்ட மனத்திற்கு அனைவரும் ஆதரவு தருவார்கள்
26
"Good heavens!" Cried Elizabeth; "but how could that be? -- How could his will be disregarded? -- Why did not you seek legal redress?"
“கடவுளே, எப்படி இது முடியும். எப்படி அவருடைய உயிலை மதிக்காமல் இருக்க முடியும்? ஏன் நீ இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை?”
  1. Identification with another readily comes forward to fight the cause of one with whom one is identified
    எவரோடு மனம் இணைகிறதோ அவருக்காகப் போராட மனம் தயாராகும்.
  2. Her thinking of legal recourse shows how identified she is with his life
  3. Her sense of his unfair suffering becomes keener every minute
    அநியாயமாக ஏமாற்றப்பட்டான் என்ற நியாய உணர்ச்சி அவளுள் கூர்ந்து எழுந்தது.
  4. He wriggles out of the situation which escapes her attention
  5. He presents the ‘facts’, allows her to condemn Darcy, himself refraining from the crime
  6. She is oblivious of his cunning, overwhelmed by his charm
27
"There was just such an informality in the terms of the bequest as to give me no hope from law. A man of honour could not have doubted the intention, but Mr. Darcy chose to doubt it -- or to treat it as a merely conditional recommendation, and to assert that I had forfeited all claim to it by extravagance, imprudence -- in short, anything or nothing. Certain it is, that the living became vacant two years ago, exactly as I was of an age to hold it, and that it was given to another man; and no less certain is it, that I cannot accuse myself of having really done anything to deserve to lose it. I have a warm, unguarded temper, and I may perhaps have sometimes spoken my opinion of him, and to him, too freely. I can recal nothing worse. But the fact is, that we are very different sort of men, and that he hates me."
“முறைப்படியாக எதுவும் எழுதிவைக்காததால் என்னால் சட்டப்படி எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு நல்ல மனிதனுக்கு தகப்பனாரின் உத்தேசத்தில் எந்த சந்தேகமும் வராது. ஆனால் டார்சிக்கு அந்த சந்தேகம் வந்தது, அல்லது தகப்பனார், நிபந்தனைக்கு உட்பட்டு சிபாரிசு செய்திருக்கிறார் என நினைத்தான் போலும். எனது ஊதாரித்தனத்தாலும், கவனமின்மையாலும் அல்லது எக்காரணமுமே இல்லாமலும், நான் விட்டுக் கொடுத்துவிட்டதாக வலியுறுத்துவான். இரண்டு வருடங்களுக்குமுன், சர்ச்சில் பதவி காலியான பொழுது எனக்கு சரியான வயது இருந்தபோதிலும், அது வேறு ஒருவருக்கு அளிக்கப்பட்டது. நான் அதனை இழக்க எந்த தவறும் செய்ததாக குற்றம்சாட்ட முடியாது. எனக்கும் கட்டுபாடில்லாத கோபம் உண்டு. நான் அவனைப்பற்றி, அவனிடமே, சில சமயங்களில் என் அபிப்பிராயத்தைக் கூறி இருக்கிறேன். இத்தவற்றைத் தவிர வேறு எதுவும் நான் செய்தது இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால் நாங்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்ட குணங்களை, உடையவர்கள். அவனுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது.”
  1. She thinks of legal redress; he escapes through the doors of informality. The poisonous seed is sown. It has readily sprouted
    கோர்ட்டிற்குப் போக நினைக்கிறாள். வாய்மொழி ஏற்பாடு எனக் கூறித் தப்பித்துக் கொள்கிறான். விஷ வித்து ஊன்றப்பட்டது. அது முளைத்து விட்டது
  2. One who fabricates events can also fabricate escape doors
    பொய்யைப் புனைபவன் தப்பிக்க வழியையும் செப்பனிடுவான்.
  3. (Darcy) ‘He hates me,’ says Wickham, and does not say, ‘I hate him’. Very diplomatic
  4. Wickham speaks of a man of honour
    விக்காம் நாணயத்தைப் பற்றிப் பேசுகிறான்.
  5. He is ‘spotless’
    விக்காம் அப்பழுக்கற்றவன்.
  6. He tells her how she just then feels about him
    அவளெப்படி அவனை நினைக்கிறாளோ அதைக் கூறுகிறான்.
  7. Having accused him of the worst treachery, he declares he has nothing more that is worse
    டார்சி துரோகம் செய்தான் என்று சொன்னபின், டார்சி மீது அவனுக்கு வேறெந்த குறையுமில்லை என்கிறான்.
  8. To disclose one’s weaknesses before an accusation is brought forward is thought to be great defence, but it is a poor one, as the very value put forward is undermined by this
    குற்றம் சாட்டுமுன் குறையை வெளியிடுவது தற்காப்பானாலும், அது காரியத்தையே கெடுத்து விடும்.
28
"This is quite shocking! -- He deserves to be publicly disgraced."
“இது மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது! -- அவனை பொது இடத்தில் அவமானப்படுத்த வேண்டும்.”
  1. In other words, Elizabeth was totally won over emotionally
  2. He shocked her to say Darcy must be exposed
    டார்சியை அம்பலப்படுத்தக் கூடாது என்று அவளுக்கு அதிர்ச்சி தருகிறான்.
  3. This shocks her, and she wants to publicly expose Darcy. Thus in a few minutes he achieves a consummate victory, though temporary
  4. (Note her words ‘must be publicly exposed’ come true of Wickham when he ran away with Lydia. Words uttered have a way of becoming true though in a different fashion)
29
"Some time or other he will be -- but it shall not be by me. Till I can forget his father, I can never defy or expose him."
“எப்பொழுதாவது இது நடக்கும் -- ஆனால் என் மூலம் இருக்காது. அவனுடைய தகப்பனாருடைய ஞாபகம் இருக்கும்வரை அவனை காண்பித்துக் கொடுக்க முடியாது, எதிர்க்கவும் முடியாது.”
