Skip to Content

05. VII The Ego and the Dualities

 

VII.     The Ego and Dualities
7. அகந்தை - இன்ப துன்பம்
Page No. 51
Para No. 1
 
All is in truth Sachchidananda.
அனைத்தும் சச்சிதானந்தம்.
But death is there.
அப்படியெனில் மரணம் எப்படி வந்தது?
Suffering is real.
துன்பம் இருக்கிறதன்றோ?
No one can deny evil.
தீமை இல்லை எனக் கூற முடியுமா?
What are they?
அவை என்ன?
They are only limitations of truth.
அவை உண்மையின் சிறு உருவங்கள்.
Practically they have a positive effect.
நடைமுறையில் நாம் அவற்றை உணர்கிறோம்.
Essentially they are negative.
அடிப்படையில் அவை கெட்டவை.
The truth is total.
சத்தியம் முழுமையானது.
It is a unifying knowledge.
சத்தியம் அனைத்தையும் ஒன்று சேர்க்கும்.
There can be a fall.
அதனினின்று வழுவ முடியும்.
It could distort.
அது விகாரப்படுத்தும்.
The distorting consciousness is there.
விகாரம் விளக்கம் பெறும்.
It could be a partial experience.
அது பகுதியான அனுபவமாகும்.
It could be a fall into division.
அது பிரிவினைக்கு வழி செய்யும்.
The Hebrew Genesis speaks of this.
பைபிள் இதைக் கூறுகிறது.
It is the same talk.
இதுவும் அதுவே.
It speaks poetically.
காவியமாகப் பேசுகிறது.
It is a parable.
கதையாக எழுதப்பட்டுள்ளது.
That is a deviation.
சத்தியத்தினின்று அது விலகுவதாகும்.
He could not accept God fully.
மனிதனால் கடவுளை முழுமையாக ஏற்க முடியவில்லை.
He could not accept Him purely.
தூய்மையாகவும் ஏற்க முடியவில்லை.
He fell into a dividing consciousness.
பிரிந்துள்ள ஜீவியத்தை அடைந்தான் மனிதன்.
It brings dualities.
அது இரட்டைக்கு வித்து.
Life and death are such.
வாழ்வும், மரணமும் எதிரானவை.
Good and evil are there.
நன்மையும் தீமையும் அது போன்றவை.
Joy and pain are such.
இன்பதுன்பம் இரட்டையாகும்.
Completeness and want is also a duality.
முழுமையும், குறையும் அதுவே.
These are all fruits of a divided being.
ஜீவன் பிரிந்ததன் விளைவுகள் அவை.
Bible calls it Adam and Eve.
பைபிள் அதை ஆதாம், ஏவாள் என்றது.
We say it is Purusha and Prakriti.
நாம் புருஷன், பிரகிருதி என்கிறோம்.
Adam was the soul.
ஆதாம் ஆன்மா.
Nature tempted him.
பிரகிருதி அவனைத் தூண்டியது.
Therefore he ate it.
அதனால் அவன் பழத்தைத் தின்றான்.
There is redemption.
அதற்கு வழியுண்டு.
We must recover the universal.
பிரபஞ்சத்தை அடைவதே வழி.
The individual should become the universal.
மனிதன் பிரபஞ்சமாக வேண்டும்.
There is a spiritual term in the physical.
உடலில் ஆன்மா உண்டு.
It is in the physical consciousness.
உடலின் ஜீவியத்திலுள்ளது அது.
He must recover it.
மீண்டும் மனிதன் அதைப் பெற வேண்டும்.
The tree of life has a fruit.
வாழ்வு என்ற மரம் பலன் தருகிறது.
By eating that one can be Divine.
அதைச் சாப்பிட்டால் தெய்வமாகலாம்.
Then he can live forever.
சாப்பிட்டால் மரணமில்லை.
Soul in Nature can get it.
இயற்கையின் ஆன்மா அதைப் பெற முடியும்.
The above is the condition.
மேற்சொன்னதே நிபந்தனை.
Divine has descended.
இறைவன் உலகுக்கு வந்துள்ளான்.
It descended into matter.
ஜடத்திலும் அவன் உறைகிறான்.
It has descended into its consciousness.
ஜடத்தின் ஜீவியத்தில் அவன் உள்ளான்.
It has a purpose.
அதற்கு ஒரு லட்சியம் உண்டு.
To accomplish that purpose is essential.
அதை அடைவது அவசியம்.
For that the above is necessary.
அதற்கு மேற் சொன்னது அவசியம்.
There is a higher knowledge.
உயர்ந்த ஞானம் உண்டு.
Man has a soul.
மனிதனுக்கு ஆன்மா உண்டு.
It must recover that knowledge.
அது அந்த ஞானத்தைப் பெற வேண்டும்.
Good and evil have a knowledge.
நல்லதும் கெட்டதும் ஞானம் பெற்றவை.
Joy and suffering too have it.
இன்பதுன்பமும் அப்படியே.
Life and death also have it.
வாழ்வும் மரணமும் அது போன்றவையே.
That knowledge must be recovered through these.
இவைமூலம் அந்த ஞானத்தைப் பெறவேண்டும்.
That knowledge reconciles them.
அந்த ஞானத்தை இவை இணைக்கின்றன.
It identifies them in the universal.
பிரபஞ்சத்தில் அந்த ஞானம் இவற்றைக் காண்கிறது.
It transforms their divisions.
இப்பிரிவினைகளை அது திருவுருமாற்றும்.
The divisions become the image of divine unity.
இப்பிரிவினை இறைவனின் உருவமாகும்.
Page Nos. 51 & 52
Para No. 2
 
Sachchidananda is extended.
சச்சிதானந்தம் நீள்கிறது.
It is extended to all things. 
அனைத்தையும் அது எட்டுகிறது.
The extension is wide.
அது அகன்ற விரிவு.
In widest commonalty it is extended.
அவ்விரிவு பரந்த பொதுத் தன்மையுடையது.
It is also impartial universality. 
அது பாரபட்சமற்ற பிரபஞ்சமாகும்.
We find them to be four.
அவை நான்கு.
Death is one of them.
மரணம் ஒன்று.
Suffering is another.
துன்பம் அடுத்தது.
Evil and limitation are the next.
தீமையும், வரையறையும் அடுத்தவை.
They are shadow-forms of Truth.
அவை சத்தியத்தின் நிழலுருவங்கள்.
They are luminous opposites to Truth.
பிரகாசமான எதிரிகள் அவை.
We feel them.
நாம் அவற்றை உணர்கிறோம்.
To us they are notes of a discord.
அவை பிணக்கானவை.
Unity is the order of the universe.
பிரபஞ்சம் ஒன்றுபட்டது.
These formulate separation.
இவை பிரிவை உருவகப்படுத்துகின்றன.
There should be understanding.
ஞானம் இருக்க வேண்டும்.
They create miscomprehension.
இவை தப்பாகப் புரிந்து கொள்கின்றன.
There should be self-adaptation.
தாமே வளைந்து வரவேண்டும்.
There is an orchestral whole.
சங்கீதம் முழுமையானது.
They should become part of it.
முழுமையில் அவை கலக்க வேண்டும்.
Instead they attempt independent harmonies.
மாறாக அவை தனியே பாடுகின்றன.
Totality means harmony.
முழுமை என்பது சுமுகம்.
It is so even if it is partial.
பகுதிக்கும் அச்சுமுகம் உண்டு.
Even the totality of the physical is so.
ஜடத்திற்கும் சுமுகம் உண்டு.
Even if it leaves out what is beyond, it is so.
பின்னணியை மறந்தாலும் சுமுகம் உண்டு.
It is true of what is behind also.
பின்னாலிருப்பதற்கும் உண்டு.
Totality is a reversal.
முழுமை என்பது எதிராக மாறுவதாகும்.
It is a reversion to harmony.
பிணக்கிலிருந்து சுமுகமாவதாகும்.
These are no jarring opposites.
அங்கு கர்ணகடூரமான பிணக்கில்லை.
Sachchidananda is transcendent.
சச்சிதானந்தம் கடந்தது.
It is transcendent of forms.
அது ரூபத்தைக் கடந்தது.
Forms are of the universe.
ரூபம் பிரபஞ்சத்திற்குரியது.
Forms create dual terms.
ரூபம் இரட்டையை ஏற்படுத்துகிறது.
The dual terms cannot be applied to Sachchidananda.
இரட்டை சச்சிதானந்தத்திற்கு ஒவ்வாது.
Transcendence transfigures.
கடந்தால் திருவுருமாறும்.
It does not reconcile.
பிணக்கை மட்டும் அது நீக்கவில்லை.
It transmutes the opposites.
எதிர்ப்பை சுமுகமாக்குகிறது.
Their opposition is effaced.
எதிர்ப்பை அழிக்கிறது.
Their opposition is surpassed.
எதிர்ப்பைக் கடக்கிறது.
Page No. 52
Para No. 3
 
