Skip to Content

02. VI Man In the Universe

VI.         Man in the Universe
6. மனிதனின் பிரபஞ்சம்
Life Divine
Page No. 42
Para No. 1
 
The Reality is Transcendent.         
சத்தியம் சிருஷ்டியைக் கடந்தது.
It is luminous.    
அது ஜோதிமயமானது.
It is great.
அது பெரியது.
Its revelations are progressive.
சத்திய வெளிப்பாடு வளரும் தன்மையுடையது.
The Reality reveals as relativities.
சத்தியம் உலகமாக வெளிப்படுகிறது.
They are various expressions of this world.
உலகத்தின் கூறுகள் அனைத்தும் சத்தியத்தின் உருவம்.
They are of other worlds too.
சத்தியம் மற்ற உலகங்களிலும் வெளிப்படும்.
We do not see these worlds.
அவ்வுலகங்கள் நம் கண்ணுக்குத் தெரியா.
Those worlds are the means of Reality.
இவை சத்தியம் வெளிப்படும் வழிகள்.
They are its conditions and fields.
இந்த நிலைகளிலே சத்தியம் வெளிப்படுகிறது.
This universe has a meaning.
பிரபஞ்சம் அர்த்தபுஷ்டியானது.
This revelation is that meaning.
சத்திய வெளிப்பாடே அந்த அர்த்தம்.
The world is no illusion.
உலகம் மாயையில்லை.
It is no accident.
தவறாக உலகம் சிருஷ்டிக்கப்படவில்லை.
It has a meaning and aim.
உலகம் அர்த்தமுள்ளது. இலட்சியமும் உண்டு.
The world is not a deceptive trick of Mind.
உலகம் மாயாஜாலமில்லை.
The above reason leads us to this conclusion.
மேற்கண்ட காரணம் நம்மை இம்முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
There is a view that the world is self-existent.
உலகம் தானே தன்னைச் சிருஷ்டித்தது என்பார் உண்டு.
It is a mass of separate events.
நிகழ்ச்சிகளால் நிறைந்தது உலகம்.
The events cling together.
ஒன்றையொன்று பற்றியுள்ளன இந்நிகழ்ச்சிகள்.
They struggle with each other.
ஒன்றோடொன்று அவை மோதுகின்றன.
It is an external struggle.
இது முடிவற்ற மோதல்.
They are blind, helpless forces.
செய்வதறியாத குருட்டுச் சக்திகள் அவை.
Our view says this is not so.
இக்கருத்தை நாம் ஏற்பதில்லை.
There is another view.
மற்றொரு கருத்தும் உண்டு.
They consider the Forces ignorant.
உலகச் சக்திகளை அறியாமையின் சக்திகளாகக் கருதுபவருண்டு.
It has no secret Intelligence.
இரகஸ்யமான புத்தி அவற்றிற்கில்லை.
It is not aware of the beginning.
ஆரம்பத்தை அவை அறியா.
It does not know its goal.
முடிவையும் அறிய முடிவதில்லை.
Nor does it know the process or motion.
அசைவையோ, நடப்பையோ அறிய முடியாதவை அவை.
It is a tremendous self-creation.
தானே தன்னை உற்பத்தி செய்து கொண்ட பிரம்மாண்டம் அது.
It is also a self-impulsion.
தானே இயங்கவல்லதும் கூட.
Our view contradicts even this view.
இதையும் நாம் ஏற்க முடியாது.
Our view is it is a wholly self-aware existence.
உலகம் தன்னை முழுவதும் அறியும் என்பது நம் கொள்கை.
It is entirely master of itself.
தன் மீது முழு ஆதிக்கமுள்ளது உலகம்.
It creates and possesses the world.
உலகைச் சிருஷ்டித்துப் பரிபாலிப்பது அது.
It is involved in that world.
தான் சிருஷ்டித்த உலகில் அது புதைந்துள்ளது.
The existence realises itself in form.
சத்தியம் தன்னை உலகம் என்ற உருவில் காண்கிறது.
It unfolds in the individual.
ஜீவாத்மாவில் சத்தியம் மலர்கின்றது.
Page Nos. 42 & 43
Para No. 2
 
It was a luminous Emergence.       
அது ஜோதிமயமான சிருஷ்டி.
It was the dawn of creation.                          
அது சிருஷ்டியின் உஷைக் காலம்.
Our Aryan forefathers worshipped it.
ஆரிய முன்னோர் அதைப் போற்றினர்.
The eye of vision extends to it.
ஞானதிருஷ்டி அதைக் காணமுடியும்.
It reaches the present heavens of Mind.
மனத்தின் சொர்க்கம் பவித்திரமாகும் நேரம் அது.
It was the world-pervading Vishnu.
உலகைக் காக்கும் விஷ்ணு என்று நாம் அதை அழைக்கிறோம்.
Here that Emergence reaches perfection.
இங்கு அச்சிருஷ்டி பூரணம் பெறுகிறது.
It exists already.
ஏற்கனவே அது அங்குள்ளது.
It is an all-revealing Truth.
சர்வ ஞானம் தரும் சத்தியம் அது.
It is an all-guiding Truth.
எல்லாவற்றையும் காண்பிக்கவல்லது.
It watches over the world.
உலகை அது காக்கின்றது.
Mortal men are attracted by it.
அநித்தியமான மனிதன் அதனால் கவரப்படுகிறான்.
The general march of Nature gives that attraction.
இயற்கை நியதியால் அக் கவர்ச்சி எழுகிறது.
It is an unconscious attraction.
அது கண்மூடித்தனமான கவர்ச்சி.
Man progressively awakens.
மனிதன் சிறிது சிறிதாக விழிக்கிறான்.
His self enlarges.
அவன் ஜீவன் பெருகுகிறது.
This is conscious.
அவனறிந்து நடப்பது அது.
Thus he ascends to the divine.
இவ்வழி அவன் இறைவனை நாடுகிறான்.
Man ascends to the divine Life.
தெய்வீக வாழ்வை மனிதன் இவ்வாறு நாடுகிறான்.
It is the human journey.
இதுவே மனித யாத்திரை.
It is the Work of Works.
இது தலை சிறந்த கர்மம்.
This is acceptable sacrifice.
இறைவன் ஏற்கும் தியாகமிது.
This is the real business of man.
இதுவே மனிதன் செய்ய வேண்டியது.
This justifies his existence.
இது மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.
Otherwise he is a crawling animal.
இதன்றி மனிதன் மண்ணில் நெளியும் புழு.
He is one of the short-lived insects.
க்ஷணத்தில் அழியும் பூச்சியாவான்.
They live on a speck of mud and water.
சிறு துளி மண்ணும், நீரும் அவற்றைச் சிருஷ்டிக்கின்றன.
The Universe is immense.
பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.
Its immensity baffles us.
அது நம்மைப் பிரமிக்க வைக்கும்.
Here the insect was formed out of mud.
இப்பெருவெளியில் சிறு புழு பிறக்கிறது.
This is the Truth of things.
இதுவே உலகத்தின் சத்தியம்.
This has to emerge in the world.
உலகிலிருந்து இச்சத்தியம் வெளிப்பட வேண்டும்.
The world is full of contradictions.
உலகம் முரண்பாடானது.
This emergence is infinite Bliss.
சத்தியம் எழுவது அளவிலா ஆனந்தம்.
Page No. 43
Para No. 3
 
