Skip to Content

02. Reality Omnipresent - 2

IV. Reality Omnipresent

 

 

Page No:25
Para No:1
 
We admit the claim of Spirit and Matter
ஆத்மாவுக்கும், ஜடத்திற்குமுள்ள உரிமைகளை நாம் ஏற்கிறோம்.
The Spirit is pure.
ஆத்மா தூய்மையானது.
It is absolutely free.
அதன் சுதந்திரம் பூரணமானது.
Spirit manifests in us.
ஆத்மா நம்மில் வெளிப்படுகிறது.
Matter is our mould.
ஜடம் என்ற அச்சில் நாம் வார்க்கப்படுகிறோம்.
It is the condition of our manifestation.
நம் சிருஷ்டிக்குரிய நிபந்தனை அது.
We admit their claims.
இரண்டின் உரிமையையும் நாம் அனுமதிக்கின்றோம்.
Each has its portion in Life.
அவற்றிற்கு வாழ்வில் உரிய பங்குண்டு.
Each justifies in Thought.
சிந்தனையால் அவை இரண்டும் சிறப்படையும்
There must be a reconciling truth.
இரண்டுக்கும் பொதுவான உண்மை ஒன்றிருக்க வேண்டும்.
No right of either must be taken away.
எதன் உரிமையையும் பறிப்பது சரியன்று.
They both err.
இரண்டும் தவறு செய்பவை.
Their exclusiveness exaggerates.
தீவிரமான அவர் வாதம் மிகைப்படுத்தும்.
They draw strength from that.
அதுவே அவர்கள் வலிமை.
Both have their sovereign truth.
இரண்டிற்கும் பவித்திரமான சத்தியமுண்டு.
We must find that truth.
அதை நாம் காண வேண்டும்.
Extreme statements powerfully appeal.
தீவிரமாக அடித்துப் பேசினால் அனைவரும் கேட்கிறார்கள்.
They are no mere errors.
அவை முழுத் தவறில்லை.
Not even superstition or hallucination.
மூடநம்பிக்கை அல்லது பிரமை என்றும் சொல்ல முடியாது.
It is a sovereign fact disguised.
பவித்திரமான சத்தியம் புனை வேடம் தரிப்பது அது.
We must be loyal to that fact.
நாம் அந்த சத்தியத்தை ஏற்க வேண்டும்.
We cannot deny it or exclude it.
அதை மறுப்பதோ, விலக்குவதோ முறையன்று.
They will powerfully avenge if we do.
அப்படிச் செய்தால், அவை பழிவாங்கும்.
Many compromises are there between Spirit and Matter.
ஜடமும் ஆத்மாவும் இணையும் பல வழிகளுண்டு.
They lack finality.
அவை முடிவானவை அல்ல.
No satisfactory solution is there.
திருப்தியான முடிவு அதன் மூலம் கிடையாது.
The difficulty lies in ignoring them.
அவற்றைப் புறக்கணிப்பதால் சிரமம் எழுகிறது.
A compromise is a bargain.
பேரம் முழுப் பலன் தராது.
Two conflicting powers give and take.
இருவர் விட்டுக் கொடுக்க முயல்வது அம்முறை.
It is not reconciliation.
முழுத் திருப்தி அளிக்கும் முறையோ, முடிவோ, அதில்லை.
Mutual comprehension is possible.
ஒருவரை அடுத்தவர் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம்.
It leads to some sort of oneness.
அதன் மூலம் ஐக்கியம் ஏற்பட முடியும்.
It is true reconciliation.
அது திருப்தி அளிக்க வல்லது.
Unification reconciles.
ஐக்கியம் திருப்தி தரவல்லது.
Let us seek the utmost possible reconciliation.
முழு ஐக்கியத்தையும் முழுத் திருப்தியையும் நாம் நாடுவோம்.
Man has an inner life.
மனிதனுக்கு அகவாழ்வுண்டு.
He has an outer existence.
புறவாழ்வு அவனுக்குச் சொந்தம்.
We have to reconcile them on strong foundations.
பலமான அடிப்படையில் அவற்றை நாம் இணைக்க வேண்டும்.
Unification will help us do that.
ஐக்கியம் அதை அடையும்.
Para No:2
 
