Skip to Content

பகுதி 2

XIII. The Divine Maya

 

We are in reality Existence. Page No.112

Existence acts. Para No.1

It creates by its act.

It creates by a power.

That power is from pure delight.

It is the delight of the conscious being.

That being is our self.

It is the self of all our moods and modes.

It is the cause, object and goal of our doing.

Our doing is our becoming and creating.

The poet, the artist and the musician also create.

They create out of their inner potentiality.

It is a development of that potentiality.

The potentiality lies in the unmanifested self.

It is developed into a form of manifestation.

The thinker, statesman, mechanist also do so.

Something lies hidden in themselves.

They bring it out into a shape of things.

It is truly themselves.

It is still themselves cast into form.

It is so with the world.

 

13. தெய்வீக மாயை

 

சத் என்பது நாம்.

சத் செயல்படுகிறது.

அதன் செயல் சிருஷ்டி.

சக்தியால் அது சிருஷ்டிக்கிறது.

சக்தி ஆனந்தத்தில் எழுகிறது.

அவ்வானந்தம் சத் புருஷனுடையது.

சத் புருஷனே நமது ஜீவன்.

நம் குணங்கள், செயல்கள் அதனின்று எழுகின்றன.

அதுவே காரணம், காரியம், இலக்கு.

நம் செயல் என்பது நம் சிருஷ்டி, நமது ஜீவன் பிரகிருதியாவது.

கவி, ஓவியன், கருமானும் சிருஷ்டிக்கிறான்.

அவர்களது சிருஷ்டி அவருள்ளிருந்து எழுகிறது.

சிருஷ்டி என்பது வித்து முளைப்பது.

சிருஷ்டியைக் கடந்த பிரம்மத்தில் அவ்வித்துள்ளது.

வித்து உருவம் பெற்ற சிருஷ்டியாகிறது.

அரசியல்வாதி, சிந்தனையாளர், கருமான் ஆகியோரும் அதையே

செய்கின்றனர்.

இவற்றுள் புதைந்துள்ளது ஒன்றுண்டு.

புதைந்துள்ளதை புனைவது அவர் கடமை.

அதுவே நாம்.

சிருஷ்டி உருவம் பெற்ற நாம் என்பது கருத்து.

உலகமும் அதுவே.

 

 

 

It is equally so with the Eternal.

Creation is self-manifestation.

All becoming too is the same.

The seed evolves.

What evolves is already there.

It is pre-existent in the being.

It is pre-destined in its will to become.

It is pre-arranged in the delight of becoming.

There is the original plasm.

It holds it in its force of being the resultant organism.

It is always a secret.

It is self-knowing.

It is burdened with the secret.

Its impulse is irresistible.

It labours to manifest the form of itself.

It is charged with that form.

There is a distinction between the man and the force.

The force works in himself.

He works in a material.

It is important to know the distinction between himself, the force

and the material.

To do so he must be an Individual.

It is he who creates and develops out of himself.

There is a further reality.

It is the force is himself.

His consciousness is individualised.

It instrumentalises himself.

That consciousness is himself.

 

பிரம்மமும் அதுவே.

சிருஷ்டி என்பது பிரம்ம வெளிப்பாடு.

பிரகிருதி என்பதும் அதுவே.

விதை முளைக்கிறது.

முளை என்பது ஏற்கனவே உள்ளேயிருப்பது.

அது ஜீவனில் ஏற்கனவே உள்ளது.

அதன் சிருஷ்டித்திறனில் அது விதிக்கப்பட்டது.

இயற்கையின் ஆனந்தத்திலும் அது ஏற்கனவேயுள்ளது.

ஆதியில் அது உள்ளது.

முடிவு ஆதியிலுள்ளது.

அது இரகஸ்யம்.

அது தன்னையறியும்.

அது இரகஸ்யத்தைத் தாங்கி வருகிறது.

அதன் உத்வேகம் தடுக்க முடியாதது.

தன்னுருவத்தை வெளிப்படுத்த அது பாடுபடுகிறது.

ரூபம் அதனுள் பொதிந்துள்ளது.

மனிதனுக்கும், அவனுடைய சக்திக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

சக்தி அவனில் செயல்படுகிறது.

அவன் செயல் அவன் அரங்கம்.

தனக்கும், தம் சக்திக்கும், தன் அரங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிய

வேண்டும்.

அதை அறிய அவன் ஒரு ஜீவனாக இருப்பது அவசியம்.

அந்த ஜீவன் சிருஷ்டிப்பான். தன்னுள்ளிருந்து சிருஷ்டிப்பான்.

இதைக் கடந்த உண்மையுண்டு.

அதாவது அவனே அச்சக்தி.

அவனது ஜீவியம் அவனை ஜீவனாக்கியது.

தன்னைத் தானே சிருஷ்டியின் கருவியாக்கிக் கொள்கிறான்.

ஜீவியமும் அவனே.

 

 

That instrumentalisation too is himself.

Form is the resultant.

That too is himself.

The aim is self-play.

The means is self-formation.

There is only one existence.

Force also is one.

The delight of being too is one.

It concentrates at various points.

Each point appears to be a separate individual.

Each proclaims, "This is I".

The existence produces. Page No.113

It produces itself. Para No.2

It can be nothing other than itself.

It is working out a play.

It is a rhythm.

The play is a development of its own existence.

It is its own force of consciousness.

It is its own delight of being.

Many things come into this world.

They all seek nothing but the existence.

Their aim is to be.

They endeavour to arrive at the intended form.

They try to enlarge their self-existence in that form.

They all try to develop.

Their aim is to manifest.

Their effort is to increase.

 

கருவியாக்குவதும் அவனே.

ரூபம் முடிவு.

அதுவும் அவனே.

லீலையே இலட்சியம்.

சொரூபம் லீலையின் கருவி.

சத் என்பது ஒன்றே.

சக்தி என்பதும் ஒன்றே.

ஆனந்தமும் ஒன்றே.

பல இடங்களில் அது செயல்படுகிறது.

ஒவ்வொரு இடமும் தனித்தனியாகத் தெரிகின்றது.

ஒவ்வொன்றும் "நானே அது" என அறிவிக்கின்றது.

சத் சிருஷ்டிக்கிறது.

சத் தன்னையே சிருஷ்டிக்கிறது.

தன்னைத் தவிர வேறெதுவுமில்லை.

அது லீலையின் பாங்கு.

அது ஓர் அலை.

லீலை சத் தன்னை வெளிப்படுத்துவதாகும்.

அது தன் ஜீவியத்தின் சக்தி.

அது தன் ஜீவனின் ஆனந்தம்.

உலகில் எழுபவை அனந்தம்.

அவை அனைத்தும் தேடுவது சத்.

இருப்பதே இலட்சியம்.

சொரூபத்தை அடைவதே இலட்சியம்.

சொரூபத்தால் சத் தன்னை விரிவுபடுத்த முயல்கிறது.

வளர்ச்சியே நோக்கம்.

வெளிப்பாடே இலட்சியம்.

வளர்வதே முயற்சி.

 

 

There is consciousness in it.

There is power in it.

They try to realise them.

They try to realise them infinitely.

Coming into manifestation is a delight.

They aim at it.

The being takes a form.

There is delight even in it.

There is a rhythm of consciousness.

In it too there is delight.

Within its deepest being there is active Delight.

There is Existence and consciousness too.

They suggest several ideas.

They indicate various directions.

To them many means are possible.

Such measures aggrandise and perfect the delight.

These are the play of forces.

A goal is possible for this movement. Page No.113

Things tend to some completeness Para No.3

in the goal.

It can only be the completeness of its self-existence.

(The Individual exists in the whole,

The whole constitutes the individual).

The goal can be the power of its self-existence.

Self-existence contains consciousness.

The consciousness has its delight of being.

The individual consciousness is concentrated.

 

அதனுள் ஜீவியம் உண்டு.

அதனுள் சக்தியுண்டு.

அவற்றை அடைவதே நோக்கம்.

