Skip to Content

08. VIII The Methods of Vedantic Knowledge

 

VIII. The Methods of Vedantic Knowledge
8. வேதாந்த ஞானம்
Page No. 60
Para No. 1
 
How does Sachchidananda work in the world?
சச்சிதானந்தம் உலகில் எப்படிச் செயல்படுகிறது?
Sachchidananda formed a relation with ego.           
அகந்தையுடன் அது தொடர்பு கொண்டது.
That was the first formation.
அதுவே முதலுருவம்.
At first it was a figure.
முதலில் அது ஓர் அடையாளமாக இருந்தது.
Finally it was consummated.
முடிவாக அது பூர்த்திபெற்றது.
What was this process?
இது நடந்தது எப்படி?
Divine Life for man has a practice.
தெய்வீக வாழ்வுக்கு ஒரு பயிற்சியுண்டு.
It has a philosophy as well.
அதற்கு தத்துவமும் உண்டு.
Both depend on their relation.
இரண்டும் இத்தொடர்பைப் பொருத்தன.
Para No. 2
 
The physical mind has walls.
ஜடமான மனத்திற்குச் சுவர்களுண்டு.
We must pierce them.
நாம் அவற்றை ஊடுருவ வேண்டும்.
Our evidence is from the senses.
நாம் புலன்களால் அறிகிறோம்.
We must exceed them.
அவற்றை நாம் கடக்க வேண்டும்.
By doing so, we know of the divine.
கடப்பதால், கடவுளை அறியலாம்.
We arrive at a conception.
தத்துவம் மனதில் உருவாகிறது.
It gives us the knowledge.
அது ஞானத்தைத் தருகிறது.
Both are of the divine existence.
இரண்டும் இறைவனைப் பற்றியவை.
We live in the material world.
நாம் ஜட உலகில் வாழ்கிறோம்.
We see its phenomena.
அதன் தோற்றங்களைக் காண்கிறோம்.
Ours is a physical consciousness.
நம் ஜீவியம் ஜடமானது.
Our evidence is sense evidence.
நமக்குப் புரிய வைப்பவை புலன்கள்.
These tell us of the material world.
அவை ஜட உலகைப் பற்றிச் சொல்கின்றன.
They can give us no more.
அதற்கு மேல் அவற்றால் முடியாது.
But we have other faculties.
நமக்கு மற்ற திறன்களுண்டு.
They help mind to conceive.
அவை மனத்திற்குத் தத்துவார்த்தத்தைக் கொடுக்கும்.
Mind deduces by ratiocination.
தர்க்கரீதியாக மனம் புரிந்துகொள்ளும்.
It uses imagination too.
கற்பனையும் மனத்திற்குண்டு.
We see the facts of the physical world.
ஜட உலகின் நிகழ்ச்சிகளை நாம் காண்கிறோம்.
Mind understands more from them.
மனம் அவற்றிலிருந்து மேலும் புரிந்து கொள்கிறது.
Physical data do not give it.
முடிவு பொருள்களிலிருந்து வரவில்லை.
Nor does the physical experience.
அவை தரும் அனுபவத்தாலும் வரவில்லை.
Man has several such instruments.
மனிதனுக்கு இதுபோன்ற திறமைகளுண்டு.
Reason comes first.
அவற்றுள் முதன்மையானது பகுத்தறிவு.
It is called pure reason.
அதைத் தூய்மையான அறிவு என்கிறோம்.
Page Nos. 60 & 61
Para No. 3
 
Human reason has a double action.
பகுத்தறிவு இருவகைகளில் செயல்படும்.
It can be mixed or dependent.
தனித்தும், கலந்தும் செயல்பட வல்லது அறிவு.
It can also be pure and sovereign.
தூய்மையாகவும், பவித்திரமாகவும் அதனால் செயல்படமுடியும்.
Reason sometimes confines itself.
அறிவு தன்னைக் கட்டுப்படுத்துவதுண்டு.
It limits itself to sensible experience.
புலனுக்கு அதுபோல் கட்டுப்படும்.
Then, it admits law as final.
அப்படிக் கட்டுப்பட்டால், அறிவைச் சட்டம் கட்டுப்படுத்தும்.
Law studies only phenomenon.
சட்டம் தோற்றத்திற்குரியது.
Phenomenon is the appearance of things.
தோற்றம் என்பது புறத்தோற்றம்.
Appearance is in relations.
தோற்றம் தொடர்பாலானது.
Processes and utilities also give appearances.
பலனும், வழியும் தோற்றத்திற்குரியவை.
This is rational action.
இதுவே பகுத்தறிவின் செயல்.
It is incapable of knowing anything.
அதற்கு வேறெதுவும் தெரியாது.
It knows the appearances.
தோற்றம் மட்டும் தெரியும்.
The truth is in the depths of being.
சத்தியம் ஜீவனின் ஆழத்திலுள்ளது.
Reason cannot fathom it.
அறிவால் ஜீவனை ஆழங்காண முடியாது.
Reason surveys becoming.
அறிவு வாழ்வை ஆராய்ச்சி செய்கிறது.
Reason can also assert.
அறிவுக்கு வலிமையுண்டு.
Its pure action does so.
அதன் தெளிவான செயல் தன்னை வலியுறுத்தவல்லது.
It accepts our sensible experience.
புலனனுபவத்தை அறிவு ஏற்கும்.
But it is not final for the reason.
அறிவுக்கு அதுவே முடிவானதன்று.
It is only a starting point.
அது ஆரம்பமே.
Reason goes behind the experiences.
அறிவு அனுபவத்தைக் கடந்து செல்லும்.
It refuses to limit itself by them.
அனுபவத்திற்கு அறிவு கட்டுப்படாது.
It works in its own right.
தன் சுயஉரிமையுடன் செயல்படக்கூடியது அறிவு.
Behind the appearances are concepts.
தோற்றத்தின் பின் தத்துவம் மறைந்துள்ளது.
They are unalterable.
அவை மாற்றமில்லாதவை.
They do not attach to the appearances.
தத்துவம் தோற்றத்தால் பாதிக்கப்படாது.
These concepts are general.
இந்தத் தத்துவங்கள் பொதுவானவை.
Reason strives to reach them.
அவற்றைக் காண அறிவு முயல்கிறது.
It judges by them.
தத்துவத்தைக் கொண்டு அறிவு முடிவு செய்கிறது.
Reason passes from the appearance behind.
தோற்றத்தைக் கடந்து அறிவு அதன் பின் செல்கிறது.
Thus it may arrive at its result.
தன் முடிவை அறிவு அங்கு நாடுகிறது.
It will be a direct judgement.
அதுவே தீர்க்கமான முடிவாகும்.
This may appear to be the result of sense experience.
இது புலனறிவின் பலனாகத் தோன்றும்.
It may also appear to depend on it.
புலனை நம்பியிருப்பதாகவும் தோன்றும்.
But it is really a perception of reason.
இருப்பினும் இது பகுத்தறிவின் பார்வை.
Here it works on its own right.
அதுவே அதன் தனி உரிமை.
There is another more characteristic action of reason.
அறிவுக்கேயுரிய அடுத்த அம்சமும் உண்டு.
Its perception starts from an experience.
அப்பார்வை அனுபவத்திலாரம்பிக்கிறது.
It is a mere excuse.
அது வெறும் சாக்கு.
Reason may leave it behind.
அறிவு அதைக் கடக்கும்.
Maybe far behind.
கடந்து காததூரம் செல்லும்.
And proceed to the result.
நேராகப் பலனை நோக்கிப் போகும்.
Our senses give us an experience.
புலன்கள் அவ்வனுபவத்தைத் தரும்.
They wish to dictate a result.
அவை ஓர் முடிவை வலியுறுத்தும்.
Reason may arrive at an opposite result.
அறிவு எதிரான முடிவுக்கும் வரும்.
This movement is legitimate.
இது சரி.
It is indispensable.
இது தவிர்க்க முடியாதது.
Our normal experience is small.
நமது அனுபவம் சிறியது.
It covers a small part of the universal fact.
பிரபஞ்சத்தின் மிகச் சிறிய பகுதி அது.
This is a limited field.
இது அளவுக்குட்பட்டது.
Our instruments are defective.
நம் கருவிகள் குறையுடையவை.
They give us false weights and measures.
அவை தவறாக எடை போடவல்லவை.
They must be exceeded.
நாம் அவற்றைக் கடக்க வேண்டும்.
We must put them away to a distance.
நாம் அவற்றிலிருந்து தூர விலக வேண்டும்.
Their insistence must be denied.
அவற்றை மறுக்க வேண்டும்.
Our conceptions are inadequate.
நமது தத்துவம் சிறியது.
There are more adequate conceptions.
பெரிய தத்துவங்களுண்டு.
They give us the truth of things.
அவை உண்மை.
We must arrive at it.
அவற்றைக் காண வேண்டும்.
Sense-mind commits errors.
புலன் தவறு செய்யும்.
Reason must correct them.
அறிவு அதைத் திருத்த வேண்டும்.
It is a valuable power.
அறிவு உயர்ந்தது.
Man has developed it.
அது மனிதனுக்குரியது.
He is a superior terrestrial being.
மனிதன் பூமியில் உயர்ந்த பிறவி.
Reason makes him so.
அறிவால் மனிதன் உயர்வடைகிறான்.
Page No. 61
Para No. 4
 
