Skip to Content

10 - Agenda

"Agenda"

ஐரோப்பா தன்னை முறைப்படுத்தியுள்ளது (organised).
அது பூர்த்தியானவுடன் ஒரு குழந்தையும் அதை அழிக்க முடியும்.

 

 

  • பகுதியின் திறமை வளர்ந்து நெடுநாள் பலன் தந்தாலும், அது பகுதியே. முழுமை தேவைப்படும் நேரம் வரும்பொழுது பகுதியும், அதன் திறனும் காற்றில் கரைந்துவிடும் என்பது தத்துவம்.
  • மானேஜர், மானேஜராக உள்ளவரை ஸ்தாபனம் வளரும்.
  • மானேஜர் சந்தர்ப்ப விசேஷத்தால் முதலாளியாகத் தன்னை மாற்ற முயன்றால், சில சமயங்களில் ஓரளவும், பல சமயங்களில் பேரளவும் வெற்றி பெறலாம்.
  • அவை அஸ்திவாரமில்லாத வெற்றி.
  • ஐரோப்பாவில் விஞ்ஞானம் வளர்ந்தது. அது மனவளர்ச்சி. மனம் பகுதி. அதை முழுமையாக்கும் ஆத்மா அதற்கு அஸ்திவாரமாக இல்லை. அதன் சிறப்பு mechanical perfection மெஷினின் திறமையாக அமைந்தது.  அது ஜெர்மனியில் உச்சக்கட்டம் எட்டியது.  எந்த இரயிலும் ஜெர்மனியில் ஒரு நிமிஷம் தாமதமாக வந்ததில்லை. செயலின் சிறப்பு எட்டிய உச்சக்கட்டம் அது.  அதன் முடிவென்ன?

ஜெர்மனி தன்னையே அழிக்க உலகை அழிக்க முயன்றது.

நாடும், நாட்டின் திறமையும், ஜீவனும், சுதந்திரமும் க்ஷணத்தில் அழிந்தன.

தன்னையழித்த அமெரிக்கரை இன்று ஜெர்மனி பின்பற்றுகிறது.

  • மாமியார் தம் சிறு அதிகாரத்தை முழு அதிகாரமாக மாற்றி வெற்றி பெற்றால், வெற்றி பூரணமானதும் வீட்டை விட்டு விரட்டப்படுவாள்.
  • பகுதியின் வெற்றி வளரும்.  அது உச்சக்கட்டப் பூரணம் பெறும்வரை முழுமை காத்திருக்கும்.  நேரம் வந்தால் முழுமை பகுதியைக் கண்ணில் காணாதவாறு கரைத்துவிடும்.
  • 564 மகாராஜாக்கள் அதுபோல் இந்தியாவில் 200 வருஷம் கொட்டம் அடித்தனர். பெரிய அந்தப்புரம் பெற்றவர் பலர்.  இலண்டனிலேயே இருந்து கொண்டு நாட்டை  மறந்தவர் பலர்.   ஆகஸ்ட் 15, 1947 அன்று சமஸ்தானங்கள் கடலில் கரைத்த காயமாக மறைந்தன.  ஐரோப்பாவைப் பற்றி பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவதும் அதுவே.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதற்காக நாம் காத்திருக்கின்றோம் என்றறிவது தன்னை அறிவதாகும்.  உன்னைப் பொருத்தவரை அதுவே சத்தியம், பிரம்மம்.

ஆழ்ந்த மனம், தன்னை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் பொழுது, மேலெழுந்தவாரியாக மனம் அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுகிறது.

அர்த்தமற்ற அந்தச் சலனங்களும் ஆழ்ந்த மனத்தைப் பூர்த்தி செய்யவே முனைகின்றன.

மேல்நிலையில் ஆழ்ந்த மனம் பூர்த்தியானால், மனிதன் உயர்ந்தவனாகிறான்.

தன்னையறிவதே உன்னைப் பொருத்தவரை சத்தியம்.



book | by Dr. Radut