Skip to Content

பகுதி 2

 1. செய்யும் காரியங்களை organise முறைப்படுத்திச் செய்தல்,
 2. வேலைக்குரிய values பின்பற்றுதல், பண்புகளை தவறாது
 3. வேலையை ஒரு நிலை level உயர்த்திச் செய்ய முனைதல்,
 4. கீழ்மட்ட ஒரு நிலை உச்சக்கட்டத்தால் செய்ய முன்வருதல்,
 5. செயலுக்குரிய clue சூட்சுமங்களைக் காண முயலுதல்.

குளிர் தாங்கமுடியாது, கால் தரையில் பட்டால் உடல் சிலிர்த்து ஜுரம் வரும் என்பதால் வியாதியஸ்தர் நடக்கும் இடத்திலெல்லாம் ஜமக்காளம் போட்டிருந்தனர். இது பிரச்சினையைத் தீர்த்தது. சில நாள் கழித்து இதை, சுலபமாகச் செய்வதெப்படி என யோசனை செய்தபொழுது, காலுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டால் இத்தனை ஜமக்காளம் தேவைப்படாது என்று தோன்றியது. ஜமக்காளத்தைத் துவைக்கும் வேலை மிச்சம்.Physical work replaced by mental work . பொருளால் செய்வதை அறிவால் செய்யும்பொழுது பலன் அதிகம்.

400 பேரை வேலைக்கமர்த்தி, கட்டடம் கட்டி, 50 இலட்சத்திற்கு மெஷின் வாங்கி, உற்பத்தி செய்த பொருளை நாடெங்கும் அலைந்து விற்று, சில ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தவர், இலாப நஷ்டக் கணக்குப் பார்த்த பொழுது இலாபம் 7% வந்திருப்பதாகக் கண்டார். இதே தொகையை வட்டிக்குக் கொடுத்தால், அலைச்சல் இல்லை, பொறுப்பில்லை, பாரமில்லை, லேபர் ஆபீஸ், வருமானவரி, விற்பனை வரி, பாக்டரி இன்ஸ்பெக்டர், பொதுமக்கள் குறைகூறுதல், நஷ்டம் ஆகியவை இல்லை, 12% இலாபமாக வட்டி வரும். உழைப்பால் செய்வதை ஒரு யுக்தியால் செய்ய மனிதன் கண்டு கொண்டபின், வட்டிக்கடைகள் பெருகிவிட்டன.

உடலின் திறன் குறைவு என்பதால் சிரமம் அதிகமாகவும், காலம் தாழ்த்தியும், சிறு பலன் கிடைக்கிறது. உணர்வுக்கு அதிகத் திறனிருப்பதால், உடலுழைப்பால் செயல்படுபவன் உணர்வுக்குக் கட்டுப்படுகிறான். உணர்வின் செயல் அதிக பலன் தருகிறது. அறிவுக்கு அபாரத் திறமையுண்டு என்பதால் நேரத்தையும், முயற்சியும் அளவு கடந்து சுருக்குகிறது. ஆன்மா அதற்கும் மேற்பட்டது. அன்றாட வாழ்வில் எப்படி ஆன்மாவைச் செயல்படவைக்க முடியும்? ஆன்மாவைச் செயல்பட வைக்குமுன் நம்மால் முடிந்த அளவு உடலுழைப்பை உணர்வாலும், உணர்வின் செயலை அறிவாலும் மாற்றி அமைக்க வேண்டும். உதாரணமாக 7 பேர் உள்ள வீட்டில் அவரவர்கள் தங்கள் தங்கள் வேலையைத் தாங்களே செய்து கொள்வது உடல் உழைப்பாகும். அனைவரும் ஒத்துழைத்தால் அது உடல் உழைப்பை உணர்வால் செய்வதாகும். அனைவரும் ஒத்துழைக்கும்பொழுது காரியங்கள் எளிதாக முடியும். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வருஷத்திற்கு வேண்டிய பொருள்களை அரிசி, புளி, பருப்பு வாங்குவார். இது பலரும் செய்வது. இதனால் மலிவாகக் கிடைப்பதுடன், அடிக்கடி கடைக்குப் போக வேண்டாம். அத்துடன் ஓர் ஆண்டுக்கு வேண்டிய சோப்பு எவ்வளவு என்று wholesale மொத்த வியாபாரியிடம் போய் வாங்குவார். மலிவான விலையுடன், சிரமம் குறையும் முறையிது. இது ஓரளவு அறிவால் செய்யப்படுவதாகும். நாம் எதையும் நினைப்பதில்லை. சம்பளம் வாங்கிச் செலவு செய்கிறோம். அத்தோடு சரி.

அன்னை கோட்பாடுகள் செயல்களின் தரத்தைத் தாமே உயர்த்தும். சில சூட்சுமங்களைத் தாமே செயல்பட வைக்கும். அவை ஆன்மீகச் செயல்கள் என்பதால், செயல்களின் தரம் உயரும்; மாற்றத்திற்கு shift உதவும். நமது பிரார்த்தனை பல நாள் பலிக்காத சமயத்தில், அதற்குரிய மலர்களைப் பயன்படுத்தினால் அது ஆன்மீக முறையாகும். உடனே பலிக்கிறது. மலர்களைப் பயன்படுத்துவது ஆன்மிகச்

சூட்சுமமாகும். காலையில் அன்றைய காரியங்கள் அனைத்தையும் அன்னையிடம் கூறுதல் அது போன்ற ஒரு முறையாகும். இது நம் ஜடமான செயலுக்கு ஆன்மிகச் சக்தியைப் பெற்றுத் தருகிறது. அதனால் காரியம் எளிதில் முடிகிறது. இதுபோல் இதுவரை மனிதன் கண்டுபிடித்தவை ஏராளம். திறமை (skill) நோக்கம் (attitude), அறிவு (knowledge), சமத்துவம் (equality), மௌனம் (silent will) ஆகியவை செயலின் தரத்தை, சூட்சுமமாக உயர்த்துபவை. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் சிகரமான சூட்சுமம் ஒன்றுண்டு. அதுவே சமர்ப்பணமாகும். வாயால் சொல்லும் சமர்ப்பணத்திற்கு பிரச்சினையைத் தீர்க்கும் சக்தியுண்டு; செயல்களின் தரத்தை உயர்த்தும் சக்தியில்லை.

சமர்ப்பணம் எனில் முழுப் பாரத்தை அன்னையிடம் ஒப்படைத்து மனம் லேசாகி, அமைதியுறுவதாகும். இதனால் செயல்கள் ஆன்மிகச் செயல்களாக மாறுகின்றன. பூரணயோகத்தைப் பூர்த்தி செய்யும் சூட்சுமமாக, பகவான் நமக்கு, சமர்ப்பணத்தை அளித்திருக்கிறார்

காணிக்கை அது போன்ற ஒரு சூட்சுமம். பக்தி, நம்பிக்கை குறைவாக இருந்தால் காணிக்கை அவற்றை நிறைவு செய்யும். பக்தி, நம்பிக்கை, அதிகமாக இருந்தால் காணிக்கை அவற்றின் திறனை உயர்த்தும். Offering is physical clue செயலுக்குரிய சூட்சுமம் காணிக்கையாகும்.

சூட்சுமம் இல்லாத இடம் இல்லை. எல்லாச் செயல்களிலும், உறவுகளிலும் சூட்சுமம் உள்ளது. ஒரே முயற்சிக்கு, பெரும்பலன் தருவது சூட்சுமம். உறவில் பிரியம், நம்பிக்கை, விஸ்வாசம் சூட்சுமமாக அமைவதுண்டு. ஒரு தொழிலின் இரகஸ்யத்தை இருவருக்கு ஒருவர் சொன்னார். ஒருவர் உறவினர், அடுத்தவர் நண்பர். உறவினருக்கு நம்பிக்கையில்லை. மறுத்தார். நண்பர் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டார்.

