Skip to Content

03. The Destiny of the Individual - 3

5. ஜீவாத்மாவுக்கு இறைவன் வகுத்த வழி

வாழ்வின் வண்ணங்கள் பல. பரமனுக்குரியதும் உண்டு. உலகத்தை ஒட்டியதும் உண்டு. உடலைப்பெற்று வாழும் ஜீவராசிகள் அநேகம். உடலின்றி வாழும் உருவங்களும் உண்டு. ஜடமாகவும், ஜீவன்றும் உள்ள வாழ்வும் அறிவோம். ஜீவனும் சக்தியும் நிறைந்ததாகவும் வாழ்வு அமையும். உயர்ந்த அறிவோடு கூடிய வாழ்வும், அறிவேயில்லாமலும் வாழ்வுண்டு. எல்லா வகையான வாழ்வுகளுக்கும் பொதுவான சத்தியம் ஒன்றுண்டு. அதுவே எங்கும் நிறை பரம்பொருள். அளவிறந்து மாறுவது வாழ்வு. ஒன்றுகொன்று எதிராக அமைந்த வாழ்வும் உண்டு. நாம் அறிந்த அனுபவத்தை மறுக்கும் வாழ்வும் உண்டு. படிப்படியாக உயர்ந்து வாழ்வு பிரம்மத்தை எட்டும். பிரம்மம் சொல்லைக் கடந்தது. எல்லா வாழ்வுகளுக்கும் பொதுவான சத்தியம் ஒன்றுண்டு. இவையெல்லாம் சேர்ந்த மொத்தம் அன்று அது. அதையும் கடந்தது. எல்லா மாற்றங்களும் பிரம்மத்தில் ஆரம்பிக்கின்றன. எல்லா மாறுதல்களும் பிரம்மம். எல்லா மாற்றங்களும் பிரம்மத்தில் முடிகின்றன. நம்பிக்கை பல. அவற்றை மறுக்கின்றனர். பெரிய நம்பிக்கைகள் அதனிடத்தில் எழுகின்றன.. உலகில் ஒருமைப்பாடு வெளிப்பட முடியாது. ஒன்று இரண்டாகப் பிரிந்து நமக்கு எதிராகக் காட்சியளிக்கின்றன. அவை மோதி, உண்மையைக் காண முயல்கினனர். அழிக்க முனைவதில்லை. ஆதிமுதல் அந்தம் வரை பிரம்மமே எல்லாம். பிரம்மம்தவிர வேறெதுவுமில்லை.

இனிப்பை அறியாதவர்க்கு விளக்க முடியாதது போல், இந்த ஒருமைப்பாட்டைச் சொல்லால் விளக்க முடியாது. சர்க்கரை இனிப்பு என்றால் கேட்பவருக்கு விளங்காது. சொல்பவருக்கு விளங்கும். மனம் மட்டுமே நமக்குரிய கருவி. மனம் சிந்திக்கும் அல்லது உணரும். நாம் சிந்தனையை வளர்க்கலாம். முடிவான பெரிய கருத்தை அடையலாம். எதை இக்கருத்து விளக்கும்? பரமனை விளக்கும் கருத்தில்லை, எனவே நம் பெரிய எண்ணத்தையும் கைவிட வேண்டும். நம் அனுபவமும் அப்படியே. எவ்வளவு பெரிய அனுபவத்தாலும் சத்தியத்தை அறிய முடியாது. நம் ரிஷிகள் கண்ட சூத்திரம் உண்டு. நெதி, நெதி “இது இல்லை, இது இல்லை”. அதைச் சிந்திக்கும் எண்ணம் இதுவரை எழவில்லை. எந்த அனுபவத்தாலும் அதை அறிய முடியாது.

நாம் யார்? நம் சத்தியம் எது? நாம் என்ன நினைக்கிறோம்? நாம் என்ன உணர்கிறோம்? நம் மனத்தைப் பதிலுக்கு அழைப்போம். மனம், “பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். பல உருவங்கள் தெரிகின்றன” என்கிறது. அவை ஜீவியத்தின் ரூபங்கள். பல நிலைகள் உள்ளன. அவை ஜீவனின் குணங்கள். பிரம்மமே பல வகைகளாக இப்படியெல்லாம் தெரிவதாக மனம் கூறுகிறது. பிரம்மத்தை அறிய வேறு வழியில்லை. இந்நிலைகளும், இவ்வுருவங்களும், இந்நிகழ்ச்சிகளும் நாம் பிரம்மத்தை உணரும் வாயில்களாகும். இவற்றால் பிரம்மத்தின் ஓர் அம்சம் தெரிகிறது. அதைஏ முடிவாக நாம் நினைக்கிறோம். அது நிரந்தரமானது. பவித்திரமானதும்கூட, ஆனால் அவையே முழு பிரம்மமாகாது. பொதுவான அல்லது எல்லாவற்றையும் தழுவும் ஒர் அம்சத்தை நாம் கருதுகிறோம். அல்லது நிலையான ஓர் உருவத்தை அதன் அளவு பெரியதாக இருப்பதால் கருதுகிறோம். அளவிறந்த சக்தி என்பதால் ஒரு சக்தியைக் கருதுகிறோம். ஒன்றைக் கருதினால், பலவற்றை விலக்குகிறோம். அதன் முடிவற்ற தன்மைக்கு நாம் ஊறு இழைப்பதாகும். நாம் ஒருமைப்பாட்டைக் காணவில்லை. பிரிக்க முடியாததைப் பிரிக்கிறோம். அது பயனற்ற வேலை.

