Skip to Content

பகுதி 3

உள்ளது. மனத்தின் அகந்தை அழிந்தால் மனித மனம் பிரபஞ்சம் முழுவதும் பரவும். அதாவது பிரபஞ்சத்தை முழுவதும் நம் மனம் அறிய முடியும். உணர்வின் அகந்தை அழிந்தால் பிரபஞ்சம் முழுவதும் நம் உணர்வு பரவித் தொடும். உடன் அகந்தை அழிந்தால் பிரபஞ்சம் நம் செயலுக்குக் கட்டுப்படும். இதுவே சத்திய ஜீவன் பிறக்கும் நிலை.

அந்நிலையில் மரணம் அழியும், வலி ஆனந்தமாகும்.

அகந்தை ஒரு சிறிது அழிந்து ஆன்மாவைத் தூய்மைப் படுத்தி, ஆன்மா மூலம் பரமாத்மாவை அடைவது மோட்சம். அப்பாதையை, பகவான் ஏற்கவில்லை. அவர் குறிக்கோள் மோட்சமில்லை, சத்திய ஜீவன் பிறப்பதே அவர் இலட்சியம்.

இவையனைத்தும் யோகத்திற்குரிய தத்துவார்த்தங்கள். மாற்றத்திற்குரியவை முதல் நிலையைச் சேர்ந்தவை, எளியவை, அதனால் சுலபமானதன்று, தரம் குறைவானதன்று. T.V. சிறியது மலிவு என்றாலும் T.Vயாகப் படம் தெரிவது அவசியம். நளாயினிக்கும், இராணிக்கும், கூலிக்காரிக்கும் கற்பு என்பது தரத்தில் ஒன்றே. அவர்கள் அளவு வேறு, உயர்வு வேறு. கற்பு மாசில்லாதது. அகந்தையை அழிப்பது மாற்றத்திற்குத் தேவை. ஆனால் முழுமையாக அழிப்பது அவசியம். 90% அகந்தை அழிந்தால் மாற்றம் 90 பங்கு ஏற்படாது. மாற்றமே ஏற்படாது. மாற்றம் ஏற்படும் அளவுக்கு அகந்தை அழிந்ததை ஆன்மிகப் பாஷையிலும், நடைமுறையிலும் விளக்கினால்,

சில் என்ற உணர்வு ஏற்பட்டு நிலைப்பது (ஆன்மிகம்). நம்மை அறிந்தவர் அனைவரும் நம்மை அடக்கமானவர் என்பது (நடைமுறை).

தரிசனம் :

ஆகஸ்ட் தரிசனத்திற்கு வந்து ஊர் திரும்பும் சாதகர் பஸ்ஸுக்குப் போக ஆட்டோவில் ஏறும்பொழுது டிரைவர், என்னங்கம்மா, இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? எனக் கேட்டான். தரிசனம் என்பது (limitless consciousness touching a limited consciousness) அளவோடு உள்ள நம் ஜீவனை, அளவிறந்த ஜீவியம் தொடுவதாகும். ஸ்பரிசம் பட்டவுடன் நம் வரையறை, எல்லை, மிட் விசாலப்படுகிறது. மனம் பரந்த நிலை சந்தோஷம் உற்பத்தியாகும் நிலை. சந்தோஷம், ஆனந்தம் என்பது ஆன்மிகப் பாஷையில் எல்லையற்றது, வரையறை இல்லாதது, சுதந்திரம் எனப்படும். சிறைப்பட்ட ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பது தரிசன ஸ்பர்சம். இவர் ஆபீசில் வேலை செய்பவர். ஆசிரமம் வந்து திரும்பும்தோறும், இவர் பஸ் காலை 10.30 மணிக்கு ஊர் திரும்பும் என்பதால், ஆபீசுக்கு ஒவ்வொரு முறையும் தாமதமாகப் போக வேண்டும். 1 மணி நேரம் அனுமதி வாங்க வேண்டும். இம்முறை புது பஸ் போகிறது. ஊருக்கு காலை 9 மணிக்குப் போகும். எனவே ஆபீசுக்கு இனி லேட்டாகப் போக வேண்டாம். சந்தோஷம் எல்லையைக் கடந்த நிலையில் பஸ் ஏறி ஊருக்குப் போனவர், 9 மணிக்குப் போய்ச் சேர வேண்டிய பஸ் 7 மணிக்கே போய்ச் சேர்ந்ததைக் கண்டார். அளவுகடந்த சந்தோஷம். அன்னை சக்தியைத் தாங்கி பஸ்ஸை சீக்கிரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது.

அன்னை படம் : புதிய காலனியில் பாம்பு வருவது வழக்கம். ஒரு பத்து, பன்னிரண்டு வீடுகளில் பாம்பு வருவதைக் கண்டவர்கள் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் பக்தர். அவர் வீட்டில் அப்பயம் இல்லை. ஓர் அன்னை

படம் கொடுத்து, இப்படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள், பாம்பு வாராது என்றார். சில நாள் கழித்து, அந்த அம்மையார், நீங்கள் ஏதோ படம் கொடுத்தீர்களே, என்ன படம் அது? அப்படம் வந்தபின் இங்கு எந்த வீட்டிற்கும் பாம்பு வருவதில்லை என்றார். ஒரு வீட்டில் படம் வைத்தால், எந்த வீட்டிலும் தொந்தரவில்லை என்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நம் நாட்டில் பஸ், ரயில் போனால் ஒருவருக்கொருவர் பேசுவதுண்டு. ஐரோப்பிய நாடுகளில் பழக்கமில்லாதவர்கள் பேசமாட்டார்கள். அமெரிக்காவில் முன்பின் தெரியாதவர்களும் எளிதாகப் பேசுவார்கள். நண்பர்களே இல்லாத ஒருவர் அன்னையை நினைத்தால் அவரை முன்பின் தெரியாதவர் ரோட்டில் போகும்பொழுது வணக்கம் செலுத்துவது அவருக்கு அன்னையை அழைத்தால் எதுவும் நடக்கும் என்பது முழு உண்மை போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது. ஷெல் டிரேக் என்ற பேராசிரியர் ஒரு புதிய தத்துவத்தை உலகுக்கு அறிவிக்க முயல்கிறார். ஒரு நாட்டில் சிலர் புதியதாக ஒன்றைக் கற்றுக் கொண்டால், அதையே கற்க முயலும் அயல் நாட்டினருக்கு அது எளிமையாகும் என்கிறார். ஒரு நாய்க் குட்டிக்குத் தபால் கொண்டு வர நாம் பயிற்றுவித்தால், அது கற்றுக் கொள்ள அதையே பயிற்றுவிப்பது எளிது என்று அவர் சோதனை மூலம் கண்டுள்ளார். இத்தத்துவத்தின் அம்சங்கள் பல. உலகப் பெருவிஞ்ஞானிகள் சிலர் கூடி அவரைப் பற்றி விவாதித்த போது ஒருவர், நான் ஷெல் ரேக் சொல்வது தவறு என நினைக்கிறேன். அவர் கூறுவது சரியானால் ஐன்ஸ்டீனும், டார்வினும் இணைந்ததைப்போல் அவர் பிரபலமாவார் என்று கூறினார். இந்தப் பேராசிரியர் எழுப்பும் கேள்விக்குரிய எல்லாப் பதில்களையும் 80 ஆண்டுகட்கு முன் நூல் இரண்டாம் பகுதியில் முதல் அத்தியாயத்தில் பகவான் எழுதி வைத்துள்ளார்.

பெருஞ்செல்வர்களை அன்னை சக்தி உற்பத்தி செய்யும் என நான் நெடுநாளாகக் கூறி வருகிறேன். இப்பேராசிரியர் நூல்களைப் படித்தபின் The Life Divineஇல் உள்ள ஞானத்தின் உயர்வு தெரிகிறது. அவர் தேடும் பதில்கள் இதில் உள்ளன. நூலுக்கு ஐன்ஸ்டீனும், டார்வினும் இணைந்த மேதைகளை உற்பத்தி செய்யும் திறனுண்டு என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும் போருக்கிறது!

