Skip to Content

07. பகுதி - 7

 

அண்ணன் - இரு தலைப்புகளாகப் பிரித்துச் சொல்கிறேன்.
 
 
கதை
 
நம் வாழ்வு
1
புரட்சியை விலக்க முடியும்.
நஷ்டம், ஆபத்து, கஷ்டத்தை விலக்க முடியும்.
2
எலிசபெத்தின் உயர்குணம் உயர்வு பெறுகிறது.
 
மனம் செல்வத்தை உற்பத்தி செய்யும்.
3
உலகம் மாறும் நேரம் அதிர்ஷ்டம் அநேகரைத்  தேடி வருகிறது.
அன்னைச் சூழலில் அதிர்ஷ்டம்
காத்திருக்கிறது.
4
அதிர்ஷ்டத்தை அனைவரும் விலக்குகின்றனர்.
நாம் அருளை விட்டுப் போகிறோம்.
5
சார்லேட் நல்லெண்ணம் அவளுக்கு அதிர்ஷ்டம்
தருகிறது.
சார்லேட் போல் நல்லெண்ணம் மட்டும் இருந்தால் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும்.

தம்பி - முக்கியமான இடத்தைக் சுட்டிக்காட்டுங்களேன்.

அண்ணன் - எனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்ற கதை எல்லா நாடுகளிலும் இருப்பதாகத் தெரிகிறது. பரவலாக வறுமையுள்ள நாடுகளில் பொதுவான அபிப்பிராயம் இது.

நாடு வளம் பெற நாம் மனத்தால் கொள்ளும் கொள்கை உயர்ந்ததாக இருக்க வேண்டும்:- எனக்கு வரும் அதிர்ஷ்டம், அதற்குமுன் அனைவருக்கும் வரவேண்டும் என்ற உணர்வு மனதில் எழுந்தால், அது தானே வரும்.

தம்பி - அதிர்ஷ்டம் என்பதை அருளால் ஒருவர் உற்பத்தி செய்ய முடியும். அது நல்லவரால் மட்டும் முடியும் என மிகவும் வலியுறுத்திப் பல முறை சொல்லிவிட்டீர்கள். மீதி சொல்வனவெல்லாம் புரியாமலில்லை. இருப்பினும் ஏதோ ஒரு குறையிருப்பதாகத் தெரிகிறது.

அண்ணன் - விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல் எதுவும் தெரியவில்லையே என்பதுதான் குறை.

தம்பி - இருக்கலாம்.

அண்ணன் - நான் சொல்கிறேன். நீ கேட்கிறாய். கேட்டால் மனம் அறியும். விதை முளைப்பது கேட்பதால் எப்படித் தெரியும்? முளைத்தபின்தானே தெரியும். செய்ய ஆரம்பித்தால் தெரியாமலிருக்காது.

தம்பி - அதிர்ஷ்டம் வரும் என்ற தெளிவுக்கு மாற்றம் தெரியாதா?

அண்ணன் - தெளிவுக்குத் தெளிவு எழும். நம்பிக்கைக்கு மாற்றம் மனதில் தெரியும்.

தம்பி - தெளிவு இருக்கிறது. நம்பிக்கை ஏற்படவில்லை. நம்பிக்கை ஏற்படும்படிச் சொல்ல முடியாதா?

அண்ணன் - நம்பிக்கை மனிதனுக்குரியது. அருள் இறைவனுக்குரியது. இறைவனே நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்பது பொருந்தாது.

தம்பி - நான் பெற்ற தெளிவு எனக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டாமா?

அண்ணன் - நம்பிக்கையை ஏற்படுத்தாத தெளிவு, தெளிவாகாது. கருவான இடம் finite மாறி infinite ஆகுமிடம். எப்படிப் பெருகுகிறது என்பதே நம்பிக்கையை எழுப்பும் தெளிவு.

தம்பி - சிறியது பெரியதாகும். அளவுகடந்து பெருகும் என நம்புகிறேன். எப்படிப் பெருகும் என்று தெரியவில்லை.

அண்ணன் - நம் energy சக்தி அளவுகடந்து பெருகினால், பலன் - பணம் - அளவுகடந்து பெருகும். அதை விளக்கமாகச் சொல்ல முடியும்.

தம்பி - நமக்கு அபரிமிதமான energy எங்கிருந்து வரும்?

அண்ணன் - நாம் இப்பொழுது நம் திறமையில், energyஇல் 1/100 பங்கு, 1/1000 பங்குதான் பயன்படுத்துகிறோம். மற்றவற்றைச் சோம்பலில் விட்டுவிடுகிறோம்.

தம்பி -நம் energy 100 மடங்கு, 1000 மடங்கு பெருகுமா?

அண்ணன் - நம் energyயை physical, vital, mental, உடல், உணர்வு, மனம் எனப் பிரித்து அங்கெல்லாம் இப்பொழுது energy எப்படியிருக்கிறது, எப்படி அது பெருகும் எனக் கூறலாம்.

தம்பி - Eergy சக்தி பெருகுவதைக் கூறலாம். கெட்டது, நல்லதை எப்படிச் சொல்ல முடியும்? திருடனுக்கு அபாரசக்தி எதிராக இருக்கிறது. அதையும் நல்லவனுடைய சக்தியையும் எப்படி ஒப்பிடுவது?

அண்ணன் - திறமைகளை உடலுக்கு உரியவை 1 எனவும், உணர்வுக்குரியவை 10 எனவும், மனத்திற்குரியவை 100 எனவும், ஆன்மாவுக்குரியவை 1000 எனவும், அன்னைக்குரியவை 10,000 எனவும் கருதலாம். மனம், உணர்வு வருமிடங்களில் கணக்காகச் சொல்ல முடியாது. உத்தேசமாகப் பேசுவதற்குப் பதிலாக 10 அல்லது 100 என்று கூறலாம்.

தம்பி - ரூ. 7000 வருமானமுள்ள வீட்டில் இலட்ச ரூபாய் வருமானம் வருவது அதிர்ஷ்டம் என்றால் அவர்கள் சக்தி 15 மடங்கு பெருக வேண்டும் என்று கணக்காகச் சொல்வதற்குப் பதிலாக அது 50 அல்லது 100 மடங்கு பெருகும் என்பதை மனம் தெளிவாக அறிந்து கொண்டால், அதன் விளைவாக நாளைக்கு 1 இலட்சமோ, பல இலட்சமோ வருமானம் பெருகினால், நம் விளக்கம் சரி எனக் கொள்வோம்.

அண்ணன் - சுருக்கமாகப் பேசிப் பார்ப்போம். Physical (உடல்) என்பதற்கு சுத்தம், ஒழுங்கு போன்றவற்றைக் கூறுகிறோம். Vital (உணர்வு) என்பதற்குப் பேச்சு, உறவு (human relationship) போன்றவற்றைக் கூறுகிறோம். எரிச்சல், கோபம் என்பவை எதிரானவை. Minus மார்க் போடுவோம். அபிப்பிராயம் opinion என்பதை மனம் என்போம். அதுவரை Scale அளவுகோல் போடுவோம்.

தம்பி - வீட்டைச் சுத்தமாக, ஒழுங்காக வைக்க 10 அல்லது 20 மடங்கு சக்தி தேவை. அதுவே 7000த்தை இலட்சமாக்கிவிடுமே.

அண்ணன் - அதுதான் உண்மை. இந்த முறைகளைச் சரிவர அனுசரித்தால் 100 அல்லது 500 மடங்கு நம் energy பெருகும். அதையே அதிர்ஷ்டம் என்கிறேன்.

தம்பி - 100 மடங்கு என்றால் மாதம் 7 இலட்சம், 500 மடங்கானால் 35 இலட்சமாயிற்றே.

அண்ணன் - கணக்கு அப்படி வாராது.

தம்பி - பின்னே, குறைவாக வருமா?

அண்ணன் - அதிகமாக வரும். நான் விளக்கும்வரை பொறுக்க முடியாதா? வீட்டைச் சுத்தம் செய்து ஒழுங்காக வைப்பதை நாம் ஏராளமாகப் பேசியதால் அதை மீண்டும் சொல்லாமல் அதனால் சக்தி 10 மடங்கு பெருகுவதாகக் கொள்வோம். உடலுக்கு ஒன்று எனில் உணர்வுக்கு 10 என்றேன்.

தம்பி - சுத்தம் செய்வதால் 10 மடங்கு சக்தி பெருகினால், அதே முயற்சியை உணர்வால் செய்தால், அதன் பலன் 10 மடங்கல்ல அதிகம் என்றாகுமோ?

அண்ணன் - கோபம் எதிரானது. என் கோபம் கொஞ்சமானது, அதனால் அதற்கு score பாயிண்ட் -12 என்று போட்டால், நான் கோபத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் -12 மாறி "0"க்கு வருகிறது. எந்த அளவுக்குக் கோபம் வந்ததோ, அதே அளவுக்குச் சாந்தம் வந்தால் பலன் உணர்வில் 12 என்று கூறுவோம்.

தம்பி - உணர்வு, உடலைப்போல் 10 மடங்கு அதிகப் பலன் தரும் என்றால், கோபம் சாந்தமானதற்கு 12 பாயிண்டுக்கு உடல் (சுத்தம்) 120 பாயிண்டுக்கு சமமா?

அண்ணன் - சுத்தம் 10 மடங்கு உயர்ந்தது என்றோம். சாந்தம் 12 என்றோம். உடல் 10 + உணர்வு 120 ஆக "நாம்"

130 பாயிண்ட் உயர்ந்ததாக அர்த்தம்.

தம்பி - உடலுக்கு 1 எனில் அதே 1 பாயிண்ட் முயற்சி உணர்வில் எடுத்தால் உடலில் 10 பாயிண்ட் முயற்சியாகக் கொள்கிறோம். எனவே சுத்தமும், சாந்தமும் 130 மடங்கு சக்தியைக் கொடுக்கிறது என்று தெரிகிறது. 130 மடங்கு எனில் 910000. மாதம் 9 லட்சம் என்றால் அது வெறும் அதிர்ஷ்டமில்லையே, பெரிய அதிர்ஷ்டமாயிற்றே.

அண்ணன் - கொஞ்சம் பொறு, கணக்குக்கு வருவோம். மனம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் தவறான அபிப்பிராயத்துடன் நடக்கிறார். அவருக்கு அண்ணார் உதவி வசதியாக இருக்கிறது. அப்படி அவர் பெறுவது தம் வருமானமும் உதவியும் சேர்ந்து ரூ.7000 என்றால் "இனி நான் உதவி பெறப் போவதில்லை' என்று உதவியை மறுத்துச் சொந்தமாக வாழ ஆரம்பித்தால் minus மாறி plus ஆகிறது. Minus 8லிருந்து +5க்கு இவ்விஷயத்தில் அவர் மாறினால்.....

தம்பி - அந்த புரோக்கர் ஏராளமாகச் சம்பாதிக்கிறார் என்று அவர் குடும்பத்தை ஒன்றாக ரொம்ப நாள் வைத்திருந்தார். தம்பி பிரிந்து வந்தார். சண்டை என்றில்லை. சொந்தமாக வந்த பிறகு வீடு வாங்கினார். 1 பஸ் ஓடுகிறது.

அண்ணன் - மனம் என்பது உடலைப்போல் 100 மடங்கு என்றேன். +5 என்றால் நீ 500 என்று கொள்வாய். -8லிருந்து +5க்கு வந்தால் 13 பாயிண்ட் மாறியிருக்கிறார். அதாவது உடல் கணக்குப்படி 1300 ஆகும். சாந்தத்தை 12 என எடுத்துக்கொண்டோம். அது -12லிருந்து +12 எனில் 24 பாயிண்ட். உடல் கணக்கில் 240.

தம்பி - இப்படி எனில்!

அண்ணன் - ஒவ்வொரு மாறுதலுக்கு இப்படிப்பட்ட உயர்வுண்டு. ஸ்ரீ அரவிந்தர் The Mother என்ற புத்தகத்தில் மனத்திற்கு 5, உணர்வுக்கு 12, உடலுக்கு 12 என 29 பாயிண்ட்களில் நாம் தவற்றிலிருந்து நல்லதற்கு மாறவேண்டும் என்கிறார்.