வேதாந்த ரிஷிகளுக்கு இது தெரியும். அவர்கள் சச்சிதானதத்தை அடைந்தார்கள். ஆன்மீக மகுடம் அது. தன்னையறிந்து இன்பமுறும் சித்தியாகும் அது. மனிதன் அதற்கு மேல் உயர முடியாது. வேதாந்த ரிஷிகளுக்கு அது முடிவான திருப்தி அளிக்கவில்லை. தவ முயற்சியை ஆராய்ச்சியாக்கி சச்சிதானந்ததத்தைக் கடந்து தொடர்ந்தனர். அதன் விளைவே அசத், நிர்வாணம், சூன்யம் என அவர்கட்குப் புலப்பட்டது. நிர்வாணம் என்பது சத், சித், ஆனந்தமான சச்சிதானந்தமில்லை. நம் அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகள் சச்சிதானந்தத்தின் சிதறிய சிறு துளிகளாகும். நிர்வாணம் என்பது சத், சித், ஆனதாமோ இல்லையோ, நாமறிந்த எல்லாவற்றையும் விடப் – சச்சிதானந்தத்தையும் விட - பெரியது. சாஸ்திரிமார்கள் புத்தமதம் வேதத்தை ஏற்கவில்லை, மறுக்கிறது என்கின்றனர். அது விபரமில்லாமல் பேசுவதாகும். அது உண்மையன்று. புத்தர் வேதத்தை ஏற்காததால் சாஸ்திரிகள் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால் பௌத்தம் வேதாந்தக் கருத்தைப் பின்பற்றுகிறது. உபநிஷதங்கள் அர்த்தபுஷ்டியோடு ஏற்கின்றன. வேதாந்த ரிஷிகள் “சத்”தை அறிந்ததுடன் “அசத்”தையும் அறிந்தார்கள். அவை ஒன்றையொன்று எதிர்ப்பதாக அவர்கள் கருதவில்லை. எதிரானவை எதிரியை அழிக்கும். ”சத்”தும் “அசத்”தும் பிரம்மத்தின் வாயில்கள் என அவர்கள் நினைத்த்டார்கள். எதிரானவையானாலும், அவையிரண்டும் பிரம்மத்தின் பகுதிகள் என்றனர். அவர்கள் சிந்தனைகள் அனைத்தையும் ஏற்கும் முழுமையுள்ளவை. சிருஷியை – ”பல” – ஏற்கும் வகையில் ஒருமைப்பாட்டைப் புரிந்து கொண்டனர். “பல” நாம் அறியும் உலகம். உலகத்தின் பல உருவங்களும் பிரம்மமாதலால், அவர்களால் அதை ஏற்கமுடிகிறது. ஏகன், புருஷன் என்பது பரமாத்மா. அதை அறிவது வித்தை அல்லது வித்யா – ஞானம். நாம் வித்யா மூலம் இறைவனை அறிகிறோம். உலகத்தை அறிவது அவித்யா – அஞ்ஞானம். உலகம் பலவற்றிற்கு ஜீவனளித்துள்ளது. வித்யா இல்லாமல் அவித்தை இருளாகும்.அஞ்ஞானம் ஏற்படுத்திய குழப்பமாகும் அது. நாம் அவித்யாவை – அஞ்ஞானம்– விலக்கமுடியாது. அஞ்ஞானத்தை இல்லை என முடியாது. அஞ்ஞானமில்லை எனில் ஞானமில்லை. அது இருண்டு குறையாகிறது. ஒளி கண் கூசுகிறது. நிழலில்லாவிட்டால் ஒளியைக் காணமுடியாது.