அனந்தமாக அடைவது பெரியது.

வெளிப்பாடு ஆனந்தம்.

அதுவே நோக்கம்.

ஜீவன் ரூபம் பெறுகிறது.

அதிலும் ஆனந்தமுள்ளது.

ஜீவியத்திற்கு அதிர்வான அலைகள் உள்ளன.

அங்கும் ஆனந்தமுண்டு.

ஜீவனின் ஆழத்தில் ஆனந்தம் ஜீவனோடுள்ளது.

அங்கு சத்தும், ஜீவியமும் உண்டு.

அவற்றினின்று எண்ணற்ற எண்ணங்கள் தோன்றும்.

அவை எல்லாத் திசைகளிலும் செல்பவை.

அவற்றைச் சாதிக்கும் முறைகள் ஏராளம்.

அம்முறைகள் ஆனந்தத்தைத் தீவிரப்படுத்திச் சிறப்பாக்கும்.

இவை லீலை எனப்படும்.

இந்தப் போக்கிற்கு இலட்சியமிருக்கலாம்.

இலட்சியம் என்பது முழுமை பெறுவது.

முழுமை என்பது சத்திற்குரியது.

(பகுதி முழுமையிலுள்ளது,

முழுமையுள் பகுதியுண்டு).

சத்தின் சக்தி இலட்சியமாகலாம்.

சத்தினுள் ஜீவியம் உண்டு.

ஜீவியத்தினுள் ஆனந்தமுண்டு.

பகுதி இறுக்கமானது.

 

 

It is concentrated within its limits.

These limits are the individual formation.

The finite has its own self-conception.

Absolute completeness is a goal.

It is not feasible within the finite self-conception.

There is only one possible goal.

It is the emergence of the infinite consciousness.

It has to emerge in the individual.

It is the recovery of the truth of himself.

He does it by Self-knowledge.

Self-realisation completes it.

It is the truth of the Infinite in being.

It is the Infinite in consciousness.

It is the Infinite in delight.

It is not the original delight.

It is delight lost in ignorance and repossessed.

It is his own Self and Reality.

The finite is only a mask of them.

The finite is an instrument for various expressions.

Sachchidananda is vast in His existence. Page No.113

He extends in space and time. Para No.4

He realises it as His world play.

This is the very nature of the world play.

Therefore we have to conceive of a process.

The first stage of involution and self-absorption is there.

The conscious being is self-absorbed into the substance.

The substance is indivisible and dense.

 

இறுக்கத்திற்கு எல்லையுண்டு.

பகுதியின் ரூபம் எல்லையை நிர்ணயிக்கிறது.

பகுதிக்கும் சிருஷ்டித் திறனுண்டு.

இலட்சியம் என்பது பிரம்மத்தின் முழுமை.

பிரம்மத்தின் முழுமையை பகுதியுள் எட்ட முடியாது.

ஓர் இலக்குண்டு.

அனந்தன் அதனின்று எழலாம்.

அது மனிதனில் எழவேண்டும்.

மனிதன் தன் சத்தியத்தை அங்ஙனம் உணருகிறான்.

சுய-ஞானம் தருவது இந்த சத்தியம்.

தன்னையறிவது ஞானத்தைப் பூர்த்தி செய்கிறது.

அனந்த ஜீவனின் சத்தியம் அது.

அது அனந்த ஜீவியத்தின் சத்தியம்.

முடிவற்ற ஆனந்த சத்தியம் அது.

ஆதாரமான ஆனந்தம் அல்ல.

அஞ்ஞானத்தில் தன்னை இழந்து மீண்டும் பெற்ற ஆனந்தம் அது.

அதுவே அவனது சத்தியம், பிரம்மம்.

சிறியது பெரியதன் முகமூடி.

பெரியது சிறியதில் பலவகையாக வெளிப்படுகிறது.

சச்சிதானந்தம் பரந்தது.

அது காலத்திலும், இடத்திலும் வெளிப்படும்.

அதுவே லீலை.

அது லீலையின் சுபாவம்.

எனவே எப்படி அது வந்தது என நாம் அறிய வேண்டும்.

முதற்கட்டம் சிருஷ்டி, தன்னுள் தான் மறைவது.

சத்புருஷன் ஜடத்துள் தன்னை மறைத்துக்கொள்கிறான்.

ஜடம் திடமானது, பிரிக்க முடியாதது.

 

 

They are necessary for finite variation.

The second stage is an emergence.

It is out of the self-imprisoned force into formal being.

The formal being is a living being and a thinking being.

The final stage is a release.

It is released into the formed thinking being.

It is a free realisation of itself.

It is the One and Infinite at play in the world.

The release recovers the full Sachchidananda.

Even in this stage it is so secretly, really, eternally.

This is a triple movement.

The world is an enigma.

This is the key to the enigma.

Evolution is a phenomenal Page No.114

truth of the universe. Para No.5

It is modern.

There is an ancient truth of Vedanta.

Thus the modern truth is received into the ancient truth.

It is so illumined.

Thus it is justified.

The key shows us all the meaning of the modern truth.

Evolution is a modern truth.

After all, it is the old truth.

The truth is the development of the Universe.

The Universe develops successively in Time.

We study Force and Matter.

Therefore the truth is seen opaquely.

 

பல சிறியது ஏற்பட இது அவசியம்.

இரண்டாம் கட்டம் மறைந்தது வெளிவருவது.

தானே சிறைப்பட்டது, ரூபம் பெற்ற ஜீவனாகிறது.

ரூபம் ஜீவனும், சிந்தனையும் பெற்றது.

முடிவு விடுதலை.

சிந்திக்கும் ஜீவனாக அது வெளிவருகிறது.

தன்னை சுதந்திரமாக, அது அப்படி அறிகிறது.

ஏகனான அனந்தன் உலகத்தில் செய்யும் லீலை அது.

விடுதலை சச்சிதானந்தத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையிலும் சச்சிதானந்தம் இரகஸ்யமான பிரம்மமாக உள்ளது.

இது மூன்று பாகம் கொண்ட சலனம்.

உலகம் ஒரு புதிர்.

இச்சலனம் இப்புதிருக்கான விடை.

பரிணாமம் என்பது பிரபஞ்சவளர்ச்சி.

இது புதியது.

பழைய வேதாந்தக் கருத்து ஒன்றுண்டு.

இப்புதிய கருத்து இப்புதிர்மூலம் வேதாந்தத்தை ஏற்கிறது.

புதியது பழையதால் பிரகாசிக்கிறது.

அதனால் இரண்டும் ஒன்றேஎனப் புரிகிறது.

இப்புதிய கருத்தின் சாரம் முழுவதும் இப்புதிரால் விளக்கப்படுகிறது.

பரிணாமம் புதியது.

என்றாலும் அக்கருத்து பழைய கருத்தே.

பிரபஞ்ச வளர்ச்சியே அவ்வுண்மை.

பிரபஞ்சம் காலத்துள் வளர்கிறது.

நாம் ஜடத்தையும், சக்தியையும் ஆராய்ச்சி செய்கிறோம்.

அதனால் உண்மை கலங்குகிறது.

 

 

The key helps us find its own full sense.

It is the justification.

The Vedanta are Scriptures.

They still preserve the old truth.

That truth is eternal.

It has Light.

That Light illuminates itself.

This is mutual self-discovery.

It is self-illumination.

The old truth is Eastern.

The new knowledge is Western.

The thought of the world is turning.

It is turning towards the fusion of the two.

We have found that Page No.114

all is Sachchidananda. Para No.6

That does not explain all.

We know the Reality of the world.

That Reality has turned into this phenomenon.

We do not know that process.

We have the key of the riddle.

This key must turn in its lock.

We are still to find that lock.

Sachchidananda is Existence - Consciousness - Delight.

It does not work directly.

A magician appears almost irresponsible.

He is sovereignly irresponsible.

Sachchidananda builds up the worlds.

 

இந்த இரகஸ்யம் முழு உண்மையை விளக்குகிறது.