Senses belong to physical knowledge.
புலன்கள் ஜடத்தை அறியும்.
Reason is of the metaphysical.
அறிவு தத்துவமானது.
Our being is integral.
நம் ஜீவன் முழுமையுடையது.
Metaphysics gives us concepts.
தத்துவம் விளக்கம் தரும்.
It does not fully satisfy us.
அது திருப்தி தராது.
Pure reason accepts concepts entirely.
அறிவு தத்துவத்தை பூரணமாக ஏற்கும்.
It is satisfactory to it.
அறிவுக்குத் தத்துவம் திருப்தி தரும்.
Concepts are the stuff of reason.
தத்துவம் அறிவுக்கேயுரியது.
Our nature has two eyes.
நமக்கு இரு பார்வைகளுண்டு.
Things appear as an idea.
பொருள்கள் எண்ணமாகத் தோன்றும்.
They also appear as facts.
அவை பொருள்களாகவும் தோன்றும்.
Therefore concepts are incomplete for us.
அதனால் தத்துவம் நமக்குப் போதாது.
They are unreal to a part of us.
நம்முள் ஒன்று தத்துவத்தை மாயை என்று கூறும்.
Only experience is complete there.
அனுபவமே முழுமை தரும்.
Now we have different truths.
பலவகையான உண்மைகள் உள.
They are of a different order.
அவை வேறு வகையானவை.
They are outside our experience.
அவை நமக்கு அனுபவமில்லை.
They cannot be seen by the senses.
அவற்றைப் புலன்களால் அறியமுடியாது.
They can be seen only by the reason.
அறிவால் அறியலாம்.
It needs another faculty in us.
அதற்குப் புதிய திறமை தேவை.
We are dealing with the supraphysical.
நாம் சூட்சுமத்தில் இங்குச் செயல்படுகிறோம்.
So, we must extend our psychological experience.
எனவே, நம் ஆத்மானுபவத்தை வளர்க்க வேண்டும்.
Page No. 62
Para No. 5
 
All our experience is psychological.
அனுபவம் என்பது ஆத்மா உறையும் மனத்திற்குரியது.
We receive by our senses.
புலன்களால் அவற்றை நாம் பெறுகிறோம்.
It goes to the sense-mind.
அது புலனறிவை அடைகிறது.
Indian philosophy calls it Manas.
நாம் அதை மனஸ் என்கிறோம்.
Sense-mind translates the experience for us.
புலன்கள் அனுபவத்தை விளக்குகின்றன.
Therefore, it is psychological.
எனவே, அவை மனத்தைப் பற்றியவை.
Manas is the sixth sense.
மனஸ் என்பது ஆறாம் அறிவு.
So say our philosophers.
நம் தத்துவம் அப்படிச் சொல்கிறது.
We may say it is the only sense.
மனம் மட்டுமே நம் புலன் எனவும் கூறலாம்.
Vision, hearing, smell, touch, taste are other senses.
பார்வை, கேட்பது, நுகருதல், தொடுதல், ருசி மற்ற புலன்களாகும்.
We can say they are specialisations.
அவற்றைக் குறிப்பான செயல்கள் எனலாம்.
Manas uses the sense organs.
மனம் புலன்களைப் பயன்படுத்துகிறது.
They are the base for its experience.
புலன்களே அனுபவத்திற்கு அடிப்படை.
Manas, yet, exceeds the sense organs.
இருப்பினும், மனம் புலன்களைக் கடந்தது.
It is capable of direct experience.
நேரடியான மனம் அறியக் கூடியது.
Reason’s understanding is psychological experience.
அறிவால் புரிவது மனத்தின் அனுபவம்.
It is mixed or dependent.
அது கலப்படமாக, புலனை நம்பியதாக இருக்கலாம்.
Or, it is pure or sovereign.
அல்லது தூய்மையாக, பவித்திரமாக இருக்கலாம்.
It is mixed with outer objects.
மற்ற பொருள்களுடன் கலந்துள்ளது அறிவு.
It is pure with itself.
தனித்துள்ளபோது தூய்மையாகவுள்ளது.
Reason can depend on senses.
அறிவு புலனை நம்பிச் செயல்படலாம்.
It can form perceptions by the senses.
புலனைக் கொண்டு, அதன் மூலம், அறிவு புரிந்து கொள்ளலாம்.
Or, it can act in itself.
அல்லது தானே செயல்படலாம்.
It can be aware of things directly.
நேரடியாக நிகழ்ச்சிகளையறியலாம்.
It is a sort of identity with them.
அவற்றுடன் அப்படி ஐக்கியமாவதுண்டு.
We are thus aware of our emotions.
நம் உணர்வோடு நாம் அப்படி ஐக்கியமாகிறோம்.
We are aware of anger.
கோபம் நாம் அறிவது.
That is, we become anger.
நாமே கோபமாக மாறுகிறோம்.
We are also aware of our existence.
நம்மை நாமறிவோம்.
This is knowledge by identity.
ஐக்கியத்தால் வரும் அறிவு இது.
This is the nature of experience.
இதுவே அனுபவத்தின் தன்மை.
It has a true character.
இது உண்மை.
It is hidden from us.
இது நம்மிடமிருந்து மறைந்துள்ளது.
By exclusion, we are separate from the world.
உலகிலிருந்து நாம் விலகியுள்ளோம்.
We are our subject.
நமக்கு நாமே முக்கியம்.
The rest are objects for us.
மற்றவை நமக்கு புறப்பொருள்கள்.
Now there is separation.
பிரிவினை வந்தது.
The world is separated from us.
உலகம் நம்மிடமிருந்து பிரிகிறது.
To know the world we need organs.
உலகத்தை அறியும் உறுப்புகள் தேவை.
We have developed those organs.
இவை நமக்குண்டு.
Direct knowledge is no longer possible.
நேரடி ஞானம் இனி இல்லை.
So, there can be indirect knowledge.
எனவே ஞானம் மறைமுகமாக வரும்.
It is caused by physical contact.
அது தொடு உணர்ச்சியால் எழும்.
Mental sympathy also gives that knowledge.
அனுதாபத்தாலும் ஞானம் வரும்.
This is a limitation.
இதுவே வரையறை.
It is caused by ego.
அகந்தையால் இது ஏற்பட்டது.
Ego always proceeds on this basis.
அகந்தையின் வழி இதுவாகும்.
Ego starts from an original falsehood.
முழுப் பொய் அகந்தையின் ஆரம்பம்.
It covers the true truths.
சத்தியத்தை அகந்தை மறைக்கிறது.
It offers contingent falsehood in its place.
அதற்குப் பதிலாக நடைமுறைப் பொய்யை அகந்தை அளிக்கிறது.
We take them to be practical truths.
நாம் அவற்றை நடைமுறை உண்மை எனக் கொள்கிறோம்.
Page Nos. 62 & 63
Para No. 6
 