We have a first task.
நமக்கு முதற்கடமை ஒன்றுள்ளது.
It is with the individual.
அது மனிதனைப் பற்றியது.
We must unite him to the totality.
அவனை முழுமையோடு இணைக்க வேண்டும்.
There is the value of the universe.
பிரபஞ்சம் என்பது பண்புருவானது.
It comes to us through our consciousness.
அவை நம் ஜீவியம் மூலம் வருகிறது.
Our progress justifies it.
முன்னேற்றத்தால் அதை அறிகிறோம்.
Our experience justifies it too.
அனுபவம் கூறுவது அதுவே.
This human experience is not final.
மனித அனுபவம் முடிவன்று.
Our experience is not complete.
நம் அனுபவம் பூரணமானதன்று.
Nor is it ultimate.
அதுவே முடிவன்று.
The physical world is seen by us.
நாம் ஜட உலகைக் காண்கிறோம்.
Our sense organs see it.
புலன்களால் அறிகிறோம்.
Our sense capacity sees it.
புலனின் திறமையால் அறிகிறோம்.
They see it differently from what they are.
புலன் பார்ப்பது வேறு, ஜடமுள்ளது வேறு.
Likewise there may be other capacities.
அதேபோல் வேறு திறமைகள் உள்ளன.
It may be mental or supramental.
அது மனத்திற்கோ, சத்தியஜீவியத்திற்கோ உரியவையாக இருக்கலாம்.
Their vision may surpass ours.
அந்த திருஷ்டி நம்மைக் கடந்தது.
These are states of other consciousness.
ஜீவியத்திற்கு வேறு நிலைகள் உண்டு.
There Death is not death.
அங்கு மரணம் அழிவன்று.
It is simply a change in immortal life.
அமரவாழ்வில் மரணம் அங்கு ஒரு மாற்றமே.
There pain is seen differently.
வலியையும் அங்கு வேறாகப் புரிந்து கொள்கிறோம்.
It is a violent wave of delight.
ஆனந்தம் கடுமையாகப் பின்னால் புரள்வதே வலி.
Limitation is perceived as difficulty.
இயலாமையை வேறு விதமாகப் புரிந்துகொள்கிறோம்.
It is the Infinite tuning upon itself.
அனந்தம் தன்னையே கட்டுப்படுத்திக்கொள்வதாக அறிகிறோம்.
Evil too is not evil.
தீமையைத் தீமை என அறிவதில்லை.
It is good circling around its perfection.
நல்லதின் சிறப்பு நல்லதை வலம் வருவதே தீமை.
It is not so in the abstract.
இது தத்துவமில்லை.
This is true in actual vision.
ஞானம் இதை உணர்கிறது.
Substantial experience confirms it.
நடைமுறை இதை நிரூபிக்கிறது.
We strive towards self-perfection.
நாம் நம் சிறப்பை நாடுகிறோம்.
To arrive at that state of consciousness is important.
ஜீவியத்தை அடைவது முக்கியம்.
It is important for the individual.
இது மனிதனுக்கு முக்கியம்.
It is also indispensable.
இது தவிர்க்க முடியாதது.
Page Nos. 52 & 53
Para No. 4
 
Ordinary life-experience needs senses.
வாழ்வுக்குப் புலன் அவசியம்.
The sense-mind is dualistic.
புலன் அறிவு எதையும் இரண்டாகக் காணும்.
It gives practical values.
இது நடைமுறைக்கு அவசியம்.
This is our present standard.
நாம் இன்று இப்படியே வாழ்கிறோம்.
Presently we must accept it.
இன்று இதை நாம் ஏற்க வேண்டும்.
Our sense-mind can enter a larger harmony.
புலன் பரந்த ஞானத்தைத் தேட முடியும்.
They can transform themselves. 
புலன் திருவுரு மாற முடியும்.
They need not lose their present realities.
இன்றைய நிலையை விடாமல் பெரியதை அடையலாம்.
Now they represent those realities.
புலன் இன்றைய தேவைகளைப் பிரதிபலிக்கிறது.
Until then we must hold on to the sense-mind.
இது தேவைப்படும்வரை, நாம் புலனை விடக்கூடாது.
The sense-faculties can be enlarged.
புலன்களை புதுப்பிக்கலாம்.
It can be done without the higher knowledge.
பெரிய ஞானமின்றியும் அதைச் செய்யலாம்.
They may not rightly interpret realities.
புலன்களுக்கு நடைமுறை உயர்ந்ததாகப் புரியாது.
They may not have the right standpoint.
எது சரி என அவற்றிற்குத் தெரியாமலிருக்கலாம்.
But, it will lead to serious disorders.
அப்படிச் செய்தால் இருப்பதும் போகும்.
It might incapacitate the senses.
புலன்கள் திறனிழக்கும்.
It may render them unfit for practical life.
அன்றாட வாழ்வுக்கு உதவாமற் போகும்.
Reason needs discipline.
பகுத்தறிவுக்குக் கட்டுப்பாடு அவசியம்.
It needs an orderly use of it.
பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
Neither of them is possible if we hurry.
நாம் அவசரப்பட்டால் இரண்டும் முடியாது.
Or, our mental consciousness can be enlarged.
மனத்தைப் பெரியதாக்கலாம்.
It would be out of our egoistic experience.
நம் அகந்தை அப்பொழுது விரிவடையும்.
It is of dualities.
அது இரட்டையாகும்.
It may give some form of total consciousness.
ஓரளவு அது முழுமையான ஜீவியத்தைத் தரும்.
It would give an unregulated unity.
கட்டுப்படாத ஒற்றுமை எழும்.
Today world’s realities are established.
இன்றைய உலகம் நிலையானது.
Therefore humanity lives actively.
அதனால் மனிதகுலம் இயங்குகிறது.
This then, would be confused.
நாம் மனத்தை மாற்றினால் குழப்பம் வரும்.
It would be incapacitated.
உள்ள திறமையும் போகும்.
Gita gives an injunction.
கீதை கண்டித்துப் பேசுகிறது.
The ignorant is not to be disturbed.
பாமரனை நாம் தொடக்கூடாது.
His thought basis must remain.
அவன் நம்புவதை ஏற்கவேண்டும்.
His life-basis must not be disturbed.
அவன் வாழ்வைச் சிதறடிக்கக்கூடாது.
Gita’s injunction has this root.
இவ்வடிப்படையில் கீதை பேசுகிறது.
The ignorant may be impelled by a higher example.
பாமரன் இலட்சியவாதியை ஏற்கலாம்.
He may not understand it.
அவன் புரியாமல் பின்பற்றலாம்.
He would lose his own knowledge.
அதைச் செய்தால் பாமரனுக்குச் சொந்த அறிவும் போகும்.
But he would not gain the higher knowledge.
புதிய அறிவும் வாராது.
Page Nos. 53 & 54
Para No. 5
 