நூல் (The Life Divine) சிருஷ்டியை விவரிக்கிறது. மனித வாழ்விலிருந்து ஆரம்பித்து தெய்வீக வாழ்வு முடிய அனைத்து அம்சங்களையும் தன்னுட் கொள்வதால், அதைப் புரிந்து கொண்டு தம் வாழ்வுக்குப் பொருந்தும் வகையைக் கண்டுபிடிக்க முடியுமானால், நூல் படிப்பவருக்கு எதையும் செய்ய முடியும். என்ன செய்ய முடியும் என்பதை வரிசையாக எழுதினால் 100 கட்டங்களாக எழுதலாம். அதன் ஆரம்பத்தையும், முடிவையும் மட்டும் எழுதுகிறேன். கடந்தவன் (genius) மேதையாகும் வாய்ப்பு அடைவான். சத்தியஜீவனின் வாழ்வில் மேதை என்பது ஒரு பகுதி. அதனால் முடிவை எட்டும் முன் கிடைக்கும் உயர்ந்த மனநிலைகள் இவை.

ஆரம்பம் :

பயம், சந்தேகம், நம்பிக்கையின்மையால் ஆளப்படும் வாழ்வு தைரியம், நம்பிக்கை மலரும் உச்சகட்ட வளம் நிறைந்ததாக இருக்கும்.

முடிவு :

தூய்மையான மனம் சமத்துவத்தின் அடிப்படையில் நம்பிக்கையால் செயல்பட்டு சத்திய ஜீவனாகும்.

சரியாக ஆரம்பித்து உயர்ந்தால் முதற்பகுதியை யோக வாழ்வு எனலாம். அடுத்த பகுதியை யோகம் எனலாம். யோக வாழ்வாக ஆரம்பித்து யோகமாக முடியும் பாதை இது. யோக வாழ்வு முடியும் நிலையில் மனிதன் இன்றைய உலக வாழ்வின் உச்சகட்டத்தை அடைவான். அந்நிலையைக் கடந்தவன் (genius) மேதையாகும் வாய்ப்பு அடைவான் .சத்திய ஜீவனின் வாழ்வில் மேதை என்பது ஒரு பகுதி .அதனால் முடிவை எட்டும் முன் கிடைக்கும் உயர்ந்த மனநிலைகள் இவை

நிறைவும் குறைவும் : பயம், சந்தேகம், நம்பிக்கையின்மையால் நிறைந்த நம் வாழ்வு குறையுடையதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அன்னையை நாடி வருபவர்களுக்கு உள்ள நிறைவுகள் பூரணப்படும். கலைஞர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் அது போன்று அளவு கடந்து உயர்ந்ததை நான் பல முறை எழுதியுள்ளேன். ஆன்மீகப் பக்குவம் உள்ளவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டால் அது பூரணம் பெறும். பொதுவாக அது மனதில் தெரியும். அன்னையை ஏற்ற பின் நான் பழைய மனிதனில்லை என்பார்கள். பல ஜென்ம தவப்பலன் பக்குவமுள்ள ஆன்மாவுக்குப் பக்தியால் கேளாமல் கிடைப்பது அன்னையின் அருள் நிறைந்த ஆன்மீகச் சக்தியின் தன்மை. என் அனுபவத்தில் நேரடியாக நான் கண்டவற்றையே கட்டுரைகளில் எழுதுவது வழக்கம்.

உலகப் பெருவிஞ்ஞானி ஒருவரைச் சந்திக்க ஸ்ரீ அரவிந்தர் கருத்தை தொகுத்து, ஒரு கட்டுரையை எழுதி எடுத்துப் போகும் நிலையில் அவர் விஞ்ஞானம் படிக்காத பட்டதாரியிடம் தாம் எழுதியதைச் சொன்னார். கேட்டவர் புரிந்து கொண்டது சொன்னவருக்கு ஆச்சரியம். அத்துடன் ஒரு புதிய கருத்தையும் அவர் கூறினார். பெற்றோருடைய பக்தி, பிள்ளைகளில் உயர்ந்த அம்சமாக வெளிப்படுவதைச் சொன்னவர் கண்டு வியந்தார். அடுத்த தலைமுறையில் அருள் வெளிப்படுவதை நான் கண்டது முதல்முறை.

அன்னை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்பவர் தம் பக்குவத்திற்கு ஏற்ப ஆன்மிகப் பலன் பெறுகிறார். ஆன்மா விழிப்பாக இருந்தால் தியானம் உயரும். பக்தி நயமானதாக இருந்தால்

சைத்தியப் புருஷன் வெளி வருவான். ஆன்ம விழிப்பு மனத்திருந்தால், மனம் மேதையாகத் தயாராகும் திறன் பெறும். முறையான வாழ்வு, நெறியான பழக்கம், கட்டுப்பாடான கொள்கையால் மனம் சிறந்தால் அது வாழ்வில் நிம்மதியான வளமாக வெளிப்படும். அதுவே உடல் வெளிப்பட்டால், விலங்கின் இன உணர்வு மாறி, அமிர்த உணர்வை அளிக்கும். அன்னையிடம் அருள் பெற அருளுக்கு எல்லையில்லை. மனித வாழ்வின் இன்றைய மனப்போக்கால் வரையறை உண்டு. வரையறையில்லாதவரும் உண்டு. வரையறை இல்லாதவரும், உள்ளவரும் பெறுவது இருவகையின.

 1. தானே அருள் செயல்படுவது.
 2. நம் முயற்சியின் பயிற்சியால் அருளைப் பெறுவது.

எல்லையுள்ளவர் பெரும்பாலோர். எல்லையில்லாதவர் ஏராளமானோர். எல்லையிலிருந்து அதை விலக்க முயல்பவருண்டு. அது குறைவு. எல்லையில்லாமல் அதைப் பயன்படுத்துபவருண்டு. எல்லையில்லை என்பது எந்த ஒரு கரணத்தாலும் - உடல், உணர்வு, மனம், ஆன்மா - இருக்கும். ஆன்மாவில் எல்லையற்ற பக்குவமுடையவர் அன்னையை ஏற்று அதுவே முடிவு என வாழும்பொழுது, 30 வயதைத் தாண்டாத அவர் மகளிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. மகளுக்கு அன்னையிடம் பக்தி பொதுவானது. பெற்றோரின் ஆன்மிகப் பக்குவம் அபரிமிதமாகி, தனக்கு அப்பலன் உடல்வரை வந்து பலித்ததை மகள் அறிய முடியாது. அன்னையின் சந்தோஷம் தன் உடலும் வெளிப்படுவதை மகள் கண்டாள். இனி தன்னால் சாதாரண தாம்பத்திய வாழ்வை வாழ முடியவில்லை என்பது அவள் பெற்ற அனுபவம். பெற்றோர் பெற்ற அமிர்த உணர்வு பிள்ளைக்கும் பலனாகக் கிடைக்கிறது. இது மாற்றத்தின் கடைசிக் கட்டம்.

மனித சுபாவத்தின் அம்சங்களில் ஒன்று நிறைவும், குறைவும் இணைந்திருப்பது. பெருங்குறையுள்ளவர்களை உலகம் பழிக்கும். அவர்கட்கே மனம் இடிந்து போகும். பெருங்குறையிருந்தால், தங்களுக்கு நிறைவு இல்லை என்று கருதுவது தவறு, நிறைவு இருக்கலாம். பெரிய நிறைவும் இருக்கலாம் என்பது சாத்தியம். பெரிய நிறைவு இருப்பதால், குறையிருக்காது என்று நினைப்பது சரியாகாது. மிகப் பெரிய குறையும் இருக்கலாம். இது சுபாவத்தில் உண்டு.

