Skip to Content

பகுதி 7

பலன் ஒரே விதமாக ஏற்படும். பூலா என்பவர் இரவு 2 மணிக்கு, சமாதியில் சொன்ன செய்தியை, காலை 8 மணிக்கு அன்னை தம்மிடம் இரவு பூலா சொல்லியதாகச் சொன்னார். மனிதனை நம்பி நாடுவதற்குப் பதிலாக, மாறி அன்னையை நாடுவதை மாற்றம் என்று எழுதுகிறேன். மகனுக்கு இன்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்த பின் அவன் சேர மறுக்கிறான், வம்பு செய்கிறான் எனில் நாம் பயன்படுத்தும் முறைகளை உலகம் அறியும். இனி பையனிடம் வாதாடுவதில் பயனில்லை, அன்னையிடம் சொல்வோம், என மனம் மாறி, அன்னையிடம் சொன்னால், பையன் மாறுகிறான். சொல்லியதை மாற்றிக் கொள்கிறான், கல்லூரியில் சேர சம்மதிக்கிறான். இதைப் பலரும் பார்த்துள்ளனர். இது பலிக்க நாம் செய்ய வேண்டியவை,

 • இனி பையனைக் கேட்பதில்லை.
 • அன்னையை மட்டும் கேட்போம்.
 • பலனைப் பற்றி நினைப்பதில்லை என முடிவு செய்ய வேண்டும்.

தங்களை அறியாமல் மாறியவர்கள் இதுபோல் நடப்பதை அடிக்கடிக் காண்பார்கள்.

நாம் தேடும் மாற்றத்திற்கு மனதிலுள்ள வெறுப்பு தடை. விருப்பும் தடையாகும். வெறுப்புகளை, சமர்ப்பணத்தால் களைதல் பலன் தரும். நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு பக்தருக்குப் பெரிய தீங்கு செய்தனர். பக்தர் அவர்கள் திட்டத்திற்குப் பலியானார். இரண்டு நாள் கழித்து பக்தர் சமாதிக்கு வந்தார். அவர் இழந்ததைப் பெற பிரார்த்திக்கவில்லை. 'என் எதிரிகள் மீது எனக்கு வர்மம் ஏற்படக் கூடாது' என்று பிரார்த்தனை செய்தார். பல ஆண்டுகள் கழித்துத் தம் மனத்தைச் சுத்தம் செய்யும்பொழுது எல்லாவற்றையும் துடைத்து எடுத்த பின் இரு சிறு நிகழ்ச்சிகள்

கரைய மறுத்தன. அப்பொழுதுதான் தமக்கு ஊறு செய்த எதிரிகள் மீது தமக்கு வர்மம் மனத்திலில்லை என்று தெரிய வந்தது. வர்மம் ஏற்படுமுன் விழிப்பாக இருந்தால், பெரிய துரோகமாயினும் முன் கூட்டிச் செய்யும் சமர்ப்பணம் வர்மத்தைத் தடை செய்கிறது. அது போன்ற கவனமில்லாத இடத்து, சிறு நிகழ்ச்சிகளும் தடையாக உருவாகின்றன.

எனக்கு 1300 ரூபாய்க்குச் செலவு வந்த பொழுது, ஒரிரு நாளில் பணம் தேவை என்ற பொழுது, என்ன செய்யலாம் என நினைத்தேன். அருகிலுள்ள எவரிடமும் அப் பணத்தைப் பெற்றுச் சமாளிக்கலாம் என்று நினைக்கும் பொழுது, அன்னையைக் கேட்கத் தோன்றவில்லை. 2214 ரூபாய் எதிர்பாராமல் வந்தபொழுது, எனக்கு யாரைக் கேட்கலாம், என்ன செய்யலாம் எனத் தோன்றுகிறதேயொழிய அன்னையைக் கேட்கத் தோன்றவில்லை. எனினும் அன்னை அப்பணத்தை அனுப்புகிறார் என்று நினைத்தேன். அதே சமயம் 500ரூபாய் காணிக்கையாக வந்ததும், இது அன்னையின் சூழல் செயல்படுவதால் எனப் புரிந்தது. அன்று காலையிலிருந்து Thy Will be done திருவுள்ளம் பூர்த்தியாகட்டும்'எனச் சொல்ல முடிவு செய்தேன். வாயால் சொல்ல முடிகிறது. சொல் உள்ளிருந்து தானே சில சமயங்களில் எழுகிறது. தவறாமல் எழுவதில்லை என்று கண்டேன். என் மனம் முழுவதும் அங்கேயே லயித்திருந்தது. இதுபோல் சொல்லும் பொழுதும் நம் மனம் நமக்கு முக்கியப் பிரச்சினையை இதிருந்து விலக்கிவிடும். இந்த மந்திரம் மற்ற விஷயங்களைத் தழுவும். முக்கியமான விஷயம் எப்படி நடக்க வேண்டும் என நமக்கு அபிப்பிராயமிருந்தால், அதை இச்சொல்லிலிருந்து விலக்குவோம். இது என் அனுபவம். எனவே இம்முறை அது போல் எதையும் விலக்கக் கூடாது என்று முயன்றேன். முயற்சி அதிகமானால், அதாவது முக்கியப் பிரச்சினையையும் சேர்த்துக் கொண்டால், குரல் வாயிலிருந்து எழுகிறது. முக்கியப் பிரச்சினையை

விலக்கினால், குரல் உள்ளிருந்து எழுகிறது. எனவே அதையும் சேர்த்து, குரலை உள்ளிருந்து எழுப்ப முனைந்த பொழுது, பணம் தேவைப்பட்டது என்ற நினைவு வந்தது. அப்பொழுதும் அன்னை நினைவு வரவில்லை. எனினும்Thy Will be done என்ற சொல் அன்னையைச் செயல்பட நினைவு படுத்திற்று. மாற்றம் பல நிலைகளில் ஏற்படும். எந்த நிலையிலும், மனம் (sincere) உண்மையாக இருக்காது. நம் மனம் நமக்கே உண்மையாக இல்லை என்பதை ஏற்பதே உண்மையாகும். (sincerity) உண்மை அவசியம். மாற்றத்திற்கு மனம் உண்மையாக இருப்பது அவசியம்.