It is self-conscious Existence.       
இது தன்னை அறியும் சத்தியம்.
It is the same everywhere.             
எல்லா இடங்களிலும் உள்ளது.
It is the same in all things.
எல்லாப் பொருள்களிலும் உள்ளது.
It remains so in all times.
எல்லாச் சமயங்களிலும் உள்ளது.
It is also beyond Time.
இது காலத்தைக் கடந்ததுமாகும்.
Also it is aware of itself behind all these phenomena.
சிருஷ்டிக்குப் பின்னால் தானுள்ளதை இது அறியும்.
The phenomena are all intense in vibration.
சிருஷ்டி தீவிரமான ஜீவன்.
It is a large totality.
இது பெரிய பிரம்மாண்டம்.
The Existence is exhausted by this largeness.
சத்தியம் இதற்குக் கட்டுப்பட்டதன்று.
Nor it is limited by this.
இதற்கு அடங்கியதுமில்லை.
As we said, it is self-existent.
நான் சொன்னதுபோல், சத்தியம் சுயமானது.
It dose not depend upon its manifestations.
சத்தியம் சிருஷ்டியைப் பொருத்ததன்று.
They represent it.
சிருஷ்டி சத்தியத்தின் பிரதிநிதி.
But they do not exhaust it.
சிருஷ்டியுடன் சத்தியம் முடிவதன்று.
They point to it.
சிருஷ்டி சத்தியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
But they do not reveal it.
சுட்டிக்காட்டுமே தவிர இது வெளிப்படுத்த முடியாது.
It is revealed only to itself.
தானே தன்னை உணரவல்லது.
The revelation is within their forms.
உருவங்களில் அது வெளிப்படும்.
The existense is involved.
சத்தியம் சிருஷ்டியில் கலந்துள்ளது.
It is involved in the forms.
உருவங்களில் கலந்துள்ளது.
It knows itself by intuition.
ஞானத்தால் தன்னையறியும்.
Self-vision and self-experience also know it.
திருஷ்டியும், அனுபவமும் அறியவல்லன.
This happens as it evolves.
வெளி வரும்பொழுது நடப்பவை இவை.
The Existence becomes the world.
சத்தியம் உலகமாகிறது.
It does so by knowing itself.
தன்னையறிந்து சத்தியம் உலகமாகிறது.
It knows itself by becoming itself.
உலகமாக மாறுவதில் தன்னையறிகிறது.
It possesses itself inwardly.
தன்னைத் தானே பெற்றது.
It gives delight to the forms and modes.
உருவமும் சுபாவமும் இதன் ஆனந்தத்தைப் பெறுகின்றன.
This is a becoming of Bliss.
இது ஆனந்தம் வெளிப்படுவதாகும்.
It is also a becoming of existence.
இது சத்திய வெளிப்பாடுமாகும்.
Consciousness too does so.
ஜீவியமும் அதேபோல் வெளிப்படும்.
All this happens in mind, life and body.
மனம், வாழ்வு, உடலில் இவை நடைபெறுகின்றன.
It exists externally outside them.
ஜீவியம் அவற்றையும் காலத்தையும் கடந்து உறைவது.
This is the transfiguration.
இதுவே திருவுருமாற்றம்.
This is the utility of the individual.
ஜீவாத்மாவின் பயனிது.
Through the individual it manifests.
சத்தியம் ஜீவாத்மா மூலம் வெளிப்படுகிறது.
Page No. 43 
Para No. 4
 
The unknowable knowing itself is creation.
பிரம்மம் தன்னையறிவது சிருஷ்டி.
It knew itself as Sachchidananda.
பிரம்மம் தன்னைச் சச்சிதானந்தமாக அறிந்தது.
Hence Sachchidananda was born.
எனவே சச்சிதானந்தம் பிறந்தது.
This is the affirmation of Vedanta.
இது வேதாந்தம்.
It is its supreme discovery.
இது வேதாந்தத்தின் சிகரம்.
Sachchidananda contains all.
உலகம் சச்சிதானந்தத்துள் அடக்கம்.
All depend on Sachchidananda.
அனைத்தும் சச்சிதானந்தத்தைப் பொருத்தது.
Explaining an experience, it can disappear, if there is no truth in it.
உண்மையற்ற அனுபவம் விளக்கத்தால் அழியும்.
Experiences can be appearances.
அனுபவம் தோற்றமாக இருக்கமுடியும்.
Appearances vanish by knowing their truth.
உண்மை தெரிந்தால் அனுபவம் மறையும்.
By explanations their shapes lose themselves.
விளக்கம் உருவத்தை அழிக்கும்.
Their coverings too can be thus explained.
தோற்றத்தின் போர்வை விளக்கத்தால் அழியும்.
This is negative elimination.
நம் அறிவை சுத்தப்படுத்தும் முறையிது.
The forms can be reduced to their truth.
தோற்றத்தின் கருவைக் காண முடியும்.
The names too can be so reduced.
பெயரும் தன் கருவை வெளியிடும்.
This is positive elimination.
இம்முறை நல்ல முறையாகும்.
Life seeks Sachchidananda for fulfilment.
வாழ்வு பூரணம் பெற சச்சிதானந்தத்தை நாடுகிறது.
It is so even for transcendence of life.
வாழ்வு தன்னைக் கடக்கவும் அதையே நாடுகிறது.
Man seeks many things.
மனிதன் தேடுபவை பல.
He seeks, purity, calm, freedom in the spirit.
தூய்மை, சாந்தம், சுதந்திரம், சக்தி, சந்தோஷம், பூரணம் ஆகியவற்றை
Power, joy and perfection are his aims.
மனிதன் தேடுகிறான்.
For all these man seeks Sachchidananda.
இவற்றிற்கெல்லாம் அவன் நாடுவது சச்சிதானந்தமே.
It is omnipresent, and indispensable.
அது இன்றியமையாதது. எங்கும் நிறைந்தது.
Man’s seeking Sachchidananda is eternal.
காலம் காலமாக மனிதன் தேடுவது இதுவே.
Page Nos. 43 & 44
Para No. 5
 