கவர்னர் ஜெனரலாக ராஜாஜி ரிடையரான பின் முதன் மந்திரியாகும்படி வருந்தி அழைத்தனர். நாட்டை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றனர். அந்த உயர்ந்த தகுதி உள்ளவருக்கு எலெக்ஷனில் ஜெயிக்கும் தைரியமில்லை. எலக்ஷனில் நிற்க மறுத்தார். எப்படியிரண்டும் அவரிடம் இருக்க முடியும் என்று கேட்கக்கூடாது. இருந்தது. சிவபெருமானுக்குப் பத்மாசூரன் தன் மீது திரும்பி வருவான் என்று ஏன் தெரியவில்லை என்று நாம் கேட்பதில்லை. சர்ச்சில் காரில் speed limit வேகத்தின் அளவை தாண்டி எப்படிப் போவார் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் போனார். போலீஸ் துரத்தியது. உயர்ந்த அம்சமும், தாழ்ந்த குறையும் மனிதனில் சேர்ந்திருப்பதை ஏற்பது அறிவுடைமை. ஏற்க மறுப்பது மூட நம்பிக்கை. ஷேக்ஸ்பியர் மான் திருடினார். விஸ்வாமித்திரர் வசிஷ்டரைக் கொலை செய்ய நினைத்தார். தவசிகள் நிலையிழந்து சபித்தனர். தேவகன்னிகைகளைக் கண்டு நிலையிழந்தனர். சரித்திரத்திலும், புராணத்திலும், அரசியலும், நம் அனுபவத்திலும் நாம் இதைக் காண்கிறோம்; ஏற்கிறோம். நமக்கு உயர்ந்த அம்சமிருந்தால், குறையிருக்காது எனவும் மனம் நினைப்பது அனுபவமில்லை, மனித சுபாவத்தை அறியவில்லை என்று பொருள்.

குறையை உணர முடியும் என்றால்தான் நிறைவு பூரணம் பெறும். குறையை ஏற்காத மனம் நிறைவால் பயன் பெறாது.

குறையை நிறைவின் ஆன்மிகவுருவம் என அறிவது நூலை வாழ்வில் அறிவதாகும்.

ஆசிரமம் தினசரி போகும் வாய்ப்பு அருகில் உள்ளவர்க்கேயுண்டு. அதனால் ஆன்மா பெறும் பலன் அதிகம். ஆன்மா அதிகப் பலன் பெறுவதால், எல்லா நிலைகளிலும் அதிகத் திறமையிருக்கும் என நினைப்பது இயல்பு. ஆனால் அது உண்மையில்லை. வெளியூரிலிருந்து தரிசனத்திற்கு மட்டும் வருபவர் தம் பிரார்த்தனை ஒன்று தவறாமல் பலிக்கிறது என்றால் புதுவையிலிருப்பவருக்குச் சந்தேகம் வருகிறது. ஏன் அவருக்குப் பலிப்பதைப்போல், எனக்குப் பலிக்கவில்லை? என்ற கேள்வி, சரியானது. அதற்குரிய பதில் உண்டு. அனைத்தும் பலிப்பதால் அவர் உயர்ந்தவர், பலிக்காததால் நான் தாழ்ந்தவன் என்பது கேள்வியில்லை. அந்தக் கேள்விக்கு அன்னையிடம் அர்த்தமில்லை. அதை நினைத்தால் பதில் கிடைக்காது. கிடைத்தால் மனம் ஏற்காது.

எவரும் உயர்ந்தவரில்லை. எவரும் தாழ்ந்தவரில்லை. உயர்வும், தாழ்வும் கலந்துள்ளன. முறைகள் வேறுபடுகின்றன. அன்னையை நேரடியாகக் கேட்பவருக்கு அத்தனையும் பலிக்கின்றன, பலன் தான் வேண்டும் என்றால் அந்த முறையைத் தாமும் பின்பற்றலாம். பலன் பெறுபவர் உயர்ந்தவர், பலன் பெறாதவர் தாழ்ந்தவரில்லை. சர்க்கார் வாங்குவதுபோல் கடன் வாங்க உயர்ந்த நிலையிலிருக்க வேண்டும். தனி மனிதனால் கடன் அதுபோல் வாங்க முடியாது.

புதுவையில் உள்ளவர் தம் பிரார்த்தனையில் சில பலிக்கவில்லை எனக் கண்டு, வெளியூர் பக்தர் முறையைப் பின்பற்றி எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்கின்றன என்று கண்டார். இவர் செய்யும் வேலை வேறு, பெறும் பலன் வேறு; சுபாவம் வேறு; சந்தர்ப்பம் வேறு. வெளியூர் பக்தர் நிலை அனைத்தும்

மாறுபட்டது. மாறுபட்ட நிலைக்கு மாறுபட்ட பலன் உண்டு. ஆனால் மனம் பலனில்லை எனில் ஏமாந்து போகிறது. ஏமாறுவது அன்னையிடம் சரியில்லை. ஏமாறாத மனம் உயர்ந்தது.

பிரார்த்தனை பலிக்கிறதா, இல்லையா என்பதைவிட

மனம் ஏமாறுகிறதா, இல்லையா என்பது முக்கியம்.

ஆசிரமம் வந்த இடத்தில் ரூ. 900 பணம் தொலைந்து போய்விட்டது. மகள் இங்கிருந்ததால் அதனால் தொந்தரவில்லை. தொலைத்தவர் படபடப்பானார். ஊரிலுள்ள மனைவியிடம் போனில் பேசி நடந்ததைச் சொன்னார். மனைவி அன்னையிடம் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார்.தொலைத்தவர் பணம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார். மனைவிக்குப் பிரார்த்தனை வேறு.எனக்கு அன்னை மீது நம்பிக்கை உண்டு. இந்த சந்தர்ப்பம் மூலம் அந்த நம்பிக்கை வளரவேண்டும்.பணம்முக்கியம் .கிடைத்தாலும் ,கிடைக்கவிட்டாலும் ஏன் நம்பிக்கை குறையாது .ஆனால் பணம் கிடைப்பதை விட நம்பிக்கை வளருவது முக்கியம். எப்படி என நான் அறியேன் .எல்லாம் அன்னைக்கே சமர்ப்பணம் .அவர் ஊர் திரும்பினார் .பணம் கிடைத்தது .நம்பிக்கை வளர்ந்தது .பணம் கிடைக்க வேண்டும் என்பது ஒரு பிரார்த்தனை .நம்பிக்கை வேண்டும் என்பது மற்றொரு பிரார்த்தனை .மனைவிக்குப் படபடப்பு இல்லை. அதனால் அவர் நம்பிக்கையைக் கேட்டார் .படபடப்பு உள்ளவர் பணத்தை கேட்டார்.

  சாப்பாட்டில் ருசியைத் தேடுகிறோம். உடையில் அந்தஸ்தை நாடுகிறோம். வீட்டை அழகாக வைப்பதில் நாகரீகத்தை மனதில் கொள்கிறோம். அழகுக்காக அலங்காரம் செய்கிறோம். பக்தியை வெளிப்படுத்த பூஜையில் ஆரம்பித்து உத்சவம்வரை பல சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். எழுத்து உயர்வாக இருக்க எதுகை, மோனை போன்ற

இலக்கண, இலக்கிய சிறப்பை கைக் கொள்கிறோம். இவையெல்லாம் சரி, தவறன்று. இவற்றிற்கும் மேலான உண்மையொன்று உண்டு. இதுபோன்ற சாதனங்கள் எதுவும் இல்லாமல், ருசி, மரியாதை, நாகரீகம், அழகு, பக்தி, உயர்ந்த எழுத்து உற்பத்தியாவதுண்டு.

