Skip to Content

பகுதி 2

XI. Delight of Existence: The Problem

Brahman is pure Existence.           Page No.90

Brahman is Sat.                 Para No.1

 It is the absolute beginning.

It is the end.

It is the continent of things.

It is a self-consciousness.

 Its self-consciousness is inherent.

Its self-consciousness is inseparable from its being.

 It throws itself out.

 

It is a force of movement of consciousness.

This force creates movement. 

That movement is creative. 

It creates forces, forms and worlds 

We may accept all the above ideas. 

 

Still our question is unanswered.

"Why should Brahman create these worlds?" is the question.

 Brahman is perfect.

It is absolute.

It is infinite.

It needs nothing.

 It desires nothing.

 It throws our force of consciousness.

 

11. ஆனந்தம் - கேள்வி 

  பிரம்மம் என்பது தூய்மையான சத்.

 சத் என்பதே பிரம்மம்.

அதுவே ஆதி, ஆரம்பம்.

அதுவே முடிவு.

அதுவே அனைத்தையும் உட்கொண்டது.

பிரம்மம் சுயமான ஜீவியம்.

அதன் சுய ஜீவியம் அதனுடன் பிறந்தது.

அதன் சுய ஜீவியம் அதன் ஜீவனிலிருந்து பிரிக்க முடியாதது.

பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது.

அது ஜீவியத்தின் சலன புத்தி.

சக்தி சலனத்தை எழுப்புகிறது.

அச்சலனம் ஜீவனுள்ளது.

சக்தி, ரூபம், லோகங்களைச் சலனம் சிருஷ்டிக்கிறது.

மேற்சொன்ன அத்தனையையும் நாம் ஏற்கலாம்.

ஆரம்பக் கேள்விக்குப் பதில்லை.

ஏன் பிரம்மம் உலகை சிருஷ்டிக்க வேண்டும் என்பது கேள்வி.

பிரம்மம் குறைவற்ற நிறைவுடையது.

அது பிரம்மம்.

அது அனந்தம்.

அதற்கு எதுவும் தேவையில்லை.

எதற்கும் பிரம்மம் ஆசைப்படுவதில்லை.

ஜீவிய சக்தியைப் பிரம்மம் வெளிப்படுத்துகிறது.

 

 

It creates worlds of forms.

 Why should that Brahman do this?

 

There is a solution.

 Let us put it aside.

 It says Brahman is compelled to create.

 

 It is compelled to create by its own forces.

 They are forces of nature.

 Nature has potentialities of movement.

It has the formation to move into forms.

 

Brahman is compelled by its own potentiality. 

 

We reject such a solution.

Brahman has this potentiality.

It is true.

Brahman is not limited by this potentiality.

It is neither bound by it nor compelled by it.

 

Brahman is free; free in all senses of the term. 

 

Brahman is free to move.

 

It is free to remain still, eternally still.

 

It throws itself into forms.

It retains the potentiality of form itself. 

 

Still, it indulges its power of movement.

It is a power of formation.

 

For what reason does Brahman do so?

 It can only be for one reason. 

 

It is for delight.

ரூப லோகங்களை அது சிருஷ்டிக்கிறது.

அப்படிப்பட்ட பிரம்மம் இப்படிப்பட்ட சிருஷ்டியை சிருஷ்டிப்பது ஏன்?

வேறொரு பதிலுண்டு.

அதை நாம் ஏற்க வேண்டாம்.

பிரம்மத்திற்கு சிருஷ்டிக்கும் நிர்ப்பந்தம் உண்டு என அது கூறுகிறது.

தன் சக்தியால் அது நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது.

அவை இயற்கையின் சக்திகள்.

சலனம் இயற்கைக்கு இயல்பானது.

ரூபங்களைச் சிருஷ்டிக்கும் திறனுடையது இயற்கை.

பிரம்மம் தன் இயல்பால் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

இந்த முடிவை நாம் ஏற்க முடியாது.

இத்திறமை பிரம்மத்திற்குண்டு.

இது உண்மை.

இத்திறமையே முடிவல்ல.

இத்திறமை பிரம்மத்தைக் கட்டுப்படுத்தாது. நிர்ப்பந்தப்படுத்தவும் முடியாது.

பிரம்மம் சுதந்திரமானது. எல்லா வகையிலும் சுதந்திரமானது.

சலனத்தை எழுப்பும் சுதந்திரம் பிரம்மத்திற்குண்டு.

அசையாமலிருக்கவும் பிரம்மம் சுதந்திரமுடையது. காலத்திற்கு அசையவேண்டியதில்லை.

பிரம்மம் ரூபத்தை ஏற்கிறது.

ரூபத்தை ஏற்கும் திறன் பிரம்மத்திற்குண்டு.

சலனத்தை எழுப்பும் திறனை பிரம்மம் அனுபவிக்கிறது.

அது ரூபம் பெறும் திறன்.

என்ன காரணத்திற்காக பிரம்மம் இதைச் செய்கிறது?

அதற்கு ஒரேயொரு காரணம் தானிருக்கலாம்.

அது ஆனந்தமாகும்.

 

 

The Existence is primary. Page No.90

It is also the ultimate and eternal Existence.     Para No.2

The Vedantins saw that.

 

It is not a bare existence.

Nor is it a mere conscious existence.

Its consciousness is not crude.

It is not a mere force or power.

But it is a conscious existence of bliss.

 

Its term is bliss.

The term of consciousness is bliss.

Existence is absolute.

But there can be no nothingness.

There can be no night of inconscience.

There can be no deficiency.

 In other words, the Force cannot fail. 

 

There can be no failure of Force.

 If there is nothingness, night of inconscience, deficiency, failure

 

of Force, Brahman cannot be absolute.

 So also, there can be no suffering.

 There can be no negation of delight.

Existence is conscious and absolute.

It is illimitable bliss.

It is the bliss of conscious existence.

Both describe the same thing.

All illimitableness is pure delight.

 All infinity is pure delight.

All absoluteness is pure delight.

Our humanity is relative.

சத் என்பது அடிப்படை.

சத்தே முடிவானதும் கூட, நிரந்தரமானதுமாகும்.

வேதாந்த ரிஷிகளுக்கு அது நிதர்சனமாயிற்று.

சத் வறண்டதன்று.

உயிர் மட்டும் உள்ளதுமில்லை.

அதன் ஜீவியம் மட்டமானதன்று.

வெறும் சக்தி மட்டும் உள்ளதுமில்லை.

பிரம்மம் ஜீவனுள்ள சத் என்பதுடன் ஆனந்தமுமாகும்.

ஆனந்தம் பிரம்மத்தின் அம்சம்.

ஜீவியத்தின் அம்சமும் ஆனந்தம்.

சத் என்பது பிரம்மம்.

ஆனால் இல்லை என்பது இருக்க முடியாது.

ஜடமான இருள் என்பதுமில்லை.

குறையிருக்காது.

சக்தி தவறாது என்பதே இதன் பொருள்.

சக்தி என்றால் அது தவறக் கூடியதில்லை.

சூன்யமிருந்தால், ஜடமான இருள் உண்டு என்றால், குறை உண்மை ஆனால்,

சக்தி தவறும் என்றால் பிரம்மம் பிரம்மமாக இருக்க முடியாது.

அதேபோல் துன்பமிருக்க முடியாது.

ஆனந்தத்திற்கு எதிரானது இல்லை.

சித்தின் சத் பிரம்மம்.

அது அனந்தமான ஆனந்தம்.

இது ஜீவனுள்ள சத்தின் ஆனந்தம்.

இரண்டும் கூறுவது ஒன்றே.

அளவு அழிந்தால் ஆனந்தம் எழும்.

அனந்தம் ஆனந்தம்.

பிரம்மம் ஆனந்தம்.

மனித குலம் சிருஷ்டி.

 

 

That has the same experience.

Dissatisfaction means limit.

It means it is an obstacle.

Get what is denied, you will be satisfied.

Thus, we overcome the limit.

 

In this way, we remove the obstacle.

Our original being is the absolute.

It is in full possession of consciousness. 

 

That consciousness is infinite and illimitable.

It possesses its self-power.

It self-possession is Self-delight.

The relation does not have that self-possession. 

 

But it tries to increase its self-possession. 

 

Increasing self-possession is increasing satisfaction.

It leads to delight.

The Self-delight of Brahman is not limited. Page No.92

Its self-being is still and motionless. Para No.3 

 

The stillness does not limit the self-delight.

The force of consciousness throws itself into forms.

It can do so in infinite forms.

 Those forms endlessly vary. 

They revel in the flux.