நாம் இருவகையினராகப் பிரிகிறோம். ஒன்று சமர்ப்பணம். அடுத்தது பழக்கம். நம் பழக்கம் சுவையற்றது. அது occupation) நம்மை ஆட்கொண்டது. நெடுநாளான பின் சுவையற்ற பழக்கமே நமக்கு, சுவையுடையதாகிறது. அதாவது அது இல்லாமல் முடிவதில்லை. ஜீவனற்ற, சுவையற்ற, அர்த்தமற்ற பழக்கங்கள் நம் வாழ்வை நிரப்புகின்றன. அவை நமக்கு அவசியம் என நாம் நினைக்கிறோம். உண்மையில் அவை அவசியமில்லை. நம்மால் அவற்றை விடமுடிவதில்லை. விடமுடியாத இவற்றை, கொஞ்சம் கொஞ்சமாகச் சமர்ப்பணத்திற்குள் கொண்டு வந்தால், அவை மாறும் நேரம் ஜீவன் சாவிலிருந்து விடுதலையடைகிறது. அதனால் உடல் புல்லரிக்கிறது. அந்நேரம் சூழல் மாறுகிறது. மருந்து சாப்பிட்டால்தான் குணமாகும், சுபவேளை நல்லது செய்யும், விரதங்கள் தெய்வ அனுக்கிரஹம் பெற்றுத் தருகின்றன, என்பவை இது போன்ற விடமுடியாத பழக்கங்கள். நம் வழிபாடு அனைத்தும் இத்தலைப்பில் வருவதாகும். அதனால் வழிபாடு ஜீவனற்றது என்கிறார் அன்னை. நம் கலாச்சாரம், மதாசாரம், அத்தனை ஆசாரங்களும் இத்தகையன. மாற்றம் ஏற்பட்டால் இத்தனைக்கும் கல்லறை கட்டி விடுவோம்.

The Mother அன்னை என்ற நூலில் பகவான் அன்னையை அற்புதமாக வர்ணித்திருக்கிறார். சமர்ப்பணத்தில் demandஐக் கலக்காதே. உனக்குத் தேவையானதை, சமர்ப்பணத்தினடியில் ஒளிக்காதே என்று அந்நூலில் எழுதுகிறார். நம் உரிமையை நாம் அனுபவிக்கிறோம். அதை இறைவனுக்கு விட்டுக் கொடுப்பதே சமர்ப்பணம். இது நமக்குள்ள உரிமை.Demand என்பது இல்லாத உரிமையை, தகுதியற்றவன் அடித்துக் கேட்பது. பொதுவாக இது தவறானவர்களுடைய செயலுக்குரிய அடையாளம். மேலும் விவரம் தெரியாதவர் கேட்பதாக இருக்கும். கணவன் மனைவியிடம் தன் சம்பளத்தை இருமடங்கு எனப் பொய் சொல்லியிருப்பான். தன் உத்தியோகத்தை பொய்யாக உயர்த்திக் கூறியிருப்பான். அவன் சில சமயங்களில் மறைத்திருக்கும்பொழுது மனைவி இல்லாத சம்பளத்தை கற்பனை செய்து கொண்டிருப்பாள். அதன் அடிப்படையில் வேகமாகப் பேசுவாள். ஆவேசமாகவும் பேசுவாள். இல்லாத உரிமையைத் தகுதியில்லாதவர், விவரம் தெரியாமல் கேட்கும் பொழுது அடித்துக் கேட்பார்கள். இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் அறிவில்லாத ஒருவர் ஆவேசமாக நடந்த பொழுது, நான் அவருடைய ஆவேசத்தையும், அறிவின்மையையும் புறக்கணித்து, அதன் பின் ஏதாவது உண்மை ஒளிந்திருக்குமானால், அதை நாம் ஏற்க வேண்டும், அப்படியிருந்தால் அவர் கேட்பதைத் தர வேண்டும் என முடிவு செய்தேன். பின்னணியில் உள்ளது உண்மையா, ஆவேசமா என அறிய முயன்றேன். 2 மணிக்கு முடிவு செய்து முடிவை, சமர்ப்பணம் செய்ய முனைந்தால், முடிவு சமர்ப்பணமாகவில்லை. மாலை 6.30 வரை முடியவில்லை. எனவே 61/2 மணி முதல் 8 மணி வரை நிகழ்வனவற்றைக் கவனிக்க நினைத்தேன். மூன்று நிகழ்ச்சிகள் நடந்தன.

 • ஒருவர் வந்து சர்க்காருக்குத் துரோகம் செய்து ஜெயிலுக்குப் போனவனைப் பற்றிச் சொன்னார்.

 • நான்கு பேர் பேராபத்திலிருந்து ஓரிழையில் பிழைத்த செய்தி வந்தது. பிழைத்தவர் அனைவரும் நம் வீட்டு மனிதர்.
 • உயிர் பிரியும் தருணத்தில் வரும் களைப்பு 4 ½ மணி நேரம் என்னைக் கவ்வியது.

சமர்ப்பணம் செய்ய முடியாத நிலையில் சூழல் மூன்று வகைகளாக எச்சரித்தது. பின்னணியில் உள்ளது உண்மையன்று, துரோகம் எனப் புரிந்து என் எண்ணத்தைக் கைவிட்டேன். இவர்கள் பக்தர்கள். மாறவேண்டும் என்ற நினைப்பவர்களில்லை. மாறி விட்டோம் எனப் பறை சாற்றுபவர்கள். நாம் மாறிய நேரம் தவறு வாராது. சரியா, தவறா எனில், சமர்ப்பணம் விளக்கும். சூழல் ஐயம் திரிபுஅறத் தெரிவிக்கும்.

பெரிய வாய்ப்புகள் சிறிய மனிதனுக்கு வருவதில்லை. விலக்கு எல்லா இடங்களிலும் உண்டு. பல தலைமுறைகளாக உழைத்து உயர்ந்தவர்க்கு அறிவாலும், திறமையாலும் நிறைந்த வாழ்வுண்டு. அவர்களுக்குப் பெரிய வாய்ப்பு வருவதுண்டு. சிறிய மனிதனுக்கு அது வருவதேயில்லை. எளிய மனிதர்கட்குப் பெரிய வாய்ப்புகளிருப்பதாகத் தெரியவே தெரியாது. அன்னை அன்பர்கட்கு வாய்ப்புகள் வரும், பெரிய வாய்ப்புகளும் வரும். அன்னை மீதுள்ள பக்தி பல தலைமுறை உழைப்புக்குச் சமம். அன்னையை நம்புவது நம்மை அறிவால் உயர்ந்தவர்க்குச் சமமாக்குகிறது. நம்பிக்கையோடு வரும் வாய்ப்பை அதற்குரிய பெருமையுடன் வரவேற்றால் அது பலிக்கும். அப்படியில்லாமல் நம் பழைய குணங்களை வெளிப்படுத்தினால், பெரிய வாய்ப்புகளைச் சிறிய புத்தியால் வரவேற்றால் அது மறையும்.

20 வருஷம் வியாபாரம் செய்து -- இறக்குமதி வியாபாரம் -- கையில் 20 இலட்சம் மீதியில்லாதவர்க்கு 20 கோடி வருமானம் அவர்கள் பக்திக்காக சூழலில் எழுந்தது. இருப்பது

4, 5 பேர். எவருக்கும் வரும் வருமானத்திற்குரிய உயர்ந்த திறமைகளோ, பண்போ, பக்குவமோ இல்லை, வந்தது போய்விட்டது. அவர்கள் மனம் உயர்ந்தது என்பதாலும், சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்பதாலும், வந்தது மறைந்தாலும், தொடர்ந்து வந்தபடியிருந்தது. இந்நிலையிலும் அவர்களால் அதைப் பெற முடியவில்லை.