Such a disorder can be accepted.
இக்குழப்பத்தை ஏற்கலாம்.
Its incapacity too may be accepted.
இதன் இயலாமையையும் ஏற்கலாம்.
It could only be personal.
தனிப்பட்ட முறையில் இதைச் செய்யலாம்.
Many great souls have done it.
பெரிய ஆத்மாக்கள் இதைச் செய்துள்ளனர்.
It was a temporary measure.
இதைத் தற்காலிகமாக ஏற்கலாம்.
It has its price.
ஏற்பதின் நிபந்தனை இது.
A wider existence demands it.
பெரிய அனுபவம் வேண்டுமானால் இதைச் செய்யவேண்டும்.
There is a right goal of human progress.
முன்னேற்றத்திற்கு இலட்சியம் உண்டு.
There is a law of that wider existence.
பெரிய அனுபவத்திற்கு சட்டம் உண்டு.
It must represent the new order of truths.
புது சத்தியத்தை அது ஏற்கவேண்டும்.
It would be more just and more powerful.
அது நியாயமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவுமிருக்கும்.
The faculties will work on a new basis.
புது அடிப்படையில் நம் திறமை வேலை செய்யும்.
It would handle the life material of the universe.
பிரபஞ்ச வாழ்வை அது ஏற்கும்.
It would be a synthetic representation.
அது உண்மையான பிரதிபலிப்பாகும்.
Senses see the sun going round the earth.
சூரியனை, பூமி சுற்றுவதைப் புலன்கள் காண்கின்றன.
It is a misconception.
இது தவறு.
Senses are their centre of existence.
புலனே இதன் மையம்.
Motions of life are arranged on this basis.
வாழ்வு இதனடிப்படையில் அமைகிறது.
The opposite is the truth.
உண்மை எதிரானது.
There is now a new science.
புது விஞ்ஞானம் ஏற்பட்டுள்ளது.
It makes the new conception of the centre.
புதியதை அது மையமாக்குகிறது.
It creates a new knowledge.
புது ஞானம் ஏற்படுகிறது.
It is reasoned and ordered.
ஒழுங்காகவும், அறிவுக்கும் பொருத்தமானது அது.
It puts the right values on the senses.
புலன்களுக்கும் புதுப் பார்வையை அளிக்கிறது.
It is so with mental consciousness.
மனதின் ஜீவியமும் அப்படியே.
The personal ego is its centre.
அகந்தை அதன் மையம்.
For it, God moves around it.
கடவுள் தன்னைச் சுற்றுவதாக அகந்தை கூறுகிறது.
Ego judges His works.
அகந்தை தன்னை முடிவாகக் கொள்கிறது.
Senses, emotions and perceptions do this.
புலன்கள், உணர்வுகள், அறிவு இதைச் செய்யும்.
It is a perversion.
இது கிறுக்கு.
It is a reversion of the truth of things.
உண்மையைத் தலைகீழே மாற்றுவதாகும்.
Yet, it is useful now.
எனினும், இது இன்று பயன் தரக்கூடியது.
It is practically sufficient now.
இன்றைய வாழ்வுக்கு இது போதும்.
For our level of progress it is enough.
நாமுள்ள நிலைக்கு இது போதும்.
It is a practical systematisation.
நடைமுறைக்குரிய ஏற்பாடு இது.
It is rough and approximate.
உத்தேசமாகச் செய்த மதிப்பு இது.
We live in certain activities.
நாம் ஒரு வகையாகச் செயல்படுகிறோம்.
We have our ideas.
நம் எண்ணங்கள் விவரமானவை.
To them this is all right.
அவற்றிற்கு இந்த ஏற்பாடு போதும்.
But this is not the highest.
ஆனால் இது உயர்ந்ததன்று.
Nor is this last.
இதுவே முடிவானதன்று.
Human knowledge can rise higher.
மனித அறிவுக்கு மேலும் உயர்வுண்டு.
Human life too can have greater heights.
மனித வாழ்வு இனியும் உயரலாம்.
Truth is its path.
சத்தியமே அதன் பாதை.
Falsehood is not its path.
பொய்யன்று.
The truth is different.
சத்தியம் என்பது வேறு.
God does not move around the ego.
கடவுளுக்கு அகந்தை மையமன்று.
Ego is not the centre of existence.
வாழ்வின் மையம் அகந்தையன்று.
Ego’s view is dual.
அகந்தை எதையும் இரண்டாகக் காணும்.
Ego cannot judge the centre of existence.
வாழ்வின் மையத்தை அகந்தை காணமுடிவதில்லை.
The Divine is the centre of life. 
இறைவன் வாழ்வின் மையம்.
The individual has his experience.
மனிதனுக்கு அனுபவமுண்டு.
Its truth lies in its universe.
அதன் சத்தியம் பிரபஞ்சத்திற்குரியது.
It also lies in the transcendent.
அதே சத்தியம் பரமாத்மாவிலும் உள்ளது.
The new can be substituted for the old.
பழையதை மாற்றி, புதியதை வைக்கலாம்.
Even that may still be false.
அதுவும் பொய்யாக இருக்கலாம்.
It would even be arbitrary.
தான்தோன்றித்தனமாகவுமிருக்கலாம்.
It would not have adequate basis of knowledge.
அதற்குப் போதுமான ஞானத்தின் அஸ்திவாரமிருக்காது.
This will be violent.
மாற்றம் புரட்சிகரமானது.
If done rightly, it will be a settled disorder.
சரியாகச் செய்தால் ஒழுங்கான குழப்பமாயிருக்கும்.
But disorder of right values.
குழப்பமாயினும் சரியான பண்புக்குரியதாகும்.
History knows such changes.
அதுபோன்ற மாற்றங்களைச் சரித்திரம் அறியும்.
New religions begin that way.
புதிய மதங்கள் அப்படியே உற்பத்தியாகின்றன.
New philosophy starts like that.
புதிய தத்துவங்களும் அப்படி எழுந்தவையே.
Useful revolutions are thus initiated.
உயர்ந்த புரட்சிகள் அப்படி நடக்கின்றன.
But the true goal is different.
உண்மையான இலக்கு வேறு.
There the central conception would be right.
அதில் மையக்கருத்து, சரியாக இருக்கும்.
It will be a reasoned knowledge.
அது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
It will be effective too.
அது பலன் தரும்.
All egoistic values will be transformed there.
இதன்மூலம் அகந்தையின் நிலை எல்லாம் மாறும்.
Transformed, they will be corrected too.
மாறும்பொழுது திருந்தும்.
We can possess that new order.
அப்புதிய அமைப்பை நாம் ஏற்கலாம்.
Page No. 54
Para No. 6
 