இரு குடும்பங்களுக்கும் அப்பொழுது (1952) அடிப்படை வசதியில்லை. ஏற்றுக் கொண்டவர் 3 ஆண்டுகளில் இலட்ச ரூபாய் சம்பாதித்தார். அடுத்தவர் இரகஸ்யத்தை மறுத்துவிட்டு பழைய நிலையிலேயே இருந்தார். அன்னையின் கோட்பாடுகள் சூட்சுமத்தை உட்கொண்டன. 1965இல் இலட்ச ரூபாய் வைத்திருந்தவர்க்குச் சொல்ய சூட்சுமம் நம்பிக்கைக் குறைவால் அவருக்குப் பயன்படவில்லை. 20,000ரூபாய் முதல் உள்ளவர் அதை ஏற்று 5 வருஷத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தார்.

மாற்றம் (shift) என்று நான் விவரிப்பதில் தொழில் நுட்பம், வாழ்க்கை இரகஸ்யம், சூட்சும இரகஸ்யங்கள் பொதிந்து உள்ளன. இவற்றின் மூலம் மாற்றத்தைப் பெறலாம். மாறினால் இவற்றைப் பெறலாம்.

பேரம்

நம் நாட்டில் பேரம் பேசாத இடம் இல்லை. வெளிநாடுகளில் கடைகளில் பேரம் பேச முடியாது. பேசினால் கேலியாக நினைப்பார்கள். ஆனால் எல்லா நாடுகளிலும் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பேரம் நிறைந்துள்ளது. கணவன் மனைவி வீட்டை நிர்வாகம் செய்வதிலிருந்து, ஆபீஸில் யாருக்கு எந்த வேலை கொடுப்பது என்பதுவரை பேரம் இல்லாத இடம் இல்லை. பார்ட்னர்கள் தங்கள் விஷயங்களை நிர்ணயிக்கப் பேரம் பேச வேண்டும், வேலைக்கு ஆள் எடுத்தால், சம்பளம் மற்ற சலுகையை நிர்ணயிக்க வேண்டும். ஆளை வேலையிலிருந்து எடுப்பதானாலும் பேரம் உண்டு. கோர்ட் பேரத்திற்குப் பேர் போன இடம். விளையாட்டு மைதானமும் அப்படியே. பேரத்தின் உள்ளுறை உண்மை என்ன?

 • வாழ்க்கை நிகழ்ச்சிகள் பேரத்தால் நிறைந்து உள்ளன.
 • பேரம் பேசாமல் நியாயமாக நமக்குச் சேர வேண்டியதைக் கண்டுபிடிக்க முடியாது.
 • நமக்குச் சேர வேண்டியதற்கு மேல் நாம் பிரியப் பட்டாலும், அல்லது பிறரால் கொடுக்கப் பட்டாலும் அது முடிவாக நம்மை வந்து சேராது. சேர்ந்தாலும் நிலைக்காது. அது காரியத்தைக் கெடுக்கும்.
 • நமக்குச் சேர வேண்டியதற்குக் குறைவாக நாம் ஏற்றுக் கொண்டாலும், அது காரியத்தைக் கெடுக்கும்.
 • காரியம் நல்ல முறையில் பூர்த்தியாக வேண்டுமானால், நமக்கு உரியது குறைவின்றிச் சேர வேண்டும். அதிகமாகப் பெறக் கூடாது.

வாழ்க்கையில் நாம் எவ்வளவு அதிகமாகப் பெற முடியும் என்று பேரம் பேசுகிறோம். அன்னை வாழ்வில் - மாறிய வாழ்வில் - உரியதை மட்டும் மனம் நாட வேண்டும். உரியதை நாடும் மனம், மாற்றத்திற்குரியது.

ஒரு காரியம் செய்தால் பலனை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்த்தால் அது தள்ளிப்போகும். தீவிரமாக எதிர்பார்த்தால் கெட்டுப் போகும். இது அடிப்படை ஆன்மிக உண்மை. பலனை எதிர்பார்க்காமல் செயல்படுவது நிஷ்காம்ய கர்மம். சர்வதேசக் கமிஷன் ரிப்போர்ட் தயார் செய்ய 6 மாதம் கேரியும், பாபுவும் இங்கு வந்து வேலை செய்தார்கள். அந்த ஆறு மாதமும் வேறு எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு அதை மட்டும் நான் கவனித்தேன். 24 உறுப்பினர் குழு அது. அவர்கள் 20 நாடுகளில் உள்ளனர். President Carter Centre  கார்ட்டர் சென்டரில் கடைசிக் கூட்டம் நடந்தது. ரிப்போர்ட் முடிந்த பின் அகில உலக ஸ்தாபனங்கள் சில தங்கள் பெயரால் அதை வெளியிட ஒத்துக் கொண்டு நாள் குறித்து விட்டார்கள். 88 செப்டம்பரில் ஆரம்பித்து

இதுவரை செய்த பெரு முயற்சியால் இத்தாலி, மாஸ்கோ, சென்னை, நார்வே, அமெரிக்காவில் கூட்டங்களை நடத்தி, தற்சமயம் ரிப்போர்ட் தயாராயிற்று. மேல் நாடுகளில் சாதாரணமாகப் புத்தகங்கள் வெளியிட வெளியீட்டுக் கம்பெனிகள் 12 மாதங்கள் எடுத்துக் கொள்ளும். ஒரு பிரபலமான சிறிய லண்டன் கம்பெனி இந்த ரிப்போர்ட்டை வெளியிட ஒத்துக் கொண்டது. வெளியிடும் தேதி செப்டம்பரில் குறிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் கையெழுத்துப் பிரதியை டிசம்பர் 15ஆந்தேதியில் வேண்டும் என்று கேட்டனர். 6 குழுக்கள் தனித்தனி ரிப்போர்ட் தயாரித்து டிசம்பர் 15இல் தருவதாக ஏற்பாடு. பிறகு அவற்றைத் தொகுத்து ஜனவரி 15இல் அச்சுக்குக் கொடுக்கலாம் என்றால் வெளியிடும் கம்பெனி இசையவில்லை. இக்குழுக்களின் ரிப்போர்ட் May 15 வரை வரவில்லை. வந்த ரிப்போர்ட்டுகளை வைத்து May 1ஆம் தேதி ஆரம்பித்து 18ஆம் தேதியன்று முதல் பிரதியை எழுதி முடித்தாயிற்று. இனி இது 20 நாடுகளுக்குப் போய் உறுப்பினர் சம்மதம் பெற்றுத் திரும்ப வந்து அச்சுக்குப் போய் செப்டம்பரில் வெளியாவது நடவாத காரியம். உறுப்பினர்கள் சம்மதம் இன்றி வெளியிட முடியாது. ஜுன் 20க்குள் சம்மதம் fax பாக்ஸ் மூலம் தெரிவிக்கும்படி courier குரியர் மூலம் 20 நாடுகட்கும் ரிப்போர்ட் பிரதிகளை அனுப்பிப் பதிலுக்காகக் காத்திருந்தோம்.

நிலைமை முக்கியமானது. கையெழுத்திட வேண்டியவர்கள் உலகில் பிரபலமானவர்கள். பொதுவாக அவர்கள் உலகெங்கும் பிரயாணம் செய்பவர்கள். ரிப்போர்ட் 160 பக்கம். முடிவு தேதியன்று ரஷ்ய உறுப்பினரிடமிருந்து பதில் வந்தது. பதில் அமெரிக்காவுக்கு வரும். அச்சாபீஸ் இலண்டனில் உள்ளது. காரி, ஐரோப்பாவிலிருக்கிறார். பாபு இங்கிருக்கிறார். உறுப்பினர்களிடையே மாறுபாடு எழுந்தால் ரிப்போர்ட் வெளியிட முடியாது. நான் செய்ய வேண்டிய

கடமையைச் செய்துவிட்டேன். இனி என் கையில் எதுவும் இல்லை. எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. எத்தனை பேர் பதில் எழுதுகிறார்கள். யார் சம்மதம் தெரிவிக்கிறார்கள்? யார் மறுப்புத் தெரிவிக்கின்றனர்? எதிர்ப்பு வந்தால் என்ன செய்வது? அச்சாபீஸ் ஏற்று கொள்ளுமா? என்பன என் பொறுப்பல்ல.