நம்பிக்கையும், மூடநம்பிக்கையும் ஒன்றுபோல் தோன்றுவதுண்டு. ஒரு சந்தர்ப்பம் வந்தபொழுது ஆன்மா விழிப்புற்று, அக்காரியம் முடிவு பெறும் என உணர்வது நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையால் செயல்படும்பொழுது பயன்படுத்தும் முறைகளைப் பார்த்தவர், அம்முறைகளை நம்புவது மூடநம்பிக்கை. ஒரு பக்தர் எழுதிய நிகழ்ச்சியை அவர் சொற்களிலேயே கீழே எழுதுகிறேன்.

"நெய்வேலியில் பழுதான பாய்லரில் உள்ள (boiler tube) ட்யூப்களை மாற்றுவதற்காக ஒரு காண்ட்ராக்ட் கிடைத்தது. அதில் உள்ள எல்லா tubeகளையும் கழற்றி விட்டோம். ஒரே ஒரு tube மட்டும் கழற்றும் கருவிகள் சென்றடைய முடியாத இடத்தில் இருந்தது. எவ்வளவு முயன்றும் முயற்சி தோல்வியுற்றது. அன்று சனிக்கிழமை, நேரம் ஆகிவிட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தtubeஐ கழற்றாவிட்டால் ஒப்பந்தம் பூர்த்தியாகாது. முக்கால் கிணறு தாண்டிய நிலை. அடுத்த நாள் ஞாயிறு, வேலையில்லை.

வேலை ஒன்றும் செய்யத் தெரியாத நிலையில் பாண்டிக்கு வந்து சமாதியருகில் அமர்ந்தேன். அன்று முழுவதும் வேறு ஒன்றும் செய்யத் தெரியாத நிலையில் சமாதியருகே இருந்துவிட்டு திங்கள்கிழமை நெய்வேலி சென்று நான் பூட்டிய அறையைத் திறந்து boiler tubeஐப் பார்க்கச் சென்றேன். நான் தேடிய boiler tubeஐக் காணவில்லை. இருப்பினும்

நம்பிக்கையில்லை. மறுபடியும் தேடிப் பார்த்தேன். காணவில்லை. அந்த tube எப்படி மாயமாய் மறைந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே மின்னல் போன்ற எண்ணம். கருணைத்தாயின் கைவண்ணம் என்று அறிந்து நான் பெற்ற மகிழ்ச்சியை நேரில் பார்த்தால்தான் தெரியும்.

வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் சமாதியில் சென்று பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தது. அப்பொழுது திறமை, புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்ததால், இந்த அதிசயம் நடந்தது.''

இது நம்பிக்கையால் நிகழ்ந்தது. இவர் காரில் போனார். அதனால் காரில் போனால் காரியம் நடக்கும் என்று இவரைப் பார்த்தவர் நினைத்தால், இவரது ஆன்மா கொண்ட நம்பிக்கையை மறந்து, இவர் செய்த மற்ற பல காரியங்களைப் பார்த்து, அதேபோல் நாமும் செய்தால் பலிக்கும் என நினைப்பது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கையால் செயல்படும் யாரோ ஒருவருக்கு ஆன்மா விழிப்பு இருந்து காரியம் பலித்தால் அதையே நம்புவது மூடநம்பிக்கையை வலியுறுத்தவதாகும்.

 

மாற்றம் (Shift)

மாறியது நல்லது, மாற்றம் இனிமையானது, மகிழ்ச்சிக்குரியது, நம்பிக்கையை வளர்க்கக்கூடியது. ஆனால் மாறாதவர்க்கு நம்பிக்கை குறைவு என்று சொல்ல முடியாது. மாறியதால் நம்பிக்கை அதிகமாயிற்று என்று திட்டவட்டமாகச் சொல்லவும் முடியாது. மாற்றம் உயர்ந்தது, எனினும் சில முறைகளைப் பின்பற்றி மாறிவிட முடியும். ஒரு வகையில் ஜபம், படிப்பு, அன்னைக்கு அருகிலிருப்பதுபோல் மாற்றமும் ஒரு முறையாகச் செயல்பட முடியும். வெள்ளை மனமும் (freshness)

 உண்மையும் (sincerity) உயர்ந்தவை. அவை எக்காலத்தும் முறையாக மாறக் கூடியவை அல்ல. ஜபம் முதல் மாற்றம்வரை உள்ளவை முறைகள். மாற்றம் முழுமையான முறையாகாது. இவற்றால் வெள்ளை மனமும், உண்மையும் உற்பத்தியாகும். இவை உள்ளுறை சாராம்சமாகும். சாராம்சம் சைத்தியப்புருஷனுக்கு விழிப்பு தரும். அது உண்மை. அதற்கு மேற்பட்டது யோகத்திலில்லை.

மாற்றம் உயர்ந்தது என்பதால் அதை மட்டும் வலியுறுத்தினால் அதன் உயர்வு குறைந்து முறையாகிவிடும்.

அருகிலிருப்பது

அன்னைக்கு அருகிலிருப்பது பூர்வ ஜென்மப் புண்ணியம். அருகிலிருப்பதால் விழிப்போடிருக்க வேண்டும் என்பதை அறியவேண்டும். தூரத்திலிருப்பவர் பழக்கம், அருகில் இருப்பவர்க்குக் கூடாது, பாதிக்கும். தூரத்திலிருப்பவர் நெறிகளைப் பாராட்டாமலிருக்கலாம். அது அவரைப் பாதிக்காது. அருகிலுள்ளவர் நெறிகளைப் புறக்கணித்தால் அவர்களை அது பாதிக்கும். சூழலின் உயர்வுக்குத் தகுந்த உயர்வான நெறி தேவை என்பதை அறிதல் முக்கியம்.

மனித சுபாவத்தைப் பற்றி உலகம் நன்கறியும். அதன் சூட்சுமங்களை அறியாத நாகரீகமில்லை. ஸ்ரீ அரவிந்தர் இது வரை உலகம் அறியாத மனித சுபாவங்களைப் பற்றியும் எழுதியுள்ளார். உலகம் அறிந்த அம்சங்களுக்கும் உலகம் அறியாத விளக்கங்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று, நம்முள் பல்வேறு சுபாவங்கள் கலந்துள்ளன, எதிரெதிரானவையும் உடனுறைகின்றன என்பது.

சர்வதேச அரங்கில் மதர் சர்வீஸ் சொஸைட்டி செயல்பட விரும்பும் சமாதானக் குழு ஒன்றை நிர்மாணித்தது. நோபல்

பரிசு பெற்ற இருவர், ஜார்டன் ராணி, ரஷ்யாவின் தலை சிறந்த விவசாய விஞ்ஞானி, ஜப்பானியக் கப்பல் கட்டும் தனவந்தர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி, ஐரோப்பிய விஞ்ஞானக்கழகத் தலைவர், ஐ.நா. அபிவிருத்திக் கழக இந்தியத் தலைவர் போன்றவர்கள் நிறைந்த குழு அது. இதை நிர்மாணிக்க நாம் நிதி வசூல் செய்யவில்லை. சொஸைட்டி உறுப்பினர்களுடைய சொந்த வருமானத்தைச் செலவு செய்து கமிஷனை நடத்தி 5 ஆண்டுகளில் அதற்கான (ரிப்போர்ட்) அறிக்கை தயார் செய்தோம். கமிஷன் முடிந்துவிட்டது. கடமையும் நிறைவேறியது.

