Skip to Content

வாழ்க்கை சட்டங்கள் பகுதி -2

 

Principles of Life in Pride and Prejudice

வாழ்க்கை சட்டங்கள் பகுதி - 2

---வசந்தா

 

எதிர்ப்பவர்கள் எளிதாக ஏற்பார்கள்.

ஏற்பதற்குள்ள அவசரம் எதிர்ப்பாகவும் தோன்றும்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--2, பக்கம் 130.

அடிக்கடி யோகத்திற்கு முரணானதைச் செய்பவன் யோகத்தை ஆழ்ந்து பின்பற்றுகிறான் எனப் பொருள். குழந்தையை அடிப்பவர்கள் சிலர் கொடுமைக்காரர்களாக இருப்பார்கள். வேறு சிலர் குழந்தைமீது அதிக அன்புள்ளவர்களாக இருப்பார்கள். அன்பை வெளிப்படுத்தத் தெரியாதவர்கள் தங்களுக்குள்ள குணங்கள் மூலம் வெளிப்படுத்தினால் அது கொடுமையாகவும் இருக்கும்.

யோகத்தை முறையாக செய்தால், அதற்குரியதை விரும்பிச் செய்வான். யோகத்தின்மீது ஆழ்ந்த பற்றிருந்து, அதற்குரிய முறையை அறியாதவன் முரணானதை செய்வான். தன்னையறியாமல் தன் அறியாமை மூலம் யோகத்தை நாடினால் இதுபோல் அமையும்.

சுயநலம் இரகஸ்யத்தால் சந்தோஷப்படும்.

நூல் எங்கள் குடும்பம் பகுதி--2, பக்கம் 208.

எங்கள் குடும்பம் பகுதி--1, பக்கம் 7.

சுயநலம் என்பது அகந்தை மற்றதிலிருந்து பிரிந்து தன்னை வளர்ப்பது. எதை முக்கியமாகக் கருதி வளர்க்கிறதோ பணம்-அதிகாரம்-அவை அகந்தையை உடைக்கும். மனிதனால் தனித்து வாழ முடியாது. தனித்து வாழ மற்றவர் ஒத்துழைப்பு அவசியம். மற்றவருடன் சேர்ந்து வாழ்ந்தால் மனிதனுக்கு உள்ளதில் பாதிக்குமேல் போய்விடும். மற்றவரின் ஒத்துழைப்பால் தன்னை வலுவாக்கிக் கொள்வது சுயநலம். சுயநலமான மக்களிடையே இது வலிமை தலைமை தரும். பண்பான மக்களிடையே சுயநலமி ஒதுக்கப்படுவான். சுயநலம் சொத்து. பிரின்ஸ்பால் தம் மகன் வளர, சுயநலத்திற்கு silent will-ஐ பின்பற்றப் பிரியப்படுவது பலன் தரும். தவறான போக்கு, கணவர் சுயநலமி எதையும் தமக்கு சாதகமாகக் கொள்வார்.

அன்னையையும் அப்படியே எடுத்துக் கொள்வார்.

இரகஸ்யம் என்று ஒன்றிருப்பது தெரிந்தால் இரகஸ்யம் முக்கியமாகும்.

நூல் யோக வாழ்க்கை சுருக்கம், பக்கம் 49 (Point No .341).

அதிர்ஷ்டத்தைப் பெறும் முக்கிய இரகஸ்யம் எப்படி சூழலை சாதகமாகப் பயன்படுத்துவது என்பதில் உள்ளது.

தினசரி செய்திகள்------ Point No: 427.

அவமானத்தை மறைப்பது இரகஸ்யம்.

ஆண்டவன் அருளைக் காப்பாற்றுவது இரகஸ்யம்.

இல்லாத அதிகாரத்தை இரகஸ்யம் பெற்று தரும்.

இரகஸ்யமானவர்கள் பெரும்பாலும் வாழ்வில் வெற்றி பெற்றவராக இருப்பார்கள். இரகஸ்யமாக இருந்து தோல்வியடைபவர்களும் உண்டு. இரகஸ்யம் வெற்றியை பெற்று தருவதால் அதை உடனே பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இரகஸ்யம் எத்தனையோ சிறிய சௌகரியங்களை இழக்கும். சமயத்தில் வாழ்க்கைக்கே முக்கியமானதையும் இழக்கச் செய்யும்.

குடும்பம், நட்பு, வியாபாரக் கூட்டு, பொது ஸ்தாபனம் ஆகியவற்றில் கடமைக்குரிய (frankness) வெளிப்படையான பழக்கமில்லாவிட்டால், வாழ்க்கையில் சௌகரியங்களை இழக்க

நேரிடும் சமயத்தில், அதிர்ஷ்டத்தையும் இழக்க வேண்டி வரும்.

கண் திறந்து பார்த்தால் வாழ்வின் ஜீவன் தெரியும்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--4, பக்கம் 202.

 

ஜீவன் முழுவதும் ஆர்வமாகப் பெற்ற ஞானத்தால் தான் விருப்பப்படுவதை அடைய முடியுமென்றால் இன்று நாமுள்ள நிலையை நாம் எப்படி எய்தினோம், இதுவரை நமக்கு நடந்த நல்லவைகள் எப்படி கிடைத்தன எனில், அதுவும் நாம் நம் ஆர்வத்தால் பெற்றதே என்றாகும். இதுவரை நாம் பெற்ற அதிர்ஷ்டம், வெற்றி, பேறு, சிறப்பு, புகழ் ஆகியவை நாம் நம் ஜீவனின் முழுமையால் ஆர்வமாக முயன்று பெற்றதென அறிவோம். அது உண்மையானால் நமக்கு வந்த தரித்திரம் தோல்வி, துரதிர்ஷ்டம், கெட்ட பெயர் ஆகியவை எப்படி வந்தன, அதுவும் நாம் ஆர்வமாக விழைந்து பெற்றவையே என்பது ஆன்மீக உண்மை.