 

The self-delight too behaves like that force. 

 

The flux is the mutability of itself.

Numberless teeming universes represent them.

 

This is the creative play of Force.

It looses itself forth and enjoys.

அதன் அனுபவமும் அதுவே.

அதிருப்தி என்றால் அளவு.

அளவு என்பது தடை.

இல்லை என்பது கிடைப்பது திருப்தி.

நாம் இவ்வழித் தடையைத் தாண்டி வருகிறோம்.

தடையை நீக்க நாம் இவ்வழியைப் பின்பற்றுகிறோம்.

நம் ஆதி பிரம்மம்.

பிரம்மத்திற்கு ஜீவியம் உண்டு.

அஜ்ஜீவியம் அனந்தமானது, அளவில்லாதது.

தன் சுய சக்தியைப் பெற்றது.

சுயசக்தி என்பது சுயமான ஆனந்தம்.

சிருஷ்டியில் பொருள்கட்கு இந்தச் சுய ஆனந்தமில்லை.

ஆனால் சுய ஆனந்தம் பெறவும், அதிகரிக்கவும் அது முயல்கிறது.

சுயசக்தி அதிகரித்தால் திருப்தி அதிகரிக்கும்.

அதன் வழி ஆனந்தம் வரும்.

பிரம்மத்தின் ஆனந்தத்திற்கு அளவில்லை.

அதன் ஜீவன் அமைதியாக அசையாமலிருக்கும்.

அதன் அமைதி அதன் ஆனந்தத்திற்கு இடையூறு செய்யாது.

ஜீவிய சக்தி ரூபமாக வெளிவருகிறது.

அதுபோல் அளவில்லாத ரூபங்களெழும்.

அந்த ரூபங்கள் முடிவில்லாமல் மாறும்.

ரூபங்கள் ரூபப்பிரவாகத்துள் திளைக்கும்.

அதன் ஆனந்தமும் சக்திபோல் செயல்படும்.

சக்தியின் பிரவாகம் சக்தி அசைந்து மாறுவதால் எழுவது.

எண்ணற்ற பிரபஞ்சங்கள் சக்தியைப் பிரதிபலிக்கின்றன.

இது சக்தியின் சிருஷ்டியான லீலை.

சிருஷ்டித்து ஆனந்தப்படுகிறது.

 

It is a variation of self-delight.

 This is the object of this infinite movement. 

 

We can put it in other words. Page No.92

Sachchidananda is Para No.4

Existence-Consciousness-Bliss.

It is triune.

Its consciousness is creative in nature.

 

Or, it is a self-expressive Force.

 It is capable of infinite variation.

 

 It varies in form and phenomenon.

 Its self-conscious being enjoys the variation. 

 

Its enjoyment is endless.

Something follows.

 Anything is Sachchidananda.

Anything that exists is a form of Sachchidananda.

Things are terms of this existence.

 They are terms of that conscious force.

They are terms of that delight of being.

 

There is one immutable being.

 All things are its mutable forms. 

 

There is one infinite force.

Everything is a finite result of that infinite force.

 There is one self-existence.

It is all-embracing.

 

Its delight is all-embracing. 

The self-existence is invariable.

All things are variable self-expressions of that.

தன் ஆனந்தத்தின் மாறிய ரூபம் அது.

அனந்தமான இச்சலனம் அதன் இலட்சியம்.

இதை வேறு வகையாகக் கூறலாம்.

சத்-சித்-ஆனந்தம்

என்ற சச்சிதானந்தம் எனலாம்.

மூன்றும் ஒன்றில் அடங்கியது.

அதன் ஜீவியம் பிரகிருதியில் சிருஷ்டிக்கவல்லது.

அல்லது, அது தன்னை வெளிப்படுத்தும் சக்தி எனலாம்.

முடிவில்லாமல் மாறும் குணமுடையது.

ரூபத்தாலும், நிகழ்ச்சியாலும் மாறக்கூடியது அது.

அதன் சுய-ஜீவன் புதியன படைப்பதில் திளைக்கிறது.

அதன் அனுபவத்திற்கு அளவில்லை.

இதற்கு ஒரு பொருளுண்டு.

எதுவும் சச்சிதானந்தமாகும்.

இருப்பவை அனைத்தும் சச்சிதானந்த ரூபமே.

சத்தின் பல்வேறு சிறு ரூபங்கள் இவை.

சித்-சக்தியின் கண்டங்களாகும் இவை.

ஆனந்தத்தின் அனந்த ரூபங்களாகும் இவை.

அழியாத ஜீவன் ஒன்றுளது.

இருப்பவை எல்லாம் அதன் அழியும் ரூபங்களாகும்.

அனந்தமான சக்தி ஒன்று.

அனந்தமான ஒரு சக்தி கண்டமான பல சக்திகளாகின்றது.

சத் என்பது ஒன்று.

அனைத்தையும் அது தழுவும்.

அதன் ஆனந்தமும் அனைத்தையும் தழுவும்.

சத் மாறாதது.

உள்ளவை அனைத்தும் மாறாத ஒன்றின் மாறும் ரூபங்கள்.

 

 

The conscious force dwells in everything. 

 

A thing is what it is by that force.

 

So also, in everything there is delight.

 It is delight of existence. 

A thing exists by that delight.

 

A thing is because of that delight. 

 This is the ancient Vedantic theory. Page Nos.92&93 

It is the theory of cosmic origins.        Para No.5

The human mind has two questions.

Those questions arise at once.

One is an emotional question.

The other is a sensational issue.

Pain is one, evil is the other.

 

They confront that theory.

We say the world is Sachchidananda.

The world is an expression of Sachchidananda.

It is not only of existence but of consciousness.

It is not only consciousness but of self-delight.

 

That self-delight is infinite.

We can admit the world is consciousness. 

If this is true, how do we explain pain?

 

How can we explain grief and suffering?

We take a good look at this world.

 

It has an appearance to us.

 

It appears as a world of suffering.

 It does not appear as a world of delight.

 

It is only a view.

எல்லாவற்றுள்ளும் சித்-சக்தி உறைகிறது.

ஒரு பொருள் அப்பொருளாகி இருப்பது இந்தச் சக்தியால்தான்.

அதேபோல், ஆனந்தம் எல்லாவற்றுள்ளும் உறைகிறது.

அது சத்துடைய ஆனந்தம்.

எதுவும் இந்த ஆனந்தத்தால் வாழ்கிறது.

இந்த ஆனந்தமிருப்பதால் பொருள்கள் இருக்கின்றன.

இது வேதாந்தம்.

 

சிருஷ்டியை விளக்கும் தத்துவம் இது.

மனிதனுக்கு இரு கேள்விகள் உள்ளன.

அக்கேள்விகள் உடனே எழுகின்றன.

ஒன்று உணர்ச்சியைப் பற்றியது.

அடுத்தது வலியைப் பற்றியது.

வலி, தீமை அவை.

வேதாந்தத்திற்கு முன் அவை எழுந்து நிற்கின்றன.

உலகம் சச்சிதானந்தம் என்கிறோம்.

உலகம் சச்சிதானந்த வெளிப்பாடு.

உலகம் சத் மட்டுமன்று, சித்தும் ஆகும்.

உலகம் சித் மட்டுமன்று, ஆனந்தமுமாகும்.

சுய ஆனந்தம் அனந்தம்.

உலகம் ஜீவியமானது என்று ஏற்கலாம்.

அது உண்மையானால், துன்பத்தை எப்படி விளக்குவது?

கவலை, வலி, சோகம் என்பவற்றை எப்படி அறிவது?

உலகை நாம் நன்கு கவனிப்போம்.

நாம் உலகின் தோற்றத்தைக் காண்கிறோம்.

அது துன்பமயமான உலகமாகக் காண்கிறது.

இன்பமயமாக உலகம் காட்சியளிக்கவில்லை.

இது நம் கண்ணோட்டம்.

 

It is an exaggeration.

 

It is an error of perspective.

We can be dispassionate.

We shall try to know accurately.

 

Let us appreciate the world unemotionally.

Then we see the truth.

 Let us know the sum of pain of existence.

 

Let us also know the sum of pleasure of existence.

We now see pleasure is more than pain.

(In one individual, it may be different)

 

Our existence is active.

It is also passive.

Our existence is on the surface.

Existence also underlies the surface.

It is the normal state of nature.

Pleasure is, we find, our normal state.

 Pain is a contrary occurrence.

But it is temporary.

 

Here lies the reason for us to feel pain acutely.

 

The larger sum of pleasure is unseen.

 The lesser sum of pain looms large.

 

Pain, therefore, affects us more acutely.

