Skip to Content

02. The Refusal of the Ascetic - 2

 

III. The Two Negations
The Refusal of the Ascetic
 
எதிர் முனைகள்
சன்னியாசியின் துறவறம்
Page No:17
Para No:1
 
And still there is a beyond.
அதையும் கடந்த நிலையுண்டு
Cosmic consciousness has another side.
பிரபஞ்சத்திற்கு மறுபுறம் உண்டு.
 
நாம் அதை அடைய முடியும்.
It is (transcendent) beyond cosmos.
அது பிரபஞ்சத்தைக் கடந்தது.
It is beyond ego.
அகந்தையைக் கடந்தது.
The universe is petty before it.
அதன் முன் பிரபஞ்சம் அர்த்தமற்றதாகிறது.
It is an immeasurable background.
எல்லையற்ற பின்னணியாக அமைந்துள்ளது அது.
It supports the universal activity
பிரபஞ்சம் அதனால் நடக்கிறது.
Perhaps it only tolerates the universe.
பிரபஞ்சத்தை அது அனுமதிக்கிறது போலும்.
Its vastness embraces Life.
வாழ்வை அது அரவணைக்கிறது.
Or it rejects Life from Its infinitude.
அகண்டமான அதன் நிலை வாழ்வைப் பிரதிபலிக்கிறது.
Para No:2
 
The materialist says Matter is real.
ஜடமே நித்தியம் என்பது பகுத்தறிவு.
He insists on it.
அவன் அதை வலியுறுத்துகிறான்.
We can be sure only of the world.
நாமறிந்தது உலகம் மட்டுமே
The Beyond is wholly unknowable.
கடந்த நிலை நாம் அறிய முடியாதது.
The Beyond may exist.
 
It may be a dream, an abstraction of thought.
அது கனவாக இருக்கலாம், கற்பனையாகவுமிருக்கலாம்.
It is divorced from reality.
அது அநித்தியம்.
But the Sannyasin is enamoured of the Beyond.
கடந்ததை நாடுபவன் சன்னியாசி.
He justifies his experience.
அவன் அனுபவம் அவனுக்குண்மை.
For him pure Spirit is the reality.
ஆன்மிக உண்மையே அவனறிந்த உண்மை.
It is free from change, birth, death.
பிறப்பு, இறப்பைக் கடந்தது அது.
The world is a creation of mind and senses.
புலன்கள் புனைந்தது உலகம்.
It is a dream to him.
அதைக் கனவாகக் கருதுகிறான் சன்னியாசி.
It is an abstraction of the opposite type.
நம் கனவைப் போல் அதுவும் ஒரு கனவு.
That Mentality withdraws from eternal knowledge.
 
Para No.3
 
It is an extreme.
இது தீவிரவாதம்
Logic cannot meet it.
தர்க்கரீதியாக அறிய முடியாதது.
Experience will not validate it.
அனுபவத்தால் அறிய முடியாதது.
It cannot be justified.
இதை நிரூபிக்க முடியாது.
Ours is a world of Matter.
நாம் வாழும் உலகம் உணரக்கூடியது.
Physical senses affirm it.
புலன்கள் அதை அறியும்.
Physical senses do not see immaterial objects.
கண்ணுக்குத் தெரியாததைப் புலன்களால் அறிய முடியாது.
It is not organized as Matter.
ஜடம் போல் அவை புலன்களுக்குப் புலப்படவில்லை.
Senses tell us the suprasensible is unreal.
வானுலகமில்லை என புலன்கள் கூறுகின்றன.
This is an error of uncivilized people
நாகரீகம் அமையும் முன் மனிதன் செய்த தவறு இது.
It is an error of the senses.
புலன்களால் ஏற்பட்ட குறை இது.
We cannot bring it to philosophy.
தத்துவ விசாரணைக்கு இது பயன்படாது.
It will not stand scrutiny.
தத்துவத்தின் தரத்தை எட்ட முடியாத நிலைக்குரியது இது
Their understanding has no basis.
இதன் அறிவுக்கு அஸ்திவாரம் இல்லை.
Senses cannot perceive several things in our world.
நாம் வாழும் உலகில் புலன்களால் பலவற்றைக் காண முடியாது.
They limit the real to our perception.
கண்ணால் கண்டதே உண்மை என நினைக்கும் உலகம் நம்முடையது.
They deny the suprasensuous.
புலன்களைக் கடந்ததை இல்லை என்பார் இவர்.
They call it a hallucination.
கற்பனைகளைக் கடந்த பிரமை என்பார்கள் இதை.
Their method itself is a hallucination.
அவர்கள் முறையே அப்படிப்பட்டதென அவர் அறியார்.
It assumes the end result.
எதை நிரூபிக்க வேண்டுமோ, அதையே அடிப்படையாகக் கொண்ட முறை இது.
It is a circular argument.
தெரிந்ததையே புதியதென நிரூபிக்கும் முறை இவர்களுடையது.
It has no valid reasoning.
இது பகுத்தறிவாகாது.
Page No:18
Para No:4
 
There are suprasensible physical realities.
புலன்களுக்குப் புலப்படாத ஜடமான உண்மைகளுண்டு.
Evidence and experience prove it.
அனுபவமும், நிரூபணமும் குவிகின்றன.
There are also senses that are supraphysical.
புலன்களைக் கடந்ததை உணரும் சூட்சுமப் புலன்களும் உண்டு.
They perceive our world without sense organs.
கண்களை மூடி அவற்றால் பார்க்க முடியும்.
They put us in touch with other realities.
நமக்குப் புதியதை அவை உணர்த்தும்.
These realities belong to another world.
அவை வேறு உலகத்தைச் சார்ந்தவை.
Our world of suns and earths belongs to one type.
சூரிய சந்திரர் நம்முலகத்தைச் சேர்ந்தவர்.
They belong to another type and another organisation.
வேறு அமைப்பிலுள்ள வேறு உலகத்தைச் சார்ந்த உண்மைகள் அவை.
Para No:5
 