தன்னைப்போல் பிறர் இருக்க வேண்டும் என்பது குறுகிய மனப்பான்மை.

ஸ்ரீ அப்பா எழுதிய கட்டுரையின் தொகுப்பு.

தன்னைப்போல் பிறரை நினைக்க வேண்டும் என்பது உயர்ந்த மனநிலை என்பது வழக்கு. இது உண்மையானால் குறையான உண்மை. நல்லவன் தன்னை நல்லவனாகவும், பிறரைக் கெட்டவனாகவும் நினைக்கும் பொழுது ‘உன்னைப்போல் அவனையும் நினைக்க வேண்டும்‘ என்றால் அதுசரி. கெட்டவன் பிறரை தன்னைப்போல் கெட்டவனாக நினைக்கும் பொழுது ‘உன்னைப்போல் பிறரை நினைக்காதே‘ என்கிறோம்.

தன்னையே முழுமையாக அறியாத மனிதன் பிறரை அறிய முடியாது. சத்திய ஜீவியத்தில் மனிதன் தன்னைப் பூரணமாக அறிவான். அதேபோல் பிறரையும் பூரணமாக அறிவான். மனிதன் பிறர் வாழ்வில் கலந்து பூரிக்கிறான். சத்திய ஜீவன் பிறர் ஆன்மீக வாழ்வில் கலந்து வளர்கிறான். நல்லவன் தன்னைப்போல் பிறரை நினைப்பது சரி, கெட்டவனும் தன்னைப்போல் பிறரை நினைப்பது தவறு. நல்லவனும் கெட்டவனும் தன்னையறிந்து, பிறரையும் அறிய அன்னை ஜீவியத்தை ஏற்க வேண்டும்.

பிறர் குறை காணக் கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தை தம் குறையை மறைக்கப் பயன்படுத்தி, நூற்று ஐம்பது தலைமுறைகளானபின், தாம் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் உள்ளவர் பலர்.

பிறரைப்பற்றியே நமக்கு இப்பொழுது விசாரமில்லை. நாமே நமக்குரிய விஷயம். நம்மை நன்கு அறிய முடியவில்லை என்பதால் முதலில் பிறரை உற்று நோக்கி அதன்மூலம் நம்மை அறிய

முற்பட்டால் அது பலன் தரும். சற்று நம்மை நினைத்து, நம் வாழ்வைக் கருதுவோம். ‘நான் உயர்ந்தவன் என்னால் பலரும் நன்மை அடைகிறார்கள் என்பது என் அபிப்பிராயம். இதுவரை என்னுடனிருந்தவர்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.‘

  1. என் பக்கத்து வீடு இடிந்து பாழாகி விட்டது.
  2. எதிர்வீட்டில் ஒரு டிரைவர் வசதியாக இருந்தவன் திடீரென இறந்து விட்டான்.
  3. அதற்கு பக்கத்திலிருந்தவர் மந்திரியாகி சில வருடங்களில் இறந்து விட்டார்.

நிகழ்ச்சிகள் இதுபோல் இருக்கும் பொழுது நான் எப்படி என்னை உயர்ந்தவன் என நினைத்திருந்தேன் என்பது எனக்கேப் புரியவில்லை என்பது ஒரு அனுபவம்.

  • இது அவர் தம்மைப்பற்றி அறிந்தது.
  • இதற்குமேல் அவர் அறியாததும் உண்டு.

நம் நிலையையும், உள்ளேயுள்ள பெருமையையும் அறிவது நல்லது. நம்மையே அறியாத நாம், நம்மைப்போல் பிறரை நினைப்பது உண்மையாகாது.

செயல் சந்தர்ப்பத்தைப் பொருத்தது இல்லை.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--4, பக்கம் 90.

செயலின் ஞானம் திறமை.

வேலையைத் திறமையாகச் செய்தால் திறமை மூலமாக நேரடி ஞானம் ஏற்பட்டு மேற்பகுதியிலுள்ள ஒளியை (ஜோதியை) அதனால் அறிய முடிகிறது. மேற்பகுதி ஜோதியாக வெளிப்பட்டுத் தலை நீட்டுவதை நேரடி ஞானம் கண்டு கொண்டு அத்துடன் கீழ்ப்பகுதியை இணைக்கிறது.

சுயநலமி சுயநலத்திற்காக பிறர் பலன்பட செயல்படுவதுண்டு.

நூல் எங்கள் குடும்பம் பகுதி--2, பக்கம் 32.

 

கணவர் சுயநலமி, எதையும் தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்வார். அன்னையையும் அப்படியே எடுத்துக் கொள்வார்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--4, பக்கம் 282.

சுயநலமான குணமுள்ளவர்கள், நல்லது செய்யக் கருதி பரநலத்தை மேற்கொள்வதுண்டு. சுயநலமி பின்னர் பரநலத்தின் பேரால் தங்களை அறியாமல் சுயநலத்தை வளர்க்க முயல்வார்கள். இது நடந்தால் பரநலம் சுயநலத்தைவிட தீங்கு விளைவிக்கும்.

அகத்தின் இயலாமை புறத்தில் அநியாயம்.

நூல் அருளமுதம், பக்கம் 111.

புற நிகழ்ச்சிகள் நம் உள்ளுணர்வை பிரதிபலிப்பதாகக் கருதுவது.

புறம், அகம் ஒரு பெரிய சூழலின் பகுதிகளே. எனவே அகம், புறம் ஒன்றே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

நூல் அருளமுதம், பக்கம் 121.