The Universe is an essential appearance.
பிரபஞ்சம் முக்கியமான தோற்றம்.
The individual is another essential appearance.
ஜீவாத்மாவும் அதுபோன்ற தோற்றமே.
The Unknowable has descended into them.
பிரம்மம் பிரபஞ்சமாகவும், ஜீவனாகவும் வெளிப்படுகிறது.
Therefore, we have to approach the unknowable here.
பிரம்மத்தைத் தேடுபவன் இவற்றை நாட வேண்டும்.
There are other collectivities.
வேறு முக்கியமானவை உள.
They are intermediary forms.
அவை குறுக்கே வந்தவை.
All of them are born of these two only.
பிரபஞ்சமும், ஜீவனும் இணைவதால் ஏற்பட்டவையே அவை.
In fact, their interaction gave birth to them.
பிரபஞ்சமும் ஜீவனும் உற்பத்தி செய்தவையே அவையெல்லாம்.
The Supreme Reality descends.
பிரம்மம் கீழே வருகிறது.
It is a self-concealing.
தன்னை மறைக்கும் வழியிது.
There is not one level here.
இது ஒரு மட்டத்தில் மட்டுமில்லை.
Several levels create several veils.
பல நிலைகள், பல திரைகளை ஏற்படுத்துகின்றன.
So, revelation is an ascent.
எனவே வெளிப்பாடு என்பது மேலே போவதாகும்.
Ascent and revelation are progressive.
வெளிப்பாடும், மேலே போவதும் முன்னேற்றம்.
The Divine descends.
கடவுள் உலகுக்கு வருகிறார்.
Man ascends.
மனிதன் மேலே போகிறான்.
The Divine descent is man’s ascent.
தெய்வம் கீழே வருவது மனிதன் மேலே போவதாகும்.
The unknown God is hidden.
கடவுள் மறைந்துள்ளார்.
A veil hides God.
திரை கடவுளை மறைக்கிறது.
The God-lover is God-seeker.
தபஸ்வி பக்தன்.
He unveils.
அவன் திரையை விலக்குகிறான்.
Thus the veil is an instrument.
எனவே திரை மேலே போகும் கருவி.
It is an instrument of ascension.
திரை கருவி.
Nature is material.
இயற்கை ஜடமானது.
It is in slumber.
அது நித்திரையிலிருக்கிறது.
It is unconscious of the Soul.
அதற்கு ஆன்மாவைத் தெரியாது.
Nor does it know the Idea.
கருத்து என்பதையும் அது அறியாது.
The Soul and the Idea maintain the world.
ஆன்மாவும், கருத்தும் உலகை இயக்குகின்றன.
The world is of ordered activities.
உலகம் ஒழுங்கான செயல்களாலானது.
Activities arise out of energy.
செயல்கள் சக்தியில் பிறக்கின்றன.
Nature is dumb.
இயற்கை பேசியறியாது.
It is in trance.
அது நித்திரையிலிருக்கிறது.
Life is more quick.
வாழ்வு அசைவது.
Life is varied.
வாழ்வு பல தரத்தது.
Its rhythm is disordered.
வாழ்வின் அசைவுகள் குழப்பமானவை.
Life labours to know itself.
வாழ்வு தன்னையறிய முயல்கிறது.
The material world tries to move into life.
ஜடவாழ்வு அசையும் வாழ்வை எட்ட முயல்கிறது.
Nature continues its struggle upwards.
இயற்கை அதன் போராட்டத்தைத் தொடர்கிறது.
It moves from Life to Mind.
இயற்கை வாழ்விலிருந்து மனத்திற்குப் போகிறது.
The human unit awakens.
மனிதன் விழிக்கின்றான்.
It awakens to itself and to the world.
விழித்து உலகையறிய முயல்கிறது.
The Universe needs a leverage.
பிரபஞ்சம் ஒரு கருவியைத் தேடுகிறது.
It needs it for its supreme work.
சிருஷ்டியின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய அது தேவை.
It is its self-conscious individuality.
அதுவே தன்னையறியும் ஜீவாத்மா.
Mind takes up the work.
மனம் வேலையை ஏற்கிறது.
It continues.
ஏற்று வேலையைத் தொடர்கிறது.
But it cannot complete.
மனதால் வேலையை முடிக்க முடியாது.
Mind is a labourer.
மனம் உழைப்பாளி.
It is acute, but limited in intelligence.
மனம் நுணுக்கமானது, ஆனால் அதன் அறிவுக்கு அளவுண்டு.
Life’s material is confused.
வாழ்வு குழப்பமானது.
Mind improves them, adapts them.
மனம் வாழ்வின் பகுதிகளை மாற்றி, அபிவிருத்தி செய்கிறது.
Mind varies the material.
வாழ்வின் செயல்களை மனம் மாற்றி அமைக்கின்றது.
It classifies it.
செயல்களை பகுத்து அமைக்கின்றது மனம்.
Mind hands them over to the Artist.
பகுத்தமைத்த விவரங்களை மனம் கலைஞனிடம் ஒப்படைக்கிறது.
The Artist is the Supermind.
சத்தியஜீவியமே கலைஞன்.
It is the Artist of our divine manhood.
மனிதன் தெய்வமாகும் கலை அது.
Supermind is Superman.
சத்தியஜீவியம் சத்தியஜீவன்.
Our world must climb beyond Mind.
நாம் மனத்தைக் கடக்க வேண்டும்.
Beyond is a higher status.
கடந்த நிலையில் உயர்ந்த நிலையுண்டு.
It is a higher principle.
அது உயர்ந்த தத்துவம்.
It is a higher dynamism too.
அது உயர்ந்த திறனுள்ள சக்தி.
Here the individual and universe meet.
இங்கு ஜீவாத்மாவும், பிரபஞ்சமும் சந்திக்கின்றன.
Each explains to the other.
ஜீவாத்மா தன்னைப் பிரபஞ்சத்திற்கு விளக்குகிறது. அதுவும் அதையே செய்கிறது.
Something contains both.
இரண்டையும் தன்னுட் கொண்டதொன்றுண்டு.
They possess THAT.
அது பிரம்மத்தையுடையது.
It is done in harmony.
அவை சுமுகமாக நடைபெறுகின்றன.
Thus the individual and the universal are unified.
இவ்விதமாக ஜீவாத்மாவும் பிரபஞ்சமும் இணைகின்றன.
Page No. 44
Para No. 6
 
The physical has an order.                            
உடலுக்கு ஓர் ஒழுங்குண்டு.
It is really a disorder.                      
அதன் ஒழுங்கு உண்மையிலேயே குழப்பம்.
It pervades mind and life.
இக்குழப்பம் மனத்தையும், வாழ்வையும் எட்டும்.
There is a more perfect order.
இதைவிட உயர்ந்த ஒழுங்குண்டு.
It is a secret.
அது இரகஸ்யம்.
We can discover it.
அதைக் கண்டுபிடிக்க முடியும்.
Then the disorders cease.
அது குழப்பத்தை விலக்கும்.
Matter is below life and mind.
ஜடம் மனத்திற்கும், வாழ்வுக்கும் கீழேயுள்ளது.
Life is full of energy.
வாழ்வு சக்தி நிறைந்தது.
That energy is immeasurable.
அது அளவுகடந்த சக்தி.
Action is action of that energy.
செயல் என்பது அச்சக்தியின் செயலாகும்.
Matter is tranquil.
ஜடம் அசைவற்றது.
Its poise is perfect.
அதன் நிலை சிறப்பானது.
Matter balances the action and this poise.
வாழ்வின் செயலையும், ஜடத்தின் நிலையையும் உடல் நிதானப்படுத்துகிறது.
Matter contains this balance.
ஜடத்திற்கு இந்த நிதானம் உண்டு.
But it has no mastery over that balance.
இந்த நிதானம் உடலுக்குக் கட்டுப்படாதது.
The peace of Matter is dull.
ஜடத்தின் அமைதி ஜீவனற்றது.
It is the peace of obscure inertia.
இருண்ட தாமஸ அமைதி அது.
It is the peace of unconsciousness.
கண்மூடியானது.
Matter is asleep.
ஜடம் தூங்குகிறது.
Consciousness is imprisoned in Matter.
ஜீவியம் ஜடத்தில் சிறைப்பட்டுள்ளது.
Matter appears drugged.
ஜடம் மயக்கமுற்றுள்ளது.
The real self of Matter is force.
சக்தியே ஜடத்தின் கரு.
The force drives it.
இச்சக்தி அதைச் செயல்பட வைக்கிறது.
Matter does not understand the force.
ஜடம் இதை அறியவில்லை.
Matter’s true energies are harmonious.
ஜடத்தின் சக்தி சுமுகமானது.
Its joy is not yet awakened.
ஜடத்தில் சந்தோஷம் எழவில்லை.
Matter does not seize its own joy.
தன் சந்தோஷத்தை ஜடம் இன்னும் அறியவில்லை.
Page No. 45
Para No. 7
 