பெரிய எழுத்தாளர் படைப்புகளை, பத்து, நூறு பக்கம் படித்து அதன் இலக்கிய உயர்வைக் காணும்பொழுது, சில சமயங்களில் இந்த நூறு பக்கத்தில் ஒரு பெரிய சொல்லோ, பழமொழியோ, உருவகமோ, அலங்காரச் சாதனமோ வரவில்லை என்பது தெரியும். J.கிருஷ்ணமூர்த்தியின் எழுத்து எளிமையானது. பளிங்குபோன்று கருத்தின் எளிமையான சிறப்பால் மின்னுவது.

தம் பல ஆண்டு பக்தியும் தெய்வ நம்பிக்கையை அளிக்கவில்லை என்பதை அதிர்ச்சியோடு அறிந்தவர், அது உண்மை என்று கண்டார். தமக்கு முக்கியமான விஷயங்களில் அன்னையை நம்புவதில்லை, நடந்தால் நடக்கும் என்ற இடத்தில் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறோம் என்பதை அவர் மனம் ஏற்றுக் கொண்டது. பல ஆண்டுகள் இங்கேயிருந்து நம்பிக்கை எழவில்லை என ஏற்கும் மனம் நம்பிக்கை பெறும் தகுதியுள்ளது. நம்பிக்கை வர என்ன செய்ய வேண்டும்? அன்னை விடாமுயற்சியால் நம்பிக்கை வரும் என்கிறார். மேலும் பிரார்த்தனையால் நாம் எதையும் பெறலாம், நம்பிக்கையையும் பெறலாம் என்கிறார். நம்பிக்கை வேண்டும் என்ற மனத்தோடு வீட்டிற்குப் போனவர் வீட்டைத் தண்ணீர் விட்டுக் கழுவி தள்ளினார். தரையின் வாட்டம் தலைகீழேயுள்ளது. எனவே தண்ணீரை தள்ளிவிட வேண்டும்; தானே போக வழியில்லை என்பது இத்தனைநாள் அனுபவம். இன்றும் தண்ணீர் எதிர்வாட்டமாகப் போகும் பொழுது, மதர், எனக்கு உங்கள் மீது நம்பிக்கையில்லை. என் மனதில் நீங்கள் நம்பிக்கையாக உதிக்கவேண்டும். தண்ணீர் தரையின் வாட்டப்படி போகிறது. என்

நம்பிக்கைப்படிப் போக வேண்டும் என்றார். தண்ணீர் தன் போக்கை மாற்றி எதிராக அவர் கண் எதிரே போய், தானே வடிந்தது. அவருக்கு நம்பிக்கை பிறந்தது. மறுநாள் வீட்டினுள் அவர் நுழையும்பொழுது, வீடு தான் அறிந்த வீடாக இல்லை. புதிய உயர்ந்த அன்னை சூழலிலிருந்தது. வீடு அழகாக இருந்தது. தரை பாலீஷ் போட்டதுபோல் பளிச்சென்று இருந்தது. மனத்தின் நம்பிக்கை தரையில் அழகாக மாறுகிறது.

வெறுஞ்சாதத்தில் அளவுகடந்து நெய் விட்டுப் பிசைந்து சம்பார்சாதம் என, சிவன் கோவில் கோவிலைச் சார்ந்தவர்களுக்கு அளிப்பது மிக ருசியாக இருக்கும் என்பார்கள். அது பக்தியின் ருசி.

ஊதுவத்தியே வாங்கி வாராத வீட்டில் அன்னை படத்தின் அருகில் ஊதுவத்தி மணம் எழுந்து தெருவரைக்கும் வந்ததைச் சிலர் கண்டனர். அது பக்தியின் நறுமணம்.

வெளிநாட்டார் நம்மூருக்கு வந்து ரொட்டி வாங்கினால், அதை ரொட்டியாக அவர்கள் கருதுவதில்லை. அவர்கள் நாட்டு ரொட்டிக்கும், நம் நாட்டில் ரொட்டி என விற்பனை ஆவதற்கும் உள்ள வித்தியாசம் பிச்சைக்காரனுக்கும் நமக்கும் தோற்றத்திலுள்ள வித்தியாசமாகும். அமெரிக்கர் ஒருவர் ஸ்விட்ஜர்லாந்தில் கொஞ்ச நாள் தங்கியிருந்தார். கடையில் ரொட்டி வாங்கினார். அதன் மணம் இனிமையாக இருந்தது. வீட்டிற்கு வந்து சமையல் செய்து, சமையல் 3 அடி நீள ரொட்டியை (bread roll) எடுத்து ஒரு பகுதி சேர்க்க நினைத்தவர், ரொட்டியை சாப்பிட்டுப் பார்த்தார். அதன் ருசியில் உயர்வை அவரால் நம்ப முடியவில்லை. நம்மூர் ரொட்டிக்கும், அமெரிக்க ரொட்டிக்கும் உள்ள வித்தியாசம், ஸ்விட்ஜர்லாண்ட் ரொட்டிக்கும், அமெரிக்க ரொட்டிக்கும் இருந்தது. முழுவதையும் சாப்பிட்டு விட்டார். இது போன்ற

சுவையைத் தாமறிந்ததில்லை என்றார். ரொட்டி, இட்லிபோல் வெறுங்கோதுமை மாவால் செய்யப்படுவது. வேறு எதையும் கலப்பதில்லை. செய்யும் சமையல் பக்குவம் ருசியைக் கொடுக்கிறது. இட்லியும் அதேபோல். சமையல் திறமை உள்ளவர் இட்லி செய்தால், அவர் சட்னி கொண்டுவருமுன் இட்லி காயாகும். வெறும் அரிசியும், உளுந்தும் கலந்த பக்குவம் அனுபவத்திலிருக்கிறது.

பக்தி மனத்தில் மணமாக எழுந்தால், அது நம்பிக்கையால் அழகு பெற்றால், அன்னைக்குப் புறத்தோற்றங்கள் எதுவும் தேவைப்படாது.

பக்தியின் மணம் யோகசித்திக்கு அழகு.

பெரியதும் சிறியதும் : நிறைவும், குறைவும் என்ற பகுதியையொத்தது இது. ஸ்ரீ அரவிந்தர் பொன்னொளியைச் சிலர் காண்பதுண்டு. அதுபோல் அன்னையைக் காண்பது அரிது. ஆனால் ஸ்ரீ அரவிந்தரோ பொன்மயமாகச் சிலருக்குக் காட்சி அளிப்பதுண்டு. இது பெரிய ஆன்மிக அம்சம். இவ்வளவு பெரிய அம்சம் உள்ளவருக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது, காணிக்கை தருவதில் வெறுப்புண்டு. வாழ்க்கையே அவர்களுக்காகத் தியாகம் செய்த பின் அவர்கள் மீது அளவு கடந்த கோபம் எழுவதுண்டு. பெரியதுள்ள இடத்தில் எதிராக இருக்கும். இவர் நல்லவர், உத்தமமானவர் என்பதால் மனதில் உள்ளதைச் சொல்விட்டார். பொதுவாக இதை வெளியிட மாட்டார்கள். தீயசக்தி மனிதனில் 99% இருப்பதாக பகவான் கூறுவதின் உண்மை இதன் மூலம் தெரிகிறது. தவறு இருப்பதால் நல்லதற்கு அர்த்தமில்லாமல் போகாது. ஆனால் தீயது உள்ளவரை ஆன்மிகப் பலன் எழ முடியாது. நல்லதைப் பயன்படுத்தி, கெட்டதை அழிப்பதே நம் பங்கு. எனக்கெல்லாம்