புரியும் வகை இதுவே.

வேதாந்தம் நமது பொக்கிஷம்.

பழைய சத்தியம் அதனுள் உள்ளது.

சத்தியம் நித்தியம்.

அது ஜோதிமயமானது.

ஜோதியால் ஜோதி பிரகாசிக்கிறது.

இரண்டும் ஒன்றையொன்று அறியும் முறை இது.

இது சுயம்பிரகாசம்.

பழைய உண்மை கீழண்டை நாடுகளைச் சேர்ந்தது.

புதிய ஞானம் மேல்நாட்டைச் சேர்ந்தது.

உலகம் இவ்வுண்மையை நாடுகிறது.

இரு உண்மைகளும் சேருவதை உலகம் எதிர்பார்க்கிறது.

உலகம் சச்சிதானந்தம் எனக் கண்டோம்.

அதனால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.

உலகச் சத்தியத்தை நாமறிவோம்.

சத்தியம் தோற்றமான உலகமாயிற்று.

எப்படிஎன நாமறியோம்.

புதிருக்கு விடையை நாமறிவோம்.

சாவிக்குரிய பூட்டு தேவை.

பூட்டை நாம் இன்னும் காணவில்லை.

சத், சித், ஆனந்தம் என்பது சச்சிதானந்தம்.

அது நேரடியாகச் செயல்படுவதில்லை.

மந்திரவாதி செய்வது நமக்கு விளங்காது.

ஏதோ செய்வதுபோல் தோன்றும்.

சச்சிதானந்தம் உலகை சிருஷ்டிக்கிறது.

 

 

It builds up the universe.

It does not act like a magician.

It follows a process.

It is a Law.

We can analyse the Law. Page No.114

The Law is an equilibrium. Para No.7

It is a play of forces.

It determines the play into fixed lines.

It occurs by development.

It appears as an accident.

In the past energy is released.

It forms into a habit.

The energy released realises itself.

This is apparant.

It is a secondary truth.

To us it is final.

It is final for the Force.

Force itself is not final.

Force is an expressions of Self-Existence.

The Force has taken this line.

That line corresponds to some self-truth.

It is the self-truth of that Existence.

The Existence governs the Force.

It determines its destination and curve.

Consciousness is the nature of the original Existence.

Consciousness is the essence of its Force.

This truth must be a self-perception in Conscious Being.

 

அது பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.

அது மந்திரவாதியன்று.

அதற்கு ஒரு முறையுண்டு.

அது ஒரு சட்டம்.

நாம் சட்டத்தை ஆராயலாம்.

சட்டம் என்பது அமைதியான நிலை.

அது லீலை.

சட்டம் லீலையை ஒரு வழியில் செலுத்தும்.

அது அபிவிருத்தி.

அது தானே நடப்பதாகத் தோன்றுகிறது.

கடந்த செயல் சக்திவாய்ந்தது.

அது பழக்கமாகும்.

வெளிப்பட்ட சக்தி செயல்படும்.

அது தெளிவு.

இது இரண்டாம்பட்சம்.

அதுவே நமக்கு முடிவு.

அது சக்திக்கும் முடிவு.

சக்தி முடிவானதில்லை.

சக்தி என்பது சத் வெளிப்படுவது.

சக்தி இவ்வழிச் செல்கிறது.

இவ்வழி சத்துடைய சத்தியத்திற்குரியது.

இந்த சத்தியம் சத்துடையது.

சத் சக்தியை ஆளும்.

சத் சக்தியின் போக்கையும் முடிவையும் நிர்ணயிக்கிறது.

ஜீவியம் சத்தின் வெளிப்பாடு.

ஜீவியம் சக்தியின் சாரம்.

இந்த சத்தியம் சத்புருஷனுடைய சுயநினைவு.

 

 

The Force has taken the line of this determination.

It comes from the self-directive knowledge.

That knowledge is inherent in the Being.

It guides its own Force.

It is a logical inevitability.

It is the original self-perception.

Here lies the truth of cosmic manifestation.

A force of creation presides over that manifestation.

That is a force of a Truth perceived by the existence.

It is an infinite existence.

It is a self-aware existence.

It lies in the universal consciousness.

It is a self-determining power.

The infinite consciousness works. Page No.115

It produces results. Para No.8

We are thinking of Maya between them.

Why is it necessary?

This existence is Self-aware.

It is of Infinite range.

It freely creates forms.

The forms remain in play.

The play continues till it is ordered to stop.

The old Semitic Revelation tells us of it.

"God said let there be Light and there was Light".

By this, we assume a power of consciousness.

It can determine light out of everything that is not light.

We also presume a directing faculty.

 

சக்தி இப்போக்கை ஏற்றுள்ளது.

அது ஞானத்தின் வழிப்படிச் செயல்படுகிறது.

ஞானம் சத்தில் உள்ளது.

அது தன் சக்தியை வழிநடத்துகிறது.

இது தவிர்க்க முடியாதது.

இதுவே ஆதியின் அர்த்தம்.

இது பிரபஞ்ச சிருஷ்டியின் சத்தியம்.

சிருஷ்டியை நடத்துவது ஒரு சக்தி.

சத் சத்தியத்தின் சக்தியைக் காண்கிறது.

அது அனந்தமான சத்தியம்.

அது தன்னையறியும்.

அது பிரபஞ்ச ஜீவியத்திலுள்ளது.

அது தன்னைத் தானே நிர்ணயிக்கவல்லது.

அனந்த ஜீவியம் செயல்படுகிறது.

அது சிருஷ்டிக்கிறது.

இவற்றிடையே நாம் மாயையை நினைக்கிறோம்.

மாயைக்கு என்ன அவசியம்?

சத் தன்னையறியும்.

அது அனந்தமானது.

அனந்தம் ரூபங்களை சிருஷ்டிக்கிறது.

ரூபங்கள் லீலையில் ஈடுபடுகின்றன.

அதைத் தடுக்கும்வரை லீலை தொடரும்.

பைபிள் காலத்தில் அதைக் கூறினார்கள்.

"கடவுள் ஜோதி வேண்டும் என்றார், ஜோதி ஏற்பட்டது".

இது உண்மையானால் அது ஜீவியம்.

ஜோதியற்றதினின்று ஜோதியை ஏற்படுத்துகிறது.

வேண்டும் என்பதைச் செய்ய முடியும்எனத் தெரிகிறது.

 

 

It is an active power.

It corresponds to the original perceptive power.

This power brings out the phenomenon.

It works out Light.

It is according to the original perception.

There are other possibilities.

They are infinite.

This power prevents these possibilities to prevent Light.

Infinite consciousness produces infinite results.

We have to settle upon a fixed Truth.

It is an order of truths.

It builds a world.

That world is in conformity with what is fixed.

It demands a selective faculty.

It is a faculty of knowledge.

It is commissioned to shape finite appearance.

It emerges out of the Infinite Reality.

This power was known to the Vedic Seers. Page No.115

They knew it as Maya. Para No.9

To them it had a meaning.

It is a power of infinite consciousness.

It can comprehend.

It contains in itself.

It measures out.

Measuring out is to form.

Form is delimitation.

It gives a Name.

 

அது சக்திவாய்ந்தது.

ஆதியில் சுயமாக உற்பத்தியான சக்தியைச் சேர்ந்தது.

அச்சக்தி இத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அது ஜோதியை ஏற்படுத்துகிறது.

இது ஆதியின் கருத்து.

வேறு பல நடக்கலாம்.

அவை அனந்தம்.

இவை ஜோதியைக் காப்பாற்றுகின்றன.

அனந்த ஜீவியம் அனந்தமான பலன் தரும்.

நமக்கு ஒரு குறிப்பிட்ட பலன் தேவை.

அது முறையான சத்தியம்.

அது உலகை சிருஷ்டிக்கிறது.

அவ்வுலகம் நாம் எதிர்பார்ப்பது.

அதைச் செய்ய ஒரு சக்தி தேவை.

அது ஞானம்.