Since man began to think, it is true.
சிந்தனை எழுந்த நாளிலிருந்து உலகம் அறிவது இது.
Human experience confirms it.
மனித அனுபவம் கண்டது.
Man is preoccupied with the material world.
ஜடத்தையே முடிவாகக் காண்பவன் மனிதன்.
This is no longer necessary.
இனி இது அவசியம் இல்லை.
New scientific research justifies it.
புதிய விஞ்ஞானம் இதை ஏற்கிறது.
Such evidences increase.
புதிய நிரூபணம் எழுந்தவாறுள்ளது.
The most obvious is telepathy.
பிறர் மனத்தை அறிவது அவ்வகை.
There are brilliant closed minds.
கண்மூடியாகவுள்ள மேதைகளுண்டு.
They believe only in the past.
கடந்ததையே அவரறிவார்.
Their minds are acute, intelligent.
அறிவும், விவேகமும் உள்ள அறிஞர் அவர்.
But they believe only what they know.
தெரிந்ததை மட்டும் நம்பும் மனப்பான்மையுடையவரவர்.
There are others.
மற்றொரு வகையினருண்டு.
To them old is gold.
அவர்கட்கு பழையன எல்லாம் பொன்.
Dead knowledge of past centuries is sacred to them.
கடந்த கால ஜீவனற்ற ஞானம் அவர்கட்கு உயிரானது.
To repeat it is reason and enlightenment for them.
அதை விளங்காமல் பேசுவதே அவரறிந்த உயர்வு.
This is their confusion.
அவர் குழப்பத்திற்கு இதுவே அடிப்படை.
They alone can deny the newly emerging knowledge.
புதிய ஞானத்தை அப்படிப்பட்டவரே மறுக்க முடியும்.
Para No:6
 
Our knowledge of the supraphysical is only a glimpse.
புலன்களைக் கடந்த நம் அறிவு ஓரிழையே.
The methods of research have not been perfect.
அதன் ஆராய்ச்சி முறை அங்கீகரிக்கப்பட்டதில்லை.
They are not yet fully affirmed.
முடிவாக உலகம் அதை இன்னும் ஏற்கவில்லை.
They are crude and defective methods.
ஆரம்ப நிலைக்குரிய, குறையான முறைகள் அவை.
These subtle senses have been rediscovered.
சூட்சுமப் புலன்களை மீண்டும் கண்டுபிடித்தனர்.
These are found to be true.
அவை உண்மை எனக் கண்டனர்.
Therefore we cannot say they are false.
அதனால் அவற்றைப் பொய் எனக் கூற முடியாது.
They testify to supraphysical facts.
சூட்சும உலகம் உள்ளதென அவை கூறுகின்றன.
Supraphysical facts are beyond material world.
சூட்சுமம் ஜடத்தை தாண்டிய நிலையிலுள்ளது.
Evidences must be scrutinized.
நிரூபணத்தை ஆராய வேண்டும்.
We have to discover their laws and processes.
அவற்றின் சட்டத்தையும், வழியையும் காண வேண்டும்.
They must be rightly translated, controlled.
அவற்றைச் சரியாகப் புரிந்து, முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
We do so with the physical senses.
புலன்கள் சொல்வதை நாம் அதுபோல் ஆராய்கிறோம்.
We must also do so with supraphysical senses.
சூட்சுமப் புலன்களையும் ஆராய வேண்டும்.
There are great ranges of experiences.
பெரிய அளவில் அனுபவங்கள் பரந்து நிற்கின்றன.
Their objects are more subtle.
அவை சூட்சுமப் பொருள்களாலானவை.
They are perceived by more subtle instruments.
சூட்சுமக் கருவிகள் அவற்றைக் காண்கின்றன.
Physical matter is gross.
பொருள் என்பது ஜடம்.
In the end both laws look alike.
முடிவாக ஜடத்திற்கும் சூட்சுமத்திற்கும் சட்டம் ஒன்றே.
Both are valid.
இரண்டும் உண்மை.
The worlds beyond exist.
நம்மைத் தாண்டிய உலகங்களுண்டு.
They have their universal rhythms.
அவை பிரபஞ்சத்தின் அமைப்புக்குள் வரும்.
They have their grand line of formation.
அவற்றின் அமைப்பு உயர்ந்தவை.
Their energies are great.
அவற்றின் சக்தி அபரிமிதமானவை.
Their laws are self-existent.
சட்டம், அவற்றிற்கேயுரிய சட்டம்.
They are luminous.
அவை பிரகாசமானவை.
They are the means of knowledge.
இவை ஞானத்தின் கருவிகள்.
Our existence is here physical in the body.
நாம் ஜடமான உடலில் வாழ்கிறோம்.
Subtle planes influence the physical life.
சூட்சும உலகம் ஜடமான  உலகைத் தொடும்.
They have their means of manifestation here too.
ஜடத்தில் சூட்சுமம் செயல்படும் வழிவகையுண்டு.
They commission their messengers as witnesses.
தங்கள் தூதுவரைச் சாட்சியாக இங்கு அவை அனுப்புகின்றன.
Page No:19
Para No:7
 