தம்பி - உங்கள் கணக்குப்படி 29 எனில் எங்கோ போகிறதே!

அண்ணன் - கணக்கு என்பது பேசும் முறை. விஷயம் என்ன? நம் சக்தி அபரிமிதமாகப் பெருக ஆயிரம் வழிகள் உள்ளன.

தம்பி - ஆன்மாவுக்கும், அன்னைக்கும் ஓர் உதாரணம் சொல்லுங்கள். அது 1000மாகவும் 10,000மாகவும் சொன்னீர்களே.

அண்ணன் - நாமெல்லாம் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் சொல்வதைப் படிப்போம். அத்துடன் சரி. பிரார்த்தனை செய்வோம். அத்துடன் நம் பக்தி முடிந்துவிடுகிறது.

தம்பி - நடப்பது அருளாலும், அன்னைச் சூழலாலும் ஆகும். கொஞ்ச நாள் கழித்து அதுவும் நின்றுவிடுகிறது.

அண்ணன் - ஒரேயொரு பிரார்த்தனை பலிக்கவில்லை என்றால் அது danger signal. நம் பக்தி ஜீவனற்றுப் போய்விட்டது எனப் பொருள்.

தம்பி - ஒன்று பலிக்கவில்லை என்றால், கொஞ்ச நாளில் 9 பலிக்காது. ஒன்றுதான் பலிக்கும்.

அண்ணன் - பக்தி ஜீவனோடில்லை என்றால், பிரார்த்தனைக்கு வேலையில்லை. பிறகு எந்தப் பிரார்த்தனையும் பலிக்காது. பழைய காலத்து ஜபம் போலாகும்.

தம்பி - விஷயம் மனம் மாறுவதில்தானிருக்கிறது போலும்.

அண்ணன் - Silent will மௌனமான செயல் என்பதை மனத்திற்குரியது எனலாம். Silence மௌனம் என்பதால் ஆன்மாவுக்குரியது. 1000 மடங்கு உடலைவிட அதிகப் பலன் தருவது. இந்த ஒரே கருவியால், கோடீஸ்வரராக ஆனவர் ஒரு பக்தர்.

தம்பி - அன்னைக்குரியது எது?

அண்ணன் - Another man's point of view பிறர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது. இதைப் பின்பற்றியவர் பெற்ற பலன் 10,000 மடங்கில்லை, அதைவிடப் பெரியது. நாம் எல்லா இடங்களிலும் (உடல், மனம்) minusஇல் இருக்கிறோம். Plusஆக வேண்டும் என்றால் ஆயிரம் மடங்கு உயர வழியுள்ளது என்று அறிகிறோம்.

அதிர்ஷ்டம் வர minus இருக்கக்கூடாது.

Minus point உள்ளவர்கள் plusஆக மாறும்வரை இந்தக் கணக்கு பூஜ்யமான பலன்தான் தரும்.

தம்பி - அதிர்ஷ்டம் வர நாம் சொல்லும் முறையை இந்த வகையில் சொல்லுங்களேன்.

அண்ணன் - பிறர் வாழ சந்தோஷப்படுபவர்க்கு அதிர்ஷ்டம் தானே வரும்.

தம்பி - பிறர் அழிய நினைப்பவர் நிலை என்ன?

அண்ணன் - அதைப்பற்றிப் பேசுவதைவிட நல்லதை மட்டும் பேசுவது போதும். பிறர் வாழ விரும்புவது அன்னை வழி. அதற்கு 10,000 பாயிண்ட் மதிப்புண்டு.

தம்பி - சந்தர்ப்பத்தால் நம் தொழில் பிறர் வாழ வகை செய்கிறது. அதுவும் அதே பலனைத் தருகிறதல்லவா?

அண்ணன் - அப்படி நடந்தால்தான் நமக்கு இந்தக் கொள்கை பயன்படும். நாமாக அதைச் செய்வதில்லை.

தம்பி - பிறருக்கு உதவுவது ஆபத்து என்றும் கூறுகிறீர்களே.

அண்ணன் - வலிய பிறருக்கு உதவப் போவது வேறு, அதில் பெருமையுண்டு. நான் சொல்வது நல்லெண்ணம். இந்த வித்தியாசம் தெரியுமே.

தம்பி - அது தெரியும். நல்லெண்ணத்தால் மட்டும் செய்தால் தவறு வாராது. அதிர்ஷ்டம் வரும்.

அண்ணன் - பிறர் அழிய விரும்பும் எண்ணம் minus 1000. அதனால் பிறர் வாழ விரும்புவது அதற்கெதிரானது, அன்னைக்குரியது. 10,000 பாயிண்ட் மதிப்புள்ளது.

தம்பி - இப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் எத்தனையோ 1000 மடங்கு உயரலாம் போலிருக்கிறதே.

அண்ணன் - நடைமுறையில் நாம் எதிரான திசையில் போய்விடுவதாலும், மனமாற்றத்தை நாடாததாலும், பெரும் பலன் தெரிவதில்லை.

தம்பி - உடலுக்கு 15 தலைப்பு, உணர்வுக்கு 12, மனத்திற்கு 10 என அது வளர்ந்துகொண்டே போகிறதே.

அண்ணன் - பெரு முன்னேற்றம், அடுத்தது அதிர்ஷ்டம்.

தம்பி - அருளும், பேரருளும் அவற்றைக் கடந்தன.

அண்ணன் - செய்து பலனைக் காண்பது முக்கியம். பேசுவது பலனில்லை.

தம்பி - பணம் சம்பந்தப்பட்ட வேறு கருத்துக்கள் இருக்கின்றனவா?

அண்ணன் - பணம் பெருகும் என்பதை 3 தலைப்புகளில் கூறலாம்.

  1. மனிதச் சமூகத்தில் பணம் அவனுக்குச் செய்யக்கூடிய சேவையில் சிறு பங்குக்குக் (10%) குறைவாகவே பெறுகிறான்.
  2. சமூகமே - குறிப்பாக இந்தியாவில் - பணம் செய்யும் சேவையில் 10%தான் பெறுகிறது.
  3. புது product வந்தால் அது சமூகத்தில் பரவும்பொழுது தனி மனிதனுக்குப் பெருஞ்சேவையை செய்யும். அதை மனிதன் ஓரளவே பெறுகிறான். 

தம்பி - முழு விளக்கம் தேவை.

அண்ணன் - பணம் என்பது நாளுக்கு நாள் மனிதனுக்குப் புதிய சேவைகளைச் செய்ய முன்வருகிறது. உதாரணமாக xerox வருமுன் 100 காப்பி எடுக்கவேண்டுமானால் 100 காப்பி டைப் செய்ய வேண்டும். Xerox வந்தபின் காப்பி எடுப்பது சுலபம். செலவு குறைவு. நாம் xeroxஐப் பயன்படுத்தாவிட்டால் பழைய செலவே செய்யவேண்டி வரும். பழைய செலவு ரூ.200, புதிய செலவு ரூ.75 என்றால் நாம் புது முறையை ஏற்பதால் பழைய (வருமானம்) ரூபாய்க்கு 3 மடங்கு அதிகப் பலன் எனப் பொருள்.

தம்பி - இதுபோல் யோசனை செய்தால் தவணை முறை, credit card எனப் புதியதாக ஏராளமான முறைகள் வந்துள்ளனவே.

அண்ணன் - சீட்டுக் கட்டுவது என்பது நெடுநாளைய முறை. இதைப் பெரும்பாலோர் பயன்படுத்துகிறார்கள். இன்றும் இதை ஏற்காதவர் உண்டு. இந்த விஷயத்தைப் பொருத்தவரை அவருடைய ரூபாய்க்கு 15 பைசா மதிப்பு குறைவு. ரூ. 10,000 வருமானமுள்ளவர் 8500 சம்பாதிப்பதாக அர்த்தம்.

தம்பி - பாங்கில் பணம் போடாதவர்க்கு, போடும் பழக்கமில்லாதவர்க்கு வட்டி நஷ்டம். சமயத்தில் பணமே திருடு போகும்.

அண்ணன் - Study ஆராய்ச்சி என்று எடுத்தால் பொதுவாக நம்மைப் போலுள்ளவர்க்குச் சமூகத்தின் பல சௌகரியங்கள் தெரியாது. தெரிந்தாலும் பயன்படுத்துவதில்லை. அதுவும் கிராமப்புறத்திலுள்ளவர் அறிவது குறைவு.

தம்பி - என் அபிப்பிராயம் நாம் இதுபோன்ற வசதிகளில் பாதியைத்தான் பயன்படுத்துகிறோம்.

அண்ணன் - Studyதான் புள்ளியைச் சரியாகக் கொடுக்கும். 75% பயன்படுத்துவதில்லை என்று கூறலாம்.

தம்பி - 50% என்றால் நாம் மாறினால் நம் பணத்திற்கு இருமடங்கு மதிப்பு வரும். 75% என்றால் 4 மடங்கு மதிப்பு வரும். நம்பமுடியவில்லையே.

அண்ணன் - முறைகள் மட்டுமல்ல, time, energy, space, materials, ஆகியவற்றை மிச்சம் செய்யும் முறைகள் சமூகத்தில் ஏராளமாக உண்டு. இவையெல்லாம் யார் கண்ணிலும் படாது. பட்டால், "நமக்கு இவையெல்லாம் எதற்கு?”என்பார்கள்.

தம்பி - படிப்பு, பண்பு, பக்குவம், அறிவு, அனுபவம், நகர வாழ்வு, பிரயாணம் ஆகியவை இதை நிர்ணயிக்கின்றன.

அண்ணன் - சமூகம் இன்ஷூரன்ஸ் தருகிறது. பயன்படுத்துபவர் குறைவு. இன்றும் நம் இன்ஷூரன்சில் பிள்ளைகள் திருமணம், படிப்புக்குக் குழந்தை பிறந்தவுடன் பாலிசி எடுக்க முடியும் என்பது தெரியாதவர் உண்டு. படித்தவர்க்கே தெரியாது. நாம் 5%தான் பணத்தைப் "பயன்படுத்துகிறோம்". அதாவது இம்முறைகள் முழுவதையும் கற்று, பயன்படுத்துவதால் நம் பணம் 20 மடங்கு பெருகும்.

தம்பி - யாருமே நம்ப முடியாதது போலிருக்கிறது. பெரு நகரங்களில் ரூ. 10,000 வருமானமுள்ளவர் கிராமத்தில் 80,000 வருமானமுள்ளவர் அனுபவிக்கும் வசதிகளை அனுபவிப்பதைக் காண்கிறோம். இதன் இரகஸ்யம் இப்பொழுது புரிகிறது. தனி மனிதன் பயன்படுத்தாததுபோல் சமூகமே பயன்படுத்தாத முறைகள் ஏராளம். புது product வந்தால் அது கொடுக்கும் வாய்ப்புகள் அளவுகடந்தது. பணத்தைப் "பெருக்க” மனிதன் தானும், சமூகமும் இதுவரை பயன்படுத்தாத முறைகளை ஒன்றுவிடாமல் பட்டியல் போட்டு, அவற்றுள் தன் சந்தர்ப்பத்திற்கு ஒத்த அனைத்தையும் பயன்படுத்தி, தன் வாழ்வில் புது product - கம்ப்யூட்டர் போன்றது - உடன் இணைத்துக் கொண்டால், தவறாமல் அது 10 மடங்கு பெருகும் என்று புரிகிறது.

அண்ணன் - சமூகம் - சர்க்கார் - இதைக் கொள்கையாக ஏற்றால் நாட்டில் real money அச்சடித்த பணமில்லை (not deficit financing) 10 மடங்கு உபரியாகும். ஏனெனில் 100 மடங்கு பெருகும் வாய்ப்பு இருப்பதால் 10 மடங்கு நிச்சயம் பலன் தரும்.

தம்பி - இதை யோசனை செய்தால் ஏற்கனவே பணப்புழக்கம் இதுபோல் ஏராளமாகப் பெருகியுள்ளது என்று தெரிகிறது.