குறிப்பிட்ட தோற்றத்தை அது ஏற்படுத்தும்.

அனந்த சத்தியத்திலிருந்து எழுவது அது.

வேதரிஷிகள் இதை அறிவார்.

அதை மாயை என்றனர்.

மாயையை அவர் விவரித்தனர்.

மாயை அனந்த ஜீவியத்தின் சக்தி.

அதற்கு விளங்கும்.

அது உலகைத் தன்னுட்கொண்டது.

அதனால் அளக்க முடியும்.

அளவு என்பது ரூபம்.

ரூபம் என்பது வரையறை.

அதற்கு நாமம் உண்டு.

 

 

It shapes.

It does so from a vast Truth.

It is an illimitable Truth.

It is of infinite existence.

The truth of essential being is static.

The truth of active being is ordered.

It is Maya that changes the one into another.

It can be put in metaphysical language.

All is all in the Supreme being.

There is no barrier of separative consciousness.

All is in each and each is in all in the phenomenal being.

It is for the play.

It is a play of existence with existence.

It is so with consciousness too.

Force also separates for the purpose of play.

Delight plays with delight.

The mental play conceals this whole.

It is an illusion.

Maya came to be known as illusion.

Maya persuades each he is in all.

It does not permit him to see all is in each.

It gives the illusion that he is in all as a separate being.

Truly he is inseparable.

He is one with all the rest of existence.

We have to emerge from this error.

Emerging out of it, we come into the supramental play.

There we see the truth of Maya.

There 'each' and 'all' co-exist.

 

அதனால் உருவகப்படுத்த முடியும்.

பரந்த சத்தியத்தின் பகுதியது.

அச்சத்தியம் வரையறையற்றது.

அது அனந்தமான சத்.

அடிப்படை ஜீவனின் சத்தியம் அசைவற்றது.

சலனமான ஜீவனின் சத்தியம் முறையானது.

இம்மாற்றத்தைச் செய்வது மாயை.

இதைத் தத்துவமாகக் கூறலாம்.

ஆதியில் எல்லாம் எல்லாவற்றிலுமுள்ளது.

பிரிக்கும் ஜீவியம் அங்கில்லை.

தோற்றத்தில் அனைத்தும் ஒன்றிலும், ஒன்றில் அனைத்தும் உள்ளன.

அதுவே லீலை.

சத் சத்துடன் விளையாடுகிறது.

ஜீவியமும் அப்படியே.

சக்தியும் பிரிந்து விளையாடுகிறது.

அனந்தமும் விளையாட்டில் கலந்துகொள்கிறது.

மனம் இம்முழுமையைக் காண்பதைத் தடுக்கிறது.

அது மாயை.

மாயை என்பது இல்லாததுஎன நாம் கொண்டோம்.

அனைத்தும் தன்னுள் இருப்பதாக மட்டும் மாயை கூறுகிறது.

அனைத்தும் அனைத்தினுள்ளிருப்பதைப் பார்க்க மறுக்கிறது.

எல்லாவற்றிலும் தான் தனித்திருப்பதாகத் தோன்றுகிறது.

உண்மையில் அவற்றைப் பிரிக்க முடியாது.

நாம் அனைத்துடனும் ஒன்றியவராவோம்.

இத்தவற்றிலிருந்து நாம் வெளிவரவேண்டும்.

வெளிவந்தால் சத்தியஜீவியம் உண்டு.

அங்கு மாயையின் உண்மை தெரியும்.

அங்கு நாமும், அனைத்தும் இணைந்துள்ளோம்.

 

 

There is an inseparable unity.

It is the unity of the one truth.

It is the multiple symbol of that truth.

The lower Maya is at present deluding.

It is mental Maya.

It has first to be embraced.

Then it must be overcome.

It is God's play with division and darkness.

It is play with limitation, desire and strife.

It is a suffering in which He subjects Himself to the Force.

After all, the Force came out of Him.

By his obscure, He suffers Himself to be obscured.

There is the other Maya.

It is concealed by the mental play.

It has to be overpassed and embraced.

It is God's play.

It is His play with His infinite existence.

He plays with the splendours of knowledge.

He masters the glories of the Force.

He does so with the ecstasies of illimitable love.

Thus He emerges out of His Force.

He holds her now.

The Force went forth from Him at first for a purpose.

It is to illumine her by fulfilment.

There is a distinction between Page No.116

the lower and higher Maya. Para No.10

It is a link in thought.

 

அது பிரிக்கமுடியாத ஐக்கியம்.

அது சத்தியத்தின் ஐக்கியம்.

ஒன்று என்பது பலவாகத் தோன்றும் தோற்றம் அது.

உலகத்தில் மாயை கண்ணை மறைக்கிறது.

இது மனத்தின் மாயை.

இதை முதல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஏற்றபின் அதைக் கடக்கவேண்டும்.

பிரிவினையிலும், இருளிலும் இறைவன் லீலை அது.

ஆசை, சச்சரவு, அளவு, இந்த லீலைக்கு ஆதரவு.

இறைவன் தன் சக்திக்குத் தானே கட்டுப்பட்டு கஷ்டப்படுகிறான்.

சக்தி இறைவனுடையது.

இருளில் தான் உழலச் சம்மதிக்கிறான்.

வேறொரு மாயையுண்டு.

மனத்தால் அது மறைக்கப்படுகிறது.

அதை ஏற்று, கடக்கவேண்டும்.

அது இறைவனின் லீலை.

மனித வாழ்வில் இறைவனின் லீலை அது.

ஞான விகாசம் அவன் திடல்.

சக்தியின் பெருமை அவன் கருவி.

அளவற்ற அன்பின் பெருக்கு அவனது அரங்கம்.

தன் சக்தியிருந்து தான் வெளிவரும் பாங்கு அது.

தற்பொழுது சக்தி அவனுக்குட்பட்டது.

அக்காரணத்திற்காக சக்தி முதல் அவனின்று எழுந்தது.

ஜோதியால் தன்னைப் பூரிக்க சக்தி கையாண்ட உபாயம் அது.

மாயையில் இரு பகுதிகள் உள்ளன. அவை வேறுபட்டவை.

அதுவே எண்ணத்தை உயர்த்தும் ஏணி.

 

 

It is a cosmic Fact.

The pessimist philosophy misses its existence.

The illusionist philosophy neglects it.

They mistake the Overmind to be the Mind.

They believe Mind created the world.

If the world had been created by mental Maya, it would be a

paradox.

It would be inexplicable.

It would be a floating nightmare of conscious existence.

It cannot be called illusion or reality.

The Mind is only an intermediate term.

Above is the creative governing knowledge.

Below is the soul imprisoned in its works.

Sachchidananda is lost in self-oblivion.

He is involved in one of His lower movements.

It is the self-oblivious absorption of Force.

The Force is lost in the form of her own workings.

Sachchidananda must return towards Himself.

Mind is one of His instruments.

It is an instrument in the descent and the ascent.

Mind is an instrument of creation in the descent.

Mind is not the secret creatrix.

It is a transitional stage in the ascent.

Mind is not our high original source of cosmic existence.

Nor is it the consummate term.

There are different philosophies. Page No.116

Some of them recognise Mind Para No.11

as the creator of the worlds.

 

அது பிரபஞ்ச சத்தியம்.

நம்பிக்கையற்றவர் இதைக் காண மறுக்கிறார்கள்.

மாயாவாதிகள் இதைப் புறக்கணிக்கிறார்கள்.

தெய்வலோகத்தை அவர்கள் மனம்எனக் கொள்கின்றனர்.

மனம் உலகை உற்பத்திசெய்ததாக நினைக்கிறார்கள்.

மனம் உலகை சிருஷ்டித்தது உண்மையானால், அது ஒரு புதிராகும்.

அதை விளக்கமுடியாது.

அது சத்தினுடைய வாழ்வை சிம்மசொப்பனமாக்கும்.

அது சத்தியமாகாது; மாயையுமாகாது.

மனம் இடைப்பட்ட கருவி.