We saw that Spirit and Matter meet.
ஆத்மாவும் ஜடமும் சந்திப்பதைக் கண்டோம்.
They meet at the plane of cosmic consciousness.
அவை பிரபஞ்சத்தில் சந்திக்கின்றன.
Matter there, becomes real to the Spirit.
ஆத்மா அங்கு ஜடத்தின் சத்தியத்தை அறிகிறது.
Spirit, too, is real to Matter.
ஜடமும் ஆத்மாவை அறிய முடிகிறது.
Mind and Life are intermediaries there.
மனமும், வாழ்வும் இடைப்பட்டவை.
In egoistic life they are agents of separation.
அகந்தை வாழ்வில் மனமும் வாழ்வும் பிரிக்கும் கருவிகள்.
They raise a quarrel between positive and negative ideas.
இருமுனைகளுக்குள் ஒரு சண்டையை அவை எழுப்புகின்றன.
Both are of the same unknowable Reality.
இருமுனைகளும் ஒன்றின் பகுதியே.
There Mind is illuminated by a knowledge.
மனம் ஞானத்தால் பிரகாசிக்கிறது.
It sees the truth of Unity and Multiplicity.
ஏகன், அநேகன் ஆகிய இரண்டின் சத்தியத்தை மனம் உணர்கிறது.
It understands the formula of their interaction.
அவற்றின் உறவையும் புரிந்து கொள்ள முடிகிறது.
Its own discords are thus explained.
மனத்தின் பிணக்குகள் இப்பொழுது அதற்குப் புரியும்.
It is also reconciled by divine Harmony.
தெய்வீகச் சுமுகம் எழுந்து அவற்றைச் சேர்க்கின்றது.
Mind is satisfied there.
மனம் அங்கு திருப்தி அடைகிறது.
It agrees to unite God and Life.
இறைவனையும் வாழ்வையும் இணைக்க மனம் முயல்கிறது.
Matter has its own spiritual secrets.
ஆத்மாவின் இரகஸ்யங்கள் ஜடத்திலும் உள்ளன.
It is a figure and body of Spirit.
ஜடம் ஆத்மாவின் உடலும் உருவமுமாகும்.
It is a self-formative extension.
சுய ரூபம் வெளிப்பட்டதால் ஜடம் ஏற்பட்டது.
Mind’s thought can rise to realise the secrets.
எண்ணம் எழுந்து இரகஸ்யங்களை அறிய முடியும்.
Mind’s senses can become subtle.
மனத்தின் உணர்வுகள் சூட்சுமம் பெறலாம்.
To them Matter reveals itself.
அதன்பின் ஜடம் தன்னை வெளியிடும்.
Spirit is soul, truth, and essence of Matter.
ஆத்மா என்பது ஜீவன், சத்தியம், ஜடத்தின் கரு.
This the Spirit reveals.
இதை ஆத்மா வெளியிடுகிறது.
Both are divine, real, essentially one.
ஆத்மாவும், ஜடமும் ஒன்றே. அவை இறைவனின் உண்மை.
Both admit and confess it.
அவை சந்தித்து எண்ணத்தால் கலந்து கொள்கின்றன.
Mind and Life are figures of It.
மனமும் வாழ்வும் அதன் ரூபங்கள்.
They are the instruments of the Supreme Consciousness and Being.
பரம்பொருளின் கருவிகள் அவை.
It extends in Mind and Life.
அது மனம்வரை வருகிறது.
It houses Itself there.
மனத்துள் அவை குடி புகுகின்றன.
It unveils Itself to the multiple centres of consciousness.
எல்லா ஜீவிய மையங்களிலும் அவை எழுகின்றன.
Mind can be a pure mirror of Truth of Being.
மனம் சத்தியத்தைப் பிரதிபலிக்கும்.
That Truth can be expressed in symbols of universe.
சத்தியம் பிரபஞ்சத்தின் வெளி ரூபங்களாக வரமுடியும்.
It is mind’s self-fulfilment.
அதுவே மனம் பூர்த்தியாவதாகும்.
In the cosmic consciousness Mind attains to its self-fulfilment.
பிரபஞ்சத்தில் மனம் அப்பூர்த்தியைப் பெறுகிறது.
Life too has its self-fulfilment.
வாழ்வுக்கும் பூர்த்தியுண்டு.
Its energies can be lent to that purpose.
அதை அடைய வாழ்வு முனையலாம்.
Life can do so consciously.
விரும்பி தேடி அதை வாழ்வு நாடலாம்.
The Divine acquires new forms and activities in the universe.
பிரபஞ்சத்தில் இறைவனுக்குப் புதுத் தோற்றமும் உண்டு.
Life’s energies figure them out.
வாழ்வின் சக்தி அதை வடித்தெடுக்கும்
That self-figuration is life’s self-fulfilment.
வடிவமைப்பதே வாழ்வில் பூர்த்தியாகும்.
Page No:26
Para No:3
 
To convert the human soul into the divine is the great ideal.
மனித ஆத்மாவை இறைவனாக்குவதே இலட்சியம்.
All religions dream of it.
அது மதங்களின் இலட்சியம்.
That can be the aim of cosmic evolution.
பிரபஞ்ச இலட்சியமாகலாம் அது.
It will be the living sense and intelligible aim of Science.
விஞ்ஞானம் அதை வாழ்வாகவும் ஞானமாகவும் கொள்ளலாம்.
That is divine life for man on earth.
மனிதனுக்குப் பூவுலகில் அது தெய்வீக வாழ்வு.
We can aim at it and perceive it so.
அதை நாடி நாம் உணரமுடியும்.
Para No:4
 
How do we understand the silent Self?
மௌனப் பிரம்மத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?
It is active, pure, self-existent, self-enjoying.
தூய்மையாக, அசைவின்றி, ஆனந்தமாக, எதையும் நம்பாமலிருப்பது அது.
It was the justification of the ascetic.
சன்னியாசி அதனால்தான் உலகத்தைத் துறந்தான்.
Here too we must resort to harmony.
இங்கும் சுமுகத்தை நாட வேண்டும்.
That is the only illuminative truth.
அதுவே ஜோதிமயமான சத்தியம்.
The conflicting opposition will not help.
பிணக்கும், எதிர்ப்பும் உதவா.
The Brahman is silent.
பிரம்மம் மௌனமானது.
It is active.
சக்தி நிறைந்தது.
They are not different, opposite, or conflicting.
அவை மாறுபட்டவை அல்ல, எதிரானவை அல்ல.
It is not as if one affirms illusion.
ஒரு நிலை மாயையை ஆதரிப்பதாகவும், அடுத்தது மறுப்பதாகவுமில்லை.
Or the other denies the illusion.
They are one Brahman in two aspects.
அவை இரண்டும் ஒரே பிரம்மத்தின் இரு அம்சங்கள்.
They are positive and negative of the same Brahman.
ஒரே பிரம்மத்தின் இரு எதிர்முனைகள் அவை.
Each is necessary to the other.
ஒன்று அடுத்ததற்கு அவசியம்.
Out of this silence the Word comes out.
இந்த மௌனத்திலிருந்துதான் சப்தம் எழுந்தது.
That Word creates the world.
அச்சப்தம் உலகைச் சிருஷ்டித்தது.
The power of creation is in Silence.
சிருஷ்டிக்கும் திறன் மௌனத்திற்குண்டு.
The Word expresses that hidden power.
மறைந்துள்ள சக்தியைச் சப்தம் வெளிப்படுத்துகிறது.
Perfect freedom is one aspect.
பரிபூரணச் சுதந்திரம் ஓர் அம்சம்.
Omnipotence is another aspect.
எல்லாம் வல்லது அடுத்த அம்சம்.
Omnipotence supports the cosmic systems.
எல்லாம்வல்ல வலிமை பிரபஞ்சத்தைத் தாங்குகிறது.
There is eternal passivity.
அனாதியான அழியாத அசைவின்மை அது.
Power comes out of passivity.
அசைவின்மையிலிருந்து சக்தி எழுகிறது.
At the base is the being.
அடிப்படையானது புருஷன்.
It is immutable.
அது அழிவற்ற அசைவற்றது
It consents to the dynamic Nature.
பிரகிருதியின் சிருஷ்டியை அது அனுமதிக்கிறது.
Its support is impartial.
பாரபட்சமற்ற ஆதரவுண்டு.
Its immutability is powerful.
அசைவின்மை சக்தி வாய்ந்தது.
That power is limitless.
அச்சக்தி அளவற்றது/
Activity comes out of the becoming.
சிருஷ்டியிலிருந்து செயல் எழுகிறது.
They get their energies from this potential power.
உள்ளுறை திறனிலிருந்து சக்தி வருகிறது.
This power is used to maintain harmony.
சுமுகத்தை நிலை நாட்டுவது இதுவே.
It is also used for variation.
மாற்றத்திற்குதவுவதும் இதுவே.
Page No:27
Para No:5
 