நம் முன்னோர்கள் கூறியவை தெளிவும், விவேகமும், அமைதியும் நிறைந்தவை. முடிவானதைக் காண அவர்கள் முனைந்தனர். கண்டு கொண்டனர். அதற்குரிய ஆன்மீக வலிமையையும், பொறுமையான நிதானமும் அவர்களிடமிருந்தன. பகுதியை முழுமையாகக் கருதும் குறை அவரிடமில்லை. சிறியதைப் (finite) பெரியதாக ஏற்கும் தவற்றையும் அவர் செய்யவில்லை. ஞானத்தின் முன் மனித அறிவு சிறியது என்ற அடக்கமுடையவர்கள். நம் அறிவின் எல்லையை அறிந்தவர்கள். பிரம்மம் நன்கு உணர்ந்தவர்கள். பிரம்மம் நம் அறிவின் எல்லையைக் கடந்தது என அறிவர். பிற்காலத்தவர் அப்படியில்லை. அவர்கள் பொறுமையற்றவர்கள். ஆனந்தம் அவர்களைக் கவர்ந்தது. பவித்ரமான ஆன்மீக அனுபவம் பெறும் திறன் (power) தரும் என அறிவர். அபரிமிதமான தீட்சண்யமுடையவர். ஆனால் நிதானமில்லாத தீட்சண்யம் அது. எனவே பரமாத்மாவை முடிவாக ஏற்று, உலகத்தை மாயை என மறுத்தனர்.சிகரம் அவர்களை அறைகூவி அழைக்கிறது. உலகத்திற்கு இரகசிமான பொக்கிஷம் ஆபத்திலுள்ளது என மறுத்து விட்டனர். உலகை இழித்து விலகினர். முன்னோர் விவேகம் நிதானமானது. பரமனை எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் சமமாகக் காண்பதவசியம் என்பது அவர்கட்குத் தெரியும். பெரியதை பெரியதாகவோ, சிறியதைச் சிறியதாகவோ பரமன் சன்னதியில் நினைக்க முடியாது. சன்னதிக்குள் அந்தபின் அனைவரும் சமம். முரண்பாடுகள் அவர்கள் கூர்த்தமதியைக் குறைக்கவில்லை. முரண்பாடுகளின் எதிர்முனைகள் இறைவனின் இதய கமலத்தின் இதழ்களாக அவர்களுக்குக் காட்சியளித்தன. அவை முரண்பாடுகளல்ல, முக வேறுபாடுகளாகும்.

இது அரைகுறையான வாதம். இதை விலக்குதல் நல்லது. பரமாத்மாவே முடிவு என்பதால் அவர்கள் உலகத்தை மாயை என்று மறுத்தனர். அசத் என்பது இல்லை, மாயை என்றனர். ஏனெனில் சத் என்பதே உண்டு என்பது முடிவாகத் தெரிகிறது. நாம் பரமனை உலகிலும் காண முயல வேண்டும். காண முயன்றால், உலகில் பரமன் காட்சி தருவான்.

மனம் விசாலமாகும் தன்மையுடையது. பரந்து விரியும் பொழுது அடுத்த கட்டங்களை அடையுமிடங்களுக்கு மனம் வருகிறது. அவை மனத்திற்கு முக்கியம். முக்கியத்துவத்தை அளவு கடந்து வலியுறுத்துகின்றனர். நாம் அதற்குப் பலியாகக் கூடாது. பகுத்தறிவு இறைவனை மறுப்பது முறை எனக் கொண்டு சுலமபாக அதைச் செய்கிறது. அதேபோல் தபஸ்வி உலகை மறுப்பது சரி எனக் கருதுகிறான். உலகைக் கற்பனைக் கனவு என அவன் வர்ணிக்கிறான். இருவரும் சமம். நமக்கு ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவரில்லை.பகுத்தறிவுவாதி புலன்களை மட்டும் நம்புகிறான். ஜடமே அவன் கண்ட சத்தியம். ஞானம் பெற வேறு வழி அறியாதவன் அவன். சூட்சும உலகமும் உண்மையுடையது என அவனால் ஏற்க முடியவில்லை. ஜடத்தை அறியும் புலன்கட்குச் சூட்சும உலகுக்கும் உண்மையுண்டு எனத் தெரியவில்லை. மனம் அறியாத உண்மை அது. அதே மனம் பரமனே நாடி மேலே செல்கிறது. ஆன்மீகச் சத்தியத்தை அங்கு காண்கிறது. ஆன்மாவுக்கு உடலில்லை, சூட்சுமமானது. பரமாத்ம தரிசனம் மனிதனை மீறியது. ஏந்த மனம் பகுத்தறிவுவாதியில் சூட்சுமத்தை அறிய முடியவில்லையோ, அதே மனம் இப்பொழுது – பரமனைக் கண்டபின் – தன கடந்த கால புலனறிவை அறியவோ, ஏற்கவோ முடியவில்லை.இதுவரை வாழ்ந்த வாழ்வு திடீரெனக் கனவாகவும், பிரமையாகவும் காண்கிறது. கீழும், மேலும் – பகுத்தறிவும், துறவியும் - மனம் திறனற்றது என்று காண்கிறது. சத்தியம் என்பது உண்டு. மேற்கூறிய இரு மன நிலைகளும் சத்தியத்தைச் சிதைக்கின்றன. மனம் உண்மையைக் காண முடியவில்லை என்பதை நாம் பார்க்கிறோம். ரூபங்கள் நிறைந்தது நம் உலகம். நம் ஆத்மநிறைவு இவ்வுலகத்திற்குரியது. உருவம் உயிர் பெற அஸ்திவாரமும், மகுடகும் பூரணமாக வேண்டும். அடியில் கால் பலமாக ஊன்றப்படவேண்டும். மேலே அது ஆன்மா. இருமுனைகளுமின்றி ரூபமான லோகத்தில் எதற்கும் அர்த்தமில்லை. ஜடம் தன்னை முடிவாகக் கருதுகிறது. தானே சத்தியம், தனக்கு வேறெதுவும் தேவையில்லை என ஜடம் சவால் விடுகிறது. ரூபமும் அதையே கூறுகிறது. அது அறியாமையில் மாயை. ஜடம் போல் அதன் எதிரான சூட்சுமம் உண்டு. உடலுக்கு எதிராக உடலில்லாத ரூபங்களுண்டு. ரூபமும், ஜடமும் இவற்றிற்கு வடிவமும் கனமும் அளிக்கின்றன. இவை தெய்வீகச் செயல்கள். ஆன்மீக நிலைகளை அவை பிரதிபலிக்கின்றன.