அதுபோல் தோன்றுவதில்லை என்பவர் இருவகையினர். வாழ்வும், அறிவும், அனுபவமும் மேல்மனத்தோடு முடிந்து விட்டால், அதன் கீழே என்ன உள்ளது என்று தெரிவதில்லை. மேல் மனம் நல்லதாக இருந்தால், உள் மனம் நமக்குத் தெரியும் அளவுக்குத் தெளிவில்லாவிட்டால், நம்மை நல்லவராக நினைக்கிறோம். படிப்பு, அனுபவம், உண்மை (sincerity) ஆழ்ந்த ஜீவன் உடையவருக்கு இரண்டு பக்கமும் தெரியும். அவர்கள் முதிர்ச்சியுள்ளவர்கள் (mature beings). அடுத்த வகையினர் கெட்டிக்காரர்கள். தங்கள் மனதிலுள்ளதை வெளியிடமாட்டார்கள். இவற்றையெல்லாம் சொல்லக்கூடாது என, பேசும் முறையோடு பேசுவார்கள். இவர்களுக்கு முறைதான் மிஞ்சும். ஆன்மிகம் விலக்கு. இவர்கள் வாழ்வு, பிறருக்கு இவர் உண்மை நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும். உயிரை விட்டு அனைவரும் போற்றும்படியாக உழைத்த பலன் இவரைத் தாண்டி சம்பந்தமில்லாதவருக்குப் போகும், அல்லது எதிர்மாறாக வரும். உலகத்தில் இதுவரை கேட்டறியாதது போன்ற தண்டனை, அவதூறு, நஷ்டம், குடும்பம், ஆபீஸ், நண்பர்கள் போன்ற இடங்களிலிருந்து எழும். வந்தால் அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடும். அவற்றிலிருந்து மனிதன் தப்பிப்பதில்லை. அன்னை பக்தனாக இருந்தால் தப்பிக்கலாம். தப்பிக்க எடுக்கும் முயற்சி உள்ளேயுள்ள தீய சக்தியின் வீச்சைக் காட்டும்.

கவலை, சந்தோஷம் :

எந்தப் பிரச்சினையுமில்லாமலிருக்கும்பொழுது, வேலை முடிந்து தனித்து உட்கார்ந்தால், மனத்தில் கவலை எழும். சற்று நேரம் கழித்து அலை அலையாகக் கவலை எழும். ஏதாவது வேலையிலீடுபட்டால், கவலையை மறக்க முடியும். எதற்குக் கவலை? எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. இவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் (sub-human beings). இதேபோல் சிலருக்கு, பயம் எழும்.

இவர்கள் அரிபொருள். இவர்கள் அன்னையிடம் வந்தால் கவலை, பயம், குறைந்து நாளடைவில் மறையும். அன்னையை மேலும், மேலும் ஏற்றுக் கொள்ளும்பொழுது, இதேபோல் (causeless joy) எந்தக் காரணமுமில்லாமல், தனித்து உட்கார்ந்தால், சந்தோஷம் எழும், அலையலையாகவும் எழும், தன்னை மீறி புன்னகை மலரும். கவலையில் திளைத்தவரும் அன்னையிடம் வந்து எதிர்மாறாக மகிழ்ச்சியில் திளைப்பதுண்டு.

நாமறிந்த வாழ்வுக்கும், அன்னை இயல்பாக வழங்கும் வாழ்வுக்கும் கவலை தோய்ந்த உள்ளத்திற்கும், மகிழ்ச்சி பொங்கும் நெஞ்சத்திற்கும் உள்ள தூரம் உண்டு. மாற்றத்தை நாடிப் பெறுபவர்களுக்கு இம்மாற்றம் தவறாமல் தெரியும்.

கவலையின் சுனை மகிழ்ச்சியின் ஊற்றாவது மாற்றம்.

மந்திரக்காரி :

மந்திரம் செய்து பிறருக்குத் தீங்கு செய்பவர்களை நம் நாட்டில் பொறுத்துக் கொள்கிறோம். பிரான்சில் நம்மைப் போல் பொறுத்துக் கொள்வதில்லை. அதுவும் பெண்கள் அவ்வேலையில் ஈடுபட்டால், சமூகம் அவர்களை அழிக்கும். இது பழைய நாள் பழக்கம். பாரிஸ் நகரம் சீன் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஒருத்தியை மந்திரக்காரி என்று சந்தேகப்பட்டால் அன்றைய பழக்கப்படி, அவளை நதியில் போட்டு விடுவார்கள். அவள் பிழைத்துக் கரை ஏறினால், அவள் மந்திரக்காரி என ஊர்ஜிதம் செய்து கொளுத்தி விடுவார்கள். சமூகம், வாழ்வு, இப்பரந்த உலகம் வழங்கும் நியாயம் இதுவே. அவள் மந்திரக்காரியாக இல்லாவிட்டால், என்ன ஆவது? மூழ்கி உயிரிழப்பாள்! எந்த வகையிலும் அவளுக்கு மரணம் உண்டு. சமூகம் ஒருவரைச் சந்தேகப்பட்டால் அழித்துவிடும். சமூகத்தின் திறன் அப்படிப்பட்டது. இன்றும் எவரும் சமூகத்தை எதிர்க்க முன்வர

மாட்டார்கள். மனித வாழ்வு என்பது இதுவே. அன்னை வாழ்வின் கண்ணில் ஒருவர் பட்டுவிட்டால், எந்த வழியிலும் அவரை அது முன்னேற்றும். எந்த வகையிலும் அழிக்கப் பிரியப்படும் மனித வாழ்விலிருந்து எந்த வகையிலும் உதவ னையும் வாழ்வுக்கு மாறுவதே மாற்றமாகும். நம் மனம், செயல், கடந்த கால வாழ்வு, உறவு, தொடர்பு, நட்பு இவற்றை ஆராய்ந்தால், பிறர் நம்மிடம் இதுபோல் பழகியதோ, நாம் இதுபோல் மற்றவரிடம் பழகியதோ நினைவு வரலாம். இது மனித சுபாவத்தின் அம்சம் என்பதால், நம்மிடம் இல்லை என்று சொல்ல முடியாது. மேல் மனத்திற்குப் பலருக்கு இருக்காது. ஆழ்ந்த நிலையில் அனைவரிடமும் உள்ள அம்சங்கள் இவை.

நம் ஆராய்ச்சியில் இது இருப்பது தட்டுப்பட்டால், மாற்றத்தை ஆரம்பிக்க இது நல்ல இடம். இதைக் காண்பது சிரமம். கண்டால் மனம் ஏற்காது. இல்லை என்று ஆராய்ச்சி சொன்னால், நாம் மாற்றத்தை எளிதில் செய்யலாம் எனப் பொருள். இந்த மனப்பான்மை இல்லாவிட்டால் உயர்ந்தவர், இருந்தால் தாழ்ந்தவர் என்றாகாது. இருப்பவரானாலும், இல்லாதவரானாலும், மாற்றத்தை விழைகிறாரா, மாற்றத்தை தேடும் மற்ற அம்சங்களிருக்கிறதா என்பதே முக்கியம்.

1920, 1930இல் சுதந்திரம் வேண்டும் என்ற பொழுது, நாட்டிலிருந்த பெரிய மனிதர்கள் ராஜாக்கள், ICS ஆபீசர்கள், பெடரல் கோர்ட் (இப்பொழுதைய சுப்ரீம் கோர்ட்) வக்கீல்கள், டாடா, பிர்லா, நோபல் பரிசு பெற்ற இராமன், தாகூர் என ஆயிரம் பேரிருந்தனர். அவர்களுக்கெல்லாம் சுதந்திரப் போராட்டத்தை நடத்தும் தகுதி அளவு கடந்து இருந்தது. அதனால் அவர்களால் சுதந்திரம் வரும் என்று சொல்ல முடியுமா? சேலம் வக்கீல், தென் ஆப்பிரிக்காவில் இருந்த குஜரத் வக்கீல், கேம்பிரிட்ஜில் படித்த நேரு, விருதுநகர் தொண்டர் காமாராஜ் போன்றவர்கள்தாம் இந்தியாவுக்குச்

சுதந்திரம் கொண்டு வரப் போகின்றார்களா? என்று அன்று கேட்டிருந்தால், அக்கேள்வி சரியாகத் தோன்றியிருக்கும். பிரம்மாண்டமான கம்பனியை எதிர்த்து சிதம்பரம் விட்ட கப்பல்தான் ஜெயித்ததோ என்றால், சிதம்பரம் செக்கிழுக்கப் போனதுதான் உண்மை. திவாலான தகப்பனாரும், தீர்க்க தரிசனமும் பாரதியை மேடையில் பாட வைத்தது. 80 ஆண்டுக்குப் பின், இவர்கள் தகுதியுடையவர்கள் என்று நமக்குத் தெரிகிறது.