It will be a new order of truths.
அது சத்தியத்தின் அமைப்பாகும்.
It can substitute for our present life.
நம் இன்றைய வாழ்வுக்குப் பதிலாக அதை ஏற்கலாம்.
It can be a more divine life.
அது தெய்வீக வாழ்வாகும்.
It will better use our faculties.
நம் கரணங்களை அது நன்கு பயன்படுத்தும்.
Those faculties will work on the life material.
இவை வாழ்வு நிலைகளை நல்லமுறையில் பயன்படுத்தும்.
It would be a life material of the universe.
அது பிரபஞ்சத்தின் வாழ்வாகும்.
What matters is divine existence.
தெய்வீக வாழ்வே நமக்குரியது.
We conceive of its nature according to us.
நாம் நமக்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்கிறோம்.
The great verities decide our conception.
சத்தியக்கூறுகள் நம் அறிவை நிர்ணயிக்கின்றன.
We need to realise it.
இதை நாம் உணரவேண்டும்.
Human life depends on it.
மனித வாழ்வு இதைப் பொருத்தது.
The power of that life too depends on it.
அதன் திறனும் இதைப் பொருத்தது.
It must start giving up the ego.
அகந்தையை விடுவதே அதன் ஆரம்பம்.
Ego has false stands.
அகந்தை பொய்யானது.
It has false certainties.
பொய்யை நம்புகிறது அகந்தை.
There is the totality above.
முழுமை மேலேயிருக்கிறது.
Ego is really part of it.
அகந்தை அதன் பகுதி.
Ego can enter into relations with the totality.
அகந்தை முழுமையுடன் தொடர்பு கொள்ள முடியும்.
It must be a right relation.
அது சரியான தொடர்பாக இருக்கவேண்டும்.
Ego is descended from the transcendence.
அகந்தை பரமாத்மாவிலிருந்து வந்ததேயாகும்.
Ego can open to the totality and transcendence.
முழுமையையும் பரமாத்மாவையும் அகந்தை நாடலாம்.
It must be a self-opening.
அர்ப்பணத்தால் அதைச் செய்யலாம்.
It opens to a truth and a law.
சத்தியம், சட்டம் ஆகியவற்றை அகந்தை நாடவேண்டும்.
They exceed the conventions of the ego.
அவை அகந்தையின் நிலைகளைக் கடந்தது.
That truth fulfils.
சத்தியம் பூரணப்படுத்தும்.
That law delivers.
சட்டம் விடுதலை தரும்.
Ego has created its own values.
அகந்தை தனக்கேயுரிய சட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.
All these values must be abolished.
அவை அனைத்தும் அழிக்கப்பட வேண்டியவையாகும்.
That should be the goal.
அதுவே இலக்கு.
Now it suffers limitation.
இப்பொழுது வரையறை உண்டு.
Ignorance and death are there for the ego.
மரணமும், அறியாமையும் அகந்தைக்குண்டு.
Ego now suffers suffering and evil.
துன்பமும், தீமையும் அதனுடையது.
To absorb them is its crown.
அவற்றை அழிப்பதே மகுடம்.
Page Nos. 54 & 55
Para No. 7
 
The transcendence is not possible on earth.
உலகில் பரமாத்மா வரமுடியாது.
Nor is the above abolition.                                
மேற்சொன்னவற்றை உலகில் அழிக்கவும் முடியாது.
The terms of human life are egoistic.
மனிதவாழ்வு அகந்தையாலானது.
The egoistic valuations bind them.
அகந்தையின் சட்டங்கள் அதை ஆள்கின்றன.
Therefore abolition is not possible.
அதனால் இவற்றை அழிக்க முடியாது.
One may say life in its nature is individual.
வாழ்வே தனிமனிதனுக்குரியது எனலாம்.
It is an individual phenomenon.
அது தனியாக வாழப்பட வேண்டியது.
It is not a representation of universal existence.
பிரபஞ்சத்தை பிரதிபலிக்கவில்லை எனலாம்.
There is no Life-Spirit.
வாழ்வுக்கு ஆன்மா இல்லை.
It does not breathe life into man.
மனிதனுக்கு அது ஜீவன் அளிப்பதில்லை.
The dualities are the essence of all living.
வாழ்வு எனில் இரண்டாகப் பிரிவதே.
They are the very condition of life.
இதுவே வாழ்வின் சட்டம்.
They are not merely individual responses.
இது மனிதனால் ஏற்படுத்தப்பட்டதில்லை.
Limitation is life’s inalienable nature.
வாழ்வின் கூறு வரையறையாகும்.
Our mind is made of such substance.
நம் மனம் அதனாலானது.
Our body too is so.
நம் உடலும் அத்தகையதே.
Disintegration is the true condition of life.
கரைவதே வாழ்வுக்கு முதல் சட்டம்.
It is also its last condition.
அதுவே முடிவானது.
Death is the beginning and end of life.
மரணம் என்பது ஆரம்பம், முடிவு.
Pleasure is inseparable from pain.
இன்பம் துன்பத்திலிருந்து விலகாது.
They are the dual stuff of sensation.
உணர்வு அறிவது இரண்டாகவேயாகும்.
Emotion has light of joy.
உணர்வுக்கு சந்தோஷத்தின் பிரகாசம் உண்டு.
It has a shadow of pain.
வலி அதன் நிழல்.
Grief consists of them.
கவலை என்பது இவற்றாலானது.
Error accompanies truth.
தவறு சத்தியத்துடன் வருகிறது.
They are two poles of knowledge.
ஞானத்தின் இருமுனைகள் அவை.
Knowledge moves between them.
அவற்றிடையே ஞானம் தவழ்கிறது.
The movement is eternal.
அது நிரந்தரமானது.
If they are true, transcendence is impossible.
இவை உண்மையானால் பரமாத்மா இங்கு வரமுடியாது.
Transcendence is not for human life.
மனித வாழ்வுக்கு பரமாத்மா இல்லை.
You can seek it abandoning human life.
மனித வாழ்வை நீத்து அதை நாடலாம்.
Then man moves into Nirvana.
அங்ஙனம் நிர்வாணமெய்தலாம்.
It is beyond all existence.
அது சத்தியத்தைக் கடந்தது.
Man attains to another world.
மேலுலகுக்கு மனிதன் போகிறான்.
It is a heaven.
அது சுவர்க்கம்.
It is different from our earthly life.
அது உலகவாழ்விலிருந்து மாறுபட்டது.
Page Nos. 55 & 56
Para No. 8
 