  1. He makes Darcy a shade worse, saying that he could not escape exposure and himself a shade nobler that he will not expose him
    டார்சி தப்ப முடியாது எனக் கூறி அவனை அவமானப்படுத்தியபின் அதைத்தான் செய்ய முடியாது என்று தன் பெருந்தன்மையை நிலைநிறுத்திக் கொள்கிறான்.
30
Elizabeth honoured him for such feelings, and thought him handsomer than ever as he expressed them.
அவனுடைய இந்த உணர்வுகளுக்கு எலிசபெத் பெரும் மதிப்பு கொடுத்தாள். இதனாலேயே அவன் மேலும் அழகுள்ளவனாகத் தெரிந்தான்.
 
31
"But what," said she, after a pause, "can have been his motive? -- what can have induced him to behave so cruelly?"
சிறிது இடைவெளிக்குப் பிறகு “அவனுடைய நோக்கம் என்னவாக இருக்கும். இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதற்கு காரணம் என்னவாக இருக்கும்?” எனக் கேட்டாள்.
  1. Though she believes the scandal readily, she is unable to understand the coinage when she asks what the motive was
  2. She hit upon his falsehood discovering in the narrative no motive for Darcy, but she was by then totally taken in
    டார்சிக்கு நோக்கம் கற்பிக்கவில்லை எனப் புரிந்து கொண்டாள். அதற்குள் அவள் அவன் வலையில் சிக்கியதால் அதைக் கவனிக்கவில்லை.
32
"A thorough, determined dislike of me -- a dislike which I cannot but attribute in some measure to jealousy. Had the late Mr. Darcy liked me less, his son might have borne with me better; but his father's uncommon attachment to me irritated him, I believe, very early in life. He had not a temper to bear the sort of competition in which we stood -- the sort of preference which was often given me."
“என் மேலுள்ள வெறுப்புதான். பொறாமை காரணமாக உள்ள வெறுப்பு. அவனுடைய தகப்பனார் என்மேல் இவ்வளவு அன்பு காட்டியிருக்காவிட்டால் ஒரு வேளை டார்சிக்கு என்னைப் பிடித்திருக்கலாம். ஆனால் அவரது அதீத அன்பு அவனது இளமை காலம் முதல் எரிச்சலூட்டியது. அவனைக் காட்டிலும் என்மேல் அதிக அக்கறை கொண்டது அவனால் தாங்க முடியவில்லை என நினைக்கிறேன்.”
  1. It is easy to create hatred for another; it is not equally easy to create good will for oneself
    ஒருவரை வெறுக்கச் செய்யலாம். நம்மீது எளிதில் பிரியம் வாராது.
  2. Good will created in another through hatred of yet another person cannot last long, as this good will will carry the tinge of that hatred
    ஒருவர் மீது வெறுப்பை உண்டுபண்ணி ஏற்படும் பிரியத்தில் அவ்வெறுப்பு கலந்திருக்கும்.
  3. What she refuses to ‘see’ he brings her to see the jealousy of Darcy of his own superior personality
  4. A castle built of falsehood is a house of cards
    பொய்யால் கட்டிய கட்டிடம் காகித மாளிகை.
  5. The touch of reality demolishes in a trice
    உண்மை வெளிப்பட்டால் மாளிகை மறையும்.
33
"I had not thought Mr. Darcy so bad as this -- though I have never liked him, I had not thought so very ill of him. -- I had supposed him to be despising his fellow-creatures in general, but did not suspect him of descending to such malicious revenge, such injustice, such inhumanity as this!"
“இவ்வளவு மோசமானவனாக இருப்பான் என நான் நினைக்கவில்லை -- எனக்கு எப்பொழுதுமே அவனைப் பிடிக்காது. ஆனால் அவன் இவ்வளவு மோசமானவன் என நான் நினைத்தது கிடையாது. தன்கூட இருப்பவர்களைப் பொதுவாக நிந்தனை செய்வான் என நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு கீழிறங்கி துவேஷத்துடன் பழி தீர்த்துக் கொள்வான், முற்றிலும் அநியாயமாக, மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்வான் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.”
  1. He paints Darcy dark and she says she never thought so ill of Darcy. The truth is there around unattested by her
    டார்சியைப் பேயாக வர்ணித்து, தனக்கு கெட்ட அபிப்பிராயமில்லை என்று கூறுகிறான்.
    உண்மை வெட்டவெளியாக இருக்கிறது. அவள் ஏற்கவில்லை.
  2. Her own judgment has not put Darcy down that badly
34
After a few minutes reflection, however, she continued -- "I do remember his boasting one day, at Netherfield, of the implacability of his resentments, of his having an unforgiving temper. His disposition must be dreadful."
சிறிது நேர யோசனைக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்தாள். “எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஒரு நாள் நெதர்பீல்டில் தன்னுடைய மாற்றவே முடியாத கோபத்தைப் பற்றியும், மன்னிக்க முடியாத கோபத்தை பற்றியும் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய இச்சுபாவம் பயங்கரமானதாக இருக்க வேண்டும்.”
  1. From her own experience, she tries to find corroboration for this story
35
"I will not trust myself on the subject," replied Wickham, "I can hardly be just to him."
“இவ்விஷயத்தில் எனக்கு என்மேல் நம்பிக்கை இல்லை. நான் அவனிடம் நியாயமாக நடந்து கொள்ள முடியாது” என்றான் விக்காம்.
  1. Quickly Wickham dissociates himself from her description
    எலிசபெத் டார்சியைப் பற்றிக் கூறுவதின்று விக்காம் விரைந்துவிலகுகிறான்.
  2. Wickham takes one further noble step of impartiality
36
Elizabeth was again deep in thought, and after a time exclaimed, "To treat in such a manner the godson, the friend, the favourite of his father!" -- She could have added, "A young man too, like you, whose very countenance may vouch for your being amiable" -- but she contented herself with, "And one, too, who had probably been his own companion from childhood, connected together, as I think you said, in the closest manner!"
மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய எலிசபெத் சிறிது நேரத்திற்குப் பிறகு “மகனைப்போல் பாவித்த உன்னை, தகப்பனாரின் வேண்டப்பட்டவனாக இருந்த உன்னை, இப்படி நடத்தியிருக்கிறான்!” உன்னைப் பார்த்தாலே இனிய சுபாவம் உள்ளவன் என தோன்றுகிறது என சொல்ல நினைத்தவள் “சிறு வயதிலிருந்தே சக நண்பனாக சேர்ந்து இருந்த உன்னை, நீ சொன்னதுபோல் நெருக்கமாக இருந்த உன்னை”என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
  1. She was fully captivated, taken in, lost forever
    அவள் முழுவதும் கவரப்பட்டு, ஏமாந்து, அழிந்து போனாள்.
  2. She almost feels that her judgment of Darcy is based on Wickham’s handsome face
37
"We were born in the same parish, within the same park, the greatest part of our youth was passed together; inmates of the same house, sharing the same amusements, objects of the same parental care. My father began life in the profession which your uncle, Mr. Philips, appears to do so much credit to -- but he gave up everything to be of use to the late Mr. Darcy, and devoted all his time to the care of the Pemberley property. He was most highly esteemed by Mr. Darcy, a most intimate, confidential friend. Mr. Darcy often acknowledged himself to be under the greatest obligations to my father's active superintendance, and when, immediately before my father's death, Mr. Darcy gave him a voluntary promise of providing for me, I am convinced that he felt it to be as much a debt of gratitude to him as of affection to myself."
“நாங்கள் ஒரே ஊரில் ஒரே இடத்தில் பிறந்தோம். இளவயது பிராயம் பெரும்பாலும் ஒன்றாகவே கழிந்தது. ஒரே வீட்டில் வசித்தோம், ஒன்றாகவே விளையாடினோம், ஒன்றாகவே வளர்க்கப்பட்டோம். திரு. பிலிப்ஸ்போல் வக்கீலாக இருந்த எனது தகப்பனார். திரு. டார்சிக்காக எல்லாவற்றையும் விட்டு வந்து, பிம்பெர்லியை பார்த்துக் கொள்வதற்கே தன் நேரம் முழுவதையும் செலவழித்தார். எனது தகப்பனாரிடம் திரு. டார்சி மிகவும் உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார். மேலும் அந்தரங்க நண்பனாகவும் கருதினார். எனது தகப்பனாரின் சேவைக்கு மிகவும் கடமைப்பட்டிருந்ததாக கூறிய திரு. டார்சி, என்னை கவனித்துக் கொள்வதாக என் தகப்பனார் இறப்பதற்கு முன்பு வாக்களித்திருந்தார். எவ்வளவு என் தகப்பனாருக்கு நன்றி கடன்பட்டிருப்பதாக நினைத்து இந்த உதவியைச் செய்தாரோ அவ்வளவு என் மேலுள்ள பாசத்தினாலும் செய்தார் என நான் நம்புகிறேன்.”
  1. To convert a paid service into service to a cause is pernicious
    சம்பளத்திற்கு வேலை செய்பவன் சேவை செய்வதாகப் பேசுவது கயமையின் குதர்க்கம்.
  2. To endorse a dishonest story is dishonest
    ஒருவர் சொல்லும் பொய்யை நம்புவது பொய்.
  3. Physical proximity never brings legal rights
    நெருக்கம் உரிமை தராது.
  4. The same experience gives two people two different values
    ஒரே அனுபவம் இருவருக்கு இருவேறு முடிவுகளைக் கொடுக்கும்.
  5. Professional affinity is a patronage
    ஒரே தொழிலில் உள்ளவர் ஒருவரை ஒருவர் விரும்புவார்
  6. A presentation that secures an indirect value is the best presentationமறைமுகமாக சாதிக்கும் சொல் பெரிய சொல்.
  7. An employee cannot become a confidential friend
    ஊழியர் உற்ற நண்பராக முடியாது.
  8. What Wickham won over entirely, he reinforces in many ways
    ஜெயித்தபின் விக்காம் பல வழிகளிலும் தன்னை உறுதிப்படுத்திக் கொள்கிறான்.
  9. Wickham finds his conquest and handiwork wonderful
    வேட்டை பலித்து விட்டது. தன் கைவினை அற்புதம்.
  10. He plays on that theme drawing upon her fervent sympathy
38
"How strange!" Cried Elizabeth. "How abominable! -- I wonder that the very pride of this Mr. Darcy has not made him just to you! -- If from no better motive, that he should not have been too proud to be dishonest, -- for dishonesty I must call it."
“என்ன ஆச்சரியம்! எவ்வளவு வெறுக்கத்தக்க ஒரு விஷயம். டார்சியின் கர்வமே உன்னிடம் நியாயமாக நடந்து கொள்ள மறுத்திருக்கிறது. வேறு ஒரு நோக்கம் இல்லையெனில், அவனுடைய பெருமையை காப்பாற்றிக் கொள்ளவாவது உன்னிடம் நியாயமாக நடந்து கொண்டிருக்கலாம். அப்படி இல்லை எனும் பொழுதுதான் ஆச்சரியம் வருகிறது.”
  1. She was totally won over. To her Darcy is dishonest
  2. Impression is not reality. Finally she was to discover that it is Wickham who is dishonest. Dishonesty arises from her prejudice as she later discovers
39
"It is wonderful," replied Wickham, -- "for almost all his actions may be traced to pride; and pride has often been his best friend. It has connected him nearer with virtue than any other feeling. But we are none of us consistent, and in his behaviour to me there were stronger impulses even than pride."
“அவனுடைய எல்லா செயல்களுக்கும் பின்னணி கர்வம்தான் என்று சொல்வது சரிதான், ஏனெனில் கர்வம்தான் அவனுடைய உற்ற நண்பனாக இருந்து வருகிறது. நாம் அனைவருமே எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் அவனுக்கு என்னிடம் கர்வத்தைக் காட்டிலும் வேறு ஏதோ ஒரு வேகம் இருக்கிறது.”