Brahman can be found within by man.
மனிதனால் தன்னுள் பிரம்மத்தைக் காண முடியும்.
It is full of absolute calm and passivity.
பூரணச் சாந்தமும், அசைவின்மையுள்ளது அது.
That calm supports inexhaustible activity.
அளவிறந்த செயலுக்கு அதுவே ஆதாரம்.
It is full of divine tolerance.
இறைவனின் பொறுமையையுடையது அது.
It is also full of bliss.
இறைவனின் ஆனந்தத்தையுடையதும் அதுவே.
Finding Brahman inside makes Man perfect.
பிரம்மத்தைத் தன்னுள் கண்டவன் பூரணம் பெறுகிறான்.
Many possess that calm inside.
பலருக்கு அந்தச் சாந்தம் உண்டு.
They have seen great energy coming out of that calm.
பெரிய சக்தி அந்தச் சாந்தத்திலிருந்து எழுவதை அவர்கள் கண்டுள்ளனர்.
That energy issues out of that Clam and silence.
சாந்தமும், மௌனமும் சக்தியின் பிறப்பிடம்.
The work in the universe is done by that energy.
அந்தச் சக்தியே உலகத்தை இயக்குகிறது.
Silence rejects activity is a general idea.
மௌனத்திற்குச் செயல் விலக்கு என்பது நம் அபிப்பிராயம்.
It is not true.
அது உண்மையன்று.
It is the error of Mind.
மனம் செய்யும் தவறு அது.
Mind is limited.
மனம் சிறியது.
At one time Mind can see only one thing or a part.
ஒரு சமயத்தில் மனத்தால் ஒரு பகுதியை அல்லது ஒரு விஷயத்தை மட்டுமே காணமுடியும்.
Brahman has Silence and activity together.
மௌனமும், செயலும் சேர்ந்தது பிரம்மம்.
Mind can see either the Silence or activity.
மனத்தால் ஒன்றை மட்டுமே காண முடியும்.
Mind cannot see both together.
இரண்டையும் ஒரே சமயத்தில் மனத்தால் உணர முடியாது.
It is not in the capacity of mind.
மனத்தின் திறமையைக் கடந்தது அது.
Mind is created to cut out a part and see it.
ஓர் பகுதியைப் பிரித்துப் பார்க்க ஏற்பட்டது மனம்.
Silence does not reject the world.
மௌனம் உலகை விலக்கவில்லை.
Silence energises silently the work in the world.
மெளனமாக உலகைச் சக்தியுடன் இயக்குவது மௌனமாகும்.
Or we can say Silence supports both.
மௌனம் இரண்டையும் – மௌனம், செயல் – தாங்குகிறது எனலாம்.
It helps the soul to be free.
மௌனம் ஆத்ம சுதந்திரம் அளிக்கிறது.
It impartially supports work as well as calm.
செயலையும், அமைதியையும் பாரபட்சமின்றி இயக்குவது மௌனம்.
Silence is capable of supporting work while it is calm.
தான் மௌனமாக இருந்து வேலையை நடத்த உதவ மௌனத்தால் முடியும்.
Para No:6
 
There is the Non-Being, the absolute withdrawal.
நிர்வாணம் என்பது உலகை விட்டு நீங்குவதாகும்.
As the withdrawal is complete, nothing will be left out.
பூரணமாக நீங்குவதால், மீதி என்பதில்லை.
How are we to understand it?
எப்படி நாம் இதைப் புரிந்துகொள்வது?
The Scripture says Being is born out of Non-Being.
நிர்வாணத்திலிருந்து புருஷன் பிறப்பதாக உபநிஷதம் கூறுகிறது.
So, it must go back to Non-Being.
அப்படியானால் மீண்டும் புருஷன் நிர்வாணத்தில் முடிய வேண்டும்.
We believe Existence permits all activities.
சத்தியம் செயலுக்கு ஆதாரம்.
It permits possibilities, realisations, etc.
சித்தி பெறுவதும், முயல்வதும் சத்தியத்தால்தான்.
So, Non-Existence, Non-Being must reject all.
எனவே, அசத், நிர்வாணம் உலகை விலக்க வேண்டும்.
Then Nihil of Buddhism will be right.
புத்தரின் சூன்யம் சரி என்றாகும்.
We say ego is created by the mind.
மனம் அகந்தையை உற்பத்தி செய்தது.
Then self too is ego’s creation.
அப்படியானால் புருஷனும் மனத்தால் ஏற்பட்டவனே.
Maybe it was created out of mind’s idea.
இல்லை எனில் மனத்தின் எண்ணத்தால் அவன் சிருஷ்டிக்கப்பட்டான்.
Its creator is illusory consciousness.
மாயை அதை உற்பத்தி செய்தது.
Para No:7
 