நான் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. எதையும் நினைக்கப் போவதில்லை என நான் முடிவு செய்துவிட்டேன்.

என் மனம் அதை மறந்துவிட்டது. அமெரிக்க ஆபீஸை கூப்பிட்டு விசாரிக்கவும் எனக்கு எண்ணம் எழவில்லை. பாபுவை நான் கேட்கச் சொல்லவில்லை. நான் கேட்காமல் அவர் ஆபீஸைக் கூப்பிடமாட்டார்.

அவர் வேறு வேலையாக ஜுன் 20ஆம் தேதி ஆபீஸைக் கூப்பிட வேண்டியிருந்தது. அப்பொழுதும் நான் அவரை ரிப்போர்ட் பற்றி விசாரிக்கச் சொல்லவில்லை. அவர் கூப்பிட்டார். சுமார் 40, 50 முறை டயல் செய்தார், நம்பர் கிடைக்கவில்லை. வியாபாரக் கம்பெனியை ஆபீசிடம் பேசச் சொன்னார். அவர்களும் சொன்னார்கள். பதிலில்லை. 21, 22, 23, 24 தேதிகள் வரை கிணற்றில் கல் போட்டாற் போலிருந்தது. அவரும் முயற்சியைக் கைவிட்டார். ஆபீஸ் மானேஜர் வீட்டை 25ஆம் தேதி கூப்பிட்டார். பதில்லை. Answering machine  மெஷின் பேசுகிறது. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நான் எதிர்பார்க்காவிட்டாலும், என் மனம் (மேல்மனம் surface mind) மறந்துவிட்டாலும், Bob கூப்பிட விரும்பாவிட்டாலும், கட்டுப்பாட்டை பவித்திரமாகப் பின்பற்றினாலும், subconscious உள்மனம் பதிலை எதிர்பார்ப்பதால், சூழ்நிலை எதிர்க்கிறது.

'எதிர்பார்த்தால் தள்ளிப் போகும்'

என்ற உண்மையை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும், இது பெரிய அனுபவம். எனினும் மேல்மனத்தில் எங்கள் இருவருக்கும் சஞ்சலம் என்பதே இல்லை என்பதால், முடிவான தேதியில் எவரும் பதில் சொல்லவில்லை என்றாலும், வேலை தடையின்றி நிறைவேறியது.

மேல்மனம் அமைதியாக இருப்பதற்குப் பலன் உண்டு. நம்மையறியாமல் உள்மனம் எதிர்பார்த்தால் காரியம் கெடும் என்பவை பேருண்மைகள் என்பதை இந்நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியது. மாற்றம் (shift) ஏற்பட எதிர்பார்க்கக் கூடாது. கடமையைச் செய்ய வேண்டும். நிதானமாக, பொறுமையாக இருக்க வேண்டும், பலனை நினைக்கக் கூடாது.

பிறவிக் குணம், அதிர்ஷ்டம்

சாதாரண மனிதனுக்கு அதிர்ஷ்டம் வருவதில்லை. அதிர்ஷ்டம் வந்தால், ஏன் அவன் சாதாரண மனிதனாக இருக்கிறான்? அன்னையை ஏற்றுக் கொண்டபின், அந்த சூழல் விரும்பி வந்தபின், அல்லது தற்செயலாக அவன் சூழலில் இருக்க நேர்ந்தாலும், ஏதோ ஒரு வகையில் அன்னையோடு அல்லது அந்த சூழலோடு தொடர்பிருந்தால், அதிர்ஷ்டம் அவனைத் தேடி வரும். இக்கண்ணோட்டத்தில் நாம் நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் பார்த்தால், இது தெளிவாக விளங்கும். மனிதனுடைய இயல்பான குணங்கள் உயர்ந்தவையல்ல, தாழ்ந்தவை. தாழ்ந்த குணங்கள் அதிர்ஷ்டம் வரும்பொழுது உடனே வெளிப்படும். அதிர்ஷ்டம் போய் விடும். அன்னை பக்தர்கள் இயல்பாகப் பேசும்பொழுது இது போன்ற அதிர்ஷ்டம் அவர்களை அறியாமல் வெளிப்படும். பிரியமாக அவர்கள் கொடுக்க முயல்வது உண்மையான அதிர்ஷ்டமாக இருக்கும். அவர்கள்

பேசும்பொழுது, பிறவிக் குணம் எழுந்து தடுப்பதே வழக்கம், ஏற்பது குறைவு.

ரூ. 10,000 சம்பாதித்தவர் ரூ. 3 இலட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பைக் கண்டார். அதில் தம்மைச் சேர்த்துக் கொள்வார்களா என நினைத்தார். அழைப்பு வந்தது. அன்புடனும் வந்தது. பிரியமாக ஏற்றுக் கொண்டவர் சொன்ன முதற் சொல், நான் இலாபத்திற்காக இங்கு வரவில்லை, சேவைக்காக வருகிறேன் என்பது. பிறந்த நாளிலிருந்து அவர் தினமும் நூறு முறை இயல்பாகத் தங்கு தடையின்றி சொல்லும் பொய் இது. அவர் பொய் பலித்தது. வாய்ப்பு பலிக்கவில்லை.

இன்ஜினீயர்கட்கு வேலை கிடைக்காத சமயம் (1967) முதல் வகுப்பில் B.E பாஸ் செய்தவன் தான் பாஸ் செய்ததைச் சொல்ல வந்தான். கேட்டுக் கொண்டவருக்கு அசோக் லேலண்ட் டைரக்டர் நண்பர். அங்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். பையனுக்குப் பரமதரித்திரம். அன்று அவன் தகப்பனார் தினக்கூலியாக 65 பைசா சம்பாதிப்பவர். அவனைப் பிடித்த தரித்திரம் அவன் வாய்வழியாக வந்தது, வேண்டாம் சார். லேலண்ட்டில் வேலை செய்ய எனக்குப் பிடிக்கவில்லை என்றான். 3 வருஷம் வேலையில்லாமல் இருந்தான். வேலை கொடுக்க முன் வந்தவர் ரூ. 100 சம்பளம் தருவதாகச் சொன்னது வெந்த புண்ணில் வேல் பாய்வது போலிருந்தது.

எல்லோருடைய அனுபவத்திலும் இது போன்ற பல உதாரணங்களுண்டு.

அன்னைச் சூழலில் நிகழ்ந்ததை எழுதுகிறேன். தியான மையம் நடத்தும் இடம். நடத்துபவர்களில் பாதிப் பேருக்கு அளவு கடந்த ஈடுபாடு. மற்றவர்கள் ஒப்புக்குக் கலந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஓரிருவருக்குத் தியானமும்