Precisely because pleasure is normal, we do not treasure it.

 

We hardly observe the pleasure in our life.

Sometimes pleasure intensifies into an acute form.

Its acute form is ecstasy or a crest of joy.

 

We call this crest of joy, delight.

 

We seek ecstasy and delight.

சற்று மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டமிது.

இது நம் நோக்கத்தின் குறை.

நாம் விருப்பு வெறுப்பில்லாமல் காண முயல்வோம்.

துல்யமாகக் காண முயல்வோம்.

உணர்ச்சி வசப்படாமல் உலகை அறிவோம்.

அப்பொழுது உண்மை விளங்கும்.

உலகில் உள்ள மொத்த வலியையறிவோம்.

உலகில் உள்ள இன்பத்தின் தொகுப்பைக் காண்போம்.

இன்பம் மிகையாக இருப்பது தெரிகிறது.

(தனிப்பட்ட ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம்)

வாழ்வு சுறுசுறுப்பானது.

வாழ்வு எதிராகவுமிருக்கும்.

நம் வாழ்வு மேலெழுந்தது.

அடியிலும் வாழ்வுள்ளது.

இதுவே இயற்கையின் இயல்பு.

இன்பம் இயல்பானது என்ற தெளிவு ஏற்படுகிறது.

வலி என்பது எதிரானது.

வலி தற்காலிகமானது.

ஏன் வலி முக்கியமாக இருக்கிறது என்பதற்கு இதுவே காரணம்.

வாழ்வு முழுவதும் உள்ள இன்பம் தெரிவதில்லை.

சிறிதளவுள்ள வலி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.

அதனால், வலி மிகைப்பட்டுக் காண்கிறது.

இன்பம் இயல்பானது என்பதால் நாம் அதன் அருமையை உணர்வதில்லை.

நம் வாழ்வில் சந்தோஷத்தை நாம் கவனிப்பதில்லை.

சில சமயங்களில் இன்பம் உயர்ந்து தீவிரமாகும்.

பூரிப்பு அதன் தீவிரம். ஆனந்தத்தின் அலை எனலாம்.

ஆனந்த அலையை நாம் பேரானந்தம் என்போம்.

நாம் பூரிப்பையும், ஆனந்தத்தையும் நாடுகிறோம்.

 

 

Normally there is satisfaction in life.

 It is always there.

It is there regardless of events or particular causes. 

We take everything neutrally.

Rather we take it for granted.

 

It is neither pleasure nor pain.

It is there as a great practical fact.

 

It is universal.

It is an overpowering instinct of life.

 It is our self-preservation.

But we do not seek it, as it is there.

 Our joy is our profit.

Our pain is our emotional loss.

They draw our balance sheet.

 

We do not enter our profit and loss properly.

 

Only our positive pleasures are entered there.

Our discomfort is entered as loss.

 

Pain is entered as debit.

 Pain affects us more intensely.

It is so as it is abnormal.

 

It is not normal to our being.

 It is contrary to our natural tendency.

 

Pain is experienced as an outrage.

 

 It is an outrage on our existence.

Pain is an offence on what we are.

 

It is an external attack on what we seek to be.

 

பொதுவாக வாழ்வில் திருப்தியுண்டு.

அது எப்பொழுதும் உள்ளது.

அது நிகழ்ச்சிகளையோ, ஒரு குறிப்பிட்ட காரணத்தையோ பொருத்ததன்று.

இவையெல்லாம் நம் கணக்கில் சேரா.

இவை இருப்பது, இருக்க வேண்டியவை என நாம் கருதுகிறோம்.

இது இன்பமுமில்லை, துன்பமுமில்லை.

அது நடைமுறைக்குரிய பெரிய யதார்த்தமான செயல்.

அது பொது.

வாழ்வுக்கு இது முக்கிய உணர்வு.

நாம் நம்மைக் காப்பாற்றுவது இது.

இது இருப்பதால், நாம் இதைத் தேடுவதில்லை.

இன்பம், லாபம்.

துன்பம் உணர்வுக்கு நஷ்டம்.

இவையிரண்டும் நம் வரவு செலவுக் கணக்கு.

நாம் நம் வரவையும், செலவையும் சரிவர எழுதுவதில்லை.

பெரிய சந்தோஷங்களை மட்டும் அதில் குறிக்கிறோம்.

நம் தொந்தரவுகளையும் எழுதுகிறோம்.

வலியைச் செலவுக்கணக்காக எழுதுகிறோம்.

வலி நம்மை அதிகமாகப் பாதிக்கிறது.

வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் அதிக பாதிப்பு.

வலி நம் ஜீவனுக்கு வழக்கமானதில்லை.

நம் இயல்பான வாழ்க்கைக்கு வலி மாறானது.

வலியை நாம் பெரிய தவறாகக் கருதுகிறோம்.

சிருஷ்டியின் வாழ்வுக்கு வலி ஒரு தடை.

நாம் வாழ நினைக்கும் பாணிக்கு வலி ஒரு எதிர்ப்பு.

நாம் தேடும் இலட்சியத்தைப் புறத்தில் எதிர்ப்பது வலி.

 

 

Ours is a philosophical inquiry. Page No.93

This is not downright practice. Para No.6

As long as pain is there, we must explain it.

 

Whether the sum of pain is greater or lesser is not the issue.

Whether it is abnormal or not does not matter.

 

The fact is, pain is there.

It is present in man.

The whole problem is its presence.

 We say, all is Sachchidananda.

 

Then, how can pain enter or exist?

 

How do we understand suffering?

 This is the real problem.

 There is a further confusion.

It is a false issue.

We assume an extracosmic God.

 

It is a partial issue.

It is the ethical difficulty.

The farther confusion comes from this idea.

Sachchidananda is God. Page No.94

That is our reason. Para No. 7

God is the author of existence.

 

How can God create pain?

 

How can he inflict it on his creatures?

 How can he sanction pain?

 

By what reason does He permit evil?

God is All-Good.

 Who then created pain and evil?

 

நாம் பேசுவது தத்துவம்.

இது அன்றாட நடைமுறையில்லை.

வலி இருப்பதால், அதை விளக்குவது அவசியம்.

வலியின் தொகுப்பு பெரியதா, சிறியதா என்பது பேச்சில்லை.

வலி வழக்கத்திற்கு மாறானதா, இல்லையா என்பதும் பிரச்சினை இல்லை.

வலியிருப்பது உண்மை.

மனிதன் வலியை அறிவான்.

ஏன் வலியிருக்கிறது என்பதே கேள்வி.

அனைத்தும் சச்சிதானந்தம் என்கிறோம்.

அப்படியானால் வலி எப்படி வரும், இருக்கும்?

துன்பத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

அதுவே உண்மையான பிரச்சினை.

மேலும் ஓர் குழப்பம் உண்டு.

அது பொய்யானது.

உலகுக்கு வெளியில் கடவுளிருப்பதாக நாம் நினைக்கிறோம்.

இது பகுதி.

இது தார்மீகமான சிரமம்.

இப்படி நினைப்பதால் பெருங்குழப்பம் எழுகிறது.

சச்சிதானந்தம் கடவுள்.

அதுவே நம் அடிப்படை.

கடவுள் சிருஷ்டிக்கர்த்தா.

கடவுள் எப்படி துன்பத்தை சிருஷ்டி செய்ய முடியும்?

அவனுடைய படைப்புக்கு எங்ஙனம் அவன் வலி தருவான்?

வலிக்கு அனுமதி தர அவன் முன் வருவானா?

எந்தக் காரணத்தால் இறைவன் கொடுமையை அனுமதிப்பான்?

கடவுள் நல்லவர்.

அப்படியானால் யார் வலியையும், தீமையையும் உற்பத்தி செய்தது?

 

We say pain is a trial.

 We say it is an ordeal.

That does not solve the moral problem.

It makes God immoral or non-moral.

 

We make God an excellent world-mechanist.

 

He then becomes a cunning psychologist.

 

He is then not a God of Good or Love. 

We can worship a God of Love.

Now He is a God of Might.

We must submit to the law of Might.

He is known for his caprice.

 He may propitiate his caprice. 

This God has invented torture and cruelty.

Torture, for him, is a means of test or ordeal.

 

It means He is deliberately cruel.

 

Or, He is morally insensible.

 He stands convicted of either.

 

He may be a moral being.

Then He is inferior to the highest instincts of men.

There is a desire to escape this obstacle.

It is a moral difficulty.

 

Therefore, we say pain is an inevitable result.

 

It is a natural punishment for evil.

  

Moral evil attracts punishment.