அண்ணன் - இதேபோல் நம் எனர்ஜி, திறமை, நேரம் ஆகியவற்றையும் அளவுகடந்து பெருக்கலாம்.

தம்பி - 10 மடங்கு பணம் பெருகுவது சிரமமன்று என்று ஆணித்தரமாக நம்பலாம்.

அண்ணன் - விபரம் தெரியவேண்டும், முயற்சி செய்யவேண்டும். ஆர்வம் தேவை.

தம்பி - இவற்றைக் கடந்த நிலையில் நல்லெண்ணமுண்டு. முடிவாக அன்னை இருக்கிறார்.

அண்ணன் - இவ்வளவு சந்தர்ப்பம் உள்ளபொழுது பணம் பற்றாக்குறை என்று கூறுவது சரியில்லை.

தம்பி - அன்னை அதிர்ஷ்டமானவர், அதிர்ஷ்டம் தருவார் என்று வெகுநாளாக நாம் கேள்விப்படுகிறோம். சாதாரண மக்களுக்கும் புரியும்படி இதைச் சொல்ல முயன்றேன். பல பகுதிகள் தெளிவாக வருகின்றன. சில விட்டுப் போகின்றன.

அண்ணன் - நானும் இதே கருத்தைப் பலருடன் பேசியிருக்கிறேன். யோசனை செய்திருக்கிறேன். நான் சொல்வது எல்லாம் எனக்குத் தெளிவாக இருக்கிறது. பலரும் தெளிவாக இருக்கிறது என்கின்றனர். எவரும் செய்ய முன்வருவதில்லை.

தம்பி - நாம் செய்யாமல் எப்படிப் பிறரைச் செய்யச் சொல்ல முடியும்?

அண்ணன் - அது ஒரு அளவு சரிதான். செய்யவில்லை என எப்படிச் சொல்ல முடியும். நம் குடும்பத்தின் செல்வ நிலை எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியுமா?

தம்பி - இது பிறர் கண்ணில் படாது.

அண்ணன் - கண்ணில் பட வேண்டுமானால் அதன் நிலை வேறு. யார் கண்ணில் படுகிறதோ இல்லையோ, அது பட வேண்டிய கண்ணில் பட்டுவிட்டது. நம் குரல் வாழ்வின் காதில் பட்டுவிட்டது. அது செயல்படுத்திவிட்டது.

தம்பி - உலகில் பணம் பெருகியுள்ளது. நம் நாட்டிலும் அதன் சாயல் தெரிகிறது.

அண்ணன் - பணம் பெருக்கத்தில் ஒரு விசேஷம் உண்டு. இனி பணம் தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் அளவுக்குப் பணம் பெருகியுள்ளது self-multiplying.

தம்பி - சென்ற ஆண்டு புது மத்திய சர்க்கார் ஏற்படும்பொழுது இருந்த தொழிலதிபர் என்னிடம் கூறினார், "இனி எந்த சர்க்கார் வந்தாலும், வாராவிட்டாலும் தொழில் வளர்வதைத் தடுக்க முடியாது”.

அண்ணன் - தொழில் தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளும் (can self-multiply) என்ற நிலை வந்துவிட்டது என்று அவர் கருதினார். பணம் என்றால் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது முதல் நிலை. பெரும் பணம் சேர்ந்தபின் தானே பணம் தன்னைப் பெருக்கிக் கொள்ள வல்லது எனத் தெரியும். பெரும் பணம் பெறும் வட்டி முதலை வளர்க்கும். அத்துடன் ஒரு புதிய அம்சமும் இப்பொழுதுள்ளது. விதையை நட்டு செடியாக வளர்த்துப் பாதுகாக்கிறோம். 2, 3 வருஷமானால் இனி அது தானே வளரும் என்கிறோம். அதுபோல் இதுவரை உலகில் பணம் என்றால் உழைப்பால் உற்பத்தி வருகிறது. பணம் என்பது நாட்டின் உற்பத்தித் திறன் என்றிருந்தது.

தம்பி - 200 மில்லியன் டன் தான்யம் உற்பத்தியாகிறது. தொழிற்சாலைகள் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அதுவே பணம் என்று பொருளாதாரம் கூறுகிறது.

அண்ணன் - நீ சொல்வது பொருள்கள் goods. தச்சன், கருமான், ஆசிரியர், வக்கீல், டாக்டர், கடைப்பையன் போன்ற ஏராளமான பேர் பொருள்களை goods. உற்பத்தி செய்யவில்லை. அவர்கள் உழைப்பு சேவையாகிறது services. பொருளாதாரம் goods. & Services பொருள்களையும், வேலையையும் பணம் என்கிறது. இன்று புதிய நிலை ஒன்று உற்பத்தியாகியுள்ளது. அது value பண்பு என்றுதான் கூற முடியும். அது சரியான சொல்லில்லை.

தம்பி - அது தெரியும். இப்பொழுது informationக்கு value வந்துள்ளது. நெடுநாளாக உள்ளதுதானே இந்த value. Academic value, administrative value, work value, public value, social value, individual value,படிப்பு, நிர்வாகம், வேலை, பொது வாழ்வு, சமூகம், தனி மனிதன் ஆகியோர் பண்புதானே. இதற்கும் பண மதிப்பு உண்டா?

அண்ணன் - உண்டு. உண்டு என்பதுடன் ஓர் புதிய அம்சம் எழுந்துள்ளது. பணத்திற்கு தன்னைத் தானே பெருக்கிக்கொள்ளும் புது அம்சம், value பண்பை பிரதிபலிக்கும் அம்சம் இரண்டும் இன்று சமூகத்தில் ஓர் புரட்சியை உருவாக்கியுள்ளன.

தம்பி - பொருள்கள் (goods), வேலை (services) பணத்தை உற்பத்தி செய்வதுபோல் value பண்பும் பணத்தை உற்பத்தி செய்யும் என்று எனக்கு ஓரளவு புரிகிறது. பிறருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லத் தெரியாது.

அண்ணன் - எந்தத் தொழிலானாலும் நாணயம் (value) அதிகமாக இருந்தால் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். இந்த அதிக சம்பாத்தியம் நாணயம், பண்பு (value) ஆகியவற்றால் வருவது.

தம்பி - நாணயம் என்பது நாம் கூறும் value பண்பில் ஒரு அம்சம்தானே? திறமை, உண்மை (truthfulness), தொழில் நிர்ணயம் (professional integrity) என்பன போன்ற பண்புகள் ஏராளமாக உண்டல்லவா? ஒரு படிப்பு இருந்தால் சம்பாதிக்கிறோம். நாணயம் போன்றவை உடனிருந்தால் அதிகமாக சம்பாதிக்கலாம்.

அண்ணன் - முடிவில் இதை விளக்கலாம். இப்பொழுது சொல்வது சிரமம். பணம் தன்னைத் தானே இனி வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை விளக்கமாகக் கூறியபின் (value) பண்பே பணம் என்பது சற்று புரியும். பண்பு மட்டும் பணமில்லை. அஸ்திவாரமிருந்தால் அதன் மீதுள்ள பண்பு பணம் என்பதை கூடியவரை கூற முயல்கிறேன்.

தம்பி - மரம் தானே வளரும் என்பதுபோல் கல்வி, போக்குவரத்து, மார்க்கட், மதம், மொழி ஆகியவைகளும் ஒரு கட்டம் தாண்டியபின் தானே வளரும் என்பதுதானே உண்மை.

அண்ணன் - அதுதான் உண்மை. அதை விவரமாகப் புரிந்து கொண்டால், நாம் பணத்தை நாமே பெருக்கலாம். அதைப் பிறர் ஏற்கும் வகையாகக் கூறுவது கஷ்டம்.

தம்பி - Infinity ஒன்று நூறாகப் பெருகுவது தாவர வாழ்விலும் காண்கிறோம். ஒரு விதை மரமாகி 100 பழம் தருகிறது. தொடர்ந்தும் தருகிறது.

அண்ணன் - நான் சொல்வதில் இதுவும் ஒரு அம்சம். பேச்சு என்பது இப்பொழுது நாம் அனைவரும் அறிந்தது. ஆயிரக்கணக்கான வருஷங்கட்கு முன் பேசுவது என்பது இன்று பணம் உள்ளதைப் போலிருந்தது. ஒரு ஊரில் 10 அல்லது 50 பேர் இருந்தார்கள். மற்றவர்கள் ஓரளவு பேசுவார்கள். போ, வா, சாப்பிடு, உட்காரு போன்ற 100 அல்லது 200 சொற்களுக்கு மேல் பேச முடியாதவர்கள் பெரும்பாலோர். இன்று பணம்போல அன்று பேச்சிருந்தது.

தம்பி - இன்றும் 100 வார்த்தைக்கு மேல் பேச முடியாதவர்கள் எங்கும் 50 அல்லது 200 பேருண்டு. அவர்கள் பொதுவாக தலையை மட்டும் ஆட்டுவார்கள்.

அண்ணன் - யாராவது அன்று, "இந்த 10 அல்லது 50 பேர் போல அனைவரும் ஒரு நாள் சரளமாகப் பேசுவார்கள்" என்று கூறியிருந்தால் எவரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

தம்பி - கார், போன், T.V., Ph.D., நோபல் பரிசு, போன்றவை சமூகத்தில் சிறுக ஆரம்பித்து பெருகியவைதானே.

அண்ணன் - பல பழக்கங்கள் கொஞ்ச நாளிருந்து அழிந்துவிடுகின்றன. மற்றவை நாளாவட்டத்தில் வளர்கின்றன. சில வளர்ந்து பிறகு அழிகின்றன.

தம்பி - தெருக் கூத்து, வில்லுப் பாட்டு, போன்றவை நெடுநாள் இருந்து அழிந்தன. பெருங்கவிகள் இப்பொழுது உலகில் எங்கும் உற்பத்தியாவதில்லை. Tram டிராம் கொஞ்ச நாளிருந்து போய்விட்டது.

அண்ணன் - இந்த உதாரணங்கள் சில சரி வரும். எல்லாம் சரி வராது. இனி அமெரிக்காவில் ஏழ்மை வாராது. கல்வி எந்த நாட்டிலும் இனி வளருமே தவிர குறையாது. பஞ்சம் இந்தியாவில் 1934க்குப் பிறகு வரவில்லை. இனி உலகிலேயே பஞ்சம் வாராது என்கின்றனர். யுத்தமும் இனி வாராது என்கின்றனர்.

தம்பி - பணம்?

அண்ணன் - பணம் சில ஆயிரம் வருஷங்கட்கு முன் உலகில் வந்தது. முதலில் பல ரூபங்களாக (சங்கு, தோல்) வந்தது. பிறகு பவுன், வெள்ளி, நாணயமாயிற்று. இப்பொழுது நோட்டாக வழங்குகிறது. அதுவும் கிரெடிட் கார்ட் என மாறுகிறது. ரூபம் எதுவானாலும் உலகில் பணம் நிலைத்துவிட்டது என்று கூறலாம்.

தம்பி -அது சரி.

அண்ணன் - உழைத்து, வேலை செய்து பணத்தை இதுவரை ஈட்ட வேண்டும். இனி பணம் உலகில் தானே தன்னை பெருக்கிக்கொள்ளும்.

தம்பி - இது கடினமான கருத்து, எளிதில் ஏற்க முடியாது.

அண்ணன் - ஆதிநாட்களில் பொருளை (goods) உற்பத்தி செய்தோம். பணம் அதன்மூலம் வந்தது. பிறகு services வேலை செய்து பணம் ஈட்டினோம். சமீபகாலமாக நாணயம், பண்பு (value) பணம் ஈட்டுகிறது. நாணயமும், திறமையும் அதுபோன்ற (values) பண்புகள் இனி பணம் ஈட்டும்.

தம்பி - சிக்கலான கருத்து.

அண்ணன் - தத்துவமாக சொன்னால் சுலபம். நடைமுறைப்படி சொன்னால் சிக்கல். தத்துவத்தை நடைமுறை அனுபவம் அதிகமாக உள்ளவர்களிடம் கூறினால் எளிதாகப் புரியும். VISA card உற்பத்தி செய்த Dee Hock என்பவரே இக்கருத்தைத் தெரிவிக்கிறார்.