This is to be misled by words.
இவை சொற்களின் ஜாலம்.
Our mentality is fond of distinctions.
பிரித்துப் பிரித்துப் பார்ப்பது நம் வழக்கம்.
It accepts opposites.
மனம் முரண்பாட்டை ஏற்கிறது.
Mind takes one extreme as  a whole.
ஒரு முனையை முழுமையாகக் கருதுவது மனத்தின் பாங்கு.
Mind does it to our supramental experiences, too.
ஞான மார்க்கத்திலும் மனம் அதையே செய்கிறது.
Mind does not tolerate distinctions.
பிரித்துப் பார்ப்பதை மனம் ஏற்பதில்லை.
Non-Being is only a word.
நிர்வாணம் என்பது வெறுஞ் சொல்.
Let us examine it closely.
இதை ஆழ்ந்து ஆராய்வோம்.
The infinite Self is explained as an idea.
கடவுள் என்பதைக் கருத்து என்கிறார்கள்.
Non-existence, too, is a similar idea.
எனவே, நிர்வாணம் என்பதும் ஒரு கருத்து.
So, both are ideas of Mind.
இரண்டும் எண்ணங்களே.
What does this analysis mean?
இந்த ஆராய்ச்சிக்கு என்ன அர்த்தம்?
We are in the universe, as part of it.
நாம் உலகில், அதன் பகுதியாக இருக்கிறோம்.
While here, we have subtle experiences of being.
உலகிலுள்ளபொழுது சூட்சுமமாகப் புருஷனை அறிகிறோம்.
We can make it more and more abstract.
அதைத் தத்துவமாகவும் பேசலாம்.
Our conceptions can understand them.
மனம் அதைக் கருத்தாகவும் கருதலாம்.
Thus we can push upto a point.
ஓரளவுக்கு இதைத் தொடர்ந்து செய்ய முடியும்.
There is something beyond that last point.
முடிவுக்குப் பின் ஒன்றுளது.
We call that Nothing, Non-Existence, Non-Being.
அதைச் சூன்யம், அசத், நிர்வாணம் என்கிறோம்.
The Being is a positive idea.
புருஷன் என்பதை அறிய முடியும்.
The Non-Being is beyond that.
நிர்வாணம் அதைக் கடந்தது.
We  need to overpass what we know.
நம் அறிவைக் கடந்து செல்ல வேண்டும்.
We must also cross what we are.
நம் நிலையையும் நாம் கடக்க வேண்டும்.
To overpass that we create this Nothing.
அப்படிக் கடக்க சூன்யம் என்பதை ஏற்படுத்துகிறோம்.
Let us see from other sides.
மறுபுறத்திலிருந்து பார்ப்போம்.
What is this Nihil of philosophers.
தத்துவம் கூறும் சூன்யம் என்ன?
It is a Zero.
அது பூஜ்யம்.
But it is All.
ஆனால் அனைத்தும் அதுவே.
It is a Zero that is All.
எல்லாவற்றையும் தன்னுட்கொண்ட சூன்யம் அது.
It is an indefinable Infinite.
விவரிக்கவொண்ணாத அனந்தம் அது.
Mind sees that as a blank.
மனம் அதைச் சூன்யம், வெற்றிடம், காலியாகக் காண்கிறது.
Mind only understands clearly constructed ideas.
விவரமான கருத்தை மட்டுமே மனம் அறியும்.
Mind cannot grasp this because there is no construction.
இங்கு பூஜ்யத்தில் விவரமில்லை என்பதால் மனத்தால் இதை அறிய முடியாது.
Because Mind cannot see, we cannot say it is a zero.
மனத்திற்குப் புலப்படவில்லை என்பதால் நாம் அதைப் பூஜ்யம் என்று கூற முடியாது.
Really, it is true Existence.
உண்மையில் அதுவே சத்தியம், பிரம்மம், புருஷன் எனப்படுவது.
 
Page No:28
Para No:8
 
We say Being is born out of Non-Being.
புருஷன் சூன்யத்திலிருந்து பிறந்தான் என்கிறோம்.
What does it mean?
இதன் பொருளென்ன?
We are in the plane of Time.
நாம் காலத்தினுள் செயல்படுகிறோம்.
Being and Non-Being are outside Time.
புருஷனும், சூன்யமும் காலத்தைக் கடந்தவை.
Man in Time talking about Being outside Time is meaningless.
காலத்திற்குக் கட்டுப்பட்ட மனிதன், காலத்தைக் கடந்த புருஷனைப் பற்றிப் பேசுவது சரியில்லை.
Can we think of a fixed time for the birth of Being?
புருஷன் பிறந்த நாளைக் குறிப்பிட முடியுமா?
Or a time for its disappearance?
அவன் மறைவதை நிர்ணயிக்க முடியுமா?
We cannot.
முடியாது.
Sat and Asat are Being and Non-Being.
சத், அசத் என்பது, புருஷன், சூன்யமாகும்.
They must co-exist is the truth.
அவை இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே உண்மை.
They do not mingle, but permit each other.
அவை கலப்பதில்லை, ஆனால் அடுத்ததை அனுமதிக்கும்.
Can we tell Being, it does not exist?
புருஷனை, “நீ இருப்பது உண்மையில்லை” எனக் கூற முடியுமா?
We want a solution to explain all things.
அனைத்தையும் ஏற்கும் முடிவே நாம் தேடுவது.
This is a negation of all experience.
இவர்கள் கூறுவது எல்லாவற்றையும் இல்லை என்பதாகும்.
Para No:9
 
What is Pure Being?
தூய்மையான புருஷன் என்பதென்ன?
The Unknowable affirms Itself as Being.
பிரம்மம் தன்னைப் புருஷனாக உருவாக்குகின்றது.
It is the basis of cosmic existence.
அதுவே பிரபஞ்சத்தின் அடிப்படை.
That is not All.
இது மட்டுமன்று.
There is another affirmation opposite to it.
இதற்கெதிரானதொன்றுள்ளது.
It is freedom from cosmic existence.
பிரபஞ்ச வாழ்க்கையிலிருந்து விலகுவது அது.
Consciousness formulates positively.
ஜீவியம் உருவம் பெறுகிறது.
Even abstract ideas it formulates.
கருத்துக்குப் புலப்படாதவையும் உருவம் பெறுகின்றன.
Even ideas beyond, it formulates.
கடந்த நிலையிலுள்ள கருத்துக்கும் உருவம் உண்டு.
Beyond these formulations is freedom from formulations.
உருவத்தைக் கடந்து, அதனின்று விடுதலையுள்ளது.
That we call Non-Being.
அதைச் சூன்யம் என்கிறோம்.
Non-Being does not deny expression of Itself.
சூன்யம் தன்னை வெளிப்படுத்த தடை செய்யவில்லை.
It denies the limitation from expression.
அங்குள்ள தடையை அது ஏற்பதில்லை.
The Non-Being permits Being as Silence permits activity.
மௌனம் செயலை ஆதரிப்பது போல் உருவம் புருஷனை ஆதரிக்கிறது.
This is not to destroy the opposite.
எதிரானதை அழிக்கும் முறையன்று இது.
Here the opposites become complementary.
எதிரானது, சாதகமாக மாறும் முறை இது.
Here one is aware of Self-being and Unknowable.
இம்முறையில் புருஷனும், பிரம்மமும் மனத்தில் தட்டுப்படுவார்கள்.
The awareness is simultaneous.
இரண்டையும் ஒன்றாக உணரும் நிலை இது.
The awakened Man can be aware of both.
விழிப்புற்ற மனிதன் இரண்டையும் உணர்வான்.
Thus Buddha attained Nirvana.
புத்தர் நிர்வாணம் எய்திய வகை இது.
Still, in his Nirvana, he was powerful.
நிர்வாணத்திலும் அவர் வலிமை பெற்றிருந்தார்.
His inner consciousness was impersonal.
அவர் உள்ளுறை ஜீவியம் உலகத்திற்குரியது.
He is the most powerful personality the world knows.
இதுவரை அவர் போன்ற ஒருவர் அவதரிக்கவில்லை.
He produced powerful results on earth.
உலகில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர் புத்தர்.
His power came from the inner Silence.
மனத்தின் மௌனம் அவருக்குச் சக்தியளித்தது.
Page No:29
Para No:10
 