வாராது, அன்னையும் பிடிக்காது, இப்படியும், அப்படியுமாக இருப்பார்கள். வீட்டுக்கு வாராத அதிர்ஷ்டம் இல்லை. செல்வாக்காகவும், செல்வமாகவும், ஆதரவாகவும், சந்தோஷமாகவும், பிரபலமாகவும், அதிர்ஷ்டம் வந்தபடியிருக்கும். இருப்பவர்கள் unconscious கண்மூடியாக இருப்பதால், தங்களை மீறி, தங்கள் வக்ரங்களைத் தாண்டி, வலிய வந்து பலிப்பதை, சௌகரியமாக அனுபவிப்பார்கள். 10 அங்குலம் மழை பெய்தாலும், செடி தனக்கு வேண்டியதற்கு மேல் பயன்படுத்த முடியாதல்லவா? வீட்டு நிலையை அக்காவும், தம்பியும் சூட்சுமமாக உணர்ந்தார்கள். அளவு கடந்த வாய்ப்பு வந்தபடியிருப்பது அவர்களுக்குத் தெரிகிறது. அவர்களும் மற்றவர்களைப் போலவே இருப்பதால், எதுவும் பெரிய அளவில் பலிப்பதில்லை. முழு அளவில் பலிக்கும் நிலை இல்லவேயில்லை. அக்காவும், தம்பியும் தாங்கள் இருவரும் வாய்ப்புக்குத் தக்கவாறு மாறிக் கொள்வதாய் முடிவு செய்தார்கள். மனம் மாறுவது கடினம். நல்ல குணத்தை உடனே பெற முடியாது. ஏதாவது நல்ல காரியம் செய்வதாக முடிவு செய்தார்கள். வசதியான நடுத்தரக் குடும்பம். வரும் வாய்ப்புகளோ பெரிய செல்வர்களுக்கும் கிடைக்காத வாய்ப்புகளாக வருகின்றன. அவற்றைப் பெற மனம் விசாலமாக வேண்டும். யாராவது ஒரு நல்லவருக்கு ஒரு பெரிய நல்லதைச் செய்ய முடிவு செய்தனர். ரூ. 300 சம்பாதிக்கும் பெண் தொழிலாளியைத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு ஒரு பரிசு கொடுத்தால் மனம் விசாலமடையும் என்று முடிவு செய்தனர். விசாரித்ததில் அவருடைய வருமானம் ரூ. 1200 எனத் தெரிய வந்தது. தங்களுக்கு வந்த வாய்ப்புகளைக் கணக்கிட்டனர். தங்கள் வருமானத்தைப் போல் வரும் வாய்ப்பு 100 மடங்கு என்பது தெரிய வந்தது. சில அதை விடப் பெரியனவாகவும், ஒன்றிரண்டு 1000 மடங்கும் பெரியதாக இருந்தன. அவற்றைக் கணக்கில் சேர்க்காமல் 100 மடங்கு வாய்ப்பைப் பெற முடிவு செய்தனர்.

100 மடங்கு வாய்ப்பு வர இத்தொழிலாளிக்கு 100 மடங்கு பரிசு தர வேண்டும் என்று அவர்களே புரிந்து கொண்டனர். ரூ. 1200 சம்பாதிப்பவருக்கு எப்படி 1 1/4 இலட்சம் பரிசு கொடுப்பது? அவர் அதை எப்படி புரிந்து கொள்வார் என்ற பொழுது, என்னால் அந்த அளவு நினைக்க முடியாது. 10 மடங்கு பரிசு கொடுக்கலாம். அதற்கே மனம் வரவில்லை என்றார் அக்கா. சில நாள் வாதாடி மனதுடன் போராடி அக்காவும், தம்பியும் இந்த முடிவை உறுதிப்படுத்திவிட்டனர். தொழிலாளியிடம் சொல்லிய பொழுது அவள் எந்த வியப்புமின்றி, இயல்பாக ஏற்றுக் கொண்டாள். அக்கா, அத்தொழிலாளியும், பத்திரிகை வந்துள்ளது. உனக்கு வாங்கும் புது வளையலை நான் முதலில் அத்திருமணத்திற்குப் போட்டுக் கொண்டு போகிறேன் என்றார். உங்களுக்கு எதற்கு வளையல்? வாட்ச் கட்டிக் கொள்ளுங்கள் என்று பதில் காரமாக வந்தது. பரிசைக் கொடுக்க நினைத்தவருக்கு தேள் கொட்டியது போன்றிருந்தது. முதலில் ரூ. 12,000 பரிசையும். பிறகு மனம் தயாரான பின் 1 1/4 இலட்சம் பரிசையும் கொடுக்க அவர்களிட்ட திட்டம் தொழிலாளிக்கு தெரியாது. அவள் பிறவிக் குணம் எழுந்து வரும் அதிர்ஷ்டத்தைச் சுட்டெரித்தது. அத்துடன் பரிசைப் பற்றிய பேச்சும், எண்ணமும் மறைந்தன.

சூழலுக்குச் சக்தியுண்டு, மகிமையுண்டு. சூழலே அன்னை போல் கொடுக்கவல்லது. தொழிலாளி நல்ல உழைப்பாளி. அளவு கடந்த சுறுசுறுப்பு. திறமை அதிகம். நாணயம் அனைவராலும் போற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சூழலாலும், தன் தகுதியாலும் முதலாளி வீட்டாருக்கு இப்படியொரு சிந்தனை எழுந்தது. பிறவிக்குணம், கர்வம், தான் என்ற கர்வம், தன் பெருமையை நிலை நாட்டும் பழக்கம், தன்னை முன்னே வைக்க வாழ்வில் ஒரு சந்தர்ப்பமும் இல்லை என்றாலும், கிடைத்த முதல் சந்தர்ப்பம் தன்னை

வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இதுவே மனிதசுபாவம். சுபாவம் பொதுவாக நல்லதாக இருப்பதில்லை.

சுபாவத்தை விரைந்து விலக்கும் பாங்கு அருள் தரும் அதிர்ஷ்டத்தை ஏற்கும் மனப்பான்மையாகும்.

Life Divineலைப் டிவைன் என்ற நூல் தத்துவநூல். பக்தர் ஒருவர் 60 இலட்சத்தில் ஒரு கம்பெனி ஆரம்பிக்க புதுவை வந்தார். கம்பெனி வேலையில்லாத நேரத்தில் லைப் வைன் படிப்பதாக முடிவு செய்தார். ஒரு கம்பெனி ஆரம்பிப்பதானால் அதில் பிரச்சினைகள் பல. 4 பேரைக் கலந்தால் 4 புதிய யோசனைகள் சொல்வார்கள். மெஷின் வாங்கப் போனால் ஒரே மிஷினுக்கு 1 இலட்சத்திலிருந்து 3 இலட்சம்வரை விலை சொல்வார்கள். ஆரம்பிப்பவர் விவரம் இல்லாதவரானால், பயித்தியம் பிடித்துவிடும். திறமை இல்லாதவரானால் விலை 3 மடங்காகும். இன்ஜினீயர்கள் மிகத் திறமைசாலிகள், 1 கோடியில் செய்வதை 50 இலட்சத்தில் செய்ய வழி சொல்வார்கள். அவர்களுக்கு ஆதாயமானால் 2 கோடியில் முடிக்க புது யோசனை சொல்வார்கள், பக்தர் மிகவும் அனுபவசாலி. அதனால் பெரிய கம்பெனிகள் நல்ல யோசனைகள் கூறின. 60 இலட்சம் 120 ஆகி, 150உம் ஆகி 200இல் வந்து நின்றது. ஒரு மாதத்தில் 200 இலட்சத்தில் (2 கோடியில்) செய்வதாக முடிவு செய்தார் பணம் இருக்கிறது. முன் அனுபவம் உண்டு. எல்லா மெஷின்களும் 3 மாதத்திற்குள் கிடைக்கும். கட்டிடம் விலைக்குத் தயாராக இருக்கிறது. எதுவும் தடையில்லை. லைப் வைனைப் படிக்க ஆரம்பித்தார். கம்பெனி ரிஜிஸ்ட்ரேஷனில் இவருக்கு அனுபவமுண்டு. ஏற்கனவே 6 மாதத்தில் ஒரு கம்பெனியை ரிஜிஸ்டர் செய்திருக்கிறார். இந்தக் கம்பெனியை இவர் நியமித்த மேனேஜர் 3 மாதத்தில் ரிஜிஸ்டர் செய்வேன் என்றார். இதே சமயத்தில் திருப்பூரிலிருந்து இவருடைய நண்பரைத் தேடி வந்த வியாபாரி, நண்பர் கிடைக்காததால்,

இவரைச் சந்தித்தார். அவர் தம் பொருளை விற்றுக் கொடுக்கச் சொன்னார். தற்செயலாக, சென்ற ஆண்டு பக்தர் கம்பெனி, இந்தியாவிலேயே முதன்மையான இந்தச் சரக்கு செய்யும் கம்பெனிக்கு இதே போன்ற வேலையைச் செய்ததால், பக்தருக்கு முழு அனுபவம் உண்டு. அதனால் எளிமையாகச் சரக்கை விற்கலாம். சரக்கின் தரம் உலகத்திலேயே உயர்ந்தது. கிடைக்கும் கமிஷன் இவர் ஆரம்பிக்கும் கம்பெனி இரண்டாண்டு முடிவில் 2 கோடி முதல் கொடுக்கும் இலாபத்திற்குச் சமம். லைப் டிவைன் படிப்பதற்கும், தற்செயலாய் வந்த வாய்ப்புக்கும் உள்ள தொடர்பை இவர் கவனிக்கவில்லை.