 

We may say so, but it is not true.

 It will be true only if we accept karma.

 

Not only karma, we must accept rebirth also.

This is not a true explanation.

 

 வலி ஒரு சோதனை என்று கூறலாம்.

வேதனை என்றும் கூறலாம்.

அது தர்மத்தை விளக்குமா?

கடவுள் தர்மத்திற்குப் புறம்பானவர், அதர்மமானவர் என்றாகாதா?

நாம் கடவுளை உயர்ந்த மெக்கானிக்காக்குகிறோம்.

இது உண்மையானால், கடவுள் திருட்டு மனப்பான்மையுடையவர் என்றாகும்.

அப்படியானால் கடவுள் அன்புருவானவரில்லை.

நாம் அன்பை வணங்கலாம்.

இக்கடவுள் வலிமைமிக்கவர்.

பலத்திற்குப் பணியவேண்டும்.

ஆண்டவன் அவனிஷ்டம்போல் நடப்பான்.

அதற்கும் நாம் துதிபாடவேண்டும்.

இக்கடவுள் கொடுமையையும், சித்ரவதையையும் சிருஷ்டித்தது.

கொடுமை, சோதனை, வேதனை.

வேண்டுமென்றே ஆண்டவன் கொடுமை செய்வதாகிறது.

கடவுளுக்கு மனச்சாட்சியில்லை என்றாகும்.

இரண்டில் ஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கடவுள் தர்மதேவதையாக இருக்கலாம்.

இது உண்மையானால் ஆண்டவன் மனிதனைவிடத் தாழ்ந்தவன் என்றாகும்.

இந்த இக்கட்டிருந்து மீள விரும்புகிறோம்.

இக்கட்டு மனச்சாட்சிக்கு.

எனவே வலி தவிர்க்கமுடியாதது என்கிறோம்.

கொடுமை பெறும் தண்டனை வேதனை என்று கூறுகிறோம்.

கொடுமை தண்டிக்கப்பட வேண்டுமல்லவா?

நாம் இவற்றையெல்லாம் கூறலாம். ஆனால் அவை உண்மையில்லை.

கர்மத்தை ஏற்றால் இவை உண்மையாகும்.

கர்மத்துடன், புனர்ஜென்மத்தையும் ஏற்கவேண்டியிருக்கும்.

இது சரியான விளக்கமன்று.

 

 

Facts do not bear it out.

 

The Soul suffering now for previous sins is karma.

The sin was committed in other bodies.

 

An ethical question is yet to be answered.

Who created evil?

Why was it created?

 

For what reason was it created?

These questions must first be answered.

Of course, evil entails punishment and suffering.

Moral evil is a mental disease.

 

It is an ignorance.

It is a form of ignorance.

 

Who created it? Or what created it?

What was the inevitable connection between the act and punishment?

The tortures are often extreme.

They are monstrous.

 

The law of karma is inexorable.

It is irreconcilable with God.

God is a supreme moral Deity.

God is a personal Deity.

Buddha had a clear logic.

He denied the existence of God.

God was an all-governing Person.

He was free of everything.

Buddha denied personality.

 

To him, it was a creation of ignorance.

It is subject to karma, said Buddha.

நடைமுறையில் இது சரியாகத் தெரியவில்லை.

போன ஜென்மப் பாவத்தை இன்று அனுபவிப்பது கர்மம்.

வேறு உடல் கடந்த ஜென்மங்களில் செய்யப்பட்ட பாவம் இவை.

மனச்சாட்சிக்கு விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை.

யார் கொடுமையைச் சிருஷ்டித்தது?

ஏன் அதை சிருஷ்டித்தனர்?

என்ன காரணத்திற்காக அதை சிருஷ்டித்தனர்?

முதல் இக்கேள்விகட்கு விடை தேவை.

கொடுமைக்கு வேதனை தண்டனையாகக் கிடைப்பது நியாயம்.

கொடுமை மனத்தின் வியாதி.

அது ஒருவகை அறியாமை.

அது அறியாமையின் ஆன்மீகச் சொரூபம்.

யார் அதை சிருஷ்டித்தனர்? எது சிருஷ்டித்தது?

செயலுக்கும், தண்டனைக்கும் தவிர்க்க முடியாத தொடர்பு எப்படி ஏற்பட்டது?

சித்ரவதைகள் எல்லையைக் கடந்தவை.

ராக்ஷஸ வதம் அவை.

கர்மம் என்பது கடவுளையும் கட்டுப்படுத்தும்.

தெய்வமும், கர்மமும் ஒத்துவாரா.

கடவுள் உன்னதமான நியாயமானவர்.

தெய்வம் நாம் வணங்கும் குலதெய்வம்.

புத்தர் ஞானம் தெளிவானது.

புத்தர் கடவுளில்லை என்றார்.

கடவுள் அனைத்தையும் நடத்துபவர்.

கடவுள் எதற்கும் கட்டுப்பட்டவரில்லை.

சுபாவம் என்பதை புத்தர் மறுத்தார்.

சுபாவம் என்பதை அறியாமை ஏற்படுத்தியது என்றார்.

புத்தர் சுபாவத்தை கர்மத்தின் குழந்தை என்றார்.

 

This difficulty arises from an assumption. Page Nos.94&95

That assumption is God is extra-cosmic. Para No.8

Buddha denied God.

We present the difficulty sharply.

There will be no difficulty if God is not extra cosmic.

God may become the universe.

 

He need not be one who created evil and suffering.

He need not stand above unaffected.

 

He, we assume, watches and rules.

He does His will.

 

He allows the world to be driven by His law.

He does not help his creatures.

Or, He helps them inefficiently.

 

He is not, then, omnipotent.

 

He is not all-good and all-loving.

This is the theory of an extra cosmic God.

He is moral.

Evil and suffering cannot, then, be explained.

 

By evil, we mean the creation of evil.

 

We can only do so by a subterfuge, a trick.

It will be unsatisfactory.

Surely, it will avoid the question.

It will not answer it directly.

 

It will imply Manicheanism.

It will practically annul the Godhead.

It will attempt to justify its ways.

 

Or, it will excuse God of his cruelty.

 

Such a God is not the Vedantic God.

 

நம் நினைவால் இப்பிரச்சினை எழுகிறது.

கடவுள் உலகைக் கடந்தவர் என்பதால் வரும் பிரச்சினையிது.

புத்தர் கடவுளில்லை என்றார்.

பிரச்சினையை நாம் தெளிவாக எடுத்துக் கூறுகிறோம்.

கடவுள் உலகைக் கடந்தவர் எனக் கூறாவிட்டால், பிரச்சினையில்லை.

கடவுளே உலகமாகலாம் அன்றோ!

கொடுமையை உற்பத்தி செய்தவராக இல்லாமருக்கலாம்.

உலகிருந்து விலகி நிற்காதவராக இருக்கலாம்.

நம்மைக் கண்காணித்து, ஆள்பவர் கடவுள் எனக் கொள்கிறோம்.

அவர் சித்தம் பலிப்பதாகக் கொள்கிறோம்.

தம் ஆட்சியை அவர் உலகில் நடத்துகிறார்.

மனிதர்கட்குக் கடவுள் உதவவில்லை.

அல்லது கடவுள் உதவி போதாது.

அப்படியானால், கடவுள் எல்லாம் வல்லவரில்லை.

கடவுள் அன்புருவானவரில்லை. நன்மையின் பிழம்பல்லர்.

உலகைக் கடந்தவர் இக்கடவுள்.

அவர் தர்ம தேவதை.

அதுவே உண்மையானால் கொடுமை, துன்பத்தை அறியமுடியாது.

கொடுமை என்றால் அது உற்பத்தியான வழி.

பதில் சொல்ல நாம் தந்திரத்தைப் பயன்படுத்தவேண்டும்.

அப்பதில் திருப்தியாக இருக்காது.

அது கேள்வியை விலக்கிப் பதில் கூறும்.

நேரடியான பதிலாக அது இருக்காது.

அசுரனும், ஆண்டவனும் மோதும் வழியது.

இப்பதில் கடவுளை மறுப்பதில் முடியும்.

கொடுமைக்காரக் கடவுள் சரி என அது கூறும்.

கடவுளின் கொடுமை கொடுமையில்லை என்று சொல்லும்.

இப்படிப்பட்ட கடவுள் வேதாந்தம் கூறும் கடவுளில்லை.

 

Sachchidananda is one existence without a second.

All that is, is He.

He has embodied Himself in every creature.

If evil is there, it is He that bears evil and suffering.

The problem then changes entirely.

 

Evil and suffering are the negation of bliss.