The words we use are misleading.
நம் சொற்கள் தெளிவற்றவை.
Each word asserts its own meaning.
ஒவ்வொரு சொல்லும் தன்னையே விளக்க வல்லவை.
This is self-assertion.
தன்னை வலியுறுத்தும் முறை இது.
It becomes violent.
இதனால் சொல் கடுமை பெறும்.
Each word is distinct.
ஒவ்வொரு சொல்லுக்கும் சிறப்புண்டு.
It is a misleading distinction.
சிறப்பம்சங்கள் தெளிவைக் குறைக்கும்.
Our minds are narrow.
நம் மனம் குறுகியது.
 
அதன் அனுபவம் சிறியது.
Mind concentrates on one aspect of the Unknowable.
பிரம்மத்தின் ஓர் அம்சத்தை மனம் கருதும் தன்மையுடையது.
It denies the other aspects.
மற்ற அம்சங்களை மறுக்கும்.
It decries them.
அவ்வம்சங்களை மனம் குறைத்துப் பேசும்.
We extend this limitation to the Brahman.
நம் குறையை நாம் பிரம்மத்திற்கு அளிக்கிறோம்.
We understand our mistake.
குறையை நாம் உணர்கிறோம்.
We know something of the Absolute.
நாம் பிரம்மத்தை ஓரளவு அறிவோம்.
We make it rigid.
அறிந்த அளவில் அதை இறுகப் பிடித்துக் கொள்கிறோம்
We understand the Absolute as we understand other things.
மற்றதைப் புரிந்து கொள்வதைப்போல் நாம் பிரம்மத்தைப் புரிந்து கொள்கிறோம்.
Our opinions are egoistic.
நம் அபிப்பிராயங்கள் அகந்தையினுடையவை.
Our experiences are partial.
நம் அனுபவங்கள் முழுமையானவையில்லை.
We assert ours against others.
மற்றவர் அனுபவங்களும் நம் அனுபவங்களும் முரணானவை என நாம் கருதுகிறோம்.
We see we are different from others.
பிறரிடமிருந்து நாம் வேறுபட்டதை உணருகிறோம்.
We affirm the One as we assert ourselves.
நம்மை வலியுறுத்துவதுபோல் நாம் இறைவனையும் வலியுறுத்துகிறோம்.
It is wiser to wait, to learn, to grow.
பொறுத்திருந்து, கற்றறிந்து, வளர்வது விவேகம்.
We seek self-perfection.
நாம் ஆத்ம பூரணத்தை நாடுகிறோம்.
We must speak of it.
நாம் அதை விளக்குதல் அவசியம்.
No human speech can express it.
மனிதனால் விவரிக்கவொண்ணாதது அது.
We look for the widest experience.
அளவைக் கடந்த அனுபவம் நாம் நாடுவது.
We need the most flexible understanding.
எதையும் தன்னுட்கொள்ளும் ஞானம் தேவை.
We need the most catholic affirmation.
பிரபஞ்சத்தைத் தழுவும் கொள்கை வேண்டும்.
அந்த அடிப்படையில் செயல்படுவது நம் இலட்சியம்.
We want the largest harmony.
உயர்ந்த சுமுகம் தேவை.
It would be the most comprehensive one.
எல்லாவற்றையும் ஏற்கும் நிலை அது.
Para No:11
 
