Skip to Content

08. Pride and Prejudice - கர்வம், தப்பபிப்பிராயம்

Pride and Prejudice

கர்வம், தப்பபிப்பிராயம்

(சுமார் 200 ஆண்டுகட்கு முன் ஜேன் ஆஸ்டின் என்ற பெண் எழுதிய ஆங்கில நாவல். பணம் படைத்தவருடைய கர்வமும், அவரைத் தவறாகப் புரிந்து கொண்ட பெண்ணின் அபிப்பிராயமும் மோதுவதே கதை. பணமில்லாத அப்பெண் மீது அவருக்கு ஏற்பட்ட பிரியம் முடிவில் நிறைவேறியதைக் கருவாகக் கொண்ட கதை. நாட்டில் சமூக அமைப்பு மாறுவதைப் படம் பிடிப்பதால் இது மேலும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.)

Mr. பென்னட்டிற்கு ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி, லிடியா என 4 பெண்கள். அவர் லாங்பர்ன் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அவ்வூருக்கு நெதர் பீல்ட் என்ற இடத்திற்கு பிங்லி, டார்சி என இரு செல்வர்கள் 5, 6 பெண்களுடன் வருகிறார்கள். ஊரில் உள்ள பலரும், இந்த 5 பெண்களும் பிங்லிவீட்டு நடனத்திற்கு வருகிறார்கள். நடனமாடும்பொழுது பிங்லியும், ஜேனும் நெருங்கி வருவதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசுகிறார்கள். எலிசபெத்துடன் நடனமாட டார்சி மறுத்ததால் அவளுக்கு கோபம் வருகிறது. டார்சிக்கு எலிசபெத்தின் மீது தம்மை மீறிய பிரியம் கட்டு மீறி எழுகிறது. தொடர்ந்திருந்தால் பிங்லிக்கும் ஜேனுக்கும் திருமணமாகும் என்பதால் அதைத் தவிர்க்க டார்சி அவ்வூரை விட்டுப் போக ஏற்பாடு செய்கிறார், புதியதாக வந்தவர்கள் அனைவரும் போய்விட்டனர்.

அவ்வூருக்குப் பக்கத்தில் இராணுவ முகாம் வருகிறது. அங்குள்ள ஆபீசர்கள் ஊரில் பலருடனும் நெருங்கிப் பழகுகிறார்கள். எல்லா வீடுகட்கும் விருந்திற்கு வருகிறார்கள். அவர்களுள் விக்காம் என்பவர் மிக அழகானவர். அழகாகப் பழகுபவர். எலிசபெத்திற்கு அவர் பழக்கம். அவர் டார்சியின் பால்ய நண்பர். தம் வாழ்வைக் கெடுத்தவர் டார்சி, தமக்கு சேர வேண்டியதை மறுத்தவர் என்று எலிசபெத்திடம் கூறுகிறார். எலிசபெத்திற்கு அவருடைய அழகு மனதை மயக்குகிறது.

பென்னட்டிற்குப் பிறகு அவர் எஸ்டேட் காலின்ஸ் என்பவருக்குப் போகும். அவர் எலிசபெத்தை மணக்க விரும்புகிறார். தாயார் பிரியப்படுகிறார். பெண் மறுத்துவிடுகிறாள். சார்லேட் என்பவர் 27 வயதான பெண். சர் பட்டம் வாங்கியவர் மகள். பணமில்லை. காலின்ஸ் அவரை மணக்கிறார். டார்சியின் சின்னம்மா பெரிய பணக்காரி. அவளுடைய ஆதரவில் காலின்ஸ் பாதிரியாராகக் கென்ட் என்ற இடத்திலிருக்கிறார். எலிசபெத் சார்லேட்டுடன் கென்ட்டிலிருக்கும் பொழுது டார்சி சின்னம்மாவைப் பார்க்க வருகிறான். எலிசபெத்தைச் சந்தித்து தன்னை மணக்க வேண்டும் என்கிறான். அவள் கோபமாக, "என் தமக்கை திருமணத்தை தடை செய்தாய், விக்காமிற்கு அநியாயம் செய்தாய், நான் எப்படி உன்னை மணக்க முடியும்?" என்று மறுக்கிறாள்.