This is our nature.
இதுவே நம் சுபாவம்.
It is a nature of mental and sense knowledge.
புலனறிவும், மனத்தின் அறிவும் சேர்ந்த ஒன்று இது.
We are presently original thus.
இது நம் இன்றைய அமைப்பு.
These are our existing limitations.
இன்றுள்ள வரையறை இவை.
In it there is no inevitable necessity.
இவற்றிற்கு அவசியம் என்று ஒன்று எழவில்லை.
This is a part of human evolution.
மனித வளர்ச்சியின் பாங்கு இது.
Or, it is a result of it.
அல்லது மனித வளர்ச்சியின் முடிவு இது.
There are certain physiological functionings.
உடல் செயல்படும் வழிகள் உள்ளன.
They have their reactions.
அவற்றிற்குத் தேவைகள் உள.
Mind depends on them.
மனம் அவற்றை நம்பி வாழ்கிறது.
Mind is accustomed to them.
இது மனத்தின் பழக்கம்.
Around us is the normal universe.
நம்மைச் சுற்றி உலகம் உண்டு.
It is the material universe.
அது ஜட உலகம்.
Mind, thus, relates to it.
மனம் உலகத்தைத் தொடுகிறது.
We have to be aware of the external world.
புறஉலகை நாம் அறியவேண்டும்.
It is the rule.
இது சட்டம்.
We have to do so indirectly.
இதை நேரடியாகச் செய்யமுடியாது.
It must be through sense-organs.
புலன்கள் மூலமே செய்ய வேண்டும்.
Sense can convey only a limited truth.
புலன்களால் உண்மையை முழுவதும் தரமுடியாது.
We can experience only that much.
அந்த அளவுக்கே அறியமுடியும்.
Yet, it is only a rule.
இது வெறுஞ் சட்டமே.
The rule is after all a habit.
சட்டம் என்பது பழக்கம்.
Maybe it is the regularity of a habit.
நெடுநாளைய பழக்கமாகவுமிருக்கலாம்.
Mind can know directly.
மனம் நேரடியாக அறியமுடியும்.
It can know the objects itself.
பொருள்களை மனம் அறியும்.
It needs no aid of the sense organs.
மனத்திற்குப் புலன் தேவை என்பது இல்லை.
It would be natural for the mind.
புலனின்றிச் செயல்படுவது மனத்தின் இயல்பு.
Thus, it is liberated.
மனம் அங்ஙனம் விடுதலை பெறுகிறது.
It is liberated from the domination of matter.
ஜடத்தினின்று மனம் விடுதலை பெறுகிறது.
Hypnosis does so.
மந்திரமயக்கத்தில் இது நடக்கிறது.
Other psychological phenomena also act so.
இதுபோன்ற பலவகை நிகழ்ச்சிகளுண்டு.
Life evolves.
வாழ்வு வளர்கிறது.
Life works out a balance between mind and matter.
மனத்தையும் ஜடத்தையும் வாழ்வு இணைக்கிறது.
This working has a balance.
அவற்றை நிதானப்படுத்துவது வாழ்வு.
This balance limits the waking consciousness.
விழிப்பை ஆள்வது இந்த நிதானம்.
It also determines it.
நிர்ணயிப்பதும் அதுவே.
Direct knowledge is impossible for mind.
மனத்தால் ஞானத்தை நேரடியாகப் பெறமுடியாது.
It is impossible during its waking hours.
அதுவும் விழிப்பில் பெறுதல் கடினம்.
Therefore the waking mind must go to sleep.
ஞானம் பெற விழிப்பு விலக வேண்டும்.
That sleep liberates the true mind.
சமாதி நிலையில் அது விலகும். மனம் விடுபடும்.
The true mind is the subliminal mind.
அடிமனமே உண்மை. அது விடுதலை பெறும்.
Then mind is free.
இனி மனம் சுதந்திரம் பெற்றது.
A free mind can assert.
சுதந்திரமான மனம் ஆட்சி செய்யும்.
Assertion brings out its true character.
ஆட்சியில் அதன் உயர்வு வெளிவரும்.
It is the all-sufficient sense.
உயர்வு என்பது அனைத்தையும் அறியும் புலன்.
Rather it is its one sense.
அது மட்டுமே புலன் எனலாம்.
Mind then is free to apply to the objects.
மனம் அப்புலனால் பொருள்களை அறியலாம்.
It applies its pure action.
அது மனத்தின் சுதந்திரமான செயல்.
It need not apply its mixed action.
அது கலப்பற்ற செயல்.
This is not an impossible faculty.
இது இல்லாத திறமையன்று.
It is more difficult in the waking state.
விழிப்பில் இதைப் பெறுதல் கடினம்.
There are psychological experiments.
மனத்தை அடைந்தவருண்டு.
There are people who have gone far there.
அதில் அனுபவப்பட்டவருண்டு.
They all know this truth.
அவர்கள் இவ்வுண்மையை அறிவர்.
Page No. 63
Para No. 7
 
We have five senses.
நமக்கு ஐம்புலனுண்டு.
There is a sense-mind.          
புலன்கட்கு அறிவுண்டு.
This mind can develop further senses.
இவ்வறிவு புதிய புலன்களை உற்பத்திச் செய்யவல்லது.
It is its own sovereign action.
மனத்தின் அடிப்படை உரிமை அது.
Our hands can learn the weight of things.
பொருள்களின் எடையை கை அறிய உதவும்.
It can be very accurate.
எடை துல்லியமாக இருக்கும்.
Sense-mind can teach it.
புலனறிவால் அதைக் காண முடியும்.
No other physical means is necessary.
வேறு உதவி தேவையில்லை.
Sense-mind has that capacity.
புலனறிவுக்கு அத்திறனுண்டு.
It uses the sense of contact as a starting point.
தொடு உணர்ச்சியே ஆரம்பம்.
It learns of the pressure also.
கனத்தையும் ஆரம்பமாகக் கருதுகிறது.
But it is not the touch that teaches the mind.
மனம் தொடுஉணர்வால் அறியவில்லை.
Mind finds out the right weight.
மனம் சரியான எடையை தானே அறிகிறது.
It does so by its own independent perception.
தனக்கேயுரிய திறமை மூலம் மனம் அறிகிறது.
Touch is used to know the object.
பொருளை அறிய தொடுஉணர்ச்சி பயன்படுகிறது.
That is how pure reason acts.
பகுத்தறிவு இவ்விதம் செயல்படுகிறது.
Sense-mind also acts like reason.
புலனறிவும் இப்படியே புரிந்து கொள்கிறது.
It does the same thing with sense experience.
புலனறிவு தொடுஉணர்ச்சியைப் பயன்படுத்துகிறது.
It is used as a mere first starting point.
அதை ஆரம்பமாக்குகிறது.
From there it proceeds to a knowledge.
அதிலிருந்து ஞானம் பெற முயல்கிறது.
That knowledge has nothing to do with sense-experience.
பெற்ற ஞானத்திற்கும் புலனுணர்விற்கும் தொடர்பில்லை.
It has nothing to do with sense organs too.
புலன்களுடன் தொடர்பேயில்லை.
It may even contradict their evidence.
மனம் அறிவதும் புலன் உணர்வதும் எதிராகவுமிருக்கலாம்.
The extension of faculty is now a fact.
திறமையை நீட்ட முடியும் என்பது உண்மை.
It is not only to outside.
புறப்பொருள்கட்கு மட்டும் அன்று அவ்வுண்மை.
Not only in small things this is true.
இது சிறிய விஷயங்களில் மட்டும் உண்மையன்று.
Manas can thus be extended to others.
மனத்தை, இதேபோல் மற்றவற்றிற்கும் நீட்டலாம்.
It is true the senses relate to objects.
புலன்கள் பொருள்களைத் தீண்டுவது உண்மை.
Then, this extension becomes a possibility.
ஆகவே, இதுபோல் நீட்டுவதும் முடியும்.
It can be extended to others’ thoughts.
பிறர் எண்ணங்களையும் இதுபோல் அறியலாம்.
Feelings too can thus be known.
உணர்ச்சியையும் இதுபோல் அறியலாம்.
Their utterance is not needed.
அவற்றை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை.
No aid by their gesture is called for.
அங்க அசைவுகளும் தேவையில்லை.
No action or facial expression is necessary.
முகக்குறியோ, செயலோ தேவையில்லை.
These are partial evidence.
அவை முழுமையுடையவையில்லை.
They are misleading data.
தவற்றுக்கு அடிகோலுபவை அவை.
Sometimes they contradict the fact.
சில சமயங்களில் அவை உண்மைக்கு எதிராகவுமிருக்கும்.
We can utilise the senses inside.
நம்முள் உள்ள புலன்களை நாம் பயன்படுத்தலாம்.
We can recognise the sense experience.
புலனுணர்வை நாம் கண்டறியலாம்.
Appearances and images will be enough.
தோற்றங்களும், உருவமும் போதும்.
They do not belong to our environment.
அவை நம்மைச் சூழ்ந்தவையல்ல.
Nor do they belong to our organisation.
நமக்கு அவை தேவையுமில்லை.
All these are extensions of our faculties.
இவை நம் திறமைகளின் வெளிப்பாடுகள்.
We hesitate to receive them.
நாம் தயங்குகிறோம்.
We are incredulous.
நமக்கு நம்பிக்கை எழவில்லை.
It is abnormal to the physical mind.
ஜட மனத்திற்கு இவை புறம்பானவை.
It belies our ordinary life.
நம் அன்றாட வாழ்வை இவை பொய்யாக்குகின்றன.
It goes against our daily experience.
தினசரி வாழ்வுக்கு எதிராக இருக்கின்றன.
They are difficult to set in motion.
இவற்றைச் செயல்படுத்துவது கடினம்.
We cannot easily systematize them.
இவற்றை முறைப்படுத்துவதும் முடியாத ஒன்று.
They cannot become an orderly instrument.
ஒழுங்கான கருவியுமாக இதனால் முடியாது.
Nor are they a serviceable set.
பயன்தரும் முறையில் அவற்றால் செயல்படமுடியாது.
Still, we must admit a higher truth.
இருப்பினும் ஓர் உயர்ந்த உண்மையை நாம் ஏற்க வேண்டும்.
These enlarge our active field.
நம் செயலை அவற்றால் விரிவுபடுத்த முடியும்.
It is a superficial field.
இது மேலெழுந்தவாரியான அரங்கம்.
Of course, the effort is ill-ordered.
நம் முயற்சி முறையானதன்று.
It is by a casual, untaught effort we try.
விவரமில்லாமல், தான்தோன்றியாக நாம் முயல்கிறோம்.
Maybe it can be a scientific effort.
இதை விஞ்ஞானரீதியாக மாற்ற முடியும்.
It may even be a well regulated practice.
சிறந்த முறையாகவும், இதை மாற்றலாம்.
Page No. 64
Para No. 8
 