Life and mind awaken to this sense of joy.
வாழ்வும் மனமும் இச்சந்தோஷத்தைக் கண்டு கொண்டன.
They strive.                                      
அதைப் பெற அவை முயலுகின்றன.
They are pushed by a troubled desire.
கசங்கிய ஆசை மனத்தையும் வாழ்வையும் உந்துகின்றது.
They ignorantly seek.
அவற்றின் முயற்சி அறிவற்ற முயற்சி.
So, they are baffled.
மனமும் வாழ்வும் திகைப்புற்று நிற்கின்றன.
This is the first step to self-knowledge.
இதுவே ஞானத்திற்கு முதற்படி.
Self-knowledge leads to self-fulfilment.
ஞானம் சித்திக்கு அழைத்துப் போகும்.
They speak of a kingdom to come.
வரப்போகும் சொர்க்கத்தைப்பற்றிப் பேசுகிறார்கள்.
It is a kingdom of self-fulfilling.
தன்னிறைவு பெறும் சாம்ராஜ்யமிது.
Where is it?
அது எங்குள்ளது?
Self-fulfilling comes by self-exceeding.
தன்னைக் கடந்தால், தன் நிறைவு பெறலாம்.
Beyond life and mind there is a divine truth.
மனத்தையும், வாழ்வையும் கடந்து இறைவன் சத்தியமுள்ளது.
We recover it consciously.
நாம் அதை முனைந்து பெற வேண்டும்.
Material Nature represents it.
ஜட உலகமான இயற்கை அதன் பிரதிநிதி.
But it does so grossly.
ஆனால் இயற்கை மந்தமானது.
It is a state of tranquility.
அது அமைதி தவழும் நிலை.
It is not inertia.
அது தாமஸ குணமில்லை.
Nor is it a sealed trance of consciousness.
மூடியிட்ட ஜீவியம் நிஷ்டையில் மூழ்கிய நிலையுமில்லை.
It is a concentration of force.
அதீதச் சக்தியின் அற்புதம்.
It is absolute force.
அது சக்தியின் முதலுருவம்.
It is absolutely self-aware.
தன்னைத்தானே முழுமையாக அறிந்த நிலையது.
It is an action.
அது செயல்.
It is an action of energy.
அது சக்தியின் செயல்.
That energy is immeasurable.
அளவீட்டிலடங்காத சக்தியாகும்.
It is also bliss.
அது ஆனந்தமுமாகும்.
It is ineffable, but out-thrilling.
விவரிக்க முடியாதது, எனினும் புல்லரிப்பதாகும்.
Its acts express it.
அதன் செயல்களில் அது வெளிப்படும்.
It is not ignorant.
ஒன்றும் தெரியாததில்லை.
It is not weak.
வலுவற்றதுமில்லை.
Its mastery is absolute.
அதன் திறன் பூரணமானது.
It is peace itself.
அது சாந்தமாகும்.
Ours is an ignorance.
நாம் பெற்றுள்ளது அறியாமை.
Its origin is light.
அதன் ஆதி ஜோதி.
Our ignorance reflects that light.
நம் அறியாமை அறிவைப் பிரதிபலிக்கிறது.
It is a darkened reflection.
அது கறுத்த பிரதிபலிப்பு.
It is a fulfilment and plenitude.
நிறைவும், பூரணமும் நிறைந்தது.
Our desires aspire for it.
நம் ஆசை அதை நாடுகிறது.
Sometimes the desire is crude.
சில சமயங்களில் ஆசை தாழ்ந்ததாகவுமிருக்கும்.
Its material forms are obscure.
அதன் ஜட உருவங்கள் இருண்டவை.
Our desire is a fallen aspiration.
ஆர்வம் தாழ்ந்து ஆசையாகிறது.
Page No. 45
Para No. 8
 
There are two terms.                       
இரு நிலைகள் உள.
They are universe and the individual.        
அவை பிரபஞ்சமும், ஜீவாத்மாவுமாகும்.
Each needs the other in their ascent.
இறைவனையடைய ஒன்றிற்கு அடுத்தது தேவை.
They exist by each other.
ஒன்றால் அடுத்தது வாழ்கிறது.
They profit by each other.
ஒன்று அடுத்ததற்கு உதவுகிறது.
The divine All is diffused as universe.
எங்கும் நிறைந்தவன் பிரபஞ்சமுழுவதும் பரவி நிற்கிறான்.
It is diffused in Space and Time.
காலத்திலும், இடத்திலும் அது நிறைகிறது.
The universe is an extended existence.
பிரபஞ்சம் புருஷனின் புற உருவம்.
It seeks the divine totality there.
நிறைந்தது பூரணத்தைத் தேடுகிறது.
It feels the totality. But it cannot realise it.
பூரணம் தெரிகிறது. ஆனால் நிலைப்பதில்லை.
Existence desires pluralistic sum of itself.
சத்தியம் பலவாகி பூரணம் பெற விழைகிறது.
Extension helps this.
பரவுதல் அதற்குதவும்.
This cannot be primal.
இதுவே ஆதியன்று.
Nor is it the final unit.
இதுவே முடிவன்று.
It is a recurring decimal.
தசமபுள்ளிபோல் மீண்டும் மீண்டும் வருவது.
It has no end, or beginning.
இதற்கு ஆதியும், அந்தமுமில்லை.
Therefore, it creates a concentration.
எனவே செறிவு ஏற்படுகிறது.
It is a self-conscious concentration of the All.
இது தன்னை அறியும் செறிவு.
This is the medium of aspiration.
ஆர்வத்திற்குரிய கருவியிது.
The individual becomes conscious.
ஜீவன் தன்னை அறிகிறது.
Prakriti turns back to perceive Purusha.
பிரகிருதி திரும்பி புருஷனைப் பார்க்கிறது.
World seeks after Self.
உலகம் பிரம்மத்தை நாடுகிறது.
Nature seeks God.
இயற்கை கடவுளைத் தேடுகிறது.
Page Nos. 45 & 46
Para No. 9
 
There is the other side.                   
இதற்கு மறுபுறமுண்டு.
The individual must realise himself.           
ஜீவன் தன்னை உணரவேண்டும்.
He does so through the universe.
பிரபஞ்சத்தின் மூலமே ஜீவன் தன்னை உணரமுடியும்.
The universe is his foundation.
பிரபஞ்சம் ஜீவனின் அஸ்திவாரம்.
It is his means.
அதுவே அவன் கருவி.
Universe is the field of the individual.
ஜீவாத்மாவின் முதல் அரங்கம் பிரபஞ்சம்.
Universe is the stuff of divine work.
இறைவன் திருவிளையாடலுக்குப் பிரபஞ்சமே ஆட்டம்.
Man is the concentration of the universe.
பிரபஞ்சம் செறிந்து மனிதன் ஏற்பட்டான்.
The concentration is within limits.
செறிவு அவனுள்ளேயிருக்கிறது.
This concentration is different from the unity of Brahman.
பிரம்மம் பெற்ற ஐக்கியம் இதன்று.
That unity is free from all conception.
அதை மனதால் நினைக்க முடியாது.
It is boundless, termless.
அளவு, வரைமுறை அற்றது அவ்வைக்கியம்.
It is an intensive unity.
செறிந்த ஐக்கியம் அது.
The divine All is his reality.
பரவியுள்ள பிரம்மம் அதன் சத்தியம்.
He must manifest it.
அவன் அதை வெளிப்படுத்த வேண்டும்.
For that man must universalise himself.
வெளிப்படுத்த மனிதன் பிரபஞ்சமாக வேண்டும்.
He must impersonalise too.
தனித்தன்மை போய் பொதுத்தன்மை வரவேண்டும்.
Still, he has a sense of personality.
இருந்தும் தான் தனி என்ற உணர்விருக்கும்.
He is obscurely aware of something.
ஏதோ ஒன்றுள்ளது என்று சற்றுத் தெரிகிறது.
It is transcendent.
அதுவே பரமாத்மா.
His obscurity is egoistic.
அவனிருள் அகந்தை.
He is impelled to preserve this representation.
பரமாத்மாவின் பிரதிநிதித்துவத்தைக் காக்க முனைகிறான்.
He is born for this representation.
இதற்காகப் பிறந்தவன் மனிதன்.
The representation is his goal.
இதுவே அவன் இலக்கு.
It is the problem set to him.
அவனுக்கு இட்ட கட்டளை இது.
He has to solve it.
இதைத் தீர்ப்பது அவன் கடமை.
He has to attain the goal.
இலட்சியத்தை அடைய வேண்டும்.
He cannot miss the goal.
அதைத் தவற விடமுடியாது.
Page No. 46
Para No. 10
 