மேலே சிருஷ்டிஞானம் உண்டு.

கீழே ஆத்மா வேலையுள் சிறைப்பட்டுள்ளது.

சச்சிதானந்தம் தன்னுள் தன்னை இழந்துள்ளது.

சச்சிதானந்தம் மனிதஉலகில் சிறைப்பட்டுள்ளது.

சக்தி தன்னை மறந்த நிலை அது.

சக்தி ரூபத்துள் மறைந்துள்ளது.

சத் மீண்டும் தன்னையடையவேண்டும்.

மனம் அதன் பல கருவிகளுள் ஒன்று.

சிருஷ்டிக்கும், பரிணாமத்திற்கும் மனம் கருவி.

சிருஷ்டி நம்மை நோக்கிவரும்பொழுது மனம் கருவியாகச் செயல்படுகிறது.

மனம் சிருஷ்டிக்கர்த்தாயில்லை.

பரிணாமத்திற்கு மாறும் கருவி மனம்.

பிரபஞ்சத்துள் ஆதிமூலம் மனமில்லை.

மனம் பிரபஞ்சத்தின் முடிவான ரூபமுமில்லை.

தத்துவங்கள் பல.

சில மனமே உலகை சிருஷ்டித்ததாகக் கருதுகின்றன.

 

 

They accept Mind as the original principle.

There are forms in the Universe.

They consider Mind as a mediator.

Some are called noumenal.

Others are idealistic.

The noumenal consider the world as created by Mind.

They do not recognise any other in the cosmos.

Thought and idea go with Mind.

But Idea may be purely arbitrary.

It may not have any essential relation with Truth.

Let us suppose such a truth exists.

It then becomes a mere Absolute.

It is aloof from all relations.

It is irreconcilable with our world.

What is in front is the conceptive phenomenon.

There is a Truth behind.

The idealistic interpretation supposes a relation between them.

It is a relation of opposition and antinomy.

Sri Aurobindo presents yet another view.

It goes farther in idealism.

It sees the creative Idea.

It is a Real Idea.

The Real-Idea has a spiritual meaning.

It is a power.

A power of Conscious-Force.

It can express the real being.

It is born out of the real being.

It partakes of its nature.

 

மனத்தையே அவை ஆதிஎனக் கருதுகின்றன.

அவை பிரபஞ்சரூபங்கள்.

மனத்தை இடைப்பட்டதாக அவை கருதுகின்றன.

சில தத்துவங்கள் யதார்த்தமானவை.

மற்றவை இலட்சியமானவை.

யதார்த்தமான தத்துவம் உலகை மனம் சிருஷ்டித்ததாகக் கருதுகிறது.

பிரபஞ்சத்தில் மனத்தைமட்டுமே அவை கருதுகின்றன.

எண்ணமும், கருத்தும் மனத்தைச் சார்ந்தவை.

எண்ணம்என்பது நாமே வைத்துக்கொள்வது.

அதற்கும் சத்தியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அப்படி ஒரு சத்தியமிருப்பதாகக்கொள்வோம்.

அது பிரம்மம்எனப்படும்.

அதற்கும் உறவுக்கும் தொடர்பில்லை.

உலகத்திற்கு அது ஒத்துவாராது.

எண்ணம் தோற்றமாக முன்னே நிற்கிறது.

அதன்பின் ஒரு சத்தியம் உண்டு.

இவற்றிடையே தொடர்புண்டுஎன இலட்சியவாதம் கூறுகிறது.

இது எதிரான உறவு.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் அடுத்தக்கட்ட இலட்சியத்தைப்பற்றிப் பேசுகிறார்.

அவர் கூறுவது இலட்சியத்தைக்கடந்தது.

சிருஷ்டியின் எண்ணக்கருவை அது காண்கிறது.

அதை ஜீவனுள்ள எண்ணம்எனக் கூறுகிறது.

அதற்கு ஓர் ஆன்மீகவிளக்கம் உண்டு.

அது ஒரு சக்தி.

தன்னையறியும் சக்தியின் பகுதியது.

அதனால் சத்புருஷனை வெளிப்படுத்த முடியும்.

அது சத்புருஷனில் ஜனிக்கிறது.

ஜீவனுள்ள எண்ணம் சத்புருஷச்சுபாவம்பெற்றது.

 

It is not a child of void.

Nor is it a weaver of fictions.

It is Conscious Reality.

It throws itself into mutable forms.

They are forms of its own substance.

The substance is imperishable.

It is also immutable.

The world is not a figment of Mental conception.

Even the Universal Mind cannot create it.

The world is a conscious birth.

It is a birth of something beyond Mind.

It is born into forms of itself.

There is a Truth of conscious being.

It supports these forms.

That Truth express itself in these forms.

There is a knowledge corresponding to the Truth.

It reigns.

It is the Supramental Truth Consciousness.

It ORGANISES Real Ideas.

The organisation is in perfect harmony.

They are cast into the mental-vital-material mould.

That harmony precedes them.

Ours is an ascending point of view. Page No.117

We may say the Real is Para No.12

behind all that exists.

It expresses itself immediately.

It is expressed as an ideal.

 

அது சூன்யத்தில் பிறந்ததில்லை.

அது கற்பனையான மாயையில்லை.

அது தன்னையறியும் சத்தியம்.

சத்தியம் ரூபம்பெறுகிறது.

அந்த ரூபங்கள் சத்புருஷனுடைய அஸ்திவாரத்திற்குடையவை.

அஸ்திவாரம் அழியாதது.

அது சலனமற்றது.

உலகம் மனத்தின் கற்பனையன்று.

பிரபஞ்சமனமும் அதை சிருஷ்டிக்கமுடியாது.

உலகம்என்பது தான் விரும்பிப் பிறந்தது.

அது மனத்தைக்கடந்த ஜனனம்.

அது ரூபங்களாகப் பிறக்கிறது.

அது சத்புருஷ சத்தியம்.

அது ரூபங்களை ஆதரிக்கிறது.

சத்தியம் ரூபமாகிறது.

சத்தியத்தை வெளிப்படுத்தும் ஞானம் உண்டு.

அது ஆட்சி செய்கிறது.

அதையே சத்தியஜீவியம்என்கிறோம்.

ஜீவனுள்ள எண்ணத்தை சத்தியஜீவியம் செயல்படவைக்கிறது.

அச்செயல் சுமுகமானது.

உடல்-உயிர்-மனம் ஆகியவற்றின் ரூபமாக அவை வெளிப்படுகின்றன.

அவற்றின் சுமுகம் வெளிப்படுமுன் எழுகிறது.

நமது பார்வை பரிணாமத்திற்குரியது.

உலகின்பின்னால் சத்தியம் உண்டுஎன்று அது கூறும்.

அது உடனடியாக வெளிப்படும்.

அது இலட்சியமாக வெளிப்படும்.

 

 

The Ideal is a harmonised truth of itself.

The Ideal throws out a phenomenal Reality.

It is a variable of conscious being.

It is drawn towards the essential Reality.

It is inevitable.

At last tries to recover it entirely.

It may be through a violent leap.

Or it may be normal.

It can be through the Ideal.

The Ideal put it forth.

Human existence is imperfect.

The phenomenon explains that imperfection.

Human existence is seen by the Mind.

Mind has an instinctive aspiration.

It moves towards perfectability.

It is ever beyond itself.

Harmony is concealed in the Ideal.

The Spirit has a supreme surge.

It aims at the transcendental.

It lies beyond the ideal.

Our consciousness has some facts.

It has a constitution.

They compel us to a supposition.

We assume a triple order.

The antithesis we see is thus negated.

It is irreconcilable.

It is the antithesis of a mere Absolute and a reality.

 

இலட்சியம்என்பது சத்தியத்தின் சுமுகம்.

இலட்சியத்திலிருந்து தோற்றம் எழுகிறது.

அது சத்புருஷனுடைய மறுஉருவம்.

மீண்டும் அது தன் ஆதி சத்தியத்தை நாடும்.