The customary mind is fixed.
நம் மனம் பிடித்ததை விடாது.
It is attached to the past.
பழைய நிகழ்ச்சிகளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளும்.
It is engrossed in the present.
நடைமுறையில் தன்னை மறந்துவிடும்.
This mind lives by these associations.
நம் மனம் நிகழ்ச்சிகளால் வாழ்கிறது.
There is a life still human.
இது மனிதவாழ்வு.
Yet it is radically changed.
இருப்பினும், இது முக்கியமாற்றம்.
We are now our fixed circumstances.
நம் சந்தர்ப்பம் மாற முடியாதது.
It is difficult to think of the new life.
புதுவாழ்வை நினைக்க முடியாது.
We face our higher evolution.
பரிணாமம் நம்முள் உள்ளது.
In this, we resemble the original ape.
இதில் நாம் ஆதிநாள் மனிதக் குரங்கு போலிருக்கிறோம்.
Darwin speaks of this ape.
டார்வின் இதைப்பற்றிப் பேசுகிறார்.
As the ape could not conceive of becoming man, man now cannot think of rising above.
இக்குரங்கால் மனிதனாக முடியும் என நினைக்க முடியாததுபோல், நம்மால் உயரமுடியும் என நினைக்க முடியவில்லை.
The ape lives an arboreal life.
குரங்கு காட்டில் வாழ்கிறது.
It lives in primeval forests.
ஆதிநாள் காடு அது.
Its life is instinctive.
குரங்கின் வாழ்வு இயல்பானது.
How could it think of becoming a man.
மனிதனாக முடியும் என அதனால் எப்படி நினைக்க முடியும்?
Man uses reason.
மனிதன் அறிவால் செயல்படுகிறான்.
He uses it on the outer life.
தன் புறவாழ்வில் அறிவு அவனுக்கு பயன்படுகிறது.
On the inner life too man uses reason.
அகவாழ்வுக்கும் அறிவுண்டு.
Reason of man dominates his habits.
அவனுக்கு பழக்கங்களை விட அறிவு முக்கியம்.
The ape’s instinct is dominated too.
குரங்கின் இயல்பும் அறிவுக்குக் கட்டுப்படும்.
Man changes his physical life.
மனிதன் தன் வாழ்வை மாற்றுகிறான்.
His reason changes the very circumstances.
அவனறிவு சந்தர்ப்பத்தையே மாற்றுகிறது.
He builds houses of stone.
கல்லால் வீடு கட்டுகிறான்.
He manipulates Nature’s forces.
இயற்கையைத் தன் வயம் இழுக்கிறான்.
He sails the seas, rides the air.
கடலிலும், காற்றிலும் பயணம் செய்கிறான்.
He develops codes of conduct.
சட்டதிட்டங்களை வகுக்கிறான்.
Evolves methods.
முறைகளை உருவாக்குகிறான்.
Thus he develops his mind and spirit.
இப்படி அறிவையும், ஆன்மாவையும் வளர்க்கிறான்.
Maybe that too is possible for the ape.
இது குரங்காலும் முடியும் போலும்.
Still could he think that he would become man one day?
இருப்பினும், ஒரு நாள் தானே மனிதனாவதை அதனால் நினைக்க முடியுமா?
What effort of Will will do it?
அதற்கென்ன மன உறுதி வேண்டும்?
Is there a tendency that can achieve it?
அதைச் சாதிக்கும் மனப்போக்கு உண்டா?
Man acquired reason.
மனிதன் பகுத்தறிவைப் பெற்றான்.
He indulged in imagination.
கற்பனையிலாழ்ந்தான்.
He developed intuition also.
ஞானத்தையும் வளர்த்தான்.
Therefore he conceives of higher existence.
எனவே உயர்ந்த வாழ்வு அவனறிவுக்கெட்டியது.
It is higher than his own present life.
இன்றைய வாழ்வைவிட அது உயர்ந்தது.
He envisages personal elevation.
தான் உயருவதை அவனால் காண முடிந்தது.
It is beyond his present state.
இன்றைய நிலையை விட அது உயர்ந்தது.
He has an idea of the supreme state.
உச்சகட்டத்தைப் பற்றி அவன் நினைக்கின்றான்.
It is an absolute of all that is positive.
நல்லது மட்டுமே நிறைந்த நிலை அது.
He instinctively desires it.
இயல்பாக அதை மனிதன் நாடுகிறான்.
He aspires to that concept.
அவ்விலட்சியத்தை அவன் நாடுகிறான்.
It is pure knowledge.
அது பவித்திரமான ஞானம்.
It is without a negative shadow.
அதில் குறை கலப்பில்லை.
That is an error.
அது தவறு.
He needs no such errors.
எந்தத் தவறும் அவனுக்குத் தேவையில்லை.
He asks for pure Bliss.
கலப்பில்லாத இன்பத்தை அவன் நாடுகிறான்.
Suffering is its negative experience.
துன்பம் இதற்கு எதிரானது.
He asks for Bliss without suffering.
துன்பக் கலப்பற்ற இன்பம் அவன் இலக்கு.
Power is not always capable.
சக்திக்குக் குறையுண்டு.
It is accompanied by incapacity.
எந்த நேரமும் அது தவறும்.
He seeks pure power.
கலப்பற்ற சக்தியை மனிதன் நாடுகிறான்.
Purity is accompanied by defect.
தூய்மையில் குறையுண்டு.
Plenitude follows limitation.
பூரணத்திற்கு அளவுண்டு.
He seeks them absolutely.
கலப்பின்றி மனிதன் அவற்றை நாடுகிறான்.
God is, to man, Bliss, Power and Purity.
இன்பம், தூய்மை, சக்தி என்பவை கடவுள்.
His heaven is like that.
அது மனிதனுடைய சுவர்க்கம்.
His reason is different.
அவன் அறிவு மாறுபட்டது.
It conceives of possible humanity.
மனித குலத்தை அவன் கருதுகிறான்.
He thinks of possible earth.
பூமாதேவியின் புதுமையை நினைக்கின்றான்.
His earth is not like his heavens.
சுவர்க்கமாக உலகைக் கற்பனை செய்கிறான்.
He dreams of God.
கடவுளைப்பற்றிக் கற்பனை செய்கிறான்.
He dreams of heaven.
சுவர்க்கத்தைப் பற்றியும் கற்பனை செய்கிறான்.
It is a dream of his own perfection.
தன் சிறப்பைப் பற்றிய கனவுகள் அவை.
The ape cannot think of itself as future man.
குரங்கால் தன்னை எதிர்கால மனிதனாக நினைக்க முடியாது.
Man cannot think of heaven on earth.
மனிதனால் பூலோகத்தில் சுவர்க்கத்தை நினைக்க முடியாது.
Life is in this material universe.
வாழ்வு ஜட உலகத்தைச் சார்ந்தது.
It is full of hard facts.
வாழ்வின் நிகழ்ச்சிகள் கடினமானவை.
His imagination has an ideal.
மனித கற்பனைக்கு இலட்சியம் உண்டு.
Page No. 56
Para No. 8
 
His religious aspiration has a goal.
மனித வழிபாட்டுக்கு ஓர் இலக்குண்டு.
To his reason, they are superstitions.
அறிவு அவற்றை மூடநம்பிக்கை என்கிறது.
Reason rejects imagination.
அறிவு கற்பனையை ஏற்காது.
It rejects intuition too.
அது ஞானத்தையும் மறுக்கும்.
Intuition is transcendent.
ஞானம் பரமாத்மாவுக்குரியது.
The goal is brilliant, but superstitious.
இலட்சியம் உயர்ந்தது, ஆனால் அது மூடநம்பிக்கை.
It is of course inspiring.
கேட்க உற்சாகமாக இருக்கிறது.
But the vision is impossible.
ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.
What is possible here is different.
எது சாத்தியம் என்பது வேறு.
Knowledge is here precarious.
ஞானம் இங்கே தடுமாறுகிறது.
Happiness is conditioned.
சந்தோஷம் நாமே வைத்துக் கொள்வது.
Power is limited.
சக்தி அளவானது.
Good is followed by evil.
நல்லதும் கெட்டதும் சேர்ந்துள்ளன.
Page No. 56
Para No. 9
 