தம்பி - இப்படிச் சொல்லலாமா?

அன்று பணம் வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் - உழைப்பில்லாவிட்டால் பணமில்லை.

பிறகு சேவை - வேலை, service - செய்தாலும் பணம் சம்பாதிக்கலாம் என்றாயிற்று.

உழைப்பில் சேவை கலந்து வந்தது. அத்துடன் நாணயமுமிருந்தது.

உழைப்பும், சேவையும் சம்பாதித்ததுபோல், பிறகு நாணயமும், திறமையும் சம்பாதிக்க ஆரம்பித்தன.

அண்ணன் - நாணயம், வெறும் நாணயமாக இருந்தால் மட்டும் சம்பாதிக்க முடியாது. ஓரளவு உழைப்பு, சேவையுடன் கலந்து வர வேண்டும்.

தம்பி - இன்று நாணயம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகியுள்ளது.

அண்ணன் - அப்படிச் சொன்னால் சரிவரும்.

தம்பி - அதனால்தான் துறவிகளுக்கு "இருக்குமிடம் தேடி என் பசிக்கு அன்னம்" வருகிறதா?

அண்ணன் - ரொம்ப சரி. துறவியின் ஆன்மீகப் பண்பிற்கு அன்னம் தேடிவரும். அப்படி வரும் எனில் அன்னம் மட்டும்தான் வரும்!

தம்பி - துறவி வாழ்வைவிட்டு விலகியவனாயிற்றே. அவன் தேடுவது ஆத்மா (being) ஆயிற்றே. வாழ்வுடன் தொடர்பற்ற ஆத்மாவுக்கு அதற்குமேல் திறனிருக்காது.

அண்ணன் - ஸ்ரீ அரவிந்தம் தேடும் ஆத்மா வாழ்வினுடைய ஆத்மா (being of the becoming). இது வாழ்வில் உள்ள ஆத்மா என்பதால் இதற்கு அபரிமிதம், அனந்தம் உண்டு.

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் முக்கியமாகக் கூறியதே இதுதான். வாழ்வை ஏற்றுக்கொள் என்றார். இல்லறம் என்பது இயற்கை, பிரகிருதி (becoming). துறவறம் என்பது ஆத்மா, வாழ்வைவிட்டு விலகியது. அது being. ஸ்ரீ அரவிந்தம் கூறுவது துறவறத்தின் தூய்மையுடைய இல்லறம். அதாவது becoming. ஆனால் நாம் அதனுடைய ஆத்மாவைத் தேடுகிறோம். அது being of the becoming. இந்த ஆத்மா வாழ்வு முழுவதையும் ஆத்மாவாக மாற்றுவதால் அபரிமிதம் எழுகிறது.

அண்ணன் - இது தத்துவம், தெளிவாக இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் புரிய உதாரணம் வேண்டும்.

தம்பி - உதாரணம் தருவது சிரமம்.

அண்ணன் - Glen Doman டோமான் படிப்பு முறையை உதாரணமாகக் கூறலாம். ஆனால் அதுவும் மனதில் பதியாது. வேறில்லை என்பதால் அதையே சொல்வோம்.

தம்பி - அது எனக்குத் தெரியும். குழந்தை பள்ளிக்கூடம் போக அழுவது வாழ்வு becoming. அழுதாலும் படிப்பது கட்டுப்பாடு, அது being. அழுவது இல்லறம். படிப்பது துறவறம். குழந்தை டோமான் முறையில் ஆர்வமாகப் படிக்கும்பொழுது அதன் ஆத்மா வெளிவருகிறது. ஏராளமாகப் படிக்கிறது.

அண்ணன் - அழாமல் சந்தோஷமாகப் படிப்பது முக்கியம். U.K.G. குழந்தை 5ஆம் வகுப்பு மாணவன் அளவு படிக்கிறது. 4 வயதில் Readers Digest முழுவதும் படிக்கிறது. இது பெரிய சாதனை.

தம்பி - இப்படிச் சொல்லலாமா? Goods பொருள்களை உற்பத்தி செய்வது உடல் வாழ்வு. அதில் பணம் கொஞ்சம் வரும். சேவை service செய்வதால் அதிக உற்பத்தியாகும். அதிகப் பணம் வரும். நாணயம் என்பது மனத்தாலான வாழ்வு. இதனால் சம்பாதிப்பது ஏராளம். இதற்கடுத்தாற்போல் ஆன்மீகம், சத்தியஜீவியம், அன்னையுண்டு.

அண்ணன் - ஓரளவு சரிவரும். நாணயமும் திறமையும் முழுவதுமிருந்தால் உதவியாக ஓரளவு சேவை இருந்தாலும் அபரிமிதமாக சம்பாதிக்கலாம். இப்படிச் சொன்னாலும் சந்தேகம் தெளியாது.

தம்பி - நாணயம், நம்பிக்கை நாட்டில் வளர வளர, நாணயமானவனின் சம்பாதிக்கும் திறமை பெருகுகிறது.

அண்ணன் - சரி, தத்துவம் தெளிவாக இருக்கிறது. உதாரணம் சொல்லாவிட்டால் பயன்படாது.

தம்பி - இன்று உதாரணம் கூற ஒன்றில்லை. ஏனெனில் நாணயம், திறமை போக பொறாமை, போட்டி, பொய், தில்லுமுல்லு ஆகியவை அழியவேண்டும்.

அண்ணன் - value பண்பு என்பதே அதுதான். நாட்டில் உயர்மட்டத்தில் வெளிப்படையாக உயர்ந்த பண்புகள் அதிகம். Planning Commission கூட்டத்தில் ஒருவர் அடுத்தவரை "நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள்” என்று சொல்வதில்லை. அசெம்பிளியில் திட்டுவது சகஜம். முனிசிபாலிட்டியில் அடிதடி உண்டு.

தம்பி - மேல்மட்டத்தில் உயர்ந்த பண்புகள் மட்டும் வெளிப்படையாக உண்டு. Visa அப்படி ஏற்பட்டதுதான். உயர்ந்த பண்புகள் மட்டும் உயர்ந்த ஸ்தாபனங்களில் உண்டு. தனிப்பட்ட முறையில் உயர்ந்த பண்புகள் குறைவு.

அண்ணன் - பண்புகள் உயரும்பொழுது பணம் பெருகுகின்றது. இக்கருத்து மனதில் படும்படி எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

தம்பி - நமக்கு ஸ்தாபனம் முக்கியமல்ல. அது economics பொருளாதாரம். நமக்கு தனி நபர் முக்கியம். தனி மனிதன் இந்த உயர்ந்த பண்புகளை அதிகமாக வெளிப்படுத்தினால் அவனுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்.

அண்ணன் - ஸ்தாபனத்திலிருந்து தனிமனிதனிடம் போகும்பொழுது தெளிவு குறைகிறது. எப்படி பணம் வரும்? எங்கிருந்து வரும்? தானே உற்பத்தியாகுமா? என்ற கேள்விகள் எழும்.

தம்பி - இதற்கடுத்தாற் போன்ற இடமும் உண்டு. அது good will, நல்லெண்ணம். அதை விளக்குவது சிரமம். தனிமனிதனுடைய நல்லெண்ணமும், ஸ்தாபனத்தின் உயர்ந்த பண்புகளும் ஒன்றே என்பது புரியாது. ஸ்தாபனம் உயர்ந்த பண்புகளால் எப்படிப் பணத்தை உற்பத்தி செய்யும் என்பதும் புரியாது.

அண்ணன் - கல்வி, மொழி ஆகியவை இனி உலகில் அழியாது என்று கூறலாம். அவை தானே மரம்போல வளரும். இனி தண்ணீர் ஊற்ற வேண்டாம் என்பது புரியும். இனி அமெரிக்காவில் பணப் பஞ்சம் வாராது என்றும் ஏற்றுக்கொள்வார்கள். பணம் இனிமேல் தானே பெருகும் என்பது அவ்வளவு எளிதாகப் புரியாது. பணம் பெருகும் என்றால் வட்டி மூலம் பெருகும் என்பது சரி. பணம் பெரும்பணமானால், ஒரு வீடு 5 இலட்சம் என்றால் அதைப் பணக்காரன் 41/2 இலட்சத்திற்கு, வாங்குவான் என்பது அனைவருக்கும் தெரியாது. பணக்காரனுக்குத் தெரியும். பணக்காரன் அதிக விலைக்கு வாங்குவான் என்று சாதாரண மக்கள் நினைப்பார்கள். பணமிருப்பதால் காரியங்கள் அந்தஸ்தால் செலவில்லாமல் நடக்கும் என்பதும் புரியும். அதற்கு மேல் புரியாது.

தம்பி - படிப்பு அளவுகடந்து போனால் அறிவு தானே விருத்தியாகும் என்பதை ஓரளவு ஏற்பார்கள். பாட்டும் அப்படி, பதவியும் அப்படியே என ஓரளவு மனம் ஏற்கும். பணமும் அப்படியே என்றால்,

அண்ணன் - எப்படிப் பணம் தானே பெருகும்? புரியவில்லை என்பார்கள்.

தம்பி - உளறுவதாகக் கூறுவார்கள்.

அண்ணன் - செடிக்கு பூமியில் உள்ள நீரை எட்ட முடியாதவரை தண்ணீர் ஊற்றுகிறோம். வேர் வளர்ந்து, பூமியில் உள்ள நீர் மட்டத்தைத் தொட்டபின் தண்ணீர் ஊற்றினாலும் ஊற்றாவிட்டாலும் தானே வளர்வது போல், கல்வி, மொழி வளர்கிறது என்று புரிவது கஷ்டம்.

தம்பி - கல்வியும் மொழியும் இனி உலகத்தில் அழியாது எனப் புரியும். ஏன் அழியாது என்று தெரிவது கஷ்டம். விளக்குவதும் கஷ்டம்.

அண்ணன் - இது ஆன்மீக உண்மை.

தம்பி - ஆன்மீகத்தை எப்படி லௌகீகமாக விளக்குவது?

அண்ணன் - அறிவு என்பது நாட்டில் அஸ்திவாரத்தில் பூமிக்கடியில் நீரிருப்பது போலிருக்கிறது. நாம் படிப்பால் பெறும் அறிவு செயற்கை முறையான அறிவு. செயற்கையாக வளரும் அறிவு இயற்கையான அஸ்திவாரத்தைத் தொடும்வரை தண்ணீர் ஊற்றவேண்டும்.

தம்பி - அறிவு நாட்டில் ஆழத்திலுள்ளது. ஆத்மாவில் உள்ளது என்பதை தயாராக ஏற்கமாட்டார்கள். ஆனால் சொல்லலாம். பணம் நாட்டில் இயற்கையாக ஆழத்திலுள்ளது என்று எப்படிச் சொல்வது?

அண்ணன் - அறிவு உண்டு என்று ஏற்றுக்கொண்டால், அறிவே பணம் என ஏற்பது கடினமென்றாலும், ஏற்கலாம் என எதிர்பார்க்கலாம்.

தம்பி - செயற்கையாக இதுவரை பணம் சம்பாதித்தோம். பணம் பெருகிவிட்டதால் பணம் அதன் இயற்கை அஸ்திவாரத்தை இப்பொழுது எட்டிவிட்டது.

அண்ணன் - மொழி இனி உலகில் அழியாது, தானே வளரும் என்பதும் ஒரே கருத்து.

தம்பி - இதை ஏற்பதும், ஏற்றபின் தன் சொந்த வாழ்வில் அது நடக்கும் என்பதை அறிவதும் எவ்வளவு எளிது என்று முயன்றால்தான் தெரியும்.

அண்ணன் - ஆத்மா உள்ளே இருக்கிறது. ஆத்மாவே ஞானம். ஞானம் மொழியாக வெளிப்படுகிறது. எனவே மொழி, கல்வியின் அஸ்திவாரம் உள்ளே ஆத்மாவிலுள்ளது எனலாம். அறிவு பணம் சம்பாதிப்பதால், ஞானம் பணத்தின் அஸ்திவாரம் என்று கூறலாம்.