ஆன்மீக அடிப்படையின்படி நாம், நாம் வாழும் சூழ்நிலையும் பிரம்மம் என்றதனால் ஆனதே. மனிதனுடைய ஊனக்கண்ணுக்கு நாம் வேறு, எதிரில் உள்ள சுவர் வேறு என்று தோன்றுகிறது. இரண்டும் பிரம்மத்தால் ஆனதே. இதுவே ஆன்மீக அடிப்படை.

தனக்குள்ள குறைகளை மனிதன் லேசாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவனது புற நிகழ்ச்சிகள் துல்லியமாக அவற்றை பிரதிபலிக்கும். புற நிகழ்ச்சிகளை கொண்டு தன்னை உணர மனிதன் ஆரம்பித்தால் அவனுக்குப் புரியாததே ஒன்றும் இருக்காது. தன்னைச் சரிவர புரிந்து கொள்பவனுக்கு பிரச்சினை இருக்க முடியாது.

நூல் அருளமுதம், பக்கம் 215.

ஆன்மீக அடிப்படையில் வெளி நிகழ்ச்சிகளும் மன நிலையும் ஒன்றே. நம் கண்ணுக்குத் தெரிவது வெளி நிகழ்ச்சி. அக உணர்வு தெரிவதில்லை. புற நிகழ்ச்சி அக உணர்வின் பிரதிபலிப்பு என்பது ஆன்மீகக் கருத்து.

நூல் அருளமுதம், பக்கம் 216.

புற நிகழ்ச்சி நம் கையில் இல்லை. அக உணர்ச்சி நம் கட்டுக்குட்பட்டது. அதை மாற்றும் திறன் நமக்குண்டு. அதைச் செய்ய முன்வருபவருக்கு வெளி நிகழ்ச்சிகள் அதே சமயத்தில் கட்டுப்படும்.

நூல் அருளமுதம், பக்கம் 283.

புற நிகழ்ச்சிகள் உனது உள்ளுணர்வையே பிரதிபலிக்கும். உள்ளத்தின் அடியில் உள்ள எண்ணங்கள் நம் அறிவுக்கு தெளிவாகப் படாவிட்டால், நாம் உள்ள சூழ்நிலையை உற்று நோக்குவோமேயானால் நம் ஜீவனின் ஆழத்தில் உள்ள இரகஸ்யங்கள் தெரியும்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--1, பக்கம் 70.

அகம் புறத்தை பிரதிபலிக்கும் நிலைகள் மூன்று. முழுச் சக்தியுடைய அகம் அதன் பிரதிபலிப்பாக புறத்தை ஏற்படுத்துகிறது. வலிமையில்லாத அகம் புற நிகழ்ச்சிகளை பிரதிபலிக்கும் பாங்குடையது. இவற்றிடையே இந்த இரண்டு அம்சங்களும் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளன.

இயலாமை பலஹீனத்தின் பலன் பெறும்.

நூல் மனித சுபாவம், பக்கம் 385.

உன்னுடைய பெரிய பலஹீனத்தை உன் வலிமையாக நீ நினைக்கலாம்.

பணமுள்ளவர் பணத்தை பலம் என நினைப்பார். எழுத்தாளர் எழுத்தை தம் சொத்து என்பார். அதுபோல் பல இடங்களில் நாம் பலம் என நினைப்பது நமக்கு வலுவைக் குறைப்பதாக இருக்கும். அதை அறியாமல் நம் ‘பலத்தை‘ வலியுறுத்தியபடி இருப்போம். காரியம் தொடர்ந்து கெடும். இதை அறிய முடிவதில்லை. எந்த இடத்தில் எதற்கு வலுவுண்டு, எந்த அளவுண்டு என்பதை இடம், பொருள், ஏவலைப் பொருத்து நிர்ணயிக்க வேண்டும்.

நூல் மனித சுபாவம், பக்கம் 407.

நிர்வாகத் திறமை இல்லாதவர் மானேஜராகப் போவது பேசத் தெரியாதவர் ஆசிரியராகவோ, வக்கீலாகவோ, அரசியல்வாதியாகவோ போவது சரியில்லை என எவரும் அடுத்தவருக்குச் சொல்ல வேண்டாம் என்றாலும் பேசத் தெரியாத வக்கீல், நிர்வாகத் திறமையில்லாத மானேஜர் பலரை நாம் அறிவோம்.

தன் குறைக்காகப் பிறரைக் குறை கூறுவது பண்பற்ற செயல் மட்டுமல்ல, அது காட்டுமிராண்டியின் பண்பு.

நூல் பேரோளியாகும் உள்ளொளி, பக்கம் 101.

நிறைவை மறந்து குறைவைச் சுட்டிக் -- குறைவை நிறைவாகப் போற்றுதல். காட்டுவது.

வாழ்வின் அடிப்படை சுயநலம், அகந்தை, மரியாதை, கௌரவம். இவற்றை நிலைநாட்ட நாம் அதிக நிறைவு பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலோருக்கு அது இல்லாததால், பிறர் குறையை சுட்டிக் காட்டுவது நிறைவைப் பெறுவதுபோல் தெரிகிறது. அதனால் வாழ்க்கையில் இது சாதாரணமாகிவிட்டது.

மனவளர்ச்சியற்றவர் சிந்திக்க நினைத்தால் தொண்டை அடைத்துக் கொள்ளும்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--4, பக்கம் 314.

சிந்தனை மூளையின் செயல். சிந்தனைக்குரியவன் (மூளையின்) ஜடத்தின் செயலால் நிர்ணயிக்கப்படுவான்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--4, பக்கம் 317.