அது தவிர்க்க முடியாதது.

இழந்த சத்தியம் முடிவாகத் தன்னை மீண்டும் பெற முயல்கிறது.

அதைத் தீவிரமாகச் செய்யலாம்.

சாதாரணமாகவும் செய்யலாம்.

இலட்சியம்மூலமாகவும் செய்யலாம்.

ஆரம்பத்தில் அது இலட்சியத்திலிருந்துதான் வெளிப்பட்டது.

மனிதவாழ்வு குறையுடையது.

இத்தோற்றம் அக்குறையை விளக்கும்.

நாம் வாழ்வை மனத்தால் காண்கிறோம்.

மனத்திற்கு இயல்பான ஆர்வமுண்டு.

அது பூரணத்தை நாடும்.

பூரணம் இலட்சியத்தைக்கடந்தது.

இலட்சியத்துள் சுமுகம் உண்டு.

ஆத்மாவின் வேகம் அதிதீவிரமான வேகம்.

அது பரமனை நாடுகிறது.

பரமன் இலட்சியத்தைக்கடந்தது.

நமது ஜீவியத்திற்கு விவரம் உண்டு.

அதற்கொரு சட்டம் உண்டு.

சட்டத்தை ஏற்றால் ஓர் அடிப்படையை ஏற்கவேண்டும்.

நாம் கூறுவது மூன்று நிலைகளில் உள்ளது.

நாம் காணும் முரண்பாடு அப்பொழுதிருக்காது.

அதைச் சேர்க்கமுடியாது.

பிரம்மத்திற்கும், சிருஷ்டிக்கும் உள்ள முரண்பாடு அது.

 

 

Universe exists. Page No.118

It is an expanding infinite. Para No.13

Mind is a dividing instrument.

It cannot explain existence.

There is Infinite consciousness.

It creates the world.

It must become a faculty.

It becomes an infinite faculty of knowledge.

That is what we call omniscience.

Mind is not a faculty of knowledge.

It is not an instrument of omniscience.

It seeks knowledge.

It has the faculty for it.

It gains by expressing the knowledge gained.

That expression is a form.

It is a form of relative thought.

The expression creates capacity for action.

Often Mind finds knowledge.

But it cannot possess the knowledge it found.

It retains a form of knowledge.

Sri Aurobindo calls it a current coin of Truth.

It is not Truth itself.

Mind keeps them in Memory.

Mind does not know.

Mind tries to know.

It knows in a dark shadow.

It is a power of universal existence.

It is a power of practical use.

 

பிரபஞ்சம் உண்டு.

அது பரந்து விரியும் அனந்தம்.

மனம் துண்டு செய்யும் கருவி.

மனத்தால் சத்தை விளக்கமுடியாது.

அனந்த ஜீவியம் உள்ளது.

அது உலகை சிருஷ்டிக்கிறது.

அது திறனாக வேண்டும்.

அது ஞானத்தை அனந்தமாக அறியும்.

அதை நாம் எல்லாம் அறியும் திறனென்கிறோம்.

மனம் ஞானத்தின் கருவியன்று.

எல்லாம் அறியும் கருவியுமில்லை.

மனம் ஞானத்தைத் தேடுகிறது.

அதற்குரிய திறன் மனத்திற்குண்டு.

பெற்ற ஞானத்தை வெளியிடுகிறது.

அது ரூபம்.

அதற்கு எண்ணத்தின் சாயலுண்டு.

அதனால் செயல்படமுடியும்.

சில சமயங்களில் மனம் ஞானம் பெறுகிறது.

பெற்றதை வைத்துக்கொள்ளும் திறன் அதற்கில்லை.

ஞானத்தின் ஓருருவத்தை மனம் பெறுகிறது.

ஸ்ரீ அரவிந்தர் அதை எண்ணத்தின் நாணயம்என்கிறார்.

அது முழு சத்தியமில்லை.

பெற்றதை மனம் நினைவில் வைத்திருக்கிறது.

மனம் அறியாது.

மனம் அறிய முயல்கிறது.

நிழல்போல் நிகழ்ச்சியை மனம் அறிகிறது.

மனம் பிரபஞ்ச சக்தி.

அது பயன்படும்.

 

 

It creates an order of things.

Mind is not a power that knows.

It is not a power that guides.

Mind has no power to manifest existence.

We can suppose an infinite mind. Page No.118

It would be free from our limitations. Para No.14

Maybe it can create the universe.

Such a Mind would be quite a different thing.

It would be different from the Mind that we know.

It would be beyond mentality.

It would be supramental Truth.

We know what Mind is.

An infinite Mind as we know could create chaos.

It will be infinite chaos.

It will be a clash of chance and accident.

It will wander towards an indeterminate end.

It will be full of vicissitudes.

The Mind will be groping and aspiring.

Even that will be tentative.

Mind can be omniscient and omnipotent.

It can be infinite.

It will not really be Mind.

It will be supramental knowledge.

These are pre-existent Truths or Facts. Page No.118

They may be external to Mind. Para No.15

Or, at least they may be vaster than Mind.

 

அதனால் முறைப்படுத்தமுடியும்.

அறியும் திறனதற்கில்லை.

அதனால் உலகை நடத்த இயலாது.

உலகை சிருஷ்டிக்கும் சக்தி மனத்திற்கில்லை.

அனந்தமான மனத்தை நாம் கற்பனை செய்யலாம்.

அதற்கு அளவில்லை.

அதனால் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க முடியலாம்.

அம்மனம் வேறுபட்டது.

அது நாமறிந்த மனமில்லை.

அது மனத்தைக் கடந்ததாக இருக்கும்.

அது சத்தியஜீவிய உண்மையாகும்.

நாம் மனத்தை அறிவோம்.

அனந்தமான மனம் குழப்பத்தை உண்டு பண்ணும்.

அது அனந்தமான குழப்பமாக இருக்கும்.

சந்தர்ப்பம் மோதுவதால் ஏற்படுவது அது.

நிலையற்ற முடிவை நோக்கி அது செல்லும்.

அது ஏற்றத்தாழ்வுடையது.

மனம் தடுமாறும்.

தடுமாற்றமும்தற்காலிகமானது.

மனம் எல்லாம் வல்லதாகவோ, எல்லாம் அறிந்ததாகவோ இருக்கலாம்.

மனம் அனந்தமாக இருக்கலாம்.

அப்படியானால் அது மனமாக இருக்காது.

அது சத்தியஜீவிய ஞானமாக இருக்கும்.

ஏற்கனவே ஏற்பட்ட சத்தியம், நிகழ்ச்சிகள் உண்டு.

அது மனத்திற்குப் புறம்பானதாக இருக்கலாம்.

அல்லது மனத்தைவிடப் பெரியதாக இருக்கலாம்.

 

 

Our Mind reflects them.

It images them.

They are the presentation of the above Truths.

Phenomenon exists.

It exists from moment to moment.

Mind represents them to itself.

There is an actual fact.

It is presented to Mind.

Mind can construct images.

They are possibilities.

Mind has the faculty of construction.

It can construct all images except the actual fact.

It can do so about the past.

It can also do so about the future.

It cannot represent what will assuredly be.

It can repeat its previous experience.

This has to be taken note of.

It has one more faculty.

It is the faculty of forecasting new modification.

Mind seeks to construct them out of the past.

It can do so even out of the future.

It may be out of the fulfilled possibility.

The possibility may be unfulfilled.

It succeeds sometimes.

It constructs more or less exactly.

Sometimes it fails to realise.

Usually they are cast into other forms.

They are other than it forecasted.

 

நம் மனம் அவற்றைப் பிரதிபலிக்கும்.

மனம் அவற்றைச் சித்தரிக்கும்.

மேற்சொன்ன சத்தியத்தின் பிரதிபலிப்பு அது.

தோற்றம் உண்டு.

நிமிடத்திற்கு நிமிடம் தோற்றம் எழும்.

மனம் அவற்றைப்பிரதிபலிக்கும்.