 • ஆன்மிகத் தகுதி மட்டும் மாற்றத்தைத் தாராது.
 • தகுதியில்லாமல் மாற்றத்தை நாட முடியாது.
 • கண்ணுக்குத் தெரிந்த எந்தத் தகுதியும் மாற்றத்திற்குரிய தகுதியாகாது.
 • மாற்றத்திற்குரிய தகுதியும் முயற்சியின்றி மாற்றத்தைத் தாராது.
 • தகுதியிருந்து, தொடர்ந்த முயற்சியிருந்தால், மாற்றம் பலிக்கும்.
 • முயற்சியை விட உயர்ந்த நம்பிக்கை அகந்தை அழிந்தால் ஏற்படும்.
 • அகந்தை அழிந்த அமைதியே மாற்றமாகும்.

மனநிலை (Mindset):

மனித சுபாவங்கள் பல. சமூக வாழ்வில் மனிதர்கள், சந்தர்ப்பங்கள் பல்வேறானவை. சுபாவமும், சந்தர்ப்பமும் கலந்து வெளிப்படும்பொழுது, அது படிப்புக்குத் தக்கவாறு அமையும். படிப்பால்தான் ஒருவர் மனநிலை நிர்ணயிக்கப் படுகிறது என்று நினைத்தால், அது பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை, சமூக அந்தஸ்து, சொந்தச் சுபாவம், தொழில், பிறந்த மண் ஆகியவை கலந்து நிர்ணயிக்கப்படுகிறது என்றறிய முடியும். ஆங்கிலத்தில் சொற்கள் (precise)

தெளிவாக இருப்பதைப்போல், மனநிலையைத் தமிழ்ச் சொற்களால் விவரிப்பது சிரமம். நான் இங்கு சொல்வதைக் கேட்பவர்,

 • அபிப்பிராயம் என்றால் அது opinion ஆகும்,
 • அவர் போக்கு எனில் அது attitude ஆகும்,
 • அவர் நோக்கம் எனில் அது motive ஆகும்,
 • அவருடைய பாணி எனில் அது pattern ஆகும்,
 • அவர் அப்படித்தான் எனில் அது nature ஆகும்,
 • அவர் பழக்கம் என்றால் அது habit ஆகும்,
 • அவர் வளர்ந்த வழி அது என்றால் upbringing ஆகும்,
 • பிறந்த ஊர் வழக்கம் எனில், native traitஆகும்.

என்பார். மேலும் behaviour,manners,personality,preference,his style of functioning  நடத்தை, பழக்கம், பர்சனாலிட்டி, பிரியம், அவர் விரும்பும் முறை என்றெல்லாம், நாம் பல வகைகளாக மனித மன நிலைகளை விளக்கலாம். நான் சொல்வது, ( is a condition of education and environmental values) படிப்பாலும், சூழ்நிலையின் பக்குவத்தாலும் வரும் நிலை. It is a personal attitude to social environmental context. சமூகத்தின் சூழலை, தன் போக்கில் ஏற்கும் மனநிலையை நான் குறிப்பிடுகிறேன்.

 • இறைவன் சிருஷ்டிக்குக் கட்டுப்படவனில்லை.
 • இறைவன் சிருஷ்டியை நிர்ணயிக்கின்றான்.
 • பெருநிலைகள் சிறுவழிகளுக்கு உட்பட்டவையல்ல.
 • சிறுவழிகள் பெருநிலைகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.
 • மனிதன் தன் வாழ்வு முறையை நிர்ணயிக்கின்றான்.
 • அவன் வாழ்வு முறை அவனை நிர்ணயிக்கவில்லை.

தன் வாழ்வு முறை, கல்வி முறை, உணவு, சர்க்கார், சமூகப் பழக்கங்கள், இலட்சியங்களை மனிதன் நிர்ணயிக்கின்றான். அவை மனிதனை நிர்ணயிப்பதில்லை. அதேபோல் மனநிலை (mind set) நாம் மாறக் கூடிய அளவை (scope of change) நிர்ணயிக்கும். அதனால் மாற்றத்தை அறிய மன நிலையை அறிவது உதவும். அவற்றுள் சிலவற்றைக் குறிக்கிறேன்.

1. சொத்து என்றால் நிலம் :

கிராமத்தில் நிலம் உள்ளவன் பணக்காரன், மிராசுதார், நிலம் இல்லாமல் பணம் சம்பாதித்தவனுக்கு நிலமுள்ளவனுக்கு உரிய அந்தஸ்திருக்காது. கிராமத்தில் அப்படிப்பட்டவர் வந்து தங்கினால், முதல் ஓரளவு நிலம் வாங்கிவிடுவார். உத்தியோகம், சம்பளம், பணம், ஷேர், சர்டிபிகேட், நகை தொழில் அனைத்தும் சொத்தானாலும், கிராமத்தில் நிலம் இல்லாத பணக்காரனுக்குப் பெண் கொடுக்கவும் தயங்குவார்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கு, நிலம் இல்லாதவனைப் பணக்காரனாக நினைக்க முடியாது என்பதால் அவன் இவ்விஷயத்தில் உண்மைக்குப் புறம்பாகிறான். உண்மையின் பலனை இழந்து விடுகிறான். இதை ஏற்க அவன் மனம் மாற வேண்டும் எனில் அது படும்பாடு நாமறிய முடியாது. அவனுக்கு மட்டும் தெரியும்.

2. உடல் தூய்மையே தூய்மை:

தூய்மை என்பதை நாம் பழக்கத்தால் அறிவோம். தூய்மை மனத்திற்குரியது. ஆனால் வழக்கத்தில் தூய்மையை உடல் தூய்மை என்று கொள்கிறோம். தீண்டாமை ஒழிப்புக்கு முன் உடலால் தீண்டினால் தூய்மை போய்விட்டதாகக் கருதுகிறோம். உடன் தூய்மையை மட்டும் பாராட்டி, இன்று மாதவிலக்கைப் பெண்கள் விலக்கிவிட்டார்கள். இது நாகரீகத்தின் சின்னம். மனத்தால் தூய்மையானவளாக

இருந்து, உடலால் தூய்மையைக் காப்பாற்ற முடியாதவளை, தூய்மையை இழந்ததாக உலகம் கொள்ளும். உயர்ந்த அறிவாளியும், அவன் அறிவு சொல்வதை மீறி, என்ன இருந்தாலும், யார் பொறுப்பானாலும், கெட்டது கெட்டது தான். ஒரு முறை உடல் தூய்மையை எக்காரணத்தால் இழந்தாலும், இனி அவள் தூய்மைக்கு உரியவளில்லை என்று மனம் கூறுவதையே ஏற்கிறான்.