தம்பி - உலகில் பணம் ஏற்பட்டது செயற்கை முறை. உணவு, உடை, வீடு, கல்வி, சேவை எல்லாம் செயற்கையாக மனிதன் ஏற்படுத்தியதுபோல் பணமும் செயற்கையாக ஏற்பட்டது. செயற்கையான மேல்மன வாழ்வு இயற்கையான அதன் அஸ்திவாரத்தை வளர்ந்து தொட்டால், அதன்பிறகு அது தானே வளரும்.

அண்ணன் - பணம் இன்று உலகில் அந்நிலையை எட்டிவிட்டது என்பதை கேட்பவர் ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். இங்கு விளக்க வேண்டிய விஷயங்கள் பல இருந்தாலும், அவற்றைப் பிறகு சொல்லலாம்.

தம்பி - தனி மனிதனின் அதிர்ஷ்டம் எப்படி வருகிறது என்று சொல்லி, இவையிரண்டையும் இணைத்துப் பார்ப்போம், சொல்லுங்கள்.

அண்ணன் - உலகம் பணத்தை பெருக்கிய பின், தனி மனிதன் பெறுவான் என்பது சுலபமாகக் கூறக்கூடியது.

தம்பி - ஒரு புத்தகம் எழுதினால், அது வெளிவந்தபின் அனைவருக்கும் கிடைப்பதுபோல் அது எளிமையானது.

அண்ணன் - புத்தகம் வெளிவருமுன் அதைப் படிக்க வேண்டும் என்பது நம் பிரச்சினை. புத்தகம் வெளிவர 1 வருஷமாகலாம், 10 வருஷமும் ஆகலாம், வெளிவராமலுமிருக்கலாம். பணத்தை பெருக்க சமூகம் திறன் பெறுவது 5 அல்லது 50 வருஷத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். தனி மனிதன் இப்பொழுதே பெற முடியும், வழியுண்டு.

தம்பி - ஆசிரியர் தெரிந்தவரானால், அல்லது அவர் ஸ்தாபனத்துடன் நாம் தொடர்புகொள்ள முடியுமானால், ஒரு பிரதி பெற்று படிக்கலாம். அதுபோல் இது முடியுமா?

அண்ணன் - நமக்கும் புத்தகத்திற்கும் பாலமாக அமைவது ஆசிரியர், புத்தகத்தை எழுதியவர். அதுபோல் பணத்தை உற்பத்தி செய்யும் சமூகத்திற்கும் நமக்கும் பாலமாக அமைவது Goodwill, நல்லெண்ணம்.

தம்பி - புரியவில்லை.

அண்ணன் - நாட்டில் அனைவருக்கும் வீடு, உணவு, உடை கிடைக்க வேண்டும் என்பது நல்லெண்ணம். அனைவருக்கும் எல்லா சேவையும் கிடைக்க வேண்டும் என்பதும் நல்லெண்ணம். மொழி, கல்வி, பணம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும் நல்லெண்ணம், Public good will. நல்லெண்ணத்தால்தான் பொருள் பெருகியது, சேவை பெருகுகிறது, பணம் பெருகுகிறது.

தம்பி - இதை உதாரணத்தால் விளக்க முடியும்.

அண்ணன் - Newspaper விலை நல்ல உதாரணம். ஒரு தினசரி பேப்பர் அடக்க விலை ரூ. 50/-. அதை ரூ.3/-க்குத் தருகிறார்கள். விளம்பரம்மூலம் பணம் வருகிறது.

தம்பி - Newspaper கம்பனி பணத்தை பெற்று மக்களுக்கு வழங்கும் கருவியாக நீண்ட நாளாக செயல்பட்டு வருகிறது. Encyclopaedia Britannica ரூ.30,000 பெறுமானது இப்பொழுது இலவசமாக internetஇல் வருகிறது என்றால் கலைக் களஞ்சியம் இனாமாக வருகிறது எனப் பொருள். அதைப் பிரசுரம் செய்த கம்பனி இலட்சக்கணக்கான பிரதிகளை இனாமாக வழங்கியுள்ளது. பணம் பெருகுகிறது. இதுபோன்ற செயல்கள் ஆரம்பித்து பல பொருள்கள் மலிவாகவும், சில இனாமாகவும் கிடைக்கின்றன.

அண்ணன் - பணம் தன்னைத் தானே பெருக்கிக்கொள்வதற்கு இது நல்ல உதாரணம், ஏற்றால் நல்லது.

தம்பி - "நான் கலைக் களஞ்சியம் படிக்கவில்லை, internet வைத்தில்லை, எனக்கு ஒன்றுமில்லையா” என்பவர் உண்டு.

அண்ணன் - புதியதாக வருவதைப் பயன்படுத்துபவர்கட்குத்தான் பலன் வரும்.

தம்பி - மற்றவர்கள், இந்நிலை பெருகி அனைவருக்கும் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

அண்ணன் - அது உண்மை. அதற்கும் ஓர் வழியுண்டு. நல்லெண்ணம் பணப்பெருக்கத்தை உற்பத்தி செய்வதால், நல்லெண்ணமுள்ளவர் அப்பலனை இப்பொழுதே பெறலாம். internet இருந்தால் நல்லது, இல்லாவிட்டாலும் முடியும். முடியும் என்றால் நல்லெண்ணம் ஆழ்ந்து ஊன்றியிருந்தால் முடியும்.

தம்பி - மேலும் தெளிவான விளக்கம் வேண்டும்.

அண்ணன் - பிறருக்கு உதவி செய்ய நல்லெண்ணம் தேவை. அதுவும் ஒரு பொருளைக் கொடுக்கும் அளவுக்கு நல்லெண்ணமிருப்பது கடினம். அப்படிக் கொடுக்கும் ஒருவரைப் பார்த்தால், பொருளைக் கொடுப்பது கடினம். "அந்த அளவுக்கு எனக்கு நல்லெண்ணமில்லை" என்பார். அடுத்த வேறு கட்டமும் உண்டு. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு பொருளைக் கொடுக்கலாம். ஆனால் நல்லெண்ணத்தைக் கொடுக்க முடியுமா என்றால் அது பொருளைக் கொடுப்பதைவிடக் கடினம்.

தம்பி - வாயால் பேசுகிறோம். நான் பாஸ் செய்தபொழுது நண்பன் முதல் மார்க் வாங்க வேண்டும் என்று நினைப்பதே கடினமல்லவா? வாங்கிவிடப் போகிறான் என மனம் துணுக்குறுகிறது, என்பதே உண்மை.

அண்ணன் - வீட்டிற்குள் அண்ணனுக்கு வந்தால் தம்பிக்குப் பொறுக்கவில்லை, மனைவி பிரபலமானால் கணவன் முகம் சுருங்குகிறது, கணவனுக்கு செல்வம் வருவதைப் பொறுக்காத மனைவியுண்டு என்பது நிலை. அடுத்தவருக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டும், நினைத்துச் சந்தோஷப்பட முடியுமா என்று ஒருவரைக் கேட்டேன். "அப்படிச் சொன்னால் சந்தோஷப்படலாம். என் நாத்தனாருக்கு 1 கோடி வர வேண்டும் என்றால் மனம் திக் என்கிறது. மனம் இடம் கொடுக்கவில்லை” என்று பதில் வந்தது.

தம்பி - நம்முடன் உள்ளவர் மீது நல்லெண்ணம் தவறாதிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அதை விரிவு செய்து, பிறகு எட்ட இருப்பவர், வேண்டாதவர், அவர்கட்கும் அதிர்ஷ்டம் வர வேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த நினைப்பு சந்தோஷம் கொடுப்பது நல்லெண்ணம்.

அண்ணன் - அதைத் தாண்டிய கட்டங்களுண்டு. இதுவரை வருபவர்கட்கே அதிர்ஷ்டம் வரும்.

தம்பி - நம் நல்லெண்ணம், உலகத்தின் நல்லெண்ணத்துடன் தொடர்பு கொண்டால், பணம் நம்மை நோக்கி வரும்.

அண்ணன் - அப்படி வருவது நல்ல பணமாக இருக்கும். தவறான பணமாக இருக்காது.

தம்பி - மனிதன் சிறியவன், விஷயங்கள் சிறியன. அப்படி இருக்கும்பொழுது பெரும் பணம், அளவுகடந்து, தொடர்ந்து வரும் என்பது புரியவில்லை. அத்துடன் ஏன் அப்படி வர வேண்டும், எதற்காக, எப்படி எனப் புரியவில்லை.

அண்ணன் - இது சமூகத்தைப் பற்றிய உண்மையில்லை. பிரம்மத்தை பற்றிய தத்துவம். சமூகத்தில் வெளிப்படும் அளவில்தான் நாம் அதைப் புரிந்துகொள்ள முடியும்.

தம்பி - பணம் தவிர வேறு விஷயத்தில் இத்தத்துவம் வெளிப்பட்டுள்ளதா?

அண்ணன் - எல்லா விஷயத்திற்கும் இது உண்மை. பேச்சு, மொழி என்ற இடத்தில் மட்டும் தெளிவாக இதைக் காணலாம்.

உலகில் செயல்கள், அசைவுகள் நிகழ்கின்றன. நாம் பொருள்களைக் காண்கிறோம். மரம், செடி, கொடி, வீடு, ஆகியவற்றைக் காண்கிறோம். மனிதன் சிலவற்றை உற்பத்தி செய்கிறான். இயற்கை சிலவற்றை உற்பத்தி செய்கின்றது. அவை உற்பத்தியாகும் சட்டம் இது.

  • முதலில் ஓரளவு உற்பத்தியாகும்.
  • பிறகு, ஒரு கட்டத்தைத் தாண்டிய பிறகு அபரிமிதமாக உற்பத்தியாகும்.
  • அவை மனிதனின் உபயோகத்திற்கு என நாம் நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.
  • அப்படி உற்பத்தியாகும் பொருள்களில் சிலவற்றை மனிதன் பயன்படுத்துவதால் அவன் தன் கண்ணோட்டத்தில் அவற்றைக் கருதுகிறான்.
  • நதியும், மலையும், தாவரங்களையும் இயற்கை மனிதனுடைய உபயோகத்திற்காக உற்பத்தி செய்யவில்லை, அவை சிருஷ்டியின் பகுதிகள்.
  • ஒரு கட்டத்தைத் தாண்டியபின், உற்பத்தி அனந்தமாவது இயற்கை நியதி.
  • நாம் மொழியில் இதைக் காணலாம்.
  • இன்று பணத்தில் அத்தன்மை வெளிப்படுகிறது என நான் கூறுகிறேன். 

தம்பி - பிரம்மம் முழுமையானது, தன்னை முழுமையாகவே கொடுக்கவல்லது என்பதன்றோ இத்தத்துவம்?

அண்ணன் - இந்த விஷயத்தில் சமூகமும், பிரம்மமும் ஒன்றே. காற்று அபரிமிதமாக உள்ளது. மனிதன் சுவாசிக்க சிறிதளவு - ஒரு துளி - பயன்படுத்திக்கொள்கிறான். அதுபோல் மொழி உலகில் அபரிமிதமாக உள்ளது. இன்று மனிதன் ஓயாமல் பேசலாம், எழுதலாம், முடிவில்லாமல் உற்பத்தி செய்யலாம். தேவைப்படும் அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதுபோல் எதிர்காலத்தில் பணம் அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படும். தனி மனிதன் எந்த அளவு பணம் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தானே உற்பத்தி செய்துகொள்ளலாம். பிரம்மம் தன்னை முழுமையாகக் கொடுக்கிறது. நாம் நிலைக்குரியவாறு பகுதியாகப் பெறுகிறோம். சமூகம் முழு பணத்தைப் பெற்றுள்ளது. அதனால் பிரம்மம்போல் தன் முழு பணத்தையுமேதான் ஒருவருக்குக் கொடுக்க முடியும். பகுதியாகத் தர சமூகத்தால் முடியாது. மனிதன் தன்னை பகுதிக்கு உட்படுத்திக்கொண்டால், அவனால் பகுதியை மட்டுமே பெற முடியும். விடுதலை பெற்ற மனிதன் சமூகத்தின் அத்தனைச் செல்வத்திற்கும் உரியவன். சமூகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது, கொடுக்கிறது. நாம் பெறத் தயாராகவேண்டும். காற்றையும், பேசும் மொழியையும் அப்படிக் கொடுத்துவிட்டது. இனி பணத்தை அப்படித் தரும் என்பதே தத்துவ விளக்கம்.