உள்ளது என்பதுண்டு.

அதை மனத்தின்முன் வைக்கிறோம்.

மனத்தால் படம்பிடிக்க முடியும்.

அவை நடக்கக்கூடியவை.

உற்பத்தித் திறனுடையது மனம்.

உள்ளது தவிர மற்றதை உற்பத்தி செய்யும்.

கடந்ததை அப்படி உற்பத்தி செய்யும்.

எதிர்காலத்தையும் உற்பத்தி செய்யும்.

நிச்சயமாக நடக்கும்என மனத்தால் கூற முடியாது.

கடந்தகால அனுபவத்தை அது திரும்பத் திரும்பச் செய்யும்.

இது நாம் கவனிக்க வேண்டியது.

அதற்கு மேலும் ஒரு திறனுண்டு.

எதிர்கால மாற்றங்களை அது கூற முடியும்.

எதிர்காலத்தை மனம் கடந்தகாலத்தால் நிர்ணயிக்கும்.

அப்படியே எதிர்காலத்தையும் நிர்ணயிக்க முடியும்.

அது நடந்ததாக இருக்கலாம்.

அது அரைகுறையான எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

சில சமயங்களில் அது வெல்லும்.

பொதுவாக அவை சரியானவையாக இருக்கும்.

சில சமயங்களில்அதுபலிக்காது.

எதிர்பார்த்ததைத்தவிர வேறு ரூபம் எடுக்கும்.

எதிர்மாறாகவுமிருக்கும்.

 

 

It may turn to other ends.

It may be something other than desired or intended.

There can be an infinite Mind. Page No.118

Let us suppose that Mind has Para No.16

the character of our Mind.

It can construct a cosmos.

It will be an accidental one.

There will be conflicting possibilities.

What it shapes will be transcient.

The possibilities will be shifting.

Even in the drift, it will be uncertain.

It will be neither real nor unreal.

It can have no aim or end.

It will be an endless succession of aims.

The aims will be momentary.

They will lead nowhither.

It is so, because there is no direction.

There must be a superior power for directing.

It is pure noumenalism.

Nihilism is its logical conclusion.

Illusionism too can emerge out of it.

Or some kindred philosophy will arise out of it.

Such a construction will not reflect the truth.

It will be a false presentation.

It will be a distorted reflection.

The cosmic existence would be a struggle of Mind.

Mind will struggle to work out its imaginations.

 

அது வேறு இலட்சியத்தை நாடலாம்.

நாம் போட்ட கணக்கிலிருந்து அவை மாறுபட்டவையாக இருக்கலாம்.

அனந்தமாக மனமிருக்க முடியும்.

அம்மனத்திற்கு நம் மனத்தின் சுபாவமிருப்பதாகக் கொள்வோம்.

அதுவும் சிருஷ்டிக்கும்.

அது தற்செயலான சிருஷ்டியாக இருக்கும்.

அங்கு நிகழ்ச்சிகள் முரண்பாடாக இருக்கும்.

அதன் சிருஷ்டி க்ஷணத்தில் மறைவதாக இருக்கும்.

நிகழ்ச்சிகள் நிலையற்றிருக்கும்.

அடித்துக் கொண்டு போகும் பொழுதும், எங்குப் போகிறோம் எனத் தெரியாது.

அதை உண்மைஎன்றோ, மாயைஎன்றோ சொல்ல முடியாது.

அதற்கு இலட்சியமோ, முடிவோ இல்லை.

அது நோக்கமற்ற போக்காக இருக்கும்.

இலட்சியம் க்ஷணத்திற்குரியதாகும்.

அது எங்குப் போகும் எனத் தெரியாது.

வழி நடத்துபவரில்லை என்பதால் அப்படியிருக்கும்.

வழிநடத்த பெரிய சக்தி தேவை.

அது யதார்த்தமானது.

அது சூன்யத்தில் முடியும்.

மாயை அதற்குரியது.

அதுபோன்ற தத்துவம் அதனின்றெழும்.

அப்படிப்பட்ட சிருஷ்டி உண்மையான பிரபஞ்சமாகாது.

அது ஒரு தவறான பிரதிபலிப்பாகும்.

அது சிதறிய சித்திரமாகும்.

அங்கு பிரபஞ்சம் மனப் போராட்டத்திற்குரியதாகும்.

மனம் தன் கற்பனைக்கு வடிவம் கொடுக்க முயலுவதாகும்.

 

 

It won't succeed.

It fails because there is no basis.

For it to succeed, a basis of self-truth is necessary.

It will be overpowered by the past energies.

The past energies are a stream.

It will be thus carried forward forever.

There will be no issue.

It will continue till it falls into external stillness.

Or, it must destroy itself.

There is an original conception.

It is at work in the universe.

Our mentality is human.

It can represent the cosmos as a Nihil.

Or, it can do so as illusion.

Anything like our mentality can only do so.

It is the root of Nihilism or Illusionism.

But there is a higher force. Page No.119

It has a knowledge. Para No.17

It has its original power.

We can find it.

It is higher than our human mentality.

Then our conception of the universe changes.

It becomes insufficient.

Also, it becomes invalid.

The universe has an immediate appearance.

Mental conception is its law.

But it is not the original truth.

 

அது பலிக்காது.

அடிப்படையில்லாததால் அது பலிக்காது.

அதற்கென ஓர் உண்மையிருந்தால் பலிக்கும்.

கடந்தவை அதை நிர்ணயிக்கும்.

கடந்தவை ஆறாக ஊற்றெடுக்கும்.

அப்படியே அது போனபடியிருக்கும்.

முடிவு என்று ஒன்றிருக்காது.

மௌனத்தில் முடியும்வரை அது தொடரும்.

அல்லது, அது பிரளயத்தால் அழியும்.

ஆதிக்கு ஒரு கருத்துண்டு.

அது பிரபஞ்சத்தில் வேலை செய்கிறது.

நம் மனம் மனித மனம்.

அது பிரபஞ்சத்தைச் சூன்யமாகக் காட்டும்.

அல்லது மாயைஎனக் கூறும்.

நம் மனம்போன்ற எதுவும் செய்யக்கூடியது அது.

அதுவே சூன்யவாதம், மாயாவாத அடிப்படை.

உயர்ந்த சக்தியுண்டு.

அதற்கு ஞானம் உண்டு.

அதற்குச் சக்தியுண்டு.

நாம் அதைக் காணலாம்.

அது நம் மனத்தைவிட உயர்ந்தது.

அதன் நோக்கம் பிரபஞ்சத்தை வேறாகக் கூறும்.

அது போதாது.

அதற்குப் பதமில்லை.

பிரபஞ்சத்திற்குப் பார்த்தவுடன் தோன்றும் தோற்றம் உண்டு.

சட்டம்என்பது நாம் அதை மனத்தால் அறிவது.

ஆனால் அது உண்மையில்லை.

 

 

Nor is it the ultimate fact.

Behind Life, body and Mind there is something.

We perceive it.

The stream of Force does not embrace it.

That embraces and controls the stream.

It is not yet born into the world.

The stream seeks to interpret it.

It has created in its being a world.

It is omniscient.

The past energies surge.

It is overmastering.

It labours perpetually.

It tries to form something out of itself.

It cannot control the past energies.

There is a perfect Form.

It is there already in its consciousness.

It is gradually unfolding in the world.

There is a foreseen Truth.

The world expresses it.

There is a predetermining Will.

The world obeys it.

There is an original formative Self-vision.

The world realises it.

It is the image of divine creation.

The image is growing.

We work through our mentality. Page No.120

It is governed by appearances. Para No.18

 

அதுவே முடிவானதுமன்று.

உடல், உயிர், மனத்தின் பின் வேறொன்றுள்ளது.

நாம் அதைக் காண்கிறோம்.

சக்தியலைகள் அதைத் தழுவுவதில்லை.

அது அலைகளைத் தழுவுவதுடன், அவற்றை ஆட்சி செய்யும்.

அது இன்னும் உலகில் பிறக்கவில்லை.