Let us take a look at reason.
பகுத்தறிவு என்ன என்று காண்போம்.
Transcendence is there in it.
பரமாத்மா அதனுள்ளுள்ளது.
Reason has one aim.
அறிவுக்கு ஒரு லட்சியம் உண்டு.
It is to pursue knowledge.
ஞானத்தை நாடுவது அதன் லட்சியம்.
It seeks knowledge without error.
குறையற்ற ஞானத்தை அது நாடுகிறது.
It is Truth that eliminates error.
தவற்றை விலக்கும் ஞானம் அது.
It does not seek a lesser error.
மிகக் குறைந்த தவற்றைக் கருதவில்லை.
We face dualities.
நாம் எதையும் இரண்டாகக் காண்கிறோம்.
There is right knowledge.
சரியான ஞானமுண்டு.
Also there is wrong knowledge.
தவறான ஞானமுண்டு.
From both we move to pure knowledge.
இரண்டையும் விட்டகன்று தூய்மையான ஞானத்தை நாம் நாடுகிறோம்.
It is pre-existent Truth.
ஆதியின் ஞானம் அது.
There are other aspirations of humanity.
மனிதன் நாடுபவைகள் பல உண்டு.
They are happiness, immortality.
சந்தோஷம், அமரத்துவம் அவை.
Reason has a certitude of knowledge.
அறிவுக்கு ஞானத்தில் நம்பிக்கையுண்டு.
It is instinctive.
அது யோக ஞானம்.
The same certitude is not there for happiness.
சந்தோஷத்தில் அதே நம்பிக்கையில்லை.
Nor is it there for immortality.
அமரத்துவத்திலும் அதில்லை.
Reason lacks the respective illuminations.
அவற்றிற்கேற்ற தெளிவு அறிவுக்கில்லை.
It is essential.
அது அவசியம்.
All are its positive activity.
எல்லாம் நல்ல செயல்கள்.
Man can conceive of happiness.
மனிதனால் சந்தோஷத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
Its positive realisation can be conceived.
அதை மனிதன் விரும்பி முழுமையாக அடைய முடியும்.
Reason can conceive of an absolute realisation of happiness.
கலப்பற்ற சந்தோஷத்தை நாம் கற்பனை செய்ய முடியும்.
This instinct belongs to heart.
இதயம் உணர்ச்சிக்குரியது.
Heart has its own form of certitude.
நெஞ்சத்தின் நம்பிக்கை அதன் பாணியிலிருக்கும்.
Heart is capable of faith.
உணர்வு நம்பும்.
Unsatisfied want causes suffering.
தேவை பூர்த்தியாகாவிட்டால் துன்பம் வரும்.
Mind can envisage its elimination.
அதை நீக்க மனம் முயலும்.
Pain belongs to nervous sensation.
வலி என்பது நரம்புணர்ச்சி.
Death belongs to the life of the body.
மரணம் உடலுக்குரியது.
How can we conceive of their elimination?
அவற்றை விலக்க முடியும் என நினைக்க முடியுமா?
Yet, the truth is different.
இருப்பினும், உண்மை வேறு.
Sensation has a sovereign instinct.
உணர்வுக்கு ஒரு ராஜ இயல்புண்டு.
It is rejection of pain.
அதனால் வலியை மறுக்க முடியும்.
Our vitality has an essence.
நம் சக்திக்குச் சாரமுண்டு.
That essence has a dominant instinct.
சாரத்திற்குப் பெருந்திறனுண்டு.
It is rejection of death.
மரணத்தை மறுப்பது அது.
Reason does meet them.
அறிவு அவற்றைக் காண்கிறது.
Meets them as instinctive aspirations.
இயல்பான ஆர்வமாக அவற்றை அறிவு கருதுகிறது.
For reason, they are not realisable potentialities.
அறிவு அவை நடக்கும் என நம்புவதில்லை.
Page No. 57
Para No. 10
 
But the law is the same.
ஆனால் சட்டம் எல்லா இடங்களுக்கும் பொது.
Practical reason has an error.
நடைமுறை அறிவுக்குக் குறையுண்டு.
It is excessively subjected to apparent fact.
கண்ணுக்குத் தெரிவதை அதிகமாக நம்பும் பழக்கம் அது.
It can see and feel the fact.
விஷயங்களைக் கண்ணுற்று, அதனால் உணரமுடியும்.
There are profounder facts of potentialities.
இது நடக்க இருப்பவற்றுள் பெரிய விஷயங்கள் இருக்கின்றன.
They must be carried to their logical conclusion.
அவை என்ன என்று அறிவு முடிவாக யோசனை செய்ய வேண்டும்.
The courage of reason here is insufficient.
இந்த விஷயத்தில் அறிவுக்குத் தைரியம் போதாது.
The present is past potentiality realised.
கடந்தது பலித்ததே நிகழ்காலம்.
Present potentiality can be realised in future.
இன்றைய விஷயம் நாளைக்குப் பலிக்கும்.
Here potentiality exists.
நடக்கக்கூடியவை ஏராளம்.
Knowledge of the cause of phenomenon is necessary.
விஷயங்களுக்குக் காரணத்தை அறிவது அவசியம்.
Process of the same also is necessary.
எப்படி நடக்கிறது என்றறிவதும் அவசியம்.
Mastery of phenomena comes out of it.
அறிவால் நமக்கு விஷயங்கள் கட்டுப்படும்.
We must know the cause of sorrow.
துன்பத்தின் காரணத்தை நாம் அறிய வேண்டும்.
We must understand death and pain like that.
மரணம், துன்பத்தை நாம் அப்படி அறிய வேண்டும்.
Then we can hope to eliminate them.
தெரிந்தால் அவற்றை விலக்கலாம்.
Knowledge is power and mastery.
ஞானம் என்பது திறன்.
Page No. 57
Para No. 11
 
Indeed we do pursue an ideal.
நாம் ஓர் இலட்சியத்தைப் பின்பற்றுகிறோம்.
We try to eliminate the negative phenomena.
அதிலிருந்து கெட்டதை விலக்க முயல்கிறோம்.
We try to eliminate adverse phenomena.
எதிரானவற்றையும் விலக்குகிறோம்.
We seek to minimise error.
தவற்றைக் குறைக்கிறோம்.
Constantly we do this.
இதை எப்பொழுதும் செய்கிறோம்.
We seek to minimise pain and suffering.
துன்பத்தையும் வலியையும் குறைக்கிறோம்.
The knowledge of Science is increasing.
விஞ்ஞானம் வளர்கிறது.
It tries to regulate birth.
பிறப்பைத் தடுக்க முயல்கிறது.
It wants to prolong life.
ஆயுளை நீடிக்க விழைகிறது.
Death may not be conquered.
மரணத்தை வெல்ல முடியாமலிருக்கலாம்.
But it can be indefinitely postponed.
ஆனால் அதை தள்ளிப் போடலாம்.
Here we handle external causes.
இவை புறவாழ்வின் காரணங்கள்.
External causes are secondary causes.
புறவாழ்வில் காரணங்கள் இரண்டாம்பட்சமானவை.
It can only remove them to a distance.
அதனால் விஷயங்களைத் தூரக்கொண்டு போக முடியும்.
It does not eliminate the actual roots.
வேரோடு விலக்க அதனால் முடியாது.
We really struggle against them.
நாம் அவற்றுடன் போராடுகிறோம்.
We strive towards secondary perceptions.
நாம் தேடுவது மறைமுகமான அறிவு.
Man does not move towards root-knowledge.
மனிதன் ஆழ்ந்த ஞானத்தை நாடுவதில்லை.
Thus man is limited.
எனவே மனிதனுக்கு அளவுண்டு.
This gives the process of things.
விஷயங்கள் எப்படி நடக்கின்றன என இதன் மூலம் அறிகிறோம்.
We miss the essence.
சாரம் இதனால் கிடைப்பதில்லை.
We are now better than before.
முன்பிருந்ததைவிட நாம் இப்பொழுது நன்றாக இருக்கிறோம்.
We can better manipulate the circumstances.
இதனால் சந்தர்ப்பங்களை நாம் சமாளிக்கலாம்.
At the end, essential control eludes.
முடிவில், முக்கியமான விஷயம் தவறுகிறது.
Instead, we could aim at essential nature.
நாம் அடிப்படையான சுபாவத்தை நாடலாம்.
Let us seek the essential cause of error.
தவற்றுக்கு அடிப்படையான காரணத்தைக் காண்போம்.
Let us know suffering and death like that.
மரணத்தையும், வலியையும் அதுபோல் காண்போம்.
That gives us mastery.
முடிவான திறமை அதன் மூலம் வரும்.
Here we avoid the relative.
குறையை நாம் இப்படித் தவிர்க்கிறோம்.
We aim at the entire totality.
முழுமையை நாடுகிறோம்.
There is a true solution.
இதுவே உண்மையான தீர்வு.
Human being needs it.
இது மனிதனுக்குத் தேவை.
It is ultimate.
இது முடிவானது.
We know of good, bliss and knowledge.
நல்லது, ஆனந்தம், ஞானம் ஆகியவற்றை அறிவோம்.
Our intuition tells us of immortality.
மரணமற்ற வாழ்வை உள்ளுணர்வு அறிவிக்கிறது.
We have a dominant instinct.
ஆழ்ந்த இயல்பு நமக்குண்டு.
It is of our nature.
இது நம் சுபாவம்.
It can conquer them.
அது வெற்றி பெறும்.
It can eliminate their opposites.
எதிரானவற்றை அது விலக்கும்.
Page No. 57
Para No. 12
 