Our worlds are only frames of experiences.
நம் அனுபவ உருவமே நம் உலகம்.
The senses are only their instruments.
புலன்கள் அதன் கருவிகள்.
Consciousness is a great fact.
ஜீவியம் பேருண்மை.
The universal witness has their world as field.
சாட்சிப் புருஷனுக்கு நம் பூவுலகம் ஓர் அரங்கம்.
The world appeals to that witness.
உலகம் புருஷனை நாடுகிறது.
The objects too appeal to the same witness.
உலகத்திலுள்ளவையும் புருஷனை நாடுகின்றன.
They get their reality from their reflection.
புருஷனின் தொடர்பே உலகத்திற்கும், அதன் பொருள்கட்கும் உயிரளிப்பவை.
We have only this evidence for physical as well as supraphysical realities.
ஜடத்திற்கும், சூட்சுமத்திற்கும் சாட்சியே மூலம்.
They say it is the nature of existence.
சிருஷ்டியின் அமைப்பே அது என்கிறார்கள்.
The universe has no reality of its own.
பிரபஞ்சத்திற்குச் சொந்தமான ஜீவனில்லை.
Existence is an objective activity.
நாமாக வாழ்வு என ஏற்பதே பிரபஞ்ச வாழ்வு.
Action cannot proceed without the witness.
சாட்சியின்றி உலகமில்லை.
Universe exists only in that observation.
நாம் உணர்வதாலும், அறிவதாலும் ஏற்பட்டதே பிரபஞ்சம்.
This argument has been replied earlier.
ஏற்கனவே இதற்குப் பதில் சொல்லி விட்டோம்.
Universe existed always.
பிரபஞ்சம் என்றுமே உள்ளது.
It was here before man and his mind.
மனிதன் பிறப்பதற்கு முன் உலகம் இருந்தது.
If man disappears, universe will continue.
மனிதன் அழிந்தாலும் பிரபஞ்சமிருக்கும்.
The rhythm of the sun is eternal.
சூரிய சந்திரர் அழியாதவரல்லவா?
Mind’s strivings are short lived.
மனத்தின் இலட்சியங்கள் காலத்தால் அழிபவை.
The difference is metaphysical
நாம் காணும் வேறுபாடு தத்துவமானது.
Still, it is practically important.
தத்துவம் எனினும், நடைமுறையில் முக்கியமானது.
It determines the whole outlook of man.
மனிதன் வாழ்வை நிர்ணயிப்பது அது.
It decides his goal, efforts and the field.
இலக்கு, முயற்சி, சந்தர்ப்பத்தை மனிதனுக்கு அது நிர்ணயிக்கிறது.
The question of reality of cosmic existence arises.
பிரபஞ்சம் உண்மையா என்ற கேள்வி எழுகிறது.
The value of human life also arises.
மனித வாழ்வுக்கு அர்த்தமுண்டா என்று தோன்றுகிறது.
Page No:20
Para No:8
 
We may push the materialist conclusion.
நாத்திகனின் ஆராய்ச்சியை நாம் தொடரலாம்.
Then we arrive at either of the two following possibilities.
கீழ்க்கண்ட இரண்டு முடிவில் ஒன்றுக்குக் கொண்டு விடும்.
Life is insignificant, unreal.
வாழ்வு அர்த்தமற்றது, மாயை.
Life is transient.
வாழ்வு அநித்யமானது.
Man can catch as much as he can of this temporary life.
அழியும் வாழ்வை முடிந்த வரை அனுபவிக்கலாம்.
Or man can offer a patient service to this life.
அல்லது அழியும் வாழ்வுக்குப் பொறுமையாகச் சேவை செய்யலாம்.
Man may know life is only nervous expression of Matter.
ஜடத்தின் உணர்ச்சி உருவமே வாழ்வு என மனிதன் அறியலாம்.
Still, he can either serve it or take from it.
இருந்தும் வாழ்வை அனுபவிக்கலாம், அல்லது அதற்குச் சேவை செய்யலாம்.
These are the two options before man and the race.
மனிதனுக்கும், மனித குலத்திற்கும் இந்த இரு சந்தர்ப்பங்களுண்டு.
Man works.
மனிதன் வேலை செய்கிறான்.
Or he is impelled to work which he enjoys.
அல்லது வேலை செய்ய அவன் தூண்டப்படுகிறான்.  அவன் மகிழ்வடைகிறான்.
Material energy impels us.
ஜடசக்தி அவனை உந்துகிறது.
Matter deludes us with a brief life.
அநித்யமான வாழ்வை ஜடம் நமக்களிக்கிறது.
It can offer a nobler delusion too.
இலட்சியக் கனவாகவும் வாழ்வை ஜடம் அளிக்கவல்லது.
Mind’s ethics like noble delusions.
தர்மத்தைப் போற்றும் மனம் இலட்சியக் கனவுகளை நாடும்.
Spiritual Monism arrives at Maya.
ஆன்மிக அத்துவைதம் மாயையில் முடிகிறது.
Materialism also arrives at the same conclusion.
நாத்திகமும் அதே முடிவுக்கு வருகிறது.
Maya means the world is and yet is not.
ஜடமான உலகம் இல்லை என்பதே மாயை.
World is there and is compelling, says Maya.
உலகம் உண்டு, அதிலிருந்து தப்ப முடியாது என்பது மாயை.
World can disappear because it is not true.
சாத்தியமானதன்று என்பதால் உலகம் மறையும் என்பதும் மாயை.
The works of the world soon disappear.
உலகத்தின் நடைமுறை எல்லாம் சீக்கிரம் அழிந்து மறையும்.
There is another end.
இதற்கு மறுபுறம் உண்டு.
We can stress the unreality of the world.
உலகம் மாயை என அடித்துச் சொல்லலாம்.
We arrive at similar conclusions by a different road.
வேறு பாதை வழி இதே முடிவுக்கு வரலாம்.
They are stronger conclusions.
இவை மறுக்க முடியாதவை.
Individual ego is a fiction, is not existent.
அகந்தை என்பது இல்லை, ஒரு பிரமை,கனவு.
It takes us to Non-Being, or Absolute.
இப்பாதை நம்மை நிர்வாணத்திற்கு அழைத்துச் செல்லும்.
அதைக் கடந்த பிரம்மத்திற்கும் அழைத்துச் செல்லக் கூடியது.
Para  No:9
 