பிரம்மம் ஆனந்தத்தை நாடுகிறது. அதற்காக பிரம்மம் சிருஷ்டித்தது. உலகம் ஆதியன்று. ரூபங்களாலானது சிருஷ்டி. படைக்கப்பட்டது. தன ஜீவனை பிரம்மம் ஜடப் பொருளில் வெளியிடுகிறது. பிரம்மம் உலகில் உண்டு. வாழ்வில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது. தன்னுள் பொதிந்துள்ள பிரம்மத்தை வாழ்வு காண விழைகிறது. அக்காரணத்திற்காகவே வாழ்வு பிரம்மத்திலிருக்கிறது. அதனால் மனிதன் முக்கியமாகிறான். தன்னையறிய மனிதன் விரும்புகிறான். அதைச் சாதிக்க மனிதன் உலகின் ஜீவியத்தை உயர்த்துகிறான். இதனால் மனிதன் தன்னை அறிய முடிகிறது. உலகம் திருவுருமாறுகிறது. அது மனித இலட்சியம். மிருகத்தின் வாழ்வையும் செயலையும் மனிதன் தன் ஆரம்பமாகக் கொள்கிறான். அவன் இலட்சியம் தெய்வீக வாழ்வு.

தன்னை அறிவதே சித்தி.அதிக பட்சமாகப் புரிந்தால் பெரிய சித்தி பெறலாம். இதுவே வாழ்வுக்கும், மனத்திற்குமுரிய உண்மையாகும். ரூபங்கள் தரத்தில் உயர்ந்தபடி இருக்கின்றன. அடுத்தடுத்த ரூபங்களாக பிரம்மம் வெளிப்படுகிறது.அவை ஜீவியத்தின் ரூபங்கள். அவற்றின் தொடர்பும் அடுத்து அடுத்து எழுபவை. இந்த ரூபங்கள் ஜீவனில் காணப்படுகின்றன. நாம் அடுத்தடுத்து காண்பவை ஜீவனில் ஒரே சமயத்தில் காணப்படுகின்றன. காலத்தின் அரங்கில் அவை ஒரே சமயத்தில் எழுகின்றன. வாழ்வு தானே மலர்வது. அது உயர்ந்தபடியிருக்கும். வாழ்வில் அவை அடுத்தடுத்து எழுகின்றன. காலத்தில் ஒரே சமயத்திலெழுவது வாழ்வில் அடுத்தடுத்து வரும். நாம் நிலைகளைக் கடந்தபடியிருக்கிறோம். உடலினின்று மனத்திற்கும், மனத்திலிருந்து ஆன்மாவுக்கும், நாம் போகிறோம். ஆன்மாவுக்குப் போனால் உடலை உதறித் தள்ளுகிறோம். இது இறைவனின் திருவுள்ளமில்லை. இறைவன் சிருஷ்டியில் சாதிக்க நினைத்ததை நம் செயல் பூர்த்தி செய்யாது. பூவுலகில் தன்னை இறைவன் ஜீவராசிகள் மூலம் வெளிப்படுத்த விரும்புவதை நம் செயல் பூர்த்தி செய்யாது. நம் இலட்சியம் பூரணச் சிறப்பு. நமக்கு அது இப்பொழுதில்லை. இலட்சியத்தை நடுவதை விட்டு நாமுள்ள இடத்தின் குறையை நாம் போகுமிடத்திற்குக் கொண்டு போவது மனித இயல்பு. அதிகபட்சம் நாம் அடைவது அடுத்த நிலையாகும் அல்லது இலட்சியத்திற்குக் குறைவானதாகும். நாம் எவ்வளவு உயரே போனாலும், கால் தரையில் ஊன்றியிருப்பது சரி அடிப்படையை விட்டுவிட்டு மேலே போவதுகுந்தகம் விளைவிக்கும். சச்சிதானந்தத்தைக் கடந்து நிர்வாணத்தையும் அடையலாம். என்றாலும் அடிப்படையில்லாவிட்டால் எதுவும் பலன் தாராது. அஸ்திவாரத்தை விடமுடியாது. கீழுள்ளதை மேலே உயர்த்த வேண்டும். அதுவே இயற்கை தெய்வமாவதாகும். பிரம்மம் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. ஒரே சமயத்தில் பிரம்மத்தில் பல்வேறு நிலைகள் உள்ளன. நாமும் அதையே பின்பற்ற வேண்டும். நாம் முழுமையாகி, அனைத்தையும் நம்முட் கொண்டு வரவேண்டும்.