There is a high state.
உன்னதமான நிலைமையொன்றுண்டு.
Relative existence dissolves there.
அங்கு சிருஷ்டி கரைகிறது.
Even Self is not sufficient there.
புருஷனும் அங்குப் பெரியனல்லன்.
We can enter into that state.
நாம் அந்நிலையை எய்தலாம்.
We recognise we can.
நம்மால் முடியும் என்று தெரிகிறது.
We know the Silence.
மௌனத்தை நாம் அறிவோம்.
There is another Silence beyond it.
அதைக் கடந்து வேறோர் மௌனம் உண்டு.
It is possible to reach there.
அதை அடைய முடியும்.
Still this is not the ultimate.
எனினும் அதுவே முடிவன்று.
It is not the single all-excluding truth.
முழுமுதற் கடவுள் அது அன்று.
This is Nirvana.
இது நிர்வாணம்.
This is self-extinction.
ஆத்மாவுக்கு முழு அமைதியைத் தரவல்லது.
It gives absolute peace to the soul.
தன்னை நிர்மூலமாக்கும் நிலை அது.
Freedom too is there.
சுதந்திரம் அங்குண்டு.
It permits an action outside.
புறச் செயலை அச்சுதந்திரமும் அனுமதிக்கும்.
That action must be desireless.
அது பற்றற்ற செயலாகும்.
That Calm within is void Calm.
அவ்வமைதி சூன்யத்தின் அமைதியாகும்.
It is impersonal.
அது பிரபஞ்சத்திற்குரியது.
It is entirely motionless.
அசைவற்றது.
Outwardly works are there.
வேலை வெளியில் நடக்கிறது.
They are works of Love, Truth, Righteousness.
அன்பு, சத்தியம், நியாயம் தம் வேலைகளைச் செய்கின்றன.
This is the gist of Buddha’s teaching.
புத்தர் உபதேசம் அது.
This state is superior to ego.
அகந்தையைத் தாண்டிய நிலை அது.
Also superior to the chain of personal workings.
கர்மத்தைக் கடந்ததாகும்.
It is not a petty ideal.
சிறு இலட்சியமன்று அது.
That seeks escape from suffering and death and birth.
பிறப்பறுப்பது இதன் இலட்சியம்.
The perfect Man combines inner silence and outer activity.
உள்ளே அமைதியும், வெளியே செயலும் பூரணம் பெறும்.
The conscious soul also is like that.
ஆத்மாவும் அத்தகையதே.
He seeks to combine Being and Non-Being.
ஆத்மாவையும், சூன்யத்தையும் இணைக்கு வழி இது.
Absolute freedom of Non-Being combines with activity.
நிர்வாணச் சுதந்திரமும், வாழ்வும் கலந்த நிலை அதுவாகும்.
This state reproduces the divine miracle.
ஆண்டவனின் அற்புதம் அது.
It is the eternal miracle of divine Existence.
தெய்வீகச் சத்தியத்தின் நிரந்தர அற்புதமாகும்.
Yet it is always beyond it.
எனினும், அது, இதையும் கடந்தது.
Also, it is beyond itself.
அது, தன்னையே கடந்ததாகும்.
It has its opposite existence.
இவற்றிற்கு எதிரானவையுண்டு,
It is concentration on Non-existence.
நிர்வாணத்தை முக்கியமாகக் கருதுவது அது.
It results in oblivion.
அனைத்தும் அழிந்து மறந்த நிலை.
One withdraws from cosmic activity.
சிருஷ்டியை கடந்து விடுகிறோம்.
The Eternal Being is full of that activity.
புருஷனுக்குச் சிருஷ்டி பூரணமாக உரியது.
Page No:30
Para No:12
 
Earlier we reconciled Spirit and Matter.
ஜடத்தையும் ஆன்மாவையும் முன் இணைத்தோம்.
It was in cosmic consciousness.
பிரபஞ்சத்தில் அதைச் சாதித்தோம்.
Now we are in a higher state.
இது உயர்ந்த நிலை.
This is transcendent consciousness.
இது கடந்த நிலை.
The above is a reconciliation here.
மீண்டும் அவற்றை இங்கு இணைக்கிறோம்.
Thus we overcome all negation.
இல்லை என்பதை இல்லை என்றாக்கினோம்.
That final assertion is a negation.
முடிவானதும் இல்லை என்பதே.
All affirmations are assertions in the Unknowable.
உண்டு என்பவை பிரம்மத்திற்குரியவை.
They assert status or activity in the Unknowable.
பிரம்மத்தின் நிலையும் செயலும் அவை.
There are other corresponding assertions.
மற்றவை பூரணமாக உலகத்தைத் தழுவியவை.
It is freedom from status and activity.
நிலையினின்றும், செயலினின்றும் விடுபட்ட சுதந்திரம்.
The Unknowable is Supreme, wonderful.
பிரம்மம் முடிவானது, அற்புதமானது.
It is ineffable.
சொல்லைக் கடந்தது.
It formulates itself to our consciousness.
நமக்குரியதை வழங்கும் தன்மையுடையது.
It escapes after that.
பின்னர் பிரம்மம் மறைகிறது.
A magician leads to falsehood.
மந்திரக்காரன் பொய்.
A bad spirit leads to final negation.
ஆவி முடிவாக இல்லை என்பது.
The Unknowable is not like that.
பிரம்மம் அதுபோலில்லை.
It is the Wise beyond wisdom.
ஞானத்தைக் கடந்த விவேகம்.
It leads us to greater reality.
பெருஞ் சத்தியம் அதன் பரிசு.
Finally we reach the profoundest reality.
முடிவாகப் பிரம்மாண்டமான சத்தியத்தை அடைகிறோம்.
Reality is Omnipresent.
பரம்பொருள் எங்கும் நிறைவது.
It is Brahman.
அது பிரம்மம்.
It does not create illusion everywhere.
மாயையை அது உற்பத்திச் செய்வதில்லை.
Para No:13
 
This is a positive basis for our harmony.
நம் சுமுகத்தின் அடிப்படை இது.
Harmony can only be on positive basis.
சுமுகம் ஏற்புடையதாகவே இருக்கும்.
There are various formulations of the Unknowable.
பிரம்மத்தின் உருவங்கள் ஏராளம்.
Each of them represents a truth.
ஒவ்வொன்றிற்கும் உரிய சத்தியம் உண்டு.
It is beyond conception.
கருத்தைக் கடந்தது.
We cannot understand them separately.
பிரித்து அவற்றை உணர முடியாது.
We must understand them in relation to each other.
ஒன்றைக் கொண்டு அறிய வேண்டும்.
Let us know their effect upon life.
 