The question cannot be answered by logic.
தர்க்கரீதியாகப் பதில் சொல்லக்கூடிய கேள்வியில்லை இது.
Our data is that of the physical life.
மனித வாழ்வைச் சார்ந்தவை நாம் சேகரித்துள்ள விஷயங்ககள்.
This data is incomplete.
இது முழுமையானதன்று.
That gap makes the argument incomplete.
குறையான விஷயம் தர்க்கத்தைக் குறைப்படுத்தும்.
We do not have any experience of cosmic mind.
நமக்குப் பிரபஞ்ச ஞானம் இல்லை.
Nor do we know supermind.
சத்திய ஜீவியமும் நாமறியாதது.
The supermind is not limited by the body.
சத்திய ஜீவியம் உடலால் கட்டுப்படுத்த முடியாதது.
We do not know of our self.
நம்மை நாம் அறியோம்.
We do not know whether it depends on the body.
பதில் நம் உடலைப் பொறுத்ததா எனவும் தெரியாது.
Whether it survives the body or goes beyond we do not know.
உடலுக்குப் பின் வாழ்வுண்டா எனத் தெரியவில்லை.
We can answer these questions in two ways.
இந்தக் கேள்விகளுக்கு இருவகைகளாகப் பதில் சொல்லலாம்.
By an extension of our consciousness we can do so.
நம் ஜீவியம் வளர்ந்தால் பதில் கிடைக்கும்.
By increasing the instruments of knowledge we can answer.
ஞானத்தின் கருவிகளை அதிகப்படுத்தியும் பதில் அறியலாம்.
This is an ancient quarrel.
நெடுங்காலமாக எழுப்பப்படும் கேள்வி இது.
Page No:21
Para No:10
 
What is extension of consciousness?
ஜீவியம் வளர்தல் என்றால் என்ன?
It must be an inner growth.
அது ஆன்மிக வளர்ச்சி.
The individual enlarging to cosmos is extension.
மனிதன் விரிந்து பிரபஞ்சத்தைத் தழுவுவது வளர்ச்சி.
The individual cannot be the Witness
சாட்சி என்பது தனி மனிதனில்லை.
The Witness must be the cosmic consciousness.           
 
பிரபஞ்சத்தின் ஆத்மாவே சாட்சியாகும்.
Cosmic Consciousness embraces the universe.
உலகத்தைத் தழுவுவது பிரபஞ்சத்தின் ஜீவியம்.
It appears as a hidden Intelligence.
மறைந்துள்ள ஞானமாக அது விளங்குகிறது.
The Intelligence is there in all works of the world.
உலகில் நடப்பவற்றிலெல்லாம் அந்த ஞானம் உள்ளது.
The world subsists eternally in its entire works.
உலகம் என்பது உலகத்து நடைமுறைச் செயல்கள்.
The Intelligence is born as knowledge or power.
அறிவாக அல்லது சக்தியாக ஞானம் வெளிப்படுகிறது.
The Witness is not the organised mind.
நாம் மனம் என அறிந்தது சாட்சியில்லை.
The Witness is the cosmic Life and its Lord.
பிரபஞ்சத்தின் வாழ்வும் அதன் புருஷனும் சாட்சியாவார்கள்.
It is calm and eternal.
அது சாந்திமயமான காலம் கடந்த ஒன்றாகும்.
It lives in the living earth.
பூமா தேவியின் உயிரில் அது உறைகிறது.
It also lives in the human body.
மனித உடலிலும் சாட்சி உறைகிறது.
Para No:11
 
Modern psychology slowly admits cosmic Consciousness.
பிரபஞ்சத்தின் ஜீவியத்தை விஞ்ஞானி ஏற்கிறான்.
The elastic instruments of knowledge are now admitted.
சூட்சுமப்புலன்களை இப்பொழுது ஏற்கிறார்கள்.
But they are classified as hallucination.
ஆனால் அவற்றைப் பிரமை என்ற தலைப்பில் ஏற்கிறார்கள்.
They still admit its value and power.
அதற்குரிய சக்தி மதிப்பை ஏற்கிறார்கள்.
East has always accepted cosmic Consciousness.
ஆசியாவில் என்றும் பிரபஞ்ச ஞானம் ஏற்கப்பட்டது.
To them it has always been a reality.
நமக்கு அது என்றுமே சாத்தியமானது.
It is the aim of our inner progress here.
நம் ஆன்மீக வளர்ச்சியின் குறிக்கோள் அது.
To overcome ego is the essence of this goal.
அகந்தையை கடப்பதேஇதன் சாரம்.
A self knowledge is  there in lifeless things.
உயிரற்ற பொருட்களிலும் ஆன்மீக ஞானம் உண்டு.
It is there in all Life.
வாழ்வனைத்திலும் அது உண்டு.
Identification with self knowledge is the essence.
ஆன்மீக ஞானத்தைப் பெறுவதே பிரபஞ்ச சாட்சியை அறிவதாகும்.
Para No:12
 