கம்பெனி வேலைகளைச் செய்ய மேனேஜரை நியமித்திருந்ததால், பக்தர் படிப்பில் நாட்டம் செலுத்தினார். 30 ஆண்டுகட்கு முன் B.A. படித்தபொழுது புத்தரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத, சுமார் 100 புத்தகங்களைப் படித்து 100 பக்கம் எழுதியவர் இவர். லைப் டிவைனைச் சுமார் 15 முறை இதுவரை படித்தவர். இம்முறை புத்தகத்தை ஆழ்ந்து பயில முடிவு செய்தார்.

 • தல் நிலையில் புத்தகம் சொல்வது புரியும். (arguement will be clear)
 • இரண்டாம் நிலையில் விளக்கம் தெளிவு பெறும். (explanations will reveal themselves)
 • மூன்றாம் கட்டத்தில் விளக்கத்தின் மூலம் விபரம் அதிகமாகப் புரியும். (will be able to see how the explanations are related to the arguements logically and rationally)
 • நான்காம் கட்டத்தில் நமது மரபுக்கும், பூரண யோகத்திற்கும் உள்ள தொடர்பை, பகவான் சுட்டிக் காட்டுவது விளங்கும்.
 • ஐந்தாம் நிலையில் அதன் சூட்சுமம் (subtle truth) புரியும். ஆறாம் கட்டத்தில் பகவான் சொல்வது அனைத்தும் ஞானத்தில் உதித்த தத்துவமில்லை, சித்தியில் எழுந்த ஞானம் என்பது நமக்கு ஞானோதயமாகும்.
 • அடுத்த நிலையில் இது இதுவரை வேதம், உபநிஷதம், கீதையில் சொல்லப்படவில்லை எனத் தெரியும்.
 • மேலும் படித்தால் 15 முறை படித்த பின் இதுவரை இவை விளங்கவில்லை. இதுவே முதன் முறையாகப் புரிகிறது எனவும் தோன்றும்.
 • தொடர்ந்து பயின்றால் கருத்து எளியது, ஞானம் சிறந்தது, குழந்தைக்கும் புரியக்கூடிய அளவில் பகவான் எழுதியுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலிருக்கும்.
 • முடிவாக இதை பக்தி, ஆர்வம் உள்ளவர்க்கு எளிய கதை போல் சொல்லலாம் எனச் சித்திக்கும்.
 • இதற்கு மேலும் ஒரு கட்டம் உண்டு. அன்னையே, உன்னையே நான் நாடுகிறேன். என் உள்ளம் உன் உருவத்தால் பளிங்குபோல் உள்ளது. மாசு, மறு இல்லை. மாசும், மறுவும் நீயே என அறிவேன். இந்த ஞானத்தை எனக்குக் கொடு என நெஞ்சம் நெகிழ்ந்து பிரார்த்தித்தால், இந்த ஞானம் உள்ளிருந்து பூரணயோக ஜோதியாய் பொன்னொளியாக எழுவதைக் காணலாம். ஞானம் பெரியது. அன்னையின் கருணை அதைவிடப் பெரியது. மனித சுபாவத்தின் பொய், கர்வம், துரோகம், வீறாப்பு அற்ற பக்தர் உள்ளம் லைப் டிவைனைப் படிக்காமல் அந்த ஞானத்தை அன்னையின் அருளால் பரிசாகப் பெற்று உள்ளே பொன்னாக மாறலாம்.

பக்தர் லைப் டிவைனை ஊன்றிப் படித்தார். இவர் உலக மேதைகளுடன் பல ஆண்டுகள் நெருங்கி வேலை செய்யும் பொழுது, இவரது அறிவாற்றலை அனைவரும் போற்றினர். நூல் கடுமையானது என்று கண்டார். முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்குப் போனால் எதுவும் புரியவில்லை என்றார். 1 பக்கம் படித்த பின் தியானம் தன்னை ஆட்கொள்வதால், கண்ணைத் திறக்க முடியவில்லை, உட்கார முடியவில்லை என்று பார்த்தார். எனினும், முடிந்த இடங்களில், முடிந்த அளவு ஊன்றிப் படித்தார். கம்பெனி ரிஜிஸ்டர் செய்யப் போன மேனேஜர் திரும்பி வந்தார். கையெழுத்துக் கேட்டார். 6ஆம் நாள் ரிஜிஸ்ட்ரேஷன் சர்ட்டிபிகேட்டுடன் வந்தார். பக்தருக்கு எதுவும் புரியவில்லை. லைப் டிவைனின் சூழலோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தார். மனம் முழுவதும் ஏற்கவில்லை.

58 பக்கம் லைப் டிவைன் படித்தார். அற்புதமான நூல் என்றார். இதுவரை இப்படிப் புரிந்து கொள்ளவில்லை என்றார். கம்பெனி விஷயமாகச் சில tests செய்யப் போனார். எல்லாக் காரியங்களும் தடையின்றி நடந்தன. எல்லாச் (tests failed ) சோதனைகளும் தவறாகப் போயின. மனம் தெளிவாக இருக்கிறது. செயலில் பலனில்லை என்றார். தன் நாட்டுக்குப் புறப்பட்டார். பம்பாயில் இறங்கி ஒரு மிஷினைப் பார்த்தார். எந்தச் சரக்கை 2 கோடி முதல் போட்டு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டி அவர் இந்தியா வந்தாரோ, அதே சரக்கை இந்த பம்பாய்க் கம்பெனியார் உற்பத்தி செய்வதில் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்கள் சப்ளை செய்யத் தயாராக இருக்கிறார்கள். இரண்டு வருஷம் காத்திருக்க வேண்டியதில்லை. இரண்டு கோடி முதல் தேவையில்லை. ஒரே மாதத்தில் சரக்கு அவர் நாட்டில் வந்திறங்கும் என்ற செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. அவர் விமானம் ஐரோப்பா வழியாகப் போகிறது. வழியில் 7 மணி

தாமதமாயிற்று. ஆனால் 15 நிமிஷம் முன்னதாகவே வீடு போய்ச் சேர்ந்தார்.

லைப் டிவைன் படிப்பதால், மனம் தன்னையறியாமல் மாறுகிறது. அதையும் அடுத்தடுத்த உயர்ந்த கட்டங்களில் புரிந்து கொண்டால், படிப்பு ஞானமாகி, ஞானம் சித்தியாகும். இவ்வளவும் (unconscious) கண்மூடித்தனமாகவும் இருக்கலாம். conscious தெளிவாகப் படிப்பது நல்லது. தெளிவு ஞானத்தின் நிலையை உயர்த்தும். மனம் மாற உதவும்; மனத்தை மாற்ற லைப் டிவைனைப் படிக்கலாம். அது மனத்தை மாற்றுவதுடன் சூழலையும், வாழ்வையும் மாற்றும். மனம் மனித வாழ்வையும், அதன் சிறுமைகளையும் விட்டகன்று, மனிதவாழ்வின் உயர் நிலைகளை எட்ட வேண்டும் என முயன்று லைப் டிவைனைப் பயின்றால் பலன் அதிகம்.Synthesis of Yoga ஸ்ரீ அரவிந்தரின் யோக நூல் மனத்தைத் தொடவல்லது. ஜீவியத்தை மலரச் செய்வது என்கிறார் அன்னை. அந்நூல் லைப் டிவைன் போன்று கடுமை அதிகமானதன்று. அதைப் பயின்றால் பலன் மேலும் அதிகம். இவற்றிற்கெல்லாம் சிகரமானது 'சாவித்திரி' என்கிறார் அன்னை. இப்பலன்களைப் பெற நாம் செய்ய வேண்டியது,

பொய்யொழிந்த சத்தியம் நிறைந்த மனத்தை பக்தியால் நிரப்பி, நம்பிக்கையால் சிறப்பிக்க வேண்டும்.