தம்பி - இத்தத்துவம் பணத்தைக் கடந்து மற்றவற்றிற்கும் பயன்படுமன்றோ?

அண்ணன் - அறிவு, உணர்வு, சந்தோஷம், புதுக் கருத்துகள், புது விளையாட்டுகள், என எந்த விஷயமும் எதிர்காலத்தில் அபரிமிதமாக உற்பத்தியாகும். இதை practical concept of infinity ஜடத்தில் அனந்தம் எனலாம்.

தம்பி - ஷேக்ஸ்பியரைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதும்பொழுது, இலக்கியம் பேரிலக்கியமாவதை எழுதுகிறார். அங்கு இதைக் குறிப்பிடுகிறார். இயற்கை நோக்கத்தைத் துறந்தபின் சிருஷ்டியின் நிலை உயர்வதாக எழுதுகிறார். We touch here the bottom..... Nature's creativity becomes purposeless.

அண்ணன் - ஒரு காரணத்திற்காக உற்பத்தி செய்யும்வரை அளவோடு உற்பத்தி செய்கிறோம். காரணமேயில்லாமல் உற்பத்தி செய்வது அனந்தம். அப்பொழுது அனந்தமாக உற்பத்தியாகும் என இலக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பணத்தை நம் உபயோகத்திற்காக உற்பத்தி செய்யும்வரை பற்றாக்குறையிருக்கும். எந்தக் காரணமும் இல்லாமல் உற்பத்தி செய்தால், செய்வது அனந்தமானால், அளவு அனந்தமாகும். சமூகம், பிரம்மத்தை பணத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டால், இனி பணம் அபரிமிதமாக உற்பத்தியாகும். அதன்பின் பிரம்மத்தைப்போல் சமூகத்தால் பணத்தை அளவுகடந்தே மனிதனுக்குத் தரமுடியும். அளவு, லிமிட், என்பவை பணத்திற்கு அதன்பிறகு இல்லை.

தம்பி - பிரம்மம் சக்தியாகி, ரூபமாகிறது. நாம் ரூபத்தைக் காண்கிறோம். ரூபத்தைக் கடந்து சக்தியைப் பார்த்தால் அளவு விரிவடைகிறது. சக்தியைக் கடந்து பிரம்மத்தைக் கண்டால், அது அனந்தமாகிறது.

அண்ணன் - அதுவே தத்துவம். நாம் பணத்தை ரூபாய், நோட்டு என்ற ரூபங்களில் காண்கிறோம். பணத்தை உற்பத்தி செய்த சக்தி இந்த ரூபங்களுக்குப் பின்னால் உள்ளது. அது பிரம்மாண்டமானது, பிரவாகமாக எழும். அந்த சக்தி உலகம் முன்னேறும்பொழுது அளவுகடந்து முன்னேறியுள்ளது. அதற்குப் பல காரணங்களுண்டு. அறிவு, விஞ்ஞானம், டெக்னாலஜி, ஆகியவை காரணம். முக்கியமாக இன்று கம்ப்யூட்டர் காரணம்.

தம்பி - கம்ப்யூட்டர் பணத்தை விரைவாக அனுப்புகிறது.

அண்ணன் - வேகம் பணத்தை விரிவுபடுத்தும்.

தம்பி - அது வியாபாரிக்குத் தெரியும்.

அண்ணன் - இலட்ச முதல் ஒரு வருஷத்தில் ரூ. 10,000 இலாபம் தருகிறது. சரக்கு ஒரு மாதத்தில் விற்றால் 1 மாதத்தில் 10,000 இலாபம் வரும். ஒரு வருஷத்தில் 1,20,000 இலாபம் வரும்.

தம்பி - பணம் வேகமாகப் பயன்பட்டால் இலாபம் அதிகமாகும் என எந்த வியாபாரியும் அறிவான்.

அண்ணன் - ரூ. 10,000 இலாபம் தரும் இலட்ச ரூபாய் முதலை 1,20,000 இலாபம் தரும் முதலாக வேகம் மாற்றினால், வேகத்தால் பணம் 12 மடங்கு பெருகுகிறது எனப் பொருள்.

தம்பி - கம்ப்யூட்டர் இந்த வேகத்தை 100 மடங்கு என அதிகப்படுத்தியுள்ளது, பணம் இந்த 10 வருஷத்தில் அதிகமாகப் பெருகியதற்குக் காரணம்.

அண்ணன் - பணம் அளவுகடந்து பெருகும் காரணங்கள் பலப்பல. அவை தத்துவமானவை. கம்ப்யூட்டர் அனைவருக்கும் புரியும். அது போதும். அத்துடன் மனிதன் பணத்தைப் பற்றிப் பேசினால் கேட்பான். அன்பு அபரிமிதமாகப் பரவும் என்றால் யாருக்கும் ஆர்வமிருக்காது. சட்டம் அன்பிற்கும், ஆனந்தத்திற்கும், திறமைக்கும், நினைவுக்கும் ஒன்றுதான். பணம் மட்டும் மனிதன் காதில் விழும் என்பதால் தத்துவத்தைப் பணம்மூலம் கூறுகிறேன்.

தம்பி - நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்குத் தத்துவத்தைக் கூறுங்கள்.

அண்ணன் - உலகில் 1956 முதல் சத்தியஜீவிய சக்தி சூட்சுமமாக செயல்படுகிறது. 1967 முதல் அது எல்லா சர்க்கார்கள் மூலமும் செயல்படுகிறது. 1969இல் அது உருவம் பெற்றுள்ளது என்று அன்னை கூறுகிறார். அதன்பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அதன் விளைவாக சிறியது finite, பெரியதாக infinite ஆகும் நேரம் வருகிறது. உலகில் உள்ள எல்லா சக்திகளும் பெருகுகின்றன. அவை நல்லதாகவும், கெட்டதாகவும் பெருகுகின்றன. அதனால் இதுவரை நடப்பவை இனி விரைவாகவும், பெருகியும் நடக்கும். பணம் பெருகுவது அதன் அம்சம்.

இதுவரை உலகம் நிலம், பாக்டரி, வியாபாரம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு நடந்தது. அதனால் கரி, எண்ணெய், உலோகம் முக்கியமாக இருந்தன. இனி நிலைமை மாறும். இந்த மாற்றத்தை மனிதன் தன்னையறியாமல் ஓரளவு பின்பற்றுகிறான். கண் விழித்து இம்மாற்றத்தை மனிதன் கண்டுகொள்ள வேண்டும். அப்படி மனிதன் மாறினால் உலகத்தில் முக்கியமானது நிலம், பாக்டரி, பணம், இராணுவம் இல்லை, அவற்றை நடத்த உதவும் நிலக்கரி, எண்ணெய் இல்லை, முக்கியமானது மனிதன் என்று தெரியும். இவ்விழிப்பு உலகில் ஏற்படவில்லை. ஏற்பட்டால்,

இந்த நூற்றாண்டுக்கு "Century of the Individual” தன்னையறிந்த மனிதனுடைய நூற்றாண்டு என்று பெயர் வரும்.

அதன் விளைவாக பல அரசியல் பொருளாதார மாற்றங்கள் எழும். அவற்றுள் முக்கியமானவை,

  1. உலகில் உள்ள இராணுவங்கள் கலைக்கப்பட்டு, அமைதி காக்க ஒரு சிறு இராணுவம் அமையும்.
  2. வயது வந்தவனுக்கு சர்க்கார் வேலை உத்திரவாதம் செய்யும்.
  3. இனி உலகில் பஞ்சம் தலைகாட்ட முடியாத ஏற்பாட்டை பலமாக செய்யும்.
  4. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீர்குலைந்துள்ளதை உடனே மாற்ற முடியும்.
  5. இதுவரை கண்மூடித்தனமாக நடந்தவற்றை உலகம் கண்விழித்து செய்யும் அளவு பெறும்.

இவை நடந்தால் பல விஷயங்கள் தெளிவு பெறும்.

  • மனிதன் பணத்தைவிட முக்கியமானவன்.
  • மனிதன் டெக்னாலஜியைவிட முக்கியம்.
  • மனிதன் இராணுவத்தைவிட முக்கியம்.
  • மனிதன் போரைவிட முக்கியம்.
  • பொருளாதாரத்திற்கு மார்க்கட் முக்கியமில்லை, மனிதனே மையம்.
  • விஞ்ஞானத்திற்காக மனிதன் வாழவில்லை. மனிதனுக்காக விஞ்ஞானம் உள்ளது. 

உலகத்தின் மையம், கரு, உயிர், ஜீவன் ஆகியவை மனிதன் என்பது வெளிவரும், நிலைக்கும். அது நடந்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் மனிதன் உற்பத்தி செய்யமுடியும் என்று உலகம் அறியும். இதை இன்று பேசும் நிலையில்லாததால், நான் மேற்சொன்ன ரூபங்களில் அதையே பல்வேறாகக் கூறுகிறேன். தத்துவமிருக்கட்டும், மீதியையும், பழைய பாணியில், சொல்லி முடிப்போம்.

தம்பி - எனக்கு நீங்கள் சொல்வதைவிட தத்துவம் பிடிக்கிறது.

அண்ணன் - உனக்குத் தத்துவம் புரியலாம். உலகத்திற்கு நடைமுறைதான் புரியும்.

தம்பி - நடைமுறை தத்துவமில்லாமல் நடைப்பிணமாகும்.

அண்ணன் - மனிதன் வாழ்வை ஆராய்கிறான். ரிஷிகள் தவத்தை மேற்கொண்டார்கள். ஸ்ரீ அரவிந்தம் வாழ்வை தவமாகவும், தவத்தை வாழ்வாகவும் பேசுகிறது. நமக்கு அதுபோல் சொல்லத் தெரியவில்லை.

தம்பி - முயன்றால் முடியுமன்றோ?

அண்ணன் - ஒருவரால் அதை செய்ய முடியுமானால் இரண்டு காரியங்கள் பூர்த்தியாகும்.

  • அந்நூல் வாழ்வுக்குரிய Life Divine எனப்படும்.
  • மனிதன் உடனே செயல்படுவான். 

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் ஆன்மீகத்தை அறிவுக்குப் பொருந்துமாறு கூறினார். நாம் அறிவுக்குப் பொருந்திய ஆன்மீகத்தை வாழ்வில் பொருத்திக் கூறவேண்டும்.

அண்ணன் - தத்துவம் சுலபம்.

  • சர்வம் பிரம்மம்.
  • மனிதன் தோற்றத்தைப் பார்ப்பதால் பிரம்மம் தெரிவதில்லை, ரூபம் தெரிகிறது.
  • சர்வ ஜீவராசிகளும், பொருள்களும் பிரம்மத்தை நோக்கிச் செல்கின்றன.
  • சமூகம் பிரம்மம்.
  • மனிதன் பிரம்மம்.
  • மனிதன் சமூகத்தை மனிதகுலமாகவும், தன்னை உடலாகவும் காண்கிறான்.
  • கையிலுள்ள பிரச்சினை பணம்.
  • பிரம்மமான சமூகம் தன்னை முழுமையாகவே மனிதனுக்குத் தரும்.
  • தன் பணத்தை சமூகம் பிரவாகமாகப் பெற்றுள்ளது.
  • சமூகத்தால் மனிதனுக்குத் தன் எல்லாப் பணத்தையுமே தர முடியும், பகுதியாகத் தர முடியாது.
  • எல்லாப் பணமும்  காற்றுபோல் மனிதனுக்குப் பயன்படாது.
  • இன்று மனிதன் பணம் முக்கியம் என நினைக்கிறான்.
  • தனக்கும், சமூகத்திற்கும் உள்ள அனந்தமான ஆன்மீகத் தொடர்பை மனிதன் ஏற்படுத்தினால் ஏராளமாக அவன் பணம் பெற முடியும்.
  • பணத்தில் அனந்தத்தைக் கண்டவன் மனத்திலும் கண்டு, முடிவாக அனந்தனை அடைய வேண்டும்.
  • இன்று மனிதன் ஆன்மீகப் பூரணம் பெற பணம் ஒரு கருவி.
  • பேராசையால் பணத்தை நாடுபவனுக்கு இங்கு வேலையில்லை.
  • அவன் பேராசையே அவனைத் தடுக்கும். 