வாழ்வைத் துறப்பது துறவறம். இதே போன்றே மற்றொன்றுண்டு. முழுமையான் நம் இலட்சியம் இச்சிறு எண்ணங்கள் தவறு செய்வதைத் தடுக்கும். ஜீவியத்திற்கு மூன்று பொது ரூபங்களுள்ளன. அவை ஜீவாத்மா, பிரபஞ்சம், பரமாத்மா. அவை வாழ்வில் சந்திக்கின்றன. இம்மூன்றும் சந்திக்கும் மையம் வாழ்வு. பரமாத்மா பிரபஞ்சத்தைக் கடந்திருப்பதால் அதைக் கடந்தது என்கிறோம். ஜீவாத்மா தனிப்பட்டது என்பதே நம் பொதுக்கருத்து. அவன் பிரபஞ்சப் பகுதி. இரண்டும் அவற்றைக் கடந்ததை நம்பி வாழ்வதாகும். நாம் பரமாத்மாவைக் கடவுள் என்கிறோம். பரமனே மற்றவை எல்லாம் எனக் காண்கிறோம். நாம் கடவுள் உலகைக் கடந்தவரென்றோ, உலகுக்குப் புறம்பானவரென்றோ எடுத்துக் கொள்ளவில்லை. கடவுளே முக்கியம் எனவும் ஜீவாத்மாவும், பிரபஞ்சமும் அர்த்தமற்றவை எனவும் நினைக்கிறோம். மனிதன் கடவுளை அடைந்தபின் ஜீவாத்மாவும், பிரபஞ்சமும் அவனுக்குத் தெரிவதில்லை; இல்லை என்கிறான்; அவன் வாதம் தர்க்கரீதியானது.

பிரம்மம் முழுமையானது. அனைத்தையும் தன்னுட்கொண்டது என்பது நம் கொள்கை. மேற்சொன்னவை நம் கொள்கைக்கில்லை. நாம் மனத்தால் வாழ்கிறோம். அதற்காக உடலை விட்டுவிடவில்லை. தபஸ்வி உடலில்தான் வாழ்கிறான். உடலைவிட்டு வெளியேறுவதில்லை. எனவே ஜீவாத்மாவையும், பிரபஞ்சத்தையும் விலக்க வேண்டுமென்ற முடிவைவிட நல்ல முடிவுக்கு நாம் வரமுடியும். நாம் கடவுளை அடையலாம். உலகையும், சிருஷ்டியையும் கடந்தவர் அவர். நாம் பிரபஞ்சத்தையும் அடையலாம். இதற்காக ஜீவாத்மாவைக் கரைக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் ஜீவாத்மாவையும், பிரபஞ்சத்தையும் உட்கொண்டவர். நாம் மட்டும் ஏன் எதையும் விடவேண்டும். ஜீவாத்மா பிரபஞ்ச மையம். பிரபஞ்சம் எனில் என்ன? இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? கடவுள் உருவமற்றவர். நாம் கடவுளை விவரிக்க முடியாது. பிரபஞ்சம் கடவுளின் உருவம். ஜீவாத்மாவைக் கரைப்பதும், பிரபஞ்சத்தை மறப்பதும் பிரச்சினை இல்லை. அப்பிரச்சினைகள் எழவேண்டிய அவசியமில்லை.

கடவுள், பிரபஞ்சம், மனிதன் ஆகியவை ஒன்றே. இது உண்மை. நம் ஜீவியம் தவறாக இருக்கிறது. அறியாமை அதை மூடியுள்ளது. நாம் அதனால் உண்மையை அறிய முடியவில்லை. மனம் உண்மையை அறிந்தால், சத்தியம் தன்னை வெளிப்படுத்து,. அம்மாற்றம் ஏற்பட்ட பின் புறநிகழ்ச்சிகளில் எதுவும் மாறியிருக்காது. நம் மனம் மாறியதுஉண்மை. செயலைப் பற்றிய அபிப்பிராயமும் மாறியிருக்கும். ஆனால் அடிப்படையில் முக்கியமாக எதுவும் மாறியிருக்காது. இதன் விளைவாக நம் ஆன்மா மாறியிருக்கும். அதனால் செயலும் மாறும்.இறைவன் உலகில் செயல்பட மனிதன் தேவை. மனிதன் ஆத்ம விளக்கம் பெற்று, ஆன்மா விடுதலை பெற்றால், இம்மாற்றம் எப்படி இறைவனுக்கு மனிதன் தேவையில்லை என்றாகும்? உண்மை மாறானது. மனித குலம் விழிப்புற வேண்டும் என்பது கொள்கை. விழிப்புற்ற மனிதன் மூலம் உலகம் விழிப்புற வேண்டும் என்பது புதிய நிலை. மோட்சத்தகுதி பெற்ற மனிதன் உலகில் தங்கவேண்டுமென்பது இறைவனுக்கு அவசியம். ஞானம் பெற்ற மனிதன் உலகை விட்டகலவேண்டுமென்பது சட்டமானால், உலகம் என்னாவது? எந்த நாளிலும் உலகம் அந்தகாரத்திலிருக்கும். துன்பமும், மரணமும் உலகை நிரந்தரமாக ஆட்சி செய்யும். அது இரக்கமற்ற உலகம்; இயந்திரம் போல் இயங்குவதாகும்.