ஆயிரம் டாலர் காணிக்கை செலுத்த நினைத்த பக்தர் டாலரை ரூபாயாக மாற்ற மற்றொருவர் உதவியை நாடினார். அவர் பாங்கில் கணக்கு வைத்திருப்பவர். அடிக்கடி பாங்க் போவதால் பாங்கின் பழக்கங்களை அறிந்தவர். தம் செலவுக்குப் பணம் எடுக்கப் போனால் இரண்டு, மூன்று நடை போக வேண்டும் என்பது அவர் அனுபவம். காணிக்கைக்காக, பணம் எடுக்கப் போனால் தடையிருப்பதில்லை. நீங்கள் காணிக்கைக்காக ரூபாய் கேட்கிறீர்கள். அதனால் தடையின்றி

பணம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போனவர், வெறுங்கையுடன் திரும்பினார். காணிக்கை செலுத்த அவசரப்பட்டார். தம் அவசரம் காரியத்தைக் கெடுப்பதாக உணர்ந்தார். அவசரம் போய்விட்டது. பணம் வரவில்லை. ஒரு நாளில் வரவேண்டிய பணம் 4 நாளாக வரவில்லை. இனி எப்பொழுது வரும்? வருமா? என்பன போன்று பாங்கிலிருந்து செய்திகள் வருகிறது. பக்தர் தம் மனத்தை ஆராய்ந்து பார்த்தார். ரூ. 30,000க்கு, தம் மனதிலுள்ள செலவுகளை ஆராய்ச்சி செய்தார். வேலை செய்பவருக்கு முதல் நாள் 100 ரூபாய் பரிசு கொடுத்தார். பெற்றவர் நல்ல மனத்தோடு பெற்றுக் கொள்ளவில்லை. பக்தர் அவருடைய மனநிலையை அறியவில்லை. பாங்கிலிருந்து பணம் வந்தால் மேலும் ஒரு ரூ. 100 கொடுக்க நினைத்தார். இது ஒரு வேளை சரியில்லையோ எனத் தோன்றியது. மனத்தை மாற்றிப் பார்ப்போம் என நினைத்த நேரம் அவரைக் கீழே கூப்பிட்டார்கள். பாங்க் பணம் வந்திருந்தது. குறைவாகக் கொடுத்தாலும், அதிகமாகக் கொடுத்தாலும், சரியில்லாதவருக்குக் கொடுத்தாலும், சரியில்லாத மனநிலையோடு கொடுத்தாலும் காரியம் தடைபடும்.

சூழல் என்பது சக்தி வாய்ந்தது. நமக்கு மிகவும் வேண்டிய மனிதர்கள் வீட்டிலுள்ள பையனுக்குக் கெட்ட பழக்கங்களிருக்கும். அவனை எவரும் சேர்க்கமாட்டார்கள். நம் வீட்டிற்கு அவன் அடிக்கடி வருவான். அதே பழக்கங்களை நாமும் காண்போம். ஆனால் நெடுநாள் கவனித்துப் பார்த்தால், மற்றவர்கட்கு அவனால் ஏற்படும் சிரமம் நமக்கு ஏற்படுவதில்லை. ஏனெனில் குடும்பம் நல்ல குடும்பம். நம்மிடம் பிரியமாக இருக்கிறார்கள். அவர்களுடைய நல்ல குணத்தின் சக்தி இவனுடைய கெட்ட குணத்திற்குண்டான பலனை அழித்துவிடும். இதற்கும் விதிவிலக்கு உண்டு.

அப்பழுக்கில்லாத தங்கம், வைரம், எனும்படியான பையன் அயோக்கியர்கள் வீட்டில் பிறப்பதுண்டு. பையனின் உயர்ந்த குணத்தைக் கருதி நாம் அவனிடம் பிரியமாக இருப்போம். அவன் நமக்கு எந்தக் கெடுதலும் நினைக்கவும் மாட்டான். ஆனால் அவன் தொடர்பால், நமக்குக் கெடுதல் மட்டுமே நடக்கும். அவனுடைய உயர்ந்த நல்ல குணங்களும், அவன் குடும்பத்தின் கெட்ட சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, கெட்டது மட்டுமே நிலைக்கும்.

நானும் என் நண்பர்களும் செய்யும் சேவையை ஒழித்துக் கட்டுவேன் என ஊரில் முக்கியஸ்தர் சபதமிட்டார். இவர் பெரிய பதவியில் இருந்தவர், அது சமயம் பெரிய பொறுப்பிலிருப்பவர். இவரை நான் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். கவர்னர் முதல் ஊரில் எல்லாப் பெரிய மனிதர்கட்கும் வேண்டியவர். வயதில் 70ஐக் கடந்தவர். பெரிய தியாகத்தை நாட்டுக்காகச் செய்தவர். அப்பொழுது எனக்கு இவரைவிட 20 வயது குறைவு. இவர் மலை, நான் மடு. இவரைப் போய்ச் சந்தித்து, 'ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?' என்று கேட்டேன். 'அப்படித்தான் பேசுவேன். என்ன செய்ய முடியும் உன்னால்?' என்றார். இவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டார் ஒருவரோடு சேர்ந்து பொய் கேஸ் போட்டார். அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தார். அடாவடியாகப் பேசினார். வாங்கிய பணத்தை இல்லை என்று சொல்லச் சொன்னார். பாங்கு மூலம் கொடுத்த பணத்தை உடனிருப்பவரை வாங்கவில்லை என வாக்குமூலம் கொடுக்கச் சொன்னார். பாங்கு கோர்ட்டில் வந்து பொய் சாட்சி சொல்லிற்று. இவர்கள் ஆபீசில் வேலை செய்யும் வடநாட்டுச் சிறுமிக்கு எங்களையெல்லாம் நன்றாகத் தெரியும். உண்மையை அனைவரும் அறிவார்கள். பாங்கின் பொய்யை வேறொரு பாங்க் ஆபீசர் ருசுப்படுத்தினார். பொய் கேஸ் தோற்றது. அப்பீலுக்குப் போனார்கள். பெரிய வக்கீலை வைத்தார்கள். இந்தக் கேஸை எடுத்த கீழ் கோர்ட் ஜட்ஜ்க்கு மாரடைப்பு

வந்துவிட்டது. ஹைகோர்ட் வக்கீல் மாரடைப்பில் இறந்துவிட்டார். பொய் கேசில் பிராது கொடுத்தவரும் இறந்துவிட்டார். சபதமிட்டவர் தொடை எலும்பை முறித்துக் கொண்டார். இந்தச் சிறுமி சில சமயங்களில் எங்களைப் பார்க்க வருவதுண்டு. அவளுக்கு எங்கள் அனைவர்மீதும் அளவுகடந்த நல்ல அபிப்பிராயம், பிரியம். ஒரு முறை அவள் வந்த பொழுது மனம் சரியில்லை. 10 நிமிஷத்தில் சாவு செய்தி வந்தது. எவ்வளவு நல்ல பெண்ணாக இருந்தாலும், அவள் இருக்குமிடத்தின் சூழலே பலிக்கும். அது அவள் நல்லெண்ணத்தை மீறிப் பலிக்கும் என்பதை நான் அன்று கண்டேன்.

எவருக்கு, பிறந்த நாள் பொற்கிழி சேர்த்துக் கொடுத்தேனோ, அவரே நான் அவர் பணத்தைத் திருடியதாக ஊர் முழுவதும் வாய் கூசாமல் பேசினார். உயிர் போகும் நேரம் அளவு கடந்து வதைந்ததாகக் கேள்வி. இவரும் இப்பெண்ணும் ஒரு நாள் என் கனவில் வந்தார்கள். எனக்குக் கனவு எப்பொழுதோ ஒரு முறை வரும். இதன் காரணம் புரியவில்லை. அன்று என்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி இந்தக் கூட்டத்தினர் ஒருவர், எனக்கு முன்பின் தெரியாதவர், வந்தார். கனவுகளைப் பற்றி அன்னை, ஸ்ரீ அரவிந்தர் யோக கோணத்தில் எழுதியுள்ளனர். நனவும், கனவும் ஒரே சூழலைப் பிரதிபலிப்பதை நான் இந்நிகழ்ச்சியில் கண்டேன். கெட்ட கனவு வந்தால், கனவிலேயே அன்னையிடம் சொன்னால், அன்னை அந்தக் கெட்டதை விலக்குவார்.