The universe is creation.                
பிரபஞ்சம் சிருஷ்டி.
The individual’s universe is Life.               
மனிதனுக்கு அவன் வாழ்வே பிரபஞ்சம்.
The universe comes to the individual as Life.
வாழ்வாகப் பிரபஞ்சம் மனிதனை நாடுகிறது.
Life is a dynamism.
வாழ்வு தீவிரச் சக்தி வாய்ந்தது.
It has a secret.
அதற்கொரு இரகஸ்யம் உண்டு.
Man has to master the secret.
மனிதன் அந்த இரகஸ்யத்தைப் பெற வேண்டும்.
Life has a million results.
வாழ்வில் கோடிக்கணக்கானப் பலன்களுண்டு.
They collide against each other.
அவை ஒன்றோடொன்று மோதுகின்றன.
Still there is a hidden order.
பின்னணியில் ஒரு சட்டம் உண்டு.
It is a supreme order.
அது பரமனின் சட்டம்.
It is an inner harmony.
அது உள்ளுறை சுமுகம்.
It is yet to be realised.
அதை நாம் காணவேண்டும்.
To realise that order is his goal.
அச்சுமுகத்தை அடைவதே இலட்சியம்.
That is the true progress of man.
அதுவே மனித வளர்ச்சியாகும்.
Physical Nature has accomplished.
ஜடமான உலகம் அதனளவில் சாதித்துள்ளது.
We can repeat it differently.
நாமும் அதைப்போல் சாதிக்கலாம்.
This is not such a repetition.
இன்று நாம் செய்வது அதாகாது.
The animal is a perfect product.
விலங்கின் வாழ்வு பூரணமானது.
Man is higher than the animal.
மனிதன் விலங்கைவிட உயர்ந்தவன்.
Man can be a higher animal.
உயர்ந்த விலங்காக அவனால் முடியும்.
This is not such a version.
நான் கூறுவது அதன்று.
We have had so many systems.
வாழ்க்கையில் பல அமைப்புகளுண்டு.
They provide a certain well-being.
ஓரளவு வசதியை அவையளிக்கின்றன.
They offer mental satisfaction.
மனம் அதனால் திருப்தி அடைகிறது.
This well-being and satisfaction can stop our advance.
வசதியும், திருப்தியும் முன்னேற்றத்தைத் தடை செய்ய முடியும்.
It has not so happened till now.
இதுவரை அப்படித் தடையாகவில்லை.
The needs of the animal are little.
விலங்கின் தேவை குறைவு.
It is satisfied with that little.
அதைப் பெற்று விலங்கு திருப்தியடைகிறது.
The gods live in splendour.
தெய்வங்கள் ஜகஜ்ஜோதியாக இருக்கின்றன.
They are satisfied.
அவர்கள் திருப்தியடைந்தவர்கள்.
Man is different from animal and gods.
மனிதன் விலங்கிலிருந்தும், தெய்வத்திலிருந்தும் வேறுபட்டவன்.
He cannot rest.
அவனால் சும்மாயிருக்க முடியாது.
He must reach the goal.
இலக்கை எட்டவேண்டும்.
The goal is highest good.
இலக்கே உயர்ந்த நல்லதாகும்.
Man is discontented.
மனிதனால் எளிதில் திருப்தியடைய முடியாது.
He is limited.
மனிதன் அளவுக்குட்பட்டவன்.
The limitations give him pressure.
வரையறை அவனுக்குத் திணறலாக இருக்கிறது.
Therefore, he is the greatest living being.
எனவே உலகிலுள்ள உயர்ந்த ஜீவன் மனிதன்.
The ideal is remote.
இலட்சியம் வெகு தூரம்.
The divine energy is there to reach it.
தெய்வீகச் சக்தி அதைச் சாதிக்கும்.
Man alone can receive that energy.
மனிதன் மட்டுமே அச்சக்தியைப் பெறமுடியும்.
Page No. 46
Para No. 11
 
The Life-Spirit has potentialities.                
வாழ்வின் ஜீவனுக்கு ஏராளமான திறனுண்டு.
They centre in the individual.                      
அவை மனிதனிலுள்ளன.
That individual is the Purusha.
மனிதன் என்பவன் புருஷன்.
That way the Purusha is pre-eminent.
எனவே புருஷன் என்பது தலையாயது.
God is in all things.
கடவுள் அனைத்திலுமுள்ளார்.
Every object incarnates God.
எப்பொருளும் தெய்வ அவதாரம்.
But, Man is supreme for that purpose.
ஆனால், மனிதன் அவர்களுள் தலைசிறந்தவன்.
This Man is Manu.
மனிதன் என்பவன் மனு.
He is the thinker.
அவன் சிந்திப்பவன்.
He is Manomaya Purusha.
அவன் மனோமயபுருஷன்.
He is the mental person.
அவனே மனத்தின் புருஷன்.
He is soul in mind.
அவனே மனத்தின் ஆன்மா.
So said the ancient sages.
இவை ரிஷிகள் கூறியவை.
He is not a superior mammal.
மனிதன் உயர்ந்த விலங்கல்லன்.
He is a conceptive soul.
மனிதன் சிந்திக்கும் ஆன்மா.
His base is the animal body.
விலங்குடம்பு அவனுக்கு அடிப்படை.
That body is Matter.
உடல் ஜடம்.
He is conscious.
மனிதன் தன்னை அறிந்தவன்.
He is Name or Numen.
நாமம் அவன் பெற்றது.
He has chosen his own form.
தனக்குரிய உருவத்தைப் பெற்றவன்.
That form is his medium.
உருவமே அவனது வழி.
Person deals with substance.
மனிதன் பொருளால் செயல்படுகிறான்.
For that the body serves the purpose.
அதற்கு உடல் உறுதுணை.
Life emerges out of Matter.
ஜடத்திலிருந்து வாழ்வு எழுகிறது.
It is animal life.
அது விலங்கின் வாழ்வு.
Man has several terms of existence.
மனித வாழ்வுக்குரிய நிலைகள் அநேகம்.
This animal life is an inferior term.
விலங்கின் வாழ்வு தாழ்ந்தது.
Man has feeling, thought, will, impulse.
உணர்வு, சிந்தனை, உறுதி, உந்துதல் மனிதனுக்குண்டு.
All these together are Mind.
இவை சேர்ந்தது மனம்.
Mind tries to seize Matter.
ஜடத்தை மனம் ஆட்சி செய்ய முயல்கிறது.
Matter has energies.
ஜடத்திற்குச் சக்தியுண்டு.
Mind tries to impose its law on these energies.
மனம் இச்சக்திகளை தன் சட்டத்திற்குட்படுத்த முயல்கிறது.
Mind tries to transform Matter and its energies.
ஜடத்தையும், அதன் சக்திகளையும் உருமாற்ற மனம் முயல்கின்றது.
Mind is Man’s middle term.
மனம் மனிதனின் சராசரி நிலை.
It is his effectual station.
அவன் செயல்படும் நிலையது.
There is a superior term.
உயர்ந்த நிலையொன்றுண்டு.
Mind searches after it.
மனம் அதைத் தேடுகிறது.
If he finds, he can affirm it.
அது கிடைத்தால், அதையே முடிவானதாகக் கொள்ளலாம்.
His mental and bodily existence are That.
மனத்தாலும், உடலாலும் வாழும் வாழ்வு மனிதனுடையது.
This is practical affirmation.
இதுவே நடைமுறைக்கு முடிவு.
It is an affirmation of something superior.
உயர்ந்ததை உறுதிப்படுத்துவது இது.
It is superior to his self.
மனிதனைவிட உயர்ந்தது இது.
This is the basis of divine life.
இதுவே தெய்வீக வாழ்வின் அடிப்படை.
Page No. 47
Para No. 12
 