இரண்டாவது யுத்தம் முடிந்த பின் எந்த நேரமும் மூன்றாம் யுத்தம் வெடிக்கும் நிலையிருந்ததால், பகவானும் அன்னையும் அதை, சூட்சும உலகில் தடுப்பதைத் தங்கள் முதற் கடமையாகக் கொண்டனர். கொரியா, கியூபா, வியட்நாம் ஆகிய இடங்களில் மூன்றாம் யுத்தம் உருவாகியது. அவற்றை அன்னை சூட்சும உலகிலேயே தவிர்த்தார். மயிரிழையில் தவிர்க்கப்பட்டவை அவை. சைனா இந்தியாவில் அதே சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதுவும் அன்னையால் தவிர்க்கப்பட்டது. என்றாலும் அணுகுண்டுகளை மலைபோல் குவித்துள்ளதால், இக்குவியல் வல்லரசுகளை உந்தும் என்று அன்னை சொல்கிறார். அன்னை disarmament ஆயுதங்களை அழிக்க எவரும் அறியாமல் ஆரோவில் நகரத்தை நிர்மாணித்து வேலை செய்து வந்தார். ஆயுதங்களை அழிக்க, அன்னை செய்தவை அனந்தம். அதை உலகில் தொடர்ந்து செய்ய வேண்டியே சமாதானக் கமிஷனை ஏற்படுத்தினோம். அன்னையின் சக்தி பெரியது. முடிவான பலனை முதலேயே கொடுத்தது. கமிஷன் முதற் கூட்டம் போடுவதற்குச் சில நாட்களுக்கு முன் இதன் இலட்சியம் பூர்த்தியாயிற்று. பெர்லின் சுவர் விழுந்தது, ரஷ்யாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் எதேச்சாதிகாரத்தை அழித்தன கமிஷன் இதரஇலட்சியங்களை நாடியது.

 • உலகில் உணவு பற்றாக்குறையை அழிக்க,
 • அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை வழங்க,
 • எழுத்தறிவின்மையை உலகெங்கும் ஒழிக்க,
 • உணவுப் பொருள் உற்பத்தியை உலகில் இரு மடங்காக்க,
 • ரஷ்ய நாடுகளில் உற்பத்தியை இருமடங்காக்க,
 • பணத்தையும், பொருளையும்விட மனிதனை முக்கியமாக்க,

கமிஷன் அறிக்கை தயார் செய்தது. இம்முயற்சியில் நாம் அனைவருடைய ஒத்துழைப்பையும் பெற்றோம். ஒருவர் மட்டும் ஆரம்பத்திலிருந்து நம் முயற்சியின் சிறப்பை, பூரணமாக அறிந்து பாராட்டினார். அவர் பாராட்டு நமக்கு அளவு கடந்த உற்சாகத்தைக் கொடுத்தது. நாட்டில் பணவீக்கத்தை அடியோடு அழித்த பெருமை அவருடையது. இந்தக் கமிஷன் உங்களுடையது. எல்லா வேலைகளையும் செய்தது நீங்கள், செலவும், உழைப்பும், இலட்சியமும் உங்களுடையனவே என்று பாராட்டினார். இவ்வுயர்ந்த பாராட்டு வேறெங்கும் நமக்குக் கிடைக்கவில்லை. அவர் கமிஷனுக்காக ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு 8 இலட்சம் பீஸ் வாங்கினார். தன்னால் அதைச் சேவையாகச் செய்ய இயலாது என்றார். கட்டுரையைக் காலம் கடந்து அறிக்கை அச்சுக்குப் போன பின் கொடுத்தார். கட்டுரை முடியுமுன் பீஸ் கேட்டு பில் கொடுத்தார்.

இலட்சியத்தையும், சேவையையும் இலட்சியக் கருத்துகளையும் எவரும் கண்டு கொள்ளாத காலத்தில் மனமார வாயாரப் புகழ்ந்தவர் இவர். இவர் மனம் அது போல் உண்மையான பரந்த நோக்கமுடையது. அத்துடன் தன்னால் சேவை செய்ய முடியாது என்று பீஸுக்கு அவசரப் படும் குணம் உண்டு. இவை இரண்டும் எதிரெதிரானவை.

அவை ஒருவரிடத்திலேயே ஒரே சமயத்தில் ஒரே விஷயத்தில் இருக்க முடியும் என்று பகவான் மனித சுபாவத்தைப் பற்றி எழுதியுள்ளார். நம் அனுபவத்தில் இது போன்ற பலரைக் காணலாம். மாற்றத்தை நாடுபவர் தம்முள் இதுபோல் எதிரெதிராக உள்ள சுபாவங்களைக் காண முன்வர வேண்டும். எதிரெதிரான சுபாவங்களின் பின்னணியில் பிரம்மம் உள்ளது என்பது தத்துவம். அதைக் கண்டு கொண்டால் ஆண்டவனை நெருங்க முடியும்.

நான் சொல்லும் மாற்றம் அதில் முதல் அடி.

மனித வாழ்வின் அம்சங்களுக்கு அர்த்தமுண்டு, சூட்சுமமான அர்த்தமும் உண்டு. பழம்பெரு நாகரீகங்களான எகிப்து, இந்தியா, சைனாவில் இது பண்பாக மாறியதைக் காணலாம். பிரான்சு போன்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்வில் இப்பண்புகள் சிறந்து வெளிப்படுவதைக் காணலாம். இதன் அம்சங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட்டு மாற்றத்திற்கு அது பயன்படும் முறையைக் கூற விரும்புகிறேன். அதற்கு முன் சில அம்சங்களைக் குறிப்பிடுகின்றேன்.

 • தெய்வம் உட்பட எவரும் உலகில் உண்மையாகச் செயல்பட முடியாது.
 • தர்மத்தையும் நிலை நாட்ட அதர்மமான முறை அவசியம்.
 • உலகில் எந்த நாகரீகமும் ஆணுக்குக் கற்பைக் கற்பிக்கவில்லை.
 • பெண்ணின் கற்புக்கு அடிப்படை சொத்துரிமை.
 • தான் வாழ்வதில் பெறும் இன்பத்தை விட பிறரை அழிப்பது மனித இயல்பு.

 • பிறர் வாழ மனிதன் பொறுக்க மாட்டான்.

அன்னை இவற்றின் உண்மையை ஏற்றார்; ஆனால் அன்னை வாழ்வில் அவர் இவற்றை அனுமதிப்பதில்லை. அவருடைய கோட்பாடுகள் மாறியவை.

 • மனிதனும் உலகில் உண்மையாகச் செயல்பட முடியும்.
 • அதர்மத்தையும் அழிக்க சத்தியம் மட்டும் போதும்.
 • அன்னை வாழ்வில் கற்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவசியம்.
 • பிறர் வாழ்வை வளப்படுத்துதல் மனிதனுடைய கடமை.