  1. All one’s actions can be traced to his ego
    எந்த காரியத்தை ஆராய்ந்தாலும் அகந்தையில் முடியும்.
  2. In a certain context, exoneration becomes an accusation
    மன்னிப்பது குற்றம் சாட்டுவதாக முடியும் நேரம் உண்டு.
  3. Wickham has perception enough to feed her grievance against Darcy without actually knowing what the grievance is
    அவளுக்கு என்ன குறையென்று தெரியாமல் அக்குறை வளரும்படிப் பேச விக்காம் அறிவான்.
  4. Having won her favour, Wickham builds his theory of pride
40
"Can such abominable pride as his have ever done him good?"
இந்த வேண்டாத கர்வம் அவனுக்கு எப்பொழுதாவது நல்லது செய்திருக்கிறதா?”
  1. Even now she does not condemn Darcy. She only wonders how it will do him good
41
"Yes. It has often led him to be liberal and generous -- to give his money freely, to display hospitality, to assist his tenants, and relieve the poor. Family pride, and filial pride -- for he is very proud of what his father was -- have done this. Not to appear to disgrace his family, to degenerate from the popular qualities, or lose the influence of the Pemberley House, is a powerful motive. He has also brotherly pride, which, with some brotherly affection, makes him a very kind and careful guardian of his sister, and you will hear him generally cried up as the most attentive and best of brothers."
“செய்திருக்கிறது. பல சந்தர்ப்பங்களில், தாராளமாகவும், பரந்த மனப்பான்மையுடனும் செயல்பட்டிருக்கிறான். பண உதவி செய்வதற்கும், விருந்தோம்பலைக் காண்பிப்பதற்கும், தன் கீழ் குடியிருக்கும் மக்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்கும், ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கும், குடும்ப கௌரவம், அவனது தகப்பனார் வாழ்ந்த வாழ்க்கை இவையாவுமே அவனை இவ்வாறு நடந்து கொள்ள தூண்டியிருக்கிறது. தன்னுடைய குடும்ப கௌரவத்தை நிலை நாட்டவும், பெருமையை காப்பாற்றுவதற்கும், பிம்பெர்லி இல்லம் தன் செல்வாக்கினை இழக்காமல் இருப்பதற்கும் செய்ததாகவும் இருக்கலாம். மேலும் அவனுக்கு தனது சகோதர பாசத்தின்மேல் பெருமை உண்டு. இந்த பாசத்தின் காரணமாக அவனுடைய தங்கையை அன்பாகவும், கவனமாகவும் பாதுகாத்து வந்தான். எல்லோரையும்விட ஒரு சிறந்த பாசமிக்க அண்ணன் அவன் என நீ பொதுவாக கேள்விப்படுவாய்.”
  1. Falsehood cannot stand on its own legs. It needs the support of some truth
    பொய் தனித்துப் பிழைக்க முடியாது. பொய் பிழைக்க மெய் வேண்டும்.
  2. Good comes out of evil
    நல்லது செய்தால் கெட்டது விளையும்.
  3. Tradition created lives very long after the founder
    ஒரு ஸ்தாபகர் ஆரம்பித்தது நெடுநாள் வரை உயிருடனிருக்கும்.
  4. The closeness of the relationship is the cause to do harm
    நெருக்கம் தவறு செய்யத் தூண்டும்.
  5. In an established structure, any formal occasional act can become a permanent reality
    பரம்பரையான ஸ்தாபனத்தில், ஏதோ ஒரு நேரம் செய்த காரியம் நிரந்தரமாவதுண்டு.
  6. Debts of gratitude not caused by material reasons are evanescent
    பொருளீட்டாத நன்றிக் கடன் மாயமாய் மறையும்.
  7. Linguistic felicity can present anything as anything else
    சொல்வன்மை எதையும் எதுவாக மாற்றிக் கூறும்.
  8. An estate is nothing devoid of its tradition
    பரம்பரை பெயரில்லாவிட்டால் ஒரு எஸ்டேட்டில் ஒன்றுமில்லை.
  9. A brother can be proud of a brotherly pride
    அண்ணனுக்கு அண்ணன் என்ற பெருமையுண்டு.
  10. A guardian is one in whom the psychological refuge is secured
    கார்டியனை நினைத்தால் மனம் தெம்பாக இருக்கும்.
  11. Even Wickham had to admit Darcy’s brotherly affection
42
"What sort of a girl is Miss Darcy?"
“மிஸ். டார்சி எம்மாதிரியான பெண்?”
 
43
He shook his head. "I wish I could call her amiable. It gives me pain to speak ill of a Darcy. But she is too much like her brother -- very, very proud. As a child, she was affectionate and pleasing, and extremely fond of me; and I have devoted hours and hours to her amusement. But she is nothing to me now. She is a handsome girl, about fifteen or sixteen, and I understand, highly accomplished. Since her father's death, her home has been London, where a lady lives with her, and superintends her education."
மறுத்தாற்போல் தலையசைத்து “அவள் நல்லவள் என்று கூற ஆசைப்படுகிறேன். டார்சி குடும்பத்தினரைப்பற்றி தவறாகப் பேச கஷ்டமாகத்தான் உள்ளது. அவளும் தனது சகோதரன்போல் பெரும்பாலும் இருப்பாள் -- மிகவும் கர்வமானவள். குழந்தையாக இருக்கும்பொழுது மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தாள். என்னைக் கண்டால் மிகவும் பிடிக்கும், நான் அவளுடன் மணிக்கணக்காய் விளையாடியிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அவள் எனக்கு யாருமில்லை. பதினைந்து வயதாகும் அவள், பார்ப்பதற்கு அழகாக இருப்பாள், மிகவும் திறமைசாலி என்று எனக்குத் தெரியும். தகப்பனாரின் காலத்திற்குப் பிறகு அவள் லண்டனில் வசிக்கிறாள். ஒரு பெண்மணி அவள் கூடவே இருந்து கொண்டு அவளது படிப்பினை மேற்பார்வையிட்டு வருகிறாள்.”