Man develops a mental idea of himself.     
தன்னைப்பற்றி மனிதனுக்கு ஓர் அபிப்பிராயமுண்டு.
This is his first knowledge.                           
இது மனிதன் பெற்ற முதல் அறிவு.
Later he is awakened.
அதன்பின் மனிதன் விழிப்புறுகிறான்.
Now he gets self-knowledge.
விழிப்புற்றபின் ஆத்ம ஞானம் பெறுகிறான்.
It is profounder than the first.
இது முந்தையதைவிடப் பெரியது.
He tries to think.
மனிதன் சிந்திக்கின்றான்.
He wants to arrive at a formula.
ஒரு சூத்திரத்தைக் காண முடிவு செய்கிறான்.
He wants to affirm something.
ஏதோ ஒரு விஷயத்தை முடிவு செய்ய முயல்கிறான்.
This he begins to conceive.
இதைப்பற்றி சிந்திக்கின்றான்.
He sees two negations.
இரு சூனியங்கள் தெரிகின்றன.
They are opposite negations.
அவை எதிரானவை.
He is between them.
மனிதன் அவற்றிடையேயுள்ளான்.
His poise does not help him.
இடைப்பட்ட நிலை உதவவில்லை.
This is his present attainment.
இதுவே மனிதன் இதுவரை சாதித்தது.
He does perceive beyond.
இதைக் கடந்தும் அவனால் காணமுடிகிறது.
There he is touched by a power.
அங்கொரு சக்தி அவனைத் தீண்டுகிறது.
Light and bliss too touch him.
ஜோதியும், ஆனந்தமும் அவனைத் தீண்டுகின்றன.
These are powers of infinite existence.
இவை அனந்தனின் சக்தி ரூபங்கள்.
It is a self-conscious existence.
இது ஆத்மஞானம் பெற்ற சத்தியம்.
What he sees, he cannot express.
தான் கண்டதை மனிதனால் விண்டுரைக்க முடியாது.
He can express them in his own words.
தன் சொந்த சொற்களால் அவனால் கூற முடியும்.
That is convenient to his mentality.
அவன் மனப்போக்குக்கு அது உகந்தது.
He calls them Infinity, Omniscience,
அனந்தம், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், அமரத்வம்,
Omnipotence, Immortality, Freedom, Love are other names.
சுதந்திரம், அன்பு என மனிதன் தான் கண்டவற்றை விவரிக்கின்றான்.
Beatitude and God too are his words.
தெய்வம், ஆனந்தானுபவம் என்றும் கூறுகிறான்.
He has now SEEN the sun.
சூரியனை மனிதன் கண்டுவிட்டான்.
But the opposites remain.
என்றாலும், எதிரானவை உள்ளன.
They are a double Night.
இரு இருட்டுகள் அவை.
A real darkness below.
உண்மையான இருட்டு அடியிலுள்ளது.
A mightier darkness beyond.
பேரிருட்டு மேலுள்ளது.
He strives better.
அவன் பெருமுயற்சி செய்கிறான்.
He seeks for higher understanding.
முழுமையான ஞானத்தைத் தேடுகிறான்.
They elude his understanding.
அது அவனுக்குக் கிடைக்கவில்லை.
The opposites pass into something.
எதிரானவை வேறு உருவம் பெறுகின்றன.
All these words cannot describe it.
இவற்றை எல்லாம் சொற்களால் விவரிக்க முடியாது.
All these words put together still fail to explain them.
மேற்சொன்ன எல்லா விளக்கங்களும் சேர்ந்தும் மனிதன் கண்டவற்றை விவரிக்க இயலாது.
At last he negates God.
முடிவாக, கடவுளில்லை என்றான் மனிதன்.
He assumes a Beyond.
தன்னைக் கடந்தது ஒன்றுண்டு என்று நினைக்கின்றான்.
God transcends, he thinks, Himself.
கடவுள், தம்மையே கடந்தவர் எனவும் நினைக்கின்றான்.
God denies Himself to conception.
கடவுள் சிந்தனையில் அகப்படவில்லை.
He looks at the world.
மனிதன் உலகைக் காண்கிறான்.
He looks around.
தன்னைச் சுற்றியும் காண்கிறான்.
He meets the opposites of his affirmation.
தான் முடிவு செய்ததின் எதிரானவற்றைக் காண்கிறான்.
Death is ever with him.
மரணம் என்றும் அவனுடனுள்ளது.
His being is limited.
அவனது ஜீவன் அளவுக்குட்பட்டது.
His effort meets with resistances.
அவன் முயற்சிக்கு எதிர்ப்புண்டு.
Error rises.
தவறு நடக்கிறது.
Inconscience opposes.
ஜடம் எதிர்க்கிறது.
Weakness defeats.
பலஹீனம் தோற்கடிக்கிறது.
Inertia resists.
தடங்கல் எதிர்க்கிறது.
Grief hurts.
கவலை துன்புறுத்துகிறது.
Pain kills.
வலி உயிரை எடுக்கிறது.
Evil looms large.
தீமை நடனமாடுகிறது.
They oppress his effort.
அவை மனித முயற்சியை எதிர்க்கின்றன.
He finds no God here also.
இவற்றுள் கடவுளைக் காணவில்லை.
He denies God.
எனவே மனிதன் கடவுளில்லை என்கிறான்.
The Divine negates itself.
கடவுள் தன்னையே இல்லை என்கிறது.
It hides behind appearances.
தோற்றத்தின் பின் கடவுள் மறைந்துள்ளான்.
The outcome of life is not true.
இவை வாழ்விலிருந்து வெளிவருபவை. உண்மையல்ல.
Nor is it eternal.
இவை சத்தியமுமில்லை,
It is not the reality.
இவை நித்தியமுமில்லை.
These denials are understandable.
இப்படியெல்லாம் இல்லை என்பது நாம் ஏற்கக்கூடியதே.
Page No. 47
Para No. 13
 
The other denial is remote.                           
வேறு மறுப்புகள் சக்தி வாய்ந்தவையல்ல.
It is a negation.                 
அவை இல்லை என்பவை.
It is inconceivable.
நினைக்க முடியாதவை.
It is mysterious.
புரியாத புதிர்.
But this denial is knowable.
ஆனால் இம்மறுப்பை நாம் அறிய முடியும்.
It is definite.
இது தெளிவானது.
Still, this too is a mystery.
இருப்பினும், இதுவும் புதிரானது.
He knows not what they are, why they exist, how they came into being.
அவை என்ன, ஏனிருக்கின்றன, எப்படி உற்பத்தியாயின என்று தெரியாது.
He sees their processes.
அவை உற்பத்தியான வகையை அவனறிவான்.
They affect his life.
அவன் வாழ்வை அவை பாதிக்கக் கூடியவை.
Still he cannot fathom their reality.
என்றாலும் அவற்றின் சத்தியத்தை அவனால் அறிய முடியவில்லை.
Page No. 47
Para No. 14
 