மனத்தின் தலையாய செயல் சிந்தனையில்லை, புரிந்து கொள்வதாகும். சிந்தனையின்றி புரிந்தால் மனம் உடலை நிர்ணயிக்கும்.

தாழ்ந்தவர், பண்பற்றவரிடமும் ஊருக்குரிய சட்டங்களைப் பின்பற்றுதல் அவசியம்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--4, பக்கம் 156.

தாழ்ந்த மனிதரிடையே உயர்ந்த (மனநிலை) முறை பலன் தருவதில்லை. நம்மவரை உயர்ந்தவராகக் கொள்வதாலேயே, நம் பிரச்சினைகள் உருவாகின்றன. தாழ்ந்ததை உயர்ந்ததாக்குவதே பிரச்சினை.

பார்த்தவுடன் பிறரை தம் கோணத்தில் புரிந்து கொள்வார்கள்.

நூல் மனித சுபாவம், பக்கம் 142-143.

ஒருவரைப் புரியாவிட்டால், நாம் அவர் செயலுக்கு ஒரு காரணத்தைக் கற்பிக்கின்றோம். அது தவறாகும். அத்துடன் நிற்பதில்லை. அதை அடிப்படையாக வைத்து மேலும் நம் அபிப்பிராயம் வளர்கிறது. தவற்றுக்குமேல் தவறு உற்பத்தியாகும்.

நூல் யோக வாழ்க்கை (சுருக்கம்), பக்கம் 33.

மனிதன் தன்னைக் கொண்டு உலகத்தை அறிய முயல்கிறான். அது சுயநலத்தால் வரும் அறிவு. விலக்கான மனிதர்களும், விலக்கான நேரங்களிலும் தவிர, மனிதன், ‘நான் சரி; மற்றவர்கள் தவறு‘ என்ற கண்ணோட்டத்தையே மேற்கொள்கிறான்.

விஷயம் பெரியதானால் நாம் என்ன செய்வோம் எனக் கூற முடியாது. எவ்வளவு வருஷம் பழகினாலும் விஷயம் என எழுந்தால்தான் மனிதன் என்ன செய்வான் எனப் புரியும்.

நூல் மனித சுபாவம், பக்கம் 30.

கீழிருந்து மேலே உயர்ந்தவர்கள் மனம் ஆரம்பக் காலச் சூழ்நிலையால் இன்றும் நிர்ணயிக்கப்படுவதைப் பார்க்கலாம். இன்றைய முன்னேற்றத்திற்கு தடை.

ஒரு பரிசு, ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து இன்று செல்வம் பெற்றவர், இருப்பதில் மலிவான பரிசு கடையிலுள்ளதில் விலை குறைவாகப் பொருள் வாங்குவதைக் காணலாம். பழைய மேஜை, பழைய சைக்கிள், பழைய பொருள்களையே வாங்கிப் பழக்கமானவர்கள் சமூகத்தில் உயர்ந்து வந்தபின் அந்தப் பழக்கங்களை விட்டுவிடுவார்கள் அல்லது மறைத்து விடுவார்கள்.............

போட்டியிடத் திறமையற்றவரை நல்லவர் என்பதுண்டு.

நூல் மனித சுபாவம், பக்கம் 415.

பிறருக்கு உழைப்பது சேவை, தாராள மனப்பான்மை, அது உயர்ந்தது. திறனில்லாதவரை அனைவரும் வேலையிடுவார்கள். மறுக்க முடியாமல் செய்ய வேண்டியிருக்கும். அது இயலாமை.

இது இரண்டும் போக வலிமையற்றவன் தன் இயலாமையை அறியாமல் பிறருக்கு உழைக்கும் இலட்சியத்தை ஏற்றால் பூர்த்தியாவது இலட்சியமில்லை. தன் இயலாமையே பூர்த்தியாகும்.

காலத்திற்கும் அதை இலட்சியமாகவே எண்ணி மகிழ்பவருண்டு.

அடுத்த தலைமுறைக்கு அறிவு அதிகம்.

நூல் நூறு பேர்கள், பக்கம் 379.

படித்த குடும்பம் அடுத்த தலைமுறையில் படிக்கும் திறன் பெற்று, படிப்பை அதிகமாக ஏற்கிறது. அடுத்த தலைமுறை படிப்பைப் பொறுத்தவரை பக்குவம் பெற்றதாகும்.

படித்த குடும்பம் அடுத்த தலைமுறையில் தன்னை ஈன்றெடுக்கிறது எனலாம்.

அன்பான வீட்டில் பிறக்காதவர் ஆர்பாட்டமான செயலையும் அனுபவிப்பர்.

நூல் குடும்பம், பக்கம் 92.

வீட்டில் எவரும் அன்பு செலுத்தாவிட்டால் ஆஸ்பத்திரிக்குப் போக மனம் விழைவதுண்டு.

ஒரு சிறுவனுக்கு வயிற்றுப் போக்கு அதிகமாகி இன்னும் ஒரு நாள் தாங்காது என்ற நிலைக்கு வந்து விட்டான். தானே சரியாகும் என்றார் தகப்பனார். வீட்டில் பொருட்படுத்துபவர் எவருமில்லை.

எதிர் வீடு, பக்கத்துவீடு, அந்தத் தெருவில் உள்ள அத்தனை பேரும் மாமா, சிற்றப்பா போன்ற உறவினர்கள், எவரும் எட்டிப் பார்க்கவில்லை. வீட்டிற்கு யாரோ வந்த புதிய மனிதர் பையனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அந்தத் தெருவிலுள்ள 30, 40, பேரும் நகரத்திற்கு வந்து பையனை விசாரித்தனர். ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் கவனிக்கிறார்கள் என்று ஆழ்ந்து அறிவதால், புறக்கணிக்கப்பட்டவர் மனம் எப்படி ஆஸ்பத்திரிக்குப் போகலாம் என நினைப்பதுண்டு.