He is the sole infinite Existence-Consciousness-Bliss.

God is incapable of evil and suffering.

 

Our question is how did He admit evil and suffering into Bliss?

 

How God created suffering for His creatures is not the main question.

 

God is immune to evil.

The moral difficulty is unanswerable. Page No.95

 

Anyway, in this form, it is unanswerable. Para No.9

Now half that difficulty disappears.

It no longer arises.

It can no longer be put.

There are two aspects to cruelty or the creation of cruelty.

One is cruelty to others while He is immune.

 

Maybe He is participating in their suffering.

 

I am the sole existence or He.

Self-infliction of suffering is another question.

 

All-Delight is necessarily all-good and all-love.

How can evil and suffering exist in Sachchidananda?

God is not a mechanical existence.

 

சச்சிதானந்தம் என்பது ஏகன்.

இருப்பனவெல்லாம் அவனே.

எல்லா ஜீவராசிகளிலும் உறைபவன் அவனே.

தீமையும், துன்பமுமிருந்தால், அவற்றை அனுபவிப்பவன் அவனே.

பிரச்சினை அடியோடு மாறுகிறது.

கொடுமையும், வேதனையும் ஆனந்தத்தின் எதிரிகள்.

அவன் மட்டுமே உலகில் சத்-சித்-ஆனந்தமாக இருக்கின்றான்.

கடவுளால் கடுமை, கொடுமை, துன்பம், வலியை உற்பத்தி செய்யமுடியாது.

அவனது ஆனந்தம் எப்படிக் கொடுமையையும், துன்பத்தையும் அனுமதிக்கிறது என்பதே கேள்வி.

கடவுள் தம் ஜீவராசிகட்கு எப்படித் துன்பத்தை சிருஷ்டித்தார் என்பது

முக்கியக் கேள்வியில்லை.

கடவுளை கொடுமை பாதிக்காது.

தர்மசங்கடமான இக்கேள்விக்குப் பதில்லை.

இந்தக் கேள்வியை எழுப்பினால் பதில் கூற முடியாது.

கடவுள் ஆனந்தமயமானவர் எனில் பாதி சிரமம் கரைகிறது.

இனி கேள்வி எழுப்ப முடியாது.

அதை இனிக் கேட்க முடியாது.

கொடுமைக்கு இரு அம்சங்களுண்டு.

தனக்குப் பாதிப்பில்லை என்றபொழுது அடுத்தவர்படும் கொடுமை ஒரு கேள்வி.

அடுத்தவர் கொடுமை அவனையும் பாதிக்கும்.

அவன் ஏகன், அவன் தவிர உலகில் எதுவுமில்லை.

தானே தனக்குக் கொடுமையை இழைக்கிறானா என்பது அடுத்த கேள்வி.

ஆனந்தம் அன்பு, நன்மை.

சச்சிதானந்தத்தில் கொடுமையும் துன்பமும் எது?

கடவுள் இயந்திரமில்லை.

 

 

God is a free, conscious being.

He is free to condemn evil and suffering.

He is free to reject them.

The issue is a false issue.

It is false by the way it was stated.

It applies to partial terms.

We present it as if it were applicable to the whole.

The idea of good is a partial concept.

It springs from a dualistic conception.

Also, it is a divisional conception.

It is based on relations based on creature and creature.

All-Delight starts from One who is all.

We persist in our folly.

The original purity is unity in division.

We must examine how it starts.

The idea of love too is a partial concept.

Original understanding is a safe course.

Parts and their development are based on division and duality.

We do not live in an ethical world. Page No.96

We have to recognise it. Para No.10

Our view is the view of the whole.

We are not limited to human difficulty.

Ours is not a human standpoint.

Man is ethical.

He sees an ethical meaning in the whole of nature.

He forces it on Nature.

It is a wilful, obstinate self-confusion.

 

கடவுள் சுதந்திரமானவர், தன்னையறிந்தவர்.

கடவுள் கொடுமையைக் கண்டிக்கலாம்.

அவரால் கொடுமையை மறுக்க முடியும்.

பிரச்சினையே தவறான பிரச்சினை.

அதை நாம் சொல்லும் பாணி அதைத் தவறாக்குகிறது.

பிரச்சினை பகுதியைக் காண்கிறது.

நாம் அது முழுமைக்குப் பொருந்தும் என நினைக்கிறோம்.

நன்மை என்பது பகுதி.

நன்மை என்பது தீமையின் எதிரான இரட்டை.

பிரிப்பதனால் எழுவது நன்மை, தீமை.

இருவர் தொடர்பு கொள்வதால் ஏற்படும் உறவு நன்மை.

ஆனந்தம் பரமாத்மாவுக்குரியது.

நம் தவற்றை நாம் வலியுறுத்துகிறோம்.

தூய்மை என்பது பிரிவினையில் ஐக்கியம்.

இது எங்கு ஆரம்பமாயிற்று எனக் காண வேண்டும்.

அன்பும் இது போன்றதே.

ஆரம்பத்தைக் கருதுவது நல்லது.

பகுதியும், அதன் வளர்ச்சியும் பிரிவினைக்குரியவை.

நாம் தர்ம நியாய உலகில் வாழவில்லை.

நாம் அதை உணர வேண்டும்.

நம் பார்வை முழுமையானது.

மனிதப் பிரச்சினை நம்மைக் கட்டுப்படுத்தாது.

நம் கண்ணோட்டம் மனிதக் கண்ணோட்டம்.

மனிதன் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்.

இயற்கை தார்மீகமானது என நினைக்கிறான்.

தன் கருத்தை இயற்கை மீது திணிக்கிறான்.

இது குழப்பம் விளைவிக்கும் பிடிவாதம்.

 

 

 

It is a pathetic attempt.

Man reads himself into all things.

His is a limited human self.

His standpoint is personal.

He has evolved it for himself.

Man judges everything from this point of view.

It prevents the complete knowledge.

Even his sight is blessed.

Material Nature is not ethical.

Nature is governed by a law.

It coordinates fixed habits.

It takes not cognisance of good and evil.

It takes cognisance of the force only.

The force creates.

It is the force that arranges and preserves.

Again it is the force that disturbs.

It destroys impartially and non-ethically.

It does so according to the secret will in it.

The will has mute satisfactions.

Its self-formation and self-dissolutions are mute too.

Animal nature is vital Nature.

It too is non-ethical.

As it progresses it manifests a material.

It is crude.

Out of it the ethical impulse evolves.

The higher animal does it.

The tiger slays its prey.

It devours it.

 

இது பரிதாபமானது.

எதையும் மனிதன் தன் கண்ணோட்டத்தில் பார்க்கிறான்.

மனிதனின் வாழ்வு சிறியது.

அவன் கண்ணோட்டம் தனிப்பட்டது.

இதை அவனே தனக்கு ஏற்படுத்திக் கொண்டான்.

எதையும் மனிதன் தன் பார்வையில் கணிக்கிறான்.

இது முழு அறிவைத் தடுக்கும்.

அவன் பார்வை குறையானது.

ஜடமான இயற்கைக்கு தர்மமில்லை.

இயற்கைக்குரிய சட்டம் உண்டு.

நிலையான பழக்கங்களால் இயற்கை செயல்படுகிறது.

அது நல்லது, கெட்டதைக் கருதாது.

இயற்கைக்கு சக்தி மட்டும் முக்கியம்.

சக்தி சிருஷ்டிக்கின்றது.

சக்தியின் ஏற்பாடு நம் நிலையைக் காக்கப் பயன்படுகிறது.

சக்தியே இருப்பதைக் கலைப்பது.

சக்திக்கு அழிப்பதில் பாரபட்சமில்லை. அதற்கு தர்மமில்லை.

அதனுள் உள்ள ஆண்டவன் திருவுள்ளப்படி சக்தி செயல்படும்.

திருவுள்ளம் விரக்தியாகத் திருப்திப்படும்.

ரூபமும், அழிவும் சக்திக்கு விரக்தியானவை.

விலங்கின் இயற்கை உணர்வுமயமானது.

அதற்குத் தர்மமில்லை.

விலங்கு செயல்படும்பொழுது ஒரு சக்தி வெளிப்படுகிறது.

அது சுத்தமானதன்று.

அதிருந்து தர்மம் உதயமாகிறது.

தர்மத்தை விலங்கைவிட உயர்ந்த உணர்வு எழுப்புகிறது.

புலி மற்ற மிருகங்களைக் கொல்கிறது.

கொன்றதைத் தின்றது.

 

 

We do not blame the tiger with cruelty.

The storm destroys.

The fire tortures and kills.

Nor do we blame it.