  1. Wickham, for no reason, speaks ill of Miss Darcy, an uncalled for evil
  2. His is a false character that tries to gain the maximum from the moment
  3. An affectionate temper is not outgrown by age
    பிரியமான பழக்கம் வயதானால் மாறாது.
  4. A handsome girl can generate rivalry in another girl
    அழகிக்கு எளிதில் போட்டி எழும்.
  5. Absence of parents creates a dangerous vacuum in a girl’s life
    பெற்றோரில்லை என்பது பெண் வாழ்வில் சூன்யமாகும்.
44
After many pauses and many trials of other subjects, Elizabeth could not help reverting once more to the first, and saying –
வேறு சில விஷயங்களைப்பற்றி பேச முயற்சி எடுத்தாலும் மீண்டும் பழைய விஷயத்தைப் பற்றிப் பேசுவதை எலிசபெத்தால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாததாக இருந்தது.
  1. Subconscious interest is more enduring than surface charm
    மனம் மகிழ்வதை விட உள்ளக் கவர்ச்சி வலுவானது.
45
"I am astonished at his intimacy with Mr. Bingley! How can Mr. Bingley, who seems good-humour itself, and is, I really believe, truly amiable, be in friendship with such a man? How can they suit each other? Do you know Mr. Bingley?"
“திரு. பிங்கிலியுடன் நெருக்கமாக அவன் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! நல்ல இனிமையான சுபாவமுள்ள பிங்கிலிக்கு எப்படி இப்படி ஒருவனுடன் நண்பனாக இருக்க முடிகிறது. எப்படி இருவருக்கும் ஒத்துப் போகிறது? -- உனக்கு பிங்கிலியைத் தெரியுமா?”
  1. The restraint Elizabeth had with Darcy, she did not have with Bingley
  2. Elizabeth evinces genuine interest in Bingley
    எலிசபெத்திற்கு பிங்லி மீது உண்மையான நல்லபிப்பிராயம்.
46
"Not at all."
“தெரியாது.”
  1. Even her Wickham absolves Bingley and abuses Darcy
47
"He is a sweet-tempered, amiable, charming man. He cannot know what Mr. Darcy is."
“இனிய சுபாவமும், நல்ல குணமும் படைத்த வசீகரமான மனிதன் அவன். அவனுக்கு டார்சி யார் எனத் தெரிந்திருக்க முடியாது.”
 
48
"Probably not; -- but Mr. Darcy can please where he chuses. He does not want abilities. He can be a conversible companion if he thinks it worth his while. Among those who are at all his equals in consequence, he is a very different man from what he is to the less prosperous. His pride never deserts him; but with the rich he is liberal-minded, just, sincere, rational, honourable, and perhaps agreeable -- allowing something for fortune and figure."
“ஒரு வேளை அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம்; -- ஆனால் டார்சிக்கு எங்கு எப்படி பழகுவது எனத் தெரியும். அவனுக்கு அத்திறமைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. தனக்கு கீழ்நிலையில் உள்ளவர்களிடம் ஒரு மாதிரியாகவும், தனக்குச் சமமாக இருப்பவர்களிடம் வேறு மாதிரியாகவும் அவன் நடந்து கொள்வதே வித்தியாசமாக இருக்கும். அவனுடைய கர்வம் அவனை ஒருபொழுதும் கைவிட்டதில்லை; ஆனால் பணக்காரர்களுடன் அவன் பெருந்தன்மையாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும், பகுத்தறிவு மிக்கவனுமாய், பழகுவதற்கு ஏற்றவனுமாய் இருப்பான் -- சொத்துக்கும், பணத்திற்கும் கொடுக்கும் இடம்.”
  1. Between property and beauty property prevails
    அழகும் சொத்தும் இடும் போட்டியில் சொத்து வெல்லும்.
  2. Manners can be changed, not character
    பழக்கம் மாறும், சுபாவம் மாறாது.
  3. Pride can change to pride in humility, but haughtiness cannot
    கர்வம் அடக்கமானவன் என்பதில் கர்வமாக முடியும். ஆனால் திமிர் மாறாது.
  4. For Darcy’s pride, Bingley’s friendship, Wickham gives an acceptable reason to her who is eager to accept anything
    டார்சியின் கர்வம், பிங்லியின் நட்பு இவற்றிற்கு விக்காம் எலிசபெத் ஏற்கக்கூடிய காரணம் கூறுகிறான். அவள் எதையும் ஏற்கத் தயாராக இருக்கிறாள்.
49
The whist party soon afterwards breaking up, the players gathered round the other table, and Mr. Collins took his station between his cousin Elizabeth and Mrs. Philips. The usual inquiries as to his success were made by the latter. It had not been very great: he had lost every point; but when Mrs. Philips began to express her concern thereupon, he assured her with much earnest gravity that it was not of the least importance, that he considered the money as a mere trifle, and begged she would not make herself uneasy.
சீட்டு கச்சேரி முடிந்து, எல்லோரும் வேறு ஒரு மேஜையைச் சுற்றி கூடிய பொழுது காலின்ஸ் எலிசபெத்திற்கும், திருமதி. பிலிப்ஸிற்கும் இடையே வந்து நின்று கொண்டான். அவனுடைய வெற்றியைப் பற்றி திருமதி. பிலிப்ஸ் விசாரித்த பொழுது தான் எல்லா ஆட்டங்களிலும் தோற்றுப் போனதாக கூறியதைக் கேட்ட திருமதி. பிலிப்ஸ் மிக்க அக்கறையுடன் விசாரித்ததற்கு, தனக்கு எப்பொழுதுமே பணம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை, அதனால் அதற்காக அவள் கவலைப்பட வேண்டாம் என மிகவும் பவ்யமாக பதிலளித்தான்.