We can enter into that Consciousness.
பிரபஞ்ச ஜீவியத்துள் நாம் நுழையலாம்.
The Witness dwells upon it.
சாட்சி இருப்பது அங்கே தான்.
We too can dwell upon universal existence.
நாமும் பிரபஞ்ச வாழ்வில் பங்கு கொள்ளலாம்.
Then our teams of consciousness change.
நம் ஜீவியம் அதனால் மாறும்.
Our sensational experience changes.
நம் புலனுணர்வு மாறும்.
All Matter reveals to us as one existence.
ஜடப் பொருள்கள் எல்லாம் ஒரே பொருளாகத் தெரியும்.
Bodies show as Matter’s formation.
உடல்கள் எல்லாம் ஜடத்தால் உற்பத்தியானது தெரியும்.
Several bodies separate themselves.
பல்வேறு உடல்கள் பிரிந்து விடுகின்றன.
They establish communication between bodies.
ஓர் உடல் அடுத்ததுடன் தொடர்பு கொள்கிறது.
These bodies are multiple points of being.
ஆயிரம் உடல்கள் ஒரே ஜீவனின் பகுதிகள்.
We experience Mind similarly.
மனமும் அதே போல் தெரியும்
Life too reveals to us so.
வாழ்வையும் அதே போல் காணலாம்.
They are the same One in multiplicity.
ஏகன் அனேகனாக இருப்பதும் அதுவே.
They separate from the single centre.
ஒரே மையத்திலிருந்து பிரிந்த துண்டுகள் இவை.
Again they reunite by appropriate means.
பிரிந்தவை சேர, பொருத்தமான வழியை நாடுகின்றன.
If we choose, we can proceed further.
வேண்டுமானால், பிரபஞ்சத்தைக் கடந்து செல்லலாம்.
We have to pass through many stages.
பல நிலைகளைக் கடக்க வேண்டி வரும்.
These stages are linked together.
இந்நிலைகள் தொடர்புடையவை.
We become aware of a supermind.
முடிவாக சத்திய ஜீவியம் தென்படுகிறது.
Its operation is universal.
அதன் செயலும் வீச்சும் பிரபஞ்சம் முழுவதும் உண்டு.
It is the key to all lesser activities.
எல்லா நடைமுறைகளும் அதற்குட்பட்டவையே.
We do not become simply conscious.
பிரபஞ்சம் தெரிவது மட்டுமல்ல.
We are conscious in it.
நாமே அதாகலாம்.
We receive it in our sensation.
புலன்களால் அதை உணரலாம்.
We enter into it in awareness.
அதனுள்புகுந்து அதன் பகுதியாகலாம்..
In it we life fully.
அதனுள்  முழுவதும் நாம் வாழலாம்
Before we fully lived in the ego-sense.
இதற்குமுன் அகந்தையுடன் முழுவதும் வாழ்ந்தோம்.
 
அதேபோல் பிரபஞ்சத்துள் முழுவதும் இனி வாழலாம்.
We are in contact with other minds.
அடுத்தவர் மனம் தெரியும்.
We are in touch with other lives, other bodies.
பிறர் உணர்வும், உடல் உணர்வும் புரியும்..
We produce effects on our own being from others.
பிறரால் நாம் பாதிக்கப்படுவோம்.
We produce effects on others.
நம்மால் பிறர் பாதிக்கப்படுவார்கள்.
Not only on their minds, but on the world too.
பிறர் மனம் மட்டுமல்ல, உலக வாழ்வை நாம் எட்டித் தொடலாம்.
Our means are nearer to the Divine.
நாம் இறைவனுக்குரிய கருவிகளைப் பயன்படுத்தலாம்.
Page No:22
Para No:13
 
Man can have contact with it.
பிரபஞ்சத்துடன் மனிதன் தொடர்பு கொள்ளலாம்.
To him cosmic consciousness is real.
தொடர்பு கொண்டவனுக்கு அது உண்மை எனத் தெரியும்.
Man can live it.
மனிதன் பிரபஞ்சத்தில் வாழலாம்.
To him also it is more real that matter.
அங்கு வாழ்ந்தால் ஜடத்தைவிட அது தெளிவானதாகத் தெரியும்
Its effects are real.
அதன் பலன்கள் உண்மை.
Its works are real.
அதன் செயல்கள் உண்மை.
The world is its total expression.
உலகம் அதன் முழு வெளிப்பாடு.
Cosmic Consciousness is real to the world.
உலகத்திற்கு பிரபஞ்சம் உண்மை.
The world is real to the Cosmic Consciousness.
பிரபஞ்சத்திற்கு உலகம் உண்மை.
The world is not independent of it.
உலகம் பிரபஞ்சத்திலிருந்து பிரிந்து நிற்பதில்லை.
It is a higher experience.
அது உயர்ந்த அனுபவம்.
It is a less hampered experience.
அந்த அனுபவத்துள் தடை ஏதுமில்லை.
There, being and consciousness are not different.
புருஷனும், ஜீவியமும் அங்கு வேறில்லை.
All being is a supreme consciousness.
புருஷன் என்பது உயர்ந்த ஜீவியமே.
All consciousness is self-existence.
ஜீவியம் என்பது புருஷ சத்தியம்.
Self-existence is eternal in itself.
சத்தியம் நிரந்தரமானது.
It is also real in its works.
சத்தியத்தின் செயல் உண்மையானது.
It is neither a dream nor an illusion.
அது கனவுமல்ல, பரிணாமத்தால் வளர்ந்ததுமல்ல.
The world exists only in consciousness.
உலகம் ஜீவியத்தில் தானிருக்கிறது.
Therefore it is real.
அதனால் அது சாத்தியமானது.
A conscious Energy is one with Being.
ஜீவிய சக்தி புருஷனுடன் ஐக்கியமானது.
That creates the world.
அது உலகத்தை சிருஷ்டித்தது.
World is an existence.
உலகம் சத்தியம்.
It is an existence in material form.
ஜட உருவான சத்தியம் உலகம்.
It exists in its own right.
அதற்கு சுய உருவம் உண்டு.
The self-illumined energy assumes the form.
சுயம் பிரகாசம் உருவம் பெறுகிறது.
It would be a contradiction of the truth of things.
அப்படியில்லாவிட்டால் அது முரண்பாடாகும்.
It would be a nightmare.
கெட்ட சொப்பனம் போலிருக்கும்.
It would be an impossible falsehood.
நினைவுக்கெட்டாத பொய்மையாகிவிடும்.
It would be a phantasmagoria.
கற்பனை நிகழ்ச்சிகளின் ஊர்வலமாகும்.
Para No:14
 