ஒருமுறை போனால் மீண்டும் போக மனம் நினைக்கும்.

படித்தால் விபரம் தெரியும், அனுபவம் வாராது.

படித்ததை மனம் ஏற்று பக்குவப்படுவது அனுபவம்.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--1, Point No.127.

கல்வி மனிதனுடைய பழக்கத்தையும், நடத்தையையும் மாற்றும். அனுபவம் சுபாவத்தை மாற்றப் பெரிதும் உதவும். நடத்தையை மாற்றும் கல்வி சுபாவத்தை மாற்றும் அனுபவம். கல்வி அறிவை வளர்ப்பது. அறிவு பழக்கத்தையும், நடத்தையையும் நிர்ணயிப்பது. எனவே கல்வி உயர்ந்தால் பழக்கமும், நடத்தையும் உயரும். கல்வியால் விவரம் தெரிவதால் மூட நம்பிக்கைகளும், பயமும் குறையும். தெளிவும் ஏற்படும். அதற்குரிய நல்ல பழக்கமும், நடத்தையும் ஏற்படும். இன்று நமக்கு 40 வயதானால் நம்முடன் சிறு வயதிலிருந்து பழகிப் பிடிக்காமலிருப்பவர்கள், 5-ஆம் வகுப்புடன் நிறுத்தியவர்கள், 8-ஆம் வகுப்போடு விட்டவர்கள், S.S.L.C. முடித்தவர்கள், B.A., படித்தவர்கள், M.A., படித்தவர்கள், டாக்டர், இன்ஜினீயர் ஆகியவரை நாம் நினைவுபடுத்திப் பார்த்தால் படிப்பு உயரும் பொழுது பழக்கமும், நடத்தையும் பொதுவாக உயர்வதைப் பார்க்கலாம்.

நம்மைவிட அதிகப் படிப்புள்ளவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பழக்கத்தில் அதற்குத் தகுந்தாற்போல் மாறியுள்ளது தெரியும். இதற்குப் பொது விதிவிலக்குண்டு. அறிவு மனநிலையை மட்டுமே உயர்த்தும். உணர்வு நிலையை அறிவு அதிகமாகத்

தொடாது. அதனால் சுபாவம் உணர்வு மூலம் செயல்படுவதால் சுபாவத்தைப் படிப்பு அதிகமாக பாதிக்காது. படித்தும் சுபாவம் மாறாதவர்களைப்பற்றி நாம் பலவாறு கேள்விப்படுகிறோம்.

M.A., படித்தவர் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுகிறார். படித்து என்ன பயன்?

பேராசிரியராக இருக்கிறார். கடன் வாங்கத் தயங்குவதில்லை. இவ்வளவு படிப்பும், கடன் வாங்கும் பழக்கத்தை மாற்றவில்லை.

சுயநலமி என்று இவனைச் சிறு வயதிலேயே அறிவோம். எல்லாப் பட்டங்களும் பெற்றபின் அப்படியே இருக்கிறான். அதில் மாற்றமில்லை.

கருமித்தனம், பொறாமை, எரிச்சல், சந்தேகம், ஆசைபோன்ற சுபாவங்கள் படிப்பால் அடிப்படையில் மாறுவதில்லை. ஓரளவு வெளிப்படுவதில் குறையும். சிறுவயதிலேயே பெரிய உத்தியோகத்திற்குப் போனவர்கள் தகப்பனாருடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். வாழ்க்கையில் அடிபட்டவர்கள், அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், பொறுப்பான ஸ்தாபனங்களில் வேலை செய்பவர்களை பத்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், அவர்கள் சுபாவம் பெரிய அளவு மாறியது தெரியும்.

விளையாட்டுத்தனமாக 28 வயதுவரை இருந்தவர்களுக்கு பொறுப்பு வந்திருக்கும். சுயநலமாக மட்டுமே செயல்பட்டவர் சுயநலம் காரியத்தைக் கெடுத்துவிடும் என்று புரிந்து கொண்டிருப்பார். ஓட்டைவாய் என்று பெயர் வாங்கியவர்கள் விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள கற்றுக் கொண்டிருப்பார்கள். கருமியாக இருந்தவர்கள் ஓரளவு மாறியிருப்பார்கள். இவர்களை அறிந்தவர்கள் எப்படி இவ்வளவு மாற்றம் வந்தது என்று நினைப்பார்கள். அடிப்படையான சுபாவம் மாறாது என்றாலும் அனுபவம் சுபாவத்தை மாற்ற உதவும். கல்வி பழக்கத்தையும், நடத்தையையும் மாற்ற உதவும். கல்வியும், அனுபவமும், சேர்ந்த இடத்தில் நல்ல மாற்றங்களிருக்கும்.

அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்வில் பத்து அல்லது இருபது

வருடத்தில் கிடைக்கும் பலன் ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கிடைக்கும். வாழ்க்கையில் கிடைக்காத நல்ல மாற்றங்கள் அன்னையிடம் கிடைக்கும். அன்னை நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்தால் பெரிய மாற்றங்கள் சுபாவத்திலும், நடத்தையிலும் காணலாம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் பார்த்தவர், எப்படி இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டது? பழைய நண்பரைக் காணோம். நீங்கள் புதிய மனிதராகி விட்டீர்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. அன்னை மனிதர்களை மாற்றிவிடுவாரோ, ஆச்சரியமாக இருக்கிறதே என்பதை நாம் அடிக்கடி கேட்கலாம். கல்வி, அனுபவம், பதவி, செல்வம், செல்வாக்கு மனிதனை உயர்த்தும், மாற்றும். அன்னையை வழிபட்டால் அத்தனையும் சேர்ந்து உயர்ந்த அளவில் கிடைக்கும் என்பதை அன்பர்கள் தங்கள் சொந்த வாழ்விலும், பிறர் அனுபவத்திலும் கண்டுள்ளீர்கள். ஜடமான புத்திக்கு சூட்சுமம் புரியாது, நேரடியாகக் கூற வேண்டும்.