 
50
"I know very well, madam," said he, "that when persons sit down to a card-table they must take their chance of these things -- and happily I am not in such circumstances as to make five shillings any object. There are undoubtedly many who could not say the same, but thanks to Lady Catherine de Bourgh, I am removed far beyond the necessity of regarding little matters."
“எனக்கு மிக நன்றாகத் தெரியுமம்மா, சீட்டாடுவதற்கு உட்கார்ந்தால், இவைகளை எல்லாம் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஐந்து ஷில்லிங்ஸ் ஜெயிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் நான் இல்லை. பலர் இம்மாதிரி கூறும் நிலையில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற அற்ப விஷயங்களைப்பற்றி கவலைப்படாமல் நான் இருப்பதற்கு லேடி காதரினுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”
  1. To Collins the one reference is Lady Catherine, even his card losses
  2. Mr. Collins is acutely aware of his financial self-sufficiency and is anxious to announce it wherever possible
    தன் வருமானத்தைக் காலின்ஸ் அறிந்து பெருமைப்படுகிறான். சந்தர்ப்பம் கிடைத்தால் அதைச் சொல்லத் தயாராக இருக்கிறான்.
  3. A snob’s high praise can still reveal conceit and arrogance
    குழையும் கயவனின் புகழ் அவனது கர்வத்தை வெளிப்படுத்தும்.
51
Mr. Wickham's attention was caught; and after observing Mr. Collins for a few moments, he asked Elizabeth in a low voice whether her relation were very intimately acquainted with the family of de Bourgh.
விக்காமின் கவனம் காலின்ஸ்மீது சென்றது. சிறிது நேரம் அவனை கவனித்த பிறகு, லேடி டி பர்க் குடும்பத்துடன் அவனுக்கு நெருங்கிய பழக்கம் உண்டா என தாழ்ந்த குரலில் எலிசபெத்திடம் விசாரித்தான்.
  1. Each man’s atmosphere carries all his history. Hence it is easily perceived by others
    ஒரு மனிதனுடைய தோற்றம் அவன் முழு வரலாற்றையும் கூற வல்லது. அதனால் எவரும் அவனை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
  2. The man who has lost a living meets the man who has gained one. Living is the live link
    பாதிரி வேலையை இழந்தவன் பாதிரி வேலையைப் பெற்றவனை சந்திக்கிறான். பாதிரியார் வேலை அவரிடையேயுள்ள தொடர்பு.
  3. The subconscious interest is pervasive
    ஆழ்மனம் கொள்ளும் அக்கறை பரவலானது.
  4. Alert men rarely miss anything related to them. Men are alert, events are awake, life is always receptively open
    உஷாரானவர் தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாகப் பார்ப்பார்கள். மனிதர்கள் உஷார், செயல்கள் விழிப்பாக இருக்கின்றன. வாழ்க்கை ஏற்கத் தயாராக இருக்கிறது.
  5. At the word de Bourgh, Wickham was able to know of Collins
52
"Lady Catherine de Bourgh," she replied, "has very lately given him a living. I hardly know how Mr. Collins was first introduced to her notice, but he certainly has not known her long."
“லேடி காதரின் டி பர்க் சமீபத்தில் இவனுக்கு வேலை தந்திருக்கிறாள். எப்படி காலின்ஸ் முதலில் அவளுக்கு அறிமுகமானான் என தெரியாது. ஆனால் நீண்ட கால பழக்கம் இல்லை என்பது நிச்சயம்”என்று பதிலளித்தாள்.
 
53
"You know of course that Lady Catherine de Bourgh and Lady Anne Darcy were sisters; consequently that she is aunt to the present Mr. Darcy."
“லேடி ஆன் டார்சியும், லேடி காதரின் டி பர்கும் சகோதரிகள் என உனக்கும் தெரிந்திருக்கும். அதனால் லேடி காதரின் டார்சியின் சித்தியாவாள்.”
  1. Wickham is not only alert but tells her without delay the significance of the news
    விக்காம் உடனே லேடி காதரீனைப் பற்றி எலிசபெத்திற்கும் கூறுகிறான்.
54
"No, indeed, I did not. I knew nothing at all of Lady Catherine's connexions. I never heard of her existence till the day before yesterday."
“இல்லை, எனக்குத் தெரியாது. லேடி காதரினுடைய உறவுகளைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நேற்று முதல் நாள்வரை அப்படிப்பட்ட ஒருத்தி இருக்கிறாள் என்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை.”
  1. Look for Elizabeth’s interest in Darcy beyond the gossip
    இருப்பவரைக் கடந்து எலிசபெத்திற்கு டார்சி மீது அக்கரை எழுகிறது.
55
"Her daughter, Miss de Bourgh, will have a very large fortune, and it is believed that she and her cousin will unite the two estates."
“அவளுடைய மகள் மிஸ். டீ பர்க்-க்கு ஏராளமான சொத்து வந்து சேரும். அவளும் டார்சியும் சேர்வதன் மூலம் இரு சொத்துக்களும் இணையும் என்று நம்பப்படுகிறது.”
  1. Lady Anne Darcy who is the rival to Elizabeth is there very much in the news
    லேடி ஆன் டார்சி, எலிசபெத்திற்கு போட்டியானவள், பெயர் அடிபடுகிறது.
  2. Here Elizabeth knows of Lady Catherine as the aunt of Darcy
  3. (Indeed Wickham “tells” her that she, Elizabeth, will marry Darcy. The final event in the subtle plane makes Wickham speak of it in these words)
  4. To be able to know the action of subtle plane in this way will give a depth of perception to the reader
56
This information made Elizabeth smile, as she thought of poor Miss Bingley. Vain indeed must be all her attentions, vain and useless her affection for his sister and her praise of himself, if he were already self-destined to another.
இதைக் கேட்டவுடன் மிஸ். பிங்கிலியை நினைத்து, எலிசபெத்திற்கு சிரிப்பு வந்தது. டார்சி வேறொருவளுக்கு என தீர்மானிக்கப்பட்டிருந்தால், டார்சியின்மேல் இருக்கும் அவளது அக்கறையும் கவனமும், அவளது தங்கைமேல் இருக்கும் அன்பும், அவனை புகழ்ந்து பேசுவது எல்லாமே வீண்.