ஜீவாத்மாவை விட்டுவிட வேண்டுமென துறவி நினைக்கிறான். அதன் பொருளென்ன? தனி மனிதன் பெறும் மோட்சத்தின் அர்த்தமென்ன? வாழ்வேமாயை எனில்,மோட்சத்திற்கு அர்த்தமில்லை. இறைவனை உலகம் என்பவன் அத்துவைதி. அவனுக்குப் பரம்பொருளும் ஜீவாத்மாவும் ஒன்று. இது உண்மை. அறிவில்லாத மனிதன் தான் தனி எனக் கருதுகிறான் தனிமையைக் குணப்படுத்த அவன் மோட்சத்தின் மூலம் பரமனோடு ஐக்கியத்தை விழைகிறான். இது அத்வைதம். இதை ஆராய்வோம். மோட்சம் யாருக்கு என்ன பலன் தருகிறது எனக் காண்போம். பரமாத்மா என்பதென்ன? அது உன்னதமானது, புருஷன்,மௌனமானது; பவித்திரமானது. சுதந்திரமானது. அதற்கு எதுவும் தேவையில்லை, எனவே மனிதன் தேடும் மோட்சத்தால் பரமாத்மாவுக்கு எந்தப் பளுனுமில்லை. உலகம் என்ன சொல்கிறது? ஜீவாத்மா மோட்சத்திற்குப் போவதால் உலகத்தில் என்ன நடக்கிறது.? என்றும்போல் உலகம் இருளிலும் துன்பத்தளையிலும், மாயையிலும் உழல்கிறது. நிச்சயமாக உலகம் மோட்சத்தால் பலன் பெறவில்லை. ஜீவாத்மாவுக்கு என்ன பலன்? எதாவது பலனுண்டா? மோட்சம் ஏற்றபின் ஜீவாத்மா கடவுள் உலகினின்று வேறுபட்டதாக இருக்கும் என நாம் நினைக்கலாம். ஜீவாத்மா மாயையில்லாமல் உண்மையாக இருந்தால், அது பலன்பெற முடியும். ஆனால் மாயாவதி ஜீவாத்மா மாயை என்கிறான். ஜீவாத்மா என ஒன்றில்லை என்பது மாயாவாதம். மாயையில் மட்டுமே ஜீவாத்மா உள்ளது என்பது அவன் விளக்கம். மாயை என்றால் என்ன என்பதை எவரும் விளங்கும்படிச் சொல்லவில்லை. பரமனுக்கோ, பிரபஞ்சத்திற்கோ, ஜீவாத்மாவுக்கோ இந்த மோட்சம் பலன் தரவில்லை.நாம் அர்த்தமற்றவராகிறோம். மாயையான ஜீவாத்மா, மாயையான உலகிலிருந்து, மாயமான தளையை அறுத்து மோட்சமடைகிறது. இதுதான் உயர்ந்த இலட்சியமா? ஞானம் என்பதை, சாஸ்திரம் விவரித்து, “விலங்கிடப்பட்டவரில்லை, சுதந்திரமானவரில்லை; சுதந்திரம் தேடுபவருமில்லை” என்கிறது. அவித்தை சிருஷ்டிக்குரியது. ஆனால், வித்யா நிரந்தரமானது. இப்பொழுது வித்யாவும் அவித்யா போலாகிறது. தர்க்கம் ஜெயிக்கிறது. மோட்சம் பெற்றவரை மாயை சந்திக்கிறது. மாயை நம் எண்ணங்களைக் கேலி செய்கிறது. புதிரிலிருந்து மாயை நம்மை விடுவிக்கின்றது.

இவற்றை எல்லாம் விளக்க முடியாது என்பார்கள். ஆதியிலிருந்து உள்ளவை எவரும் விளக்க முடியாத அதிசயம் என்றெல்லாம் கூறுவார். இதுதான் இருக்கிறது, நாம் ஏற்க வேண்டும் என்பதே விளக்கம். இது என்ன விளக்கம்? இது ஒரு குழப்பம். இரு குழப்பத்தை மற்றொரு குழப்பத்தால் விளக்க உற்பத்தி செய்கிறார்கள். மோட்சம் தேடும் ஜீவாத்மா என்ன செய்கிறது? தான் தனிப்பட்ட ஆத்மா என்று வலியுறுத்துகிறது. மோட்சத்தைத் தனக்கு மட்டும் தேடுகிறது. இது அகந்தைக்குச் செய்யும் அலங்காரம். தன மீதுள்ள பற்றை நாம் காண்கிறோம். அகந்தை தன்னைக் கரைக்க அகந்தையை அதிகமாக வலியுறுத்துவதாகும். நம் ஆத்மா உண்மை. அதன் மோட்சம் முக்கியம். மற்ற ஜீவாத்மாக்கள் மாயை. அவை நம் கற்பனையில் எழுந்தவை. அவை இருளின் தளையில் இருக்கலாம். நாம் மோட்சம் பெறுவது அவசியம். எல்லா ஆத்மாக்களும் சமமல்லவா?