Vedanta has such a solution.
வேதாந்தம் அதைக் கூறுகிறது.
Its conception of Brahman is like that.
அது பிரம்மத்தை அப்படி விவரிக்கிறது.
It has experienced Brahman that way.
பிரம்மத்தை அப்படி வேதாந்தம் அறிந்துள்ளது.
To it Brahman is universal.
பிரம்மம் பிரபஞ்சத்தை நிரப்புகிறது என வேதாந்தம் கூறுகிறது.
It is the essential fact.
அதுவே அடிப்படையான உண்மை.
They realised Sachchidananda.
அவர்கள் சச்சிதானந்தத்தை அறிந்தவர்கள்.
They realised the nature of Brahman.
பிரம்மத்தின் சுபாவத்தை அவர்கள் அறிவார்கள்.
Page No. 57
 
Para No. 13
 
It describes the essence of all life.
வாழ்வு எதைக் கருவாகக் கொண்டதோ அதை வேதாந்தம் கூறுகிறது.
It is a movement.
அது சலனம்.
A movement of universal existence.
பிரபஞ்ச வாழ்வின் சலனம் அது.
It is immortal too.
அது அழிவற்றது
There is the self-existent delight in being.
ஜீவனுக்கு அழிவற்ற ஆனந்தமுண்டு.
It is universal.
அது பிரபஞ்சத்திற்குரியது.
All emotions are its play.
எல்லா உணர்வுகளும் அதன் அலைகளாம்.
All sensations are its play too.
உடலுணர்வுகளும் அதுபோன்றவையே.
We can get the essence of thought.
எண்ணத்தின் சாரத்தை நாம் அறியலாம்.
It is the essence of perception.
அது சிந்தனையின் சாரம்.
It is radiation of truth.
அது சத்தியத்தின் வீச்சு.
It is all-pervading.
எங்கும் வியாபித்துள்ளது அது.
It is universal.
அதுவும் பிரபஞ்சம் முழுவதும் பரவியது.
There is good.
அது நல்லது.
It is self-effecting good.
அது அழிவற்ற நல்லது.
It is universal.
அதுவும் பிரபஞ்சத்திற்குரியது.
Its progression is activity.
செயல் அதன் போக்கு.
Maybe the essence of activities.
அதுவே செயலின் சாரம்.
Page No. 58
Para No. 14
 
There is the play.
அதுவே லீலை.
The movement is there.
சலனமுள்ளது.
It expresses in various forms.
பல ரூபங்களாக அது வெளிப்படுகிறது.
Its tendencies vary.
அதன் போக்கு மாறுகிறது.
There is the interplay of energies.
சக்தி கலந்து விளையாடுகிறது.
The individual ego is deformed.
அகந்தை குறையுடையது.
Ego is temporary.
அகந்தை தற்காலிகமானது.
It is determinative.
அது நிர்ணயிக்கிறது.
Multiplicity permits that interference.
பல இருப்பதால் கலக்கமுடிகிறது.
Self-limitation creates ego.
அகந்தை அளவால் ஏற்பட்டது.
It is of consciousness.
அது ஜீவியம்.
It is a willed ignorance.
பிடிவாதமான அறியாமை அது.
It is ignorance of the rest of the play.
புறத்தை அறியாத அறியாமை அது.
It is exclusive.
தனித்தியங்குவது.
It is absorbed in one form.
ஒரு ரூபத்தில் மறைந்துள்ளது.
It is one combination of tendencies.
சில போக்கு கலந்து ஒரு நிலை.
It is one field.
அது ஓர் அரங்கம்.
A field of energies.
அது சக்தியின் அரங்கம்.
Error, sorrow, pain, evil and death are reactions.
குறை, துன்பம், வலி, தீமை, மரணம் என்பவை நாமே ஏற்படுத்துவது.
They are ego’s reactions.
அவை அகந்தையினுடையவை.
Existence, Bliss, Truth and Good are there.
உண்மையில் அவை சத்தியம், ஆனந்தம், நன்மையாகும்.
Movements try to relate to them.
அசைவுகள் அவற்றுடன் தொடர்பு கொள்கின்றன.
Right movements have right values.
சரியான செயலுக்குச் சரியான பண்புண்டு.
Ego determines those movements.
அகந்தை இவ்வசைவுகளை நிர்ணயிக்கின்றது.
They become reactions.
அவை அகந்தையின் பிரதிபலிப்பு.
If ego is not there, there will be right values.
அகந்தையில்லாவிட்டால், நற்பண்புகள் மட்டுமிருக்கும்.
Truth, joy, happiness, good and immortality would have been the right values.
சத்தியம், ஆனந்தம், சந்தோஷம், நன்மை, அழியா வாழ்வு நற்பண்புகளாகும்.
We can recover the right relations.
அவற்றை நாம் மீண்டும் பெறலாம்.
That eliminates ego-reactions.
அதனால் அகந்தைக்கு இடமில்லாமற் போகும்.
We get then their true values.
அவற்றின் உண்மையான பண்புகளை நாம் பெற முடியும்.
This can be recovered.
அவற்றை மீண்டும் பெற முடியும்.
It needs right participation.
நல்ல முறையில் கலந்துகொண்டால், அது நடக்கும்.
The individual should relate to totality.
மனிதன் முழுமையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
It must be in the consciousness.
அது ஜீவியத்தாலானதாக இருக்க வேண்டும்.
It is the consciousness of the transcendent.
அது பரமாத்மாவின் ஜீவியமாகும்.
It represents the totality.
அது முழுமையினுடையதாகும்.
Page No. 58
Para No. 15
 