ஆச்சரியம் அறியாமைக்குரியது.

நூல் யோக வாழ்க்கை விளக்கம், Point No.311.

ஞானத்தைப் பெற்ற பொழுது ஞானோதயம் என்ற உணர்வு ஏற்படுவதுபோல், கண்மூடியாக வாழ்பவன் கண்ணைத் திறந்த பொழுது ஆச்சரியப்படுகிறான்.

படிக்காதவர்கள் வயது வந்த பிறகு நமக்கெல்லாம் தெரிந்த சாதாரண விவரங்களை முதன்முறையாக அறிந்த பொழுது அவர்கள் மனதில் உற்பத்தியாகும் ஆச்சரியம் மேதைகள் புதியவற்றைக் கண்டுபிடித்தவுடன் காணும் ஆச்சரியம் போன்றதாகும்.

மணி என்ன? என்று கேட்டவருக்குப் பையன் கடிகாரத்தைப் பார்த்து ரேடியோ டைம் 8.32 என்றவுடன் அவர் ரேடியோவும், கடிகாரமும் புதியதாக வாங்கினாயா என்று கேட்டாராம்.

ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்துக் கொள்பவர்கள் டாக்டர் சொல்லிய physiological functions உடற்கூற்றின் விவரங்களை அனைவரிடமும் திரும்பத் திரும்பச் சொல்வது, கம்ப்யூட்டர் வந்தவுடன் அது வேலை செய்வதை ஆயிரம் முறை விளக்கிச் சொல்வது, வக்கீல் உன் கேஸ் இந்த சட்டப்படி இந்தவிதமாக ஜெயிக்கும் என்று சொன்னதைப் பலரிடமும் புது உணர்வுடன் விளக்குவது போன்றவற்றை நாம் அறிவோம்.

படிப்பறிவில்லாத நாட்டுப்புற மக்கள் முதலில் சென்னையில் பெரிய வீடு வாங்கிக் குடி வந்தால், அவர்களுக்குப் பஸ்ரூட் ஓர் அதிசயம். modern shower பாத் ரூம் ஷவர் ஓர் அற்புதம், ஷாம்பு, கிரீம் போன்றவற்றை ஆச்சரியத்துடன் தெரிந்து கொள்வார்கள். முதலில் போர் கிணறு போட்டவர், முதன்முறை விமானத்தில் சென்றவர், முதன் முதலாகப் பாங்கில் கணக்கு வைத்தவர், தொழில் ஆரம்பித்தவர், இதுபோல் பேசுவதைப் பார்க்கலாம். கல்வி இலாக்காவில் உயர் ஆபீசராக இருந்தவர் தம் பழைய நண்பன் இன்று கவர்னராக இருப்பதால் அவருடன் ராஜ்பவனில் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு திரும்ப வந்து தம் எல்லா நண்பர்களையும் சந்தித்து ராஜ்பவன் அமைப்பை விளக்கினார்.

ஒரு வகையில் இது நமக்கு கேலியாக இருந்தாலும் நாமும் புது விஷயத்தை அறியும்போது இப்படித்தான் ஆச்சரியப்படுகிறோம் என்று அறிவது நல்லது. இதனுள் பொதிந்துள்ள உண்மை ஒன்று:-

ஞானம் உதயமானாலும் புதியதாக ஒரு வார்த்தை கற்றுக் கொண்டாலும், புதியதாக எதை முதன்முறை அறிந்தாலும், ஞானோதயம் ஏற்பட்ட பொழுது ஏற்படும் அதே ஆச்சரிய உணர்வுதான் மனதில் எழும். உயர்ந்த நிலைக்கும், தாழ்ந்த நிலைக்கும் உள்ள பொது உணர்வு ஆச்சரியம்.

அடுத்த நிலையை அறிந்தால் மனம் ஆச்சரியத்தால் விரிவடைகிறது.

நூல் பொன்னொளி, பக்கம் 23, 24.

புத்தியை பகவான் ஸ்ரீ அரவிந்தர் அறியாமையின் கருவி என்கிறார். அகந்தை அர்த்தமற்றது என்றால் புத்திக்குப் பூரணமில்லை என்கிறார். புத்தியை பயன்படுத்தவில்லை எனில் பூரண மந்தம் மனதை ஆட்கொள்ளும் என பயப்படுகிறோம். ஐம்பது ஆண்டு தவமுயற்சியால் சித்தி பெற்று அடைய முடியாத உச்சகட்ட மௌனத்தை ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கும், மற்றொருவருக்கும் அவர்கள் கேட்காமல் கொடுத்து அருளினார். தம் தலையில் அற்புதம் நடப்பதாக அன்னை உணர்ந்தார். தாம் படித்த பதினாயிரம் புத்தகங்களுடைய படிப்பு கரைந்து புத்திக்கு விடுதலை அளிப்பதைப் பார்த்தார். 10000 வருஷமாக சிருஷ்டிக்கப்பட்ட மனித மனத்தின் அஸ்திவாரங்கள்

ஒவ்வொரு மனிதனுக்கு புத்தியாக அமைந்துள்ளதை அறிந்தவர் அன்னை. அவை வீறல் விட்டன. அன்னை பொறுமையாக இருந்தார். வெடித்து விழுந்தன. அன்னை நன்றி செலுத்தினார். அன்னையின் புத்தி அதன் அறியாமையிலிருந்து விடுபட்டு அகண்ட மௌனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டது.