We have an aim in view.
நமக்கோர் இலட்சியம் உண்டு.
None of them leads to our aim.
இவை எதுவும் நமக்கு உதவா.
These truths have psychological experiences.
இவற்றிற்கு மனோதத்துவ உண்மையுண்டு.
They are beyond the perception of sense.
அவை புலனைக் கடந்தவை.
But, they are seizable by the perception of reason.
ஆனால், அவை பகுத்தறிவுக்குப் புலப்படும்.
They give us only a larger field.
நம் பார்வையை அதனால் விரிவுபடுத்த முடியும்.
They offer more effective means for observation.
சூழலை அறிய அவை பெருங்கருவிகளாகும்.
There is the truth of things.
சத்தியம், உண்மை என்பவை பொருள்கட்குண்டு.
They always escape beyond the senses.
அவை புலன்கட்குப் புலப்படா.
Universal life has a rule.
உலகத்தில் ஒரு சட்டம் உண்டு.
It is a sound one.
அது ஒரு போதும் தவறாது.
It is in its very constitution.
உலகத்தின் பிறப்பிலேயே ஏற்பட்டது அச்சட்டம்.
There may be truths attainable by reason.
அறிவுக்கு எட்டிய உண்மைகள் உலகில் உண்டு.
If so, man can attain it.
அப்படியானால், அது மனிதனுக்குண்டு.
Because, in man the capacity to know will be there.
அவற்றையறியும் திறன் மனிதனுக்குண்டு.
He can arrive at it.
மனிதன் அவற்றைப் பெறலாம்.
He can verify them.
சரியா எனச் சோதிக்கலாம்.
He can do so by experience.
அனுபவத்திலவற்றை அறியலாம்.
It is a knowledge by identity.
அது ஐக்கியத்தால் பெறும் ஞானம்.
This is in our mentality.
நம் மனத்தின் திறன் அது.
By extension, we can be aware of it.
அதைப் பெற நாம் முயலலாம்.
Thus we are aware of our own existence.
நம்மை நாம் அறிவதே அப்படித்தான்.
It is really a self-awareness.
அது தன்னையறிதலாகும்.
It is more or less conscient.
நாம் அறிந்து செய்யும் செயலாகும்.
It is present to our conception.
நம் அறிவுக்கு எட்டும் ஞானமிது.
Our self has its own contents.
நம் ஆத்மாவுக்கு விஷயமுண்டு.
Our knowledge is based on that conception.
அத்தத்துவமே நம் ஞானம்.
We can say it differently.
வேறுவகையாகவும் அதைக் கூறலாம்.
It will be a general formula.
அது பொது விதி.
We seek knowledge of the contents.
நாம் விஷய ஞானத்தைத் தேடுகிறோம்.
We seek knowledge of the continent.
நாம் உள்ளுறை இரகஸ்யத்தை நாடுகிறோம்.
One is in the other.
ஒன்று மற்றதிலுள்ளது.
There is Self beyond us.
நம்மைக் கடந்த ஆத்மா உண்டு.
Self is outside us also.
நமக்கு வெளியேயும் ஆத்மா உண்டு.
It is Atman.
அதை ஆத்மா என்போம்.
It is Brahman of the Upanishads.
உபநிஷதம் அதை பிரம்மம் என்கிறது.
Our mental self-awareness is in us.
மனம் தன்னை அறிவது அதுபோலாகும்.
It can be extended to Self.
அதை ஆத்மாவுக்கும் தர முடியும்.
This is a possibility.
அது முடியும்.
Indian Vedanta bases itself on this.
வேதாந்தத்தின் அடிப்படை இது.
Vedanta has knowledge of the Self.
வேதாந்தம் ஆத்மாவை அறியும்.
The Self of the universe can be known through it.
அதன் மூலம் உலகை அறியலாம்.
Page No. 65
Para No. 9
 
Vedanta values identity.
ஐக்கியம் வேதாந்தத்திற்கு முக்கியம்.
It seeks supreme self-existent identity.
பரம்பொருளோடு வேதாந்தம் ஐக்கியத்தை நாடுகிறது.
That is the only valuable thing for Vedanta.
அதுவே வேதாந்தத்தின் விசேஷம்.
Mental experience is only mental identification.
மனம் ஐக்கியமாவதே மனத்தின் அனுபவம்.
Reason has concepts.
அறிவுக்குத் தத்துவமுண்டு.
They too are only mental identifications.
அவையும் ஐக்கியத்தால் பெறுபவையே.
At best, they are reflections in mental identifications.
மனம் பெறும் ஐக்கியத்தின் பிரதிபலிப்பே அவை.
Vedanta never valued them.
வேதாந்தம் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.
We must exceed mind.
நாம் மனத்தைக் கடக்க வேண்டும்.
We must go beyond reason.
அறிவையும் கடக்க வேண்டும்.
The reason is active in us.
அறிவு நம்முள் ஆழ்ந்து செயல்படுகிறது.
It is active in our waking consciousness.
விழிப்பில் அது தெளிவாகவுள்ளது.
Our evolution is upwards.
நம் பரிணாமம் மேல் நோக்கியது.
We come to it from the subconscient ALL.
ஆழ்நிலை ஆண்டவனிலிருந்து நாம் அங்கு வருகிறோம்.
Evolution pushes us upwards.
பரிணாமம் நம்மை மேல் நோக்கித் தள்ளுகிறது.
The superconscient ALL is there up.
பரம்பொருள் என்பது எல்லாம். அது மேலிருக்கிறது.
Reason mediates between both.
பரம்பொருள் தனக்கு உருவம் தருகின்றது.
The ALL formulates itself.
அவை இரண்டையும் இணைக்க முயல்கிறது.
It does so in many ways.
அதைப் பலவாறு சாதிக்கிறது.
Two of those formulations are there.
இரு சூத்திரங்களுண்டு.
They are up above and down below.
மேலும், கீழுமாக அவ்வுருவங்கள் அமைந்துள்ளன.
The same ALL is up there and down below.
மேலேயுள்ள பரம்பொருளே கீழேயும் உள்ளது.
Each has a master word.
ஒவ்வொன்றுக்குரிய மந்திரம் உண்டு.
Life is of the subconscient.
கீழுள்ளதற்குரிய சொல் வாழ்வு.
Light is of the superconscient.
மேலுள்ளதற்குரியது ஜோதி.
These are the two master words.
இவ்விரண்டும் மந்திரம் போன்ற சொற்கள்.
Action is the essence of Life.
செயல் வாழ்வு மையம்.
Knowledge is consciousness.
ஞானம் என்பது ஜீவியத்திற்குரியது.
It is involved in Life.
அது வாழ்வில் மறைந்துள்ளது.
In the superconscient too there is action.
மேலும் செயல் உண்டு.
Action enters into Light.
செயல் ஒளியை ஊடுருவுகிறது.
Action is not involved here.
செயல் இங்கு மறைந்தில்லை.
There is supreme consciousness here.
இங்குப் பரம்பொருளின் ஜீவியமுண்டு.
Knowledge is involved in it.
ஞானம் இதனுள் உறைகிறது.
Intuition is common between them.
இவையிரண்டிற்கும் பொதுவானது நேரடி ஞானம்.
Identity must be conscious.
ஐக்கியம் என்பதை நாம் அறிந்து பெறுகிறோம்.
Conscious identity is intuition.
நேரடி ஞானம் நாம் தெரிந்து பெறும் ஐக்கியம்.
Identity is between the knower and the known.
மனிதனுக்கும் பொருளுக்குமிடையே ஐக்கியம் உண்டு.
Knowledge makes them one.
ஞானம் அவற்றை இணைக்கிறது.
It is a state of common self-existence.
இரண்டிற்கும் பொதுவான வாழ்வு அது.
Intuition is in the action below.
நேரடி ஞானம் கீழே செயலில் உண்டு.
Knowledge is concealed.
ஞானம் மறைந்துள்ளது.
Knowledge is conscious identity.
தெரிந்த ஐக்கியம் ஞானமாகும்.
Knowledge is concealed in action.
ஞானம் செயலில் மறைந்துள்ளது.
Intuition masks itself in life.
வாழ்வில் நேரடி ஞானம் திரைமறைவிலிருக்கிறது.
It is not necessary for it to hide in the superconscient.
மேலே பரம்பொருளில் மறைய வேண்டிய அவசியம் அதற்கில்லை.
Light is the law in the superconscient.
அங்கு ஜோதியே சட்டம்.
It is also its principle.
முதன்மையான சட்டமும் அதுவே.
Intuition is conscious identity.
நேரடி ஞானம் தெரிந்த ஐக்கியம்.
It is also effectivity of action.
செயலைப் பூர்த்தி செய்வதும் அதுவே.
In the superconscient it is the accompaniment.
பரம்பொருளில் நேரடி ஞானம் உடன் வருவதாகும்.
Rather, intuition is the necessary consequent.
அங்கு நேரடி ஞானம் இயல்பாக வருகிறது.
Therefore it need not hide here.
எனவே மறைய அவசியமில்லை.
It is the primary fact here.
அங்கு அதுவே முதல்.
The true nature of intuition is light.
நேரடி ஞானத்தின் இயல்பு ஜோதி.
Therefore it is knowledge.
எனவே அது ஞானமாகும்.
It naturally emerges out of light.
எனவே ஞானம் இயல்பாக ஜோதியினின்று எழும்.
Reason and mind act between life and superconscient.
வாழ்வுக்கும் பரம்பொருளுக்குமிடையில் அறிவும் மனமும் உள்ளன.
They are the intermediaries here.
அவை இடைப்பட்டவை.
Knowledge is imprisoned.
ஞானம் சிறைப்பட்டுள்ளது.
Reason and mind liberate knowledge.
அறிவும் மனமும் ஞானத்திற்கு விடுதலை அளிக்கின்றன.
Knowledge resumes its original importance.
ஞானம் தன் பழைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
Self-awareness is in the mind.
மனம் தன்னை அறியும்.
We have a content and continent.
பாத்திரமும், அதன் பொருளுமுண்டு.
It can apply to both of them.
அறிவு இரண்டிற்கும் பொருந்தும்.
It can also apply to own-self.
அறிவு தனக்கு வேண்டும்.
It is applied to other-self.
புறத்தையும் அறிய வேண்டும்.
Self-awareness, thus, exalts itself.
தன்னை அறிவது அங்ஙனம் உயர்கிறது.
It becomes luminous.
அது ஜோதியாகிறது.
It seeks identity.
அது ஐக்கியத்தை நாடுகிறது.
It is self-manifest identity.
சுயவெளிப்பாட்டின் ஐக்கியம் அது.
Then reason changes.
அறிவு அப்படி மாறுகிறது.
It becomes self-luminous.
அதுவும் ஜோதிமயமாகிறது.
It becomes intuitional knowledge.
அது நேரடி ஞானமாகிறது.
This is the highest knowledge.
இதுவே உச்சகட்டம்.
Now mind fulfils itself in the supramental.
மனம் இதுபோல் சத்தியஜீவியத்தில் பூர்த்தியாகிறது.
Page No. 65
Para No. 10
 