There is a conscious-force in the storm, fire and tiger.

That too does not blame them.

Ethics begins with blame and condemnation.

It starts with self-blame and self-condemnation.

We blame others according to a law.

We do not apply the law to ourselves.

That is not true ethics.

It is only to use the language of ethics.

Ethics has evolved this language for us.

We recoil from what hurts us.

What displeases us makes us recoil.

It is an emotional impulse of dislike.

Then we use that language of ethics.

The primary origin of ethics is this recoil. Page No. 96

But this recoil itself is not ethics. Para No. 11

The fear of the deer for the tiger is a vital recoil.

The rage of the strong creature against attack also is a vital recoil.

It is a recoil of individual delight of existence.

It is a recoil from that which threatens it.

Mentality progresses.

The recoil refines itself into repugnance, dislike and disapproval.

We disapprove of what threatens and hurts us.

We approve of what flatters and satisfies us.

 

புலி கொடுமை செய்கிறது என நாம் கூறுவதில்லை.

புயல் அழிக்கிறது.

நெருப்பு கொலை செய்கிறது, சித்ரவதை செய்கிறது.

அவற்றையும் நாம் குறை சொல்வதில்லை.

புலி, நெருப்பு, புயல் ஓர் ஆன்மீக சக்தியுண்டு.

அந்த ஆன்மீக சக்தியையும் குறை சொல்வதில்லை.

குறை கூறுவதும், திட்டுவதும் தர்மத்தின் ஆரம்பம்.

தம்மீது குறை கூறுவதும், தன்னையே திட்டுவதும் தர்மம் ஆரம்பமாவது.

பிறரை ஓர் நியாயப்படி திட்டுகிறோம்.

அந்த நியாயத்தை நமக்கே நாம் கருதுவதில்லை.

இது உண்மையான தர்மமில்லை.

இது தர்மத்தின் சொற்களைப் பயன்படுத்துவதாகும்.

தர்மம் நமக்குத் தந்த மொழியிது.

நம்மைப் புண்படுத்துவதிலிருந்து நாம் விலகுகிறோம்.

எது பிடிக்கவில்லையோ அதிலிருந்து விலகுகிறோம்.

அது வெறுப்புணர்ச்சி.

அதற்குப் பதிலாக நாம் நியாயம் பேசுகிறோம்.

இப்படி ஒதுங்குவதே தர்மத்தின் முதல் ஆரம்பம்.

ஆரம்பம் இதுவானாலும், இதுவே தர்மமாகாது.

புலியைக் கண்டு பயப்படும் மானின் உணர்ச்சி பின்னோக்கி ஓடுகிறது.

வலிய மிருகம் எதிரியைக் கண்டு கோபாவேசம் கொள்வதும் அதுவே.

வாழ்வின் ஆனந்தம் அதன் வழி சுருங்குகிறது.

ஆபத்திலிருந்து சுருங்கி விலகும் பாணி அது.

மனம் வளர்கிறது.

சுருக்கம் மறுப்பாகவும், வெறுப்பாகவும், பொறுக்க முடியாததாகவும் ஆகிறது.

ஆபத்தை நாம் மறுக்கிறோம், அடிபடுவதை விலக்குகிறோம்.

சௌகரியமானதையும், சந்தோஷமானதையும் ஏற்கிறோம்.

 

 

They refine into the conception of good and evil to oneself.

It is considered good to others, other communities.

Finally it is approved of as general good.

It is also considered a general disapproval of evil.

There is a fundamental nature in all this.

It remains the same throughout.

Man desires self-expression.

He desires self-development.

Thus the conscious-force of existence plays in him.

It is its progress.

That is man's fundamental delight.

Something hurts that self-expression.

It hurts the self-development too.

It can stay the self-satisfaction of his progress.

All such things are evil for man.

Whatever helps these, is good.

They may help, confirm, raise, aggrandise, ennoble.

What changes is his conception of good.

His conception of self-development may change.

It may become higher and wider.

It may exceed the limits of his personality.

It may embrace others.

Maybe it will embrace all in its scope.

We can state it otherwise. Page No. 97

Ethics is not the goal. Para No. 12

Nor is it what is there from the beginning to the end.

அது நல்லது, கெட்டது என நம்முள் உருவம் பெறுகிறது.

அதுவே பிறருக்கும், உலகுக்கும் நல்லது என நினைக்கிறோம்.

முடிவாக அதை நல்லது எனத் தீர்மானம் செய்கிறோம்.

தீமையை மறுப்பதாக நாம் அறிகிறோம்.

இவற்றிற்கெல்லாம் அடிப்படையானது ஒன்றுண்டு.

ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அது மாறுவதில்லை.

மனிதன் தன்னை வெளிப்படுத்த விரும்புகிறான்.

தான் வளரப் பிரியப்படுகிறான்.

ஆத்ம சக்தி அவனுள் இங்ஙனம் செயல்படுகிறது.

இது அதன் வளர்ச்சி.

இதுவே மனிதனுக்கு அடிப்படை ஆனந்தம்.

அவ்வானந்தத்திற்கு ஊறு செய்வதுண்டு.

அது வளர்ச்சியையும் தடை செய்யும்.

மனிதனுடைய வளரும் திருப்தியைத் தடை செய்ய வல்லது அது.

அவையெல்லாம் தீமைகள் என்று மனிதன் கருதுகிறான்.

இவற்றிற்குத் துணை செய்வது நல்லது.

உதவி செய்வது, உறுதிப்படுத்துவது, உயர்த்துவது, வலுப்படுத்துவது, உன்னதம்

தருபவை நல்லவை.

மனிதன் தன்னைப் பற்றி அறிவது மாறும்.

தான் எப்படி வளர்வது என்பது மாறும்.

மாற்றம் மேலும் மேலும் உயரும்.

வளர்ச்சி அவன் சுபாவத்தைக் கடக்கும்.

பிறரையும் அது தழுவும்.

உலகை முழுவதும் அது தழுவலாம்.

இதை வேறு வகையாகக் கூறலாம்.

தர்மம் இலட்சியமில்லை.

தர்மம் ஆரம்பம் முதல் முடிவுவரை வருவதில்லை.

 

 

It is a stage in evolution.

Sachchidananda tries to express itself.

It does so in the animal, in the man and even beyond man.

Sachchidananda is common to all the three stages.

To start with, this urge is unethical.

It is infra ethical in the animal.

In the intelligent animal, it is even anti-ethical.

Anti-ethical permits us to hurt others.

We do so by doing to others what we disapprove of.

Thus, man is half-ethical.

Below it is infra-ethical.

Above it is supra-ethical.

Above there is no need of ethics.

The lower is a harmony.

It is based on inconscience.

It is broken up by Life into individual discords.

The higher is a harmony and universality.

It is based on conscient oneness.

It is a oneness with all existences.

Ethical impulse is all important to humanity.

Humanity struggles out of the lower into the higher harmony.

For one who reaches the goal, ethics is unnecessary.

Maybe ethics is not possible above.

Ethics depends on good qualities.

It needs even the opposite evil.

Both will disappear above.

They will not be there for the final reconciliation.

 

தர்மம் பரிணாமத்தில் ஒரு பகுதிக்குரியது.

சச்சிதானந்தம் தன்னை வெளிப்படுத்த முயல்கிறது.

அது விலங்கிலும், மனிதனிலும், அவனைக் கடந்தும் வெளிப்படும்.

மூன்று நிலைகட்கும் பொதுவானது சச்சிதானந்தம்.

ஆரம்பத்தில் உள்ளது தர்மம் சம்பந்தப்படாதது.

மிருகத்தின் வாழ்வு தர்மத்திற்குக் கீழ்ப்பட்டது.

அறிவுள்ள மிருகம் அதர்மமானது.

அதர்மம் பிறருக்குத் தீங்கு செய்ய அனுமதிக்கும்.

நமக்கு நாம் செய்யாததை, நாம் பிறருக்குச் செய்வதால் தீங்கு எழும்.

எனவே மனிதனுக்கு முழு தர்மமில்லை.

கீழே தர்மத்திற்குக் கீழ்ப்பட்ட வாழ்வுளது.

மேலே தர்மம் தேவைப்படாத வாழ்வுளது.

மேலே தர்மத்திற்கு வேலையில்லை.

கீழள்ள வாழ்வுக்குச் சுமுகம் உண்டு.

அது ஜடமான சுமுகம்.

வாழ்வு அதைப் பிரித்துப் பிணக்காக்குகிறது.

மேலேயுள்ள வாழ்வு சுமுகமானது, பிரபஞ்சத்திற்குரியது.