இது வாதமன்று புதிர். பரமனும் உலகமும் எதிரானவை என நாம் கொள்கிறோம். இந்த வாதத்தை நாம் கணக்கிலெடுக்க வேண்டாம். எடுக்காவிட்டால், குழப்பம் நீங்கி விவரம் புரியும். நம் உலகம் ஒன்று என்கிறோம். உலகம் பலவிதத்தின என்பதை நாம் ஏற்க வேண்டும். எங்கே பார்த்தாலும் இவ்வுண்மை தெரிகிறது. நாம் கண்மூடிப் பார்க்க மறுத்தாலன்றி, அது எங்கும் காட்சியளிக்கிறது. பரமன் பெரியது, ஒருமைப்பாட்டிற்கும், அதற்கெதிரான பிரிந்த நிலைக்கும் கடந்தது.இரண்டும் பரமனை கட்டுப்படுத்தா. இது எளிய யதார்த்தமான உண்மை. பரமன் பூரணமானது. சுதந்திரமானது. தன் வெளிப்பாட்டைத் தானே நிர்ணயித்துக் கொள்ளவல்லது. “எவருக்கும் விலங்கில்லை. சுதந்திரமானவருமில்லை.சுதந்திரம் தேடுபவருமில்லை”. ஏனெனில் “அது” சுதண்ட்திரமானது. துவே சுதண்ட்திரம். அதன்சுதந்திரம் எவ்வளவு முழுமையானது எனில் தன் சுதந்திரத்தாலும் அது கட்டுப்படுத்தப்படாததாகும். சுதந்திரமாக இருக்க வேண்டிய கட்டாயம் அதற்கில்லை. எதனாலும் கட்டுப்படுத்தப்படாதது அது. கட்டுப்பட்டோ, சுதந்திரமாகவோ, தன்னிஷ்டப்படி இருக்க அதற்குரிமையுண்டு. கட்டுப்பட்டதாக அது நடிக்கலாம். அது உண்மையான விலங்கில்லை. அது தோற்றம். அகந்தையுள் தன்னை அடக்கியுள்ளது. ஆனால் அகந்தை தற்காலிகமானது. பிரபஞ்சம் முழுவதும் பரவும் தன்மையை ”அது” ஜீவாத்மாவுக்கு அளிக்கிறது. பரமனுக்குரிய நிலையையும் ஜீவாத்மாவுக்கு அளிக்க முயல்கிறது. அப்படி அகந்தை உற்பத்தியாயிற்று.

கடவுள் கடந்தவர். சிருஷ்டிக்கு அப்பாலுள்ளவர். பூரணமானவர். சுதந்திரமானவர். காலத்தைக் கடந்தவர். சிறியது, பெரியது (finite, infinite) என்ற கருத்தைக் கடந்தவர். சிருஷ்டியில் கடவுள் சுதந்திரமானவர். தம்சுதந்திரத்தால் உலகைச் சிருஷ்டித்தார். அவருடைய அமைப்பில் முரணானவை ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதாக அமைந்துள்ளன. ஒருமையையும் பிரிவினையையும் ஒன்று சேர்க்கும் அமைப்பு அது.. பிரிந்து நிற்குமொருமையாகும். அவர் சிருஷ்டிக்குரியன மூன்று. பரமன், மனிதன், விலங்கு என மூன்றாகும். “பல” என்பது பல ரூபங்களைத் தாங்கி வரும் ஏகனாகும். ஜட உலகில் அது விலங்கில் ஆரம்பிக்கிறது. சிருஷ்டியில் தன்னை வெளிப்படையாக அது வெளிப்படுத்துகிறது. புலனறிவுக்கு உட்படாததால் (subconscious) பொருள்களுக்குத் தங்களை உணர முடிவதில்லை.

மனித மையம் அகந்தை. அது மேல் மனத்திற்குரியது. இங்கு ஒருமைப்பாடு தெரியும். ஒருமைப்பாடு எனில் மேல் மனத்தளவில் ஒருமைப்பாட்டை அகந்தை ஏற்கிறது. உருவத்தின் ஒருமைப்பாடே அகந்தைக்கு ஒருமைப்பாடென்பது. பின்னணியில் நடப்பது ஏராளம். அகந்தை அதை அறியாது. பிறரும் நாமே என்ற உண்மை அகந்தைக்குப் புலப்படுவதில்லை. பிரபஞ்சத்தின் அகந்தை மனிதனில் இப்படித் தோன்றுகிறது. தான் வேறு என்பது அகந்தை அறிவது. எனவே மனிதன் குறையுடையவன். அகந்தை தன் கூட்டை விட்டு வெளிவர முடியும். பரமனை அது அடைய முடியும். பிரபஞ்சம் ஒன்று என்பதை அகந்தை இப்படி அறிகிறது. பரமனை அடைந்து அவருள்ளும் புகுகிறது. பிரபஞ்சம் பரமாத்மாவை ஆயிரம் ஜீவாத்மாக்களாக வெளிப்படுத்துகிறது.