  1. Not only is Caroline pushed out from Darcy but Anne too is pushed out by Elizabeth entering the picture
    காரலின் விலக்கப்படுவதுடன், எலிசபெத் நுழைவதால், லேடி ஆனும் விலக்கப்படுகிறாள்.
57
"Mr. Collins," said she, "speaks highly both of Lady Catherine and her daughter; but from some particulars that he has related of her ladyship, I suspect his gratitude misleads him, and that in spite of her being his patroness, she is an arrogant, conceited woman."
“லேடி காதரின் பற்றியும், அவளது மகளைப் பற்றியும் காலின்ஸ் உயர்வாகப் பேசுவான். ஆனால் அவன் கூறிய ஒரு சில விஷயங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அவள் ஒரு கடுமையான, கர்வமுள்ள பெண்மணியாக இருப்பாள் எனத் தெரிகிறது. காலின்ஸிற்கு அவள் தன்னை ஆதரிப்பதால், அந்த நன்றி உணர்ச்சி கண்ணை மறைக்கிறது போலும்”என்றாள் எலிசபெத்.
  1. Elizabeth has enough penetration to know the Lady is conceited from Collins
  2. (The Lady may be conceited. To perceive that makes the Lady deliver her conceit on to Elizabeth. Perception has that power)
  3. To make another speak your opinions is no small skill of silent will
    அடுத்தவரை நம் எண்ணத்தைப் பேச வைக்கும் மௌன சக்தி பெரியது.
58
"I believe her to be both in a great degree," replied Wickham; "I have not seen her for many years, but I very well remember that I never liked her, and that her manners were dictatorial and insolent. She has the reputation of being remarkably sensible and clever; but I rather believe she derives part of her abilities from her rank and fortune, part from her authoritative manner, and the rest from the pride of her nephew, who chuses that every one connected with him should have an understanding of the first class."
“நீ கூறிய இரண்டு குணங்களும் அவளுக்கு உச்சகட்டத்தில் இருக்கின்றன” என்ற விக்காம், “அவளை சந்தித்துப் பல வருடங்கள் ஆகின்றன. எனக்கு அவளை எப்பொழுதுமே பிடித்ததில்லை. அவளுடைய நடத்தை சர்வாதிகாரி போலவும், கர்வமாகவும் இருக்கும். அறிவுப்பூர்வமாகவும், புத்திசாலியாகவும் இருப்பவள் என அவளுக்குப் பெயர் உண்டு. அவளுடைய இத்திறமைகளெல்லாம் அவளுடைய பதவியினாலும், செல்வத்தினாலும் அதிகார நிலை இருப்பதினாலும் கிடைத்திருக்கும். மீதி, அவளுடைய உறவினன் டார்சியின் தொடர்பு மூலம் கிடைத்திருக்கும். மேட்டுக் குடியினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களுடனும், மேட்டுக் குடியினருடனும் மட்டுமே டார்சி பழகுவான்.”
  1. Rank and fortune can give abilities and capacities
    அந்தஸ்தும், செல்வமும் திறமையைத் தர வல்லவை
  2. It is Darcy’s arrogance and conceit that Wickham presents to her through Lady Catherine
    விக்காம் டார்சியின் கர்வமும், திமிரும் லேடிகாதரீனுடையது என எலிசபெத்திற்குக் கூறுகிறான்.
  3. Rather, it is Elizabeth’s arrogance or still Wickham’s arrogant scandal about Darcy
    உண்மையில் இது எலிசபெத்தின் திமிர் அல்லது விக்காமுடைய அவதூறான கர்வமாகும்.
  4. Wickham’s cleverness again acts cunningly here. He does not accuse the Lady first. He only takes up Elizabeth’s thread. He is a consummate diplomat
  5. Man cannot retain the friendship of unequals
    தனக்கு சமமில்லாதவரின் நட்பு நீடிக்காது.
59
Elizabeth allowed that he had given a very rational account of it, and they continued talking together with mutual satisfaction till supper put an end to cards, and gave the rest of the ladies their share of Mr. Wickham's attentions. There could be no conversation in the noise of Mrs. Philips's supper party, but his manners recommended him to everybody. Whatever he said, was said well; and whatever he did, done gracefully. Elizabeth went away with her head full of him. She could think of nothing but of Mr. Wickham, and of what he had told her, all the way home; but there was not time for her even to mention his name as they went, for neither Lydia nor Mr. Collins were once silent. Lydia talked incessantly of lottery tickets, of the fish she had lost and the fish she had won; Mr. Collins, in describing the civility of Mr. and Mrs. Philips, protesting that he did not in the least regard his losses at whist, enumerating all the dishes at supper, and repeatedly fearing that he crouded his cousins, had more to say than he could well manage before the carriage stopped at Longbourn House.
விக்காம் நியாயமான விளக்கம் கொடுத்ததாக எலிசபெத் நினைத்தாள். இருவரும் தொடர்ந்து மிகவும் திருப்தியோடு உணவு உண்ணும்வரை பேசிக் கொண்டிருந்தனர். அச்சமயம் சீட்டாட்டம் முடிவடைந்ததால், மற்ற பெண்களுக்கு விக்காமுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. திருமதி. பிலிப்ஸ் கொடுத்த விருந்தின்போது இருந்த இரைச்சலில் எந்த உரையாடலையும் தொடர முடியாமற் போனது. விக்காமின் நடத்தை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவன் எது பேசினாலும் அதை நன்றாகப் பேசினான், எது செய்தாலும் அழகாகச் செய்தான். அவன் நினைவாகவே அவள் வீடு திரும்பினாள். விக்காமை பற்றியும், அவன் கூறியனவற்றையும் தவிர வேறெதையும் அவளால் நினைக்க முடியவில்லை. லிடியாவும், காலின்ஸும் அமைதியாக இல்லாததால் அவனுடைய பெயரைகூட ஒரு தடவை உச்சரிக்க முடியவில்லை. லிடியா தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளைப் பற்றியும் தான் எவ்வளவு ஜெயித்தாள், எவ்வளவு தோற்றாள் என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தாள். காலின்ஸ் தன் தோல்வியைப்பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் திரு. மற்றும் திருமதி. பிலிப்ஸின் உபசாரத்தைப்பற்றியும், விருந்தில் அளிக்கப்பட்ட உணவு வகைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தான். பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. ஆனால் அதற்குள் அவர்களது வண்டி லாங்பர்ன் இல்லத்தின்முன் வந்து நின்றது.