அசைவ உணவை தூய்மைக் குறைவானதாக நம் நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் கருதுகிறோம். உணவுக்கும், தூய்மைக்கும் சம்பந்தமில்லை என்று அன்னை கூறுகிறார். உலகத்தில் புகழ் பெற்ற துறவிகள் அசைவ உணவு உட்கொண்டதை அறிந்தாலும், மனம் மாமிச உணவு தூய்மையைக் கெடுப்பதாக நினைக்கிறோம். அம்மனநிலையை மாற்றுவது எளிதன்று. பரம்பரையாக மாமிசம் சாப்பிடாதவர், ஒரு நாள் அதைச் சாப்பிட்டு விட்டால், இன்று நான் நெடுநாளைய பழக்கத்தை மாற்றிவிட்டேன் என்று கருதமாட்டார். பரம்பரையான தூய்மையை இழந்ததுபோல் பரிதவிப்பார். அறிவு, யோகம், தவம் இம்மனநிலை மாற்றத்திற்கு உதவாது. பரமஹம்சருடைய சிறப்பு இதுவே. இதுபோன்ற குறுகிய மனநிலையைக் கடந்தவர் அவர். மாமிச உணவு, கற்பு ஆகியவற்றில் உணர்வு, அறிவு கூறுவதை எளிதில் ஏற்காது.

தூய்மை என்பது அன்னையை மட்டும் நம்பியிருப்பது என்பதும் இம்மாற்றத்தில் தடுமாறும். நமக்கு இவ்விஷயத்தில் மனம் எங்கிருக்கிறது? நம் நிலையிலிருந்து நம்மால் மாற முடியுமா?என்பதே மாற்றத்திற்கு முக்கியம். நாலு பேர் செய்தால் நானும் செய்கிறேன் என்பவன் மனம் மாறவில்லை, செயல் மாறுகிறது. அன்று நாலு பேரை ஒட்டியிருந்தவன், இன்றும் நாலு பேரை ஒட்டியிருக்கிறான். உணவை

மாற்றினாலும், மனம் மாறவில்லை. நான் கூறும் மாற்றம் மனமாற்றம்.

 • தூய்மை மனத்திற்குரியது.
 • இறைவனை மட்டும் நம்புவதே தூய்மை.
 • உடல் தூய்மை புறத் தூய்மை.
 • அகத்தூய்மையைப் பிரதிபலிக்கும் புறத்தூய்மையே தூய்மை.
 • புறத்தூய்மை அக இருளை மறைக்கவும் உதவும்.
 • புறத்தில் தூய்மை குறைந்தால் அகத்தூய்மையை அது குறைக்கும்.

3. நம்மவரே மனிதர், மற்றவர் நமக்கு விலக்கு :

சுயநலம், குடும்ப நலம், ஊர் மீது பற்று, ஜாதியின் சிறப்பு, நாட்டு மீது பக்தி ஆகியவற்றை நாம் கடந்து விட்டோம் எனச் சொல்லலாம். மனம் உண்மையாக இருந்தால், இவையெல்லாம் நமக்கு மிக முக்கியம் என ஏற்றுக் கொள்ளலாம். தம்மைப் பற்றி தமக்கே தெளிவில்லாத இலட்சியவாதிகள் விஷயம் என்று ஒன்று புறப்படும்வரை இலட்சியம் பேசுவார்கள். முக்கியமான விஷயம், பிரமோஷன், பணம், சம்பந்தம், நம்பிச் செயல்படுதல், முக்கியமான நேரம், முக்கியமான இரகஸ்யம் என்பவை வந்துவிட்டால், அந்த நேரம் சொல் வேறு வகையாக வரும்.

 • தம்பி என்பதால் கையெழுத்துப் போடும் உரிமையைத் தர முடியுமா?
 • எத்தனை காலம் நண்பரானாலும் இந்த விஷயத்தில் சேர்க்க முடியுமா?
 • இதுபோன்ற விஷயத்தில் உன் பரீட்சை விஷப் பரீட்சையாக முடியும்.

 • வேறு ஜாதியில் கல்யாணம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.
 • விதவையைக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு நான் தாழ்ந்துவிட்டேனா?
 • எவரானாலும் மரியாதைக்குரிய மிட்டுடன் இருப்பது தான் நீடிக்கும்.
 • என்ன குறையானாலும் நம்மவனாயிற்றே என்று பார்க்கிறேன்.
 • நம் வீட்டு மனிதர் விஷயத்தில் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு மெய் சொல்ல என்னால் முடியாது.

இந்தச் சொற்கள் உண்மை. இலட்சியம் உண்மையில்லை. இங்கு மாற்றமில்லை எனில் மாற்றம் கிடையாது.

4. பணம் என்றால் நல்லது. பணக்காரன் என்றால் நல்லவன். யாரை ஊரை விட்டு விரட்ட வேண்டும் என்று அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தார்களோ, அவனுக்குப் பெரும்பணம் வந்தவுடன், இப்பொழுது அவனுக்குப் பணம் வந்துவிட்டது, இனி பழைய மாதிரி நினைக்க முடியாது; பணத்திற்கு மரியாதை இல்லாவிட்டால், பிறகு எதற்கு மரியாதையுள்ளது? பணக்காரனையும், சும்மா இருப்பவனையும் ஒன்றாகப் பேச முடியுமா? இதனால் பணம் வருகிறது என்றால், பிறகு நல்லது, கெட்டதை நினைக்க முடியுமா? பணமா? சும்மாவா? வாழ்நாள் முழுவதும் எதற்கு வேலை செய்கிறோம்? பணத்திற்குத்தானே? அது வந்தபின் பழையபடியே இருக்க முடியுமா? என்றெல்லாம் பேசி, பணமே பிரதானம் என்று நடப்பார்கள். பணம் இல்லாத இடத்தில் பணம் துச்சம் என்பார்கள்.

நாம் தேடும் மாற்றம் அன்னையை நோக்கிப் போவது. அன்னை மட்டும் வாழ்வில் குறியானால், அது பலிக்கும். அன்னை தவிர வேறு ஒன்றுக்கு முதலிடம் கொடுத்தால் மாற்றம் இல்லை. பணத்திற்கு முதலிடம் கொடுத்தால், அங்கு அன்னை எப்பொழுதும் வர முடியாது. மனம் பணத்தின் பெருமையைக் கருதும் நிலையிருந்தால், பணம் பலிக்காது, இடையறாத பணத்தின் நினைவு பலிக்கும்! எதை நினைக்கின்றோமோ அதற்குரிய பலன் வாராது. எதில் நிலைக்கின்றோமோ அதற்குரிய பலன் வரும்.

5. நான் அழிந்தாலும் பரவாயில்லை, நம் ஜாதிக்காரன் ஆளவேண்டும்.

விஸ்வாசம் எந்த உருவத்திருந்தாலும் உயர்ந்தது. ஆனால் செயலுக்குரிய பலன் வருமே தவிர விஸ்வாசத்திற்கு உரிய பலன் வாராது. இந்த ஊரில் மனிதனாக நடமாட முடியாத வகையறா நாங்கள். இன்று மாறிய நிலையில் எங்கள் மனிதர் தலைவராக இருக்கிறார் என்பதைக் கனவிலும் எங்களால் அன்று நினைத்துப் பார்க்கக்கூட முடிந்திராது. ஆனால் பதவிக்கு வந்தவனோ, எங்களையும், எங்கள் குடும்பத்தையும் அழிக்க வைராக்கியம் கொண்டுள்ளான். எங்கள் குடும்பம் அழிகிறது, இருந்தாலும், எங்கள் ஜாதிக்காரன் தலைவனாக இருப்பது போதும், என்று ஒரு குடும்பம் சொன்னால், அதை ஜாதி ஏற்கலாம், குடும்பமும் ஏற்கலாம். தன்னை அழித்து ஜாதிக்குச் சேவை செய்வதில் பெருமைப்படலாம். ஆனால், இது புத்திசாலித்தனமாகாது. இதனால், நாமோ, நம் ஜாதியோ, முன்னுக்கு வரப்போவதில்லை. உதவி செய்து பதவிக்குக் கொண்டு வந்த குடும்பத்தை அழிக்க முனைபவன் நன்றி கெட்டவன், துரோகி, அவனுக்குச் செய்யும் சேவை ஜாதிக்கும், விஸ்வாசத்திற்கும் செய்யும் சேவையாகாது, துரோகத்திற்குச் சேவை செய்வதாகும். பலன் மேலானதாக இருக்காது. அழிவாகவே இருக்கும்.