பதில் சொல்ல முடியாமல் திணறும் டார்சி தன் பதிலை கடிதமாக எழுதுகிறான். தான் திருமணத்தை தடை செய்ததை ஒப்புக் கொண்டு, எலிசபெத் குடும்பம் தாழ்ந்தது என்பதால் செய்ததாகக் கூறுகிறான். விக்காமிற்குத் தான் கெடுதல் செய்யவில்லை எனவும், விக்காம் தன் தங்கையை கடத்த முயன்றதையும் எழுதுகிறான். எலிசபெத்திற்கு யோசனை எழுகிறது. ஆனால் டார்சியை ஏற்க மனம் வரவில்லை. மீண்டும் தன்னூர் திரும்புகிறாள்.

எலிசபெத்தின் சிற்றப்பா கார்டனர் தாம் முன்னிருந்த லாம்டன் என்ற ஊர் வழியாக டூர் போக இருப்பதால், எலிசபெத்தையும் அழைக்கிறார். லாம்டன் டார்சியின் ஊர். அவர் அரண்மனை பெம்பர்லி. சின்னம்மா Mrs. கார்டனர் எலிசபெத்துடன் வருகிறார். லாம்டன் வந்தவுடன் பெம்பர்லிக்கு போகலாமா எனக் கேட்கிறார். டார்சி இல்லை எனத் தெரிந்து கொண்டு எலிசபெத் சம்மதிக்கிறாள். வீடும், எஸ்டேட்டும் பிரமாதமாக இருக்கிறது. Mrs. ரெனால்ய்ஸ் வீட்டு மானேஜர். டார்சி நல்லவர் என அவர் மூலமாக அறிகிறார். லாம்டன் ஹோட்டலில் விக்காமைப் பற்றி கேள்விப்பட்டதெல்லாம் தவறான செய்திகள். பெம்பர்லியை விட்டு வரும்பொழுது டார்சி தற்செயலாய் சந்திக்கிறார். பிரியமாகப் பேசுகிறார். மறுநாள் தம் தங்கை ஜார்ஜியானாவை ஹோட்டலுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறார்.

எலிசபெத்திற்கு ஜேனிடமிருந்து லிடியா விக்காமுடன் ஓடிப் போனதாக சேதி வருகிறது. பின்னாலேயே டார்சி பெம்பர்லிக்கு எலிசபெத்தை அழைத்துப் போக வருகிறான். அவள் நிலையிழந்திருக்கிறாள். லிடியாவைப் பற்றிய செய்தியை டார்சியிடம் சொல்லிவிட்டு டூரை ரத்து செய்து சித்தப்பா, சின்னம்மாவுடன் ஊர் திரும்புகிறாள்.

சிற்றப்பா வருமுன் அப்பா லிடியாவைத் தேடி இலண்டன் போயிருக்கிறார். சிற்றப்பா லண்டன் போய் தகப்பனாரை திருப்பி அனுப்பிவிட்டு லிடியாவை கண்டுபிடித்து, £ 5000 கொடுத்து விக்காமை திருமணம் செய்ய சம்மதம் செய்து, அண்ணனுக்குக் கடிதம் எழுதுகிறார். திருமணமாகி லிடியாவும் விக்காமும் ஊர் திரும்புகின்றனர். லிடியா பேசும்பொழுது டார்சி திருமணத்திற்கு வந்ததாகக் கூறுகிறாள். எலிசபெத் கார்டனருக்கு எழுதி விவரம் தெரிந்து கொள்கிறாள். டார்சி லண்டனில் வந்து விக்காமைக் கண்டு, பணம் கொடுத்துத் திருமண ஏற்பாடு செய்து வேலை வாங்கிக் கொடுத்ததை எலிசபெத் அறிகிறாள். விக்காம் போய்விடுகிறான்.

ஒரு நாள் காலையில் டார்சியின் சின்னம்மா காதரீன் எலிசபெத் வீட்டிற்கு வந்து ஊரெல்லாம் பேசுவது உண்மையா எனக் கேட்கிறாள். காரசாரமான வாதம் நடக்கிறது. டார்சியை மணக்கமாட்டேன் என உறுதி கேட்கிறாள் காதரீன். எலிசபெத் மறுக்கிறாள். காதரீன் லண்டனில் டார்சியைப் பார்த்து எவ்வளவு நன்றி கெட்ட பெண் எலிசபெத் எனக் கூறுகிறாள். தம் மகளை டார்சி மணக்க ஏற்பாடு செய்ததை எலிசபெத் கலைத்தது காதரீனுக்குக் கோபம். எலிசபெத் தன்னை மறுக்கவில்லை என்பதை காதரீன் மூலம் அறிந்த டார்சி நேரே அவள் ஊருக்கு பிங்லியுடன் வந்து அவளை மணக்கிறான். பிங்லி ஜேனை மணக்கிறான்.

*****



book | by Dr. Radut