  1. What is agreeable is rational
    மனதிற்குப் பிடித்தது அறிவுக்கு ஒத்தது.
  2. Liking engrosses
    விருப்பம் ஆட்கொள்ளும்.
  3. Wickham’s presentation is on a par with Antony’s oration over the dead body of Julius Caesar
    ஜூலியஸ் சீஸர் உடல் மீது மார்க் அன்டோனி செய்த சொற்பொழிவு போல் விக்காம் பேசுகிறான்.
  4. Attention to one, formality to all others
    கவனம் ஒருவருக்கு, மற்ற அனைவருக்கும் முறை.
  5. The rest of the time is needed for the curing of the construction till supper
    மீதிநேரம் சாப்பாடு வரை செய்த வேலை பூரணமாகத் தேவைப்பட்டது.
  6. Parties that are noisy permit private conversations
    கூச்சலான பார்ட்டியில் இருவர் தனியே பேச முடியும்.
  7. It is to the credit of cultured societies to conduct parties in silence
    நாகரீகமானவர் மௌனமான பார்ட்டிகளை நடத்துவர்.
  8. Manners give full access to the society as wealth opens every social door
    பணம் பாதாளம் வரை பாய்வது போல் பழக்கம் அனைவரிடமும் அனுமதிக்கும்.
  9. One’s head is full of him who has captured his imagination
    கற்பனையில் கொலுவிருப்பவன் நெஞ்சை முழுமையாக ஆக்ரமித்துக் கொள்வான்.
  10. The unhealthy noise that drowned any confidential conversation is an indication of the unhealthy character of her admiration
    வேண்டாத சப்தம் அவள் பேச்சைப் பிறர் கேட்பதைத் தடுக்கிறது. அதுவே அவள் உரையாடல் வேண்டாதது எனக் கூறுகிறது.
  11. Note it was Lydia before the conversation and it is Lydia after the conversation. Lydia envelops the atmosphere
    பேசுவதற்கு முன்னும், பின்னும் லிடியா வருகிறாள். சூழலை நிரப்புவது லிடியா.
  12. Every lady awaits for some attention from Wickham, so charming is he
  13. He spoke softly in pleasing, captivating phrases as a result of the best of upbringings
  14. Being poor in Pemberley he could know the value of captivating manners which need Darcy had not
  15. Lydia and Collins were full of words and noise, all that they have
  16. Lydia goes with Collins in the actions in the return journey. From there, Collins lands in Charlotte, who is not at Mrs. Phillips, through Elizabeth. Lydia – Elizabeth – Wickham – Lydia – Collins – Elizabeth – Charlotte is the chain of persons from now till his proposal to Charlotte. Lydia ending up with Wickham and Charlotte with Collins is a parallel we have to discover
    லிடியா காலின்ஸூடன் திரும்பப் போகிறாள். மேலும் காலின்ஸ் ஷார்லோட்டை அடைகிறான். ஷார்லோட் பிலிப்ஸ் வீட்டிற்கு வரவில்லை. எலிசபெத் - லிடியா -எலிசபெத் - விக்காம் - லிடியா - காலின்ஸ் - எலிசபெத் - ஷார்லோட் என்பது சங்கிலி. இது முதல் காலின்ஸ் ஷார்லோட்டை மணக்கக் கேட்டவரை இதுவே தொடர்சங்கிலி. லிடியா விக்காமை மணந்தது, ஷார்லோட் காலின்ஸை மணந்தது ஒன்று போன்றது. இதன் இரகஸ்யம் நாமறிய வேண்டும்
  17. Lydia is shameless because of lack of culture
    லிடியாவுக்குப் பண்பில்லை, வெட்கமில்லை.
  18. Charlotte cannot afford to value culture because of poverty
    பணமில்லாததால் ஷார்லோட் பண்பைக் கருத முடியாது.
  19. Lydia represents Charlotte at Mrs. Phillips. So the four men and four women meet. Only Charlotte is represented by proxy by Lydia in view of her excess energy
    Mrs. பிலிப்ஸ் வீட்டில் லிடியா ஷார்லோட்டுக்குப் பதிலாக இருக்கிறாள். எனவே மனிதர்களும் பெண்களும் சந்திக்கிறார்கள். ஷார்லோட்டிற்கு லிடியா பிரதிநிதியாக இருக்கிறாள். தெம்பு உதவுகிறது.
  20. Noise of Lydia and Collins shows the absence of 1) Truth, 2) culture, and 3) shame
    லிடியா, காலின்ஸ் போடும் சப்தம் என்ன இல்லையெனக் காட்டுகிறது. இல்லாதது 1) சத்தியம், 2) பண்பு, 3) வெட்கம்.
  21. The empty head making incessant noise is the way it feels itself valuable.
  22. The gain that filled the hand is worth a lottery ticket
    எலிசபெத் மனத்தை ஆட்கொண்டது லாட்டரி டிக்கட்டுக்குச் சமம்.
  23. A great charm captured amid noisy trinkets is worth that
    கூச்சலிடையே அவளை முழுவதும் கவர்ந்தது கூச்சலுக்குச் சமம்.
  24. Elizabeth has made a conquest, in her opinion, but in truth, she effectively walked into the fatal trap of Wickham’s falsehood. Charm succeeds. There is no stopping it



story | by Dr. Radut