அது ஆன்மீக ஒருமையுடையது.

சகல ஜீவராசிகளுடனும் உள்ள ஒருமையது.

தர்மம் மனிதனுக்கு அவசியம்.

கீழிருந்து மேலேவர மனிதனுக்குத் தர்மம் அவசியம்.

இலட்சியத்தை அடைந்தவனுக்குத் தர்மம் தேவையில்லை.

மேலே தர்மம் இருக்க முடியாது.

தர்மத்திற்கு நல்ல குணங்கள் தேவை.

எதிரானவையும் தேவை.

மேலே இரண்டும் மறையும்.

முடிவான சுமுகத்தில் இரண்டும் இருக்கா.

 

 

The Human stage is one of the three. Page No.97

It may be an all important stage. Para No.13

It is a passage from the lower to the higher.

The human stage is only a temporary one.

We seek a total solution for the universe.

Ethics will admit only one stage.

Therefore we cannot apply ethics to our solution.

We cannot do otherwise.

That way we would run the peril of falsifying all the facts of the

universe.

The evolution has a meaning behind us and beyond us.

It will become untrue.

Ethics is a temporary phenomenon.

To fashion a philosophy based on ethics is a half-evolved view.

It is a localised utility of things.

We cannot commit that error.

The world has three layers.

They are infra-ethical, ethical and supra-ethical.

To resolve the problem, we must embrace all the three layers.

It can be done by knowing what is common to all.

We have seen that common factor. Page Nos.97&98

Sachchidananda is Para No. 14

conscious-force of existence.

It develops into forms.

It seeks delight in that development.

Sachchidananda seeks this satisfaction.

This satisfaction is common to all three layers.

 

மனித வாழ்வு மூன்றில் ஒன்று.

வெகு முக்கியமானது.

கீழிருந்து மேலே போகும் இடைநிலை மனித நிலை.

மனித வாழ்வு தற்காலிகமானது.

நாம் பிரபஞ்சத்திற்கு முழுமையான தீர்வு தேடுகிறோம்.

தர்மம் ஒரு நிலைக்குரியது.

எனவே தர்மம் நமக்குத் தீர்வு தாராது.

நாம் வேறெதுவும் செய்ய முடியாது.

அப்படிச் செய்தால் பிரபஞ்சத்தைப் பொய்யாக்க முனைவோம்.

நமக்குப் பின்னாலும், நம்மைக் கடந்தும் பரிணாமம் உள்ளது.

அது பொய்க்கும்.

தர்மம் தற்காலிகமானது.

தர்மத்தின் அடிப்படையில் தத்துவம் ஏற்பட்டால் அது அரைகுறை ஆகும்.

இன்று நமக்குத் தேவையானது.

நாம் அத்தவற்றைச் செய்ய முடியாது.

உலகம் மூன்று பிரிவுகளாக உள்ளது.

தர்மம், தர்மத்திற்குக் கீழ்ப்பட்டது, மேற்பட்டது என்பவை அவை.

மூன்று நிலைகளையும் தழுவிய முடிவு, பிரச்சினையைத் தீர்க்கும்.

மூன்றிற்கும் பொதுவானதன் மூலம் அத்தீர்வைக் காண முடியும்.

பொதுவான தத்துவத்தை நாம் அறிவோம்.

சச்சிதானந்தம் சத்தின் சித் சக்தி.

அது ரூபங்களை உற்பத்தி செய்கிறது.

இச்செயல் அது ஆனந்தம் தேடுகிறது.

சச்சிதானந்தம் அத்திருப்தியை நாடுகிறது.

மூன்று நிலைகட்கும் பொதுவானது இந்தத் திருப்தி.

 

 

Its true beginning is this satisfaction.

This satisfaction is its delight.

This self-expression is normal to Sachchidananda.

Sachchidananda clings to it.

It is its base.

But it seeks new forms of itself.

In the passage to higher form, pain enters.

Suffering accompanies pain.

Pain and suffering contradict the fundamental nature of its being.

This and this alone is the root problem.

How shall we solve it? Page No.98

We can say Sachchidananda is not Para No.15

the beginning.

It is not the end.

But the beginning and end is a Nihil.

The Nihil is an impartial void.

It is a nothing that contains all.

It contains all potentialities.

Those are the potentialities of existence and non-existence.

Consciousness and non-consciousness too have potentialities.

It includes the potentialities of delight and undelight.

We are free to accept this as an answer.

We tried to explain everything.

We ended by putting everything together.

Actually, we have explained nothing.

This Nihil is a nothing full of potentialities.

It is the greatest paradox.

 

இத்திருப்தியே உண்மையான ஆரம்பம்.

இந்தத் திருப்தியே அதன் ஆனந்தம்.

தன்னை வெளிப்படுத்துவது சச்சிதானந்தத்தின் இயல்பு.

சச்சிதானந்தம் அதைப் பற்றியுள்ளது.

அதுவே அடிப்படை.

ஆனால் புது ரூபங்களை அது நாடுகிறது.

புதிய உயர்ந்த ரூபங்களை நாடும்பொழுது வலி ஏற்படுகிறது.

வலியுடன் துன்பம் வருகிறது.

வலியும், துன்பமும் ஜீவனின் அடிப்படை சுபாவத்திற்கு எதிரானவை.

இது மட்டுமே பிரச்சினைக்குரிய மூலம்.

இதை எப்படித் தீர்ப்பது?

சச்சிதானந்தம் மூலமில்லை என்று கூறலாமா?

அதுவே முடிவில்லை எனலாமா?

ஆரம்பமும், முடிவும் சூன்யம் என்பது உண்மையா?

சூன்யம் எந்தக் கட்சியிலும் சேராது.

உலகை உட்கொண்டது சூன்யம்.

சூன்யத்துள் எல்லாம் இருக்கின்றன.

சத்தும், அசத்தும் அதனுள் உள்ளவை.

ஜீவியமும், அதன் எதிரும் சூன்யத்திற்குரியவை.

ஆனந்தமும், அதன் எதிரும் அங்குண்டு.

இதையே முடிவாக நாம் ஏற்கலாம்.

எல்லாவற்றையும் விளக்க நாம் ஆரம்பித்தோம்.

எல்லாவற்றையும் இப்பொழுது சேர்த்துவிட்டோம்.

நாம் எதையுமே விளக்கவில்லை.

சூன்யம் அனைத்தையும் உட்கொண்டது.

இது பெரிய புதிர்.

 

 

It is an opposition of terms and possibilities.

We started to explain a minor contradiction.

We now face a major contradiction.

Thus, self-contradiction rises to the maximum.

Nihil is a void.

A Nihil can have no potentialities.

We say it is impartial.

We say too, it is indeterminate.

Then it must be a chaos.

Now we started with a void.

We made it into a chaos.

We are unable to explain how the chaos came there.

Sachchidananda is our original conception.

Let us return to it.

It is our foundation.

We need a complete solution.

Is it possible?

There is something we need to know first. Page Nos.98&99

The universal consciousness is different Para No.16

from our mental consciousness.

It is more essential and wider than our waking consciousness.

Our consciousness is human consciousness.

Our delight is emotional, sensational pleasure.

The universal delight is something different.

Human pleasure is that of the individual creature.

The universal delight is wider.

Man uses pleasure, joy and delight in a limited sense.

 

இது சொல்லும், செயலும் உள்ள முரண்பாடு.

ஒரு சிறு முரண்பாட்டை விளக்க முற்பட்டோம்.

ஒரு பெரிய முரண்பாட்டை எதிர்கொண்டுள்ளோம்.

முரண்பாட்டை நாம் பெரியதாக்கிவிட்டோம்.

சூன்யம் ஒன்றுமில்லாதது.

சூன்யத்துள் எதுவுமிருக்காது.

அது பாரபட்சமற்றதென்கிறோம்.

அது சிருஷ்டிக்க வல்லதன்று என்கிறோம்.

அப்படியானால் அது ஒரு குழப்பம், பிரளயம்.

நாம் சூன்யத்திலாரம்பித்தோம்.

அதைக் குழப்பத்தில் முடித்தோம்.

எப்படிக் குழப்பம் வந்தது எனப் புரியவில்லை.

நாம் சச்சிதானந்தத்தில் ஆரம்பித்தோம்.

மீண்டும் அங்குப் போவோம்.

அதுவே அஸ்திவாரம்.

நமக்குப் பூரண விளக்கம் தேவை.

அது முடியுமா?

நாம் முதல் அறியவேண்டியது ஒன்றுண்டு.

பிரபஞ்ச ஜீவியம் நம் ஜீவியத்திலிருந்து மாறுபட்டது.