The above is a human understanding.           
மேற்சொன்னது மனித அறிவு.
It is a scheme of knowledge.
அது ஒரு திட்டம்.
Vedanta is based on this conclusion.
வேதாந்தத்தின் அடிப்படை இதுவே.
The ancient sages arrived at some results.
ரிஷிகள் வந்த முடிவு இது.
It is on the above foundation.
மேற்சொன்ன அடிப்படையில் எடுத்த முடிவு இது.
Sri Aurobindo is not going to develop this idea.
இதைத் தொடர பகவான் விரும்பவில்லை.
He passes this by briefly.
இதை லேசாக விமர்சிக்கின்றார்.
He reviews some of their conclusions.
இம்முடிவுகளை எடுத்துக் கூறுகிறார்.
He is concerned with divine life.
தெய்வீகவாழ்வு இவருடைய இலட்சியம்.
Vedanta touches divine life.
வேதாந்தம் தெய்வீகவாழ்வைப் பற்றிப் பேசுகிறது.
He would review only those ideas.
அதைமட்டும் விளக்குவதே பகவான் நோக்கம்.
The Infinite is changeless.
அனந்தம் நிலையானது.
It is ever changing.
நிலையான அனந்தம் நிலையற்றது.
We shall deal with it anew.
நாம் அதை விமர்சிப்போம்.
We aim at largest gains.
பெரும்பலனை நாம் நாடுகிறோம்.
We intend accumulating them.
அவற்றைச் சேகரிப்பது நம் குறிக்கோள்.
The old treasure is our initial capital.
பழைய பொக்கிஷம் நமது இன்றைய முதல்.
In Vedanta we shall find the best of ideas.
வேதாந்தத்தில் உயர்ந்த எண்ணங்களுண்டு.
They are the previous foundation.
அதுவே பழைய அடிப்படை.
We need to rebuild it.
நாம் அதைப் புதுப்பிக்க வேண்டும்.
Knowledge changes with the times.
ஞானம் காலத்தால் மாறும்.
The old expression is changed.
பழைய சொற்கள் மாறுகின்றன.
New expressions are used.
புதுப் பிரயோகம் எழுகிறது.
Old light is given up.
பழைய பிரகாசம் போகிறது.
New light is introduced.
புதிய ஒளி வருகிறது.
Fresh dawns bring fresh light.
புதிய விடியல் புது ஒளி வெள்ளத்தைத் தருகிறது.
This suits the new mentality.
இன்றைய மனப்போக்குக்கு இது சரி.
Still, we need the old.
இருப்பினும், நமக்கு பழைய ஞானம் தேவை.
Page No. 66
Para No. 11
 