இம்மாற்றம் ஏற்பட்டால் நாம் எந்த வாழ்வுக்கு அடிமைப்பட்டுள்ளோமோ, அது நமக்கு அடிமைப்படும். பேச்சு, சிந்தனை, அறிவு, தெளிவு, மௌனம் ஆகியவற்றில் இம்மாற்றம் கொண்டுள்ள தொடர்பை மட்டும் உதாரணமாக விளக்குகிறேன். இது சம்பந்தமான கருத்துக்கள் சில.

நமக்கு ஒரு விஷயம் புரியும்வரைதான் அது நம் மனத்தில் எண்ணமாகவோ, வாயில் சொல்லாகவோ வெளி வரும். புரிந்த பின் சொல் மறையும், எண்ணம் கரையும்.

விஷயம் புரிவது முழுமையானால், அதன் சக்தி எழுந்து, காரியத்தைப் பூர்த்தி செய்யும் திறனுடையது (life response).

புரிந்த விஷயத்தை நாம் பேசுவதாக நினைப்பது செயல் அளவில் உண்மை. மனத்தளவில் நாம் புரியும்வரை பேசுகிறோம். புரிந்தால் பேசுவது இல்லை. அதாவது நமக்குப் புரியாதவற்றை மட்டுமே பேசுகிறோம்.

மனம் செயல்படும் நிலைகளை அதன் வெளிப்பாட்டால் கீழே பட்டியலாக விவரிக்கின்றேன்.

1. திரும்பத் திரும்பச் சொன்னதையே அக்ஷரம் தவறாமல் சொல்லும் முதல் நிலை. (Repeated utterances of the same idea)

மனம் புரிந்து கொள்ள முயல்வதை உணர்வாலும், உணர்வின் சொல்லாலும், வாயின் அசைவாலும் பேசுவது. (physical,vital expression of mental work)

2. பேச்சு, பேச்சு எனும் செயல் (speech-the spoken work)

மனம் புரிந்து கொண்டதை உணர்வு வெளிப்படுத்துவது.(vital expressing the idea of mind)

3. இடைவிடாத சிந்தனை (Repeated thinking)

மனத்தின் அஸ்திவாரமான ஜடம் (மூளை) செயல்படுவது. (Brain-physical-activity)

4. உணர்வு மனத்தில் எண்ணமாக எழுவது (mental emotional thought)

உணர்வு மனத்தைச் செயல்படுத்துவது (mental vital activity)

5. (comprehension) புரிவது

மனத்தின் தூய்மையான செயல் (pure mental activity)

6. எண்ணமற்ற மனநிலை (its creation)

மனம் புரிந்துக் கொள்கிறது (mind understands)

7. அதை மனம் மறந்து விடுகிறது (it is forgotten)

ஆழ் மனம் புரிந்து கொள்கிறது (subconscient in the mind understands)

8. வாழ்வின் எதிரொலி நிற்கிறது (life response of the description ceases)

சூழ்நிலை கட்டுப்படும் (mastery over the environment)

ஜீவனை 9 பகுதிகளாகப் பிரித்த பொழுது அவற்றுள் மனத்தை 1,2,3, என்ற நிலைகளில் பிரித்தேன்.

முதல் நிலை

சிந்தனைக்குரிய தூய்மையான மனம் (Pure mind)

இரண்டாம் நிலை

உணரும் மனம் (mental vital)

மூன்றாம் நிலை

மூளையால் நிர்ணயிக்கப்படும் ஜடமான அறியாமை மனம் (Physical mind)இம்மூன்று நிலைகளும் மேல் மனத்திற்குரியவை.

ஆழ்மனம் (subconscient) உள்மனத்தில் (inner mind) உறைகிறது. மேல் மனம் முழுவதுமாகப் புரிந்த பின், ஆழ்மனம் அதை ஏற்கிறது. அத்துடன் புரிய வேண்டிய நிர்ப்பந்தம் மறைகிறது. மேற்சொன்னவற்றை வேறு வகையாக எழுதினால்,

 • புரிய ஆரம்பிக்கும்பொழுது திரும்பத் திரும்பப் பேசுகிறோம்.

 • முதல் நிலையில் புரிந்தால் சிந்திக்கிறோம், பேச்சு குறையும்.
 • அடுத்த நிலையில் புரிந்தால் எண்ணம் மறைகிறது. அந்நிலையை ஆழ்மனம் ஏற்கிறது.
 • மேல் மனம் ஏற்றதை ஆழ்மனம் ஏற்றால் அறிவு, திறனாகி, சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, எதிரான இடையூறுகளை (எதிரொலியாக எழுபவை) முறியடித்து நம்மைச் சாதிக்கத் தயார் செய்கிறது.

சுருக்கம் :

 • பேசினால் புரியவில்லை என்று பொருள்.
 • சிந்தனை செய்தால் முழுவதும் புரியவில்லை என்று அர்த்தம்.
 • முழுவதும் புரிந்தால், சூழ்நிலை கட்டுப்படும்,
 • காரியம் பூர்த்தியாகும், தடை இருக்காது.

மாற்றத்தை நாடினால் காரியம் 10 மடங்கு பூர்த்தியாக வேண்டும். நம் மனத்தைச் சோதனை செய்தால், பேசாத இடம், நினைக்காத இடம், அதிகமாகப் பேசும் விஷயம், அடிக்கடி நினைப்பவை தெரியும்.

பேச்சைக் குறைத்து, சிந்தனையாக்கி, சிந்தனையை அழித்துச் செயலாக்கி, செயலை 10 மடங்கு உயர்த்தி மாற்றத்தைச் சாதிக்க வேண்டும்.

மனம் மனப்போக்கால் attitude நிறைந்தது. அதைச் செயல்பட வைப்பதும் அதுவே. பல சமயங்களில் மனப்போக்கு உதவியாக இருக்கும். சில சமயங்களில் தலைகீழாக இருக்கும். அர்த்தமற்றதாகவுமிருப்பதுண்டு.

மூடநம்பிக்கையிலிருந்து விடுபடும் நிலை, கிராமிய வாழ்வை விட்டு நகரத்திற்கு வருவது, படிப்பை ஏற்க முன் வருதல், அறிவை ஏற்கும் மனநிலை, பண்பை ஏற்று மாறுவது, நாலுபேருடன் ஒத்துப் போவது மாறி சொந்தமாகச் சிந்திப்பது, சொந்தச் சிந்தனையை விட்டு அன்னைக் கருத்தை ஏற்பது, எதிரியை அழிப்பதில் பெருமையடைவதை விட்டு நாகரீக ஒத்துழைப்பை ஏற்பது, சோம்பேறித்தனத்தை அதிர்ஷ்டமாகக் கருதுவதைவிட்டு வேலை செய்ய முன்வருதல், பிறரால் ஏற்படும் வசதியை அறியாமல் அவரை எதிரியாக நினைப்பதை மாற்றி வசதி பெறுதல், பிறரை அழித்துச் சேர்த்த பணத்தை அந்தஸ்தாக நினைப்பதை மாற்றி, அருளால் பொருள் சேர்க்க ஆரம்பிப்பது, உயர்ந்த பட்டம் பெற்ற மடையன் பட்டத்தின் உயர்வை மடமையின் உயர்வாகக் கருதுவது, உயர்ந்த ஜாதியின் தாழ்ந்த குணங்களை அதே போல் போற்றிப் பெருமைப்படுவது போன்ற பல்வேறு நிலைகளைவிட்டு மனிதன் அடுத்த நிலையை நாடுகிறான்.