தம்பி - தத்துவம் எனக்குப் புரிகிறது. இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லும்பொழுது எழும் கேள்விகட்கும் பதில் கூற வேண்டும். முதல் கேள்வி,

"சமூகம் தன்னை முழுவதுமே கொடுக்கும்;
அதனிடம் பெரும் பணம் உண்டு;
அதனால் மனிதனுக்குத் தன் முழுப் பணத்தையுமே தர முடியும்.

இதன் எல்லா அம்சங்களையும் விவரிக்க வேண்டும்.

அண்ணன் - இதன் அடிப்படைகள்,

  • ரூ.100/- நோட்டை நமக்கு ஒருவர் கொடுப்பது சமூகத்திற்கு பணத்தின் முழு சக்தியுண்டு என்பதை அறிவிக்கிறது. இல்லையேல் அதை நாம் பெற்றுக்கொள்ளமாட்டோம்.
  • பிரம்மம் தன்னை முழுமையாகக் கொடுப்பதுபோல் சமூகம் தன்னை முழுமையாகக் கொடுக்கிறது.
  • கொடுப்பது முழுமையானால், பெறுபவர் பகுதியாகப் பெறலாம். 

சூரியன் தன் ஒளியை வெள்ளமாகத் தரும்பொழுது நாம் அத்தனையும் பெறலாம். அல்லது வீட்டிற்குள் வந்தபின் ஒரு சிறிது பெறலாம். எந்த நேரமும் நாம் வீட்டை விட்டு வெளியில் போய் முழு சூரிய ஒளியைப் பெறலாம் என்பது பிரம்மம், சமூகம், பள்ளி, மார்க்கட் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

ஆயிரம் ஆண்டுகட்கு முன் சமூகத்திற்கு பண பலம் குறைவு. இன்று அது ஆயிரம் மடங்கு அதிகப்பட்டுள்ளது. அன்று சமூகத்திற்கு உண்டான பலம் Physical power, உடலின் சக்தி, பிறரைக் கொலை செய்யும் சக்தி, சிரச்சேதம் செய்வது, அடி, தடி, சண்டையே முக்கியம். அந்த சண்டை போடும் சக்தி எல்லாம் இன்று பணபலமாகிவிட்டது. அன்று அடித்தார்கள், கொலை செய்தார்கள். இன்று அபராதம் போடுகிறார்கள். இந்தியாவில் ரிஸர்வ் பேங்க் 1935இல்தான் ஏற்பட்டது. நோட்டு பிரபலமானது அதற்குப் பிறகுதான். அதன் முன் வெள்ளி ரூபாய்தான் நாணயம். நோட்டு வருவதற்கு முன் பணப் புழக்கம் குறைவு. பணம் ஏராளமாகப் பெருகிவிட்டது.

ஆகாயம் தன் காற்றை முழுமையாகவே தரும். கடல் குளிப்பவனுக்கு தன்னை முழுமையாகவே தருகிறது என்பதுபோல் சமூகம் தன் சொத்துகளை - கல்வி, பணம், பாதுகாப்பு போன்றவற்றை - தனிமனிதனுக்கு முழுமையாகவே தருகிறது. பெறுபவன் தன் தேவை பூர்த்தியாகும்வரை பெறுகிறான்.

நோட்டு ஏற்படுமுன் சர்க்கார் 1 நூறு ரூபாய் நோட்டை அடிக்க முடியாது, அடிப்பதில்லை, அடித்துக் கொடுத்தால் அதை யாரும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்க்காருக்குப் பணபலம் ஏற்படும்வரை நோட்டு அடிக்கும் உரிமையில்லை. ஒரு நோட்டை நாம் பெற்றுக்கொள்கிறோம் என்றால், சர்க்காருக்கு நோட்டு அடிக்கும் திறன் வந்துவிட்டது, முழுப் பணபலம் வந்துவிட்டது எனப் பொருள்.

நெய்வேலியிலிருந்து நம் வீட்டிற்கு 600 unit கரண்ட் வருகிறது எனில் 600 unit மட்டும் உற்பத்தி செய்து அனுப்புவதாக அர்த்தமில்லை. அதைப்போல் ஆயிரமாயிரம் மடங்கு கரண்டு உற்பத்தியானால்தான் நமக்கு 600 யூனிட் வரும். நாம் 600 unit மட்டும் பெறவேண்டும் என்பதில்லை, 6000 unit பெறலாம். சர்க்காரிடமிருந்து - சமூகத்திடமிருந்து - நாம் எத்தனை கோடி வேண்டுமானாலும் பெறலாம் என்ற தத்துவம் பேசினால் எடுபடாது. "என்னால் சம்பளமாக 10,000 ரூபாய்தான் பெறமுடிகிறது. நான் எப்படி ஒரு கோடி ரூபாய்க்கு சம்பளமாகப் பெற உழைக்க முடியும்'' என்று கேள்வி எழும். உத்தியோகம் செய்தால் சம்பளம் ரூ. 10,000. 1 கோடியை சமூகத்திலிருந்து பெற வேலை செய்வதில்லை. அதை நாம் நம் value, பண்புகள்மூலம் பெற நாம் என்ன செய்ய முடியும் என்பதை கடைசி பக்கத்தில் எழுதுகிறேன். நாம் மனதால் Good will, நல்லெண்ணம் உற்பத்தி செய்தால் அதற்குரிய தொகை நமக்கு வரும். 1 கோடி வேண்டுமானால் அந்த அளவுக்கு நல்லெண்ணம் மனதில் உற்பத்தியாக வேண்டும்.

Perception, sensation, conception என்ற சொற்களை பகவான் பயன்படுத்துகிறார். அதைக் கொண்டு இதை விளக்கலாம். மேற்சொன்ன கருத்து தெளிவாக அறிவுக்குப் புரிவது conception, உணர்வுக்குப் புரிவது perception, கையில் ரூபாய் வருவது sensation.

நாம் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி அதில் கடிதம் டைப் செய்கிறோம். நாம் கற்றுக்கொண்டது அதுதான். ஆனால் கம்ப்யூட்டர் ஒரு லெட்டர் டைப் செய்யவும் கம்ப்யூட்டராகவே செயல்படுகிறதே தவிர, டைப்ரைட்டர்போல செயல்படவில்லை. லெட்டர் மட்டும் நாம் டைப் செய்வதால், கம்ப்யூட்டருக்கு லெட்டர் மட்டும்தான் டைப் செய்யத் தெரியும் என்பதில்லை. கம்ப்யூட்டர் லெட்டர் டைப் செய்வதைப்போல் 100 மடங்கு, 1000 மடங்கு திறனுடையது. நம் திறமை குறைவாக இருப்பதால் கம்ப்யூட்டர் சிறிய பயன் தருகிறது. நாம் முழு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் முழுப் பயன் பெறலாம்.

சமூகம் கம்ப்யூட்டர்போல,

நாம் பெறும் வருமானம் லெட்டர் டைப் செய்வதுபோல.

சமூகம் பொருள்கள், சேவை (goods & services) உற்பத்தி செய்தது. பணம் அவற்றைப் பிரதிபலித்தது என்றோம். அடுத்தாற்போல் சமூகம் values, பண்புகளை உற்பத்தி செய்ததை பணம் பிரதிபலித்தது. ஒரு மனிதன் பொருள்களை அளவோடு உற்பத்தி செய்ய முடியும், அளவோடு பயன்படுத்த முடியும். சேவையும் அப்படியே. ஆனால் values, பண்புகளை உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ அளவு கிடையாது.

எந்த மனிதனால் இப்பண்புகளை அளவிறந்து உற்பத்தி செய்ய முடிகிறதோ, அவனால் சமூகத்திலிருந்து அளவுகடந்து பணம் பெறமுடியும்.

இன்று தொழிலதிபர்கள் கோடிக்கணக்காக சம்பாதிக்கிறார்கள் எனில் அவர்கள் goods பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். 3 நடிகர்களை ஒரு விழாவுக்கு வர அழைத்தனர். காலை, மாலை, இரவு என ஒவ்வொருவரும் 5 நிமிஷம் மேடைக்கு வர வேண்டும். மூன்று பேரும் சேர்ந்து 25 இலட்சம் கேட்டனர். சேவை செய்பவர்கள் அதிக வருமானம் பெறுகிறார்கள். Values, பண்புகளை அளவில்லாமல் உற்பத்தி செய்பவர்கள் அளவில்லாமல் பயன் பெறுவர்.

இது நம் வாழ்வில் நடக்க வேண்டுமானால் சமூகம் எப்படி பணத்தை உற்பத்தி செய்கிறது என முதலில் தத்துவரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு அதை உணர்வால் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு கட்டமும் தாண்டினால் பலிக்கும்.

ஏற்கனவே சமூகம் தான் பெற்ற பணத்தை இனி தானே பெருக்கிக்கொள்ளும் திறன் பெற்றுள்ளது என்று கூறினோம். அதேபோல் மனிதன் தான் பெற்றுள்ள பணத்தை தானே பெருக்கிக்கொள்ளும் திறன் பெறுவான். சமூகத்தில் அனைவரும் பெறும்பொழுது அவனுக்கும் அத்திறன் வரும்.

ஒருவரிடம் 1 கோடி இருந்தாலும், 1 இலட்சமிருந்தாலும், ஒரு ஆயிரமிருந்தாலும், அது தானே பெருகும் என்பது சட்டம். சமூகம் பெற்ற பின் நாமும் பெறலாம். சமூகம் பெறுமுன் இத்திறமையை நாம் பெற, சமூகம் இத்திறனை எந்த உற்பத்தி ஸ்தானத்திலிருந்து பெறுகிறதோ அந்த உற்பத்தி ஸ்தானத்துடன் நாமும் தொடர்புகொள்ள முடியுமா எனக் காணவேண்டும். முடியுமானால், நாமும் அத்திறனை இன்றே பெறலாம். அந்த உற்பத்தி ஸ்தானம் Good will, நல்லெண்ணம். அது ஆன்மாவின் 12 அம்சங்களில் ஒன்று. சமூகம் நல்லெண்ணத்தால் பணத்தைப் பெருக்குவதால், நல்லெண்ணத்தின் ஆதியுடன் தொடர்புகொண்டால், சமூகத்தில் இத்திறன் பரவி அனைவருக்கும் வரும் முன் நமக்கு அத்திறன் - பணத்தைப் பெருக்கும் திறன் - வரும்.

தம்பி - நீங்கள் சொல்லியதன் சுருக்கம்,

  • உலகில் பணம் பெருகி தன்னைத் தானே பெருக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டது.
  • ஒரு காலத்தில் பணம் மொழி, காற்றுபோல ஏராளமாகும்.
  • அதன்பின் அனைவருக்கும் பணத்தைப் பெருக்கும் திறன் வரும்.
  • அதற்குள் ஒருவர் அதைப் பெற விழைந்தால் நல்லெண்ணத்தால் பெறலாம்.

நீங்கள் good will நல்லெண்ணம் என்பது நாமறிந்த நல்லெண்ணமா? வேறு ஏதேனுமா? 

அண்ணன் - நல்லெண்ணம் என்பதை பல கட்டங்களில் பார்க்கலாம். நான் சொல்வது தூய நல்லெண்ணம், முழுமையான நல்லெண்ணம்.

தம்பி - நாமெல்லோரும் அப்படிப்பட்ட நல்லெண்ணமுடையவர் என்றுதானே நினைக்கிறோம்.