What we see is not true.
நாம் காண்பது உண்மையன்று.
It is apparent reality.
அது தோற்றம்.
Fundamental Reality is behind.
சத்தியம் பின்னாலிருக்கிறது.
We see the movement.
நாம் காண்பது அசைவு.
We see the formation.
அது ரூபம்.
Vedantic experience saw behind them.
வேதாந்தம் அசைவையும், ரூபத்தையும் கடந்த பார்வையுடையது.
Their analysis led them to a concept.
அவர்களுடைய ஆராய்ச்சி முடிவு பெற்றது.
Sat is their last concept.
அப்படி சத் என்பதைத் கண்டனர்.
That was Brahman for them.
அதைப் பிரம்மம் என்றனர்.
It is pure Existence.
அது தூய்மையான சத்தாகும்.
They could not define it.
விளங்கும்படிச் சொல்லக் கூடியதன்று சத் என்பது.
It was infinite.
அது அனந்தம்.
It was absolute.
பூரணமானது.
Our consciousness is ordinary.
நம் ஜீவியம் எளியது.
Our experience is normal.
நம் அனுபவம் அன்றாட வாழ்க்கைக்குரியது.
It does not warrant this conception.
அதன் மூலம் பிரம்மத்தைக் காண முடியாது.
Vedantic rishis went beyond them.
வேதாந்தம் நம் ஜீவியத்தைக் கடந்த பார்வையுடையது.
We live by senses.
நம் வாழ்வு புலன்களாலானது.
Our mind is sense-mind.
நம் மனம் புலன்கட்குரியது.
Existence is pure.
சத் பிரம்மம் தூய்மையுள்ளது.
It is absolute.
பூரணமானது.
Senses do not know the existence.
புலன்கள் பிரம்மத்தை அறியா.
Senses experience movement.
புலன்கள் அனுபவிப்பது சலனம்.
Form reveals to the senses.
ரூபம் புலனுக்குப் புலப்படும்.
Senses tell us about form and movement.
புலன் நமக்குச் சலனத்தையும் ரூபத்தையும் அறிவிக்கின்றது.
Forms exist.
ரூபம் உண்மை.
They are not pure.
அவை தூய்மையானவையில்லை.
They are always mixed.
கலப்படம் ரூபத்தின் தன்மை.
They are combined.
இணைந்திருப்பது ரூபத்தின் இயல்பு.
They are aggregated.
பல சேர்ந்த நிலை ரூபத்தின் சுய உருவம்.
They are relative.
ரூபம் வாழ்வுக்குரியது.
We can go within ourselves.
உள்ளே சென்று நாம் உணரவேண்டும்.
Precise form vanishes then.
ரூபத்தின் சிறப்பு அங்கே மறைகிறது.
But movement remains.
சலனம் நிலைத்து நிற்கிறது.
Change persists even inside.
உள்ளே மாற்றம் உருவத்துடனிருக்கிறது.
Matter is in motion.
ஜடம் அசைகிறது.
Motion is in Space.
ஜடம் அசைய இடம் தேவை.
Motion is in Time.
அசைவு காலத்திற்குரியது.
They seem to be the conditions of existence.
காலமும், இடமும் சிருஷ்டிக்கேயுரியவை எனத் தோன்றுகிறது.
We may call this existence.
இதையே சிருஷ்டி எனவும் கூறலாம்.
The ideas of existence are no reality.
சிருஷ்டியைப் பற்றி அறிவது முடிவில்லை எனவும் தோன்றும்.
They correspond to no discoverable reality.
எந்த சத்தியமும் அதன் மூலம் வெளிப்படாது.
There is the phenomenon of self-awareness.
சில சமயங்களில் ஆத்மானுபவம் பெறுகிறோம்.
We can go behind it.
அதன் பின்னும் சில சமயங்களில் காண்கிறோம்.
There is something immovable.
அசைவற்றதை அங்குக் காண்கிறோம்.
It is immutable.
அது அழிவற்றதுமாகும்.
We get a glimpse of it.
அதன் சாயல் தெரிகிறது.
It is vague.
தெளிவற்ற உருவம் அதனுடையது.
We perceive it.
நமக்கு அது புலப்படுகிறது.
We imagine it to be beyond life and death.
வாழ்வையும், மரணத்தையும் கடந்ததாக நாம் நினைக்கிறோம்.
We think it is beyond formation and action.
செயலையும், ரூபத்தையும் கடந்ததாகத் தோன்றுகிறது.
This is a door.
அது பெரு வாயில்.
Sometimes it swings open.
சட்டென அது திறப்பதுண்டு.
Beyond is the splendour of truth.
சத்தியத்தின் அற்புதம் கண்ணில் படுகிறது.
It shuts at once.
உடனே திறந்த கதவு மூடுகிறது.
The door, before shutting, allows a ray to pass.
மூடுமுன் மின்னல்போல் காட்சி தெரிகிறது.
The ray touches us.
ஓரிழை ஒளி நம்மைத் தீண்டுகிறது.
It is a luminous limitation.
ஜோதிமயமான தோற்றம் அது.
We may hold on to it.
நாம் அதைப் பிடித்துக் கொள்ளலாம்.
It needs strength and faith.
நம்பிக்கையும் பலமுமிருந்தால் முடியும்.
That gives a new starting point.
அது புதிய திருப்பம்.
It is another play of consciousness.
அது ஜீவியத்தின் புதிய நிலை.
It is of Intuition.
அது நேரடி ஞானம்.
It is different from sense-mind.
இது புலனறிவைக் கடந்த நிலை.
Page No. 67
Para No. 12
 
We must examine carefully.   
நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
We make a discovery.
புதியன புறப்படும்.
Intuition is our first teacher.
நேரடி ஞானம் கற்பிக்கப்படுகிறது.
The Unknown is behind.
திரை மறைவில் இதுவரை காணாததுள்ளது.
It has brilliant messages.
அது அற்புதமானது.
Intuition brings these messages.
நேரடி ஞானம் அதை நமக்குணர்த்துகிறது.
It is the beginning of higher knowledge.
அதுவே ஆத்ம ஞானத்தின் ஆரம்பம்.
Reason comes later.
பகுத்தறிவு பின் தொடர்கிறது.
It examines the shining harvest.
பகுத்தறிவு ஞானம் பெற்றதைப் பரிசீலனை செய்கிறது.
Reason profits from Intuition.
நேரடி ஞானத்தால் பகுத்தறிவு பலன் பெறுகிறது.
Man’s reason is lower reason.
மனித அறிவு தாழ்ந்தது.
It presents a contradiction.
அது முரணானது.
It pursues man forever.
நம் வாழ்வை அது நிரப்புகிறது.
It is his normal experience.
இதுவே நம் அன்றாட அனுபவம்.
There is something behind.
அதைக் கடந்ததுண்டு.
It is beyond.
அது கடந்த நிலை.
Intuition gives us that idea.
நேரடி ஞானத்தால் நாம் அதை அறிகிறோம்.
Man formulates that formless perception.
உருவமற்றதை மனிதன் உருவகப்படுத்துகிறான்.
It is more positive of God, Immortality.
அமர வாழ்வு கடவுள் என்பதாகும்.
Intuition impels man to formulate them.
அதைச் சாதிக்க நேரடி ஞானம் உந்துகிறது.
God, Immortality, Heaven represent what is beyond.
சொர்க்கம், கடவுள், அமர வாழ்வு என்பவை கடந்த நிலையைக் குறிக்கின்றன.
Intuition is strong.
நேரடி ஞானம் வலுவானது.
It is strong like Nature.
இயற்கை போன்ற வலுவுடையது.
It springs from Nature.
இயற்கையினின்று பிறந்தது.
The very soul of Nature gives birth to Intuition.
நேரடி ஞானம் இயற்கையின் ஆழத்திலிருந்து பிறந்தது.
It is contradicted by experience.
அனுபவம் அதற்கெதிரானது.
Also reason denies it.
பகுத்தறிவு அதை மறுக்கிறது.
Intuition cares nothing for these denials.
நேரடி ஞானம் மறுப்பைப் பொருட்படுத்துவதில்லை.
Intuition knows what is.
தான் யாரென நேரடி ஞானம் அறியும்.
It knows what it is.
சத்தியத்தையும் அது அறியும்.
It knows it because it is of it.
சத்தியத்திருஷ்டியிலிருந்து பிறப்பதால், நேரடி ஞானம் அதை அறியும்.
It has come from that.
அதனினின்று வருவது இது.
The denial is a becoming.
மறுப்பு இயற்கைக்குரியது.
The contradiction is an appearance.
முரண்பாடு தோற்றம்.
Intuition will not yield to these.
நேரடி ஞானம் இவற்றை ஏற்பதில்லை.
There is a point of light in us.
நம்முள் பொறியான ஜோதியுண்டு.
This is the advantage of Intuition.
இப்பொறியே நேரடி ஞானத்திற்கு ஆதரவு.
It opened the door in our self-awareness.
நம்மை அறிய உதவும் கதவு இப்பொறி.
Intuition proceeds from this point.
நேரடி ஞானம் இங்கிருந்து புறப்படுகிறது.
Therefore Intuition tells us of it.
ஞானம் நமக்கிதை உணர்த்துகிறது.
It speaks of Existence.
சத்தைப் பற்றி அது கூறுகிறது.
Better still, it speaks of the Existent.
மேலும் சத் புருஷனைப் பற்றிக் கூறுகிறது.
Ancient Vedanta seized this message.
வேதாந்தம் இதைப் பற்றிக் கொண்டது.
This is from Intuition.
அதைக் கூறியது நேரடி ஞானம்.
Vedanta formulated it in three great declarations.
மூன்று மந்திரங்களாக அதை வேதாந்தம் புனைந்தது.
“I am He”, “Thou are That”, “All this is the Brahman,this Self is the Brahman” are the three declarations.
“நானே அவன்”, “நீயே அது”, “சர்வம் பிரம்மம், ஆத்மா பிரம்மமாகும்”, என்பவை அம்மந்திரங்கள். சோஹம், அகம் பிரம்மம், சர்வம் பிரம்மம்.
Page No. 68
Para No. 13
 