 • நிலை மாறும்பொழுது பல சட்டங்கள் செயல் படுகின்றன.
 • ஒவ்வொரு நிலைக்குரிய சட்டங்களுண்டு.
 • ஒரு நிலைக்குரிய சட்டம் அடுத்த நிலையில் செல்லாது.
 • ஒரு நிலைக்குரிய சட்டம் அந்நிலையில் பெரிய உதவி, அடுத்த அடுத்த நிலையில் அது தடை.

நிலைக்கும், சட்டத்திற்கும் தொடர்பில்லையானால் சட்டத்திற்கு அர்த்தமில்லை.

இவற்றை விவரிக்கும் சில நிகழ்ச்சிகள் :

 1. மேலை நாடுகட்கு ஆசிய நாடுகள் பெரிய மார்க்கெட் என்று புரியாத நிலையில் ஆசிய நாடுகளை உலகுக்குப் பாரமாக நினைத்தார்கள். பெரிய மார்க்கெட் உள்ள இடம் என்று தெரிந்தவுடன், ஆசிய நாடுகளை உலகில் எதிர்கால அதிர்ஷ்டத்தின் உறைவிடம் என்று பேசுகின்றனர்.
 2. பெரிய டெக்னலாஜி (automation) வந்தால் 100 பேர் செய்த வேலை ஒருவர் செய்வதால், டெக்னாலஜி வேலையில்லாத் திண்டாட்டத்தை உற்பத்தி செய்கிறது என்று பேசியவர் டெக்னாலஜி வந்தபின் வேலைவாய்ப்பு இந்நூற்றாண்டில் அமெரிக்காவில் 4 மடங்கு அதிகரித்து உள்ளது என்று கண்டார்.
 3. தரித்திரம் பிடித்த சோம்பேறி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 15 வருஷம் தெண்டச் சோறு சாப்பிடும் பொழுது தானே அந்த வீட்டு அதிர்ஷ்டம் என்று பேசிக் கொண்டிருக்கும்பொழுது, நிலை மாறி அவர் வெளியேறியவுடன் தரித்திரம் மறைந்ததை வீடு கண்டது.
 4. ஸ்தாபனத்தில் புதியதாக வந்த சிறிய மனிதனை எவரும் சேர்க்க மறுத்த பின், சிறியவர் பக்தியால் பெரியவரான பின், அவரால் தங்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கண்டனர்.
 1. கோள் சொல்வது, மட்டமாகப் பழகுவது, மட்டம் தட்டிப் பேசுவது, விஷமம் செய்வது, பொய் வதந்தி கிளப்புவது போன்றவை நிறைந்த ஸ்தாபனத்தில் இவற்றையெல்லாம் பண்பின் உயர்வால் செய்ய முடியாதவரை, திறமையற்றவர் என நினைத்து அவருக்குப் பாதகம் செய்த பொழுது, தம் திறமையால் அவர் தம்மைத் தற்காத்துக் கொண்ட வகையைப் பார்த்து தாங்கள்

திறமையற்ற நிலை என நினைத்தது பண்பின் பக்குவம் எனக் கண்டனர்.

நான் கூறும் மாற்றம் அன்னை வாழ்வுக்கு மாறுவது.

உலகில் சமூகத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் நடந்தபடியிருக்கின்றன. அவை சமூக மாற்றம், மனநிலை மாற்றம், செல்வ நிலை மாற்றம், நாகரீக மாற்றம் எனப் பல வகைப்படும். சுருக்கமாக அவற்றைப் பார்ப்போம்.

 • ஜடமான மனிதன் உணர்வுள்ள குடிமகனாவது (physical to vital)
 • உணர்ச்சி வசப்பட்டவன் அறிவால் மாறுவது (vital to mental ),
 • சிந்தனைக்குரிய அறிவாளி தவத்தை ஏற்பது (mental to spiritual),
 • மோட்சம் தேடும் யோகி உலக ஆன்மீக விடுதலையை நாடுவது (spiritual to the supramental),
 • புறநிகழ்ச்சியிலிருந்து அகவுணர்வை நாடுதல் பழைய மரபை விட்டுப் புதுமையைக் கைக்கொள்வது (tradition to modernism),
 • கிராமத்தை விட்டு நகரத்தை அடைவது (rural to urban),
 • ஜீவனற்ற பழைமையை விட்டு நடைமுறையை ஏற்பது (past to present),
 • குறுகிய உள்ளம் பரந்து விரிவது (narrow to broadmindedness),
 • சுயநலம் பரநலமாவது (Selfishness to selflessness).

இவையெல்லாம் நாம் அறிந்தவை. ஏராளமான உதாரணமும், விளக்கமும் எழுதலாம். அவசியமில்லை. எல்லா இடங்களிலும் சிரமம் எழும் பொழுது கேள்வி ஒன்று தான்.

பழைமையை விட முன் வரமுடியுமா?

உலகில் உன்னதமான வேதப் பரம்பரையை அன்னை சிறுபிள்ளைத்தனம், கடந்த காலப் பழைமை என்கின்றார். தெய்வங்களும் ஏற்கும் திருமண வாழ்வை ஒழிக்க வேண்டும் என்கிறார். இயற்கையாகப் பெற்றோர் திறமை பிள்ளைகளுக்கு வருவதுபோல் உலகில் பெரும்பாலான சமுதாயங்கள் ஏற்கும் வாரிசுத் தத்துவத்தை அழிப்பது அவசியம் என்கிறார் அன்னை. அன்னைக்கு உலகமே பழைமையாகப் படுகிறது. உலகத்தில் அனைவரும் அறியும் இனிமையை (sweetness) அன்னையின் தெய்வீக இனிமையை இதன் மூலம் விவரிக்க முடியாது. அவை வேறு வேறு இரகத்தைச் சார்ந்தவை என்கிறார். பிரியம் என்பதை உன்னதமாகக் கருதுகிறோம். கடமையை, தெய்வமாக நினைக்கிறோம். வாழ்வில் உயர்வது மட்டுமே இலட்சியம் என்கிறோம். பிரியமும், கடமையும், உயர்வும் பின் தங்கிய மனிதனுக்குரியன. உண்மை (sincerity) புது மனிதனுக்கு உரியது என்கிறார் அன்னை. அன்னையின் ழுமையை அறிவது, அறிந்து ஏற்பது இன்றைய உயர்வை, சுவையற்ற அர்த்தமற்ற செயலாக்கும்.

அன்னையே புதுமை.

நாமறிந்த அனைத்தும் பழைமை.