அடுத்தவர் தம் மனம் மடைமையின் இருப்பிடமாக அறிந்து வீறென்று குரல் எழுப்பி அறிவை இழந்து இருளில் தள்ளப்படுகிறேன் என்று கூக்குரலிட்டார். பகவான் கொடுத்த அத்தனையும் விலகியது. ஸ்ரீ அரவிந்தரிடம் நேரடியாக வரம் பெற்ற பேரறிஞர் நிலையிது.

சாதாரண மனிதனால் அகந்தையை விட முடிவதில்லை. அதை விட்டாலும் புத்தியை விட்டொழிக்க முடிவதில்லை. அவனால் கண்டதையே நம்ப முடியும். அவனுக்கு காணாத ஒன்றை ஏற்றுக் கொள்ளும் திறனில்லை.

நூல் புண்ணிய பூமி, பக்கம் 35.

முதல்முறையாக 1970-இல் அன்னையைத் தரிசிக்க வந்த ஒருவர் பொது தரிசனத்தில் அவரைக் கண்டு பிரமித்துப் போய் மறுநாள் அவருடைய படம் ஒன்றை வாங்க வந்தார்.

அன்னைக்கு அப்பொழுது வயது 93. வந்தவருக்கு அன்னையின் படத்தைக் கொடுத்தவுடன் அதை அவர் வாங்கிக் கொள்ளாமல் எனக்கு மதர் படம் வேண்டும் என்றார். கொடுத்த படத்தில் அன்னையின் வயது 80. அவருக்கு கோபம் வந்து என்னை ஏமாற்றுகிறீர்களா என்று கேட்டார்.

அங்கிருந்து படம் விற்கும் மற்ற எல்லா இடங்களுக்கும் சென்று அன்னையின் படம் கேட்டு வயதானவரைப் படத்தில் பார்த்துவிட்டு, ‘இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. எவரும் உண்மையைச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். நான் நேற்று 25 வயது அன்னையைக் கண்டேன். அவர் படம் கேட்டால் 80 வயதுள்ளவருடைய படத்தைத் தருகிறார்கள்‘ என்று விரக்தியாகப் பேசினார்.

உடனே அன்னையின் சிறுவயது படத்தைக் காட்டினார்கள். அவர் அதிகமாக மகிழ்ந்து போய் இவர்தான் நான் நேற்று தரிசனத்தில் கண்டவர். சூட்சும பார்வை உள்ளவர் அவர். அவருக்கு அன்னை தரிசனம் தந்து 7,8 நிமிடங்களும் இளவயதாக தோன்றியிருக்கிறார்கள்.

எவரும் தன்னால் சாதிப்பதாக மடையன் நினைக்கிறான்.

மடையனுக்குரியது நன்மை.

தீவிரமான மடமைக்கு மடமைக்குரிய தீவிரப் பலனளிக்கும். தீவிரத்தின் பலனிருக்காது.

எதிர்பார்ப்பு தேடுவது மடமை.

நூல் ஆயிரத்தில் ஒருவர்.

இந்த புத்தகத்தில் ஸ்ரீ அப்பா அவர்கள் கட்டுரை எண் 20-இல் ‘அறிவுடமை‘ என்ற தலைப்பில் மிக விரிவாக மேதைகளின் அறிவிலித்தனத்தையும் அறியாமை, மற்றும் அறியாமையால் மடத்தனமாக நடக்கும் விஷயங்களை மிகத் தெளிவாக விரிவாக எழுதியுள்ளார்.

நூல் நூறுபேர்கள், பக்கம் 243.

மடமையின் மகத்துவம் என்று எழுதியுள்ளார்.

அதிலிருந்து சில குறிப்புகள்.

மடமை செயல்படும் வகையறிய மேதையின் அறிவு தேவை. அந்த மேதையாலும் சொந்த அறியாமையை உணர முடியாது. தன் மடைமையை அறிய ஆத்ம ஞானம் வேண்டும். ஆத்மாவை அறிய உதவும் ஞானமும், மடமையை அறிய உதவாது. ஜீவனை முழுமையாக அறிந்தால் அதனுள் பட்ட மடமை புரியும்.

மேதையின் அறிவு சொந்த மடமையை அறியாது.

மனிதனை இறைவனாக்கும் மகத்துவம் மடமைக்குண்டு.

தேவையில்லாவிட்டாலும் நன்றி தெரிவிப்பது நல்லது.

நூல் அருளமுதம் Point No.28 நன்றியறிதல்.

நன்றியுணர்வு மனிதனுடைய பண்புகளில் சிறந்த ஒன்று. இதன் சிறப்பு மென்மை,

மிருதுவான குணமும் மென்மையான சுபாவம் உடையவர்களுக்கு இயல்பாக அமைவது

நன்றியுணர்வு. நன்றி என்று பொதுவாக நாம் அறிந்தது பிறர் செய்த உதவிக்குப் பிரதிபலனாக மனம் கனிந்து இனிப்பதையே நன்றியுணர்வு என்று நாம் சொல்கிறோம். மேலை நாட்டில் ‘Thank you‘ என்று சொல்வது போன்ற பழக்கம் நம் நாட்டில் இல்லை. சொல்லால் நம் நன்றியை தெரிவிக்கும் பழக்கம் நம் நாட்டில் இல்லை.

முதுமை விரும்புவது பழமை.

முதுமை புதுமையை நாடாது.

நூல் யோக வாழ்க்கை விளக்கம் பகுதி--4, பக்கம் 244 (Point No.714).