நம் விழிப்பிலுள்ளதைவிட அது முக்கியமானது, விரிவானது.

நம் ஜீவியம் மனித ஜீவியம்.

நாம் ஆனந்தம் என்பது நம் உணர்விலும், உடலும் உற்பத்தியாவது.

பிரபஞ்ச ஆனந்தம் மாறுபட்டது.

தனி மனிதன் அனுபவிப்பது மனிதனுடைய இன்பம்.

பிரபஞ்ச ஆனந்தம் பரந்து விரிந்தது.

சந்தோஷம், இன்பம், மகிழ்வு என்பவற்றிற்கு நம் அர்த்தம் குறுகியது.

 

 

They are occasional movements.

They depend upon habitual causes.

They emerge exactly as their opposites.

Pain and grief are the opposites of joy.

They too are limited and occasional movements.

They issue from a background other than themselves.

We speak of delight of being, not ego.

It is universal.

It is illimitable, self-existent.

They are not dependent on particular causes.

They issue out of the background of all backgrounds.

Pain and pleasure issue from there.

Neutral experiences too emerge from there.

Delight of being tries to become delight of becoming.

It is a movement of force.

It takes different forms of movement.

Pleasure and pain are those forms.

They are positive and negative movements.

This movement is subconscient in Matter.

It is superconscient beyond Mind.

This delight seeks to realise itself in Mind and Life.

Thus it emerges in the becoming.

It is an increasing self-consciousness of the movement.

Its first phenomena are dual and impure.

They move between the poles of pleasure and pain.

But it aims at a self-revelation.

It is a self-revelation in the purity of a supreme delight of being.

This delight is self-existent.

 

இவை எப்பொழுதோ எழுபவை.

இவை நம் பழக்கத்திற்குரியவை.

இவற்றின் எதிரான துன்பம், வலி போலவே இவை எழுகின்றன.

வலியும், கவலையும் சந்தோஷத்திற்கு எதிரிகள்.

அவையும் சிறியவை. ஏதோ ஒரு சமயம் எழுபவை.

பின்னணியிலிருந்து எழுபவை.

நாம் கூறுவது ஜீவனின் ஆனந்தம், அகந்தையது அன்று.

இது பிரபஞ்ச ஆனந்தம்.

அளவு கடந்தது, சுயமானது.

எந்த ஒரு காரணத்தையும் பற்றியதில்லை.

பின்னணியின் பின்னணியிலிருந்து அவை எழுகின்றன.

வலியும், இன்பமும் இங்கே எழுகின்றன.

இரண்டுமில்லாதவையும் இங்கே உற்பத்தியாகின்றன.

ஜீவனின் இன்பம், இயற்கையின் இன்பமாகிறது.

அது சக்தியின் செயல்.

அதன் ரூபங்கள் பல.

வலியும், சந்தோஷமும் அவ்ரூபங்கள்.

அவற்றை வேண்டியவை, வேண்டாதவை என்கிறோம்.

ஜடத்தின் ஆழ்மனச் சலனங்கள் அவை.

மனத்தைக் கடந்த பரமாத்மாவின் அசைவுகள் அவை.

இந்த ஆனந்தம் வாழ்விலும், மனதிலும் சித்திக்கவேண்டும்.

இதுவே இயற்கையின் ஆனந்தம்.

சலனம் தன்னை அதிகமாக அறிவதன் பலனிது.

இதன் முதலுருவங்கள் இரட்டையாகவும், தூய்மையற்றுமிருக்கும்.

அவை இன்ப துன்பங்களாகும்.

தம்மை அவை வெளிப்படுத்தும்.

ஈஸ்வரனின் தூய ஆனந்தமாக அவை வெளிவர முயல்கின்றன.

இது சுய ஆனந்தம்.

 

It is independent of objects and causes.

Sachchidananda moves.

It moves towards a realisation.

It is a realisation of the universal existence in the individual.

It realises the form exceeding consciousness in the form.

It is the form of the body and mind.

Similarly, it moves towards the realisation of the universal.

It is a universal delight that is self-existent.

It is an objectless delight.

It is a delight in the flux of particular experiences.

It is a delight in objects.

We seek these objects.

To us they are stimulating causes of pleasure and satisfaction.

We are free, possessed of self.

We shall not seek.

We shall possess them as reflectors.

They are not the cause of eternal delight.

Man is egoistic. Page No.99

The mental person emerges out of the Para No.17

dim shell of matter.

Delight of existence is neutral, semi-latent.

Man is still in the shadow of the subconscious.

He is a concealed soil of plenty.

He is covered by a desire.

It is a luxuriant growth of poisonous weeds.

The flowers of it too are poisonous.

Pain and pleasure are those flowers.

 

காரண காரியமற்ற ஆனந்தமிது.

சச்சிதானந்தம் சலனமடைகிறது.

அது சித்தியை நாடுகிறது.

பிரபஞ்சம் மனிதனில் வெளிப்பட சச்சிதானந்தம் முயல்கிறது.

ரூபத்தைக் கடந்தது ரூபத்தில் வெளிப்படுவதே அது.

உடலும், மனமும் அதுவே.

அதேபோல் பிரபஞ்சத்திலும் சச்சிதானந்தம் வெளிப்படும்.

காரியமற்ற இன்பமது.

பிரபஞ்சத்திற்குரிய சுய ஆனந்தம்

ஓர் அனுபவ ஆனந்தம் அது.

அது பொருளில் வெளிப்படும் ஆனந்தம்.

நாம் இப்பொருளை நாடுகிறோம்.

இவை நம் இன்பதுன்பக் கருவிகள்.

நாம் சுதந்திரமானவர்கள். நம்மை நாம் ஆட்கொண்டவர்கள்.

நாம் தேடவேண்டியதில்லை.

இன்பத்தைப் பிரதிபலிப்பாகப் பெறுவோம்.

அவை பேரின்ப ஊற்றல்ல.

மனிதன் அகந்தை.

ஜடத்திலிருந்து மனிதன் பிறக்கிறான்.

ஆனந்தம் பொதுவானது, அரைகுறையாகத் தெரியும்.

மனிதன் ஆழ்மனத்தின் சாயல் வாழ்கிறான்.

அபரிமிதம் அவனுள் மறைந்துள்ளது.

அவன் ஆசைக்குட்பட்டவன்.

ஆசை விஷ விருக்ஷம்.

அதன் புஷ்பங்களும் விஷமானவை.

வலியும், சந்தோஷமும் அம்மலர்கள்.

 

 

They are the flowers of our egoistic existence.

The divine conscious force is working secretly in us.

It devours these growths of desires.

The Rig Veda calls them the fire of God.

It burns up the shoots of earth.

Something is concealed at these roots of desire.

It is the cause and secret being.

It is the sap of delight in them.

That will emerge in new forms.

It will not be of desire.

It will be self-existent satisfaction.

It will remove mortal pleasure.

Immortal ecstasy will emerge there.

This transformation is possible.

Man is the result of division and ignorance of self.

He is an ego.

Sensation and emotion seek that ecstasy.

They fail to reveal that ecstasy.

It is because of ego.

Pain and pleasure are delight in the being.

Therefore, it is possible to transform.

 

The End

********

 

அவை அகந்தையின் மலர்கள்.

ஆத்மா இரகஸ்யமாக நம்முள் செயல்படுகிறது.

ஆசை மலர்களை அது விழுங்கும்.

ரிக் வேதம் அவற்றை அக்னி என்கிறது.

அது பூமியின் வளர்ச்சியை எரிக்கும்.

ஆசையின் அடியில் மறைந்துள்ளது ஒன்றுண்டு.

அதுவே இரகஸ்யம், காரணம்.

அதுவே சாரம்.

அவை புது ரூபத்தில் மலரும்.

அது ஆசையாக இருக்காது.

அது சுயமான திருப்தியாகும்.

மனித ஆசையை அது விலக்கும்.

அழியாத ஆனந்தப் பூரிப்பு அங்கு எழும்.

இத்திருவுருமாற்றம் நடக்கும்.

மனிதன் பிரிவினையாலும், அறியாமையாலும் பிறந்தவன்.

அவன் அகந்தை.

மனித உணர்வு பூரிப்பைத் தேடுகிறது.

உணர்வு பூரிப்பை வெளியிட முடியவில்லை.

அதற்கு அகந்தை காரணம்.

வலியும், இன்பமும் அடிப்படையில் ஆத்மாவின் பூரிப்பே.

அதனால் திருவுருமாற்றம் நடைபெறும்.

முற்றும்

*********



book | by Dr. Radut