We cannot take them in isolation.
தனித்தனியே புரிந்து கொள்ள முடியாது.
It cannot go against other affirmations.
எதையும் அது மறுக்காது.
Let us admit that all is one Brahman.
சர்வம் பிரம்மம் என நாம் அறிய வேண்டும்.
Let us not cut it into two halves.
பகுதியாகப் பிரித்தல் கூடாது.
These halves are opposed to each other.
பகுதிகள் எதிராகும்.
Eternal Truth is against eternal falsehood.
சத்தியம் பொய்மைக்கு எதிரி.
Brahman is opposed to not-Brahman.
பிரம்மம் நிர்வாணத்திற்கு மாற்று.
Self is set against not-self.
புருஷனையும் மாயையையும் எதிராகக் கொள்கிறார்கள்.
Real Self and unreal Maya are another pair.
சத்திய புருஷனும், மாயையும் அடுத்த இரட்டை.
True Monism accepts both.
அத்வைதம் இரண்டையும் ஏற்கும்.
It is true Adwaita.
அதுவே உயர்ந்த அத்துவைதம்.
Self alone exists, is a belief.
ஆத்மா மட்டும் உண்மை என்பது நம்பிக்கை.
If it is true, then all is Self.
அப்படியானால் அத்தனையும் ஆத்மா.
This Self is called God.
ஆத்மாவைக் கடவுள் என்கிறோம்.
It is also called Brahman.
அதைப் பிரம்மம் என்றும் கூறுகிறோம்.
If so, it is not helpless.
அதற்கு இயலாமையில்லை.
Its power is not limited.
அதன் சக்திக்கு அளவில்லை.
Its personality is not limited.
அதன் செயலாற்றும் திறனும் அளவற்றது.
It is self-conscient.
அது தன்னை அறிய வல்லது.
It is All.
அதுவே சர்வமும்.
We must know why it manifested.
ஏன் அது சிருஷ்டித்தது என நாம் அறியவேண்டும்.
It must have a reason for it.
இதற்குக் காரணம் உண்டு,
It must be a good reason.
அது நல்ல காரணமாகும்.
We must discover that reason.
அது நம்மால் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
Let us assume it is powerful.
அது சக்தி வாய்ந்ததெனக் கொள்வோம்.
Let us imagine it is wise.
அது விவேகமானது என்போம்.
It must have a truth of being.
அதற்குச் சத்தியம் உண்டு,
Its manifestation must have that truth of being.
அதன் சிருஷ்டியில் அந்தச் சத்தியம் உண்டு.
In that manifestation, there is evil.
அச்சிருஷ்டியில் தீமையுமுண்டு,
There is disharmony there.
அங்குச் சுமுகமில்லை
We have to accept that.
அதை நாம் ஏற்கவேண்டும்.
We struggle against that evil and disharmony.
தீமையை எதிர்த்து நாம் போராடுகிறோம்.
We refuse to accept them as conquerers.
அவற்றின் வெற்றியை மனம் ஏற்காது.
Humanity is alive.
மனித குலம் ஜீவனுள்ளது.
It has its own deep instincts.
அதற்கு ஆழ்ந்த உணர்வுகளுண்டு.
It is wise.
அது ஞானமயமானது.
It seeks a goal.
இலட்சியத்தை நோக்கி அது போகிறது.
Surely, it is not seeking for any illusion.
நிச்சயமாக அது மாயையை நாடவில்லை.
Nor is it foolish, making a joke of itself.
தன்னைக் கேலிக் கூத்தாக்கும் அறிவீனம் அதற்கில்லை.
It seeks Good.
அது நல்லதை நாடுகிறது.
Not an ordinary good, but a victorious Good.
சாதாரண நல்லதன்று, வெற்றிக்குரிய நல்லதை அது நாடுகிறது.
Surely it does not seek evil.
நிச்சயமாக அது தீமைக்காக அலையவில்லை.
The world is full of all-creative evil.
உலகம் திறனுள்ள தீமையால் நிறைந்துள்ளது.
That evil is strong, cannot be conquered.
தீமை வலிமையானது, வெல்ல முடியாது.
Manifestation does NOT seek it.
சிருஷ்டி அதை நாடவேயில்லை.
It seeks victory.
சிருஷ்டிக்கு வெற்றி தேவை.
It seeks fulfilment.
அதற்குப் பூரணம் தேவை.
At least ultimately it must reach there.
முடிவாகப் பூரணத்தை அது அடைய வேண்டும்.
It cannot accept disappointment.
ஏமாற்றத்தை அது ஏற்காது.
Its soul would not recoil from its adventures.
ஆபத்து நிறைந்த அற்புதத்தைக் கண்டு ஆத்மா விலகாது.
Page No:31
                    Para No:14
 
We call Brahman the sole Entity.
பிரம்மத்தையே முடிவானதென்கிறோம்.
If so, there is nothing outside it.
அதற்கு அப்பால் எதுவும் இல்லை.
There exists nothing other than Itself.
அதைத் தவிர வேறெதுவுமில்லை.
So, nothing outside can compel it.
வெளியிலுள்ளது பிரம்மத்தை வலியுறுத்த முடியாது.
It could not be compelled by anything else.
வேறெதுவும் பிரம்மத்தைக் கட்டுப்படுத்தாது.
No part of it can be stronger than It.
அதன் பகுதி எதுவும் அதை விட வலிமையானதன்று.
Nor could that be hostile to the whole.
பகுதி முழுமையை அழிக்க முடியாது.
There is no question of unwilling submission by It.
இஷ்டமின்றி பிரம்மம் ஏற்பது என்பது இல்லை.
Such an argument would take us back.
இந்த வாதம் பிற்போக்கு வாதம்.
An All and something other than It, is a contradiction.
சர்வம் அதுவே என்ற பின், மற்றொன்று என்பது முரணானது.
Now, we will bring that contradiction back.
இது வழியாகப் போன முரண்பாடு திரும்பவரும்.
There is one more argument.
மேலும் ஒரு வாதமுண்டு.
Self is absolutely impartial.
ஆத்மா பாரபட்சமற்றது.
It tolerates alike everything.
எல்லாவற்றையும் அது பொறுத்துக் கொள்கிறது.
It views with indifference all possibilities.
எது நடந்தாலும் அது பாராமுகமாக உள்ளது.
Yet, it is that which willed manifestation.
இருப்பினும், சிருஷ்டித்தது அதுவே.
It supports that manifestation too.
அந்தச் சிருஷ்டியைக் காப்பதும் அதுவே.
Even here, it cannot be other than that All.
இதுவும் வேறொன்றாக இருக்க முடியாது.
Brahman, we know, is indivisible.
பிரம்மம், முழுமையானது என்றறிவோம்.
Many things are willed to be.
பலவற்றைப் பிரம்மம் நினைக்கின்றது.
Ultimately, it is all willed by Brahman.
யார் நினைத்தாலும் முடிவாக அது பிரம்மத்தின் நினைவே.
Our consciousness is relative.
நம் ஜீவியம் முழுமையானதன்று.
It is alarmed by evil.
அது தீமையைக் கண்டு நடுங்குகிறது.
Ignorance and pain baffle our consciousness.
வழியும், அறியாமையும் ஜீவியத்திற்குப் புரியவில்லை.
We want to help Brahman to escape from that responsibility.
நாம் பிரம்மத்தை அதிலிருந்து விடுவிக்க முயல்கிறோம்.
We want to protect Brahman from its workings.
பிரம்மத்தை அதன் செயல்களினின்று காப்பாற்ற நாம் முனைகிறோம்.
Therefore we create an opposite principle.
எனவே எதிரான தத்துவத்தை நாடுகிறோம்.
We call it Maya, Mara, Devil, Evil.
அதை மாயை, மாறன், சாத்தான், தீமை என்கிறோம்.
The Truth is different.
சத்தியம் வேறு.
There is one Lord.
இருப்பது ஒரே கடவுள்.
He is the Self.
அது புருஷன்.
He is the One.
அவன் ஏகன்.
The Many are his different faces.
அநேகன், ஏகனின் அநேக முகங்கள்.
They are His becomings.
அவை அவன் சிருஷ்டி.
They are His representations.
அவர்கள் அவன் பிரதிநிதிகள்.
Page No:32
Para No:15
 