ஒரு நிகழ்ச்சியை கொண்டு அடுத்த நிகழ்ச்சியைப் புரிந்து கொள்ள முயல்வது மடமை,

அறியாமை, அறிவீனம். முதியவர்கள் தங்கள் இளமைப் பருவத்தைக் கொண்டு இளைஞர்களைப் புரிந்து கொள்ள முயல்கின்றனர்.

காலம் மாறினால் கணக்கு தப்பாகும்.

காலம் மாறினால் பழக்கம் மாறும். இடம் மாறினால் பண்பு மாறும். நாடு மாறினால் பழக்கம் மாறும். முதியவர் இளைஞரை தம் இளம்பிராயப்படி கணித்தாலும், இளைஞர் வயோதிகரை இன்றைய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முயன்றாலும், அவர்கள் கணக்கு தவறாகும்.

வயதானவர்கள் சிறுவர்கள், இளைஞர்களைப்பற்றி சொல்லும் குறைகள் ஏராளம்.

அவற்றுள் ஒரு சிறிய பகுதி மேற்சொன்னபடி இருக்கும். 40, 50, 60, 70 வயதானவர்களுடைய உடை, முடியலங்காரம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மாறுபட்டிருக்கும். சற்று யோசனை செய்தால், அல்லது அவர்களை விசாரித்தால், அல்லது வயதால் உங்களுக்கு இவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது வந்த புதுபாஷன் நினைவிருந்தால், ஒவ்வொருவரும் அவர்கள் காலத்துப் பாஷனை ஏற்றுக் கொண்டு, இன்றுவரை மாற்றாமல் பின்பற்றுகிறார்கள் என்பது தெரிய வரும். தாம் சிறுவயதில் ஏற்றுக் கொண்டதை மாற்ற முடியாதவர்கள் இன்று இளைஞர்கள் இன்றைய பாணியை ஏற்றுக் கொள்வதில் குறை காண்பது சரியில்லை என்பதை உணர்ந்தால், பல குடும்பங்களில் இத்தலைப்பால் ஏற்படும் சச்சரவு மறையும்..............

இன்று முதியவர்கள், இளைஞர்கள் போக்கு சரியில்லை என்கிறார்கள். சற்று யோசனை

செய்தால், அதன் பகுதிகள் பல.

  1. முதியவர்கள் பழக்கப்படி இளைஞர்கள் சரியில்லை என்பது முதற்பகுதி.
  2. சரியில்லை, தவறு தவறுதான் என்பது அடுத்த பகுதி.
  3. இளமையில் சரியில்லாதவர் பிறகு சரியாகிவிடுவதுண்டு.

 

  1. இன்று 60 அல்லது 70 வயதானவர்கள் இளைஞர்களின் போக்கு சரியில்லை என்றால் தம் 10, 15-ஆம் வயதை சிந்தித்துப் பார்த்தால், அன்றைய முதியவர்கள் கண்ணோட்டத்தில் அவர் எவ்வளவு சரியாக இருந்தார் எனக் கருதினால் அன்று அவரிருந்ததுபோல் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
  2. எந்தக் காலத்திலும், எந்த நாட்டிலும் மறுக்க முடியாத தவறுகள் உண்டு. காலம் மாறும். நேரம், இத்தவறுகளை மறைவாகச் செய்ய முனைதல் மனித இயல்பு. அவர்கள் சாதுரியமான சாமர்த்தியசாலிகள். அவர்களை நாம் முந்தைய நிலையிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும்.
  3. இளமையின் துடிப்புக்கு சரி, தவறு என்று புரியாது. ஆசைசரி என நினைக்காத பண்பான குடும்பம் இத்துடிப்புக்கு இடம் தாராது. சாதாரணக் குடும்பத்து நல்ல இளைஞர்கள் ஆடி, ஓடி, ஓய்வது வழக்கம். 60 வருஷத்திற்கு முன்னும் அந்த ஆட்டம் இருந்தது, என்றுமிருந்தது, இன்னுமுண்டு. இதைத் தவறு என நினைப்பது தவறு. அன்றைய ஆட்டம் சிறியது. இன்று அதிகமாக இருக்கிறது. சிறியதும், பெரியதும் ஓய வேண்டியதுதான். நமக்கு அது ஓயும்வரை பொறுமை வேண்டும்.

இந்த மூன்று நிலைகட்குப் பொதுவானதென்ன?

காலத்தாலும், வயதாலும் சரி, தவறு என்பவை நிர்ணயிக்கப்படுவதில்லை. என்றும் எக்காலத்திற்கும் சரி என்பதுண்டு, தவறு என்பதுண்டு. அந்தப் பாகுபாடு நமக்கில்லை.

நாம் காலத்தை ஒட்டிப் போகிறோம். காலத்திற்குரிய மொழியைப் பேசுகிறோம். Being,becoming, being of the becomingவாழ்வு, துறவறம், இல்லறத்தில் துறவறம் என்ற மூன்று நிலைகளில் மனிதன் வாழ்வை ஏற்கிறான். ரிஷி துறவறத்தை நாடி இல்லறத்தை உதறுகிறார். இல்லறத்தில் துறவறம் என்பது வாழ்வனைத்தும் யோகமாகும். அது ஸ்ரீ அரவிந்தம். வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஸ்ரீ அரவிந்தம் கூறும் மனப்பான்மையிருந்தால், இத்தவறு வாராது. தாயன்பு அத்தகையது. அங்கு தவறு எழுவதில்லை. ஊர் மெச்சிக் கொள்ள தாய் மகனைப் பாராட்டுவது சிறுமை. அதில் எல்லா தவறுகளும் எழும்.

தாயன்பு என்பது கனிவு

ஆசை கடுமையில் முடியும்.

-----



story | by Dr. Radut