Man has unenlightened parts.
இருளான பகுதி மனிதனுக்குண்டு.
Those are less articulate parts.
விவரமற்ற பகுதிகள் அவை.
He is behind a veil.
மனிதனுக்கு முன் திரையுண்டு.
His waking conscience is a narrow light.
விழிப்பு, சிறிய ஒளி.
His instruments are feeble.
நம் கருவிகள் பலஹீனமானவை.
They cannot assimilate the inner messages.
உள்ளிருந்து எழும் குரலை ஏற்கும் திறனற்றவை.
This is the nature of man.
இதுவே மனித சுபாவம்.
Intuition has to act in these conditions.
இச்சூழ்நிலையில் நேரடி ஞானம் செயல்பட வேண்டும்.
Man’s nature demands truth.
மனிதனுக்குச் சத்தியம் தேவை.
But it demands it in an ordered form.
விவரமான விளக்கமாக மனிதன் அதை எதிர்பார்க்கின்றான்.
The truth, for man, needs to be articulated.
சொல்லின் விளக்கம் மனிதன் தேடுவது.
Intuition is incapable of this.
நேரடி ஞானம் இவற்றையறியாது.
Intuition is now not on the surface.
மனித மேல்மனத்தில் நேரடி ஞானமில்லை.
Nor is it organised there.
அங்கு, தெளிவாகச் செயல்படும் நிலையிலுமில்லை.
Neither does it possess the surface being.
மேல்மனம் அதன் ஆட்சியிலுமில்லை.
It does not play a leading part on the surface.
நேரடி ஞானம் மேல்மனத்தில் முக்கிய பங்கு வகிக்கவில்லை.
Direct knowledge needs this completeness.
மனிதன் கடவுளை நேரடியாக அறிய மேல்மனம் இத்தகுதிகளைப் பெற வேண்டும்.
Given these, Intuition can deliver its message.
இவையிருந்தால் நேரடி ஞானம் நமக்கு கடவுளை உணர்த்தும்.
Intuition is not on the surface.
நேரடி ஞானம் மேல்மனத்திலில்லை.
It is reason that rules there.
பகுத்தறிவு அங்கு ஆட்சி செய்கிறது.
Reason is organised here.
பகுத்தறிவு இங்கு தெளிவு பெற்றுள்ளது.
It helps us.
இது பேருதவி.
Our perceptions are on the surface.
நாம் அறிவதனைத்தும் மேல்மனத்தில்.
Thoughts are born there.
எண்ணங்கள் எழுவது அங்குதான்.
Actions originate here.
செயல்களுக்கும் அதுவே உற்பத்தி ஸ்தானம்.
It is reason that orders all these.
இவற்றை எல்லாம் மேற்பார்வையிடுவது பகுத்தறிவு.
Vedanta belongs to the intuitive age.
வேதாந்தம் ஞானம் பிறந்த காலத்திற்குரியது.
It was governed by the Upanishads.
வேதாந்தம் என்பது உபநிஷதம்.
Reason was born later.
பகுத்தறிவு பிறகு பிறந்தது.
It took over the next age.
அடுத்த காலத்தை அறிவு ஆட்சி செய்தது.
Vedanta was inspired scripture.
வேதாந்தம் ஞானோதயத்தில் பிறந்தது.
Reason gave birth to metaphysics.
அறிவு வந்து தத்துவத்தைக் கொண்டு வந்தது.
Metaphysics won the day.
தத்துவம் வென்றது.
Later came experimental Science.
அடுத்தாற்போல் விஞ்ஞானம் வந்தது.
Metaphysics lost its field to science.
விஞ்ஞானம் தத்துவத்தை வென்றது.
Intuition is born in the superconscient.
நேரடி ஞானம் பரம்பொருளில் எழுகிறது.
It is a messenger from there.
பரம்பொருளின் தூதுவனாக வருகிறது அது.
Superconscient is our highest faculty.
பரம்பொருளே நமக்கு உச்சகட்டம்.
Pure reason is a deputy of the superconscient.
பகுத்தறிவு பரம்பொருளுக்குப் பிரதிநிதி போன்றது.
It belongs to the middle heights of our being.
நம் ஜீவனின் மையத்திலுள்ளது பகுத்தறிவு.
Reason supplanted Intuition.
அறிவு ஞானத்தை விரட்டியது.
Physical mind belongs to the lower elevations.
ஜட மனம் தாழ்ந்த பகுதிக்குரியது.
Senses go with it.
அது புலனுக்குரியது.
Together they belong to the plains.
இரண்டும் சமவெளியான தாழ்நிலத்திற்குரியவை.
They are confined to their experience.
இவை அனுபவத்தை ஏற்கின்றன.
They are bound by the aids we have invented.
இவை கண்டுபிடித்த கருவிகளை நம்பி வாழும் பழக்கமுடையவை.
Here reason has a mixed action.
பகுத்தறிவு இங்கு தூய்மையாகச் செயல்பட முடியாது.
In time, reason lost to science.
காலப்போக்கில் விஞ்ஞானம் அறிவை வென்றது.
This process is a descent.
இது கீழ்நிலை.
It is really a circle of progress.
ஆனால் இதிலும் ஏற்றமுண்டு.
The lower is compelled by the higher.
தாழ்நிலை மேல் நிலைக்குட்பட்டது.
It has to assimilate the higher knowledge.
மேல்நிலை ஞானத்திலிருந்து கீழ்நிலை பெற வேண்டும்.
The lower has to re-establish the higher.
தாழ்நிலை உயர்ந்து ஞானத்தை ஏற்க வேண்டும்.
It has to do it in its own way.
தனக்குரிய முறையில் அதைச் செய்ய வேண்டும்.
The lower enlarges by this exercise.
இதன் மூலம் சிறியது பெரியதாகிறது.
It becomes supple.
கடினமான சிறியது நெகிழ்ந்து உயர்கிறது.
It offers more ample self-accommodation.
தான் மலர ஆரம்பிக்கிறது.
Thus the higher enters the lower.
உயர்ந்தது தாழ்ந்ததை ஆட்கொள்கிறது.
This is an attempt at separate assimilation.
ஒவ்வோர் பகுதியும் முன்னேறும் முறை இது.
These attempts are in succession.
இவை ஒன்றன்பின் ஒன்றாய் வருகின்றன.
This alteration is essential.
மாறிமாறி வருவது அவசியம்.
Without this, we would remain under exclusive domination.
இல்லையெனில், நாம் ஓர் பகுதிக்கேயுட்பட்டிருப்போம்.
A part of our nature would so dominate.
ஒரு பகுதியே ஆட்சி செய்யும்.
The rest would remain depressed.
மற்றவை சுருங்கி அவதிப்படும்.
They would be unduly subjected.
அவசியமில்லாமல் அவை சிரமப்படும்.
The depressed part would remain separate in its field.
ஒடுக்கப்பட்டவை தம் நிலையில் ஒதுங்கியிருக்கும்.
Thus, it would be poorly developed.
அதனால், அவை வளரும் சந்தர்ப்பம் எழாது.
Page No. 68
Para No. 14
 
We see this in the Upanishads.
இந்நிலையை நாம் உபநிஷதத்தில் காண்கிறோம்.
This succession is seen there.           
ஒன்றன் பின் ஒன்றாக வரும் நிலை அங்குள்ளது.
It is there even after that.
உபநிஷத காலம் கடந்தும் இந்நிலையைக் காண முடியும்.
Intuition ruled the Vedas and Vedanta.
வேதமும் வேதாந்தமும் ஞானத்தைப் பெற்றவை.
They relied on spiritual experience.
ஆத்மானுபவத்தை அவர் ஏற்றனர்.
Scholars speak of great debates.
விவாதங்களைப் பண்டிதர் குறிக்கின்றனர்.
It is an error.
இது தவறு.
They go by the name of discussion.
வாதம் என்ற சொல்லைக் கூறுகின்றனர்.
They are really not discussions.
உண்மையில் அவை வாதங்களில்லை.
Controversies rise by dialectics.
தர்க்கம் வாதமாகிறது.
Logical reasoning raise them too.
பகுத்தறிவு, தர்க்கம் ஆகியவை அவற்றை எழுப்புகின்றன.
They are not governed by logic.
வேதாந்தம் தர்க்கத்திற்குட்பட்டதில்லை.
What governs is intuition.
அது ஞானத்திற்குரியது.
They finally compare experiences.
முடிவாக ஆத்மானுபவம் பேசப்படுகிறது.
Here greater light prevails.
பெரிய அனுபவத்தை ஏற்கின்றனர்.
The narrower one is let down.
சிறியது புறக்கணிக்கப்படுகிறது.
The faulty ones are side-stepped.
தவறானவை ஒதுக்கப்படுகின்றன.
Comprehensiveness is accepted.
விசாலமான அனுபவம் ஏற்கப்படுகிறது.
Perfection is appreciated.
சிறப்பைப் பாராட்டுகின்றனர்.
The more essential is readily accepted.
முக்கியமானதை உடனே ஒத்துக் கொள்கின்றனர்.
One asks the other what he knew.
ரிஷி அடுத்தவரை உங்களுக்கென்ன தெரியும் என்று கேட்கிறார்.
He does not ask what he thinks.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பதில்லை.
No one asks what his conclusions are.
உங்கள் முடிவு என்ன என்று எவரும் சொல்வதில்லை.
Logical reasoning is absent in Vedanta.
வேதாந்தத்தில் தர்க்கம் காணப்படவில்லை.
Vedantic truths are not logically established.
தர்க்கரீதியாக வேதாந்தக் கருத்துகள் ஏற்படவில்லை.
Intuition has been accepted by the sages.
ஞானம் ரிஷிகளால் ஏற்கப்படுகிறது.
Greater intuitions prevailed over lesser ones.
பெரிய ஞானம் சிறிய ஞானத்தை வென்றது.
No one resorted to logical reasoning.
தர்க்கவாதம் அக்காலத்திலில்லை.
Page No. 69
Para No. 15
 