Perhaps they are unfathomable.                  
காண முடியாத ஆழத்திலிருக்கலாம்.
They are really unknowable.                        
உண்மையிலேயே அவை அறிய முடியாதவை.
Their essence escapes us.
அவற்றின் சாரம் நமக்குப் புலப்படுவதில்லை.
Maybe they have no essence.
ஒரு வேளை, அவற்றிற்குச் சாரமேயில்லையோ?
Maybe they are an illusion, Asat, non-being.
அவை மாயையோ, அசத்தோ, ஜீவனற்றதோ?
Above is the superior Negation.
மேலே உயர்ந்த மறுப்பு.
We think it is Nihil, Non-Existence.
அதை, சூன்யம் என நாம் கருதுகிறோம்.
Below is the inferior Negation.
கீழே தாழ்ந்த மறுப்பு.
Maybe this too is Nihil, a non-existence.
இதுவும் சூன்யமோ?
Already we considered this.
இதையும் ஏற்கனவே கண்டோம்.
This evades the difficulty.
இது அறிவுக்குப் புலப்படுவதில்லை.
We accepted the difficulty with the higher.
உயர்ந்த மறுப்பில் இதை நாம் ஏற்றோம்.
So, we accept this below also.
எனவே கீழேயும் அதை ஏற்போம்.
We cannot deny their reality.
இவற்றின் சத்தியத்தை மறுக்க முடியாது.
We cannot escape them.
இவை தவிர்க்க முடியாதவை.
We cannot call it disastrous illusion.
ஆபத்தான மாயை என நாம் அதைக் கூற முடியாது.
That is to shun our work.
அது நம் கடமையைத் தவிர்ப்பதாகும்.
That is to shelve the problem.
பிரச்சினையை ஒதுக்குவது போலாகும்.
These things deny God.
இவை கடவுளில்லை என்கின்றன.
But, for Life they are real.
ஆனால், வாழ்வில் அவை உண்மைகள்.
They are opposites of Sachchidananda.
அவை சச்சிதானந்தத்திற்கு எதிரானவை.
They are temporary, but real.
அவை தற்காலிகமானவை, ஆனால் உண்மை.
Their opposites are good, joy, knowledge, pleasure, life, survival, strength, power.
நல்லது, சந்தோஷம், ஞானம், இன்பம், வாழ்வு, பிழைப்பது, வலிமை, சக்தி ஆகியவை இவற்றின் எதிரிகள்.
They are the true material for Life.
இவை வாழ்வின் உண்மையான கூறுகள்.
Page No. 48
Para No. 14
 
Probably they are the result of a wrong view.              
தவறான கருத்தால் அவை ஏற்பட்டிருக்கலாம்.
A view founded on falsity is wrong.                          
பொய்யை அடிப்படையாகக் கொண்டு எழுந்த கருத்து தவறு.
The opposites may be accompaniments.
எதிரானவை உடனுறைபவை.
They may be inseparable.
அவை பிரிக்க முடியாதவைகளாக இருக்கலாம்.
They may not be an illusion.
அவை மாயையில்லை.
The view of the individual may be false.
மனித எண்ணம் பொய்யாக இருக்கலாம்.
The attitude to God may be false.
கடவுளைப்பற்றிய நினைவு தவறாக இருக்கலாம்.
Nature, self, environment may be wrongly understood.
இயற்கை, ஆன்மா, சூழ்நிலைகளைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.
God has become all these things.
இவை எல்லாம் கடவுளே.
But, he is out of harmony with them.
ஆனால் கடவுளுக்கும் இவற்றிற்கும் சுமுகமில்லை.
The world is out of harmony with things there.
உலகம் இங்கு சுமுகத்தை இழந்துவிட்டது.
God is Pure.
கடவுள் தூய்மையானவர்.
He has to be Pure.
அவர் தூய்மையாக இருப்பதவசியம்.
But we do not find so.
ஆனால் நாம் காண்பது அதன்று.
Therefore the contradictions may arise.
எனவே பிணக்கு எழுகிறது.
The appearance and secret of Truth are out of harmony.
தோற்றமும், உள்ளுறை சத்தியஇரகஸ்யமும் பிணக்கானவை.
Man’s work first meets them.
மனிதச் செயல் முதலில் காண்பது இவற்றையே.
They are the first elements of his work.
முதற்காரியமாக மனிதன் சந்திப்பவை இவை.
He has to fulfill them.
மனிதன் இவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
He has a crown to win.
கிரீடம் காத்திருக்கிறது.
For that he has a price to pay.
அதைப் பெறும் முயற்சி அவனுடையது.
This is a way of escape for Matter.
ஜடம் இதன் வழியாகத் தப்பிக்கலாம்.
Matter escapes into conciousness thus.
ஜடம் ஜீவியத்தை அடையும் வழி இது.
It is man’s ransom.
தன்னைக் காப்பாற்ற மனிதன் கட்டும் கப்பமிது.
But it is also his stock.
ஆனால், இதுவே மனிதனுடைய முதல்.
Of course there are false relations.
பொய்யான உறவுகள் உள்ளன.
It is by their aid the true has to be found.
பொய் மூலமாக மெய்யைக் காண முடியும்.
By Ignorance, we have to cross over death.
அறியாமை மூலம் நாம் மரணத்தைக் கடக்க வேண்டும்.
The Vedas speak cryptically.
வேதம் இவற்றைச் சுட்டிக் காட்டுகிறது.
They describe energies like evil woman.
தீய பெண்ணின் திறனை வேதம் விவரிக்கின்றது.
These women are evil in impulse.
இப்பெண்கள் உள்ளுணர்வு தீமையானது.
They hurt their Lord.
தம் கணவரைப் பாதிப்பவர் இவர்.
They wander from their path.
தங்கள் பாதையிலிருந்து விலகுகின்றனர்.
Page Nos. 48 & 49
Para No. 15
 
They are false.                                                
அவை தவறு.
They are unhappy.
அவர்களுக்குச் சந்தோஷமில்லை.
But, they build this Vast Truth.
ஆனால், அவர்கள் இப்பெருஞ் சத்தியத்தை வளர்க்கிறார்கள்.
That Truth is Bliss.
சத்தியம் ஆனந்தமானது.
The evil is not to be excised.
தீமையைத் துண்டிக்க முடியாது.
Cutting evil out of Nature will be a moral surgery.
இயற்கையிலிருந்து தீமையைத் துண்டிப்பது மனம் செய்யும் சஸ்திர சிகிச்சையாகும்.
One can recoil from evil life.
தீமையிலிருந்து விலகலாம்.
One may feel abhorrent.
தீமையைக் கண்டு மனம் வெறுப்படையலாம்.
But, he must turn Death into more perfect life.
ஆனால் மரணத்தை மாற்றி பூரண வாழ்வாக்க வேண்டும்.
Things are small.
பொருள்கள் சிறியவை.
They suffer human limitation.
மனிதனின் சிறுமை அவற்றிற்குண்டு.
Change the small into great.
சிறியதைப் பெரியதாக்க வேண்டும்.
Widen the limitation into divine vastness.
அளவானதை ஆண்டவனின் அகண்டமாக்க வேண்டும்.
Transform suffering into beatitude.
துன்பத்தை ஆனந்த அனுபவமாக்க வேண்டும்.
Convert evil into good.
தீமையை நன்மையாக மாற்றவேண்டும்.
Translate error into its secret.
தவற்றை அதன் உள்ளுறை சத்தியஇரகஸ்யமாக மாற்ற வேண்டும்.
Transform falsehood into truth.
பொய்யை மெய்யாக்க வேண்டும்.
Then the sacrifice will be accomplished.
அப்பொழுது தியாகம் பூர்த்தியாகும்.
The journey will be completed.
யாத்திரை முடியும்.
Heaven and Earth will be equalised.
சுவர்க்கமும், பூவுலகமும் சமமாகும்.
They would join hands.
அவை இணையும்.
It would be bliss of the Supreme.
பரமனின் ஆனந்தமாகும்.
Page No. 49
Para No. 16
 