There is the infinite supermind.
சத்திய ஜீவியம் அனந்தமானது.
It has its own truth.
அதற்கடிப்படையான சத்தியம் உண்டு.
That truth is this conscious Being.
அதுவே புருஷன் எனப்படுவது.
This is more than the universe.
இது பிரபஞ்சத்தைவிடப் பெரியது.
It lives independently.
சுதந்திரமானது.
Its Infinity is inexpressible.
விவரிக்கவொண்ணாத விசாலம் பொருந்தியது.
It lives in the cosmic harmonies.
பிரபஞ்சத்தைத் தாண்டிய சிருஷ்டியின் சுமுகம் இதனுடையது.
World lives by That.
உலகம் இதனால் உயிர் வாழ்கிறது.
That does not live by the world.
அது உலகத்தை நம்பி வாழவில்லை.
We can enter into the cosmic consciousness.
இப்பிரபஞ்ச ஜீவியத்தினுள் நாம் நுழையலாம்.
We can be one with all cosmic existence.
இப்பிரபஞ்ச சத்தியத்துடன் நாம் இரண்டறக் கலக்கலாம்.
Supermind is above that.
சத்திய ஜீவியம் அதைக் கடந்தது.
It is a world – transcending Consciousness.
அது உலகத்தைக் கடந்த ஜீவியம்.
We can enter into that.
அதனுள்ளும் நாம் நுழைய முடியும்
We can become superior to that.
அதைவிட நம்மால் உயர முடியும்.
What is this transcendence?
இக்கடந்த நிலை என்பது என்ன?
Does it reject the world?
இது உலகத்தை ஏற்கிறதா? புறக்கணிக்கிறதா?
What is its relation to the Beyond?
கடந்த நிலையிலுள்ள இதன் நிலை என்ன? ஆதியுடன் இதற்கு தொடர்புண்டா?
Para No:15
 
The Upanishads describe the perfect Spirit.
உபநிஷதங்கள் பூரணனை விவரிகின்றன.
It is luminous, pure.
அவன் சுத்த ஜோதிமயமானவன்.
It sustains the world.
உலகைத் தாங்கிப் பிடிப்பவன் அவனே.
It is inactive in the world.
என்றும் உலகில் அவன் செயல்படுவதில்லை.
It is without sinews of energy.
சக்தியாக அவன் உலகில் உருவாகவில்லை.
It is without flaw of duality.
முரண்பாடு அங்கு ஏழவில்லை.
It is without scar of division.
பிரிவினையை அறியாதது அது.
It is unique.
நிகரில்லாதவன்.
It is identical.
தானே தனக்கு நிகரானவன்.
It is free from all appearances and multiplicity.
தோற்றத்தை ஏற்காதவன், பலவாகப் பிரியாத நிலை அவன் நிலை.
It is the pure Self of Adwaitins.
அத்வைதியின் சுத்த (சிவம்) ஜோதி.
It is the inactive Brahman.
அதுவே மௌனப்பிரம்மம்.
It is the transcendent Silence.
கடந்த நிலையின் மௌனம் அது.
That stands at the gates of the Transcendent.
முடிவின் முன்னால் அதன் வாயிலில் உள்ளது அது.
Mind arrives there at once.
திடீரென மனம் அங்கு வந்து சேர்கிறது.
To it, It is unreal.
மனம் புரிந்து கொள்ளும் நிலையிலில்லை.
Its senses do not find any reality there.
அதன் புலன்கட்குப் புரிந்தது எதுவும் இங்கில்லை.
Mind sees Silence is the sole reality.
மௌனம் மட்டுமே சத்தியம் என மனம் அறிகிறது.
It is a powerful experience.
அது தீவிர அனுபவம்.
It is convincing and compelling.
மறுக்க முடியாத போற்றத்தக்க உண்மை அது.
Mind feels overwhelmed.
மனம் தன்னை இழந்த நிலையிலுள்ளது.
This is the perception of pure Self.
சுத்தசிவம், ஆன்மா, ஜோதி, ஆண்டவன் எனப்படுவது இது.
The Non-Being is behind it.
இதன்பின் நிர்வாணம், அசத் அமைந்துள்ளது.
Sannyasin’s negation comes from here.
துறவறத்தின் உற்பத்தி ஸ்தானம் இது.
It is parallel to the materialist negation.
நாத்திகனின் மறுப்பைப் போன்றது இது.
This is more complete, final.
துறவறம் நாத்திகத்தைவிடப் பூரணமானது, முடிவானது.
This is more dangerous to man.
துறவறத்தின் மறுப்பு நாத்திகனின் மறுப்பைவிட ஆபத்தானது.
Equally dangerous to the race.
மனித குலத்தின் எதிரி துறவறம்.
It calls to the wilderness.
சூன்யத்திற்கு நம்மை அழைக்கிறது.
It is a potent call.
மறுக்க முடியாத அழைப்பு இது.
The refusal of the ascetic rises from here.
இதைக் கண்ட சன்னியாசி உலகைத் துறக்கிறான்.
Page No:23
Para No:16
 