அண்ணன் - அது உண்மையானால் பல ரூபங்களில் அது நமக்குள்ளிருப்பதை வெளிப்படுத்தும். இருளற்ற ஒளி, வறுமையற்ற செல்வம், தோல்வியற்ற வெற்றி, தாழ்வற்ற உயர்வுண்டு. அதுபோல் கெட்ட எண்ணத்தின் சாயலில்லாத நல்லெண்ணம் ஆங்கிலத்தில் பகவான் பெரிய எழுத்தான G மூலம் Good will எனக் குறிப்பிடுகிறார்.

  • ஆதாயத்திற்கான நல்லெண்ணம்.
  • பாசத்திற்கான நல்லெண்ணம்.
  • சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட நல்லெண்ணம்.
  • பயந்து ஏற்படும் நல்லெண்ணம்.

போன்றவையின்றி நல்லெண்ணம், நல்லெண்ணமாகவே இருப்பது Good will, மற்றவை good will. 

தம்பி - எனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்பது கெட்ட எண்ணம். அதற்கெதிரான நல்லெண்ணம் வேண்டும் என்று சொல்கிறீர்களா?

அண்ணன் - ஊரில் நல்லவனாக இருந்தால் மட்டும் நாட்டாண்மைக்காரனாக வர முடியாது. கெட்டவனை அடக்கும் திறனிருந்தால்தான் நாட்டாண்மைக்காரனாக முடியும். வெறும் நல்லெண்ணத்திற்கு சக்தியில்லை. கெட்ட எண்ணத்தை அடக்கும் திறன், ஆளும் திறனிருப்பதே தூய நல்லெண்ணம்.

தம்பி - தூய எண்ணம், தூய நல்லெண்ணம் ஆகியவற்றிற்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு உண்டா? Self-existent தானே தனித்திருப்பது என்பதை விளக்க முடியுமா?

அண்ணன் - மனத்தின் எண்ணம் நல்லதாகவுமிருக்கும், கெட்டதாகவும் இருக்கும். மனத்தில் எழும் நல்லெண்ணம் கெட்ட எண்ணத்திற்கு எதிரானது. ஆன்மாவுக்கு நல்லெண்ணம் மட்டும் உண்டு. அது நல்லெண்ணம்தான். கெட்ட எண்ணத்திற்கு எதிரான நல்ல எண்ணமில்லை. ஒளி எனில் இருட்டு உண்டு, நிழல் உண்டு. ஒளி இருட்டுக்கு எதிரானது. ஆன்மாவில் இருள் இல்லை. ஆனால் ஒளியுண்டு. அது இருளற்ற ஒளி self-existent light.

  • மனத்தின் நல்லெண்ணம் கெட்ட எண்ணத்திற்கு எதிரான நல்லெண்ணம்.
  • ஆன்மாவின் நல்லெண்ணம், நல்ல எண்ணமாகப் பிறந்து, நல்லெண்ணமாக இருப்பது. கெட்ட எண்ணம் என்ற ஒன்று இருப்பதை அறியாதது. 

தம்பி - சமூகம் வளர்ந்து அனைவரும் பணத்தின் பலனைப் பெறும்பொழுது நமக்கும் அது வரும். இப்பொழுதே நமக்கு அத்திறன் வர நமக்கு நல்லெண்ணம் வேண்டும் என்பது எதனால்?

அண்ணன் - ஒரு காலத்தில் படிப்பு, உயர்வு, வசதி, பணம் கொஞ்சம் பேரிடம் இருந்தது. அவர்களைக் கடந்து அது வெளியில் போகக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். அது குறுகிய எண்ணம். கெட்ட எண்ணம். இன்று படிப்பு, உரிமை, உயர்வு, வசதி, பணம் அனைத்தும் அனைவருக்கும் வர வேண்டுமென சமூகம் நினைக்கிறது. இது நல்லெண்ணம். அந்த நல்லெண்ணத்தின் கருவியாக ஜனநாயகம், பல்கலைக்கழகங்கள், தினசரிப் பத்திரிக்கைகள், கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகியவை செயலாற்றுகின்றன.

சமூகத்தின் நல்லெண்ணத்தின் பயன் நமக்கு வர நமக்கு நல்லெண்ணம் தேவை.

தம்பி - நாம் நல்லெண்ணம் என்று கூறுவதற்கும் நீங்கள் சொல்லும் ஆன்மீக நல்லெண்ணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூற முடியுமா?

அண்ணன் - நாம் வாயால் நல்ல கருத்தைத் தெரிவிக்கிறோம். செயலுக்கு வரும்பொழுது கை வாராது. பிறர் வாழ்வில் ஏற்படும் சிறப்பு நமக்கு சந்தோஷம் தருவது ஆன்மீக நல்லெண்ணம்.

தம்பி - நமக்கு நல்லெண்ணமிருந்தால் போதுமா?

அண்ணன் - இப்பணப் பெருக்கம் தன்னைத்தானே வளர்க்கும் திறனால் வருவது. நமக்கு நல்லெண்ணம் தன்னைத் தானே வளர்க்கும் அளவுக்கிருந்தால் நாம் அதனால் பயன் பெறலாம்.

தம்பி - மனதில் படும்படிச் சொன்னால் தேவலை.

அண்ணன் - நம் பணம் நம்மையறியாமல் தானே பெருக ஆரம்பித்தால் நம் நல்லெண்ணம் தானே வளரக்கூடியது எனப் பொருள்.

தம்பி - இல்லை என்றால்?

அண்ணன் - நமக்குள்ள நல்லெண்ணம் அவ்வளவுதான் எனப் பொருள்.

தம்பி - Values பண்புகளைப் பற்றிப் பேசினீர்கள். பிறகு நல்லெண்ணத்தைப் பற்றிச் சொன்னீர்கள். என்ன தொடர்பு?

அண்ணன் - பொருள்கள் goodsக்கு லிமிட் உண்டு. சேவை servicesக்கு லிமிட் உண்டு. ஆனால் பண்புக்கு லிமிட் இல்லை. அளவில்லாத பண்புகளை எந்த மனம் சேகரம் செய்கிறதோ அம்மனம் அளவில்லாத பணம் பெறும் என்கிறேன்.

Self-existent good will தானே தனித்தியங்கும் நல்லெண்ணம் இந்த எல்லாப் பண்புகளையும் தன்னுள் அடக்கியது என்பதால் அதைச் சொன்னேன்.

தம்பி - அப்படி ஒருவருக்கு நல்லெண்ணம் அளவுகடந்து பெருகினால் பணம் எந்த வழியாக வரும்?

அண்ணன் - இக்கேள்விக்குரிய பதிலில் இரு பகுதிகள் உள்ளன.

  1. எவ்வழியாக வரும் என்று சொல்ல முடியாது. நமக்கு நல்லெண்ணமிருந்து சமூகத்தின் நல்லெண்ணத்தை அது தொட்டுவிட்டால் உடனே அது செயல்படும். நம் வாழ்வில் அதற்குரிய நிகழ்ச்சி எழும். முறை, வகை, ரூபம் எது என்று கூற முடியாது. அதிர்ஷ்டம் உற்பத்தியாகும்.
  2. கூற முடியுமிடங்களில் சொல்லக் கூடாது. சொல்வதால் அது நடைபெறாது.

ஜாதகத்திலில்லாத அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யும் வழி இது. அதிர்ஷ்டம் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டால் அது எப்படியும் செயல்படும் என்று நாமறிவோம். 

தம்பி - இதுவரை அன்னையைப் பற்றி எதையும் சொல்லவில்லையே? அண்ணன் - சித் - சக்தி என்பதை நாம் அறிவோம். சச்சிதானந்தத்தில் சக்தி, சித்தியிலிருந்து பிரியும் இடம். நல்லெண்ணம் Good will அந்த இடத்திற்குரியது. அதுவே அன்னையின் பிறப்பிடம். எனவே அன்னை என்பதை Good willமூலம் சொன்னேன்.

தம்பி - அன்னைமூலமாக இதுவரை சொல்லியதை மீண்டும் சொல்ல முடியுமா?

அண்ணன் - அன்னையை நாடுபவர்கட்கு மனத்தில் பணம் உட்பட எதுவுமிருக்காது.

தம்பி - அன்னைமூலமாக பணம் பெற விரும்பினால்,

அண்ணன் - சுருக்கமாகச் சிலவற்றைக் கூறலாம்.

  1. சமர்ப்பணத்தை முழுவதும் மனம் ஏற்கவேண்டும்.
  2. நினைவு அன்னையிலும், செயல் உடலிலும் இருக்க வேண்டும்.
  3. அன்னை விரும்பியவை எழும்பொழுது தவறாது செய்யவேண்டும்.
  4. அன்னைக்குப் பிடிக்காததை எதுவானாலும் செய்யக்கூடாது.
  5. பொய் மனதிலும் எழக்கூடாது.
  6. பணத்தை மனம் நாடக்கூடாது. 

தம்பி - பணத்தை மறந்தால், அது நம்மை மறந்துவிடுமே!

அண்ணன் - அது ஆசையிருக்கும்போது உண்மை. "பணத்தை மனம் நாடக்கூடாது” என்பதை பணத்தாசை மனதில் இருக்கக்கூடாது என்று கூறவேண்டும்.

தம்பி - நல்லெண்ணத்தை எப்படி உற்பத்தி செய்வது?

அண்ணன் - அது புதிய தலைப்பு. நல்லெண்ணம் உள்ளவர் இதனால் பயன்பட்டால் போதும்.

தம்பி - இல்லாதவர்?

அண்ணன் - இல்லை என்று யார் சொல்வது?

தம்பி - பொதுவாகத் தெரியுமே?

அண்ணன் - பிறருக்கு அது தெரிவதால் அவருக்குப் பயனில்லை.

தம்பி - அவருக்கே தெரிந்தால்?

அண்ணன் - அப்படித் தெரிந்தால், அவர் ஏற்றுக்கொள்வாரா?

தம்பி - ஏற்றுக்கொண்டால்?

அண்ணன் - அவருக்கு வழி சொல்லலாம்.

தம்பி - அதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

அண்ணன் - இந்த முறை உனக்குப் பயன்படும். நீ பிறருக்குச் சொல்லப் பயன்படாது.

தம்பி - ஏன்?

அண்ணன் - அப்படி ஒருவர் உன்னை இதுவரை கேட்கவில்லை. கேட்டால் பயன்படும். அவர் தனக்கு எவ்வளவு நல்லெண்ணமுண்டு, எவ்வளவு கெட்ட எண்ணமுண்டு, அவை எந்த நிலையைச் சேர்ந்தவை எனப் பிரித்து, அவற்றிற்கு எதிரான நல்லெண்ணத்தை மனதில் ஏற்படுத்தவேண்டும். விளக்க வேண்டுமானால் அதற்குத் தனிக் கட்டுரை எழுதவேண்டும்.

தம்பி - முக்கியக் கருத்துகள்வரை சொல்லலாமா?

அண்ணன் - உள்ளதை அறிந்து, ஏற்று, சமர்ப்பணம் செய்து, எதிரான நல்லதைச் செய்ய மனம் ஒப்புக்கொண்டு, அதனால் சந்தோஷப்படவேண்டும்.

தம்பி - அடையாளமாகச் சிலவற்றைச் சொல்லலாமா?

அண்ணன் - அப்படி மனம் மாறியது உண்மையானால், நாம் போகும் இடங்களில் நல்லது நடக்கும். நமக்கு நல்ல செய்திகள் மட்டும் வரும்.

தம்பி - குறிப்பாக உபாயம் ஒன்றில்லையா?

அண்ணன் - வேறு ஓர் இடத்தில் ஏற்கனவே சொல்லியிருக்கிறதே!

நமக்கு என்ன அதிர்ஷ்டம் வேண்டுமோ, அது நம்மைச் சார்ந்தவர்க்கு எல்லாம் வரவேண்டும் என சந்தோஷமாக மனம் கேட்கவேண்டும். நமக்கு அது கடைசியில் வரவேண்டும் எனவும் பிரார்த்திக்க வேண்டும்.

******



book | by Dr. Radut