மனம் நல்லதில் நிலைக்க வேண்டும். நல்லதை நினைத்து, கெட்டதில் நிலைக்கும் மனநிலை நல்ல பலனைக் கொடுக்காது.

6. ஆசைக்குத் துணை செய்தவன், ஆசை நிறைவேறத் துணை செய்தவன், ஆத்ம நண்பன்

ஒருவர் ஆசையை அடுத்தவர் பூர்த்தி செய்வது 3 காரணங்களால், i) ஆதாயத்திற்காக, ii) அறிவில்லாமல் செயல்படுபவன் செய்கை, iii) இறைவனின் செயல்.

சொத்தைக் கொள்ளையடிக்க முதலாளியிடம் வேலை செய்பவர், முதலாளியின் தாழ்ந்த ஆசைகள், திருட்டுத் தனமான ஆசைகள், துரோகமான செயல்களுக்கு உடந்தையாக இருப்பார்கள். முதலாளிகள் தங்கள் காரியம் முடிந்தவுடன், இவர்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. சிலர் காலத்திற்கும் இவர்களுக்குக் கடமையுணர்வோடு செயல்படுவார்கள். இது கடமையன்று, விஸ்வாசமன்று.

தல் முதலாளி இன்று மாற்றத்தை நாடுபவரானால், தம் தவற்றைச் செயலும், மனதிலும் திருத்திக் கொள்ள வேண்டும். பாவிகள் செய்த உதவி பாவத்தைப் பூர்த்தி செய்ய. பாவத்திலிருந்து விடுபடுவதை விட, பாவிகளிடமிருந்து விடுபடுதல் முக்கியம். இதை விஸ்வாசம் என நினைப்பது, பாவத்திற்குப் பூஜை செய்வதாகும். இதைக் கடமை என நினைப்பவனுக்குக் கதி மோட்சமில்லை. மாற்றத்தை நினைக்கவும் இவரால் முடியாது.

7. நஷ்டமானாலும், நான் நினைத்தது நிறைவேற வேண்டும்.

பழக்கம், நினைப்பு, தப்புக் கணக்கு மனதை ஆட்கொள்ளும். திருடிப் பழக்கமான பரம்பரையில் ஒருவன் படிப்பால் பெரிய உத்தியோகத்திற்கு வந்த பின், அவனால் திருடாமலிருக்க முடியாது. திருடினால் வேலை போகும் என்பது

திட்டவட்டமாகத் தெரிந்தாலும், முதல் வாய்ப்பு கிடைத்தவுடன் திருடிவிடுவான். பழக்கம், படிப்பை மீறிச் செயல்படும். பரம் பரையாகத் திருமணம் பழக்கமில்லாத குடும்பங்களில் பெண்கள் நிலை அவலநிலையாக இருக்கும். ஒரு தலைமுறையில் திருமணம் செய்ய ஆரம்பித்தால், கணவனைத் தன் பிடியில் வைத்துக் கொள்ள மட்டும் மனம் நினைக்கும். கணவனுக்குத் பணிந்து குடும்பம் செய்த பரம்பரைப் பழக்கம் இல்லாததால், அவனைத் தன் பிடிக்குள் வைக்க மனம் நினைக்கும். அவன் பெரிய ஆபீசர், தொழிலதிபர் போன்று இருந்தால், அவனை அடக்க முனைவதால், அத்தனையும் நஷ்டமாகும் என்று தெரிந்தாலும், நஷ்டமானாலும், பழக்கம் அறிவை மீறிச் செயல்படும்.

அறிவால் பழக்கத்தை மீறுவது மாற்றமாகும்.

8. நாலு காசு கிடைக்கும் என்று தானே வருகிறேன்.

திருட்டே பிழைப்பு என்று வளர்ந்தவனுக்கு திறமையாலோ, விஸ்வாசத்தாலோ, வேறு காரணத்தாலோ, நல்ல பொறுப்பு அமைந்து, அதன் மூலம் உயர்ந்த பின், திருட உரிமை கேட்க மனம் நினைக்கும். திருடுவது தவறு என அறிய மனம் அனுமதிக்காது. திருடுவது சரி, நல்லது, உரிமை என்று பிறப்புக் குணம் தலை தூக்கும். உயர்வு வந்த பின் பழைய திருட்டுப் புத்தியைக் கைவிடத் தோன்றாது. உயர்வால் வந்த வமை, பிறப்போடு வந்த புத்தியை வலுப்படுத்துமே தவிர, உயர்வைக் கொடுத்த திறமையை வலுப்படுத்தாது. திருட அனுமதிக்காதவரைத் திட்ட மனம் தோன்றும். வண்டி கட்டிக் கொண்டு, பிறர் கொல்லையில் திருட வந்தவனைத் திருப்பி அனுப்பினால், நாலு காசு கிடைக்கும் என்று தானே வந்தேன், என்னை ஏமாற்றி விட்டார்களே என்று புலம்பினான்.

ஏதோ காரணத்தால் ஜெயித்துவிட்டதால், பழைய பழக்கத்தை நிறைவேற்ற முனையும் மனநிலை இது. புதிய உயர்வு வந்தால், பழைய பழக்கத்தை மாற்றுவது மாற்றம்.

9. நல்ல மனிதனின் கெட்ட இராசி

வீட்டில் சாவு நேர்ந்தபொழுது, வருபவர்களை முகமலர்ந்து சிரித்து வரவேற்பது நல்ல குணமா? இறந்தவரை நினைக்க முடியாத அளவுக்குக் கெட்ட குணமா? நல்லவர் எனப் பெயர் வாங்கியவர் சிலருக்கு, இராசி கெட்டதாக இருக்கும். நல்ல உள்ளத்தோடு இவர்கள் செய்யும் காரியம் கெட்ட பலனைக் கொடுக்கும். இவர்களிடம் உதவி பெற்றால், பெறுபவன் நஷ்டப்படுவான், அழிவான். மனைவி இறந்ததை விவரிக்கும்பொழுது சிரிப்பு வந்தால், அவள் மரணத்தைக் கண்டு உள்ளே எதுவோ சிரிக்கிறது என்று பொருள். இவர்களை நல்லவர் என்று கருதும் மனநிலை, அழிவுக்கு வித்து, இவர்கள் இராசிக்குத் தகுந்தாற்போல் நடப்பது சரி. மாற்றத்தை நாடுபவர் கவனிக்க வேண்டியவற்றில் இதுவும் ஒன்று.

10. வருமானமில்லாத தலைவருக்கு திவாலான முதலாளி பணக்காரன்.

தொழிலே செய்யாமல், சாமர்த்தியத்தால் குடும்பம் நடத்தியவர் பணம் உள்ளவர்களைத் தெய்வப் பிறவியாக நினைப்பார்கள். தெய்வமாக நினைப்பார்கள். முதலாளி என்ற நிலையிலிருந்து திவாலான பின் ஊருக்குப் புதியதாய் வந்தவரை வருமானமில்லாத தலைவர் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரிடம் பணம் இல்லை என்று தெரிந்த பின்னும், தலைவரால் அவரை பணக்காரராக நடத்தாமல் இருக்க முடியவில்லை. அவருக்குச் சேவை செய்ய நன்றிக்கு உரியவருக்குத் துரோகம் செய்ய நினைத்தார். துரோகம் செய்தார். அதனால் முதலாளிக்கு எந்தப் பலனும் இல்லை. நன்றிக்குரியவருக்கு எந்த நஷ்டமுமில்லை. மனைவியும், தாமும் ஆறுமாத கால இடைவெளியில் அகால மரணம் அடைந்ததுதான் மிச்சம்.

பணக்காரன் தெய்வம் என்ற மனநிலை, சாதாரண மனிதனை எந்த அளவுக்கு எடுத்துப் போகும் என்பதை

 

 book | by Dr. Radut