நல்லது என்பது வாய்ச் சொல்லும், செயலும், மனத்தின் எண்ணத்திலும் கலப்பற்ற நல்லதாக மட்டும் இருக்கவேண்டும். கனவிலும் கறுப்பு கலந்திருந்தால் நாம் அதைச் சேர்த்துக் கொள்ளமுடியாது. நல்லது நல்லதாக மட்டுமே இருக்கவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் அதில் கெட்டதின் வாடை கலக்கக்கூடாது. கலந்தால் நாம்

நாடும் மாற்றம் (shift) தடைப்படும். மாற்றத்தை நாடுபவர்கள் மனத்தையும், சூழலையும், தொடர்புகளையும் நல்லதாக மட்டுமே தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்.

நம் அனுபவத்தில் நமக்கு ஒத்துப் போவது எது, ஒத்துப் போகாதது எது என்று தெளிவாகத் தெரியும். அவற்றைக் கவனித்துப் பார்த்து, பிரித்துக்கொள்ளுதல் நல்லது. பொதுவாக நாம் நல்லவர் எனவும், நமக்கு ஒத்து வராததை, தவறு எனவும் நினைப்போம். ஒத்து வருவது என்பது வேறு, நல்லது என்பது வேறு. நமக்கு சர்க்கரை வியாதியிருந்தால், சர்க்கரை ஒத்து வராது. அதனால் சர்க்கரை கெட்டது என்றாகாது. நாம் நல்லவர்களாக இருந்தால், கெட்டது ஒத்து வாராது. நாம் கெட்டவர்களாக இருந்தால், நல்லது ஒத்து வாராது. நாம் நல்லவரா, கெட்டவரா என்ற பிரச்சினையை இங்கு ஆராயாமல், நம் காரியம் கூடி வருவதெப்படி என்று யோசித்தால், அதற்குரிய பிரிவினையை மனிதர்களிலும், செயல்களிலும் கண்டு கொள்வது உதவும். வேலையாக இருக்கும்பொழுது, சிறு குழந்தை குறுக்கே வந்தால், அது வேலைக்குக் கெட்டது, அதனால் குழந்தை கெட்டது என்பதில்லை.

பெரிய வேலைகளை வீட்டில் செய்யும்பொழுது மனஸ்தாபமில்லாவிட்டாலும், இது அண்ணனுக்குத் தெரியக்கூடாது, இது தகப்பனார் காதை எட்டக் கூடாது என் மூத்தமகனுக்குத் தெரிந்தால் அவன் அனைவரிடமும் சொல்லி விஷயத்தைக் கெடுத்துவிடுவான் என்று மனிதர்களையும், செயல்களையும் விலக்கி வைக்கும் நேரம் உண்டு. அவர்களே விலகியுள்ள நேரமும் உண்டு. அன்னை தம் மகனை 40 ஆண்டுகள் சந்திக்காமருந்தார். இவை சந்தர்ப்ப விசேஷத்தால் அமைபவை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைவருக்கும் புரியும்படி விளக்கம் சொல்ல முடியாது.

மனைவி பக்தை, கணவன் நம்பிக்கையில்லாதவர். மேற்சொன்னதுபோல் அவர்கள் பிரிந்துள்ள நேரம். பக்தருடைய சேவையும், குடும்ப விஷயங்களும் அளவுக்கு மீறி முன்னேறிக் கொண்டு வரும் நேரம். சாதாரணக் குடும்பம். அதிகச் சொத்தோ, உபரி வருமானமோ இல்லாத குடும்பம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாய்ப்புகள் எழுந்தன. அத்துடன் தொந்தரவுகளும் எழுந்தன. தொந்தரவு ஆபத்தாயிற்று. சில வருஷம் போராடி, பிரார்த்தனை செய்து, அன்னையை நாடி மனைவி பிரச்சினைகளைத் தீர்ப்பதும், வீட்டிலுள்ள பிறர் அவர் நிலையறியாமல் அவர் செயலுக்கு எதிராக நடந்து, முடியும் காரியத்தைக் கெடுப்பதுமாக இருந்து, ஆபத்து விலகி தொந்தரவு மறைந்தது. உடனே வாய்ப்புகள் வளர்ந்தன. அவை சாதாரணமானவையில்லை. மாநிலத்திலேயே பெருஞ்செல்வரும் நம்ப முடியாத சந்தர்ப்பங்கள் அவை. அரசியல் செல்வாக்காகவும், புகழாகவும், பணமாகவும், வியாபாரச் சந்தர்ப்பமாகவும் பல வந்தபடியிருந்தன. அவர்களுடைய இன்றைய சொத்தைப் போல் 40 மடங்கு வருமானம் ஒரே சமயத்தில் கிடைக்கும் வாய்ப்பு உருவாயிற்று. இந்த நேரம் மனைவிக்குக் கணவன் மீது பாசம் அதிகமாக எழுந்தது. இந்தப் பெரிய வாய்ப்பை அவர் அறிய வேண்டும் என்று மனம் நினைத்தது. தான் மேற்கொண்ட விரதத்தை மீறி அவரைப் பார்க்கலாம் என அவள் நினைத்தாள். வாய்ப்பை ஏற்பாடு செய்தவரிடமிருந்து செய்தி வந்தது. வாய்ப்பு பலித்து கையில் பொருள் வந்து சேரும்வரை (guarantee) ஜாமீன் தேவை என்று செய்தி சொல்லிற்று. இவர்களுடைய அன்றைய சொத்தின் மதிப்பைப் போல் 5 மடங்கு ஜாமீன் கேட்டார்கள். வாய்ப்பு மறைந்துவிட்டது.

கணவனுக்கோ, குடும்பத்திற்கோ நம்பிக்கை இல்லாவிட்டாலும், மனைவியின் பக்திக்காக, பெரிய வாய்ப்பு எழுந்தது. மனைவியின் மனம் கணவனையும், அவன் மீதுள்ள பாசத்தையும் கருதிய நேரம் வாய்ப்பு மறைந்துவிட்டது.

குடும்பத்திற்குப் பலன் தாராத வாய்ப்பு எதற்கு என்று கேட்கலாம்? குடும்பம் அதைப் பெற, நம்பிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நம்பிக்கையில்லாத குடும்பத்திற்கு நம்பிக்கையின் பலனை அளிக்க முயல்வது பலன் தாராது.

கடவுளைப் பற்றி மனிதனின் எண்ணங்கள் சிறு பிள்ளைத்தனமானவை என்பது ஆதிநாள் முதல் உலகம் அறிந்தது. ஏசுவுக்கு, புத்தர் இருந்தது தெரியுமா? அவர்களுக்குள் தொடர்பு இருந்திருக்குமா என பகவானைக் கேட்கிறார் ஒருவர். Omniscience எல்லாம் அறிந்தவன் என நாம் இறைவனை வர்ணிக்கின்றோம். அவதாரப் புருஷர்கட்கு அவர்கள் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யவேண்டிய அனைத்தும் தெரியும். அதற்கு மேற்பட்டது அவர்கட்குத் தெரியாது என பகவான் பதிலளிக்கிறார். அன்னையையும், பகவானையும் நாம் சித்தியடைந்தவராகக் கருதக்கூடாது, அவர்கள் அவதாரப் புருஷர்கள் என்று நான் எழுதுவதுண்டு. சித்தியடைபவர், தம் யோக முயற்சியால் சித்தி பெறுகிறார். அவர் சித்தியுடன் வந்தவர். சித்தியடைய முயலவில்லை. உழைப்பாளி சொந்த உழைப்பால் சொத்து சேர்க்கிறான். பிதிரார்ஜிதமுள்ளவன் தான் பெற்ற சொத்தை அனுபவிக்கிறான். சித்தபுருஷன் உழைப்பாளியைப் போன்றவன். பரம்பரைச் சொத்து உள்ளவன் அவதாரப் புருஷனைப் போன்றவன். இறைவனின் ஓர் அம்சம், மனிதப் பிறவி எடுத்து, தன் இறையம்சத்தை வெளிப்படுத்துவது அவதாரம். அவதாரத்திற்குப் evolution பரிணாமம் இல்லை. பகவானையும், அன்னையையும் அந்தக் கோணத்தில் பார்த்தால், அவதாரங்கள் என்பது முழு உண்மையாகாது. இறைவன் சிருஷ்டியை, தன் லீலையாக மேற்கொண்டு, மனித நிலையிலிருந்து மனோமயப் புருஷன் பரிணாமத்தால்

சத்தியஜீவியன், விஞ்ஞானமயப் புருஷன் நிலைக்கு உயர்வது அவதாரத்தின் செயலன்று, இறைவனின் செயல். இந்த யோகத்தை மனிதன் செய்ய முடியாது என்ற பகவான், இறைவனே செய்யக்கூடிய யோகம் என்றார். எனவே பகவானும், அன்னையும் அவதாரங்களில்லை. இறைவன் தன் லீலையை, பரிணாமத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இவர்கள் உருவில் வந்துள்ளான் என்பதை அன்னையின் இரு கூற்றுக்கள் விளக்கும்.