தீராத பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புகிறவர்கள் பிரார்த்தனையை மேற்கொண்டால், ஏதாவது அதிசயம் நடக்கும், அன்னை அதை நடத்துவார் என்று

எதிர்பார்ப்பதுண்டு. அதிலிருந்து மாறி, நான் செய்யக் கூடியதென்ன? என்ற நினைக்க வேண்டும் என்பது இம்மாற்றத்தின் அடிப்படைகளில் ஒன்று. அகவுணர்வால், புறநிகழ்ச்சி ஆளப்படுகிறது என்பதை இது குறிக்கும்.

நம் மனப்போக்கு, செயலில் உள்ள குறை, நம்பிக்கை ஆகியவற்றை மாற்றி எதிர்பார்க்கும் பலனை அடைதல், புறநிகழ்ச்சியை எதிர்பார்ப்பதைவிட மேல். இதைவிட உயர்ந்ததும் உண்டு. அது நம்மை நம்பாமல் அன்னையை நம்புவது. எதையும் கோட்டுக்கு மேலிருந்து செய்வது நல்லது, கீழிருந்து செய்வது எதிர்மாறான பலனைத் தரும். இம்முறையையும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

 1. நம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு, இனி அன்னையை மட்டும் நம்புவது.
 2. நம்மால் முடிந்ததில் நம்பிக்கையில்லாமல், அன்னையை மட்டும் முதலிலிருந்து நம்புவது.

I முதல் நிலையைக் கோட்டுக்கு மேலும் கீழுமாகப் பிரித்து காட்டலாம்.

நான் செய்யக்கூடியது என்ன (2)

---------------------------------------------------------------------------------------------------------------------------

ஏதாவது அதிசயம் நடக்கும் எனக் காத்திருப்பது (1)

 

II இரண்டாம் நிலையையும் அதேபோல் பிரித்துக் காட்டலாம்.

 

முயற்சியிலும், திறமையிலும் உள்ள நம்பிக்கையை அகற்றி முதலிலிருந்தே அன்னையை எதிர்பார்த்துக் காத்திருப்பது. (4)

முயற்சியை முடித்துவிட்டுக் காத்திருப்பது (3)

நிலைகள் இரண்டு. ஒவ்வொரு நிலையிலும் ஒரு கோடு என இரு கோடுகள்.

II

4

------------------

3

 

2

-----------------

1

1ருந்து 2க்குப் போவது முதல் நிலை மாற்றம். 3லிருந்து 4க்குப் போவது இரண்டாம் நிலை மாற்றம். முதல் நிலையிலிருந்து (I) இரண்டாம் நிலைக்குப் (II) போவது அடிப்படையான மாற்றம்.

வாழ்வின் சாதனையும், சந்தோஷமான குடும்பமும்

சாதனை எனில் நமக்குத் தேவையான காரியம் பலன் தருவதாகும். நம்மைப் போன்ற பிறரால் முடியாத தேவையான உயர்ந்த காரியத்தை மேற்கொண்டு பலன் பெறுவது சாதனையாகும். ஊரில் உள்ள நம்மைப் போன்ற கடை வியாபாரி சௌக்கியமாக வீடு கட்டிக் கொண்டு நல்ல சிறு குடும்பம் செய்யும் பொழுது, ஒருவர் பஸ் வாங்கி ஓட்டினால் அது சாதனை. நம்மைப் போன்ற மாணவர்கள் B.A, B.Sc அட்மிஷனுக்கு அலையும்பொழுது நம்மால் இன்ஜீனியரிங், மெடிகல், விவசாயக் கல்லூரி போன்ற இடங்களிலும் இடம் பெற முடியும் என்பது சாதனை. நான் சொல்லும் சாதனை, பிரச்சினையற்ற, வாய்ப்பு நிறைந்த உயர்நிலை வாழ்வு பெருவாழ்வாக நமக்கு மாற்றத்தால் பலிப்பது. இதைச் செய்ய பல்வேறு உபாயங்கள் உள்ளன. குடும்பக் கண்ணோட்டத்தில் இப்பகுதியை எழுதுகிறேன்.

குடும்பம் நம் உணர்வு மையம். உணர்வு வாழ்வு மையம். உடலுழைப்பின் பலன் சிறியது. அறிவின் தீட்சண்யம் பிரகாசமானது. சாதிக்காது. உடலுழைப்பின் செறிவையும், அறிவின் வீச்சையும் சேர்த்துப் பூரணம் பெறக் கூடியது உணர்வு. பள்ளியில் இரவு பகலாய்ப் படிக்கும் மாணவனைச் சுற்றியோ, அதிமேதாவியுடனோ கூட்டம் இருப்பதில்லை. தலைவன் மாணவர்களால் சூழப்பட்டிருப்பான். தலைவன் உணர்வைத் தட்டி எழுப்புவான். தலைவனான மாணவன் கடின உழைப்பாளியாகவும், புத்திசாலியாகவும் அமைந்த இடத்தில் அவன் கல்லூரித் தலைவனாகி, பின்னால் நாட்டில் தலைவனாகிறான். இன்றையத் தலைவர்களின் மாணவப் பருவம் அதற்குச் சான்று.

உணர்வால் மனிதன் வாழ்வதால், குடும்பம் உணர்வைப் பூர்த்தி செய்வதால், நல்ல திறமையான குடும்பம் உணர்வின் பூரணம். குடும்பம் அதுபோல் வெற்றியடைந்தால், வெளியில் அவன் சாதிப்பான். குடும்பத்தின் மையம் மனைவி. மனம் ஒத்த மனைவி அமைந்தால், மனைவியின் மனத்தோடு ஒன்றியிருக்க மனம் இசைந்தால், குடும்பம் நிறையும், குடும்பம் நிறைந்தால் தொழில் நிறைவு பெறும். ஆவதும் பெண்ணால் என்ற சொல்லுக்குரிய கருத்து இது. பெண் இதைச் செய்யலாம். முனைந்தால் ஆண் இதைச் செய்யலாம். இருவரும் முனைந்தால் நல்லது. உள்ளத்தில் உணர்வின் சாதனை, ஊரில் தொழிலின் சாதனையை நிர்ணயிக்கும். தொழில் வெற்றி பெறுவது தொழிலோடு எந்த அளவு உணர்வால் நாம் இணைந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. தொழிலை விரும்பினால், போற்றினால், உயிர்போல் கருதினால், தன்னைத் தொழிலின் வெற்றிக்கு அர்ப்பணம் செய்தால், தொழில் சாதிக்கும். வீட்டில் மனம் நிறைவு பெற்றால் தொழிலில் சாதனை நிறைவு பெறும்.

குடும்பத்தின் நோக்கம் வேறு, தொழிலின் இலட்சியம் வேறு, ஆனால் நிறைவு இரண்டிற்கும் பொது. குடும்பத்தில் குறையிருந்தால் யார் குறைக்குக் காரணம் என்பது வேறு. தொழிலில் நிறைவு பெறுதல் கடினம். முடியாது என்பதன்று. பொதுவாக முடிவதில்லை.