There are contraries.                       
அவை எதிரானவை.
How can they pass into each other?                           
எப்படி ஒன்று மற்றதில் இணையும்?
Our life is lead of mortality.
மரணப்பிடிப்பிலுள்ளது நம் வாழ்வு. இரும்பு போன்றது.
The opposite is gold of divine Being.
எதிரானது இறைவனின் தங்கம்.
It requires an alchemy for the change.
இம்மாற்றமெழ இரஸவாதம் தேவை.
Where is that alchemy?
எங்கே அந்த இரஸவாதம்?
Suppose their essences are not contrary.
அவற்றின் சாரம் எதிரானவையில்லை என்றால்...
Suppose both are manifestations of one Reality.
இரண்டும் ஒரே சத்தியத்தின் வெளிப்பாடானவை எனில்...
If their substances are identical, then it is possible.
அவற்றின் பொருள் ஒன்றானால் இரஸவாதம் நடக்கும்.
A divine transmutation is then possible.
இறைவன் திருவுருமாற்றம் செய்ய முடியும்.
Para No. 17
 
Earlier we considered Non-Being.                             
முன்பு நாம் ஜடத்தைக் கண்டோம்.
We said it was an inconceivable existence.
அது நினைவுக்கெட்டாத ஜீவன் என்றோம்.
It may be ineffable Bliss too.
விவரிக்க முடியாத ஆனந்தமுமாகும்.
Buddhist Nirvana has a formulation.
புத்தர் நிர்வாணம் ஒரு சூத்திரம் தருகிறது.
It is the most luminous effort of man.
மனிதனுடைய புனித முயற்சியாகும் அது.
That takes us to this highest Non-Existence.
ஜடத்தில் உயர்ந்த நிலைக்கு நம்மை அழைத்துப்போகும்.
It represents an unspeakable peace.
விவரிக்க முடியாத அமைதியை அது காட்டுகிறது.
It is a psychology of gladness.
சந்தோஷத்தின் சாஸ்திரம் அது.
It has a practical effect.
அதற்கு நடைமுறைப் பலனுண்டு.
It wipes out suffering and ego.
துன்பத்தையும், அகந்தையையும் அது அழிக்கிறது.
All idea and sensation disappear.
எண்ணமும், உணர்வும் மறைகின்றன.
We can try to have a positive conception of it.
நாம் அதைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
It is an inexpressible Beatitude.
விவரிக்கவொண்ணாத ஆனந்த அனுபவமிது.
Even the notion of self-existence disappears.
நாமிருக்கின்றோம் என்ற கருத்தும் மறைகிறது.
[Can we give this name to it?
[நாம் அதற்குப் பெயரிட முடியுமா?
Can any name be given to it?]
எந்தப் பெயரையாவது தரமுடியுமா?]
It is Sachchidananda.
அது சச்சிதானந்தம்.
We dare not apply that to it.
அதைச் சச்சிதானந்தம் என்று சொல்ல அச்சமாக இருக்கிறது.
Sat, Chit, Ananda are supreme terms.
சத், சித், ஆனந்தம் ஆகியவை புனிதச் சொற்கள்.
Still, it cannot be used.
இருப்பினும் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
Nirvana annuls all terms.
நிர்வாணம் எனில் அனைத்தும் அழியும்.
All cognitive experience is overpassed here.
சிந்தனையின் உருவங்கள் அனைத்தும் கடந்து செல்லும்.
Para No. 18
 
We have assumed a suggestion.                   
நாம் ஓர் அடிப்படையைக் கருதுகிறோம்.
It is all is one Reality.
அனைத்தும் பிரம்மம் என்பதே அது.
Therefore this too is Sachchidananda.
எனவே இதுவும் சச்சிதானந்தம்.
Of course this is a negation.
இது மறுப்பு.
And an inferior negation at that.
தாழ்ந்த மறுப்பு.
Still our premiss points to that.
என்றாலும் நம் கொள்கை இதையே கூறுகிறது.
The intellect can conceive of it.
அறிவுக்கு அது புலப்படும்.
The vision can perceive it.
திருஷ்டிக்கு அது தெரியும்.
It can be sensed too.
அதை உணரமுடியும்.
It can be sensed through denial.
இல்லை என்பதன் மூலம் அதை உணரமுடியும்.
That would be our conscious experience.
அது நாமறிந்து பெறும் அனுபவம்.
But there is a fundamental error.
இதில் அடிப்படையான தவறுண்டு.
There is a compelling Ignorance.
அறியாமை ஆட்சி செலுத்துகிறது.
Maya or Avidya play their part.
மாயையும், அகந்தையும் தங்கள் பங்கை நிறைவேற்றுகின்றன.
These prevent the true experience.
உண்மை அனுபவம் அவற்றால் தடை பெறுகிறது.
This is our sense.
இதுவே நம் உணர்வு.
By this, a solution is possible.
இதன் மூலம் தீர்வு காணமுடியும்.
It is not a metaphysical solution.
இது தத்துவரீதியான தீர்வன்று.
It cannot satisfy a logical mind.
தர்க்கம் ஏற்காது.
We are on the borderline of the unknowable.
பிரம்மத்தின் எல்லையில் நாமுள்ளோம்.
We strain our eyes beyond.
புருவத்தை நெறித்துப் பார்க்கிறோம்.
But, the solution can be practised.
ஆனால், தீர்வு நடைமுறைக்கு உதவும்.
It would be true in our experience.
நம் அனுபவப்படி உண்மையாக இருக்கும்.
Page Nos. 49 & 50
Para No. 19
 
We can do this.                 
நம்மால் இது முடியும்.
We must go below the surface.                    
நாம் மேல் நிலையைக் கடந்து செல்லவேண்டும்.
Mind loves to dwell on the surface.
மனம் மேல் நிலைக்குரியது.
Mind tempts the vast and obscure.
மனம் அகன்ற இருளைத் தீண்டுகிறது.
It penetrates the unfathomable depths.
ஆழங்காணாத நிலையை ஊடுருவுகிறது.
Then we can identify states of being.
அங்கு ஜீவனின் பல நிலைகளைக் காணலாம்.
They are not our own.
அவை நமக்குரியதல்ல.
It is a great search.
அது பெரிய ஆராய்ச்சி.
Human language is poor there.
நம் மொழி திறனற்றது.
We may find some symbols and figures.
சில அறிகுறிகளையும், உருவங்களையும் காணலாம்.
We may stumble upon hints.
தடயங்கள் காணலாம்.
They may be of help.
அவை உதவும்.
They would light the soul.
ஆன்மாவை அவை விளக்கும்.
The ineffable design can offer reflections.
விளங்க இயலாதது சிந்தனையைக் கிளறும்.
They might light the surface mind.
அது மேல் மனத்தைத் தெளிவுபடுத்தும்.



book | by Dr. Radut