 1. ஸ்ரீ அரவிந்தர் இறைவனின் பகுதி, முழு இறைவனில்லை.
 2. நானே 15 நிமிஷம் இறைவனாக மாறினேன்.

அத்துடனில்லை, மனிதன் இறைவனாக முடியும், அதுவும் இந்த யோகத்தால் முடியும் என்ற தத்துவத்தையும் அன்னை நமக்களித்து உள்ளார். இறைவன் கருணாசாகரம் என்பது உண்மை. அத்துடன் உலகில் இன்று நடக்கும் அத்தனை அநியாயங்களையும் இறைவன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறான் என்பதும் உண்மை. மேலும் இத்தனைக் கொடுமைகளும் இறைவன் செயல்களல்லவா? இறைவனின் நியாயம், மனித நியாயத்திலிருந்து வேறுபட்டது, எதிராகவும் உள்ளது. நமக்கு நம்பிக்கை, பக்தியிருந்தால் நம் காரியங்கள் கூடி வரவேண்டும் என நினைக்கிறோம். இது பக்தனுக்குச் சரி, சாதகனுக்குச் சரி வாராது. இந்த 'நியாயம்' வேண்டுபவர் பக்தர் நிலையிலேயே இருப்பது முறை. அடுத்த கட்டத்திற்கு வருதல் கூடாது. அடுத்த கட்டத்தில் சட்டம் வேறு.

மேலும் நான் பக்தன். எனவே என் அண்ணனும், அண்ணியும் வாழ வேண்டும். அது நடக்காவிட்டால் இந்தச் சாமிக்குச் சக்தியில்லை. எனக்கு நம்பிக்கை போய்விடும், என்பதை நாம் கேள்விப்படுகிறோம்.

ஒருவர் நம்பிக்கையில் அடுத்தவர் பிரச்சினை தீருவது உண்டு. தீரவேண்டும் என்று அவசியமில்லை. அண்ணனுக்கு

உன் மீது நல்ல அபிப்பிராயமில்லாவிட்டால் உன் பிரார்த்தனை தலைகீழேயிருக்கும். உனது பிரார்த்தனை வலுப்பட்டால், இன்று லேசாகச் சண்டையிடும் அண்ணனும், அண்ணியும் நிரந்தரமாகப் பிரிந்து விடுவார்கள். ஏனெனில் அண்ணன் உன் பிரார்த்தனையை விரும்பவில்லை. அதனால் பலன் எதிர்மாறாக வருகிறது.

சுபாவத்தால் மாறுபட்டவர்கள் பிரார்த்தனையும் எதிராகப் பலிக்கும்.

தகப்பனார் கருமியாக இருப்பார். மகள் தாராளமாகச் செலவு செய்பவரானால், தகப்பனார் பெண்ணுக்குச் செல்வம் சேர பிரார்த்தனை செய்தால், மகளுக்கு நஷ்டம் வரும். சுயநலமில்லாத மகன் லஞ்சம் வாங்கும் சுயநலமான தகப்பனாருக்காகப் பிரார்த்தனை செய்தால் 15 வருஷமாக லஞ்சம் வாங்கி அகப்படாத தகப்பனார், வழக்கில் மாட்டி ஜெயிலுக்குப் போவார்.

பக்தனுடைய பிரார்த்தனை பலிக்கும். பிறருக்காகவும் ஓரளவுக்குப் பலிக்கும். மாற்றத்தை (shift) விரும்புபவர், யோகத்தை நாடுபவர். பக்தன் நிலையிலிருந்து மாறியவர், உயர்ந்தவர். மனிதன் இறைவனாகும் பாதையை நாடுபவர் அவர். இறைவன் உலகத்துக் கொடூரங்களைப் பார்த்துக் கொண்டு சும்மாவும் இருக்கக் கூடியவர். கருணாமூர்த்தியாகவும் செயல்படக் கூடியவர். இறைவனின் எந்த அம்சம் செயல்படுகிறது? ஏன் செயல்படுகிறது? என்பது மனித சிந்தனைக்குட்பட்டதன்று. பகவானுடைய தாயார், தகப்பனார், அண்ணன், அன்னையுடைய மகன் இவர்கள் வாழ்க்கை இக்கருத்துக்கு எடுத்துக்காட்டு.

 • நான் நினைத்தது நடந்தால்தான் நம்புவேன்.
 • என் மகள் கண் கசங்கினால் அன்னை மீது எனக்கு நம்பிக்கை போய்விடும்.
 • என் மகன் பாஸ் செய்யாவிட்டால், இது சக்தியுள்ள தெய்வம் என எப்படி நம்புவது?
 • எனக்குக் காரியம் கூடி வந்தால்தான் நீ தெய்வம் என்று பேசுபவர்கள் ஆரம்பநிலை பக்தர்கள்.

இவர்கள் அன்னையிடம் வரவேண்டும் என்பதில்லை. எந்தக் கடவுளுக்கு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தாலும், இது போன்ற பிரார்த்தனைகள் பலிக்கும். இது போன்ற பிரார்த்தனைகள் பலிப்பதால்தான் சில கோயில்கள் பிரபலம் அடைந்து ஆயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும் மக்கள் அங்குச் செல்கின்றனர். ஏதோ காரணத்தால் அது போன்ற பிரார்த்தனை எந்தக் கோயிலும் பலிக்காதவர்கள் அன்னையிடம் பிரார்த்தனை செய்து பலன் கண்டுள்ளார்கள்.

மாற்றம் (shift) என்று நான் சொல்வது இந்நிலையைக் கடந்து அன்னையை வாழ்வின் ஒளிவிளக்காக ஏற்பவர்களுக்காக, ஆரம்ப நிலை பக்தர்களுக்கேற்றதன்று shift மாற்றம்.

மாற்றத்தை நாடுபவர்கள் யோகவாழ்வை உயர்ந்த மனித வாழ்வை நாடுபவர்கள். யோகத்திற்கு உரியவர்கள் அதற்கும் அடுத்த கட்டத்தைத் தேடுபவர்கள். இந்தக் கட்டத்தில் என் மகன் என்ற சொல்லுக்கும் இடம் இல்லை. நான் நினைத்தது என்பது எழக்கூடாது. ஏனெனில் நான் போனபின் வரும் கட்டம் இது. எவருடைய நலனையும் பெற்றோர், உடன் பிறந்தோர், பிள்ளைகள் கருதாமல் அதை இறைவனின் பொறுப்பில் விட்டுவிட்ட நிலை இது. என் தம்பி என்பவருக்கு இந்நிலை உரியதன்று, அது முதல்நிலை பக்தனுக்குரியது. மாற்றத்தைத் தேடுபவர்கள் இது போன்று பேசுதல் சரியில்லை. இருந்தாலும் மாற்றம் மனித வாழ்வைச் சேர்ந்தது என்பதால் எல்லா உயர்ந்த மனித ஆர்வங்களும் அவர்களுக்குப் பலிக்கும்.book | by Dr. Radut