மாற்றத்தை நாடுபவர் குடும்ப நிறைவை எய்தினால் மாற்றம் எளிது. யாருடைய தவறு என்பதை மறந்து, குடும்பத்தில் நிறைவுக்கு வழியைத் தேடும் மனப்பான்மை வேண்டும். அது தொழிலில் நிறைவைத் தரும். வாழ்வில் மாற்றத்தைத் தரும்.

சூரியனும் பகுத்தறிவும்

புலன்கட்குச் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. அறிவுக்குப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இரயிலில் போகும்பொழுது இரயில் நிற்பதாகவும், தந்திக் கம்பங்கள் ஓடுவதாகும் தோன்றினால், நாம் இரயில் ஓடுகிறது, தந்திக் கம்பங்கள் ஓடவில்லை என நம்புகிறோம்.

பகவான் ego அகந்தையைப் பற்றி எழுதும்பொழுது, அகந்தை இறைவனை முழுவதும் அறிந்த பின், தன்னை மையமாக்கி, பிரபஞ்சம் தன்னைச் சுற்றியுள்ளது எனவும், தனக்காக உள்ளது எனவும், இறைவனும் தனக்காக இருப்பதாகவும் நினைப்பதாக எழுதுகிறார். உலகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் இந்த நோக்கத்திலிருந்து எழுவதாக அன்னை கூறுகிறார்.

நாட்டில் ஒரு புதிய சட்டம் வந்தாலும், திட்டம் ஏற்பட்டாலும், மார்க்கெட்டில் ஒரு புதிய பொருள் விலைக்கு வந்தாலும், நாம் புதியதாக எதைப் பார்த்தாலும், இதனால் நமக்கு என்ன பயன் என்று நினைக்கிறோம். நம்மை மையமாக வைத்து வாழ்வைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

ஆபீசிலோ, வீட்டிலோ புதியதாக எது நடந்தாலும் நம்மை அது எப்படி பாதிக்கும், நமக்கு அதனால் என்ன பிரயோஜனம் என்று நினைப்பது பெரும்பாலோர் இயல்பு. இதை மாற்ற முனைவது நான் சொல்லும் மாற்றத்திற்கு உதவும்.

வேதாந்த ஞானம் என்ற அத்தியாயத்தில் (Life Divine) பகவான் வேதாந்த முறையை விளக்குகிறார். புலன்கள் அகந்தையால் எழுந்தன. புலன்கள் அகந்தையின் கருவி. புலனறிவு அகந்தையின் அறிவு. அவற்றின் மையம் மனஸ். அறிவின் உறைவிடம் புத்தி. புத்தி நடைமுறையில் மனத்திற்குட்பட்டது. புத்தி மனத்திற்குட்பட்டதால் புலனுக்குட்பட்டது. வேதாந்தம் புத்தியைப் புலனிலிருந்து பிரித்து விடுவதால் புத்தி நேரடியாக ஞானத்தைப் பெற முடிகிறது என்கிறார். இது வேதாந்தத்தின் சாதனை என்கிறார். நூலின் இக்கருத்தை நாம் பயன்படுத்த முடியுமா? புலனறிவிலிருந்து பிரிந்த அறிவு பகுத்தறிவாகிறது. பகுத்தறிவு பலன் தரும்.

நம்மை (அகந்தை) மையமாக வைத்து உலகமும், உற்றாரும் நமக்காக இருக்கிறார்கள் என நினைப்பது புலன் அறிவு, பகுத்தறிவாகாது. இறைவனை மையமாகக் கொண்ட வாழ்வில் நாம் ஒரு பகுதி என அறிந்தால் அது பகுத்தறிவாகும், மையமாக இறைவனையடைய உதவும், அகந்தையழிய உதவும்.

வாழ்வின் மாற்றத்தை நாடுபவர்கள் வீடு எனக்காக இருக்கிறது. ஆபீஸ் என் சௌகரியத்திற்காக இருக்கிறது என்ற எண்ணத்தை மாற்றி, நான் வீட்டிற்காக இருக்கிறேன், ஆபீசுக்காக இருக்கிறேன் என்ற செயல்பட்டால், மாற்றம் ஏற்படும். இப்புது மனப்போக்கு வீட்டிலும், ஆபீசிலும் உள்ள பிரச்சினைகளைப் பெரிதும் விலக்குவதையும் காணலாம்.

நூலில் பரிணாமத்தைப் பற்றி எழுதும்பொழுது (ape) மனிதக் குரங்கு மனிதனாக மாறியது என்றால், அந்த மனிதக்

குரங்கால் அன்று அதை நினைத்திருக்க முடியுமா? என்று பகவான் கேட்கிறார். எதிர்காலத்தில் தான் மனிதனாக மாறப் போகிறோம் என்ற அறிவை மனிதக் குரங்கால் அன்று நினைத்தும் பார்த்திருக்க முடியாததுபோல், மனிதனால் தான் சத்திய ஜீவனாகப் போவதை நினைக்க முடியாது என்கிறார். நான் பேசும் மாற்றம் வெகு எளிமையானது என்றாலும், இந்த மாற்றம் தன் வாழ்வில் நடக்கும் என்றறிய முடியாத நிலையில் இன்று மனிதன் இருக்கின்றான்.

பேரதிர்ஷ்டம் வந்தவர்கள் இவையெல்லாம் என் வாழ்வில் நடக்கும் என்று நான் நினைத்தது கூட கிடையாது என்று கூறுவார்கள். அன்னை அருளால் ஓரளவு மாற்றம் ஏற்பட்ட அனைவரும் அதேபோல் கூறியுள்ளனர். மேலும் அதையே கூற வேண்டும் என்பதும் அவசியமில்லை. இது நாள்வரை தெரியவில்லை. இனியும் தெரிந்து கொள்ளாமலிருக்க வேண்டியதில்லை. தெரிய முடியாது என்ற நினைக்க வேண்டியதில்லை. தெரிந்து கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ள முடியும் என்று நினைப்பவர்க்கு உதவியாக எழுதப்படுவதே இக்கட்டுரை. பிறர் வாழ்வில் நடந்ததையும், தங்கள் வாழ்வில் நடந்ததையும் நினைவு கூர்ந்து சிந்தனை செய்தால், இந்த மாற்றம் முடியும் என்று நாம் அறியலாம்.

மேலும் இது போன்ற மாற்றங்கள் சமூகத்தின் பல பகுதிகளில் நடப்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நடந்ததே புரியும், நடக்கப் போவதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது பொது உண்மை. எனினும், நடந்ததைக் கொண்டு, நடக்கப் போவதை அறிய முடியும் என்பதும் உண்மை. பொது உண்மையைப் புறக்கணித்து, அடுத்த உண்மையைக் கருதுபவர் உண்டு. நாமும் அவர் வரிசையில் சேரவேண்டும். இதை வேறு வகையாகவும் சொல்லலாம். சமூகத்தில் பலரும் ஏற்றதை நம்மாலும் ஏற்க முடிகிறது. எவரும் ஏற்காததை நம்மால் ஏற்க முடிவதில்லை. எவரும்book | by Dr. Radut