The old Aryans had a balance.
பழங்கால ஆரியர்கள் நிதானமானவர்கள்.
It is a balance between Matter and Spirit.
ஜடத்தையும், ஆன்மாவையும் இணைத்தவர்கள் அவர்கள்.
Buddhism came 2000 years ago.
2000 ஆண்டுகட்கு முன் புத்தர் வந்தார்.
It disturbed that old balance.
உலகம் அதிலிருந்து நிதானமிழந்தது.
It is the revolt of Spirit against Matter.
ஆன்மா உலகத்தை அதிலிருந்து துறந்தது.
The Indian mind is dominated by it since.
அன்றிலிருந்து துறவறம் நம்மை ஆள்கிறது.
Cosmic illusion is not the whole Indian thought.
மாயையே முழுவதுமில்லை.
There are others too.
மற்ற தத்துவங்களும் எழுந்தன.
They are religious aspirations.
வழிபாடும் பக்தியும் இந்தியனுக்குண்டு.
They are philosophic statements.
மாற்றான தத்துவங்களும் மனதில் எழுந்தன.
Attempts were made to adjust them.
துறவறத்தை இல்லறத்தோடு பிணைக்க முயன்றனர்.
Both are extreme philosophies.
இரண்டும் தீவிர கொள்கைகளாகும்.
But all attempts accept that Refusal.
இணைக்க முயன்றவர் அனைவரும் துறவிகளே.
Its shadow is ever-persisting.
துறவறத்தின் ஆட்சி பூரணமானது.
All have agreed with the ascetic.
அனைவரும் துறவியை ஏற்றனர்.
Asceticism is the end for all these schools.
முடிவாகத் துறவறத்தை ஏற்று, இல்லறத்தை அதனுடன் இணைக்க, பலர் முயன்றனர்.
Buddhism permeated our ideas.
நம் கொள்கைகள் புத்தரால் ஆட்கொள்ளப்பட்டன.
Chain of karma is Buddhist theory.
கர்மம் புத்தர் கொள்கை.
Bondage and liberation are the antinomies.
பிறவியும் மோட்சமும் வாழ்வின் முரண்பாடுகள்.
Bondage is by birth.
பிறவி என்பது தளை.
Liberation is cessation from birth.
மோட்சம் என்பது பிறப்பறுத்தல்.
Everyone agreed on a kingdom of heaven.
சொர்க்கம் என்பதை அனைவரும் நாடினர்.
They all agreed it is not possible on earth.
சுவர்க்கம் உலகத்திற்கில்லை என அனைவரும் ஆமோதித்தனர்.
Vrindavan was one goal.
பிருந்தாவனம் ஒன்று.
Beatitude of Brahmaloka is another.
பிரம்மலோக ஆனந்தம் அடுத்தது.
It is either in Nirvana or in unity.
இவை நிர்வாணத்திற்குரியவை. அல்லது வாழ்வை விலக்கிய ஆண்டவனுக்குரியவை.
It is the indefinable featureless unity of Self.
சொற்கடந்த, அரூபமான ஆன்மாவே ஆண்டவன்.
A great army of shining witnesses was there.
மிளிரும் மகான்கள் ஆன்மீக வானில் ஏராளமாக எழுந்தனர்.
They were spread over many centuries.
ஆயிரம் ஆண்டுகளாக நாம் அவரை அறிவோம்.
They were saints, teachers and sacred names.
குரு, மகான், சித்தர், என்ற புண்ணிய புருஷர்கள் அவர்கள்.
Indian memory is dominated by them.
இந்திய ஆன்மீக உலகம் அவர்கள் ஆட்சியினுள் இருக்கிறது.
They all spoke the same thought.
அனைவரும் ஒரே கருத்தைக் கூறினர்.
They endorsed the same appeal.
துறவியை மனமார அவர்கள் ஆமோதித்தனர்.
They all chose renunciation.
துறவறத்தை ஏற்றனர்.
It was the sole path of knowledge.
ஞானமார்க்கம் துறவறமே என்றனர்.
To accept life is to them to be ignorant.
வாழ்வை எற்பவன் அஞ்ஞானி என்றனர்.
Birth is here to get away from birth.
பிறப்பறுக்கவே நாம் பிறந்தோம் என்றனர்.
Recoil from Matter, listen to the call of Spirit, they said.
வாழ்வைத்துற, அழைப்பை ஏற்றுக்கொள் என்றனர்.
Page No:24
Para No:17
 