மனிதனுடைய விடுதலையே முக்கியம். இறைவன் உலகில் செயல்பட அது அவசியம். அடிப்படையில் அது இறைவனுக்குத் தேவை எல்லாவற்றிற்கும் மனிதனே மையம். ஜீவாத்மா ஒழி மையம். பரமன் ஏகனாக இருந்துன அநேகனாக மாறுவதுதான் ஜீவாத்மா என்பதில் நாம் காண்பதாகும்.ஆன்மா மோட்சமடையும் தருணத்தில் அதன் பார்வை இருபுறங்களில் செல்கின்றது. அகன்று விரிவதும், வளர்ந்து உயர்வதுமான இரு திசைகளில் அகம் புறமாகிறது. “பல”வறறோடு ஐக்கியம் அடைந்த பின்னரே பரமனோடு பெற்ற ஐக்கியம் பூர்த்தியாகிறது. விடுதலை பெற்ற ஆன்மா அடுத்த ஆன்மாவைத் தொட்டு விழிப்பேற்படுத்துவது அகன்று பரவுவதாகும். தன்னை அடுத்த ஆன்மாவில் மீண்டும் உற்பத்தி செய்கிறது. மற்ற ஆன்மாக்கள் “பல” என்பதின் ஆன்ம ரூபங்கள். விலங்கு முதிர்ந்து குட்டி போடுகிறது. தெய்வம் பக்குவமான ஆன்மா மூலம் பரிமளிக்கிறது. பல ஆன்மாவாகிறது. அதனால் ஒருவர் மோட்சம் பெற்றால் அது பலருக்கும் பலிக்கிறது. உலகெங்கும் நடக்கும் செயல் அது. உலகைத் தாண்டியும் நடக்கலாம்? வளர்ச்சிக்கு அளவுண்டா? நிர்வாணத்தின் முன்னின்ற புத்தர் உலகில் ஓர் ஆன்மா இருளிலுள்ள வரை தனக்கு மோட்சம் வேண்டாம் என்றார். இது உண்மையில்லையா?

பரமனை அடைய நாம் இப்பொழுது உலகைத் துறக்க வேண்டும். உலகைத் துறக்காமல் உயர்ந்தது நமக்கில்லை. அது உண்மையில்லை. நாம் உயர்ந்ததை அடைய முடியும். ஜீவாத்மா கரையாமல் நாம் பரமாத்மாவை அடைய. முடியும். பிரம்மத்திற்கு இரு அம்சங்களுண்டு. அகத்தில் சுதந்திரமும் புறத்தில் உருவமும் அவ்வம்சங்கள் உருவமளிக்கும் திறனுண்டு. அத்திறனை வெளிப்படுத்தாத நிலையுமுண்டு. இரு “திறமைகளையும்”ஒரே சமயத்தில் தன்னுட்கொண்டது. நாம் உண்மையில் “அது”வாகும். இறைவன் இரு அம்சங்களைப் பெற்றிருப்பதைபோல் நாமும் அவ்விரண்டையும் இறைவனைப் போலவே பெறலாம். இரு அம்சங்கள் இரு போக்குகள். இரு போக்கும் இணைவதே வாழ்வின் அடிப்படை. இறைவனாக தேவையான நிபந்தனை இது. தாழ்ந்ததைக் கடந்து சுதந்திரம் பெறுகிறோம். அதை மறுக்கவில்லை. நாம் எப்படி அதை மறுப்பது. முந்தைய நிலையை மறுத்து சுதந்திரத்தை நாடுவது பூரணமாகாது. நம்மை மறந்திழக்கலாம். அது இறைவனை மறுப்பதாகும்.சிறியதை முடிவாக ஏற்பதாகும். தாழ்ந்தது, உயர்ந்ததும் சேர்ந்தவனே இறைவன். இரண்டையும் ஒன்று சேர்ப்பவனே இறைவன். அவற்றை அவன் இணைக்கின்றான். இறைவன் ஏற்றதை நாம் ஏன் மறுக்க வேண்டும்? நாமும்அதை ஏற்கவேண்டும். அவன் பூரணன். அவனைப் போல் நாமுமிருக்க வேண்டும். நாமும் பூரணமாக வேண்டும். அது முழுமையான சித்தி.

அகந்தை தற்காலிகமானது. அகந்தைக்குரியவை மரணமும், துன்பமும். அவித்யா மூலம் நாம் அகந்தையைக் கடக்கவேண்டும். அவித்யா என்பது உலகம். ஞானம் அஞ்ஞானத்தை ஏற்கலாம். அது பூரண ஒருமைப்பாடாகும். உலகிலும் அவ்வொருமையை உணரலாம்.அது அமர வாழ்வு தரும். அதுவே பேரின்பம். அது முழுமையான ஆனந்தம். மரணம் என்ற பிறவியின் பிடியிலுள்ளோம். உலகைக் கடந்த இறைவனை நாம் அடைய முடியும். அது மோட்சம். அதுவே மரபு. அதற்குப் பதிலாக இறைவனை வாழ்வில் நாம் ஏற்கலாம். அதற்கு உலகை இறைவனாகக் காணவேண்டும். அதாவது வாழ்வு தெய்வமாகும். வாழ்வு மரணத்தின் பிடியிலுள்ளது. மரணத்தை அமரவாழ்வாக நாம் மாற்றுகிறோம். மனித குலத்தின் ஒளிமயமாகிறோம். அது நாம் இறைவனை அறிந்து ஞானமாக வெளிப்படுத்துவதாகும்.

*********



book | by Dr. Radut