Others say the world is a dream.
மற்றவர்கள் உலகம் கனவு, மாயை என்கின்றனர்.
They call it a mistake.
சிருஷ்டியே தவறாக ஏற்பட்டது என்பது அவர்கள் கருத்து.
It is a dream.
அது ஒரு கனவு.
Who then originated this dream or mistake?
கனவு, தவறோ, அதை ஏற்படுத்தியது யார்?
Who supports it?
யார் அதைக் காப்பது?
Who entertained it?
அதற்கு இடம் கொடுத்து ஆதரித்தது எப்படி?
Where does this dream exist?
இக்கனவு எங்குள்ளது?
It exists In this Reality.
கனவு சத்தியத்தில் உறைகிறது.
By what stuff is this made?
இது எதனாலானது?
It is made of this Reality.
இது சத்தியத்தாலானது.
What is the base of this world?
இவ்வுலகின் அடிப்படை என்ன?
What is the material of this world?
எப்பொருளாலானது இவ்வுலகம்?
It is really Brahman.
உண்மையில் அது பிரம்மம்.
It is also the continent.
அதுவே உலகை தன்னுட் கொண்டது
We say the vessel is made of gold.
பாத்திரம் தங்கத்தாலானது என்கிறோம்.
We know gold is real.
தங்கம் உண்மை.
How then the vessel is not real?
தங்கம் உண்மையானால், பாத்திரம் உண்மையில்லையா?
Dreams, illusion, words are tricks of speech.
கனவு, மாயை, சப்தம் என்பவை சொல்லின் ஜாலங்கள்.
These are our habits.
இவை நம் பழக்கம்.
They DO represent a truth.
அவை சத்தியம்.
It is a great truth.
அது பெரிய சத்தியம்.
But they also misrepresent the truth.
அது சத்தியத்தை தவறாகவும் பிரதிபலிக்கும்.
We saw Non-Being.
அசத்தைப் பார்த்தோம்.
It is not a zero.
அது பூஜ்யமில்லை.
So is cosmic Dream.
அதே போல் பிரபஞ்சத்தின் கனவும் கனவில்லை.
It is not hallucination.
அது பிரமையில்லை.
It is not mind that created it.
மனம் அதை உற்பத்தி செய்யவில்லை.
Phenomenon is a form of Truth.
சிருஷ்டி சத்தியத்தின் ரூபம்.
It is not a ghost.
அது பேய் பிசாசு அன்று.
Para No:16
 
Our beginning is an Omnipresent Reality.
நாம் எங்கும் நிறை பரம்பொருளில் ஆரம்பித்தோம்.
Universe does not cancel this Reality.
பிரபஞ்சம் இப்பரம்பொருளை மறுக்கவில்லை.
Even Non-Being does not annul it.
அசத்தும் அப்படிச் சொல்லவில்லை.
Each is a state of this Reality.
பிரபஞ்சம், அசத் என்பவை எல்லாம் பரம்பொருளின் பல உருவங்கள்.
One is obverse affirmation.
ஒன்று நேரடியாக உள்ளதை ஏற்பது.
The other is reverse affirmation.
அடுத்தது மறுபுறம்.
Many have experienced this Reality.
இப்பரம்பொருளை அடைந்தவர் அநேகர்.
We know the highest of them.
அதன் உச்சகட்டத்தை நாம் அறிவோம்.
They are Consciousness, Being and Ananda.
அது சச்சிதானந்தம்.
It is there beyond the universe also.
பரம்பொருள் சிருஷ்டியைக் கடந்தும் உள்ளது.
There it is unknowable existence.
அங்கு அது அறிய முடியாததாக இருக்கிறது.
It is utter and ineffable Bliss.
விவரிக்கவொண்ணாத ஆனந்தமாக இருக்கிறது.
The dualities are to be explained.
உலகில் நல்லது, கெட்டது போன்றவற்றிற்கு விளக்கம் தேவை.
Now we explain by our sensations.
நாம் உணர்வால் அவற்றைப் புரிந்து கொள்கிறோம்.
Our conceptions are partial.
நம் எண்ணம் முழுமையானதன்று.
We let them explain it.
நம் எண்ணத்தால் அவற்றை விளக்குகிறோம்.
Instead we must use our liberated intelligence.
பதிலாகத் தூய ஞானத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
It can explain dualities.
அதனால் இரண்டையும் விளக்க முடியும்.
Thus it can be resolved.
அங்குச் சிக்கல் அவிழும்.
Such resolution will be into these higher terms.
உயர்ந்த முறையில் முடிச்சு அவிழும்.
The fact is the dualities are now real.
இன்று நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளதே.
Just now we must be satisfied by faith.
நாம் நம்பிக்கையைக் கைக்கொள்ள வேண்டும்.
It must be a higher faith.
அது உயர்ந்த நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
It must be widest and most patient.
விசாலமான, பொறுமையான நம்பிக்கை வேண்டும்.
It should affirm, not deny.
அதை ஏற்க வேண்டும், மறுக்கக் கூடாது.
God gave this creed to Man.
மனித இலட்சியமாகத் தெய்வம் தந்தது இது.
It is his support in his pilgrimage.
மனிதனுடைய யோகத்தில் இது ஊன்றுகோல்.
A stage will come.
ஒரு நேரம் வரும்.
Then faith will become knowledge.
அப்பொழுது நம்பிக்கை ஞானமாகும்.
Perfect experience and wisdom will be seen in God.
பூரண ஞானமும், தெளிவான அனுபவமும் கடவுளில் காணலாம்.



book | by Dr. Radut