அலைகள் அதை நமக்கு உணர்த்த முயல்கின்றன.

தன் ஜீவனில் அது உலகை சிருஷ்டித்தது.

அது எல்லாவற்றையும் அறியும்.

கடந்தகால சக்திகள் பிரவாகமாக எழுகின்றன.

அதை மீற முடியாது.

தொடர்ந்து அது முயல்கிறது.

தன்னுள்ளிருந்து ஒன்றை உற்பத்திசெய்ய நினைக்கிறது.

அதனால் கடந்த சக்திகளைக் கட்டுப்படுத்த முடியாது.

ரூபத்திற்குச் சிறப்புண்டு.

ரூபம் ஏற்கனவே அதன் ஜீவியத்திலுள்ளது.

அது கொஞ்சம் கொஞ்சமாக உலகில் மலர்கிறது.

அது எதிர்காலத்திற்குரிய சத்தியம்.

உலகம் அதை வெளிப்படுத்துகிறது.

விதிக்கப்பட்ட விதியுண்டு.

உலகம் அதற்கு உட்படுகிறது.

ஆதிக்குச் சொந்த திருஷ்டியுண்டு.

உலகம் அதை உணரும்.

இறைவனின் படைப்பை அது எடுத்துக்காட்டும்.

அது நாளுக்கு நாள் வளரும்.

நாம் மனத்தால் செயல்படுகிறோம்.

மனம் தோற்றத்தை ஏற்கிறது.

 

 

The original power is something beyond.

It is behind these appearances.

But it is immanent.

To the Mind, it can only be an inference.

Mind can only vaguely feel it.

We perceive a law.

It is a law of cyclic progress.

Therefore we infer an ever increasing perfection.

It is somewhere foreknown.

It is an approximation.

Everywhere we see a Law.

It is founded in Self-being.

It has a rationale of its process.

We can penetrate into it.

That Law expresses an innate knowledge.

It is inherent in existence.

It expresses itself.

It is implied in the force that expresses.

It is a Law developed by knowledge.

The motion is directed.

It is directed towards a divine goal.

It allows of a progression.

Our reason too seeks to emerge out of the drift.

Reason tries to dominate the drift.

It is a drift of our mentality.

Reason is only a messenger.

We perceive it.

There is a greater consciousness.

 

ஆதிசக்தி அதைக் கடந்தது.

அது தோற்றத்தின் பின்னாலுள்ளது.

அது உலகினுள் மறைந்துள்ளது.

மனம் அதை நேரடியாகக் காணமுடியாது.

மனம் அதைத் தெளிவாக உணர முடியாது.

ஒரு சட்டம் உள்ளது.

அந்தச் சட்டம் மீண்டும் மீண்டும் வரும்.

அதனால் அதன் சிறப்பு வளரும்என அறிகிறோம்.

எப்படியோ நாம் அதை அறிவோம்.

அது தெளிவற்றது.

எங்கும் இந்தச் சட்டம் தெரிகிறது.

அது ஜீவனிலுள்ளது.

அது செயல்படுவதற்கு ஒரு சட்டம் உண்டு.

நாம் அதை ஊடுருவலாம்.

சட்டம் அடிப்படை ஞானத்தை வெளிப்படுத்துகிறது.

அது சத்தில் உள்ளது.

அது தன்னை வெளிப்படுத்தும்.

வெளிப்படும் சக்தியில் அச்சட்டம் உண்டு.

ஞானம் வளர்த்த சட்டம் அது.

இச்சலனத்திற்கு ஒரு போக்குண்டு.

அது இறைவனின் இலட்சியத்தை நோக்கிப் போகும்.

போக்கு வளரக்கூடியது.

அறிவும் இக்குழப்பத்தைவிட்டு வெளிவர முயல்கிறது.

குழப்பத்தை மீற அறிவு முயல்கிறது.

அது நம் மனப்போக்கு.

அறிவு கருவியன்று, கருவியின் தூதுவன்.

நாம் அதைக் காண்கிறோம்.

அது உயர்ந்த ஜீவியம்.

 

 

Reason represents it.

It is its shadow.

The greater consciousness is beyond reason.

It has no need to reason.

It is all.

It knows all that it is.

Reason has a source.

It is identical with the knowledge.

That knowledge acts as Law in the world.

This knowledge is sovereign.

It knows what it has been.

It knows what it is and will be.

It is so, because it cognises itself.

That cognition is external and infinite.

Being is infinite consciousness.

Infinite consciousness is omnipotent force.

It creates a harmony of itself.

That is how it makes the world.

The world is its object of consciousness.

So, the world is seizable by our thought.

It is a cosmic existence.

It knows its own truth.

It realises the truth in forms.

Those forms it knows.

Our mind is limited. Page No.120

It can react. Para No.19

So the Mind can only imperfectly grasp the Truth.

 

அறிவு அதன் பிரதிநிதி.

அறிவு அதன் நிழல்.

உயர்ந்த ஜீவியம் அறிவைக் கடந்தது.

அதற்கு அறிவு தேவையில்லை.

அதுவே எல்லாம்.

அது தன்னை முழுவதும் அறியும்.

அறிவுக்கு ஆதியுண்டு.

அதுவும் ஞானமும் ஒன்றே.

அந்த ஞானம் உலகின் சட்டம்.

இந்த ஞானம் சுயம்பிரகாசமானது.

தான் எதுவாக இருந்ததென்று அது அறியும்.

இப்பொழுது எப்படியிருக்கிறது, இனி எப்படியிருக்கும்எனவும் அறியும்.

அது தன்னை அறியவல்லது.

சுயஞானம் முடிவற்றது, காலத்தைக் கடந்தது.

ஜீவன் அனந்தஜீவியம்.

அனந்தஜீவியம் எல்லாம்வல்லது.

அது தன்னுள் சுமுகத்தை ஏற்படுத்துகிறது.

உலகம் அப்படி சிருஷ்டிக்கப்பட்டது.

உலகம் அதன் ஜீவியத்திற்குப் புறம்.

எனவே உலகம் அதற்குப் புரியும்.

அது பிரபஞ்சம்.

அது தன் சத்தியத்தை அறியும்.

அச்சத்தியத்தை ரூபத்தில் காண்கிறது.

அது அந்த ரூபத்தை அறியும்.

மனம் சிறியது.

எரிச்சல் படக்கூடியது.

சத்தியத்தை மனம் அரைகுறையாகவே அறியவல்லது

 

 

The other consciousness is the higher consciousness.

It can become really manifest to us.

It lies in the secrecy of mental stillness.

To reach there we have to go deep into ourselves.

And we must cease to reason.

Reason is a pale, flickering light.

It can uncertainly conceive of the Reality.

Ceasing to Reason we can know it.

It can increase in illumination.

Knowledge waits beyond mind.

It is beyond intellectual reasoning.

Its self-vision is illimitable.

It is luminous.

Knowledge is seated there.

The End

 

*********

 

நாம் கூறும் ஜீவியம் உயர்ந்த ஜீவியம்.

நம்மால் அதை உணரமுடியும்.

மனம் நிச்சலனமானபொழுது அந்த இரகஸ்யம் வெளிப்படும்.

நாம் ஆழ்ந்து உள்ளே சென்றால் அதைக் காணலாம்.

நாம் சிந்திக்கக்கூடாது.

அறிவு பிரகாசமற்ற அலைபாயும் ஒளி.

சத்தியத்தை விவரமற்று அறியும்.

சிந்தனை நின்றால், நாம் அதை அறியலாம்.

அதன் ஜோதி அதிகப்படும்.

ஞானம் மனத்தைக் கடந்து காத்திருக்கிறது.

அது பகுத்தறிவின் ஆராய்ச்சியையும் கடந்தது.

அதன் சுயதிருஷ்டிக்கு அளவில்லை.

அது பிரகாசமானது.

ஞானம் அங்கு கொலுவீற்றிருக்கிறது.

முற்றும்

*******



book | by Dr. Radut