Human reason is demanding.
மனிதன் தன் பகுத்தறிவை வலியுறுத்துகிறான்.
It asks for its own method of satisfaction.
தன் போக்கில் தன்னைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பது அவன் கொள்கை.
In later days speculation began.
பிற்காலத்தில் வாதம் எழுந்தது.
They were rationalistic.
அவை பகுத்தறிவுக்குரியவை.
Indian philosophers respected the past.
இந்திய ஞானிகள் கடந்ததைப் போற்றினர்.
The past brought a heritage.
கடந்தது உயர்ந்தது.
Therefore they took a double attitude.
எனவே ஞானிகள் இரு வழிகளை நாடினர்.
They sought the Truth thus.
சத்தியத்தை நாட அவர்கள் பின்பற்றிய உபாயமிது.
They recognised the Sruthi.
சுருதியை அவர் ஏற்றனர்.
It is the earliest result of Intuition.
நேரடி ஞானம் முதலில் உற்பத்தி செய்தது அதுவே.
They called it inspired Revelation.
அதை ஞானோதயம் என்றனர்.
It was an authority.
அது முடிவான சாஸ்த்திரம்.
It was superior to Reason.
அறிவைவிட அது உயர்ந்தது.
They started from Reason.
வேதாந்த ரிஷிகள் அறிவை ஏற்றனர்.
They tested its results.
அதன் முடிவைச் சோதித்தனர்.
Verified with the supreme authority.
முடிவான சாஸ்திரங்களுடன் அதை ஒப்பிட்டனர்.
Accepted those sanctioned by it.
அது ஏற்றதை அவர்கள் ஏற்றனர்.
Metaphysics has a besetting sin.
தத்துவம் குதர்க்கமானது.
It is a battle in the clouds.
அது விதண்டாவாதம்.
It deals with words.
பதப்பிரயோகம் அதற்கு முக்கியம்.
They treat words as imperative facts.
சொற்களை அவர்கள் புனிதமாகக் கருதுகின்றனர்.
Words are really symbols.
சொல் என்பது ஓர் அறிகுறி.
We must scrutinise the words.
நாம் சொற்களை ஆராயவேண்டும்.
We must restore the original sense.
மூலத்தின் புனிதத்தைக் காண வேண்டும்.
Thus, they avoided the pitfalls.
இவ்வழியாக அவர்கள் தவற்றை விலக்கினர்.
They did speculate.
அவர்கட்கும் யோசனை எழுந்தது.
They chose the highest experience.
முடிவான அனுபவத்தை நாடினர்.
It was the profoundest experience too.
அது உச்சகட்ட அனுபவம்.
That kept them at the centre.
அதை மையமாக்கினர்.
They sought the consent of Intuition.
அதற்கு ஞானத்தின் உத்தரவை நாடினர்.
They also sought it from Reason.
அறிவு சொல்வதையும் கேட்டனர்.
To them, both were great authorities.
இரண்டும் முக்கியமே.
Reason subordinated sometimes.
சில சமயங்களில் அறிவு தோற்றது.
It dominated at other times.
மற்ற நேரம் அறிவு வென்றது.
The natural trend was to assert itself.
வெற்றியே வென்றது.
The supremacy of Reason triumphed.
முடிவாக அறிவு தன் வெற்றியை நிலைநாட்டியது.
So, conflicts arose.
எனவே, பிணக்கெழுந்தது.
Several schools arose.
பல கட்சிகள் பிறந்தன.
They sought support in the Veda.
வேதத்தை ஆதரவுக்காக நாடினர்.
Its texts were used against the others.
வேத சூக்தங்களை ஒருவருக்கெதிராக அடுத்தவர் பிரயோகம் செய்தனர்.
Intuitive Knowledge is the highest.
ஞானம் முடிவானது.
It sees things in the whole, in the large.
அது முழுமையானது.
To it, details are only sides of the whole.
விவரங்கள் அதற்கு இரண்டாம்பட்சம்.
It tends to synthesis.
முழுமையையே எப்பொழுதும் நாடுவது அதன் வழி.
It seeks unity of knowledge.
ஞானத்தின் முழுமையை நாடிப் போனார்கள்.
Reason proceeds by analysis.
அறிவு ஆராய்கிறது.
It divides and assembles its facts.
அது பிரித்தும், சேர்த்தும் பார்க்கிறது.
It tries to form a whole.
ஒரு முழுமையை அதுவும் நாடுகிறது.
The assemblage is an assortment.
அதன் முடிவு அர்த்தமற்றது.
There are opposites.
Anomalies abound.
Logical incompatibilities come in.
அதனுள் பொருத்தமில்லாதவை, எதிரானவை, தர்க்கத்திற்கு ஒவ்வாதவை கலந்துள்ளன.
Reason affirms some.
அறிவு சிலவற்றை ஏற்கிறது.
It negates the others.
மற்றவற்றை எதிர்க்கிறது.
It tries for a system.
ஓர் ஒழுங்கை ஏற்படுத்த முயல்கிறது.
It aims at a flawless, logical one.
தவறற்ற, தர்க்கரீதியான முடிவை நாடுகிறது.
The original unity of knowledge is broken up.
என்றாலும், ஆரம்பமுழுமை சிதைந்துவிட்டது.
It was intuitional knowledge.
அது ஞானம்.
The logicians had an ingenuity.
தர்க்கவாதி கெட்டிக்காரன்.
They discovered devices of value.
வலுவான மார்க்கங்களை அவன் கண்டான்.
Methods of interpretation arose.
முறைகள் எழுந்தன.
Standards of varying value were there.
பல நிர்ணயங்கள் வந்தன.
The logicians denied the inconvenient ones.
சரிவராததை தர்க்கம் ஏற்கவில்லை.
They acquired a certain freedom.
எனினும், தங்களுக்கு ஒரு சுதந்திரம் ஏற்படுத்திக் கொண்டனர்.
Metaphysics came into its own.
தர்க்கம் முடிவாக வென்றது.
The main conceptions of Vedanta remained.       
வேதாந்தக் கரு உயிருடனிருந்தது.
Page No. 70
Para No. 16
 
They were parts of the new systems.
அவை புதிய தத்துவங்களால் ஓரளவு ஏற்கப்பட்டன.
Fresh efforts always arose.
புதியவர் வந்தனர்.
They tried to combine these parts.
இப்பகுதிகளை ஒன்று சேர்க்க முயன்றனர்.
They were true to the original catholicity.
ஆரம்பப் புனிதத்தைத் தாங்கி வருபவை அவை.
It was of the intuitional thought.
அவை ஞானத்திற்குரியவை.
Thoughts were variously presented.
தத்துவங்கள் பல ரூபங்களில் பவனி வந்தன.
Purusha, Atman, Sat Brahman, the Pure Existent were the original conceptions.
புருஷன், ஆத்மா, சத் பிரம்மம் ஆகியவை ஆரம்பத்திற்கு உரியவை.
They were fundamental.
அவை அடிப்படையானவை.
They all survived in some form.
ஏதோ ஒரு வகையில் அவை நிலை பெற்றிருந்தன.
Their reality was inexpressible.
சத்தியம் சொல்லுக்குப் புலப்படவில்லை.
It was its old burden.
அதுவே பழைய பல்லவி.
The new presentation was a rationalised one.
புதிய தத்துவங்கள் அறிவுக்குரியவை.
Becoming is the world.
உலகம் பிரகிருதி எனும் இயற்கை.
It is a movement.
அது சலனம்.
Existent is an absolute unity.
சத் முழுமையானது.
What is their relationship?
இவற்றிடையேயுள்ள தொடர்பெது?
Is ego generated by the becoming?
அகந்தையை உலகம் சிருஷ்டித்ததா?
Has ego created the world?
அகந்தை பிரகிருதியை சிருஷ்டித்ததா?
How can it return to the Self?
எப்படி அகந்தை சத் புருஷனை அடைய முடியும்?
Self is Divinity or Reality.
சத், சத்தியம், தெய்வம் என்பவை அடிப்படை.
Vedanata declares these truths.
வேதாந்தம் இவற்றை உலகுக்களித்தது.
Indian thought was occupied by these questions.
இக்கேள்விகள் நம் முன் இருந்தன.
Sometimes these were speculations.
சில சமயங்களில் அவை வாதங்களாக இருந்தன.
At other times these were practical.
மற்ற நேரங்களில் இவை உண்மையாக இருந்தன.

 book | by Dr. Radut