Then came later Vedanta.
பிற்கால வேதாந்தம் பிறகு வந்தது.
Fixities crept in.
எண்ணம் குறுகியது.
They arrived at fresh ideas.
புது எண்ணங்கள் எழுந்தன.
They found ego the cause.
அகந்தையே காரணம் என அறிந்தனர்.
It is the cause of dualities.
இரண்டாகக் காண்பதன் காரணமதுவே.
They said ego is the essential condition for existence.
பிரபஞ்ச வாழ்வுக்கு அகந்தையே முக்கியம் என்றனர்.
That way existence is in the universe for them.
அப்படி சத்தியம் பிரபஞ்சத்திலிருப்பதாகக் கருதினர்.
It leads to a new position.
இது புதியது.
We are to get rid of the ego.
நாம் அகந்தையை விலக்க வேண்டும்.
Its limitation thus goes.
அதை அளவீட்டிலிருந்து விலக்குகிறோம்.
The dualities too go with it.
இரண்டாகப் பிரிவதும் போய்விடும்.
But if ego goes our existence too goes.
அகந்தை அழிந்தால், நம் வாழ்வும் அழியும்.
Our existence in cosmic movement goes thus.
பிரபஞ்ச வாழ்வும் பிறகு அழியும்.
Then we return to the base.
அடிப்படைக்கு வருகிறோம்.
It is essentially evil.
அடிப்படையின் சாரம் தீமை.
It is illusory.
அது மாயை.
It is one expression of human existence.
மனித வாழ்வின் ஓர் அம்சம் அது.
Then all effort is in vain.
அப்படியானால் மனித முயற்சி வீண்.
Perfection is no longer worth pursuing.
சிறப்பை நாடமுடியாது.
At best we can aim at a relative good.
முடிந்தவரை நல்லதை நாடலாம்.
It is always limited to its opposite.
அதன் எதிர்முனையுடன் அது தொடர்பு கொள்ளும்.
That is the maximum possible here.
இன்று அதிகப்பட்சம் முடிந்தது அதுவே.
This is not final.
இது முடிவன்று.
There is a larger idea.
இதைவிடப் பெரிய கருத்துண்டு.
It is more profound.
அது ஆழ்ந்த கருத்து
For that, ego is the intermediary.
அதற்கு அகந்தை இடைப்பட்டதாகும்.
It repersents something beyond.
அது பெரியதைப் பிரதிபலிக்கும்.
Then, this consequence is not compelling.
இம்முடிவு நம்மைக் கட்டுப்படுத்தாது.
We then apply Vedanta for our fulfilment.
வேதாந்தத்தை நாம் பூரணம் பெறப் பயன்படுத்தலாம்.
It fulfils life.
அது வாழ்வைப் பூர்த்தி செய்யும்.
It avoids escaping from life.
வாழ்வை விலக்க வேதாந்தம் முயல்வதில்லை.
The universal existence has an essential condition.
பிரபஞ்ச வாழ்வுக்கு முக்கிய நிபந்தனையுண்டு.
It is the Lord.
அது ஈஸ்வரன்.
It is Ishwara.
அது ஈஸ்வரன்.
We call it Purusha.
நாம் புருஷனென்கிறோம்.
It manifests individuals.
ஜீவாத்மா அதிலிருந்து எழுகிறது.
It occupies the individual.
அது ஜீவாத்மாவை ஆட்கொள்கிறது.
It does so with universal forms.
பிரபஞ்ச ரூபங்களையும் அப்படியே ஆட்கொள்ளும்.
Ego is limited.
அகந்தை அளவுடையது.
It is intermediate.
அகந்தை இடைப்பட்டது.
It is necessary for a certain purpose.
இன்றைய சூழ்நிலையில் அது தேவை.
We can follow this line.
நாம் இதைப் பின்பற்றலாம்.
Then the individual can go beyond himself.
அப்படியானால் ஜீவாத்மா தன்னைக் கடந்து செல்லமுடியும்.
He represents it.
ஜீவாத்மா அதன் பிரதிநிதி.
He can continue to represent it.
தொடர்ந்தும் அதைப் பிரதிபலிக்கலாம்.
It need not be obscure.
இருண்டதாக அது இருக்காது.
It need not be limited.
அளவுள்ளதாகவுமிருக்காது.
It can be a centre of the Divine.
இறைவனின் மையமாக இருக்கும்.
It can be the centre of the universal.
பிரபஞ்சத்தின் மையமாகவுமாகும்.
All individual determinations are there.
மனித முடிவுகளெல்லாம் அதனுள் உள்ளன.
It can embrace them all.
அவற்றை எல்லாம் தழுவும்.
It can utilise them all.
அவற்றை எல்லாம் பயன்படுத்தும்.
It can transform them into harmony.
சுமுகமாக அவற்றைத் திருவுருமாற்றும்.
It is a harmony with the Divine.
இறைவனுடன் கூடிய சுமுகமாகும்.
Page No. 59
Para No. 16
 
Now our outlook is different.
நம் நோக்கம் வேறு.
The physical Nature is the foundation.
உடலின் சுபாவமே அடிப்படை.
It is the foundation for two.
அது இரண்டுக்கு அடிப்படை.
For human existence and material universe it is the foundation.
மனித வாழ்வுக்கும், ஜட வாழ்வுக்கும் அது அடிப்படை.
This is the divine conscious Being.
அதுவே சத்புருஷன்.
It is the totality of Nature.
அது பிரகிருதியின் முழுமை.
Nature is its manifestation.
பிரகிருதி அதன் வெளிப்பாடு.
Life is involved Conscious Being.
வாழ்வு சத்புருஷனாலானது.
It is inevitably evolving.
அது பரிணமிக்கிறது.
Mind and Supermind are so.
மனமும், சத்தியஜீவியமும் அவை போன்றவையே.
They are the conditions of our activities.
அவை நம் செயலை நிர்ணயிப்பவை.
Man appeared in Matter by evolution.
மனிதன் ஜடத்திலிருந்து எழுந்தவன்.
It is a progressive evolution.
மெதுவாக எழும் பரிணாமம் அது.
Man, thus, manifests God.
மனிதன் கடவுளின் வெளிப்பாடு.
He does so in the body.
உடலால் அவன் வெளிப்படுகிறான்.
It is the universal Incarnation.
பிரபஞ்சம் உடலில் அவதரிக்கிறது.
Egoistic formation is intermediate.
அகந்தை இடைப்பட்டது.
It is a decisive factor.
அது முக்கியமானது.
By that One emerges as many.
அகந்தை மூலம் ஏகன் அநேகனாகிறான்.
It emerges out of the general.
பொதுவான நிலையிலிருந்து அது எழுகிறது.
It is indeterminate.
அது நிலையானதன்று.
It is total.
அது முழுமையானது.
It is obscure.
அது இருண்டது.
It is formless.
அது உருவமற்றது.
We call it subconscient.
ஆழ்மனம் என்கிறோம் அதை.
It is hrdya samudra.
ஹிருதய சமுத்திரம் எனப்படும்.
It is the ocean heart.
சமுத்திரமான இருதயம் அது.
This is Rig Veda’s description.
ரிக்வேத வர்ணனை அது.
Life and death are dual.
வாழ்வும், சாவும் இரட்டைகள்.
Joy and sorrow are so.
இன்பமும், துன்பமும் இரட்டைகள்.
Pleasure and pain, truth and error, good and evil are so.
வலியும் சந்தோஷமும், உண்மையும் தவறும், நல்லதும் கெட்டதும் அப்படிப்பட்டவை.
They are the first formation of ego.
அகந்தையின் முதலுருவங்கள் அவை.
Ego naturally tries unity.
அகந்தை ஒற்றுமையை நாடுவது இயற்கை.
It is this that it arrives at.
அது இங்கு வந்தடைகிறது.
It is an artificial construction.
செயற்கையான ஏற்பாடது.
It excludes total truth.
முழுமையை அது விலக்குகிறது.
Good, life and delight are also excluded.
நல்லது, வாழ்வு, ஆனந்தமும் விலக்கப்படுகின்றன.
Animal was a prelude to man.
விலங்கு மனிதனுக்கு முன்னோடி.
Ego is the prelude to supreme fulfilment.
முடிவான பூரணத்திற்கு அகந்தை முன்நிலை.
Ego can self-open to God and the universe.
கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும், அகந்தையை அர்ப்பணம் செய்யலாம்.
It will achieve it.
அது சாதிக்கும்.
Limited ego can be transformed.
அளவான அகந்தை திருவுருமாறும்.
The All can be realised in it.
அனைத்தும் அதனுள் சாதிக்கமுடியும்.
Ego, then becomes a conscious centre of divine unity.
அகந்தை தெய்வ ஒற்றுமையின் மையமாகும்.
Unity and freedom are terms that fulfil.
ஒற்றுமையும், சுதந்திரமும் பூரணம் தருபவை.
Then the infinite outflows.
அனந்தம் அதனினின்று வெளிவரும்.
It is absolute Existence.
அது பூரண சத்தியம்.
It is Truth, Good and Delight.
அது சத்தியம், ஆனந்தம், நன்மை.
It is the Delight of the Many in the world.
உலகில் அது ஜீவாத்மாவின் ஆனந்தம்.
It is a divine result.
அது தெய்வச் செயல்.
Cycles of evolution move towards it.
பரிணாமம் அதை நோக்கிச் செல்கிறது.
Material Nature holds this in itself.
ஜடவாழ்வு இதைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.
It is a supreme birth.
இதுவே உயர்ந்த புனர்ஜென்மம்.
Nature strives to deliver this.
பிரகிருதி இதைப் பெற்றெடுக்க முயல்கிறது.



book | by Dr. Radut