Our age has no sympathy for the ascetic.
இது துறவிக்குரிய காலமில்லை.
The hermit is no longer the hero.
துறவியை நாம் போற்றிப் புகழ்வதில்லை.
His heydays have passed.
துறவி உலகை ஆண்ட நாள் முடிந்தது.
We can see the Sannyasin as a failure.
நமக்குச் சன்னியாசியைத் தோல்வியாகக் காண முடியும்.
It may be the failure of vital energy.
மக்கட் சமுதாயம் களைத்துத் தோற்றதாக நாம் நினைக்கலாம்.
They burden may have exhausted the race.
கடமையில் பாரத்தால் களைத்ததாக நாம் கருதலாம்.
The race gave a many-sided contribution to us.
பெருங் கடமையை இதுவரை சமுதாயம் சாதித்தது.
That human effort was great.
இதுவரை மனித முயற்சி பெரு முயற்சி.
It increased human knowledge.
ஞானத்தை வளர்த்த முயற்சி அது.
So we may think the race is tired and has failed.
முயற்சியின் கடுமை மனித குலத்தைச் சோர்வடையச் செய்தது என நினைக்கலாம்.
This failure is not a failure.
இந்தத் தோல்வியைத் தோல்வியாக நினைக்க முடியாது.
It is a truth.
இதில் உண்மையுண்டு.
It represents a truth of life.
வாழ்வுக்குரிய உண்மை இதில் பொதிந்துள்ளது.
That truth is there at the summit.
சிகரத்தில் உறைவது அவ்வுண்மை.
It is only a possibility.
அவ்வுண்மையே முடிவானதில்லை.
But it is a conscious possibility.
அறிவால் எட்டும் வாய்ப்பாக அது அமைந்துள்ளது.
In practice also, it is true.
நடைமுறையிலும் அது உண்மை.
Man is an animal.
மனிதன் விலங்கு.
He insists on vital habits.
அவன் தன் உணர்ச்சியை வலியுறுத்துகிறான்.
His intellect is important for him.
பகுத்தறிவு அவனுக்கு முக்கியம்.
It is also animal intellect.
பகுத்தறிவு ஜடமானது.
The race is not free from animalism.
மனிதகுலம் விலங்குணர்விலிருந்து விடுபடவில்லை.
Man can reach the summit only when he is free at the other end.
சிகரத்தை  எட்ட விலங்குணர்விலிருந்து விடுபட வேண்டும்.
Till then a separate affirmation cannot be avoided.
அதுவரை, பகுதிகளை மறுக்க முடியாது.
Ascetic refusal is such an affirmation.
துறவறம் அதைப் போன்றது.
Therefore the refusal is indispensable.
எனவே துறவறம் தவிக்க முடியாதது.
It is not a failure of the race, but an indispensable condition of perfection.
துறவறம் மனித சமுதாயத்தில் தோல்வியில்லை, பூரணத்தை எட்டும் வழியாகும்
Para No:18
 
Our goal is more complete.
நமது இலட்சியம் பூரணமானது, பகுதியானதில்லை.
It is a larger goal.
இது முழுமையான பெரிய இலட்சியம்.
The Vedantic formula is great.
வேதாந்தம் பெரியதைக் கூறுகிறது.
It says, “One without a second”.
‘ஒன்றே உண்மை’ என்கிறது வேதாந்தம்.
There is another Vedantic formula.
வேதாந்தம் வேறொன்றையும் கூறுகிறது.
It is, “All this is the Brahman”.
‘சர்வம் பிரம்மம்’ என்பது அது.
The Indian ascetic does not see them together.
இரண்டையும் சன்னியாசி ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.
Our goal has to see the one in the light of the other.
இவற்றைச் சேர்த்து அறிந்து சாதிப்பது நம் இலட்சியம்.
Man passionately rises upward to the Divine.
இறைவனை நோக்கி மனிதன் ஆர்வமாக எழுகிறான்.
The Divine leaning downward is Man.
மனிதனை நாடி இறைவன் இறங்கி வருகிறான்.
Man is His manifestation.
மனிதன் இறைவனின் சிருஷ்டி.
This descent is eternal.
இறைவன் மனிதனை நாடுவது என்றும் உண்டு.
The ascent and the descent are not seen together.
இறைவனை நாடும் மனிதனையும், மனிதனை நாடும் இறைவனையும் இணைத்துப் பார்ப்பதில்லை.
Its truth in the Spirit is fully understood.
ஆன்மீக உண்மையை நாம் பூரணமாக அறிவோம்.
Its meaning in Matter is not so fully understood.
அதே போல் ஜடத்தை நாம் அறிந்ததில்லை.
The Sannyasin seeks a Reality.
சன்னியாசி சத்தியத்தைத் தேடுகிறான்.
He has greatly understood it.
அதை அவன் அறிவான்.
The ancient Vedantin also understood it.
பழைய வேதாந்தியும் அதை அறிவான்.
They understood it fully.
வேத காலத்தவர் அதன் முழுமையைப் பூரணமாக அறிவார்கள்.
They knew its full extent and comprehensiveness.
We seek a completer affirmation.
நாம் நாடுவது முழுமை, பூரணம்.
The pure spiritual impulse is partial.
Still, we cannot minimise its importance.
என்றும் அது குறைந்ததில்லை.
Materialism denies God.
நாத்திகம் கடவுள் இல்லை என்கிறது.
But, we saw its great service to the Divine.
என்றாலும் நாத்திகம் இறைவனுக்குச் செய்த சேவை பெரியது.
So also, Asceticism is partial.
அதே போல், துறவறமும் பகுதி.
Though partial, its service to the Divine is great.
பகுதியானாலும், அதன் சேவை பெரியது.
We must acknowledge that service.
துறவறம் இறைவனுக்குச் செய்த சேவையை நாம் ஏற்க வேண்டும்.
Material science has its truths.
விஞ்ஞானத்திற்கு அர்த்தமுண்டு.
Its forms are already broken.
அதன் முறைகள் குறையானவை என அறிவோம்.
Still, we must preserve these truths.
என்றும், இவ்வுண்மைகளை நாம் துறக்கக்கூடாது.
It has a utility for the final harmony.
முழுமையை அடைய அவை தேவை.
The Aryan past is a great legacy.
ஆரியர் அளித்தது பெரிய பொக்கிஷம்.
It is now diminished and depreciated.
அதை குறைத்து, நாம் கரைத்துவிட்டோம்.
We must rise higher still.
மேலும் உயர வேண்டியது அவசியம்.
We must preserve the old balance.
வேத காலத்து நிதானம் அவசியம்.
A greater scruple is needed for that.
அதை அடைய ஆன்மிகப் பக்குவம் வேண்டும்.



book | by Dr. Radut